Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

e973cb2ab862ea9c943ad74fe7f858b7.jpg

மே13' நிகழ இருப்பது

ஆண்டவன் கட்டளை..

ஈழத்து வேதனையின்

ஏக்க விளைச்சல்.

கோபப்படாமல் ஐயா

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

வெளியில் நீங்கள் வேசமிட்டு

நாடகம் ஆடினாலும்

உங்கள் கள்ளமான

உள்ளுணர்வில்

இப்படித்தான் நடக்கும் என்று

கருக்கட்டி

ஊற்றெடுத்த உண்மை

உத்தியோக பூர்வமாக

பிரசவமாகப்போகும் பொழுது.

காலதேவன் உங்களுக்கு

கட்டை இறுக்கப்போகும்

கனிவான கடைசி நாள்.

சங்கடங்கள் நிறைந்த சகதிக்குள்

இப்போதே நீங்கள் தத்தளிப்பது

தெரிகிறது

இருந்தும்

இது சிறிய ஆரம்பம் மட்டுமே.

தொடர இருப்பது பெருங்கதை

.

நவீன நரசிம்மர் உங்களுக்கு

இனி நிரந்தர ஆட்சி விடுமுறை

ஆனாலும் நீங்கள்

தொடர்ந்து அரச விருந்தினர்

அதற்கான மூலங்கள்

உங்களை சுற்றி படர்ந்து விட்டன.

இதன் பின்னும்

நச்சு பாஷாணமான

உங்கள் நாக்கு

நிச்சியம் உறங்க மறுக்கலாம்

என்ன செய்ய

உங்கள் குடும்பத்தலைவிகள்

குஞ்சம்மா பொன்னம்மா தவிர

கேட்பதற்கு இனி எவரும் வரப்போவதில்லை.

எச்சில் சிதற நீங்கள் எடுத்துவிட்ட

பத்தடுக்கு பொய் எல்லாம்

திரும்பி நின்று கும்மியடிக்கப்போகும்

கோரப் பொழுது.

இப்பொழுதே பத்திரிகைகள்மேல்

நீங்கள் எரிந்து விழுவது

சிரிப்பூட்டுகிறது.

அரை நாள் உண்ணாவிரதம்

அபத்தம் என்று

நீங்களே உணர்ந்துகொண்டதால்

இனி காற்றாடக்கூட

கடற்கரைக்கு போகமுடியாது.

சில நேரம்

கம்பி எண்ணவேண்டிய காலம்.

வெட்கமாக இருக்கிறதா

உதவிக்கு ஒத்தூதிய குஞ்சாமணியும்

குதிப்பேன் நிமிர்வேன் என்று

கோசமிட்ட தருமர்களும்

செத்த மாட்டின் உண்ணிபோல

மெல்ல விட்டகலப்போகும்

விகாரப்பொழுது.

இதே மே மாதம்

இரண்டாயிரத்து ஒன்பது

பதின் மூன்றளவில்.

ஒரு அதிகாலைப் பொழுது

ஆறு நாட்கள் அன்ன ஆகாரம்

இல்லாமல் கிடந்த

என் அன்னையையும்

இரண்டு தங்கைகளையும்

உன் அன்னை சூனியாவின்

எரி குண்டுக்கு இரையாக்கிய தினம்.

திகதி என்னவென்று தெரியாத

திகிலடைந்த பொழுதுகள்.

குடிநீர் இல்லாத கோடை வெய்யில்.

நடுநிசியிலும் குண்டுமழை.

உப்புக்கடற்கரையில்

பதுங்கு குழிக்குள் பனித்த

உவர்ப்பு நீர்கூட

இரத்தமும் மலமும் கலந்த கலவையாக.

ஆறு பொழுதுகள்

அந்த உப்பு நீரே உணவாகி

கோரக்குண்டில் சிதறி

என் தாயும் சகோதரிகளும்

செத்து மடிந்ததை அறிவீரோ?

காலை ஒரு கண்மணியிடம்

கோப்பியும் இட்லியும்

மாலை ஒரு மங்கையிடம்

மணக்கும் புறியாணி

செமியாக்குணம் போக்க

சுற்றி கதை அளந்து சிரிப்பூட்டும்

ஒரு செலுக் கூட்டம்.

நல்லெண்ணெய் தோசை

நாட்டுக்கோழி சூப்பு

பல்லிடுக்கில் தங்கிவிடா

மெல்லிய மீன் பொரியல்

சில்லென்று பருகிவிட

சிறப்பான மினரல் நீர்

பாலும் பழமும்

படுத்தவுடன் பெருத்த குசு.

இப்படியா ஐயா எங்கள் வாழ்வு

எரிகுண்டை எதிர்கொண்டு

இழவுகளை மடிதாங்கி

பட்டினியில் பாய்விரித்து

செத்து மடிந்த கதை

சத்தியமாய் அறியீரோ

நல்லதோர் வீணை செய்து-அதன்

நலன் கெடுத்து புழுதியில்

எறிந்தீர் கண்டோம்-நிச்சியம்

பதில் சொல்லுவாள் சிவசக்தி

சூத்திரம் என்னென்று

காண்பீர் என்பேன்,

பொல்லா எம் வாழ்வு-ஒரு

பொறியளவு புரிந்தீரோ-அதன்

வல்லமை காண்பீர் காண்

வரும் பொழுதுகளில்.

நல்லவை எல்லாம் போக

நடைப்பிணமாக நீர்-வண்டியில்

தள்ளிட ஆளில்லாமல்

தவித்திட நேரும் சொல்வேன்

சத்தியம் இதுவே யென்பேன்

சாவிலும் சபித்தே நிற்போம்.

உன் வாழ்வினில் குறுக்கே நாங்கள்

வந் திடர் செய்ததுண்டோ

ஏனென்று கேட்டு யாரும்

இன்னலை தந்ததுண்டோ

மூவிரு மணம் புரிந்தீர்

முலைப்பாலை மருந்தாய் கொண்டீர்

கோடியில் ஊழல் கண்டீர்

குடும்பமே கழகம் என்றீர்

மானுடம் காணா பொய்யும்

மலைபோல நஞ்சும் தாங்கி

போராடி களத்தில் நின்ற-என்

பிறப்பையே அழித்தாய் நேற்று.

எங்களை கொன்றொழித்தீர்

இனமானம் காக்க வெந்த-முத்து

குமரனையும் லூசன் என்றீர்

தீ சுட்ட வேதனையால்

சினங்கொண்ட சீமான் தன்னை

வல் வினை சாட்டி பொல்லா

செல்லினில் அடைத்தீர் கண்டோம்.

பதவியை விட்டுச்சென்று-நீ

பாடையில் போனாலும் காண்-என்

தாயவள் வயிற்றெரிவும்

தங்கையர் ஏம்பலிப்பும்

கூடவே எரிந்து மாண்ட

குழந்தைகள் விடலை பெண்கள்

காவலாய் நின்று காத்து

காவியமாகிப்போன

வீரரின் அழிவில் எல்லாம்

வினையாகிப் போனீர் ஐயா.

நாசமாய் போவீர் என்று

நான் மட்டும் சொல்லவில்லை.

ஊரெல்லாம் சொல்லக்கண்டேன்

உலகமே திட்ட கண்டேன்.

இனி எம்மிலும் கீழாய் உம்மை-நீர்

உணர்ந்திடும் நாளை காண்பீர்.

நல்லவை எல்லாம் உன்னை

நாடிடா தென்பேன் கொள்வீர்.

புத்திர சோகம் கொண்டு

புண்பட்ட எம்மைப் போலே

சத்தியமாக நீரும்

தண்டனை கொள்ள வேண்டும்

நிச்சியம் நடக்கும் நாளை

நிமிர்ந்து நாம் ஈழம் காண்போம்

eelam.gif

http://www.savukku.net/home/791-2011-05-10-00-55-25.html

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் இந்தாள் ரெம்பவே கெட்டிக்காரன் ஈழத்தமிழர்களது வாழ்கையுடன் விளையாடும்போதே இந்தாளுக்குத் தெரிஞசுபோட்டுது எனக்கு மரீனா கடற்கரையில் இடமில்லை என அதனால் முன்கூட்டி உயிரோட(?) இருக்கும்போதே அங்கபோய் கட்டிலப்போட்டுப் படுத்து அந்த பீலிங்க அனுபவிச்சுட்டுது. எண்டாலும் இப்போ இந்தாளக்கு கண்ணம்மாபேட்டை கனிமொழிக்கு தீகார்பேட்டை என்னும்போது எனக்கு ரெம்ப பீலிங்கா இருக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

எங்களது வலியை வெளிப்படுத்தும் அருமையான கவிதை.

  • கருத்துக்கள உறவுகள்

மணக்கோலம் பூண்டாலும்

மறக்கவில்லை எம்மை

மணவீட்டிலிருந்தும்

மரணவீட்டுக்கு அஞ்சலி செய்தீர்

நன்றி ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சியின் கவிதைக்கு நன்றி.

என்னதான் இருந்தாலும் இந்தாள் ரெம்பவே கெட்டிக்காரன் ஈழத்தமிழர்களது வாழ்கையுடன் விளையாடும்போதே இந்தாளுக்குத் தெரிஞசுபோட்டுது எனக்கு மரீனா கடற்கரையில் இடமில்லை என அதனால் முன்கூட்டி உயிரோட(?) இருக்கும்போதே அங்கபோய் கட்டிலப்போட்டுப் படுத்து அந்த பீலிங்க அனுபவிச்சுட்டுது. எண்டாலும் இப்போ இந்தாளக்கு கண்ணம்மாபேட்டை கனிமொழிக்கு தீகார்பேட்டை என்னும்போது எனக்கு ரெம்ப பீலிங்கா இருக்குது.

எழுஞாயிறின் கருத்தில் ஆயிரம் அர்த்தம் பொதிந்துள்ளது.

ஜெயலலிதா அடுத்த ஐந்து வருடம் முதல்வராக இருக்கும் போது.... கருணாநிதி இறக்கநேரிட்டால்...

மரினாவில் புதைக்க இடம் கொடுக்க மாட்டவே.... மாட்டார். கருணாநிதியின் ஆசையான... மெரீனாவில் அறிஞர் அண்ணாவுக்கு பக்கத்தில ஒரு இடம் கிடைக்க வேணும் என்ற கனவிலும் மண் விழுந்து போச்சுது.

  • கருத்துக்கள உறவுகள்

பதவியை விட்டுச்சென்று-நீ

பாடையில் போனாலும் காண்-என்

தாயவள் வயிற்றெரிவும்

தங்கையர் ஏம்பலிப்பும்

கூடவே எரிந்து மாண்ட

குழந்தைகள் விடலை பெண்கள்

காவலாய் நின்று காத்து

காவியமாகிப்போன

வீரரின் அழிவில் எல்லாம்

வினையாகிப் போனீர் ஐயா.

எதிருக்குக் கூட இரக்கப் படலாம்! ஏனெனில் அவன் எதிரியென்று எங்களுக்குத் தெரியும்!

இந்த மனிதன் எதிரிக்கும் கீழானவன்!

கவிதையின் தலைப்பே அருமை!

இணைப்புக்கு நன்றிகள் புரட்சி!!!

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை. எம் மனதில் உள்ளதெல்லாம் உம் கவிதையில் சொல்லி விட்டீர். புரட்சியின் கவிதைக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அருமை!

  • கருத்துக்கள உறவுகள்

அருமை!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

-------------------------------------------------------------------------------

இதே மே மாதம்

இரண்டாயிரத்து ஒன்பது

பதின் மூன்றளவில்.

ஒரு அதிகாலைப் பொழுது

ஆறு நாட்கள் அன்ன ஆகாரம்

இல்லாமல் கிடந்த

என் அன்னையையும்

இரண்டு தங்கைகளையும்

உன் அன்னை சூனியாவின்

எரி குண்டுக்கு இரையாக்கிய தினம்.

திகதி என்னவென்று தெரியாத

திகிலடைந்த பொழுதுகள்.

குடிநீர் இல்லாத கோடை வெய்யில்.

நடுநிசியிலும் குண்டுமழை.

உப்புக்கடற்கரையில்

பதுங்கு குழிக்குள் பனித்த

உவர்ப்பு நீர்கூட

இரத்தமும் மலமும் கலந்த கலவையாக.

ஆறு பொழுதுகள்

அந்த உப்பு நீரே உணவாகி

கோரக்குண்டில் சிதறி

என் தாயும் சகோதரிகளும்

செத்து மடிந்ததை அறிவீரோ?

---------------------------------------------------------------------------

நெஞ்சை தொடும் வரிகள்...

கொலைஞர்களின் நெஞ்சை சுடும் வரிகள்....

கவிதை பிரமாதம்...

வாழ்த்துக்கள் நண்பரே......

  • கருத்துக்கள உறவுகள்

இனி எம்மிலும் கீழாய் உம்மை-நீர்

உணர்ந்திடும் நாளை காண்பீர்.

நல்லவை எல்லாம் உன்னை

நாடிடா தென்பேன் கொள்வீர்.

புத்திர சோகம் கொண்டு

புண்பட்ட எம்மைப் போலே

சத்தியமாக நீரும்

தண்டனை கொள்ள வேண்டும்

நிச்சியம் நடக்கும் நாளை

நிமிர்ந்து நாம் ஈழம் காண்போம்

நல்லதொரு கவிதை.இணைப்புக்கு நன்றி, புரட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழம் கொன்றானுக்கு இறுதி அஞ்சலி

e973cb2ab862ea9c943ad74fe7f858b7.jpg

மே13' நிகழ இருப்பது

ஆண்டவன் கட்டளை..

ஈழத்து வேதனையின்

ஏக்க விளைச்சல்.

கோபப்படாமல் ஐயா

குறித்து வைத்துக்கொள்ளுங்கள்

வெளியில் நீங்கள் வேசமிட்டு

நாடகம் ஆடினாலும்

உங்கள் கள்ளமான

உள்ளுணர்வில்

இப்படித்தான் நடக்கும் என்று

கருக்கட்டி

ஊற்றெடுத்த உண்மை

உத்தியோக பூர்வமாக

பிரசவமாகப்போகும் பொழுது.

காலதேவன் உங்களுக்கு

கட்டை இறுக்கப்போகும்

கனிவான கடைசி நாள்.

-------

------

http://www.savukku.net/home/791-2011-05-10-00-55-25.html

கருணாநிதிக்கு, 13ம் திகதி நடக்கப் போவதை, பன்னிரண்டாம் திகதியே சாத்திரம் பாத்துச் சொன்ன புரட்சிகர கிளி யோசியருக்கு பாராட்டுக்கள். :)

டிஸ்கி: கிளி யோசியரை பார்க்கும் போதெல்லாம்... இசைக்கலைஞனின் ஞாபகம் வந்து.....தொலைக்குது. :D

அருமையிலும் அருமை.

எனக்கு கருணாநிதியை விட கோவம்.வைரமுத்து,வாலி,பா.விஜேஜ்,கனிமொழி,கமல் போன்ற கவிதை எழுதுபவர்கள் மேல்.

ஈனப்பிறப்புக்கள். கடைசிவரை அய்யா நீர் செய்வது அறத்துக்கே துரோகம் என ஒரு சொல் சொல்ல அவர்களால் முடியாவிட்டாலும் கடைசிவரை போற்றிப்பாடியது கொடுமையிலும் கொடுமை.

கவிதை எழுதியது புரட்சியா அல்லது இணைத்தது புரட்சியா.

எதுவாயினும் நன்றி.

சென்று வா தலைவா நீயும்

முடியதும் உதிர்ந்து போக

மூப்பினுக்கு அடிமை யாகி

நடையதும் இழந்து நொந்து

நாற்காலியே தஞ்ச மென்று

ஆயிரம் பிறையைக் கண்ட

அண்ணலே கலைஞர் ஏறே!

கடிகமழ் தமிழ் அன்னை தன்னை

கட்டியே அணைத்து நீயும்

முடிவினில் மூச்சடங்கு மட்டும்

முத்தமிழினைக் காப்பேன் என்று

துறவிகள் அணியும் தூய

மஞ்சள் துண்டினை சால்வையாக்கி

செஞ் சொல்லால் மாலை கட்டி

சிறப்புறு மகுடம் சூட்டி

செய்தனை சிறந்த தொண்டு

பாலற்கு முட்டை தந்து

பள்ளியில் படிக்க வைத்தாய்

ஒரு கொத்து அரிசி தன்னை

ஒரு ரூபாய்க்கு உண்ணத் தந்து

செம்மொழி தமிழே என்று

செகத்தினிற்கு எடுத்து ரைத்து

அலைகடல் ஆற்பரித்த தென்ன

ஆர்ப்பரித்து முழக்க மிட்டு

ஒரு கோடி மக்கள் தங்கள்

உள்ளத்தினில் கோயில் கொண்டாய்

அன்பினில் அடக்கம் தன்னில்

அறிவினில் மேதையான

அறிஞராம் அண்ணா கண்ட

அற்புதத் தொண்டனே கேள்!

முடிதனை இழந்தாய் இன்று

முத்தமிழ் இரங்கி நோக்க

அலைகடற் கப்பால் உள்ளோர்

அதிர்ந்தனர் உன் தோல்வி கேட்டு

ஐயனே மக்கள் உன்னை

அதிரடியாய் அகற்றி விட்டு

அம்மைக்கு அரசு ஓச்ச

அளித்தனர் வாக்கை என்றால்

உண்மையில் உனது வீழ்ச்சி

உணர்த்திடும் உண்மை கேளாய்

குடை நிழல் இருந்து நீயும்

குஞ்சரம் ஊர்ந்த வேளை

நீதியை தூக்கி லிட்டு

நிம்மதி கண்டாய் என்றும்

இலஞ்சமும் ஊழல் தொட்டு

நிகரிலா கோடி செல்வம்

பெற்றதைக் குடும்பத்தார்க்கு

பிரித்து நீ தந்தா யென்றும்

செல்வத்தில் நின் குடும்பம்

சீரொடு திகழ வைத்தாயென்றும்

அண்டையில் ஈழம் தன்னில் மக்கள்

அழுதிடும் தமிழ்க் குரலைக் கூட

மெள்ள நீ கேட்டிடாது

மெதுவாகப் பேசினாய் என்று

மேடையில் முழக்க மிட்டார்

மெல்லவே மக்கள் கேட்டார்

போய்வா! தலைவா! என்று

பொன் முடி அகற்றி விட்டார்

சால்வையை மட்டுமல்ல

சரிவர மஞ்சள் கட்டி

போதுமினி அரசியல் என்று

புகன்றொரு பாட்டெழுதி விட்டு

கானகம் தன்னை நோக்கி

கையிலோர் பொல்லு மேந்தி

பொல்லூண்டி மண்மேல்

பல்லாண்டு நீடுழி வாழி!

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=5464215415656743

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.