Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இவர்களின் நோக்கம் என்ன??????????????????

Featured Replies

என்னைப் பாதித்த இந்தப் பதிவை உங்களுடன் பகிர்கின்றேன் எங்களுக்கும் எமது போரட்டத்திற்கு இந்தப் பதிவர்களைப் போல் பலர் பால பாடம் எடுக்க வெளிக்கிடுகின்றார்களா என்ன?????????????

ந்த வருஷம் மாவீரர் நாளின் போது, தலைவர் பிரபாகரன் அவர்களது திருவுருவப்படம் வைத்து, அஞ்சலி செலுத்துவதற்கு ஒரு குழுவினர் தயாராகி வருவதாக நம்பகரமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது!

LTTEsports_5.jpg

மேலும், தலைவர் பிரபாகரன் வீரச்சாவடைந்துவிட்டார் என்பதை உத்தியோக பூர்வமாக அறிவிக்கவும் போகிறார்களாம்! யார் அந்தக் குழுவினர்? அவர்களின் பின்னணி என்ன? அவர்களின் நோக்கம்தான் என்ன?

வாருங்கள் ஆராய்வோம்!

01. யார் அந்தக் குழுவினர்?

இவர்களை வெறுமனே துரோகிகள் என்றோ, ஒட்டுக்குழுக்கள் என்றோ சொல்லிவிட முடியாது! இவர்களும் “ முக்கியமான” ஆட்கள்தான்! விடுதலைப்போரில் இவர்களது பங்களிப்பும் அளப்பரியதுதான்! இந்தக் குழுவில் பல முன்னாள் போராளிகளும் அடக்கம்! இன்னும் சொல்லப் போனால், எடுத்த எடுப்பில் புறம்தள்ளி, ஒதுக்கிவிட முடியாத குழுவினர் என்று சொல்லலாம்!

ஃபிரான்ஸை தளமாக கொண்டு இயங்கி வருகிறார்கள்!

02. இவர்களின் விளக்கம்!

தலைவர் பிரபாகரன் மே 18 ல் இறந்ததை இந்தக் குழுவினர் நம்புகிறார்களாம்! மேலும் மக்களும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக, தலைவர் இறந்ததை நம்பத் தொடங்கிவிட்டார்களாம்! இதற்கு மேலும் இதனை மறைத்து வைப்பதற்கு என்ன இருக்கிறது?

தலைவருக்கு செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்துவிடுவோம்! என்று இக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

03. மாவீரர் தினத்தில் குழப்பமா?

ஆனால், இன்னுமொரு “ முக்கிய” குழுவினர், தலைவர் பிரபாகரன் இறந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை! அவர்களும் மாவீரர் நாள் தொடர்பாக, அறிவித்தல்கள், பிரசுரங்களை வெளியிட்டுள்ளார்கள்! ஆனால் தலைவர், உயிரோடு பத்திரமாக இருப்பதாக சொல்கிறார்கள்!

பெருமளவிலான மக்கள் தலைவர் இறந்ததை நம்பவில்லை என்றும், மக்களின் நம்பிக்கையை தாங்கள் வீணடிக்க விரும்பவில்லை என்றும் இக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்!

இவர்களும் ஃபிரான்ஸில்தான் செயல்படுகிறார்கள்!

04. உண்மை என்ன?

உண்மையில் தலைவர் இருக்கிறாரா? இல்லையா? இருக்கிறார் என்பவர்கள் அதற்குரிய ஆதாரத்தை முன்வைக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள்! ஆனால் தலைவர் இருக்கிறார் என்பதை உறுதியாக நம்புகிறார்கள்!

இல்லை என்பவர்கள், அதற்கு ஆதரமாக இலங்கை அரசு சொன்ன செய்திகளையும், காட்டிய படங்களையும் எடுத்துக்காட்டுகிறார்கள்! இலங்கை அரசு சொல்வதை நம்பியா, எமது தலைவரை இல்லை என்று நாம் சொல்லமுடியும்? என்று ஒரு தொகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்!

05.என்னுடைய சில கேள்விகள்!

தலைவர் இறந்துவிட்டார் என்று சொல்லி, அவருக்கும் சேர்த்து மாவீரர் நாள் கொண்டாட தயாராக இருக்கும் அந்தக் குழுவினரிடம் நான் சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்!

1. தலைவர் இறந்துவிட்டார் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்? ஆதாரம் உண்டா? 2009 மே 18 ல் தலைவர் இறந்ததாக, இலங்கை அரசு சொன்னதை, பெருமளவிலான மக்கள் நம்பவில்லை! இலங்கை அரசின் அந்த அறிவிப்பை மக்கள் முற்றுமுழுதாக நிராகரித்து விட்டனர்!

அன்று மக்கள் நிராகரித்த ஆதாரத்தையா, மறுபடியும் தூசி தட்டி, மக்கள் முன் வைக்கப் போகிறீர்கள்?

<a href="

http://3.bp.blogspot.com/-XkitLoZCbSM/ToDyVbga8dI/AAAAAAAAAMs/mjA-uWNqhnw/s1600/Police_3.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em">Police_3.jpg

2. உங்கள் கூற்றுப்படி, இப்போது மக்கள் தலைவர் இறந்துவிட்டார் என்பதை நம்புகிறார்கள் என்றால், அதனை நம்பாத மக்களும் இருக்கிறார்கள்தானே! இதில் நம்பும் மக்களின் எண்ணிக்கை அதிகமா? நம்பாத மக்களின் எண்ணிக்கை அதிகமா?

ஆய்வு செய்தீர்களா? முழுமையான மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தீர்களா? இல்லை தன்னிச்சையாக நீங்களே முடிவெடுத்தீர்களா? நீங்கள் தலைவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னரும், மக்கள் அதனை நம்பாவிட்டால் என்ன செய்வீர்கள்?

3. தலைவரின் படத்துக்கு மாலைபோட்டு, மௌன அஞ்சலி செலுத்துவதோடு உங்கள் பணி முடிந்துவிடுமா? உங்கள் பேச்சை நம்பி, தலைவருக்காக மக்கள் குமுறி அழுதால், அவர்களை எப்படி ஆறுதல்படுத்துவீர்கள்?

4. தலைவருக்கு நீங்கள் கொடுக்கப் போகும் ரேங் ( RANK ) என்ன? ஜெனரல் பட்டம் கொடுத்து, சரத் ஃபொன்சேவுடன் சரி சமமா பார்ப்பீர்களா? அல்லது அதற்கும் மேலான ராணுவ பட்டம் கொடுப்பீர்களா?

ஒன்று சொல்லட்டுமா? உலகத்தில் எத்தனையோ தலைவர்கள் இறக்கிறார்கள்! அப்போதெல்லாம், மக்கள் இந்தளவுக்கு நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லையே! அவர்களின் இறப்பை ஏற்கத்தானே செய்கிறார்கள்!

ஆனால் தலைவர் விஷயத்தில் மட்டும், மக்கள் உறுதியாக நம்புகிறார்களே! இப்படி ஒரு அசைக்க முடியாத மக்களின் நம்பிக்கையை, வேறு எவராலும் பெற முடியுமா? இது எமது தலைவர் பெற்ற மாபெரும் பேறல்லவா?

இந்தப் பேற்றைவிடவா, நீங்கள் கொடுக்கப் போகும், இராணுவ ரேங், உயர்ந்ததாக இருக்கும்? ஒருவர் இறந்ததாக சொல்லப்படும்போது, மக்கள் அதனை நம்பாமல் உறுதியாக இருந்த சம்பவம், இதற்கு முன்னர் வரலாற்றில் எங்கேனும் நடந்ததுண்டா?

5. தலைவர் இறந்ததை தமிழ்மக்கள் ஏற்றுக்கொண்டால், தமிழர்களுக்கு தீர்வு தருவோம் என்று இலங்கை அரசு சொல்லியதா? போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை தருவோம் என்று ஐ நா சொல்லியதா? சிறையில் வாடும் போராளிகள் முழுமையாக விடுவிக்கப்படுவார்களா? இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட்டு, அவர்களது வாழ்க்கை சிறப்படைய நடவடிக்கை எடுக்கப்படுமா?

தூக்குத் தண்டனைக் கைதிகள் விடுவிக்கப்படுவார்களா? வதிவிட உரிமை இல்லாமல் வெளிநாடுகளில் துன்பப்படும் மக்களுக்கு, விஸா கிடைத்துவிடுமா?

அப்படி என்னதான் நன்மை நடந்துவிடும் என்று கருதி, இப்போது தலைவருக்கு மாலை போடுகிறீர்கள்!

மேலும் மேலும் மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டு பண்ணுவதைத் தவிர, உங்களால் வேறு, என்னத்தை வெட்டிப் புடுங்க முடியும்?

எதற்கு இந்த அவசர குடுக்கைத் தனம்?

6. தலைவருக்கு செத்த வீடு கொண்டாடி, என்ன லா ஷபேல் சந்தியில், பூசணிக்காயை நாலு துண்டாக வெட்டி, குங்குமம் பூசி கழிப்பு கழிக்கப் போறீங்களா? அல்லது எட்டு செய்து, இறைச்சி படைத்து மூக்கு முட்ட தின்னப் போகிறீர்களா?

என்னதான்யா உங்க நோக்கம்?

charles_memorial01.jpg

7. அவரது படத்துக்கு பூமாலை போட்டு, மௌன அஞ்சலி செலுத்திவிட்டால், அவரை நீங்கள் கௌரவித்து விட்டதாக அர்த்தமா? இதற்காகவா, அந்த மனுஷன் 30 வருஷமா, போராடினார்?

இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லுங்கையா?

“ தலைவர் உயிரோடு இருக்கிறார்! மீண்டும் போராடப் போறார்! அனைவரும் நிதி தாங்க” என்று யாராவது நிதி வசூலித்து, மக்களை ஏமாற்றிக் கொண்டு திரிந்தால், நீங்கள் இப்படி ஒரு அறிவிப்பை விடுவது நியாயம்!

இப்ப என்ன நடந்துவிட்டது என்று, புதுசு புதுசா கெளம்புறீங்க?

போங்கையா போங்க! போய் வேற ஏதாவது உருப்படியான வேலை இருந்தா பாருங்க!

http://ideamani615.b...og-post_27.html

Edited by komagan

  • Replies 52
  • Views 5.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அவர்களது நோக்கம் தமிழ் தேசியத்தை கூறு போட்டு விற்பது இப்ப அதற்கு என்னங்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தை நினைச்சேன்..... சிரிச்சேன்..........

"நான் ஏன் பிறந்தேன்?

நாட்டுக்கு நலம் என்ன புரிந்தேன்?

என நாளும் பொழுதும் வாழும் வரையில்

நினைத்திடு என் தோழா

நினைத்து செயல்படு என் தோழா"

:wub:
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தை நினைச்சேன்..... சிரிச்சேன்..........

ஏன் சிரிக்கிறீங்கள் கொஞ்ச நேரம் அழுது கொண்டிருங்கோ. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை குழப்புவதில் இவர்களுக்கு என்ன இலாபம்? பெருமளவு கையூட்டு ஸ்ரீலங்கா மற்றும் இந்திய புலனாய்வு பிரிவினரிடம் பெற்றுள்ளார்களா? விடுங்கையா மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

கேள்விகள் கேட்பது சுலபம்

ஆனால் பதில் உண்டா தங்களிடம்?

கேள்விக்கான பதிலைத்தேடுங்கள்

எல்லோரும் சேர்ந்து தேடுவோம்

இந்த நகைப்பு நளினம் தள்ளியிருத்தல் ......... எம்மினத்துக்கு கேடானவை. முடிந்தால் ஒன்றாவதற்கு ஒருகை கொடுங்கள் . பிரிக்கும் எந்த முயற்சிக்கும் பலியாகப்போவது தாயக மக்கள்தான். இதை நினைவில் இருத்துங்கள். கனக்க எழுதமுடியாது என்னால். அதுகூட எம்மினத்துக்கு ஆகாது தற்போது. நன்றி.

  • தொடங்கியவர்

இதை யாருக்கு சொல்கின்றீர்கள் விசுகு? எனக்கா ? அல்லது இந்த மூலப் பதிவருக்கா :o :o :o ?

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தால் ஒன்றாவதற்கு ஒருகை கொடுங்கள் . பிரிக்கும் எந்த முயற்சிக்கும் பலியாகப்போவது தாயக மக்கள்தான். இதை நினைவில் இருத்துங்கள். .

எந்தக் குழுவோட ஒன்றாகக் கலக்கவேண்டும் என்பதையும், ஒவ்வொரு குழுக்களின் ஆதரவு வீதங்களின் புள்ளி விபரங்களையும் தந்தால் நல்லது!

01. யார் அந்தக் குழுவினர்?

...

ஃபிரான்ஸை தளமாக கொண்டு இயங்கி வருகிறார்கள்!

... பிரான்ஸில் சிலர் ... லண்டனில் இன்னும் சிலர் ... அவர்களின் றிமோட்கொன்றோல் மலேசியாவிலாம்!!!!!!!!! ............ முன்பும் ஒருவர் மலேசியாவில் இருந்து பிலிம் காட்டி விட்டு அஸ்டாங்கமாக வீழ்ந்து ... கொழும்பில் ஓகோ என்று இருக்கிறாராம்!!!! ..... அவருக்கும், இவர்களுக்கும் தொடர்பு என்கிறார்கள்????????? .... தொடர்போ ... பலதுகள் பேய்கள் ... விபரம் அறியாது பின்னேயாம்!!!!!!!!!!

... மலியும் ... அப்போ சந்தைக்கு வரும்!!!!!!!! .... பொறுத்திருப்போம் ... அதுவரை உணர்ச்சிவசப்பாட்டு விசிலடிக்காமல் ...

உலகத்தை நினைச்சேன்..... சிரிச்சேன்..........

செந்தில் கவுண்டன் ஜோக் தான் நினைவில் வருகிறது..

இவளவு பேரையும் பறி கொடுத்து விட்டு தலைவர் தப்பி ஓட வெளிக்கிட்டு இருப்பாரா?

2 ) தான் இறந்த பின் தன் விட்டு சென்ற விடுதலை உணர்வை தமிழ்மக்கள் அதுவும் வெளிநாட்டில் இருக்கும் புலம்பெயர் தமிழர்கள் ஒற்றுமையாக முன்னெடுத்து செல்வார்கள் என்று தலைவர் நம்பி இருந்தால்??? அவர் தமிழர்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்வேன்/...

மக்களை குழப்புவதில் இவர்களுக்கு என்ன இலாபம்? பெருமளவு கையூட்டு ஸ்ரீலங்கா மற்றும் இந்திய புலனாய்வு பிரிவினரிடம் பெற்றுள்ளார்களா? விடுங்கையா மக்கள் தெளிவாக இருக்கின்றனர்.

என்னமோ 24 மணித்தியாலமும் இந்திய சிங்கள அர்சு கோடிக் கணக்கில் புலம் பெயர் தம்ழருக்கு கொட்டிக் கொடுத்து தான் இந்த பிரிவை செய்கிறார்கள் என்று நினைகிறீங்களா?

தமிழர்களின் குனம் அறிந்தால் காசு தேவை இல்லை..

சமைகுழப்பி இனம் தான் தமிழர்கள்.

உலகத்தை நினைச்சேன்..... சிரிச்சேன்..........

நானும் தான்...

அண்ணன் .......நீங்க இருந்தாலும்,,,திரும்ப வராதீங்க!

உலகின் எந்த ஒரு மூலையிலாவது ஒதுங்கிபோயிருந்து...

அனாதையாவே வாழ்ந்து,, வாழ்வைமுடிச்சிடுங்க!

இளமைகாலம் தொடக்கம்...முதுமை எட்டிப்பார்க்கும் வயசுவரை ......உரிமை ,,உறவு தேசம்னு வாழ்க்கைய ,,தொலைச்சிட்டிங்க,,,

இனியாவாது ....... அது விண்ணோ- மண்ணோ...

எங்கிருந்தாலும் ஒரு கொஞ்ச நாளாவது உங்களுக்காக நீங்க வாழுங்க ..!!

நல்ல சொன்னீங்க

  • கருத்துக்கள உறவுகள்

எந்தக் குழுவோட ஒன்றாகக் கலக்கவேண்டும் என்பதையும், ஒவ்வொரு குழுக்களின் ஆதரவு வீதங்களின் புள்ளி விபரங்களையும் தந்தால் நல்லது!

நீங்கள் அரசியலில் கலக்க இடம்தேடுகின்றீர்களா கிருபன்?

தமிழருக்கு என்ன தேவை?

அதற்கு தங்களால் செய்யக்கூடிய பங்களிப்பு

இதில் குழு என்ன? பேதம் என்ன?

ஏன் நாம் மட்டும் புள்ளிவிபரம் தேடுகின்றோம்?

அவர்கள் ஒன்றாக நின்று ஒருமித்த குரலில் பேசியபோது சர்வாதிகாரம் ஐனநாயகவிழும்பியங்கள் இல்லை. எதேச்சதிகாரம் என்றெல்லாம் தூற்றியதும் நாம்தான். இன்று அவர்கள் குழுக்களாக நிற்கிறார்கள் என்பதும் நாம்தான். அப்படியாயின் தப்பு எங்கே? நம்மீதுதானே?

குழுக்களாக இருக்கட்டுமே ஒவ்வொருவரும் தமது பக்க நியாயங்களையும் கொள்கைகளையும் மக்களிடம் நிரூபிக்கட்டுமே.

ஆயிரம் வேலைகள் கண்முன்னே கிடக்கிறது.

இங்கேயே பாருங்கள்

மோகன் அண்ணாவின் சுமையை.

அகோதா செய்யும் பணியை.

“ தலைவர் உயிரோடு இருக்கிறார்! மீண்டும் போராடப் போறார்! அனைவரும் நிதி தாங்க” என்று யாராவது நிதி வசூலித்து, மக்களை ஏமாற்றிக் கொண்டு திரிந்தால், நீங்கள் இப்படி ஒரு அறிவிப்பை விடுவது நியாயம்!

இந்த நிதி சேகரிப்பு இப்பவும் இங்க சுவிசில நடக்குது. இதை நான் ஆதாரத்தோட நிருபிச்சால் உங்களால என்ன புடுங்கமுடியும்?

போங்கய்யா போங்கோ போய் புள்ள குட்டிய படிக்க வைக்கிற வேலைய பாருங்க.

மாவிரர், தேசியம், தலைவர், தமிழீழம் இதெல்லாம் வியாபாரமாகி பல வருசம் ஆகிட்டுது.

எதுக்கு இவ்ளோ கோவமா இருக்கிங்க?

என்னது ....புடுங்கிறதா? இப்டியா வார்த்தை எல்லாம் வரும்?

பள்ளிக்கூடம்போகாத ...அர்ஜுன் அண்ணாகூட இப்டி கோவமா & அசிங்கமா பேசினதில்லையே..........

அவரு சொல்லி தரல்லையா... உங்களுக்கு தன்னைபோல அசிங்கமா ..பப்ளிக்ல ...

காவாலிகள்போல ...Behave..பண்ணகூடாதுன்னு? :)

உங்களுக்கு தனிநபருடன் இருக்கும் பிரச்சனையை ஏன் என்னுடயை பதிவில கொட்டுறீங்கள்?

புடுங்கிறது என்பது நாகரீகமில்லையா? சொல்லவே இல்லை

:D

நல்ல வேளை திருவள்ளுவர் உயிரோட இல்லை. இருந்திருந்தா அவர் ஏதோ ஒரு குறளில "மயிர்" என்டு சொல்லி போட்டாராம் :unsure:

நானும் தான்...

நாளைக்கு சோத்துக்கு வழி இருக்கா? வழி யில்லாதவன் உலகத்தை நினைக்க மாட்டான் :D:lol:

உங்களுக்கு தனிநபருடன் இருக்கும் பிரச்சனையை ஏன் என்னுடயை பதிவில கொட்டுறீங்கள்?

புடுங்கிறது என்பது நாகரீகமில்லையா? சொல்லவே இல்லை

:D

நல்ல வேளை திருவள்ளுவர் உயிரோட இல்லை. இருந்திருந்தா அவர் ஏதோ ஒரு குறளில "மயிர்" என்டு சொல்லி போட்டாராம் :unsure:

இப்போ ஆவது கொஞ்சம் ,, அமைதியானீங்களே.............. நீங்க ரொம்ப நல்லவர்! :)

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் இருக்கிறாரா இல்லையா என்கிற விவாதம் தேவையற்றது..! புலிகளே தாங்கள் போராட்டத்தை மௌனிக்கிறோம் நீங்கள் இனி தொடர்ந்து பணி செய்யுங்கள் என்று கூறிவிட்டார்கள்..! :rolleyes:

தவிர, தலைவர் இறந்ததாக சிங்களவன் காட்டிய பாடத்தில் சிங்களவனுக்கே நம்பிக்கை இல்லை..! :wub: மற்றவர்களை நம்புமாறு திணிப்பது சரியாகத் தெரியவில்லை..! :unsure:

தலைவர் இல்லையென்றால் அதை நிருபிக்க வேண்டியது சிங்களவன் / ஒட்டுக்குழுக்களின் வேலை..! :unsure:

மற்றும்படி, வழக்குகளில் Innocent until proven guilty என்று சொல்வது மாதிரி ...

தலைவர் is alive until proven otherwise..!!

இப்போ ஆவது கொஞ்சம் ,, அமைதியானீங்களே.............. நீங்க ரொம்ப நல்லவர்! :)

என்னது மகாத்மா காந்தி செத்திட்டாரா???? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அரசியலில் கலக்க இடம்தேடுகின்றீர்களா கிருபன்?

தமிழருக்கு என்ன தேவை?

அதற்கு தங்களால் செய்யக்கூடிய பங்களிப்பு

இதில் குழு என்ன? பேதம் என்ன?

ஏன் நாம் மட்டும் புள்ளிவிபரம் தேடுகின்றோம்?

அவர்கள் ஒன்றாக நின்று ஒருமித்த குரலில் பேசியபோது சர்வாதிகாரம் ஐனநாயகவிழும்பியங்கள் இல்லை. எதேச்சதிகாரம் என்றெல்லாம் தூற்றியதும் நாம்தான். இன்று அவர்கள் குழுக்களாக நிற்கிறார்கள் என்பதும் நாம்தான். அப்படியாயின் தப்பு எங்கே? நம்மீதுதானே?

குழுக்களாக இருக்கட்டுமே ஒவ்வொருவரும் தமது பக்க நியாயங்களையும் கொள்கைகளையும் மக்களிடம் நிரூபிக்கட்டுமே.

ஆயிரம் வேலைகள் கண்முன்னே கிடக்கிறது.

இங்கேயே பாருங்கள்

மோகன் அண்ணாவின் சுமையை.

அகோதா செய்யும் பணியை.

நான் சாக்கடை அரசியலில் கலக்க விரும்பவில்லை. குழுக்களாகப் பிரிந்து அடிபட்டுக்கொண்டு இருப்பவர்களைப் பார்த்துக்கொண்டு கண்ணைமூடிக் கடமைகளைச் செய்யும் அப்பாவிகள்தான் இக்குழுக்களைப் பலப்படுத்துபவர்கள். அந்த அப்பாவி ரகத்தில் நான் என்றுமே இருந்ததில்லை.

மற்றது, பங்களிப்பு என்ற வார்த்தையே எப்போதும் காசைக் கறப்பதைத்தான் நினைவுக்குக் கொண்டுவருகின்றது. எனவே வேறு சொற்பிரயோகத்தைப் பாவிக்கவேண்டுகின்றேன்.

தலைவர் இருக்கிறாரா இல்லையா என்கிற விவாதம் தேவையற்றது..! புலிகளே தாங்கள் போராட்டத்தை மௌனிக்கிறோம் நீங்கள் இனி தொடர்ந்து பணி செய்யுங்கள் என்று கூறிவிட்டார்கள்..! :rolleyes:

பணிக்கார்ட் இப்பவும் வைத்திருக்கின்றீர்கள் போலுள்ளது!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பகுதியில் கருத்திணைக்கும் சிலருக்கு காலம்தான் பதில் சொல்லும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.