Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சே கோழை: இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம்: பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கட்கிழமை, 13, டிசம்பர் 2010 (17:53 IST)

ராஜபக்சே கோழை: இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம்: பொன்சேகா

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயல்பாடுகள் மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகும் வகையில் அமைந்துள்ளது என, அந்நாட்டின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளதாக, இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பொன்சேகா அந்நாட்டு மக்களுக்கு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சரத் பொன்சேகா கூறியுள்ளதாவது,

தனக்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் ஊடகத் துறையினரை அடக்கி ஒடுக்கும் ராஜபக்சேவின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நிலைக்காது. என்னையும், என் குடும்பத்தையும் முன்னிறுத்தியதான அவரது அரசியல் செயற்பாடுகள் இலங்கை மக்களுக்கு எந்த நன்மையையும் தராது.

எந்தவொரு அரசியல் தலைவராவது தனது அரசியல் எதிராளிகளுக்கெதிராக சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைப்பாரானால் அவர் ஒரு கோழையாவார். அத்துடன் தனது எதிராளிகளை சிறையில் தள்ளும் அரசியல் தலைவர் ஒரு சர்வாதிகாரியாவார்.

ராஜபக்சேவின் இன்றைய செயற்பாடுகள் போர் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணத்தையும் தரப்போவது இல்லை. அதற்குப் பதிலாக அவர்களை மென்மேலும் துன்புறுத்தவே செய்யும். இந்த நிலை தொடரும் பட்சத்தில் இன்னொரு பிரபாகரன் உருவாவது நிச்சயம் என, சரத் பொன்சேகா கூறியுள்ளார்.

nakkheeran

இன்று ஒரு "பிரபாகரன்" உருவாகும் தேவை இல்லை :

- அன்று, இன்று போல ஒரு பலமான புலம் பெயர் சமுதாயம் இருக்கவில்லை

- இன்று, அன்று போல இல்லாமல் எமது போராட்டம் சர்வதேசமயமாக்கப்பட்டுள்ளது

- இன்று சிங்களம் புதிதாக உருவாகும் பனிப்போரில் சீனாவின் பக்கம் சார்ந்து இந்தியா மற்றும் மேற்கத்தைய நாடுகளிடம் இருந்து அன்னியப்படுகின்றது

மொத்தத்தில் தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் என்ற தொடர்ச்சியாகவே எமது விடுதலை பயணம் தொடரும், வெல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

கொலை வெறி பிடிச்ச ராஜபக்சேவுக்கு எல்லா பக்கமும் ஆப்புத் தான் :):)

ராஜபக்சேவுக்கு போக்க போக்க எதிரி கூடி கிட்டே போக்குது

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு என்று பிரதேசங்கள் எதுவும் இல்லை என்று சொன்னவர்தான் இவரும்

தமிழருக்கு என்று பிரதேசங்கள் எதுவும் இல்லை என்று சொன்னவர்தான் இவரும்

த.தே.கூத்தமைப்பு ஆதரித்ததும் இவரைத் தான், அவர்கள் சரத்தை ஆதரிக்கும் போது த.தே.கூ வை ஆதரித்தவர்களில் நீங்களும் ஒருவர் தான் விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

அது கூட்டமைப்பின் முடிவு நிழலி

அதற்கு நமது பதில் ஆம் இல்லை என்றபோது எனது பதில் ஆம் என்று வந்தது

அதை நான் இன்றும் மறுக்கவில்லை

மறுதலிக்கவில்லை

தாயக அரசியல் பற்றிய பார்வையில் என்னுடைய பார்வை இன்றும் ஒன்றுதான்.

அந்த மக்களே அதை தீர்மானிக்கவேண்டும்

நாம் உறுதுணையாக இருக்கவேண்டும்

புலம் பெயர் தமிழர் தமது கடமைகளை செய்யலாம்.

அவை ஒரு காலத்தில் ஒன்று சேரவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

:) விசுகு,

உங்களுடன் வாதாடுவது எனது விருப்பமல்ல.

ஆனாலும், நேற்று ஒரு செய்தி படித்தேன். தமிழரசுக்கட்சி அதன் கிளையொன்றை வவுனியாவில் திறந்துவைத்துள்ளது. அப்போது அதன் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் புலிகளின் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்ததோடு அவர்களால்த்தான் தமிழர்க்கு இவ்வளவு அழிவும் ஏற்பட்டதென்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தாம் ஒருபோதுமே வன்முறையை விரும்பவில்லை என்றும், வன்முறையால் எதுவும் கிடைக்காதென்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இந்தியாவுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தர தமிழரசுக்கட்சியினால் மட்டுமே முடியும் என்றும் சொல்லியிருக்கிறார்.

நீங்கள் இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அறியவிருப்பம். சிலவேளை அது சரியென்று சொல்கிறீர்களோ என்னவோ.

புலிகளின் அனுசரணையில்லாவிட்டால் இவர்களை ஒரு நாய்கூடத் திரும்பிப் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்குப் புலிகளை ஏக வசனத்தில் விமர்சிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுத்தர தமிழரசுக்கட்சியினால் மட்டுமே முடியும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இது ரொம்ப காமெடி பீஸு....லக லக லக... :)

தமிழரசுக்கட்சி அதன் கிளையொன்றை வவுனியாவில் திறந்துவைத்துள்ளது. அப்போது அதன் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்கள் புலிகளின் போராட்டத்தைக் கடுமையாக விமர்சித்ததோடு அவர்களால்த்தான் தமிழர்க்கு இவ்வளவு அழிவும் ஏற்பட்டதென்றும் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தாம் ஒருபோதுமே வன்முறையை விரும்பவில்லை என்றும், வன்முறையால் எதுவும் கிடைக்காதென்றும் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார்

இதே செய்தியை நானும் பார்த்தேன். எனக்கு ஒரு பழைய ஒரு பாலர் வயது நினைவு (80 க்கு முந்திய காலம்).

எனது அண்ணனுக்கு இளைஞர் பேரவையில் அதீத ஈடுபாடு. ஒருநாள் என்னையும் தலைமறைவாக நடந்த ஒரு கூட்டத்திற்கு அழைத்து சென்றார். அங்கு மாவை சேனாதிராஜாவும் இன்னொருவரும் (வண்ணை ஆனந்தன் என நினைக்கிறேன்) தமிழர்கள் ஏன் ஆயுதம் எந்த வேண்டுமென விளக்கினார்கள். அதிலும் மாவை அண்ணன் மிகவும் உணர்ச்சிவசமாக உரையாற்றினார். அந்த கூட்டத்திற்கு வந்திருந்த அண்ணன்மார்கள் பலர் போராட சென்று மறைந்துவிட்டார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே செய்தியை நானும் பார்த்தேன். எனக்கு ஒரு பழைய ஒரு பாலர் வயது நினைவு (80 க்கு முந்திய காலம்).

எனது அண்ணனுக்கு இளைஞர் பேரவையில் அதீத ஈடுபாடு. ஒருநாள் என்னையும் தலைமறைவாக நடந்த ஒரு கூட்டத்திற்கு அழைத்து சென்றார். அங்கு மாவை சேனாதிராஜாவும் இன்னொருவரும் (வண்ணை ஆனந்தன் என நினைக்கிறேன்) தமிழர்கள் ஏன் ஆயுதம் எந்த வேண்டுமென விளக்கினார்கள். அதிலும் மாவை அண்ணன் மிகவும் உணர்ச்சிவசமாக உரையாற்றினார். அந்த கூட்டத்திற்கு வந்திருந்த அண்ணன்மார்கள் பலர் போராட சென்று மறைந்துவிட்டார்கள்.

பேச்சுவல்லமை உள்ளவர்கள்.

சகலரையும் கவரக்கூடியவாறு பேசியவர்கள்.

ஆயுதம் ஏந்துவோமென சபதம் செய்தவர்கள்.

அடுத்த பொங்கல் தமிழீழத்தில்த்தான் என 77ல் முழங்கியவர்கள்.

நானும் இவர்களுக்கு இரத்ததிலகமிட்டேன்.

இலங்கையில் இருக்கிற தமிழ் அரசியல் வாதிகளும் சரியில்லை?! சிங்களவனும் எங்களுக்கு ஒண்டும் தரப்போவதில்லை?!

K.P யும் சரியில்லை... நெடியவனும் சரியில்லை என்கிறாங்க,

தலைவர் வருவார் வருவார் என்று சொல்லி...

இயக்கத்தின் தடையை வேற்று நாடுகள் நீக்கவும் விடுகிறாங்கள் இல்லை.

கடைசியாய் தலைவரை காப்பாற்ற கெலிகொப்ரர் வாங்க சேர்த்த காசை அமுக்கிறதிலையே இருக்காங்களோ?

என்னையா நடக்குது இங்கை?!!!

  • கருத்துக்கள உறவுகள்

திரு ரகுநாதன் அவர்கட்கு

தாயக மக்கள் எப்போதும் தெளிவான முடிவுகளை எடுத்துள்ளார்கள். இப்படி பேசுபவர்களுக்கான பதிலை அவர்கள் கொடுப்பார்கள். ஏன் புலிகளைப்போற்றினார்கள் தற்போது தூற்றுகிறார்கள் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். அத்துடன் மக்களும் அத்தகைய நிலையில் தான் இன்று இருக்கிறார்கள்.

என்னுடைய தாயகத்தின் கட்சி என்ற ரீதியில் தலைவரால் தீர்மானிக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட தேசியக்கூட்டமைப்பை நான் தமிழரின் இன்றைய நிலைக்கு ஒரு துரும்பாக நினைத்தது உண்டு. இன்றும் அதைத்தவிர வேறு ஏதும் இல்லாததால் ஏதோ ஒரு எதிர்பார்ப்பு என்னிடமுண்டு. திரு. சிறிதரன் போன்றவர்களை நேரடியாக சந்தித்தும் கதைத்திருந்தேன். சம்பந்தருடனோ மாவையுடனோ எனக்கு தொடர்பு இல்லை அத்துடன் அவர்கள் எனது தலைவர்களும் அல்ல. அவர்கள் பிரான்சில் ஒரு அலுவலகத்தை ஏற்படுத்தினால் அதில் நான் சேரமாட்டேன். ஆனால் நாம் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் தாயக மக்களை அவர்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். நாம் என்னதான் வெளிநாடுகளில் செய்தாலும் அவர்களுடனான எமது உறவு இன்றியமையாதது. அவர்களை நாம் வழிநடத்துவது சரியல்ல என்றாலும் அவர்களுடன் ஒரு புரிந்துணர்வை வைத்திருப்பதால் சிலவற்றை சாதிக்கமுடியும். அவர்களை நாம் ஒதுக்குவதன் மூலம் அவர்கள் வேறு வழிகளை நாடுவதை நாம் தடுக்கமுடியாது போகும்.

திரு. ரகுநாதன் ரமேஸ் அண்ணாவின் காணொலி பார்த்தீர்களா...???

நாடி நரம்பு அத்தனையும் அறுந்துவிட்டது எனக்கு................

அப்படி நிலையில் எமது தளபதியே என்றால் இவர்களிடமிருந்து நாம் வேறு எதையாவது எதிர்பார்ப்பது தகுமா....?

இன்னொரு கேள்வி ரகுநாதன்

இந்த பயங்கள் எதுவுமற்ற புலம்பெயர் நாம் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லது அவர்களுக்கு நம்பிக்கை வரும் எதையாவது இதுவரை உருப்படியாக செய்தோமா....???

  • கருத்துக்கள உறவுகள்

குகன்,

உங்கள் கருத்தில் உண்மைஉள்ளது. அதாவது மற்றைய துணைராணுவக்குழுக்கள், ஒட்டுக்குழுக்கள் போன்றவற்றிற்கு வாக்களிப்பதைக் காட்டிலும் ஒருகாலத்தில் தலைவரால் சுட்டிக்காட்டப்பட்ட தமிழ்க்கூட்டமைப்பிற்கு வாக்குப்போட்டது சரிதான். ஆனால் வாக்களித்ததன் பிறகு நடப்பவை எல்லாம் தலைகீழாகத்தான் நடக்கின்றன என்றுதான் நான் நினைக்கிறேன்.

சம்பந்தரும், மாவையும் செயல்ப்படும் விதமும், பேசிவரும் விதமும் சரியென்று படவில்லை. இசைப்பிரியாவின் கொலைக்காட்சி வெளிவந்த அன்றுதான், தாம் அவசரகாலச் சட்டத்திற்கு இனி எதிராக வாக்களிப்பதில்லை என்று கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அப்படியானால் அரசு செய்வதை நியாயப்படுத்தியும், இன்னும் இன்னும் தமிழரை இனரீதியாக அடக்கி படுகொலை செய்யும் அரசின் முயற்சிக்குத் தாங்கள் தடையாக இருக்கப்போவதில்லை என்பதையும் தானே கூறுகின்றனர்.

இசைப்பிரியா, ரமேஷ் அண்ணா அகியோர்கள் உற்பட ஏனைய போராளிகளின் கொலைக்களக் காட்சியைப் பார்த்தபின்பு எனக்குப் பிரமை பிடித்து விட்டது. சிங்கள நாய்களுடன் இனி ஒருபோதுமே நாம் இணைந்து வாழ முடியாது என்கிற நிலைப்பாட்டை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்திக்கொண்டிருக்கிறேன். பிணங்களைப் புணரும் அரக்கச் சாதியுடன் சமரசம் செய்யவும் சரணாகதி அரசியல் செய்யவும் கூட்டமைப்பு உடன்படுவது எந்த விதத்தில் நண்மை பயக்கும் என்று தெரியவில்லை.

கூட்டமைப்பின் பலம் இந்தியா என்கிறார்கள். ஆனால் இந்தியா கொலைக்களத்தை நடத்தி முடிக்கக் காட்டிய அவசரமும் சிங்கள நரவேட்டைப் பட்டாளத்துக்கு வழங்கிய ஆதரவையும் பார்க்கும்போது இந்தியா பற்றிய உண்மை முகம் இப்போதாவது எமக்கு தெரிகிறதா என்றால் சந்தேகம்தான். புலிகலை அழிக்கவேன்டுமென்றால் அவர்களுடன் சேர்த்து ஒரு லட்சம் தமிழர்களைக் கொல்வது தப்பில்லை என்று சோனியாவின் எடுபிடிகளான சிவ் ஷங்கர் மேனனும், நாராயணனும் நியாயப்படுத்தியதை சம்பந்தரும் மாவையும் எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்??

டமால் டமால் டம்லா டூமில்ல் டூமில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.

நாங்கள் மற்றவரின் மூக்கில வழியிற சளியை துடைக்க சொல்ல முன்னம் எங்கட வாய்க்குள்ள சளி போகாம பாக்கனும்.

ஏஎதோ மகிந்தா தான் தமிழர்களின் பரம எதிரி போல தன் தற்போது போராட்டமும் எதிர்ப்புக்கலும் முன்னேடுக்க படுகின்றன( உண்மையில் அப்படியான தோற்றப்பாடு தான் தெரிகிறது)

சந்திரிக்கா இருக்கும் போது சந்திரிக்காவுக்கு எதிராகவும்( தனிப்பட்ட) தற்போது மகிந்தாவை முன்நிறுத்தி போராட்டம் நடை பெறுகிறது ஆனால் மகிந்தாவை ஜெயில தள்ளினதோட சர்4வதேச ஆதரவு முடிந்து விடும் அதன் பின்?????????????

கூட்டமைப்பின் பலம் இந்தியா என்கிறார்கள். ஆனால் இந்தியா கொலைக்களத்தை நடத்தி முடிக்கக் காட்டிய அவசரமும் சிங்கள நரவேட்டைப் பட்டாளத்துக்கு வழங்கிய ஆதரவையும் பார்க்கும்போது இந்தியா பற்றிய உண்மை முகம் இப்போதாவது எமக்கு தெரிகிறதா என்றால் சந்தேகம்தான். புலிகலை அழிக்கவேன்டுமென்றால் அவர்களுடன் சேர்த்து ஒரு லட்சம் தமிழர்களைக் கொல்வது தப்பில்லை என்று சோனியாவின் எடுபிடிகளான சிவ் ஷங்கர் மேனனும், நாராயணனும் நியாயப்படுத்தியதை சம்பந்தரும் மாவையும் எப்படி நியாயப்படுத்தப் போகிறார்கள்?

என்னய்யா சொல்கிறிங்கள்? புலிகளின் ஒரு சொல் தான் கூட்டமைப்பு வெல்ல காரணம் என்று ஊர் நம்புது ஆனால் கூட்டமைபின் பலம் புலிகளின் பரம எதிரியாஅன் இந்தியா எப்படி பார்த்தாலும் கனக்கு பிழையாக வருது.

டமால் டமால் டம்லா டூமில்ல் டூமில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்.

கூட்டமைப்பினர் தமது பழைய அரசியலை தொடங்கிவிட்டார்கள்.. காதில பிடிக்க ஆரும் இல்லை. மக்கள் தான் எமது பலம். மக்கள்தான் என்ன செய்யவேண்டும் என தீர்மானிக்கவேண்டும்.

அந்த மக்களிற்கு நாம் செய்ய வேண்டியவற்றை சரியாக செய்யவேண்டும்.

நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் விட்டாலும் அது தன் வேலையை காட்டிவிட்டுத்தான் போகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ரகுநாதன்

தங்கள் கருத்தோடு இணைகின்றேன்

காலம் எல்லோருக்கும் பதில் சொல்லும். அதுவரை புலம் பெயர் பலம் தனது கடமைகளைச்செவ்வனே செய்ய ஒன்றாவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழரின் கடமைகள் என்ன என்று சொன்னால் நல்லது..

தமிழ்க் குழந்தைகளைப் பெற்று, தமிழைச் சொல்லிக் கொடுத்து, தாங்கள் குடியேறியுள்ள நாடுகள்தான் சிறந்தவை என்று தமிழில் (அல்லது அவர்களுக்குத் தெரிந்த மொழியில்) அடிபட்டுக்கொள்வதா?

ஊரில் பிரதேசவாதம், இங்கு பிறதேசவாதம் ^_^

கூத்தமைப்பைச் சேர்ந்த சம்பந்தர், மாவை, சுரேஷ் (SMS) ஆகியோர் தமது சுயநலத்தை முன்னிறுத்தி இந்திய அரச பயங்கரவாதிகளின் அடிவருடிகளாக உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.