Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும்

FIL3107.jpg

01.மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா…

02.தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர்

. வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி’ என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். “போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்” என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, “எடுத்தால் எங்கே வைப்பது” என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க… அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் – அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்’. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்’ என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06.”ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?” என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, “யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்.”

07.”பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை” என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது’ என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி’ என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு’ என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். “தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்” என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்’ என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், “நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!”

23.”ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?” என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்’ என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.

நன்றி விகடன்.

http://mykathiravan....a-news/?p=18190

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிராபாகரன் காலத்தில் நான் வாழ்ந்தேன் என்னும் பெருமை எனக்குள்ளது.

அவன் ஒரு ராஜ ராஜ சோழன்.

  • கருத்துக்கள உறவுகள்

விகடன் புத்தகம் இப்ப கனக்க விக்குதாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விகடன் புத்தகம் இப்ப கனக்க விக்குதாம்.

ஈழப் போர், முழுமூச்சாக நடந்து கொண்டிருந்த போது...

விகடன் குழுமத்திலிருந்த ஒருவர், ஸ்ரீலங்கா தூதுவராலயத்தால்.... லப்ரொப் கொடுக்கப் பட்டும், அவர் கொடுத்த பார்ட்டிகளில் கலந்து கொண்டவர் என்றும் விகடன் குழு நீக்கியிருந்ததார்கள். குதிரை ஓடிய பின், லாயத்தை பூட்டிய கதை தான்... இதுவும்.

ஈழமக்களுக்கு.. விகடன் செய்த குற்றத்திற்கு, இது பிராயச்சிதமாகாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் வீரத்தை பற்றி புத்தகங்களில் படித்திருக்கின்றேன் கதைகளில் கேள்விப்பட்டுள்ளேன் சினிமாவில் பார்த்திருக்கின்றேன் இவைகள் அனைத்துமே தமிழனின் வீரத்தை பறைசாத்தி நின்றன இவை அனைத்துக்கும் மேலாக என்வாழ் நாளிலே நிஜமான வீரனைப்பார்த்தேன் என்ற மிடுக்கு என்னை ஒரு தமிழனாய் உயர்த்தியுள்ளது.

தேசியத்தலைவர் பிரபாகரன் வாழ்க ....

Edited by தமிழ் அரசு

  • கருத்துக்கள உறவுகள்

விகடன் புத்தகம் இப்ப கனக்க விக்குதாம்.

விகடனில் இப்படி எழுதுவது, வேலாயுதத்தில் புலிகள் பற்றிய வசனங்கள்,ஏழாம் அறிவில் பல வசனங்கள் என்று புலிகளை வைத்து வியாபாரம் செய்யவென ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

தயவு செய்து எழுதும் போது பண்பாகத் தலைவர் பிரபாகரன் என்று எழுதவும். தலைவர் இருக்கும் பொழுது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் என்று எழுதிச்சினம் இப்ப பார்த்தால் பிரபாகரன் பிரபாகரன்..............

சீ ............... என்ன இனமப்பா :rolleyes:

Edited by அலைமகள்

வேறொரு சஞ்சிகையில் வந்த... தலைப்புத்தான் அது, அலைமகள்.

அதனையே... தலைப்பாக இட்டுள்ளார். உண்மையில்.... வேறு பத்திரிகையில் வந்த தலைப்பை இங்கு, பிரசுரிப்பதாயின்.... அந்தத் தலைப்பையும் மாற்ற எமக்கு உரிமையில்லை. இதுக்கெல்லாம் ரென்சன் ஆக வேண்டாம்.

பிரபாகரனின் தூய்மைவாதத்தை பற்றி மாற்று கருத்து எவருக்குமில்லை.

சர்வதேச அரசியலுக்கு அது சரிவாது என்பதும் அவர் அறியவேண்டிய ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் தூய்மைவாதத்தை பற்றி மாற்று கருத்து எவருக்குமில்லை.

சர்வதேச அரசியலுக்கு அது சரிவாது என்பதும் அவர் அறியவேண்டிய ஒன்று.

உங்களைப்போல... ஆட்கள், சர்வதேச அரசியல்லை கோலோச்சிக் கொண்டிருக்கும் போது... அவரும், என்னத்தை செய்ய முடியும்.

வேறொரு சஞ்சிகையில் வந்த... தலைப்புத்தான் அது, அலைமகள்.

அதனையே... தலைப்பாக இட்டுள்ளார். உண்மையில்.... வேறு பத்திரிகையில் வந்த தலைப்பை இங்கு, பிரசுரிப்பதாயின்.... அந்தத் தலைப்பையும் மாற்ற எமக்கு உரிமையில்லை. இதுக்கெல்லாம் ரென்சன் ஆக வேண்டாம்.

இது வேறொரு சஞ்சிகையில் வந்த தலைப்பு என்று தெரியும், யாழில் நான் அவதானித்துள்ளேன் பிரபாகரன் என்று எழுதுவதை. அது தான்......

பிரபாகரனின் தூய்மைவாதத்தை பற்றி மாற்று கருத்து எவருக்குமில்லை.

சர்வதேச அரசியலுக்கு அது சரிவாது என்பதும் அவர் அறியவேண்டிய ஒன்று.

அந்த தூய்மையை வாதங்கள் மூலம் நிரூபிக்க முடியாமல் போனதே நாம் எல்லோரும் செய்த தவறு.

இதே சர்வதேச அரசியலை நாம் அன்று வெல்ல முடியவில்லை, இன்று அதே சர்வதேச அரசியல் அங்கு போர்க்குற்றம் நடத்துள்ளது, நீதியான விசாரணை வேண்டும் என்பதுடன் நெதர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் தீவிரவாத அமைப்பு இல்லை என்கிறது.

ஆயுதம் தூக்காத நெல்சன் மண்டேலாவை பயங்கரவாதி என்றது சர்வதேசம், பிரித்தானியாவுக்கு எதிராக ஆயுதம் தூக்கிய அமெரிக்க வாசிங்க்டனை பயங்கரவாதி என்றதும் சர்வதேசம் தான். மேதகு தலைவரின் தூய்மையை உலகும் ஒரு நாள் ஏற்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

விகடனில் இப்படி எழுதுவது, வேலாயுதத்தில் புலிகள் பற்றிய வசனங்கள்,ஏழாம் அறிவில் பல வசனங்கள் என்று புலிகளை வைத்து வியாபாரம் செய்யவென ஒரு கூட்டம் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

அப்ப இவளவு நாளும் வீரபாண்டிய கட்டபொம்பன் பண்டாரவன்னியன் என்று நாம் இவளவு நாளும் நாடகம் நடித்ததும் புத்தகங்களில் எழுதி வாசித்ததும் ................. வியாபாரமா?

பிரபாகரனின் வாழ்க்கை எதோ ஒரு வகையில் உண்மையான ஒவ்வரு தமிழனையும் பாதித்திருக்கிறது. சந்தர்ப்பம் வரும்போது அதை வெளிகாட்டுகிரார்கள்.

ஏன் புலிகளை பற்றி பேசாத படங்கள் கோடிகளை குவிக்கவில்லையா?

நாம்தான் எதோ சர்வதேச அரசியல் படித்த கற்பனையில் வாழ்கிறோம்.

எல்லாம் சாதரணமாகவும் இயல்பாகவுமே உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் தூய்மைவாதத்தை பற்றி மாற்று கருத்து எவருக்குமில்லை.

சர்வதேச அரசியலுக்கு அது சரிவாது என்பதும் அவர் அறியவேண்டிய ஒன்று.

எங்களுடைய உண்மையான அரசியல் பொய்யான சர்வதேசத்திற்கு சரிவரவில்லை எனும் என்னுடைய வாதத்தை உங்களால் ஏற்க முடியுமா?

உன்னமையே பேசியதால் அரிச்சந்திரனுக்கு வந்த சோதனைகளை நானும் நீங்களும் படித்திருக்கிறோம். ஆக அரிச்சந்திரனின் கதை இனி உண்மையே பேச கூடாது என்பதற்காகவே படிப்பிக்கின்றார்கள் என்ற முடிவுக்கு மாணவர்களையும் வரசொல்கிரீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழப் போர், முழுமூச்சாக நடந்து கொண்டிருந்த போது...

விகடன் குழுமத்திலிருந்த ஒருவர், ஸ்ரீலங்கா தூதுவராலயத்தால்.... லப்ரொப் கொடுக்கப் பட்டும், அவர் கொடுத்த பார்ட்டிகளில் கலந்து கொண்டவர் என்றும் விகடன் குழு நீக்கியிருந்ததார்கள். குதிரை ஓடிய பின், லாயத்தை பூட்டிய கதை தான்... இதுவும்.

ஈழமக்களுக்கு.. விகடன் செய்த குற்றத்திற்கு, இது பிராயச்சிதமாகாது.

ஈழப்போர் நான்கின் தொடக்கத்தில் திடீர் பல்டி அடித்து விகடனும், குமுதமும் ஈழ ஆதரவு நிலை எடுத்தன.

அதன் பின் அவர்கள் ஸ்ரீ லங்கா தமிழ் பத்திரிகைகளிலும் பார்க்க ஈழ புராணம் பாடினார்கள். அவர்களை துரோகிகள் என்பது சரியல்ல.

அந்த மாற்றத்திற்கு, வெளிநாட்டு வாசகர்களின் அழுத்தமும் காரணம்.

இது வேறொரு சஞ்சிகையில் வந்த தலைப்பு என்று தெரியும், யாழில் நான் அவதானித்துள்ளேன் பிரபாகரன் என்று எழுதுவதை. அது தான்......

அலைமகள் யழில இப்ப சர்வதேச அரசியல் அறிஞர்கள் கனபேர் திடீரென கூடிப்போட்டினம்.

அதால யாழ் இப்ப தடம்மாறி சர்வதேச அரசியலில ''பிரபாகரன்'' என்ற பெருந் தலைவனுடைய வளிகாட்டல்கள் பிழை எனவும் தங்களுடைய அறிவுரைகளை ''பிரபாகரன்'' கேட்டுநடந்திருந்தால் .......என்ற மாதிரி இப்ப கன பேர் கதைக்கினம்.இவர்கள் யார் என்று பார்த்தால் தமிழீழ நிலைப்பாட்டில் இருந்து ''நான் மாறினால் என் பாதுகாவலரே என்னை சுட்டுக்கொல்லலாம்'' என்ற கொள்ளை பிடிக்காமல் ஓடி வந்து ''புலிகள் சகோதரப் படுகொலை புரிகிறார்கள் அதனாலதான் நாங்கள் தப்பி வந்தனாங்கள் என்று கூச்சல் போட்டவர்களும் மே 2009 19 க்கு பின்னர் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக்கொள்ளப் பட்டவர்கள் சிலபேர் பற்றிய கதை எழுதுபவர்களுமே.(இவர்களால் கொள்ளைக்காக உயிரை விட்ட புலிகளின் வரலாற்றை எழுத முடியாது)

மேற்குலகல்ல உலகமே தமிழர் தலைவனை அவன் வீரத்தை புகழ்ந்தாலும் இந்த இனத்தின் சாபக்கேடுகளான இவர்கள் திருந்தமாட்டார்கள்.

பிரபாகரனின் தூய்மைவாதத்தை பற்றி மாற்று கருத்து எவருக்குமில்லை.

சர்வதேச அரசியலுக்கு அது சரிவாது என்பதும் அவர் அறியவேண்டிய ஒன்று.

ஹலோ அர்ஜுன் அண்ணா....... சூப்பரா சொன்னீங்க..!

அந்த தூய்மை வாதம்பத்தி மாற்றுக்கருத்து ,,,எவருக்குமில்லை சரி ,,

உங்களுக்கு அது சரிப்பட்டு வருமா?

எத்தனவாட்டி ,, பங்கர் தலைவன் அவர் (பிரபாகரன்)என்னீங்க....

அரச அடிமையாய் கிடக்குற டக்ளஸோட கிறிஸ்பூதம் ,, சைக்கிள் கதையிலயே,,,

மக்க(ள்)ல் தலைவர் அவர்னு மயங்கினவர்தானே நீங்க .. நியாபகம் இருக்கா???

அப்புறம் என்ன தூய்மைவாதம் ,, பிரபாகரன்கிட்ட இருக்கும்னு நீங்க ,, உங்க பார்வைல சொல்ல வர்றீங்க?!

அரச அடிமையாய் கிடக்குறவனுக்கும், ,,அடிமைகளுக்கு அரசனாய் இருக்குறவனுக்கும் ,,, வித்தியாசம் ரொம்ப ஜாஸ்தின்னு ,,, இப்போ உணர்ந்துட்டேன்னு , இப்போ ஆவது ,,, பப்ளிக்கா அறிவிப்பீங்களா அர்ஜுன் அண்ணா? முடியாதுல்ல!! பப்பி ஷேம் !!

நடிப்பிடில , பத்ம தூஷணம் ........ ஓ ஐயாம் ஸாரி....ரங்க் சிலிப் ஆயிருச்சு ... ப்த்மபூஷணன் விருது தரலாம் உங்களுக்கு!! :)

விகடன் புத்தகம் இப்ப கனக்க விக்குதாம்.

ஆமாமா ,, தமிழ் நாட்டில விக்குறதவிட , விகடன் ,,,புலம்பெயர் நாட்டில விற்பனை எகிறிதள்ளுதுன்னு ,, மக்கள் பேசிக்கிறாய்ங்க!

ஏனிந்த கொலைவெறி .......மக்கா?

அப்பிடி எங்களை வைத்து விகடன் லாபம் அடைந்தாலும், அந்த லாபத்தைவிட அவர்களால் நாங்க அடைந்தது,,, பலமடங்கு ......!!

அரசியல்ரீதியா ஆயிரம்பிரிவு தமிழகமக்களிடை இருந்தாலும்... அத்தனை பிரிவுகளிடையும், நண்பனாய் , நுழைந்து, செல்லக்கூடியது,,, அனைவராலும் நேசிக்கப்படக்கூடிய ஊடகங்கள்தானே!!

அங்கு வேறுபாடுகளை கடந்த ,,விகடன்& குமுதத்தால் ,,, தமிழகத்தில் ,,, எமக்கான பிரச்சாரம் அவர்களூடாக ..

பிரச்சாரங்கள் , கருத்து கணிப்புக்கள் , அனைவரிடமும் நடத்தியதே.!............. இதெல்லாம் எங்க மனசில எப்பவுமே ,, தோணுறதே இல்லியா?

நல்ல சமுதாயம்டா நாங்க!

Edited by அறிவிலி

சொல்ல வந்ததை எழுதிய உங்களுக்கு பச்சை

தயவு செய்து எழுதும் போது பண்பாகத் தலைவர் பிரபாகரன் என்று எழுதவும். தலைவர் இருக்கும் பொழுது தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் என்று எழுதிச்சினம் இப்ப பார்த்தால் பிரபாகரன் பிரபாகரன்..............

சீ ............... என்ன இனமப்பா :rolleyes:

பிரபாகன்னு ,, அவர...பெயர் சொல்லி கூப்பிடுறதில என்ன தப்பு ,, சகோதரம்??

மனிதர்களுக்குத்தானே அடைமொழி பொருந்தும்!

கடவுளுக்கு , அது தேவையா?

எந்தக்கடவுளையும், மிஸ்டர் /மேதகு.......... அல்லா... ஜீசஸ்...,, ஹானரபிள் .. முருகன்னு,,,, கூப்பிட்டிருக்கோமா நாங்க& நீங்க?

அவரும் அப்பிடித்தான்... கடவுள்!!!

தமிழ் நாடு தொடர்பான அறிவிலியின் கருத்தே எனது கருத்தும்..!! எமக்கு தேவை எமது பிரச்சனை தொடர்பாக உலக மக்களை விழிப்படய வைப்பது..regardless of who is doing it and why they are doing it..

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தமிழ் அரசு பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலி உங்க 2 கருத்துக்களும் சம்பந்தப்பட்டவர்களுக்கு சாட்டையடி.

தமிழ் நாட்டு சில ஊடகங்கள் வியாபார நோக்கோடு தமிழ் ஈழம் சம்மந்தமாக எழுவதுகூட பாராட்டப்பட வேண்டியவை சினிமாத்துறையின் மாற்றம் போன்று ஈழப்பிரச்சனையைத்தொட்டால் தான் மக்கள் மத்தியில் வரவேற்க்கப்படுகின்றது இப்படி எழுதுவதன் மூலமும் சினிமாவில் சொல்லுவதன் ஊடக எமது பிரச்சனை மக்கள் மத்தியில் சென்றடையும் இதற்காக விமர்சிப்பதை தவிர்ப்பதே நன்றாகும்

தலைவர் பிராபாகரன் காலத்தில் நான் வாழ்ந்தேன் என்னும் பெருமை எனக்குள்ளது.

அவன் ஒரு ராஜ ராஜ சோழன்.

உண்மை தமிழ் சிறி அண்ணா

நான் வீரத்தை பற்றி புத்தகங்களில் படித்திருக்கின்றேன் கதைகளில் கேள்விப்பட்டுள்ளேன் சினிமாவில் பார்த்திருக்கின்றேன் இவைகள் அனைத்துமே தமிழனின் வீரத்தை பறைசாத்தி நின்றன இவை அனைத்துக்கும் மேலாக என்வாழ் நாளிலே நிஜமான வீரனைப்பார்த்தேன் என்ற மிடுக்கு என்னை ஒரு தமிழனாய் உயர்த்தியுள்ளது.

தேசியத்தலைவர் பிரபாகரன் வாழ்க ....

இணைப்புக்கு நன்றி தமிழ் அரசு

அலைமகள் யழில இப்ப சர்வதேச அரசியல் அறிஞர்கள் கனபேர் திடீரென கூடிப்போட்டினம்.

அதால யாழ் இப்ப தடம்மாறி சர்வதேச அரசியலில ''பிரபாகரன்'' என்ற பெருந் தலைவனுடைய வளிகாட்டல்கள் பிழை எனவும் தங்களுடைய அறிவுரைகளை ''பிரபாகரன்'' கேட்டுநடந்திருந்தால் .......என்ற மாதிரி இப்ப கன பேர் கதைக்கினம்.இவர்கள் யார் என்று பார்த்தால் தமிழீழ நிலைப்பாட்டில் இருந்து ''நான் மாறினால் என் பாதுகாவலரே என்னை சுட்டுக்கொல்லலாம்'' என்ற கொள்ளை பிடிக்காமல் ஓடி வந்து ''புலிகள் சகோதரப் படுகொலை புரிகிறார்கள் அதனாலதான் நாங்கள் தப்பி வந்தனாங்கள் என்று கூச்சல் போட்டவர்களும் மே 2009 19 க்கு பின்னர் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக்கொள்ளப் பட்டவர்கள் சிலபேர் பற்றிய கதை எழுதுபவர்களுமே.(இவர்களால் கொள்ளைக்காக உயிரை விட்ட புலிகளின் வரலாற்றை எழுத முடியாது)

மேற்குலகல்ல உலகமே தமிழர் தலைவனை அவன் வீரத்தை புகழ்ந்தாலும் இந்த இனத்தின் சாபக்கேடுகளான இவர்கள் திருந்தமாட்டார்கள்.

நன்றி உங்களின் கருத்துக்களுக்கு எனது கருத்தும் அதுதான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.