Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு இப்படித்தான் பதியப்பட்டது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அதனால்தான் சில நிமிட அஞ்சலிக்குப்பின் நாங்கள் தொடர்ந்து உதவி செய்தோம். உதவுகின்றோம். உதவுவோம்.

இதுதான் பிரச்சினை.. ஏதாவது ஒரு கொலை நடந்த் உடனேயே ஒட்டுக்குழுவாக மாறி சிங்களவனுடன் சேர்ந்து வேலை செஞ்சிருந்தீங்கள் எண்டால் இப்ப தமிழீழத்தில் வீற்றிருக்கலாம்..! :(

  • Replies 210
  • Views 24.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுதான் முழுமையாக வாசித்தேன் . நன்றி . தொடருங்கள் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதாவது, ஏகப்பட்ட நம்பிக்கையீனங்கள், சிறுபிள்ளை வேளாண்மைச் சிறுகதைகள் முதலியவற்றின் மத்தியில் முதலில் பொதுமையின் குறைந்தபட்ச அபிலாசைகள் என்றேனும் எதையேனும் வரையறுப்பது அவசியம். அதன்பின்னர் வரையறுத்த அபிலாசைகள் அடையப்படக்கூடியன என்ற நம்பிக்கை நம்பிக்கையீனங்களையும் பரிகாசங்களையும் தாண்டி நடைமுறை ரீதியாக ஏற்படுத்தப்படவேண்டும். அதுவும் எமது வளங்களை வைத்து அவ்விலக்குகள் எட்டப்படலாம் என்ற நம்பிக்கை பிறக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை புலிகளால் மட்டுமே இது சாத்தியமானது. நடைமுறையில் உணரக் கூடிய “தேசியம்” என்ற ஒன்றையும் அத்தேசியதத்திற்கான பொதுவான அபிலாசையினை வரையறுத்துக் கொள்வதிலும் எமது வளங்களை வைத்து நாம் வரையறுத்த அபிலாசைகளை அடையலாம் என்பதை மக்கள் நம்புவதற்கும் பகீரதப் பிரயத்தனம் தேவைப்படடது. இந்த முயற்சிகளின் முன் தான் இதர இயக்கங்களைத் தடைசெய்ய வேண்டிய அவசியம் புலிகளிற்கு ஏற்பட்டது என்பது எனது அபிப்பிராயம்.

மேற்படி துன்பியல்கள் தொடர்பில், புலிகள் அழித்தார்கள் என்று மட்டும் சொல்லுவது போதாதது. அழிக்க வந்த புலிகளை எதிர்க்கும் பலமின்றி அழிந்தவர்கள் இருந்தார்;கள் என்பதும் கவனிக்கப்படவேண்டியது.

பலமானவை தெரிவு செய்யப்படுவது உலக இயல்பு. (ஒருவேளை முள்ளிவாய்க்கால் முடிவில் தமது பலத்தைக் காட்டியதாய் முன்னர் தடைசெய்யப்பட்டவர்கள் கூறமுடியும். அது புலிகள் சார்ந்து ஒருவேளை அவர்களிற்குச் சரியாய் படலாம். ஆனால் பொதுமை தேசியம் என்ற விடயங்களில் தடைசெய்யப்பட்டோர் எப்போதும் தோற்றவர்களே).

இந்தவகையில் துன்பியல்கள் கோரங்கள் இன்னல்கள் தாண்டி தமிழ்த்தேசிய முளை ஒருவாறு மரமாகி மில்லர் என்ற பூ பூத்து பின் இந்திய இராணுவம் வந்து போய் அனுராதபுர வான்படை முகாம் வரை தேசியம் கிளை பரப்பியது. இந்தப் பாதையில் எமது வராலாறு இவ்வாறு தான் எழுதப்பட வேண்டும் என்று யாரும் சொல்லாமல் மக்கள் தாங்களாகவே உணர்ந்து கொண்ட நிலை பரிணமித்தது. வரலாற்றின் முக்கியத்துவமும் எங்களிற்குள் நாங்கள் அடிக்கடி கதைக்கும் விடயமாக ஆகியது. ஈழத்தின் உயர்வு எங்களின் உயர்வாக எங்களிற்குத் தானாகப் பட்டது. சமாதான காலத்தில் வன்னியில் நடந்த நேரங்களில் எங்களை அறியாது எங்கள் நெஞ்சுகள் நிமிர்ந்து நின்றன. நாங்களும் அமெரிக்கர்கள் போல் தான் எங்கள் நாயகர்களைப் போற்றியபடி எங்கள் உயர்வுகளை வரவேற்றுக் கொண்டிருந்தோம். இதற்கான அடிப்படை, எங்களை நாங்கள் நாங்காளாகவே பொதுமையாக நோக்கிக் கொண்டோம்-. எங்கள் பொதுமையின் உயர்வு எங்கள் உயர்வு என்று எங்களிற்கு எவரும் வகுப்பெடுக்கத் தேவையின்றி நாங்களாக உள்ளுர உண்மையாக உணர்ந்தோம். நாங்கள் பார்த்தது எங்களிற்குப் பிடித்தது அதைத் தக்கவைக்க எங்களிற்கு வரலாறு தேவைப்பட்டது-- எனது பார்வையில் இந்தப் பொதுமையினை உருவாக்கியமை புலிகளின் அதி உச்ச சாதனை

தமிழீழம் வேணும் என்று வாயால் சொல்லிக் கொண்டு ஆனால் அதற்காகத் தம்மை ஒறுக்கவோ எந்தப் பங்களிப்பை நல்கவோ மறுத்தவர்களிற்கும் புலிகளிற்கும் அல்லது இதர தமிழீழ ஆதரவாளர்களிற்கும் இடையே அவ்வப்போ முறுகல்கள் நடந்தன தான் என்ற போதும் ஒரு பொதுமை எங்களிற்கு இருந்தது. நாங்கள் தமிழீழம் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவரை அதற்காக உழைக்கப் புலிகள் இருந்தார்கள். அது மட்டுமன்றி நாங்கள் வேணும் என்று சொல்லும் விடயத்திற்காக எங்களையும் உழைக்கவைக்கவும் ஒறுப்புக்களை மேற்கொள்ளவும் புலிகள் எங்களை நிர்பந்திந்துக் கொண்டிருந்தார்கள் என்று கூடச் சொல்லலாம். வெறுமனே கோசம் போட்டுவிட்டு சும்மா இருக்க புலிகள் எங்களை விடவில்லை. ஆனால் எங்களிற்கென்றொரு பொதுமை இருந்தது. எங்களின் பொதுமைக்கு ஒரு நடைமுறை இருந்தது

.

பின் முள்ளிவாய்கால் நடந்து முடிந்தது. எங்கள் தேசிய மரம் மீண்டும் முறிந்து போனது. இந்த முறிவிற்கான பொறுப்பைப் புலிகளில் மட்டும் போட்டுவிட்டு நாங்கள் இருந்து விடமுடியாது.

வரலாற்றை எழுதி வைத்து அதைப் படித்துத் தான் பொதுமை வளரவேண்டும் என்பது அவசியமல்ல. பொதுமை உணரப்படுகையில் பொது வரலாறு தானாக எழுதப் படும்.

நன்றி இன்னுமொருவன்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=88488

Edited by விசுகு

இல்லை அப்பு ஒரு கொலை நடந்தவுடன் அது பிழை என்று நின்றிருந்தால் கொலைகள் சிலவேளை தொடர்ந்திராது.ஒரு அஞ்சலியோடு கொலையை தொடர்ந்தது உங்கள் ஆசீர்வதித்ததால் தான்,

உலகம் பயங்கரவாதி பட்டம் சூட்டி இலங்கயரசுடன் சேர்ந்து நின்று இன்று முள்ளிவாய்க்கால் 40 ஆயிரம் பொது மக்கள் அழிவும் இன்று நீங்கள் முதலைகண்ணீர் வடிக்கும் எமது தங்கைகள் விபச்சாரத்திற்கு கொண்டுசெல்வது என்பதும் நடைபெறுகின்றது.இன்று நீங்கள் போய் போர்குற்றத்தை விசாரியுங்கள் என்று கேட்டும் அவ்வளவு நாடுகளும் உந்த கொலைகளை நிப்பாட்டச்சொல்லி கேட்டவை.நீங்கள் கொடியுடன் நின்று இவ்வளவு கத்தியும் உலகம் கேட்கவில்லை ஏனேனில் அவர்கள் சொல்லும் போது நீங்கள் கேட்கவில்லை. கெடு குடி சொற்கேளாது

நேசக்கரம் என்றும்,உதவும்கரமென்றும் அடிபடவும் தேவையில்லை.நீங்கள் குளிருக்க கொடியுடன் நின்றிருக்க வேண்டிய கஸ்டமும் வந்திராது.போத்திக்கொண்டு படுத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பலதரப்பட்ட தகவல்களையும், தரவுகளையும் அறிந்துகொள்ள முடிகிறது. தொடருங்கள், நன்றி விசுகு மற்றும் அனைவருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

சோல்ற்றுக்கு பொறுப்பானவர் என்று நான் முதல் இந்தியாவில் சந்தித்தவர் நிரஞ்சன்.இப்போ அமெரிக்கா என நினைக்கின்றேன்.

இவர் ஒ/எல் குதிரை ஓட எனது நண்பரிடம் அடென்டி காட் கொண்டுவந்த ஞாபகம்.மாணவர் அமைப்பு பொறுப்பாளரே குதிரையா புலியில்?

சோல்ற்றிக்கு பொறுப்பானவர் முரளி ..நிரஞ்சன் மாணவர்களிற்கு கூட்டங்கள் வைத்தார். இதே முரளியைத்தான் ரெலோ காக்காவுடன் சேர்த்து கடத்தி வைத்திருந்தனர். முரளி இந்திய இராணுவத்துடனான மோதலில் இறந்தார்.

சோல்ற்றிக்கு பொறுப்பானவர் முரளி ..நிரஞ்சன் மாணவர்களிற்கு கூட்டங்கள் வைத்தார். இதே முரளியைத்தான் ரெலோ காக்காவுடன் சேர்த்து கடத்தி வைத்திருந்தனர். முரளி இந்திய இராணுவத்துடனான மோதலில் இறந்தார்.

முரளியின் ஒரு சகோதரர் கெமிஸ்ற் ஆக இருந்தார்.எனது மூத்த அண்ணையன் நண்பர். முரளி கோப்பாயில் நடைபெற்ற மோதலில் மாவீரரானார் என்று நினைக்கின்றேன்.தகவல் சரியா சாத்திரி?தெளிவுபடுத்தவும்.

  • கருத்துக்கள உறவுகள்

முரளியின் ஒரு சகோதரர் கெமிஸ்ற் ஆக இருந்தார்.எனது மூத்த அண்ணையன் நண்பர். முரளி கோப்பாயில் நடைபெற்ற மோதலில் மாவீரரானார் என்று நினைக்கின்றேன்.தகவல் சரியா சாத்திரி?தெளிவுபடுத்தவும்.

முரளி கோப்பாய் பகுதியில்தான் இறந்தார் அதே நேரம் இங்கு சிலர் நடந்த சம்பவங்களை எழுதும்படி கேட்டதால் சிலவற்றை எழுத யோசித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே மாற்று இயக்க தலைவர்களோ அல்லது உறுப்பினர்களோ கொலை செய்யப்பட்டது என்பது சரியாகவே நான் கருதுகின்றேன் அவர்களின் திறமைகள் இழப்புகள் ஈடு செய்ய முடியாதவைதான் ஆனால்...........எமது விடுதலைக்கு இடையூறான தடைகள் அகற்ற பட்டே தீரவேண்டும் இல்லையேல் எமது விடுதலைக்கான போராட்டம் குறுகியதாகவே இருந்திருக்கும் பாதைதவறி எதிரியின் எலும்பு துண்டுக்கு இரையாகியவர்களின் கதி ஒரு படிப்பினையாகவே மற்றவர்களுக்கும் இருக்கவேண்டும்! இது என் ஆழமான கருத்து நான் மற்றவர்களுக்கு இதை திணிக்க முற்படவில்லை. அந்த கால கட்டத்தில் எச்சரிக்கை விடப்பட்டே இது நடந்ததாகவும் பின்னாளில் குறைக்கப்பட்டதாகவும் நான் அறிந்தேன் மாற்றங்களை கண்டே எமது போராட்டம் இவ்வளவு துாரம் வளர்ச்சியடைந்நது இல்லையேல் எப்போதோ அழிந்திருப்போம் அல்லது அழிக்கப்பட்டிருப்போம் இந்த மாற்றம் பற்றி சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் ஏற்பட்ட சமாதான காலத்தில் ஏற்பட்ட மாற்றத்தினை ஒரு சிறியதாக்கம் என் மனதில் பதிந்ததை அடுத்த கருத்து பதிவில் பதிகிறேன்................. எது எப்படியோ காலமாற்றங்களுக்கு ஏற்ப எமது விடுதலை பலவந்தமாக பலியிடப்பட்டது என்பது மறுக்க முடியாத உண்மை! தலைவரின் தீர்கதரிசன கூற்றுக்கு ஏற்ப “வரலாறு - வழிகாட்டி“ என நான்(ம்) ஒன்றினைந்து விடுதலையை நோக்கி வேகமாக நகர்வோம்----------------------------

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் கோவிக்கவும் மன்னிக்கவும் எதுவுமில்லை.

கருத்துக்களுக்கும் தரவுகளுக்கும்(fஅட்க்ஸ்) வித்தியாசம் உண்டு.

பெக்கம் தான் உலகில் சிறந்த உதைப்பந்தாட்டவீரர் என்பது ஒருவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்கலாம்,

அதற்காக அவர் ஒரு மட்சில் 10 கோல்கள் அடித்தாரென்று எழுதினால் ஏற்கமுடியாது.

[color="#008000"]

பெக்கம் பகிரங்கமாக விளையாடியவை எல்லோரும் அறிந்ததுதான். சிலவேளை நான் மறதியில் 9 கோல்கள் பெக்கம் போட்டார் என்று சொன்னால் இல்லை 10 என்று நீங்கள் திருத்தலாம்.

ஆனால் பெக்கம் அவரது முதலாவது மனைவியுடன் இரண்டாவது இரவில் தனிமையில் கட்டிலில் பேசியது எனக்கு தெரியும் என்று நீங்கள் சொன்னால்...........???

எனக்கு தெரிந்தாலும் நான் எழுதமாட்டேன்.

ஏனெனில் பெக்கம் ஒரு விளையாட்டுவீரர் மட்டுமே எனக்கு.

நிழலி கேட்டார் சில கேள்விகள், இந்தியன் ஆமியோடு வந்த பரதேசிகள் ஆள்பிடித்தது பற்றி. அது பரதேசிகளின் தலைவருக்குத் தெரியாமலே நடந்திருக்கலாம் என்றீர்கள். இது பொய்யில்லை-ஒரு மனத்தோற்றத்தை நீங்களே ஏற்படுத்திக் கொண்டு நடக்கிற எல்லாத்தயும் உங்கள் பக்க வாதத்திற்கு வலுச் சேர்க்கச் சொல்லும் மழுப்பல்கள்-இவை தான் உங்கள் பதிவுகளில் பெரும்பாலும் வருகின்றன. இதிலிருந்து "குணம்" பெற்று வர வேண்டியது நீங்கள் மட்டும் தான் இங்கே! இயக்கத்தில் இருந்தால் மட்டும் தான் போராட்டம் பற்றி எழுதலாம் என்று யார் விதி வைத்தது? நீங்களா? அல்லது "முன்னாள் இயக்கக் காரர்களின் கூட்டமைப்பா"? இயக்கத்திலிருந்தோம் என்ற ஒரேயொரு தகுதியை வைத்துக் கொண்டு பலர் மக்களைக் குழப்பும் போது ஒரு ஆயுதம் தூக்காத தமிழன் தான் கண்டதை எழுதுவதில் உங்களுக்கென்ன பிரச்சினை?

சோல்ற்றுக்கு பொறுப்பானவர் என்று நான் முதல் இந்தியாவில் சந்தித்தவர் நிரஞ்சன். இப்போ அமெரிக்கா என நினைக்கின்றேன்.

இவர் ஒ/எல் குதிரை ஓட எனது நண்பரிடம் அடென்டி காட் கொண்டுவந்த ஞாபகம். மாணவர் அமைப்பு பொறுப்பாளரே குதிரையா புலியில்?

சோல்ற்றிக்கு பொறுப்பானவர் முரளி ..நிரஞ்சன் மாணவர்களிற்கு கூட்டங்கள் வைத்தார். இதே முரளியைத்தான் ரெலோ காக்காவுடன் சேர்த்து கடத்தி வைத்திருந்தனர். முரளி இந்திய இராணுவத்துடனான மோதலில் இறந்தார்.

இதோ

உங்கள் தரவும் புலிகள் அமைப்பின் மாணவர் தலைவரே குதிரை ஓடியவர் என்று குற்றச்சாட்டும் தப்பு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதே........?

யாழில் இருந்து ஒதுங்குவதாக கச்சேரி வைத்ததாக ஞாபகம்...............?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1982 அல்லது 1983 ஆரம்பப்பகுதி என்று நினைக்கின்றேன்

அதிகாலை 3 இலிருந்து 4 மணியிருக்கும்

ஆமர்வீதியிலுள்ள எனது அண்ணரின் கடையின் கதவு தட்டப்படுகிறது. எனது சின்ன அத்தான்தான் கதவைத்திறக்கின்றார். நான் தம்பாபிள்ளை மகேஸ்வரன் வந்துள்ளேன். ........ (எனது அண்ணனை) பார்க்கணும் என்கிறது. கதவு திறக்கப்பட்டதும் முகத்தை மறைத்து பெண் வேடமிட்ட ஒருவர் உள்ளே வந்து கதவை மீண்டும் பூட்டிவிட்டு தலையை வெளியே காட்டுகிறது. அத்தானுக்கு அதிர்ச்சி. உறவினன். ஒரு பொருளியலாளன். ஒரு இயக்கத்தின் தலைவன். பொலிசுக்கும் இராணுவத்துக்கும் தன் அறிவால்தண்ணி காட்டும் ஒருவன் தனக்கு முன்னால். நடுங்கிப்போன அவர் தகவலை அண்ணருக்கு தெரியப்படுத்துகிறார். அண்ணர் வந்து அவரைக்கூட்டிச்செல்கின்றார். அடுத்த நாள் விடிய அத்தனை பேப்பர்களிலும் செய்தி படத்துடன். இரும்புக்கம்பிகளை அரிந்து அதற்கு சுவிங்கம் ஒட்டிவைத்து தருணம் வந்ததும் தப்பி ஓடிவிட்டதாக.

சில நாட்களின் பின் அவர் கடைக்கு அடிக்கடி வருவார். ஒரு முஸ்லிமாக ஒருமாறியிருந்தார். அண்ணருடன் வந்து சர்வசாதாரணமாக கதைத்துக்கொண்டிருப்பார். பொலிசாரும் வந்து பக்கத்தில் நின்று அண்ணருடன் கதைத்து செல்வார்கள். அவர் வந்ததைக்கண்டால் அவர் திரும்பி போகுமட்டும் எனக்கு மட்டும் நெஞ்சு அடித்தபடியேதான் இருக்கும். மீண்டும் அவர் பிடிபட்டார். எனது அண்ணரை எப்பொழுதுமே காட்டிக்கொடுக்கவில்லை. மீண்டும் மட்டக்கிளப்பு சிறையுடைப்பில்??? அவர் தப்பினார். சில வங்கிக்கொள்ளைகள் செய்தார். தன்னிடமிருந்து போராளிகளை புலிகளின் சேரும்படி சொல்லிவிட்டு தன்னுடன் சில கோடி பணத்துடன் இந்தியா வந்தார். அதன்பின் அவர் பற்றி எழுதுவது நல்லதல்ல....................?????

தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்

தம்பாபிள்ளை மகேஸ்வரனின் இயக்கம் பற்றிய எனது பதிவொன்று கீழே

http://sathirir.blogspot.com/2008/12/blog-post_20.html

பலகாலங்களாக வலைப்பதிவுகளில் ஈழம் பற்றியும் விடுதலைப்புலிகளைப்பற்றி பேச்சு எழும்தோதெல்லாம் விடுதலைப்புலிகளைப்பற்றி குற்றச் சாட்டுக்களை வைப்பவர்கள் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலும் குண்டு வைத்தது புலிகள்தான் என்று தொடர்ச்சியாக எழுதி வருகின்றார்கள். ஆனால் அந்தக் குண்டினை வைத்தது TEA என்கிற தமிழீழ விடுதலை இராணுவம் என்கிற அமைப்புத்தான். இந்த அமைப்பின் தலைவராக இருந்தவர். தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் என்பவர். இவர் சிறீலங்காவில் காவல்த்துறையால்கைது செய்யப்படு பனாங்கொடை இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொழுது தப்பியோடியதால் இவரிற்கு பனாங்கொடை மகேஸ்வரன் என்றும் அழைப்பார்கள்.இவரே 1984 ம் ஆண்டுமீனம்பாக்கத்திலிருந்து புறப்பட்ட ஏயார் லங்கா விமானத்திற்கு குண்டு வைப்பதற்காக திட்டம் தீட்டி ஒருவரிடம் நேரம் கணித்த குண்டு பாசலை கொடுத்தனுப்பியிருந்தார்.அந்த நபர் கொழும்பு போவதற்கு பயணபோடிங்பாஸ் எடுத்து விட்டு குண்டுப்பொதியையும் பதிவு செய்து விமானத்தில் ஏற்றிவிட்டு அவர் அங்கிருந்துவெளியேறிவிடவேண்டும்.விமானம் வானில் கிழம்பியதும் குண்டு வெடிக்கக் கூடிதாய் நேரக்கணிப்பு செய்யப்பட்டிருந்தது இதுதான் திட்டம். ஆனால் குண்டுப் பொதியுடன் உள்ளே போனவருக்கு அங்கு காவல் அதிகாரிகளை பார்த்ததும் பயத்தில் குண்டுப்பொதியை அப்படியே விட்டு விட்டு வெளியேறிவிட்டார். குண்டுப்பாசல் ஏயார் லங்கா விமானத்தில் ஏற்றப்படவில்லையென்று தெரிந்ததும் தமிழீழ விடுதலை இராணுவ அமைப்பினால் விமானநிலையத்திற்கு தொலைபேசியடித்து குண்டு எச்சரிக்கையை விடுத்திருந்தனர். ஆனாலும் குண்டு வெடித்து பலர் இறந்து போயிருந்தனர். தம்பிப் பிள்ளை மகேஸ்வரன் தற்சமயம் வேலூர் சிறையில் இருக்கிறார்.

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பாபிள்ளை மகேஸ்வரனின் இயக்கம் பற்றிய எனது பதிவொன்று கீழே

நன்றி சாத்திரி

இவற்றையெல்லாம் முன்பு நான் படிக்கவில்லை. தற் போது படிக்கக்கூடியதாக இருக்கிறது. அந்தவகையில் கூட எனது இந்ததிரி உதவுவது சந்தோசம்.

இந்தியாவுக்குப்போன மகேஸ்வரனின் பின்னைய வாழ்க்கையை கேட்டு எழுதமுடியும். ஆனால் ஒதுங்கிய ஒருவர் பற்றி எழுதுவது சரியல்ல என்பதால் அவர்பற்றிய விளக்கத்தை இத்துடன் நிறுத்துகின்றேன்.

உங்களுக்கு பரந்தன் ரசாயனக்கூட்டுத்தாபனத்தில் தொடர்புகள் இருந்ததா....???

பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனத்தில் வேலை செய்த பலரைத்தெரியும். சபாலிங்கமும் அவரது மனைவியும்கூட (பாரிசில் கொல்லப்பட்டவர் )நல்ல பழக்கம் சபாலிங்கமும் அங்குதான் வேலை செய்தார்.

பரந்தன் இரசாயனக்கூட்டுத்தாபனத்தில் வேலை செய்த பலரைத்தெரியும். சபாலிங்கமும் அவரது மனைவியும்கூட (பாரிசில் கொல்லப்பட்டவர் )நல்ல பழக்கம் சபாலிங்கமும் அங்குதான் வேலை செய்தார்.

சபாலிங்கத்துடன் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.அவரது படுகொலை அவர் ரோ உளவாளி என்று வியாக்கியானப்படுத்தப்பட்டது.அவர் தம்பியின் மிகவும் நெருங்கிய நணபர்.அவரது மனைவி வேலணையை சேர்ந்தவா. மேலும் சர்வதேசநிதிப்பொறுப்பாளர் லாச்சப்பலில் வைத்துப் படுகொலை செய்பட்டமைக்கும், பிரான்ஸ் பொறுப்பாளர் லோறன்ஸ் திலகர் தம்பியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததிற்குமான விளக்கங்களை தரமுடியுமா சாத்திரி

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி ஜஸ்னின் கதைகேட்க விருப்பமென்றால் அம்ம்புலிமாமா வாங்கிப்படியும்.

எமது போராட்டத்தை யாரென்றாலும் கதையாக எழுதக்கூடாது.சாத்திரி இவ்வளவு எழுதுகின்றார்.யாரும் குறுக்கீடு செய்தார்களா?

நான் நினைக்கிறேன் ஜஸ்ரின் அர்கள் ஆட்கள் என்று மனிதர்களை குறிப்பிட்டுள்ளார் என்று...................

யாரும் தடுக்கிறார்களா? என்ற கேள்விக்குள் யாரும் என்பது மனிதரையும் தாண்டி பலரையும் உள்ளடக்கியதாக உள்ளதே?

  • கருத்துக்கள உறவுகள்

சபாலிங்கத்துடன் எனக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது.அவரது படுகொலை அவர் ரோ உளவாளி என்று வியாக்கியானப்படுத்தப்பட்டது.அவர் தம்பியின் மிகவும் நெருங்கிய நணபர்.அவரது மனைவி வேலணையை சேர்ந்தவா. மேலும் சர்வதேசநிதிப்பொறுப்பாளர் லாச்சப்பலில் வைத்துப் படுகொலை செய்பட்டமைக்கும், பிரான்ஸ் பொறுப்பாளர் லோறன்ஸ் திலகர் தம்பியின் நேரடிக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததிற்குமான விளக்கங்களை தரமுடியுமா சாத்திரி

மீண்டுமொரு முறை துரோகிப் பட்டமும். இரவிரவாக தொலைபேசியில் கொலை மிரட்டல்களும். மனைவியையும் மகளையும் தங்களுடன் படுக்கைக்கு எவரும் அழைக்கமாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தினை நீங்கள் தந்தால் நாதன் கஜன் சம்பந்தப்பட்ட விடயங்களை எழுதுவேன்.

post-1260-0-48817100-1310331087_thumb.jp

Edited by sathiri

மீண்டுமொரு முறை துரோகிப் பட்டமும். இரவிரவாக தொலைபேசியில் கொலை மிரட்டல்களும். மனைவியையும் மகளையும் தங்களுடன் படுக்கைக்கு எவரும் அழைக்கமாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தினை நீங்கள் தந்தால் நாதன் கஜன் சம்பந்தப்பட்ட விடயங்களை எழுதுவேன்.

சாத்திரி கனக்க வேண்டாம். அந்த கொலைகளுக்கு பயன்படுத்தபட்ட துப்பாக்கிகள் யாருக்கு உரியவை என்று மட்டுமாவது உலகுக்கு தெரியப்படுத்துங்கள்..இன்னும் கண்ணை திறந்து கனவு காண்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

.உண்மைகள் எப்பவுமே உறங்குவதில்லை .

சாத்திரி பகலவன் பச்சைக்கொடி காட்டியாச்சு கதையை துவங்குங்கோ..... :mellow:

சாத்திரி புலிகளை பற்றி நன்குதான் அறிந்திருக்கின்றார்.அதில் இருந்த படியாலோ என்னவோ?

சிங்கள காடையர்கள் தாக்கின பொழுது யாழ்ப்பாணம் நோக்கியே எல்லாரும் சென்றார்களாம் ஆனால் இயக்கங்கள் தங்களுக்கிடையே சண்டை பிடிக்க தொடங்கின பிறகு தான் வெளிநாடுகளை நோக்கி படித்தவர்களும் மற்றவர்களும் புலம் பெயர ஆரம்பித்தார்கள் என்று எனக்கு தெரிஞ்ச ஒருவர் கூறினார் இது உண்மையா?

குட்டி மணி தங்கத்துரையை காட்டி கொடுத்தவர்கள் யார்..?

தங்களுடன் கருத்துகளால் முரண் பட்டவர்களை படகில்(பச்சை படகு பெயர் சரியாக தெரியல) ஏற்றி நடுக்கடலில் கொண்டே கதையை முடிச்ச இயக்கம்கள் /இயக்கம் எது?

மீண்டுமொரு முறை துரோகிப் பட்டமும். இரவிரவாக தொலைபேசியில் கொலை மிரட்டல்களும். மனைவியையும் மகளையும் தங்களுடன் படுக்கைக்கு எவரும் அழைக்கமாட்டார்கள் என்கிற உத்தரவாதத்தினை நீங்கள் தந்தால் நாதன் கஜன் சம்பந்தப்பட்ட விடயங்களை எழுதுவேன்.

உங்களை மிகவும் சங்கடப்படுத்தி விட்டேன் என நினைக்கின்றேன்.என்னை மன்னத்துக் கொள்ளுங்கள் சாத்திரி.என்னால் உங்களுக்குப் பாதுகாப்பும் உத்தரவாதமும் தரமுடியவில்லை.என்னைப் பொறுத்தவரையில் பல ஏன் களுக்கு விடை பூச்சியமாகவே உள்ளது. :(:(:(

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் பல ஏன் களுக்கு விடை பூச்சியமாகவே உள்ளது. :(:(:(

எல்லாம் தெரிந்தால் இமயமலைக்கு (அல்லது உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் அல்ப்ஸ் மலைக்கு) போகவேண்டியதுதான். பல கேள்விகளுக்கு விடை தெரிந்தால், இந்த உலகம் போலி, இந்த வாழ்க்கை போலி, எந்தன் வாழ்க்கை மாயை என்று ஆகிவிடும்.

என்னை குழப்புகின்றீர்கள் கிருபன் :(:(:( .நான் சாத்திரிக்குப்போட்ட பின்னூட்டத்தில் இடக்குப் பண்ணுகின்றீர்கள். எங்கள் கண்முன்னே நடந்தகொலைகளுக்கு விளக்கம் கேட்கும் பொழுது சாத்திரி சூழ்நிலைக்கைதியாகின்றார். நீங்கள் என்னை "ஏன்" களுக்கு இமயமலை போகச்சொல்கன்றீர்கள். இவைகள் உங்களைப் பாதித்ததோ எனக்குத் தெரியாது ஆனால் எனக்கு நிறையவே உண்டு.

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் தெரிந்தால் இமயமலைக்கு (அல்லது உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் அல்ப்ஸ் மலைக்கு) போகவேண்டியதுதான். பல கேள்விகளுக்கு விடை தெரிந்தால், இந்த உலகம் போலி, இந்த வாழ்க்கை போலி, எந்தன் வாழ்க்கை மாயை என்று ஆகிவிடும்.

கொஞ்சம் தெரிந்ததால்தான் அல்ப்ஸ் மலை அடிவாரத்தில் வந்து குடியேறிவிட்டேன். :lol:

உங்களை மிகவும் சங்கடப்படுத்தி விட்டேன் என நினைக்கின்றேன்.என்னை மன்னத்துக் கொள்ளுங்கள் சாத்திரி.என்னால் உங்களுக்குப் பாதுகாப்பும் உத்தரவாதமும் தரமுடியவில்லை.என்னைப் பொறுத்தவரையில் பல ஏன் களுக்கு விடை பூச்சியமாகவே உள்ளது. :(:(:(

எனக்கு சங்கடம் ஒன்றும் இல்லை கடந்த கால அனுபவங்கள். மற்றும்படி நான் அனைத்தையும் எழுதினால் அனைத்துலக செயலகத்தை சேர்ந்தவர்களிற்குத்தான் சங்கடம். :lol:

சாத்திரி புலிகளை பற்றி நன்குதான் அறிந்திருக்கின்றார்.அதில் இருந்த படியாலோ என்னவோ?

புலிகளைப்பற்றி நன்றாகவே தெரியும். ஆனால் இப்படியான வேலைகளை செய்தது செய்வது உண்மையான புலிகள் அல்ல புலி என்று சொல்லி திரிகின்ற அனைத்துலக செயலகத்தில் வாலுகள்.அவைகளும் நறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது :lol:

சாத்திரி கனக்க வேண்டாம். அந்த கொலைகளுக்கு பயன்படுத்தபட்ட துப்பாக்கிகள் யாருக்கு உரியவை என்று மட்டுமாவது உலகுக்கு தெரியப்படுத்துங்கள்..இன்னும் கண்ணை திறந்து கனவு காண்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் .

.உண்மைகள் எப்பவுமே உறங்குவதில்லை .

சரி பெயரை மட்டும் சொல்கிறேன். அன்ரனி அரியாலை மிகுதியை தேடிக்கண்டு பிடியுங்கள். ^_^

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.