Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் களமும் தாய்த் தமிழ் எழுத்துப் பிழைகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக் காலமாக வருந்தத்தக்க அளவில் யாழ் கள கருத்துத் தலைப்புக்கள் முதல் கருத்துகள் ஈறாக எழுத்துப் பிழைகளுடன் தாய் தமிழ் தன் நிலை இழந்து கொண்டிருக்கிறாள்.

தாயகத்தில் தமிழ் வளர்த்த பத்திரிகையான ஈழநாதத்தின் இணையப் பதிப்புச் செய்திகளை வெளியிடுவோர் மிகவும் கவனக் குறைவாக இருந்து தமிழ் எழுத்துப் பிழைகளோடு செய்திகளை பிரசுரித்து வருகின்றனர். அங்கிருந்து செய்திகளை இங்கிணைக்கும் உறவுகளும் அவற்றைத் திருத்துவதாக இல்லை.

கருத்துக்கள் எழுதப்படும் போது எழுத்துப் பிழைகள்.. சொற் சேர்க்கைகளில் பிழை வருவது சகஜமே. அதை திருத்திக் கொள்ள ஆர்வம் காட்டுவதன் மூலமே சரியான பதத்தையும் அதற்கான எழுத்துக் கூட்டலையும் நாம் பெற முடியும்.

தாய் மண்ணில் இருந்து மொழியில் இருந்து அந்நியப்பட்டிக்கும் இன்றை புலம்பெயர் சூழலில்.. இந்தத் திருத்தங்கள் மிக அவசியமானவை.

ஜி ரி வியில் வரும் ஒரு அக்கா.. கோலம் சேலைகளை.. கோளம் சேலைகள் என்று உச்சரிக்கிறார். இவை தமிழகத்தில் தான் பிரச்சனை என்றால் எம்மவர் மத்தியிலும் இது பெருகி வருவதற்கு எழுத்துக் கூட்டலும்.. உச்சரிப்புக் குறைபாடுகளும் முக்கிய காரணம்.

இதெல்லாம் ஒரு செய்தி என்டு கருத்துக் களத்தில் விவாதித்துக் கொண்டு

உங்களுக்கு தெரியாதா அண்ணா பல அனில்கள் அடித்த பழம் தான் ருசி அதிகமாம் :lol:

நல்லா தமிழ் எழுதக் கூடிய ரதி அக்காவே அணிலை.. அனில்.. என்றும் கடித்த என்பதை அடித்த என்றும் தவறுதலாக எழுதி இருக்காங்க. இதை திருத்துவாங்க என்று பார்த்தால் திருத்தக் காணம்.

இன்னொரு முக்கிய தலைப்பு இப்படி இருக்குது..

அணைத்து தமிழர்களும் ஒன்றிணைத்து தமிழீழ மாவீரர்நாளை கடைபிடிக்குமாறு – தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை

நான் என் வாழ் நாளில் கண்டதில்லை.. விடுதலைப்புலிகளின் தமிழ் மூல அல்லது ஆங்கில மூல அறிக்கைகள் இப்படி கவனக் குறைவாக தமிழ் பிழையோடு பிரசுரிக்கப்பட்டதை. விடுதலைப்புலிகளின் அறிக்கைகளில் இருந்து தமிழ் புதுச் சொல்லாடல்கள் மற்றும் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை கற்றவர்கள் நாங்கள். இருந்தும்.. ஒரு முக்கிய அறிக்கையின் தலைப்பு இப்படி வந்திருக்கிறது.

அனைத்து தமிழர்களும்.. மாவீரர் நாளை.. கடைப்பிடிக்குமாறு.. என்ற சரியான வகைப் பதங்களோடு அந்தத் தலைப்பு அமைந்திருக்க வேண்டும்.

கோப்பாயில் ஜோடியாகத் தூக்கில் தொங்கிய நிலையில் இருவர் சடலம் (காணொளி)

இன்னொரு தலைப்பு இப்படி அமைகிறது. இருவருக்கு ஒரு சடலம்.. இருவரின் சடலங்கள் என்று அமைந்தால் நன்று. ஜோ (தமிழ் அகராதிக்குரிய சொல் அல்ல. கருத்துக்களில் இதனை பாவிக்க நேரிட்டாலும் தலைப்புக்களில் இவற்றிற்கான சரியான தமிழ் பதம் இருந்தால் இயன்றவரை அவற்றை பாவிக்க வேண்டும். ஜோடி - சோடி

தமிழர்களின் தாயக பூமியில் இருந்து இராணுவம் அகற்றப்படவேண்டும் - மாவை

தமிழரின் தாயக பூமியில் இருந்து எந்த இராணுவத்தை அகற்ற வேண்டும். உங்கள் அப்பன் முப்பாட்டன் வீட்டு இராணுவத்தையா..??! பிபிசி செய்தி நிறுவனமே சிறீலங்கா இராணுவம் சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்டது என்று எழுதுகிறது. ஆனால் 64 ஆண்டுகளாக சிங்களவனிடம் உரிமை கேட்டுப் போராடும் நாம் இன்னும் சிறீலங்கா சிங்கள இராணுவத்தை.. ஏதோ எங்கள் இராணுவம் போன்று கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கவே விரும்புகிறோம். மேலும் அகற்றப்படவேண்டும் என்பது ஒரு சொல் அல்ல. அகற்றப்பட வேண்டும் என்று அது அமைய வேண்டும்.

தயவுசெய்து.. யாழின் செய்தித் தலைப்பிலாவது சிங்கள இராணுவம் என்று எழுதுங்கள். சிங்கள அரசு என்று எழுதுங்கள். சிங்கள காவல்துறை.. அல்லது சிங்களப் பொலிஸார் என்று எழுதுங்கள். அது ஒன்றும் தவறில்லை. அது தான்.. சிறீலங்காவில் உண்மையும் கூட.

மருத்துவமனை மீது எறிகணைத்தாக்குதல்: ஐசி ஆர்சி மீண்டும் உறுதிப்படுத்தியது

இன்னொரு தலைப்பு இப்படி அமைகிறது. மருத்துவமனை மீது எறிகணைத் தாக்குதல்: ஐ சி ஆர் சி மீண்டும் உறுதிப்படுத்தியது என்று தான் செய்திக்கு தலைப்பு அமைந்திருக்க வேண்டும். தவறான சொற் சேர்க்கைகள் பாவிக்கப்பட்டு ஒரு சொல்லாக்கப்பட்டுள்ளது.

இவற்றை முழுமையாக யாழ் கள உறவுகள் விடும் தவறுகளாக சுட்டிக்காட்டவில்லை. இணையச் செய்தி ஊடகங்கள் விடும் தவறுகள் கூட வெட்டி ஒட்டும் போது அப்படியே "குளோனிங்" செய்யப்பட்டு பெருகி விடுகின்றன. இதனை நாங்கள் கொஞ்சம் சிரத்தை எடுத்தால் தவிர்க்க முடியும்.

மேலும்.. என்னைப் பொறுத்தவரை நானும் சில சமயங்களில் கருத்துக்கள் எழுதும் போது ஆங்கிலத் தமிழ் மற்றும் சொற் பிழைகளை விட்டிருப்பேன். கூடியளவு எழுதிய கருத்துக்களை குறைந்தது இரு தடவைகள் வாசித்து எழுத்துப் பிழைக்களை திருத்துவது வழக்கம். என்னுடைய பெரும்பாலான பதிவுகள் திருத்தப்பட்டவையாக இருக்கும். இருந்தும் சில எழுத்துப் பிழைகளை உணராமல் விடுகிறேன். அதனை உணரும் உறவுகள் சுட்டிக்காட்டினால் நன்று... திருத்திக் கொள்ள உதவும்.

கள உறவு குட்டி போன்றவர்கள் முன்னர் தவறுகளைச் சுட்டிக் காட்டி தனிமடல் அனுப்பி.. நேரம் கிடைக்கும் சமயங்களில் உடனடியாக அவற்றிற்கு திருத்தங்களை செய்திருக்கிறேன்.

செம் மொழியாம் தமிழ் மொழி யாழ் இணையத்தில் வளர்ந்த இணையத் தமிழ் மொழி.. அங்கேயே சீரழிவது பொறுக்குதில்லை. அதனாலேயே இப்பதிவை இடுகிறேன். யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கவே.. அல்லது செய்திகளை இணைக்க வேண்டாம் என்று சொல்லவே இதனை பகிர்ந்து கொள்ளவில்லை.

நீங்கள் தாராளமாக செய்திகளை இணைக்கலாம்.. கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது நீங்கள் உணரத்தக்க சொற் பிழைகள் மற்றும் இலக்கணப் பிழைகள் இருந்தால் அவற்றை திருத்தி இணைப்பின் அது வரவேற்கப்படும் என்பதையே முன்னிறுத்துகின்றேன்.

இந்த வேண்டுகோளை தாழ்மையுடன் உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். நானும் இதற்கு கட்டுப்படுவேன்.

நன்றி.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணம் காட்ட நானாடா[நானா தம்பி கிடைத்தேன் மரியாதை,மரியாதை] கிடைத்தேன் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதாரணம் காட்ட நானாடா[நானா தம்பி கிடைத்தேன் மரியாதை,மரியாதை] கிடைத்தேன் :lol:

நீங்க என்றால் கோவிக்க மாட்டீங்க.. திருத்தத்தின் தேவையை புரிஞ்சு கொள்ளுவீங்க.. என்பதனால் உங்கள் சிறிய தவறை உதாரணம் ஆக்கினேன் அக்கா. தவறிருந்தால் மன்னிக்கவும். :)

நானும் நெடுக்கரின் கருத்தை வழிமொழிகின்றேன் சில இடங்ளில் எனது எழுத்து நடை கடினமானதாக இருப்பதாக சிலர் அபிப்பிராயப்பட்டார்கள். தமிழை நடைமுறையில் நாம் தான் வளர்க்கவேண்டும் இப்போது உள்ள தலைமுறைக்கு லகர ழகர உகார வேறபாடுகள் வேப்பங்காயாக இருக்கின்றது தாய்மொழியைக் கொல்பவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது :):)

நல்லதொரு பதிவை பதிவிட்ட நெடுக்கண்ணாவிற்கு நன்றிகள். இதை வாசித்தபின்பாவது செய்தி இணைப்பவர்கள் வெட்டி ஒட்டும் போது அந்த செய்தியை ஒரு முறை வாசித்து அதில் இருக்கும் பிழைகளை திருத்தி எமக்கு தருவார்கள் என்று நம்புவோமாக :)

அத்துடன் சில யாழ் உறவுகளும் தம் பதிவுகளை, பதிய முன்போ பதிந்த பின்போ மீண்டும் ஒரு முறை வாசித்து பார்பதில்லை அப்படி அவர்கள் மீண்டும் வாசித்து பார்க்கும் போது தங்களது எழுத்து பிழைகளை திருத்திக்கொள்ள முடியும் - நன்றி

இந்த பதிவில் எத்தனை பிழைகள் கண்டுபிடிக்கப்போகின்றார்களோ தெரியல - நான் எஸ்கேப்

:)

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு முயற்சி

நானும் பலமுறை தவறுகளைச்சுட்டிக்காட்டியிருக்கின்றேன். மனவருத்தங்களும் வந்துள்ளன. ஆனாலும் விட்டுவிடமுடியாது.

நன்றி நெடுக்கு.... (இனி இந்த ஸ் போடுவதில்லையென்ற முடிவிலிருக்கின்றேன்)

பல எழுத்துப் பிழைகளை நானும் விட்டு இருக்கிறேன், அவை எனக்கே தெரிந்ததும் சரிசெய்து இருக்கிறேன். இன்னும் பல கவனிக்காமலே இருக்கக் கூடும்.

ஆர்வத்துடன் வாசிக்கும் பல பதிவுகளில் ஒரு சில எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் இருந்து அவை திருத்தப்படும் நிலையில் அப்பதிவுகள் வாசகர்களுக்கு ஒரு ஆர்வத்தை உண்டு பண்ணும், அதே நேரம் பதிவுகளை எழுதுபவர்களும் அடுத்த தடவை அவதானமாக எழுதுவதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும் என்பதும் எனது பணிவான கருத்து.

நேரம் இருந்த போது தனிமடலில் சிலருக்கு அறியத்தந்திருந்தேன். நேற்று வேலைக்குப் ஆயத்தமாகும் போது ஒரு பதிவைப் பார்த்தேன் அதில் கருத்துப் பிழையைப் பார்த்தபடியால் நேரடியாகவே எனது சந்தேகத்தை பதிந்திருந்தேன், தனிமடல் மூலம் அறியத்தராமைக்கு வருந்துகிறேன்.

...

குறிப்பு: (மேலும் இந்தத் தலைப்பில் கூட தாய் தமிழ் என்று என்னால் தவறுதலாக பதியப்பட்டுள்ளது. அது தாய்த் தமிழ் என்று அமைய வேண்டும். ஆனால் எனக்கு பதிவிடப்பட்ட பின் தலைப்பை திருத்த அனுமதி தரப்படவில்லை என்பதனால் அதில் திருத்தத்தைச் செய்ய முடியாது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் மட்டுறுத்தினர்கள் கொஞ்சம் சிரத்தை எழுத்து திருத்தங்களைச் செய்ய வேண்டும்.) :)

[Full Editing-ல் அழுத்தித் தலைப்பையும் திருத்தலாம் தானே? :unsure: ]

நெடுக்ஸ் ஜி.ரி.வி அக்காமாடை எழ்ழாம் நீங்கள் அப்படிச் ச்சொழ்ழக் கூடாடாடு :D:lol:

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[Full Editing-ல் அழுத்தித் தலைப்பையும் திருத்தலாம் தானே? :unsure: ]

அறியத் தந்தமைக்கு நன்றி. கள நிர்வாகமும் இது குறித்து அறியத் தந்திருக்கிறது. அதற்கும் நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

இந்த firefox add-on இனை பாவித்துப் பாருங்கள். இங்கே சொடுக்கி அந்த add-on https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902 இனைத் தரையிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.

பல சொற்கள் இல்லைப் போலுள்ளது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த firefox add-on இனை பாவித்துப் பாருங்கள். இங்கே சொடுக்கி அந்த add-on https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902 இனைத் தரையிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.

பல சொற்கள் இல்லைப் போலுள்ளது!

புரியவில்லையே..??! இது ஏன் இங்கு..???!

அதுபோக.. இணையத்தில் இருந்து பெறுவதை... தரையிறக்கி என்று பாவிப்பது சரியல்ல. தரவிறக்கி.. என்றே அது அமைய வேண்டும். தரவு+இறக்கம் = தரவிறக்கம். (தரை + இறக்கம்-- அல்ல) :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லையே..??! இது ஏன் இங்கு..???!

அதுபோக.. இணையத்தில் இருந்து பெறுவதை... தரையிறக்கி என்று பாவிப்பது சரியல்ல. தரவிறக்கி.. என்றே அமைய வேண்டும். தரவு+இறக்கம் = தரவிறக்கம். (தரை + இறக்கம்-- அல்ல) :)

இந்த firefox add-on தமிழில் உள்ள எழுத்துப் பிழைகளை திருத்த உதவும் (spell checker!).

தரவிறக்கம் என்றால் எனக்கு எப்போதும் தளபதி பால்ராஜ் தலைமையில் நடந்த குடாரப்புத் தரவிறக்கம்தான் ஞாபகத்தில் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்த firefox add-on தமிழில் உள்ள எழுத்துப் பிழைகளை திருத்த உதவும் (spell checker!).

தரவிறக்கம் என்றால் எனக்கு எப்போதும் தளபதி பால்ராஜ் தலைமையில் நடந்த குடாரப்புத் தரவிறக்கம்தான் ஞாபகத்தில் வரும்.

முயற்சித்துப் பார்க்கின்றேன். தகவலுக்கு நன்றி.

அவர் தரையிறக்கம் என்று தான் சொல்லி இருக்கிறார்.. கிருபண்ணா. தரவிறக்கம் என்றதாக அது அமையாது. தரை = நிலம். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தரையிறக்கம் என்று தான் சொல்லி இருக்கிறார்.. கிருபண்ணா. தரவிறக்கம் என்றதாக அது அமையாது. தரை = நிலம். :D:)

எவ்வளவு தூரம் விழிப்பாக இருக்கின்றீர்கள் என்று அறியத்தான் தரையிறக்கத்தைத் தரவிறக்கமாக மாத்தியிருந்தேன். ஹி.ஹி.ஹி. முழிப்பாத்தான் இருக்கிறியள். ^_^

  • கருத்துக்கள உறவுகள்

கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய பதிவு. தங்கள் தமிழ் ஆர்வத்துக்கும் , கரிசனைக்கும் நன்றி.

நானும் திருப்பி பாராமல் பிழையுடன் பதிந்து இருக்கிறேன். .தங்கள் ஆக்கத்துக்கு என் வரவேற்புக்கள் ஒருபச்சை :D

Edited by நிலாமதி

பாதை தடுமாறும் சில வேளைகளில், மீண்டும் சரியான பாதைக்கு கொண்டுவரச்செல்லும் ஒரு முயற்சியாக இதை பார்க்கிறேன்.

கண்ணைமூடிக்கொண்டு இனியெல்லாம் ஒட்ட, பதிய முடியாது :o

நெடுக்குக்கு நன்றிகள்.

இதுக்கு என்ன தீர்வு என்ற ஒரு ஒரு கேள்விக்கு பதிலும் தேடுவோம். அந்த வழியில் கிருபனின் யோசனை நன்றாக உள்ளது. அதையே இந்த களத்தின் உள்ளே கொண்டுவந்தால் இன்னும் செழிப்பாக இருக்கும். அதாவது நாம் பதியும் பொழுது இல்லை பதில் எழுதும் பொழுது அங்கேயே ஒரு பொத்தானை சொடுக்கி எழுத்துப்பிழைகளை கண்டுபிடிக்க வைத்தால் ( ஆம் சொல்வது இலகு, செய்வது .... :blink: ) எல்லோருக்கும் இலகுவாக இருக்கும்.

Edited by akootha

பாதை தடுமாறும் சில வேளைகளில், மீண்டும் சரியான பாதைக்கு கொண்டுவரச்செல்லும் ஒரு முயற்சியாக இதை பார்க்கிறேன்.

கண்ணைமூடிக்கொண்டு இனியெல்லாம் ஒட்ட, பதிய முடியாது :o

நெடுக்குக்கு நன்றிகள்.

இதுக்கு என்ன தீர்வு என்ற ஒரு ஒரு கேள்விக்கு பதிலும் தேடுவோம். அந்த வழியில் கிருபனின் யோசனை நன்றாக உள்ளது. அதையே இந்த களத்தின் உள்ளே கொண்டுவந்தால் இன்னும் செழிப்பாக இருக்கும். அதாவது நாம் பதியும் பொழுது இல்லை பதில் எழுதும் பொழுது அங்கேயே ஒரு பொத்தானை சொடுக்கி எழுத்துப்பிழைகளை கண்டுபிடிக்க வைத்தால் எல்லோருக்கும் இலகுவாக இருக்கும்.

என்று தணியும் இந்த தாகம்?

  • கருத்துக்கள உறவுகள்

எலுத்துப் பிலை விடுகிறவர்களுக்கு, சிவப்பு புல்லி குத்தும் நடைமுரையை ஏற்படுத்தலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க தக்கது ................

நல்ல, மிகவும் தேவையான விவாதம்.

எனக்கு சில குழப்பங்கள் வருவதுண்டு. சிலர் எழுதும் போது, "மக்களினை, பிள்ளைகளினை" என்று எழுதுவார்கள்.

எனக்கு "மக்களை, பிள்ளைகளை" என்று எழுதுவதே சரியென்று படித்த நினைவு. தெரிந்தவர்கள்/அறிந்தவர்கள் விளக்கம் தருவீர்களா?

எலுத்துப் பிலை விடுகிறவர்களுக்கு, சிவப்பு புல்லி குத்தும் நடைமுரையை ஏற்படுத்தலாம்.

முதுகில் ஓங்கி ஒரு குத்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்! :lol: :lol:

நல்ல, மிகவும் தேவையான விவாதம். எனக்கு சில குழப்பங்கள் வருவதுண்டு. சிலர் எழுதும் போது, "மக்களினை, பிள்ளைகளினை" என்று எழுதுவார்கள். எனக்கு "மக்களை, பிள்ளைகளை" என்று எழுதுவதே சரியென்று படித்த நினைவு. தெரிந்தவர்கள்/அறிந்தவர்கள் விளக்கம் தருவீர்களா? முதுகில் ஓங்கி ஒரு குத்து விட்டால் எல்லாம் சரியாகிவிடும்! :lol: :lol:

மக்களை பிள்ளைகளை என்பதே சரியானது மக்களினை பிள்ளைகளினை பொதுவாகப்பார்த்தால் சரியாக இருப்பதுபோல் தோன்றினாலும் இலக்கணரீதியாக பிழையானதே

நன்றி கோமகன். உங்களுக்கு தமிழில் நல்ல புலமை இருப்பது காணக்கூடியதாக இருக்கிறது.

பண்பட்ட எழுத்தாளரான சாத்திரி அண்ணா "வேறு சிலரிற்கும் இது போன்ற மின்னஞ்சல் மற்றும் முகபுத்தக அஞ்சல்ளிற்கும் கிடைத்துள்ளதால் அவதானமாக செயற்படுங்கள் அதே சமயம் நிதிஉதவி செய்யுமாறும் சிலதடைவைகள் கேட்டிருந்தார்." என்று எழுதியுள்ளார். இது சரியானதா? சிலருக்கும் என்று வரவேண்டுமா?

குறிப்பு- சாத்திரி அண்ணா குறை நினைக்க வேண்டாம். உதாரணத்துக்கு கையில் அகப்பட்டது - அவ்வளவு தான்.

நன்றி கோமகன். உங்களுக்கு தமிழில் நல்ல புலமை இருப்பது காணக்கூடியதாக இருக்கிறது.

பண்பட்ட எழுத்தாளரான சாத்திரி அண்ணா "வேறு சிலரிற்கும் இது போன்ற மின்னஞ்சல் மற்றும் முகபுத்தக அஞ்சல்ளிற்கும் கிடைத்துள்ளதால் அவதானமாக செயற்படுங்கள் அதே சமயம் நிதிஉதவி செய்யுமாறும் சிலதடைவைகள் கேட்டிருந்தார்." என்று எழுதியுள்ளார். இது சரியானதா? சிலருக்கும் என்று வரவேண்டுமா?

குறிப்பு- சாத்திரி அண்ணா குறை நினைக்க வேண்டாம். உதாரணத்துக்கு கையில் அகப்பட்டது - அவ்வளவு தான்.

சாத்திரியின் சொல்லாடல்கள் பொதுவாக இலகுதமிழில் வெளிப்படும். இதில் " சிலரிற்கும்" என்றால் எண்ணிக்கையிலடங்கும் பெயரைக் குறிப்பிட விரும்பாத நபர்கள் என்றுபொருள்படும். சிலருக்கும் என்பதும் அதே பொருள்படும் . பலருக்கும் என்றால் எண்ணிக்கையில் அடங்காத என்று பொருள்படும். சிலரிற்க்கும் அல்லது சிலருக்கும் ஒத்தகருத்துடையவையே . அதேபோல " முகப்புத்தக அஞ்சல்களுக்கும் " என்பதே சரியானது

Edited by komagan

  • கருத்துக்கள உறவுகள்

,d;W jhd; ghu;j;Njd; neLf;Ff;F xU gr;ir ! ,g;nghOJ ahopy; jkpopy; voJtJ kpfTk; fbdkhf cs;sJ. vq;NfahtJ vojp ntl;b xl;l Ntz;b cs;sJ..

நானும் நெடுக்கரின் கருத்தை வழிமொழிகின்றே

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்த அளவிற்கு மொழி பெயர்த்தாலும் இப்படித்தான் வருகின்றது புலவர் பெருமான் உங்களுக்கு என்ன பிரச்சனை :)

த ; வ ஜ்ஹ்த் ; க்ஹு ; ஜ ;நஜ்த் ; நெல்ப் ;பிப் ; ப சு கர் ; இர ! , க ; ஞ்ஹோஜ் அஹோபி ; ஜ்க்போபி ; வோஜ்த்ஜ் க்ப்ப்தக் ; ப்ப்த்கஹ்ப் க்ஸ் ;சஜ் . வக் ;ந்பாஹ்ட் J வோஜ்ப் நட் l;ப சல் ; l ண்த்ழ ; b க்ஸ் ;சஜ் ..

:lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிந்த அளவிற்கு மொழி பெயர்த்தாலும் இப்படித்தான் வருகின்றது புலவர் பெருமான் உங்களுக்கு என்ன பிரச்சனை :)

த ; வ ஜ்ஹ்த் ; க்ஹு ; ஜ ;நஜ்த் ; நெல்ப் ;பிப் ; ப சு கர் ; இர ! , க ; ஞ்ஹோஜ் அஹோபி ; ஜ்க்போபி ; வோஜ்த்ஜ் க்ப்ப்தக் ; ப்ப்த்கஹ்ப் க்ஸ் ;சஜ் . வக் ;ந்பாஹ்ட் J வோஜ்ப் நட் l;ப சல் ; l ண்த்ழ ; b க்ஸ் ;சஜ் ..

:lol:

இன்று தான் பார்த்தேன் நெடுக்குக்கு ஒரு பச்சை ! இப்பொழுது யாழில் தமிழில் எழதுவது மிகவும் கடினமாக உள்ளது. எங்கேயாவது எழதி வெட்டி ஒட்ட வேண்டி உள்ளது..

பாமினி முறையில் எழுதப்பட்டுள்ளது என நினைக்கின்றேன். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.