Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எங்கள் துலா

Featured Replies

thula.jpg

எமது மண்ணின் பண்பாட்டுச்சின்னங்களில் ஒன்று துலா . இந்தத் துலா என்பது ஒரு நீளமானதும், நேரானதுமான , ஒரு மரத் தண்டு ஆகும். இந்த மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால் எனவும் அழைக்கப்படும். ஆடுகால்கள் முன்பு பூவரசங்கதியால்களாலும் , பின்பு சீமந்தினாலும் உருவாக்கப்பட்டது .

அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும். இதனால் அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் விடக் கூடிய நீளம் உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும், அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு ஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். துலாவின் இந்தமுனையைத் தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கயிற்றின் நீளம் இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும்.

நீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புகின்றோம். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம். இந்தத் துலா முறையானது அருகி சூத்திரக்கிணறு முறைக்கு மாறி , ( இது சம்பந்தமான போதிய விளக்கம் எனக்கு இல்லை யாரும் விளங்கப்படுத்தினால் நல்லது ) , கப்பி முறையாகி , இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் மோட்டர் பம்மில் வந்து நிற்கின்றது .

பதிவுக்கு நன்றி. ஆனால் துலாவைப் பார்க்க பயமாக இருக்கிறது. துலாவால விழுவான் என்று யாரோ திட்டின சத்தம் காதில திரும்பக் கேட்கிறறமாதிரி...

  • தொடங்கியவர்

பதிவுக்கு நன்றி. ஆனால் துலாவைப் பார்க்க பயமாக இருக்கிறது. துலாவால விழுவான் என்று யாரோ திட்டின சத்தம் காதில திரும்பக் கேட்கிறறமாதிரி...

மிக்க நன்றிகள் செம்பகன் உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . உண்மைதான் , முன்னை காலங்களில் தோட்டக்காறர்கள் துலாமிதித்து கிணற்றிலிருந்து தோட்டங்களுக்கு நீர்பாசனம் செய்வார்கள் . அதாவது , ஒருவர் துலாவால் தண்ணியை கிணற்றிலிருந்து தண்ணியை இறைக்க , இரண்டாமவர் ஆடுகாலால் மேலே ஏறி துலாவில் நின்று முன்னும் பின்னும் போய் வந்து தண்ணி இறைப்பவரின் விசையை இலகுபடுத்துவார் . அப்பொழுது உயரமான இடத்தில் இருந்து துலா மிதிப்பவர் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகும் சந்தர்பங்கள் அதிகம் உள்ளது . அதையே எமது பெரிசுகள் கோபத்தில் < துலாவால விழுவான் > என்று சொல்வார்கள் :):) :) .

  • கருத்துக்கள உறவுகள்

பழமையை நினைவூட்டும் வரலாற்று பதிவுக்கு நன்றி

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

கிராமங்களிலே வீட்டுக் கிணறுகளிலும் , வீதி ஓரங்களில் இருக்கும் பொதுக் கிணறுகளிலும் துலா இறைப்புத்தான்! நகரங்களில் ஒரு பரப்புக் காணிக்குள்ள வீடும்,கிணறும் இருப்பதால் துலாவும் ஆடுகாலும் போட இடம் இருக்காது. அதனால் காப்பியும் வாளியும்தான். துலாவுக்கும் கப்பிக்கும் முன்பு வாளிக்கு கயிறு பாவிப்பார்கள். பின்னாளில் அதுக்கும் பழைய லொறி டயரில் இருந்து கன் வாஸை கயிறுபோல் அழகாய் சீவி எடுத்து பாவித்தார்கள். தோட்டங்களிலும் இறைப்புக்கு வூல்சிலி , ஹோண்டா தண்ணிப் பம்புகள் பாவனைக்கு வந்து விட்டிருந்தன. நகரங்களில் கையளவு மின்சார மோட்டர்களும் தண்ணித் தாங்கிகளும் வந்து விட்டன!!!

  • கருத்துக்கள உறவுகள்

நிலாக்காலம்போல அவை யாழ்ப்பாணத்தின் அழகான துலாக்காலங்கள்...நன்றி கோமகன் நினைவு மீட்டலுக்கு...

  • தொடங்கியவர்

பழமையை நினைவூட்டும் வரலாற்று பதிவுக்கு நன்றி

மிக்க நன்றிகள் நிலாமதி அக்கா உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :) :) :) .

கிராமங்களிலே வீட்டுக் கிணறுகளிலும் , வீதி ஓரங்களில் இருக்கும் பொதுக் கிணறுகளிலும் துலா இறைப்புத்தான்! நகரங்களில் ஒரு பரப்புக் காணிக்குள்ள வீடும்,கிணறும் இருப்பதால் துலாவும் ஆடுகாலும் போட இடம் இருக்காது. அதனால் காப்பியும் வாளியும்தான். துலாவுக்கும் கப்பிக்கும் முன்பு வாளிக்கு கயிறு பாவிப்பார்கள். பின்னாளில் அதுக்கும் பழைய லொறி டயரில் இருந்து கன் வாஸை கயிறுபோல் அழகாய் சீவி எடுத்து பாவித்தார்கள். தோட்டங்களிலும் இறைப்புக்கு வூல்சிலி , ஹோண்டா தண்ணிப் பம்புகள் பாவனைக்கு வந்து விட்டிருந்தன. நகரங்களில் கையளவு மின்சார மோட்டர்களும் தண்ணித் தாங்கிகளும் வந்து விட்டன!!!

மிக்க நன்றிகள் சுவி உங்கள் மேலதிக தகவலுக்கு :):) :) .

நிலாக்காலம்போல அவை யாழ்ப்பாணத்தின் அழகான துலாக்காலங்கள்...நன்றி கோமகன் நினைவு மீட்டலுக்கு...

மிக்க நன்றிகள் சுபேஸ் உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :):) :) .

  • கருத்துக்கள உறவுகள்

இரு கிழமைகளுக்கு முன்பு எனது மேலாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது எமது ஊரின் துலா பற்றி விளக்கினேன்..! ஆளுக்கு வியப்பாக இருந்தது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கோ உங்கள் துலா பற்றிய பதிவு படித்தபொழுது நினைவிற்கு வந்தது ஒரு விடயம். இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது ஆசியாவில் பல இடங்களில் குறிப்பாக இங்கிலாந்தின் ஆழுமையின் கீழ் இருந்த நாடுகளின் மீது ஜப்பான் குண்டுகளை வீசியது. ஆனால் இலங்கையில் ஜப்பான் ஒரு குண்டைக்கூட வீசவில்லை யாம் எண்டு என்னுடைய அம்மம்மா சொன்னதோடு அதற்கு அவர் சொன்ன காரணம் எங்களுடைய துலா தானாம் காரணம். வானத்திலிருந்து பார்த்த ஜப்பானிய விமானிகளிற்கு துலாக்கள் நிமித்தி வைக்கப்பட்டிருந்த பீரங்கி போல தெரிந்திருந்தாம். குண்டு போட்டால் திருப்பி அடிச்சிடுவாங்கள் எண்ட பயத்திலைதான் இலங்கையில் குண்டு போடவில்லையாம். :lol: :lol:

எங்கள் துலா என்று தலையங்கத்தை பார்த்து பயந்தேவிட்டேன்.

எங்கள் வீட்டில் கடைசிவரை துலாதான் இருந்தது.இந்தமனுசன் (அப்பா ) செய்யாத வேலை எல்லாம் செய்தவர் கடைசிவரை வீட்டிற்கு ஒரு மோட்டர் போடவில்லை). ஒருமுறை அச்சுலக்கை முறிந்து துலா விழுந்தது நல்லவேளை யாரும் மண்டையை போடவில்லை.

எமது தோட்டத்தில் ஆரம்பத்தில் சூத்திர கிணறு இருந்த அடையாளமாக இரு இரும்பு குழாய்கள் கழட்டாமல் பல வருடங்களாக இருந்தது.

சூத்திர கிணறு.மாடுகள் இரண்டு பெரிய இரும்பு குழாயை இழுத்து ஒரு வளையமாக சுற்றிவரும் .அந்த பொறிமுறையில் சங்கிலியால் இணைக்கப்பட்ட இரு பெரும் வாளிகளினால் தண்ணீர் மாறி மாறி வந்து வாய்க்காலில் கொட்டிவிட்டு போகும். பார்க்க மிக வடிவாக இருக்கும் ஆனால் பாவம் மாடுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

மண்ணெண்ணை தட்டுப்பாட்டு நேரம் பல விவசாயிகள் துலா & பட்டை பாவித்துதான் விவசாயம் செய்தவர்கள், நாங்கள் இரண்டு வயல் கிணற்றுக்கு துலா போட்டு பட்டையால் இறைத்தனாங்கள், துலா மிதிக்கிறதே ஒரு தனி சுகம்ந ஐயா கத்துவார் டேய் மெல்ல மிதியடா என்று

நன்றி கோமகன் இணைப்பிற்கு

  • கருத்துக்கள உறவுகள்

துலா

250px-Thula_and_Well.JPG

magnify-clip.png
கல்லால் கட்டப்பட்ட ஆடுகாலின்மீது தாங்கப்பட்டுள்ள பனை மரத்தாலான துலா.

துலா என்பது, கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும். இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இதையொத்த அமைப்புகள் காணப்படுகின்றன. அதிக ஆழமில்லாத கிணறுகளில் இருந்து நீரை எடுப்பதற்கே துலா சிறப்பாகப் பயன்படும்.

[தொகு]அமைப்பு

இது, ஒரு நீளமானதும், நேரானதுமான ஒரு மரத் தண்டு ஆகும். இம் மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால் எனவும் அழைக்கப்படும்.

அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும். இதனால் அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் கூடிய நீளம் உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும், அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு ஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். துலாவின் இந்தமுனையைத் தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கயிற்றின் நீளம் இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும்.

நீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE

  • தொடங்கியவர்

இரு கிழமைகளுக்கு முன்பு எனது மேலாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது எமது ஊரின் துலா பற்றி விளக்கினேன்..! ஆளுக்கு வியப்பாக இருந்தது..! :lol:

மிக்க நன்றிகள் டங்கு உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு :) :) :) .

  • தொடங்கியவர்

கோ உங்கள் துலா பற்றிய பதிவு படித்தபொழுது நினைவிற்கு வந்தது ஒரு விடயம். இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது ஆசியாவில் பல இடங்களில் குறிப்பாக இங்கிலாந்தின் ஆழுமையின் கீழ் இருந்த நாடுகளின் மீது ஜப்பான் குண்டுகளை வீசியது. ஆனால் இலங்கையில் ஜப்பான் ஒரு குண்டைக்கூட வீசவில்லை யாம் எண்டு என்னுடைய அம்மம்மா சொன்னதோடு அதற்கு அவர் சொன்ன காரணம் எங்களுடைய துலா தானாம் காரணம். வானத்திலிருந்து பார்த்த ஜப்பானிய விமானிகளிற்கு துலாக்கள் நிமித்தி வைக்கப்பட்டிருந்த பீரங்கி போல தெரிந்திருந்தாம். குண்டு போட்டால் திருப்பி அடிச்சிடுவாங்கள் எண்ட பயத்திலைதான் இலங்கையில் குண்டு போடவில்லையாம். :lol: :lol:

மிக்க நன்றிகள் சாத்திரி .எங்கடை துலாக்கள் அப்ப இப்பிடி பட்டையைக் கிளப்பீச்சுதா :D:D:D ??????

  • தொடங்கியவர்

எங்கள் துலா என்று தலையங்கத்தை பார்த்து பயந்தேவிட்டேன்.

எங்கள் வீட்டில் கடைசிவரை துலாதான் இருந்தது.இந்தமனுசன் (அப்பா ) செய்யாத வேலை எல்லாம் செய்தவர் கடைசிவரை வீட்டிற்கு ஒரு மோட்டர் போடவில்லை). ஒருமுறை அச்சுலக்கை முறிந்து துலா விழுந்தது நல்லவேளை யாரும் மண்டையை போடவில்லை.

எமது தோட்டத்தில் ஆரம்பத்தில் சூத்திர கிணறு இருந்த அடையாளமாக இரு இரும்பு குழாய்கள் கழட்டாமல் பல வருடங்களாக இருந்தது.

சூத்திர கிணறு.மாடுகள் இரண்டு பெரிய இரும்பு குழாயை இழுத்து ஒரு வளையமாக சுற்றிவரும் .அந்த பொறிமுறையில் சங்கிலியால் இணைக்கப்பட்ட இரு பெரும் வாளிகளினால் தண்ணீர் மாறி மாறி வந்து வாய்க்காலில் கொட்டிவிட்டு போகும். பார்க்க மிக வடிவாக இருக்கும் ஆனால் பாவம் மாடுகள்.

மிக்க நன்றிகள் அர்ஜூன் , உங்கள் மேலதிகதகவல்களுக்கு . சூத்திரக்கிணறை நான் சிறுவயதில் கோண்டாவிலில் தான் அப்பாச்சி வீட்டில் பார்த்தேன் . உங்களுக்கு இது பற்றிய மேலதிக தகவல்கள் தெரியுமா ? இணைத்தால் நன்றியுடையவனாக இருப்பேன் :) :) :) .

  • தொடங்கியவர்

மண்ணெண்ணை தட்டுப்பாட்டு நேரம் பல விவசாயிகள் துலா & பட்டை பாவித்துதான் விவசாயம் செய்தவர்கள், நாங்கள் இரண்டு வயல் கிணற்றுக்கு துலா போட்டு பட்டையால் இறைத்தனாங்கள், துலா மிதிக்கிறதே ஒரு தனி சுகம்ந ஐயா கத்துவார் டேய் மெல்ல மிதியடா என்று

நன்றி கோமகன் இணைப்பிற்கு

மிக்க நன்றிகள் உடையார் உங்கள் மேலதிக தகவல்களுக்கு . அந்தக்காலங்களில் பல இளையோர்கள் காலையில் துலா மிதித்து , தோட்டத்திற்கு உதவிசெய்து படித்து இன்று பல பெரிய பதவிகளை அலங்கரிக்கின்றார்கள் :) :) :) .

துலா

250px-Thula_and_Well.JPG

magnify-clip.pngகல்லால் கட்டப்பட்ட ஆடுகாலின்மீது தாங்கப்பட்டுள்ள பனை மரத்தாலான துலா.

துலா என்பது, கிணற்றில் இருந்து நீரை எடுப்பதற்குப் பயன்படும் நெம்புகோல் வகையைச் சார்ந்த ஒரு பொறி முறை ஆகும். இந்தியா, இலங்கை உட்பட உலகின் பல பகுதிகளில் இதையொத்த அமைப்புகள் காணப்படுகின்றன. அதிக ஆழமில்லாத கிணறுகளில் இருந்து நீரை எடுப்பதற்கே துலா சிறப்பாகப் பயன்படும்.

[தொகு]அமைப்பு

இது, ஒரு நீளமானதும், நேரானதுமான ஒரு மரத் தண்டு ஆகும். இம் மரத்துக்குக் குறுக்கே, அதனூடு இன்னொரு தண்டு செலுத்தப்பட்டு இருக்கும். இத்தண்டின் இரு முனைகளும் கட்டற்ற வகையில் சுழலக்கூடியவாறு தாங்கப்பட்டும். இத்தண்டு அச்சாகச் செயற்பட, முதலில் குறிப்பிட்ட நீளமான மரம் அந்த அச்சைப் பற்றி மேலும் கீழுமாக அசையக் கூடியதாக இருக்கும். அச்சாகச் செயற்படும் தண்டு அச்சுலக்கை எனவும் அச்சின் இரு முனைகளையும் தாங்குவதற்காகக் உருவாக்கப்படும் அமைப்பு ஆடுகால் எனவும் அழைக்கப்படும்.

அச்சுலக்கை துலாவின் நடுப்பகுதியிலன்றி, நடுவிலிருந்து சற்றுத் தள்ளியே பொருத்தப்படும். இதனால் அச்சுலக்கையில் இருந்து துலாவின் ஒரு பகுதி மற்றப்பகுதியிலும் கூடிய நீளம் உள்ளதாக இருக்கும். நீளமான பகுதி கிணற்றை நோக்கி இருக்கும்படியும், அந்தப் பக்கத்து முனை கிணற்றுக்கு நேராக வரக்கூடியதாகவும் துலா ஆடுகாலில் மீது தாங்கப்படும். கிணற்றுக்கு நேராக இருக்கும் துலாவின் முனையில் நீளமான கயிறு ஒன்றின் ஒரு முனையைக் கட்டி மறு முனையில் ஒரு பாத்திரம் கட்டப்பட்டும். துலாவின் இந்தமுனையைத் தாழக் கொண்டுவரும்போது பாத்திரம் கிணற்று நீருள் அமிழக்கூடியதாகக் கயிற்றின் நீளம் இருக்கவேண்டும். பயன்படுத்தாதபோது துலாவின் கயிறு பொருத்திய முனை மேல் நோக்கி இருப்பதற்கு ஏதுவாகத் துலாவின் மறு முனையில் பாரமான கல் அல்லது இரும்புத் துண்டுகள் மூலம் சுமை ஏற்றப்பட்டிருக்கும்.

நீர் எடுப்பதற்கு கயிற்றை இழுத்து அதன் முனையில் இருக்கும் பாத்திரத்தை நீருக்குள் அமிழ்த்தி அதனுள் நீரை நிரப்புவர். துலாவின் மறுமுனையில் சுமை இருப்பதால் குறைந்த விசையைப் பயன்படுத்திக் கயிற்றை மேலே இழுத்து நீர் நிரம்பிய பாத்திரத்தை மேலே கொண்டுவரலாம்.

http://ta.wikipedia....%AE%B2%E0%AE%BE

மிக்க நன்றிகள் நுணாவிலான் உங்கள் மேலதிக தகவல்களுக்கு :) :) :) .

கோ உங்கள் துலா பற்றிய பதிவு படித்தபொழுது நினைவிற்கு வந்தது ஒரு விடயம். இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது ஆசியாவில் பல இடங்களில் குறிப்பாக இங்கிலாந்தின் ஆழுமையின் கீழ் இருந்த நாடுகளின் மீது ஜப்பான் குண்டுகளை வீசியது. ஆனால் இலங்கையில் ஜப்பான் ஒரு குண்டைக்கூட வீசவில்லை யாம் எண்டு என்னுடைய அம்மம்மா சொன்னதோடு அதற்கு அவர் சொன்ன காரணம் எங்களுடைய துலா தானாம் காரணம். வானத்திலிருந்து பார்த்த ஜப்பானிய விமானிகளிற்கு துலாக்கள் நிமித்தி வைக்கப்பட்டிருந்த பீரங்கி போல தெரிந்திருந்தாம். குண்டு போட்டால் திருப்பி அடிச்சிடுவாங்கள் எண்ட பயத்திலைதான் இலங்கையில் குண்டு போடவில்லையாம். :lol: :lol:

:icon_idea: துலாவில் ஆரும் தண்ணீ அள்ளீய நேரமாய் பாத்து கீழ பார்த யப்பான்காரனுக்கு மூத்திரம் மூத்திரமாய் கொட்டி இருக்கும்
  • கருத்துக்கள உறவுகள்

எமது பண்டையர்களிடம் நல்ல அறிவியல் சார்ந்த கண்டிபிடிப்புக்கான திறன் இருந்துள்ளது. துலா மிக இலகுவாக அமைக்கக் கூடிய ஒரு பொறி. இதில் உள்ள விசேடம் என்னவென்றால்.. அதனை ஆக்கியுள்ள கூறுகள் அனைத்தும் இயற்கையில் மீளக் கூடிய கூறுகளைக் கொண்டவை. அந்தக் காலத்தில மாட்டு வண்டி ஓடினவன.. பார்த்து நக்கல் அடிச்சம். ஆனால்.. அதனால் இயற்கைக்கு எந்தப் பெரிய பாதிப்பும் வரல்ல. காரைக் கண்டிபிடிச்சாங்க.. காபன் அளவை வளிமண்டலத்தில கூட்டினாங்க.. ஐயோ பூமி சூடாயிட்டு என்று இப்ப அழுகிறாங்க..! எனி சூடான பூமியை குளிர வைக்க... அதுக்கு நாலு கண்டுபிடிப்பு அவசியமாவதோடு... பெற்ற வசதிகளை விட்டுப் போக முடியாததால.. இன்னும் புதிய வடிவமைப்புக்களை செய்ய வேண்டி இருக்குது. அது ஒரு வகையில் அறிவியலுக்குள் தேடலை அதிகரிக்குது... அதை விட வேற நன்மை என்று பார்த்தால்.. ஒன்றுமில்ல..!

எங்கட பிரச்சனை என்னென்றால்.. ஒரு கண்டுபிடிப்பை முன்னேற்றாத படிப்பாளிகள் வந்து தொலையுறதுதான். எம் முன்னோர்கள் கண்டுபிடிச்சதை வைச்சு பாவிச்சு பெரிய படிப்பு படிச்சவை எல்லாம்.. அந்தப் பொறிகளின் தரத்தை வடிவமைப்பை முன்னேற்றிக் கொண்டு வர முயலல்ல. இதுதான் எம்மவர்களிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடு. படிச்சதும்.. தலைக்கனம் வந்திடும்.. வேறு அந்நிய மோகம் தலைக்கேறிடும்.. அப்புறம் என்ன.. எமது பாரம்பரியங்கள் அப்படியே கைவிடப்பட்டிடும். ஆனால் வெள்ளையர்கள்.. ஜப்பானியர்கள்.. ஏன் இன்று சீனர்கள் அப்படியல்ல. அவர்கள் தங்கள் படிப்பை தங்கள் பாரம்பரியத்தின் தரத்தை திறனை உயர்த்த பயன்படுத்தி வருவதால் எல்லா வழிகளிலும் முன்னேறி வருகின்றனர். நாங்களோ படிச்சும் அடுத்தவனுக்கு கூலிக்கு மூளையை விற்கும் முட்டாள்களாக.. அவன் காட்டும் சொற்ப வசதிகளுக்காக ஏங்கி வாழ்கிறோம். இதுவே நாம் தோல்வியடையவும்.. அங்கலாய்க்கவும்.. எம் படிப்பு எமக்கே உதவாமல் போகவும் காரணமாகியுள்ளது.

படிப்பு.. பதவிக்கு.. பெருமைக்கு..கலியாணம் முடிக்க அல்ல. அறிவைப் பயன்படுத்த.. பகிர ஆகும்..! இந்தச் சிந்தனை நம்மவரில் பலருக்கு கிடையா..! குறிப்பா.. கலியாணம் முடிக்க ஒரு படிப்பும் அவசியமில்ல. எம்மவரில் பலர் பெட்டைக்காக அவளை அடையனும் என்று மட்டும் படிச்சதை கண்டிருக்கிறன். இப்படியான சிந்தனையுள்ள ஒரு சமூகம் மிருகத்திலும் கேடு..! அவர்களை இன்று நினைத்துப் பார்கின்ற போது.. காறி உமிழனும் போலவே இருக்குது.

நாங்க எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால பாவிச்ச துலோவின் அதே அடிப்படை பொறிமுறையை முன்னேற்றி.. இன்று பல அடுக்கு மாடிகள்.. மற்றும் பாரிய பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாங்களோ.. இப்பவும்.. அதே கிணறு.. தண்ணி தான். எமது படிப்பாளிகளோ..crane க்குள் என்ன இருக்கென்று படிக்கினம்.. அடுத்தவனுக்காக உழைக்கினம்..! :):icon_idea:

crane.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பு.. பதவிக்கு.. பெருமைக்கு..கலியாணம் முடிக்க அல்ல. அறிவைப் பயன்படுத்த.. பகிர ஆகும்..! இந்தச் சிந்தனை நம்மவரில் பலருக்கு கிடையா..! குறிப்பா.. கலியாணம் முடிக்க ஒரு படிப்பும் அவசியமில்ல. எம்மவரில் பலர் பெட்டைக்காக அவளை அடையனும் என்று மட்டும் படிச்சதை கண்டிருக்கிறன். இப்படியான சிந்தனையுள்ள ஒரு சமூகம் மிருகத்திலும் கேடு..! அவர்களை இன்று நினைத்துப் பார்கின்ற போது.. காறி உமிழனும் போலவே இருக்குது. :):icon_idea:

நெடுக்கால போவானுக்கு ஒரு பச்சை...இஞ்சினியருக்குத்தான் மேளைக் கட்டிக்குடுப்பன் எண்டு அப்பன்காறன் ஒத்தைக்காலில நிக்க வடிவான மச்சாள் கைநழுவிப்போகப்போறாளே எண்ட பயத்தில வில்லங்கத்துக்கு தனக்கு விளங்காத கணக்குப் பாடத்தை எடுத்து பல்கலைக்கழகத்துக்கு புள்ளிகள் காணாமல் போக வீட்டிலை சண்டை பிடிச்சு இந்தியா போய் எஞ்சினியரிங் படிச்சிட்டு வந்து ஊரிலை தம்பட்டம் அடிச்சுக் கலியாணம் கட்டினவையளையும் பாத்திருக்கிறன்...உந்தப் படிப்பெல்லாம் ஆருக்குப் பிரயோசனப்படும்..? தாங்கள்தாங்கள் பிள்ளைப்பெத்து இனவிருத்தி செய்யத்தான் பிரயோசனப்படும்... :lol: இதில பகிடி என்னெண்டா எஞ்சினியருக்குத்தான் மகளைக் கட்டிக்குடுப்பன் எண்டு ஒத்தைக்காலில நிண்டவர் கட்டினதும் மச்சாள்க்காறியைத்தான்.. உந்தக்கேள்வியை அவற்ரை மனிசிக்காறி கேட்டிருந்தா அவருக்கும் அவவுக்கும் கலியாணம் நடந்திருக்காது... :o

Edited by சுபேஸ்

நல்லதொரு பதிவு கோமகன். ஊரில் எங்கள் வீட்டிலும் துலா இருந்தது. ஆனால் அப்பா அதை அகற்றி பின் கப்பி போட்டு விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் கண்டு பிடித்த பொறியியல் முறையில், துலாவுக்கு இணையாக எதுவுமே... இல்லை.

நான் சில வருடங்களுக்கு முன், ஊருக்குச் சென்ற போது... அந்தக் கிணத்தடியில் நின்று துலாவில் அள்ளி, அள்ளிக் குளித்தேன்.

இப்போ... அதனை யாரும் பாவிப்பதில்லை என்பதால்... கிறீச், கிறீச் என்று... முறிந்து, தலையில் விழுந்து விடுமோ... என்று, பயமாகவும் இருந்தது. ஆனாலும்... ஆசை விடவில்லை.

நல்ல, ஞாபகமூட்டலுக்கு நன்றி கோமகன். :)

  • தொடங்கியவர்

:icon_idea: துலாவில் ஆரும் தண்ணீ அள்ளீய நேரமாய் பாத்து கீழ பார்த யப்பான்காரனுக்கு மூத்திரம் மூத்திரமாய் கொட்டி இருக்கும்

மிக்க நன்றிகள் குண்டன் உங்கள் கருத்துப்பகிர்வுக்கு :):):) .

  • தொடங்கியவர்

எமது பண்டையர்களிடம் நல்ல அறிவியல் சார்ந்த கண்டிபிடிப்புக்கான திறன் இருந்துள்ளது. துலா மிக இலகுவாக அமைக்கக் கூடிய ஒரு பொறி. இதில் உள்ள விசேடம் என்னவென்றால்.. அதனை ஆக்கியுள்ள கூறுகள் அனைத்தும் இயற்கையில் மீளக் கூடிய கூறுகளைக் கொண்டவை. அந்தக் காலத்தில மாட்டு வண்டி ஓடினவன.. பார்த்து நக்கல் அடிச்சம். ஆனால்.. அதனால் இயற்கைக்கு எந்தப் பெரிய பாதிப்பும் வரல்ல. காரைக் கண்டிபிடிச்சாங்க.. காபன் அளவை வளிமண்டலத்தில கூட்டினாங்க.. ஐயோ பூமி சூடாயிட்டு என்று இப்ப அழுகிறாங்க..! எனி சூடான பூமியை குளிர வைக்க... அதுக்கு நாலு கண்டுபிடிப்பு அவசியமாவதோடு... பெற்ற வசதிகளை விட்டுப் போக முடியாததால.. இன்னும் புதிய வடிவமைப்புக்களை செய்ய வேண்டி இருக்குது. அது ஒரு வகையில் அறிவியலுக்குள் தேடலை அதிகரிக்குது... அதை விட வேற நன்மை என்று பார்த்தால்.. ஒன்றுமில்ல..!

< எங்கட பிரச்சனை என்னென்றால்.. ஒரு கண்டுபிடிப்பை முன்னேற்றாத படிப்பாளிகள் வந்து தொலையுறதுதான். எம் முன்னோர்கள் கண்டுபிடிச்சதை வைச்சு பாவிச்சு பெரிய படிப்பு படிச்சவை எல்லாம்.. அந்தப் பொறிகளின் தரத்தை வடிவமைப்பை முன்னேற்றிக் கொண்டு வர முயலல்ல. இதுதான் எம்மவர்களிடம் உள்ள மிகப் பெரிய குறைபாடு. படிச்சதும்.. தலைக்கனம் வந்திடும்.. வேறு அந்நிய மோகம் தலைக்கேறிடும்.. அப்புறம் என்ன.. எமது பாரம்பரியங்கள் அப்படியே கைவிடப்பட்டிடும். ஆனால் வெள்ளையர்கள்.. ஜப்பானியர்கள்.. ஏன் இன்று சீனர்கள் அப்படியல்ல. அவர்கள் தங்கள் படிப்பை தங்கள் பாரம்பரியத்தின் தரத்தை திறனை உயர்த்த பயன்படுத்தி வருவதால் எல்லா வழிகளிலும் முன்னேறி வருகின்றனர். நாங்களோ படிச்சும் அடுத்தவனுக்கு கூலிக்கு மூளையை விற்கும் முட்டாள்களாக.. அவன் காட்டும் சொற்ப வசதிகளுக்காக ஏங்கி வாழ்கிறோம். இதுவே நாம் தோல்வியடையவும்.. அங்கலாய்க்கவும்.. எம் படிப்பு எமக்கே உதவாமல் போகவும் காரணமாகியுள்ளது >.

படிப்பு.. பதவிக்கு.. பெருமைக்கு..கலியாணம் முடிக்க அல்ல. அறிவைப் பயன்படுத்த.. பகிர ஆகும்..! இந்தச் சிந்தனை நம்மவரில் பலருக்கு கிடையா..! குறிப்பா.. கலியாணம் முடிக்க ஒரு படிப்பும் அவசியமில்ல. எம்மவரில் பலர் பெட்டைக்காக அவளை அடையனும் என்று மட்டும் படிச்சதை கண்டிருக்கிறன். இப்படியான சிந்தனையுள்ள ஒரு சமூகம் மிருகத்திலும் கேடு..! அவர்களை இன்று நினைத்துப் பார்கின்ற போது.. காறி உமிழனும் போலவே இருக்குது.

நாங்க எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால பாவிச்ச துலோவின் அதே அடிப்படை பொறிமுறையை முன்னேற்றி.. இன்று பல அடுக்கு மாடிகள்.. மற்றும் பாரிய பொறிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் நாங்களோ.. இப்பவும்.. அதே கிணறு.. தண்ணி தான். எமது படிப்பாளிகளோ..crane க்குள் என்ன இருக்கென்று படிக்கினம்.. அடுத்தவனுக்காக உழைக்கினம்..! :):icon_idea:

crane.jpg

மிக்க நன்றிகள் நெடுக்கர் , உங்கள் கருத்துப்பகிர்வுகளுக்கு . அத்துடன் நான் நினைத்த , வெளிக்கொண்டுவர முடியாத பார்வையை , நீங்கள் உறைக்கச் சொன்னதிற்கும் நான் உங்களுக்குக் கடமைப்பட்டவன் . மேலும் , சிறிய அளவில் இருக்கும் அறிவை < ஞானச்செருக்கு > என்ற நிலைக்கு உயர்த்தும் உளப்பாங்கு (Abtitude) எம்மவரிடையே மாறதவரைக்கும் மாற்றம் எமக்கு எட்டாக்கனியே :):):) !!!!!!!!

நெடுக்கால போவானுக்கு ஒரு பச்சை...இஞ்சினியருக்குத்தான் மேளைக் கட்டிக்குடுப்பன் எண்டு அப்பன்காறன் ஒத்தைக்காலில நிக்க வடிவான மச்சாள் கைநழுவிப்போகப்போறாளே எண்ட பயத்தில வில்லங்கத்துக்கு தனக்கு விளங்காத கணக்குப் பாடத்தை எடுத்து பல்கலைக்கழகத்துக்கு புள்ளிகள் காணாமல் போக வீட்டிலை சண்டை பிடிச்சு இந்தியா போய் எஞ்சினியரிங் படிச்சிட்டு வந்து ஊரிலை தம்பட்டம் அடிச்சுக் கலியாணம் கட்டினவையளையும் பாத்திருக்கிறன்...உந்தப் படிப்பெல்லாம் ஆருக்குப் பிரயோசனப்படும்..? தாங்கள்தாங்கள் பிள்ளைப்பெத்து இனவிருத்தி செய்யத்தான் பிரயோசனப்படும்... இதில பகிடி என்னெண்டா எஞ்சினியருக்குத்தான் மகளைக் கட்டிக்குடுப்பன் எண்டு ஒத்தைக்காலில நிண்டவர் கட்டினதும் மச்சாள்க்காறியைத்தான்.. உந்தக்கேள்வியை அவற்ரை மனிசிக்காறி கேட்டிருந்தா அவருக்கும் அவவுக்கும் கலியாணம் நடந்திருக்காது...

மிக்க நன்றிகள் . துலாமிதிக்கேக்கை எட்டிப்பாத்தும் கட்டியிருக்கிறாங்கள் சுபேஸ் :lol::lol::D .

நல்லதொரு பதிவு கோமகன். ஊரில் எங்கள் வீட்டிலும் துலா இருந்தது. ஆனால் அப்பா அதை அகற்றி பின் கப்பி போட்டு விட்டார்.

மிக்க நன்றிகள் நிழல் உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு :) .

தமிழர் கண்டு பிடித்த பொறியியல் முறையில், துலாவுக்கு இணையாக எதுவுமே... இல்லை.

நான் சில வருடங்களுக்கு முன், ஊருக்குச் சென்ற போது... அந்தக் கிணத்தடியில் நின்று துலாவில் அள்ளி, அள்ளிக் குளித்தேன்.

இப்போ... அதனை யாரும் பாவிப்பதில்லை என்பதால்... கிறீச், கிறீச் என்று... முறிந்து, தலையில் விழுந்து விடுமோ... என்று, பயமாகவும் இருந்தது. ஆனாலும்... ஆசை விடவில்லை.

நல்ல, ஞாபகமூட்டலுக்கு நன்றி கோமகன்.

மிக்க நன்றிகள் சிறியர் , உங்கள் கருத்துப் பகிர்வுகளுக்கு . நீங்கள் குடுத்துவைச்சனிங்கள் துலாவாலை குளிச்சியள் . ஆனால் நான் உளண்டியாலை தான் குளிப்பு :( .

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் ஊரில் ஒருவர் வருடாவருடம் கோவில்

திருவிழாக்களின் போது காவடி எடுப்பவர்.

ஒருமுறை ஏதோ காரணத்தால் பறவைக் காவடி எடுக்க

வெளிக்கிட்டுப் பக்கத்து வீட்டுத் துலாவை யாருக்கும்

தெரியாமல் கழட்டிக் கொண்டு சென்றுவிட்டார் .:lol:

துலா என்றவுடன் எனக்கு இந்த நிகழ்வு தான் நினைவில் வரும்

நன்றி கோமகன்

துலாவிலும் இரண்டுவிதமானவை இருக்கு .

சிறிதாக ஒரு துண்டில் அடியில் மொத்தமாகவும் பின் அரைவாசிக்கு பின் மெல்லியதாக வளைந்தும் வரும் .

மற்றது இரண்டு சரிபாதி துண்டுகளை அழாகாக மிக நேர்த்தியாக இடையில் ஓட்டைகள் எல்லாம் போட்டு ஒருவித குச்சால் பொருத்தியிருப்பார்கள்.இது மிக பெரியது.

துலாவில் பிடிக்காத விடயம் எதிர்பாரமால் கையில் "சிராய்" ஏறிவிடும்.அதை எடுக்க பின் படாத பாடு படவேண்டும்.பேய் நோ நோகும் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.