Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை எனும் பெயரில்....

Featured Replies

கவிதை எனும் பெயரில்....

நண்பர்களே,

கவிதையெனும் பெயரிலிங்கு கண்டபடி

கருத்துக்கள் எழுதுகின்றார் சிலபேர்கள்;

கவிதை என்றால் என்னவென்று அறிந்திடாத

கடைகெட்ட மூடர் அதை ரசிக்கின்றார்கள்!

பெண் என்ற பெயராலே எழுதிவிட்டால்

பேயாக ரசிப்பது போல் கருத்துச் சொல்லி

கண் என்றும் உயிர் என்றும் கசிந்துருகி

கருத்துக்கள் சொல்லி,அதை ருசிக்கின்றார்கள்.

மூடர்கள், முட்டாள்கள், தமிழ் மொழியின்

முடவர்கள், குருடர்கள், செவிடு கொண்ட

கேடர்கள் அவரைநாம் என்ன சொல்ல?

கிறுக்கர்கள்தாம் அவரை மன்னிப்போமா?

நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை;

நயமான கற்பனைகள் கொண்டதில்லை;

சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்ல;

சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை!

ஆனாலும் முகநூலில் எழுதுகின்றார்;

அவர்பின்னே அறிவிலிகள் ஓடுகின்றார்;

நானாக அவர்கருத்தைச் தேடிச் சென்று

நட்பாகப் பேசுகின்ற வழக்கமில்லை!

அறிந்திடுவீர்; என் குணத்தை எனக்கு என்று

இறுமாப்பு மிகவுண்டு;தமிழை இங்கு

குறைப்படுத்தி எவரேனும்எழுதி என்முன்

குலவுகின்ற மூடமையைத் தவிர்ப்பீராக!

குறிப்பாகக், கவிதை என்று எனது பக்கம்

கூறுதற்கு முனையாதீர்;முனைவீர் என்றால்

செறிவான எழுத்தோடு என்முன் வாரீர்

செழுந்தமிழைச் சேவித்து நட்புக் கொள்வோம்!

இவண்-

கிருஷ்ணன்பாலா

27.12.2011

http://krishnanbalaa...og-post_27.html

  • கருத்துக்கள உறவுகள்
:D :D :D
  • கருத்துக்கள உறவுகள்
:( :( :(
  • தொடங்கியவர்
:icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை உண்மையாவா? :lol:

ஏம்பா இந்தப் பொறாமை? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
:( :(

Edited by யாயினி

ஆமா நெல்லை யாருக்கு இப்டி ,, அநியாயத்துக்கு கிளைமோர் அடிக்குறீங்க?

ஒரே கன்பியூசன்! <_< ரெண்டு பச்சை விழுந்திருக்குறத பாத்தா...

ஒருவேளை அது எங்க வல்வையக்காவோ///? confused-smiley.jpg

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா நெல்லை யாருக்கு இப்டி ,, அநியாயத்துக்கு கிளைமோர் அடிக்குறீங்க?

ஒரே கன்பியூசன்! <_< ரெண்டு பச்சை விழுந்திருக்குறத பாத்தா...

ஒருவேளை அது எங்க வல்வையக்காவோ///?

நான் தான் முதலில ஒரு பச்சை.. சும்மா குத்தின்னான்..! :lol:

நான் தான் முதலில ஒரு பச்சை.. சும்மா குத்தின்னான்..! :lol:

நெனைச்சேன்.....

முதல் பச்சை , இந்த மண்ணில் பிறந்த...... (குசும்பு) மாணிக்கம் ஒண்ணுதான், கண்டிப்பா குத்தி இருக்கும்னு!

ஏங்க சஹாரா அக்கா ,,எப்டி இந்த ,,, முயூசிக் சகோதரத்த சமாளிக்குறீங்க??

ஏற்கனவே அவுங்களுக்கும் எங்களுக்கும் வாய்க்கா தகராறு!

என்ன வாய்க்க தகராறு?

ஏன் இப்டி பச்சை குத்தீனே!

என்ன பச்சை குத்தினியா?

வெளங்கிடும்! <_<

மூன்றாவதாக ஒரு பச்சை குத்துவம் என்றால், இந்தக் கவிதையில் உள் குத்து பலமாக இருக்குதோ என்று சந்தேகமாக இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கிளைமோர் அடியில் பலர் யாழில் பலி.பலருக்கு பலத்த காயம்.:D :D

கிளைமோர் அடியில் பலர் யாழில் பலி.பலருக்கு பலத்த காயம். :D :D

அவ்ளோ பேரா கவிதை எங்கிறபேர்ல .... கடுப்பேத்தி இருக்காங்க? <_<

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எனும் பெயரில்....

நண்பர்களே,

கவிதையெனும் பெயரிலிங்கு கண்டபடி

கருத்துக்கள் எழுதுகின்றார் சிலபேர்கள்;

கவிதை என்றால் என்னவென்று அறிந்திடாத

கடைகெட்ட மூடர் அதை ரசிக்கின்றார்கள்!

பெண் என்ற பெயராலே எழுதிவிட்டால்

பேயாக ரசிப்பது போல் கருத்துச் சொல்லி

கண் என்றும் உயிர் என்றும் கசிந்துருகி

கருத்துக்கள் சொல்லி,அதை ருசிக்கின்றார்கள்.

:o :o :lol:

கவிதை எழுதுறவங்க மட்டுமில்லை..கவிதைக்கு கருத்தெழுதுறவங்களும் இனி ஒரு தடவைக்குப் பலதடவை யோச்சிச்சுத்தான் எழுதுவாங்க... :o:lol: :lol:

மூடர்கள், முட்டாள்கள், தமிழ் மொழியின்

முடவர்கள், குருடர்கள், செவிடு கொண்ட

கேடர்கள் அவரைநாம் என்ன சொல்ல?

கிறுக்கர்கள்தாம் அவரை மன்னிப்போமா?

நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை;

நயமான கற்பனைகள் கொண்டதில்லை;

சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்ல;

சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை!

ஆனாலும் முகநூலில் எழுதுகின்றார்;

அவர்பின்னே அறிவிலிகள் ஓடுகின்றார்;

நானாக அவர்கருத்தைச் தேடிச் சென்று

நட்பாகப் பேசுகின்ற வழக்கமில்லை!

ஆள் செமகடுப்பிலை எழுதியிருக்கு..இவற்றை கவிதைக்கு முகப்புத்தகத்தில யாரும் கருத்தெழுதவில்லைப் போல :lol: ...

அப்ப தனக்கும் சேர்த்துத்தான்

நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை;

நயமான கற்பனைகள் கொண்டதில்லை;

சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்ல;

சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை!

இதை எழுதியிருக்கார்போல.. :o:lol:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நடக்கின்றது இங்கே?

யார் முதலி யார்? இவாளா? அவாளா?

ஒரே குழப்பமாக இருக்கின்றது :unsure:

கவிதை எனும் பெயரில்....

நண்பர்களே,

கவிதையெனும் பெயரிலிங்கு கண்டபடி

கருத்துக்கள் எழுதுகின்றார் சிலபேர்கள்;

கவிதை என்றால் என்னவென்று அறிந்திடாத

கடைகெட்ட மூடர் அதை ரசிக்கின்றார்கள்!

பெண் என்ற பெயராலே எழுதிவிட்டால்

பேயாக ரசிப்பது போல் கருத்துச் சொல்லி

கண் என்றும் உயிர் என்றும் கசிந்துருகி

கருத்துக்கள் சொல்லி,அதை ருசிக்கின்றார்கள்.

மூடர்கள், முட்டாள்கள், தமிழ் மொழியின்

முடவர்கள், குருடர்கள், செவிடு கொண்ட

கேடர்கள் அவரைநாம் என்ன சொல்ல?

கிறுக்கர்கள்தாம் அவரை மன்னிப்போமா?

நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை;

நயமான கற்பனைகள் கொண்டதில்லை;

சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்ல;

சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை!

ஆனாலும் முகநூலில் எழுதுகின்றார்;

அவர்பின்னே அறிவிலிகள் ஓடுகின்றார்;

நானாக அவர்கருத்தைச் தேடிச் சென்று

நட்பாகப் பேசுகின்ற வழக்கமில்லை!

அறிந்திடுவீர்; என் குணத்தை எனக்கு என்று

இறுமாப்பு மிகவுண்டு;தமிழை இங்கு

குறைப்படுத்தி எவரேனும்எழுதி என்முன்

குலவுகின்ற மூடமையைத் தவிர்ப்பீராக!

குறிப்பாகக், கவிதை என்று எனது பக்கம்

கூறுதற்கு முனையாதீர்;முனைவீர் என்றால்

செறிவான எழுத்தோடு என்முன் வாரீர்

செழுந்தமிழைச் சேவித்து நட்புக் கொள்வோம்!

இவண்-

கிருஷ்ணன்பாலா

27.12.2011

http://krishnanbalaa...og-post_27.html

வணக்கம் நெல்லையன் . நீங்கள் யாழ் கருத்துக்களத்தின் முக்கிய மூத்த உறுப்பினர் . கருத்துக்களம் பல இளையவர்களை உள்வாங்கி , அவர்களது சுய ஆக்கங்கள் இனங்காணப்பட்டு , அவர்கள் வளர்ந்து வருவது நீங்கள் அறியாத விடையமில்லை . நீங்கள் இணைத்த இந்தப் பதிவு அவர்களைப் பாதிப்பதை நீங்கள் உணரவில்லையா ????? நான் உங்களுக்கு புத்தி சொல்ல எதுவிதத்திலும் தகுதியற்றவன் . நான் ஏதாவது பிழையாக எழுதியிருந்தால் மன்னிச்சுக்கொள்ளுங்கோ . ஏதோ எனது மனதில் பட்டுது கவலையுடன் எழுதினேன் :( :( . மனசிலை வைக்காதையுங்கோ :( :( .

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தக் கவிதையை நேற்றுப் பார்த்து எனது கருத்தை எழுதி விட்டு அளிச்சுட்டு போய் விட்டேன்..காரணம் யாயினிக்கு தப்புக் கண்டு பிடிப்பது தான் வேலை என்று அது பெரிய இசுவாகிடும் என்று.இந்த கவிதை முற்று முழுதாக மறைமுகமான தாக்குதலாகவே அமைந்திருக்கிறது...எப்படியான உடல்,உள வேதனைகளோடு அன்றாடாம் நாட்களை கடத்திக் கொண்டு இருப்பவர்களும் இந்தக் கவிதைக்குள் அடக்கம்.அது மட்டுமில்லை பயம் இன்றி எழுத்துக்குள் கால் பதிப்பவர்களுக்கும் இது ஓரு தாக்குதல் கவிதையே..என் கருத்தையும் எழுத வேணும் போல் இருந்தி ஆகவே எழுதினேன்.

மூடர்கள், முட்டாள்கள், தமிழ் மொழியின்

முடவர்கள், குருடர்கள், செவிடு கொண்ட

கேடர்கள் அவரைநாம் என்ன சொல்ல?

கிறுக்கர்கள்தாம் அவரை மன்னிப்போமா?

நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை;

நயமான கற்பனைகள் கொண்டதில்லை;

சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்ல;

சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை

இவ்வாறான புலம்பலை இட்டு யாரொருவரும் கவலைப்படத்தேவையில்லை. மற்றவனுக்குப் புரியும்படியாக எழுத முனைவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கின்றது. எல்லோரும் தமிழ்ப் பண்டிதராகித்தான் எழுதவேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. அவனவனது வட்டார மொழிகளையும் வழக்குகளையும் இயல்பாக எழுதுவதே சிறந்தது. அதற்கான உரிமையும் எழுதுபவனுக்கு இருக்கின்றது.

திண்ணையில் பிரசங்கம் செய்து பிழைப்பு நடத்திய காலங்களில் இவ்வாறுதான் முட்டையில் மயிர் புடுங்கி ஒருவனை ஒருவன் தாழ்த்திக்கொண்டிருந்தார்கள். இங்கே மூடர்கள் முட்டாள்கள் என்பது அப்போது கீழ்சாதிகளின் பெயரைச் சொல்லி திட்டித்தீர்த்தார்கள். அவ்வாறு சொல்லியே மொழியை கற்கவும் விட்டதில்லை கற்றவர்களை அங்கீகரித்ததும் இல்லை. அதே மனநிலையின் தொடர்ச்சிதான் இது.

கிருஷ்ணன்பாலா

எழுதியவர் பெயரில் உள்ள இந்த எழுத்து தமிழ் உயிர் மெய் எழுத்துக்களில் இல்லை என்பதை எழுதியவர் உணர்வாராக !

நான் இந்தக் கவிதையை நேற்றுப் பார்த்து எனது கருத்தை எழுதி விட்டு அளிச்சுட்டு போய் விட்டேன்..காரணம் யாயினிக்கு தப்புக் கண்டு பிடிப்பது தான் வேலை என்று அது பெரிய இசுவாகிடும் என்று.இந்த கவிதை முற்று முழுதாக மறைமுகமான தாக்குதலாகவே அமைந்திருக்கிறது...எப்படியான உடல்,உள வேதனைகளோடு அன்றாடாம் நாட்களை கடத்திக் கொண்டு இருப்பவர்களும் இந்தக் கவிதைக்குள் அடக்கம்.அது மட்டுமில்லை பயம் இன்றி எழுத்துக்குள் கால் பதிப்பவர்களுக்கும் இது ஓரு தாக்குதல் கவிதையே..என் கருத்தையும் எழுத வேணும் போல் இருந்தி ஆகவே எழுதினேன்.

யாயினிக்கு ஆயிரம் பச்சை :):):) .

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியாவது ஒரு கவிதை எழுதி தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்...பாவம் பிழைத்துப் போகட்டும்...நல்ல காலம் நான் கவிதை எழுத ஆரம்பிக்கவில்லை :)

கிருஷ்ணன் பாலா முக நூலில் இக்கவிதைக்கு குடுத்து இருந்த பின்னூட்டம்

கீழே உள்ளது.. இக்கவிதைக்கும்

YARL களத்தில் கவிதை எழுதுபவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஆனால் நெல்லையன் இதை இங்கு இணைச்சு இருக்கிறதில

நிறைய உள்குத்து இருக்கு..

நண்பர்களே,உங்கள் வழிமொழிதலுக்கு நன்றி. எனினும் இங்கே நான் வேதனை கொண்டு எழுதவில்லை என்பதைத் தாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என விழைகின்றேன்.

கவிதை என்னும் கரு பொருளையே நாசம் செய்து,அதைக் கவிதை என்று சில கத்துக் குட்டிகள் எழுதுவதும்; அவர்கள் ‘பெண்பாலர்களாயிருந்து அவ்வாறு எழுதினால் புற்றீசல்போல சிலர் புகுந்து ’ஆஹா;ஓஹோ;அற்புதம்; வாழ்த்துக்கள்’ என்றெல்லாம் வாந்தி எடுத்து, கவிதை என்ற சொல்லை நாற வைக்கும் பின்னூட்டங்கள் கண்டு நாம் வாளாவிருக்க முடியாமல் சினம் கொண்டு எழுத நேர்கிறது.

அவ்வாறு,எனது சினத்தைக் காட்டவே எனது கருத்தை இங்கே கவிதை வடிவில் பதிவு செய்துள்ளேன். வார்த்தைகளை வகுக்கத் தெரியாமலும் கவிதை என்பது யாது என்பதைப் புரியாமலும் இங்கே சிலர் எழுதுவதும் அதைத் தத்துவம் என்ற தகுதிக்கு உயர்த்தி சிலர் புகழ்வதும் நாம் இங்கே காணும் அவலம்.

எழுதுபவர் ஏதோ ஆர்வக் கோளாற்றால் எழுதுவதாக நாம் கண்டு கொள்ளாமல் இருந்தாலும் அந்தக் கோளாறு மிக்க பதிவைப் பாராட்டி,, சீராட்டிய பதிவுகள் நமது பக்கத்தில் திணிக்கப் பட்டு நமது சினதுக்கு உரமிடுகின்றன.

இப்படி ’வாந்தி எடுக்கின்ற வாய்ப்பந்தல்காரர்களின்பால் நம் சாட்டையை எடுத்தாக வேண்டியுள்ளது. இந்தப் பதிவுகள் நமது பக்கங்களில் திணிக்கப்படும்போதுதான் ‘நமது தீர்ப்பு வெளியிடப் படுகிறது என்பதையும் நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பிறர் பக்கங்களில் நாம் அத்து மீறி எவ்விதச் சாடலும் கொள்வதில்லை என்பதையும் இங்கே எனது பதிவு தெளிவுறுத்துவதை உணர்வீர்கள்.

’முகநூல்’ என்பது இலவசமாக இங்கே நமக்குக் கிடைத்திருக்கின்ற அட்சய பாத்திரம். அதிலிருந்து அமுதம் நிகர்த்த கருத்துக்களை எடுத்து பிறர் மகிழவும் நெகிழவும் வழங்குவது மாண்புடையோர் கடமை. மறாக அதனை பிட்சையிடும் பாத்திரம் போல் ஆக்கி, சிலர் இடும் அழுகல் பொருட்கள்பால் ஆறாச் சினம் கொள்வது, சமூகத்தின் நலன் பேணுவோரின் கடமை.

நாம் வருந்துவது என்பது இந்த அரைகுறைகளைக் கண்டு ஒதுங்குவதாகி விடும்; அவர்கள் திருந்துவதற்கு சினம் என்னும் சாட்டையை எடுப்பதே முறைமை. குறைந்த பட்சம் அவர்களின் அருவருப்பான படைப்புக்களை இங்கே நமது பக்கங்களில் திணிக்காமலாவது இருக்கட்டும் என்பதற்காகவே எழுதினேன். அத்தகையோரின் எழுத்துக்களைக் கண்டாலே நமது மனம் கூசுகிறது;சினம் பேசுகிறது

  • தொடங்கியவர்

இங்கு நெல்லயான் உள்குத்திலோ வெளிக்குத்திலோ இதனை இணைக்கவில்லை!! ... எதோ தற்சமயம் இக்கவியை கண்ணுற்றேன், இங்கிணைத்தால், ஏதோ விவாதத்திற்கு உட்படும் என்று தான் இணைத்தேன் ... ஏனெனில் இது கருத்துக்களம்!!!

மற்றும்படி எனக்கு சகாராவின் கவிதைகளையும் முழுமையாக வாசித்திருக்கிறேன், அவரது கவி ஆற்றலையும் நன்கு அறிவேன், இரசித்திருக்கிறேன், மற்றுமபடி எனக்கும் அவருக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை..

... வந்தோமாம் ... வாசித்தோமாம் ... எழுத வேண்டுமாயின் எழுதினோமாம் ... வேண்டுமாயின் சில நகைச்சுவையாக எழுதி ... மட்டும் நின்றால் போதும்!! அதை விடுத்து உள்குத்து ... புறக்குத்து ... வேணாம்!!!!!!!!!!!!!!!

... இக்கவியின் இன்னொரு ...

இந்திய மைந்தர்களே!

எத்தனை ஏற்றம் எத்தனை மாற்றம்;

இந்திய சுதந்திர வரலாற்றில்?

எத்தனை ஏக்கம்;எத்தனை ஊக்கம்;

எங்கள் பாரதத் திருநாட்டில்?

இத்தரையில் ஒரு நூற்றாண் டெய்திய

இந்தியக் காங்கிரஸ் இருக்கின்றதா?

உத்தமர் காந்தியின் உன்னத நெறிகள்

உண்மையில் இன்னும் இருக்கின்றதா?

இந்திய மக்கள் சிந்திய ரத்தம்

இனும்நம் நினைவில் உரைக்கின்றதா?

வந்தேமாதரம் என்றே போதிலும்

வாழ்க்கையில் அதுநமை இணைக்கின்றதா?

அதன்பின் னால்நமை அடிமைகள் ஆக்கிய

அரசியல் ’விலங்குகள்’ இருக்கின்றதே?

மதம்,இனம் ,மொழிஎனும் வெறிகளி னாலே

மக்களை அழித்திடத் துடிக்கின்றதே?

ஆயிரம் கட்சிகள் முளைத்தவை இங்கு

அணு அணுவாகப் பிரிக்கின்றதே?

தாயவள்நமக்குப் பாரதம் எனினும்

தனித்தனி உணர்வுகள் தளிர்க்கின்றதே?

குளுமைக் காஷ்மீர் ரோஜா மலரின்

கூரியமுள் நமைக் குத்துவதேன்?

பளுமிகு நக்ஸல் பிரச்சினையில்நாம்

பலவிதமாகக் கத்துவ தேன்?

தமிழன் எவர்க்கும் தாழ்ந்தவன் இல்லை;

தரணியில் நிமிர்ந்து நின்றானா?

அமைதியும் வளமும் பிறருக்கு நல்கும்

ஆற்றலில் தன்சுகம் கண்டானா?

தென்னகம் ஒட்டிய இலங்கையின் மேன்மை

தீட்டிய தமிழ் மகன் இப்போது;

தன்அகம் தேடி அலைகின்றான்:

தணிந்திடும் நிலமை எப்போது?

உன்னதம் படைக்கும் திறமையும் அறிவும்

ஓங்கிய பாரதத் மைந்தர்களே;

இன்றெழும் கேள்விக்கெவ்விதம் பதிலை

ஏற்பது என்பதை உரைப்பீரே!

இவண்-

கிருஷ்ணன் பாலா

15.8.1985ல் எழுதியது

பிறக்கும் போது எவனும் கவிஞனாக பிறப்பதில்லை.வாலியைக் கூட "கூந்தல் கறுப்பு குங்குமம் சிவப்பு" என எழுதும் இவனெல்லாம் கவிஞ்னா என நக்கல் அடித்தார்கள்.அதற்காக எல்லோரும் பாரதியாராகவும் பாரதிதாசனுமாகி விடமுடியாது .

பிடித்ததை ரசிப்போம் முடியாதை விட்டுவிடுவோம். அது வாசகனின் கையில் தான் உள்ளது.

நல்லவேளை உந்த ஆள் கனடா தமிழ் ரேடியோ ஒன்றும் கேட்கின்றதில்லை போலிருக்கு.கேட்டிருந்தால் வாள் கொண்டு வந்து இம்மட்டிற்கு ஏழு ,எட்டு பேரையாவது வெட்டியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நெல்லை இக்கவிதையை இணைத்தபோதே... இந்தக்கவிஞருடைய வலைப்பூவைப் பார்வையிட்டேன். அவருடைய கவிதைகள் மரபுக்கவிதைகளாக, சந்தங்கள் கொண்டவையாக, கற்பனைத்திறன் மிக்கவையாக இருந்தன... அவருடைய தளத்தில் இருந்து அவருடைய சினம் வெளிப்பட்டிருக்கிறது. இருந்தாலும் அவரும் ஒரு காலத்தில் புதியவராக இருந்தகாலத்தில் தன்னுடைய எழுத்துக்களும் இத்தகைய தன்மையில் அமைந்திருக்குமே என்று சிந்தித்துப்பார்க்க மறந்துவிட்டார்.

மற்றப்படி இத்தகைய தரமான கவிஞன் எப்படி புதிதாக எழுதும் இளைய கவிஞர்கள் மீது இப்படியான காட்டமான சினத்தைக்காட்டினார் என்பது எனக்குள் கேள்விக்குறியாகத் தொக்கி நிற்கிறது. சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும் வடித்த எழுத்துக்கள் கணனியில் சிரிக்கும். களம் மாறி புகுந்த கவிதை இப்படி இன்னொரு பக்கத்தைத் திறக்கும் என்பதைக்கவிஞர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார். இந்தக்கவிதையை எழுதியவருடைய சூழல் எழுதத் தோற்றுவித்தநிலைகள் பற்றி எமக்குத் தெரியாது... ஆகவேதான் இக்கவிதைக்கான விமர்சனத்தை முன்வைக்கவில்லை.

ஆமா நெல்லை யாருக்கு இப்டி ,, அநியாயத்துக்கு கிளைமோர் அடிக்குறீங்க?

ஒரே கன்பியூசன்! <_< ரெண்டு பச்சை விழுந்திருக்குறத பாத்தா...

ஒருவேளை அது எங்க வல்வையக்காவோ///? confused-smiley.jpg

தம்பி அறிவிலி....

நெல்லையாவது கிளைமோர் வைக்கிறதாவது!!!! சும்மா பகிடி விடவேண்டாம். (ஏனென்றால் நெல்லைக்கு ஒழுங்காக கிளைமோர் வைக்கத் தெரியாது..ச்.சூ.... ஒருத்தரும் சிரிக்காதெங்கோ.) :lol:

நான் தான் முதலில ஒரு பச்சை.. சும்மா குத்தின்னான்..! :lol:

மண்ணில் பிறந்த குசும்பு மாணிக்கமே ஏனப்பு இப்படி? :icon_mrgreen:

Edited by வல்வை சகாறா

  • தொடங்கியவர்

செருக்கு ... இது கலைஞர்கள்/கவிஞர்கள்/... கூடிப் பிறந்தது! ... இதில் யாரும் விதி விலக்காக இருப்பதாக தெரியவில்லை!! அதற்கு மேல் ... தம்மைச்சுற்றி ஓர் வட்டம் அமைப்பார்கள் ... வெளியே நிற்பவர்கள் எல்லாம் கோணலாகத்தான் இவர்களுக்கு தெரியும்!

...

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவேளை உந்த ஆள் கனடா தமிழ் ரேடியோ ஒன்றும் கேட்கின்றதில்லை போலிருக்கு.கேட்டிருந்தால் வாள் கொண்டு வந்து இம்மட்டிற்கு ஏழு ,எட்டு பேரையாவது வெட்டியிருக்கும்.

:o :o :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.