Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எமது புலம் பெயர் வாழ்க்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எமது புலம் பெயர் வாழ்க்கை

அண்மையில் எனக்கு தெரிந்த குடும்பத்தைச்சேர்ந்த 27 வயது வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் அகாலமரணமானார். விபத்து மரணம் என்பதால் உடனே அனுமதி தரமாட்டார்கள் என்பதால் உடனடியாக செல்லவில்லை. அப்படியே ஒரு கிழமையாகிவிட்டதால் இனியும் தாமதிக்கமுடியாது என்பதால் அவர்களது வீட்டுக்கு சென்றேன். போகமுன் எனது தம்பிக்கு தகவலைத்தெரிவித்தபோது தானும் என்னுடன் வருவதாக சொல்லியிருந்தார். அவர்களது வீட்டிற்கு நான் முதலில் சென்றுவிட்டதால் கொஞ்சம் தம்பிக்காக காத்திருந்தேன். அப்போது அக்கம் பக்கங்களை நோட்டம்விட்டேன். இவரது அக்கம்பக்கம் எல்லாம் அமைதியாக இருந்தன. அனேகமானவை பூட்டப்பட்டிருந்தன. இவரது வீட்டின் முன் வந்ததும் கேற்றில் இவரது படத்துடன் அவர் விபத்தில் காலமானார் என்றும் எப்போது இவரது பூவுடலைப்பார்க்கலாம் என்றும் எப்போது தகனம் செய்யப்படும் என்றும் அதனுடைய விபரங்களும் பிரெஞ்சில் மட்டும் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. நான்அதை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு வெள்ளையும் அல்லாத கறுப்புமல்லாத ஒருவர் பக்கத்தில் வந்தார். இதை வாசித்துவிட்டு இவர் இறந்துவிட்டாரா என என்னைக்கேட்டார். நான் ஆம் விபத்தில் என்றதும் சிறு பிள்ளையிலிருந்தே அவரைத்தெரியும் என்றுவிட்டு சென்றார். நான் அவரைப்பார்த்தபடியே நின்றேன். இவரது பக்கத்துவீட்டைத்திறந்து அவர் சென்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இறந்த இந்த பையன் இரவு லா சப்பலில் இருந்து வரும்போது ராசவள்ளிக்கிழங்கு வாங்கிவந்து வெட்டித்துப்பரவு செய்து தாயாரிடம் அம்மா ஆக்கிவையுங்கள். 10 நிமிடத்தில் வந்துவிடுகின்றேன் என்று சென்றிருந்தார். 1 மணித்தியாலத்தால் பொலிசார் வந்து உங்கள் மகன் இறந்துவிட்டார் என அறிவித்ததுடன் ஆரம்பித்த அழுகுரல் இன்னும் நிற்கவில்லை. 27 வயது வளர்த்த தனது மூத்த மகனை நினைத்து அந்த பெற்றோர் விடும் அழுகுரல் எம்மையெல்லாம் உலுக்கிக்கொண்டிருக்க அவரை சிறுவயதிலிருந்தே தெரிந்த ஒரு வேலிக்குள் இருக்கும் பக்கத்து வீட்டுக்காறருக்கு எதுவுமே தெரியாதது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் அபாயமாகவும் தெரிந்தது. என்ன வாழ்க்கையிது.................??????????

என்ன வாழ்க்கையிது.................??????????

தாயக வாழ்க்கையை அந்த உணர்வுகளை இங்கு எதிர்பார்க்கமுடியாது.

புலம்பெயர் வாழ்க்கை இப்படித்தான். இதில் அயலார் யார் என்பதே தெரிவதில்லை, ஒருபக்கம் இயந்திர வாழ்க்கை மறுபக்கம் நவீன நகரங்களின் இயல்பு.

கூட்டுப்புழு வாழ்க்கையின் பிரதிபலிப்பின் இவைகளும் ஒன்று விசுகர் :(:( இவர்கள் ஒருவகையில் அனுதாபத்திற்குரிய நோயாளிகளே <_<<_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயக வாழ்க்கையை அந்த உணர்வுகளை இங்கு எதிர்பார்க்கமுடியாது.

புலம்பெயர் வாழ்க்கை இப்படித்தான். இதில் அயலார் யார் என்பதே தெரிவதில்லை, ஒருபக்கம் இயந்திர வாழ்க்கை மறுபக்கம் நவீன நகரங்களின் இயல்பு.

விசுகு! அகூதாவின் பதில்தான் எனதும்..........வாழ்க்கை முறை விரிவடைய விரிவடைய உணர்வுகளும் வித்தியாசப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது விசுகு.

என்ன... இருந்தாலும் தாய் நாட்டைப்(ஈழம்) போல் வருமா?

பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்.

ஜேர்மனியில், தனியே வசித்த ஒரு வயோதிபர் தொலைக்காட்சி பார்க்கும் போது.... இருந்த கதிரையில் மாரடைப்பால்... காலமாகிவிட்டார்.

அவரின் உடலை மூன்று மாதத்தின் பின் பொலிசார் கண்டு பிடித்தார்கள். அதுவரை, அவர் இறந்த நேரத்திலிருந்து... தொலைக்காட்சி மூன்று மாதமாக ஒடிக் கொண்டிருந்தது.

இது, எனது வீட்டின் அருகில் நடந்தது, நேரில் கண்டது:

ஒரு வயோதிப ஜேர்மன் மாது. தனியே அந்த வீட்டில் குடியிருப்பவர். நத்தார், புது வருசம் போன்ற நாட்களில் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் வெகு தூரத்திலிருந்து, உறவு பாராட்டி வருவார்கள். அவ வெளியில் யாருடனும் தொடர்பு இல்லை. என்னுடன் கொஞ்சம் கதைப்பார்.

எமது தெருவில் குப்பை வாழி எடுப்பது செவ்வாய்க்கிழமை. அதே..... நாளிற்கு அவவும் குப்பை வாழியை தெருவில் விட்டுட்டா...

அதற்குரியவர்கள் குப்பையை அள்ளிச் சென்ற பின்பும் அந்த வாழி, இரண்டு நாளாக வீட்டிற்குள் எடுத்துச் செல்லப் படாமல் தெருவிலேயே.... நின்றது.

அக்கம், பக்கம் காவல் தூறைக்கு அறிவித்து.... அவர்கள் வந்து, வீட்டை திறந்து பார்த்த போது....

கார்பெற் தடக்குப் பட்டு, நில அறை நிலத்தில் உள்ள படியில்... பிடரி அடி பட விழுந்து இரத்தப் பெருக்கால் மரணமாகி விட்டார்.

அந்த நேரம் யாரும், அருகில் இருந்தால் அவ தப்பியிருப்பா.

உதுகளைப் பார்க்க... தாய் நாடு திறம். அங்கை மனுசன் வாழக்கூடிய சூழ்நிலை இருந்தால்... சொல்லுங்கோ...

இப்பவே... பிளேனுக்கு புக் பண்ணுறன்.

Edited by தமிழ் சிறி

என்ன செய்வது விசுகு.

என்ன... இருந்தாலும் தாய் நாட்டைப்(ஈழம்) போல் வருமா?

உதுகளைப் பார்க்க... தாய் நாடு திறம். அங்கை மனுசன் வாழக்கூடிய சூழ்நிலை இருந்தால்... சொல்லுங்கோ...

இப்பவே... பிளேனுக்கு புக் பண்ணுறன்.

ஆனால், முடிந்தவரை 'பணம் தான் எல்லாம்' என்றில்லாமல் எமது கலாச்சாரங்களை, விழுமியங்களை ஊட்டி இந்த தலைமுறையை வளர்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு இன்னொரு காரணம் இருக்கிறது.. நம்மவர்கள் அயலவர்களோடு வைத்துக் கொள்ளும் தொடர்பாடல் குறைவு.

லண்டனில் இருக்கும் தமிழர்கள் ஒருவரை ஒருவர் எதிரி போலத்தான் பார்ப்பார்கள். அதேவேளை வெளியிடங்களில் மற்றவர்கள் ஒருவரை ஒருவர் தினமும் அறிமுகப்படுத்துவதில் இருந்து நட்பைப் பேணிக் கொள்கின்றனர்.

அதுமட்டுமன்றி தமிழர்கள்.. உட்பட்ட தெற்காசியர்கள் தங்கள் சொந்த மொழியாட்களுடன் தான் அதிகம் உறவாடுகின்றனர். பிறரை அணுகுவதில்லை. இது பல்லின கலாசாரத்தை மதிக்கும்.. ஆனால் ஒரு தேச மக்களை விரும்பும்.. மேற்கு நாடுகளில்.. மிகவும் தவறான அணுகுமுறை ஆகும்.

மொழிப் பிரச்சனையும்.. இதற்கு ஒரு காரணம். மேலும்.. பிள்ளைகளுக்கு மொழிப் பிரச்சனை இல்லா விட்டாலும்.. பெற்றோரின் பயத்துடன் கூடிய கண்டிப்பு.. அவர்களையும் விலக்கி வைக்கிறது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழ்கின்ற நாட்டில் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். சின்னவயது தனிமையான வாழ்கை எனவும் சொல்லமுடியாது வெள்ளைக்கரப் பெட்டையோடு திருமணவாழ்கை ஒரு குழந்தையும்கூட. இன்னுமொரு திரியில் நான் எழுதிய உலலாசப் பணயக் கப்பல் கட்டும் தளத்தினிலும் வேலை செய்தவர் பழக்கதோசம் காலப்போக்கில் நிதக் குடிகாரராகிவிட்டார். வெள்ளைப்பெட்டையும் அப்பிடிஇப்பிடியாப் போச்சுது. ஓரிருமுறை ஆபத்தான உடல்நலக்குறைவு அவ்வேளையிருந்த உடனடி நண்பர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். விதிவலியது இரண்டொர நாட்களாகத் தொலைபேசி அழைப்பினை ஏற்கவில்லை. சந்தேகத்தில் சென்றுபோய்ப்பார்த்தால் இறந்து மூன்றுநாட்கள். காவற்துறைக்கு அறிவித்து அனைத்தையும் நடத்திவைக்க அலுவல்கள் நடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

வயதானவர்கள் கழுத்தில் மாட்டிக்கொள்ளவென்று கனடாவில் ஒரு உபகரணம் கிடைக்கிறது. அவர்கள் தவறி விழுந்தாலோ அல்லது அசைவற்று இருந்தாலோ அந்த நிறுவனத்துக்கு அந்த உபகரணம் தகவலை அனுப்பிவிடும். :unsure:

இங்கும் அந்த உபகரணம் உள்ளது. அதனை கழுத்தில் கொழுவுவார்கள். தனக்கு ஆபத்து என்றால்... அவர் தான்..... அதனை விரலால் அமத்த வேண்டும்.

அமத்தினால் கூவிக் கொண்டு, வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எமது புலம் பெயர் வாழ்க்கை

அண்மையில் எனக்கு தெரிந்த குடும்பத்தைச்சேர்ந்த 27 வயது வாலிபர் மோட்டார் சைக்கிள் விபத்தில் அகாலமரணமானார். விபத்து மரணம் என்பதால் உடனே அனுமதி தரமாட்டார்கள் என்பதால் உடனடியாக செல்லவில்லை. அப்படியே ஒரு கிழமையாகிவிட்டதால் இனியும் தாமதிக்கமுடியாது என்பதால் அவர்களது வீட்டுக்கு சென்றேன். போகமுன் எனது தம்பிக்கு தகவலைத்தெரிவித்தபோது தானும் என்னுடன் வருவதாக சொல்லியிருந்தார். அவர்களது வீட்டிற்கு நான் முதலில் சென்றுவிட்டதால் கொஞ்சம் தம்பிக்காக காத்திருந்தேன். அப்போது அக்கம் பக்கங்களை நோட்டம்விட்டேன். இவரது அக்கம்பக்கம் எல்லாம் அமைதியாக இருந்தன. அனேகமானவை பூட்டப்பட்டிருந்தன. இவரது வீட்டின் முன் வந்ததும் கேற்றில் இவரது படத்துடன் அவர் விபத்தில் காலமானார் என்றும் எப்போது இவரது பூவுடலைப்பார்க்கலாம் என்றும் எப்போது தகனம் செய்யப்படும் என்றும் அதனுடைய விபரங்களும் பிரெஞ்சில் மட்டும் எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது. நான்அதை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு வெள்ளையும் அல்லாத கறுப்புமல்லாத ஒருவர் பக்கத்தில் வந்தார். இதை வாசித்துவிட்டு இவர் இறந்துவிட்டாரா என என்னைக்கேட்டார். நான் ஆம் விபத்தில் என்றதும் சிறு பிள்ளையிலிருந்தே அவரைத்தெரியும் என்றுவிட்டு சென்றார். நான் அவரைப்பார்த்தபடியே நின்றேன். இவரது பக்கத்துவீட்டைத்திறந்து அவர் சென்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இறந்த இந்த பையன் இரவு லா சப்பலில் இருந்து வரும்போது ராசவள்ளிக்கிழங்கு வாங்கிவந்து வெட்டித்துப்பரவு செய்து தாயாரிடம் அம்மா ஆக்கிவையுங்கள். 10 நிமிடத்தில் வந்துவிடுகின்றேன் என்று சென்றிருந்தார். 1 மணித்தியாலத்தால் பொலிசார் வந்து உங்கள் மகன் இறந்துவிட்டார் என அறிவித்ததுடன் ஆரம்பித்த அழுகுரல் இன்னும் நிற்கவில்லை. 27 வயது வளர்த்த தனது மூத்த மகனை நினைத்து அந்த பெற்றோர் விடும் அழுகுரல் எம்மையெல்லாம் உலுக்கிக்கொண்டிருக்க அவரை சிறுவயதிலிருந்தே தெரிந்த ஒரு வேலிக்குள் இருக்கும் பக்கத்து வீட்டுக்காறருக்கு எதுவுமே தெரியாதது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் அபாயமாகவும் தெரிந்தது. என்ன வாழ்க்கையிது.................??????????

மோட்டார் சைக்கிள் விபத்தா? :o ஐயோ பாவம். மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது மற்றவன் விடுற பிழைகளால் வரும் விபத்துக்களே அதிகம்.

நானும் இங்கு கார் இருந்தும் மோட்டார் சைக்கிள் தான் ஓட்டுவேன். அதில் பறக்கும் போது வரும் சுகமே தனி. அம்மாவும், மனிசியும் அதை வில் எண்டு சொல்லி தரும் ஆக்கினை அதிகம் ஆனால் இப்பொது புரிகிறது. ஏதும் நடந்தால் நாங்கள் போய் விடுவோம் ஆனால் அவர்களின் துக்கம் சொல்லில் வடிக்க முடியாது.

இதுதான் நான் ஓட்டும் வண்டி.

myr6i.jpg

myr62.jpg

Edited by Thumpalayan

வயதானவர்கள் கழுத்தில் மாட்டிக்கொள்ளவென்று கனடாவில் ஒரு உபகரணம் கிடைக்கிறது. அவர்கள் தவறி விழுந்தாலோ அல்லது அசைவற்று இருந்தாலோ அந்த நிறுவனத்துக்கு அந்த உபகரணம் தகவலை அனுப்பிவிடும். :unsure:

இந்த உபகரணம் தாயகத்திலும் பயனளிக்கக்கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டுப்புழு வாழ்க்கையின் பிரதிபலிப்பின் இவைகளும் ஒன்று விசுகர் :(:( இவர்கள் ஒருவகையில் அனுதாபத்திற்குரிய நோயாளிகளே <_<<_<

நாம் புல பெயர்ந்து இழந்தவை, இழந்து கொண்டிருப்பவை பல.

அத்துடன் பக்கத்து வீட்டுக்காரரை சொல்லி குற்றமில்லை, நங்கள் நன்றாக பழகினால் அவர்ளும் நன்றாக பழகுவார்கள், எனது அயலவர்கள் நல்லவர்கள்,

இது எப்படி இருக்கு.........

THE skeletal remains of a 75-year-old man lay in a central Perth state housing unit for up to two years despite neighbours urging housing department officials next door to check on him.

The man's remains were found on Thursday slumped against the bed in his Wellington Street unit by a Department of Housing worker.

The discovery has prompted state opposition housing spokesman Mark McGowan to demand the government conduct a full audit to ensure no other people are lying dead, dying or suffering in state-provided homes.

But Premier Colin Barnett says that's a gross overreaction and, sad though the case is, it is not the responsibility of Homeswest to look after the health and welfare of tenants.

Police say it appears the man died of natural causes and are preparing a report for the WA coroner.

WA Housing Minister Troy Buswell has asked his department to investigate why the central city Perth death was not discovered sooner.

Start of sidebar. Skip to end of sidebar.

End of sidebar. Return to start of sidebar.

Neighbours say they repeatedly urged housing department officials in the office block next to the apartments to check on the man after they noticed mail piling up.

"What about inspections? There's no duty of care. It's like that woman in Sydney, nobody cares about anyone else anymore,'' one woman told The West Australian newspaper.

In Sydney this week, police found the body of an elderly woman who had lain dead in her Surry Hills home in the central city for eight years.

Two people who live on the same floor as the dead man said they voiced their concerns to the department three times in the past two years, most recently six weeks ago.

"Our lease agreement says we are supposed to have an inspection every six months,'' one said.

"We've only had one in three years.''

Mr McGowan told reporters on Saturday that West Australians would be shocked that a fellow citizen had died and been left in his home for two years without being discovered.

"It defies belief that we can have a state government office next door to this property, complaints made and this property not investigated and inspected.''

Mr McGowan said there were about 40,000 Homeswest properties in WA and about half of them occupied by aged pensioners, underlying the need for regular inspections.

He urged the government to do a full audit to "make sure this doesn't happen again and that there aren't other people dead or suffering or dying''.

But Mr Barnett said demanding a full audit was a gross overreaction and he was sure Mr Buswell and Homeswest would ensure inspections were carried out to avoid a repeat of a very sad situation.

"It just shows, not many friends, not many family and unfortunately some people are totally alone,'' Mr Barnett told reporters.

"I don't think we need to exaggerate this, sad as it is, it's a fairly unusual occurrence.''

He said he assumed the man was receiving pension payments that were automatically going to pay his rent.

The premier said inspections clearly didn't happen and that would be investigated.

"But it is not something that is in a sense the fault of Homeswest.

"It's not their responsibility to look after the health a

nd welfare of tenants. They provide housing at subsidised rates, that's their prime role,'' Mr Barnett said.

http://www.perthnow.com.au/

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டார் சைக்கிள் விபத்தா? :o ஐயோ பாவம். மோட்டார் சைக்கிள் ஓட்டும் போது மற்றவன் விடுற பிழைகளால் வரும் விபத்துக்களே அதிகம்.

நானும் இங்கு கார் இருந்தும் மோட்டார் சைக்கிள் தான் ஓட்டுவேன். அதில் பறக்கும் போது வரும் சுகமே தனி. அம்மாவும், மனிசியும் அதை வில் எண்டு சொல்லி தரும் ஆக்கினை அதிகம் ஆனால் இப்பொது புரிகிறது. ஏதும் நடந்தால் நாங்கள் போய் விடுவோம் ஆனால் அவர்களின் துக்கம் சொல்லில் வடிக்க முடியாது.

இதுதான் நான் ஓட்டும் வண்டி.

myr6i.jpg

தும்பளையான்,

எனக்கும் மோட்டார் சைக்கிள் ஓடும் ஆர்வம் ஒரு வயதில் இருந்தது. முன்பு அப்பா வைத்திருந்தவர். சிறிது காலம் நண்பனின் மோட்டார் சைக்கிளில் லைசன்ஸ் இல்லாமல் ஓடித்திரிந்தேன். பின்பு ஒரு விபத்தில் அந்த ஆசையை கைவிட்டு விட்டேன்.

என்றாலும்... இப்போ.... மோட்டார் சைக்கிளில் பறப்பவர்களைக் கண்டால்... அந்த ஆசை இடைக்கிடை எட்டிப் பார்க்கும்.

ஆனாலும் அது வாங்கும் எண்ணம் இல்லை. :)

அதிகமாகவே புலத்தில் தமிழர்கள் அயலவர்களுடன் பழகுவது மிகக் குறைவு. ஏற்கனவே தெரிந்த நண்பர்கள், உறவினர்களுடன் மாத்திரமே பழக விரும்புகிறார்கள். அவர்களின் பிள்ளைகளுடனேயே தங்கள் பிள்ளைகளும் பழக வேண்டுமென விரும்புகிறார்கள். வேற்று மொழி தெரிந்தவர்களும் பக்கத்து வீட்டுக்காரனுடன் பேசிப் பழக விரும்புவதில்லை.

வேலை விட்டு வந்து பூட்டிய வீட்டிற்குள் சமையல், தொலைகாட்சி, தொலைபேசி என்றே பொழுதைக் கழித்துவிடும் ஒரு இறுக்கமான வாழ்க்கை. இது ஆரோக்கியமானதல்ல.

நானறிய ஒரு இடத்தில் 6 தமிழ்க் குடும்பங்கள் பக்கத்து பக்கத்துவிட்டு வீடுகளில் உள்ளார்கள். கண்டால் ஹலோ சொல்வதோடு சரி. எந்தவிதமான தொடர்புகளுமில்லை.

இந்தத் திரிக்குச் சம்பந்தமில்லாத ஒன்று.

வேலையில் கூட மற்றைய இனத்தவர்களிடம் பேசிப் பழகுவதை தவிர்க்கவே விரும்புகிறார்கள். எங்கள் போராட்டத்தின் நியாயம் மற்றைய இனத்தவர்களிடம் போய்ச் சேராததிற்கு இப்படி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டியதும் ஒரு காரணமாகும்.

Edited by thappili

இப்படியான பிரச்சனைகள் வரும் என்பதால்தான் நான் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களிடம் சிநேகம் வைத்து இருக்கின்றேன்...ஒரு நாள் என்னைக் காணவில்லை என்றதும் துடிச்சுப் போய் தேடுங்கள் என்னை :)

உங்கட வீடை சுற்றி சீனியர் ஹோமேஸ் இருக்கா :blink: :blink:

இப்படியான பிரச்சனைகள் வரும் என்பதால்தான் நான் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களிடம் சிநேகம் வைத்து இருக்கின்றேன்...ஒரு நாள் என்னைக் காணவில்லை என்றதும் துடிச்சுப் போய் தேடுங்கள் என்னை :)

அயலவர்களுடன் பரஸ்பர நல்லெண்ணத்தையும் உறவையும் வளர்த்துக்கொள்ள இப்படியான சிநேகிதங்கள் அவசியமென்றால் அது மிகையாகாது. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பிரச்சனைகள் வரும் என்பதால்தான் நான் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களிடம் சிநேகம் வைத்து இருக்கின்றேன்...

ஒரு நாள் என்னைக் காணவில்லை என்றதும் துடிச்சுப் போய் தேடுங்கள் என்னை :)

இந்த தேடுதலுக்கான தேவையும்தாங்கள் உயிருடன் இல்லை என்றவுடன் தீர்ந்துபோய்விடுமே நிழலி.....? :(:(:(

இந்த தேடுதலுக்கான தேவையும்தாங்கள் உயிருடன் இல்லை என்றவுடன் தீர்ந்துபோய்விடுமே நிழலி.....? :(:(:(

உயிர் போய்ட்டு என்றால் பக்கத்து வீட்டு மனிசிக்கு மட்டுமல்ல எவருக்கும் எம்மிடம் ஒரு தேவையும் இருக்காது :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான பிரச்சனைகள் வரும் என்பதால்தான் நான் அருகில் இருக்கும் வீடுகளில் உள்ள பெண்களிடம் சிநேகம் வைத்து இருக்கின்றேன்...ஒரு நாள் என்னைக் காணவில்லை என்றதும் துடிச்சுப் போய் தேடுங்கள் என்னை :)

:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேற்று தகனம் செய்தார்கள். பெரும் சனத்திரள் மத்தியில் அவரது நண்பர்கள் புடைசூழ வழியனுப்பி வைத்தார்கள். இவர்கள் இருப்பது தனிவீடுகளைக்கொண்ட ஒரு ஒதுக்குப்புறமான இடம். இவருக்கு பெண் பார்க்க தொடங்கியிருந்தார்கள். அவரது திருமணத்தை அப்பகுதியிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் கும்பம் வைத்து அழைத்துச்செல்லவேண்டும் என கற்பனை செய்து வைத்திருந்தேன் இப்படி மூடிக்கட்டி ஊர்வலம் போவாய் என்று கனவிலும் நினைக்கவில்லையே என்று அந்த தாயும் தகப்பனும் அழுதபோது விம்பிவிட்டேன். அடக்க முடியவில்லை.

இதுதான் நான் ஓட்டும் வண்டி.

myr6i.jpgmyr62.jpg

தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின்

வேரிப் புனல்நனைப்ப வேயடைந்தான் – கார்வண்டு

தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப்

புக்கிருந்தால் அன்ன பொழில்.

மகனைப் பிரிந்து துயரும் அந்தப் பெற்றோருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

எனது ஆழ்ந்த இரங்கல்கள் பெற்றோரிற்கும், அவரது உறவினர்களுக்கும்.

விசுகு, வசனத்தை வாசிக்கும் போதே ஒரு மாதிரி இருக்கு. இருக்கம் போதே பலர் பெற்றோரின் கனவை மதிப்பதில்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.