Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவருக்கு அக வணக்கம் செலுத்துவது பற்றி….

Featured Replies

இன்றைய நிலையில் இக் கட்டுரை தவறாக புரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருப்பதைக் கருத்தில் கொண்டு இக் கட்டுரை நீக்கப்படுகிறது.

மாவீரர் நாள் முடிந்த பின்பு மீண்டும் இணைக்கப்படும்

Edited by சபேசன்

  • Replies 71
  • Views 7.1k
  • Created
  • Last Reply

இது முடியாது போனால் 2011இல் தலைவனை நேசிப்பவர்கள் தனித்து வேறொரு இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதை தடுக்க முடியாது போகும்.

இடத்தை சொல்லுங்கொ சபேசன் அண்ணா நானும் குடும்பசகிதம் வருகிறேன்-

சபேசன் தண்ணியை கலக்கி குட்டையாக்கிறதை தயவு செய்து விட்டு விடுங்கள்...

போர்க்குற்ற விசாரணைகள் மும்முரமாகும் இந்த வேளையில் இதைப்பற்றிய விளக்கங்களோ தரவுகளை பற்றி பேசவோ எனக்கு எந்தவிதமான உடன்பாடுகளும் இல்லை...

தலைவர் இருக்கிறாரோ ? அது அவரவர் பிரச்சினை.. இண்று இருக்கும் பொதுவான பிரச்சினை படுகொலைகள் இனவளிப்புக்கள்... மக்களின் மீள் கட்டுமானம்... இதுக்காக உங்களாலை ஒரு துரும்பை நகர்த்த முடிந்தாலும் மகிழ்ச்சி...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடுகளில் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பை ஏற்றிருக்கும் “நாடு கடந்த அரசு” மாவீரர் நாள் நிகழ்வுகளை பொறுப்பெடுத்து நடத்தியிருந்தால் அது மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும்..

அன்றாடம் காய்ச்சிகளை அன்னதானம் செய்யச் சொல்லிக் கேட்பதுபோல உள்ளது.

அன்றாடம் காய்ச்சிகளை அன்னதானம் செய்யச் சொல்லிக் கேட்பதுபோல உள்ளது.

ஆக பிரிவினையை வளர்ப்பதை தான் எல்லாரும் ஒற்றுமை படுத்தல் என்கிறார்கள் எண்டுறீயள்.... !! :unsure:

எல்லா அமைப்பும் இணைந்து இந்த மாவீரர் நாளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் எண்டு சொல்லி இருந்தால் பாராட்டி இருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆக பிரிவினையை வளர்ப்பதை தான் எல்லாரும் ஒற்றுமை படுத்தல் என்கிறார்கள் எண்டுறீயள்.... !! :unsure:

எல்லா அமைப்பும் இணைந்து இந்த மாவீரர் நாளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் எண்டு சொல்லி இருந்தால் பாராட்டி இருக்கலாம்...

படிக்கும் செய்திகளின் அடிப்படையில் மூன்று பிரிவுகள் இருப்பது தெரிவு.



  1. அனைத்துலகச் செயலகம்
  2. நாடு கடந்த தமிழீழ அரசு
  3. நேர்டோ

இவர்கள் எல்லாம் இணைந்து மரணித்த மாவீரர் நாளுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்றும்; அத்தோடு, ஓர் இலட்சியத்திற்காக தம்வாழ்வை அர்ப்பணித்து தற்போது சிங்களச் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அல்லது வெளியே வந்து வாழமுடியாமல் இருக்கும் ஏராளம் முன்னாள் போராளிகளுக்கு உதவ வேண்டும் என்றும் சாதாரண தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.

படிக்கும் செய்திகளின் அடிப்படையில் மூன்று பிரிவுகள் இருப்பது தெரிவு.



  1. அனைத்துலகச் செயலகம்
  2. நாடு கடந்த தமிழீழ அரசு
  3. நேர்டோ

இவர்கள் எல்லாம் இணைந்து மரணித்த மாவீரர் நாளுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்றும்; அத்தோடு, ஓர் இலட்சியத்திற்காக தம்வாழ்வை அர்ப்பணித்து தற்போது சிங்களச் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் அல்லது வெளியே வந்து வாழமுடியாமல் இருக்கும் ஏராளம் முன்னாள் போராளிகளுக்கு உதவ வேண்டும் என்றும் சாதாரண தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள்.

நேர்ட்டோ வை விடுங்கோ.... புலிகளை ஏசியவர்களும் தூசுயவர்களும், புலி வேசம் போட்டவர்களும் தான் நேர்ட்டோவின் இண்றைய கூட்டாளிகள்... தமிழர் நலனுக்காக எண்று சொல்லிக்கொண்டு சிங்களவனுக்காக பாடுபடுபவர்களையும் குறைந்த பட்ச்சம் போர் குற்றங்கள் விசாரிக்க படக்கூடாது எண்று நினைப்பவர்களையும் ஒரு தரப்பாக என்னால் நினைக்க முடிய்யவில்லை...

ஒரு காலத்தில் KP யால் நாடுகடந்த தமிழீழ அரசுக்குள் உள் நுளைக்கப்பட்டவர்களால் ஏற்படுத்த பட்ட குழப்பங்களே எல்லாத்துக்கும் காரணம்... இப்போ நேர்ட்டோ வினர் செய்கிறார்கள்...

குறிப்பு :- அனைத்துலக செயலகம் புலிகளின் பிரிவாக இப்போ செயற்படவில்லை... அவர்கள் கூட பேரவைகள் எனும் பெயரில் தான் செயற்படுகிறார்கள்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போதய காலத்துக்கு எது தேள்வையோ அதை செய்ய வேண்டும், இப்போதயகாலம், போர் குற்றங்களை விசாரிப்பதற்க்கான வேலைகளை செய்யும் காலம், அதனை முனைப்போடு செய்ய வேண்டும், ஒரு வேலை நடைபெற்று கொண்டு இருக்கும் போது வேறு ஒன்றை புகுத்தி அதன் வீரியத்தை மழுங்கடிக்க கூடாது, இருக்கினம் என்கினமோ, இல்லை என்கினமோ அனைவருக்கும் தேசிய தலைவரே ஆத்ம இயங்கு சக்தி. மீண்டும் மீண்டும் குழப்பங்களை தவிர்த்து கொள்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன் தலைவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை என்னவென்டால் முதலில் அவரது கொள்கைப் படி நடந்து எங்களுக்கு என ஓர் நாடு கிடைக்க பாடுபட வேண்டும் அதற்கு பிறகு வேண்டுமானால் உங்கள் விருப்பப் படி அஞ்சலி செலுத்துவோம்.

அகவணக்கம்.. வீரவணக்கம்.. விண்ணானம்.. செய்வது அவரவர் தனிப்பட்ட விடயம்..

உந்த அடுத்தகட்டம்.. நாடுகடந்த அரசு.. மற்ற அமைப்புகள், போண்றவற்றை கலைப்பது நல்லது.. இந்த வீணாப்போனதுகளின் செயல்ப்பாடுகள், வெந்துபோய் இருக்கும்.. இலங்கையில் இருக்கும் எமது மக்களின் புண்களில் ஈயத்தை காச்சி ஊத்திகொண்டிருக்கிறது...

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எண்டு விரும்பினால், ''நேர்டோ'' போன்ற சிங்களவரின் கண்காணிப்பின் கீழியங்கும் எலும்பு பொறுக்கி கூட்டத்தின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவது சிறந்த தொண்டாகும்..

Edited by Panangkai

தேசியத்தலைவர் உட்பட அனைத்து தமிழர்களின் நியாயமான போராட்டத்தை நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதே சிங்களத்திற்கு நாம் தெளிவாக உள்ளோம் என்னும் செய்தி ஆகும்.

1. அதற்கு எமது கைகளில் உள்ள பலமான ஆயுதங்களில் ஒன்று மகிந்தர்:

-- அவரின் போர்க்குற்றங்கள்,

-- தொடரும் அடக்குமுறைகள்,

-- அரசியல் தீர்வை நிராகரிப்பது;

பல அமைப்புக்கள் மேல்கூறிய செயல்பாடுகளை முன்னெடுக்கின்றன, அவர்களுடன் நாமும் ஒன்று சேர்ந்து உழைத்து மார்கழி 15க்குள் சகல யுத்த குற்றங்கள் சம்பத்தப்பட்ட ஆதாரங்களையும் அனுப்புவோம்.

2. அடுத்ததாக எங்களால் தனிப்பட்ட ரீதியிலும் உறுதிப்படுத்தப்பட அமைப்புக்கள் ஊடாகவும் தமிழீழ மக்களை காப்போம் , அரவணைப்போம்.

3. புலம் பெயர் நாடுகளில் எமக்கு ஆதரவாக அரசியல் பொருளாதார கட்டுமாணங்களை , ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் வேலைகளை முன்னெடுத்தல்.

இவற்றை நாம் செய்யும்போது அனைத்து மாவீரர்களும், அநியாயமாக கொல்லப்பட்ட மக்களும் எம்மை பார்த்து பெருமைப்படுவார்கள். அது எமக்கும் தமிழீழ தேசிய தாயுக்கு உரமாக இருந்தோம் என்ற திருப்தியை தரும்.

அகவணக்கம்.. வீரவணக்கம்.. விண்ணானம்.. செய்வது அவரவர் தனிப்பட்ட விடயம்..

உந்த அடுத்தகட்டம்.. நாடுகடந்த அரசு.. மற்ற அமைப்புகள், போண்றவற்றை கலைப்பது நல்லது.. இந்த வீணாப்போனதுகளின் செயல்ப்பாடுகள், வெந்துபோய் இருக்கும்.. இலங்கையில் இருக்கும் எமது மக்களின் புன்களில் ஈயத்தை காச்சி ஊத்துவது போலாகும்

மக்களுக்கு நால்லது செய்ய வேண்டும் எண்டு விரும்பினால், நேர்டோ போன்ற சிங்களவரின் கன்காணிப்பின் கீழியங்கும் எலும்பு பொருக்கி கூட்டத்தின் மீதன விழிபுணர்வை ஏற்படுத்துவது சிறந்த தொண்டாகும்..

I'm with you.... !

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எண்டு விரும்பினால், நேர்டோ போன்ற சிங்களவரின் கண்காணிப்பின் கீழியங்கும் எலும்பு பொறுக்கி கூட்டத்தின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவது சிறந்த தொண்டாகும்..

நல்ல அறிவுரை.

அங்கு கஸ்டப்படும் மக்களையும், முன்னாள் போராளிகளையும் இங்குள்ள மற்றவர்கள் மறந்துபோய்விட்டதால்தானே "நேர்டோ" போன்ற அமைப்புக்களால் செயற்படமுடிகின்றது. விழிப்புணர்ச்சியை புலம் பெயர்ந்த நாடுகளில் ஏற்படுத்துவதைவிட தாயகத்தில் இருக்கும் மக்களிடம் ஏற்படுத்த முயலவேண்டும். ஆனால் வழி இருக்கின்றதா?

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல அறிவுரை.

அங்கு கஸ்டப்படும் மக்களையும், முன்னாள் போராளிகளையும் இங்குள்ள மற்றவர்கள் மறந்துபோய்விட்டதால்தானே "நேர்டோ" போன்ற அமைப்புக்களால் செயற்படமுடிகின்றது. விழிப்புணர்ச்சியை புலம் பெயர்ந்த நாடுகளில் ஏற்படுத்துவதைவிட தாயகத்தில் இருக்கும் மக்களிடம் ஏற்படுத்த முயலவேண்டும். ஆனால் வழி இருக்கின்றதா?

சிறு திருத்தம் கிருபன்

இங்குள்ளவர்கள் மசிய மறுத்ததனால்தான் நேர்டே போன்றவர்களுக்கு கிராக்கி அங்கு........

இது முடியாது போனால் 2011இல் தலைவனை நேசிப்பவர்கள் தனித்து வேறொரு இடத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதை தடுக்க முடியாது போகும்.

.... ஆரம்பங்களிலிருந்து ஒட்டுக்குழுக்கள் மூலம் இந்த மாவீரர் நாள் செயற்பாடுகளை குழப்ப முயன்ற சிங்களம், இந்த ஒட்டுக்குழு மாற்றுக்கருத்து மாமணிகளுக்கு புலத்திலும் மக்கள் மத்தியில் இருந்த அதிதீவிர செல்வாக்கை புரிந்து, கைவிட்டது என்ன செயற்படுத்த முடியாமல் போனது

.... பின் நீண்ட காலங்களுக்கு பின் கருணா எனும் பெயரில் மாவீரர் நாள் உரைகள்/புலத்து மாவீரர் நாள் கொண்டாடம் எல்லாம் பூஸ்வானமாக... அதன் பின் கிழக்கில் காடுகளுக்குள் இருக்குமென்ற ராமின் மாவீரர் நாள் குளப்பங்கள்!!! ... என பற்பல தோல்வியடைய இங்கு புலத்தில் ..... தற்போது ...

1) கிழக்கில் மாவீரரான போராளிகளுக்கு நாம் தனியே அஞ்சலி செலுத்தப் போகிறோம் என்ற கதையுடன் கிழக்கு மக்கள் புலத்தில் தனியே ஒரு மாவீரர் நாள் செயற்பாடுகளை செய்ய மிக மும்முரமாக இங்குள்ள இலங்கை தூதரகம் முயன்றது!! இதனை கேபிக்களும் விசேடமாக இத்திட்டத்தில் பங்கு வகிக்க செய்யப்பட்டார்ககள்!!

2) இங்கு புலத்தில் மாவீரர் நாளென்று காஸ்ரோக்கள் பண வசூலுக்கே முயல்கிறார்கள். ஆகவே நாம் முன்னால் போராளிகள், மாவீரர் நாளை மக்களுடன் சேர்ந்து தனி ஒரு பொது இடத்தில், பணவசூல் அற்றதாக செய்யப் போகிறோம்!!!! ... இதுவும் கேபிக்களுடன் சிங்களத்தின் இன்னொரு அரங்கேற்றம்!!

3) அதற்கு மேலாக தலைவர் மேல் கொண்ட அதி தீவிர காதலால், நாம் அஞ்சலிக்கப் போகிறோம், அதுவும் தனியாக!!!!

இவைகளை செய்ய சிங்களம் தலை கீழாக நிற்கின்றது!! இவை தொடர்பான செயற்பாடுகள், புலத்தில் உள்ள கேபிக்கள்/மா.க.மாகள் மூலம் புலிச்சாயம் காட்டி ஏற்கனவே தொடங்கப்பட்டும் விட்டது!!! இதற்கு மக்கள் மத்தியிக்ல் எடுபடக்கூடிய வாதங்கள் முன் வைக்கப்பட்டும் விட்டது!!!!

இப்போ இறுதியாக அறிவுஜீவிகள் என தம்மைத்தாமே கூறும் எம்மவர்களும் அதற்கு பலியோ???? ?

Edited by Nellaiyan

மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் எண்டு விரும்பினால், ''நேர்டோ'' போன்ற சிங்களவரின் கண்காணிப்பின் கீழியங்கும் எலும்பு பொறுக்கி கூட்டத்தின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவது சிறந்த தொண்டாகும்.

பனங்காய் ... இதற்கு ஒரு பச்சை!

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரை தொடர்ந்தும் எமது தலைவராக மனதில் ஏற்று(roll model) செய்ய வேண்டிய காரியங்களில் பங்கெடுக்க வேண்டும்.தொடர்ந்தும் பார்வையாளர் நிலை எம்மை மேலும் கீழ் நோக்கித்தான் கொண்டு செல்லும்.

எனவே எமது போராட்டத்தை முன்னோக்கி நகந்தும் எந்த சக்திக்கும் கை கொடுப்போம்.

பின்னோக்கி தள்ளி ஆப்படிப்பவர்களுக்கு ஆப்பும் அடிக்க வேண்டும்.

உலகம் எம்மை பரிதாபகரமாக பார்க்கும் நிலை உள்ளது. இதுவே இலங்கை அரசின் இரட்டை வேடங்கள், தமிழ் மக்களை சகல விதத்திலும் நசுக்குதல் , இன்னும் பலவற்றை உலக்குக்கு காட்ட தக்க தருணம்.

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்வோமா? இல்லை குடும்பிச்சண்டையில் ஈடுபடுவோமா எனபதை நாங்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

காந்தி நேரு ராஜீவ் இவங்களுக்கு எல்லாம் இந்தியப் பேரரசு நினைவு தினம் வைச்சிருக்குது. ஆனால் நேதாஜிக்கு வச்சிருக்கிறதே தெரியாது.

தேசிய தலைவருக்கு சபேசன் அகவணக்கம் செய்ய விருப்பம் என்றால் செய்யலாம்.. அது அவரிண்ட தனிப்பட்ட விடயம். அகவணக்கம் இறந்தவர்களுக்கு மட்டும் தான் செய்யனும் என்ற நியதியை சபேசன் வகுத்துக் கொண்டு அந்த மூடநம்பிக்கைகளின் அடிப்படையில்.. எமது சமூகத்தை வழிநடத்தும் முட்டாள் தனத்தை செய்ய முற்படுவது கண்டிக்கத்தக்கது.

மாவீரர் நாள்.. தேசிய நினைவெழுச்சி நாளே அன்றி.... வேறல்ல..!

போராட்டம் அடுத்த கட்டத்துக்கு நகருகிறது என்றால் அதென்ன.. செஸ் போட்டில உள்ள கறுத்தக் கட்டத்தில் இருந்து வெள்ளைக்கு நகரிறது போலவே..!

எமது போராட்டம்1987 இல் அடைந்த பின்னடைவுக்கு பின் அதன் மூட்சிக்கு தேசிய தலைவர் 1990 வரை காத்திருக்க வேண்டி வந்தது. :unsure:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

இங்கே கருத்து எழுதிய யாருமே தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக வாதிடவில்லை என்பது நல்ல ஒரு முன்னேற்றம். கடந்த ஆண்டு இதை எழுதியிருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும்.

கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது போன்று இன்று பெரும்பாலான தமிழர்கள் தேசியத் தலைவர் உயிரோடு இல்லை என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

அவருக்கு அஞ்சலி செலுத்துகின்ற விடயத்தில் வேறுபடுகிறார்கள்.

சிலர் இன்றைக்கு போர்க்குற்ற விசாரணை பற்றித்தான் பேச வேண்டும் என்று சொல்கிறார்கள். போன ஆண்டு மக்களின் மீள்குடியேற்றம் பற்றித்தான் பேச வேண்டும் என்றும் இவர்கள்தான் சொன்னார்கள். அடுத்த ஆண்டும் இப்படி எதாவது சொல்வார்கள்.

உலகநாடுகள் மகிந்தவைக் கூண்டில் நிறுத்தி சிறைத் தண்டனை பெற்றுக் கொடுக்கும் என்றும், அப்படியே தமிழீழத்தையும் தூக்கித் தந்துவிடுவார்கள் என்றும் யாராவது கனவு கண்டு கொண்டிருந்தால், அதை தயவுசெய்து இன்றோடு விட்டு விடுங்கள்.

மாவீரர் நாள் என்பது எமக்காக தமது இன்னுயிரை வழங்கிய மாவீரர்களை நினைவுகூர்ந்து போற்றும் ஒரு நாள். அவர்களுக்கான மரியாதையை செலுத்தும் நாள்.

தேசியத் தலைவருக்கு அப்படியான மரியாதையை பெறும் தகுதி இல்லை என்று சிலர் இங்கே நினைக்கிறார்களோ தெரியவில்லை.

இதற்குள் வந்து கேபி, நெர்டோ என்று திசைதிருப்பல்கள் நடக்கின்றன.

ஒருவர் புளித்துப் போன துரோகிப் பட்டத்தை தருவதற்கு வந்து நிற்கிறார். என்னைப் பற்றி என்ன சொன்னாலும் கவலை இல்லை.

எத்தனையோ தமிழ் மக்கள் மனதிற்குள் கிடந்து புழுங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு விடயத்தை இங்கே பேசியிருக்கிறேன். சாக்குப் போக்குச் சொல்லி கோழைகள் போன்று ஓடாதீர்கள்.

அவரவர் விரும்பினால் தம்பாட்டில் அஞ்சலி செய்யலாம் என்றால் நினைவு நிகழ்வுகளே தேiவியில்லை. எல்லாவற்றையுமே நிறுத்தி விட்டு அவரவர் தம்பாட்டில் வீட்டில் இருந்தபடி அஞ்சலி செலுத்தலாம்.

நாங்கள் செய்வோம். எங்களுக்காக போராடி வீரச் சாவடைந்த எங்கள் தலைவனுக்கு நிச்சயமாக அஞ்சலி செய்வோம்.

ஆனால் இதை நாளையே செய்யும்படி கேட்கவில்லை. நிலைமையை உணர்ந்தே அடுத்த ஆண்டு செய்வோம் என்று சொல்கிறேன். நீங்கள் நினைத்தால் இந்த இனக் கடமையை நிச்சயமாக செய்யலாம்.

அடுத்த ஆண்டு நிச்சயம் செய்வோம்.

ஒருவர் புளித்துப் போன துரோகிப் பட்டத்தை தருவதற்கு வந்து நிற்கிறார். என்னைப் பற்றி என்ன சொன்னாலும் கவலை இல்லை.

சபேசன், நடைபெறுகின்ற நாட்டு நடப்புகளை சொன்னால் ... நீங்கள் உங்களுக்கு தான் என்கிறீங்கள், அப்படியல்ல!! ... பலியாகிறீகள்!! தேவையற்று குழம்பிய குட்டையை கிளறுகிறீர்கள்!!! ... வேறொன்றுமில்லை!!

இதற்குள் வந்து கேபி, நெர்டோ என்று திசைதிருப்பல்கள் நடக்கின்றன.

... மேல் எழுதிய விடயங்கள் ... பல மாதங்களுக்கு முன்னமே .. அவர்களின் வாய்களினூடே ........ சும்மா இழுக்கவில்லை!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின்ட தனிப்பட்ட மருத்துவர் இன்று கிந்திய கைத்தடிகளின் குட்டடியில் இருக்கார்... தனியே தொடர்பு கொள்ளமுடியாயாது( ஏனைய செங்கல்கபட்டு சிறப்பு முகாமினை போல அவரை ஏனோ இவரை அங்கு அடைக்க வில்லை) அவரின்ட கருத்துபடி தலைவர் உயிரோட இருக்கார்... ஆனா கடைசியில் அவரிடம் ...தலைவரிடம் நின்ற புலிகள் கூறியது அண்ணெ நீஙக் எங்க போனாலும் உங்களை பத்திரமாக பார்த்து கொள்ளுங்க என்றுதான்... ஐ மீன் இறுதி நாளுக்கு 3 மூன்று நாட்கள் முன்னதாகாவே நடைபெற்றது... தலைவர் உயிரோட இருக்கார் இல்லை என்பது வாதமில்லை ....பட்டாசு ராக்கெட்டு கொளுத்த திரி எவ்வளவு அவசியமோ அது போல உலக சூழலை உருவாக்க ஈழ தோழர்கள் முயல வேண்டும்.. உலகளாவிய அமைப்பு ஒன்றினை ஏற்படுத்தி அஞ்சு பத்தினை விட்டெறிந்து முதலில் தென்னாப்பிரிக்க நாடுகளை கவர் செய்ய ஈழ தோழர்கள் முயல வேண்டும்... சிங்களவனுக்கு இந்தியாக்காரன் சப்போட்டு என்றால் ஏனைய நாடுகளை ஈழ தோழர்கள் வளைக்கும் போது (குடிக்க கூழ் குடுக்கும் போது) சொறிலங்கா போல ஒவ்வொரு நாடுக்கும் வந்து அதை தடுக்க்க இவர்கள் (கிந்தியர்கள்) பணம் தருவார்களா?

இங்கயே பலர் கூழுக்குக்கும் கஞ்சிக்கும் லாட்டரி அடிக்கிறார்கள்... முதலில் ஈழம் வேண்டும் (அது காசு குடுத்தாவது அல்லது தோசை குடுத்தாவது) என்ற எண்ண உருவாக்கம் உலக அளவில் உருவாக வேண்டும் கஞ்சி கூத்தாடுவதால் அல்ல ...ரஸ்யாவை உருக்கியவன் எவன்? இங்கிலாந்தினை உருவாக்கியவன் எவன்? ... எல்லாம் தான் தோன்றி தேசங்கள் போல தெரியுது. :unsure: ..( ஈழம் அடைந்த பிறகும் எவனும் சுதந்திர தினம் கொண்டாட கூடாது..அப்போ வேறு ஒருவனிடம் அடிமைகளாக இருந்தீர்கள்:rolleyes:) முழு இலங்கையும் தனது என முயலவேண்டும்..... பேண்டு பொட ஆசைபட்டால்தான் கோவண துணியாவது கிடைக்கும்... :lol:

தலைவர் பிரபாரனை எல்லாரும் ஒரு தனியாளாக பார்க்கினம்... ஆனால் தனியாளை விட் அவரின்ட கொள்கைகளை பாருங்க... அவர் சரண்டைந்தார் அவரை கம்ங்கோடை (சரியாக உச்சரிப்பு வரவில்லை)அங்கு அவரை விசாரணை செய்தார்கள்... அவரை சிங்களவனின்ட சூவை நக்க சொன்னார்கள்... மீண்டும் அந்தா வெளிநாட்டில் இருந்த ராட்சபக்சே வுக்கு தகவல் தெரிவிக்க பட்டது ....சொனியா மைனாவை தொடர்பு கொண்டார்கள்....உடம்பில் இத்தனை அடிவாங்கிய தழும்புகல் உள்ளன என ஏதோ ஒரு புகைபடத்தினை காட்டி ராயகரன் கோஸ்டிய போல ஆராய்சி வேண்டாம்.. போராடி இறக்க வேண்டும் என நினைத்திருந்தால் அதுதான் நடந்திருக்குக்கும் ....... மீண்டும் எதாவது செய்யலாம் என்றிருந்தால் வேறு அவர் வேறு எங்காவது இருக்கலாம் ...

ஆனால் ஈழம் .......இதோ கையில் போராடி மட்டுமே வெல்ல ஆட்கள் தேவை ......எனும் கருத்துருவாக்கம் உருவகும் பட்சத்தில் தலைவர் பட்சத்தில் தலைவர் உயிரோடு இருந்தால் மீண்டும் படை நடத்த வருவார்... முன்னர் கூறியபடி பிரபாகரன்== ஈழம் எனும் சமன்பாடு உண்மையெனில் அவரால் வளர்க்கபட்ட ஈழ தோழர்கள் அங்கு தலைமையெற்று நடத்துவார்கள்... வெளி நாடுகளில் இருந்து இணையவழி அக்க பொர் தேவையில்லை காசு குடுத்தால் தமிழ்நாட்டில் இருந்தே ஆட்களை அனுப்பலாம் ... இனத்திற்காக போராடலாம் என்பதை விட 3 வேளை சாப்பாடு போடுவார்கள என்பதே இங்கு டிஸ்கி ... அகண்டா உகண்டா இருந்தே ஆட்களை அனுப்பலாம் ... (போக நாசாவில் வேலை செய்பவன் எல்லாம் வெளிநாட்டுக்கரனாம்)

டிஸ்கி:

இறந்த பிறகு யார் எப்படி ?என்ன ஸ்டேடஸ்? என்பது யாருக்கும் தெரியாது... போக தோழர் திலீபன் சொன்னது போல ஈழம் மலர்வதை வானத்தில் இருந்து காணவிரும்புகிறேன் என்று ... ஆன்மா உண்டு என நம்புபவர்க்ளுக்கு ( தன் ஆசை நிறைவேறினால்தான் ஆன்மா அடுத்த பிறவி எடுக்காதாம்) தலைவர் இறந்திருந்தால் ஆன்மா ஈழம் மலர்ந்தால் அதே தான் காணவிரும்புவார் ... சாந்தி கொள்ளுவார்....போக ஊதுவத்தி கொளுத்து படங்களுக்கு புஸ்வாணம் காட்டுவதை ... இந்த அக்கபோர்களை அல்ல... அப்படியே அவர் மறைந்திருந்தாலும் அவரிக்கு எந்த வருத்தமும் தேவையில்லை..... அவர் சுபாஸ் சந்திர போசின் சீடர் ... சோ யு வாண்டு செட் த என்விரான்மென்ட்( ஊரு ஊரக போய் லட்சுமண்கதிர்காமர் ஓட்டலில் ரூம் போட்டு இயக்கத்தினை தடை செய்ய சொல்லும் போதே ... ) இதை செய்திருக்க வேண்டும் ... ஒவ்வொரு நாட்டு சட்டதிட்டங்களும், வெவ்வேறானை எனும் போது தமிழ் கைத்தடிய விட்டே தடை செய்யல் சொல்லி அனுகி இருக்கான்.. தட்ஸ் ராஜதந்திரம்...(ராஜதந்திரம்:10 ஆண்டுகளுக்கு பிறகு உலக ஓட்டம் என்ன நடக்கும் என்பதை அனலைஸ் செய்வது... அதற்கான பேக்கப்புகளை ரெடி செய்வதுதான் என்று சிலர் சொல்லு கிறார்கள் :rolleyes: )

ஏதோ தமிழ்நாட்டுக்காரன் ஏதோ சொல்லுகிறான் என நினைக்க வேண்டாம் ... எனக்கு தோன்றியதை எந்த களமாக இருந்தாலும் நிச்சயமாக சொல்லுவன் :rolleyes: மற்றது... கேட்பது கேட்காதது அவரவர் விருப்பம் ரைட்டு :D

இங்கே கருத்து எழுதிய யாருமே தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக வாதிடவில்லை என்பது நல்ல ஒரு முன்னேற்றம். கடந்த ஆண்டு இதை எழுதியிருந்தால் நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும்.

தலைவர் இல்லை அப்படி நான் சொல்ல வரவில்லை...! அதுக்கும் மேலை சொல்வதில் எனக்கு உடன் பாடும் இல்லை, அது எனக்குரிய வேலையும் இல்லை.... அது எனக்கு தேவையில்லாத விடயமும் ஆகின்றது...

தலைவர் இருக்கிறாரா இல்லையா என்பதை உங்களுக்கு காலம் பதில் சொல்லும் எண்று உருத்திரகுமார் அண்ணா சொல்லி இருப்பது உங்களுக்கு தெரிந்து இருக்கலாம்... இதுதான் எனது பதிலும்...

காற்று இருக்கும் போது தூத்துவதுதான் எல்லாருக்கும் நல்லது... இப்போது எது பொருத்தமானதோ அந்த வேலையை பார்ப்பது தான் அறிவு...

முன்னர் ஞாபகம் இருக்கிறதா..? நீங்கள் வன்னிப்படுகொலைகள் நடந்த காலத்தில் சித்திரை வருடப்பிறப்பு தமிழர்களின் பண்டிகை இல்லை எண்று ஆரம்பித்தீர்கள்....??? மக்கள் நாளாந்தம் செத்துக்கொண்டு இருக்கும் போது சித்திரை வருடப்பிறப்பை பற்றி பேசுவதும் இதுவும் வேறு வேறான விடயம் இல்லை...

Edited by தயா

நோ கொமென்ட்ஸ்

நோ கொமென்ட்ஸ்

நோ கொமன்ட்ஸ் எபொவுட் நோ கொமன்ட்ஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.