Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

றொபேட் ஓ பிளேக் மீண்டும் கூட்டமைப்புடன் நாளை சந்திப்பு! அடுத்தடுத்த சந்திப்புகளால் கொழும்பு அரசியலில் பரபரப்பு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

றொபேட் ஓ பிளேக் மீண்டும் கூட்டமைப்புடன் நாளை சந்திப்பு! அடுத்தடுத்த சந்திப்புகளால் கொழும்பு அரசியலில் பரபரப்பு!!

சிறிலங்காவுக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க ராஜாங்க திணைக்களத் துணைச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக் நாளை மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேற்றையதினம் கொழும்பை வந்தடைந்த பிளேக், கூட்டமைப்பைச் சந்தித்து அரசியல் நிலவரம் குறித்துக் கலந்துரையாடினார். இந்நிலையில் நாளை மீண்டும் கூட்டமைப்புடன் மற்றுமொரு சந்திப்பொன்றை மேற்கொள்ள உள்ளதாக கூட்டமைப்புடன் தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நேற்றைய சந்திப்பின்போது அரசாங்கத் தரப்புடன் இதுவரை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் குறித்து கூட்டமைப்பு பிரதிநிதிகள் பிளேக் இற்கு விளக்கி கூறியுள்ளனர். நாளைய சந்திப்பின்போது இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புகள் குறித்து பிளேக் அறிந்து கொள்வார் என நம்பகமான வட்டாரங்கள் பொங்குதமிழுக்குத் தெரிவித்துள்ளன.

கூட்டமைப்புடன் அடுத்தடுத்து இடம்பெறும் இச்சந்திப்புகளால் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் பெரும் பரபரப்படைந்து காணப்படுகின்றன. இச்சந்திப்புகளை வழமைக்கு மாறான ஒன்றாகவே அரசியல் நோக்கர்கள் கணித்து வருகின்றனர்.

வழக்கமாக அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கொழும்பு வரும்போது, சிறிலங்கா அரசதரப்பினரை சந்தித்த பின்னரே ஏனைய தரப்பினரை சந்திப்பது வழக்கமாகும். சில சமயங்களில் அவர்கள் தமிழ்த் தலைவர்களைச் சந்திக்காமல் கூட சென்றுள்ளனர்.

ஆனால், இம்முறை கொழும்பு வந்தவுடன் பிளேக், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அவசரமாக அழைத்து ஒன்றரை மணிநேரம் பேசியிருப்பதன் அரசியல் முக்கியத்துவம் குறித்து பலராலும் பேசப்படுகிறது.

நேற்றிரவு நடத்தப்பட்ட சந்திப்பின்போது ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பாகவும் நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

ரொபேர்ட் ஓ பிளேக் புதன்கிழமை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு வெளிவிவகார அமைச்சில் இடம்பெறவுள்ளது. இதன்போது இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுகள் குறித்தும் கூட்டமைப்பின் எதிர்பார்ப்புகள் குறித்தும் பிளேக் வலியுறுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் ஓ பிளக், செவ்வாய்க்கிழமை வட மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டார். இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

இதேவேளை, எதிர்வரும் 16 ம் திகதி கூட்டமைப்பின் உயர்மட்டக்குழு இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் வெளிநாட்டமைச்சர் பீரிஸின் இந்திய விஜயத்திற்கு முன்னர் இச்சந்திப்பு இடம்பெறுமென்றும் கூறப்படுகிறது.

நன்றி - பொங்குதமிழ்

வரலாறு தந்த சந்தர்ப்பத்தை கூட்டமைப்பினர் பயன்படுத்துவார்கள் என்பது தமிழர்கள் நம்பிக்கை.

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பங்கள் இரண்டு தடவைகள் கதவைத் தட்டுவதில்லை!!!

கூட்டமைப்பினர் சரியான பாதையில் செல்வார்களென நம்புவோம்!

இவர்களை விட்டால் வேறு வழியும் எமக்கு தற்போது தெரியவில்லை!!!

வரலாறு தந்த சந்தர்ப்பத்தை கூட்டமைப்பினர் பயன்படுத்துவார்கள் என்பது தமிழர்கள் நம்பிக்கை.

சம்பந்தர் இருக்கும் வரை இல்லை!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களும் சிங்களத்தைப் போல இந்தியாவுக்கு ஒன்'றும் அமெரிக்காவுக்கு ஒன்றுமாகச் சொல்ல வேண்டும்.ஏனெனில் இந்தியா தமிழர் விரும்பும் தீர்வுக்கு ஒருபோதுமே ஒத்து வராது.ஆகவே நிச்சயம் அமெரிக்காவிடம் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய தமிழீழத் தனியரசை வலியுறுத்த வேண்டும்.அதற்கு அமெரிக்காவுடன் எந்தச் சமரசத்துக்கும் தயாராக இருப்பதாகச் சொல்ல வேண்டும்.அமெரிக்கா நிதை;தால் எதுவும் நடக்கும்.பிராந்திய வல்லரசுகள் ஒன்றும் புடுங்க முடியாது.பாகிஸ்தானின் அனுமதியின்றியே பாகிஸ்தானுக்குள் தாக்குதல் உலங்குவானூர்தியை அனுப்பி பின்லாடனகை; கொலை செய்தத மாத்திரமல்ல உடலையும்கொண்டு சென்றுள்ளார்கள். எந்த வல்லரசு பாகிஸ்தானின் இறைமையைப் பற்றிக் கதைத்தது.(சிறிலங்காவைத்தவிர)எல்லோரும் பொத்திக் கொண்டு இருந்தார்கள். ஏனெனில் பின்லாடன் செய்த குற்றங்களைச் சர்வதேசத்தால் நியாயப்படுத்த முடியாமையேஆகும். அப்படிப்பட்ட சரவதேசத்தால் நியாயப் படுத்த முடியாத குற்றத்தைத்தான் சிறிலங்கா பயங்கரவாத அரசும் செய்தது.

  • கருத்துக்கள உறவுகள்

எம்மவர்களுக்கு மறதி அதிகமாகி விட்டது.

sln_08_11_07_01.jpg

இதே றொபேட் ஓ பிளேக் தான் சிறீலங்கா சிங்கள அரசு சார்பில் இறுதி யுத்தத்தை திருமலையில் வைத்து அதி நவீன ஆயுதங்களை கையளித்து ஆரம்பித்து வைத்தவர்.

08_11_07_us.jpg

அமெரிக்காவைப் பொறுத்தவரை மேற்குநாடுகளைப் பொறுத்தவரை.. தமிழர்களின் பிரச்சனை என்பதை அவர்கள் 13ம் திருத்தச் சட்டத்துக்குள் அடங்கும் பிரச்சனையாகவே வைச்சுப் பார்க்க விரும்புகின்றனர். போர் குற்றம் விசாரணை என்பது சிறீலங்கா சிங்கள அரசு சீனா வை நாடுவதும் மற்றும் மேற்குலக நலன்களுக்கு பாதகமாக அமையக் கூடிய சிறீலங்காவின் நகர்வுகளை தடுக்கவும் கையாளப்படும் விடயம்.

தமிழ் மக்களின் உண்மையான அரசியல் விருப்பை இந்த சக்திகள் ஒருபோதும் அறியப் போவதும் இல்லை.. தீர்க்கப் போவதும் இல்லை. இதுதான் யதார்த்தம்.

அப்படி என்றால்.. தமிழ் மக்கள் தமது அரசியல் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது..??!

40,000 தமிழர்களைக் கொன்ற சிறீலங்கா அரசு.. போன்றதல்ல.. லிபிய ஐவிரிக்கோஸ்ட் என்கிறார் பிரஞ்சு அதிகாரி. ஏனெனில் அங்கு கொல்லப்பட்ட மக்கள் பல கோடி. தமிழர்கள் சில ஆயிரம் என்று அவர் கருதுகிறார் போலும். அல்லது தங்களுக்கு தேவையான வளம் இல்லை என்று நினைக்கிறார் போலும்..!

இதுதான் சர்வதேசம்..??!

U.S. radars and dinghies to fight LTTE

[TamilNet, Thursday, 08 November 2007, 13:24 GMT]

Radar-based maritime surveillance system and several Rigid Hull Inflatable Boats (RHIBs) were donated to Sri Lanka Navy by U.S. Ambassador to Sri Lanka Robert O. Blake in a ceremonial function at Trincomalee on Thursday. Ambassador Blake expressed U.S. Government's hope that the radar system and the inflatable boats would help the Sri Lankan Navy to interdict arms shipments to the LTTE. The donation was part of U.S. programme to assist partner nations to deter global terrorist activity. Mr. Blake also urged Colombo to pursue a negotiated settlement and respect human rights, a press release issued by the U.S. Embassy in Colombo said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23727

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு.. அதுதான் அரசியல்..! :rolleyes:

எமக்குப் பிடிக்குதோ இல்லையோ.. புலிகளை அழிக்க வேணும் என்கிற நோக்கத்தில்தால் சர்வதேச நாடுகள் இருந்தன. அதைச் "செய்தும்" காட்டின..! அதற்காக ஆயுள் முழுவதும் அவர்களை நாம் எதிர்த்துக்கொண்டே இருந்தால் அதுவே எமது எதிரிக்கு நாம் செய்யும் சேவகமாக அமையும்..! :unsure:

எமது முதல் எதிரி சிங்களப் பேரினவாதம்..! மற்றவர்களெல்லாம் தற்காலிக எதிரிகள் / நண்பர்கள்தான்..! :rolleyes:

ரொபெர்ட் ஓ ப்ளேக்: நீங்கள் என்ன தீர்வு எதிர்பார்க்கிறீர்கள்?

தமிழ் தெசிய கூட்டமைப்பு: ம்... ம்ம்... ம்... அது வந்து...

ரொபெர்ட் ஓ ப்ளேக்: நம்ம USA மாதிரி மாநில சுயாட்சி ஒரு பெடரல் கட்டமைப்பு வேணுமா? அல்லது கனடா மாதிரி தனி இராணுவம், பிரிந்து செல்வதற்க்கான உரிமையுடன் கூடிய ஒரு கொன்பெடரல் அமைப்பு வேணுமா? எதுவெண்டாலும் கூச்சப்படாம கேளுங்கோ.

தமிழ் தெசிய கூட்டமைப்பு: ஹி... ஹி... அச்சச்சோ. இந்தியாவில் இருக்கிற மாநில ஆட்சிக்கு மேலால கூடுதலா எதனையும் எதிர் பாக்கைல்லை.

கடவுளே இப்படி ஒரு கலந்துரையாடல் நடக்கக்கூடாது எண்டு எதிர்பாப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு.. அதுதான் அரசியல்..! :rolleyes:

எமக்குப் பிடிக்குதோ இல்லையோ.. புலிகளை அழிக்க வேணும் என்கிற நோக்கத்தில்தால் சர்வதேச நாடுகள் இருந்தன. அதைச் "செய்தும்" காட்டின..! அதற்காக ஆயுள் முழுவதும் அவர்களை நாம் எதிர்த்துக்கொண்டே இருந்தால் அதுவே எமது எதிரிக்கு நாம் செய்யும் சேவகமாக அமையும்..! :unsure:

எமது முதல் எதிரி சிங்களப் பேரினவாதம்..! மற்றவர்களெல்லாம் தற்காலிக எதிரிகள் / நண்பர்கள்தான்..! :rolleyes:

சர்வதேசத்திற்கு பல நல்ல தெரிவுகள் இருந்தன. அவர்கள் அதனை கையில் எடுக்காமல்.. பேரழிவு வழிமுறைகளை கையில் எடுத்தது தவறான செயல். அதுவே எதிரிக்கு அனுகூலமாகவும் அமைந்தது.

விடுதலைப்புலிகளுடனான பேச்சுக்கள் நல்ல வழியில் சென்று கொண்டிருந்த போது.. அமெரிக்கா குறுக்கே இழுத்து நியோர்க்கில் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தைக் கூட்டியது. ஜப்பானிலும் விடுதலைப்புலிகளின் கோரிக்கைகளை தட்டிக் கழித்துக் கொண்டு ஒரு கூட்டத்தைக் கூட்டியது.

சர்வதேசத்திற்கு எமது பிரச்சனையை எமது விருப்புக்குரிய முறையில் தீர்க்க விடுதலைப்புலிகள் பல சந்தர்ப்பங்களை அளித்தனர். சர்வதேச அரசியல் அமைப்புக்களோடு கலந்தாலோசித்து ஒரு இடைக்கால நிர்வாக அலகு தொடர்பிலும் விடுதலைப்புலிகள் ஒரு தீர்வை முன் வைத்தனர். எல்லாம் தட்டிக்கழிக்கப்பட்டு விட்டன.

இப்போ.. பேரழிவுகளுக்குள் ஒரு இனத்தை தள்ளிவிட்டு அதற்கு மருந்து பூசுகிறோம்.. என்று மீண்டும் எம்மை அடக்குமுறை ஆட்சிக்கு அடிபணியக் கேட்டால் சர்வதேசம் கேட்கிறது அடிபணிந்து தான் ஆக வேண்டும் என்று பரிந்துரைக்க முடியாது. நாம் மாற்று இராஜதந்திர வழிமுறைகளைக் கையாள வேண்டும்.

சர்வதேசம் என்ற அமெரிக்க சார்பு மேற்கு நாடுகளை முழுமையாக நம்புவதும் நமக்கு ஆபத்தானது. ஏனெனில் இவர்களுக்கும் எமக்கு பேரிடர்களை ஏற்படுத்தியதில் பங்குண்டு.

13ம் திருத்தச் சட்டத்துக்குள் எமக்கு தீர்வு அமைய முடியாது. சர்வதேசம் அதைச் செய்தால் அதனை தமிழர்கள் ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

சர்வதேசம் எமக்கு உண்மையில் உதவ முன் வந்தால்...

* முதலில் ஐநா சபையின் போர் குற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும். அதற்காக தீர்மானங்களை ஐநாவில் இயற்றி அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

* அரசியல் தீர்வு பற்றி தமிழர் தரப்புக்களோடு ஒரு முழுமையான பேச்சை ஆரம்பிக்க வேண்டும். சிறீலங்கா அரசையும் அதற்கு வற்புறுத்த வேண்டும். இணைத் தலைமை நாடுகளின் கூட்டமைப்பை மீண்டும் புதுப்பிக்கலாம்... அவற்றைக் கொண்டு பேச்சுக்கள் விடுபட்ட இடத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

* விடுதலைப்புலிகள் முன் வைத்த இடைக்கால நிர்வாக அமைப்பு மற்றும் நிரந்தர அரசியல் தீர்வுக்கான யோசனைகள் தொடர்பில் சர்வதேச சமூகம் அக்கறை செய்வதோடு.. தமிழ் மக்கள் தங்கள் தலைவிதியை தாங்கள் தீர்மானிக்க கூடிய வகையில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் இருந்து படை விலக்கல் செய்வதோடு ஐநா கண்காணிப்பில் தேர்தல் நடத்தி மக்கள் விருப்பை அறிய வேண்டும்.

* போரில் சரணடைந்த மற்றும் அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொது மன்னிப்பு அளித்து அவர்களை விடுதலை செய்ய சர்வதேசமும் ஐநாவும் மத்தியஸ்தம் செய்ய வேண்டும்.

* சிறீலங்கா அரச ஆதரவு ஆயுதக்குழுக்கள் ஆயுத ஒப்படைப்பை செய்ய ஐநா ஏற்பாடு செய்வதோடு.. அதனை கண்காணிக்கவும் வேண்டும்.

* முறையான ஜனநாயகம் வழிமுறைகள் தமிழர் பிரதேசங்களில் அமைய வகை செய்ய வேண்டும்.

* போரால் அழிந்து போன கட்டுமானங்களை நிர்வாக மையங்களை பொதுமக்களின் சொத்துக்களை மீளப் புனரமைக்க சர்வதேச சமூகம் அதன் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உதவிகளை திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இதனை இணைத்தலைமை நாடுகள் பொறுப்பேற்று செய்ய வேண்டும்.

* போரில் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச உதவியோடு ஐந்து ஆண்டு கால மீட்சித் திட்டம் கொண்டு வரப்பட்டு அவர்கள் சமூக.. மற்றும் பொருளியல் ரீதியில் மற்றவர்களுக்கு ஈடாக வாழவும் தமது அரசியல் உரிமை பற்றி தீர்மானிக்கக் கூடிய வகையிலும் அவர்களை சாதாரண வாழ்க்கை முறைக்கு கொண்டு வர உதவ வேண்டும்.

இப்படி.. சர்வதேசம் செய்ய எவ்வளவோ இருக்க.. விடயங்களை மழுங்கடிக்கச் செய்யும் வகையிலும் மனித உரிமை மீறல்களை மறக்கச் செய்யவும் மன்னிக்கும் வகையிலும் சர்வதேசம் நடந்து கொள்ள முனைவதே அதன் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதனை சர்வதேசத்துக்கு உணர்த்த வேண்டியது தமிழர்களின் கடமை. ஆனால்.. தமிழர்களோ.. சர்வதேசம் எல்லாத்தையும் தமக்கு சாதமாகச் செய்யும் என்ற கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அது தமிழர்களை மீண்டும் ஏமாற்றும் வகையிலேயே செயற்படப் போகிறது. இதை எதிர்காலம் உங்களுக்கு உணர்த்ததான் போகிறது. அப்போது மீண்டும் தலையில் துண்டை போட்டுக் கொண்டு ஒப்பாரி வைக்கத் தான் போகிறீர்கள்.

சர்வதேசமும்.. இந்தியாவும் வேறல்ல. எல்லோரினதும் அணுகுமுறைகள் ஒன்றே. நாம் அவர்கள் மீது செய்யக் கூடிய அழுத்தங்கள் தான் எங்களுக்கான சாதகங்களையும் பாதகங்களையும் தீர்மானிக்குமே அன்றி நாங்கள் சும்மா இருக்க.. சர்வதேசம் எம்மில் இரக்கப்பட்டு எமக்கு வேண்டியதை பெற்றுத் தரும் என்று எதிர்பார்த்திருப்பது முழு முட்டாள் தனம் என்பதை தமிழர்கள் மீண்டும் உணரும் நிலை வரும். அப்போது தமிழர்கள் மீட்சிக்கு வழி இன்றி இருக்கும் நிலையும் வரும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்திற்கு பல நல்ல தெரிவுகள் இருந்தன. அவர்கள் அதனை கையில் எடுக்காமல்.. பேரழிவு வழிமுறைகளை கையில் எடுத்தது தவறான செயல். அதுவே எதிரிக்கு அனுகூலமாகவும் அமைந்தது.

நாங்கள் சும்மா இருக்க

.. சர்வதேசம் எம்மில் இரக்கப்பட்டு எமக்கு வேண்டியதை பெற்றுத் தரும் என்று எதிர்பார்த்திருப்பது முழு முட்டாள் தனம் என்பதை தமிழர்கள் மீண்டும் உணரும் நிலை வரும். அப்போது தமிழர்கள் மீட்சிக்கு வழி இன்றி இருக்கும் நிலையும் வரும்.

நன்றி நெடுக்ஸ் தங்கள் நேரத்துக்கு

அதேநேரம் தங்களது கடைசி வரிகளே தற்போதைய நிஜம்

ஈழத்தமிழ் அரசியற் போராட்டத்தில் உபாயமும் அதிகாரமும்

இலங்கையின் சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து ஆய்வாளரான நண்பர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது 'உபாயமும் அதிகாரமும்' என்பதைப் பற்றிச் சொன்னார். அதிலும் இலங்கையின் தமிழ்பேசும் மக்களின் அரசியற் போராட்டங்களில் 'உபாயமில்லாத அரசியலே' நீண்டகாலமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நண்பர் குறிப்பிட்டார்.

நண்பரின் கூற்று பெருமளவுக்கும் நிராகரிக்க முடியாதது. உபாயங்கள் பல வகைப்பட்டன. அரசியற் செயற்பாடுகளிலும் உபாயங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. ஆயுதப் போராட்டத்திலும் போர் உபாயங்கள் கையாளப்படுகின்றன. தவிர, சமூக நடவடிக்கைகள் என்று சொல்லப்படும் வணிகம் தொடக்கம் சகலவற்றிலும் உபாயங்கள் பிரயோகிக்கப்படுகின்றன.

இவற்றில் முக்கியமானது போருபாயங்களும் அரசியல் உபாயங்களுமாகும். ஆனால், அரசியலுக்காகவே போர் என்பதால் அரசியல் உபாயங்களே எல்லாவற்றுக்கும் மையமாக அமைகின்றன. இதில் தந்திரோபாயம், மூலோபாயம் என இருவகைப்பட்ட பிரதான உபாயங்கள் உண்டு. மூலோபாயத்துக்குட்பட்டே தந்திரோபாயம் இயங்குகின்றது. மூலோபாயத்தை வெற்றிகொள்ள வைப்பதற்காகவே தந்திரோபாயம் பிரயோகிக்கப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் தந்திரோபாயம் வெற்றிகரமாக அமைவது போலப் படலாம். ஆனால் இறுதியில் மூலோபாயம் தோற்றுப் போகும். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு. கியூப அனுபவங்களைப் பெற்றிருந்த சேகுவேரா பொலிவியாவில் தோற்றார். இதற்குப் பல காரணங்கள் சொல்லப்படலாம். ஆனால் பொலிவியாவில் சே நடத்திய அல்லது நடத்தவேண்டியேற்பட்ட அத்தனை தாக்குதல்களும் வெற்றிகரமானவையாக – எதிர்த்தரப்புக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தியவை. ஆனால் இறுதியில்?

அதேபோல தந்திரோபாயம் தோற்றுப் போவதைப் போல அமையும். ஆனால், மூலோபாயம் வெற்றியடைந்து விடும். இதற்குச் சீன விடுதலைப் போராட்டம் சிறந்த உதாரணமாகும். மாவோவின் விடுதலைப்படை பின்வாங்கி நீண்டதூரம் சென்றது தந்திரோபாயமாகும். இது மூலோபயத்தின் பாற்பட்ட தந்திரோபாயம். பார்வைக்கு பின்வாங்கிச் செல்வதைப்போல இருக்கும். ஆனால், இறுதியில் எதிரியைப் பலவீனப்படுத்தி தோற்கடிப்பதாக அமைந்த தந்திரோபாயம். மாவோ அதில் வெற்றியும் பெற்றார்.

உபாயத்தில் முக்கியமானது, எதிரிகளைப் பலவீனப்படுத்துவதும் அவர்களைக் கையாள்வதுமாகும். எதிரிகளை அழிப்பது என்பது இரண்டாம் பட்சமானது. உலகத்தில் எதிரிகளை அழிப்பது என்பது எப்போதும் எதிர்நிலைகளையே உருவாக்கும். இது இறுதியில் எதிரிகளை அணிகளாக்குவதிலேயே போய் முடிகிறது. பதிலாக எதிரிகளைப் பலவீனப்படுத்துவது என்பது அவர்களைத் தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவதாகவும் இறுதியில் தோற்கடிப்பதாகவும் அமைகிறது.

பதிலாக எதிரியை அழிக்க முற்படும்போது அந்த எதிரி வேறு வடிவமெடுப்பதை நாம் ஈழப் போராட்டத்திலேயே பார்க்கலாம். புலிகள் அழித்த இயக்கங்கள் இன்றும் இருக்கின்றன. ஆனால், வெவ்வேறு வடிவங்களில். அதேவேளை அவை புலிகளுக்கு விரோதமான போக்கையே கடைப்பிடித்தன. அத்துடன் அவை இறுதியில் புலிகளுக்கு எதிரான தரப்புகளுடன் போய்ச் சேர்ந்தும் கொண்டன. இதைப்போல விடுதலைப் புலிகளை இலங்கை அரசாங்கம் அழிக்க முற்பட்டது. இவையெல்லாம் உபாயமற்ற குறைபாடுகளின் விளைவுகளேயாகும்.

மிகவும் வீரஞ்செறிந்த ஒரு போராட்டம் ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது. ஒரு சிறிய சமூகமான ஈழத்தமிழ்ச் சமூகம் தன் சக்திக்கு அப்பாலான உச்ச அர்ப்பணிப்புகளைச் செய்திருக்கிறது. இந்தப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் இளம் பெண்களும் தங்கள் இளமைக்காலத்தைப் பலியிட்டிருக்கிறார்கள். இதில் பல்வேறு போக்குகளையிட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். இதைவிட ஐம்பது ஆண்டுகளாக பல்வேறு வடிவங்களிலும் தமிழர்கள் தங்கள் அரசியல் உரிமைகளுக்காகப் போராடியிருக்கிறார்கள்.

இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று சொல்லப்பட்ட மலையகத் தமிழர்கள் முன்னர் இருப்பதற்கு இடமின்றியும் சொந்த நிலமின்றியும் இருந்ததைப் போல, வடக்குக் கிழக்கைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இன்று காணியும் வீடுமின்றி அகதிகளாகியிருக்கிறார்கள். இவர்கள் முன்னர் தங்களுக்கென்ற இருப்பிடங்களைக் கொண்டிருந்தவர்கள். வீடும் வளவும் தங்களுக்கென்ற சுயதொழிலுமாக வாழ்ந்தவர்கள். தங்களின் உழைப்பினாலும் வாழ்க்கை முறைமையினாலும் ஒரு தனிப் பண்பாட்டையுடைய சமூகமாக அடையாளம் பெற்றவர்கள். ஆனால், இன்று சொந்த ஊர்களுக்குத் திரும்பவே முடியாமல், தாங்கள் பிறந்த வளர்ந்த மண்ணைப் பார்க்கவே முடியாமல், அகதி என்ற நிலையிலும் 'சிதறிகள்' என்றவாறாகவும் இருக்கிறார்கள்.

'நாங்க லயன்களில் இருந்து வீடுகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறம். ஆனால், நீங்க வீடுகளில் இருந்து தறப்பாள் கூடாரங்களுக்கு வந்திருக்கிறீங்க' என்று கிளிநொச்சிக்கு வந்திருந்த மலையத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவர், இன்றைய கிளிநொச்சியைப் பார்த்து விட்டுச் சொன்னதை இங்கே குறிப்பிடலாம்.

ஆகவே இந்த நிலைக்குப் பின்தங்கியிருக்கும் ஈழத்தமிழ்ச் சமூகம், தன்னுடைய அரசியலில் எந்த வகையான உபாயங்களைக் கையாண்டிருக்கிறது? இவ்வளவு காலப் போராட்டங்களுக்குப் பின்னர், இவ்வளவு இழப்புகளுக்குப் பிறகு இப்போது எத்தகைய உபாயங்களைக் கையாள்கிறது? என்பது இன்றுள்ள முக்கியமான கேள்விகளாகும்.

அரசியலில் அதிகாரத்தைப் பெறுவதே முதன்மையான செயற்பாடாகக் கொள்ளப்படுகிறது. எத்தகையை கோட்பாடும் எந்த வகையான நிலைப்பாடும் அதிகாரத்தைப் பெற்றாலே அதை நடைமுறைப்படுத்தக் கூடியதாக இருக்கும். எனவே இந்த அதிகாரத்தைப் பெறுவதற்காகவே அனைத்து வகையான அரசியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஆயுதப் போராட்டமும் சரி, ஜனநாயக வழிமுறையிலான போராட்டமும் சரி அதிகாரத்தைப் பெறுவதையே குறியாகக் கொண்டிருக்கின்றன. அதிகாரத்தைப் பெறுவதன் மூலமாகவே ஆட்சியை நடாத்த முடியும்.

ஆனால், இந்த அதிகாரத்தைப் பெறுவதில்தான் பிரச்சினையே இருக்கிறது. எந்த அரசியல் நடவடிக்கையிலும் எத்தகைய

அரசியற் போராட்டங்களிலும் அதிகாரத்தைப் பெறுவதில் முக்கிய பங்காற்றுவது உபாயங்களேயாகும். அரசியல் என்பதே உபாயங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு செயற்பாடாகும். உபாயங்களற்ற கோட்பாடுகள் வெற்றிபெறுவது மிகக் கடினமானது. உண்மையில் அதிகாரத்தை வலுப்படுத்துவதே உபாயங்கள்தான். ஆட்சியை நீடிப்பதிலும் அதிகாரத்தைத் தக்க வைப்பதிலும் உபாயங்களுக்கே முக்கிய பங்குண்டு. உபாயங்களில்லாத அதிகாரம் எந்தச் சந்தர்ப்பத்திலும் நொருங்குண்டு சிதைந்து விடும்.

தமிழர்களுடைய போராட்டங்களில் யாராவது உபாயங்களைக் காட்டவே முடிந்தால் அது அதிசயந்தான். தமிழர்கள் எப்பொழுதும் உபாயங்களற்ற அரசியலையே முன்னெடுத்து வந்துள்ளனர். அவர்கள் அதிகப்பிரசங்கித்தனமான அரசியலையே தங்களுடையதாகக் கையாண்டு வந்துள்ளனர். அவர்கள் அதிகமாகப் பத்திரிகை அறிக்கைகளிலேயே தமது அரசியலை முன்னெடுத்துள்ளனர்.

எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்துவது என்பது வெற்றிகரமான அரசியல் வழிமுறையாக இருப்பதில்லை. திருமணத்தைப் பகிரங்கமாக வைத்துக் கொள்ளலாம். சாந்தி முகூர்த்தத்தை அப்படி வைத்துக் கொள்ள முடியாது என்பார்கள். இது அரசியலுக்கும் பொருந்தும். இராசதந்திர வழிமுறையில் பரகசியத்துக்கும் பகிரங்கத்துக்கும் அதிக இடமில்லை. இதைச் சீன, இந்திய, அரேபிய, ஐரோப்பிய அரசியற் பண்பாட்டில் நாம் காணமுடியும்.

ஆனால், தமிழ் மிதவாதத் தலைமைகள் எப்போதும் எதிர்த்தரப்புக்கு அதிக சாத்தியங்களை வழங்கும் அரசியலையே கையாண்டு வந்துள்ளன. பேச்சுவார்த்தை மேசைக்குப் போவதற்கு முன்பே தாம் என்ன பேசப் போகிறோம், எதைக் கேட்கப் போகிறோம், அதை எப்படிக் கேட்கப் போகிறோம், தமது திட்டங்கள் என்ன என்பதையெல்லாம் இவர்கள் முன்னரே பகிரங்கப்படுத்தி விடுவார்கள். இதனால், எதிர்த்தரப்பு இவர்களுக்குப் பதிலளிக்கக் கூடியவாறும் இவர்களை இலகுவாகத் தோற்கடிக்கக் கூடியமாதிரியும் முற்கூட்டியே தன்னைத் தயார்ப்படுத்தி விடுகிறது.

உண்மையில் 'பேச்சுவார்த்தைக்கான மேசை' என்பது ஒரு போர்க்களம்தான். அது ஒரு சதுரங்க விளையாட்டுக் களம். முற்றுமுழுதாக தந்திரோபாயங்கள் நிறைந்த ஒரு களம். எதிர்த்தரப்பைப் புத்திசாதுரியத்தால் தோற்கடிக்கும் களம். இன்னும் சரியாகச் சொன்னால், எதிர்த்தரப்பை வெல்லும் களம். ஆனால், ஈழத்தமிழரின் பேச்சுக்களம் என்பது எதிர்த்தரப்புக்கு வெற்றிவாய்ப்புகளை இலகுவாக உருவாக்கிக் கொடுக்கும் களமாகவே இருந்துள்ளது. அதிலும் சமநிலைத் தரப்புகளாக தமிழர்கள் ஒருபோதும் பேச்சுவார்த்தைக் களத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அதிகாரத்தை வைத்திருப்பது எப்போதுமே சிங்களத்தரப்பாகவே இருக்கிறது. அதாவது ஒடுக்கும் தரப்பிடமிருந்து ஒடுக்கப்படும் தரப்பு தனக்கான உரிமைகளையும் அதிகாரத்தையும் பெறுவதற்கான பேச்சுமேசையே இலங்கையின் பேச்சுவார்த்தைக் களமாகும்.

\இந்தக் களத்தில் சமநிலைத் தரப்புகளாக தமிழ்பேசும் மக்களின் தரப்பு இருக்க வாய்ப்பில்லை. சமநிலையை எட்டுவதற்காகவே பேச்சு நடத்தப்படுகிறது. சமநிலை ஏற்கனவே இருக்குமானால், பின்னர் எதற்காகப் பேச்சுக்களை நடத்தவேண்டும்? எதற்காகப் பேச்சுமேசைக்குப் போகவேண்டும்? ஆனால், இந்தச் சமநிலை குறித்துத் தவறான புரிதல்களே தமிழ் பேசும் மக்களின் தரப்பில் உள்ளது. பலத்துடன் பேச்சுமேசைக்குச் செல்வது என்பது உண்மையில் விவேகத்துடன் செல்வதையே – விவேகத்துடன் செயற்படுவதையே குறிக்கும். அதேவேளை பேச்சுக்குரிய சூழலை உருவாக்குவது – பேசவேண்டியதொரு நிர்ப்பந்தத்தை உருவாக்குவதையே நாம் பலத்துடன் செல்வது என்கிறோம். ஆனால், இதுவும் ஓர் உபாயந்தான். இதைப் பற்றிப் பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

ஆகவே, பேச்சுமேசையைத் தவறாகக் கையாளும் போக்கே இப்போதும் தமிழர்களின் அரசியலில் தொடர்கிறது. இதுதான் சோகமான கதை. ஆயுதப் போராளிகளைப் பொறுத்தவரை இதற்குச் சற்று விலக்காக நடந்து கொண்டிருந்தாலும் அவர்களும் தமது நிலைப்பாடுகளை அறிவிப்பதிலும் அவற்றைக் கையாளும் முறைகளிலும் தந்திரோபாயங்களைக் கையாளத் தவறிவிட்டனர்.

புலிகள் நீண்டகால அரசியல் செயற்பாட்டில் முதன்மைப் பட்டிருந்தவேளை ஒப்பீட்டளவில் குறிப்பிடத்தக்க உபாயங்களைப் பின்பற்றியிருந்தனர். குறிப்பாக இந்திய இராணுவத்துடன் தொடங்கப்பட்ட போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் முக்கிய பங்காற்றியவர் திரு. அன்ரன் பாலசிங்கம். இதுபோல வேறு சில சந்தர்ப்பங்களிலும் திரு. அன்ரன் பாலசிங்கம் குறிப்பிடத்தக்க உபாயங்களைக் கையாண்டு காரியங்களைச் சாதித்திருக்கிறார். இதற்குக் காரணம் அன்ரன் பாலசிங்கத்திடம் இது குறித்த புரிதல் இருந்தது. இதனை அவர் 1980 களின் முற்பகுதியில் எழுதிய 'அரச பயங்கரவாதமும் ஆயுதப் போராட்டமும்' என்ற புத்தகத்தில் 'தூலமான நிலைமைகளில் இருந்து தூலமான ஆய்வு எனக் குறிப்பிடுவதிலிருந்து பார்க்கலாம். ஆனால், துரதிஸ்ரவசமாக இந்த அணுகுமுறை ஒரு போதும் வெற்றிகரமாகத் தமிழ்ச் சூழலில் பிரயோகிக்கப்படவில்லை.

மேலும் ஈழ அரசியலில் உபாயங்களைக் குறித்து சிந்தித்தவர்களில் இ.இரத்தினசபாபதி இன்னொருவராவர். ஆனால், இரத்தினசபாபதி அடுத்த கட்டத்துக்கு நகரமுடியாமற் போய்விட்டது. அதேவேளை, அவருடைய அரசியற் செயற்பாட்டில் தொடர்ச்சியும் இல்லாமற் போய்விட்டது.

மற்றும்படி, தமிழ் மேட்டுக்குடியினரின் விருப்புகளே, தமிழ் மக்களின் அரசியல் விருப்புகளாக மாற்றப்பட்டன. இதை நாம் சேர். பொன். இராமநாதன் தொடக்கம் இன்றைய சம்பந்தன் வரையில் பார்க்கலாம். இவர்களுடைய அரசியல் வழிமுறை என்பது மாற்றங்களின்றிய நேர்கோட்டு அணுகுமுறையாகும். நேர்கோட்டு அணுகுமுறை என்பது எதிர்த்தரப்பின் தாக்குதலுக்கும் தடைக்கும் இலகுவானது. இந்தக் குறைபாடுகள்தான் இந்த உலகத்தில் தமிழர்கள் தமக்கான ஆதரவுத் தளத்தைப் பெறுவதில் பெரும் பின்னடைவுகளை ஏற்படுத்தியது. இதற்குச் சிறந்த உதாரணமாக தமிழர்களின் அரசியற் போராட்டத்தில், இதுவரையில் அரசியல் உபாயங்களில் பேர் சொல்லக் கூடிய ஒருவரையாவது காட்டமுடிந்தால் அது ஆச்சரியமே.

அப்படியானால் இது எதைக் காட்டுகிறது? ஒரு நீடித்த அரசியற் போராட்டத்தில் நிச்சயமாக அரசியற் கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் இராசதந்திரிகளும் உருவாகியிருக்க வேணும். ஆனால், நிலைமையோ பூஜ்ஜியமாகவே இருக்கிறது. இந்த நிலையில்தான் ஈழத்தமிழர்களின் அரசியற் சாணக்கியத்தின் பலவீனம் உள்ளது. என்பதாலேயே ஈழத்தமிழர்களின் அரசியல் என்பது கேலிக்குரியதாக கணிக்கப்படுகிறது. மாரிகாலத் தவளைகளின் கத்தலை யாரும் பொருட்படுத்தாததைப்போல இந்தப் போராட்டக் குரல்களை யாரும் கவனத்திற் கொள்வதில்லை.

இதேவேளை சிங்களத் தரப்பில் உபாயங்களே பிரதான அரசியல் வழிமுறையாக கையாளப்படுகின்றன. உள்நாட்டு நெருக்கடிகளாலும் வெளி அழுத்தங்களாலும் இலங்கை அரசு பல சந்தர்ப்பங்களில் சிக்கித் திணறியிருக்கிறது. ஆனால், அதையெல்லாம் சிங்களத்தரப்பின் உபாயங்களே முறியடித்திருக்கின்றன. குறிப்பாக 1987 இல் இந்திய நெருக்கடி இலங்கையைப் பெரும் சிக்கலுக்குரியதாக்கியது. ஆனால், பின்னர் புலிகளை முறியடிக்கும் பெரும் போருக்கு இந்தியா இலங்கைக்கு உதவியது. அந்த அளவுக்கு இலங்கையின் - உபாயம் - இராசதந்திரம் பெறுமதிமிக்கது.

இதைப்போல புலிகளுக்கு எதிரான தடைக்காகவும் போருக்காகவும் உலகத்தின் பெரும்பாலான சக்திமிக்க நாடுகளை எல்லாம் இலங்கை வென்றெடுத்திருந்தது. இதை, இந்த வென்றெடுப்பை அது பரகசியமாகச் செய்யவில்லை. காதும் காதும் வைத்ததைத் போல மிக இரகசியமாகச் செய்து தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொண்டது.

இலங்கை மட்டுமல்ல, அனைத்து நாடுகளும் உபாயங்களையே தமது அரசியல் வழிமுறையில் கையாள்கின்றன. இல்லையெனில் உலகத்தில் பெரிய நாடுகளே எப்போதும் ஆதிக்கத்துடன் இருக்க முடியும். சிறிய நாடுகளின் கதை அதோகதியாவே மாறியிருக்க வேணும். ஆனால், சிறிய நாடுகளே உலகத்தில் அதிகமாக இருக்கின்றன. இந்தச் சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்குச் சமதையாகவும் பெரிய நாடுகளிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்கின்றன என்றால் அது எப்படிச் சாத்தியமாகிறது? இந்தச் சமநிலையைக் கொடுப்பது உபாயங்களே!

இதைப்போல பெரும்பான்மைச் சமூகங்களிடமிருந்து சிறுபான்மைச் சமூகங்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பெரிய பாறாங்கல்லை சிறு நெம்புகோலைக் கொண்டு அசைத்து விடுகிறோம். இது எப்படி நடக்கிறது? இங்கே பயன்படுத்தப்படும் நெம்பு கோல் என்பது ஒரு உபாயமே. பல சந்தர்ப்பங்களிலும் நாம் கோலியாத்தின் கதையைச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், ஒரு சிறுவன் எப்படி பென்னாம் பெரிய வீரனை தாவீதை - வென்றான். அவன் கைக்கொண்ட உபாயமே அவனுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

ஆகவே உபாயங்களில்லாத எந்த விசயமும் வெற்றிகரமாக அமைவதில்லை. உபாயங்களைக் கைக்கொண்டால், வெற்றியும் இலகுவாகக் கிடைத்துவிடும். சிரமங்களும் அதிகமாக இருக்கப் போவதில்லை. தமிழர்கள் தங்கள் பாரம்பரிய அரசியல் வழிமுறையைக் கைவிட்டுப் புதிய உபாயங்கள் நிறைந்த அரசியல் வழிமுறைக்குச் செல்ல வேண்டும். இந்த உலகத்தில் வாய்ப்புகள் தாராளமாகக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலுமே எங்களின் பெறுமதியும் எங்களுக்கான எதிர்காலமும் தங்கியிருக்கிறது.

http://ponguthamil.com/aayirampookal/aayirampookalcontent.asp?sectionid=10&contentid={C1EB193E-2B3D-42CC-A8E6-92247105EC03}

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசமும்.. இந்தியாவும் வேறல்ல. எல்லோரினதும் அணுகுமுறைகள் ஒன்றே. நாம் அவர்கள் மீது செய்யக் கூடிய அழுத்தங்கள் தான் எங்களுக்கான சாதகங்களையும் பாதகங்களையும் தீர்மானிக்குமே அன்றி நாங்கள் சும்மா இருக்க.. சர்வதேசம் எம்மில் இரக்கப்பட்டு எமக்கு வேண்டியதை பெற்றுத் தரும் என்று எதிர்பார்த்திருப்பது முழு முட்டாள் தனம் என்பதை தமிழர்கள் மீண்டும் உணரும் நிலை வரும். அப்போது தமிழர்கள் மீட்சிக்கு வழி இன்றி இருக்கும் நிலையும் வரும்.

தற்போதைய நிலையில்... தமிழர்கள் வேறு புலிகள் வேறு..! இதுதான் இப்போதைக்கு எமக்கான அரசியல்... :rolleyes: தமிழர் நலனுக்கான அழுத்தங்களை நாம் பிரயோகிக்கலாம்.. அவ்வளவே நான் சொல்வது..! :wub:

தற்போதைய நிலையில்... தமிழர்கள் வேறு புலிகள் வேறு..! இதுதான் இப்போதைக்கு எமக்கான அரசியல்... தமிழர் நலனுக்கான அழுத்தங்களை நாம் பிரயோகிக்கலாம்.. அவ்வளவே நான் சொல்வது..! ------இசைக்கலைஞன்

அப்படி போடு அரிவாளை?

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைய நிலையில்... தமிழர்கள் வேறு புலிகள் வேறு..! இதுதான் இப்போதைக்கு எமக்கான அரசியல்... :rolleyes: தமிழர் நலனுக்கான அழுத்தங்களை நாம் பிரயோகிக்கலாம்.. அவ்வளவே நான் சொல்வது..! :wub:

அப்ப இவ்வளவு நாளும் we are tamil tigers என்று கத்தினதெல்லாம் ?.........................................

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவ்வளவு நாளும் we are tamil tigers என்று கத்தினதெல்லாம் ?.........................................

அது மே 2009 வரைக்கும்..! :rolleyes: இப்போதைய அரசியல் வேறு..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

நாம் எதை போட்டு குழப்பினாலும்.............

நடந்ததும்.....

நடப்பதும்.......

நடக்கவிருப்தும்................... சுரண்டல்களே!

காலகாலமாக உலகில் சுரண்டல் அரசியலே நடந்துகொண்டிருக்கிறது. அப்போதைய ஆயுத நவீனதன்மைகளுக்கேற்பே போர்முறைகள் மாறபட்டுள்ளன தவிர அடுத்தவனை கொண்று அவனிடம் உள்வைகளை அள்ளுவதே தொடர்கதை.

அவ்வப்போது சில நியாயவாதிகள் தோன்றி நியாயம் கற்பித்தாலும் அவர்கள் மழைக்கால ஈசல்கள்போல் எங்கும் நிலைத்ததில்லை. பாராண்ட தமிழர்கள் எதையும் சுரண்டவில்லை............... காலம் முந்தி சென்று இனி எஞ்சிய தமிழர்கள் சுரண்டவும் முடியாது. ஏதாவது உங்களிடம் இருந்தால் அதை எப்படியாவது தமதாக்க வேண்டும் ஒன்றில் ஆயுதத்தை நீட்டுவது......... அல்லது நண்பர் காதலர் போல் வேடமிடுவது.

தமிழர்களுடைய வாழ்விடங்கள் இலங்கையில் நிலைக்குமெனில் ஏகாபத்தியத்திற்கு முகம் கொடுக்க முடியாது ஒருநாள் சிங்களம் ஆட்டம் காணும் அன்று ஐயோ தமிழர்களே ஒடிவாரீர் ஒன்றாக குரல்கொடுப்போம் என்று கூச்சல்போடுவார்கள்............. புலம்பெயாந்த தமிழர்களுடைய ஆழுமை அன்று சற்று அதிகமாக இருக்கும். நிற்சயம் தமிழர்கள் ஒடிசெல்வார்கள் சிங்களத்தை காப்பாற்றுவார்கள் பின்பு மீண்டும் சிங்களவன் தனது நிலயை நிலைநிறுத்திவிட்டு காலால் எட்டி உதைப்பான்.......................

இது ஒரு தடவை இரண்டு தடவை நடந்ததல்ல.............. கிட்டதட்ட கடந்த ஆயிரம் ஆண்டுகள் இதுதான் நடந்துள்ளது குறைந்ததது அடுத்த 50 வருடத்திற்காவது இது நடக்கும் என்று எதிர்பாhக்காது போனால் அது போன்ற மூட்டாள்தனம் வெறில்லை.

றோபேட் பிளேக் போய் ஏன் கூட்டணியை சந்திக்க வேண்டும்? கூட்டணியிடம் அப்படி என்ன அதிகாரம் இருக்கிறது? எதுவுமே இல்லை. இந்த றோபேட் பிளேக் சிங்களவன் கொடுக்கும் பெண்களிடம் சாலபிக்வே இலங்கை வருகிறான்.............. இவனிடம் எதையும் எதிபார்ப்பதைவிட கடவுள் மேலே இருந்துபோடுவார் என்று எதிர்பாhப்பது மேலானது.

அமெரிக்கா இலங்கையில் நீதியான ஆட்சியை விரும்பின் பேசவேண்டியது ஆட்சியாளர்களுடன்தான்........... கூட்டணியோடு பேச என்ன இருக்கிறது? நான் முன்பே பலமுறை எழுதியுள்ளேன்

இந்த கூட்டணி இந்தியாவும் மேற்கு நாடுகளும் கூத்தமைக்க உதவுமே தவிர தமிழர்களுக்கு எள்ளவும் உதவாது என்று. (அவர்கள் மேல் எனக்கு எந்த கோபமுமில்லை தற்போதைய நிலமை அததூன்). அவர்களிடம் எதிர்பார்ப்பவர்களிடம்தான் கோபமில்லை ஒரு பரிதாப மனோநிலை எனலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

அது மே 2009 வரைக்கும்..! :rolleyes: இப்போதைய அரசியல் வேறு..! :unsure:

இந்த நிலைப்பாடு தமிழர்களுக்கு எந்த வகையிலும் அவர்களின் அரசியல் அபிலாசையை அடைய உதவப் போவதில்லை.

விடுதலைப்புலிகள் அடக்குமுறையாளர்களை ஆக்கிரமிப்பாளர்களை பேரினவாதிகளை எதிர்த்து ஆயுத வன்முறையில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அவர்களிடம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ன என்பதில் ஒரு தெளிவான தெரிவு இருந்தது. அதை அவர்கள் சர்வதேசத்தின் முன்னும் எடுத்து வைக்க மறக்கவில்லை. விடுதலைப்புலிகளின் உறுதியான அரசியல் தெரிவும் அவர்களை சர்வதேசம் அகற்றி விட வேண்டும் என்ற முடிவுக்கு வர ஒரு காரணம். சர்வதேச நலன்களுக்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைக்கு அவர்கள் அளித்த முன்னுரிமையே அவர்களின் அழிவுக்கும் வித்திட்டது. விடுதலைப்புலிகளும்.. தமிழ் மக்கள் வேறு.. தாம் வேறு என்று சிந்தித்திருந்தால்.. சிறீலங்கா சிங்கள அரசில் அமைச்சர் பதவிகளோடு இன்று ஒரு இணக்க அரசியல் செய்து கொண்டிருந்திருக்கலாம். இப்படி கொள்கை.. என்று செத்து அழிஞ்சிருக்கத் தேவையில்ல. ஒரு தலைமுறை இளைய சமூகத்தினரில் ஒரு பகுதியினர் வாழ்விழந்திருக்க இன்னொரு பகுதியினர் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்து தேடி ஓடி இருக்க வேண்டியும் வந்திருக்காது.

விடுதலைப்புலிகளை நிராகரிப்பதன் மூலம் அல்லது மறக்கச் செய்வதன் மூலம்.. தமிழ் மக்களுக்காக அவர்கள் சர்வதேசத்தில் ஏற்படுத்திய அரசியல் தேவை என்ன என்பதையும் இல்லாமல் செய்கிறீர்கள்.

மீண்டும் தமிழர்கள், ஏகாதபக்தியவாதிகளின் திட்டங்களுக்குள்ளும்.. பிராந்திய வல்லாதிக்க சக்திகளின் திட்டங்களுக்குள்ளும்.. பேரினவாதிகளின் திட்டங்களுக்குள்ளும் நிகழ்ச்சி நிரல் வகுத்துச் செயற்படவே இது துணை நிற்கும். அது ஒரு போதும் தமிழ் மக்கள் விரும்பிய அல்லது விரும்பும் அரசியல் அபிலாசையை பெற்றுத் தராது.

சர்வதேசம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது மேற்கொண்ட மோசமான நடவடிக்கைகளுக்கும் எமது மக்கள் கொல்லப்படவும்.. எமது இந்த இரண்டும் கெட்டான் மனநிலைகளும் ஒரு காரணம். இதில் இராஜதந்திரத்திற்குப் பதில் தற்கொலைக்கான சந்தர்ப்பமே அதிகம்.

அதற்கு இந்தச் செய்தி சாட்சியம்...

Blake should not mislead Tamils again: Mano Ganesan

[TamilNet, Thursday, 05 May 2011, 05:38 GMT]

Mano Ganesan, the leader of the Democratic Peoples Front (DPF), who was once named by then US State Secretary Condoleezza Rice, in a statement issued on Wednesday, reminded the Tamils that the visiting US Asst Secretary Robert Blake was instrumental in providing US government's unconditional support to the war waged by the Sri Lankan state against Tamils. The “US government wanted put out a savior impression. But in real it did not bother about the Tamil civilian causalities,” Mr. Mano Ganesan said. “International community should act decisively with the GoSL. It is time that US assistant state secretary for central and south Asia affaires Robert O Blake lives upto his earlier ambassadorial preaching. He should not mislead the Tamils again.”

“Those who supported the war efforts unconditionally do have the moral responsibility towards the Tamil community. US and UN failed to act decisively to prevent civilian causalities.”

“The aftermath conditions of the UNSG’s panel report today is based on two fundamentals. One is the accountability issue. The other is the opening for political solution. The war has been won but it has further polarized Sri Lankans on ethnic lines. It can be cured only by a sincere political solution,” the statement by Mr. Mano Ganesan said.

Full text of the statement follows:

Government was all set for the complete implementation of the 13th amendment immediately after war was the key notion propagated by US assistant state secretary Robert O Blake. Mr. Blake, then US ambassador in Sri Lanka misled Tamils of this country with this notion says DPF leader Mano Ganesan in the brief statement issued by DPF media office. Ganesan who was once named by then US state secretary Condoleezza Rice as Freedom Defender with a human rights award said further in the statement,

Throughout the war ambassador Blake was preaching on 13th amendment and further follow up through the All party conference. He even went to Chennai to lecture Sri Lanka activists there on 13th amendment and political solution. He was assuring us a new era with 13 plus. It was technically the justification for the US support to the war efforts. Now even after the war and it’s devastation, Tamils in this country are nowhere near 13th amendment.

Throughout the war years, we were campaigning for the safety and security of the civilians. We of the Civil Monitoring Commission stood against the extra judicial killings and abductions to the best of our ability amidst personal threats to our lives. The freedom defender award of the US came to me then. Ambassador Blake was instrumental for this.

But the award did not change anything but made me more vulnerable. We had to cancel a public presentation event and Blake was forced to present me the award in his office room with his personal staff. We later realized that the award was a propaganda blitz. US government wanted put out a savior impression. But in real it did not bother about the Tamil civilian causalities. Their support to the war was unconditional.

Had the last minute attempts to halt the war by US led sections of international community succeeded, it would not have saved the people in the Wanni but would have protected some of the remaining LTTE leaders. It was too late for the civilians. By then the war had reached the point of no return. So again it was another propaganda blitz to appease the protesting Diaspora Tamils.

The aftermath conditions of the UNSG’s panel report today is based on two fundamentals. One is the accountability issue. The other is the opening for political solution. The war has been won but it has further polarized Sri Lankans on ethnic lines. It can be cured only by a sincere political solution.

Those who supported the war efforts unconditionally do have the moral responsibility towards the Tamil community. US and UN failed to act decisively to prevent civilian causalities. They can never bring back the lost lives. There is only a conciliatory path available. It is the political solution.

International community should act decisively with the GoSL. It is time that US assistant state secretary for central and south Asia affaires Robert O Blake lives upto his earlier ambassadorial preaching. He should not mislead the Tamils again.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33903

Edited by nedukkalapoovan

தற்போதைய நிலையில்... தமிழர்கள் வேறு புலிகள் வேறு..! இதுதான் இப்போதைக்கு எமக்கான அரசியல்... :rolleyes: தமிழர் நலனுக்கான அழுத்தங்களை நாம் பிரயோகிக்கலாம்.. அவ்வளவே நான் சொல்வது..! :wub:

நாங்கள் போராடி ஈழம் வெல்வதெல்லாம் புலிகளின் வீழ்ச்சியின் பின்னர் நடக்கப் போகிற காரியமல்ல.

போர்க்குற்றம் எமக்குக் கிடைத்துள்ள ஒரு சந்தர்ப்பம். இதனைப் பாவித்து வெளிநாடுகள் தமது இலாபத்திற்காக ஈழத்தமிழருக்கு ஒரு குறைந்தபட்ச உரிமையையாவது பெற்றுத் தருமானால் அதுவே பெரிது.

றொபேட் பிளேக்கின் புலிகளைப் பற்றிய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் :

REUTERS

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி இணையவன் அண்ணா.

நாங்கள் போராடி ஈழம் வெல்வதெல்லாம் புலிகளின் வீழ்ச்சியின் பின்னர் நடக்கப் போகிற காரியமல்ல.

போர்க்குற்றம் எமக்குக் கிடைத்துள்ள ஒரு சந்தர்ப்பம். இதனைப் பாவித்து வெளிநாடுகள் தமது இலாபத்திற்காக ஈழத்தமிழருக்கு ஒரு குறைந்தபட்ச உரிமையையாவது பெற்றுத் தருமானால் அதுவே பெரிது.

றொபேட் பிளேக்கின் புலிகளைப் பற்றிய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் :

REUTERS

எமக்கு தேசிய தலைவராக தெரியும் பிரபாகரன்.. அமெரிக்காவின் இந்த வெண்ணைக்கு பில்லாடனாக.. கொடிய பயங்கரவாதியாக தெரிகிறார் என்றால் பில்லாடன் தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றி நாம் சிந்திக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

அமெரிக்கா மீதான இரட்டைக் கோபுரத் தாக்குதலை பயங்கரவாதமாக உச்சரிக்கும் போது நாமும் சேர்ந்து உச்சரித்திருக்கிறோம். அங்கு பலியானவர்களுக்காக பதறித் துடிக்கிறோம். 40,000 எமது மக்களை அமெரிக்க உதவியோடும் எதிரி கொன்ற போது எந்த அமெரிக்கப் பிரஜை எமக்காக வருந்தினான். கவலைப்பட்டான்.

இந்த அமெரிக்கா உலகமெல்லாம் போய் செய்த படுகொலைகளுக்கும் போர் குற்றங்களுக்கும் எவரும் எதுவும் கேட்க முடியாது.. ஐநா சபையும் ஒன்றும் புடுங்க முடியாது..?! அப்படி இருக்கு இன்றைய மனித உலகம்.

அமெரிக்கர்கள் வகுப்பது எல்லாம் சரியான கொள்கை. மற்றவர்கள் வகுப்பது எல்லாம் பயங்கரவாதம். இதுதான் அமெரிக்க ஏகாதபக்தியத்தின் தெளிவான நிலைப்பாடு.

தமிழர்கள் அமெரிக்காவின் சொல்லுக்கு அடங்கி அது 13வது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்துக்கூடாக பெற்றுத் தாறதை பெற்றுக் கொண்டு சிங்களவர்களோடு ஐக்கிய சிறீலங்காவிற்குள் வாழ வழி செய்ய புலிகள் தடையாக இருந்தார்கள்.. அவர்களை பயங்கரவாதிகள்.. பில்லேடன் ஆட்கள் என்று கொன்று தள்ளியாச்சு. எனி...???! என்ன..

நாங்களும்.. புலிகள் வேறு.. தமிழ் மக்கள் வேறு என்று சொல்ல ஆரம்பித்து விட்டோம். இதை இந்த பிளேக்கும் தொடர்ச்சியாக கூறி வருந்திருக்கிறார். புலிகளுக்கு ஒரு 5% மக்களே ஆதரவு என்று பகிரங்கமாக அறிக்கை விட்டவர் இந்த ஒட்டாண்டி பிளேக்கு..!

இப்பவும் தமிழர்கள் அழிந்ததற்காக இவர்கள் எமக்கு ஏதாவது கொடுத்து சரிக்கட்ட வேண்டும் என்று நினைக்கவில்லை.. மீண்டும் புலிகள் வந்திடுவார்களோ என்ற பயத்தில் எமக்கு ஏதாவது செய்து சரிக்கட்டுவம் என்று நினைக்கிறார்களே தவிர வேறில்லை. ஆனால் நாங்கள்.. தான்.. இவர்களை வைச்சு பெரிசா இராஜதந்திரம் செய்யலாம் என்று கனவு காண்கிறோம் போல..!

---------------------------------------

BIN LADEN VS PRABHAKARAN

Asked if Washington was applying a double standard in the case of bin Laden and Sri Lanka's killing of LTTE leader Vellupillai Prabhakaran, Blake said the United States had consistently backed efforts against the LTTE.

"I think they will both go down as two of the worst terrorist leaders in history," he said. "Certainly no one in the United States, certainly not in my government, mourns the passing of Prabhakaran."

Blake, and the United States, were at the forefront of Western efforts to get a ceasefire in place to protect the nearly 300,000 civilians the LTTE kept in the war zone as human shields in the final months of the war.

Sri Lanka rejected the call, pointing out that the LTTE had in the past manufactured civilian crises to build pressure for a truce when it was at a military disadvantage, which it in turn used to re-arm to fight again.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் போராடி ஈழம் வெல்வதெல்லாம் புலிகளின் வீழ்ச்சியின் பின்னர் நடக்கப் போகிற காரியமல்ல.

போர்க்குற்றம் எமக்குக் கிடைத்துள்ள ஒரு சந்தர்ப்பம். இதனைப் பாவித்து வெளிநாடுகள் தமது இலாபத்திற்காக ஈழத்தமிழருக்கு ஒரு குறைந்தபட்ச உரிமையையாவது பெற்றுத் தருமானால் அதுவே பெரிது.

றொபேட் பிளேக்கின் புலிகளைப் பற்றிய அபிப்பிராயத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் :

உண்மைதான் இணையவன்

ஆனால் அது எமது அரசியலாக அதாவது தற்போதைய சூழ்நிலையை ஆதரித்து போவதாக இருக்கவேண்டுமே தவிர

இங்கு அரிவாள் போடுபவர்களின் தாளத்துக்கு ஆடுவதாக இருக்கக்கூடாது. நாம் எமக்கான தியாக தீபங்களை மறந்து தற்போதைய எடுபிடிகளை நம்பி எதையாவது பெறுவோமாயின் அப்படி ஒரு நாடோ அல்லது சுயாட்சியோ எமது கனவுகளுக்கு முற்றிலும் எதிரானதாக, நாம் அடைய போராடிய தேசிய நலன்களுக்கு எதிரானவர்களைக்கொண்டதாகவே இருக்கும். அப்படியான ஒன்றை எடுத்து..............??? :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒருமுறை.. :D

தமிழர்களின் மனங்களில் புலிகள் வேறு மக்கள் வேறு அல்லர்..! ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் நாம் இன்னொரு கட்டத்துக்கு வந்துவிட்டோம். பயங்கரவாதம் என்று கூறி ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அடக்கி வைத்திருந்தது குறைந்துவரும் ஒரு சந்தர்ப்பம். இது சர்வதேச அளவில்.

புலிகளும் தாயகத்தமிழரும் தம் ஒப்பற்ற எண்ணற்ற தியாகங்களின் மூலம் எமது போராட்டத்தை இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்கள். இது சாதாரணமாக ஒரு இரு பக்கங்களில் சொல்லிவிடுவதன்று. எங்கள் மனங்களில் நீக்கமற நிறைந்தது.

இத்தகைய தியாகங்களின் பலனாக இன்று போர்க்குற்றம் என்கிற ஒரு கருவி தமிழர்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதை உபயோகிக்கப் போகிறோமா இல்லையா என்பதே அடுத்துள்ள கேள்வி.

புலிகள் மௌனித்த இவ்வேளையில், புலிகள்தாம் எம் பிரதிநிதிகள் என்று இன்றும் கூறிக்கொள்வது எமக்கு மிகுந்த ஆறுதல்தரும். அதுவே ஆத்மார்த்தமான உண்மையும்கூட. ஆனால் எமது ஊடகங்களோ அல்லது அமைப்புகளின் பிரதிநிதிகளோ இதைக் கூறிக்கொண்டிருந்தால் நாம் மீண்டும் பூச்சியத்துக்கு வருவது தவிர்க்க முடியாதது.

எமது அன்பை, நன்றியை அடிமனத்தில் இருத்தி, மாவீரர்களின் அளப்பரிய தியாகங்களை மனதுள் போற்றி, சிங்களவனின் போர்க்குற்றத்தை வெளிப்படையாகத் தூக்கிப்பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை

நானும் இதைத்தான் பலநாளாக இங்கு சொல்லிவருகின்றேன். தங்களுடைய இந்த கருத்தை ஒரு ஆக்கபூர்வமான மாற்றுக்கருத்தாகவும் கொள்ளலாம்.நன்றி தங்களது நேரத்திற்கு.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒருமுறை.. :D

தமிழர்களின் மனங்களில் புலிகள் வேறு மக்கள் வேறு அல்லர்..! ஆனால் தற்போதைய அரசியல் சூழலில் நாம் இன்னொரு கட்டத்துக்கு வந்துவிட்டோம். பயங்கரவாதம் என்று கூறி ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் அடக்கி வைத்திருந்தது குறைந்துவரும் ஒரு சந்தர்ப்பம். இது சர்வதேச அளவில்.

புலிகளும் தாயகத்தமிழரும் தம் ஒப்பற்ற எண்ணற்ற தியாகங்களின் மூலம் எமது போராட்டத்தை இன்னொரு கட்டத்துக்கு நகர்த்தியிருக்கிறார்கள். இது சாதாரணமாக ஒரு இரு பக்கங்களில் சொல்லிவிடுவதன்று. எங்கள் மனங்களில் நீக்கமற நிறைந்தது.

இத்தகைய தியாகங்களின் பலனாக இன்று போர்க்குற்றம் என்கிற ஒரு கருவி தமிழர்களுக்கு கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதை உபயோகிக்கப் போகிறோமா இல்லையா என்பதே அடுத்துள்ள கேள்வி.

புலிகள் மௌனித்த இவ்வேளையில், புலிகள்தாம் எம் பிரதிநிதிகள் என்று இன்றும் கூறிக்கொள்வது எமக்கு மிகுந்த ஆறுதல்தரும். அதுவே ஆத்மார்த்தமான உண்மையும்கூட. ஆனால் எமது ஊடகங்களோ அல்லது அமைப்புகளின் பிரதிநிதிகளோ இதைக் கூறிக்கொண்டிருந்தால் நாம் மீண்டும் பூச்சியத்துக்கு வருவது தவிர்க்க முடியாதது.

எமது அன்பை, நன்றியை அடிமனத்தில் இருத்தி, மாவீரர்களின் அளப்பரிய தியாகங்களை மனதுள் போற்றி, சிங்களவனின் போர்க்குற்றத்தை வெளிப்படையாகத் தூக்கிப்பிடிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்..! :rolleyes:

போர் குற்றம் என்பது எமக்கு அரசியல் உரிமை பெற கிடைத்த கருவியாகக் கருதப்படுவதிலும் எமக்கு இந்த உலகம் இழைத்த பல்லாண்டு கால கொடூரத்தை அதற்கு நிரூபிக்கவும் அதனிடம் நீதி கேட்கவும் கிடைத்திருக்கும் ஒரு வாய்ப்பாகவே கொள்ள வேண்டும். இந்த உலகின் இரட்டைத் தன அணுகுமுறையால் தான் இந்தப் போர் குற்றமே நிகழ்ந்தது. தமிழர்கள் நீதி கேட்டு உரிமை கேட்டு போராட வேண்டி வந்தது. தமிழர்களின் அரசியல் சுதந்திர வாழ்வுரிமையை இந்த உலகம் ஏற்க மறுத்ததனால் தான் அவர்களுக்கு இவ்வளவும் நேர்ந்தது.. தமிழர்கள் அரசியல் சுதந்திரம் பெற நாம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற சிந்தனைப் போக்கை உலகம் தன்னகத்துள் கொள்ளும் வகைக்கு நாம் இதனை கொண்டு செல்வது அவசியம். அதை ஒட்டுமொத்த உலகத் தமிழினமும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

அதேவேளை எமது மண்ணின் அரசியல் விடிவுக்காக போராடி வீழ்ந்த மக்கள் மீது சுமத்தப்படும் பழிகளில் இருந்தும் நாம் அவர்களை மீட்க வேண்டிய கடமையைக் கொண்டுள்ளோம். எமக்குள் மட்டும் அவர்களை வைத்துப் பூஜிப்பதால் அவர்கள் மீது பூசப்பட்ட பயங்கரவாத முலாம் அகலப் போவதில்லை.

இன்றுவரை பலஸ்தீன கமாஸ் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பாக உச்சரித்துக் கொண்டிருக்கும் உலகம்.. அவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு அவர்களையும் பலஸ்தீன தேசப் பிரச்சனையில் கருத்தில் எடுக்க நிற்பந்திந்துள்ளது. பலஸ்தீன தேசத்தின் ஒரு பகுதியை பெரும் மக்கள் ஆதரவோடு ஆளும் பொறுப்பை கூட மேற்குலகம் விரும்பியோ விரும்பாமலோ விட்டுக் கொடுக்க வேண்டிய நிலையை தோற்றுவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்து பயங்கரவாத முலாம் பூசப்பட்டு அழிக்கப்பட்ட ஒரு அமைப்பாக இருக்கக் கூடாது. அவர்கள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் நுழையவும் ஜனநாயக வழியில் தாம் நேசித்த தம்மை நேசித்த மக்களின் உரிமைக்காக அரசியல் ரீதியில் சமூக ரீதியில் தொடர்ந்து போராடவும் இந்த உலகம் அவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அதற்கான நிற்பந்தத்தையும் தமிழ் மக்கள் தான் பலஸ்தீன மக்கள் போன்று போராடிப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஜே வி பி இயக்கம் அதன் தலைமை அழிக்கப்பட்ட போது அதனை வரவேற்றவர்கள்.. அந்த இயக்கத்தின் மீள் புத்துயிர்ப்பு ஜனநாயக அரசியல் ரீதியில் எழுந்த போது தடுக்கவில்லை. மாறாக அந்த இளைஞர்களின் அவர்களை ஆதரித்த மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் ஜனநாயக அரசியல் பிரவேசத்தை அமெரிக்கா உட்பட எல்லோரும் அங்கீகரித்து நின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகள் இன்று ஆயுதங்களை மெளனித்து அவற்றின் மீது நம்பிக்கை இழந்து இருக்கும் நிலையில் அவர்கள் தாம் நேசித்த மக்களுக்காக.. அவர்களை நேசித்த மக்களுக்காக ஜனநாயக வழியில் செயற்பட்டு அரசியல் உரிமைகளை வென்றெடுக்க உலகம் அவர்களையும் அங்கீகரிக்க வேண்டும்.

இந்தக் குரலை நாம் இந்த உலகை நோக்கி ஓங்கி ஒலிக்கச் செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். இதன் மூலம்.. எமது இன விடுதலைக்காக போராடி இன்று அனாதைகளாக்கப்பட்டு தேடுவாரற்று.. படுகொலை செய்யப்படும் மனித ஜீவன்களாக வாழும் அந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் நாம் தொடர்ந்து எமது உரிமைக்காக ஜனநாயக வழியில் செயற்பட சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் தமது மக்களுக்காக செயற்படுகிறோம் என்ற அந்த உயரிய எண்ணத்தை பெறுவார்கள். மன சாந்தி அடைவார்கள்.

எமக்காக போராடிய போராளிகளும் மக்களும் முள்ளிவாய்க்காலில் இருந்து கடைசி நேரத்தில் எழுப்பிய அந்த அவலக் குரல் இன்னும் எம்முள் ஒலித்துக் கொண்டிருக்க அவர்களை தற்காலிகமாக உலகுக்கு மறைத்து எமக்குள் பூஜிப்போம் என்பது அவர்களுக்கு ஒரேயடியாக எமக்குள் வைத்து சமாதி கட்டுவதற்கு சமன். அதனை நாம் செய்யக் கூடாது.

நாம் இந்த விடயத்தில் ஒற்றை அணுகுமுறையை தவிர்த்து சமாந்திர அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளை செய்ய.. கடைப்பிடிக்க வேண்டியவர்களாக உள்ளோம் என்பதை சரி வர விளங்கிக் கொள்ள வேண்டும். அதன்படி செயற்பட வேண்டும்.

Edited by nedukkalapoovan

இசை நான் நினைத்ததைச் சொல்லிவிட்டார்.

விகுசுவின் கருத்தை மறுக்கவில்லை. இது எமக்குள்ளேயே பேசிக் கொள்ளத்தான் நன்றாக இருக்கும். எமது கருத்துக்களையோ அபிலாசைகளை யாரும் உள்வாங்குவதாகத் தெரியவில்லை. றொபேட் ப்ளேக் போன்றவர்களின் பேச்சைத்தான் உலகமே கேட்கிறது. அவர்களின் எண்ணப் படிதான் செய்தும் காட்டுகிறார்கள். உலகின் கண்முன்னே அழிந்து கொண்டும் உலகுக்கு எதுவித பயனும் இல்லாத எமக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டியது அவசியம்.

தமிழ் கூட்டமைப்பினர் தமது இனத்திற்கு பயனுள்ளதாக ஏதாவது செய்ய நினைத்தால் இவ் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

Edited by இணையவன்

  • கருத்துக்கள உறவுகள்

இசை நான் நினைத்ததைச் சொல்லிவிட்டார்.

விகுசுவின் கருத்தை மறுக்கவில்லை. இது எமக்குள்ளேயே பேசிக் கொள்ளத்தான் நன்றாக இருக்கும். எமது கருத்துக்களையோ அபிலாசைகளை யாரும் உள்வாங்குவதாகத் தெரியவில்லை. றொபேட் ப்ளேக் போன்றவர்களின் பேச்சைத்தான் உலகமே கேட்கிறது. அவர்களின் எண்ணப் படிதான் செய்தும் காட்டுகிறார்கள். உலகின் கண்முன்னே அழிந்து கொண்டும் உலகுக்கு எதுவித பயனும் இல்லாத எமக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்க வேண்டியது அவசியம்.

தமிழ் கூட்டமைப்பினர் தமது இனத்திற்கு பயனுள்ளதாக ஏதாவது செய்ய நினைத்தால் இவ் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்த வேண்டும்.

றொபேட் பிளேக்கின் 2009 ஆண்டு முற்பகுதியில் இருந்த நிலைப்பாடும் இன்றைய நிலைப்பாடும் சில விடயங்களில் மாற்றம் பெற்றுள்ளது. றொபேட் பிளேக்.. சிறீலங்காவில் அமெரிக்க தூதுவராக பணியாற்றிய காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறி வந்த அறிவுரைகளை கைவிட்டு.. இப்போ அவர்களோடு நேரடியாக பேசக் கூடிய நிலைக்கு வந்துள்ளார். இதிலும் சிறீலங்கா அரசு மீதான தங்களின் (அமெரிக்காவின்) பிடியை இறுக்கிக் கொள்ளவதே அதிகம் செல்வாக்குச் செய்கிறது. அதை அவர் நேற்றை சந்திப்பிலும் தெட்டத் தெளிவாக இனங்காட்டி இருக்கிறார். சிறீலங்கா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் நாம் கைவிட முடியாத ஒரு நண்பன்.. என்று சொல்லி விட்டார்.

விடுதலைப்புலிகள்.. பிரபாகரன் தொடர்பாக பிளேக் இப்போது தான் விரும்பிய அனைத்தையும் கூற முடியும். ஏனெனில் விடுதலைப்புலிகள் தங்கள் பலத்தை இழந்துள்ளனர். அவர்கள் மீது எவரும் எவ்வகையான கருத்தையும் இன்று சொல்லலாம். அதனை தட்டிக் கேட்கவோ மறுதலிக்கவோ.. யாரும் இல்லை. எனவே பிளேக்.. எரிக் சொல்கைம்.. சிதம்பரம்.. இவர்கள் எல்லாம் விடுதலைப்புலிகள் பற்றி தற்போது சொல்லும் கருத்துக்கள் அவர்கள் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப தமிழ் மக்களிடம் இருந்து விடுதலைப் புலிகளை விலக்கி வைக்க வேண்டும் என்ற தங்கள் நீண்ட நாள் ஆசையின் வெளிப்பாடாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

பிளேக் கூறுவது போல 13 வது திருத்தச் சட்டமூலத்துக்குள்ளால் தான் மன்மோகன் சிங்கும் எமக்கு தீர்வு தேடி வருகிறார். ஆக பிளேக்கும் இந்திய ஆளும் வர்க்கமும் இந்த விடயத்தில் எமக்கு 13ம் திருத்தச் சட்டத்திற்கு மேலால் எதனை பெற்றுத் தரப் போகின்றனர் என்ற ஒரு கேள்வியும் இருக்கிறது.

நாமும்.. போர் குற்றத்தை முன் வைத்து 13ம் திருத்தச் சட்டம் சார்ந்து ஒரு தீர்வை வலியுறுத்தி நிற்கப் போகிறோமா.. அல்லது போர் குற்றவாளிகளை சர்வதேசத்தின் முன் நிறுத்தி நீதி கேட்டு எமது அரசியல் அபிலாசைக்கு அமைய சர்வதேசம் நாம் விரும்பும் தீர்வை பெற்றுத் தர வலியுறுத்தப் போகிறோமா..!

போர் குற்ற விசாரணை என்பதை அமெரிக்காவின்.. இந்தியாவின்.. நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப மட்டும் கொண்டு செல்லப் போகிறோமா.. அல்லது எமக்கான அரசியல் இராஜதந்திர வழியில் அதனை எடுத்துச் சொல்லப் போகிறோமா.. அல்லது கலந்து எடுத்துச் செல்லப் போகிறோமா.. அல்லது முரளிதரன்.. டக்கிளஸ் போல.. எல்லாத்தையும் கைவிட்டு விட்டு அதன் மூலம் சிங்கள ஆட்சியாளர்களுடன் நெருங்கிய ஒத்துழைப்ப வளர்த்து இணக்க .. சகோதர அரசியல் செய்து ஐக்கிய சிறீலங்காவுக்குள் சிறீலங்கன்களாக வாழப் போகிறோமா...??! எது எமது முடிவு..?????!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.