Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நோர்வே தலைநகரில் பாரிய குண்டுவெடிப்புகள்

Featured Replies

இலங்கையர் என்னும் போது.... ஸ்ரீலங்கர். சிங்களவர்.

அது, ஈழத்தவரை குறித்த தமிழரின் அக்கறை அல்ல.

அதாவது ஈழத்தமிழரையும் குறிவைத்துத் தாக்கிய சிங்கள அரச பயங்கரவாதிகளின் நோக்கம் நிறைவேறவில்லையோ? என்ற கருத்தில் தான் கேட்டிருந்தேன். யாரும் இறக்கவில்லை அல்லது தமது குறி தவறிவிட்டது என்பதை சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்க "இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை" என்ற சங்கேத பாசையை பயன்படுத்தியிருக்கலாம் என்ற கருத்தில்.

  • Replies 62
  • Views 5.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அதாவது ஈழத்தமிழரையும் குறிவைத்துத் தாக்கிய சிங்கள அரச பயங்கரவாதிகளின் நோக்கம் நிறைவேறவில்லையோ? என்ற கருத்தில் தான் கேட்டிருந்தேன். யாரும் இறக்கவில்லை அல்லது தமது குறி தவறிவிட்டது என்பதை சிங்கள அரச பயங்கரவாதிகளுக்கு தெரிவிக்க "இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை" என்ற சங்கேத பாசையை பயன்படுத்தியிருக்கலாம் என்ற கருத்தில்.

ஓ..... நான், தான்.. தவறாக விளங்கி விட்டேன். வெறி சொறி ஆராவமுதன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை, 23, ஜூலை 2011 (10:24 IST)

நார்வே பிரதமர் உயிர் தப்பினார்

நார்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் உள்ள 20 மாடி கட்டிடத்தில் பிரதமர் அலுவலம் இருக்கிறது. அங்கு அரசு அலுவலகங்களும், பத்திரிகை ஒன்றும், செய்தி நிறுவனம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

நேற்று பிற்பகலில் அந்த கட்டிடத்தில் திடீர் என்று அதிக சக்தி கொண்ட குண்டு வெடித்தது. இதனால் ஜன்னல்கள் உடைந்தன. கட்டிடத்தின் சில பகுதிகள் சேதம் அடைந்தன. இதில் 2 பேர் இறந்தனர்.

மேலும் 7 பேர் காயம் அடைந்தனர். உடனே அந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அவசர அவசரமாக அப்புறப்படுத்தப்பட்டனர்.

குண்டு வெடித்த போது பிரதமர் ஜென்ஸ் ஸ்டோலன் பெர்க், தனது அலுவலகத்தில் இல்லை. எனவே அவர் உயிர் தப்பினார்.

சம்பவம் நடந்த கட்டிடத்தில் ராணுவத்தினரும், தீ அணைப்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆப்கானிஸ்தானில் நார்வே நாட்டு படையினர் 500 பேர் இருக்கிறார்கள். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்த குண்டு வெடிப்பை தீவிரவாதிகள் நடத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=58214

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் நேற்றைய தினம் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னர் ஆளும் கட்சியின் இளம் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் நடாத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 80 க்கும் மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டனர்.

[saturday, 2011-07-23 09:08:47]

ஆளும் கட்சியின் இளம் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நினழ்வில் புகுந்த ஒரு நபரே, கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். அந்த நபர் போலீஸ் யூனிபோர்ம் அணிந்த நிலையில் காணப்பட்டதாகத் தெரியவருகின்றது. தலைநகர் ஒஸ்லோவுக்கு அருகே உட்டோயா தீவில் நடைபெற்றுள்ளது இந்தச் சம்பவம்.

இச்சம்பவத்தில் 80க்கு மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்மர் கேம்புக்கு, நோர்வேயின் பிரதமர் வருகை தருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அவரது வருகை சற்றுத் தாமதமாகியதில், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து அவர் தப்பித்துக்கொண்டார். சம்மர் கேம்பிலிருந்த கட்சி உறுப்பினர்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தத் தாக்குதல், பிரதமருக்காக குறிவைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அன்சார் அல்-ஜிகாத் அல்-அலாமி என்ற தீவிரவாத அமைப்பு குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளில் நார்வேயும் இணைந்திருப்பதாலேயே, இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டன என்று அந்த தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=46972&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

80 நோர்வெஜியன் இறந்தது மிகுந்த கவலை. :(

  • கருத்துக்கள உறவுகள்

கூடியவிரைவில் ஏதாவது ஒரு வளர்ச்சி அடைந்த ஐரோப்பிய நாடு ஒன்று mனைத்து இஸ்லாமியர்களையும் தமது நாட்டைவிட்டு அப்புறப்படுத்தினாலேயே இவர்களது கொட்டம் அடங்கும். அதற்கான காலம் மிக விரைவில் வருவதற்கான சூழ்நிலையை அவர்களே ஏற்படுத்துகின்றனர். ஆனால் அவர்களது கைகளில் எண்ணை இருப்பதால் இயலாமலுள்ளது.

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

According to the TV2 channel, the arrested suspect has links to right-wing extremists and possessed two weapons registered in his name.

Other Norwegian media reported that he described himself on his Facebook page as ``conservative'', ``Christian'' and interested in hunting and computer games like World of Warcraft and Modern Warfare 2.

Norwegian Prime Minister Jens Stoltenberg has declared the twin shooting and bomb attacks which killed at least 91 people "a national tragedy''.

"Never since the Second World War has our country been hit by a crime on this scale,'' Stoltenberg told a press conference.

At his side, Justice Minister Knut Storberget said however that ``up to now, there is no reason to raise the threat level'' of terror attacks in Norway.

"It is a nightmare,'' Stoltenberg said, speaking of the ``fear, blood and death'' experienced by young people at the summer camp where the worst of the carnage took place

telegraph.com.au

  • கருத்துக்கள உறவுகள்

வினை விதைத்தவர்கள்

நோர்வேயை பொறுத்தமட்டடில் எமக்கு செய்தது எள்ளவுதான்................ அதாவது இந்தியாவின் கொலைவெறி நாடகத்திற்கு கொடுத்த வேடத்தை ஏற்று நடித்தது.

பாலஸ்தீனம்.

கொலம்பியா.

ஆப்ரிக்க நாடுகள் என்று பல பேரை பேச்சு என்று கூட்டிவந்து கழுத்திலே கத்தி வைததிருக்கிறார்கள். அவர்களுடைய சாபத்தை இவர்கள் அப்படியாக நதியில் இறங்கி குளித்து போக கூடிய பாவங்கள் அல்ல அவை.

  • கருத்துக்கள உறவுகள்

இழப்புக்களினால் துயருற்றிருக்கும் நோர்வீஜியர்களுக்கு அனுதாபங்கள்.

குண்டு வெடிப்பைக் கேள்விப்பட்டபோது இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் செயலாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் பிந்தைய செய்திகளின்படி நோர்வீஜிய நவநாஜி ஒருவனின் தாக்குதலாகத் தெரிகின்றது. தனி ஒருவனாக இப்படியான தாக்குதல்களைச் செய்யமுடிந்திருக்காது என்று நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை கொல்லப்பட்டவர்களின் எண்னிக்கை 91 ஆக உயர்ந்திருக்கிறது. இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிரது. பலபேர் படுகாயமடைந்திருக்கின்றனர். ஒஸ்லோவில் குண்டுவெடிப்பை நடத்திவிட்டே கூட்டம் நடைபெற்ற சிறிய தீவை நோக்கிக் கொலைகாரன் பயணித்திருக்கிறான். ஆளும் தொழில்க் கட்சியின் இளைஞர் அணியின் வருடாந்த ஒன்றுகூடல் நடைபெற்ற தீவிலியே இவனது சகட்டுமேனித் துப்பாக்கித் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. போலீஸ் உடையில் வந்த கொலைகாரன், "ஒஸ்லோவில் குண்டுத்தாக்குதலும் நடத்தியதும் நானே" என்று சொல்லிவிட்டு தனது இயந்திரத்துப்பாக்கியை எடுத்து ஆசைதீர்மட்டும் சுட்டிருக்கிறான். திகைத்துப்போய்நின்ற இளைஞர்கள் துப்பாகிச் சூட்டில் சுருண்டு விழ மீதிப்பேர் அருகிலிருந்த ஆற்றில் குதித்துத் தப்பியிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களில் 14 வயதுடையோரும் அடங்கும். வழமைபோல நோர்வேயின் பிரதமர் கலந்துகொள்ளும் இந்த ஒன்றுகூடலில் அவர் நாளை இங்கு வருவதாக இருந்திருக்கிறது.

கொலைகாரன் முன்னர் நோர்வே ராணுவத்தில் பணிபுரிந்துள்ளதோடு அரசாங்கத்தின் மீதான அதிருப்தியின் வெளிப்பாடே இந்தத் தாக்குதல் என்றும் கருதப்படுகிறது. அவனது தொடர்மாடி வீட்டிலிருந்தும், தாக்குதல் நடைபெற்ற தீவிலிருந்தும் ஏராளமான இன்னும் வெடிக்காத ஜெலிக்னைட் குச்சிகளும் வெடிபொருடகளும் பொலீசாரினால் கைப்பற்றப்படு இருக்கின்றன.

நோர்வே எமக்குச் செய்த பல நல்ல விடயங்களை நாம் இலகுவில் மறந்துவிட்டோம். இறுதிப்போரில் நோர்வேயினால் எதுவுமே செய்ய முடியவில்லை, ஏனென்றால் அவர்களின் கைகளைக் கட்டிப் போட்டது இந்தயப் பயங்கரவாதப் பேய்கள்தான். ஒரு கட்டத்தில் புலிகளைச் சரண்டையுமாறு சொல்கெயிம் கேட்டபோது புலிகளின் முடிவு நிச்சயிக்கப்பட்டு விட்டது. இது எமக்குத் தெரியாது. அடைபட்டிருக்கும் புலிகளையும், மக்களையும் சேர்த்து இந்திய நாய்களும், சிங்களப் பேய்களும் நரவேட்டையாடப்போகின்றன என்கிற செய்தி அவர்களுக்கு முன்னமே தெரிந்திருந்தது. நாம்தான் வீறாப்பிலிருந்து விட்டோம். இதுபற்றி நிறையவே பேசலாம். இது களமில்லை.

:(

நோர்வே மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் !!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் அருகே வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. 91 பேர் வரை பலி. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இரண்டு மணிநேர இடைவெளியின் பின்னர் Ut�øya என்ற தீவொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 91 வரையானோர் பலி. இறப்பின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று காவல் துறையினர் தெரிவிப்பு.

இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்த செய்திகள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன...

இத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக Anders Behring Breivik (32) வயது நோர்வேஜிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தானம் வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கும் காரணமாகவர் என தெரிவிக்கப்படுகின்றது. வெடிக்க வைக்கப்பட்ட வெடிகுண்டு பயிர்களுக்குப் பாவிக்கப்படும் பசளை மூலம் தயாரிக்கப்பட்டது எனத் தெரியவந்துள்ளது.

நேற்று மதியம் பிரதமர் அலுவலகம் முன்பாக வெடிக்கவைக்கப்பட்ட வெடிகுண்டுடன் தொடர்பு பட்டதாக அமைந்துள்ளது இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம். ஒஸ்லோ தொழில்கட்சி இளைஞர் அணியினால் ஏற்படுத்தப்பட்ட நிகழ்வொன்றிலே இவர் காவல்துறையினரின் உடையுடன் வந்து தாக்குதலை தொடர்ந்துள்ளார்..

இச்சம்பவத்தின்போது Ut�øya தீவிலிருந்து தப்பிய கம்சாயினி குணரத்தினம்(23) என்பவர் தனது வலைப்பூவில் இவ்வாறு விபரிக்கின்றார்...

'எனது வாழ்க்கையில் ஒரு கெட்ட நாள்..'

இத்தாக்குதல் சம்பவம் நோர்வே முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவரது வெறிச்செயலால் நடைபெற்ற செயலை பெரிதாக எடுக்க வேண்டிய தேவை இல்லை,இதை லூசில் விடலாம், இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: அட... பாவிகளா...

திரும்பவும் தாக்குகிறார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் காரணமா இருக்கலாம் எண்டு ஸ்கை நியூஸ் காரன் போட்டானே? :rolleyes: இப்ப நோர்வேக்காரன் எண்டு வந்திருக்கு..! :blink: ஒருவேளை நோர்வேப் புலியா இருக்குமோ? :D

டிஸ்கி: இந்த ஸ்கை நிறுவனம் ரூபேர்ட் மேர்டோக்கின் நிறுவனமா? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் காரணமா இருக்கலாம் எண்டு ஸ்கை நியூஸ் காரன் போட்டானே? :rolleyes: இப்ப நோர்வேக்காரன் எண்டு வந்திருக்கு..! :blink: ஒருவேளை நோர்வேப் புலியா இருக்குமோ? :D

டிஸ்கி: இந்த ஸ்கை நிறுவனம் ரூபேர்ட் மேர்டோக்கின் நிறுவனமா? :unsure:

புலிகளும் காரணம் என்று சொல்பவர்கள்

புலிகள் ஏன் இந்த தாக்குதலைச்செய்வார்கள் என்பதற்கான காரணத்தையும் உலக மக்களுக்கு சொன்னால் நல்லது. :(

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளும் காரணம் என்று சொல்பவர்கள்

புலிகள் ஏன் இந்த தாக்குதலைச்செய்வார்கள் என்பதற்கான காரணத்தையும் உலக மக்களுக்கு சொன்னால் நல்லது. :(

இந்த நேரத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் அதேநேரம் எமது மக்கள் வன்னியில் கொல்லப்படும் போது இவர்களால் அந்த உயிர் இழப்பை உடனே நிற்பாட்ட முடிந்திருந்தாலும் இவர்கள் அதை செய்யவில்லை மவுனம் காத்தார்கள் இழப்புகளின் வலி இவர்களுக்கு புரிந்திருக்கவில்லை புரிந்திருந்தால் போரை நிறுத்தியிப்பார்கள் இப்போது அவைகளுக்கும் அந்த வலிபுரிந்திருக்கும்.அதற்காக இதை எமது தரப்பில் யாரும் செய்ததாக ௬றவரவில்லை.

Edited by தமிழ் அரசு

  • தொடங்கியவர்

புலிகளும் காரணமா இருக்கலாம் எண்டு ஸ்கை நியூஸ் காரன் போட்டானே? :rolleyes: இப்ப நோர்வேக்காரன் எண்டு வந்திருக்கு..! :blink: ஒருவேளை நோர்வேப் புலியா இருக்குமோ? :D

டிஸ்கி: இந்த ஸ்கை நிறுவனம் ரூபேர்ட் மேர்டோக்கின் நிறுவனமா? :unsure:

இதையும் வேண்ட அவர் முயற்சித்து வந்தார். ஆனால் ஏற்பட்ட பிரச்சனைகளால் இது தடைப்பட்டுவிட்டது.

ஸ்கை நியூஸ் தான் பெரிய செய்தி சேவை நிறுவனம் என்கிறார்கள்.

  • தொடங்கியவர்

வெள்ளைகள், கிறிஸ்துவ மதம் சார்ந்த தீவிரவாதிகள் இதை செய்துள்ளனர். ஆனால் யாரும் இவர்களை பயங்கரவாதிகள் என்று சொல்லவும் முன்வரவில்லை தமது மதத்துக்குள்ளும் இனத்துக்குள்ளும் தீவிரவாதம் உள்ளதை ஏற்கும் பக்குவமும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பத்தில் இந்தத் தாக்குதலை கண்டித்த ஓபாமா.. நோட்டோ.. தற்போது அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளன.

உலகிலேயே அதிகளவு ஜனநாயகப் பண்புகளைக் கொண்ட நாடான நோர்வியில் இது நடந்திருப்பதானது.. உண்மையில் இது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இழந்த தீவிர வலது சாரி பழமைவாதப் பயங்கரவாதிகளின் செயற்பாட்டையே இனங்காட்டுகிறது. பிரிட்டன் உட்பட உலகெங்கும் பரந்து ஆட்சி நடத்தும் கடும் போக்கு பழமை வாதிகள் விதைத்த பயங்கரவாதமே இதுவாகும்.

இந்தப் பயங்கரவாதத்திற்கும் எதிராக அமெரிக்கா போர் தொடுப்பதோடு.. கடும் போக்கு பழமை வாதத்தை ஜனநாயக உலகில் இருந்து வேரோடு அகற்ற பாடுபட முன் வர வேண்டும்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட அப்பாவி நோர்வே மக்களுக்கு ஆழந்த அனுதாபங்கள்

இறந்த மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

(நேற்று அங்கு நடந்தது போல் நாளை இங்கும் நடக்கலாம்... :mellow: )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு என்னனெண்டு தெரியேல்லை?????

இப்ப கொஞ்ச நாளாய் எங்களுக்களோடை கூட நிண்டு கழுத்தறுத்தவங்களுக்கும்.........சிங்களவங்களுக்கு மிண்டு குடுத்தவங்களுக்கும்...கரையான் அரிக்கிறமாதிரி பிரச்சனையளும் நைசாய் வந்துகொண்டிருக்குது....எல்லாம் அவன் செயல் என்னாடுடைய சிவனே போற்றி :(

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் குண்டு வெடிப்பு! ஒருவர் பலி ஆறு பேர் காயம்!!

24 ஜூலை 2011

32 வயதான அன்ட்ரேஸ் பிரிங் பிரிவிக் என்ற நபரே ..

நோர்வே தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டதாக ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார் :

நோர்வேயில் இடம்பெற்ற மிலேச்சத்;தனமான தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டதாக நபர் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

32 வயதான அன்ட்ரேஸ் பிரிங் பிரிவிக் என்ற நபரே இவ்வாறு தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பு என தெரிவி;த்துள்ளார். தமது நடவடிக்கைகள் கொடூரமானது என்ற போதிலும், இந்தத் தாக்குதல் அத்தியாவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணைகள் நடைபெறவுள்ளதாகவும் அதில் தமது நடவடிக்கைகளுக்கான ஏதுக்கள் வெளிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

யுட்டோயே தீவுகளில் இளைஞர் முகாம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டனர். சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக நாடு முழுவதிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், காணாமல் போனவர்களை கண்டு பிடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது தப்பிச் சென்ற நான்கு பேரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. குண்டுத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என காவல்துறையினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். திட்டமிட்ட வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிங் பிரிவிக் தெரிவித்துள்ளார். சந்தேக நபருக்கும் வலதுசாரி கடும்போக்காளர்களுக்கும் இடையில் தொடர்பு நிலவுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

3ம் இணைப்பு - நோர்வே தலைநகரில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 7 பேரும்ஆளும் கட்சிக் கூட்டத்தில் இளைஞர் துப்பாக்கியால் சுட்டதில் 80 பேரும் உயிரிழந்துள்ளனர் :

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64507/language/ta-IN/article.aspx

  • தொடங்கியவர்

இந்த கிறிஸ்துவ வலதுசாரியின் தாக்குதலையடுத்து இலண்டனில் உள்ள மஜ்லிசுகள் 'உயர் பாதுகாப்பை' கோரியுள்ளன

‘People are afraid we will be the next target’: U.K. mosques raise security after Norway attacks

Extra security will be put up at mosques around the U.K. in the wake of the deadly attacks in Norway, British Muslim leaders said Sunday.

http://www.thestar.com/news/world/article/1029702--people-are-afraid-we-will-be-the-next-target-u-k-mosques-raise-security-after-norway-attacks?bn=1

  • தொடங்கியவர்

-- நோர்வேயில் ஆயுள் தண்டனை கிடையாது

-- நோர்வேயில் தூக்கு மேடை கிடையாது

எனவே இந்த கொலைகார பயங்கரவாதி 21 வருடத்தில் விடுதலையாகலாம். ஆனால், அரச தரப்பு கூடுதலான தண்டனையை கேட்டு தாக்கல் செய்ய உள்ளதாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.