Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் : விநாயகமூர்த்தி முரளிதரன்புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் : விநாயகமூர்த்தி முரளிதரன்

Featured Replies

புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன் : விநாயகமூர்த்தி முரளிதரன்

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்த போவதாக மீள் குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் புலிகளின் இரகசியங்களை வெளிப்படுத்துவேன்.

தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் வெளிப்படுத்துவேன். புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சர்வதேசம் அடைக்கலம் வழங்கி வருகின்றது.

சம்பந்தன் தரப்பு ஜெனீவா செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி மாளிகையிலிருந்து அவர்கள் கல் எறியக் கூடாது.

பிரபாகரன் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மற்றும் அரசியல்வாதிகளை கொலை செய்த தகவல்கள் என்னிடம் இருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன்.

மேற்கு நாடுகளில் வாழும் புலித் தலைவர்களின் பெயர் பட்டியல் என்னிடம் இருக்கின்றது என விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

http://news.lankasri.com/view.php?20cILz20eRjQA4ebiGpLcbdF92Wddc8293bc41pG3e42oQj3023PLS32

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் இவர், அந்த ரகசியங்களை வெளியிடாமல் இருந்ததுக்கு.... சிங்களவன் மொத்தி எடுக்கப் போறானே... :icon_idea:

"தவளையும் தன் வாயால்... கெடும்"

  • கருத்துக்கள உறவுகள்

karuna-amman-150LTTE.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், மனித உரிமை மீற்லகள் தொடர்பான அனைத்துத் தகவல்களும் தன்னிடம் உள்ளதாகவும் அத்துடன் மேற்குலகிலுள்ள புலிகளின் தலைமைப் பட்டியலும் தன்னிடம் உள்ளதெனவும் - இவை அனைத்து இரகசியங்களையும் எதிர்வரும் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமை கவுன்ஸில் அமர்வுகளில் அம்பலப்படுத்தப் போவதாகவும் கூறியுள்ளார் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் முன்னைநாள் மட்டக்களப்பு புலிகளமைப்பு தளபதியாகவிருந்த கருணா.

தமிழீழ விடுதலைப் புலிகள் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் வெளிப்படுத்துவேன். புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர்ந்த தலைவர்களுக்கு சர்வதேசம் அடைக்கலம் வழங்கி வருகின்றது. சம்பந்தன் தரப்பு ஜெனீவா செல்வதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கண்ணாடி மாளிகையிலிருந்து அவர்கள் கல் எறியக் கூடாது. பிரபாகரன் மேற்கொண்ட போர்க் குற்றச் செயல்கள் மற்றும் அரசியல்வாதிகளை கொலை செய்த தகவல்கள் என்னிடம் இருக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து செயற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நான் எச்சரிக்கை விடுக்கின்றேன். இவ்வாறு எல்லாம் அவர் தெரிவித்திருக்கிறார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனித உரிமை மதிக்கப்படும் நாட்டில், நுளைவனுமதியே பெறமுடியாத தராதரம், தன் தகுதிக்கு பொருந்தாத வேலைக்கு ஆசைப்படுகின்றது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தான் செய்த போர் குற்றங்களை யார் சொல்வார்களாம், ஒளிக்கத்தெரியாத திருடன் தலையாரி வீட்டில் போய் ஒளிந்து கொண்ட கதைதான்.

உங்களிட்ட இருந்து நாங்க இன்னும் பெரிசா எதிர்பார்க்கிறம் தல. :D

வெளியிடவே மாட்டார் .

வெளியிடுவதற்கு இருக்குதோ இல்லையோ, வெளியிட்ட பின்னர் இவரை யாருக்குமே தேவை இல்லை என்ற நிலை வந்து விடும்!

  • கருத்துக்கள உறவுகள்

எஜமானர் விசுவாசம் தொடர்ந்து குலைக்கத்தான் வேண்டும் ........

குலைக்கவில்லைஎன்றால் நாய் பிடிக்றவனிடம் சொல்லி பிடித்து கொடுத்துடுவாங்கள். :lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

பாவம்

கிணற்றுத்தவளை

உலகு இவரிடம் கேட்டுத்தான் தன்னை மாற்றணும் என்று ஆசைப்படுகுது.

அதன் ஆசையை ஏன் கெடுப்பான். எடுத்துவிடப்பு.

வைத்திருப்பது உனக்கும் நல்லதல்ல.

இனி இந்த வெருட்டுதல்களை நாமும் கேட்கவேண்டாம்.

சிங்களவன் ஏற்கனவே புலிகள்செய்ததை பத்து மடங்காக்கி சர்வதேசத்தை தன் நடிப்பால் கட்டிவைத்திருக்கிறான். இவர் சொல்லப்போகும் தரவுகளுடன் அவர்கள்

சீ இவ்வளவு தானா என தங்கள்முடிவை மறுபரிசீலனை செய்யட்டும்.

Edited by விசுகு

உந்தக் கொசுத் தொல்லை தாங்கமுடியல்ல!

சிங்களவன் ஏற்கனவே புலிகள்செய்ததை பத்து மடங்காக்கி சர்வதேசத்தை தன் நடிப்பால் கட்டிவைத்திருக்கிறான். இவர் சொல்லப்போகும் தரவுகளுடன் அவர்கள்

சீ இவ்வளவு தானா என தங்கள்முடிவை மறுபரிசீலனை செய்யட்டும்.

இது பத்து மடங்கிற்குமான சாட்சியை முன்வைக்கும் நடவடிக்கை.

புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து கருணா போன்றவர்களும் முன்னாள் புலிகளும் சாட்சியாக முன் நிற்கும் போது இலங்கை அரசு மீதான போர்க்குற்ற குற்றச் சாட்டு பலவீனமாகும். இலங்கை அரசு இந்தியாவை மேற்குலகை அனுசரித்துப் போனால் இப்போது போர்க்குற்றத்தை கையில் எடுக்கும் மேற்குலகு புலிகளின் போர்க்குற்றத்தையும் இவ்வாறானவர்களை முன்நிறத்தி இலங்கை அரசை காப்பாற்ற முனையும். ஆனால் இதற்கு கருணா போன்றவர்களும் பலியாக நேரிடும். சிங்களவர்களின் புத்திசாலித்தனமும் ஒற்றுமையில்லாத் தமிழர்களின் முட்டாள்த்தனமும் மாற்றம் இன்றி அதனதன் பாதையில் பயணிக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐநா மூவர் குழுவின் பரிந்துரையிலும் விடுதலைப்புலிகள் மீது போர்க்குற்றச் சாட்டுக்கள் சொல்லப்பட்டுள்ளன. அதற்கு விடுதலைப்புலிகளில் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கு எவரை அழைப்பது என்ற நிலை. அதுவும் இன்றி.. ஐநா மூவர் குழு பரிந்துரைக்கு அமைய சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள தாம் தயார் என்று விடுதலைப்புலிகள் சார்பில் ஒரு அறிக்கை வெளிவந்தது ஞாபகம் இருக்கிறது. மேலும்.. அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் படுகொலை செய்த.. சிறீலங்கா அரசினை சர்வதேச சமூகம் விசாரிக்கும் போது விடுதலைப்புலிகளும் தம்மீதான குற்றசாட்டுக்களுக்காக அதனை எதிர் கொள்வது அவசியம். அது அவர்கள் மீதான களங்கத்தை போக்கவும்.. அவர்களின் நடவடிக்கைகள் மீதான நீதியை நிலைநாட்டவும் உதவும்..! கருணாவும் அந்த வகையில் விசாரிக்கப்பட வேண்டியவர். கருணா தனிக் குழுவமைத்து இயங்கிய காலத்தில் சிறீலங்கா அரசின் கொலைக்கருவியாக செயற்பட்டமை குறித்த சர்வதேச அளவிலான பெருமளவு குற்றச்சாட்டுக்கள் அவர் மீது உள்ளது..! அதேபோல் டக்கிளஸ்.. சித்தார்த்தன்.. போன்றவர்கள் மீதும் உள்ளது..!

Duo12.jpg

கருணாவிடம் இரகசியம் எதுவும் இல்லை. அவன் எல்லோரும் ரகசியமாக்குபவற்றை பரகசியமாக்கி தன்னைத்தான் பரகசிக்க வைக்கும் பேதை. இவன் என்ன மற்றவர்களைப் பற்றிய ரகசியம் அவிட்டு விடப்போகிறான்.

ஒருதடவை குருடன் ஒருவனின் மனைவி பிள்ளைக்கு பால் கொடுக்கும் போது பால் விக்கி குழந்தை இறந்து விட்டது. குருடன் மனைவியிடம் கேட்டான் பால் எப்படி இருக்கும் என்று. அவள் சொன்னாள் கொக்கு மாத்திரி இருக்குமென்று. அதற்கு "அப்படியா? அந்த கொக்குதான் என்ன மாதிரி இருக்குமென்று சொல்லேன்" என்று கேட்டான் குருடன். அது இப்படி இருக்கும் என்று கூறித் தன் முழங்கையை மடித்துத் தடவிப் பார்க்கவிட்டாளாம் மனைவி. தடவிப் பார்த்த குருடன் பதறிப்போய் இதைக்குடித்த குழந்தைக்கு எப்படி விக்காமல் உள்ளே போயிருக்கும் என்றானாம். அந்த குருடனளவு விவேகத்தில் எல்லோரையும் வைத்து கதைக்கிறான் கருணா. இவன் சம்பந்தர் போர்குற்றவாளி என்றவுடன் எல்லோரும் சம்பந்தரை பார்த்து அப்படியா அதை ஏன் செய்த்தாய் என்று கேட்டுவிடப்போகிறார்கள் என்றா நினைக்கிறான்?

சாட்சிக்கு ஒருவருமில்லாமல் ஐ.நா. அதிகாரிகளை வெளியே அனுப்பிவிட்டு கொலைகளைச்செய்த ராசபக்சா புலிகள்கள் தான் ஓடிப்போன மக்களைக் கொன்றவர்கள், ஆகவே அவர்கள் போர்க்குற்றவாளிகள் என்றார். அதன் பின்னர் ராசபக்சா புலிகள் ஆயுதத்துடன் கேட்ட சுய ஆட்சியையே கூட்டமைப்பும் கேட்பதினால் கூட்டமைப்பும் ஆயுதம் தாங்கிய புலிகள் போல ஒரு பயங்கரவாத இயக்கம்தான் என்றார். இப்போது கூட்டமைப்பு ஒரு பயங்கரவாத இயக்கம் என்பதினால் சம்பந்தர் ஒரு போர்குற்றவாளி என்கிறான் கருணா. கருணா! மேற்குலகம் நீ நினைக்குமளவு குருடர்களாய் இருந்திருந்தால் நீ திருப்பி இலங்கை வந்திருக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது.

புலிகள் போர்க்குற்றவாளிகள் என்றவர் மகிந்தா. கூட்டமைப்பு புலிகள் மாதிரி பயங்கரவாத இயக்கம் என்றவர் மகிந்தா. ஆனால் சம்பந்தர் போர்குற்றவாளி என்பதை கருணாதான் சொல்கிறான். மகிந்தாஅதை மட்டும் தான் கூறாமல் கருணாவிடம் விட்டுவிட்டார். உண்மையில் இங்கே பலப்பரீடசை போவது சம்பந்தருக்கும் மகிந்தாவிற்கும் இடையில்த்தான். மகிந்தாவிற்கு அடுத்து போர்குற்றவிசாரணையை எதிர்த்தவர்தான் சம்பந்தர். இந்தியாவும் மேற்கு நாடுகளும் எப்பாடியாவது மகிந்தாவை அடக்கிப்பிடித்து ஒரு உடன் படிக்கை ஒன்றுக்குள் மாட்டி விடுவார்கள் என்று நினத்துத்தான் பேச்சுவார்த்தைகள்தான் வேண்டும்; போர்குற்ற விசாரணை வேண்டாம் என்றவர் சம்பந்தர். டிமிக்கி கொடுப்பதில் மன்னரான மகிந்தா மேற்கு நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் டிமிக்கி கொடுக்க பெரிய கஷ்டம் ஒன்றும் படவில்லை. அவ்வளவு இலகுவில் காரியத்தை மகிந்த முடித்துவிட்டதால்த்தான் இன்று மகிந்தா மனத்தை ஒரு புதிய விடயம் உறுத்தத்தொடங்கியிருக்கிறது.

இந்தியாவை அவர் விட்டுத் தள்ளிவிடுவார். ஆனால் இந்த மேற்குநாடுகளுடனும் அப்படியேதான் எல்லாம் முடிந்து விட்டது என்று நினைக்க மகிந்தாவுக்கு விருப்பம் இல்லை. அவர்கள் எதோ போர்க்குற்றம் என்று கூட்டம் போட போகிறார்கள். இந்த சம்பந்தரும் அங்கே போனால் பேச்சு வார்த்தைகளில் பட்ட ஏமாற்றத்திற்காக தன்னைக் காட்டிக் கொடுத்து விடுவாரோ என்று எண்ணுகிறார் மகிந்தா. அதற்கு வழியாக, எப்போதுமே ஊணுக்கு உண் கேட்கும் மகிந்த சித்தாந்தக்காரனால் சிந்திக்க தக்கதொன்று தன்னை போர்குற்றம் சாட்டுபவர்கள் மீது திருப்பிச் சாட்டிவிடுவதுதான். பீரிஸ் தொடக்கம், நாராயண், சிவசங்கர் மேனன், கிருஸ்ணா, கருணா, ரம்புகவெல, திமிறி கூத்தடித்து திருத்தபட்ட பொன்சேகா அடங்களாக, மகிந்தவால் அவரின் உதவியாளர்களாக வைத்திருப்பவர்கள் எல்லோருமே, மகிந்தாவிற்காக களவு செய்யப்போய் அந்தக் களவில் மகிந்தாவிடம் மாட்டியிருக்கும் முட்டள்கள் மட்டுமே. இடத்திற்கு ஏற்ப ஒவ்வொருவரையும் மாற்றி மாற்றிப் பாவித்து கொள்ளுகிறார் மகிந்தா. இங்கே கருணா பாவிக்க பட்டிருக்கிறான். அதாவது சம்பந்தர் தவறிப்போய்விட்டால், போர்குற்றத்தை தடுக்க வேண்டிய தேவையுள்ள, தடுக்க முயல மனம் வைக்க கூடிய ஒரே ஒரு இன்னொரு தமிழன் கருணாதான்.

போர்குற்ற விசாரணை வந்தால் புலிகளும்தான் விசாரிக்கப் படுவார்கள் என்பதுதான் பேச்சு. அதன் பெரிய பாகம் கருணாவைச் சேரும் என்பது அவனுக்குத் தெரியும். இன்னும் அவனும் மகிந்தாவும் எதிர் எதிர் தரப்பில் வைத்துத்தான் விசாரிக்கப் படுவார்கள்கூட. அவனை வைத்துத்தான் மகிந்தா புலிகளை முடித்தவர் என்பதால் அவர் விட்ட சேட்டைகளில் பெரும் பாகம் அவனிடம் இருக்கு. "பிரபாகரன்" என்று காட்டப் பட்ட உடம்பை பார்த்துவிட்டு "மோட்டு சிங்களவன் கோட்டை விட்டு விட்டான்" என்று கருணா கூறியதாகத்தான் பேச்சு. அந்த சிறியது தொடக்கம் கருணா செய்தவை எல்லாம் மகிந்தாவிடமும் இருக்கு. அதனால்த்தான் அந்த "கண்ணாடி வீட்டிலிருப்போர் கல் எறியக்கூடாது" என்ற பழமொழி இருவர் மனத்திலும் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்தது. சம்பந்தர் கண்ணாடி வீட்டுக்குள்ளுமில்லை. அவர் கல் எறிவதும், மாறி எதிர்க்கன்னையில் நின்று "காச்" பிடிப்பதும் மேலை நாடுகள் சொன்னால் மட்டும் தான். எனவே கருணாவும், மகிந்தாவும் சம்பந்தரை குறிவைப்பது எய்தவனிருக்க அம்பை நோவது போல். எனவே இருவரும் சம்பந்தை தனியே விட்டு விட்டு மேற்கு நாடுகளுக்கு நல்ல ஒரு பொங்கல் வைத்து படையல் போடும் முயற்சியில் இறங்கட்டும். அதை விடுத்து சம்பந்தரை மிரட்டுவது போல் கருணா விடும் மிரட்டல்களுக்கு மேற்கு நாடுகள் அவ்வளவு எளிதில் பயந்து போர்குற்ற விசாரணையை கைவிட்டுவிடமாட்டா.

Edited by மல்லையூரான்

அரசு, ஐ.நா. போர் சம்பந்தமான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்ட ஒரு அரசு. விடுதலைப்புலிகள் அமைப்பு, ஒரு ஆயுதம் ஏந்திய விடுதலை அமைப்பு, அதுவும் பல இடங்களில் போர்குற்ற விதிகளை மீறியுள்ளது. ஆனால் இரண்டையும் ஒரே தாராசில் போட முடியாது என்பது உண்மையே.

அதேவேளை புலிகள் இறுதி நாட்களிலும் அதற்கு முன்னரும் பல சிங்கள வீரர்களை விடுதலை செய்தனர்.

தம்மால் கொல்லப்பட்ட சிங்கள வீரர்களை சகல இராணுவ மரியாதைகளுடனும் அடக்கம் செய்துள்ளனர்.

ஆனால் சிங்கள அரசு இந்த நிமிடம் வரை இன்றும் இராணுவ, அரச விதிமுறைகளை மீறிய வண்ணம் உள்ளது. தம்மிடம் உள்ள விடுதலைப்புலிகள் விபரத்தை மறைத்தே உள்ளது - அதுவே அந்த குற்றம்.

எனவே விசாரணை என்று வரும்பொழுது ...

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் சர்வதேசத்தைப் பொறுத்தவரை ஒரு பயங்கரவாத அமைப்பு.அவர்கள் போர்க் குற்றம் செய்தார்கள் என்று சர்வதேசத்தை நம்ப வைக்க கருணா தேவையில்லை.ஆனால் ஒரு பொறுப்புள்ள ஐ.நா வில் அங்கம் வகிக்கும் ஒர் அரசு செய்த போர்க்குற்றமே பெரிய குற்றமாகும்.அதனையே விசாரிப்பதற்கு சர்வதேசம் விரும்புகிறது.அதற்காகவே இரு பக்கத்திலும் போர்க் குற்ற மீறல்கள் நடந்தள்ளன என்ற கூறுகிறார்கள்.சரி புலிகள் பக்கத்தில் போர்க்குற்ற விசாரணைகளைச் செய்வதற்கு அதன் உயர் மட்டத் தலைவர்கள் வெளிப்படையாக இல்லை. கரணா மட்டுமே வெளிப்படையாக வெளியே இருப்பதால் கருணாவையே விசாரிக்க வேண்டும்.போர்க் குற்ற விசாரணை என்பது தனியே முள்ளி வாய்க்காலில் நடந்தவை மட்டுமன்று.இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து விசாரிக்கப்பட வேண்டும்.அப்பொழுதுதான் படிப்படியாக அவர்கள் செய்த இனப்படுகொலை நிரூபிக்கப்படும்.

இதைத்தான் சொல்லிறது.

தவளையும் தன் வாயால் கெடும்.

யானை தன் தலையில் தானே மண் அள்ளிப்போட்ட மாதிரி.

பல்லக்கேறுவதும் வாயாலே பல்லுடைபடுவதும் வாயாலே.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை மட்டமாக எடை போடும் எங்களின் பாங்கு, மாறும்வரை எமக்கு விடிவில்லை!

மிக கண்ணியமான ஒரு திரி இது .தொடருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

Duo12.jpg

துரோகம் செய்தது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. துரோகத்தின் சம்பளத்தை கூட நல்லதாக கேட்டு வாங்க துப்பில்லை... இவ்வளவு மட்டமான ரேஸ்ட் உள்ள ஆளை இப்பத்தான் பாக்கிறேன்.. ஆண்டிய கரெக்ட் பண்ணிட்டு திரியுறான்..

இல்லை ஒரு வேளை இந்த மாதிரி கேசோ..?

8.24 மணித்துளிகளில் வருவது .. ஒரு ஆணை கட்டாயபடுத்தி பாலியல் வல்லுறவு செய்வது... சிங்களத்தின் கைத்தடிகள் இவரை மிரட்டி போட்டார்களா..?

  • தொடங்கியவர்

புலிகளின் இரகசியங்கள் இவன் புலிகளாய் இருந்தவரையில் அறிந்திருப்பான். இவன் புடுங்கியானபிறகு புலிகளின் இரகசியங்கள் புலிகளுடனேயே போயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியை மட்டமாக எடை போடும் எங்களின் பாங்கு, மாறும்வரை எமக்கு விடிவில்லை!

இப்படியானவர்கள் இருந்து கொண்டிருக்கும் போது... விடிவை எதிர் பார்க்கும் நீங்கள், சரியான அப்பாவி.

தயவுசெய்து அந்த இரகசியங்களை தெரியப்படுத்தவும்.

இனிமேலாவது இன்னொருத்தன் உந்த இரகசியங்க்காலை வைச்சு புளைப்பு நடத்தாமல் இருக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து அந்த இரகசியங்களை தெரியப்படுத்தவும்.

இனிமேலாவது இன்னொருத்தன் உந்த இரகசியங்க்காலை வைச்சு புளைப்பு நடத்தாமல் இருக்கட்டும்.

உண்மை சூறாவளி, நெடுகவும்... புலியை வைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கப் படாது.

நாளைக்கு, இந்தக் கருணா.. மகிந்தவையும் வைத்து.. பிழைப்பு நடத்துவான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவுசெய்து அந்த இரகசியங்களை தெரியப்படுத்தவும்.

இனிமேலாவது இன்னொருத்தன் உந்த இரகசியங்க்காலை வைச்சு புளைப்பு நடத்தாமல் இருக்கட்டும்.

அர்ஜுன் அண்ணா சொல்லுறதை விட என்னத்தை பெரிதாக சொல்லப்போறார்? <_<

(அர்ஜுன் அண்ணாவின் பெயரைக்குறிப்பிட்டதுக்காக மன்னித்துக்கொள்ளுங்கள் உங்கள் மனதை நோகடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை, புலிகள்,புலிகளின் கொலைகள் என்று அதிகம் யாழில் எழுதுவது நீங்கள் அதனால் தான் உங்கள் பெயர் உடனடியாக வந்தது தவிர உங்களை காயப்படுத்த அல்ல. :) )

மிக கண்ணியமான ஒரு திரி இது .தொடருங்கள் .

கண்ணியம் என்றால் என்ன அர்த்தம்? மிகக் கண்ணியத்திற்கும் இந்தத் திரிக்கும் என்ன சம்பந்தம் அர்ஜுன்? :huh:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.