Jump to content

அணி பிரிந்து மல்லுக்கட்ட மக்கள் எம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை - பிரதமர் ருத்திரகுமாரன்


Recommended Posts

"நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் அணிகள் எதற்கும் தேவையும் இல்லை. இடமும் இல்லை. தமிழீழ தேசத்தின் விடுதலைக்கெனச் செயற்படுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார்களேயன்றி அணிபிரிந்து மல்லுக் கட்டுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வாறு அணிபிரிந்து செயற்படுவோமானால் அது மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத்தான் அமையும்" என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை வருமாறு:

மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அமையட்டும்!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழீழ மக்களின் அரசியல் பெரு விருப்;பான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திர வழிமுறைகளினால் முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை நாம் முன்னெடுத்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதனை வடிவமைப்பதற்காக மதியுரைஞர்குழுவும், திட்டத்தை நடைமுறைப்; படுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் செயற்பாட்டுக்குழுக்களும் எனது ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டு - 12 நாடுகளில் தேர்தல்கள் நடாத்தப்பட்டு, உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு - நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற ஓராண்டு காலகட்டமாகிய 2010 ஆண்டு மே மாதம் 17-19 நாட்களில் அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட பிலடெல்பியா நகரில் அமைந்திருந்த வரலாற்றுச்சிறப்பு மிக்க மண்டபத்தில் கூட்டப்பட்டதனையும் நீங்கள் அறிவீர்கள்.

முதலாமது அமர்வின் இறுதியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசவை அரசியல் நிர்ணய சபையாக மாற்றியமைக்கப்பட்டது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக செயற்குழுக்களும் அமைக்கப்பட்டன. அரசியலமைப்பின் முன்வரைவினை விவாதித்து ஏற்றுக்கொண்டு – அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தினை அமைத்துக் கொள்வதற்காகக் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இறுதிப்பகுதியில் நியுயோர்க் நகரில் கூடினோம். அரசியலமைப்பினை விவாதித்தோம். ஏற்றுக் கொண்டோம். இவையெல்லாம் வீடியோ பதிவுகளாக நம்மிடம் உள்ளன. அமர்வின் இறுதி நேரத்தில் சில உறுப்பினர்கள் அதிருப்தி காரணமாகச் சபையில் இருந்து வெளியேறினர். ஜனநாயக முறையின் ஓர் அங்கமாகத் தான் இதனையும் அணுகினோம்.

இதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியில் அமைப்பின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வழிநடாத்திச் செல்லும் நிர்வாகபீடமாக அமைச்சரவையை உருவாக்கினோம். இவ் அமைச்சரவையில் இணைந்து கொள்ள விரும்புவோர் தமது விருப்பத்தையும் தாம் ஆற்றக்கூடிய பணிகளையும் அறியத் தருமாறு சபையில் இருந்து வெளியேறியோர் உட்பட அனைத்து உறுப்பினர்;களிடமும் கோரினோம். தமது விருப்பத்தைத் தெரிவித்தவர்கள் மத்தியில் இருந்து அமைச்சர்களையும் துணையமைச்சர்களையும் தெரிவுசெய்தோம். இளையோர்கள், மூத்தோர்கள், பெண்கள் என அனைவரைம் உள்ளடக்கிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தொடங்கினோம்.

தமிழீழ விடுதலை என்ற நமது இலக்கினை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள பிரதமர் பணிமனையினையும் 10 அமைச்சுக்களையும் கொண்டமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தை 10 மாதம் கருவில் இருந்து உருவாகிப் பிறந்து தவழத் தொடங்கி இன்று நடை பயிலவென நிமிரத் தொடங்கும் கால கட்டத்திலேதான் நாம் நிற்கிறோம். இக் குழந்தையின் வளர்ச்சியில் படிநிலைகள் உள்ளன. இவ் வளர்ச்சிப் படிநிலைகள் ஒவ்வொன்றையும் நாம் கட்டம் கட்டமாகத் தான் தாண்டிச் செல்ல வேண்டும். அதற்குரிய தொலைநோக்குடன் நாம் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு எண்ணக்கருவாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதனைத் தாங்கள் எல்லோரும் நன்கறிவீர்கள். நேரடித் தேர்தல்கள் மூலம் உறுப்பினர்களைத் தெரிவு செய்து அரசாங்கத்தை அமைத்து அமைச்சுக்களை உருவாக்கியுள்ள நாம் அமைச்சுகளுக்குரிய கட்டமைப்புக்களைத் தற்பொழுதுதான் உருவாக்கத் தொடங்கியுள்ளோம். முதற்தடைவையாக அமைக்கப்படும் அரசாங்கம் என்ற வகையில் அரசாங்கத்தின் கட்டமைப்புக்களை உருவாக்கும் பணியும் எம்மிடமே உள்ளது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி அவற்றின் ஊடாக செயற்பாடுகளையும் முன்னெடுப்பது என்பது இரட்டிப்பு சவால் நிறைந்த பணியாகும். நாம் தற்போது உருவாக்கி வரும் அரசாங்கக் கட்டடைப்புக்கள் எதிர்காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலுமையமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக அமைய வேண்டியவை. தற்போதய சூழலில் நாம் ஒருங்குபட்டு கடினமாக உழைப்பதன் ஊடாகவே வலுவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அடித்தளத்தை இட முடியும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இக் குறுகிய கால இயக்கத்தின்போது தனது செயற்பாடுகளை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென்சூடானுடன் நட்புறவுப்பாலம் கட்டப்பட்டள்ளது. ஏனைய பல முனைகளிலும் இராஜதந்திர உறவுகள் கட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். உரிய நேரம் வரும் போது அவற்றை மக்களுக்கு அறியத் தருவோம். சிங்கள தேசமும் அனைத்துலக சமூகமும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்துள்ளதையும் அவற்றின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது. சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அச்சத்தைத் தருவதாக உள்ளது என்பதை அவர்களின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன. ஈழத் தமிழர் தேசமானது தனது பலத்தை தமிழக மற்றும் உலகத் தமிழர்கள் எல்லோரது பங்கு பற்றலுடனும் நியாயத்துக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக மக்கள், சக்திகளின் துணையுடனும் கட்டி எழுப்புவதற்காக நாம் அயராது உழைக்க வேண்டிய கால கட்டம் இது.

இத்தகையதொரு சூழலிலே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசமைப்பினை ஏற்றுக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் தம்மை உறுப்பினர்களாகப் பிரகடனம் செய்யாமல் இன்றுவரை இருந்து வருவது நமக்குக் கவலையையும் ஏமாற்றத்தையும்; தருகிறது.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்று உறுதிமொழி எடுக்கும்போதுதான் உறுப்பினர் தகைமையைப் பெறுகின்றனர். இதனால் அனைத்துத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் முறையாக எல்லோரது அங்கீகாரத்துடனும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியலமைப்பின்படி உறுதிமொழியெடுத்து உறுப்பினர்களாகுமாறு நாம் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகிறோம். எத்தகைய கருத்து முரண்பாடுகளையும்; உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து அணுகுவோம் என்பதுதான் இவ் விடயத்தில் எமது நிலைப்பாடாக இருந்து வருகிறது.

இத்தகைய சூழலில் பெப்ரவரி மாதம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்காத சிலரதும் தெரிவு செய்யப்படாதவர்கள் சிலரதும் பெயர்களில் சில கோரிக்கைகளும் நிபந்தனைகளும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. இக் கடிதம் என்னை வந்தடைவதற்கு முன்னரே ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஓரிரு இணையத்தள ஊடகங்களிலும் பிரசுரமாகியிருந்தது.

இக் கடிதம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்ற ரீதியில் எனக்கு எழுதப்படவில்லை. இக் கடிதத்திற்கு நான் பதிலளிக்காமைக்குப் பல காரணங்கள் உண்டு. முதலாவதாக இக் கடிதம் ஊடகங்களில் முதலில் வெளிவந்து ஒரு கிழமைக்குப் பின்னர் தான் எனக்குக் கிடைத்தது. இரண்டாவதாக நாடு கடந்த உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படாத சிலரது பெயர்களும் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன. மூன்றாவதாக இக்கடிதத்;தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் எல்லாம் என்னிடம் இல்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பில் உள்ளடங்கும் அதிகாரங்கள் மட்டும் எனக்கு உண்டே ஒழிய, நான் சர்வ அதிகாரங்கள் கொண்டவன் அல்ல. நான்காவதாக இக்கடிதத்தில் காணப்பட்ட மிரட்டல் தொனி.

இக்கடிதம் எனக்குப் பிரதமர் என்ற ரீதியில் எழுதப்படாவிடினும், இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பானது என்ற படியினால் இக்கடிதம் பற்றி நான் அமைச்சரவையின் கருத்தைக் கேட்டேன். மேலே கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலும் இக்கடிதம் ஒரு நல்லெண்ணத்துடன் எழுதப்பட்ட கடிதமாக அமையவில்லை என்பதனாலும் நான் அதற்குப் பதில் அனுப்பவேண்டிய அவசியம் இல்லையென அமைச்சரவையும் கருதியது.

இச் சிக்கலை மேலும் நீடிக்க விரும்பாத நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை உறுதிமொழி எடுத்து உறுப்பினர்களாக தகைமைப்;படுத்துமாறு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அழைத்தோம். இக் கால அவகாசம் போதாது எனத் தெரிவிக்கப்பட்டமையால் இது இம்மாதம் 25 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டள்ளது. அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் அறிவித்தவாறு இம் மாதம் 25 ஆம் திகதிக்குள் உறுதிமொழி எடுக்கத் தவறும் தெரிவு செய்யுப்பட்ட உறுப்பினர்கள் தாங்களாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதாகக் கருதி அடுத்த கட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலை தோன்றிவிடும்.

இந் நிலை தோற்றம் பெறுவதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற நிலையில் இருந்து நான் விரும்பவில்லை. அவைத்தலைவர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்றுக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எவரும் விரும்பவில்லை.

இவ் வேளையில், உறுதிமொழி எடுக்காதவர்களை உறுதிமொழியை எடுத்து அவையின் உள்ளே வந்து எமது ஒற்றுமையைப் பலப்படுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசங்கத்தின் இளம் தலைமுறை உறுப்பினர்கள் எடுத்திருக்கும் முயற்சியையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். இம் முயற்சிக்குப் பாராட்டும், இம் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே இலக்கினைக் கொண்டவர்கள். ஒரே நோக்கத்துக்காகச் செயற்படுபவர்கள். அணுகுமுறை வேறுபாடுகள் நமக்கிடையே இருக்கக்கூடினும் நாம் வென்றடைய வேண்டிய இடம் தொடர்பாக நமக்கிடையே மாறுபாடுகள் எதுவுமில்லை. இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் அணிகள் எதற்கும் தேவையும் இல்லை. இடமும் இல்லை. தமிழீழ தேசத்தின் விடுதலைக்கெனச் செயற்படுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார்களேயன்றி அணிபிரிந்து மல்லுக் கட்டுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வாறு அணிபிரிந்து செயற்படுவோமானால் அது மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத்தான் அமையும்.

இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியே நின்று அணிபிரிந்து இயங்கும் செயற்பாடுகளைக் கைவிடுமாறு ’ஜனநாயக அணி’ எனத் தம்மை அழைத்துக் கொள்வோரை உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின்படி உறுதிமொழி எடுத்து உறுப்பினர் தகைமையினை எட்டிக் கொள்ளுமாறும் அவர்களிடம் கோருகிறேன். நமக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நாம் பேசித் தீர்ப்போம் வாருங்கள். முரண்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் ஜனநாயக வரையறைக்குள் இருந்து அணுகுவோம் வாருங்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இதுவரை தெரிவு செய்யப்படாத உறுப்பினர்களைத் தெரிவு செய்யவும், நியமனம் செய்யப்படும் பேராளர்களை நியமனம் செய்யவும,; செனட்சபையை நிர்ணயம் செய்வதற்குமான ஏற்பாடுகளை நாம் இப்போது முன்னெடுத்து வருகிறோம். பிரான்சிலும் பிரித்தானியாவிலும் நெதர்லாந்திலும் பின்லாhந்திலும் இருந்து இன்னும் தேர்தல்கள் மூலம்; தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 10 பிரதிநிதிகளுக்கான தேர்தல்களை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாம் தேர்தல் ஆணையத்தைக் கோரியுள்ளோம். இத் தெரிவுகள் நடைபெற்ற பின்னர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு உட்பட உறுப்பினர்கள் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களை அரசியலமைப்புக்குட்பட்டு மேற்கொள்ள முடியும். பேச்சுக்களின் மூலம் மாறுபட்ட கருத்துக்களுக்குள் உடன்பாடு காணவும் முடியும். நாம் அரசாங்கத்தினை அமைத்த பின்னர் அரசாங்க நடைமுறைகளில் இருந்து பின்வாங்குவதோ, விலகிச் செயற்படுவதோ அல்லது தடம் பிறள்வதோ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சிறப்புக்கோ உதவாது. இந்த விடயத்தில் நாம் தெளிவாகத் தான் இருக்கின்றோம.;

நாம் இப்போது உருவாக்கும் அரசாங்கத்தை அதன் கட்டமைப்புக்களை மக்களால் தெரிவு செய்யப்படவர்களே எதிர்காலத்திலும் நடாத்திச் செல்லப் போகின்றனர். இங்கு நான் உட்பட தனி மனிதர்கள் எவரும் அரசாங்கத்தின் நிலையான தலைவர்களாக இருக்கப் போவதில்லை. ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்கள் தமது முழுமையான விடுதலையை அடைந்து கொள்வதற்கு வழிகோலும் வலுமையமாக நிலைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக எம்முன்னே விரிந்து நிற்கின்றது. அதனைக் கவனத்தில் கொண்டு அவ்வுண்மையை ஏற்றுக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை உரிமையுடன் கோரி நிற்கின்றேன்.

தமிழ் உறவுகளே!

நாம் அதிவேகமாகச் செயற்பட வேண்டிய காலம் இது. தமிழ் ஈழத் தேசத்தவராகிய நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கோர வேண்டிய காலகட்டம். நமது மக்களுக்கு அநீதியினை இழைத்தவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கு நாம் அணிவகுக்கும் காலகட்டம். நமது மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் வேண்டி நாம் போர்க்கொடி தூக்கும் காலகட்டம். தமது குருதியால் நமது தாயகப்பூமியினை நனைத்து, தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து, இக் கனவுகளுடன் தம்விழி மூடிய நமது மாவீர்களின் எண்ணங்களுக்கு நாம் வடிவம் கொடுக்கும் கால கட்டம். தாயக பூமியில் சிங்கள இனவாதப் பூதத்தால் பிய்த்தெறியப்பட்ட நமது மக்களின் மற்றும் மாவீரர், போராளிகள் குடும்பங்களின் வாழ்க்கையினை நிமிரச் செய்வதற்கு நாம் உறுதுணையாக நிற்க வேண்டிய காலகட்டம். நமது தேசத்தின், மக்களின் நலன் சார்ந்து, நமது மக்களுக்கு விசுவாசமாக நாம் செயற்பட வேண்டிய காலகட்டம். இக் காலகட்டத்தில் மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அனைத்தும் அமையட்டும்.

உறுதிமொழி எடுக்காதிருக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் இவ் அழைப்பினைத் தனிப்பட்ட அழைப்பாகக் கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற ரீதியில் இரு கரம் விரித்து உங்களை அழைக்கின்றேன். வாருங்கள்;. ஒன்றாகப் பயணிப்போம். சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைப்போம்.

நன்றி.

விசுவநாதன் ருத்திரகுமாரன்

பிரதமர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

http://www.pooraayam.com/mukiaya/1337-q-----q--.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி

அழைப்பை ஏற்று எல்லோரும் பேசணும்.

அதேநேரம் பிரான்சில்

மக்களவை மற்றும் ஒருங்கிணைப்புக்குழு என்பன சேர்ந்து கிராமம் கிராமமாக ஒன்றுகூடல்களைச்செய்து மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகின்றனர். அதுவும் நல்ல முயற்சியே. முடிவு மக்களின் விருப்பமான இலட்சியத்தை உறுதியுடன் ஒன்றாக செல்லுவதாக இருக்கட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக தமிழ் தேசியத்தை சார்ந்து நின்று தேசிய தலைவரின் பெயரைச் சொல்லி சிறீலங்காவில் அரசியல் செய்துவிட்டு அதையே காட்டி இங்கிலாந்தில் மனைவி சகிதம் அகதி விண்ணப்பம் செய்து.. அது அங்கீகரிக்கப்பட்டு.. பின்னர் நாடு கடந்த தமிழீழ அரசுத் தேர்தலிலும் தெரிவு செய்யப்பட்ட ஜெகானந்த மூர்த்தி போன்றோர்.. இந்த அணி பிரிப்பு விளையாட்டுக்களை கைவிட்டு உண்மையான மக்கள் நலன் விரும்பின் நாடு கடந்த அரசின் தலைமைகளோடு கைகோர்த்து செயற்பட வேண்டும். இன்றேல் முரண்பாடுகளை தீர்க்க முடியவில்லை என்றால்.. மக்களின் தெரிவை ராஜினாமா செய்துவிட்டு மக்களின் தெரிவோடு ஒத்துப் போகக் கூடியவர்களுக்கு வழிவிட வேண்டும். இது நீங்கள் அரசியல் செய்ய அமைக்கப்பட்ட களம் அல்ல. ஒரு இனத்தின் இருப்பை உறுதி செய்ய அமைக்கப்பட்ட வேள்விக் களம். புரிந்து கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் நாடுகடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளாக தெரிவுசெய்யப்பட்டு இதுவரை சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொள்ளாதவர்களின் விபரங்களை இங்கு யாழ் கள நண்பர்கள் யாராவது ஒரு பட்டியலாக தரமுடியுமா? பெயர் மற்றும் எந்த நாட்டிலிருந்து தெரிவு செய்யப்பட்டார் என்ற விபரங்களை தரவும்.

Link to comment
Share on other sites

ஜெகானந்த மூர்த்தி போன்றோர்.. இந்த அணி பிரிப்பு விளையாட்டுக்களை கைவிட்டு உண்மையான மக்கள் நலன் விரும்பின் நாடு கடந்த அரசின் தலைமைகளோடு கைகோர்த்து செயற்பட வேண்டும்.

ஜெயானந்தமூர்த்தி என்பது ஒரு ரொபோட்!! .. அதன் றிமோட் கொன்றோல்கள் சிலரின் கைகளில்!!! ... ஆட்டுவிக்க இந்த ரொபோட் ஆடுகிறது!!! ...

... ஜெயானந்தமூர்த்தி ... கருணாவின் பிரிவின் பின் உறுதியாக தமிழ்த்தேசியத்துக்காக செயற்பட வேண்டுமென்று தீர்மானம் எடுத்து இயங்கிய மனிதர்! ... தெந்தமிழீழ மக்களின் மீது வீழ்ந்த அவப்பழிக்கு கலங்கிய ஒருவர்!!! ... உயிர் போனாலும் தமிழ்த்தேசியத்துக்காக தீர்மானம் எடுத்த மனிதர்!! ... இன்று தமிழ்த்தேசியத்தை குத்தைகைக்கு புலத்தில் எடுத்த தண்டச்சோறுகளின் கரங்களில் வீழ்ந்து, ஆட்டுவிக்கப்படுகிறார்!! .... வேதனை!!!!!

Link to comment
Share on other sites

ஜெயானந்தமூர்த்தி என்பது ஒரு ரொபோட்!! .. அதன் றிமோட் கொன்றோல்கள் சிலரின் கைகளில்!!! ... ஆட்டுவிக்க இந்த ரொபோட் ஆடுகிறது!!! ...

... ஜெயானந்தமூர்த்தி ... கருணாவின் பிரிவின் பின் உறுதியாக தமிழ்த்தேசியத்துக்காக செயற்பட வேண்டுமென்று தீர்மானம் எடுத்து இயங்கிய மனிதர்! ... தெந்தமிழீழ மக்களின் மீது வீழ்ந்த அவப்பழிக்கு கலங்கிய ஒருவர்!!! ... உயிர் போனாலும் தமிழ்த்தேசியத்துக்காக தீர்மானம் எடுத்த மனிதர்!! ... இன்று தமிழ்த்தேசியத்தை குத்தைகைக்கு புலத்தில் எடுத்த தண்டச்சோறுகளின் கரங்களில் வீழ்ந்து, ஆட்டுவிக்கப்படுகிறார்!! .... வேதனை!!!!!

Link to comment
Share on other sites

தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் அறிவித்தவாறு இம் மாதம் 25 ஆம் திகதிக்குள் உறுதிமொழி எடுக்கத் தவறும் தெரிவு செய்யுப்பட்ட உறுப்பினர்கள் தாங்களாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதாகக் கருதி அடுத்த கட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலை தோன்றிவிடும்.

உறுதி மொழி எடுக்காதவர்கள் பதவி விலக்கப்பட்டு வாக்குகளின் எண்ணிக்கையில் அடுத்த நிலையில் உள்ளவர்களை உள்வாங்க வேண்டியது தான்.வெளியில் நின்று கூக்குரல் இடுபவர்களுக்கு வெத்திலை வைத்து கூப்பிட முடியாது. :D

Link to comment
Share on other sites

நாடு கடந்த தமிழீழ அரசவையின் ஜனநாயக அணியின் கட்டமைப்பு

நிறைவேற்று மைய உறுப்பினர்கள்

கிருசாந்தி சக்திதாசன் (பிரான்ஸ்)

சசிதர் மகேஸ்வரன் (பிரித்தானியா)

வித்தியா ஜெயசங்கர் (ஜேர்மனி)

ஆணை மைய உறுப்பினர்கள்

ஜெயவாணி அச்சுதன் (பிரித்தானியா)

கார்த்திகேசன் பரமசிவன் (பிரித்தானியா)

மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன் (கனடா)

எஸ் திருச்செல்வம் (கனடா)

முரளி சிவானந்தன் (நோர்வே)

சிவகுரு பாலச்சந்திரன் (பிரான்ஸ்)

சேரன் சிறீபாலன் (அவுஸ்ரேலியா)

ரேணுகா லோகேஸ்வரன் (ஜேர்மனி)

மயில்வாகனம் பாஸ்கரநாராயணன் (இத்தாலி)

ஜனநாயக அணியின் ஆரம்ப அங்கத்தவர்கள்:

(தேர்தலில் தெரிவானதாக பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு வாக்குரிமை கொண்டிருப்பவர்களும்,

தேர்தலில் வெற்றிபெற்றும் அறிவிப்பு இடைநிறுத்தி வைக்கப்பட்டோ அல்லது முடிவுகளே இதுவரை அறிவிக்கப்படாது வாக்குரிமை அற்றவர்களும் உள்ளடங்கலாக)

தெய்வேந்திரன் குலசேகரம்

மரியாம்பிள்ளை அஞ்சலோ யோகேந்திரன்

வனிதா இராஜேந்திரம்

எஸ். திருச்செல்வம்

சுரேசானந்த் ரத்னபாலன்

பாலன் ரத்னராஜா

சிவகுரு பாலச்சந்திரன்

சசிகுமார் சரவணமுத்து

கிரிஸாந்த் தர்மந்திரன்

திருச்சோதி திருக்குலசிங்கம்

கிருசாந்தி சக்திதாசன்

சேரன் சிறிபாலன்

பரமு ஆனந்தசிங்கம்

வித்தியா ஜெயசங்கர்

ரேணுகா லோகேஸ்வரன்

நடராஜா திருச்செல்வம்

இராசையா தனபாலசுந்தரம்

முகுந்தன் இந்திரலிங்கம்

கணேசரட்ணம் சந்திரபாலன்

மயில்வாகனம் பாஸ்கரநாராயணன்

ஜெயசிறி பாலசுப்ரமணியம்

சிவானந்தன் முரளி

சிவகணேசன் தில்லையம்பலம்

ஜெயவாணி அச்சுதன்

கார்த்திகேசன் பரமசிவன்

மகேஸ்வரன் சசிதர்

சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி

வாசுகி சோமஸ்கந்தா

சண்முகநாதன் கவிராஜ்

சின்னத்துரை சிறிரஞ்சன்

ஆறுமுகம் விவேகானந்தராஜா

http://www.tamilkathir.com/news/4510/58//d,full_article.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிருகங்கள் எப்போதும் வெவ்வேறு தொனிகளை ஒலிப்பதில்லை. நாங்கள் மட்டும் எங்கள் தேவைகளுக்காக வெவ்வேறு கலாச்சாரங்களில், வெவ்வேறு மொழிகளைப்பேசி வாழ வேண்டிய தேவையில் உள்ளோம். ஆனால் ஒரே ஒரு தடவை மட்டும், எங்களுக்குள் உள்ள வேறு பாடுகளை மறந்து ஒன்றாகுவோம். இது ஒரு அவசரமான தேவை. காய்ந்து போகும் எமது உடன் பிறப்புக்கள் கருவாடு ஆக முன்பு, காலத்தின் தேவை அறிந்து செயல் பட வேண்டிய நேரம் இது. சிங்களவனும், இந்தியனும்,யூதனும் எவ்வளவு வேறுபாடுகள் தங்களுக்குள் இருந்த போதும்,

அவைகளை ஒரு புறமாக ஒதுக்கி விட்டு ஒன்றாக முடியுமெனின், ஏன் நாங்கள் ஒன்று பட முடியாது???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரதமரின் நல்லெண்ணக் கோரிக்கையை ஏற்று சத்தியப் பிராமாணம் எடுக்குமாறு ஜனநாயக அணியைக் கேட்டுக்கொள்கிறோம்.குறித்த காலத்திற்குள் சத்தியப் பிரமாணம் எடுக்காதவர்களை நா .க.அரசில் இருந்து நீக்கி விட்டு அவர்களுக்கு அடுத்தநிலையில் அதிக வாக்குப் பெற்றவர்களைப் பிரதிநிதிகளாக நியமிக்கலாம்.அல்லது இடைத்தேர்தல் மூலம் மீண்டும் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கலாம். தமிழரின் கடைசி முயற்சிகளுக்கும் முட்டுக்கட்டை போடுபவர்கள் உண்மையான தமிழ்த்தேசியத்தை நேசிப்பவர்களாக இருக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரிந்து நிற்பவர்கள் கிட்ட தட்ட 40 பேர், மூன்றில் ஒரு பங்கினர் ஒட்டு மொத்த பாராள மன்ற அங்கத்தவர் தொகையில், தேர்தல் நடந்த தொகுதியில் கிட்ட தட்ட அரைவாசி பேர், இவர்களை புறந்தள்ளி விடுவது நாடு கடந்த அரசுக்கு பேராபத்தாக முடியும், அவர்களது குறைகளை பேசி ஒன்றினைப்பதுதான் புத்திசாலித்தனம், மேலும் மேலும் எதிரிகளை உருவாக்கி கொள்வது ஒரு போதும் தமிழினத்துக்கு நன்மை பயக்காது,

"ஒன்று பட்டால்தான் அனைவருக்கும் வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாடு கடந்த தமிழீழ அரசை அமைப்பதிலும் அணிபிரிந்து அடிபடும் துர்ப்பாக்கிய நிலையை நம்மவர்கள் ஏற்படுத்தி இருப்பது மக்கள் மத்தியில் மிகவும் கவலைக்குரிய நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த நிலையை போக்க சில அமைப்புக்கள் முன் வந்து இரண்டு தரப்புக்களிடையேயும் நல்லெண்ணத்தை உருவாக்க முனைகின்றனர். அது வரவேற்கத்தக்கது.

ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வாக்களித்த மக்கள் என்ற அடிப்படையில் இந்த நிலையை கவனிக்கின்ற போது மிகவும் வருத்தமளிக்கிறது.

தேர்தலில் வென்ற பின் மக்கள் விருப்புக்கு எதிராக குளறுபடி செய்யும்.. குளறுபடிக் காரர்கள்.. தொடர்பில் நாடு கடந்த தமிழீழ அரசின் யாப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். குறிப்பாக மக்களின் விருப்புக்கு எதிராக தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் செயற்படும் உறுப்பினர்கள் மீது மக்கள் இடைக்காலத்தில் விருப்பு வாக்களிக்கும் முறையை அமுல் படுத்த வேண்டும். செலவை கட்டுப்படுத்த.. இலத்திரனியல் வாக்களிப்பு முறைகளை இதற்கு பயன்படுத்தலாம். அந்த வாக்களிப்பின் போது குளறுபடி காரர்கள் தங்கள் நிலைப்பாட்டை விளக்கி மக்களின் அங்கீகாரத்தை அதற்கு பெற வேண்டும். ஒருவேளை மக்கள் அதை விரும்பாத பட்சத்தில் முன்னர் தெரிவு செய்யப்பட்டவர்கள் விலகி.. மக்கள் இடைக்கால விருப்பு வாக்களிப்பில் தெரிவு செய்பவர்கள் பிரதிநிதிகளாக அமைய வகை செய்ய வேண்டும். இதன் மூலமே மக்களின் பங்களிப்பையும் பிரதிநிதிகளின் கடப்பாட்டையும் கட்டுப்பாட்டையும் உறுதியாக்க முடியும். தாங்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகளை பதவிக்காலத்தில் கையாளும் அதிகாரம் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும். இன்றேல் தேர்தலில் வென்றதும்.. மக்களுக்கு துரோகம் செய்யும் கூட்டம் பெருகுவதையே சிறீலங்கா.. இந்தியா போன்று இங்கும் நாம் காண வேண்டி ஏற்படும். அதற்கு நாடு கடந்த தமிழீழ அரசு இடமளிக்கக் கூடாது. மக்களும் அதற்கு அனுமதிக்கக் கூடாது. ஜனநாயகத் தன்மை என்பது அடிப்படையை கருவறுப்பதல்ல. அடிப்படையை பலப்படுத்த செய்ய வேண்டும். இது அடிப்படையையே தகர்க்கும் செயலாக இருக்கிறது.

இன்றேல் ஆளாளுக்கு தாங்கள் விரும்புகிற.. தலைமை கேட்டு.. யாப்பு மாற்றம் கேட்டு மக்களின் விருப்புக்கு எதிராக தேர்தலில் வென்ற பின்னர் செயற்படுவதை மக்கள் வேடிக்கை பார்க்கும் நிலையே தோன்றும். இது ஜனநாயக தேர்தல் முறையை கேலிக்கூத்தாக்கும் நிலைக்கு இட்டுச் செல்கிறது. அதுமட்டுமன்றி நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகளை குளப்பி அடிக்கும் நிலைக்கும் கொண்டு சென்று எதிரிக்கு மறைமுகமாக உதவுவதையும் செய்கிறது.

------------------------------------

Sections in TGTE plan 'expelling' Democrats

[TamilNet, Friday, 25 March 2011, 00:44 GMT]

International Association of Tamil Journalists based in London in a news release on Sunday said that it had taken an initiative to sort out contradictory news appearing on the affairs of the Transnational Government of Tamil Eelam (TGTE) and to bring out a dialogue among the members of TGTE. Accordingly, it was agreed upon in a meeting held on 12 March for three committees to discuss the matter, the news release said. In the meantime, a press release signed by Mr. V. Rudrakumaran on Thursday said that if any member declared elected fails to sworn in before Friday, accepting a constitution he claims ratified by the assembly, then it would be considered that such member relieves himself or herself and the TGTE have to move on for the ‘next step’.

The first assembly of the TGTE was elected on the premises that it would serve as a constitution assembly.

Media Statement by IATJ

Elections to the assembly were incomplete. Members are yet to be elected from some constituencies. Results were not declared in some. Re-elections have to be conducted in some other constituencies as election officials decided that there were malpractices.

Mr. Rudrakumaran in his press release has stated that efforts will be taken to elect members for the 10 seats and for filling in the nominated members. Yet, there was a claim in the press release that ‘two third majority’ had ratified a constitution and all members have to now sworn in under it.

Media Statement by V. Rudrakumaran

Considerable number of members opposed to the way the government was declared formed with monopolising powers vested on a single person, when the house was not formed and convened properly.

Informed circles said that certain forces behind the TGTE are keen that the Democrats of the TGTE, who may not be agreeable to an ‘agenda already fixed’ should be expelled now itself, under whatever pretext possible, to carry out the ‘agenda’ without obstacles.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33718

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்து நிற்பவர்கள் கிட்ட தட்ட 40 பேர், மூன்றில் ஒரு பங்கினர் ஒட்டு மொத்த பாராள மன்ற அங்கத்தவர் தொகையில், தேர்தல் நடந்த தொகுதியில் கிட்ட தட்ட அரைவாசி பேர், இவர்களை புறந்தள்ளி விடுவது நாடு கடந்த அரசுக்கு பேராபத்தாக முடியும், அவர்களது குறைகளை பேசி ஒன்றினைப்பதுதான் புத்திசாலித்தனம், மேலும் மேலும் எதிரிகளை உருவாக்கி கொள்வது ஒரு போதும் தமிழினத்துக்கு நன்மை பயக்காது,

"ஒன்று பட்டால்தான் அனைவருக்கும் வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே"

சித்தன் ஒத்துவரமாட்டோம் என்று அடம்பிடிப்பவர்களை எப்படி பேசி இணையவைக்க முடியும்? அடுத்து நல்லது கெட்டது என்பதை ஓரளவுக்குத் தன்னும் தங்கள் சிந்தனையில் பகுத்தாய்ந்து புரிந்து கொள்ள வேண்டும் அல்லது புரிய முயற்சிக்கவேண்டும். நெல்லையன் சொல்வது போல் ரோபோக்களாக இருப்பவர்களை எப்படி சிந்திக்க வைப்பது?

Link to comment
Share on other sites

"ஒன்று பட்டால்தான் அனைவருக்கும் வாழ்வு, ஒற்றுமை நீங்கினால் அனைவருக்கும் தாழ்வே"

கிருசாந்தி சக்திதாசன் அவர்கள் ஏற்கனவே பிரான்ஸில் பல அமைப்புக்களிலும் கட்சிகளிலும் அங்கம் வகிப்பவர். அவர் தமிழ் மக்களுக்காகப் போராட வேண்டுமானால் இவற்றினூடாக அதைச் செய்யலாம். அனாவசியமாக நா. க. அரசுக்குள் நுளைந்து பிரிவினையை ஏற்படுத்துவது வரவேற்கத் தக்கதல்ல.

Link to comment
Share on other sites

*நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்க லண்டனுக்கு விரையும் சிறிலங்கா

புலனாய்வாளர்கள் !*

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளும் அதற்கான ஆதரவும் பெருகிவரும்

நிலையில் அதனை சீர்குழைக்கும் நோக்கில் சிறிலங்காப் புலனாய்வாளர்கள் லண்டனுக்கு

விரைவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ் மக்கள் தங்களுடைய லட்சியமான தமிழீழக் கோட்பாட்டை கைவிட்டு ஒன்றுபட்ட

இலங்கைக்குள் சிறிலங்கா அரசுடன் கூட்டு அரசியலுக்கு தயாரிவிட்டனர் எனும்

சிறிலங்கா அரசின் சர்வதேச பிரச்சாரங்களுக்கு உலக அரங்கில் பெரும் சவாலாக புலம்

பெயர் தமிழர்களும் அவர்களுக்கு தலைமை தாங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும்

பெரும் இடைஞ்சலாக அமைவதாக குறிப்பிட்டிருக்கும் கொழும்பு ஊடகம் இதனை தடுத்து

நிறுத்தும் முயற்சியில் தீவீரமாக இறங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கேபியை முன்னிறுத்தி புலம்பெயர் தமிழர்களை குழப்ப எடுத்து வரும்

முயற்சிகள் மறைமுகமாக மேற்கொண்ட சிறிலங்காப் புலனாய்வுத்துறை இப்போது

நேரடியாகவே புலத்தில் கால்பதிக்க தொடங்கியுள்ளது.

முள்ளிவாய்காலுக்கு பின்னர் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்ட

குழப்பங்களை தனக்கு சாதமாக பயன்படுத்த சிறிலங்கா அரசு முனைந்து வரும் நிலையில்

குழப்பங்களை கடந்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராஜதந்திர செயற்பாடுகள்

வேகம் பெறுகின்றமை பெரும் நெருக்கடியை சிறிலங்காவுக்கு தோற்றுவித்துள்ளதாக

கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ள சிறு சிறு பிளவுகளை ஊதிப் பெருப்பித்து தமிழ்

மக்களை மேலும் குழப்ப நிலையில் வைத்திருக்க அது முனைவதாக அந்த செய்தியில்

குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனொரு அங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பினை ஏற்றுக் கொள்ளாமல்

வெளியில் நின்று அரசியல் செய்யும் சிறுகுழுவை தனது நிகழ்சி நிரலுக்கு ஏற்றவாறு

பயன்படுத்த சிறிலங்கா அரசு முனைகின்றது.

அமெரிக்காவைத் தளமாக கொண்டு இயங்கும் சிறிலங்கா அரசின் பரப்புரை ஊடகமாக பொஸ்ரன்

நியூஸ் எனும் இணையம் இதனை தெளிவாக காட்டியுள்ளது.

வெளியில் நின்று அரசியல் செய்யும் சிறுகுழுவை தனக்கு சார்பாக பயன்படுத்தும்

நோக்கில் மறைமுக ஏஜெண்டுகள் மூலம் அவர்களை தொடர்பு கொள்வதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே வரதராஜப்பெருமாளின் ஐரோப்பிய பயணத்தில் திட்டங்களைத் தீட்டியதாக

ஏற்கனவே பொஸ்ரன் நியூஸ் செய்தி வெளியிட்;டிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை சீர்குலைக்க நினைக்கும் சிறிலங்கா அரசுக்கு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் முரண்பிடிக்கும் இச்சிறுகுழுவின் செயற்பாடுகள்

வரப்பிரசாதம் என குறிப்பிட்டிருக்கும் பொஸ்ரன் நியூஸ் இதனை தீவிரப்படுத்து

திட்டங்களை வகுத்துள்ளது.

மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமை லண்டனில் ஒன்று கூடவுள்ள இந்த சிறுகுழுவின்

கூட்டத்தில் சிறிலங்காப் புலனாய்வுத்துறையின் மறைமுக ஏஜெண்டுகளும் பங்கெடுக்கவே

லண்டனுக்கு புலனாய்வாளர்கள் விரைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள்

புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கை தமிழ் மக்களின் மத்தியில் தெளிவான நிலைப்பாட்டை

எட்டியுள்ள நிலையில் அதனை திசைதிருப்பும் நோக்கில்ஹபரண காட்டுப்பகுதியில்

சிறிலங்காப் படையினர் மீது தாக்குல் என செய்தி திட்டமிட்டு இந்த மறைமுக

புலனாய்வு ஏஜெண்டுகளால் பரப்பபட்டிருக்கலாம் என நம்பகமான செய்திகள்

தெரிவிக்கின்றன.

boston news link :

*http://www.youtube.com/watch?v=TDzNSHD5EWY*<http://www.youtube.com/watch?v=TDzNSHD5EWY>

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிருசாந்தி சக்திதாசன் அவர்கள் ஏற்கனவே பிரான்ஸில் பல அமைப்புக்களிலும் கட்சிகளிலும் அங்கம் வகிப்பவர். அவர் தமிழ் மக்களுக்காகப் போராட வேண்டுமானால் இவற்றினூடாக அதைச் செய்யலாம். அனாவசியமாக நா. க. அரசுக்குள் நுளைந்து பிரிவினையை ஏற்படுத்துவது வரவேற்கத் தக்கதல்ல.

ஒரு சிறு கூடுதல் தகவல்

இவர் வென்ற தொகுதி ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே இவர் உறுப்பினர் அல்ல.

அதேநேரம்

மிகவும் இக்கட்டான வேளைகளிலும் முழுமூச்சாக எம்முடன் நின்று எமக்காக உழைத்தவர்.

இங்கு ஒரு பிரெஞ் மாநகரசபை உறுப்பினர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு அழிவுக்கப் பின்னரும் எழுந்து நிற்க நமக்குக் கிடைத்த ஊன்றுகோல்தான் நா.க.அரசு.உங்களுக்கள் இருக்கும் பிரச்சனைகளை உள்ளேயிருந்த கொண்டு விவாதிக்க வேண்டுமே ஒழிய நா.க.அரசு சரியில்லை. பிரதமர் சரியில்லை யாப்பு சரியில்லை என்று குழப்பி அடிக்கக் கூடாது.இப்பொழுதுதான் ஒரு அரசுக்குரிய யாப்பை முதன்முதலாக எழுதியிருக்கிறோம்.அதில் சரி பிழைகள் இருக்கலாம்.அதை உள்ளே இருந்து கொண்டு விவாதியுங்கள் திருத்தம் செய்யங்கள். எங்களுக்குள் சண்டை என்று நடு வீதியில் நின்று பறை அடிக்காதீர்கள்.

Link to comment
Share on other sites

அண்ணை வன்னிக்கு போகேக்க தலைவருடன் படம் எடுக்கமுன் என்ன கதைத்தார் என்று சொன்னால் நல்லது.

எங்களுக்கு தெரிந்தது உங்களுக்கு தெரியாமல் போனதா?

Link to comment
Share on other sites

குடித்துவிட்டு பெண்களின் பின்னால் அலைந்து இலக்கியம் பேசுபவர்களுக்கு என்ன தெரியும் என்பது எல்லாருக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

உருத்திரகுமாரன் அவர்கள் விரைந்து சில செயற்திட்டங்களை முன்னெடுத்தால் பல பிரச்சனைகளை இல்லாதொழிக்கலாம்.

Link to comment
Share on other sites

ஒரு ஜனநாயகத்தில் எதிர்க் கருத்துக்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்பது நியதி. அப்படி திரு உருத்திரகுமாரனுக்கு அல்லது அவரது செயல்முறைக்கு எதிரான கருத்துக்களைக் கூறியுள்ள ஜனநாயக அணியும் தமிழ் மக்களால் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்தான். அவர்களது கருத்துக்களும் ஒரு குறிப்பிட்ட சதவீத மக்களின் கருத்தையே பிரதிபலிக்கிறது. ஜனநாயக அணியினருக்குத் தமது கருத்தைக்கூறவோ அல்லது நாடு கடந்த அரசின் செயற்பாடுகளை விமர்சிக்கவோ உரிமையும் கடமையும் உண்டுதானே?

Link to comment
Share on other sites

மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் மேலதிக வாக்குகளினால்த் தான் ஒவ்வொரு சரத்தும் நிறைவேற்றப்பட்டது.

அத்துடன் தேவைகள் ஏற்படும் போது திருத்தங்கள் மேற் கொள்வதென்றம் நிறைவேற்றப்பட்டது.

இவர்கள் பக்கம் நிஞாயம் இருப்பின் மற்றவர்கள் எப்படி எதிராக வாக்களித்திருப்பர்.

கொஞ்சமாவது யோசியுங்கள்.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் விடுதலைப்புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளில் நீக்குவதற்க வாய்ப்புகள் அதிகம் இருந்தன.

ஆனால் இந்தக் கும்பலை இயக்கும் சிங்கள நெட் கனவானும் நந்கோபன் கூட்டமும் கோத்தபாயவிடம் பணத்தை பெற்றுக்கொண்டு விடுதலைப்புலிகளை தடைசெய்விப்பதற்கான அனைத்து வேலைத் திட்டங்களையும் தேசியம் பேசிக் கொண்டே செய்தது.

விடுதலைப்புலிகளின் தடையை இறுக்குவதன் மூலம் அல்லது மீளக் கொண்டுவரும்படி செய்துவிட்டு தாங்கள் தான் விடுதலைப் புலிகளின் உண்மையான செயற்பாட்டாளர்கள் என்று காட்டிக் கொண்டு நாடுகடந்த அரசுக்குள் வந்து தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களே நாடுகடந்த அரசுக்குள்ளும் இருக்கிறாhர்கள் எனவே நாடுகடந்த அரசும் ஒரு பயங்கரவாத அமைப்பு என்று அதை தடை செய்விப்பது தான் கோத்தபாயவின் சதித்திட்டமாகும்.

40 ஆயிரம் மாவிரர்கள் செய்த தியாகத்தின் அத்மபலம் இந்த நாசகார கும்பலை தோற்கடித்துவிட்டது

இனியாவது இவர்களின் பின்னால் நின்றவர்கள் நிற்பவர் இவர்களின் உண்மையான நோக்கத்தையும் உணாந்து இவர்களை ஓரங்கட்டிவிட்டு நாடுகடந்த அரசை பலப்படுத்த முன்வரவேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உருத்திரகுமாரன் அவர்கள் விரைந்து சில செயற்திட்டங்களை முன்னெடுத்தால் பல பிரச்சனைகளை இல்லாதொழிக்கலாம்.

எனக்கென்னவோ ஒரு சந்தேகம் அவரை செயற்பட வைக்கத்தான் இந்த பிரச்சினைகள் வந்ததோ என்று, முன்பு அறிக்கை போருடன் நின்றவர்கள் இப்போது பல விடங்கள் செய்யத்தொடங்கி இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாரிய கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம்; சமன் ரத்னப்பிரிய! 27 SEP, 2024 | 05:07 PM (எம்.ஆர்.எம்.வசீம்) வரலாற்றிலேயே  மிகப்பெரிய கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட எதிர்பார்க்கிறோம். ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலும் சாதகமான நிலைக்கு வந்துள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.   இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,  பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போது அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்க்கட்சியில் இருக்கும் அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தேர்தலுக்கு முகம்கொடுப்பதற்கே எதிர்பார்க்கிறோம்.   நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும் அவ்வாறு இருப்பதாகவே எமக்கு தோன்றுகிறது. அவ்வாறான பரந்துபட்ட கூட்டணியை அமைக்குமாறே அனைவரும் வற்புறுத்தி வருகின்றனர்.   அதனால் இந்த கூட்டணியை அமைப்பதற்காக தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடனான கலந்துரையாடலை ஆரம்பித்திருக்கிறோம்.    அதேபோன்று மொட்டு கட்சியின் பெரும்பான்மை பிரிவினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.    ஓரிரு தினங்களில் இந்த கலந்துரையாடல்களை முடிவுக்கு கொண்டுவர முடியுமாகும். அதனால் வரலாற்றில் பெரிய கூட்டணி அமைத்து இந்த பாராளுமன்ற தேர்தலில் பாேட்டியிட முடியுமாகும் என எதிர்பார்க்கிறோம். பல்வேறு தரப்பினர்கள் கட்சிகளுடன் கலந்துரையாடிய விடயங்களை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடனும் நாங்கள் கலந்துரையாடினோம்.    ரணில் விக்ரமசிங்கவின் ஆலாேசனையின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இரண்டு தினங்களுக்கு முன்னர் கலந்துரையாடினோம். நேற்றும் கலந்துரையாடினோம்.    அந்த கலந்துரையாடல் சாதகமாக அமைந்துள்ளது. ஆரம்பத்தில் ஐக்கிய மக்கள் சக்தி இந்த பேச்சுவார்த்தைக்கு பின்வாங்கியபோதும் தற்போது அவர்கள் கலந்துரையாடல்களுக்கு இணக்கம் தெரிவித்து, ஆராேக்கியமான பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.    அதனால் தொடர்ந்தும் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிடவே நாங்கள் எதிர்பார்க்கிறோம்.   கூட்டணி அமைத்து போட்டியிடுவதன் மூலமே எமக்கு தேர்தலில் எதிர்பார்ப்பொன்றை ஏற்படுத்திக்கொள்ள முடியும். எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகும் என்றார். https://www.virakesari.lk/article/194920
    • நிலாமதியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. கிறுக்க முயற்சிக்கிறேன்.  நாம்தானே ஓடிவந்துவிட்டோம். எங்கோ ஒதுங்கி ஓடிய காலங்களைத் திரும்பிப்பார்க்கும் போது வெறுமையாய் தெரிகிறது.    நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி சுவியவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. நீங்களே ஒரு சிறந்த படைப்புகளைப் தருபவர். உங்கள் வரிகள் உற்சாகம் தருவனவாக உள்ளன.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி ஈழப்பிரியனவர்களே, படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. உண்மைதான். ஆனால், சிங்களத்தின் சிந்தனையல்லவா எம்மை ஆக்கிரமித்துள்ளது.  நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
    • ஸ்துமாரி (Stumari) ஸ்துமாரி (Stumari) என்கிற ஜார்ஜியா மொழி வார்த்தைக்கு விருந்தினர் என்ற பொருள்.  இன்றைக்கு இந்த வார்த்தையை நான் தெரிந்து கொள்ள காரணமாக இருந்தது இன்றைய சிறப்பு தினம்! ஆம் இன்றைக்கு உலக சுற்றுலா தினம் - 27 செப்டம்பர் - ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தினை உலக சுற்றுலா தினமாக, உலகம் முழுவதும் கொண்டாடுகிறார்கள்.  இந்தப் பழக்கம் ஆரம்பித்தது எப்போது தெரியுமா? 1980-ஆம் ஆண்டு. ஒவ்வொரு வருடமும் இந்த தினத்திற்கான நோக்கம் ஒன்று தான் - அது சுற்றுலா. தவிர ஒவ்வொரு வருடத்திற்கான Theme மட்டும் மாறுபடுகிறது.  இந்த வருடத்திற்கான உலக சுற்றுலா தினத்தின் Theme - Tourism and Peace! இந்த வருடம் உலக சுற்றுலா தினம் கொண்டாட தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இடம் Georgia! அதனால் தான் எனக்கும் ஜார்ஜியா மொழியில் இருக்கும் ஸ்துமாரி (Stumari) என்கிற வார்த்தை தெரிந்தது.  அவர்கள் விருந்தினரை கடவுளின் அன்பளிப்பாக கருதுகிறார்கள் (Stumari is a gift of God!). ஸ்துமாரி குறித்த ஒரு காணொளியை பாருங்களேன். சுற்றுலா குறித்த எனது ஆர்வம் குறித்து எனது தொடர்பில் இருக்கும் பலரும் அறிந்திருப்பார்கள். நான் சென்ற சுற்றுலாக்கள் பொதுவாக சராசரியை விட அதிகம் என்றாலும் ஒரு சிலருடன் ஒப்பிடும்போது குறைவு தான் 🙂ஹாஹா…  எத்தனை பயணம் செய்தாலும் இன்னும் வேண்டும், இன்னும் இன்னும் பயணிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் குறைவதே இல்லை.  பயணம் மீது ஒரு வெறுப்பு வருவதே இல்லை.  எப்போது பயணிக்க வேண்டும் என்று சொன்னாலும் உடனே மனதில் புத்துணர்வு வந்து விடுகிறது.  சூழல்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக எந்த வித சுற்றுலாவும் செல்லவில்லை என்றாலும் சுற்றுலா மீதான ஆர்வம் இன்னும் குறையவே இல்லை.  வாழ்க்கையில் இருக்கும் ஒரு ஆசை தொடர்ந்து சுற்றுலா செல்வதும், அந்தப் பயணங்கள் வழி பல விஷயங்களைத் தெரிந்து கொள்வதும் தான்.  வேறு பெரிய ஆசைகள் எதுவும் இல்லை. பார்த்தது கையளவு என்றால் பார்க்காதது உலகளவு.  உலகம் முழுதும் பார்க்க வேண்டும் என்று கூட இல்லை, பாரதம் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ஒரு ஆசையாக இருக்கிறது.  இந்த வருடத்தின் உலக சுற்றுலா தினம் குறித்த Concept Note UN தளத்தில் பார்க்கக் கிடைத்தது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால் அதனை இங்கே படிக்கலாம். இந்தக் குறிப்பின் படி, 2024-ஆம் ஆண்டின் உலக சுற்றுலா தினம், சுற்றுலா மற்றும் அமைதியை உருவாக்குவதற்கான தொடர்பினை சந்திப்பை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.  பயணம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் நிலையான சுற்றுலா நடைமுறைகள், அமைதியை உலகம் முழுவதும் நிலைநிறுத்த எவ்வாறு பங்களிக்க முடியும் என்பதையும் நாடுகளுக்கு இடையேயான மோதல்களுக்கு தீர்வு, நாடுகளுக்கு இடையே நல்லிணக்கம் மற்றும் உலகளவில் அமைதியை மேம்படுத்துதல் ஆகியவற்றை பிரதான நோக்கமாக கொண்டு கொண்டாடப்படுகிறது.  எங்கு பார்த்தாலும் நாடுகளுக்கு இடையே சண்டைகள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் படிக்கையில் சுற்றுலா இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக இருக்க முடியும் என்றே தோன்றுகிறது.   நம் நாட்டில் மட்டுமே எத்தனை எத்தனை சுற்றுலா தலங்கள்? ஒரு பிறப்பில் இவை அனைத்தையும் பார்த்து விட முடியுமா என்ன?  அதனால் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு விட வேண்டும்.  சுற்றுலா/பயணம் மூலம் பல இடங்களை பார்க்க முடியும் என்பதோடு விதம் விதமான மனிதர்களையும் சந்திக்க முடிகிறது.  பல வித அனுபவங்களையும் பயணங்கள் நமக்குத் தருகின்றன.  ஆதலினால் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!  இந்த உலக சுற்றுலா தினத்தில் நமக்கு பயணம் செய்ய கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வோம் என்று தீர்மானம் செய்து கொள்வோம்.  தொடர்ந்து பயணிப்போம்.  பல அனுபவங்களைப் பெறுவோம். பயணம் நல்லது ஆதலினால் பயணம் செய்வீர்! https://venkatnagaraj.blogspot.com/2024/09/World-Tourism-Day-2024.html
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.