Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவிடம் எண்ணெய் வள ஆய்வா? சிறிலங்கா மீது இந்தியா சீற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

china.jpg

மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் ஆராய்வுப் பணிகளில் ஈடுபடுவதற்கான அனுமதியை சீனாவிடமும் வழங்குவதற்கு இலங்கை அரசு கொள்கையளவில் தீர்மானமொன்றை எடுத்திருப்பதாக நம்பகரமாகத் தெரிய வருகிறது. அதேசமயம், இலங்கை அரசின் இந்தத் தீர்மானம் தொடர்பில் இந்தியாவும் உத்தியோகப்பற்றற்ற ரீதியில் ஆட்சேபனையை வெளியிட்டிருப்பதாக அறிய முடிகின்றது. மன்னார் கடற்படுக்கையில் எண்ணெய் ஆராய்வுப் பணிகளை ஏற்கனவே இந்திய நிறுவனமொன்று மேற்கொண்டு வருகின்றது. இந்தக் கடற்படுகையில் சுமார் எட்டு இடங்களில் எண்ணெய் வளம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் தற்போது ஆய்வை நடத்தும் இந்திய நிறுவனத்தைத் தவிர, ரஷ்ய நாட்டின் நிறுவனமொன்று ஆய்வுகளை நடத்தவும் சிறீலங்கா அரசு அனுமதிக்கவுள்ளது. இதற்கு மேலாக சீனாவின் முக்கியமான நிறுவனமொன்றும் ஆய்வு நடத்த அனுமதிகோரியிருப்பதால் அதற்கும் அனுமதி வழங்குவதற்கு இலங்கை அரசு கொள்கையளவில் இணக்கம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் கடற்படுகையில் சீனா எண்ணெய் ஆராய்வுப்பணிகளில் ஈடுபடுமாயின் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் பல்வேறு வகையிலான தாக்கங்களை உண்டுபண்ணுமெனக் கருதும் இந்தியா, இது தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

எவ்வாறாயினும் வடக்கில் எண்ணெய் ஆராய்வுப்பணிகளில் ஈடு படுவதற்கான அனுமதியை சீன நிறுவனத்திடம் கொள்கையளவில் வழங்குவதற்கு சிறீலங்கா அரசு எடுத்த முடிவில் மாற்றஞ்செய்யப்படமாட்டாதென மூத்த அமைச்சர் ஒருவர் நேற்றுமாலை தெரிவித்தார்.

http://www.eeladhesa...ndex.php?option

  • கருத்துக்கள உறவுகள்

இந்நிலையில், மன்னார் கடற்படுகையில் சீனா எண்ணெய் ஆராய்வுப்பணிகளில் ஈடுபடுமாயின் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் பல்வேறு வகையிலான தாக்கங்களை உண்டுபண்ணுமெனக் கருதும் இந்தியா, இது தொடர்பில் கடும் அதிருப்தியை வெளியிட்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

உங்களுக்கு இதுவும் வேணும் இன்னும் வேணும்

பங்குனி மாதத்தில் வரும் ஐ.நா. மனித உரிமைகள் தொடர் உட்பட்ட முக்கியமான இடங்களில் இந்தியா, 'சிங்களத்தை போட்டுக்குடுக்க வேண்டியது தான்' :D

[குட்டக்குட்ட குனிபவனும், குனியக்குனிய குட்டுபவனும் நீண்டநாள் ஓடமுடியாது]

  • கருத்துக்கள உறவுகள்

சீனனை மேலும் மேலும் ஆராய்ச்சிகளில் இறங்குமாறு நாம் கேட்டுக்கொள்ள வேணும்..! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீனாவையும் இந்தியாவையும் ஒப்பிடும் போது தமிழர்கள் விடயத்தில் இரு நாடுகளும் போட்டிபோட்டு துரோகம் இழைக்கின்றது எங்களை பொறுத்தவரையில் எவன் வந்தால் என்ன எவன் போனால் என்ன எல்லாமே ஒன்றுதான்

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே பற்றி எரிவதற்கு தொடர்ந்து பெற்றோல் ஊத்தும் வழியைக்கண்டுபிடியுங்களப்பா...

மன்னார் கடற்படுகையில் சீனா எண்ணெய் ஆராய்வுப்பணிகளில் ஈடுபடுமாயின் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் பல்வேறு வகையிலான தாக்கங்களை உண்டுபண்ணும்.

இந்தியா விடுதலைப் புலிகளை அழிக்கவேண்டுமென்ற வெறியில் பாக்குநிரிணைப் பகுதியில் தனக்கிருந்த விடுதலைப்புலிகளின் பாதுகாப்பைக் கவனிக்கவில்லை. தமிழரைப் படுகொலை செய்ததற்கான தண்டனையை இந்தியா அனுபவிக்கும். இது நியதி.

தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக விடும் விட்ட தவற்றை மீண்டும் மீண்டும் செய்யாமல் சீனாவுக்கு ஆதரவு தர வேண்டும்.

தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக விடும் விட்ட தவற்றை மீண்டும் மீண்டும் செய்யாமல் சீனாவுக்கு ஆதரவு தர வேண்டும்.

அண்மையில் கூட்டமைப்பினர் மேற்குலகத்திற்கு பிரயாணம் செய்தது போன்று இல்லை முன்னர் பல தடவைகள் டெல்லி சென்றது போன்று சீனாவுக்கு உத்தியோகபூர்வ பிரயாணத்தை மேற்கொள்ளும் காலம் இன்னும் கனியவில்லை.

அதேவேளை தமிழரசு கட்சி உறுப்பினர் ஒருவர் சீனா சென்றிருந்தார். அதுபோன்று தனிப்பட்ட சந்திப்புக்களை மேற்கொள்ளுதல், நாம் இருக்கும் நிலையில், நட்டத்தை தராது.

EDI400Pol-over.jpg

... நிச்சயம் சீனாவிற்கு ஆதரவளிக்க வேண்டும்???????

... முதலில் உலகத்தை ... இரண்டாவது ஆசியாவை ... மூன்றாவது சீனாவை ... நாலாவது இந்தியாவை ... ஐந்தாவதாக இலங்கையை ... கடைசியாக ஈழத்தை பார்த்தால் .... பூலோக அரசியலில் சீனாவை ஆதரிக்க சொல்லும்?????

... நேட்டோ லிபியாவிற்கு அடிக்க முன்னம் ஏறக்குறைய 65000 சீன மக்கள் அங்கிருந்திருக்கிறார்கள், சீனத்து மிகப்பெரிய யுத்தக்கப்பல் திரிபோலியில் நங்கூரமிட்டு இருந்ததாம்! அவைகள் மேற்கை நிறுத்த முடியவில்லை! ... சீனா ஒருவேளை உலக அரசியலில் இன்னொரு 25 வருடங்களுக்கு பின்னம், இம்மேற்கை போல் ஆதிக்கம் செலுத்தலாம்???? ... ஆனால் இப்போது அல்ல ..

  • கருத்துக்கள உறவுகள்

மாறிவரும் பூகோள அரசியலை எவ்வாறு தமிழினம் கையாண்டு தனது நலனை அடையப்போகிறது என்பதே இன்றைய வினாவாக உள்ளது. சூழலைக் கணித்து ஒரு நிரற்படுத்திய செயற்திட்டமொன்றை முன்வைத்து ஈழத் தமிழினத்தினது அரசியலை முன்கொண்டு செல்ல யாருமற்ற பெருவெளியாகவல்லவா இருக்கிறது. தாம் தாம் என்று கூறுவோரே, அறிக்கையிடுவோரே எப்போது துயில்கலைந்து எழும்புவீர்காள்!

வரவேண்டும் சீனா வரவேண்டும். சீனவரவால் மட்டும்தான் அது முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயம் சீனா தனது மௌனம் கலைக்கும் நேரம் நெருங்குகிறது என்றே சொல்லலாம்,ஏனெனில் ஐரோப்பாவில் நிகழும் பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமாகும் பட்சத்தில் அடுத்த ஆண்டு நடுப்பகுதி அளவில் அதன் பெறுபேறுகள் தெரியவரும் சீனாவின் பொருளாதாரத்தை அது மந்த நிலை படுத்தலாம் என பரவலாக எதிபார்க்கப்படுகிறது.

அதிலிருந்து தப்புவதற்கு சீனாவுக்கு ஒரே தெரிவுதான் உண்டு,சீனாவின் முன்னாள் வெலியுறவு அமைச்சர் சொன்னது போல் சீனா உலகத்தின் இராணுவ மேலாதிக்கத்தை பெறவேண்டும் என்றில்லை நிறை போட்டி சந்தையில் மற்றையவரை ஓரங்கட்டினாலே போதும்.

மேலைத்தேயத்தவரின் நோஸ்டடாமஸின் சீனாவினால் 2012 இல் உலகம் அழியும் என்ற நம்பிக்கை ஒரு விகிதமாக சரிவரும் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் வெளிநாட்டு அயலறுவுக்கு கிடைத்த பரிசு.

"அழுதும், அவனே... பிள்ளை பெற வேண்டும்."

1. சீனா சிங்களத்தின் பழைய நண்பன். புதிய காலத்திதில் உறவை சீனா பண்டாரயநாயக்கா நினைவு மண்டபத்திலிருந்து திரும்ப ஆரம்பித்தது. அதாவது இந்தியா கச்ச தீவை கொடுக்க முன் ஆரம்பித்து விட்டது.

2. சீனாவின் பொருளாதாரக் கொடுப்புகள் ஆயுத கொடுப்புகளை விடக்கூட. அதாவது சீனா இலங்கையுடன் நியாமான வியாபாரத்தில் இறங்கியிருக்கு.

3.புலிகளை அழிக்க வேண்டும் என்று ஆயுதம் கொடுத்த வரிசை இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல், பாகிஸ்த்தானுக்கு பிறகுதான் சீனா வரும். தடுக்க பட்ட ஆயுதம் கொடுத்தவர்கள் இந்தியாவும், பிருத்தானியாவும்.

4. சீனா இந்தியா மாதிரி இலங்கையில் ஒற்றை ஆட்தான் நிலவவேண்டும் என்று கருத்து கூறவரவில்லை. இலங்கைக்கான தீர்வு இலங்கையின் தீர்வாக இருக்கவேண்டும் என்று மட்டும் தான் கூறி வருகிறது.

5. சீனா இலங்கையில் இன்னொரு நாடு வரக்கூடாது என்று கூறுவதில்லை.

6. இந்தியா வியட்நாமில் எண்ணை தோண்டினால் ஏன் சீனா இலங்கையில் அது செய்ய கூடாது என்பதற்கு பதில் கிடையாது.

எனவே பொது வாதத்திற்கு ஏன் சீனா இலங்கையில் எண்ணை தோண்டகூடாதென்பது ஒரு சரியான கேள்வி.

ஆனால்

1. இலங்கைக்கும் இலங்கையோடு சேர்ந்து உழைக்கும் அரசியல் வாதிகளுக்கு வெளிப்படையாக லஞ்சப்பணம் கொடுத்து அவர்களை வாங்குவதால் இது தமிழருக்கு இடைஞ்சல்.

2.சீனா இலங்கையில் புகுந்தால் பிரதானமாக வடக்கைத்தான் ஆகிரமிக்க விரும்பும். அங்கேதான் அதன் தேவை இருக்கிறது.

3. சீனா விரைவாகவும் ஆழமாகவும் காலூண்றினால், மனம் மாறும் நேரம் அமெரிக்காவால் தமிழருக்கு ஒன்றும் செய்ய முடியாமல் போகலாம்.

4.சீனா தான் நியைபணம் ஈட்டுவதால் தனது நாட்டிலும், நட்பு நாடுகளிலும் விரயத்தனமான முதலீடுகளைச் செய்கிறது. இதனால் தற்போது தமிழர்களும் வீணே கடனாளிகளாகின்றனர்.

எனவே இபோதைக்கு சீனா இலங்கையில் அதிகம் முதலிடக்கூடாது என்பது தான் எனது விருப்பம்.

111201_naypyitaw_emptyst_2.photoblog600.jpg

பர்மாவில் இராணுவ அரசுடன் சேர்ந்து தலைநகர் ரங்கூனை விட்டு விட்டு வேறு நகரமொன்றில் சீனா தெரு அமைத்திருக்கும் விரயம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா சிறிலங்காவை நோக்கிச் சீற்றம்!

இந்தியாவுக்கும் சீறத் தெரியுமா?

அதுவும் சிங்களத்தைப் பார்த்து!

சளி பிடித்திருக்கலாம்!!!

இதில் சிறிலங்கா அரசாங்கம் இரண்டு தரப்புக்கும் ஆப்பு வைத்தது மறுக்கமுடியாத உண்மை இதில் இந்தியாவின் நிலை திருடனுக்கு தேள் கொட்டியது போன்றது

இந்த இடங்களில் தற்போது ஆய்வை நடத்தும் இந்திய நிறுவனத்தைத் தவிர, ரஷ்ய நாட்டின் நிறுவனமொன்று ஆய்வுகளை நடத்தவும் சிறீலங்கா அரசு அனுமதிக்கவுள்ளது. இதற்கு மேலாக சீனாவின் முக்கியமான நிறுவனமொன்றும் ஆய்வு நடத்த அனுமதிகோரியிருப்பதால் அதற்கும் அனுமதி வழங்குவதற்கு இலங்கை அரசு கொள்கையளவில் இணக்கம் வெளியிட்டுள்ளது

ஒரு எண்ணை வழத்தை காட்டி எத்தனை பேரிடம் உதவி பெறமுடியும் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.