Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீசை இல்லாதோர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மீசை இல்லை, முழச் சவரம் தான். உடலில் வளரும் மயிர்களை சேவ் பண்ணுகிறது சரியா, உடல் இதனால் வெப்பத்தை இழக்குறதா & உடல் கழிவுகளை இலகுவாக அகற்றுகிறதா சேவ் பண்ணுவதால். மருத்துவரீதியாக தகுந்த காரணங்கள் தரமுடியுமா?

(மீசை வைத்தவர்கள் அதிலும் குறிப்பாக எளிதில் உணர்ச்சிவசப்பட்டு கோபப்படுபவர்கள் தயவுசெய்து இக்கட்டுரையை படிக்க வேண்டாம்)

சிலருக்கு அண்டை வீட்டுக்காரர்களiனால் பிரச்சினை வரும். சிலருக்கு சொந்த பந்தங்களால் பிரச்சினை எழும். சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனக்கு பிரச்சினையே என் மீசைதான்.

மீசை வைப்பதா? வேண்டாமா? என்று குழம்பியே நடுத்தர வயதை எட்டியாகிவிட்டது. எத்தனையோ முறை வளர்த்தாகி விட்டது. வளர்த்த வேகத்தில் மழித்தும் பார்த்தாகி விட்டது. வேறென்ன? கம்பளிப்பூச்சியை மோவாயில் சுமந்துக் கொண்டு திரிவதென்றால் எரிச்சலாக இருக்காதா பின்னே?

“ஆம்பளைன்னா அவனுக்கு மீசை இருக்கோணும்” இப்படி அதிகப்பிரசிங்கித்தனமாக அறிவுறுத்தும் ஆசாமிகளைக் கண்டால் எனக்கு பற்றிக் கொண்டு வரும். இப்படி ஒரு பார்முலாவை ஒரு பேச்சுக்கு உண்டாக்கி வைத்துச் சென்ற அந்தக் கால பெருசுகளைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். எனக்கென்னமோ மீசை என்ற வார்த்தையே தமிழ் வார்த்தைபோல் தோன்றவில்லை. வடமொழியாக இருக்கலாமோ?

மீசைக்கு நம்மவர்கள் அளவுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்து விட்டார்களோ என்று சில சமயம் எண்ணத் தோன்றும். ஆங்கிலேயர்களோ, மற்ற நாட்டினரோ மீசை இருந்தால்தான் ஆண்பிள்ளை என்று சொல்ல நாம் கேள்விப்பட்டதில்லையே?

முறுக்கிய மீசை வானத்தை பார்த்தவண்ணம் இருந்தால் வீரத்தின் எதிரொலி என்று அர்த்தமாம். என்ன அநியாயம் இது? சீனர்களுடைய மீசை பூமியை பார்த்த வண்ணம் புடலங்காய் போல தொளதொளவென்று தொங்கிய வண்ணம் காட்சி தரும். அவர்கள் இனத்தில் வீரர்கள் இல்லவே இல்லையா? பூனைக்குகூட மீசை இருக்கிறதே? அது என்ன பெரிய வீரனா? மீசையே இல்லாத ஜான்ஸிராணியை வீரத்தின் உதாரணமாக நாம் சொல்வதில்லையா?

பிளாஷ் பேக் - எனக்கு என் வீட்டில் பெண் பார்க்க அலைந்தார்கள். இந்தி நடிகன் போல் ஸ்டைலாக காட்சி தரவேண்டும் என்ற காரணத்துக்காக நான் மீசையை மழித்துக் கொண்டிருந்தேன். “ஏம்பா நீ மீசை வச்சா என்னா?” என் தகப்பனாருடைய தொந்தரவு தாங்க முடியவில்லை. “இது என்ன இது பொறிச்ச வாடா மாதிரி” என் பாட்டியின் தோழி அய்ஷானுடைய குசும்பு. இந்த நக்கல் ஓவர்தானே?

“பெண் வீட்டாருக்கு கொடுக்க வேண்டும் உன் போட்டோவை அனுப்பி வை” என்று என் தகப்பனார் கடிதம் எழுதியபோது மீசை இல்லாத போட்டோவைத்தான் அனுப்பி வைத்தேன். பார்த்து முகம் சுளித்திருப்பாரோ என்னவோ?

கல்யாணத்திற்குப் பின் ஒருநாள் என் மனைவி சொன்னாள். “உங்க போட்டோவை முதன் முதலில் பார்த்தபோது 16-வயதினிலே படத்தில் வர்ற டாக்டர் மாதிரியே ஸ்டைலா இருந்துச்சா, எனக்கு மிகவும் புடிச்சுப் போச்சு.” அட்றா சக்கை. எனக்கு அப்படியே ஆகாயத்தில் பறப்பது போல் இருந்தது. காலம் முழுக்க மீசையே இல்லாமல் ஜாலியாக பொழுதைக் கழிக்க சால்ஜாப்பும் லைசன்சும் கிடைத்த ஏகபோக ஆனந்தம் எனக்கு.

மீசை வைப்பவர்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட மீசை இல்லாதவர்கள் ஷேவ் செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் குறைவாகத்தான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு. மீசையை ஒதுக்குகிறேன், ட்ரிம் செய்கிறேன் என்று கூறி பாத்ரூமில் பாதி நேரத்தை செலவழித்து விடுவார்கள். பொன்னான நேரத்தின் மகிமையை உணர்ந்தவர்கள் இந்த மீசை இல்லாதவர்கள் என்று நான் மார்தட்டிச் சொல்ல முடியும்.

போன்சாய் என்ற ஒரு கவிதைத் தொகுப்பினை சமீபத்தில் வெளியிட்டிருந்தேன். அதில் மீசையை பற்றி இப்படி எழுதியிருந்தேன்.

இன்றோடு போகட்டும்

இந்த நச்சரிப்பு மீசை

உதட்டோரம் எனக்கு

வீண் சுமை

வெறுமனே ஒரு

முகப்புத் தோரணம்

முணுமுணுக்கும்

கம்பளiப் பூச்சி

உண்மையைச் சொன்னால்

மோக யுத்தத்தில்

முத்தத்தின் எதிரி

இதைப் படித்துப் பார்த்த என் சித்தப்பா டாக்டர் அப்துல் ரசாக்கிற்கு என்ன ஆத்திரமோ தெரியவில்லை.

மீசை

மோக யுத்தத்தில்

முத்தத்தின் எதிரி

என்று எழுதியிருந்தாய். மீசை செய்யும் குறும்பை நீ அறியமாட்டாய் என்று விமர்சனம் செய்து எழுதி இருந்தார்.

அவர் கறுகறுவென்று தடிமனான மீசை வைத்திருப்பார். அவருடைய அனுபவத்தை அவர் சொல்லியிருக்கிறார். நாம் ஏன் அநாவசியமாக விவாதம் பண்ணிக்கிட்டு இருப்பானேன் என்று பேசாமல் இருந்து விட்டேன்.

சினிமாவில் காமெடி செய்வதற்காகவே கண்டு பிடிக்கப்பட்ட ஒரு உபகரணம் அல்லது யுக்தி இந்த மீசை என்பது நான் வைக்கும் வாதம். சந்திரபாபு, ஏ.கருணாநிதி, தங்கவேலு, நாகேஷ் இவர்களுடைய மீசையைப் பார்த்தாலே ரசிகர்களுக்கு சிரிப்பு வரும்.

பழைய கறுப்பு வெள்ளை படங்களiல் ஹாஸ்ய நடிகர் “துடிக்கிறது என் மீசை” என்று வீர வசனம் பேசுவார். ஒட்டு மீசை துள்ளி கீழே விழும். தியேட்டரில் சிரிப்பு அலைமோதும். சமீபத்தில் வெளிவந்த 23-ஆம் புலிகேசி என்ற படத்தில் வடிவேலுவின் நடிப்பை விட அவருடைய கொடுவா மீசையின் நடிப்புக்கே பெரும் வரவேற்பு கிடைத்தது. (போதாதக்குறைக்கு கிச்சுகிச்சு மூட்ட மீசைக்கு மேலே இரண்டு பூக்கள் வேறு. கொடுமையடா சாமி)

மீசை என்ன பொல்லாத மீசை? அதே போன்சாய் தொகுப்பிலே இன்னொரு கவிதை இப்படி எழுதியிருந்தேன்.

மீசை முளைத்தோரெல்லாம்

பாரதி என்றால்

எனக்கும் ஆசை

கவிதை வடித்திட

இப்படிக்கு பாசமுடன்

கரப்பான் பூச்சி - என்று

ஒரு சமயம் சலூனில் அமர்ந்து படுஜாலியாக மீசையை மழித்துக் கொண்டிருந்தபோது வானொலியில் அந்த பழைய பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.

மணமகள் தேவை - நல்ல

மணமகள் தேவை

ஆணழகன் ஒருவனுக்கு

அரும்பு மீசைக் காரனுக்கு

தேவை தேவை தேவை

மணமகள் தேவை

எனக்கு எரிச்சலாக வந்தது. அரும்பு மீசை இருந்தால் அவன் ஆணழகனா? இந்த பாடலை எழுதிய கவிஞனிடம் நாலு வார்த்தை நறுக்கென்று கேட்கத்தோன்றியது. பென்சிலால் வரைந்ததுபோல் சிலர் மெல்லிய மீசை வைத்திருப்பார்கள். அதற்குப் பெயர் அரும்பு மீசையாம். இது மோவாயில் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இதற்குப் பெயர் மீசையா? பேனாவும் பேப்பரும் கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் எழுதுவதா? இப்படியெல்லாம் மனதுக்குள் கொதித்துப் போவேன்.

ஹிட்லர் மீசை, மா.பொ.சி மீசை, வீரப்பன் மீசை. என்று சிலருடைய மீசை மிகவும் பிரபலமாகி விட்டது. மா.பொ.சி. இவ்வளவு பெரிய மீசையை வைத்துக் கொண்டு உண்ணுவதற்கும் பருகுவதற்கும் மனுஷர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது.

மீசை முருகேஷ் என்ற அருமையான இசைக் கலைஞர். எல்லா விதமான பக்க வாத்தியங்களும் இவருக்கு அத்துப்படி. வாயினாலேயே எல்லா விதமான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸும் கொடுப்பார். அவருடைய அபரிதமான இசைஞானத்திற்கு அவருக்கு கிடைத்த பாராட்டுதல்களைவிட அவருடைய மீசைக்கு கிடைத்த பாராட்டுதல்களே அதிகம். மீசை இன்று இருக்கலாம் நாளை காணாமல் போகலாம். இதுக்குப்போய் இத்தனை ஆரவாரமா? என்று நினைத்துப் பார்ப்பதுண்டு.

“மீசைக் கவிஞன் பாரதி” என்று கவிஞர்கள் பாராட்டும் போது எனக்கு கோபம் கோபமாக வரும். அவனுக்கு மீசை இருந்தால் என்ன இல்லா விட்டால் என்ன? அவன் எழுதிவைத்திருப்பதை பாராட்டுவதை விட்டுவிட்டு அனாவசியமாக மீசையை பெரிதுப் படுத்தி புகழ்கிறார்களே என்று ஆத்திரம் வரும்.

நானும் சில உண்மைகளை வெளiப்படையாகச் சொல்லத்தான் வேண்டும். என்னதான் மீசை மீது ஒரு வெறுப்பிருந்தாலும் அவ்வப்போது மீசை வளர்க்க வேண்டும் என்று ஆசை வந்ததென்னவோ உண்மைதான். அந்த ஆசை அதிக நாட்கள் நீடிக்கவில்லை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன்.

வெளிநாட்டில் வசிக்கும் நான் ஒருமுறை தாயகம் புறப்பட ஆயத்தமாகும் தறுவாயில் மீசையோடு ஊருக்குப் போனால் சற்று வித்தியாசமாக இருக்குமே என்று மீசை வளர்த்தேன். இதற்காக மெனக்கெட்டு எந்தவிதமான முயற்சியோ கஷ்டப்படவோ இல்லை. ஒண்ணுமே செய்யாமல் சிவனேன்னு இருந்தேன். அதுவாக வளர்ந்து விட்டது. ஓரளவு வளர்ந்த பிறகு மீசையை அழகு படுத்தலாமே என்று முனைந்து ஒதுக்க ஆரம்பித்தேன். அது என்னடாவென்றால் ஒரு பக்கம் பெரிதாகவும் மற்றொரு பக்கம் சிறிதாகவும் போய்விட்டது. மேலும் என் திறமையை காண்பிக்கப்போக, குரங்கு அப்பத்தை பிய்த்த கதையாக அது ஹிட்லர் மீசையாட்டம் அலங்கோலமாக போய்விட்டது. அன்று மீசை மீது எனக்கு வந்த கோபம் சொல்லிமாளாது. மீசை என்று யாராவது பேச்செடுத்தால் அவர்களை கடித்துக் குதறவேண்டும் போலிருந்தது.

அப்போதுதான் என் தாயாருடைய போன் வந்தது. “நீ ஊர்வரும்போது அவசியம் மீசைக்காரத் தைலம் கொண்டு வா மறந்து விடாதே” என்று உரக்கச் சொன்னார். “அதெல்லாம் முடியாது நான் கோடாலித் தைலம் வாங்கி வருகிறேன்” என்று அதைவிட உரக்கமாக கத்தினேன்.. “நீ எப்பவும் இப்படித்தான் நான் ஒண்ணு சொன்னால் நீ ஒண்ணு செய்வே” என்று சலித்துக் கொண்டு போனை வைத்தார். என்னுடைய கஷ்டம் அவர்களுக்கு எங்கே புரியப் போகிறது?

“மீசை நரைத்தாலும் இவனுக்கு ஆசை நரைக்கவில்லை பாருங்கள்” என்று நடுத்தரவயதினரைப் பார்த்து யாராவது கிண்டலடித்தால் நான் கடுப்பாகி போவேன். மீசை நரைத்தால் என்ன? ஆசை இருக்கக் கூடாதா? விடலைப் பருவத்தின்போது வருவது வெறும் காதல் மயக்கம். ஆத்மார்த்த காதல் பிறப்பதோ நடுத்தர வயதில்தான் என்பது என்னுடைய பயங்கரமான கண்டுபிடிப்பு. ஜொள்ளர்கள் இந்த வயதில்தான் அதிகம்.

“At Forty Men become naughty; Women become fatty”

என்று ஆங்கிலேயன் சும்மாவா சொல்லி வைத்துப் போனான்? எத்தனை அனுபவம் பொதிந்த வாக்கியம் இது?

இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த சமயத்தில் என் மனைவி கரிசனமாக அருகில் வந்து “எதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டாள். நம்மை ஒரு அறிவு ஜீவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறாள். அவளiடம் போய் நான் என் மீசையைப் பத்திதான் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று உண்மையைச் சொன்னால் “இவனுக்கு கழன்றுவிட்டதோ?” என்பதுபோல் ஒரு மாதிரியாக பார்ப்பாள். எதற்கு இந்த தொந்தரவென்று இரண்டு கைகளாலும் எழுதுவதை மறைத்துக் கொண்டேன். கடுப்பாகி அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

எந்த வித முணுமுணுப்பும் இல்லாது இத்தனை வருஷம் மீசை இல்லாமல் ஜாலியாக ஓட்டி விட்டேன். திடீரென்று இந்த விபரீத ஆசை மீண்டும் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. சென்ற மாதம் மறுபடியும் மீசை வளர்க்க ஆரம்பித்தேன். பாதி வெள்ளை முடி, பாதி கறுப்பு முடி. கண்ணாடியில் பார்த்தபோது வயதானவன்போல் ஒரு தோற்றம். ஒரு விருந்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். கண்ணுக்கு இடும் மையை லேசாக ஆட்காட்டி விரலால் தடவி மீசை மீது பூசிக் கொண்டால் ஒண்ணும் தெரியாது என்று என் மனைவி சூப்பர் ஐடியா ஒன்றைச் சொல்ல அதுபோலவே செய்தேன். இழந்த இளமை ஒருவழியாக மீண்டு வந்ததுபோல் ஓர் உணர்வு. விருந்துக்கு போன பிறகு கைகழுவச் சென்ற நான் ஏதோ ஒரு ஞாபகத்தில் ஈரமான என் கைகளை முகத்தில் பூசிக் கொண்டேன். சபையில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாக பார்க்கப் போக, அப்பொழுதுதான் புரிந்தது. என் மேக்கப் கலைந்து முகமெல்லாம் கரியை பூசிக் கொண்டதுபோல் ஆகிவிட்டது. வெட்கித்துப்போய், பூனைபோல் மெதுவாக அங்கிருந்து நழுவி வந்தேன்.

அதற்குப் பிறகு நண்பன் ஒருவனின் உபதேசத்தின்படி ‘டை’ செய்தால் என்ன என்று தோன்றியது. அது கறுப்பு மருதாணி என்று சொன்னார்கள். முதன் முறை என்பதால் எப்படி பூசுவது என்று தெரியவில்லை. பசைபோல கரைத்து என் மனைவியிடம் கொடுத்து பூசச் சொன்னேன். என் மீது என்ன கோபமோ தெரியவில்லை, ஒரு பட்டையான பிரஷ்ஷை எடுத்து சுவற்றுக்கு சுண்ணாம்பு பூசுவதைப் போல் விளாசித் தள்ளி விட்டாள். அரைமணி நேரம் நகரக் கூடாது என்று கண்டிஷன் வேறு. முடி கன்னங்கரேல் என்று ஆகிவிட்டது.

அடுத்த நாள்தான் அந்தக் கொடுமை. அந்த மருதாணியில் என்ன கெமிக்கல் சேர்ந்திருந்ததோ தெரியவில்லை. என் முகம் முழுதும் புஸ்ஸென்று வீங்கி அரிப்பும் எரிச்சலும் தொடங்கி விட்டது. மீசையை அப்படியே பிய்த்து எறிந்து விடலாம் என்று தோன்றியது. மோவாயெல்லாம் புண்ணாகி விட்டது. டாக்டரிடம் சென்று ஊசி போட்டுக் கொண்டேன். அலர்ஜி ஆகிவிட்டதாம்.

புண் ஆறியதும் முதல் வேலையாக மீசையை மழித்து வீசி எறிந்தப் பின்தான் எனக்கு திருப்தி. இப்பொழுதெல்லாம் எந்தவொரு பிரச்சினையும் இல்லை. விபரீத ஆசையும் வருவதில்லை. இளமையாகவே இருப்பதுபோல் ஓர் உணர்வு, உற்சாகம். முகத்தை லேசாக வருடிக் கொண்டேன். வழுவழுவென்று அட்டகாசமாக இருந்தது

நன்றி - http://www.thinnai.com

  • Replies 60
  • Views 15k
  • Created
  • Last Reply

மீசை வைப்பது ஒவ்வொருவரின் முகச்சாயலைப் பொறுத்தது. சிலருக்கு அழகாக இருக்கும். சிலருக்கு முழுச் சவரம் செய்தால் நன்றாக இருக்கும்.

நான் மீசைதான்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

நான் கிளீன் சேவ் தான்....

  • கருத்துக்கள உறவுகள்

சை, மீசை, அது இல்லாத ஆண் வெறும் இம்சை!

தலை முடி கூட ஒரு முடி இல்லாமல் கொட்டி விடும் __ ஆனால்

மீசை தாடி டெட் பொடி வரை கூட வரும் _ பொடி

டெட் ஆனாலும் வளர்ந்து வரும்.

மீசை ஒரு சுமைதான்,_ அதை

பேணுவதும் சிரமம் தான்

ஆனால் இதெல்லாம் உண்டென்று

தெரிந்துதானே திருமணம் செய்கின்றோம்.

அதை விடவா இது சுமை/சிரமம்.

தனக்கொரு மீசையை விரும்பிய வானம்

கடும் வெயிலில் கார்மேகத்தை விட்டு

வைத்ததுதான் வானவில் தெரியாதா!

மீசையா கோபத்தின் அடையாளம்?

ம், யார் சொன்னது.

அது சமாதானப் புறா .

ஊடல் கொண்ட பெண்ணவள்

கூடல் விரும்பி விரலால்

மீட்டும் வீனையல்லவா மீசை.

அது கருத்தாலென்ன, வெளுத்தாலென்ன

பூனைகள் எந்த நிறமானாலென்ன!

பூனையும் , கரப்பானும் எதற்காக

கவிதை யாற்ற வேண்டும்?

கவிதையின் கருவூலமே எங்காவது

கவிதை இயற்ரியதுண்டா!

மீசைக்காகப் போட்டிகள் வைத்து

முழுதாய் பல மெடல் தரும் ஆங்கிலேயனா

மீசையில் ஆசை இல்லாதவன்.

யாழின் பிறிதொரு பாகத்தில்

தேடி ரசித்திடுவீர் வண்ண மீசைகளின்

அட்டகாசத்தை.

அதிகமான ஆங்கிலேயருக்கும்,

சில தமிழருக்கும் மீசை

ஆரோக்கியமாய் வளர்வதில்லை!

அதனால் என்ன .......

(நன்றி உடையார், மீசையை வருட வழி விட்டதுக்கு.) :lol::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழ்க்கையில் இதுவரை இரண்டுதரம்தான் மீசை மழித்திருக்கிறேன்..! உள்ளூரில் அவ்வளவு எதிர்ப்பு..! :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சை, மீசை, அது இல்லாத ஆண் வெறும் இம்சை!

தலை முடி கூட ஒரு முடி இல்லாமல் கொட்டி விடும் __ ஆனால்

மீசை தாடி டெட் பொடி வரை கூட வரும் _ பொடி

டெட் ஆனாலும் வளர்ந்து வரும்.

மீசை ஒரு சுமைதான்,_ அதை

பேணுவதும் சிரமம் தான்

ஆனால் இதெல்லாம் உண்டென்று

தெரிந்துதானே திருமணம் செய்கின்றோம்.

அதை விடவா இது சுமை/சிரமம்.

தனக்கொரு மீசையை விரும்பிய வானம்

கடும் வெயிலில் கார்மேகத்தை விட்டு

வைத்ததுதான் வானவில் தெரியாதா!

மீசையா கோபத்தின் அடையாளம்?

ம், யார் சொன்னது.

அது சமாதானப் புறா .

ஊடல் கொண்ட பெண்ணவள்

கூடல் விரும்பி விரலால்

மீட்டும் வீனையல்லவா மீசை.

அது கருத்தாலென்ன, வெளுத்தாலென்ன

பூனைகள் எந்த நிறமானாலென்ன!

பூனையும் , கரப்பானும் எதற்காக

கவிதை யாற்ற வேண்டும்?

கவிதையின் கருவூலமே எங்காவது

கவிதை இயற்ரியதுண்டா!

மீசைக்காகப் போட்டிகள் வைத்து

முழுதாய் பல மெடல் தரும் ஆங்கிலேயனா

மீசையில் ஆசை இல்லாதவன்.

யாழின் பிறிதொரு பாகத்தில்

தேடி ரசித்திடுவீர் வண்ண மீசைகளின்

அட்டகாசத்தை.

அதிகமான ஆங்கிலேயருக்கும்,

சில தமிழருக்கும் மீசை

ஆரோக்கியமாய் வளர்வதில்லை!

அதனால் என்ன .......

(நன்றி உடையார், மீசையை வருட வழி விட்டதுக்கு.) :lol::rolleyes:

நல்ல கவிதை சுவி, கவிதை பகுதியில் இணைத்திருக்கலாம் அல்லது இணைத்துவிடுங்கள் இனி.

எனக்கு தலையில் தொடங்கி உடம்பில் மயிர் குறைவு, கேள்விப்பட்டன் மயிர் குறைத்தவர்கள் கூப்பில் முன்னேறியவர்கள் என்று (சீனாக்காரன் மாதிரி) :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மீசை இல்லாமல் இருப்பதுதான் ஆணுக்கு அழகு :)

  • கருத்துக்கள உறவுகள்

மீசை இல்லாமல் இருப்பதுதான் ஆணுக்கு அழகு.

அட.... கறுப்பியும் நம்ம கட்சி.smiley-cool01.gif

  • கருத்துக்கள உறவுகள்

மீசை வளர்க்க முடியாதவர்கள் தான் மீசை எல்லாம் வேஸ்ட் என்று சொல்லுவார்கள்...அவர்களிடம் பெண்மை கலந்த சாயல் இருக்கும்...எனக்கு மீசை வைக்கத் தான் பிடிக்கும் :rolleyes:

மீசை இல்லாது விட்டால்தான் முத்தம் கொடுக்கும்போது மீசை குத்தாமல் இருக்கும்.... <_<

  • கருத்துக்கள உறவுகள்

மீசை இல்லாது விட்டால்தான் முத்தம் கொடுக்கும்போது மீசை குத்தாமல் இருக்கும்.... <_<

எங்கை??

எங்கை??

நான் உதட்டைத்தான் சொன்னன்... தப்பு தப்பா நினைக்கிறாங்களப்பா முடியலை... ^_^<_<

  • கருத்துக்கள உறவுகள்

நான் உதட்டைத்தான் சொன்னன்... தப்பு தப்பா நினைக்கிறாங்களப்பா முடியலை... ^_^<_<

அட நான் கன்னத்திலை எண்டு நினைச்சிட்டன் :lol:

அட நான் கன்னத்திலை எண்டு நினைச்சிட்டன் :lol:

எனக்கு தெரியும் நீங்கள் கன்னத்திலைதான் நினைத்தீர்கள் எண்டு... ^_^

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலியானம் கட்டும் வரை மீசைதான், கட்டின பின்னர் எடுத்து விட்டேன், இதுவரை மீசை இல்லை, இப்போது என்னை பார்பவர்கள் சொல்கிறார்கள் கலியானம் கட்டும் போது, வயது கூடியவர் என்று நினைத்தோம், இப்போது இளமையானவராக தெரிகிறீர்கள் என்று, கலியானம் கட்டி எட்டு வருசம். இப்ப என்ன சொல்லுறீங்கள் :lol: .

இந்த மீசையைப் பற்றி நினைத்தால் இப்பவும் வெக்கமாக இருக்கும்.

எங்கோ வாசித்து விட்டு, 15 வயதில் மீசை அரும்பியவுடன் நெய் தடவி வளர்க்க ஆரம்பித்தேன். நெய்க்கு வழி இல்லாதபடியால் தயிரின் ஆடையை உருக்கி நெய்யாக்கி மேலுதட்டில் தடவுவேன். அதன் காரணமோ தெரியாது, அந்த நேரத்தில் அரும்பு மீசை செம்மையாக வளர்ந்து நன்றாகவே இருக்கும். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு மீசை, தாடி மிகவும் பிடிக்கும். எனது அண்ணாவும் அதே போலத்தான். எப்பவுமே "பொன்டிங் கட்" வளர்ப்பான். பதினாலு வயசில மீசை முளைகனுமே எண்டு சொல்லி அப்பாவிண்ட சேவிங் றேசற களவா சுட்டு கள்ளமா வளிச்சிருக்கிறன். புலம்பெயர்ந்தாப் பிறகு கிளீன் செவ் தான், அதுக்கு முக்கிய காரணம் நான் செய்யும் இரண்டாவது வேலையில் முகத்தில் எந்த மயிரும் இருக்கக் கூடாது என்பது நிபந்தனை. சாப்பாடு சம்பந்தமான வேலை எண்டுறதால மீசை தாடியை கண்டாங்களோ கையில றேசற தந்து வழிச்சிட்டு வா எண்டு சொல்லிப் போடுவாங்கள். ஊருக்கு போகும் பொது மட்டும் சுதந்திரமா வளர்ப்பன். அப்பாவும் இளமையில பெரிய கம்பளி மீசை தான். அவருக்கு மிகவும் கம்பீரமா இருக்கும். தலை நரைக்க தொடங்க மீசையையும் எடுத்திட்டார் (அப்பா மை பூசுவதில்லை). என்னை மீசையோட பார்த்தா வயசு கூடின மாதிரி இருக்கும் அதோட அவுசில மீசையோட திரிஞ்சா யாரும் மதிக்கிறானுகள் இல்லை : -{ )

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறவுகள்

வாரத்தில் 6 நாட்களும் ஷேவ் எடுப்பேன். 7ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சோம்பேறி நாள் என்பதால்... அன்று மட்டும் எடுப்பதில்லை. நல்ல மின்சார ரேசர்கள் இருந்தாலும்... அதனால் எடுப்பதை விரும்புவதில்லை. வில்கின்சன் பிளேட்டால் தண்ணீர் நனைத்து, கிறீம் பூசி ஷேவ் எடுத்த பின்... ஆஃப்டர் ஷேவ் பெர்ஃபுயூமும் அடித்து விட்டு.. உங்களை கண்ணாடியில் பார்த்தால்... ஒரு புத்துணர்ச்சி தெரியும். N1P6Y7cK86477163.gif

  • கருத்துக்கள உறவுகள்

வாரத்தில் 6 நாட்களும் ஷேவ் எடுப்பேன். 7ம் நாள் ஞாயிற்றுக்கிழமை சோம்பேறி நாள் என்பதால்... அன்று மட்டும் எடுப்பதில்லை. நல்ல மின்சார ரேசர்கள் இருந்தாலும்... அதனால் எடுப்பதை விரும்புவதில்லை. வில்கின்சன் பிளேட்டால் தண்ணீர் நனைத்து, கிறீம் பூசி ஷேவ் எடுத்த பின்... ஆஃப்டர் ஷேவ் பெர்ஃபுயூமும் அடித்து விட்டு.. உங்களை கண்ணாடியில் பார்த்தால்... ஒரு புத்துணர்ச்சி தெரியும். N1P6Y7cK86477163.gif

எனக்கு Gillette Mach 5 ரேசர் தான் பிடிக்கும். ஊரில சிலதரம் சலூனுக்கு போய் சேவ் எடுத்திருக்கிறன். லைவ் போய் சோப்பையும் தண்ணியையும் ஒரு சிறிய கிணத்தில போட்டு, சின்ன தும்பு பிரஸ் ஒண்டால கிண்டி நுரையை அப்பிடியே வழிச்சு அள்ளி முகத்தில "சடக் சடக்" எண்டு சத்தம் வர பூசி, பிளேட்டை எடுத்து அரைவாசியை உடச்சு கத்தியில கொழுவி வழிப்பினம். வழிச்சு முடிய சில சலூன் வழிய உப்புகட்டி மாதிரி வெள்ளையான ஒரு பெரிய கல் இருக்கும். அதையும் முகத்தில தேச்சு விடுவினம். சும்மா அந்த மாதிரி இருக்கும்.

மீசை வளர்க்க முடியாதவர்கள் தான் மீசை எல்லாம் வேஸ்ட் என்று சொல்லுவார்கள்...அவர்களிடம் பெண்மை கலந்த சாயல் இருக்கும்...எனக்கு மீசை வைக்கத் தான் பிடிக்கும் :rolleyes:

அக்கோய் உங்களுக்கு மீசை வைக்க விருப்பமோ அல்லாட்டி மற்ரவை மீசையோட இருக்கிறது விருப்பமோ?????? விளப்பமாய் சொல்லுறது. பிள்ளையள் ஏங்குறாங்கள் :lol: :lol: :lol: .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுய தணிக்கை

Edited by உடையார்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு Gillette Mach 5 ரேசர் தான் பிடிக்கும். ஊரில சிலதரம் சலூனுக்கு போய் சேவ் எடுத்திருக்கிறன். லைவ் போய் சோப்பையும் தண்ணியையும் ஒரு சிறிய கிணத்தில போட்டு, சின்ன தும்பு பிரஸ் ஒண்டால கிண்டி நுரையை அப்பிடியே வழிச்சு அள்ளி முகத்தில "சடக் சடக்" எண்டு சத்தம் வர பூசி, பிளேட்டை எடுத்து அரைவாசியை உடச்சு கத்தியில கொழுவி வழிப்பினம். வழிச்சு முடிய சில சலூன் வழிய உப்புகட்டி மாதிரி வெள்ளையான ஒரு பெரிய கல் இருக்கும். அதையும் முகத்தில தேச்சு விடுவினம். சும்மா அந்த மாதிரி இருக்கும்.

மல்லையூரான்,

நான் ஊரில் இருக்கும் போது.... சலூனில் ஷேவ் எடுத்த அனுபவம் இல்லை. அப்ப.. எனக்கு, கனக்க மயிர் முளைக்காமல் இருந்ததும் , ஒரு காரணம். தலைமயிர் வெட்ட.. சலூனுக்குப் போகும் போது, நீங்கள் சொன்ன கண்ணாடி கல்லை கண்டிருக்கின்றேன். அப்ப நான் அதை, ஐஸ் கட்டி இந்த வெய்யிலுக்கும் உருகாமல் எப்படி இருக்குது என்று நினைத்ததுண்டு.smiley-confused002.gifbiggrin.gif

அக்கோய் உங்களுக்கு மீசை வைக்க விருப்பமோ அல்லாட்டி மற்ரவை மீசையோட இருக்கிறது விருப்பமோ?????? விளப்பமாய் சொல்லுறது. பிள்ளையள் ஏங்குறாங்கள் :lol: :lol: :lol: .

என்ன கோமகன் அண்ணா ரதி எழுதிய கருத்தில் இருந்தே கண்டு பிடிக்காலாமே...இதுக்கு உவங்களை கேட்கவேண்டுமோ? :icon_mrgreen:

மீசை வளர்க்க முடியாதவர்கள் தான் மீசை எல்லாம் வேஸ்ட் என்று சொல்லுவார்கள்...அவர்களிடம் பெண்மை கலந்த சாயல் இருக்கும்...எனக்கு மீசை வைக்கத் தான் பிடிக்கும் :rolleyes:

ரசனை பாராடா...இப்போதை பெடியள் எல்லாம் மீசை வைப்பத்திலை... ஓல்டு மனுசங்கள்தான் மீசை வைப்பார்கள்...மீசை உள்ள பெடியளை பார்த்தாலே அருவருப்பாக இருக்கும்...மீசை தாடி கிளின் சேவ் பண்ணி முடிய இரண்டாவது மூன்றாவது நாள் பார்த்தால் பெடியளுக்கு அரும்பி இருக்கும் முடி அழகு... ஆனால் முடி நன்றாக வளர்ந்த பின்பு பார்த்தால் கேவலமாக இருப்பார்கள்... சைட் அடிக்கவும் மனசு வராது <_< <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.