Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இராசதானியை ஆண்ட தமிழ் மன்னர்களில் சங்கிலியனுக்குப் பின்னர் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன்: பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்

Featured Replies

யாழ் இராசதானியை ஆண்ட தமிழ் மன்னர்களில் சங்கிலியனுக்குப் பின்னர் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட சங்கிலியன் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பேராசிரியர் புஷ்பரட்ணம் இவ்வாறு தெரிவித்தார்.

பாரம்பரியம் மற்றும் தொல்லியல்மீது அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா மிகுந்த அக்கறை உடையவர் என்று தெரிவித்த பேராசிரியர் புஷ்பரட்ணம் அந்த விடயங்களை பாதுகாக்கும் நோக்கில் அமைச்சருடன் கடந்த பல வருடங்களாக தாம் உரையாடி வருவதாகவும்; தெரிவித்தார். அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா யாழ் இராசதானியை ஆண்ட தமிழ் மன்னர்களில் சங்கலியனுக்குப் பின்னர் சிறந்த மன்னர் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் முடியப்பு றெமீடியஸ் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த நிழ்வில் கலந்து கொள்ளாமை மிகவும் தவறான விடயம் என்று சுட்டிக்காட்டினார். சங்கிலியன் சிலையை அமைக்கும் நடவடிக்கைக்கு தனது ஆதரவையும் பாராட்டையும் எதிர்க்கட்சித் தலைவர் றெமீடியஸ் தெரிவித்தார்.

யாழ்ப்பாண இராசதானியை ஆண்ட தமிழ் மன்னனான சங்கலியனின் சிலை யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிலையை யாழ் மாநகர சபை அகற்றி புதிய சிலையை அமைக்க உள்ளதாக தெரிவித்தது. அதன்படி அமைக்கப்பட்ட புதிய சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது. அந்த சிலையின் கீழ் உள்ள கல்வெட்டில் யாழ் மாநகர சபை முதல்வரை 'முதல்வர் திலகம்;' என புகழ்ந்து பொறிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் தேவானந்தாவின் பெயரும் அங்கு பொறிக்கப்பட்டுள்ளது.

சங்கிலியன் சிலையில் சங்கிலியன் வைத்திருக்கும் வாளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சங்தேகங்கள் எழுப்பபட்டிருந்தன. அத்தோடு சங்கிலியன் சிலையை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட பொழுது யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் சிலர் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டார்கள். எதிர்ப்புத் தெரிவித்த ஏழு உறுப்பினர்களும் இந்த நிகழ்வை புறக்கணித்துள்ளனர்.

இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார், உதயன் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் இமல்டா சுகுமார், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினம் உட்பட பலரும் பலந்து கொண்டார்கள்.

சங்கிலிய மன்னனின் மந்திரிமனை, நுழைவாயில், ஜமுனாரி தேக்கமும் புனர மைக்கப்படும் - டக்ளஸ்

சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை மட்டுமன்றி, மந்திரிமனை, நுழைவாயில் ஜமுனாரி தேக்கம் என்பனவும் தமிழர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விரைவில் புனரமைக்கப்படுமென பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் முத்திரைச் சந்திப்பகுதியில் அமையப் பெற்றுள்ள நல்லூரை தலைநகராகக் கொண்டு யாழ்ப்பாணம் ராஜதானியை ஆட்சி செய்த கடைசி அரசனான சங்கிலிய மன்னனின் உயிரோவியச் சிலை யாழ்.மாநகர சபையால் புனரமைக்கப்பட்ட நிலையில் அதனை இன்றைய தினம் (3) திரை நீக்கம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் இன்றைய நாள் வரலாற்று சிறப்புமிக்க முக்கியமான நாளாகும் யாழ்ப்பாணத்தில் சங்கிலிய மன்னன் சிலையை மட்டுமன்றி அவருடைய மந்திரிமனை நுழைவாயில் ஜமுனாரி தேக்கம் என்பவற்றை மக்களின் பயன்பாட்டுக்கேற்ற விதத்தில் அவற்றை புனரமைப்பதற்கு விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் அதேவேளை, தேசியத் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள் சமயப் பெரியார்கள், சமூகத்தின் முன்னோடிகள் ஆகியோரின் சிலைகளும் யாழ்.மாநகர எல்லைக்குற்பட்ட பகுதிகளில் நிறுவப்படுமெனவும், மந்திரி மனையில் கலைக்கூடமொன்றை நிறுவி, அதனூடாக கலை நுணுக்கங்களை வெளிக்கொணரும் கலைச்சேவை செய்யப்படவுள்ளதுடன், பண்பாடுகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

அத்துடன் உதயன் பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் எனது கண்டனத்தைத் தெரிவிக்கும் அதேவேளை, அவர் மீதான தாக்குதல் ஒரு தனிப்பட்ட விடயமே என்பதுடன், அதற்கு சில விசமிகளால் அரசியல் சாயம் பூசப்பட்டு ஈ.பி.டி.பியினர் மீது திட்டமிட்ட வகையில் குற்றச் சாட்டுக்கள் முன்னெடுக்கப்படுவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை யாழ்.மாநகர சபையின் உறுப்பினரும் எதிர்கட்சித் தலைவருமான சட்டத்தரணி றெமீடியஸ் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தியுள்ளதன் மூலம் எதிர்க்கட்சியினரின் உண்மை முகங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ள நிலையில் அவர்களது பொய்ப் பிரச்சாரங்கள் குறித்தும் வெளிப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சமயத் தலைவர்கள் யாழ். மாவட்ட ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களான முருகேசு சந்திரகுமார் சில்வேஸ்திரி அலென்ரின் (உதயன்) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்னம் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர்கள் உட்பட பாடசாலை மாணவர்கள், அதிபர்கள் யாழ். செயலக அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

globaltamilnews

சங்கிலியனுக்கு சிலை, நிகழ்கால 'மன்னனுக்கு' சிறை.

அத்துடன் உதயன் பத்திரிகை ஆசிரியர் தாக்கப்பட்டமை தொடர்பில் நாம் எனது கண்டனத்தைத் தெரிவிக்கும் அதேவேளை, அவர் மீதான தாக்குதல் ஒரு தனிப்பட்ட விடயமே என்பதுடன், அதற்கு சில விசமிகளால் அரசியல் சாயம் பூசப்பட்டு ஈ.பி.டி.பியினர் மீது திட்டமிட்ட வகையில் குற்றச் சாட்டுக்கள் முன்னெடுக்கப்படுவதையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைப்பிற்கு. எல்லாரும் இப்ப நல்லா குழையடிக்கிறார்கள், காலம்,

சிறையில் அடிவாங்கியவன், சிறை செல்ல யோசிக்கமாட்டர். :(:o

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சி என்ற தமிழ்சொல்லை அறிந்திருக்கவே வாய்ப்பில்லை!

இந்த அரைகுறைகளுக்கு சங்கிலியனயை தெரிந்திருக்கிப்பதுதான் வியப்பாக இருக்கிறது. (எஜமானி சொல்லிகொடுக்க வாய்ப்பில்லை)

"யாழ் இராசதானியை ஆண்ட தமிழ் மன்னர்களில் சங்கிலியனுக்குப் பின்னர் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்"

இது முற்றுமுழுக்க தவறான செய்தி!

யாழ் இராசதானியில் வாழ்பவர்களில் , சங்கிலி அறுத்துக்கொண்டு ஓடுவதில் , டக்ளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன் என்று , நான் சொன்னதை ஊடகங்கள் திரிபுபடுத்திவிட்டன!

- இப்படிக்கு

யாழ்பல்கலைக்கழக, வாய்க்கால் மற்றும் பல்லிகள் பற்றிய ஆராய்ச்சி பேராசிரியர் :

பரமு புஷ்பரட்ணம்!

  • கருத்துக்கள உறவுகள்

"யாழ் இராசதானியை ஆண்ட தமிழ் மன்னர்களில் சங்கிலியனுக்குப் பின்னர் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார்"

இது முற்றுமுழுக்க தவறான செய்தி!

யாழ் இராசதானியில் வாழ்பவர்களில் , சங்கிலி அறுத்துக்கொண்டு ஓடுவதில் , டக்ளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன் என்று , நான் சொன்னதை ஊடகங்கள் திரிபுபடுத்திவிட்டன!

- இப்படிக்கு

யாழ்பல்கலைக்கழக, வாய்க்கால் மற்றும் பல்லிகள் பற்றிய ஆராய்ச்சி பேராசிரியர் :

பரமு புஷ்பரட்ணம்!

:lol::lol::lol:

இது 100% உண்மை, வெள்ளவத்தையில், வித்தனை (டக்கிளஸ் ன் வலது குறைச்சது) பற்றி கேட்டால் தெரியும்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த உபவேந்தர் ஆவதற்கு இப்பவே காவடி எடுக்கிறாங்கப்பா. புளுகிறதுதான் புளுகுறீங்க.. ஒரு அளவோட புளுகுங்க. டக்களஸ் யாழ்ப்பாணத்தை ஆளும் அமைச்சர் கூட இல்லை. சிங்கள அரசில்.. ஏதோ ஒரு அமைச்சர். அதுக்கு என்ன அதிகாரம் என்று மக்களுக்கே தெரியாது. இதில இவர் ஒருத்தர். எல்லாம் மேலிட சிபார்சுக்குத் தான். தாடிக்கார அண்ணாச்சியோட ஒத்துழைக்காட்டி.. பதவி போயிடும்.. பதவி உயர்வு வராது.. இப்படி எத்தின சிக்கலில.. பரமுக்கள்.

இதெல்லாம் ஆயுத சன நாயகத்தில சத்தப்படாத சன நாயகம் பாருங்கோ. :lol::D

Edited by nedukkalapoovan

தேசியத் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் உள்ளிட்ட தலைவர்கள்

இது என்னடா புதுக்கதையா கிடக்குது.....அமிர்தலிங்கம் சிங்கள தேசியதலைவரா?...தமிழ்தேசியதலைவரா?

ஒருத்தர் உங்களை மன்னன் என்று சொல்லுறார் நீங்கள் அமிர்தலிங்கத்தை தேசியதலைவர் என்கிறீயள் ஒன்றுமே புரியல்ல...

  • கருத்துக்கள உறவுகள்

இது என்னடா புதுக்கதையா கிடக்குது.....அமிர்தலிங்கம் சிங்கள தேசியதலைவரா?...தமிழ்தேசியதலைவரா?

ஒருத்தர் உங்களை மன்னன் என்று சொல்லுறார் நீங்கள் அமிர்தலிங்கத்தை தேசியதலைவர் என்கிறீயள் ஒன்றுமே புரியல்ல...

தேசிய தலைவர் என்ற பதமே மக்களால் பிரபாகரனை அழைக்கவே பயன்படுத்தப்பட்டது. இவருக்கு அமிர்தலிங்கத்தை அப்படி அழைக்க ஆசை போல.. நல்லா அழைச்சிட்டு தாடியை தடிவிக் கொள்ளட்டும். மக்கள் நிச்சயமா அழைக்கமாட்டார்கள். 12 கோடி உலகத் தமிழனுக்கும் ஒரே தேசிய தலைவர்.. அது அன்றும் இன்றும் என்றும்.. பிரபாகரனே. இதனை நான் சொல்லேல்ல.. கன்னட ஈழத்தமிழர் ஆதரவு மாநாட்டில் மக்கள் சொன்னது. அப்படி எந்த மக்களாவது சொல்லட்டும் பார்க்கலாம்.. அப்பாப்பிள்ளையோ.. அணில்பிள்ளையோ.. தேசிய தலைவர் என்று. :)

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இராசதானியை ஆண்ட தமிழ் மன்னர்களில் சங்கிலியனுக்குப் பின்னர் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன்: பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்

இதனை, பரமு புச்பரத்தினம் சொல்லும் போது... சுயநினைவில் இருந்தாரா? :unsure:

யாழ் இராசதானியை ஆண்ட தமிழ் மன்னர்களில் சங்கிலியனுக்குப் பின்னர் அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவே சிறந்த மன்னன் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தெரிவித்துள்ளார். globaltamilnews

இந்த டக்லஸ் 'மன்னன்' இன்னுமொரு பத்து வருஷம் ஆட்சியில் இருந்தால் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் :(

இதனை, பரமு புச்பரத்தினம் சொல்லும் போது... சுயநினைவில் இருந்தாரா? :unsure:

இந்த பேய் ஆசிரியர் விரிவுரை நடாத்துகிறவரோ அல்லது டக்கிளஸ் போட்ட ஆளோ. நல்லது.

எட தேர்தலுக்கு பிறகும் இப்படியா>

திருந்தாத ஜென்மங்கள் என்டு தானே இப்படியே விட்டுட்டு போய்விட்டினம்

  • கருத்துக்கள உறவுகள்

பேராசிரியர் மன்னர்களின் அந்தப்புர வாழ்க்கையை மட்டும் ஒப்பிடுகின்றார் என எண்ணுகின்றேன்!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

சிலை வைக்கும் அரசியல் ஆரம்பித்துவிட்டது. மக்களை மந்தைகளாக வைத்திருக்காவிட்டால் இவர்களால் பிழைப்பு நடாத்தமுடியாது. ஆனால் மக்கள் இவர்களின் கூத்துக்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை என்பது கூஜா தூக்கும் பேராசிரியருக்கும் தெரியாமல் இல்லை.

இது ஒருவகை வியாதி.தமிழ்நாட்டிலிருந்து புலம் பெயர் தமிழருக்கு தொற்றி இப்பொ நாட்டிற்கும் பரவிவிட்டது போல் இருக்கு.

துப்பவருக்கு சுணைகெட்டு முகதுதி பாடுவது இது ஒருகாலமும் எமது நாட்டில் இருக்கவில்லை(அவனவன் குறைதான் பிடிப்பான்).தமிழ்நாட்டில் இதற்கு எப்ப்தும் பஞ்சமில்லை,ஆட்சியில் இருப்பவன் யாராயினும் இந்த ஜால்ராக்களுக்கு பஞ்சமில்லை.கமல்,ரஜனி,வைரமுத்து,வாலி வரை இதில் அடக்கம்.

இதி புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் சில விருதுகொடுக்கம் எம்மவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தங்களைத்தாங்களகே மாறி மாறி மேடைகளில் புழுகதொடங்கி இப்பொ இந்தநிலைக்கு வந்துவிட்டது.

கண்டவனை எல்லாம் மேடைக்கு ஏத்தினபுண்ணியவான்களுக்கெ இத்தனை பெருமையும் போய் சேரும்.(இதில் பெரும்பங்கு அவர்களுக்கு தான், அது யாருரென்று நான் சொல்லியா தெரியவேண்டும்)

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப்போலொரு நிலையில்தான் பேராசிரியரும் உள்ளார்போலும்.

உமிழ் நீர் வரத்தான் செய்யும்

அதுவும் துப்புவதற்கு ஒரு இடம் கிடைத்தால்.......?

உங்களைப்போன்றவர்களுக்கு பெருக்கெடுக்குமே. :(:(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த எருமைங்கள் எல்லாம் பேராசிரியர் என்று இருப்பது தான் கொடுமையே.

கல்விச்சமுதாயம் வெட்கப்படவேண்டிய விடையம். இப்படியான வால்பிடிகளின் கருத்தை எல்லாம் கேட்கவேண்டிய நேரம் எமக்கு.

உங்களைப்போலொரு நிலையில்தான் பேராசிரியரும் உள்ளார்போலும்.

உமிழ் நீர் வரத்தான் செய்யும்

அதுவும் துப்புவதற்கு ஒரு இடம் கிடைத்தால்.......?

உங்களைப்போன்றவர்களுக்கு பெருக்கெடுக்குமே. :(:(:(

விடுங்கோ அண்ணா சிலதுகள் என்றைக்குமே திருந்தாதுகள். இப்படியானதுகளுக்கு பதில் எழுதி நேரத்தை வீணடிப்பதற்கு பதில் நாலு பன்னி வாங்கி மேய்க்கலாம்.

(வந்த கடமை முடிஞ்ச சந்தோசத்திலை போகட்டும் அண்ணா)

:wub:

நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன...

வால் புடிக்கிற வாத்திக்கு தாடியென்ன தமிழ் மன்னனென்ன...

இரண்டும் போடுறதை திண்டிட்டுக் குரைக்கிற இனம்...

அமிர்தலிங்கம் தேசியத்தலைவரா? சோக்கல்லோ....

அவருக்கு சிலை வைத்து, அந்த சிலை திறப்பு விழாவில் தமிழ் அரசுக்கட்சி

கலந்து கொள்ளா விட்டால்,அதை வைத்தே டக்கி, புதுக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவார்.

''தனது தலைவனின் சிலை திறப்பு விழாவை புறக்கணித்த மாவை சேனாதிராஜா'' என்று

டக்ளசின் 'தினமுரசு' பத்திரிக்கை கத்தும்.

நல்லாத்தான் அரசியல் செய்யுறாங்க

இந்த ஆளைப்பற்றி அவசரமாக எடை போடுவது சரியில்லை என்று நினைகிறேன்.

இவரை நேரில் தெரிந்தவர்கள் இருந்தால் இங்கே ஓரிரு வசனங்கள் எழுதுங்கள். உண்மையை தெரிய விரும்புகிறோம்

சங்கிலியன்தான் நாம் அறிந்த கடைசி மன்னன். அவனுக்கு பின் யாழ்ப்பாண ராச்சியம் விழுந்துவிட்டது. இவரின் உப்பு சப்பில்லாத கதை டக்கியின் களுத்து நெரிப்பிலிருந்து தப்ப சொன்ன கதைபோலிருக்கு.

1.இவர் அடிவருடி போல் தெரியவில்லை. 2. இவருக்கு தொல்,புதை பொருள் ஆராட்சியில் ஞானம் இருப்பது போல் உள்ளது. 3. இவர் சுதர்சன் செனிவரத்தினாவின் உதவியால் சில உண்மைகள் மறைக்க படாமல் இருக்க முயற்சித்தவர். நாம் கூறப்போனால் பெட்டைநாய் குரைக்குது என்பர். சுதர்சன் செனிவரத்தினா கூறும்போது அது ஆராச்சி தரம் பெறும். சுதர்சன் செனிவரத்தினா கூறும் நமது ஐந்து ஆலயங்களும் தமிழ் நாட்டு சிதம்பரம், மதுரை மீனாட்சி ஆலயங்களை விட பழமையானதென்பர். இதனால் ஈழத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு சிவவழிபாடு சென்றதென்பார் உளர்.

பேராசிரியர் புஷ்பரட்ணம் சங்கிலியனின் உள்ளங்கை தெரிவதை குறை கூறியவர். http://www.jaffnatoday.com/?p=9995

இவரைப்பற்றி சில அண்மைய பத்திரிகை செய்திகள்:

http://nasamnet.blogspot.com/2011/05/blog-post_556.html

http://www.tamilwin.com/view.php?2a26QVF4b439988e4b46IP5ce2bf1GU2cd3OipD3e0dVZLucce03g2FP0cd3tjoCd0

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதை யாராவது மகிந்தவின் காதில் போடுங்கப்பா. அவன் தன்னை துட்டகைமுனுவுக்கு பிறகு இலங்கையை கட்டியாண்ட ஒரே மன்னன் என்ற தலைகனத்தில் இருக்கிறான். இதுக்குள்ள யாழ்பாணத்துக்கு ஒரு தனியான மன்னன் இருக்கிறான் எண்டுறதை கேள்விப் பட்டால் டக்கியையும் இந்த கூவல் பேயாசிரியரையும் கூப்பிட்டு நல்ல ஒரு விருந்து குடுப்பான்.

விசுகண்ணை,

துதிபாடுவதை பற்றித்தான் தலைப்பு.இதை நீங்களும் காலகாலமாக வடிவாக செய்துகொண்டு மற்றவனை பற்றி நக்கல்?

நல்ல வேளை மகிந்தா ஆட்சிக்கு வந்தது அல்லது இப்ப பரமுவின் இடத்தில் இருந்து நீங்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகண்ணை,

துதிபாடுவதை பற்றித்தான் தலைப்பு.இதை நீங்களும் காலகாலமாக வடிவாக செய்துகொண்டு மற்றவனை பற்றி நக்கல்?நல்ல வேளை மகிந்தா ஆட்சிக்கு வந்தது அல்லது இப்ப பரமுவின் இடத்தில் இருந்து நீங்கள்தான்.

தம்பி ARJUN

நானாவது ஏதாவது செய்தவனைத்துதிபாடுகின்றேன்.

நீங்கள்............................................??? :lol::D:D

செயலாளர் நாயகத்துக்கு பொருத்தமான பட்டம் தான்.

சங்கிலியனை புதுவிதமாக சிங்கள மக்களுக்கு மகிந்த அரசு அறிமுகப்படுத்தியிருப்பதில் மிக புத்திசாலித்தனமாகச் செயல்பட்டிருக்கின்றது. சிங்கள தேசியம் அதன் வளர்ச்சிப்போக்கில் ஸ்திரமாகவே செல்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் சந்தர்ப்பத்தை எதிர் பார்த்து கத்திருக்கின்றார்கள் இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவதற்கு அதுவரைதான் இந்த டக்கிலஸ் ௬ ட்டத்தின் ஆட்டங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.