Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

01.08.1997ம் ஆண்டு யெஜசிக்குறு சமர்களத்தில் மேஜர் சிட்டு அவர்கள் வீரகாவியமானார். தனது இனிய குரலால் இன்றும் எல்லோரின் நினைவுகளோடும் வாழும் சிட்டு அவர்களது14ம் ஆண்டு நினைவுநாள் இன்று. 70பாடல்கள் வரை பாடியுள்ளார்.

u1_siddu2225.jpg

முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிட்டு உறங்கிய துயிலிடம் 2003 தாயகம் போனது போது எடுக்கப்பட்ட படம் இது.

chiddu.jpg

சிட்டுவின் நினைவாய் புதுவை அவர்கள் எழுதிய நினைவுப்பாடல் சாந்தன் அவர்களால் பாடப்பட்டது.

சிட்டு பாடிய *கண்ணீரில் காவியங்கள் என்ற பாடல்.இதுவே சிட்டுவின் முதலாவது பாடல்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழவர்குரல் இணையத்தில் சிட்டபற்றி வெளியான நினைவுக்குறிப்பு:

01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.

ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மாவீரர் மேஜர் சிட்டுபோராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே.

சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார்.

அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா?” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.

போராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.

விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.

இப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.

ஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.

“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”

சிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.

கண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடலாக நான் கருதும் (இது தவறென்றால் தெரியப்படுத்தவும்) ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல் வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசைக்குழுவின் நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.

‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்?’என்றுமக்கள் பேசிக்கொண்டார்கள்.

[அக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவது குறைவு. ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்தது.]

சிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.

01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது.

அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.

“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.

வீரவணக்கம் மேஜர் சிட்டு அவர்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கலைஞனாகவும் ஒரு போராளியாகவும் வாழ்ந்து காட்டிய மேஜர் சிட்டுவுக்கு, வீரவணக்கங்கள்!!!

  • கருத்துக்கள உறவுகள்

எமது ஊர் பெற்றெடுத்தது என்பதில் ஒரு பெருமை!

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கம் மாமா

வீர வணக்கங்கள்!

இந்த மாவீரரை பற்றிய தகவல்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

Marienschwestern_2_brennende_Lichter_i.jpg

மாவீரன் மேஜர் சிட்டுவிற்கு, வீர வணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கம் மேஜர் சிட்டு,

வீரவணக்கம் மேஜர் சிட்டு,

ஆம் அது பெரிய மடுவில் ஓர் வலிந்த தாக்குதல்.. உள்ளுக்கு இறங்கும் சண்டை அணிக்கு அடுத்த அணியில் சிட்டு பங்குபற்றி இருந்தார். சண்டக்கு எல்லோரும் தயாரான நேரத்தில் அந்த கும் இருட்டில் .. மெதுவாக இந்த பாடலை அவர் பாடினார்.. சாவினைத்தோழ் மீது தாங்கிய என்ற அந்தப்பாடல்.. அந்த சண்டையில் தான் செத்துவிடுவேன் என்று அவர் முன்னதாகவே சொன்னார் அதனால் தான் என்னவோ இந்த பாடலைப்பாடினார். சண்டை ரீம் நகர்ந்தது. ஒரு மணித்தியாலம் அளவில் காயப்பட்ட போராளிகளைக்கொண்டு வந்தார்கள். அதில் சிட்டுவும் ஒருவர் தலையில் பலத்தகாயம். உயிர் இருந்தது ஆனால் உணர்வு இல்லை. கள முதலுதவி அளிக்கபப்பட்டு பிந்தளத்திற்கு அனுப்ப வாகனத்தை பார்த்திருந்த வேளை எதிரியின் மூன்று நான்கு செல்கள் அந்த பகுதியில் வந்து வெடித்தன. அதில் சிட்டு உட்பட மேலும் மூவர் வீரச்சாவடைந்தனர்.

சிட்டு 1988 ஆன் ஆண்டு இந்திய இராணுவ காலம் அது.. கணிசமானவர்கள் வெளி நாட்டிற்கும் கொழும்பிற்கும் சென்று கொண்டிருந்தனர். சிட்டுவைப்பொறுத்தவரை ஒரு பொறுப்பும் இல்லை. குடும்பத்தில் பலர் வெளி நாட்டில். அவனையும் வெளினாடு போக கொழும்பிற்கு அனுப்பினார்கள். ஆனால் அவர் அப்படியே இயக்கத்திற்கு போய்விட்டார்.

1990 இல் காட்டிற்குள் இருந்து வரும்போதே பொக்குளிப்பான் நோயினால் பாதிக்கப்பட்டுத்தான் வந்தார். யாழ் மாவட்ட படையணியில் இருந்து பின்னர் அரசியலுக்கு வந்தார்.

1991 இல் யாழ் மாவட்ட கலை பண்பாட்டு கழக பொறுப்பாளராக இருந்தார். 1993 இல் புலிகளின் குரல் பொறுப்பாக சில காலம் இருந்தார். தனது பணிக்கு இயக்கத்திடம் காசோ அல்லது வாகனமோ கேட்கமாட்டார். வீட்டில் போய் ஆக்கினை கொடுத்து எல்லாம் வாங்குவார். ஏன் அவர் வைத்திருந்த மோட்டார் சைக்கிள் கூட வீட்டுக்காரரிடம் தான் வாங்கினார்.

.

1993 இல் கைதடியில் விபத்துக்குள்ளானார். அது ஒரு முஸ்பாத்தி...

இவரிம் மோட்டார் சைக்கிளுக்கு லைட் பிரச்சினை ஒரு குறிப்பில் ஓடிக்கொண்டு இருந்தார். உழவு இயந்திரம் ஒன்று ஒற்றை லைட்டுடப் வந்து கொண்டு இருந்தது, இவர் வேகமாக சென்று கொண்டிருந்தார், மோட்டார் சைக்கிளாக்கும் என்று சாதுவாக வெட்டி கொண்டு சென்று பெட்டியில் மோதினார்.

.

நல்ல பாடகன், கவிஞன், முஸ்பாத்திக்காரன் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருப்பான்.

.

தன் மனதளவில் இரு சிறிய காதலும் இருந்தது. ஆனால் அதுபற்றி தெரியப்படுத்தவில்லை என்பதால் சிலரால் நச்சரிக்கப்பட்டார். அதனால் உண்மையில் அவர் பாதிக்கப்பட்டார். பின்னர் தானாகவே சண்டைக்கு போகப்போறேன் என்று கேட்டுச்சென்றார். விடாப்பிடியாக நின்றதனால் ஒரு ஆறுமாதம் போய்விட்டு வா என்று கூறி வட்டக்கச்சி பண்ணையில் வைத்து சண்டைக்கு நீற்பண்ணி அனுப்பப்பட்டார்.

சிட்டு வீட்டில் கடைக்குட்டி. சரியான செல்லம் ,

சிட்டுவின் அப்பா கோவில் பூசகர் ...அப்பாவிற்கும் மகனிற்கும் நடக்கும் பகிடியும் , சண்டைகளும் தாங்க முடியாது அப்படி ஒரு குளப்படி, குறும்புக்காரன்.

படிக்கின்ற காலத்தில் ஆசிரியர்கள் அதிபர்கள் அனைவருக்கும் குவாட்டஸ்ஸில் இருக்கும் போது செய்கின்ற அனியாயம் கொஞ்சமல்ல.

எல்லாமே இப்ப மாதிரி இருக்கு...

( சக போராளியிடம் இருந்து சிட்டு பற்றி கேட்ட கதை... நன்றி)

உமை

  • கருத்துக்கள உறவுகள்

நான் சிட்டண்ணாவின் வீர வணக்க கூட்டத்தில் கலந்து கொண்டேன் ம்...ம்............ இழப்புதான் ஆனால் அவர் சண்டைக்கு போக வேண்டிய நிலமை நான் அறிந்தது அத சொல்லவிரும்பல ஆனால் அந்த காலத்தில் அரசியல் போராளிகளோ, கலைபண்பாட்டு போராளிகளோ சண்டைக்கு போக வேண்டிய கட்டாய சுழல் இல்லை.

வீர வணக்கம் உங்கள் வழித்தடங்களை சுமந்து நா(ம்)ன்.....................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் சிட்டண்ணாவின் வீர வணக்க கூட்டத்தில் கலந்து கொண்டேன் ம்...ம்............ இழப்புதான் ஆனால் அவர் சண்டைக்கு போக வேண்டிய நிலமை நான் அறிந்தது அத சொல்லவிரும்பல ஆனால் அந்த காலத்தில் அரசியல் போராளிகளோ, கலைபண்பாட்டு போராளிகளோ சண்டைக்கு போக வேண்டிய கட்டாய சுழல் இல்லை.

வீர வணக்கம் உங்கள் வழித்தடங்களை சுமந்து நா(ம்)ன்.....................

புலிக்குரல் ஊகங்களை இங்கு சொல்லி சிட்டுவின் தியாகத்தைக் கூறுபோடாதிருங்கள். நீங்கள் அறிந்தவற்றில் பல பொய்யானவை(என்னவென்று புரிந்து கொள்வீர்கள்) சிட்டு விரும்பியிருந்தால் எங்கள் எல்லோரையும் விட மேலான வசதிகளுடன் வாழ்ந்திருக்கலாம். அவ்வளவு வசதியை அவனது குடும்பம் செய்யக்காத்திருந்தது. உறவுகள் அவனது பதிலுக்காக காத்திருந்தும் கடைசிவரை தனது கொள்கைக்காக எல்லாவற்றையும் துறந்த போராளி.

இயல்பிலே அமைந்த கலகலப்பான சுபாவம் உங்கள் காது கேட்ட விடயங்களுக்கான காரணமாக இருக்கலாம். மற்றும்படி அவன் ஓர் சிறந்த போராளியாக அதாவது உயிர்விடும்வரை வாழ்ந்துவிட்டுப் போனான் என்பது தான் உண்மை.

அவனது வழித்தடங்களை சுமந்துள்ள நீங்களா இப்படியொரு சந்தேகத்தை அவன் மீது விதைத்துவிட்டுள்ளீர்கள் ?

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட்டு தந்து...எம்மை விட்டு....பறந்த சிட்டு....!

நன்றி: பூராயம்,தமிழ்ப்புலிகள் போன்ற வலைப்பூக்கள்.

ஒரு அழகிய பகற்பொழுது. அது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி குமாரசுவாமி மண்டபம். சமகாலக் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. இரண்டு போராளிகள் எமக்கு நிலைமைகளை விளக்கிக் கொண்டிருந்தனர். இருவரையும் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின்னர் ஒரு போராளி கேட்டார் உங்களுக்கு ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் எம்மிடம் கேளுங்கள். தயக்கம் இருந்தால் ஒரு சிறிய கடதாசியில் எழுதி முன்னாலே அனுப்புங்கள். நிறைய கேள்விகள் கேட்டனர். எல்லாவற்றிற்கும் பதில்கள் கிடைத்தன.ஒரு மாணவன் கேட்டிருந்தான் அண்ணா ஒரு பாடல் பாடிக்காட்டுங்கள்? நான் நினைத்தேன் ஏன் இவன் இப்படி கேட்கிறான் என்று. அப்ப அந்த போராளி அண்ணா சொன்னார் கருத்தரங்கு முடியும் போது பாடுகிறேன். நான் எதையும் நினைக்கவில்லை. பின்னர் முடியும் தறுவாயில் புன்முறுவல் பூத்த முகத்துடன் "சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்...." என்ற "உயிர்ப்பூ" படப்பாடலை பாடினார். அப்போதுதான் தெரிந்தது இவர்தான் போராளிப்பாடகர் சிட்டு என்று.

"ஜெயசிக்குறு" என்று புறப்பட்டு தமிழரின் தலை கொய்வேன் என்ற சிங்களத்துச்சேனை அடிவாங்கி அடிவாங்கி ஆமையாய் நகர்ந்து வன்னியின் கழுத்தை நெரிக்க முற்பட்டது. பிஞ்சும் பழமும் களமுனையில் வெஞ்சமராடிய காலம். எம் விடுதலை சேனையோ தடுத்து நிறுத்த முழுப்பலத்தையும் பிரயோகித்த நேரம். காலம் அவனையும் களமுனைக்கு தள்ளியது. குரலால் போராட்டத்துக்கு வலுச்சேர்த்த போராளி, இப்போது குண்டுகளால் எதிரியை திணறடிக்கிறான். மண்ணை காக்கும் பணியில் மாவீரனாகிறான். மாவீரன் சிட்டு வித்தாக விழுந்த தினம் இன்றுதான்(01.08.1997). பதினொரு வருடங்கள் பறந்துவிட்டன. மனதை விட்டு பறக்காமல் எம்முள் வாழ்கிறான் சிட்டு.

செங்கதிரின் "கண்ணீர்ரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்...." என்ற பாடலுக்கான மெட்டுத்தான் எமக்கு சிட்டுவை ஒரு பாடகனாக தமிழீழ மண்ணிற்கு தந்தது. ஒரு போராளிப்பாடகன். இவன்தான் நிறைய போராளிகளுக்கு வழிகாட்டியாய் அமைந்தான். இப்போதெல்லாம் நிறைய போராளிக் கலைஞர்கள் உருவாகிவிட்டார்கள். இவற்றிற்கெல்லாம் அடிநாதம் எங்கள் சிட்டு.

கேணல்.கிட்டு வீரச்சாவு அடைந்த உடன் செய்தி மட்டுமல்ல உருவாகிய பாடலும் உள்ளத்தை பிசைந்தது. முதலில் வந்த "தளராத துணிவோடு களமாடினாய்......" என்ற பாடலை பாடியவர் மேஜர் சிட்டு. அற்புதமான பாட்டு. பின்னர் நெய்தல் ஒலிப்பேழையில் எஸ்.ஜி.சாந்தனுடன் இணைந்து "வெள்ளி நிலா விளக்கேற்றும் பாடல்...." கரும்புலிகள் ஒலிப்பேழையில் "ஊர் அறியாமலே உண்மைகள் உறங்கும்..." என்ற தொகையறாவுடன் தொடங்கும் "சாவினைத்தோள் மீது தாங்கிய ...." என்ற பாடல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.

பூநகரி வெற்றிப்பாடல் "சங்கு முழங்கடா தமிழா இந்த சாதனை பாடடா கவிஞா.." என்ற பாடலை மீண்டும் சாந்தனுடன் பாடி புகழ் அடைந்தார். இவரது நிறைய பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.

இசைபாடும் திரிகோணம் ஒலிப்பேழையில் இடம்பெற்ற "கடலின் அலை வந்து தரையில் விளையாடும்..." என்ற பாடலும் அதே தொகுப்பில் 'ரணசுரு','சூர்யா',உட்பட 3கப்பல்களை தாக்கியளித்த கரும்புலிகள் நினைவாக வந்த "விழியில் சொரியும் அருவிகள்...." என்ற பாடலும் மிக உருக்கமானவை. இந்த கரும்புலித் தாக்குதலுடன்தான் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது.

பாட்டுகள் தந்த எங்கள் சிட்டுக்கு என உருவாக்கப்பட்ட ஒரு நினைவுப்பாடல்....

ஒருமுறை உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள் என் எல்லோரும் வேண்டுகின்ற "தாயக கனவுடன் சாவினைத் தழுவிய சந்தன்ப்பேழைகளே........." என்ற துயிலும் இல்ல பாடலுக்கும் சிட்டு குரல் கொடுத்துள்ளார். முன்னர் இப்பாடலின் சரணத்தில் "..நள்ளிராவேளையில் நெய்விளக்கேற்றியே நாம் உம்மை பணிகின்றோம்..." என்ற வரி பின்னர் காலச்சூழ்நிலைக்கேற்ப மாற்றப்பட்டு விட்டது.

நெஞ்சைப்பிழியும் நினைவு ஒன்று. சிட்டு களத்திற்கு போக தயாராகிறான். அவனது போராளி நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள் உனக்கு பிடித்த பாடல் ஒன்றை எமக்காக பாடு என்று. எல்லாம் நினைத்து நடப்பதில்லை. ஏன் அப்படி கேட்டார்களோ தெரியாது. ஆனால் சிட்டு இதே துயிலுமில்ல பாடலையே நண்பர்களுக்காக இறுதியாக பாடினானாம். எல்லோரும் அழுது விட்டார்களாம். இப்போது அந்நண்பர்கள் செங்களம் மீதிலே உன்னுடைய கனவை நனவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதனை ஒரு போராளி நண்பர் பகிர்ந்து கொண்டார். மனதைப்பிழியும் நினைவு ஒன்று. அந்தப்பாடல் துயிலும் இல்லத்துக்கு மட்டுமே உரியது என்பதால் இங்கே தரமுடியவில்லை.

காலம் முழுவதும் வாழ்வான் சிட்டு எங்கள் நெஞ்சைப்பிழியும் பாட்டுக்கள் மூலம்.

சிட்டுவின் எட்டாவது ஆண்டு நினைவில் பூராயம் வலைப்பூவில் வந்த பதிவு:

போர்க்குயிலின் மறைவு.

தமிழீழப் போராட்டத்தில் எழுச்சிப் பாடல்களின் பங்கும் தாக்கமும் மிகப்பெரியது. “புலிகள் பாடல்கள்” என்ற முதலாவது வெளியீட்டிலிருந்து இன்றுவரை நூற்றுக்கணக்கான பாடல்கள் இயற்றி இசையமைக்கப்பட்டு மக்களிடம் போய்ச் சேர்ந்துள்ளன. எண்பதுகளில் பெரும்பாலும் தமிழகக் கலைஞர்களைக் கொண்டு உருவான பாடல்களே அதிகம். டி.எம்.சௌந்தரராஜன், மலேசியா வாசுதேவன், ஜெயச்சந்திரன், மனோ, பி.சுசீலா, சொர்ணலதா, வாணி ஜெயராம் என்று திரையிசையிற் பிரபலமான பல பின்னணிப் பாடகர்களின் குரல்களில் அப்போதைய தமிழீழ எழுச்சிப் பாடல்கள் பாடப்பட்டன.

இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின் தொன்னூறுகளில் யாழ்ப்பாணத்திலேயே பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டதுடன் முழுக்க முழுக்க உள்நாட்டுக் கலைஞர்களைக் கொண்டே அனைத்தும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. அந்நேரத்தில் சிறந்தவொரு பாடகன் எங்களுக்குக் கிடைத்தான். மேஜர் செங்கதிர் என்ற போராளிக் கவிஞனின் வரிகள் பாடலாக உருப்பெற்றபோது இப்போராளிப் பாடகன் அறிமுகமானான். “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற பாடலே இப்போர்ப்பாடகனின் முதலாவது அரங்கேற்றம். அதன்பின் களத்தில் சாகும்வரை சுமார் 75 பாடல்கள் வரை பாடியுள்ளான் சிட்டு எனும் இப்போராளிப் பாடகன்.

விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தின் பொறுப்புக்களிலும் அரசியல்துறையின் பொறுப்புக்களிலும் தனது போராட்டப் பணியைச் செய்து வந்தான். கேணல் கிட்டு அவர்களுக்காக 'சிட்டு' பாடிய “கடலம்மா” பாடல் மிகுந்த பிரபலம். சிட்டுவின் குரல் யாரையும் கட்டிப்போட வல்லது. பின் ‘உயிர்ப்பூ’ திரைப்படத்தில் சிட்டு பாடிய

‘சின்னச் சின்னக் கண்ணில் - வந்து மின்னல் விளையாடிடும்’

என்ற பாடலைக் கேட்டு உருகாதவர்கள் இருக்க முடியாது. வெளியிடப்படும் எந்த ஒலிநாடாக்களை எடுத்தாலும் அதில் சிட்டுவின் பாடல் இருக்கும்.

ஜெயசிக்குறு தொடங்கியபின் வன்னியில் கடும் சண்டை மூண்டது. வெற்றி தோல்வி எதுவும் தெரியாமல், எப்போது முடியுமென யாராலும் சொல்ல முடியாமல் நீண்டது சண்டை. அச்சமர் தொடங்கியதிலிருந்து சமர்க்களத்திற் பணியாற்றினான் சிட்டு. இறுதியில் ஆவணி முதலாம் திகதி ஓமந்தை இராணுவத்தளத்தின் மீது புலிகளின் திட்டமிட்ட அதிரடித் தாக்குதலின்போது களத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான் எங்கள் பாடகன் மேஜர் சிட்டு.

-----------------------------------------------------------

சிட்டண்ணையைச் சந்தித்த சம்பவமொன்று:

“கூப்பிடு தூரம்” என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதில் ஜெயசிக்குறு தொடங்கிய பின் சண்டை நடக்கப்போகும் இடங்களைப் பார்க்கச் சென்றிருந்த நிகழ்வைப் பதிந்திருந்தேன். அன்று தான் நான் இறுதியாகச் சிட்டண்ணையைச் சந்தித்தேன்.

புளியங்குளச் சந்தியிலிருந்து கிழக்குப் பக்கமாக, புளிங்குளத்தின் அணைக்கட்டால் நானும் நண்பர்களும் நடந்து சென்று கொண்டிருக்கிறோம். அணைக்கட்டை மையமாக வைத்து பதுங்குகுழிகளும் காவலரண்களும் போராளிகளால் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சற்றுத் தொலைவில் புளியமரத்தின் கீழ் கும்பலாக முப்பது பேர் வரையில் இருந்தார்கள். மரத்தை நெருங்க, அவர்கள் பாட்டுப்பாடி கலகலப்பாக இருப்பது புரிந்தது. போராளிகள் வழமையாக ஆபத்தற்ற இடங்களில் கும்பலாக இருந்து பாடல்கள் பாடிப் பொழுதைக் கழிப்பது வழமை. அதுவும் போர்க்களம் சார்ந்த இடங்களில் ஆபத்தில்லாத பட்சத்தில் இது நிச்சயம் நடக்கும். நாமும் அதை ரசித்தவாறு கடந்துசெல்ல முற்பட்ட போதுதான் பாடிக்கொண்டிருந்த அந்தக் குரல் சாதாரணமானதில்லையென்பது புரிந்தது.

“சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்.

அண்ணன் என்ற நெஞ்சில் நூறு அர்த்தங்களை தூவிடும்”

இந்தப் பாட்டை யாரால் அவ்வளவு உருக்கமாகப் பாட முடியும்?அதே சிட்டண்ணை தான் பாடிக்கொண்டிருந்தார். கையில் ஒரு தண்ணீர்க் கான். தானே தாளம்போட்டுப் பாடிக்கொண்டிருந்தார். மரத்தடிக்குச் சென்றோம். அந்தப் பாட்டு முடியுமட்டும் நின்று கேட்டு ரசித்தோம். புதிய போராளிகளைக் கொண்ட அணியொன்றுக்குப் பொறுப்பாளனாய் கடமையாற்றிக்கொண்டிருந்தார். எம்மைக் கண்டதும் நலம் விசாரித்தார். சனம் என்ன கதைக்குது எண்டு வினாவினார். சனங்களின் இடப்பெயர்வுகள் பற்றியும் வெளியே பரப்புரைகள் பற்றியும் விசாரித்தார்.

நாங்கள் இடங்கள் பார்த்து மதியமளவில் மீண்டும் அவ்வழியால்தான் புளியங்குளச் சந்திக்கு வந்தோம். அப்போது காவலரண் அமைத்துக்கொண்டிருந்தது அவரது அணி. வேலை முடிந்து மதிய உணவுக்காக மீண்டும் மரத்தடிக்கு வந்துகொண்டிருந்தார்கள். எம்மைக்கண்ட சிட்டண்ணை,

“வாங்கடாப்பா வந்து எங்கட சாப்பாட்டையும் ஒருக்காச் சாப்பிடுங்கோ”

எண்டு கூப்பிட்டார். எவ்வளவு மறுத்தும், வெருட்டி, கூட்டிக்கொண்டு போய் இருத்தி, சாப்பாடு தந்து தான் விட்டவர். எல்லாம் முடிந்து சந்தி நோக்கி வரும்போது தான் முதற்பதிவில் குறிப்பிட்ட எறிகணை வீச்சும் மற்றதுகளும் நடந்தன.

அருமையான ஒரு பாடகன், போராளி. எழுச்சிப்பாடல்களைப் பாடிக்கொண்டிருந்த அந்தப் போர்க்குயில் ஒருநாள் ஊமையாகிவிட்டது. அவரின் எட்டாம் ஆண்ட நினைவுதினம் இன்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்டுவின் பாடல்கள் சில :-

புலியொரு காலமும் பணியாது

தளராத துணிவோடு கேணல் கிட்டு

வெற்றி பெற்று தந்து விட்டு

சங்கு முழங்கட தமிழா

  • கருத்துக்கள உறவுகள்

சாந்திக்கா நன்றி இனைப்பிற்கு. எமது விடுதலைக்காக மரணித்த வீரர்கள் கடவுளுக்கு சமன், அவர்களை பற்றி ஊகங்கள்ளோ என்னவென்றாலும் செல்ல தகுதி உடையவர் தலைவர் மட்டுமே, எங்களுக்கு அந்த அருகதை இல்ல, அவர்களின் தியாகங்களை இற/ருக்கும் வரை போற்றும் & கனவை நினைவக்க போரடுவேம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எமது விடுதலைக்காக மரணித்த வீரர்கள் கடவுளுக்கு சமன், அவர்களின் தியாகங்களை இற/ருக்கும் வரை போற்றும் & கனவை நினைவக்க போரடுவேம்.

உண்மைதான் உடையார். எங்களுக்காக தங்களை இல்லாமல் ஆக்கியவர்களை ஆவணப்படுத்தலும் அவசியமானது.

சிட்டு அண்ணனுக்கு வணக்கங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்டு பாடிய கடைசிப்பாடல்.

தமிழீழ மொட்டுக்கள் இசைத்தட்டிலிருந்து....இணைப்பில் அழுத்தி பாடலைக் கேளுங்கள்.

சிறகு முளைத்து உறவை நினைத்து பறக்கும் குருவிகள்.

Edited by shanthy

  • கருத்துக்கள உறவுகள்

சிட்டுவின் பாடல்களுக்கு நான் அடிமை..நல்ல ஒரு கலைஞ்ஞன்.. தன்பாடல்களில் என்றைக்கும் எங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பான்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்டுவும் சாந்தனும் இணைந்து பாடிய இப்பாடல் அதிகளவில் மக்களிடம் பேசப்பட்ட பாடல்களில் ஒன்று.

வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் கடல் விசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்.

  • கருத்துக்கள உறவுகள்

View Posttigertel, on 03 August 2011 - 07:43 PM, said:

நான் சிட்டண்ணாவின் வீர வணக்க கூட்டத்தில் கலந்து கொண்டேன் ம்...ம்............ இழப்புதான் ஆனால் அவர் சண்டைக்கு போக வேண்டிய நிலமை நான் அறிந்தது அத சொல்லவிரும்பல ஆனால் அந்த காலத்தில் அரசியல் போராளிகளோ, கலைபண்பாட்டு போராளிகளோ சண்டைக்கு போக வேண்டிய கட்டாய சுழல் இல்லை.


வீர வணக்கம் உங்கள் வழித்தடங்களை சுமந்து நா(ம்)ன்.....................



புலிக்குரல் ஊகங்களை இங்கு சொல்லி சிட்டுவின் தியாகத்தைக் கூறுபோடாதிருங்கள். நீங்கள் அறிந்தவற்றில் பல பொய்யானவை(என்னவென்று புரிந்து கொள்வீர்கள்) சிட்டு விரும்பியிருந்தால் எங்கள் எல்லோரையும் விட மேலான வசதிகளுடன் வாழ்ந்திருக்கலாம். அவ்வளவு வசதியை அவனது குடும்பம் செய்யக்காத்திருந்தது. உறவுகள் அவனது பதிலுக்காக காத்திருந்தும் கடைசிவரை தனது கொள்கைக்காக எல்லாவற்றையும் துறந்த போராளி.


இயல்பிலே அமைந்த கலகலப்பான சுபாவம் உங்கள் காது கேட்ட விடயங்களுக்கான காரணமாக இருக்கலாம். மற்றும்படி அவன் ஓர் சிறந்த போராளியாக அதாவது உயிர்விடும்வரை வாழ்ந்துவிட்டுப் போனான் என்பது தான் உண்மை.


அவனது வழித்தடங்களை சுமந்துள்ள நீங்களா இப்படியொரு சந்தேகத்தை அவன் மீது விதைத்துவிட்டுள்ளீர்கள் ?


This post has been edited by shanthy: 03 August 2011 - 09:35 PM 

சாந்தி அக்கா பேராளிகளின் தியாகங்களுக்கு முன் நான் எப்பவுமே வீரம் பேசியதில்லை..... இதற்க்கான காரணத்தையும் நான் எழுதல......!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிக்குரல்,

இத்திரி சிட்டுவிற்கான நினைவுமீட்டலாகத்தான் இடப்பட்டது. ஏன் களம் போனான் எப்படி மரணம் நிகழ்ந்தது என்ற ஆராட்சி நடக்கவில்லை.

ஆக நீங்கள் பூடகம் போட்டு எழுதிய கருத்து இங்கு பொருத்தமற்றது அதையே சுட்டினேன்.

நீங்கள் தெரிந்த காரணத்தை பகிரவில்லை. ஆனால் ஏதோவொரு பூதம் இருப்பது போன்ற தோற்றத்தை உங்கள் கருத்து உருவாக்கியிருக்கிறது.

சாவீட்டில் சாவில் இழந்த உயிருக்கான மதிப்பைப் பேசலாமே அதுதான் அந்த உயிருக்கான கெளரவம்.

உங்களை சிரமப்படுத்தியமைக்கு மன்னிக்கவும்.

Edited by shanthy

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் மேஜர் சிட்டுவின் நினைவுகள் தாங்கிய இணையம்

http://chiddu1997.wordpress.com/

annalingam-1.jpg

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.