Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்யாவின் மிக உயர்ந்த விருது அறிவிப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11-8-2011-40-russia-to-present---39-order-o.jpg

சென்னை, நவ. 8-

எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு ரஷ்ய நாட்டின் மிக உயரிய நட்புறவு விருது (ஆர்டர் ஆஃப் ஃபிரண்ட்ஷிப்) வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருதைப் பெறும் முதல் இந்திய எழுத்தாளர் ஜெயகாந்தன். இதற்கு முன்னதாக, பிரபல திரைப்பட இயக்குநர் மிர்ணாள் சென்னுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

ஜெயகாந்தனுக்கு இந்த விருது வழங்குவது குறித்து ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் பிறப்பித்த உத்தரவின் நகலை இந்தியாவுக்கான ரஷ்ய துணைத் தூதர் நிகோலாய் ஏ லிஸ்தபதோவ், ஜெயகாந்தனிடம் சென்னையில் திங்கள்கிழமை வழங்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ரஷ்யாவின் உண்மையான நண்பர் ஜெயகாந்தனுக்கு விருது வழங்குவதில் பெருமையாக உள்ளது. இந்திய - ரஷ்ய உறவு வலுவாக அமைய ஜெயகாந்தன் ஆற்றிய பங்கு அபாரமானது.

ரஷ்ய எழுத்தாளர் புஷ்கினின் எழுத்துக்களை தமிழில் அவர் மொழிபெயர்த்துள்ளார். அதேபோல, அவரது இலக்கியப் படைப்புகள் ரஷ்ய மொழியிலும் உக்ரேனிய மொழியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தனது பணியினை சிறப்பாக ஆற்ற ஜெயகாந்தனுக்கு இந்த விருது ஊக்கத்தைக் கொடுக்கும்," என்றார்.

இந்த நட்புறவு விருது வழங்கும் விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்தியாவுக்கான ரஷ்ய தூதர், ரஷ்ய அதிபரின் தூதுக் குழுவினர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இந்தோ-ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தின் தலைவராக ஜெயகாந்தன் உள்ளார். இவர் தனது எழுத்துப் பணியோடு இந்திய, ரஷ்ய நாடுகளிடையே உறவை வளர்க்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

அவரது நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட 'உன்னைப் போல் ஒருவன்' (1965) திரைப்படம் ரஷ்ய அதிபர் விருதைப் பெற்றது. இந்தோ-ரஷ்ய கலாச்சார மற்றும் நட்புறவு மையத்தை அவர் 2006-ல் தொடங்கினார். தொடர்ந்து ரஷ்யாவுடன் நல்லுறவைப் பேணி வருகிறார்.

http://www.koodal.co...amilnadu.asp?id

அவரின் எழுத்தின் நடையே அபாரம்,,அவருடைய பிற்கால சந்தர்ப்பவாத கருத்துகளை தவிர்த்தே பார்க்கிறேன் . சிறுகதை மன்னனுக்கு வாழ்த்துக்கள்

Edited by நாகேஷ்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயகாந்தன் முன்னுரைகள்கூட மிகவும் நன்றாகத்தான் இருக்கும்! வாழ்த்துக்கள்,.

எழுத்தில் புலி. தனிப்பட்ட வாழ்க்கையில் பச்சோந்தி.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயகாந்தன் எழுதிய ' ஆடும் நாற்காலிகள் ஆடுகின்றன' ஒரு அருமையான காவியம்!

வாழ்த்துக்கள் ஜெயகாந்தனுக்கு!

நதி மூலமும், ரிஷி மூலமும் பார்க்க வெளிக்கிட்டால், நதிகளில் குளிக்கவும் முடியாது! ரிஷிகளை வணங்கவும் முடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தில் புலி. தனிப்பட்ட வாழ்க்கையில் பச்சோந்தி.

100% உன்மை

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் ஜெயக்காந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ரஷ்சியாவிற்காகப் பாடுபட்டார் சரி. ரஷ்சியா அதற்கு நன்றி செலுத்துது. இவர் ஈழத்தமிழர்கள் எங்களுக்காக என்ன செய்திருக்கிறார்.. அதையும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

சும்மா சும்மா எல்லாம்.. ஒருவரை மற்றவன் புகழமாட்டான். ஆனால் நம்மவர்கள்.. மற்றவன் புகழ்கிறான் என்பதற்காகவே எங்களில் இருந்து விலகி இருந்தவங்கள எல்லாம் புகழிறதும் வாழ்த்திறதும் ஏனுன்னு எனக்குப் புரியல்ல..???! :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

அவன்தான் தமிழன்.

அதனால்தான் 8இல் ஒரு பகுதிச்சிங்களவன் எப்போதுமே வெல்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ரஷ்சியாவிற்காகப் பாடுபட்டார் சரி. ரஷ்சியா அதற்கு நன்றி செலுத்துது. இவர் ஈழத்தமிழர்கள் எங்களுக்காக என்ன செய்திருக்கிறார்.. அதையும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்.

சும்மா சும்மா எல்லாம்.. ஒருவரை மற்றவன் புகழமாட்டான். ஆனால் நம்மவர்கள்.. மற்றவன் புகழ்கிறான் என்பதற்காகவே எங்களில் இருந்து விலகி இருந்தவங்கள எல்லாம் புகழிறதும் வாழ்த்திறதும் ஏனுன்னு எனக்குப் புரியல்ல..???! :rolleyes::icon_idea:

நெடுக்கு அவர் எங்களுக்காக எது செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? கூட இருந்து குழி பறிக்காதவரை அவரை வாழ்த்துவதில் தப்பில்லை..... ஒரு படைப்பாளியாக வாழ்த்துத் தெரிவிப்பதில் தவறில்லையே...

அக்கா.. இந்திய அமைதிப்படைக் காலங்களில் இவரது எழுத்துக்களையும் பேச்சுக்களையும் நீங்கள் கேட்டிருக்க வேண்டும்..! :rolleyes: எமது போராளிகளைக் கழுதைப் புலிகள் (கழுதைப் புலிக்கு வீரமில்லையாம்; மற்றவை அடித்ததை எடுத்து உண்ணுமாம்.) என்று வர்ணித்தவர். :huh: இன்றைக்கு கப்சிப்.

அன்றிலிருந்து எனக்கு இந்தாளைக் கண்ணிலயும் காட்டேலாது. :icon_mrgreen:

n812997489_1822067_867859.jpg

n812997489_1822068_6226284.jpg

இந்து கல்லூரி வகுப்பு தோழன் மூர்த்தியுடன் ஜெயகாந்தன்.

தமிழ் எழுத்துலக ஜாம்பவான் இவரை அடிக்க எவராலும் முடியாது .எல்லாமே திறம் அதில் எது நல்லது என்பது மிக கடினம் .எனக்கு பிடித்தது "ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள் ".

இவரின் "பாரிஸுக்கு போ " கதாநாயகனின் பெயர் தான் என் இயக்க பெயர்

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் திரைபடத்தில் நாகேஸ் எழுத்தாளராக

ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் திரை படத்தை பற்றி ஒரு ஆய்வு கீழே

Edited by நாகேஷ்

ஜெயகாந்தன் தமிழை கேவலபடுத்தி பேசி அதே நேரத்தில் சமஸ்கிருதத்தை உயர்த்தி பேசி ,,பிறகு மன்னிப்பு கேட்டது வேற விசயம் .அதே ஜெயகாந்தன் தமிழ் எழுத்து உலகில் செய்த புரட்சியை யாரும் மறுக்க முடியாது..

Edited by நாகேஷ்

நெடுக்கு அவர் எங்களுக்காக எது செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? கூட இருந்து குழி பறிக்காதவரை அவரை வாழ்த்துவதில் தப்பில்லை..... ஒரு படைப்பாளியாக வாழ்த்துத் தெரிவிப்பதில் தவறில்லையே...

இவன் (இவர் என்று சொல்ல மனம் வருதில்லை) இந்திய வெறிப்படை இலங்கையில் அட்டூழியங்கள் செய்யும்போது பேசியவை மிகத் தரம் கெட்டவை. (நன்றி இசைக் கலைஞன்); புலிகளை அப்போதிலிருந்து விமர்சிக்கும் எனக்கே தாங்க முடிந்ததில்லை. ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும், தமிழரின் (புலிகளையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்) தியாகங்களையும் கொச்சைப்படுத்தியவன். தனிப்பட்ட முறையில் ஒரு கேவலங்கெட்ட பேர்வழி.

ஆனால் என்ன செய்வது? எழுத்தில் ஒரு ஜாம்பவான்தான். எல்லா எழுத்தாளர்களும் தனிப்பட்ட வாழ்க்கையில் தி.ஜானகிராமன், நா.பார்த்தசாரதி போலில்லாவிட்டாலும் ஒரு 'சாதாரணமான' நபராக இருந்தாலே போதும்.

Edited by கறுவல்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பெரிதாக ஜெயகாந்தனின் எழுத்துக்களில் பரிச்சயமில்லை...யாழில் முன்பு ஒரே நேரத்தில் ஜெயகாந்தனின் கதையையும்,டிசே தமிழனின் கதையையும் கொண்டு வந்து இணைத்திருந்தார்கள் எனக்கு டிசே தமிழனின் கதை தான் பிடித்திருந்தது...ஜெயகாந்தனின் கதைகள் பற்றி அறியாமல் அவர் பற்றி விமர்சனம் செய்ய விரும்பவில்லை...அந்தக் காலத்தில் அவர‌து கதைகள் காலத்திற்கு ஏற்றவாறு இருந்திருக்க கூடும் ஆனால் இந்தக் காலத்திற்கும் அவரது கதைகள் பொருந்துமா?...மேலும் இவ் விருதை முக்கியமாக கொடுப்பதற்கு கார‌ணம் அவர் இந்தோ-ரஷ்ய கலாசார மற்றும் நட்புறவு மையத்தின் தலைவராக உள்ளபடியால் தான் இல்லா விட்டால் கொடுப்பார்களா?

இவன் (இவர் என்று சொல்ல மனம் வருதில்லை) இந்திய வெறிப்படை இலங்கையில் அட்டூழியங்கள் செய்யும்போது பேசியவை மிகத் தரம் கெட்டவை. (நன்றி இசைக் கலைஞன்); புலிகளை அப்போதிலிருந்து விமர்சிக்கும் எனக்கே தாங்க முடிந்ததில்லை. ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும், தமிழரின் (புலிகளையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்) தியாகங்களையும் கொச்சைப்படுத்தியவன். தனிப்பட்ட முறையில் ஒரு கேவலங்கெட்ட பேர்வழி.

ஆனால் என்ன செய்வது? எழுத்தில் ஒரு ஜாம்பவான்தான். எல்லா எழுத்தாளர்களும் தனிப்பட்ட வாழ்க்கையில் தி.ஜானகிராமன், நா.பார்த்தசாரதி போலில்லாவிட்டாலும் ஒரு 'சாதாரணமான' நபராக இருந்தாலே போதும்.

நன்றி உங்கள் எழுத்துக்கு.

நானும் ஜெயகாந்தனின் எழுத்துக்கு ரசிகன். இவரின் எழுத்துக்கள் கேவலப்படுத்தியது புலிகளை மாத்திரமல்ல, ஒடுக்கப்பட்ட ஒரு சிறுபான்மை இன மக்களின் போராட்டத்தை. சுய தேவை வந்ததும் கலைஞரை நாடினார்.

ரசியாவே சொந்த மக்களை அடக்கு முறைக்குள் வைத்திருந்தது / வைத்திருக்கிறது. அவர்களிடமிருந்து விருது?

ஜெயகாந்தன் தமிழை கேவலபடுத்தி பேசி அதே நேரத்தில் சமஸ்கிருதத்தை உயர்த்தி பேசி ,,பிறகு மன்னிப்பு கேட்டது வேற விசயம் .அதே ஜெயகாந்தன் தமிழ் எழுத்து உலகில் செய்த புரட்சியை யாரும் மறுக்க முடியாது..

தமிழ் எழுத்துலகில் புரட்சி செய்ய பலபேர் இருக்கிறார்கள். இன்னும் வருவார்கள். அவரின் எழுத்துக்கள் மேட்டுக்குடியினரைத் திருப்ப்திபடுத்தலாம்.

கடைநிலை தொழிலாளி அவரின் எழுத்துகளைச் சாப்பிட்டு மாத்திரம் வாழ முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இவன் (இவர் என்று சொல்ல மனம் வருதில்லை) இந்திய வெறிப்படை இலங்கையில் அட்டூழியங்கள் செய்யும்போது பேசியவை மிகத் தரம் கெட்டவை. (நன்றி இசைக் கலைஞன்); புலிகளை அப்போதிலிருந்து விமர்சிக்கும் எனக்கே தாங்க முடிந்ததில்லை. ஒட்டுமொத்த ஈழத்தமிழரையும், தமிழரின் (புலிகளையும் சேர்த்துத்தான் சொல்லுகிறேன்) தியாகங்களையும் கொச்சைப்படுத்தியவன். தனிப்பட்ட முறையில் ஒரு கேவலங்கெட்ட பேர்வழி.

ஆனால் என்ன செய்வது? எழுத்தில் ஒரு ஜாம்பவான்தான். எல்லா எழுத்தாளர்களும் தனிப்பட்ட வாழ்க்கையில் தி.ஜானகிராமன், நா.பார்த்தசாரதி போலில்லாவிட்டாலும் ஒரு 'சாதாரணமான' நபராக இருந்தாலே போதும்.

ஓ... இப்படி ஒருவிடயம் நடந்திருக்கா? எனக்குத் தெரியாமல் போய்விட்டது.... யாராவது இந்த விடயம் நடந்த காலப்பகுதியையும் அந்நிகழ்வையும் பற்றிய விபரத்தை இங்கு பதிவு செய்யுங்கள்.

படைப்பிலக்கியத்தைப் பொருத்தவரை ஒரு காலத்தில் பிரமிப்பிற்குரியவர். அவருடைய அக்னிப் பிரவேசம் சிறுகதை 60களில் மிகப் பெரிய தாக்கத்தினை உருவாக்கியது.... அதுவே பின்னர் சில மாற்றங்கள் செய்யப்பட்டு மேலே நாகேஷ் இணைத்திருக்கும் திரைப்படமானது...

ஒரு இலக்கியராக மட்டுமே நான் எழுத்தாளரை அறிந்துள்ளேன் அதற்கு மேல் எனக்கு அவரின் சமூகம் சார்ந்த வாழ்வு பின்னணி எதுவும் தெரியாது... தெரிந்தவர்கள் யாராவது பதிந்தால்தான் அறியலாம்.

தமிழ் எழுத்துலகில் புரட்சி செய்ய பலபேர் இருக்கிறார்கள். இன்னும் வருவார்கள். அவரின் எழுத்துக்கள் மேட்டுக்குடியினரைத் திருப்ப்திபடுத்தலாம்.

கடைநிலை தொழிலாளி அவரின் எழுத்துகளைச் சாப்பிட்டு மாத்திரம் வாழ முடியாது.

தப்பிலி ,,,ஜெயகாந்தன் விகடனுக்கு விலை போன பின்னர் அவரின் உள்ளடக்கம் மாறியது ,,தாமரை சரஸ்வதி போன்ற சிறு பத்திரிகைகளில் எழுதிய காலத்தில் எழுதியவை இன்றும் இலக்கிய உலகில் விதந்துரைக்க படுகிறது. தமிழ் சிறுகதை வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக கருதப்படுகிறது....30 40 களில் எழுதிய புதுமைப்பித்தனுக்கு பிறகு ...அதன் அடியில் சிறுகதை நடையில் முதல் திருப்பத்தை ஏற்படுத்தியவர் என்பதில் யாருக்கும் ஜயமில்லை ..வருவார்கள் வந்து விட்டார்கள் என்பது அல்ல...அப்படி ஒரு திருப்பு முனை செய்தவர் என்பதை தான் சொல்ல வருவது ,,,, ...அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை அல்ல அவரது கருத்துகள் கொள்கையும் கூட தடம் புரண்டு விட்டன...பிற்காலத்தில்......

ஏழாம் வகுப்பே பள்ளி படிப்பை படித்த அவர்,,,விளிம்பு நிலை மக்களை பற்றிதான் அதிகம் அவர் படைப்புகளில் ஆரம்பத்தில் இருந்தன...விகடன் காலத்துக்கு பிறகுதான் ..அக்கிராகரத்தை சுற்றி அவரது கதைகள் அமைய தொடங்கின....

நாகேஷ்

தயவுசெய்து ஜெயகாந்தனை புதுமைப்பித்தனுடன் ஒப்பிடாதீர்கள். புதுமைப்பித்தன் தனியே இலக்கியம் படைத்தவர். அவரது வாழ்வில் அடிப்படை யோக்கியதை இருந்தது.

ஜெயகாந்தன் சிறுகதை நடையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்பதை மறுக்கவில்லை. அவரது எழுத்து நடையையும் குறை கூறவில்லை. வெறும் வாசிப்பென்றால் விரும்பத்தக்கதே.

விளிம்பு நிலை மனிதர்களுக்கு களிம்பு தடவுவதாகக் கூறிக் கொண்டே, தனி வாழ்க்கையில் அந்த விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்வில் ஏறி மிதித்தவர்.

விளிம்பு நிலை மனிதர்களுக்கு இலக்கிய வாசிப்புக்களை விட, விளிம்பு நிலையிலிருந்து விடுதலையே முக்கியம் என்பது எனது தனி அபிப்பிராயம்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஆசிரியர் அல்லது பாதிரியார் பாலியல் துஷ்பிரயோகம் செய்தால் அது ஒரு பாரதூரமான குற்றம். ஒரு மருத்துவர் மனிதக் கொலை செய்தால் அது பெரும் குற்றம். ஒரு மிருக வைத்தியர் மிருகவதை செய்தால் அது மாபாதகமான குற்றம். ஆனால் "இலக்கிய வாதி" என்று அழைக்கப் படும் எழுத்தாளர் ஒருவர் தனது எழுத்தை மட்டுமே செம்மையாக வைத்திருக்க வேண்டும்-தனது அரசியல், சமூகக் கொள்கைகளில் தனது வசதிக்கேற்ற நிலையை எடுக்கலாம் என வாதிடுகிறோம் எங்களில் சிலர். இலட்சக் கணக்கான ரஷ்யர்களை சைபிரியாவுக்கு அனுப்பிக் கொன்ற ஜோசப் ஸ்ராலினை ஒரு புரட்சியாளனாகப் பார்க்கும் ஜெயகாந்தனுக்கு விளிம்பு மனிதர்களைப் பற்றிப் பேச எப்படி அருகதை வந்தது? எல்லாம் அரசியல் வேற எழுத்துத் திறமை வேற என்று தத்துவம் பேசும் எங்கள் வெற்றுமண்டைகளின் விளைவு தான். இப்படிப் பல அரசியல், சமூக நேர்மையில்லாத எழுத்தாளர்களை நாங்கள் வளர்த்துக் கொண்டிருக்கிறோம் இப்ப. இருபது வருடங்களுக்குப் பிறகு இவை தான் தமிழ் இலக்கியத்தில பெரிய ஆட்கள்-இவை எழுதுவது தான் வரலாற்றின் பிரதிபலிப்பு. வளர்க வியாபாரத் "தமிழ் இலக்கியம்".

இதே ஆதங்கம் எனக்குள் நிறைஞ்சிருந்தது.

அதை இரண்டு பேர் தொடர்பில் இங்க முன் வைக்க.. அவர்களின் வாசகர்களோ.. கொய்யோ முறையோ என்று கெம்பி வந்துவிட்டார்கள். எழுத்தாளர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதை விட.. வாசகர்கள்.. எழுத்தாளர்களின் தவறுகளின் பால் தாங்களும் தவறானவர்கள் என்ற பார்வை வந்து விடக் கூடாதே என்பதில் கவனமாக இருந்து.. எழுத்தாளர்களின் படைப்புக்களை மட்டுமன்றி.. அவர்களின் திருகுதாளங்களில் இருந்தும் அவர்களை பாதுக்காக்க விளைகின்றனர். இதற்கு நல்லாவே வியாக்கியானம் பேசுகின்றனர். இதுவே.. இந்த வாசகர்களின் எழுத்தாளர் காப்புப் பணியின் நோக்கம். ஆனால் அதி விசுவாச வாசகர்களுக்கு வெளியே உள்ள சமூகம்.. இவர்களை நன்கே இனங்கண்டே வருகிறது. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.