Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயணம் .....................

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெப்போலியன் பல முறை போரில் தோற்ற போதும் இன்றும் மாவீரன் நெப்போலியன் என அழைக்கப்பட்டது மட்டுமில்லாமல் அவனது தோல்விகள், வெற்றிகள் எல்லாம் எழுத்தில் உள்ளது.காரணம் நெப்போலியனுக்கு அடுத்த சமுதாயம் பாடங்களை கற்றுக்கொள்ளும் என்பதற்காகவே எல்லாம் எழுத்தாக்கம்(documents) செய்யப்பட்டுள்ளது.இது போல் நாம் தோற்று விட்டோம் என்ற விரக்தியில் அடுத்த தலைமுறைக்கு தெரிவிக்காமல் விடுவது தவறு என நினைக்கிறேன்.

நெப்பேலியன் தோற்றிருக்கலாம். அலெக்சாண்டர்கூட தோற்றான் அதுவும் இந்தியாவில். வரலாறு என்பது சிக்கலானது. நெப்போலியன் தோற்றாலும் அவன் சிதறியிருந்த பிரான்சின் சிற்றரசுகளை ஒன்றிணைத்து ஒரு பிரெஞ்சு தேசத்தை கட்டியமைத்தபின்னர் வாட்லூ போரில் இங்கிலாந்திடம் தோற்றான் மேலதிக ஆசை. அவன் கட்டியமைத்த தேசம் இருந்தது. வரலாற்றை எழுதினார்கள். நாம் தோற்றவர்கள் வெறும் சம்பவம் மட்டும்தான் . மிகப் பெரும்போரை தொடுத்த கிட்லர் வெறும் சம்பவம் மட்டும்தான் வரலாறு அல்ல. அவன் வென்றிருந்தால் அதுதான் 20 ம் நூற்றாண்டின் வரலாறுநெப்போலியனின் தோல்விகளை போல புலிகளின் தோல்விகளையும் காரணத்தையும் நான் எழுதினால் எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள் நீங்கள் உட்பட??? முடியாது.... :mellow:

  • Replies 283
  • Views 41k
  • Created
  • Last Reply

சாத்திரி

தெரிந்த விடயங்களை எழுதி வையுங்கள். இப்பொழுது வெளியிடுவதற்கான நேரமில்லைஎன்றாலும், என்றோ தேவைப்படும்.

பலரின் வாழ்நாள் தியாகங்கள் கால ஓட்டத்தில் மறக்கடிக்கப்பட்டு விட்டன.

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா, உங்கள் கட்டுரைகள் ஆக்கங்கள் தொடர்ந்த்து படிக்கிறனான், நன்றாக எழதுகின்றிர்கள், தொடர்க உங்கள் பணி, நீங்கள் ஆற்றிய ஆற்றிக் கொண்டிருக்கின்ற பணிகள் மிகச் சிறந்தவை எங்கள் மக்களுக்கு.

Edited by Udaiyar

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணா, உங்கள் கட்டுரைகள் ஆக்கங்கள் தொடர்ந்த்து படிக்கிறனான், நன்றாக எழதுகின்றிர்கள், தொடர்க உங்கள் பணி, நீங்கள் ஆற்றிய ஆற்றிக் கொண்டிருக்கின்ற பணிகள் மிகச் சிறந்தவை எங்கள் மக்களுக்கு.

நன்றிகள் உடையார். அதென்ன உடையார் எப்படி தட்டினாலும் உடையமாட்டிங்களோ?? :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் உடையார். அதென்ன உடையார் எப்படி தட்டினாலும் உடையமாட்டிங்களோ?? :lol: :lol:

இல்ல சாத்தரி அண்ணா, எங்கட ஊரில் ஒரு அப்பு இருந்தவர் அவர் வயது வித்தியாசம் இல்லாமல் நல்லா பழுகுவார், அத்துடன் தன்னுடைய பழய கதைகள் எல்லாம் சொல்வார், இப்ப அவர் உயிருடன் இல்ல, இன்னுமொரு உடையார் கொக்குவிலில் இருந்தவர் அவரும் நல்ல பழக்கமாகினார், இருவரிடமும் பழகிய பின் எனக்கு விளங்கியது, என்னால் அவர்கள் செய்த எல்லாம் செய்ய முடியாது, கடைசி அவர்களின் பெயரையாவது பயன்படுத்துவம் என்று யாழில் பாவிக்கிறன்

நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சாத்திரி. சாத்திரியாரே உங்களுக்குச் சாத்திரமும் தெரியுமா :wub:

Edited by அலைமகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு. வாழ்த்துக்கள் சாத்திரி. சாத்திரியாரே உங்களுக்குச் சாத்திரமும் தெரியுமா :wub:

நன்றிகள்அலைமகள்..சாத்திரம் மட்டுமில்லை யோகாசனத்திலை குண்டலி ஆசனம் வரை தெரியும் பழக விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம். :lol:

நன்றிகள்அலைமகள்..சாத்திரம் மட்டுமில்லை யோகாசனத்திலை குண்டலி ஆசனம் வரை தெரியும் பழக விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம். :lol:

பகிடி ஒண்டும் விடேலையே சாத்திரி :):):) நான் நினைச்சன் சிரித்திரன் சுந்தரின் உருவகங்களின் தொடரான சவாரித்தம்பர், சின்னக்குட்டி, சாத்திரியர், இல் கடைசி நீங்கள் என்று சின்னக்குட்டியர் லண்டனில இருக்கிறார் :D:D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்அலைமகள்..சாத்திரம் மட்டுமில்லை யோகாசனத்திலை குண்டலி ஆசனம் வரை தெரியும் பழக விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம். :lol:

இது தான் குண்டு எலிemoticon-animal-053.gif ஆசனம் எல்லாரும் பார்த்து பழகுங்கோ...emoticon-animal-053.gifசிரிக்க கூடா.. :lol::lol:

Edited by யாயினி

இது தான் குண்டு எலிemoticon-animal-053.gif ஆசனம் எல்லாரும் பார்த்து பழகுங்கோ...emoticon-animal-053.gifசிரிக்க கூடா.. :lol::lol:

ஓ......................... :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் குண்டு எலிemoticon-animal-053.gif ஆசனம் எல்லாரும் பார்த்து பழகுங்கோ...emoticon-animal-053.gifசிரிக்க கூடா.. :lol::lol:

எப்படி இப்படி யோசித்து தோடி எடுத்து போடுறீங்கள், room போட்டு யோசிப்பிங்களா,

சிரிக்க கூடா.. :D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...ஆ...சாத்திரி அண்ணா எங்கே எஸ்கேப் ஆகி விட்டார்..? :rolleyes: குண்டு எலி ஆசன வகுப்பில் மாணவர்கள் தொல்லை அதிகமாச்சோ... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆ...ஆ...சாத்திரி அண்ணா எங்கே எஸ்கேப் ஆகி விட்டார்..? :rolleyes: குண்டு எலி ஆசன வகுப்பில் மாணவர்கள் தொல்லை அதிகமாச்சோ... :lol:

உங்கடை குண்டெலியை பார்த்ததும் பயந்திட்டன் அதுதான் எஸ்கேப் ஆயிட்டன் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆ...ஆ...சாத்திரி அண்ணா எங்கே எஸ்கேப் ஆகி விட்டார்..? :rolleyes: குண்டு எலி ஆசன வகுப்பில் மாணவர்கள் தொல்லை அதிகமாச்சோ... :lol:

குண்டலினி யோகத்தை முறைப்படி கற்றவர்களுக்கு நீர் மேல் நடக்க முடியும். காற்றில் மிதக்க முடியும். கண்ணுக்கு தெரியாமல் மறையவும் முடியும். ஆனால் அத்தகையவர்கள் அதை வெளியில் காட்டி பிழைப்பு நடத்தமாட்டார்கள். :D

உஜிலாதேவி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெல்கம்மில் இருந்து மீண்டும் மும்பை புறப்படும்வரை நான் அந்த வீட்டிலேயே தங்கியிருந்தேன் அங்கு அக்கம் பக்கத்தவர்ர்கள் சொன்னது போல் பேயோ பூதமோ எதுவுமே வரவில்லை. அங்கு முன்னர் குடியிருந்த முஸ்லிம் குடும்பத்தினர் பல மாதங்களாக வாடைகை கட்டமல் இருந்திருக்கிறார்கள். அதனால் வீட்டு முதலாளி வீட்டை காலி செய்யச்சொல்லி போலிசில் புகார் குடுத்திருக்கிறார்.அதனால்அங்கிருந்த குடும்பம் வீட்டை விட்டு போகும் போது அங்கு பேய் இருக்கிறது அதனால்தான் வீட்டை காலி செய்கிறோம் என்று கதையை பரப்பிவிட்டு போயிருக்கிறார்கள். அதனாலேயே வேறு யாரும் அந்த வீட்டை வாடைகைக்கு கேட்டு வராமலிருந்திருக்கிறார்கள்.

நான் அங்கு தங்கியபொழுது ஆரம்பத்தில் நான் காலைமை எழும்பி கதைவைத் திறக்கும் வரை நான் இருக்கிறேனோ இல்லாட்டி பேயடித்து போயிட்டனா என்று அறியும் ஆவலில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வாசலை எட்டியெட்டிப்பார்த்தபடி இருப்பார்கள். சிலநாள் செல்ல பேயெல்லாம் இல்லையென்று அவர்களுக்கும் தெரியவர என்னை ஒருத்தரும் கணக்கிலையே எடுக்கேல்லை. எனக்கு இந்தியா போனதும் ஆரம்பத்தில் இரண்டு மூன்று நாட்கள் கழிவறை பிரச்சனையாக இருந்தது. கீழே குந்தியிருக்கும் பொழுது முழங்கால் நோகத்தொடங்கியது அதே நேரம் பின் பக்கமாய் பிடரிஅடியுண்ட விழுந்துடுவனோ என்று பயத்தில் முன்னால் இருந்த தண்ணி வாழியை பிடித்தபடிதான் இருந்தேன். பின்னர் சரியாகிவிட்டது.நான் தங்கியிருந்த வீட்டிற்கு நான் போனதும் முதல் வேலையாக ஒரு போத்தல் பினாயில்(தொற்று நீக்கி) வாங்கி கழிவறையை நல்லாய் கழுவிய பின்னர்தான் நிம்மதியாய் போய்வர முடிந்தது. நான் பெல்கம்மில் நின்ற சமயத்தில்தான் உலக கிறிகற் விழையாட்டு நடந்துகொண்டிருந்தது. பெரும்பாலும் எல்லா வயதினரும் ஆண்கள் பெண்கள் வயது வேறுபாடின்றி தொலைக்காட்சியின் .முன்னால் இருந்து கிறிகற்றை ரசித்தனர்.

அப்பொழுது அரையிறுதி ஆட்டம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் வந்துவிட்டது. அதில் வெல்பவர்கள் ஏற்கனவே இறுதி சுற்றிக்கு தெரிவாகியிருந்த சிறீலங்காவுடன் விழையாவேண்டும்.நான் தங்கியிருந்த பகுதியில் கணிசமான முஸ்லிம்களும் குடியிருந்ததால் அந்தப் பகுதி கொஞசம் பதற்றமாகவே இருந்தது. இந்தியர்களிற்கு அதுதான் இறுதியாட்டம் பாகிஸ்தானிடம் தோற்கக்கூடாது என்பதுதான் அனைத்து இந்தியர்களின் பிரார்த்தனையாக இருந்தது. பாகிஸ்தானின் ஒவ்வொரு விக்கட்டும் விழுந்ததும் வாணவேடிக்கை மேளதாளம் என்று அமர்க்களமாகவே இருந்தது. பாகிஸ்தான் வீழ்ந்ததும் பிறகென்ன விடிய விடிய மேளதாளமும் வானவேடிக்கையாவும் இருந்தது. பெரும்பாலான முஸ்லிம்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. சில இடங்களில் சின்னதாய் பிரச்சனைகளும் நடந்திருந்தது. அடுத்ததாய் இறுதியாட்டம் இலங்கைக்கும் இந்தியாவிற்குமானதாய் இருந்தது. என்னிடம் ஒரு நண்பன் கேட்டான் நீ எந்த அணிக்கு ஆதரவு என்று. எனக்கு பொதுவாய் கிறிக்கட்டில் ஆர்வம் இல்லை கால்பந்துதான் எனக்கு பிடித்த விழையாட்டு எனவே எனக்கு எந்த அணி வென்றால் என்ன தோத்தால் இரண்டும் ஒன்றுதான் என்று சென்னேன். பாகிஸ்தானை வென்றதன் பின்னர் இந்தியா இலங்கையிடம் தோற்றாலும் பரவாயில்லை அவங்கள் நம்ம பசங்கள் என்பதே பெரும்பாலன இந்தியர்களிடம் இருந்தது. அவர்களிற்கு இலங்கையர் என்றாலே தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்தும் சிங்களவர்கள் ஓரிசாவிலிருந்தும் போய் குடியேறியவர்கள்.இரண்டுமே நம்ம பசங்கள்தான் ஏதோ அடிச்சிக்கிறாங்கள் நாம ஒரு தட்டுதட்டி வழிக்கு கொண்டுவரலாம் என்பதே இந்தியாவின் சாதாரண குடிமகனில் இருந்து இந்தியாவை ஆட்சிசெய்கிறவர்கள் வரை மனதில் பதிந்திருக்கின்டறதொரு விடயம். அதனாலேயே பெரும்பாலானவர்கள் எமது பிரச்சனையை ஆழமாய் போய் ஆராய்வதோ அதனைப்பற்றி சிந்திப்பதோ இல்லை. அது கிறிகெட் விழையாட்டிலும் தெரிந்தது பாகிஸ்தானை வென்றபொழுது இருந்த ஆர்ப்பாட்டம் இலங்கையை வென்று வெற்றி கிண்ணத்தை கைப்பற்றியபொழுது இருக்கவில்லை. ஆர்ப்பாட்டமெல்லாம்அதிகாலை 2 மணியளவிலேயே ஓய்ந்துபோயிருந்தது.

பெல்கம்மில் நான் தங்கியிருந்த காலங்களில் பலநண்பர்களையும் நீண்ட நாட்களின் பின்னர் சந்தித்து உரையாடியிருந்தேன். இந்த பயணக்கதையை எழுத ஆரம்பித பொழுதே இந்தக் கதையில் மூன்று நண்பர்களை பற்றியே முக்கியமாக எழுதப் போவதாக குறிப்பிட்டிருந்தேன். அதே போல அவர்களைப்பற்றி எழுதிவிட்டேன் அதே நேரம் மற்றைய பல விடயங்களையும் மேலோட்டமாக தொட்டுச்சென்றிருந்தேன். சில விடயங்களை ஆழமாக தொடமுடியவில்லை ஆழமாக நான் தொட நினைத்த விடயங்கள் பல எதிர்ப்புக்களால் தொடரவில்லை. இவை இப்படியே போக இந்தியா என்கிற நாடு உலகின் வல்லரசாகவும் .அடுத்த நூற்றாண்டின் பொருளாதாரத்தை உலகில் நிர்ணயம் செய்யும் நாடு என்று ஆய்வுகள் கூறுகின்றது ஆனால்.என்னைப்பொறுத்தவரை பொருளாதாரத்தில் முன்னேறியிருக்கின்றது உண்மைதான் நவீனமயமாகியிருக்கின்றது. உண்மைதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட விகிதமே. ஆனால் இந்தியா ஒரு போதும் வல்லரசாகவோ சிறந்த பொருளாதார வசதியுடன் அந்த நாட்டின் அனைத்துமக்களும் அடிப்படை வாழ்வாதரம்உயர்ந்த சிறந்த நாடாக மாறப்போவதில்லை. காரணம் அந்த நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கும் ஆட்சியளர்களிலும் அதிகாரங்களிலும் அரசநிறுவனங்களிலும் ஊழல்..அதிகார துஸ்பிரயோகமே நிறைந்திருக்கின்றது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். இதுதான் இந்தியா.

DSCF0101.jpg

நான் கதையை தொடரும் பொழுது ஆரம்பத்திலேயே சொன்னது போல் இந்தியா என்பது நான் இயக்கத்தில் இணைந்த 84ம் ஆண்டிலிருந்தே பரிச்சயம் ஆனது அங்கு பயிற்ச்சிக்கு போனதிலிருந்தும் பின்னரும் பலதடைவைகள் களவாக கடற்பயணங்களிலும் பின்னர் பல தடைவைகள் விமானப்பயணங்கள் என்று 2001 வரை தொடர்ந்தது. அதில் எத்தனையோ பல நல்ல நட்புக்கள் உறவுகள் என தொடர்புகள் ஏற்பட்டது. அவை இன்றுவரை தொடர்கின்றது. இனிமேலும் அவை தொடரும் என நம்புகிறேன். எமது இந்திய நட்புக்கள் அனைவருமே ஈழத்தமிழனிற்காக எவ்வளவோ உதவிகளை செய்தவர்கள் அதற்காக அவர்கள் கொடுத்த விலைகளும் அதிகம். பல வருடங்கள் சிறைகளில் வாடியிருக்கிறார்கள் பலர் குடும்பங்களையே இழந்திருக்கிறார்கள். இதனை ஏன் இங்கு எழுதுகிறேன் என்றால் ஈழத்தமிழனின் முள்ளிவாயக்கால் அவலத்தின்போது அருகே ஆறு கோடி தமிழினம் என்ன செய்தது என்று பொதுவானதொரு ஆதங்கம் எம்மவர்களிடம் இருந்தது. ஆறு கோடி தமிழினத்தில் 60....70 தமிழர்களாவது துடித்தார்கள் முத்துக்குமார் தொடங்கி தங்களையே அழித்தவர்கள் பட்டியலும் உண்டு. வன்னியில் பேலவலம் நடந்தபொழுது குண்டுச்சத்தம் கேட்கும் தூரத்திலிருந்த யாழ்குடாநாட்டிலிருந்த 5 லட்சம் மக்களாலேயே எதுவும் செய்ய முடிந்திருக்காதபோது எம்மைப்பற்றிய செய்திகளே சரியாக சென்றடையாத ஆறு கோடி தமிழரை நாம் நொந்து பிரயோசனம் இல்லை. . இங்கு பெரியளவில் யாரும் பதிவாக்காத நடந்த சம்பவத்தையும் எழுதி எனது பயணத்தை நிறைவு செய்கிறேன். 1983 ம் ஆண்டின் இறுதியில் யாழ்பல்கலைக்கழகத்தில் மதி(மதிவதனி) அனோஜா.ஜெயா. லலிதா என நான்கு பல்கலைக்கழக மாணவிகள் இலங்னையரசின் அடக்குமுறைகளிற்கெதிராக உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றினை ஆரம்பிக்கின்றனனர்.

இலங்கையரசிற்கெதிராக எந்த அமைதியான எந்த சாத்வீகப் போராட்டமும் பிரயேசனமற்றது.ஆயுதப் போராட்டமே அவர்களிற்கான சரியான வழி எனவே உண்ணாவிரதத்தினை கைவிடும்படி புலிகள் அமைப்பால் அந்த மாணவிகளிடம் கோரிக்கை வைக்கப்படுகின்றது. அதனை அவர்கள் மறுத்து உண்ணாவிரதத்தினை தொடர்ந்தபொழுது புலிகள் அமைப்பின் மூத்த போராளிகளில் ஒருவரான அருணா மேலும் இருவருடன் இணைந்து அவர்கள் நான்கு பெண்களையும் கடத்தி தமிழ்நாட்டிற்கு கொண்டு செல்கிறார். இவர்கள் தமிழ் நாட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த நேரம்.84 ம் ஆண்டளவில் அந்த நான்கு பேர் கொண்ட குழுவிலிருந்த மதிக்கும் பிரபாகரனிற்கும் காதல் என்கிற செய்தி அடிபடத் தொடங்கியிருந்தது..ஆனால் அது வதந்தியாகவே இருக்கும் என புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் பலரும் நம்பினார்கள். காரணம் புலிகள் அமைப்பில் முன்னர் தலைவராக இருந்த உமாமகேஸ்வரன் அந்த அமைப்பின் உறுப்பினரான ஊர்மிளாவுடன் காதல் தொடர்பு ஏற்பட்ட காரணத்தினாலேயே புலிகளின் மத்திய குழுவைக்கூட்டி பிரபாகரன் ஊமாவை வெளியேற்றியிருந்தார். உமாவுடன் வேறு சிலரும் வெளியேற புலிகள் அமைப்பு சிதைவுபட்டு மீண்டும் ஒரு கட்டமைப்பாக உருவாகியிருந்தது. அந்த சம்பவத்திற்கு பின்னர் புலிகள் அமைப்பின் தலைமைப்பதவியை ஏற்ற பிரபாகரன் புலிகள் அமைப்பில் இணைபவர்கள் காதல் மற்றும் திருமண பந்தத்தில் இணையக்கூடாது அது புலிகளின் இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் தடையாக அமையும். எனவே அப்படி யாராவது காதலித்து திருமணம் செய்ய விரும்பினால் அமைப்பிலிருந்து வெளியேறி விடவேண்டும் என்கிறதொரு கடுமையான விதிமுறையையும் அறிமுகம் செய்திருந்தார். அதன் காரணமாக புலிகள் அமைப்பில் இணைந்த பலர் தங்கள் காதல்களை உதறிவிட்டு வந்த சம்பவங்களும் உண்டு. இப்படியான ஒரு விதிமுறையை ஏற்படுத்திய பிரபாகரனே காதலிப்பார் என்று புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நம்பவில்லை. ஆனால் பிரபாகரன் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததும் புலிகள் அமைப்பின் மூத்த போராளிகள் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களை அழைத்து பாலா அண்ணர் கதைத்து சமாதானப்படுத்தியிருந்தார்.

ஆனால் 84 ம் ஆண்டு புலிகள் இயக்கமானது அடுத்த கட்டவளர்ச்சிக்குள் சென்று விட்டிருந்தது. பலநூறு போராளிகள் உள்வாங்கப்பட்டு இந்தியாவிலும் இலங்கை வடக்கு கிழக்கிலும் பல பயிற்சி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு பயிற்சிகள் நடந்துகொண்டிருந்துமட்டுமல்லாமல் பலநுறுபேர் பயிற்சிகளை முடித்து புதிய முகாம்களை அமைத்துக்கொண்டு தங்கள் பணிகளை ஆரம்பித்திருந்தனர். பிரபாகரனின் திருமண விடயத்தில் மத்திய குழுவில் இருந்தவர்களை விட இரண்டாம் கட்டபொறுப்பாளர்கள் மற்றும் பின்னர் இணைந்த போராளிகளிடமே பெரும் எதிர்ப்புக்கிளம்பியிருந்தது.காரணம் அவர்கள் இயக்கத்தின் புதிய விதிகளிற்கு கட்டுப்பட்டு இயக்கத்தில் இணைந்திரந்தனர். அதே நேரம் மத்திய குழுவில் குலம்.கிட்டு.காக்கா போன்றவர்கள் எதிர்ப்பு அணியிலும். இன்றைய புலம்பெயர் ஊடகங்களில் சர்ச்சைக்குரியவராக கருதப்படும் கே.பி. பேபி சுப்பிரமணியம்.ராகவன் ஆதரவு அணியிலும் மற்றையவர்கள் அமைதியாவவும் இருந்தனர். ஆனாலும் மத்திய குழுவினரிற்கு புலிகள் இயக்கம் மீண்டும் ஒரு உடைவை சந்திக்கக்கூடாதென்பதே அவர்களது கவலையாகவும் ஆதங்கமாகவும் இருந்தது. அதே நேரம் உறுப்பினர்களிடம் விவாதங்கள் போய்க்கொண்டிருந்தது புதிய விதியின் படி பிரபாகரனை தலைவர் பதவியிலிருந்து நீங்கினால் புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பதே.அதில் முதன்மையாக ராகவன்.மாத்தையா.பண்டிதர் என ஆராயப்பட்டது.பெரும்பாலனவர்கள் ராகவனையே முன்மொழிந்தனர். ஆனாலும் யாரும் ஒரு முடிவிற்கும் வரவில்லை. மத்திய குழுஉறுப்பினர்களை பாலா அண்ணர் கதைத்து சமாதானப்படுத்தியபின்னர். அடுத்தகட்ட பொறுப்பாளர்கள் போராளிகளை சமாதானப்படுத்துவது பிரபாகரனிற்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. அவர்களை சமாதானப்படுத்த பாலசிங்கத்தாரை அனுப்பமுடியாது காரணம் வேகம் மட்டுமே கொண்ட இளையவர் கூட்டம் அவர்களிற்கு அதிகமாக தைத்தாலே அறிவுரைகளோ பிடிக்காது. எனவேதான் மிக தந்திரமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்தவர்களை சமாதானப்படுத்த பொன்னம்மானையும் நாட்டில் உள்ளவர்களை சமாதானப் படுத்த பண்டிதரையும் அனுப்பிவைத்தார். இவர்கள் இருவரைப்பற்றியும் அவர்களுடன் பழகியவர்களிற்கே நன்றாக தெரியும். இவர்கள் புலிகள் அமைப்பில் இருந்த போராளிகளிற்கு தாயைப் போன்றவர்கள்.

ஆரம்பகாலங்களில் பெரியளவு பொருளாதார வசதிகற்றிருந்த இயக்கத்தில் இவர்களது பொறுப்பில் இருந்த முகாம்களில் அனைத்து போராளிகளும் சாப்பாடு.உடைகள் மருத்துவம் என எந்தக் குறைகளும் இல்லாமலும் சிக்கனமாகவும்.கவனித்துக்கொள்வார்கள்.மற்றையவர்கள் உணவுப்பொருட்களை வீணக்கிவிடுவார்கள் என்பதால் பெரும்பாலும் இவர்களே சமைப்பார்கள்.பழகுவதற்கும் இனிமையானவர்கள் எனவே இவர்கள் பேச்சை மற்றையவர்கள் நிராகரிக்கமாட்டார்கள் எனபதும் பிரபாகரனிற்கு நன்றாகவே தெரியும். நான் அப்பொழு எனது பயிற்சிகளை முடித்துவிட்டு நாட்டிற்கு போய்விட்டு மீண்டும் ஜொனிதலைமையில் ஒரு சிறப்புப் பயிற்சிக்காக செல்வதற்காக தமிழ்நாட்டில் நின்றிருந்தேன்.இந்த திருமண விடயம் கேள்விப்பட்டபொழுது அதன் எதிர்ப்புக்குழுவில் நானும் முக்கியமானவனாகியிருந்தேன். பயிற்சி முகாம்களில் இருந்தவர்களை சந்தித்து சமாதானப்படுத்திய பொன்னம்மான் எம்மை சந்திக்க வருவதாக தகவல் அனுப்பியிருந்தார். வரசளவாக்கத்தில் ஒதுக்குப்புறமாக இருந்த பெரிய வீடொன்றில் அன்றிரவு அடுத்த கட்ட நிலையிலிருந்த முக்கியமான போராளிகள் நாற்பது பேரிற்கு மேல் கூடியிருந்தோம். தன்னுடன் வந்த மெய்பாதுகாவலர் இருவரையும் வெளியே தூரத்தில் நிறுத்திவிட்டு கையில் ஒரு ரேப்றைக்கோடரோடு பொன்னம்மான் தனியாக உள்ளே வந்தவர் சிரிதத்படி என்ன பெடியள் எப்பிடி இருக்கிறீங்கள் என்றார்.எல்லோரிடமும் இறுக்கமான மொனம். கொஞ்சம் வார்த்தைகள் தவறாக வந்து விழுந்தாலே பெரியபிரச்சனையாகிப் போகும் நிலமை எல்லோரையும் ஒருதடைவை ஊடுருவிப்பார்த்தார்.சிலர் அவரது ஊடுருவல் பார்வையை தவிர்ப்பதற்காக தலையை குனிந்து கொண்டனர்.சில செக்கன் மொனம்...இஞ்சை பிரபாகரனிற்காக பிரபாகரனை மட்டுமே நம்பி போராட வந்தவையள் கையை தூக்குங்கோ என்றுவிட்டு எல்லோலையும் பார்த்தார்.

எவருமே கையைத்தூக்கவி ல்லை அனைவரிடமும் அந்த கேள்வி வந்த ஒரு செக்கனில் இறுக்கத்தை குறைந்திருந்தது.எனக்கு அருகில் நின்றிருந்த கலீசம்மான் எனது காதில் "... பொன்னன் கவித்திட்டான்ரா "என்று கிசு கிசுத்தான். அதை கவனித்த பொன்னம்மான் கலிசை தனக்கு பக்கத்தில் கூப்பிட்டு சொல்லுறதை எல்லாருக்கும் கேக்கிறமாதிரி சொல்லு என்றார். கலிசும் சத்தமாக நாங்கள் அண்ணைக்காக போராட வரேல்லை மக்களுக்காகத்தான் போராட வந்தனாங்கள் என்றான். பிறகென்ன பிரச்சனை முடிஞ்சுது இதுக்குப்போய் ஏன் இவ்வளவு ரென்சனாய் இருக்கிறீங்கள். நீங்கள் எங்கடை மக்களுக்காவும் எங்கடை மண்ணை மீட்கவும்தான் போராட வந்தனீங்கள் எண்டிறது உண்மையெண்டால் இடையிலை பிரபாகரன் கலியணம் கட்டுறது பொன்னம்மான் இயக்கத்தை விட்டிட்டு போறது எண்டதெல்லாம் ஒரு காரணமே இல்லை.நீங்கள் உங்கடை இலட்சியத்திற்காக தொடரந்து போராடவேணும் என்று விட்டு கையில் கொண்டு வந்திருந்த ரேப்றைக்கோடரில் இருந்த 3 நிமிடம் அளவிலான பிரபாகரனின் உரையை போட்டுக்காட்டினார்.

அதில் தான் திருமணம் செய்து கொளவதனால் தமிழீழம் என்கிற இலட்சிய போராட்டத்திற்கான பாதையில் இருந்து எந்தக்காலத்திலும் விலகிவிடப்போவதில்லையென்றும்.அப்படி தமிழீழ இலட்சியப்பாதையில் இருந்து விலகி தமிழீழ இலட்சியத்தை கைவிட்டால் உங்களில் ஒரு போராளி என்னை சுட்டுக்கொன்று விட்டு போராட்டத்தை தொடரலாம் என்கிற பின் நாளில் பிரபலமான வசனம் அந்தத் தருணத்தில்தான் செல்லப்பட்டிருந்தது.சிலவேளை தமிழீழத்தை கைவிட்டுவிட்டு மாகாணசபையையோ.வேறு ஏதாவது ஒரு தீர்வை பிரபாகரன் ஏற்றிருந்தாலும் யாரோ ஒரு புலிப்போராளியின் குண்டென்று பிரபாகரனின் உயிரை குடித்திருக்கலாம். எனவேதான் பிரபாகரன் தனது கொள்கைகளில் ஒன்றை கைவிட்டாலும் மற்றொன்றில் இறுதிவரை உறுதியாக இருந்திருந்தார்..அந்த ஒலிப்பதிவு முடிந்ததும் தங்களிற்கு இந்த சமாதானம் எல்லாம் வேண்டாம்.நாங்களும் காதலை கைவிட்டிட்டுத்தான் இயக்கத்திற்கு வந்தனாங்கள் என இருவர் மட்டுமே தாங்கள் இயக்கத்தை விட்டு போவதாக அடம்பிடித்தனர்.அதில் ஒருவர் ஜெர்மனியிலிருந்து இயக்கத்திற்கு வந்திருந்தவர். போகிறவர்கள் எழுதித் தந்து விட்டு போகலாம். என்றவர்.தம்பி உங்களையெல்லாம் விரைவிலை சந்திப்பார் அதுவரை உங்களின்ரை வேலையளை தொடர்ந்து செய்யுங்கோ என்றுவிட்டு பொன்னமமான்; போய்விட்டார்.பின்னர் 1984ம் ஆண்டு ஜப்பசி மாதம் பிரபாகரனிற்கும் மதிக்குமான திருமணத்தினை போருர் கோயில் ஒன்றில் எளிமையாக கே.பி முன்நின்று நடத்திவைத்திருந்தார். இதனை நான் இங்கு எழுதியதன் காரணம் பிரபாகரன் இல்லாது போனதாலேயோ புலிகள் இயக்கம் அழிந்து போனதாலேயோ. அந்த மக்களின் போராட்டமானது முடிந்துவிட்தாகவே பொதுவான புலம்பெயர் மக்கள் கருதுகின்றனர்.ஈழத்தமிழர் லரலாற்றில் பலிகள் பல அத்தியாயங்களை மட்டுமே எழுதியவர்கள். ஆனால் ஈழத்தில் தமிழர்களிற்கான வாழ்வாதார பிரச்சனைகள் இருக்குமட்டும் போராட்டம் ஏதாவது ஒரு வடிவத்தில் தொடர்ந்துகொண்டே தானிருக்கும். அந்தப் போராட்டத்தில் தியாகி துரோகி என்கிற பதங்கங்கள் என்னைப்பாதிக்காது எனது உயிர் இருக்கும்வரை என்னுடைய பயணமும் பங்களிப்பும் இருந்துகொண்டேதானிருக்கும்.ஏனெனில் நான் பிரபாகரனிற்காக போராடப்போனவனல்ல...

இன்னொரு பதிவில் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்.

pirapakp.jpg

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணை..எந்த எதிர்ப்புக்களுக்காகவும் உங்கள் எழுத்துக்களை அவை உண்மையானவையாக இருந்திருந்தால் விட்டுக்கொடுத்திருக்கக்கூடாது.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணை..எந்த எதிர்ப்புக்களுக்காகவும் உங்கள் எழுத்துக்களை அவை உண்மையானவையாக இருந்திருந்தால் விட்டுக்கொடுத்திருக்கக்கூடாது.....

விட்டுக்கொடுத்துப் போவதில் பலரிற்கு நன்மையென்றால் அதில் தவறில்லையென நினைக்கிறேன். அதேபோல ஈழவிடுதலைப் போராட்டத்திலும் சில விட்டுக்கொடுப்புக்களை செய்திருந்தால் பல நன்மைகள் கிடைத்திருக்கும். :(

சாத்திரியார் பின்பு வந்த ராகவனுக்கு நிர்மலா மேல் காதல் ஏற்பட்டது. அவரும் பிரிந்து வந்து தனியே வாழ்க்கை. ஒட்டுமொத்தமாய் gangster paradise.

போராடப் புறப்பட்ட தலைவர்களுக்கு காதல் வரும் போது பலியிடப்பட்டது தமிழினத்தின் வாழ்வு. மிக மிக கேவலம். ஒவ்வொருவரும் தங்கள் விருப்புக்கேற்ற, நலன்களுக்கேற்ற மாதிரி தாங்கள் நடாத்திய இயக்கத்தின் கொள்கைகளை மாற்றிக் கொண்டார்கள். போராளிகள் எல்லோரும் மக்களுக்காகவே போராடப் போனார்கள். ஒரு இயக்கத்திற்காகவோ தனி மனிதர்களுக்காகவோ அல்ல. இதை மறந்து செயற்பட்டதன் விளைவு முற்று முழுதாக தமிழனின் விடிவு முள்ளி வாய்க்காலில் முறித்து எறியப்பட்டது.

பாவம் ஈழத் தமிழன். சுயபுத்தியுள்ள திறமையாளர்கள் இந்த பன்னாடைகளை நம்பி தங்களை பலியிட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார் பின்பு வந்த ராகவனுக்கு நிர்மலா மேல் காதல் ஏற்பட்டது. அவரும் பிரிந்து வந்து தனியே வாழ்க்கை. ஒட்டுமொத்தமாய் gangster paradise.

போராடப் புறப்பட்ட தலைவர்களுக்கு காதல் வரும் போது பலியிடப்பட்டது தமிழினத்தின் வாழ்வு. மிக மிக கேவலம். ஒவ்வொருவரும் தங்கள் விருப்புக்கேற்ற, நலன்களுக்கேற்ற மாதிரி தாங்கள் நடாத்திய இயக்கத்தின் கொள்கைகளை மாற்றிக் கொண்டார்கள். போராளிகள் எல்லோரும் மக்களுக்காகவே போராடப் போனார்கள். ஒரு இயக்கத்திற்காகவோ தனி மனிதர்களுக்காகவோ அல்ல. இதை மறந்து செயற்பட்டதன் விளைவு முற்று முழுதாக தமிழனின் விடிவு முள்ளி வாய்க்காலில் முறித்து எறியப்பட்டது.

பாவம் ஈழத் தமிழன். சுயபுத்தியுள்ள திறமையாளர்கள் இந்த பன்னாடைகளை நம்பி தங்களை பலியிட்டார்கள்.

தப்பிலி இன்னொரு பதிவில் இந்திய இராணுவத்திடம் சரணந்த பலர் இருக்கும் பொழுது காக்காவிற்கு மட்டும் ஏன் பிரபாகரன் தண்டனை கொடுத்தார் என்று கேள்வி கேட்டிருந்தீர்கள் அங்கு அதற்கான பதிலை நான் தரவில்லை. அன்று பிரபாரன் திருமணம் செய்வதற்கு பெரியளவு எதிர்ப்பு கிழப்பியவர் காக்கா .அதிலிருந்தே இருவருக்குமிடையில் ஒரு கீறல் விழுந்துவிட்டது. அதன் தொடர்ச்சிதான் காக்கா மீதான தண்டனையும்.

Edited by sathiri

இடம்பெயர்ந்த பேராதனை பல்கலைகழக மாணவர்களால் யாழ் பலகலைகழகத்தில் உண்ணாவிரதப்போராடம் நடைபெற்றது அதில் மதிவதனியும் உள்ளடக்கம் எனது அண்ணையும பங்குபற்றியிருந்தார் தப்பிலிக்கு உள்ளது போல எனக்கும் பல சமூகக் கோபங்கள் அதனாலேயே இந்ததொடரில் உங்களிடம் அரசியலை தவிர்த்து அவ்வப்போது எட்டிப்பார்த்தேன் :):)

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை தொடரை சுவாரசியமாக தந்த சாத்ஸ் அணணாக்கு ஒரு ஒஒஒஒஒஒஒஒ போட்டு........இ;ன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு உங்களிடம் முடிந்தால் அவற்றையும் எழுத்துக்களில் கொண்டுவாருங்களேன்.....

  • கருத்துக்கள உறவுகள்

எவருமே கையைத்தூக்கவி ல்லை அனைவரிடமும் அந்த கேள்வி வந்த ஒரு செக்கனில் இறுக்கத்தை குறைந்திருந்தது.எனக்கு அருகில் நின்றிருந்த கலீசம்மான் எனது காதில் "... பொன்னன் கவித்திட்டான்ரா "என்று கிசு கிசுத்தான். அதை கவனித்த பொன்னம்மான் கலிசை தனக்கு பக்கத்தில் கூப்பிட்டு சொல்லுறதை எல்லாருக்கும் கேக்கிறமாதிரி சொல்லு என்றார். கலிசும் சத்தமாக நாங்கள் அண்ணைக்காக போராட வரேல்லை மக்களுக்காகத்தான் போராட வந்தனாங்கள் என்றான். பிறகென்ன பிரச்சனை முடிஞ்சுது இதுக்குப்போய் ஏன் இவ்வளவு ரென்சனாய் இருக்கிறீங்கள். நீங்கள் எங்கடை மக்களுக்காவும் எங்கடை மண்ணை மீட்கவும்தான் போராட வந்தனீங்கள் எண்டிறது உண்மையெண்டால் இடையிலை பிரபாகரன் கலியணம் கட்டுறது பொன்னம்மான் இயக்கத்தை விட்டிட்டு போறது எண்டதெல்லாம் ஒரு காரணமே இல்லை.நீங்கள் உங்கடை இலட்சியத்திற்காக தொடரந்து போராடவேணும் என்று விட்டு கையில் கொண்டு வந்திருந்த ரேப்றைக்கோடரில் இருந்த 3 நிமிடம் அளவிலான பிரபாகரனின் உரையை போட்டுக்காட்டினார்.

இன்னொரு பதிவில் சந்திக்கும் வரை நன்றி வணக்கம்.

pirapakp.jpg

சாத்திரி அந்த வட்டக்கையெழுத்து வேட்டையை சொல்ல மறந்திட்டீங்கள் ? :lol:

இதுவரை தொடரை சுவாரசியமாக தந்த சாத்ஸ் அணணாக்கு ஒரு ஒஒஒஒஒஒஒஒ போட்டு........இ;ன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு உங்களிடம் முடிந்தால் அவற்றையும் எழுத்துக்களில் கொண்டுவாருங்களேன்.....

சுண்டல் சாத்ஸ்க்கு நல்ல சாத்து விழ வைக்கிற ஐடியாவோ ? :lol:

தப்பிலி இன்னொரு பதிவில் இந்திய இராணுவத்திடம் சரணந்த பலர் இருக்கும் பொழுது காக்காவிற்கு மட்டும் ஏன் பிரபாகரன் தண்டனை கொடுத்தார் என்று கேள்வி கேட்டிருந்தீர்கள் அங்கு அதற்கான பதிலை நான் தரவில்லை. அன்று பிரபாரன் திருமணம் செய்வதற்கு பெரியளவு எதிர்ப்பு கிழப்பியவர் காக்கா .அதிலிருந்தே இருவருக்குமிடையில் ஒரு கீறல் விழுந்துவிட்டது. அதன் தொடர்ச்சிதான் காக்கா மீதான தண்டனையும்.

அதன் பின்பே கிழக்கில் பசீர் காக்கா மாற்றப்பட்டு கடவுள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தலைவர்கள் வாழ்வைவிட விட தமிழர்கள் முக்கியம் என இன்றும் நம்புகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதன் பின்பே கிழக்கில் பசீர் காக்கா மாற்றப்பட்டு கடவுள் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

தலைவர்கள் வாழ்வைவிட விட தமிழர்கள் முக்கியம் என இன்றும் நம்புகிறேன்.

கடவுளும் டெலோ மீதான தாக்குதலை நடத்த மறுத்து இயக்கத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அமைப்பில் இருக்கும் போது இதை தட்டிக் கேட்கவோ அல்லது புலிகள் இருக்கும் போது இதைப் பற்றி விமர்சிக்க முடியாமல் உள்ள சாஸ்திரி அண்ணா தர்போது புலிகளை தட்டிக் கேட்கிறார் என்டால் அவருக்கு எவ்வளவு தில் வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.