Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். மணமகன் சிட்னியில் சிறந்த கலைஞர்களில் ஒருவர். தான் பெற்ற கலை மூலம் உலகமெங்கும் சென்று நிகழ்ச்சி நடாத்தி தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்து வருபவர். வன்னித் தடுப்பு முகாம்களில் அடைபட்டு இருந்த 3 இலட்சம் தமிழர்களின் நிலையினை அவுஸ்திரெலிய மக்களுக்கு அறியச்செய்வதற்காக சிட்னியில் இருந்து கன்பரா வரை உள்ள 300 கிலோமீற்றர் தூரத்தினை தனது நண்பருடன் நடந்து சென்றவர்.

பகல் பதினொரு மணியளவில் மணமகன் குதிரை வண்டியில் ஏரிக்கரை ஒரத்தில் இருக்கும் பூங்காவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் மணத்தோழனுடன் வந்து இறங்கினார். மூன்று தலைமுறைக்கு முன்பாக வலிகாமம் வடக்கில் திருமண நிகழ்வுக்கு குதிரை வண்டியில் தங்களது பரம்பரையில் மணமகன்கள் வருவது வழக்கம், அதே போல மணமகன் வர வேண்டும் என மணமகனின் பாட்டியார் விரும்பியதினால் மணமகன் குதிரை வண்டியில் வந்தார். நாதசுரம், மேளவாத்தியங்கள் வாசிக்கப்பட மணமகன் மேடைக்கு வந்து அமர்ந்தார். மேடைக்கு அருகில் இருக்கும் ஒலிவாங்கியில் திருமண நிகழ்வு பற்றி, அதை முன்னெடுத்துச் சென்றவர் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தார். வழமையாகத் திருமண நிகழ்வுகளில் காணப்படும் தேவையற்ற சடங்குகள் இத்திருமண நிகழ்வில் இல்லை. ஆனால் சம்பிரதாயங்கள் பேணப்படும் என்று சொன்னார். மேடையில் ஐயர் ஒருவரையும் காணவில்லை. இதனால் வழமையான திருமண நிகழ்வுகளில் ஐயர்மார்களினால் சொல்லப்படும் பொருள் விளங்காத வட மொழி இங்கு உச்சரிக்கப்படவில்லை.

மணமகனின் தகப்பனார் தேங்காய் உடை த்ததும், மணமகனுக்கும் தோழனுக்கும் தலைப்பாகை கட்டும் நிகழ்வு நடைபெற்றது. பொதுவாக ஈழத்தில் பிறந்த பலர் சிட்னியில் தங்களது திருமணத்தின் போது வட இந்திய உடைகளை அணிவது வழக்கம். ஆனால் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன் வேட்டி அணிந்திருந்தார். சால்வையினைக் கொண்டு மணமகனுக்கும் தோழனுக்கும் தலைப்பாகை இங்கு அணிவிக்கப்பட்டது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வரும் உதயன் பத்திரிகையில் மாப்பிள்ளைகளின் சீதனப் பட்டியலின் விபரங்கள் வெளியாகி இருந்தன. பெரும்பாலான ஆண்கள் தன்னைப் பற்றி நினைப்பதில்லை. ஆனால் தனக்கு வருபவர் இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும். அத்துடன் முக்கியமாக கொழுத்த சீதனம் தரப்பட வேண்டும். சிங்கள அரசு, தமிழர் தயாகத்தினை முற்று முழுதாக கைப்பற்றிய பின்பு தாயக விடுதலைக்காக அர்ப்பணித்த பெண்கள் பலரினை சமுகம் ஒதுக்கி வைத்திருப்பதாக ஊடகங்களில் சில செய்திகள் வந்தன. சிலரை அவர்களின் குடும்பங்களே கண்டு கொள்வதில்லை எனவும் செய்திகள் வந்தன. ஆனால் வன்னியில் இருந்து பெண் ஒருவரைத் தேடிக் கண்டு பிடித்து சிட்னிக்கு அழைத்து, மணமகளாகக் கைபிடிக்க முனைந்தார் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன். மணமகனுக்குத் தலைப்பாகை அணிவிக்கப்பட்டதும், வெவ்வேறு வயதுடைய 28 தோழிகளுடன் மணமகள் மேடைக்கு வந்தார்.

மே 19 2009க்கு முன்பு விடுதலைப்புலிகளை உயர்வாகப் பேசியவர்களில் சிலர் இப்பொழுது விடுதலைப்புலிகளைத் தாழ்த்திப் பேசுகிறார்கள். அவர்களின் தியாகங்களை கொச்சைப் படுத்துகிறார்கள். முன்பு ஊடகங்களில், மேடைகளில் , பொதுவிடங்களில் புலிகளை உயர்வாகச் சொன்ன இவர்கள் மே 2009க்குப் பிறகு வந்த மாவீரர் தினங்களில் கலந்து கொள்வதில்லை. மாவீரர்களின் தியாகங்களை நினைத்துப் பார்ப்பதில்லை. மணமகள் மேடைக்கு வந்ததும் மாவீரர்களை நினைத்து அகவணக்கம் செய்யப்பட்டது.

திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர், தாலி பற்றி ஒரு அறிமுகம் கொடுத்தார். அன்பின் சின்னமாக, அடையாளமாக அணிவிக்கப்படுவது தாலி. இது வேலி என்ற கருத்து தேவையற்றது. வேலி, எம் மனதில் போடவேண்டியது, கழுத்தில் அணியப்படுவதல்ல என்று அவர் கூறியதுடன் திருமண நிகழ்வுக்கு வந்திருந்தோர் தாலியை வாழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது. அதே வேளை ஓதுவார் ஒருவரால் பஞ்ச புராணம் ஓதப்பட்டது. தொடர்ந்து மணமகன் அளிப்பும் மணமகள் அளிப்பும் இடம்பெற்றன. திருமணம் பற்றி தேசியத்தலைவர் சொன்ன "ஆணும் பெண்ணும் ஒத்திசைவாக ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கௌரவத்தையும் மதித்து, குடும்ப வாழ்வின் பொறுப்புகளைப் பகிர்ந்து, சமுகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து, பரஸ்பர புரிந்துணர்வுடன் பற்றுக் கொண்டு வாழ வேண்டும்" என்ற கூற்றினை திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர் சொன்னார். முள்ளிவாய்க்கால் அவலம் வரை தாயகத்தில் அங்குள்ள மக்களுக்கு உதவிய தமிழர் ஒருவர் தேங்காய் உடைக்க, மறைந்த மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களின் துணைவியார் ஆசீர்வதிக்கப்பட்ட தாலித்தட்டை ஏந்தி நிற்க, அவர் முன்னிலையில், தாயகத்துக்கு அதிகளவு உதவி செய்யும் தம்பதியினர் தாலியினை எடுத்து மணமகனுக்கு வழங்க, வீரச்சாவடைந்த மாவீரர்களையும், அரச படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூரப்பட்டவேளையில் மணமகனால் மணமகளுக்கு தாலி கட்டப்பட்டது.

திருமண நிகழ்வில் "பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே " ,"தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும் – என் தேசமெங்கும் குண்டு வந்து வீழும் கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் – அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்" போன்ற தாயக விடுதலை கீதங்களை அழகாக நாதசுர இசையில் காதுக்கு இனிமையூட்டினார் நாதசுரக் கலைஞர். மக்கள் பெற வேண்டிய பேறுகள் பதினாறு. காளமேகப்புலவர் இப்பதினாறு பேற்றையும் இறைவனிடம் வேண்டிப்பாடிய பாடலை கூறி அழகாக அந்த பதினாறு பேறுகளும் எவை என விளக்கம் தந்தார், திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர். அவையாவன புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மக்கள், துணிவு, செல்வம், உணவுத்தானியம், நல்லூழ், இன்பம், அறிவு, அழகு, பெருமை, அறம், நோயின்மை, நீண்ட ஆயுள்.

மணமகன் மணமகளுக்கு குங்குமப் பொட்டிட, மணமக்கள் மாலை மாற்ற, பெற்றோர், பெரியோர், வந்திருப்போர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்த சுவையான மதிய போசனத்துடன் திருமண நிகழ்வு ஒன்று முப்பது மணியளவில் முடிவுற்றது. வன்னியில் எத்தனையோ பெண்கள் திருமணவயது வந்தும் மாப்பிள்ளைகள் கிடைக்காமல் வாழ்கிறார்கள். இந்த மணமகன் முன்னெடுத்துச் செய்தது போல, புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் பல இளைஞர்கள், மணம் செய்ய எண்ணும் போது, வன்னிவாழ் பெண்களை வாழ்க்கைத் துணையாக்க முன்வருவார்களா?.

http://kanthappu.blogspot.com/2012/01/blog-post.html

ஏன் இதை வீட்டில் வைத்து உறவினரோடு சேர்ந்து திருமணத்தை நடத்தி இருந்தால் வீன் செலவு மிச்சம் ...... 28 தோழிமாரோடு மனபெண் வாறா என்றால் ஆடமபர்மாக கொண்டாட்டி இருக்கிறார்கள்... இதுவும் ஒரு தற்புகழுக்காக செய்ய பட்ட திருமணமோ.......

ஏன் இதை வீட்டில் வைத்து உறவினரோடு சேர்ந்து திருமணத்தை நடத்தி இருந்தால் வீன் செலவு மிச்சம் ...... 28 தோழிமாரோடு மனபெண் வாறா என்றால் ஆடமபர்மாக கொண்டாட்டி இருக்கிறார்கள்... இதுவும் ஒரு தற்புகழுக்காக செய்ய பட்ட திருமணமோ.......

அப்பாடா நீர் தான் ஒரிஜினல் தமிழன், வாழ்த்த மனம் வரவில்லை அதிலும் ஒரு குறை கண்டு நொட்டை சொன்னீரே .நல்லது

வாழ்த்துகள் புது மண தம்பதியினருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

Is it Seran Sivapalan??

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புது மணதம்பதியினருக்கு..

இந்த இளைஞர்தான் முன்பு நவம் அறிவுகூடத்திற்கு ஒவ்வோரு வருடமும் நடனநிகழ்ச்சி நடத்தி பணம் சேகரித்து அனுப்பினவர்..தொடரட்டும் இவரின் சேவைகள்...

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் மணமக்களுக்கு

எல்லாவிதத்திலும் முன் உதாரணமாக இருக்கவிரும்பிய அந்த இளைஞனுக்கு கலைஞனுக்கு பாராட்டுக்கள்.

அவரை வாழ்த்திய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகள்.

ஏன் இதை வீட்டில் வைத்து உறவினரோடு சேர்ந்து திருமணத்தை நடத்தி இருந்தால் வீன் செலவு மிச்சம் ...... 28 தோழிமாரோடு மனபெண் வாறா என்றால் ஆடமபர்மாக கொண்டாட்டி இருக்கிறார்கள்... இதுவும் ஒரு தற்புகழுக்காக செய்ய பட்ட திருமணமோ.......

பொது இடத்தில் நடத்தியபடியால் தான் நாலு பேருக்கும் விசயம் தெரியவந்தது.

எதிலும் ஒரு புரட்சியிருக்க வேண்டும்.எமக்கென ஒரு வடிவமைப்பு வேண்டும்.இவையிரண்டையும் ஒன்றுபட செய்த தம்பதியினருக்கு வாழ்த்துக்கள்!

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் .....பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள் மணமக்களுக்கு :)

அப்பாடா நீர் தான் ஒரிஜினல் தமிழன், வாழ்த்த மனம் வரவில்லை அதிலும் ஒரு குறை கண்டு நொட்டை சொன்னீரே .நல்லது

ஒரு கை உதவி செய்தால் அதை மறு கைதெரியாது இருக்க வேண்டும் அதுதான் அண்ணை இங்கை தம்பட்டமே அடிச்சு சொல்லியாச்சு எல்லோ :D :D :D

வாழ்க மணமக்கள்! வளர்க இக்கலாச்சராம்!!

இவ்வாறான செயற்பாடுகள் பரவ இவைபோன்றவை முக்கிய செய்தியாக எமது ஊடகங்கள் இணைக்கவேண்டும்.

மணமக்களுக்கு வாழ்த்துக்களும்...பாராட்டுக்களும்...!

மணமக்கள் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவனை. வேண்டுகிறேன்.

வாழ்த்துக்கள் புது மணதம்பதியினருக்கு..

உண்மையான தமிழ் மணமக்களுக்கு என் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் :):rolleyes: .

அவர்களின் திருமணத்தை எம்முடன், பகிர்ந்து கொண்ட கந்தப்புவுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

சேரன் தம்பதியினர், எல்லா நலமும் பெற்று வாழ எனது நல்வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு வாழ்த்துக்கள் .....பாராட்டுக்கள் !

அவர்களின் திருமணத்தை எம்முடன், பகிர்ந்து கொண்ட கந்தப்புவுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய வாழ்த்துக்களும்......

தம்பதியினருக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் புது மணதம்பதியினருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்களுக்கு எனது திருமண வாழ்த்துக்கள்..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

28 தோழிமாரோடு மனபெண் வாறா என்றால் ஆடமபர்மாக கொண்டாட்டி இருக்கிறார்கள்... ......

சிட்னியில் பெரும்பாலன் திருமணங்கள் ஆடம்பரமான முறையில் பெரிய மண்டபங்கள் நடைபெறும். ஆனால் இங்கு மிகவும் எளிமையான முறையில் ஒரு பூங்காவில் கொட்டகை அமைத்து திருமண நிகழ்வினை நடாத்தினார்கள். திருமண விழாவுக்கு வந்தவர்கள் உண்பதற்கு உணவினை தயாரிப்பதற்கு ஒரு அமைப்பிடம் வழங்கினார்கள். அந்த அமைப்பு ஒவ்வொருமாதமும் ஒரு பொது இடத்தில் உணவினைத் தயாரித்து விற்பார்கள். அதில் கிடைக்கும் வருமானத்தினை தாயகத்துக்கு உதவி செய்து வருவார்கள். மணமகள் வன்னியைச் சேர்ந்தவர். அவருக்கு சிட்னியில் தெரிந்தவர்கள் ஒருவரும் இல்லை. இதனால் மணமகள் கொட்டகையின் வாசலுக்கு வந்தபோது, கொட்டகையில் இருந்த வெவ்வேறு வயதுடைய பெண்கள் இவரின் தோழிகளாக விரும்பிச் சென்றார்கள். அவர்கள் 28 பேர்கள்.மண்மகன் வாழும் சிறிய வீட்டில் திருமண நிகழ்ச்சியை வைத்தால் மணமகனின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்ள முடியும். வேறு உறவினர்கள், நண்பர்களுக்கு வரவேண்டும் என்றால் பெரிய இடத்தில் தான் திருமண நிகழ்ச்சியினை வைக்கவேண்டும். நண்பர்களை, உறவினர்களை அழைக்காது திருமண நிகழ்ச்சியை நடாத்தினால் அவர்கள் உங்களைப் போல குறை சொல்லமாட்டார்களா?.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கை உதவி செய்தால் அதை மறு கைதெரியாது இருக்க வேண்டும் அதுதான் அண்ணை இங்கை தம்பட்டமே அடிச்சு சொல்லியாச்சு எல்லோ :D :D :D

இதனை எழுதியது நான். இதற்கும் மணமக்களுக்கும் சம்பந்தமில்லை. இத்திருமண நிகழ்வுக்கு சென்று வந்தபோது பார்த்ததினை எழுத வேண்டும் எனக்கு தோன்றியதினால் இங்கு எழுதியிருக்கிறேன். மகிந்தா அமெரிக்கா சென்றார் என்ற செய்தியை நான் இங்கு யாழில் எழுதினால் மகிந்தா தம்பட்டம் அடிக்கிறார் என்ற பொருளா?

சேரன் தம்பதியினர், எல்லா நலமும் பெற்று வாழ எனது நல்வாழ்த்துக்கள்!

இன்னுமொரு பதிவில் இத்திருமண நிகழ்வுக்கு வருவதாகச் சொல்லியிருந்தீர்கள். கலந்து கொண்டீர்களா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.