Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீபம் தொலைக்காட்சி ?

Featured Replies

தீபம் தொலைக்காட்சி அய் நா குழு அறிக்கையை தருசலாம் அறிக்கை என்கிறது.சிறீலங்கா அரசின் புலச் செயற்பாட்டுகளை தற்போது கேள்வி நேரம் போன்ற நிகழ்ச்சிகளினூடாக தீபம் மேற்கொள்கிறதா? யாழ் டில்கா கொடேல் விளம்பரமும் தற்போது போகிறது. விபரம் தெரிந்தால் அறியத் தரவும்.சந்தாவை நிற்பாட்டுவது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

தீபம் தொலைக்காட்சி அய் நா குழு அறிக்கையை தருசலாம் அறிக்கை என்கிறது.சிறீலங்கா அரசின் புலச் செயற்பாட்டுகளை தற்போது கேள்வி நேரம் போன்ற நிகழ்ச்சிகளினூடாக தீபம் மேற்கொள்கிறதா? யாழ் டில்கா கொடேல் விளம்பரமும் தற்போது போகிறது. விபரம் தெரிந்தால் அறியத் தரவும்.சந்தாவை நிற்பாட்டுவது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

நான் உந்த ராயேஸ்வரி எல்லாம் வந்து தமிழருடைய பிரச்சனையை பற்றி தீபத்தில வந்து விவாதிக்க தொடங்கியவுடன் சந்தா காட்டும் முடிய அப்படியே மூடி விட்டேன்.

தீபம் இப்பதான் கேள்வி நேரம் பகுதியில் பேச்சு சுதந்திரம் காட்டு கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய கருத்தையும் கேட்டு எது சரி,எது பிழை என பகுத்து அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு மக்கள் முட்டாளா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருடைய கருத்தையும் கேட்டு எது சரி,எது பிழை என பகுத்து அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு மக்கள் முட்டாளா என்ன?

அப்படியல்ல.. எமது பணத்தில் எதிரிகள்/துரோகிகள் வயிறுவளர்க்க விடக்கூடாது.. அவ்வளவுதான்..! :unsure:

உண்மைகள் சுடும்.

அப்படியல்ல.. எமது பணத்தில் எதிரிகள்/துரோகிகள் வயிறுவளர்க்க விடக்கூடாது.. அவ்வளவுதான்..! :unsure:

இசை, உங்களுக்கு ஒரு பச்சை.

  • தொடங்கியவர்

எல்லோருடைய கருத்தையும் கேட்டு எது சரி,எது பிழை என பகுத்து அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு மக்கள் முட்டாளா என்ன?

ரதி நீங்கள் போன கிழமை நிகழ்ச்சி பார்த்தீர்களோ தெரியாது,

கொன்ச்டையின் என்பவர் வந்து சொல்கிறார், அங்கு தமிழ் மக்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லையாம், அதற்க்கு மறுப்புத் தெரிவித்து கருத்துச் சொல்லப்போனவரை அனஸ் நிப்பாட்டுகிரார்.இது மாற்றுக் கருத்தா அல்லது பிரச்சாரத் தந்திரமா? டில்கோ கோட்டல் யார் தயவில் நடக்கிறது? அதன் விளம்பரம் ஏன் தீபத்தில் போகிறது?சிறிலங்காவில் இருக்கும் ஊடகங்களுக்குத் தான் ஐ நா அறிக்கையை தருசமான் அறிக்கை என்று சொல்ல நிர்ப்பந்தம் ஆனால் லண்டனில் இருக்கும் தீபத்திற்க்கு என்ன நிர்ப்பந்தம்.சனல் நாலு முதல் பிபிசி வரை அதனை நிபுணர்கள் குழு அறிக்கை என்றே அழைக்கின்றனர். மாற்றுக் கருத்து விவாதாம் நடு நிலையாளர் ஒருவரால் நெறிப்படுத்தப்பட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாரதர் என்னிடம் ஒரு தமிழ் தொலைக்காட்சியும் இல்லை...நான் பார்ப்பதுமில்லை...பொதுவாக என் கருத்தை தான் எழுதினேன்

  • தொடங்கியவர்

ரதி தீபம் பார்க்காமல் பொதுவில் கருத்துக்கூறியதாக உண்மையை எழுதியதற்க்கு நன்றி. நான் தீபத்தின் அண்மைய போக்கைப் பற்றியே இங்கு கேள்வி எழுப்பினேன்.

எனது காசில் சிறிலஙா அரசின் பிரச்சாரம் செய்யப்படுவதை நான் விரும்பவில்லை.சந்தாவை நிறுத்த முன்னர் கேட்டுத் தெரிந்து கொள்ளவே இங்கே எழுதினேன்.தீபம் நிர்வாகத்திடம் இது பற்றிக் கேட்டு மின்னன்ச்சல் அனுப்பியும் பதில் இல்லை.என்னைப் போல் பலரும் நினைப்பதால் சந்தாவை நிறுத்த உள்ளேன். நன்றி.

... இன்று மாலை, போன இடத்தில் தமிழர்களுக்குஓர் தொலைக்காட்சியாம் ... தீபம் ... பார்க்க நேர்ந்தது!!! ... ஆச்சரியம் அதில் தற்போதைய தேசியத்தலைவராம் கேபியின் செயலாளர் நாயகம் யாழ்கள பாண்டரும், தன்னை பத்திரிகையாளன்/பொதுத்தொண்டன்/இன்று அரசியல்வாதியாக்கி/சொல்லப்போனால் பப்ளிசிட்டிக்காக அம்மணமாக உரிந்து விட்டு எவ்வீதியிலும் கொன்ஸன்ரைன் ... என்று இரண்டு மனிதத்தை தொலைத்ததுகள் ... ...

... என்ன ,

* நாம் புலத்தே இருந்து சிங்களவனுக்கு ஆய்க்கினை கொடுக்கிறோமாம்!!!!???????

* அகிம்சை, ஆயுதம் என்று களைத்துப் போய் விட்டோமாம்!!!!??????

* புலத்தில் நாம் என்ன செய்தாலும் அவன் அழிப்பானாம்!!!!????

* மொத்தத்தில் நாம் ஒன்றுமே செய்ய இயலாதாம்!!!!????

* ...

... இவைகளுக்கு மருந்து ... இந்த மனிதத்தை தொலைத்ததுகள் சொல்கிறார்கள் ... அவனது கால்களில் விழட்டுமாம்(இந்த வாய்க்கியம் முள்ளிவாய்க்கால் முடிந்த கையோடு இந்த பாண்டர்களின் வாய்களிலிருந்து தொடர்ர்ச்சியாக இன்று வரை வருகிறது ...)!!! அவனேடு இணைத்து தருவதை வேண்டாட்டாம்!!! .... இப்படிப்பல பல பொன்மொழிகளை அடுக்கிக் கொண்டிருந்தார்கள் ... அந்த தமிழர்களுக்கோர் தொலைக்காட்சியும் சந்தோசமாக விட்டுக் கொண்டிருந்தார்கள் ... என்ன கூட்டிக் கழித்துப் பார்த்தால் ... புலம்பெயர் மக்களே, சிறிலங்காவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள், இனவழிப்புகள், யுத்த நிறுத்த மீறல்களுக்கு எதிரான குரல்களை நிறுத்துங்கள், நிறுத்தாவிடில் அவன் அழிப்பானாம்!!!!!!!! ........ இத்தொலைக்காட்சி பற்றி பிறிதொரு திரியில் பார்ப்பாம்!!

... பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பொறுமையின் உச்சிக்கு போய்விட ... தொலைபேசியை தமிழர்களுக்கோர் தொலைக்காட்சிக்கு எடுத்தால் ... விடுகிறார்கள் தூக்குகிறாங்களில்லை ... என்ன, நான் ஒரு நாலு கேள்விக்கு பதில் முள்ளிவாய்க்காலுடன் தேடிக் கொண்டிருக்கிறேன் ... அதனை பாண்டரிடம் நேரடியாக கேட்டு பதிலைப் பெறத்தான்!!!!!!! ... இன்று சந்தர்ப்பம் கிடைக்கவில்லை, ஆனால் என்றோ ஒரு நாள் ...!!!!!! ....

பணம்!!!!!!! ... எத்தனை எத்தனையோ தொழில்களை செய்வதன் மூலமும் சம்பாதிக்கலாம்!!!!!! விபச்சாரம் மூலமும் சம்பாதிக்கலாம்!!!!!!! ஆனால் விபச்சாரம் ஓர் தொழிலா????????

நாரதர், .... இதனை வேறோர் திரியில் எழுத வேண்டுமென்று ... நல்லது நீங்கள் தொடங்கி விட்டீர்கள்!! ... இன்று எம் புலம்பெயர் தமிழ்த்தேசியவாதிகளுக்கு முடக்குவாதம் வந்து சுருண்டு போய்க்கிடக்க ... இந்தத்தீபம் போன்றவற்றை ... சிறிலங்காவின் புலனாய்வுத்துறையுடன் சேர்ந்தியங்கும் எம் இன கோடரிக்காப்புகளையும், கூலிக்கு அமர்த்தப்பட்டவர்களையும் வைத்து ஆட்டுவிக்கிறது!!!

உண்மை நிலை பற்றி கனக்க அறிய ராக்கட் சயன்ஸ் தேவையில்லை! ... தெரிகிறது பிடிச் சோற்று தடவியுள்ளார்கள் பூசனிக்காயை சுற்றி .... இங்கு யாழிலேயே அர்ச்சனை தொடங்கலாம் ... தொடங்குவதை சரியாக முடிபை நோக்கி கொண்டு செல்லல் வேண்டும்!!!

புலம் பெயர் நாடுகளில் இயங்கும் அத்தனை ஒலி ஒளி ஊடகங்களும் பயங்கர நினைக்க முடியாத

சுய நலத்தில் தான் இயங்குகின்றன!!!! உண்மையில் துன்பப்படும் தமிழ் மக்களிற்காக தான் ஊடகங்கள் என்றால்

எல்லோரும் ஒன்றாக இணைந்து ஒரே தொணியில் ஒரு ஊடகம் தான் இயங்கும்................நிலமை அப்படி இல்லையே

ஆளுக்கு ஒரு ஊடகம் பிரிந்து போகிறவர்கள் எல்லோருமே புதிது புதிதாக ஊடகங்களை திறக்கிறார்கள்

இந்த சுயநல வாதிகளிற்கு பின்னால் புத்தி இல்லா புண்ணாக்கு தமிழர்கள்...............

உண்மையில் ஒவ்வொரு புலத் தமிழனும் ஆழமாக சிந்திக்க வேண்டியது..............

தமிழர்கள் தங்கள் பங்களிப்பை வழங்காது போனால் இவ்வளவு ஊடகங்கள் உருவாகியிருக்காது

ஒவ்வொரு நாடுகளிலும் ஊடகங்களிற்காக அந்தந்த நாடுகளிற்கு கட்டிக் கொண்டிருக்கும் பணத்தை

தாயகத்திற்கு அனுப்பினால் துன்பப்படும் அந்த மக்களின் வாழ்க்கையில் வசந்தம் வீசும்........

புலத்தில் தமிழ் மக்கள் கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் ஊடகங்கள் வயிறு வளர்க்கின்றன

மக்கள் சரியான வழியில் சிந்தித்து சரியான முடிவு எடுக்கும் வரை நிலமை இப்படித் தான்

போக போகிறது............

இடையன் உழைத்து மடையன் கையில் கொடுக்கும் கதைதான் எங்கள் கதை................

நாங்கள் கண் விழிக்கும் வரை எங்கள் பணத்தில் இந்த ஊடகங்கள் சொகுசாக வாழும்.........

நாங்கள் திருந்தி விட்டால் இந்த ஊடகங்கள் மண் கவ்வி விடும் அது உறுதி................

மக்கள் சக்கி தான் மா பெரும் சக்கி அதனால் பிழை மக்களாகிய எங்களில் தான்

எனவே நாங்கள் விழித்திருப்போம் சரியான வழியை தேர்ந்தெடுப்போம்

அது மட்டுமல்லாமல் வெறும் பேச்சில் மட்டும் காலத்தை வீணடிக்காமல் செயலிலும் இறங்க வேண்டும்

உண்மையில் தாயக மக்களுக்கு நாங்கள் தான் விடிவை பெற்றுக் கொடுக்க வேண்டும்!!!!!!

அன்புடன்

தமிழ்மாறன்

  • கருத்துக்கள உறவுகள்

தீபம் தொலைக்காட்சி ?

பார்ப்பது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தத் தொலைக்காட்சியை.. ஓசியில் வரும் போது மட்டும் பார்த்திருக்கிறேன்.

தீபம் மதில் மேல் பூனை..!

இவர்களை மக்கள் நிராகரித்து தண்டனை வழங்குவதன் மூலமே திருத்த முடியா விட்டாலும்.. தவறுகளை உணரச் செய்ய முடியும்..!

தீபத்தின் அண்மைய போக்குக் குறித்த இன்னொரு பதிவு யாழில் இருந்து...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84415

Edited by nedukkalapoovan

இணையத்தில் தமிழ் செய்திகள் பார்பதோடு சரி.

லண்டனில் 2009 ல் நடத்த இளையோர்களால் போராட்டம் முன்னெடுத்த போது 24மணிநேரங்கள் கழித்துதான் அங்கு வந்திருந்தார்கள். அங்க்கிருந்தவர்கள் டென்சன் ஆகி 'தீபம்... நீ தமிழனா???' என்று (இந்த நிகழ்ச்சியை நடத்துபவரிடம்) கோசம் போட்டார்கள். அது வெறும் கோசம் மாதிரித் தெரிய இல்லை, மக்களின் கோபம், தமிழ் தொலைகாட்சி தமிழர் போராட்டத்திற்கு வந்து ஆதரவு தராமல், தமிழ் சினிமா படங்களை அந்த நேரத்தில் போட்டிருந்ததன் வெளிப்பாடாகவே இருந்தது. அதன் பின்பு தான் சில நிகழ்சிகளை ஒளிபரப்பாது போராட்ட நிகழ்வை இலவசமாக ஒளிபரப்பியதாக அறிந்தேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84415

இந்த இணைப்பை நானும் அன்று பார்த்தேன், வலப்பக்கம் இருக்கும் ஒருவர் அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றுவது பற்றி மற்றவர்களுக்கு முன்னறிவித்தல் கொடுக்கப்படலாமல் இரகசியமாக வைத்திருந்ததாக பேசப்பட்டது.

கட்டணம் செலுத்தி இந்தத் தொலைகாட்ச்சியை வைத்திருப்பவர்கள் காரணத்தை சொல்லி தொடர்ப்பை நிறுத்துவது அவர்களுக்கும் ஒரு பாடமாக அமையகூடும்.

குட்டி எங்கட சனத்திற்கு அவ்வளவு அறிவு இருக்குமெண்டால் நாங்கள் இப்படி

பரதேசிகளாய் அலைவோமா!!!!!

முள்ளிவாய்க்கால் கடும் சமர் நடந்து கொண்டிருக்கும் போது.....சிலுக்கின் திரைப்படம்

போட்ட உணர்வுள்ள தமிழரின் ஊடகம் இந்த தீபம் ஊடகம் தான்...............

தமிழ் மக்கள் கண் விழிக்கும் மட்டும் இவர்கள் காட்டில் மழை தான்!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"தீபம்" என்னைப்பொறுத்தவரையில் என்றோ தொலைந்த ஒரு தொலைக்காட்சி......

  • கருத்துக்கள உறவுகள்

நான்ரி ரீரீஎன் நிறுத்தப்படும் வரை அதன் சந்தாதாரராக இருந்தேன்.இப்பொழது எந்தத் தொலைக் காட்சியும் சந்தா கொடுத்துப் பாரப்;பதில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறேன். ஓசியில் போடும் போது தீபம் பார்த்திருக்கிறேன்.தீபத்திற்கும் சண் கலைஞர் தொலைக்காட்சிக்கும் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.தீபம் ஆரம்பத்திலிருந்தே தாயகத்தில் என்ன துக்க நிகழ்ச்சி நடந்தாலும் அதனைப் புறக்கணித்து அந்த நேரங்களில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்சிகளைப் போடுவதும் மாவீரர் நாளிலும் இலவச ஒளிபரப்புச் செய்யாமலும் இருப்பதும் எனக்குப் பிடிக்கவில்லை.மக்களைப் போராட்ட உணர்வுகளிலிருந்து திசை திருப்பி ஒரு போதை நிலையில் வைத்திருப்பதற்கு தீபம் தொலைக்காட்சியும் ஒரு காரணம்.அண்மையில் கே.பியை ச் சந்திக்கச் சென்றவர்களில் தீபம் தொலைக் காட்சியின் படப்பிடிப்பாளரும் ஒருவர் என கேள்விப்பட்டேன்.தீபத்தின் சந்தாராரகள் சிலரிடம் ஏன் தீபம் பார்க்கிறீர்கள் என்று கேட்டதிற்கு மற்றைய தொலைக்காட்சிகளில் (ரீரீஎன் ஜீரிவி )எந்த நேரமும் செத்தவீடுதான் போகும் என்று சொல்கிறார்கள்.ஜீரிவி பரவாயில்லை.ஆனால் எல்லா ஊடகங்களிலும் சந்தேகம் இருப்பதால் இணையத்தளங்களில் செய்திகளைப்பார்ப்பேன்.ஜீரிவியில் இரவு 9 மணிக்குப் போகும் செய்தி வீச்சு பார்க்கலாம்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

நான்ரி ரீரீஎன் நிறுத்தப்படும் வரை அதன் சந்தாதாரராக இருந்தேன்.இப்பொழது எந்தத் தொலைக் காட்சியும் சந்தா கொடுத்துப் பாரப்;பதில்லை என்று முடிவுக்கு வந்திருக்கிறேன். ஓசியில் போடும் போது தீபம் பார்த்திருக்கிறேன்.தீபத்திற்கும் சண் கலைஞர் தொலைக்காட்சிக்கும் வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை.தீபம் ஆரம்பத்திலிருந்தே தாயகத்தில் என்ன துக்க நிகழ்ச்சி நடந்தாலும் அதனைப் புறக்கணித்து அந்த நேரங்களில் சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்சிகளைப் போடுவதும் மாவீரர் நாளிலும் இலவச ஒளிபரப்புச் செய்யாமலும் இருப்பதும் எனக்குப் பிடிக்கவில்லை.மக்களைப் போராட்ட உணர்வுகளிலிருந்து திசை திருப்பி ஒரு போதை நிலையில் வைத்திருப்பதற்கு தீபம் தொலைக்காட்சியும் ஒரு காரணம்.அண்மையில் கே.பியை ச் சந்திக்கச் சென்றவர்களில் தீபம் தொலைக் காட்சியின் படப்பிடிப்பாளரும் ஒருவர் என கேள்விப்பட்டேன்.தீபத்தின் சந்தாராரகள் சிலரிடம் ஏன் தீபம் பார்க்கிறீர்கள் என்று கேட்டதிற்கு மற்றைய தொலைக்காட்சிகளில் (ரீரீஎன் ஜீரிவி )எந்த நேரமும் செத்தவீடுதான் போகும் என்று சொல்கிறார்கள்.ஜீரிவி பரவாயில்லை.ஆனால் எல்லா ஊடகங்களிலும் சந்தேகம் இருப்பதால் இணையத்தளங்களில் செய்திகளைப்பார்ப்பேன்.ஜீரிவியில் இரவு 9 மணிக்குப் போகும் செய்தி வீச்சு பார்க்கலாம்.

புலவரவர்களது அனுபவம் எனக்கும் ஏற்பட்டது. அதிலும் தேசியம் பேசும் சிலரே "எந்த நேரமும் செத்தவீடுதான் போகும் என்று சொல்லியிருக்கிறார்கள்" ரீரீஎன் இருக்கும்வரை நானும் ஒரு சந்தாதாரராக இருந்தேன். தற்போது எந்த ஒரு காணொளிக்கும் பங்களிப்பதில்லை. ஊடகங்கள் தான்சார்ந்த இனத்தினது துயரங்களைப் பேச வேண்டும். இல்லையேல் அவற்றை தமிழர்கள் நிராகரிக்க வேண்டும்.அப்போதுதான் அவர்கள் உணரும் நிலைவரும். இல்லையேல் இவர்கள் விலாங்குமீனைப் போல் தங்களை வளரத்துக் கொள்வார்கள். தமிழினத்தை விற்றுவிடுவார்கள். மானமுள்ள தமிழர்கள் தமிழினத்திற்குத் துரோகமிழைப்போருக்குக் களமமைத்துக் கொடுக்கும் ஊடகங்களைப் புறக்கணிக்க வேண்டும்.

இந்த அரசியலாளர்களைத் தெரியுமா? இவர்களது சேவை என்ன?

dsc00923k.jpgdsc00920o.jpg

dsc00930p.jpg

Edited by nochchi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.