Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பா வா ம் ...பி ற பா க ர ன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடடாh........ என்ன தத்துவம் என்ன தத்துவம் சித்து அண்ணாவ யாழ் களம் 2011 தத்துவ ஞானி விருது கொடுத்த கவுரவிக்குமாறு கேட்டிக்கிறன்....

பை த வே சித்து அண்ணா என்ன உடண n;டனஷன் ஆகிட்டிங்க நீங்களும் கேஸ் பைல்ல அப்பிடி தான் கொடுத்தனிங்களோ,?

பட் சுண்டல் அப்படி கொடுக்கலியே சோ நீங்க சொன்ன பொன்மொழி எனக்கு பொருந்தாது............பட் தாங்ஸ் எனி வே....

  • Replies 113
  • Views 17.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அடடாh........ என்ன தத்துவம் என்ன தத்துவம் சித்து அண்ணாவ யாழ் களம் 2011 தத்துவ ஞானி விருது கொடுத்த கவுரவிக்குமாறு கேட்டிக்கிறன்....

பை த வே சித்து அண்ணா என்ன உடண n;டனஷன் ஆகிட்டிங்க நீங்களும் கேஸ் பைல்ல அப்பிடி தான் கொடுத்தனிங்களோ,?

பட் சுண்டல் அப்படி கொடுக்கலியே சோ நீங்க சொன்ன பொன்மொழி எனக்கு பொருந்தாது............பட் தாங்ஸ் எனி வே....

சுண்டல் ஸ்கில்ட் மைக்ரேசனில் வந்தவர் ....

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் ஸ்கில்ட் மைக்ரேசனில் வந்தவர் ....

என்ன ஸ்கில்? :icon_mrgreen: ஊரில கடலை போட்ட ஸ்கில்லா? :wub: இல்லை மெரீனாவில சுண்டல் வித்த ஸ்கில்லா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அஸ்க்கு புஸக்கு இப்பிபடி சொன்னா போல சுண்டல் வந்த கட்டகரிய சொல்லிடுமாக்கும்......................

பட் சுண்டல் கடைசிவரை புலிகளை காட்டி கொடுத்து வரேல்ல.......அதுவரை சுண்டலுக்கு திருப்தி......

அஸ்க்கு புஸக்கு இப்பிபடி சொன்னா போல சுண்டல் வந்த கட்டகரிய சொல்லிடுமாக்கும்......................

பட் சுண்டல் கடைசிவரை புலிகளை காட்டி கொடுத்து வரேல்ல.......அதுவரை சுண்டலுக்கு திருப்தி......

:rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தான் அரசி அக்கா கேஸ் பைல்ல புலி பிடிக்கிது அதானால அங்க இருக்கேலாதுன்னு சொல்லி வரேல்ல......இதுக்கு போய் இப்பிடி முழுசுறிங்களே....

  • கருத்துக்கள உறவுகள்

சுட்டுவிரல் பிறரை சுட்ட, நான்கு விரல்கள் என்னை சுட்டும் :icon_idea: :icon_idea: :icon_idea:

varikuthirai.jpg

Uploaded with ImageShack.us

:rolleyes: :rolleyes: :huh::rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அடடாh படம் எ;hம நன்னா இருக்குன்ணா....பை த வே ஒரு சின்ன தகவல்......நேற்று ஒரு செய்தி சீனாவில் ஒரு மிருக ஆராச்சி மையத்தில்..வரிக்குதிரையையும் கழுதையையும் இனைத்து ஒரு மிருகத்தை உருவாக்கி இருக்கிறார்கள் கேள்விபட்டனிஙகளோ? அதனோட கால் எல்லாம் வரிக்குதிரை மாதிரி வரிகளோட இருக்கு பட் உடம்பு தலை எல்லாம் கழுதை மாதிரி இருக்கு..

http://media.smh.com.au/life-and-style/essentials/donkey-sired-zebra-naming-dilemma-2472953.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

20.02.2000 ஆண்டு. பாரிஸ்

மோகனிற்கு நிரந்தரமாக உணவு விடுதியென்றில் வேலை கிடைத்துவிட்டது. பாரிஸ் 20 ல் ஸ்ருடியோ(சிறியஅறை)ஒன்றையும் எடுத்து தனியாகவே தங்கியிருந்தான்.வெளிநாடு வந்த கடனை அடைப்பதற்காக பெரிய சீட்டும் ஒண்டு போட்டிருந்தான். அன்று மாலை வேலையால் வந்தவன் அவசரமாக தமிழ் தொலைக்காட்சியை போட்டான் காரணம் வன்னியில் ஓயத அலைகள் சுழன்றடித்துக்கொண்டிருந்த நேரம் அது. எனவே வேலையிலேயே மோகனிற்கு கவனம் போகவில்லை ஊரிலை என்ன நடக்கிறது புலிகள் எங்கையெங்கை பிடிச்சிட்டினம் எந்தப்பக்கமாய் முன்னேறிக்கொண்டு போகினம் என்று அறியிற ஆவல்.இடைக்கிடை கைத்தெலைபேசியிலை தெரிஞ்சவர்களிடமெல்லாம் புதினம் கேட்டுக்கொண்டே வேலையை செய்துகொண்டிருந்தான். தமிழ் தொலைக்காட்சியில் விசேட செய்திகளில் புலிகள் ஆனையிறவுப் பகுதியை அண்டிபகுதிவரை முன்னேறி தாக்குதல் நடந்து கொண்டிருப்பதாகவும். ஆனையிறவுத்தளம் விரைவில் வீழலாமென எதிர்பாக்கப்படுவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அது மட்டுமில்லை ஆய்வாளர் வல்லவன் கூட தொலைபேசியூடாக வந்து புலிகள் ஆனையிறவை எப்படித்தாக்குகிறார்கள் என்னென்ன வியூகத்தில் தாக்குகின்றார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.உவர் வல்லவன் ஆயிறதிலை சரியான கெட்டிக்காரன்.அரசியல்.. இராணுவத்தாக்குதல்..கலாச்சாரம் எண்டு என்ன கிடைச்சாலும் சப்பி சக்கையாக்கி துப்பிப் போடுவார். அதாலையே அவரை சக்கை லைக்கை லா வல்லவன் எண்டுதான் எல்லாரும் சொல்லுறவை.

மோகனிற்கு ஒரே புளுகம் எப்பிடியும் ஆனையிறவை பிடிச்சிடுவாங்கள்.என்ரை தங்கச்சியும் ஏதாவது ஒருஇடத்திலை நிண்டு அடிபட்டுக்கொண்டிருப்பாள்.கடவுளே ஒரு கெடுதியான செய்தியும் வரக்கூடாது எண்டு சுவரில் மாட்டியிருந்த கலண்டர் பிள்ளையாரை பார்த்து மனதில் வேண்டிக்கொண்டான். வீட்டு அழைப்பு மணி அடிச்சது எடுத்து யாரது எண்டான். நான்தான் உதயன் .....

உதயன் பாரிசில் புலிகள் இயக்கத்திற்கு நிதி சேகரிக்கும் ஒருவன்.அவன் ஒரு உணவுவிடுதியில்தான் வேவை செய்கிறான் வேலை ஓய்வு நேரம் மற்றும் லீவுநாள் எல்லாம் இயக்கத்தின்ரை பிரசுங்களை கொண்டு திரிந்து விக்கிறது.நிதி சேகரிக்கிறதுதான் இவனது இரண்டாவது வேலை . மெல்லிய கறுத்த உருவம் முன் நெற்றிவழுக்கை தோளில் தொங்கும் பை அது நிறைய புலிகள் அமைப்பின் பிரசுரங்கள் சி டிக்கள் புத்தகங்கள். ஒரு கணக்கு கொப்பி தூக்க முடியாமல் துக்கிக் கொண்டு அலைவான். இயக்கத்துக்கு ஜம்பது ரூபாய் தருவதாக சொல்லி விட்டு ஜம்பது தரம் அலைய வைத்தாலும் சினக்காமல் சிரித்தபடியே "வணக்கம் இண்டைக்காவது தருவியளோ இல்லாட்டி இன்னொரு நாளைக்கு வரவோ" எண்டுதான் கேட்பான். எங்கை தமிழாக்கள் இருந்தாலும் மணந்து பிடித்து அவையளின்ரை வீட்டு அழைப்பு மணியை அடித்துவிடுவான். புலிகள் இயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த இயக்கத்தை வெறுப்பவர்கள் கூட ஆரம்பத்தில் அவனை திட்டி அனுப்பினாலும் பிறகு உதயனை பார்த்து பரிதாபப் பட்டு பணம் குடுத்திருக்கினம். காரணம் அவனின்ரை கதை அணுகு முறை அப்பிடி.

மோகன் கதைவைத் திறந்துவிட உள்ளே வந்த உதயன்.

என்ன இண்டைக்கு லீவுதானே

இல்லை ஒருத்தனுக்கு சுகமில்லையெண்டு காத்தாலை வேலைக்கு கூப்பிட்டாங்கள் போட்டு இப்பதான் வந்தனான்.இந்தாங்கோ உங்கடை காசு எடுத்து வைச்சிருக்கிறன்.

செய்தி பாக்கிறியள் போலை எப்படி அடி ..இதுதான் கடைசி அடியாய் இருக்கும் ..

உண்ணானை சொல்லுறன் பெரிய சந்தோசம். ஆனால் என்னமாதிரி ஆனையிறவு விழுமோ??

என்ன இப்பிடி கேட்டிட்டியள் உள்ளை இறங்கி நிக்கிறது ஆர்??பால்ராச் அண்ணையல்லோ.விழாமல் எங்கை போகப்போகுது.

அவரைபத்தி கேள்விப்பட்டிருக்கிறன் ஆள் பெரிய விண்ணன் தானாம். ஆனையிறவு விழவேணும் அதுதான் என்ரை ஆசை.

இப்ப உள்ள நிலைமையிலை நிதி கொஞ்சம் கூடுதலாய் தேவைப்படுதாம் அதலை அவசரகால நிதி சேகரிக்கிறம் குறைஞ்ச தொகை ஆயிரம் யுரோ கேக்கிறம் ஆனால் அது குலுக்கல் முறையிலை திருப்பித் தருவம்.

இஞ்சை பாருங்கோ உதயன் அவசரகால நிதி அவசரமில்லாத நிதி எண்டெல்லாம் என்னட்டை கேக்ககூடாது . உங்களுக்கு ஆரம்பத்திலையே சொல்லியிருக்கிறன் எனக்கு வந்த கடன் இருக்கு. அதைவிட எனக்கொரு கனவு இருக்கு கல்வீடு கட்டுறது. என்ரை தங்கச்சியும் இயக்கத்திலைதான் இருக்கிறாள்.என்ரை செலவுகளையும் சமாளிச்சுதான் ஒரு நாளைக்கு இரண்டு யூரோ எண்டு சேத்து உங்களுக்கு மாதம் அறுபது யூரோ தாறன்.அதைவிட சிடியள் புத்தகங்கள் கலண்டர் வாங்கிறன் இவ்வளவுதான் என்னாலை ஏலும்.இந்தாங்கோ அறுபது யூரோ.

இயக்கம் ஆனையிறவு வரைக்கும் போயிட்டுது கூடுதலாய் ஒரு ஜம்பது யூரேவை குடுக்கலாமா எண்டு யேசித்தாலும். எதுக்கும் ஆனையிறவு விழட்டும் அடுத்தரம் சேத்து குடுக்கலாம் எண்டு நினைத்தபடி காசை நீட்டினான்.

உதயன் கணக்கு கொப்பியை எடுத்து மேகன் அறுபது யூரோ எண்டு வரவு வைத்தவன் ""சரி கேட்டுப்பாத்தன் வசதி இருந்தால் முயற்சி பண்ணி பாருங்கோ. சந்திப்பம்."

உதயன் போய்விட்டான்.

லாசப்பல் பக்கம் போனால் இன்னமும் செய்தியள் ஏதாவது கிடைக்கும். வரேக்குள்ளை ஒரு பங்காட்டு இறைச்சியும் ஒரு சப்பட்டையும் வாங்கி கொண்டந்து சமைச்சிட்டு சப்பட்டையை அடிச்சிட்டு சாப்பிட்டு ஒரு படம் பாக்கலாம் எண்டு நினைச்சபடி வெளிக்கிட்டான்.என்ன தான் ரி வி ..றேடியோவிலை செய்தி கேட்டாலும் எங்கடையாக்களிட்டை லா சப்பலிலை செய்தி கேக்கிறமாதிரி வராது.இயக்கம் ஒரு ராங்கை அடிச்சாலும் அதை பத்தாலை பெருக்கி பத்து ராங்க் அடிச்சிட்டாங்களாம் எண்டுவாங்கள். அதுவும் ஒருத்தன் தானே நேரை அடிச்சமாதிரி அக்சனோடை சொல்லுவான். அது பொய் எண்டு தெரிஞ்சாலும் கேக்க ஒரு திறிலாத்தான் இருக்கும்.........

......................................................................................................................................................................................

15.03.2009ம் ஆண்டு பாரிஸ் பிரான்ஸ் குற்றத்தடுப்பு பிரிவு பாரிஸ் அலுவலகம்.

பாரிசின் குற்றத்தடுப்பு பிரிவு தலைமை அதிகாரி ஜோன் பியரின் அலுவலகம். ஜேன்பியர் ஜரோப்பாவிலிருந்து ஒலிபரப்பாகும் இரண்டு தமிழ் தொலைக்காட்சிகளையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தான். ஜேன் பியரிற்கு தற்சமயம் முக்கியமானதொரு நடவடிக்கை ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. அது ஈழத் தமிழர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டங்களில் வன்முறைகள் நடக்காமல் கண்காணித்து கட்டுப்படுத்தவேண்டும். இதுதான் அவனது இறுதி நடவடிக்கை இந்த நடவடிக்கை முடிந்ததுதம் அவன் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ளப் போகிறான். இதே இவன் காவல் துறையில் இருந்துவிட்டு பின்னர் குற்றத்தடுப்புப் பிரிவின் சாதாரண அதிகாரியாக 1988 ம் ஆண்டு கடைமையில் இணைந்த பொழுதும் ஒரு ஈழத் தமிழரை புலன் விசாரணை செய்ததுடன் ஆரம்பித்திருந்தான். 88 ம் ஆண்டு இறுதியில் பிரான்ஸ் பெல்ஜியம் எல்லையில் ஒரு தமிழரின் காரை எல்லைக்காவல் துறையினர் சோதனையிடுகின்றனர்.

காரில் சக்திவாய்ந்த தொலைத்தொடர்புக்கருவிகள் மற்றும் ஒரு வானொலி இயக்குவதற்கான கருவிகளும் இருந்தது உடனடியாக அவரை கைது செய்ததோடு பொருட்களையும் பறிமுதல்செய்த எல்லைக்காவல் காவல்துறையினர் பரிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரிற்கு தகவல் அனுப்பியிருந்தனர். பாரிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் அவரது வீட்டினை உடைத்து சோதனை செய்தபொழுது மேலும் சில தகவல் தொடர்பு கருவிகளுடன் புலிகள் இயக்கத்தின் பத்திரிகைகள் பிரசுரங்கள் என்பனவும் அகப்பட்டது. எல்லையில் கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளிற்காக பாரிசிற்கு கொண்டுவரப்பட்டார். புதிதாக குற்றப்புலனாய்வு பிரிவில் பதவிற்றிருந்த ஜேன்பியர் அவரை விசாரிக்கிறான்.அந்தப் பொருட்கள் அனைத்தும் புலிகள் இயக்கத்திற்காக பெல்யியம்புறுக்செல்லில் சபீனா விமானத்தில் ஓற்றப்பட்டு அவனும் அதனுடன் பயணிக்கவேண்டும் இடையில் கைது செய்யப்பட்டுவிட்டான். அந்த விசாரணைகளின் போதுதான் ஜேன் பியரிற்கு சிறிலங்கா தீவில் புலிகள் இயக்கம் பற்றிய விபரங்கள் தெரியவருகின்றது. ஆனால் அவனது விசாரணைகள் எல்லாம் கைப்பற்றப் பட்ட பொருட்களால் பிரான்ஸ் நாட்டிற்கு ஏதாவது கெடுதல்கள் சதி வேலைகள் உண்டா என்பதுதான். அப்படி எதுவும் இல்லை அதனால் கைது செய்யப்பட்டவர் பொருட்கள் பறிமுதல் செய்ததுடன் விடுதலை செய்யப் படுகிறார்.அவரை விடுதலை செய்தாலும் தன்னுடைய தொழில் ரீதியாக புலிகள் இயக்கம் அதன் செயற்பாடுகள் முக்கியமாக பிரான்சில் அவர்களது செயற்பாடுகளை அறிந்து கொள்ளவும் அதனை கண்காணிக்கவும் விடுதலை செய்யப்பட்டவருடன் தனிப்பட்ட நட்பை பேணுகிறான்.

அதனால் நிறையவே ஈழத்தமிழர் பற்றிய விபரங்களையும் அறிந்து கொள்கிறான். அதன்பின்னர் இலங்கையில் இந்தியப் படைகாலத்தில் புலிகள் இந்தியப்படை மோதல்கள் நடந்து கொண்டிருந்த பொழுதுதான் அனிதா பிரதாப் சி என் என் செய்தி சேவைக்காக பிரபாகரன் பற்றி தயாரித்திருந்த சிறு விவரணம் வெளியாகியிருந்தது அதனை பிரான்சின் பிரபல பத்திரிகையான. லு மோந் பத்திரிகை பிரபாகனின் படத்துடன் கட்டுரையாக வெளியிட்டிருந்தனர்.பிரபாகரனைப்பற்றி ஏற்கனவே அறிந்திருந்த ஜேன்பியரிற்கு அந்தக் கட்டுரை அவரின் மீது ஒரு ஈர்ப்பை கொடுத்திருந்தது. காரணம் இந்தியப்படையின் ஆளணி ஆயத பலம் என்பதும் புலிகளின் பலம் எனபதும் ஊகிக்கக்கூடியதுதான்.. கட்டுரையில் வெளியாகியிருந்த பிரபாகரனின் படத்தினை வெட்டியெடுத்து அதை சிறிய பிறேமில் போட்டு தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களின் படங்களுடன் அலுவலக மேசையில் வைத்திருந்தான். அதன் பிறகு எத்ததையோ வடிவங்களில் பிரபாகரனின் படங்கள் வெளிவந்திருந்த போதும் அவன் அந்தப் படத்தை மாற்றவில்லை அதுமட்டும்தான் அவனை ஈர்ந்திருந்தது. அதே நேரம் அவனிடம் விசாரணைக்கு வரும் தமிழர்களிடமெல்லாம் பிரபாகரனின் படத்தைக்காட்டி இவரைத் தெரியுமா. இவரை எனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சொல்லத் தவறுவதில்லை..அவன் அப்படி சொல்லும் பேதெல்லாம் விசாரிக்கப்படும் தமிழர் இவன் பிரபாகரனை தனக்கு பிடிக்கும் எண்டு சொல்லி தானும் எங்களுக்கு சார்பானவன் எண்டு காட்டி எங்களிட்டை உண்மையை கறக்கப் பாக்கிறானோ??எண்டு நினைச்சவையளும் உண்டு அதே நேரம் பிரபாகனை தெரியுமெண்டு சொன்னால் எப்பிடி தெரியும் எங்கை தெரியுமெண்டு கேள்வி கேட்டு என்னையும் புலி எண்டு உள்ளை தூக்கி போட்டுவானோ எண்டு பயந்து தெரியாது எண்டு சொன்னவையளும் உண்டு.

prabhakaran.jpg

தெரியாது எண்டு யாராவது சொல்லும் போதெல்லாம் தலையாட்டி சிரிப்பான். தொடர்ச்சியாக தமிழர்களுடன் பழகியதில் கொஞ்சம் தமிழும் கொச்சையாய் கதைக்கப் பழகியிருந்தான் விசாரணை செய்பவர்களை வணக்கம் சுகமாக இருக்கிறீங்களா என தமிழில் கேட்டபடி விசாரணையை தொடங்குவான். அதுவரை அவனை தமிழில் திட்டிக்கொண்டிருந்தவர்கள் அவனது தமிழை கேட்டதும் திடுக்கிட்டு நான் திட்டினது எல்லாம் விழங்கியிருக்குமோ என நினைச்சு பல தடைவை மன்னிப்பு கேட்ட சம்பவங்களும் உண்டு .அதே நேரம் புலிகள் அமைப்பின் பிரான்ஸ் கட்டமைப்பில் சட்டத்திற்கு புறம்பான செயற்பாடுகளில் யார் இறங்கினாலும் அவன் தன் கடைமை தவறியது கிடையாது கைது செய்து விசாரணை செய்து தண்டனை வாங்கிக் கொடுத்து விடுவான். அதுமட்டுமில்லை பாரிசில் இயங்கிய அனைத்து தமிழ் அடிபாட்டு குறூப்புகளின் பெயர்கள் அதன் உறுப்பினர்களின் விபரங்கள் எல்லாமே அவனிற்கு அத்துபடி. அவைகளில் பலரிற்கு தண்டனை வாங்கிக் கொடுத்திரக்கிறான். பிரான்சின் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் கைதுகளும் இவன் தலைமையிலான குழுவே தகவல்களை திரட்டி விசாரணைகளையும் செய்திருந்தனர்..இருபத்தியொரு ஆண்டுகள் கழித்து அவனது இறுதி நடவடிக்கையும் ஈழத்தமிழர் பற்றியதுதான். காரணம் ஈழத்தமிழர்கள் பற்றிய தகவல்கள் .அதுபற்றிய பரிச்சயமும் அவனிற்கு அதிகமாக இருந்ததால் அவனிடமே அந்த பொறுப்பு ஓப்படைக்கபட் பட்டிருந்தது.

ஜேன் பியர். அலுவலகத்தினுள் தேவன் நுளைந்தான். தேவன் அரச அங்கீகாரம் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளர். பாரிஸ் நகரில் குற்றச்செயல்களிற்காக கைது செய்யப்படும் தமிழர்களின் காவல்த்துறை விசாரணைகளின் போது கைது செய்யப்பட்டவர்களிற்கு பிறெஞ்சு மொழியறிவு இல்லாதிருந்தால் மொழிபெயர்ப்பிற்காக காவல்த்துறை அழைப்பவர்களில் தேவனும் ஒருத்தன்.

தேவனிற்கு கொடுத்து வரவேற்ற ஜேன் பியர்.

வணக்கம் தேவன் மீண்டும் உங்ளது சேவை எங்களிற்கு தேவை தற்சமயம் நடக்கும் ஊர்வலங்கள் ஆர்ப்பாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என நினைக்கிறேன். ஆர்ப்பாட்டங்களின் பொழுது யாராவது உணரச்சி வயப்பட்டு வன்முறைகளில் இறங்கலாம்..அல்லது இந் ஆர்ப்பாட்டங்களின் வன்முறைக் குழுக்கள் புகுந்து தமக்கு சாதகமாக்கி வன்முறையை தூண்டலாம். அல்லது குழப்புவதற்காகவே வேறு சிலரும் முயற்சிக்கலாம். எது எப்படியோ பொது மக்களோ சொத்துக்களோ பாதிக்கப்படக்கூடாது அதுதான் எனது நோக்கம் . அதற்கான நான் ஒரு சிறப்புப் பிரிவை உருவாக்கியிருக்கிறேன். அதில் ஒரு பாண்டிச்சேரி தமிழரும் உள்ளார். ஆனால் அவரிற்கு உங்கள் வித்தியாசமான உச்சரிப்புக்கள் புரிவதில்லை. இந்த நடவடிக்கை முடியும் வரை எம்முடன் நீங்கள் ஒத்துளைக்கவேண்டும் முக்கியமாக ..பல தொலைபேசி உரையாடல்கள் உடனுக்குடன் எமக்கு மொழிபெயரக்கப்படவேண்டும்.கொஞ்சம் அதிகமான வேலை சிரமம் தருவதற்கு மன்னிக்கவேண்டும்.

பரவாயில்லை எனது தொழில் அதுதானே இதில் சிரமம் பாக்க முடியாதே.

நல்லது இந்த தமிழ் தொலைக்காட்சியில் எங்கெங்கு ஆர்பாட்டங்கள் நடைபெறப்போகின்றது எத்தனை மணிக்கு நடைபெறுகின்றது என்கிற விபரங்கள் உடனுக்குடன் அறிவித்தல் கொடுத்தபடி இருக்கிறார்கள் அவைகளை எனக்கு குறிப்பெடுத்துத்தாருங்கள். உங்களிற்கு சிரமம் இல்லாமல் பணி செய்ய அனைத்து வசதிகளுடனும் ஒரு அறை ஒழுங்கு செய்துள்ளேன் உங்கள் பணிகளை உடைனேயே தொடங்கலாம் நன்றி

தேவன் தமிழ் தொலைக்காட்சிகனை பார்த்து குறிப்பெடுத்தபடியே பதியப்பட்டிருந்த தொ.பே அழைப்புக்களை மொழி மாற்றீடு செய்து பதியத் தொடங்கினான். தமிழ் தொலைக்காட்சியில்.... ""எல்லாரும் வீதிங்கு வாங்கோ எங்கடை சனம் சாகுதுகள் எல்லாரும் போராடவேணும். தயவுசெய்து றோட்டிலை இறங்குங்கோ"" என்று மீனாட்சி அழைத்தபடி இருந்தான்.

......................................................................................................................................................................................

20.03.2009

பிரான்சிற்கு வந்து சேர்ந்த ரகு பிரான்சில் அகதி தஞ்சம் கோரியிருந்தான் அது நிராகரிக்காப்பட்டு மீள் பரிசீலனைக்காக அனுப்பிவைத்திருந்தான் அதுமட்டுமல்ல அவன் கலியாணம் கட்டினால் திருந்தி விடுவான் என நினைத்து அதே நேரம் விசாவும் அவனுக்கு பிரச்சனையாய் இருந்தபடியால் நல்ல விசா உள்ள பெட்டை ஒண்டையும் அவர்களது சொந்தத்தில் தேடி மீனாச்சி கலியாணம் செய்து வைத்து விட்டிருந்தாள்.ஆனாலும் ரகுவிற்கு சும்மாயிருக்க முடியவில்லை .பாரிஸ் லாசப்பல் பக்கம் போய் நட்புகளை பிடிக்கத் தொடங்கினான். லா சப்பலிலும். முக்காப்புலா. மின்னல்.வெண்ணிலா .விழுதுகள் .என பல குழுக்கள் இருந்தது. ரகு முக்கப்புலா குழுவில் இணைந்து அடிபாடுகளில் இறங்கியவன் முக்காப்புலா அமைப்பின் தலைவன் ஒரு கொலைகேசில் உள்ளேபோக இப்பொழுது ரகுதான் அதற்கு தலைவன்.

பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டங்களிலும் தனது குழுவோடு புலிக்கொடியோடு முன்னிற்கு நின்று கத்தத் தொடங்கியிருந்தான்.

ஜேன் பியரின் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடங்களில் சாதாரண உடையில் உலாவத் தொடங்கியிருந்ததோடு அந்தப் பகுதிகளில் உயரமான கட்டிடங்களில் இரகசியக் கமாறாக்களையும் பொருத்தி கண்காணிக்கத் தொங்கியிருந்தனர்.

லண்டனில் பரமேஸ்வரனின் உண்ணாவிரதம் தொடங்கியிருந்தது. ஊர்வலங்களில் கலந்து கொள்ளாமல் அதுவரை சும்மாயிருந்த தமிழர்களையும் அது உலுப்பி விட்டிருந்தது. ஆர்ப்பாட்டங்கள் ஊர்வலங்கள் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் வலுப்பெற்றது. அப்பொழுது லண்டன் நகரை இணைக்கும் பிரதான மேம்பாலம் ஒன்றினை இளையோர்கள் மறித்து போராட்டத்தை நடத்தினார்கள்.அது பல இங்கிலாந்து ஊடகங்களின் பார்வைகளையும் திருப்பியிருந்தது.அதையடுத்து பாரிசிலும் தமிழர்கள் லா சப்பல் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். பொலிசார் குவிக்கபட்டனர்..ரகுவும் புலிக்கொடி ஒன்றைமுதுகில் போட்டு சுப்பர் மானைப்போல கட்டியபடி தன்னுடைய குழுவினருடன் வந்தவன். அங்கு கிடந்த குப்பை வண்டிகளை இழுத்து வீதியில் தள்ளி தீவைத்தவன் அங்கிருந்து வேகமாக இன்னொரு குறுக்கு வீதியில் புகுந்தான். வாகனப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டது. கார்களின் கோண் சத்தம் தீயணைப்பு வண்டியின் சைரன் போலிஸ் வாகனங்களின் சைரன் என ஒரே இரைச்சலாய் மாறியது. அந்த வழியால் வந்து மாட்டுப்பட்டு நின்ற கார்களில் ஒருத்தி திட்டியபடியே கோணை அடிக்க அவளது காரின் பக்கக் கண்ணாடியை சலோப் என கத்தியபடி ஓங்கி அடித்தான் அது சிதறியது

அத்தோடு நிக்காமல் வரிசையாக சில கார்களிற்கும் அடித்துக்கொண்டே போனான். அப்பொழுது அந்தப்: பக்கத்தால் வந்து கொண்டிருந்த 31 ம் இலக்க பஸ் போக்கு வரத்து இறுகியதில் லா சப்பல் பகுதியில் நின்றுவிட அதிலிருந்த மக்கள் இறக்கிப் போய் கொண்டிருந்தனர். அந்தப் பகுதிக்கு வந்த ரகு குழுவினர் அந்த பஸ்சையும் அடித்து நொருக்கிவிட்டு எங்கள் தலைவன் பிரபாகன் என்று கத்தியபடி போய்கொண்டிருந்தனர் . இவையனைத்தையும் போலிசாரின் இரகசிய கமராக்கள் பதிந்து கொண்டிருந்தன. ஜேன்பியரிற்கு தகவல்கள் உடனுக்குடன் போய்க்கொண்டிருந்தது முடிந்தளவு வன்முறையை கட்டுப்படுத்துங்கள் யாரையும் உடனே கைது செய்யவேண்டாம் தேவைப்பட்டால் கண்ணீர் புகையை பாவிக்கும்படியும் உத்தரவு பிறப்பித்திருந்தான்.

21877588.jpg

பாரிசில் நிலைமைகள் இப்படியிருக்க இலண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரனை எழுப்புவதற்காக இலண்டன் புலிகளின் பணியக பொறுப்பாளர்கள் திட்டமிட்டனர் பரமேஸ்வரனிற்கு விசா இல்லை அவன் விசா எடுக்கிறதுக்காகத்தான் உண்ணாவிதரம் இருக்கிறான் அவனை எழுப்பிப் போட்டு எங்கடையாக்கள் ஒராளை இருத்தப்போறம் என்று தங்கள் பொறுப்பாளரிற்கு தகவல் அனுப்பியிருந்தாரகள். அந்தத் தகவல் வெளியே கசிந்ததில் வேறு பலர் பரமேஸ்வரனின் போராட்டத்தை குழப்பவேண்டாம் அதை மாத்தினால் போராட்டத்தை கொச்சைப்படுத்துவது பேல இருக்கும் அவனுக்கு சனத்தின்ரை ஆதரவும் இருக்கு . அதையும் இழக்கவேண்டி வரும் எண்டு நடேசனிற்கு செய்தி அனுப்பி விட்டிருந்தனர். எல்லாத்தையுமே நாங்கள்தான் செய்யவேணுமெண்டு அடம்பிடிக்காதேங்கோ சனத்தை அவங்கடை பாட்டிலை விரும்பின படி செய்யவிடுங்கோ எண்டு நடேசன் கண்டிப்பாக சொல்லிவிட்டிருந்தார்.

அதே போலத்தான் சுவிசிலும் இளையோர்கள் போராட்டம் நடத்தவிடாமல் சுவிஸ் பணியககம் குறப்பாக கிருஸ்ணா அம்பலவாணர் போன்றவர்கள் தடுத்தனர். அப்பொழுது இசுவிஸ்ளையோர் அமைப்பிற்கு பொறுப்பாக குரு என்பவர் போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிஐந்தார். இளையோரை போராட்டம் நடாத்தவிடாமல் தடுக்கிறார்கள் என்கிற குருவின் வாக்கு முலம் பதியப்பட்டு நடேசனிற்கு போட்டுக்காட்டப்பட்டது.. பின்னர் நடேசனின் தலையீட்டால் இளையோர் அமைப்பு போராட்டங்களை நடாத்த அனுமதிக்கப்பட்டனர். அதுக்கு பின்னர்தான் அம்பலவாணர் திடீரென ஜ.நா சபைக்கு முன்னாலை சாகும்வரை உண்ணாவிதரம் என்று அறிவித்து விட்டு பின்னர் பேர்ண் வெளிநாட்டமைச்சகத்திற்கு முன்னால் என்று செய்தி வெளியாகியிருந்ததுபேர்ண்முருகன் கோயில் உண்ணாவிதரத்தை ஆரம்பித்தார். சுவிஸ் ஜெனிவாவில் இருந்த ஜ.நா சபையை பேர்ண் முருகன் கோயிலுக்கு மாத்திட்டாங்களா என்று பலரும் சந்தேகப்பட்டனர். உண்ணாவிதரம் தொடங்கிய மூன்றாவது நாள் அவர் தனது மனிசிக்கு போனடிச்சு எடியேய் என்னாலை முடியேல்லை போலிசுக்கு போனடி என்று சொல்லி பிறகு அவரின்ரை மனிசி என்ரை மனுசன் சாகப் போறார் காப்பாத்துங்கோ எண்டு போலிசுக்கு போனடிக்க ..போலிஸ் வந்து அவரை அப்பிடியே கட்டிக்கொண்டு போய் வைத்தியசாலையில் போட்டுவிட்டு பேய்விட்டனர்.அதே குரு பின்னர் இளையோரமைப்பையும் தவறாக வழிநடத்தி பின்னர் சுவிசில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்ததையும் குளறுபடியாக்கிக் கொண்டிருக்கிறார் தற்சமயம் வரை.

ltteswiss_20090416002.jpg

Edited by sathiri

புலம் பெயர் தேசத்தில நடந்த எல்லாமே வெளில வருது போல சாத்திரியார் போன் off ல வையுங்க 2 ,3

நாளைக்கு :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் தேசத்தில நடந்த எல்லாமே வெளில வருது போல சாத்திரியார் போன் off ல வையுங்க 2 ,3

நாளைக்கு :lol:

இதுக்கெல்லாம் போய் போனை நிற்பாட்டுவாங்களா?? நானும் கொஞ்சம் சிரிக்கத்தானே வேணும். :lol: :lol:

தொலைத் தொடர்புகளை நிப்பாட்டுங்கோ சாத்திரி :o . இப்பிடி சனி வக்கரிக்கும் என்று நான் கனவிலையும் நினைக்கவில்லை . நானும் 2009ல் ஒரு சில விடயங்களில் முரண்பட்டிருந்தேன் . இங்கு உள்ளவர்களுக்குத் தான் இங்குள்ள காட்சிகளின் கனபரிமானங்கள் தெரியும் . லாச்சப்பல் விவகாரங்கள் சரியானமுறையிலேயே கையாளப்பட்டன . சிறு விளக்கம் வெளிநாட்டு வாசகர்களுக்கு , பிரென்ஞ்சில் < சலோப் > என்றால் சரியான தமிழ் பதம் < வேசைமகள் > என்பதாகும் . ( மட்டுக்கள் மன்னிக்க வேண்டும் ) . வெறும் உணர்ச்சியில் எதை எப்படி செய்கின்றோம் என்று தெரியாத பொதுமக்களையும் , உண்மையான உணர்வாளர்களையும் , லாச்சப்பல் குழுக்கள் , இதர ஐரோப்பிய சருகுபுலிகள் எப்படித் தமக்குச் சாதகமாக்கினார்கள் என்பதற்கு இன்றய பதிவு ஒர் நல்ல உரைகல் . நான் அப்பவே சொன்னேன் சாத்திரிக்கு , எம் ஜீ ஆருக்குத் தான் எப்பவும் மவுசு என்று சிவாஜி கொஞ்சம் யோசிக்க வேண்டித்தான் இருக்கு :D :D :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

......................................................................................................................................................................................

25.03.2009

பிரான்சில் ஒருங்கிணைப்பு குழுவினர் கைது செய்யப்பட்ட பின்னர் சில மாதங்கள் பிரான்சில் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகளை பலர் பயம் காரணமாக பொறுப்பெடுக்க முன்வரவில்லை அதே நேரத்தில் தான் டென்மார்க்கில் இருந்து மயூரன் விடுதலை என்கிற பெரில் பிரான்ஸ் பொறுப்பை ஏற்கிறார். அவர் பயமில்லாமல் தொடர்ந்தும் வேலைகள் செய்தவர்களிற்கு ஒரு கூட்டத்தை வைத்தார் உதயனும் அதில் இருந்தான். நாட்டிலை இப்ப இருக்கிற சிக்கலான நிலைமை உங்கள் எல்லாருக்கும் தெரியும் இப்ப எங்கடை பெரிய பிரச்சனையே நிதிதான் பெரும்தொகை நிதி தேவைப்படுது அந்த நிதி உடைனை திரட்டினால்தான் தாயக்திலை எங்கடை மண்ணையும் மக்களையும் காப்பாத்தலாம்.எனவே நீங்கள் சாதாரணமாய் குறைஞ்சது இரண்டாயிரம் யுரோ ஒவ்வொருத்தரிட்டையும் வாங்கவேணும். ஆதரவாளர்களிட்டை எவ்வளவு வங்கிகளிலை கடன் எடுத்துத் தர இயலுமோ எடுத்துத் தரச்சொல்லி சொல்லுங்கோ. கடைக்காரரிட்டை குறைஞ்சது ஜயாயிரம் யுரோ கேளுங்கோ உடைனை இதை செய்யவேணும் எண்டான்.

மாவிலாறிலை தொடங்கி மடு பிறகு கிளிநெச்சிவரை போய் நிக்கிது இந்த நேரம் சனங்களும் கன கேள்வி எங்களை கேக்கினம் பதில் சொல்லத் தெரியேல்லை அதோடை முதல் பொறுப்பாளர் பிடிபட்டா பிறகு யார் இப்ப பொறுப்பு எண்டும் சனத்துக்கு தெரியாது அதாலை நீங்கள் பொதுவா ஒரு கூட்டம் வைக்கவேணும் என்று உதயன் தலையை சொறிந்தான்.

கட்டாயம் அடுத்த ஞாயிற்று கிழைமை தமிழ் பள்ளிக்கூடத்துக்கு உங்களுக்கு தெரிஞ்சவையளை வரச்சொல்லுங்கோ நான் கதைக்கிறன் ஆனால் புது பொறுப்பாளர் நாட்டிலை இருந்து வந்திருக்கிறார் எண்டு அவையளிட்டை சொல்லுங்கோ.

நீங்கள் டென்மார்க்கிலை இருந்தல்லோ வந்தனியள்.

ஓம் ஆனால் நாட்டிலை இருந்து வந்தவர் எண்டால்தான் என்ரை சொல்லுக்கு ஒரு மரியாதை இருக்கும் அப்பதான் நான் சொல்லுறதை அவையள் நம்புவினம் அதாலை நாட்டிலை இருந்து வந்தவர் எண்டே சொல்லுங்கோ.

உதயன் மேகனின் வீட்டிற்கு போயிருந்தான் வீட்டு சுவரில் மோகனின் தங்கையின் படம் பெரிதாக்கப்பட்டு மாலை போடப் பட்டிருந்தது. அதைபாத்ததும் உதயனிற்கு இரண்டாயிரம் யுரோ கேக்க தயக்மாய் இருந்தது.

உதயனை வரவேற்ற மோகன். கிளிநொச்சி சண்டையிலை செத்திட்டாளாம் பொடிகூட எடுக்கேல்லையாம் இப்பதான் போனகிழைமை எனக்கு அம்மா முல்லைத்தீவிலை நிண்டு போனடிச்சவா .ஒரு கொமினிக்கேசன்தான் இயங்குதாம் அதுக்கு சனம் வரிசையிலை நிக்குதாம் அதுவும் எப்ப போகும் எண்டு தெரியாது எண்டார். அதோடை எங்கடை கடைசியையும் பாப்பா குறூப் வந்து பிடிச்சுக்கொண்டு போட்டாங்களாம் எண்டு சொல்லியழுதா என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை. என்ன நடக்கும் இயக்கம் திருப்பி அடிக்குமோ இல்லாட்டி....ஏதாவது தெரியுமேமோகன்??

உண்மையை சொன்னால் எனக்கும் ஒண்டும் தெரியாது புதிசா ஒரு பொறுப்பாளர் நாட்டிலையிருந்து வந்திருக்கிறார் வாற ஞாயிற்று கிழைமை கூட்டம் வைக்கிறார் கட்டாயம் வாங்கோ அதோடை அவசரகால நிதியும் சேர்க்கிறம் ஒராளிட்டை இரண்டாயிரம் வாங்கிறம் யோசியுங்கோ என்றுவிட்டு உதயன் விடைபெற்றான்.

ஞாயிற்றுக் கிழைமை அந்தப் பாடசாலையில் கணிசமான கூட்டம் நிறைந்திருந்தது விடுதலை பேசத்தொடங்கினார்.

எங்கள் பலம் தக்கவைக்கப்பட்டிருக்கின்றது. நாங்கள் தந்திரோபயமாகத்தான் பின்வாங்கியுள்ளோம். இந்த பின்வாங்கல் தற்காலிகமானதுதான். ஆனால் இப்பொழுது எமது மக்களிற்கான வாழ்வா சாவா என்கிற நிலைமை இந்த நிலைமையை நாம் மாற்றியமைக்கவேண்டுமானால். எம்மால் முடிந்தளவு நிதியை வழங்கினால் அங்கு கள நிலைமைகள் மாறும் இல்லாவிடில் எதிரி எம்மை அழித்துவிடுவான். எனவே விரைவாக உங்கள் பங்களிப்புக்களை செய்யுங்கள்.

.............................................................................................................................................................................................

மறுநாள் மேகன் உதயனிற்கு போனடித்து இரண்டாயிரம் யுரோ றெடி பண்ணிவைச்சிருக்கிறன் எங்கை சந்திக்கலாம்.

கொஞ்ச நேரத்திலை லா சப்பல் புட்டுக்கடைக்கு வருவன் அங்கை வாங்கோ.

உதயன் விடுதலைக்கு போனடிச்சான் உங்களிட்டை சேத்த காசையும் கணக்குகளும் தரவேணும். அதோடை இனி நான் நிதி சேகரிக்கிற வேலையளையும் விடப்போறன். இனி என்னாலை ஏலாது.மனச்சாட்சி இடம் குடுக்குதில்லை.

உதயன் விடுதலையிடம் பணத்தையும் கணக்குகளையும் ஒப்படைத்தவன் அவனது தோள்பையில் மிச்சமிருந்த பிரசுரங்கள் சி. டி க்களையும் எடுத்து கொடுத்துவிட்டு விடைபெற்றான்

பத்து வருடங்களிற்கு மேலாக அவனது தோளில் தொங்கிய அந்த தோல்பையை இனி எனக்கு தேவைப்படாது என்று சொல்லியபடியே வீதியோரத்தில் கிடந்த குப்பை வாளியில் எறிந்து விட்டு லா சப்பல் இரயில் நிலையத்தை நோக்கி நடந்தான். தோளில் பை இல்லாத உதயனை பலர் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். சிலர் அடையாளமே கண்டுகொள்ளவில்லை.

00000000000000

அன்று மோகன் வேலைக்கு போகும் பொழுது கையில் பெரியதொரு போர்வையுடன் போயிருந்தான். அவனது முதலாளி அவனிடம்.

மோகன் என்ன போர்வையோடை வருகிறாய் வீடு இல்லையா றோட்டிலையா படுக்கப் போகிறாய். ..

இல்லை எங்கடை நாட்டிலை நடக்கிற படுகொலைகளை எல்லாருக்கும் தெரியப்படுத்த எங்கடையாக்கள் நாலுபேர் ஈபிள் ரவருக்கு முன்னாலை உண்ணாவிதரம் இருக்கினம். வேலை முடிய அவையளோடை நானும் போய் விடியும் வரை இருக்கப் போறன். சரியான குளிர் அதுதான் போரவையை கொண்டந்தனான்..

சரி சாப்பிடாமல் இருந்தால் எல்லாருக்கும் உங்கடை பிரச்சனை தெரிந்திடுமா??

அது ... அது ...ஏன் சாப்பிடாமல் இருக்கினம் என்ன காரணம் எண்டு எல்லாரும் கேட்பினம் தானே. அப்ப நாங்கள் விசயத்தை சொல்லுவம்.

அதையே சாப்பிட்டிட்டு சாதாரணமாய் நின்று சொன்னாலும் கேட்பினம்தானே??

அதுகள் எங்கடை போராட்ட வடிவம் உங்களுக்கு புரியாது

உங்கடை போராட்ட வடிவம் எங்களிற்கு புரியாது என்கிறாய் பிறகு அந்த வடிவத்தாலையே புரியவைக்கப்போறம் என்கிறார் முரண்பாடாக உள்ளதே

மோகனிற்கு எரிச்சலாக வந்தது ஆனாலும் அடக்கிக் கொண்டு சாப்பிடாமல் இருந்து தங்களை வருத்தி போராட்டத்தை நடத்தினால் தான் எங்கடையாக்கள் எல்லாரும் தாங்களும் வீதியிலை இறங்கி போராட முன்வருவினம்.

கொஞ்சம் பொறு பிரச்சனை உங்கடை நாட்டிலைதானே.

ஓம்.

பாதிக்கபடுகிறது உங்களது இனம் தானே ??

ஓம்.

அப்ப இங்கை வாழுகிற உங்கடை இன மக்கள் எல்லாரும் தாங்களாய் வீதிக்கு வருவினம் தானே போராடுவதற்கு.. பிறகெற்கு சாப்பிடாமல் கஸ்ரப்பட்டு அவையளை வரவழைக்கவேணும்.

மோகனிற்கு பதில் சொல்லத் தெரியவில்லை அது..வந்து....அப்பிடித்தான் ..ஆனால் எனக்கு இந்த சனி ஞாயிறு லீவும் வேணும் நான் பெல்ஜியம் ஜ.நா சபைக்கு முன்னாலை நடக்கப்போற ஆர்ப்பாட்டத்துக்கு போகவேணும்.

அது இருக்கட்டும்இப்ப பொதுவாகவே பெல்ஜியம் ஜ.நா சபை கூட்டத்தெடர் இல்லை அதைவிட சனி ஞாயிறு லீவுநாள் உங்கடை ஆர்ப்பாட்டத்தை பார்கிறதற்கு அங்கை யார் இருக்கப் போகினம்??

அதுதான் எனக்கும் புரியேல்லை எப்பவுமே ஜ.நா சபை லீவு நேரம் இல்லாட்டி சனி ஞாயிறு லீவு நாட்களிலைதான் எங்கடையாக்கள் ஊர்வலம் ஆர்பாட்டத்தை ஏற்படு செய்யினம். ஊரவலமாய் போய் வாசல் காவல் காரனிட்டை மனு குடுக்கிறதே வேலையா போச்சுது. ஆனால் சுவிசிலை ஒருதடைவை அங்கத்தைய இளையோரமைப்பு மட்டும்தான் உருப்படியா ஜ.நா.சபை கூட்டத் தொடர் நடக்கேக்குள்ளை ஆர்ப்பாட்டம் செய்திருக்கினம். ஆனாலும் போகமல் இருக்க முடியேல்லை போகவேணும்.

உனக்கு எப்ப லீவு வேணுமோ தாராளமாய் எடுத்துக்கொள். ஆனால் எனக்கென்னவோ உன்னுடைய பிரச்சனையே புரியவில்லை

......................................................................................................................................................................................

ஜெர்மனியில் பிரித்தானிய மற்றும் சீனத்தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. அதன் ஏற்பாடுகளை ஜெர்மனிய தமிழ் இளையோர் அமைப்பு பொறுப்பாளர் சுஜாதா செய்திருந்தார். அதற்கு முதல் பெல்யியம் ஜ.நா சபைக்கு முன்னால் நடந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தவரும் அவரே. அவரிடம் வந்த ஜெர்மன் பொறுப்பாளர் வாகீசன். இவங்களுக்கு நாங்கள் சும்மா வெளியிலை நிண்டு கத்தி பிரயோசனம் இல்லை அதாலை இண்டைக்கொரு வேலை செய்யப் போறம். நீங்கள் எம்பசி வாசலுக்கு கிட்ட கூடுதலா பெண்களை முன்னாலை விடுங்கோ. பிரான்சிலை இருந்து ரகு குறூப்பை கூப்பிட்டிருக்கிறன் அவங்கள் இடையிலை புகுந்து கல்லெறிஞ்சு எம்பசி கண்ணாடியளை உடைச்சிட்டு சனத்தோடை சனமாய் மாறி போயிடுவாங்கள் நீங்களும் கொஞ்ச பெட்டையளிட்டை கல்லை குடுத்துவிடுங்கோ. பயப்பிடாதையுங்கோ நிறை சனம் எண்டபடியாலை பொலிஸ் கண்டு பிடிக்காது

இந்தத் திட்டம் ஆi;ப்பாட்டத்திற்கு அனுமதி வாங்கியிருந்த பாதர் இமானவேலிடம் யாரோ சொல்லிவிட அவர் ..ஒருத்தரும் கல்லெறியக்கூடாது அப்பிடி செய்தால் இனியொரு ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி தரமாட்டாங்கள்.

எறிஞ்சால் நானே பொலிசிலை பிடிச்சுக் குடுத்திடுவன் என்று வாகீசனிடம் சொல்லிவிட அங்கு அருகில் வந்து விட்ட ரகுவிற்கு செய்தி போனது. சே.......பாதிரிக்கு தேவையில்லாத வேலை இவ்வளவு தூரம் வந்திட்டம் சும்மா திரும்பி போகேலாது என்ன செய்யலாமென யோசித்தவனிற்கு ஒரு யோசனை தோன்றியது . கல்லுத்தானே எறியக்கூடாது தனது நண்பர்களை அழைத்து விடயத்தை சொன்னான். பிரித்தானிய தூதரகத்தினுள் முட்டைகள் போய் விழ ஆரம்பித்தது. பாதுகாப்பு அதிகாரி ஒருத்தன் வந்து பிரித்தானிய கொடியை பத்திரமாக இறக்கி உள்ளே கொண்டு சென்றான். அப்பொழுது சில கற்களும் உள்ளேபோய் விழ மேலதிகமாக போலிசார் அங்குவர ரகு குழுவினர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர்.

மினக்கெட்டு வந்ததுக்கு பிரயொசனம் இல்லாமல் போச்சுது என்ன செய்யலாமென மற்றவரகளுடன் ஆலோசித்தான். நோர்வேயிலை செய்தமாதிரி சிறிலங்கன் எம்பசியை உடைச்சுப்போட்டு போவம் எண்டான் ஒருத்தன். டேய் ஜெர்மன் பொலிசை விழையாட்டா நினைக்காதை அவங்கள் பிரெஞ்சு பொலிசு மாதிரியில்லை பிடிச்சாங்களெண்டால் கட்டிக்கொண்டு போய் கட்டுநாயக்காவிலை இறக்கிவிட்டிட்டுத்தான் மற்றவேலை பாப்பாங்கள். வேண்டாம் பிரான்சுக்கே திரும்பி போவம் என்று முடிவெடுத்தார்கள்.

.............................................................................................................................................................................................

19.05.2009 செவ்வாய்

. வேலையில் நின்ற மோகனின் கைத் தொலைபேசி அடித்தது எடுத்தான் அவனது நண்பன் ஒருவன். டேய் நியூஸ் தெரியுமோ தலைவரின்ரை பொடியெண்டு சி என் என் னிலை காட்டுறாங்கள். மோகனிற்கு தலைசுற்றி கண்கள் மயங்குவது போலை இருந்தது கிழே குந்தி இருந்துவிட அவனிற்கு பக்கத்தில் நின்றவன் முதலாளியை கூப்பிட்டு விசயத்தை சொல்லவும்.

இவன் கொஞ்சநாளாய் இப்பிடித்தான்..என்றபடி அவனை வீட்டிற்கு போய் ஓய்வெடுத்து வரும்படி அனுப்பிவிட்டான். வீட்டிற்கு வந்தவன் இரண்டுநாளாய் வேலைக்கே போகவில்லை ஏதாவது ஒரு செய்தி தவைர் இருக்கிறார் என்று சொல்லாதா?? தலைவர் தான் இருக்கிறன் எண்டு எதிலையாவது அறிவிக்கமாட்டாரா என இரண்டு நாளாய் உலகத்தின் அனைத்து மொழிகளிலும் உள்ள தொலைக்காட்சிகளை பாத்தும் வானொலிகளையும் கேட்டும் களைத்துப்போய்விட்டான். பலம் தக்கவைக்கப்பட்டிரக்கு பணம்தான் பிரச்சனையெண்டு விடுதலை சொன்னவர் எதுக்கும் அவருக்கு போனடிச்சு பாப்பம் என நினைத்து விடுதலையின் தொலைபேசி இலக்கத்தை அழுத்தினான். அந்த இலக்கம் பாவனையில் இல்லை என்று சொல்லியது

22.05.2009

ஜேன் பியரின் அலுவலகத்தில் இருபத்தியொரு தமிழர்களின் கோப்புக்கள் அடக்கிவைக்கப்பட்டிருந்தது. தன்னுடைய குழுவினரை அழைத்தவன் நாங்கள் நடவடிக்கையில் இறங்கும் நேரம் வந்துவிட்டது. இன்று இருபத்தியொரு பேரையும் கண்காணியுங்கள். இன்று இரவிலிருந்து நாளை அதிகாலைக்குள் அனைவரையும் கைது செய்துவிடவேண்டும். என உத்தரவிட்டவன். தேவனை அழைத்து அனேகமாக நாளையுடன் உங்களிற்கும் விடுதலை கிடைத்துவிடும். இன்று விடிய விடிய வேலை உண்டு தயாராக இருங்கள் என்று சொல்லியவன். என்னுடைய குழு நடவடிக்கைக்கு இறங்கி விட்டார்கள் அதனை கவனிக்கவேண்டும் மீண்டும் சந்திப்போம் என விடைபெற்றான்.

அன்று வேலைக்கு போயிருந்த மோகன் லா சப்பல் பக்கம் போனாலாவது ஏதாவது செய்தி கிடைக்கும் என நினைத்து லா சப்பலில் இறங்கி நடந்து கொண்டிருந்தான் அனைத்து தமிழர் முககங்களிலும் ஒரு இறுக்கம். யாரை பார்த்தாலும் என்னவாம். இருக்கிறாரா?? இல்:லையா என்கிற கேள்விதான். லா சப்பலின் பின்பறமாக இருந்த இரயில்வே பாலத்தில் ரகு குழுவினர் நின்று தண்ணியடித்தபடியிருந்தனர். அவர்களை கண்டதும் மோகனுக்கு மனதில் சின்தொரு மகிழ்ச்சி ஏனெண்டால் ரகு தான் இயக்கத்திலை கனகாலம் இருந்தவன் எண்டும் கடைசி நேரம் வரைக்கும் வன்னியோடை தொடர்பிலைஇருந்தவன்எண்டும் அடிக்கடி சொல்லியிருக்கிறான் அவனுக்கு விசயம் தெரிஞ்சிருக்கும் என்று நினைத்தபடி ரகுவிடம் போனவன்.

என்னமாதிரி செய்தியள்ளை படத்தை அடிக்கடி காட்டுறாங்கள் .ஆனால் இஞ்சை கனபேர் இருக்கிகிறார் எண்டினம் உனக்கு ஏதாவது தெரியுமே எனக் கேட்டான். லேசாக மற்றவர்களை பார்த்து ஒரு ஏளனப்பன்னகையை வீசியவன் நான் பதில் சொல்லியே களைச்சுப் போனன். எண்டவன் பிளாஸ்ரிக் கிண்ணத்தில் விஸ்கியை ஊற்றி கலந்து மோகனிற்கு நீட்டியவன் .இஞ்சை வடிவா கவனி என்றபடி அங்கு நின்ற காரின் போனற் மீது படிந்திருந்த தூசியில். ஒரு வட்டத்தை போட்டான் இதுதான் நந்திக்கடல் 18 ந திகதி விடியப்பறம் நாலுமணி சொர்ணம் தலைமையிலை இருபது படகுகள் எல்லாத்திலையும் கரும்புலியள் தலைவரும் ஒரு படகிலை ஏறுறார். படகுகள் ஸ்ரட் ஆகிது தலைவரின்ரை படகுக்கு முன்னாலை அஞ்சு படகு வலப்பக்கம் அஞ்சு இடப்பக்கம் அஞ்சு பின்னாலை அஞ்சு ..நந்திக்கடல் பாதியை தாண்டேக்குள்ளை ஆமிக்காரன் கண்டிட்டான். அடிபாடு தொடங்கிது.. என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வேகமாக வந்த சாதாரண கார் ஒன்றில் சிவில் உடையிலிருந்த காவல்த்துறையினர் இறங்கி போலிஸ் என்று தங்கள் அடையாள அட்டையை உயர்த்தி காட்டிய அதே நேரத்தில் கைத்துப்பாக்கிகளையும் அவர்களை நோக்கி நீட்டியபடி கையை உயர்த்தச் சொன்னார்கள். கையில் விஸ்கி கிளாசுகளுடன் நின்றுகொண்டிருந்தவர்கள் அதனை அப்படியே கீழே போட்டு விட்டு கையை உயர்த்தினர்.மேகனிற்கு கிளாசை கீழேபோட மனமில்லை அதனை காரில் மேல் வைத்து விட்டு கையை உயர்த்தினான். எங்கேயோ தயாராய் நின்ற போலிஸ் வான் ஒன்று சைரன் அடித்தபடி வேலகமாய் வந்து நின்றது . மோகனின் அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்த ஒருவர் அவனை அங்கிருந்து போகும்படி கூறிவிட்டு மற்றைய அனைவரும் விலங்கிட்டு வானில் ஏற்றப்பட்டனர். சே....... நந்திக்கடலுக்குள்ளால தலைவர் உடைச்சுக் கொண்டு வெளியாலை போறதுக்கிடையிலை பிறெஞ்சு பொலிஸ்காரன் வந்து கெடுத்துப் போட்டான் என்று திட்டியபடி போய்க்கொண்டிருந்தான்.

.............................................................................................................................................................................................

ஜேன்பியரிற்கு முன்னால் விலங்கு கழற்றப்ட்ட நிலையில் ரகுவிறைப்பாய் அமர்ந்திருந்தான் உங்களிற்கு பிறெஞ்சு நன்றாக புரியுமா??

இல்லை கொஞ்சம் புரியும்.

உங்களிற்கு உதபுவதற்காக ஒரு மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்துள்ளோம்.

என்னை எதற்காக கைது செய்தீர்கள் நான் செய்த தவறு என்ன??

மொழி பெயர்ப்பாளர் வந்ததும் உங்களிற்கு விளக்கமாக கூறுகிறேன்.

. சிறிது நேரத்தில் உள்நுளைந்த தேவன் ரகுவிற்கு தன்னை அறிமுகப்படுத்திவிட்டு அருகில் அமர்ந்தான்

ஜேன்பியர் வழைமையான சம்பிரதாயகேள்விகளான பெயர் விபரம் விலாம் என கேட்டு கணணியில் பதிந்தவன். அவனது குற்றங்களை வகைப்படுத்தினான். பொது மக்களிற்கு இடைஞ்சல் ஏற்படுத்தியது தனியார் சொத்து பொது சொத்துக்களிற்கு சேதம் ஏற்படுத்தியது. எனத் தொடங்கியவன் ஒரு கார் கண்ணாடியை உடைக்கும் பொழுது அதில் இருந்த பெண்ணிற்கு கண்ணாடி துகள்கள் கண்ணில் புகுந்து மோசமாக பாதிக்கபட்டது. யெர்மனிவரை சென்று குழப்பம் விழைவித்து என அனைத்தையும் சொல்லிவிட்டு இவையனைத்தையும் ஒத்துக்கொள்கிறீரா எனக்கேட்டான்.

இவையெல்லாம் தான் நான் செய்த குற்றங்களா?? இவை குற்றமல்ல எமது போராட்டம். உலகத்திற்கும் உங்களிற்கும் எமது மக்கள் படுகின்ற துன்பங்களை எடுத்துச்சொல்வதற்கு எங்களிற்கு வேறை வழியில்லை.

பாரிஸ் 10ல் ஒரு கடையை உடைத்து நாசம் செய்து கடையில் இருந்த சிலரை மோசமாக தாக்கி காயப்படுத்தியிருக்கிறீர்கள். அவர்கள் வைத்தியசாலையில் உள்ளனர்.

அவங்கள் எங்கடை எதிரியள் அவங்கள் தான் எங்கடையாக்களை படுகொலையள் செய்யிறாங்கள். அதை நீங்களும் பாத்துக்கொண்டுதான் இருக்கிறியள். அவங்கள் அங்கை கொலை செய்யலாம் நாங்கள் அடிச்சால் குற்றமா??

இதுஉங்கள் நாட்டில் நடக்கும் சம்பவங்களிற்கான விசாரனையல்ல பிரான்ஸ் நாட்டில் அதன் சட்டங்களை மதிக்காமல் நடந்த சம்பவங்களை பற்றிய விசாரணை இங்கு எமக்கு எல்லாருமே சமம். வன்முறையை யார் செய்தாலும் குற்றம்தான்.

எமது விடுதலைக்காகத்தானே எங்கடை தலைவர் போராடினவர் அவரை பயங்கரவாதியெண்டு பிரான்சும்தான் சொல்லி எங்களுக்காக போராடின இயக்கத்தை தடை செய்திருக்கினம். எங்கள் தலைவனிற்காக எதையும் செய்வேன் உயிரையும் கொடுப்பேன் அதை நீங்கள் வன்முறையெண்டால் தாராளமாக என்னை உள்ளை போடுங்கோ.

நல்லது என்றபடி ஜேன்பியர் கோப்பு ஒன்றை எடுத்தவன் அதிலிருந்த ஒரு தாளை மட்டும் எடுத்து அதில் மெல்லிய பச்சை வர்ணத்தால் கோடிட்ட இடத்தை மட்டும் ரகுவிற்கு படித்துக்காட்டச்சொல்லி தேவனிடம் கொடுத்தான். தேவன் படிக்கத் தொடங்கினான் அப்பொழுதுதான் ரகுவிற்கு புரிந்தது அது அவன் பிரான்சில் அகதி அந்தஸ்த்து பெறுவதற்காக எழுதிய அவனது விணப்பம். ரகுவின் முகம் வெளிறத் தொடங்கியது. தேவன் தொடர்ந்து படித்தான்.

பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த என்னை புலிகள் அமைப்பினர் பலவந்தமாக ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றவர்கள் வன்னியில் உள்ள ஒரு பயிற்சிமுகாமிற்கு அனுப்பி வைத்தனர். எனக்கு புலிகள் அமைப்பில் இணையவோ பயிற்சி எடுக்கவோ விருப்பம் இல்லை ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலையில் பயிற்சி தொடங்கி இரண்டு வாரத்தில் சந்தர்ப்பம் பார்த்து அங்கிருந்து தப்பியேடினேன். தப்பியேடியநான் எனது வீட்டிற்கு மீண்டும் செல்ல இயலாது காரணம் புலிகள் இயக்கம் என்பது மிகவும் கொடுரமான அமைப்பு அவர்களது தண்டனைகளும் கொடுரமானதாகவே இருக்கும். சுட்டும் கொன்று விடுவார்கள். எனவே நான் அவர்களிடம் அகப்படாமல் தப்பி யோடி கொழும்பிற்கு வந்து சேர்ந்திருந்தேன் கொழும்பிற்கு வந்து கொட்டாஞ்சேனையில் எனது உறவினர் வீட்டில் தங்கியிருந்து எனது படிப்பினை மேற்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தவேளை ஒருநாள் சிறீலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினராலும் சுற்றிவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைகளிற்குள்ளாக்கப்பட்டேன். சித்திரவதைகள் தாங்கமுடியாமல் நான் இயக்கத்தால் பலவந்தமாகவே பயிற்சிக்கு அழைத்து செல்லப்படதாக கூறியிருந்தேன். அனால் அவர்கள் நம்புவதாக இல்லை தொடர்ந்தும் சித்திரவதைகளை அனுபவித்தேன் அப்பொழுது பெரும் தொகை பணத்தை எனது தாயார் சிறீலங்கா காவல்த்துறையினரிற்கு கொடுத்து என்னை மீட்டு பிரான்சிற்கு அனுப்பிவைத்தார். எனவே சிறீலங்காவில் எனக்கு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகளாலும் இலங்கையரசின் கட்டுப்பாட்டு பகுதியில் இலங்கையரசு நிருவாகத்தாலும் உயிரிற்கு அச்சுறுத்தல் இருப்பதால் பிரான்சில் நான் அகதி தஞ்சம் கோரியுள்ளேன்.....

நிறுத்திவிட்டு தேவன் ரகுவை திரும்பிப் பார்த்தான்.

அண்ணை கொஞ்சம் தண்ணி தருவியளோ??

ஜேன்பியர் ஒரு படத்தினை ரகுவிடம் காட்டி இவரை தெரியுமா என்றான்.

ரகு மிண்டி விழுங்கியபடி ஓம் கேள்விப்பட்டிருக்கிறன் என்றான்.

இவரை எனக்கு மிகவும் பிடிக்கும். என்றபடி அவன் பதிவு செய்த ஆவணங்களை அவனிடம் நீட்டியபடி ஒரு பேனாவையும் நீட்டி கையெழுத்து போடுங்கள் என்றான்.

அண்ணை என்னை சிலோனுக்கு ஏத்துவாங்களோ?? அண்ணை தெரியாமல் பெடியளோடை சேந்து சும்மா பகிடியாய் முசுப்பாத்திக்கு செய்து போட்டன் மன்னிச்சு கொள்ளச் சொல்லுங்கோ. என்றவன் ஜேன் பியரை பாத்து மிஸ்யூ... எக்சுசே முவா மிஸ்யு ... பறதோம் மிஸ்யு. என்றான்

தம்பி நான் ஒண்டும் நீதிபதி இல்லை அதுமாதிரித்தான் அவரும் .. அவர் முடிவு செய்யிறெல்லை. உங்களை நீதிமன்றத்திலை ஒப்படைப்பினம். அவையள் முடிவு செய்வினம்.

ஒரு போலிஸ் காரர் வந்து ரகுவிற்கு விலங்கிட்டு அழைத்துச் சென்றார்...........

ஜேன்பியரின் சேவைக்காலம் முடிவடைந்து விட்டது அன்று அவன் தனது அலுவலகத்தை புதிதாக பொறுப்பேற்பவரிடம் ஒப்படைக்கவேண்டும். அலுவலகத்தினுள் ஒரு கடுதாசி பெட்டியுடன் உள் நுளைந்தவன் அங்கிருந்த தன்னுடைய பொருட்கள் அனைத்தையும் பெட்டியில் போட்டவன் படங்களையும் ஒவ்வொன்றாக கழற்றி பெட்டியில் போடத் தொடங்கினான். கடைசியாய் பிரபாகரனின் படத்தை எடுத்து கையில் வைத்தபடி சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு தமிழில் பா வா ம் பிற பாகரன் என்று சொல்லி தலையாட்டியபடியே படத்தினை தனது பெட்டியில் போட்டபடி அலுவலகத்தை விட்டு வெளியேறினான்.

முற்றும்.

யாவும் கற்பனையல்ல

பிற் குறிப்பு ..ரகு 5 வருடங்கள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறான். சிறைத்தண்டனை முடிந்ததும் நாடு கடத்தப்படுவான். மேகன் இறுதியுத்தத்தில் காணாமல் போன தாயாரையும் இயக்கத்தால் பிடித்துச் செல்லப்பட்ட தங்கையையும் தேடிக்கொண்டேயிருக்கிறான்..உதயன். வேறு மானிலத்திற்கு போய் அமையாக வாழ முயற்சிக்கிறான். தேவன் தனது மொழி பெயர்ப்பு வேலையை விட்டுவிட்டான். ஜேன் பியர் ஓய்வு பெற்று தனது கிராமத்திற்கு போய் விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளான். வாகீசன் ஜெர்மன் சிறையில் இருக்கிறான். சுவிஸ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் குரு அங்கு முன்னர் இயக்கத்திற்கு வேலை செய்த அனைவரையும் துரோகிகள் என அறிவித்து விட்டு தானே புதிய பொறுப்பாளர் என பிரகடனம் செய்துள்ளான்.

இவ்வளவு பெரிய கதையை எழுதிட்டு ஒரு தலைப்புக் கூட போடாவிட்டால் எப்படி ஜேன்பியர் இறுதியாக என்ன வார்த்தைகளை தமிழில் சொன்னானோ அதுதான் தலைப்பு பா வா ம் பி ற பா க ர ன்.

Edited by sathiri

பொட்டென்று முகத்தில் அறைகின்ற நிஜம்கள் என்னத்த சொல்ல.....

அது .................... :( :( :(

  • கருத்துக்கள உறவுகள்

கதை முதல் அத்தியாயம் வாசித்த உடனேயே கதை இப்படித் தான் போகப் போகுது என எனக்கு விளங்கிட்டுது[அதை வேறு இடத்தில் எழுதியும் உள்ளேன்]...கதையின் கரு உண்மையில் நடக்கின்ற சம்பவத்தை அடிப்படையாக கொண்டது எது எப்படியாக இருந்தாலும் தலைப்பு பிழை என்பது என் கருத்து

  • கருத்துக்கள உறவுகள்

முதல் பச்சை என்னுடையது.அத சரி அப்ப அந்த உதையன் நம்ம ஆளோ :rolleyes: யாரப்பபா அந்த குரு சுவிசில.அவற்ற வாலுகளையும் யார் என்டு சாடை மாடையாக சொல்லலாமே. :)

Edited by sagevan

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார். ஒரு விண்ணப்பம்.. இப்படியான விழல்க் கதைகளை எழுதிறதை விட்டிட்டு மலரக்கா - பாகம் 2 என்று "அநுபவக்" கதைகளாக எழுதி வாசகப் பெருமக்களைக் குஷிப்படுத்தினால் நல்லது. :icon_idea:

சி.கு. இரண்டாவது பச்சை என்னது :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியார். ஒரு விண்ணப்பம்.. இப்படியான விழல்க் கதைகளை எழுதிறதை விட்டிட்டு மலரக்கா - பாகம் 2 என்று "அநுபவக்" கதைகளாக எழுதி வாசகப் பெருமக்களைக் குஷிப்படுத்தினால் நல்லது. :icon_idea:

சி.கு. இரண்டாவது பச்சை என்னது :icon_mrgreen:

மலரக்காவை கள உறவுகள் சிலரும் லாசப்பலில் தேடுவதாக செய்தி (பிரான்ஸ் களக்கருத்தாளர்களை ஒருக்கா தேடிப்பாருங்கோ`) :icon_idea:

சி.கு - 3வது பச்சை எனது. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

மலரக்காவை கள உறவுகள் சிலரும் லாசப்பலில் தேடுவதாக செய்தி (பிரான்ஸ் களக்கருத்தாளர்களை ஒருக்கா தேடிப்பாருங்கோ`) :icon_idea:

சாத்து கதை எழுத முதலே மலரக்காவை எனக்கு தெரியும்.ஆனால் அவதான் இவ என்று தெரியாது :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் பச்சை என்னுடையது.அத சரி அப்ப அந்த உதையன் நம்ம ஆளோ :rolleyes: யாரப்பபா அந்த குரு சுவிசில.அவற்ற வாலுகளையும் யார் என்டு சாடை மாடையாக சொல்லலாமே. :)

என்னது சஜீவன் குருசாமியை தெரியாதா இந்த இணைப்பை பாருங்கள்.

http://full.de.backend.netlog.com/kurusamy/photo/photoid=119265596#photos

Edited by sathiri

சாத்திரியார்

சொல்ல வந்த விடயத்தை எழுதியுள்ளீர்கள். நன்றாக இருக்கிறது. இருந்தும் கதை சொல்லும் விதத்தில் ஓர் அவசரம் தெரிகிறது. உங்கள் முன்னைய கதைகளிலோ அல்லது 'மலரக்கா' வில் இருந்த தெளிவு நடையோ இதிலில்லை (ஜோள்ளில்லை).

படைப்புகளை விமர்சனங்களுக்கேற்ப சுத்திகரிப்பதை நிறுத்தினால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

4 ஆவது பச்சை என்னோடது.............

  • கருத்துக்கள உறவுகள்

5வது.....

பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறியள், தப்பிலி சொன்ன மாதிரி கதை உங்கட நடையில் இல்லை, உண்மைகளை மன வேதனையுடன் எழுதும் பொது அந்த கதை ஜோடிக்கவா எண்ணம் வரும், நன்றி பல தெரியாத விடயங்களை தெரியப்டுத்தியதிற்கு,

உந்த கதையெல்லாம் கேட்டு புளிச்சு போச்சு, எனக்கு மலரக்கா கதை தான் பிடிச்சுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.