Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கவில்லை – தயான் ஜயதிலக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனின் உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியிடப்பட்டது.

prabhakaran%20stamp_CI.jpg

திங்கட்கிழமை, 02 ஜனவரி 2012 22:08 .தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தினையும் விடுதலைப் புலிகளின் இலட்சினையையும் கொண்ட நான்கு வகையான முத்திரைகள் இன்று பிரான்ஸில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அவை பாவனைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முத்திரைகளை பிரான்ஸ் தபால் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.பிரான்ஸில் வாழும் தமிழர் அமைப்பின் வேண்டுகோளையடுத்து வெளியிடப்பட்டுள்ள இந்த முத்திரை ஒவ்வொன்றினதும் பெறுமதி அந்நாட்டு நாட்டு நாணயப்படி 60 சதமாகும்.

புலிகளின் தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கவில்லை – தயான் ஜயதிலக்க

தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்டள்ள தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கவில்லை என அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் அரசாங்கமோ அல்லது அந்நாட்டு தபால் திணைக்களமோ தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்கள் அடங்கிய தபால் முத்திரைக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனின் உருவம் பொறித்த தபால் முத்திரைகள் வெளியிடப்படவில்லை என பிரான்ஸ் தபால் திணைக்களம் அறிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸின் அரசாங்க தபால் அலுவலகங்களில் குறித்த தபால் முத்திரைகள் விற்பனை செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், பிரான்ஸ் நாட்டில் தனிப்பட்ட நபர்கள் சுய விருப்பின் அடிப்படையில் தாங்களாகவே தபால் முத்திரைகளை வடிவமைத்து வெளியிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறே பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட முத்திரை வெளியிடப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தபால் முத்திரை வெளியிடப்பட்ட சம்பவம் குறித்து பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சிடம் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக, தூதுவர் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புலிகளினால் தபால் முத்திரை பிரசூரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை உறுதிப்படுத்த வேண்டுமென வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் சரத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் உண்மையென்றால் பிரான்ஸ் அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் தொடர்புகள் ஏற்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

Edited by தமிழரசு

எனக்கு பிரான்ஸ் அஞ்சல் சேவை பற்றித் தெரியாது

ஆனால் கனடாவில் எமக்கு விருப்பமான படங்களை அனுப்பி வைத்து இதனை முத்திரையாக பயன்படுத்த விரும்பினால் அதற்கான ஒரு செயல் முறையும் கட்டணமும் இருக்கின்றது. அப்படியான முத்திரைகளை நாம் எம் அஞ்சல் தொடர்புகளுக்கு விரும்பினால் பயன்படுத்தலாம். ஆனால் இந்த முத்திரைகள் எம்மைத் தவிர்ந்த (படம் அனுப்பியவர் தவிர்ந்த) பொது மக்களின் பாவனைக்கு வந்து சேராது.

பிரான்ஸ், புலிகளை அழிக்க முன் நின்ற ஒரு நாடு

அதன் ஒரு aidட் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட போதும் காத்திரமான பதில் நடவடிக்கை எடுக்காத ஒரு நாடு

புலிகள் தொடர்பான பலரை கைது செய்த நாடு

இவர்கள் முத்திரையை அனைவருக்குமான ஒன்றாக வெளிவிட்டுள்ளார்கள் என்று நம்ப முடியவில்லை. என் நம்பிக்கை பிழையாகவும் இருக்கலாம்

உண்மை தெரிந்தவர்கள் எழுதவும்

இது பற்றி கதைச்ச ஞாபகம்...

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பிரான்ஸ் அரசோ பிரான்ஸ் தபால் சேவை நிறுவனமோ பிரபாகரன் படம் பொறித்த முத்திரைகளை வெளியிடவில்லை. பிரான்சிலும் கனடாவைப் போல ஏன் சுவிஸ் அமெரிக்காவிலும் நீங்கள் விரும்பிய படங்களை முத்திரையாக அச்சடித்து எடுக்கலாம். உதாரணத்திற்கு நானே என்னுடைய படத்தை முத்திரையாக அடிக்கலாம் அதை இணைய மூலமாகவே வீட்டிலிருந்தபடி செய்யலாம்

http://montimbramoi....te.fr/?prov=199

இதனைத்தான் ஒருத்தர் செய்திருக்கிறார்.இதற்குனு சில தமிழ் இணையத்தள ஊடகங்கள் ஓவர் பில்டப் கொடுத்து செய்திகள் வெளியிட்டது மட்டு மல்லாமல் அதற்கு பிரான்ஸ் அரசின் அங்கீகாரத்தையும் வாங்கி கொடுத்துவிட்டார்கள். இந்த செய்தியை படித்து தயான் ஜய திலக வேறை அறிக்கை விட்டிருக்கிறார். ஆனால் இப்படியான தேவையில்லாத பரபரப்பு செய்திகள் ஒண்டுக்கும் உதாவாது. அது மட்டுமல்ல இனிவரும் காலங்களில் தமிழர் என்ன செய்தாலும் அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலைக்கு பிரெஞ்சு அரசை தள்ளும் நிலைக்கே இட்டுச்செல்லும்.

Edited by sathiri

உண்மையில் பிரான்ஸ் அரசோ பிரான்ஸ் தபால் சேவை நிறுவனமோ பிரபாகரன் படம் பொறித்த முத்திரைகளை வெளியிடவில்லை. பிரான்சிலும் கனடாவைப் போல ஏன் சுவிஸ் அமெரிக்காவிலும் நீங்கள் விரும்பிய படங்களை முத்திரையாக அச்சடித்து எடுக்கலாம். உதாரணத்திற்கு நானே என்னுடைய படத்தை முத்திரையாக அடிக்கலாம் அதை இணைய மூலமாகவே வீட்டிலிருந்தபடி செய்யலாம் http://montimbramoi.laposte.fr/ இதனைத்தான் ஒருத்தர் செய்திருக்கிறார்.இதற்குனு சில தமிழ் இணையத்தள ஊடகங்கள் ஓவர் பில்டப் கொடுத்து செய்திகள் வெளியிட்டது மட்டு மல்லாமல் அதற்கு பிரான்ஸ் அரசின் அங்கீகாரத்தையும் வாங்கி கொடுத்துவிட்டார்கள். இந்த செய்தியை படித்து தயான் ஜய திலக வேறை அறிக்கை விட்டிருக்கிறார். ஆனால் இப்படியான தேவையில்லாத பரபப்பு செய்திகள் ஒண்டுக்கும் உதாவாது. அது மட்டுமல்ல இனிவரும் காலங்களில் தமிழர் என்ன செய்தாலும் அதை உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நிலைக்கு பிரெஞ்சு அரசை தள்ளும் நிலைக்கே இட்டுச்செல்லும்.

விளக்கத்துக்கு நன்றி சாத்திரி...

எதிரி வெளியில் இல்லை,..என்றும் எப்பவும் எமக்குள்தான்

பிரேதங்களை வைத்து தமிழ் தேசிய வியாபாரம் செய்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இப்படியான போலித் தீனிதான் எனி வியாபார நொருக்குத் தீனி

கனடாவில் இருந்து வெளியாகும் 'உலகத் தமிழர்' பத்திரிகையின் முக்கிய செய்தி என்ன தெரியுமா

"சடலத்துடன் போன தமிழர்கள் 11 பேர் காணாமல் போயினர்"

இது பற்றி கதைச்ச ஞாபகம்...

'தமிழர்களும் விசர்க் கூத்துக்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்'

-பனங்காய் -

ஒரு சில நாட்களிலேயே செய்தி recycle பண்ணி வந்திருக்கிறது.

:lol:

4 , 5 நாட்களுக்குள் வந்த பழைய பதிவை எடுக்க முடியவில்லை.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

'தமிழர்களும் விசர்க் கூத்துக்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்'

-பனங்காய் -

ஒரு சில நாட்களிலேயே செய்தி recycle பண்ணி வந்திருக்கிறது.

:lol:

4 , 5 நாட்களுக்குள் வந்த பழைய பதிவை எடுக்க முடியவில்லை.

இந்த செய்தியை படிச்சதுமே இது பற்றி விபரமாய் எழுதுவா எண்டு நினைச்சனான் ஆனால் எப்ப பாத்தாலும் சாத்திரி மாவீரர் தினம் விளையாட்டு போட்டி இப்ப முத்திரை எண்டு தங்கடை பிழைப்பிலை மண்ணை போடுறானெண்டு எதுக்கு அவங்கடை வயித்தெரிச்சலை கொட்டுவான் எண்டு விட்டிட்டன். :)

அதோடை நானும் நித்திரை கொள்ளவேணுமல்லோ?? :lol: :lol:

Edited by sathiri

'தமிழர்களும் விசர்க் கூத்துக்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்'

-பனங்காய் -

ஒரு சில நாட்களிலேயே செய்தி recycle பண்ணி வந்திருக்கிறது.

:lol:

4 , 5 நாட்களுக்குள் வந்த பழைய பதிவை எடுக்க முடியவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் படத்தினையும் விடுதலைப் புலிகளின் இலட்சினையையும் கொண்ட நான்கு வகையான முத்திரைகள் இன்று பிரான்ஸில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டதுடன் அவை பாவனைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த முத்திரைகளை பிரான்ஸ் தபால் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது.பிரான்ஸில் வாழும் தமிழர் அமைப்பின் வேண்டுகோளையடுத்து வெளியிடப்பட்டுள்ள இந்த முத்திரை ஒவ்வொன்றினதும் பெறுமதி அந்நாட்டு நாட்டு நாணயப்படி 60 சதமாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளினால் வெளியிடப்பட்டள்ள தபால் முத்திரைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கவில்லை என அந்நாட்டுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்

.

இது அதனுடன் தொடர்புடைய வேறு செய்தி.

இந்த செய்தியை படிச்சதுமே இது பற்றி விபரமாய் எழுதுவா எண்டு நினைச்சனான் ஆனால் எப்ப பாத்தாலும் சாத்திரி மாவீரர் தினம் விழையாட்டு போட்டி இப்ப முத்திரை எண்டு தங்கடை பிழைப்பிலை மண்ணை போடுறானெண்டு எதுக்கு அவங்கடை வயித்தெரிச்சலை கொட்டுவான் எண்டு விட்டிட்டன். :)

அதோடை நானும் நித்திரை கொள்ளவேணுமல்லோ?? :lol: :lol:

என்ன பகிடியா? நீங்கள் எழுதி முடிப்பதற்குள்

'தயான் ஜெயதிலகாவையே தலை குப்பற கவிழ வைத்த தமிழர்களின் இராஜதந்திரம்' என அடுத்த செய்தி வரும்.

:lol:

இன்று சிங்களம் தன்னகத்தே கொண்டுள்ள இராஜ தந்திரிகளில் மிகவும் திறமை வாய்ந்தவர்களில் ஒருவர் என வர்ணிக்கப்படுபவர் தயான் ஜயதிலகா. இவரால் ஐரோப்பாவில் புலம்பெயர் தமிழர்கள் உட்பட சர்வதேச நடவடிக்கைகளை, குறிப்பாக ஜெனிவாவில் நடந்த மனித உரிமை தொடர்களை, சிங்களத்திற்கு ஆதரவாக முடிப்பதில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வருட பங்குனிமாத தொடரிலும் கூட சிங்களத்தை திசை திருப்ப இந்த முத்திரை விவகாரம் உதவினால் ... அது பெரும் நன்மையாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த நியாயத்தின் குரல் சர்வதேச அரங்கில் 2009 மே க்குப் பின்னர் தீவிரமாக ஒலிப்பதாக இல்லை. அதற்கு முன்னர் பிபிசி போன்ற ஊடகங்களில் அடிக்கடி கொழும்பில் மற்றும் பிற இடங்களில் நடக்கும் இராணுவ வடிவ தாக்குதல்களோடு.. தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரி போராடும் புலிகளின் தாக்குதல் இது என்று ஒரு குறிப்பாவது செய்தியில் அடங்கி இருக்கும். இது தமிழ் மக்கள் சிறீலங்காவில் ஏதோ உரிமை கேட்டு போராடுகின்றனர் என்ற ஒரு உணர்வை சர்வதேச அரங்கில் ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளில்.. பிபிசி யின் அநேக தலைப்புக்கள்.. சிறீலங்கா கிரிக்கெட்.. மீள் நல்லிணக்கம்.. இன ஒருமைப்பாடு.. பற்றியும்.. தமிழ் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சகஜ நிலைக்கு வருகிறார்.. போன்ற தொனியில் அமையும் செய்திகளே அப்பப்ப வந்து போகின்றன. அதுவும் எப்பவும் இருந்திட்டு.. பிபிசிக்கு ஒரு மூடு வந்தால் மட்டும் எழுதும்..!

இந்த நிலையில்.. நாடு கடந்த தமிழீழ அரசு பற்றி எல்லாம் எந்த சர்வதேச ஊடகமும் கவனம் செலுத்துவதில்லை. அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பற்றி பிபிசி ஆங்கிலம் செய்தி போட்டு.. கன காலம் இருக்கும். பிபிசி தமிழில் வரும் செய்திகளை பிபிசி ஆங்கிலம் உலகச் செய்திகளில் அடக்குவதில்லை. இந்த நிலையில் எமது மக்களின் உரிமைக் குரல் 2009 மே க்குப் பின்னர் சர்வதேச அரங்கில் நசுங்கிக் கொண்டிருக்கும் நிலையில்.. இவ்வாறான செயல்கள் மூலம் எமது மக்களின் உரிமைக்கான தேவை வெளிப்படுத்தப்படுவது மிகவும் சரியான செயற்பாடே.

சிலர் இதனை தமிழ் தேசியத்தின் குறுஞ்செயல்.. குறுந்தேசியத்தின் முடிவின் விரக்தி.. என்றெல்லா எழுதித் தொலைப்பார்கள். இவர்களின் எழுத்துக்களும் ஒரு சிறிய வட்டத்துக்குள் ஓடி வடிந்து வாய்க்கால் வழி காய்ந்து கருவாடாகிவிடும். அதனால் நாம் எமது இனம் சார்ந்து எதனையும் சாதித்துவிடப் போவதில்லை. எமது உரிமைக்கான தேவையைச் சொல்லும் குரல்.. தாயகத்தில் இருந்து அரசியல் தளம் சார்ந்து எழுகின்ற அதேவேளை புலம்பெயர் தளம் சார்ந்தும் சர்வதேசம் நோக்கி செல்ல வேண்டும்.

அடித்து ஓய்ந்துவிட்ட புயலைப் பற்றி பேசுவது குறைவு. அடித்துக் கொண்டிருக்கும் புயலைப் பற்றித்தான் உலகம் பேசும். அந்த வகையில் எமது உரிமைகள் இலங்கைத் தீவில் அடையப்படும் வரை நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் போராடிக் கொண்டிருக்க வேண்டும். திட்டுவார் திட்டட்டும்.. போற்றுவார் போற்றட்டும்.. எங்களுக்கு எது எமது உரிமைக்கான தேடலை பிறர் அறியச் செய்கிறதோ..அதைச் செய்வதில் தயக்கம் இருக்கக் கூடாது. அடுத்தவனின் புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும் அல்ல நாம் போராடிக் கொண்டிருந்தோம்.. போராடுகின்றோம். எமது சொந்த மண்ணில் எமது வாழ்வுரிமைக்கும்.. அரசியல் உரிமைக்காகவுமே போராடுகின்றோம். இதனை திட்டுவோரும்.. துரோகிகளும்.. ஒட்டுக்குழுக்களும் புரிந்து கொள்ள வேண்டும். எதிரிக்கு இலாபம் கிடைக்கும் வகையில் எனியும் இவர்கள் நடந்து கொள்வதை நிறுத்திக் கொள்வது.. பகுத்தறிவுத் தனமாக இருக்கும். இன்றேல்.. இவர்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு.. அல்லது ஓரம்கட்டிவிட்டு.. மக்கள் தமது வழியில் உரிமைக்கான போராட்டங்களை பல வடிவங்களிலும் எடுத்துச் சென்று சர்வதேசம் நாம் உரிமைக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.. எந்த இராணுவ அழுத்தங்களும் எமது குரலை நசுக்க முடியாது என்பதை உணரச் செய்வது அவசியம்..! அதன் மூலமே சர்வதேசத்தின் நியாயமான ஆதரவை நாம் எமது போராட்டம் நோக்கி தக்க வைக்க முடியும்.

பிரான்ஸ், புலிகளை அழிக்க முன் நின்ற ஒரு நாடு

அதன் ஒரு aidட் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்ட போதும் காத்திரமான பதில் நடவடிக்கை எடுக்காத ஒரு நாடு

புலிகள் தொடர்பான பலரை கைது செய்த நாடு

பிரான்ஸ் ஆரம்பத்தில் புலிகளுக்கு எதிராகச் செயற்படவில்லை. புலிகள் வெளிப்படையாகவே பரிசில் அலுவலகங்களைத் திறந்து வைத்திருந்தனர். இங்கிருந்தே அவர்களின் வெளியீடுகள் தயாரிக்கப்பட்டு ஏனைய நாடுகளுக்கு அனுப்பப் படுவது வழக்கமாக இருந்தது. சோதனை என்ற பெயரில் பல தடவைகள் போலிஸ் இந்த அலுவலகங்களுக்குள் நுளைந்திருந்தாலும் பெரும்பாலும் பாதிப்புகள் இருந்ததில்லை. சோதனைக்கு வருபவர்களின் உயர் அதிகாரிக்கு தலைவரைப் பற்றியும் இயக்கம் பற்றியும் நன்றாகத் தெரிந்திருந்தது.

ஒரு தடவை பிரான்ஸ் தன்னை இலங்கைப் பிரச்சனைக்குள் நுளைந்து உதவ விருப்பம் தெரிவித்து அது தோல்வியில் முடிந்தது. என்னைப் பொறுத்த வரையில் இதுவே பிரான்ஸ் புலிகளுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடினையும் எடுப்பதற்கும் முள்ளிவாய்க்கால் அவலத்தின்போது நாம் வீதிகளில் இறங்கிக் கதறியபோது மௌனமாக இருந்ததற்கும் காரணமாக இருக்கலாம். இது எனது கருத்து மட்டுமே.

.

ஒரு தடவை பிரான்ஸ் தன்னை இலங்கைப் பிரச்சனைக்குள் நுளைந்து உதவ விருப்பம் தெரிவித்து அது தோல்வியில் முடிந்தது.

பிரான்ஸ் உள்நுளைந்திருந்தால் தமிழர்களுக்குச் சாதகமானதொரு தீர்வை எட்டியிருக்கலாம் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் உள்நுளைந்திருந்தால் தமிழர்களுக்குச் சாதகமானதொரு தீர்வை எட்டியிருக்கலாம் என நினைக்கிறேன்.

லிபியாவில் பிரான்ஸ் தலையிட்டது போன்றா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் எதையும் விட்டுக்கொடுக்காமல் பேச்சுவார்த்தைகளில் கடும்போக்கைக் கடைப்பிடித்திருந்தனர். இது மேற்கு நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதும் முயற்சிகளின் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விட்டுக் கொடுப்புக்கள் சிலவேளைகளில் வெற்றியைத் தந்திருக்கலாம்.

அதற்கான உத்தரவாதத்தை யார் அளிக்க முன்வந்தார்கள்.

முத்திரை அடிப்பது இலகுவான விடயம்.

அங்கீகாரம் இல்லாத வேலைப்பாடுகள்

யாருக்குப் பிரயோசனம்.

லிபியாவில் பிரான்ஸ் தலையிட்டது போன்றா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் எதையும் விட்டுக்கொடுக்காமல் பேச்சுவார்த்தைகளில் கடும்போக்கைக் கடைப்பிடித்திருந்தனர். இது மேற்கு நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதும் முயற்சிகளின் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கலாம்.

லிபியாவில் தலையிட்டது மாதிரியில்லை.

நோர்வேயைப் போலன்றி பிரான்ஸ்,பிரச்சனை தரும் மற்றைய நாடுகளையும் சமாதானப்படுத்தக்கூடிய நிலையிலுள்ள ஒரு பலம் பொருந்திய நாடு. தென்கிழக்கு ஆசியாவில் தனது நலன் குறித்து பெரிதும் அக்கறை செலுத்தாத நாடு. பிரான்சிற்கு பெரிதாக எதிரிகள் இல்லை.

எவர் வந்திருந்தாலும் விட்டுக் கொடுப்புகள் இல்லாவிட்டால் தீர்வு பூஜ்யம்தான். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் நடுவர்களும் ஒரு எல்லைவரைதான் செயல்பட முடியும்.

லிபியாவில் பிரான்ஸ் தலையிட்டது போன்றா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் எதையும் விட்டுக்கொடுக்காமல் பேச்சுவார்த்தைகளில் கடும்போக்கைக் கடைப்பிடித்திருந்தனர். இது மேற்கு நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதும் முயற்சிகளின் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கலாம்.

விடுதலைப்புலிகள் இதயசுத்தியுடன் செயல்பட்டார்களா இல்லையா என்பதற்கு இந்த அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணங்கள் உண்மையை கூறுகின்றன. இதைக்கூட நாம் மேற்குலக இராசதந்திரிகளுக்கு, ஊடகவியலாளர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

TamilNet releases LTTE documents of 2006 talks: http://tamilnet.com/...=79&artid=34752

இந்த கருத்து வெற்றிகரமாக சிங்களத்தால் மேற்குலத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கருத்து. எமது பக்க உண்மைகளை நாம் அன்றும் இன்றும் வெற்றிகரமாக முன்னெடுக்கவில்லை.

CFA_in_words_and_deeds.jpg

Edited by akootha

பிரான்ஸ் சார்கோசிக்கு முன் அமெரிக்காவுடன்(யுத்தங்களில்) சேர்ந்து இயங்க விரும்பவில்லை. அதனால் அந்தநேரத்தில் மேற்கு நாடுகளுடன் புலி விரட்டலிற்கு இணையவில்லை. சார்கோசி புஸ்சுக்கு ஆதரவு கொடுக்க முனைந்தார். ஆனால் சார்கோசியை விரும்பாத ஒபாமா பதவிற்கு வந்தார். புதிய நிலையில் பிளெக்கின் இலங்கைகான உதவிகள் பெரிய புலி விரட்டல் பலன்களைத் தரவில்ல. இதனால் பிராசின் புலி விரட்டல் போக்கு தொடர்ந்தும் தெளிவில்லாமல் போவிட்டது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

முத்திரை அடிப்பதால் பிரயோசனம் இல்லை என்று நக்கல் அடிக்கும் பழைய தேசிய வாதிகளே .முத்திரை அடிப்பதால் பயன் எதவும் இல்லாவிட்டாலும் நட்டம் எதுவும் இல்லையே?பிரான்சின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமிழர் செய்த ஒரு அற்ப விடயத்திற்கு சிங்கள வெளிநாட்டமைச்சு பிரான்சின் தூதரக அதிகாரிகளிடம் கண்டனம் தெரிவித்துள்ளதானது.பிரான்சுக்கு ஒரு உண்மையை உணரத்தியிருக்கும் அல்லவா?ஒரு அற்ப விடயத்திற்கு அரசியல் உயர்மட்டத்தில் ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் தமிழர்களுக்கு எப்படி உரிமைகளை வழங்குவார்கள்?அங்கு தமிழர்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது.என்ற கேள்வி எழுமா? இல்லையா?இதைத்தான் வைக்கல் பட்டடை நாய் மாதிரி என்று சொல்லுவது. தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் என்ற மாதிரி இருக்கிறது.

சிறிலங்கா அரசு இந்த விஷயத்தை பார்த்து எப்போது அறிக்கைகள் விட புறப்பட்டுதோ அப்போதே எமக்கு சிறு வெற்றிதான்

  • கருத்துக்கள உறவுகள்

முத்திரை அடிப்பதால் பிரயோசனம் இல்லை என்று நக்கல் அடிக்கும் பழைய தேசிய வாதிகளே .முத்திரை அடிப்பதால் பயன் எதவும் இல்லாவிட்டாலும் நட்டம் எதுவும் இல்லையே?பிரான்சின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமிழர் செய்த ஒரு அற்ப விடயத்திற்கு சிங்கள வெளிநாட்டமைச்சு பிரான்சின் தூதரக அதிகாரிகளிடம் கண்டனம் தெரிவித்துள்ளதானது.பிரான்சுக்கு ஒரு உண்மையை உணரத்தியிருக்கும் அல்லவா?ஒரு அற்ப விடயத்திற்கு அரசியல் உயர்மட்டத்தில் ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் தமிழர்களுக்கு எப்படி உரிமைகளை வழங்குவார்கள்?அங்கு தமிழர்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது.என்ற கேள்வி எழுமா? இல்லையா?இதைத்தான் வைக்கல் பட்டடை நாய் மாதிரி என்று சொல்லுவது. தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் என்ற மாதிரி இருக்கிறது.

புலவருக்கு ஒரு பச்சை..! :rolleyes:

நடிகை மேக்கப் போட்டு நடித்தால் பார்த்து வீணி வடிப்பதும் பின்னர் மேக்கப் கலைந்தவுடன் திட்டுவதும் வாடிக்கையாகிவிட்டது..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

லிபியாவில் பிரான்ஸ் தலையிட்டது போன்றா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் எதையும் விட்டுக்கொடுக்காமல் பேச்சுவார்த்தைகளில் கடும்போக்கைக் கடைப்பிடித்திருந்தனர். இது மேற்கு நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதும் முயற்சிகளின் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கலாம்.

எதை விட்டு கொடுக்காமல் என்று விபரமாக எழுதினால் தெரியாத நாங்கள் வாசிச்சு அறியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

முத்திரை அடிப்பதால் பிரயோசனம் இல்லை என்று நக்கல் அடிக்கும் பழைய தேசிய வாதிகளே .முத்திரை அடிப்பதால் பயன் எதவும் இல்லாவிட்டாலும் நட்டம் எதுவும் இல்லையே?பிரான்சின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமிழர் செய்த ஒரு அற்ப விடயத்திற்கு சிங்கள வெளிநாட்டமைச்சு பிரான்சின் தூதரக அதிகாரிகளிடம் கண்டனம் தெரிவித்துள்ளதானது.பிரான்சுக்கு ஒரு உண்மையை உணரத்தியிருக்கும் அல்லவா?ஒரு அற்ப விடயத்திற்கு அரசியல் உயர்மட்டத்தில் ஆட்சேபனை தெரிவிப்பவர்கள் தமிழர்களுக்கு எப்படி உரிமைகளை வழங்குவார்கள்?அங்கு தமிழர்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது.என்ற கேள்வி எழுமா? இல்லையா?இதைத்தான் வைக்கல் பட்டடை நாய் மாதிரி என்று சொல்லுவது. தானும் படுக்கான் தள்ளியும் படுக்கான் என்ற மாதிரி இருக்கிறது.

இது கொஞ்சம் பழசும் இதுகளுக்கு பொருந்தாத உண்மையும்.

உண்மை என்னவென்றால்.................

படுக்க தெரியாத இதுகள் எல்லாம்............

படுத்தா நானே படுப்பேன் என்று அலைவதால் வரும் விளைவு.

உண்மை கொஞ்சம் கசப்பனதுதான்.............. (தெரிஞ்சா போய் படுக்க வேண்டியாதுதானே?)

அடுத்தவன் என்ன செய்வான் அதற்கு சர்வதேச அரசியல் விண்ணாணம் எழுதலாம் என்று காத்திருக்கிற வெங்காய மூட்டைகள்.

ஒரு புல்லை என்றாலும் புடுன்கினால்தான் தெரியும்? வியர்வை என்றால் என்ன என்று. அது தெரிந்தவன் அடுத்தவனுக்கு தோல் கொடுப்பானே தவிர. அவனது முதுகில் ஏறி இருக்கமாட்டான்.

  • கருத்துக்கள உறவுகள்

* இது ஒரு சிறு விடயம் என்றால் ஏன் தயான் ஜயதிலக்க முந்திரிக்கொட்டை போல அறிக்கை விட வேண்டும்??

* புலிகள் எதனை விட்டுக்கொடுத்து இருந்தாலும் அரசும் உலகமும் ஏமாற்றி இருப்பார்கள்.இதற்கு இலங்கை அரசினதும் மேற்குலகம்,யப்பான் போன்றவற்றின் இரட்டை வேடங்களை பலரும் அறிவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.