Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸில் தமிழீழத் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

z-theesiyakodi.jpg

photo.gifபிரான்ஸில் தமிழீழத்தின் தேசியச் சின்னங்களைக் கொண்ட தபாலர் முத்திரைகள், பிரான்சு தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.

இவற்றுள் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் படம் பதித்த தபால் முத்திரையும்,

stampe%2012.jpg

தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய விலங்கு, தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.

எம்மவர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம்.

இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் எமது சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும்.

stampe%2011.jpg

stampe%2014.jpg

stampe%2015.jpg

http://www.eeladhesa...ndex.php?option

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. மறு புறம் பிரான்சின் நடத்தை ஆச்சரியமாக உள்ளது.(புலிகள் அமைப்பு இப்போதும் பிரான்சால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. மறு புறம் பிரான்சின் நடத்தை ஆச்சரியமாக உள்ளது.(புலிகள் அமைப்பு இப்போதும் பிரான்சால் தடை செய்யப்பட்டுள்ள நிலையில்)

இந்தியாவில்தான் அதற்கெல்லாம் பிரச்சினை..! :rolleyes: மற்ற நாடுகளில் அமைப்புக்குத் தடையென்றால் சின்னங்களுக்கும் என்று இல்லை..! மேலும், பிரான்சின் தபால்துறை கனடாவைப் போல் தனியார்மயப்படுத்தப் பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த முத்திரைகளைப் பார்த்த பிறகு, புத்தனும், வாளேந்திய அந்தக் கோழைச் சிங்கமும், முத்திரையில கட்டாயம் வரப போகினம்! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இவை இப்போதுதான் தொடங்கப்பட்டனவா? இந்த வாய்ப்புகள் ஏன் முன்பு கண்டறியப்பட்டிருக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க..... மகிழ்ச்சியாக உள்ளது.

ஒட்டுக் குழுக்கள், எமது போராட்டத்தை காட்டிக் கொடுக்காமலிருந்திருந்தால்....

தமிழீழத்திலிருந்தே..... இந்த முத்திரைகள் வெளி வந்திருக்கும்.

இந்த முத்திரையை ஓட்டிய பின் நேரடியாக போக வேண்டிய வீடுகளில் கொண்டு போய் போட வேண்டுமா?

நான் பிரன்ஸுக் க்காரனின் இணையங்களில் வந்தால் மட்டும் தான் நம்புவேன் ஆக்கும்.

எனக்கென்னவோ.. இதுவும்.. தர்மயுத்தம், நியாயம் வெல்லும், மனிதாபிமானப்போர், நாடுகடந்த அரசு, போர்குற்றம் போன்ற விசர்கூத்து போலதான் இருக்குது..

பார்க்க நல்ல ஐடியா போல இருக்கும் ஆனால் ஒருவருக்கும் ஒரு பிரியோசனமும் இல்லை..

http://montimbramoi.laposte.fr/

பிரான்சில் இருப்பவர்கள் இந்த இணையத் தளத்திற்குச் சென்று விரும்பிய படங்களைப் போட்டு முத்திரைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இவை சாதாரண முத்திரைகள் போன்று பெறுமதியானவை. பிரான்சிலிருந்து கடிதங்களை அனுப்புபவர்கள் இவற்றை ஒட்டி அனுப்பலாம்.

ஊரில் யாரொடையும் கரள் இருந்தால் இந்த முத்திரையை ஒட்டி கடிதம் ஒண்டு போட்டு விட்டால் போதும்..

( பாருங்கோ தமிழன் மூளை எப்படி வேலை செய்யுது எண்டு..)

... இதில் விசர்கூத்தாடுவதற்கு ஒன்றுமே இல்லை ... ஏதோ ஒரு செய்தியை, ஒரு சாதனம் மூலம் உலகில் வாழும் சிலரையாவது சென்றடைவதற்கு எடுத்த முயறசி! ... வாழ்த்துக்கள்!! ... இதில் உள்ள படங்களை விட ... 60 ஆண்டு சிங்களத்தின் திட்டமிட்ட இனவழிப்பு, யுத்த குற்றங்கள், ... போன்றவற்றை போட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்!

எனக்கென்னவோ.. இதுவும்.. தர்மயுத்தம், நியாயம் வெல்லும், மனிதாபிமானப்போர், நாடுகடந்த அரசு, போர்குற்றம் போன்ற விசர்கூத்து போலதான் இருக்குது..

பார்க்க நல்ல ஐடியா போல இருக்கும் ஆனால் ஒருவருக்கும் ஒரு பிரியோசனமும் இல்லை..

சரி யுத்தக்குற்றமும் விசர்கூத்து உமது அறிவில்!!!!! ...அப்போ எது/எவை விசர்கூத்தில்லாதது என்பதனை சொல்லும் ... உமது அறிவிக்கு எட்டியபடி?????

சரி யுத்தக்குற்றமும் விசர்கூத்து உமது அறிவில்!!!!! ...அப்போ எது/எவை விசர்கூத்தில்லாதது என்பதனை சொல்லும் ... உமது அறிவிக்கு எட்டியபடி?????

தமிழ் சமூகமும்.. விசர் கூத்தும்.. ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்.....

பார்க்க மகிழ்ச்சியாகவுள்ளது,

பெருமையாகவும் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் யாரொடையும் கரள் இருந்தால் இந்த முத்திரையை ஒட்டி கடிதம் ஒண்டு போட்டு விட்டால் போதும்..

( பாருங்கோ தமிழன் மூளை எப்படி வேலை செய்யுது எண்டு..)

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சமூகமும்.. விசர் கூத்தும்.. ஒரு நாணயத்தின் இருபக்கங்கள்.....

!!!! #### ????

Edited by vanangaamudi

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது இது எமக்கு கிடைத்த வெற்றி பிரான்சில்தான் தமிழ்செல்வனுக்கும் சிலை வைத்தார்கள் அதைப்பற்றியும் முன்பு பலர் பல சந்தேகங்கள் கிளப்பினார்கள் பின்பு உண்மையானதும் பொத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.

சிங்களவனுக்கு புண்டு பிளக்கப்போகுது.

இந்தியாவில்தான் அதற்கெல்லாம் பிரச்சினை..! :rolleyes: மற்ற நாடுகளில் அமைப்புக்குத் தடையென்றால் சின்னங்களுக்கும் என்று இல்லை..! மேலும், பிரான்சின் தபால்துறை கனடாவைப் போல் தனியார்மயப்படுத்தப் பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது..! :rolleyes:

பிரான்ஸ் உண்மையான ஜனநாயக நாடு இந்தியா அப்படியா ? :lol::icon_mrgreen:

மாறிக்கொண்டிருக்கும் மாற்றங்கள்...

நாம் கடக்க வேண்டிய பாதையின் தூரங்களை...

இன்னும் பக்கத்தில் கொண்டுவருவதாய் உணர்கின்றேன்!

இம்மாற்றங்கள் ....இரவும் பகலும் இடம்மாறும் உருண்டையின் தேசங்களெல்லாம் பரவும்போது, தமிழனுக்கென்றொரு நிலத்துண்டு...

அவ்வுருண்டையில் முத்தாய் யொலிக்கும்!!!

எல்லாவற்றையும் எதிர்மறையாக எடுத்துக் கொள்ளாமல், இலங்கை தவிர்ந்த அல்லது ஊரிலுள்ள எம்தமிழ் உறவுகள் தவிர்ந்த மற்றையவர்களுக்கு அனுப்பும்போது இப்படியான முத்திரைகளைப் பாவித்தால்... பல சாதகமான விளைவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கின்றது.

Edited by கவிதை

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க மகிழ்ச்சி மலரும் 2012 எமக்கான ஆண்டாக கொள்வோம்!!!

கனடாவில் குமார் பொன்னம்பலதிற்கு ஒருவர் முத்திரை வெளியிட்டார் .விரும்பினால நமீதாவிற்கும் கனடாவில் முத்திரை வெளியிடலாம் .அதற்கான அனுமதி இங்கு உண்டு .

முத்திரை அடிக்க,முத்திரை குத்ததான் கடைசியில் போராடினதாக போய்விட்டது.

தமிழனின் நிலையில் சில தமிழனுக்கு புரியவில்லை மற்றைய இனம் தமிழனில் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் எம்மில் சிலருக்கு இல்லை என்பது மிகவும் கவலைக்கிடமானது!

இந்த இணைப்பை இணைத்த தமிழரசுக்கு ஒரு பச்சை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்திரை அடிக்க,முத்திரை குத்ததான் கடைசியில் போராடினதாக போய்விட்டது.

என்ன செய்வது போராடியவர்களுக்கு எதிராக உங்களைபோன்றோர் இருந்தால் இந்தமாதிரி நிலைதானே வரும் . :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மாதிரி முத்திரையை எவரும் வெளியிட முடியும் தான்

ஆனால் தலைவரையும் இழந்துவிட்டோம் என்ற பின் அதற்காக யார் வெளியிடுகிறார்கள்???

ஒருவர் எதையாவது செய்தால் அதுவும் புலிகளுக்கு முன்பு வேலை செய்தவர்கள் செய்தால் அதை ஏளனத்துடன் பார்க்க எழுத என்று ஒரு கூட்டம் இங்கும் அலைகிறது.

அவர்களின் பார்வையில் இன்று இவர்கள் வேண்டாத மனைவிகளின் நிலையில்.

ஏன் இவற்றிலுள்ள நன்மைகளை எவரும் எழுதுவதில்லை. நான் எழுதினால் விசுகு அவர்களின் விசுவாசி என்கின்ற முத்திரை வேறு. வேறு யாருக்கு விசுவாசியாக இருக்கணும் என்று சொன்னால் நல்லது.

பிரான்சில் இது போன்ற முயற்சிகளை எவராவது செய்கிறார்கள் என்ற ரீதியில் நான் பெருமைப்படுகின்றேன். எதுவுமே செய்யாது வம்பளப்பதைவிட இது எவ்வளவோ மேல்.

அத்துடன் பிரான்சில் புலிகளுக்கான தடை தொடர்ந்து இருக்கும் இவ்வேளையிலும் எமது தாகத்தையும் தலைவர் மீதான நேசத்தையும் காட்டும் இவர்களின் செயல்கள் தேவையானவையே.

இனி இது விற்பனையில் சாதனைகளைத்தொட்டால் அடுத்தபடி வளர்ச்சியாக இருக்கும். நான் இனி அனுப்பும் கடிதங்களுக்கு அவற்றைத்தான் ஒட்டுவேன். இதையே இங்கு வாழும் ஒவ்வொரு தமிழனும் செய்யணும் என்று வேண்டுகின்றேன். அது இலங்கையைத்தவிர எங்காயினும்.

இது பிரெஞ்சு அரசினால் அனுமதிக்கப்பட்டு வெளியிடப்பட்டது என எங்கு எவரால் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரியத்தரவும்.

ஆனால் இங்கு பில்லாடனுக்கு இப்படி முத்திரை வெளியிட முடியாது என்பதையும கவனத்தில் கொள்ளவும். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

முத்திரை அடிக்க,முத்திரை குத்ததான் கடைசியில் போராடினதாக போய்விட்டது.

ஆம்.இதில் உங்களவரின் பங்கு அளப்பெரியது.இதையிட்டு நீங்கள் பெருமைப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.