Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வைகோ எதிர்ப்பு: கிளிநொச்சி இசை நிகழ்ச்சியை ரத்து செய்த பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வைகோ எதிர்ப்பு: கிளிநொச்சி இசை நிகழ்ச்சியை ரத்து செய்த பாடகர் மனோ மன்னிப்பு கேட்டார்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தால் கிளிநொச்சியில் நடக்க இருந்த இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பாடகர் மனோ, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து சென்னை திரும்பினார்.

இலங்கையில் கிளிநொச்சியில் உள்ளாட்சி மன்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் அந்நாட்டின் அதிபர் ராஜபக்சே பங்கேற்கிறார். அந்த பிரச்சாரத்தில் இசை நிகழ்ச்சி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த இசை நிகழ்ச்சியில் ராஜபக்சேவுடன் பங்கேற்பதற்காக தமிழ் திரைப்பட பின்னணி பாடகர்கள் மனோ, கிரிஷ், சுசித்ரா ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர்.

இதனை ஏற்று 20.07.2011 அன்று காலை மூன்று பேரும் சென்னையில் இருந்து கொழும்பு சென்றடைந்தனர். மனோ உள்ளிட்ட மூன்று பேரின் பயணத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபக்சேவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

இதுகுறித்து மனோ கூறியிருப்பதாவது, என்னை வாழ வைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு, தமிழ் மக்களுக்கு உங்கள் மனோ, பாடகர் கிரிஷ், பாடகி சுசித்ரா சார்பில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று தெரிந்த பிறகு, நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விஷயம் தெரிந்தது.

நாங்கள் கொழும்பில் உள்ளோம். நாங்கள் கிளிநொச்சி போகவில்லை. ஏனென்றால் தமிழ் நெஞ்சங்களுக்கு சின்ன கஷ்டம் வருவதுபோல் நடந்து கொள்ள மாட்டோம். உறுதியாகச் சொல்கிறேன் நானும், பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் ஆகியோரும் சென்னை திரும்புகிறோம். கிளிநொச்சி செல்ல மாட்டோம். தமிழ் மண்ணுக்கு, தமிழ் நெஞ்சங்களுக்கு என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். தெரியாமல் வந்ததால் எங்களை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் நன்றி. இவ்வாறு மனோ கூறியுள்ளார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58051

தென்னிந்திய திரைப்படப் பாடகர் மனோ தலைமையிலான குழுவினர் கிளிநொச்சி இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார்கள்

[Wednesday, 2011-07-20 14:06:48]

தென்னிந்திய திரைப்படப் பாடகர் மனோ தலைமையிலான குழுவினர் கிளிநொச்சியில் இன்று இடம்பெறவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை எனத் தீர்மானித்துள்ளனர். கொழும்பு, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள், தமது இந்த முடிவு குறித்து சற்று நேரத்துக்கு முன்னர் சன் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தனர்.(முழு விபரம் விரைவில்..

http://www.seithy.com/breifNews.php?newsID=46811&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இதையடுத்து மனோ உள்ளிட்ட மூன்று பேரும், ராஜபக்சேவுடன் பங்கேற்க இருந்த இசை நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.

இதுகுறித்து மனோ கூறியிருப்பதாவது, என்னை வாழ வைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு, தமிழ் மக்களுக்கு உங்கள் மனோ, பாடகர் கிரிஷ், பாடகி சுசித்ரா சார்பில் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.

கிளிநொச்சியில் ஒரு ஸ்டேடியம் திறப்பு விழாவுக்காக, இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று எங்களை கேட்டார்கள். தமிழ் மக்கள் முன்பு தமிழ் பாட்டுகளை பாடலாம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆனால் இங்கு வந்து பார்க்கும்போது, அந்த நிகழ்ச்சியில் ராஜபக்சே கலந்து கொள்கிறார் என்று தெரிந்த பிறகு, நிறைய பெரியவர்கள் எங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த விஷயம் தெரிந்தது.

இதனைப் பார்த்த பிறகாவது,

புலம் பெயர் தேசங்களில், இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள், சிங்களவர்களை கிற்றார் அடிக்க.... கூப்பிடாதீங்கப்பா..... -i186.photobucket.com-albums-x21-alexandrova_anna-Guitar_Emoticon___Animated_by_satsu.gificon_guitar.gifsmi15.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து உங்கள் party ஐ செய்யவும். :huh:

  • கருத்துக்கள உறவுகள்

மனோ குழுவினருக்கு நன்றிகள்..! இப்படி எத்தனைபேரை முன்பு ஏமாற்றி அழைத்துச் சென்றார்களோ? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதனைப் பார்த்த பிறகாவது,

புலம் பெயர் தேசங்களில், இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள், சிங்களவர்களை கிற்றார் அடிக்க.... கூப்பிடாதீங்கப்பா..... -i186.photobucket.com-albums-x21-alexandrova_anna-Guitar_Emoticon___Animated_by_satsu.gificon_guitar.gifsmi15.gif

முதலில் இந்த பழைய மாணவர் சங்க நிகழ்வுகளுக்கும் சில ஊரைவைத்து நடாத்தப்படும் நிகழ்வுகளுக்கு தென் இந்தியாவில் இருந்து கலைஞர்களை அழைப்பதை நிற்ப்பாட்ட வேண்டும்.

தாம் செய்யும் தவறுகளை மறைக்க விளையாட்டு வேறு அரசியல் வேறு கலை வேறு என்று கதை விடும் எம்மவர்கனள் அநேகம் பேர் இருக்க உண்மையை உணர்ந்ததும் உடனடியாகவே நிகழ்ச்சியை ரத்துச் செய்து விட்டு திரும்பும் பாடகர் மனோ உள்ளிட்டவர்களுக்கு நன்றி.

போகாமலே இருப்பதை விட போய் விட்டு கழுத்தறுப்பது டக்ளஸ் உள்ளிட்டவர்களின் முகத்தில் கரிபூசியதைப் போலமைந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இது குறித்த செய்தி அறிந்ததும் சிரத்தையோடு செயற்பட்டு நிலைமை விளக்கி பாடகர்களை விலகச் செய்த தலைவர்களுக்கும் தலைவர்களின் சொல்லை மதித்து மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்த பாடகர்களுக்கும் மிக்க நன்றிகள்.

பாடகர் மனோ, பாடகி சுசித்ரா, பாடகர் கிரிஷ் அனைவருக்கும் நன்றிகள்.

அதுவும் கொழும்பு வரை வந்தபின் உண்மை அறிந்து அல்லது உண்மையை உணர்ந்து, நிகழ்ச்சியை ரத்து செய்த துணிவான முடிவுக்கு இதயம் கனிந்த நன்றிகள்.

சம்பந்த பட்ட அரசியல் வாதிகளுக்கும் பாடகர்களுக்கும் நன்றி

தமது இந்த முடிவு குறித்து சற்று நேரத்துக்கு முன்னர் சன் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தனர்?.

சன் கூட்டம் சேர்ந்து வந்திருந்தாங்களா?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: சின்ன வருத்தம், இவர்கள் வருவார்கள் என்று நம்பியிருந்த வன்னிச்சனம் ஏம்மாற்றப்படப் போகிறார்கள். இவர்கள் வருவது தவறில்லை, ஆனால் மேடையில் மகிந்தவுக்குப் போடுங்கள் என்று கேட்காமல், "உங்கள் மனச்சாட்ட்சிக்கு ஏற்றவாறு வாக்களியுங்கள்" என்று கோரியிருந்தாலே போதும்.

:D அதெப்படி முடியும் சிறி, சிங்களவன் அடிச்சால்த்தானெ அந்த மாதிரி இருக்கும் ??!!! ஏனெண்டால் தமிழனுக்கு கிட்டார் பிடிக்கத் தெரியாதே?? சிங்களவன் ஒருத்தனை வைச்சிருந்தால்த்தானே நாங்கள் விலாசமா சிறிலங்காவுக்கும் போய் ஒரு ரவுண்ட் அடிச்சுக்கொண்டு வரலாம், நமோ நமோ பாடலாம்??!! என்ன நான் சொல்லுறது ??!!

  • கருத்துக்கள உறவுகள்

தாம் செய்யும் தவறுகளை மறைக்க விளையாட்டு வேறு அரசியல் வேறு கலை வேறு என்று கதை விடும் எம்மவர்கனள் அநேகம் பேர் இருக்க உண்மையை உணர்ந்ததும் உடனடியாகவே நிகழ்ச்சியை ரத்துச் செய்து விட்டு திரும்பும் பாடகர் மனோ உள்ளிட்டவர்களுக்கு நன்றி.

போகாமலே இருப்பதை விட போய் விட்டு கழுத்தறுப்பது டக்ளஸ் உள்ளிட்டவர்களின் முகத்தில் கரிபூசியதைப் போலமைந்துள்ளது.

இவர்கள்தான் தமிழுணர்வுள்ளவர்கள், தலைவணங்குவோம்!

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: சின்ன வருத்தம், இவர்கள் வருவார்கள் என்று நம்பியிருந்த வன்னிச்சனம் ஏம்மாற்றப்படப் போகிறார்கள். இவர்கள் வருவது தவறில்லை, ஆனால் மேடையில் மகிந்தவுக்குப் போடுங்கள் என்று கேட்காமல், "உங்கள் மனச்சாட்ட்சிக்கு ஏற்றவாறு வாக்களியுங்கள்" என்று கோரியிருந்தாலே போதும்.

அண்ணோய் இழவு விழுந்து முழுசா இரண்டு வருசம் ஆகல்ல.. இருக்க ஒரு நிம்மதியான இடமில்ல.. வேலை இல்ல.. காணாமல் போன.. மகன்..மகள்.. கணவன் வீடு திரும்பல்ல.. மீண்டு வந்த பிள்ளைகளை வெளில கூட்டிக் கொண்டு போக முடியல்ல.. இப்படியான நிலையில் வாழும் வன்னி மக்களுக்கு மனோவின் பாடலை ரசிக்கும் மனநிலையா இருக்கும்..??! :unsure::o

நீங்களும் மனச்சாட்சியை கழற்றி வைச்சிட்டு இப்ப எல்லாம் கருத்தெழுத வெளிக்கிட்டிருக்கீங்க என்று எண்ணத் தோன்றுது. :o

உங்க வீட்டில இப்படி ஒரு நிலைன்னா.. நீங்க மனோவின் நிகழ்ச்சிக்குப் போய் சங்கீதம் ரசிப்பிங்களாக்கும்..????! :rolleyes:

வன்னி மக்களின் அடிப்படை தேவைகளை முதலில் பூர்த்தி செய்து அந்த மக்கள் இயல்பு நிலைக்கு வர உதவி செய்யனும். அதுதான் தேவை. அதன் பின்னர் தான் அவர்களால்.. உல்லாசம் அனுபவிப்பது குறித்து மனதளவில் சிந்திக்க முடியும். இன்றைய நிலையில் அது சாத்தியமில்லை.

இந்தியப் படைகளின் காலத்திலும் ஒட்டுக்குழுக்கள் இப்படி நிகழ்ச்சிகளை யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்தன. மக்களில் எவருமே அன்றைய சூழலில் அவற்றிற்குப் போகும் மன நிலையில் இருக்கவில்லை. ஒரு பக்கம் பிள்ளை பிடி..இன்னொரு பக்கம் மண்டையன் குழுவின் கொலைகள்.. மற்றொரு பக்கம் வீடு வீடா கொள்ளை.. இப்படியான நிலையில் அன்று மக்கள் அவற்றை தாமாகப் புறக்கணித்தனர். வன்னி மக்கள் அதை விட மிக மோசமான சூழலில் இன்று இருக்கினம். அவைக்கு மனோவின் மதுர கீதமா காதில் விழும்.. முகாரி பாடும் அந்த முகங்களுக்கு.. இவை எந்த வகையில் ஆறுதலாகும்..??!

அந்த வகையில் மனோ குழுவினரின் இந்த புரிந்துணர்வுடன் கூடிய முடிவு வரவேற்கத்தக்க ஒன்று.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு.,

இதுக்கெல்லாமா வந்து சண்டை பிடிப்பீர்கள்?? சும்மா ஒரு தமாசுக்கு எழுதினேன். அதுதான் சொன்னேனே, அவர்கள் வந்து மகிந்தவுக்கு ஆப்பு வைக்குமாப்போல் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று?? அடிக்கடி தாயக்த்திலிருந்து வரும் ஒரு குற்றச்சாட்டு, நாங்கள் அவர்களின் வாழ்க்கையில் முடிவு எடுக்கிறோமாம், எங்களுக்காக அவர்கள் இனியும் சிலுவை சுமக்கத் தயாரில்லையாம். அதுதான் அப்படி எழுதினேன்.

அதுமட்டுமல்ல, இப்போது கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் மாலை நேரங்களில் பெண்கள் வெளியே நடமாட முடியாதாம். இலைஞர்களின் அட்டகாசம் தலைவிரித்தாடுகிரதாம். உன்னை நான் வைச்சுக்கொள்கிறேன் வாறியா என்று கூடக் கேட்கிறார்களாம். முன்னால்ப் போராளிப் பெண்களுக்கு நடந்த கொடுமைகள் என்று வாசித்த ஞாபகம். அதுதான் அவர்கள் தேறிவிட்டார்களோ என்று எண்ணினேன்.

இப்பத்தான் அமிதலிங்கத்தைப் போட்டது சரிதான் என்கிற முடிவுக்கு வன்டிருக்கிறேன், அதுக்குள்ள இன்னொரு சண்டையா, வேண்டாமடா சாமி, ஆளை விடுங்கோ !!!!!

புரிந்து கொள்கிறேன் அண்ணா. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மண்ணிற்கும் தமிழ்த்தாய்கும் என்றும் துரோகம் இழைக்கமாட்டோம் நாங்கள் கிளிநொச்சி செல்லமாட்டோம்-கொழும்பில் இருந்து பாடகர் மனோ தகவல்.

கிளிநொச்சியில் நடைபெற இருந்த மகிந்தவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஒரே மேடையில் இசை நிகழ்ச்சி நடாத்துவதற்கு தமிழகத்தில் இருந்து சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களது வேண்டுகோள்களை ஏற்று கொழும்பில் இருந்து திரும்ப உள்ளதாக மனோ தெரிவித்துள்ளார்.

தமிழ்த்திரையுலக பின்னணிப் பாடகர்களான மனோ சுசித்திரா கிறிஸ் ஆகியோர் கொலைவெறியன் மகிந்தராசபக்சவுடன் ஒரே மேடையில் ஏறி இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளிநொச்சி சென்றுள்ளதாக பரபரப்பாக தகவல்கள் வெளிவந்திருந்தது. இதனையடுத்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த தமிழ் உணர்வாளர்கள் துரிதமாக களத்தில் இறங்கி சிங்களனின் சதி முயற்சியை தடுத்துநிறுத்தியுள்ளனர்.

மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைக்கோ நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான உள்ளிட்ட தமிழ்த்தேசிய உணர்வு சக்திகள் இவர்களை தொடர்பு கொண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளதுடன் இந்த நிகழ்வின் பின்னணியில் தீட்டப்பட்டிருக்கும் சதியைப்பற்றியும் எடுத்துக் கூறியுள்ளனர். இதனை ஏற்றுக் கொண்ட இவர்கள் கொழும்பில் இருந்து திரும்ப உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கொழும்பில் இருந்து ஊடகங்களிற்கு தகவல் தெரிவித்த பின்னணிப்பாடகர் மனோ அவர்கள் தமிழ் மண்ணிற்கும் தமிழ்த்தாய்கும் எப்போதும் துரோகம் செய்யமாட்டோம் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு தொடர்பாக தமக்கு முழுமையான விபரங்கள் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் மூத்தவர்களது(தமிழ் உணர்வாளர்கள்) வேண்டுகோளை ஏற்று கிளிநொச்சி செல்லாது தமிழகம் திரும்ப உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழதேசம் இணையத்தள செய்தியாளர் : புலிமறவன்.

எம்மை தவறாக கருதவேண்டாம் கிளிநொச்சிக்கு ஏமாற்றி அழைக்கப்பட்டோம் - தமிழர்களிடம் திரைப்பட பாடகர்கள் மன்னிப்பு கோரினார்கள்.

கிளிநொச்சியில் திறக்கப்பட உள்ள விளையாட்டரங்கு ஒன்றின் திறப்புவிழா நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு தாம் அழைக்கப்பட்டதாகவும் போரினால் பாதிக்கப்பட்டிருக்கும் எமது மக்களை சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பாக இதனை பயன்படுத்தவேண்டும் என்பதற்காகவே தாம் இந்த வாய்ப்பினை ஏற்றுக் கொண்டதாக மனோ தெரிவித்துள்ளார்.

கொழும்பு விமானநிலையத்திற்கு வந்திறங்கியதும் தான் தனக்கு விடயம் தெரிந்ததாக சொன்னார். இன்று அதிகாலை சென்னையில் இருந்து புறப்பட்டு கொழும்பு சென்றபின்னர் தமிழகத்தில் இருந்து தொலைபேசிமூலம் தொடர்பு கொண்ட மூத்தவர்கள் (தமிழ்உணர்வாளர்கள்) அந்த விளையாட்டரங்கு திறப்புவிழா நிகழ்வில் கொலைபாதகன் மகிந்த ராசபக்சேவும் கலந்து கொள்ள உள்ளதாக தகவலை தெரிவித்து நிகழ்வை புறக்கணிக்க வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கூறினார்கள்.

தமிழர்கள் எம்மை மன்னிக்க வேண்டும். நாங்கள் தமிழ் உலகிற்கு என்றும் நன்றியுடையவர்களாக இருப்போம். எம்மை தவறாக கருதவேண்டாம். நாங்கள் கிளிநொச்சிக்கு கண்டிப்பாக போகப்போவதில்லை. உடனடியாக கொழும்புவில் இருந்து சென்னைக்கு திரும்ப உள்ளோம். தமிழ் மண்ணிற்கும் தமிழ்த்தாய்க்கும் என்றும் துரோகம் இழைக்க மாட்டோம். நாங்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பது எல்லோரிற்கும் தெரியும். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என பின்னணிப்பாடகர் மனோ அவர்கள் தெரிவித்துள்ளார்.

http://www.eeladhesam.com/index.php?option=com

http://youtu.be/-M4KLjq6JY4

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய் இழவு விழுந்து முழுசா இரண்டு வருசம் ஆகல்ல.. இருக்க ஒரு நிம்மதியான இடமில்ல.. வேலை இல்ல.. காணாமல் போன.. மகன்..மகள்.. கணவன் வீடு திரும்பல்ல.. மீண்டு வந்த பிள்ளைகளை வெளில கூட்டிக் கொண்டு போக முடியல்ல.. இப்படியான நிலையில் வாழும் வன்னி மக்களுக்கு மனோவின் பாடலை ரசிக்கும் மனநிலையா இருக்கும்..??!

கடந்த இரண்டு வருடமாக வன்னியில் குழந்தைகளும் தமிழர்களுக்கு பிறப்பதில்லையாம். :unsure:

அண்ணோய் இழவு விழுந்து முழுசா இரண்டு வருசம் ஆகல்ல.. இருக்க ஒரு நிம்மதியான இடமில்ல.. வேலை இல்ல.. காணாமல் போன.. மகன்..மகள்.. கணவன் வீடு திரும்பல்ல.. மீண்டு வந்த பிள்ளைகளை வெளில கூட்டிக் கொண்டு போக முடியல்ல.. இப்படியான நிலையில் வாழும் வன்னி மக்களுக்கு மனோவின் பாடலை ரசிக்கும் மனநிலையா இருக்கும்..??! :unsure::o

நீட்டி முழக்கியிருகிறீர்கள்.

அந்த மக்களுக்கு கவலை இல்லை என்கிறீர்களா? இல்லை

அங்கு ஒரு பிரச்சனையும் அவர்களுக்கு இல்லை என்கிறீர்களா? இல்லை

பிரச்சனைகள் இருந்தால் அவர்கள் பெற்றோராக கூடாது என்கிறீர்களா?

அதெப்படி முடியும் சிறி, சிங்களவன் அடிச்சால்த்தானெ அந்த மாதிரி இருக்கும் ??!!! ஏனெண்டால் தமிழனுக்கு கிட்டார் பிடிக்கத் தெரியாதே??
முதலில் இசைக்கலைஞன் இந்த சூழலில் எப்படியிருக்க வேண்டுமோ அப்படி நடந்து கொண்ட தமிழக கலைஞர்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள். மேலும் சிறியண்ணாவுக்கு நட்புடன் கூறுகிறேன் நான் ஒரு கிற்றாரிஷ்ட் என்றவகையில் தமிழனுக்கு கிற்றார் வாசிக்கத்கெரியாது என்று நீங்கள் கூறுவது மனதுக்கு கொஞ்சம் கஷ்ட்மாகத்தான் இருக்கிறது.பரவாயில்லை ஆனாலும் நான் வாழும் இப்புலம் பெயர் வாழ் நாட்டில் என் திறமையை தமிழினத்திற்கும், விடுதலைப்போராட்டத்திற்கும் இன்று வரை என் கடமையைத்திறம்பட செய்து வருகிறேன். ஒரு விடுதலை இசைத்தட்டைகூட இசை அமைத்து வெளியிட்டுள்ளேன்.இதை என்னைக்காட்டிக்கொள்வதற்காக இங்கு எழுதவில்லை என்னைப்போல் உள்ள திமிழீழ இசைக்கலைஞர்கள் அனைவரும் என்னைப்போல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதுகிறேன் தமிழக இசக்கலைஞர்களின் முன்மாதிரியைப்பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவாவும்
  • கருத்துக்கள உறவுகள்

tamanna-492.jpg

பாப்பு தம்ன்ஸ்... கொல்டி பட சூட்டிங்குக்காக இலங்கை செல்றாவாமே .. அவா அங்கிட்டு போனா... அத்தோட அங்கிட்டே போய்விட வேண்டியதுதான்

thumb_smileyvault-cute-big-smiley-animated-060.gifthumb_smileyvault-cute-big-smiley-animated-060.gif

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியைத் தெரிவிக்க இந்தப்பாடகர்களின் மின்னஞ்சல் இருந்தால் சொல்லுங்கோ,

  • கருத்துக்கள உறவுகள்

மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்த பாடகர்களுக்கும் மிக்க நன்றிகள்.

மனோ அங்கு போகாமல் விட்டது இருக்கட்டும்!.........தமிழர் தாயகத்தில் பிறந்து ,............புலம்பெயர்ந்த ஒவ்வொரு தமிழனும் வடக்கு கிழக்குக்கு ............தன் குடும்பம் "பிள்ளைகளோடு" ...................முடிந்தவரை அடிக்கடி பயணம் செய்யணும்! .............இதை செய்வதே கொல்லப்பட்ட உறவுக்களுக்கான உண்மையான அஞ்சலி .............!....புலம்பெயர் குழந்தைகளில் பலர் ...தாம் வாழும் நாட்டையே ...தமது தேசமாக கருதி வாழ்பவர்கள்!........இன்று இருக்கிற உணர்வாளர் சித்தப்பு கூட்டம்..........அனைவருமே...குறைந்தது/கூடியது .30....35 வருடங்களின் பின்னர் சமாதி அடைய போகிறவர்க்ள்!.........அதன்பின்பு ...இன்றைக்கே தமது பெற்றோர் பிறந்த தாயகத்தை பத்தி பெரிதாய் தெரிஞ்சுக்க விரும்பாத ...............குழந்தைகள் நாளைக்கு .............தாயக உறவுகளுக்கா கை கொடுக்குமா ?............சொல்லுங்க மக்கா!?.................புலத்துக்கும்....தாயகத்துக்கும் தொடர்ந்து உறவை பேண வழி ............அந்த பிஞ்சுகளோடு அடிக்கடி தாயகம் போங்கள்...அவர்கள் மனசில்...நாம் பட்ட கஸ்டங்கள சொல்லி....சட்ட ரீதியில் அவர்கள்....பிரஜாவுரிமை பெற்ற நாடுகளில் எமக்காய் ...போராட சொல்லுங்கள்! ...அதுதான்...கிளறி எறியப்பட்ட மாவீரர் நடுகற்களை மீண்டும்...அதே இடத்தில் நட்டுவைச்சு போக வழி செய்யும்!

  • கருத்துக்கள உறவுகள்

இதனைப் பார்த்த பிறகாவது,

புலம் பெயர் தேசங்களில், இசை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள், சிங்களவர்களை கிற்றார் அடிக்க.... கூப்பிடாதீங்கப்பா..... -i186.photobucket.com-albums-x21-alexandrova_anna-Guitar_Emoticon___Animated_by_satsu.gificon_guitar.gifsmi15.gif

:D அதெப்படி முடியும் சிறி, சிங்களவன் அடிச்சால்த்தானெ அந்த மாதிரி இருக்கும் ??!!! ஏனெண்டால் தமிழனுக்கு கிட்டார் பிடிக்கத் தெரியாதே?? சிங்களவன் ஒருத்தனை வைச்சிருந்தால்த்தானே நாங்கள் விலாசமா சிறிலங்காவுக்கும் போய் ஒரு ரவுண்ட் அடிச்சுக்கொண்டு வரலாம், நமோ நமோ பாடலாம்??!! என்ன நான் சொல்லுறது ??!!

முதலில் இசைக்கலைஞன் இந்த சூழலில் எப்படியிருக்க வேண்டுமோ அப்படி நடந்து கொண்ட தமிழக கலைஞர்களுக்கு பாராட்டுக்கள், நன்றிகள். மேலும் சிறியண்ணாவுக்கு நட்புடன் கூறுகிறேன் நான் ஒரு கிற்றாரிஷ்ட் என்றவகையில் தமிழனுக்கு கிற்றார் வாசிக்கத்கெரியாது என்று நீங்கள் கூறுவது மனதுக்கு கொஞ்சம் கஷ்ட்மாகத்தான் இருக்கிறது.பரவாயில்லை ஆனாலும் நான் வாழும் இப்புலம் பெயர் வாழ் நாட்டில் என் திறமையை தமிழினத்திற்கும், விடுதலைப்போராட்டத்திற்கும் இன்று வரை என் கடமையைத்திறம்பட செய்து வருகிறேன். ஒரு விடுதலை இசைத்தட்டைகூட இசை அமைத்து வெளியிட்டுள்ளேன்.இதை என்னைக்காட்டிக்கொள்வதற்காக இங்கு எழுதவில்லை என்னைப்போல் உள்ள திமிழீழ இசைக்கலைஞர்கள் அனைவரும் என்னைப்போல் இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதுகிறேன் தமிழக இசக்கலைஞர்களின் முன்மாதிரியைப்பின்பற்ற வேண்டும் என்பதே எனது அவாவும்

தமிழ்ச்சூரியன், நான் இங்கு எந்த இடத்தில் தமிழர்களுக்கு கிற்றார் வாசிக்கத் தெரியாது என்று கூறினேன். நான் பாவமப்பா... அபாண்டமாய் பழி சுமத்தாதேங்கோ.....

ரகுநாதன் தான் பகிடியாக(உள்குத்து) அப்படி கூறியவர். அவர் கூறியதற்கு காரணம் அண்மையில் அவுஸ்திரேலியாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் சிங்களவர் கிற்றார் வாசித்தார். இணைப்பை பார்க்கவும். http://www.yarl.com/forum3/index.php?showtopic=88208&st=20

உங்களது இசைத்திறமையை பாராட்டும் வேளையில்..... நீங்கள் இசையமைத்து, வெளியியிட்ட இசைத்தட்டை அறிந்து யாழ் கள உறவு என்னும் முறையில் பெருமிதம் கொள்கின்றேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

அந்த மக்களுக்கு கவலை இல்லை என்கிறீர்களா? இல்லை

அங்கு ஒரு பிரச்சனையும் அவர்களுக்கு இல்லை என்கிறீர்களா? இல்லை

பிரச்சனைகள் இருந்தால் அவர்கள் பெற்றோராக கூடாது என்கிறீர்களா?

அது நெடுக்கு இழவு நடந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர் மக்கள் தொடர்ந்தும் துக்கத்தில் இருப்பதால், இப்படியான களியாட்ட நிகழ்வுகளை விரும்பமாட்டார்கள் என்ற தொனியில் எழுதப்பட்டதற்கான பதில்.

நடந்த அவலங்களுக்குள் மூழ்கி இருக்காமல் மக்கள் எப்போதுமே ஏதாவது ஒரு வகையில் தங்கள் சொந்த வாழ்வில் முன்னேறவே முயற்சிக்கின்றார்கள். அவர்களைத் தொடர்ந்து அவலத்தில் வைத்திருப்பது, சிலருக்கு அரசியல் செய்ய உதவுவும் என்பதால் இப்போதும் மூக்கால் அழுவதை என்னவென்று சொல்லுவது. அதற்காக மகிந்தவின் இசைநிகழ்ச்சியை நியாயப்படுத்தவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.