Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

Featured Replies

சாந்தனை தேசத்துரோகியாக்கிய ஈழ மக்கள்

date.png 20:13 user.png ♔ம.தி.சுதா♔ comments.png28 comments

singer+santhan.jpg

அரிய பல கண்டு பிடிப்புக்களைச் செய்த மனிதன் தான் அழியாமல் தப்பும் கருவியையும் கண்டு பிடித்து விடுவான் என்ற பயத்தில் தான் கடவுள் அவனுக்கு நாக்கைப் படைத்துள்ளார்.

அதற்கு எலும்பில்லை என்ற காரணத்தால் தான் மனிதன் தன்பாட்டுக்கு வாய்க்கு வந்ததை பேசுகிறான்.

ஈழத்திற்கு அரிய பொக்கிசங்களாக பல கலைஞர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் தான் இப்போது எம்மோடு உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் பலர் இலை மறை காய்களாகவும் இருக்கின்றார்கள். ஆனால் கலைஞர்கள் என்ற வரையறைக்குள் நாம் வைத்திருக்கும் அவர்களை எந்தளவு நாம் அங்கீகரித்துள்ளோம் என்பதை எம்மாலேயே கூற முடிவதில்லை.

ஈழத்தின் தலைசிறந்த பாடகரான சாந்தனின் கணீர் என்ற குரலை கேட்காத யாருமே இருக்க முடியாது. எந்த உணர்வானாலும் குறிப்பாக பக்தியாகட்டும் அல்லது சோகமாகட்டும் அப்படியே குரலலேயே உணர்வை அள்ளித் தெளிக்கும் அற்புதக் கலைஞன். அவரின் “பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்“ பாடல் ஒலிக்காத ஈழத்து ஆலயங்களே இருக்க முடியாது.

இக்கலைஞனின் கலைப்பயணம் 1972 ம் ஆண்டு கொழும்பு கதிரேசன் வீதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. அதன் பின் 1977 கிளிநொச்சிக்கு குடிபெயர்ந்த பின்னர் 1981 ல் கண்ணன் கோஸ்டியுடன் (கண்ணன் இசைக்குழு)இணைந்து பாட ஆரம்பித்தார். அந்த இசைக்குழுவானது 1982 ல் கலைக்கப்பட்டதையடுத்து தனது பெயரிலேயே சாந்தன் கோஷ்டி (சாந்தன் இசைக்குழு) என்ற பெயரில் ஆரம்பித்திருந்தார்.

நாடகத்துறையில் சிறந்தவரான இக்கலைஞனை பலர் மறந்திருந்தாலும் அவர் நடித்த அரிச்சந்திர மயானகாண்டத்தை யாருமே மறந்திருக்கமாட்டீர்கள்.

santhan+singer+of+eelam.jpg

இந்தக் கலைஞனுக்கு என்ன நடந்தது?

சில காலத்திற்கு முன் நானும் சில நண்பர்களும் ஒரு இறுவட்டு விற்கும் கடைக்குச் சென்றோம். அப்போது சாந்தன் இசைக்குழுவின் இறுவட்டு ஒன்று விற்பனைக்கு இருந்தது. அதை எடுத்த நண்பன் ஒருவன் விலையைக் கேட்டான். அதற்கவர் நூறு ரூபாய் என்று கூறினார். அதற்கிவன் “தேசத்துரோகி இவனுக்கெல்லாம் 100 ருபாய் கொடுக்கணுமா?” என்றான். நான் ஆத்திரத்தின் உச்சிக்கே போய்விட்டேன்.

“ம….. நீ இந்த நாட்டுக்கு என்னத்தை சிரைச்சனி” என்று உடனேயே கேட்டுவிட்டேன். பொது இடத்தில் கேட்டிருக்கக் கூடாது தான் ஆனால் என்னால் அடக்க முடியவில்லை.

அவனின் கதைக்கு என்ன காரணமென்னறால் அதற்கு சில காலத்திற்கு முன் அமைச்சர் ஒருவர் சாந்தன், சுகுமார் போன்ற கலைஞருக்கு கௌரவித்து விருது கொடுத்திருந்தார். இவர்களும் அவர்கள் கட்சிக்காக பாட்டுப் படியிருந்தார்களாம்.

எது எப்படியிருப்பினும் சங்க காலத்தில் புலவர்கள் பாடும் பொது ஏற்றுக் கொண்ட எம்மவர்களால் என் இவர்களை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இது இங்கு மட்டுமல்ல புலம்பெயர் தேசங்களிலும் இதே கருத்துத் தான் நிலவுகிறது என்பதை ஒரு நண்பர் மூலம் அறிய முடிந்தது.

சாந்தனின் தனிப்பட்ட குடும்பம் பற்றி எல்லோருக்கும் தெரியும். அவரது இரு புகதல்வர்கள் ஈழப் போராட்டத்தில் மாவீரர்களாகியிருக்கிறார்கள். இந்த நாட்டுக்காக ஆற்றிய சேவைக்காகத் தான் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். எவ்வளவு வேதனைகளை அனுபவித்திருந்தார். அவர் குடும்பம் நடு றோட்டில் நின்றது.

குற்றம் சாட்டும் யாராவது ஒருவர் செப்புக் காசு கொடுத்திருப்பீர்களா?

உங்கள் மனச்சாட்சியை தொட்டுக் கேளுங்கள் பதில் கிடைக்கும்.

இந்தப் பதிவானது நான் எழுதி 7 மாதங்களாகிறது இதை எப்போதோ வாசித்த நாற்று நிருபன் போடும் படி கேட்டும் ஈழம் சம்பந்தமான பதிவுகளை நான் குறைத்திருந்ததால் பதிவிடவில்லை. இன்று அவரது பேட்டி ஒன்றை ஒரு பத்திரிகையில் கண்ட போது தான் இதை பதிவிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

இப்போது எனது மனச்சாட்சிக்கு அவர் செய்தது தேசத்துரோகமில்லை அப்படி அது தேசத்துரோகம் என்றால் இந்த போரில் தப்பி ஒட்டி இருக்கும் அத்தனை பேரும் தேசத் துரோகிகள் தான்…

tm_toolbar_logo.gif TMvoteup.gif 14/14 TMvotedown.gifthiraimanam.png

Edited by BLUE BIRD

அவர் ஓர் வாய்திறக்க முடியாத சிறைக்கைதி. சிங்களவன் அவரை உயிருடன் விட்டு வைத்திருப்பதே பெரிய அதிசயம்.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனை உங்களின் நண்பர் தானே தேசத் துரோகி என்றார். எல்லோரும் இல்லையே! எப்படி இருக்க ஒட்டுமொத்த ஈழத்தமிழரை எப்படிக் குற்றம் சாட்டலாம்? ஒரு சிலர் சொல்வதற்காக சமூகம் முழுவதும் சேர்த்துக் கதைக்கப்படுவதை ஏற்கமுடியாது.... தவறும் கூட....

அப்ப எங்கட கட்டுரையை நாம் எப்படி பிரபல்யமாகுவது???

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன் யார்?

காலம் பதில்சொல்லும்

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன் ஒரு சூழ்நிலைக்கைதி. சிங்கத்தின் கூட்டில் அடைபட்டிருக்கிறார்.இவரை உயிரோடு வைத்திருப்பது எமது கண்ணை எமது கையால் குத்துவதற்கு.சிங்களம் இதனை தொடர்ந்து சரிவர செய்கிறார்கள். சாந்தனை போல் பல போராளிகளின் நிலையும் இது தான்.

அண்ணே அதிர்வு இணையத் தளம் சாந்தன், சுகுமார் பாடல் பாடியதை படமாகப் போட்டு எழுதியதை நீங்கள் கவனிக்கலையா?

அப்ப எங்கட கட்டுரையை நாம் எப்படி பிரபல்யமாகுவது???

அண்ணே அதிர்வு இணையத் தளம் சாந்தன், சுகுமார் பாடல் பாடியதை படமாகப் போட்டு எழுதியதை நீங்கள் கவனிக்கலையா?

  • 0

குமரன் பத்மநாதனையும் (K.P) துரோகி என்கின்றார்கள் அவர் நிலையும் இப்படித்தானே!

  • தொடங்கியவர்

அலை மகள்!

குமரன் பத்மனாதன் அவரும் அப்படித்தான்,ஆனால் அவர் பின்னால் பல விடயங்களும் கேள்விகளும் நிறைந்திருக்கின்றன.இந்த தலைப்பில் விவாதிக்க வேன்டாம் என்று நினைக்கிறேன்.இந்த தலைப்பில் விவாதிப்பதால் இதன் உண்மைத்தன்மை அழிந்துவிடும்.உங்கள் தனிமடலை பார்வையிடவும்.

OK

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தனை வெளியில் விட்டவர்கள் ஏன் அனைத்துப் போராளிகளையும் வெளியில் விடவில்லை.சாந்தன் சுகுமார் போன்ற நாடறிந்த தேசியத்திற்காக உழைத்த கலைஞர்களே மாறி(மாற்றி) விட்டார்கள்.மக்களே நீங்களும் மாறி விடுங்கள் விடுதலையும் கத்தரிக்காயும் என்பதை மக்களுக்கு சொல்லத்தான் இவைகள் நடக்கின்றன.என்னைப் பொறுத்த அளவில் சாந்தன் சுகுமார் போன்றவர்கள் தற்போதைய சூழ்நிலையில் இப்படிச் செய்வதை தவறு என்று சொல்ல மாட்டேன்.அவர்களைக் கேபியுடன் ஒப்பிடுவது மாபெரும் தவறாகும்.மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தடுப்புக் காவல் விசாரணையில் இருக்க பல நாடுகளிலிருந்து ஆயுதங்களைச் சட்ட விரோதமாகக் கடத்திய புலிகளின் முக்கிய ஆயுத முகவர்சிறிலங்கா உளவுத்துறையினரால் வெளிநாடொன்றில் செய்யப்பட்டு சிறிலங்காவில் சுதந்திரமாக?????????இயங்குவதுதான் ?????????????????????????????அதுவும் அவரை வெளிநாடுகளிலிருந்து வரும் தமிழர்கள் அடிக்கடி சந்திக்க வாய்ப்பும் இலகுவாகக் கிடைக்கிறது என்றால் சிந்தனைகள் பலவாறாக ஓடும்.தமிழ் மக்களுக்கு எல்லாம் விளங்கும்.முடிந்தால் வருகிற மாகாண சபைத் தேர்தலில் கேபி முதல் அமைச்சர் வேட்பாளாராக நிற்கச் சொல்லுங்கள் மக்கள் தங்கள் விளக்கத்தை அளிப்பார்கள்.

உங்க பக்கம் நியாயம் இருந்தாலும் ....

ஏன் புலவருக்கு இவ்ளோ கோவம்? :rolleyes:

சரணடைந்த 600க்கும் மேற்பட்ட சிங்களக் காவல்துறையை கொன்றவரும் பல சண்டைகளை வழிந்த்தி ராணுவத்தை கொறவருமான கருணாவை சிங்களவர்கள் அமைச்சராக்கினார்கள். தமிழர்கள் சூழ்நிலைக் கைதிகளை கூட துரேகியாக்கினார்கள். மேலும் துரோகியாகும் சூழ்நிலைகளை உருவாக்கினார்கள்.

தற்போது இருப்பது சிங்களத்தின் பிடிக்குள் அகப்பட்டவர்கள் அகப்படாதவர்கள். இரண்டுதரப்பாகவே இது இருக்கின்றது.

போராட்டத்தில் இருந்து அன்னியப்பட்டவர்கள் கடசிவரை போராட்டக்களத்தில் நின்றவர்கள். என்ற இரு தரப்பு.

இப்போது சாந்தனை துரோகி என்பவர்கள் சாந்தன் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தபோதும் அரசகட்டுப்பாட்டில் இருந்தார்கள். அல்லது புலம்பெயர்ந்திருந்தார்கள். அந்தவகையில் அவர்கள்- நாங்கள் பழைய துரோகிகள். சாந்தன் போன்றவர்கள் புதிய துரோகிகள்.

நேர்மையாகச் சொல்வதானால் தேசியத்தையும் ஒரு துரோகியே சுமக்கமுடியும். இல்லை என்று நிராகரித்தால் தேசியமும் இல்லை.

யார் எத்தனை வீதம் துரோகமிளைத்தவர்கள் என்றுதான் உயிருடன் இருப்பவர்கள் குறித்து கருத்தை ஆரம்பிக்க முடியும் தவிர துரோகமிளைக்காத சுத்தமான தேசியவாயென்று எவரும் உயிருடன் இல்லை.

புலப்பெயர்வு ஒரு மாபெரும் துரோகம். ஆனால் அதை சூழ்நிலையை கொண்டு நியாயப்படுத்தி தூய்மைப்படுத்த முடியுமானால் அதைவிட அதிகப்படியான சூழ்நிலை ஏனைய துரோகங்களுக்கு இருக்கின்றது.

என்னத்தை குத்தி முறிந்தாலும் துரோகம் என்ற மேடையிலேயே வில்லன் கதாநாயகன் வேசம் போட முடியும். நிஜவாழ்வில் இந்த வேசங்களால் எந்த பிரயோசனமும் இல்லை.

இப்போது சாந்தனை துரோகி என்பவர்கள்.........

ஆமா சாந்தனை துரோகி எங்கிறவங்க யாரு , சுகன் அண்ணா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா சாந்தனை துரோகி எங்கிறவங்க யாரு , சுகன் அண்ணா? :rolleyes:

ஆ.. வேறை யார்.. அந்த புளொக்கில எழுதினவர்தான்..! :lol: அவர்தான் இப்ப அகில உலக தமிழர் சார்பாகப் பேச வல்லவர்..!! :icon_mrgreen:

புலம் பெயர்ந்த நாங்கள்தான் துரோகிகளிலும் அதிக துரோகிகள். :( :( :(

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர்ந்த நாங்கள்தான் துரோகிகளிலும் அதிக துரோகிகள். :( :( :(

நீங்கள் புலம்பெயர் தமிழர் சார்பாகப் பேச வல்லவரா? :rolleyes:

நான் 'நாங்கள்' என்றுதான் குறிப்பிட்டிருக்கிறேன். அதற்குள் நானும் அடக்கம்.

நான் தான் காரணம்னு சொல்ல உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு மேடம்...

நாங்கள்தான் காரணம்னு ... புளூரல்ல ,, எப்டி நீங்க எல்லாரையும் ,, அவங்க அனுமதியில்லாமயே இழுத்து விடலாம்?.அந்த உரிமையை உங்களுக்கு யாரு தந்தா ??. ப்ளீஸ் ரெல் மீ மாம்! thinking-smiley-2.gif

யார் எத்தனை வீதம் துரோகமிளைத்தவர்கள் என்றுதான் உயிருடன் இருப்பவர்கள் குறித்து கருத்தை ஆரம்பிக்க முடியும் தவிர துரோகமிளைக்காத சுத்தமான தேசியவாயென்று எவரும் உயிருடன் இல்லை.

புலப்பெயர்வு ஒரு மாபெரும் துரோகம். ஆனால் அதை சூழ்நிலையை கொண்டு நியாயப்படுத்தி தூய்மைப்படுத்த முடியுமானால் அதைவிட அதிகப்படியான சூழ்நிலை ஏனைய துரோகங்களுக்கு இருக்கின்றது.

என்னத்தை குத்தி முறிந்தாலும் துரோகம் என்ற மேடையிலேயே வில்லன் கதாநாயகன் வேசம் போட முடியும். நிஜவாழ்வில் இந்த வேசங்களால் எந்த பிரயோசனமும் இல்லை.

அருமை....!!

அத்துடன் தமிழச்சிக்கும் ஒரு பச்சை

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்த 600க்கும் மேற்பட்ட சிங்களக் காவல்துறையை கொன்றவரும் பல சண்டைகளை வழிந்த்தி ராணுவத்தை கொறவருமான கருணாவை சிங்களவர்கள் அமைச்சராக்கினார்கள். தமிழர்கள் சூழ்நிலைக் கைதிகளை கூட துரேகியாக்கினார்கள். மேலும் துரோகியாகும் சூழ்நிலைகளை உருவாக்கினார்கள்.

தற்போது இருப்பது சிங்களத்தின் பிடிக்குள் அகப்பட்டவர்கள் அகப்படாதவர்கள். இரண்டுதரப்பாகவே இது இருக்கின்றது.

போராட்டத்தில் இருந்து அன்னியப்பட்டவர்கள் கடசிவரை போராட்டக்களத்தில் நின்றவர்கள். என்ற இரு தரப்பு.

இப்போது சாந்தனை துரோகி என்பவர்கள் சாந்தன் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்தபோதும் அரசகட்டுப்பாட்டில் இருந்தார்கள். அல்லது புலம்பெயர்ந்திருந்தார்கள். அந்தவகையில் அவர்கள்- நாங்கள் பழைய துரோகிகள். சாந்தன் போன்றவர்கள் புதிய துரோகிகள்.

நேர்மையாகச் சொல்வதானால் தேசியத்தையும் ஒரு துரோகியே சுமக்கமுடியும். இல்லை என்று நிராகரித்தால் தேசியமும் இல்லை.

யார் எத்தனை வீதம் துரோகமிளைத்தவர்கள் என்றுதான் உயிருடன் இருப்பவர்கள் குறித்து கருத்தை ஆரம்பிக்க முடியும் தவிர துரோகமிளைக்காத சுத்தமான தேசியவாயென்று எவரும் உயிருடன் இல்லை.

புலப்பெயர்வு ஒரு மாபெரும் துரோகம். ஆனால் அதை சூழ்நிலையை கொண்டு நியாயப்படுத்தி தூய்மைப்படுத்த முடியுமானால் அதைவிட அதிகப்படியான சூழ்நிலை ஏனைய துரோகங்களுக்கு இருக்கின்றது.

என்னத்தை குத்தி முறிந்தாலும் துரோகம் என்ற மேடையிலேயே வில்லன் கதாநாயகன் வேசம் போட முடியும். நிஜவாழ்வில் இந்த வேசங்களால் எந்த பிரயோசனமும் இல்லை.

சுகன் ஆயிரம் பச்சை குத்தலாம் ஆனால் அனுமதி ஒருபச்சைதான்.

குயில புடிச்சு கூண்டில அடைசுகூவசொல்லுகிற உலகம்

மயில புடிச்சு கால உடைசு ஆடசொல்லுகிற உலகம்

அது எப்படி பாடுமையா ? அது எப்படி ஆடுமையா ?

ஒகொ ஓகொ ஓகொ தெசியம் பேசுற ஐயா

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தன் ஒரு இசைக்கலைஞன். சாந்தன் மட்டுமல்ல.. விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களாக அல்லாமல்.. தமிழீழ நிர்வாக சேவை.. மற்றும் பிற சேவைகளில்.. இசைக்குழுக்களில்.. நடனக்குழுக்களில்.. செய்தி ஊடகங்களில்.. வேலை செய்தவர்கள் எல்லாம்.. புலிகளாக சிங்களத்தாலும்.. தமிழீழ தேச விரோத காட்டிக்கொடுப்பு ஒட்டுக்குழு கும்பல்களாலும் காட்டப்பட்டுள்ளதே உண்மை. அந்த இசைக்கலைஞர்களின் ஆபத்தான வாழ்வியல் சூழலை.. தேச விரோத சக்திகள் தங்களுக்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி.. அவர்களின் உயிரை விலை பேசி.. தங்கள் புகழ்பாடச் சொல்கின்றனர். இந்த நிலையில்.. சாந்தனோ.. எவருமோ.. வீரம் பேசிக்கிட்டு இருக்க முடியாது. அதற்கு அவர்கள் பிரபாகரன் அல்ல..!

பிச்சையப்பா கொழும்பில் நின்று சிங்களப் பாட்டை பாடியதால்.. அவர் சிங்கள அரச விசுவாசிக் கலைஞர் ஆனார். சாந்தன் யாழ்ப்பாணத்தில் நின்று தமிழ் பாட்டைப் பாடியதால் புலியானார். இடையில் ரகுநாதன் போன்றவர்கள்.. காலத்துக்கு காலம் சுருதி மாற்றி கொழும்பிலேயே நின்று கொண்டு பாடியதால்.. இன்று புலம்பெயர் மக்களின் ஏகோபித்த.. ஆதரவோடு வெளிநாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த வருகிறார்.

புலம்பெயர் தமிழர்களுக்கு எவரையும் துரோகின்னு பட்டம் சுமத்த அருகதை இல்லை. ஏன்னா அவர்களில் அநேகர் வெளியில் தெரியாத சந்தர்ப்பவாத தேசத் துரோகிகள். போராட்டத்தை.. போரை சாட்டு வைத்து செழிப்பான வாழ்வுக்காக.. எம்மவர்கள் மேற்குலகில் குடியேற.. அசைலம் அடிக்க சொன்ன பொய்களை மூட்டை கட்டிப் பார்த்தால்.. தேச விரோத ஒட்டுக்குழு தலைவன் டக்கிளஸ் தேவானந்தா திறமா தெரிவான்..! :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப டக்கிளஸ் தேவானாந்தாவுக்கு வோட்டு போட்டு முதலமைச்சர் ஆக்குங்கோ என்ரு சொல்லிகொண்டு நம்மட ஆர்யுன் அண்ணா வர போறார் :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.