Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பந்தரும், சுரேசும் மகிந்தவின் சதியில் வீழ்ந்து விட்டனரா?- இரா.துரைரத்தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சு வார்த்தை விபரங்களை வெளியிடுவதில்லை என இருதரப்பும் இணக்கம் கண்டுள்ளதாக சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் ஒப்பமிட்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சிறிலங்கா அரசின் சூழ்ச்சி நடவடிக்கை என்றும் இந்த சதிவலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு வீழ்ந்துள்ளதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழர் அரசியல் வட்டாரங்கள் விசனம் தெரிவித்துள்ளன.

செப்ரெம்பர் 2ஆம் திகதி சிறிலங்கா அதிபருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பை அடுத்தே நேற்று பேச்சுக்கள் மீள ஆரம்பிக்கப்பட்டதாக அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மகிந்த ராசபக்சவை சந்திக்க முன்னர் அவர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருடனும் கலந்துரையாடலை நடத்தாது தன்னிச்சையாகவே அவர் அந்த முடிவை எடுத்திருந்தார் என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தினக்கதிருக்கு தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தைக்கான திகதி குறிக்கப்பட்டது கூட சம்பந்தன் ஏனைய தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கவும் இல்லை. மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு பேச்சுவார்த்தைக்கு இரு தினக்களுக்கு முதல்தான் சம்பந்தன் தெரிவித்ததாகவும், அரசுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் இடையில் பேசப்படும் விடயங்களை ஏனைய தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட கூறக்கூடாது என சம்பந்தன் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் ஏனைய உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு எடுக்கும் தீர்மானங்கள் அனைத்தும் சம்பந்தன், சுரேஷ், மாவை , என்ற வட்டத்திற்குள் தான் எடுக்கப்படுவதாகவும், கட்சிக்குள்ளும் வெளியிலும் என்ன நடக்கிறது என்பது எதுவுமே தமக்கு தெரியாது என்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீண்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்திருப்பது பற்றி தான் பத்திரிகையில் படித்துதான் அறிந்து கொண்டேன் என தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.

தினக்கதிர் ஆசிரிய பீடம் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்ட போது அவர்கள் அனைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை எங்கே செல்கிறது என தெரியாமல் இருக்கிறது என்ற ஆதங்கத்தையே வெளியிட்டனர். நாங்கள் இதை வெளியில் சொன்னால் எங்களை கட்சியிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள், தமிழ் மக்களுக்கு எதிரானவர்கள் என துரோகப்பட்டம் சூட்டி ஓரம் கட்டிவிடுவார்கள் அதனால் வாய் மூடி மௌனமாக இருக்கிறோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனுடன் இரு முறை தொடர்பு கொண்டோம். முதலாவது முறை தொடர்பு கொண்ட போது தான் கடையில் நிற்பதாக பதிலளித்தார். மறுமுறை எடுத்த போது எமது அழைப்பிற்கு பதிலளிப்பதை தவிர்த்துக்கொண்டார்.

கொழும்பிலிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் அவர்களின் வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது மாலையில் பேசுமாறு அவரின் மனைவி தெரிவித்தார்.

இந்த விடயங்கள் தொடர்பாக பதிலளிப்பதை சம்பந்தன், மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தவிர்த்து வருகின்றனர் என்பதை எம்மால் உணரமுடிகிறது. சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் தமிழ் தேசியக்கூட்டமைப்பை தவறான வழிக்கு கொண்டு செல்கின்றரோ என்ற சந்தேகமும், அவர்கள் மகிந்த ராசபக்சவின் சதிவலைக்குள் வீழ்ந்து விட்டனரோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

தாம் தமிழ் மக்களுக்காகத்தான் பயணிக்கிறோம், மகிந்தவின் சதிவலையில் சிக்கவில்லை என்றால் அதை ஏனைய தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

வெறுமனே சம்பந்தனும், சுரேஷ் பிரேமச்சந்திரனும் அல்லது மாவை சேனாதிராசாவும் மட்டும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் அல்ல.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், விநோதராதலிங்கம், விநாயகமூர்த்தி, சரவணபவன், யோகேஸ்வரன், அரியநேத்திரன், செல்வராசா, ஆகிய ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள்தான். தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை என்ன செய்கிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமை இவர்களுக்கும் உண்டு. அவர்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை எங்கே செல்கிறது என அறிந்து கொள்ளும் உரிமை உண்டு.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் சார்பில் அரசுடன் பேசுவதாக இருந்தால் பேசப்படும் விடயம் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அதை அறிந்து கொள்ளும் தகவல் அறியும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு.

தமிழ் மக்கள் எத்தகைய தீர்வை எதிர்ப்பாரக்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்களின் விரும்பங்களை புறந்தள்ளிவிட்டு இனப்பிரச்சினை பற்றி அரசுடன் பேசுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எந்த உரிமையும் கிடையாது. இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது சம்பந்தனின் வீட்டுச்சொத்தல்ல. அவரின் வீட்டு சொத்தாக இருந்தால் மட்டுமே அரசாங்கத்துடன் பேசப்படும் விடயங்களை மறைக்க முடியும்.

எனவே தவறான திசைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமை சென்று கொண்டிருக்கிறது என்ற தமிழ் மக்களின் பலமான சந்தேகத்திற்கு சம்பந்தன் பதிலளிக்க வேண்டும். அதற்கு அப்பால் தாம் புறக்கணிக்கப்படுகிறோம். என்ன நடக்கிறது என எதுவுமே தெரியவில்லை என ஆதங்கப்படும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பந்தன் பதிலளிக்க வேண்டும். அவர்களின் ஆலோசனைகளையும் பெற்றே முடிவுகளை எடுக்க வேண்டும்.

இல்லையேல் சம்பந்தன், சுரேஷின் சர்வாதிகாரத்திற்கு தமிழ் மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்

இரா.துரைரத்தினம், தினக்கதிர் ஆசிரியர் பீடம்

  • Replies 79
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

Smiley-msn-com-Animes-87027.gifkrankenwagen.gif

*****தணிக்கை******

தலைவர் என்ற ரீதியில் சம்பந்தருக்கும் பேச்சாளர் என்ற ரீதியில் சுரேசுக்கும் சில மேலதிக உரிமைகள் உள்ளன, அவற்றுடன், கூடுதலான அதிகாரத்துடன், பொறுப்புணர்வும் உள்ளது என்பதை அவர்களும் அறிவார்கள் மக்களும் அறிவார்கள்.

அதேவேளை மற்றைய உறுப்பினர்கள், மக்களால் தெரிவானவர்கள் உட்பட கட்சி பிரச்சனைகளை 'பூட்டிய கதவுகளுக்குள்' தீர்ப்பதே தேசியத்துக்கு தேவையானது, சாதுரியமானது.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

அகூதா உங்களுக்கொரு பச்சை.

"தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் சார்பில் அரசுடன் பேசுவதாக இருந்தால் பேசப்படும் விடயம் தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். அதை அறிந்து கொள்ளும் தகவல் அறியும் உரிமை தமிழ் மக்களுக்கு உண்டு.

தமிழ் மக்கள் எத்தகைய தீர்வை எதிர்ப்பாரக்கிறார்கள் என்பதை தமிழ் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். தமிழ் மக்களின் விரும்பங்களை புறந்தள்ளிவிட்டு இனப்பிரச்சினை பற்றி அரசுடன் பேசுவதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எந்த உரிமையும் கிடையாது. இனப்பிரச்சினைக்கான தீர்வு அல்லது தமிழ் மக்களுக்கான தீர்வு என்பது சம்பந்தனின் வீட்டுச்சொத்தல்ல. அவரின் வீட்டு சொத்தாக இருந்தால் மட்டுமே அரசாங்கத்துடன் பேசப்படும் விடயங்களை மறைக்க முடியும்."

ஐயா: கொடுக்கு கட்டிக்கொண்டு நின்று தெருச்சண்டித்தனம் காட்டுவது போல் பத்திரிகைகளில் எழுதி எதுவும் நடக்காது. தமிழ் மக்களின் பிரதிநிகளை தமிழ் மக்கள் தான் கேள்வி கேட்கலாம். தமிழ் மக்களுக்காக கேள்வி கேட்க உம்மிடம் எதாவது அடிப்படை தகமைகள் இருக்கவேண்டும். குறைஞ்சபட்சம் ஒழுங்காய் ஒரு பத்திரிகை தன்னும் நடத்த தொடங்கும்.

மற்றயது, இதுவரையில் சம்பந்தரும் அரசாங்கமும் பேசி எடுத்த இரகசிய முடிவுகளை நீர் கேள்விப் படாவிட்டால். அது நீர் செய்த தவறு. இந்த முறை மட்டும் சொல்லமுடியும் கவனமாய் படியும் பின்வரும் வரிகளை

எடுத்த முடிவு வந்து " ".

ஏனையா இல்லாத பிள்ளைக்கு சோம்பேறி மதிரி சும்மா இருந்து தாலாட்டு பாடுகிறீர். எழுத ஒன்றும் இல்லையேன்றால், எனையா, சொல்ல ஒன்றும் இல்லாதவனை போய் இடிக்கிறீர். நல்ல சினிமாக்காறி ஒருத்தி பளிச்செண்டு ஒரு சொக்காய் போடிருக்கிற படமாய்த் தேடி போடும். தெருவால் போற சனமெல்லம் திரும்பி திரும்பி பார்க்கும் உம்முடைய பத்திரிகையை.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இனி இலங்கைத் தமிழர்களுக்கு ஒரே வழி இனக்க அரசியல் என்டு தான் நினைக்கிறன்......

ஆயுதப்போரட்டமும் தோல்வி..........

அகிம்சையும் தோல்வி..........

இந்தியா ஜக்கியநாடுகள் சபை மேற்குலகம் என்று எவனுமே கண்டுக்கிறான் இல்லை................சோ என்ன தான் வழி................?

சுய நிர்ணய உரிமையோ அதிகாரபரவலாக்கலோ அல்லது தமிழீழமோ எல்லாமே அமரிக்காவின் திறந்தவெளி சிறையுனுள்தான் அடைத்துவைக்கபட்டிருக்கிறது இதுதான் உண்மை.இதுபற்றி நான் எந்த விதமான விவாதத்துக்கும் தயாரில்லை.ஆனால் விரைவில் எல்லாம் வெளிவரும்.அப்போது எல்லாரும் அமெரிக்காவின் பின் தொடர்வோம்.அதிபர் ஒபாமாவின் வீட்டின் பின்வேலியில் நாம் விட்ட கண்ணீர் என்றுமே வீண் போகாது

இனி இலங்கைத் தமிழர்களுக்கு ஒரே வழி இனக்க அரசியல் என்டு தான் நினைக்கிறன்......

ஆயுதப்போரட்டமும் தோல்வி..........

அகிம்சையும் தோல்வி..........

இந்தியா ஜக்கியநாடுகள் சபை மேற்குலகம் என்று எவனுமே கண்டுக்கிறான் இல்லை................சோ என்ன தான் வழி................?

தளராத நம்பிக்கை, விடாமுயற்சி.

இதே துரைரத்தினம் தான் பிரேசதவாததைக் கிழறிவிட்டு சம்பந்தனுக்கு ஆதரவு தேடியவர், சம்பந்தன் தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளை விட்டு விட்டு இந்தியாவின் சொற்படி செயற்படுகிறார் என்று சொன்ன போது அதற்கு எதிராகக் கட்டுரை எழுதிய மேதாவி, உண்மை என்னவெனில் சம்பந்தன் குழுவினர் இந்தியாவால் வழி நடாத்தப்படுகின்றனர்.இந்தியா ஒரு தீர்வைத் திணிக்கும் அது தமிழ்மக்களுக்கான தீர்வாக இருக்கப் போவதில்லை.ஈற்றில் சம்பந்தனும் இந்தியாவும் அம்பலப் பட்டு தமிழ் மக்கள் தமது போராட்டத்தை வேறு வழிகளில் தொடருவதே நடக்கும்.அதுவரை பொறுத்திருப்போம்.புலத்தில் போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்ததை உண்டு பண்ணும் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்போம், தமிழ் நாட்டுத் தமிழ் மக்களுடன் எமக்கான உறவை இன்னும் வலுப்படுத்துவோம்.இந்தியா எங்கனம் எல்லா மக்கள் சக்திகளுடனும் எமது போராட்டத்திற்கான நியாயத்தைக் கொண்டு செல்லுவோம்.அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் சகல மானிலங்களிலும் காங்கிரசுக்கு எதிரான சக்திகளைப் பலப்படுத்தி அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவோம், இது தான் புலத்தில் இருக்கும் எமது அடுத்த செயற்திட்டமாக இருக்க வேண்டும்.இதை விட்டு விட்டு வெட்டிக் கதை பேசிக் கொண்டிருப்பதில் எந்தப் பலனும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒருபோதுமே தமிழருக்குச் சார்ஆக இருக்கப்போவதில்லை என்பதை கடந்த 25 - 30 வருடங்களாக நடந்துவரும் சம்பவங்கள்பௌறுதுதிப்படுத்தியபடியே இருக்கின்றன. அடிப்படையில் தமிழருக்கு உதவ வேண்டும் என்கிற கட்டாயம் இந்தியாவுக்கு எப்போதுமே இர்ந்தது கிடையாது. இந்திரா அம்மையார் காலத்தில் கூட கட்டுக்கடங்காமல் அமெரிக்க வழியில் பயணித்த ஜே ஆர் ஜெயவர்த்தனாவை வழிக்குக் கொண்டுவரவே தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் வழங்கப்பட்டது. ஆனால் இன்றுள்ள நிலமையோ வேறு, இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிய நண்அர்கள், ரஷ்ஷியாவை யாரும் இப்போது கணக்கிலெடுப்பதில்லை. ஆகவே இலங்கை அமெரிக்காவின் பின்னாலென்ன அல்லது தன் பின்னால் வன்தாலென்ன இந்தியாவைப் பொறுத்தவரை எல்லாம் ஒன்றுதான். அமெரிக்க இந்தியக் கூட்டுத் திட்டத்தின்படி, இலங்கை சீனாவின் பக்கம் போவதை எப்பாடு பட்டாவது தடுத்து நிறுத்த வேண்டும். அதைச் செய்வதற்கு இலகுவான வழி சின்னஞ்ச் சிறிய இனக் குழுவான தமிழர்களை ஆதரிப்பதை விடவும் அதிகாரம் படைத்த சிங்கள இனத்தை ஆதரிப்பதேயாகும். இன்தக் கூட்டுச் சதிக்குள் இந்தியாவின் பழிவாங்கல் நடவடிக்கையும், கணக்குத் தீர்க்கும் நடவடிக்கையும் அடங்கும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!!!!!!!!

இவை சம்அன்தருக்குப் புரியாமலில்லை. ஆனாலும், இந்தியாவைன் சொற்படி ஆடுவதன்மூலம் தனது இருப்பைப் பாதுகாத்துக்கொள்ளலாம் என்று அவர் நம்உகிறார். எந்த ஆதரவுமின்றி நாய்களைப் போல வீதிகளில் சுட்டுக் கொல்லப்படுவதைக் காட்டிலும் இந்தியா சொற்படி நடந்து தனது உயிரையும், அதிகாரத்தையும் காத்துக்கொள்ள முனைகிறார்.

UK Sets Deadline For Sri Lanka

By Easwaran Rutnam

The British government has set a deadline for Sri Lanka to show progress in addressing concerns of human rights violations committed during the war. British Foreign Secretary William Hague has told the British Foreign Affairs Committee that Sri Lanka has been told it needs to show progress by the end of this year or Britain will support the international community in revisiting all options available to press the Sri Lankan government to fulfill its obligations.

இன்று காலக்கெடு சிறிலங்கா மீது விதிக்கப்பட்டுள்ளது, சர்வதேச அழுத்தம் சிறிலங்கா அரசு மீது இருக்கிறது.இந்தத் தருணத்தை சமயோசிதமாகக் கூட்டமைத் தலமை பயன் படுத்த வேண்டும்.இல்லாவிட்டல் அது ஒரு வரலாற்றுத் துரோகத்தைத் தமிழ் மக்களுக்கு இழைக்கும்.

Edited by narathar

இத்தகைய அழுத்தங்கள் தமிழருக்கு என்ன பயனைத்தரும் என்று எனக்கு விளங்கவில்லை. சிறிலங்காவிற்கு அவை கொடுக்கும் அழுத்தங்களெல்லாம் தமிழர் ஆதரவினை நோக்கியதாக இருக்கவில்லை என்பதுதான் என் கருத்து.

நாரதரின் கருத்தைப் போல் தருணத்தைப் பயன்படுத்தும் நிலைதான் இலங்கைத்தமிழரின் நிலை. எந்த தமிழர் சார்ந்த அரசியல் கட்சிகளாயிருந்தாலும் தற்போது நிலவும் சூழ்நிலையைப் பயன்படுத்தத் தவறக் கூடாது. தந்திரமுள்ள முடிவுகளும் சமேயோசித புத்தியும்தான் பலனைக் கொடுக்கும். சர்வதேச நகர்வுகள் எமக்கானதல்ல என்றாலும் அவைகளிலிருந்து கிடைக்கக் கூடிய பலனைப் பெற்றேயாக வேண்டிய தேவை தமிழருக்கு உள்ளது.

BLUE BIRD இன் கூற்றுப் போல ஒன்று இந்தியாவின் மேலாண்மையைத் தவிர்க்கக் கூடிய ஏதாவதொரு சக்தி தமிழருக்குப் பின்னணியாக இருப்பின் அது வரவேற்கத்தக்கது.

கூட்டமைப்புடன் பேசி ஒரு தீர்வுக்கு வாருங்கள் அல்லது உங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதே தற்போதைய சர்வதேச நிலைப்பாடு.கூட்டமைப்பு இந்த நிலமையைச் சரிவர புரிந்து கொண்டு ,ஒரு சுயாதீனமான அரசுக்குத் தேவையான அனைத்து அதிகாரங்களையும் கோர வேண்டும்.காணி,கடல் வளம் மீதான உரித்தி, சுயாதீனமான நிதித் திரட்டல், மூலதனத் திட்டமிடல், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு என சகல அதிகாரங்களையும் சுய நிர்ணயம் தாயகம் என்னும் அடிப்படையில் கோர வேண்டும்.அவ்வாறு கோரிக்கைகளை முன்வைக்காது எவருக்கும் சொல்லாமற் கொள்ளாமல் இந்தியாவின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கோரிக்கைகளை முன்வைப்பது தமிழ் மக்களுக்குச் செய்யும் வரலாற்றுத் துரோகமாக இருக்கும்.

என்ன பேசப்படுகின்றது என்பது மேற்குலகிற்குத் தெரியவரும். ரகசியம் பேணப்படுவதில் உள்ள நன்மை சந்தர்ப்பத்திற்கேற்பவாறு தமது தொப்பியை பிரட்டிப்போடுபவர்களின் தொல்லை குறையும்.

  • கருத்துக்கள உறவுகள்

அன்மையில் சம்மந்தருக்கு இந்தியாவில் வைத்து நடைபெற்ற இதயசிகிச்சைக்கான செலவுகள் அனைத்தையும் இந்திய அரசாங்கமே பொறுப்பெடுத்துக்கொண்டதாம்..................சோ சம் ம ந் த ர்;;;;;;; .ந்தியா என்ன சொன்னாலும் கேக்க தான் வேணும்...

சம்பந்தர் வழிநடத்தும் கூட்டமைப்பால் சிங்களத்துடன் நடாத்தப்படும் பேச்சுவார்த்தைகள் ஓரளவுக்கு மட்டுமே பயன்களை தரக்கூடியது என்பது இந்தியா உட்பட்ட சர்வதேசத்திற்கு தெரியும். இந்த வழியில் சிங்களத்தின் ஏமாற்று முகத்தை உலகிற்கு காட்டும் பரப்புரையையே தமிழர் தரப்பு பலமாக செய்யவேண்டும்.

மூன்றாம் தரப்பு தலையீடு நேரடியாக இருந்தாலும் சிங்கள இனவாதம் அதை பகிரங்கமாக எதிர்க்கும், பெரியளவில் முன்னேற்றங்கள் அமையா. சிங்களம் எந்த தீர்வுக்கும் இணங்காது என்பதை மீண்டும் மீண்டும் உலகிற்கு தமிழர் தரப்பு

இங்கு ஆதாரபூர்வமாக காட்டவேண்டும்.

சர்வதேசம் (அமேரிக்கா / இந்தியா) தமது இராணுவ/பொருளாதார நலன்கள் தேவைகொண்டே ஒரு தீர்வை பேசியோ இல்லை சிங்களத்தினை மீறியோ திணிக்கலாம். இவ்வாறு நடக்கக்கூடிய காரணிகள் எமது கைகளில் இல்லை, ஆனால் புலம்பெயர் அமைப்புக்கள் இதற்கு பலம் சேர்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பன் துரைரத்தினத்துக்கு,

நண்பா நீங்கள் இப்படி கொதிப்படையக்கூடிய சூழல் ஒன்றும் நாட்டில் நிலவவில்லை. இத்தகைய கொதிப்பு சம்பந்தருக்கு எதிரான கடும்போகாளர்களான யாழ் மையவாதிகளுக்கும் அரசுசார்பு ஊடகங்களுக்கும்த்தான் தீனி போடுவதாக அமையும். முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்டபின் இரத்தச் அகதியுள் வீழ்ந்து இராணுவ சப்பாத்துக்களின் கீழ் எழ முடியாதுகிடந்த எம் மக்களை கொலைகார அரச கக்திகளுக்கு எதிராக அணி திரட்டிய பெருமை சம்பந்தர் ஐயாவுக்கும் சுரேஸ்பிரேமச் சந்திரனுக்கும் மாவை சேனாதிராசாவும்மும் பெரும் பங்குண்டு. மேலும் சம்பந்தர் ஐயாவுக்கு மட்டுமே வடகிழக்கு மக்கள் மத்தில் நேரடியான தொடர்பும் அனுபவமும் உள்ளது. திரு செல்வநாயகம் த்ருரு வன்னியசிங்கம் அவர்களுக்குப் பின்னர் முஸ்லிம் தலைவர்களது நட்ப்பை பெற்றுள்ள ஒரே தலைவரும் அவர்தான்.

வெளிநாடுகளில் வாழும் நாமல்ல சமபந்தர் தலையிலான தலைவர்கள்தான் எங்கள் இனம் எல்லாவற்றையும் இழந்த கையறு நிலையில் கொலைக் கரங்களுக்கும் துப்பாக்கிகளுக்கும் முகம் கொடுத்து கடந்த மூன்று தேர்தல்களில் ம்கிந்த அரசுக்கு எதிராக தமிழர்களை அணிதிரட்டி சர்வதேசத்தின்முன் நம்மை அடையாளப் படுத்தினார்கள். அதனால்தான் உலகநாடுகளில் புலம்பெயர்ந்த அமைப்புகளின் குரலும் கோரிக்கைகளும் அர்த்தம் பெற்று செல்லுபடியாகும் சூழல் ஏற்பட்டது. மறு புறத்தில் உலக நாடுகளின் அழுத்தம் புலம் பெயர்ந்த தமிழர்களின் அழுத்தம் நாட்டில் சம்பந்தர் தலைமையில் இயங்கிய தலைமைக்கு செயப்படத்தக்க அரசியல் வெளியை அகலப் படுத்தி வருகிறது. இன்று இந்த ஒன்றில் ஒன்று தங்கிய தொடர் நிகழ்வுதான் எமது மக்களுக்குக் கிடைத்திருக்கும் மீட்ச்சிக்கான ஒரே மார்க்கமாக உள்ளது.

இன்றய நிலையில் இந்தியா மற்றும் மேற்குநாடுகளின் நல்லெண்ணத்தை வென்றாக வேண்டியுள்ளது. உடனடியாக எப்பாடு பட்டாவது கடைசி இரண்டில் ஒன்றையாவது வென்றாக வேண்டியுள்ளது என்பது நீங்கள் அறியாததல்ல.

ஜெனீவா பேச்சுவார்தையின்போது பாலா அண்ணரின் சரியான அணுகுமுறை கைவிடப்பட்டதை சுட்டிக்காட்டி மேற்க்கு நாடுகள் நம்மைக் கைகழுவியபோது நீங்கள் பேசியிருக்க வேணும். நான் என்னால் இயன்ற அழுத்தங்களை கொடுத்தேன்.

இபோது சம்பந்தர் தலைமையில் இடம்பெறும் பேச்சுவார்த்தை கையறு நிலையில் உள்ள எங்கள் மக்களின் (புலம் பெயர்ந்த நம்மை சொல்லவில்லை) எதிர்காலம் தொடர்பானது. மேற்க்கு நாடுகள் மற்றும் இந்தியா பிரயோகிக்கும் அழுத்தங்களை கருத்தில் கொண்டுதான் நாம் செயல் படவேண்டுயுள்ளது. மாற்றுத் தலைமையாக மகிந்த சார்புத் தலைமை மட்டுமே இருக்கிறது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளத் தவறி விட்டீர்கள். பேச்சுவார்த்தையின் முடிவுகள் மக்களுக்கு அறிவிக்கப் படவேண்டும் என்று நீங்கள் சொன்னால் அது மிகவும் சரியானது. கொலை ஆபத்துள்ள ஒரு இனவாதச் சூழலில் பேச்சுவார்த்தையின் நடைமுறைகள் பற்றிய உறுதியான முடிவை எடுக்கும் இராசதந்திரரீதியான உரிமை தலைமைக்கு உள்ளது. இத்தகைய பின்னணியில் சம்பந்தர் தலைமையை பலகீனப் படுத்துவது ஈழத்தில் மகிந்தராஜபக்ச ஆதரவாளர்களையே பலப்படுத்தும். இப்பேச்சு வார்த்தை சரியான திசையிலேயே செல்கிறது. தோற்றுப் போன இன்றைய நிலையில் எல்லோரதும் எல்லா கருத்துகளும் முன்வைக்கப் படவேண்டும் அரசியல் தலைமை அவறை எல்லாம் சீர் தூக்கிப் பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். அதே சமயம் கருத்துச் சொல்கிறவர்கள் நம் மக்களின் கையறு நிலையை மறக்கக்கூடாது என்பதையும் சர்வதேச சமூகத்தால் நிராகரிக்கப் பட்ட உள்ளதையும் கெடுக்கும் அதிதீவிர வாதம் பேசுவதை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் பணிவன்புடன் விண்ணப்பிக்கிறேன்.

V.I.S.Jayapalan artist

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

poet உங்களுக்கொரு பச்சை.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சாந்தி, எனது edit பண்ணப்பட்ட பதிலை மீண்டும் வாசிக்க வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அரசு மேற்கு நாடுகளுக்கு தண்ணி காட்ட கூட்டமைப்பை பயன்படுத்துகிறது.மகிந்த தமிழ் மக்களை நிச்சயயமாக பேய்க்காட்டுவார் என சிங்கள கட்சிகளுக்கும், சிங்கள மக்களுக்கும் நன்கு தெரியும்.எனவே தான் அவர்கள் பேச்சுவார்த்தை பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை.

நாங்கள் காலக்கெடு விதித்து இருக்கிறோம் என வாய்கிழிய கத்திய சம்பந்தர் பேச்சு மூச்சில்லாமல் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதன் மர்மம் என்ன.

கஜேந்திரன் பொன்னம்பலம் கூறிய கருத்துக்களும் சிந்திக்க தூண்டுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பன் துரைரத்தினத்துக்கு,

நண்பா நீங்கள் இப்படி கொதிப்படையக்கூடிய சூழல் ஒன்றும் நாட்டில் நிலவவில்லை. இத்தகைய கொதிப்பு சம்பந்தருக்கு எதிரான கடும்போகாளர்களான யாழ் மையவாதிகளுக்கும் அரசுசார்பு ஊடகங்களுக்கும்த்தான் தீனி போடுவதாக அமையும். முள்ளிவாய்க்காலில் கைவிடப்பட்டபின் இரத்தச் அகதியுள் வீழ்ந்து இராணுவ சப்பாத்துக்களின் கீழ் எழ முடியாதுகிடந்த எம் மக்களை கொலைகார அரச கக்திகளுக்கு எதிராக அணி திரட்டிய பெருமை சம்பந்தர் ஐயாவுக்கும் சுரேஸ்பிரேமச் சந்திரனுக்கும் மாவை சேனாதிராசாவும்மும் பெரும் பங்குண்டு. மேலும் சம்பந்தர் ஐயாவுக்கு மட்டுமே வடகிழக்கு மக்கள் மத்தில் நேரடியான தொடர்பும் அனுபவமும் உள்ளது. திரு செல்வநாயகம் த்ருரு வன்னியசிங்கம் அவர்களுக்குப் பின்னர் முஸ்லிம் தலைவர்களது நட்ப்பை பெற்றுள்ள ஒரே தலைவரும் அவர்தான்.

வெளிநாடுகளில் வாழும் நாமல்ல சமபந்தர் தலையிலான தலைவர்கள்தான் எங்கள் இனம் எல்லாவற்றையும் இழந்த கையறு நிலையில் கொலைக் கரங்களுக்கும் துப்பாக்கிகளுக்கும் முகம் கொடுத்து கடந்த மூன்று தேர்தல்களில் ம்கிந்த அரசுக்கு எதிராக தமிழர்களை அணிதிரட்டி சர்வதேசத்தின்முன் நம்மை அடையாளப் படுத்தினார்கள். அதனால்தான் உலகநாடுகளில் புலம்பெயர்ந்த அமைப்புகளின் குரலும் கோரிக்கைகளும் அர்த்தம் பெற்று செல்லுபடியாகும் சூழல் ஏற்பட்டது. மறு புறத்தில் உலக நாடுகளின் அழுத்தம் புலம் பெயர்ந்த தமிழர்களின் அழுத்தம் நாட்டில் சம்பந்தர் தலைமையில் இயங்கிய தலைமைக்கு செயப்படத்தக்க அரசியல் வெளியை அகலப் படுத்தி வருகிறது. இன்று இந்த ஒன்றில் ஒன்று தங்கிய தொடர் நிகழ்வுதான் எமது மக்களுக்குக் கிடைத்திருக்கும் மீட்ச்சிக்கான ஒரே மார்க்கமாக உள்ளது.

இன்றய நிலையில் இந்தியா மற்றும் மேற்குநாடுகளின் நல்லெண்ணத்தை வென்றாக வேண்டியுள்ளது. உடனடியாக எப்பாடு பட்டாவது கடைசி இரண்டில் ஒன்றையாவது வென்றாக வேண்டியுள்ளது என்பது நீங்கள் அறியாததல்ல.

ஜெனீவா பேச்சுவார்தையின்போது பாலா அண்ணரின் சரியான அணுகுமுறை கைவிடப்பட்டதை சுட்டிக்காட்டி மேற்க்கு நாடுகள் நம்மைக் கைகழுவியபோது நீங்கள் பேசியிருக்க வேணும். நான் என்னால் இயன்ற அழுத்தங்களை கொடுத்தேன்.

இபோது சம்பந்தர் தலைமையில் இடம்பெறும் பேச்சுவார்த்தை கையறு நிலையில் உள்ள எங்கள் மக்களின் (புலம் பெயர்ந்த நம்மை சொல்லவில்லை) எதிர்காலம் தொடர்பானது. மேற்க்கு நாடுகள் மற்றும் இந்தியா பிரயோகிக்கும் அழுத்தங்களை கருத்தில் கொண்டுதான் நாம் செயல் படவேண்டுயுள்ளது. மாற்றுத் தலைமையாக மகிந்த சார்புத் தலைமை மட்டுமே இருக்கிறது என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளத் தவறி விட்டீர்கள். பேச்சுவார்த்தையின் முடிவுகள் மக்களுக்கு அறிவிக்கப் படவேண்டும் என்று நீங்கள் சொன்னால் அது மிகவும் சரியானது. கொலை ஆபத்துள்ள ஒரு இனவாதச் சூழலில் பேச்சுவார்த்தையின் நடைமுறைகள் பற்றிய உறுதியான முடிவை எடுக்கும் இராசதந்திரரீதியான உரிமை தலைமைக்கு உள்ளது. இத்தகைய பின்னணியில் சம்பந்தர் தலைமையை பலகீனப் படுத்துவது ஈழத்தில் மகிந்தராஜபக்ச ஆதரவாளர்களையே பலப்படுத்தும். இப்பேச்சு வார்த்தை சரியான திசையிலேயே செல்கிறது. தோற்றுப் போன இன்றைய நிலையில் எல்லோரதும் எல்லா கருத்துகளும் முன்வைக்கப் படவேண்டும் அரசியல் தலைமை அவறை எல்லாம் சீர் தூக்கிப் பார்க்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். அதே சமயம் கருத்துச் சொல்கிறவர்கள் நம் மக்களின் கையறு நிலையை மறக்கக்கூடாது என்பதையும் சர்வதேச சமூகத்தால் நிராகரிக்கப் பட்ட உள்ளதையும் கெடுக்கும் அதிதீவிர வாதம் பேசுவதை நாம் தவிர்க்க வேண்டும் என்றும் பணிவன்புடன் விண்ணப்பிக்கிறேன்.

V.I.S.Jayapalan artist

எடிட் செய்தபின் இரண்டாவது பச்சைஎன்னுடையது .

தொடர்ந்து எழுத்துங்கள் ஐயா.

டிஸ்கி . எதை தாங்கள் எடிட் செய்தீர்களோ அதை தவிர்ப்போம். நன்றி.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இரா.துரைரத்தினம் இவரின் நடவடிக்கையே சந்தேகத்துக்கு இடமானது, குறிப்பாக இவர் நடாத்தும் தினக்கதிர் இணையத்தளத்தில் இவரால் பிரசுரிக்கும் செய்திகளில் முரண்பாடு இருக்கும் இவரைப்பற்றி எனக்கு நிறைய விடயங்கள் தெரியும் ஊடக விழுமியங்களுக்கு அமைய அவரைப்பற்றிய தகவல்களை தவிர்த்துள்ளேன்.

... பேச்சுவார்த்தைக்கு போகத்தான் வேண்டும்!

... பேசித்தான் தீர வேண்டும்!!

... அதனைத்தான் சர்வதேசமும் எதிர்பார்க்கிறது!!!

... மூடியோ/திறந்தோ பேசுங்கள், அதில் எந்தத்தவறும் இல்லை, ஆனால் தமிழர்களாக சென்று பேசுங்கள்!!!!

... அங்கு, இப்போது பேச்சுவார்த்தைக்கு சென்று பேசுபவர்களாக இருப்பவர்கள், கூட்டமைப்பினரே!!!!!

... எல்லாவற்றுக்கும் மேல், இன்று அங்குள்ள எம்மக்களுக்கு பாதுகாப்பாக வாழ தற்காலிகமாகவேனும், ஓர் அரசியல் தீர்வு தேவைப்படுகிறது, அது மறுதலிக்கப்பட முடியாதது!!!!!

...

... அத்ற்கு மேல், புலத்தில் செய்ய வேண்டியவற்றை ... யுத்தக்குற்றச்சாட்டுகளுக்கான சர்வதேச விசாரனை ... செய்து கொண்டே இருக்க வேண்டும்!!! ... அதனை கூட்டமைப்பினரின் தலையில் கட்டி விட்டு நாம் ஒதுங்குவதோ??? இல்லை கூட்டமைப்பினர் இதனைப்பற்றி ஒன்றுமே செய்யவில்லை என கூப்பாடு போடுவதிலோ அர்த்தமில்லை!!!! ...

....

... இவற்றை விட்டு விட்டு ... கூட்டமைப்பினரை உடைப்போம் என்று வெளிப்படுவது ... பிழைகள் சுட்டிக்காட்டப்பட வேண்டியவைதான் ... எதிரிக்கு சந்தர்ப்பத்தை நாமே ஏற்படுத்திக் கொடுப்பதாக முடியும்!!! ... இன்றைய காலகட்டத்தில் தாயகத்தில் தற்காலிகமாவது கூட்டமைப்பின் இருப்பு இன்றியமையாதது!!!!!

GreenDotsBulb.jpg

.... நெல்லைக்கு ஓர் பெரிய பச்சை ...

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா கூட்டமைப்பையும், மகிந்த அரசையும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உண்டான 13வது திருத்தச் சட்டமூல அரசியல் தீர்வை நோக்கி நகர்த்துகின்றது. இதனால் இணைக்கப்படாத வடக்கு, கிழக்கு மாகாணசபைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரத்துடன் அரசியல் தீர்வு எட்டிவிட்டதாக அறிவிக்கப்படும். 87க்குப் பின்னர் 22 வருட காலம் நடாத்தப்பட்ட யுத்தத்திற்குகும், அழிவுகளுக்கும் கிடைத்த பலன்!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.