Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் கொண்டாட்டம் ?? ( காணொளி)‏

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் போல் அனைவரும் சேர்ந்து கூடி ஆடி மகிழ்வோம்.

யாழ் பல்கலைக்கழகதில் இருந்து

சுழியோடி

thx

http://www.newjaffna.com/

நரிக்கு நாட்டாமை கிடைச்சா கெடைக்கு ரெண்டு ஆடு கேட்குமாம்.....வாருங்கள் உறவுகளே, அண்ணாந்து ஒருமுறை வானம் பார்த்து உமிழ்ந்துகொள்வோம், எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபின்பும் புலம்பி அழுவதற்கு......தூ..........இது எங்கே போயி முடியுமோ ரெங்க நாதா நாடு எந்த வழி மீண்டு எழும் சொக்க நாதா?????????? ....தம்பி நீ கேளேன் !! தம்பி நீ கேளேன்!! தம்பி நீயாவது கேளேன்.... யாழ் பல்கலைக்களகத்தில் போதையில் தள்ளாடுகிற சங்கமத்தில் சிங்கம்ங்கள்....... ஜிஞ்சக்... ஜிஞ்சக்..…அரைவாசியும் அரைச்செஞ்சறி அடிச்சதுகளா கிடக்கு..களத்துல எரங்கீட்டா கும்மியடுச்சுதான ஆகணும்..... நீங்க பெரிங்குடிமப்புவளா இருக்கலாம்......அதுக்காக .... எங்களைப் போன்ற யூத்துகள் மத்தியில் பல இளஞர்கள் உள்வருவதற்கு கனவு கண்டு கொண்டிருக்கும் இடத்தில் போதை விளம்பரம் செய்வது மாபெரும் குற்றம்ங்க.....

-------

நன்றி

new jaffna you tube.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழில் வசிப்பவர்களும் மக்களே? அவர்களுக்கும் உணர்வுகள் உண்டு. மேலே உள்ள பிரசுரம் தனி மனித சுதந்திரத்தை மீறுவது போல் உள்ளது.

ஒரு சிலர் நினைப்பது போல் எல்லோரும் இருக்க முடியாது. இருக்க வேண்டும் என்று கட்டாயமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்திய மக்களில் சில இனங்கள் இதய நோயால் இளம் வயதிலேயே இறந்து போகும் சாத்தியத்தை அதிகமாக கொண்டிருக்கிறார்கள். இலங்கை தமிழர்களும் இதனுள் அடக்கம். சந்தேகம் இருந்தால் உங்களது HDL கொலஸ்ரோல் அளவை இரத்த பரிசோதனையில் அளவிட்டு பாருங்கள். இந்த இரத்த பரிசோதனையை குறிப்பிட்டு கேட்க வேண்டும்.

High Density Lipo-protein என்று அறியப்பட்டுள்ள இந்த கொலஸ்ரோல் நல்ல கொலஸ்ரோல். கூடாத LDL கொலஸ்ரோலை குறைக்கும் ஆற்றல் கொண்டது. இதன் அளவு இலங்கை தமிழர்களுக்கு மரபியல் (genetics) காரணிகளால் மிகவும் குறைவாக உள்ளது. இந்த நல்ல கொலஸ்ரோல் பின்வரும் பழக்க வழக்கங்களை கொண்ட இனங்களுக்கு மிகவும் அதிகமாக உள்ளது:

SuperStock_1589R-32720.jpg

  • நாளாந்தம் கட்டுப்பாட்டுடன் மது அருந்துபவர்கள் - ஐரோப்பியர்கள்
  • 45 நிமிடங்களுக்கு மேல் நாளாந்தம் சிறிய அளவிலான உடற்பயிற்சி செய்பவர்கள் - நடனம் ஆடுவோர்.
  • நீண்ட தொலைவு ஓடுபவர்கள் - சில ஆபிரிக்க இனத்தவர்கள்.

தமிழர்கள் தமது நல்ல கொலஸ்ரோலின் அளவை கூட்டிக்கொள்ள செய்யும் முயற்சிகளில் கட்டுப்படுத்தப்பட்ட அளவில் நாளாந்தம் மது அருந்துதலும், 45 நிமிடங்களுக்கு மேலாவது நடனம் ஆடுவதும் அடங்கும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மது அருந்துவதை கவனமாக அளவிட்டு செய்யவேண்டும்.

இதய நோயுள்ளவர்கள் தமது நிறையை தமது வயதுக்கும், உயரத்துக்கும் உரிய அளவில் வைத்திருக்க வேண்டும். பெரும்பாலான தமிழர்கள் அளவுக்கு அதிகமான நிறையை கொண்டிருக்கிறார்கள். தமிழரின் முக்கிய உணவான சோறு, மாவால் செய்யப்பட்ட தோசை, பிட்டு போன்ற உணவுகள் மிகவும் வேகமாக நிறையை கூட்டும். மேலும் எண்ணையில் பொரித்த உணவுவகைகள் மிக அதிகமாக நிறையை கூட்டும். நிறை கூடுவதை கட்டுப்படுத்த நாளாந்தம் சில மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடனம் ஆடுவது சிறந்த உடற்பயிற்சியாகும். கூட்டாக பலர் சேர்ந்து நடனம் ஆடும்போது, நீண்ட நேரத்துக்கு சலிப்பு தோன்றாமல் உடற்பயிற்சி செய்ய முடிகிறது.

"ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது.

அங்கே ஆணும் பெண்ணும் சேராவிட்டால் சுவையிருக்காது”

என்ற பாடல் அர்த்தமுள்ள ஒன்று. ஐரோப்பிய கலாச்சாரத்தில் ஆணும் பெண்ணும் சேர்ந்து நடனம் ஆடுவதை பாடசாலைகளில் கற்று கொடுக்கிறார்கள். குறிப்பாக நடனம் ஆடும் போது, பாலியல் நோக்குடன் அணைத்தல், தொடுதல் ஆகியவை இன்றி எப்படி நடனம் ஆடுவது என்பது மிகவும் கவனமாக கற்று கொடுக்க படுகிறது.

traditional-dance-germany_9854.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுங்க . ஆட்டம் போடுங்க.

ஆடுங்க . ஆட்டம் போடுங்க.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள் இதில் எத்தனை பேர் உளீர்களோ தெரியாது.. ஆனால் பல்கலைக்கழகத்தில் கல்வி , கல்விசாரா ஊழியர்கள்.. மாணவர்கள் நிகழ்வுகளிலும் சிலவேளை பொழுது போக்காக ஆடுவதும் வழமை.. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது.. Toddy game கூட நடந்திருக்குது.

மாற்றமெல்லாம் நமக்கு தோணி நிகழுறதும் இல்ல ..நம்மகிட்ட சொல்லி நிகழுறதும் இல்ல ..அது தானா நடக்கும்.

வாழ வழியில்லன்னா அவனவன் கையில ஆயுதம் இருக்கும் ....வெகு விரைவில யாழ்ப்பாண மக்கள் பலருக்குள்ள இந்த தற்காலிக சுய இன்பம் முடிவுக்கு வரும்.. போற போக்க பாத்தா அது வெகுவிரைவிலையெ நடந்திடும் போல இருக்கு...இது பூனைகள் உருமும் காலம்.....நான்கு சொட்டுப் பால் குடிக்க பானைப்பாலை விரயம் செய்யும் மதி கெட்ட பூனைகள் இவர்கள்....ஆடவேணுமெண்டால் எங்காயாவது போய் அறைபோட்டு ஆடுவது :D .....அம்மணமாகவா ஆடுவது...ஜ மீன் பல்கலையில வந்து ஆடுறதை.....ஆமாண்ணே.. நமக்குதான் நாக்குல எபோயும் சனி சரக்கடிச்சு உட்காந்திருக்கே... நாகாக்க... ..

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக வாழ்க்கை என்பது இன்னொரு உலகம்

அதில் இது ஒரு சிறு விடயம்.

அதே பல்கலைக்கழகம் எமது போராட்டத்துக்கு தகுந்த வேளைகளில் செய்த மிகப்பெரிய காரியங்களையும் எழுதலாமே...

இதில் என்ன தவறு?

புலம் பெயர்ந்த நாடுகளில் நாம் இப்படி கொண்டாடுவதில்லையா? அல்லது புலிகள் இருக்கும் காலகட்டத்தில் ஒரு கொண்டாட்டமும் நடத்தப்படவில்லையா? வெளிநாடுகளில் / இந்தியாவில் இருந்து கொண்டு சகல ஆட்டங்கள் பாட்டங்கள் எல்லாம் செய்து கொண்டு இருப்பவர்கள் யாழில் நடந்தால் மட்டும் கொதித்து போய்விடுவர். எந்த சமூகத்திலும் இத்தகைய நிகழ்வுகள் எக்காலத்திலும் நடக்கும்.

விசுகு குறிப்பிட்டது போல, யாழ் பல்கலைக் கழகம் எத்தனையோ வழிகளில் போராட்டத்துக்கு உதவி இருக்கு / உதவுகின்றது. கடும் இராணுவ அச்சுறுத்தல் நிகழும் இடமாகவும் அதுவே இருக்கின்றது...அதில் நடக்கும் சாதாரண பொழுது போக்கு நிகழ்வுகளை தவறுகளாக காண்பிப்பது சுத்த மடத்தனம்

இது செய்தியா????

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. விடுதலைப்புலிகளின் முகாம்களில் சில நேரங்களில் ஆட்டமும் பாட்டுமாக இருப்பது பற்றி மக்கள் சிலர் குறைப்பட்டு கொண்டார்கள். இது பற்றி அவர்களின் நிருவாகத்தில் உயர்மட்ட அங்கத்தவர் ஒருவரின் கவனத்துக்கு கொண்டு வந்த போது அவர் சொன்னார்:

"அவங்கள் நாளைக்கு சாகப்போறாங்கள். இந்த சின்ன சந்தோசத்தையாவது அனுபவத்துவிட்டு போகட்டுமே.”

அங்குள்ளவர்கள் ஜடங்களாக வாழ் வேண்டும் என்று பலர் தொடர்ந்து நினைக்கின்றோம் ... இது ஒரு சரியான உதாரணம், அதற்கு!

இதில் என்ன தவறு?

புலம் பெயர்ந்த நாடுகளில் நாம் இப்படி கொண்டாடுவதில்லையா? அல்லது புலிகள் இருக்கும் காலகட்டத்தில் ஒரு கொண்டாட்டமும் நடத்தப்படவில்லையா? வெளிநாடுகளில் / இந்தியாவில் இருந்து கொண்டு சகல ஆட்டங்கள் பாட்டங்கள் எல்லாம் செய்து கொண்டு இருப்பவர்கள் யாழில் நடந்தால் மட்டும் கொதித்து போய்விடுவர். எந்த சமூகத்திலும் இத்தகைய நிகழ்வுகள் எக்காலத்திலும் நடக்கும்.

இதையே தான் சொல்ல நினைத்தேன்.

இப்படி ஒரு நிகழ்வும் யாழ் பலகலை கழகத்தில் ஒரு காலமும் நடக்காதது போல இருக்கு. இப்படியான நிகழ்வுகள் பல்கலை கழகத்தில் வருட வருடம்/ வருடத்துக்கு இருமுறை என்றாலும் நடக்கும். இப்ப தான் எதோ புதிசாய் நடக்கிறது ஏன்டா மாதிரி.... உதை ஒரு செய்தி எண்டும் <_< புலனாய்வு :lol: எண்டும் உந்த இணைய காரர் நினைக்கினமோ ??

Edited by KULAKADDAN

இதையே தான் சொல்ல நினைத்தேன்.

இப்படி ஒரு நிகழ்வும் யாழ் பலகலை கழகத்தில் ஒரு காலமும் நடக்காதது போல இருக்கு. இப்படியான நிகழ்வுகள் பல்கலை கழகத்தில் வருட வருடம்/ வருடத்துக்கு இருமுறை என்றாலும் நடக்கும். இப்ப தான் எதோ புதிசாய் நடக்கிறது ஏன்டா மாதிரி.... உதை ஒரு செய்தி எண்டும் <_< புலனாய்வு :lol: எண்டும் உந்த இணைய காரர் நினைக்கினமோ ??

அதை உள்ளை நிண்டு ஒண்டு சுட்டு குடுத்து வேறை இருக்குதே... ! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் பல்கலைக்கழக நூலகத்தில் கொண்டாட்டம் ??

என்னப்பா?இதைப்போய் ஒரு செய்தியெண்டு இஞ்சை கொண்டுவந்து மாட்டுறியள்?????????????

இன்னும் கொஞ்சநாளையாலை" யாழ்ப்பாணத்தில் மணியத்தின்ரை பெட்டைக்கும் சதாசிவத்தின்ரை பெடியனுக்கும் காதல்" எண்டு ஒரு செய்தியை போடுவியள்? :wub:

அதையும் நாங்கள் வாசிச்சு ரென்சனாகோணும் :D

.வழமையாய் நடக்கிற விசயத்தைக்கூட ஏதோ நடக்கக்கூடாதது நடந்துவிட்டதுமாதிரி ஒருசிலரின் போக்கு போகின்றது.

இப்ப ஒருசில ஆக்களுக்கு செய்திப்பஞ்சம் கண்டியளோ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பல்கலைக்கழக வாழ்க்கை என்பது இன்னொரு உலகம்

அதில் இது ஒரு சிறு விடயம்.

அதே பல்கலைக்கழகம் எமது போராட்டத்துக்கு தகுந்த வேளைகளில் செய்த மிகப்பெரிய காரியங்களையும் எழுதலாமே...

இப்ப சிலருக்கு தேவை

1 யாழ்ப்பாணத்தில விபச்சாரம்

2யாழ்ப்பாணத்தில குழந்தை தொட்டியில்

3யாழ்ப்பாணத்தில் போதையில் யுவதிகளும் இளைஞர்களும்

4 யாழ்ப்பாணத்தில் நீலப்படம்

இப்படியான செய்திகளைப்போட்டு இதில் குளிர்காய வேணும் என்று சிலர் நினைக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்

இதனை பெரிது படுத்தத் தேவையில்லை.

அவர்களும் மனிதர்களே.... அவர்களுக்கும் உணர்வு இருக்கும்.

எல்லோரும் தொப்பியை அந்தமாதிரி பிரட்டதொடங்கிவிட்டதே பெரிய மாற்றம் தான்.அதற்காக முழுக்குத்துக்கரணம் அடித்துவிடாதீர்கள் கருணா மாதிரி பார்க்க சகிக்காது

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் தொப்பியை அந்தமாதிரி பிரட்டதொடங்கிவிட்டதே பெரிய மாற்றம் தான்.அதற்காக முழுக்குத்துக்கரணம் அடித்துவிடாதீர்கள் கருணா மாதிரி பார்க்க சகிக்காது

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் அர்ஜுன்.

நீங்கள் எல்லா கொண்டாட்டமும் கொண்டாடி அநுபவிக்கலாம் என்றால்....

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சந்நியாசியாய் இருக்க வேண்டும் எப்படி எதிர்பார்க்கின்றீர்கள்?

கருணாவுக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில இருக்கிற ஆட்களுக்கு ஒரு நியாயம் உள்நாட்டில இருக்கிற ஆட்களுக்கு இன்னொரு நியாயமோ?????????? செய்திப் பஞ்சம் இருந்தால் வெளிநாட்டுச் செய்திகளை எழுத வேண்டியதுதானே!தமிழனுக்கு உலக அறிவாவது கொஞ்சம் கிடைக்கும்.

ஏன் அப்படிச் சொல்கிறீர்கள் அர்ஜுன்.

நீங்கள் எல்லா கொண்டாட்டமும் கொண்டாடி அநுபவிக்கலாம் என்றால்....

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சந்நியாசியாய் இருக்க வேண்டும் எப்படி எதிர்பார்க்கின்றீர்கள்?

கருணாவுக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லோரும் மீண்டும் வந்து கேள்வி கேட்கமாட்டீர்கள் என்ற துணிச்சல்தான் காரணம் தங்கா ............... :(

இது தனிமனித சுதந்திரம். நாம் தனிமனித சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டைகள் போடும்போது அந்த முட்டுக்கட்டைகளை உடைத்து வெளியேறவே சமுதாயம் எண்ணும். அதைவிட பயந்து பயந்து படித்து பல்கலைக்கழகம் போனவர்கள் இன்னமும் அந்தப் பயம் என்பதை உடைத்து வாழ்வியலுக்குள் புகும் ஓர் புதிய திறவுகோலே இந்த பல்கலைக்கழக அனுமதி.

இதனை ஓர் செய்தியாகப் பெரிது படுத்த நினைக்கும் உங்களால் என்ன கருத்தை சொல்ல வருகின்றீர்கள் என்று கூறினால் சிறிது புரிந்துகொள்ள முடியும். அதைவிட இந்தக் காணொளியை விமர்சிப்பவராக இருந்தால், நீங்கள் வாழ்க்கையில் ஒரு போதும் இவ்வாறு செய்ததில்லை, அல்லது பாடலை இரசித்ததில்லை என்று சொல்லுங்கள் பார்ப்போம். அது அவர்களது உணர்வுகள். அவர்கள் ஆடுவது பாடுவது அவர்களது தனிமானிட சுதந்திரம். அதனை விமர்சிக்கும் உரிமை யாரிடமும் இல்லை.

சுந்ததிரத்திற்கு விளக்கம் சொல்லுகையில் சொல்லுவார்கள் : உனது சுதந்திரம் மற்றவனின் மூக்கு நுனி வரையும் என்று. அது போன்றுதான். இதிலே குறை கூறுவதற்கோ அல்லது அவர்கள் பாதை மாறிச் செல்லுகின்றார்கள் என்று கூறுவதற்கோ ஏதும் இல்லை. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்பது என்னைப் பொறுத்தவரையில் ஓர் மன அமைதியை நாடுபவர்கள் அல்லது தமது துன்பங்களில் இருந்து மனதினை திசை திருப்ப கையாளும் ஓர் கலையாகக் கூட நினைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் வசிப்பவர்கள் கட்டுப்பெட்டித் தனமாகக் கற்காலத்தில் வாழவேண்டும் என்று ஒரு விதியும் இல்லை. களியாட்டங்கள் இல்லாத தமிழர் விழாக்களா?

கொஞ்சம் தீர்த்தம் பருகிவிட்டு "இலங்கை என்பது நம் தாய்த் திருநாடு" என்ற பைலாப் பாட்டுக்கு தேசியச் சட்டையை உரிந்துவிட்டு புலத்தில் நாங்கள் ஆடாத ஆட்டமா ^_^

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் மாணவர்கள் என்றாலும் ஓரளவுக்கு பரவாயில்லை. ஆனால் இதில் ஆட்டம் போடும் யாரும் மாணவர்களாக தெரியவில்லை.அதுதான் கொஞ்சம்..........குருவே இப்படியெண்றால்????

அவர்... குரு என்று எப்படி முடிவு செய்தீர்கள் ?

பல்கலைக்கழக காவலாளியாகவோ, கன்டீன் நடத்துபவராகவோ, பியோனாகவோ இருக்கலாம் அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.