Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எனது வரிகளில் இரண்டாவது பாடல்

Featured Replies

ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே

என் கண்ணீர்த் துளிகள் கரையத்தானே

உன் கண்ணைக் கொஞ்சம் பேசவிடு

என் காதல் கதையை சொல்லவிடு

உன் கண்ணைக் கொஞ்சம் பேசவிடு

என் காதல் கதையை சொல்லவிடு

நீயாத்தானே நுழைந்தாய்

நெருப்பை ஏனடி வீசிப்போனாய்

தானாய்த்தானடி விளைந்தாய்

வெறுப்பை ஏனடி பற்றவைத்தாய்

ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே

என் கண்ணீர்த் துளிகள் கரையத்தானே

இரவினை படைத்து உனை தேடவைத்தானே

உறக்கம் திருடி உன்னை கனவாய் படைத்தானே

நீ இமைக்கும் பொழுதினிலே

உனக்குள் தொலைந்து போனேனே

உன் கண்களின் ஒளியெடுத்து

என்னைக் கண்டு கொண்டேனே

ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே

கண்ணீர்த் துளிகள் கரையத்தானே

ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே

கண்ணீர்த் துளிகள் கரையத்தானே

ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே

பார்த்துப்போ பெண்ணே

என் கண்ணீர்த் துளிகள் கரையத்தானே

கரைமேலே அலைசேரும்

கடல்போலே எனை இழுத்தாய்

மறைந்தேனே நுரையாக உனக்குள்ளே

உயிராய் உயிராய்

கரைமேலே அலைசேரும்

கடல்போலே எனை இழுத்தாய்

மறைந்தேனே நுரையாக உனக்குள்ளே

உயிராய் உயிராய்

ஒரு பார்வை பார்த்துப்போ பெண்ணே

என் கண்ணீர்த் துளிகள் கரையத்தானே

உன் கண்ணைக் கொஞ்சம் பேசவிடு

என் காதல் கதையை சொல்லவிடு

உன் கண்ணைக் கொஞ்சம் பேசவிடு

என் காதல் கதையை சொல்லவிடு

-யாழ்_அகத்தியன்

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணை பாத்து பாடாமல் கப்பலை பாத்து பாடுவது நீங்களா அகத்தியன் :lol:

அகத்தியன் நன்றாக இருக்கிறது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் நன்றாக உள்ளது அகத்தியன்.

உங்கள் முதலாவது பாடலையும், கப்பலுடன் எடுத்திருந்தீர்கள். கப்பல் மீது... அவ்வளவு காதாலா?biggrin.gif

  • கருத்துக்கள உறவுகள்

Quote :"நீ இமைக்கும் பொழுதினிலே

உனக்குள் தொலைந்து போனேனே

உன் கண்களின் ஒளியெடுத்து

என்னைக் கண்டு கொண்டேனே"

அகத்தியன் அருமை, ஆழமான வரிகள், எடுத்தவிதம், குரல் & இசை நன்றாக இருக்கு வாழ்த்துகள் மேலும் பல நல்ல படைப்புகளை படைக்க, அடுத்த என்ன குறும்படம் எடுக்கலாமே பாட்டுடன், நல்லா இருக்கும்,

உங்கள் படைப்புகளை நீங்க இதில் இணைத்துவிடுங்கள் இனிமேல் - நம்மவர் படைப்புகள்

http://www.yarl.com/forum3/index.php?showforum=22

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது ஆனாலும் இந்திய சினிமாவில் வரும் பாடல்களை போன்று இருப்பதால் இதையும் பத்தோடு பதினொன்றாகத்தான் எடுக்க முடியும் தாயகப்பாடல் எழுத முடிந்தால் அப்படியும் ஒரு முயற்சி செய்து பார்க்கலாமே நண்பா

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பாராட்டப்படவேண்டிய முயற்சிகள்..! ஆக்கத்திற்கும் இணைப்புக்கும் நன்றிகள் யாழ் அகத்தியன்..! :rolleyes:

இசையமைத்தவர் நவீன தமிழ் திரைப்படப் பாணியில் செய்துள்ளார்..! நன்றாக உள்ளது..!! ஒலிச்சேர்க்கையில் பின்னணி இசையின் அளவைக் குறைத்தால் பாடல்வரிகள் இன்னும் கூடுதலாகக் கேட்கும்..! :rolleyes:

நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் அகத்தியன்.

பாராட்டுக்கள் அகத்தியன்! ... முக்கியமாக ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனுபவித்து எழுதிய வரிகள்......அனுபவித்து பாடியது....அனுபவித்து உருவாக்கிய ஒளிப்பதிவு....அத்தனையும் பிரமாதம்....எனக்கு வாழ்த்துக்கள் சொல்ல அருகதையில்லை...இருந்தாலும் யாழ் அகத்தியனுக்கு என் வணக்கங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் அகத்தியன்.தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அகஸ்தியன், நீங்கள் ஒரு மொட்டு அல்ல!

முகிழ் விட்ட மலர்!

வாழ்த்துக்கள்!!!

வாழ்த்துக்கள் அகத்தியன் !!! .

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் கூறிய அத்தனை உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் நன்றாக உள்ளது அகத்தியன்.

  • கருத்துக்கள உறவுகள்

அகத்தியன் மிகச் சிறந்த கவிஞராக வர எனது பாராட்டுகளும்,வாழ்த்துக்களும்

  • கருத்துக்கள உறவுகள்

என் பாராட்டுக்களும் மேலும் வளர வாழ்த்துக்களும் கூறுகின்றேன்

நன்றாய் இருக்கு அகத்தியன், அசத்துறீங்க பாராட்டுகள். தொடருங்கள்........

Edited by r.raja

அகத்தியன், இப்பாடலை எனது முகநூலில் இணைத்துள்ளேன். பலரும் பாராட்டினார்கள்.

பாராட்டுக்கள்..! மென்மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள.

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் நன்றாக இருக்கின்றது யாழ் அகத்தியன்

வாழ்த்துகள்

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் கூறிய அத்தனை அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.