Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் றலி சைக்கிளும்

Featured Replies

என் தாத்தாவிடம் ஒரு வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் ஒரு றலி சைக்கிளும் இருந்தன என்று சாதாரணமாகக் கூற முடியாது. என் இரண்டு தாத்தாமாரிடமும் ஒவ்வொன்று இருந்தன என்பது மட்டுமல்ல ஊரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொன்று இருந்திருக்கும்.

எண்பதுகளின் ஆரம்பம்வரை இதுதான் ஊரில், எண்பதுகளின் நடுவில் றொபின் மிசினும் லுமாலா சைக்கிளும் வரத்தொடங்கியதும் வில்லியர்ஸ்/றலி கூட்டணி கொஞ்சம் ஆட்டம் காணத்தொடங்கியது உண்மைதான் என்றாலும் 80 களின் ஆரம்பத்தில் சிறுவனாக இருந்த என் ஞாபகத்தில் உறைப்பாக நிற்பது வில்லியர்ஸ்/றலி கூட்டணிதான்.

villiers.jpg

படத்தில் இருப்பதுதான் ஊரில் பாவனையிலிருந்த இறைப்பு மிசினின் அண்ணளவான படம். உள்ளூர்த் தொழில்நுட்பத்தில் இரண்டு சில்லுடன் கூடிய ஒரு சின்னத் தள்ளு வண்டியில் இதைப் பொருத்தியிருப்பார்கள். மேற்பக்கத்தில், நீளமான ஒரு (தண்ணீர்க்) குழாயை ஒரு சுருட்டுச் சுருட்டி பெரிய வட்டவடிவாகக் கட்டி வைத்த்ருப்பார்கள். குழாயைத் தாங்கி நிற்க அடியில் (base)இல் இருந்து சரியான விதத்தில் ஆக்கிய இரும்புக் கம்பிகளை இணைத்திருப்பார்கள். இத்தோடு உடன்பிறவாச் சகோதரம் மாதிரி ஒரு சின்ன வாளியும் பயணப்படும். வாளிக்குள் இரண்டு முழம் நீளமான ஒரு வலிய கயிறு,ஒரு சின்ன Singer Oil Can –அதுக்குள் கொஞ்சம் பெற்றோல் கட்டாயம் இருக்கும். மேலதிகமாக கடந்த 10 வருடங்களில் உழைத்துக் களைத்துப்பபோன பிளக்குகள் (Spark Plugs) மூன்று, நான்கு, ஒரு கரி பிடித்த பழைய துண்டு/துணி, என்பனவும் இருக்கலாம்.

இந்த இறைப்பு மிசின்களைப் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தைத் தவிர வேறுநிறத்தில் நான் காணவில்லை.

இறைப்பு மிசின் விவசாயிகளின் நண்பன் என்றால், றலி சைக்கிள் எல்லாருக்கும் நண்பன். ஏசியா பைக், லுமாலா கூட்டணி வருமட்டும் யாழ்ப்பாணத்தில் சைக்கிள்களின் மகாராஜா றலி சைக்கிள்தான். எங்களூரில் கட்டாயமாக, குடும்பத்திற்கு ஒரு றலி சைக்கிள் இருந்திருக்கும். அநேகமாக (டைனமோ) விளக்கு இருந்தால், அதைச்சுற்றி ஒரு மஞ்சள் துணி கட்டப்பட்டிருக்கும். சத்தியமாக அது ஏன் என்று இன்றுவரை எனக்குத் தெரியாது. படத்தில் இருப்பது போலன்றி ‘ஸ்டான்ட்’ பின்புறம் ஒரு ‘கரியல்’ (carrier) உடன் இணைந்திருக்கும். ஒரு நாலைந்து குஞ்சங்களும் ஆங்காங்கே இருக்கும்.

raleighdl1lso300x195.jpg

சைக்கிள் என்றால் கட்டாயம் ஒரு மணியும் இருக்கும். அழகான இளம் பெண்கள் இருக்கும் வீடுகளுக்குக் கிட்ட சைக்கிள் போகும்போது இந்த சைக்கிள் மணிச் சத்தம் கொஞ்சம் வலுவாக ஒலிக்கும். மோட்டச் சைக்கிள், கைத் தொலைபேசி எல்லாம் பரவலாக வரமுன் இந்தச் சைக்கிளும் சைக்கிள் மணியும் எத்தனையோ காதலர்களைச் சேர்த்து வைத்திருக்கிறது. அண்ணன் அவளின் வீட்டுக்குக் கிட்டவந்து மணியை ஒரு வித சங்கேத தொனியில் அடிப்பார். அவள் வீட்டு மதிலில் ‘கடதாசியை’ வைப்பார். அந்தப்பக்கம் ஒரு வளையல் அணிந்த கரம் அந்தக் கடதாசியைக் கணக்காக எடுத்து விட்டு, இன்னொரு கடதாசியை வைக்கும். (நிற்க, இது எந்தச் சைக்கிளுக்கும் பொருந்தும் றலி சைக்கிளுக்கு மட்டுமல்ல).

இனிக் கொஞ்சம் ‘சீரியஸ்’ஸான விடயத்திற்கு வந்தால், ஆறுகள் அற்ற, வரண்ட தட்டையான யாழ்ப்பாணத்தின் பொருளாதாரம், ஒருகாலத்தில் தந்நிறைவடைந்தது என்றால், அதற்கு யாழ் மக்களின் கடும் உழைப்புத்தான் காரணம். அந்த உழைப்பிற்கு உதவியதில் முக்கியமானது இந்த வில்லியர்ஸ்/றலி கூட்டணி.

மீண்டும் காணமாட்டோமா அந்தப் பொற்காலத்தை” மனம் அடித்துக்கொள்கிறது.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி

இருந்ததும் இந்நாடே – அதன்

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து

முடிந்ததும் இந்நாடே – அவர்

சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து

சிறந்ததும் இந்நாடே -

- பாரதியார்

பாரதியார் இந்தியாவை நினைத்துப் பாடியது. “வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் றலி சைக்கிளும்” எழுதத் தொடங்கிய என் ஞாபகத்திற்கு வருகின்றது.

நன்றி – தகவல் – எஸ். சத்திவேல்

படங்கள் - http://www.flickr.com/photos/33159162@N02/5574558073/

http://www.bikecult.com/works/archive03.html

http://www.ourjaffna.com/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b1%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf/

  • தொடங்கியவர்

நான் , அதே எண்பதுகளில் இன்னுமொரு தண்ணி இறைக்கும் இயந்திரத்தைப் பார்த்துள்ளேன் . அதன் பெயர் ஊசிலி அல்லது வூசிலியாக இருக்கலாம் . அதன் விசேடம் என்னவென்றால் , இயந்திரத்தை இயக்கும் பொழுது பின்பக்கமுள்ள வட்ட வடிவ உருளைக்கு ஒரு சாவி உண்டு , அதனாலேயே இயக்குவர் . ஒருசில அனுபவம் வாய்ந்த தோட்டக்காறர் கையாலேயே சுற்றி இயந்திரத்தை இயக்குவார்கள் . சாவியால் சுற்றி இயக்கும்பொழுது சாவி எகிறிப்பாய்ந்து காயம் பட்டவர்களும் உண்டு . இது பற்றி யாருக்காவது தெரிந்தால் படத்துடன் இணையுங்கள் . நான் தேடினேன் , எனக்குப் படம் கிடைக்கவில்லை .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்களிடம் ரலி சைக்கிள் மட்டும் இருந்தது. மற்ற படி வீட்டுக் கிணற்றை ஒவ்வொரு வருடமும் சுத்தம் செய்ய வாடகைக்கு தண்ணீர் பம்பி பிடிக்கும் போது இந்த பச்சை நிற வில்லியர்ஸ் இயந்திரத்தைக் கண்டிருக்கிறேன். ரலி சைக்கிள் ஆரம்ப காலத்தில் பிரபலமாகக் காரணம் அவை இங்கிலாந்தில் செய்யப் பட்டவை என்பதால் என நினைக்கிறேன். இப்போது இந்தியாவில் கூட செய்கிறார்கள். பழைய ரலி மிகவும் உறுதி வாய்ந்தது. ஒரு நாள் என் அண்ணர் மிதிக்க நான் ஏறி முன் பாரில் அமர பார் ஒட்டு விட்டு அப்படியே கீழே போனது. நான் உடனே கீழே இறங்கித் தப்பித்துக் கொண்டேன். வேறு சைக்கிளாக இருந்திருந்தால் எனக்கு முகம் பல்லெல்லாம் பறந்திருக்கும். பிறகு அண்ணர் வெளிநாடு போக ரலி சைக்கிள் எனக்கு முழுமையாகக் கிடைத்த நாள் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று. 1995 இடம்பெயர்வில் வன்னிக்கு எங்களுடன் வந்து பல நூறு மைல்கள் உழைத்த ரலியை, தென் பகுதிக்கு நான் குடி பெயர்ந்த போது வீட்டில் அப்பாவிடம் விட்டு வந்தேன்.அவர்கள் மீண்டும் இடம் பெயர்ந்த வேளையில் வெறிக்குட்டியான என் ஒன்று விட்ட அண்ணனிடம் சும்மா கொடுத்து விட்டு வந்திருக்கிறார்கள். அது ஒரு போத்தல் தென்னஞ் சாராயத்திற்காக யாருக்கோ விற்கப் பட்டதாக அறிந்தேன். இது என் ரலி சைக்கிள் கதை.

  • கருத்துக்கள உறவுகள்

இது Wolseley

Edited by sathiri

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடமும் ஒரு துவிச்சக்கரவண்டி இருந்தது.

முன்னுக்கும் பின்னுக்கும் சில்லு மட்டு தான்.

மணியும் கிடையாது வேகக் கட்டுப்பாடும் கிடையாது.

வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றால் காலால் தான் முடியும்.

கால்களால் அழுத்தினால் சொன்ன இடத்தில் நிற்கும்.:D

என்னிடம் றலி சைக்கிளும் , றச் சைக்கிளும் சேர்ந்த குளோனிங் ஒண்டு இருந்தது . ஓட்டம் எண்டால் பறக்கும் . இந்தமுறை போகும் பொழுது பின் விறாந்தையில் கறள்கட்டி அனாதையாக நிண்டுது . என்ர மனம் பட்ட பாடு எனக்குத் தான் தெரியும் :( . நன்றிகள் ஜஸ்ரின் உங்கள் கருத்துக்களுக்கு :):):) .

இது Wolseley

படத்தை இணைத்த சாத்திரிக்கு ஒரு ஓ :) :) :) .

Edited by கோமகன்

  • தொடங்கியவர்

என்னிடமும் ஒரு துவிச்சக்கரவண்டி இருந்தது.

முன்னுக்கும் பின்னுக்கும் சில்லு மட்டு தான்.

மணியும் கிடையாது வேகக் கட்டுப்பாடும் கிடையாது.

வேகத்தைக் குறைக்க வேண்டும் என்றால் காலால் தான் முடியும்.

கால்களால் அழுத்தினால் சொன்ன இடத்தில் நிற்கும். :D

கால் போடும்பொழுது கவனமாய் இருக்கவேணும் :o . கறணம் தப்பினால் குதிக்கால் பறக்கும் . கருத்துக்கு நன்றிகள் வாத்தியார் :):) .

நான் இங்கு சைக்கிள் வைத்திருக்கின்றேன் கோடை காலத்தில் ஓடுவதற்கு. சைக்கிளை மறக்க முடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்

நிழலாடும் ....நினைவுகள் . பகிர்வுக்கு ஒரு பாராட்டு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வீட்டை இப்பவும் ஒரு வில்லியர்ஸ்(25) நிக்குது.

7000Rs க்கு வாங்கினது நான் வரும் போதே 25,000Rs கேட்டவங்கள் .. குடுக்கேல்லை இப்ப பத்திரமா இருக்குது. :rolleyes:

.

அப்பப்பாட‌ தோட்டத்தில இரண்டு வூல்சிலி இருந்தது. ஒரு குட்டி அறைக்குள்ள இரண்டும் இருக்கும். அறையின் பின் பக்க சுவரில் இரண்டு மூன்று சதுர‌ ஓட்டைகள் இருக்கும். இந்த‌ ஓட்டைகளுக்குள்ளால‌ இரண்டிஞ்சி ஹோர்ஸ் பைப்புகள் இரண்டு, பக்கத்தில் உள்ள கிணத்துக்கிள்ள இறங்கும்.

அறையின் பக்கவாட்டுச் சுவரிலும் சதுர ஓட்டைகளுக்கிள்ளால, வோட்டர் பம்பிலிருந்து ஹோர்ஸ்பைப்புகள் வந்து, அவற்றின் தண்ணீர் ஒரு தாங்கியில் விழும்.

இந்த தாங்கி நிரம்பி, கிணத்தில ஆக்கள் நின்று குளிக்கிற சதுரமான கட்டுக்கிள்ள தண்ணீர் விழும். இந்த சதுர கட்டின் மூலையில் இருந்து சீமேந்து வாய்க்கால் அரம்பிக்கும்.

இந்த வாய்க்கால் நீளமானது. இது இருபது ஏக்கர் தென்னந்தோட்டதினூடாகப் போய் அதன் ஒரு பக்கத்தில் உள்ள இரண்டரை ஏக்கர் மிளகாய்த் தோட்டத்தினூடாகப் போய், பதினஞ்சு ஏக்கர் வயல் ஒன்றில் முடியும்.

பெரும்பாலும் தோட்டத்திற்குத்தான் தண்ணீர் இறைப்பார்கள். சில வேளைகளில் கோடைப்போகம் முடிய நெல் அறுவடை செய்த பின் மீண்டும் உழுது போட்டு, பயறு, உழுந்து போன்ற சிறுதானியங்களை விதைப்பார்கள். அச்சமயங்களில் வயலுக்கும் தண்ணீர் இறைப்பார்கள்.

சின்னனில் பள்ளிகூட விடுமுறைகளில் அங்கு போவோம். தென்னந்தோட்டதில் இருக்கிற கோம்பைகள், குறும்பெட்டிகளை இந்த வாய்க்காலுக்குள்ள போட்டு, தண்ணீரோடு அவை இழுபட்டுப் போவதை ஒரு "றேஸ்" மாதிரி விளையாடுவோம்.

வூல்சிலி வோட்டர் பம்ப், எனக்கு நிறைய தொழில்நுட்பக் கற்பனைகளைத் தந்த ஒரு கவர்ச்சிகரமான இயந்திரம்.

இதனை தோட்டத்தில் வேலை செய்பவர்கள் ஸ்டார்ட் செய்யும் போது அப்பா என்னை அதற்குக் கிட்ட நிக்க விட மாட்டார். ஸ்டார்ட் செய்பவர்கள் சாவியை லாவகமாக கழட்ட வேண்டும். இல்லையென்றால் சாவியை வேகமாச் சுற்றி எறியும். அருகில் நிற்பவர் காலி.

  • தொடங்கியவர்

கருத்துக்களைப் பகிர்ந்த அலைமகள் நிலாமதி ஜீவா மற்றும் ஈசனுக்கு மிக்க நன்றிகள் :):):) .

Bicycle-Raleigh-Type.jpg

எங்கட பழைய ஆக்களுக்கு சைக்கிள் என்றால் "றளி" தான் ஞாபகம் வரும். அதுக்குப்பிறகு ஹீரோ, லுமாலா எல்லாம் வந்திச்சு. ஆனா இந்த "றளி" சைக்கிளை அடிக்கிறதுக்கு.... எந்த சைக்கிளும் இல்லை என்ற எண்ணந்தான், இன்னும் யாழ்ப்பாணத்தில இருக்கு! அதின்ர "பெல்" சத்தம் இண்டைக்கும் எங்கட யாழ்ப்பாண அஞ்சல் திணைக்களத்தின் மணியோசையாக இருக்கிறது என்பது ... மின்னஞ்சல் வந்த காலத்தின் பின்னும் தொடரும் பாரம்பரியம். :)

பழைய ஞாபகங்களினைக் கிளறுவதில் கோ கில்லாடிதான். ஒத்துக்கொள்கின்றேன்! :) 1

Edited by கவிதை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை வீட்டிலை வூல்சிலியுமில்லை ரொபினுமில்லை.....தனிய பட்டைதான்....விடிய வெள்ளன விடிவெள்ளி வெளிக்க நானும் அப்புவும் தோட்டத்துக்கு வெளிக்கிட்டமெண்டால்.....பொயிலைக்கண்டுக்கும் மிளாகாய்கண்டுக்கும் துரவிலையிருந்து தண்ணியிறைப்பம்...அதுசரி உங்கை ஆருக்கும் துரவு,பட்டை எண்டால் என்னெண்டு தெரியுமோ? :(

வூல்சிலி வோட்டர் பம்ப்,

இதனை தோட்டத்தில் வேலை செய்பவர்கள் ஸ்டார்ட் செய்யும் போது அப்பா என்னை அதற்குக் கிட்ட நிக்க விட மாட்டார். ஸ்டார்ட் செய்பவர்கள் சாவியை லாவகமாக கழட்ட வேண்டும். இல்லையென்றால் சாவியை வேகமாச் சுற்றி எறியும். அருகில் நிற்பவர் காலி.

இதாலைதான் என்ரை அப்பு வாட்டர்பம் வாங்கேல்லை எண்டு நினைக்கிறன் :D

மற்ரது என்னெண்டால் எங்களிட்டை நீங்கள் சொன்ன சயிக்கிளும் இருந்ததுதான்.....இருந்தாலும் மாட்டுவண்டிலை மாதிரி ஒரு ஓல் இன் வன் வாகனத்தை நான் இண்டுவரைக்கும் காணேல்லை. :wub: :wub: :icon_idea:

இருந்தாலும் மாட்டுவண்டிலை மாதிரி ஒரு ஓல் இன் வன் வாகனத்தை நான் இண்டுவரைக்கும் காணேல்லை. :wub: :wub: :icon_idea:

மாட்டு வண்டியை நினைவுபடுத்தியதிற்கு நன்றி. நான் ஒரு நாளும் மாட்டு வண்டியில் ஏறியதில்லை :( . இப்ப ஒரு ஆசை ஊருக்குப் போனால் ஒருக்கா மாட்டுவண்டி ஓட வேண்டும் என்று :lol: :lol: நிலாக்கா, வல் வாறியளோ!

அலைமகள் அக்கா இப்ப ஊரிலை மாட்டுவண்டி இருந்தால் தானே

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டு வண்டியை நினைவுபடுத்தியதிற்கு நன்றி. நான் ஒரு நாளும் மாட்டு வண்டியில் ஏறியதில்லை :( . இப்ப ஒரு ஆசை ஊருக்குப் போனால் ஒருக்கா மாட்டுவண்டி ஓட வேண்டும் என்று :lol: :lol: நிலாக்கா, வல் வாறியளோ!

நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வாரேன். :D

Edited by நிலாமதி

  • தொடங்கியவர்

Bicycle-Raleigh-Type.jpg

எங்கட பழைய ஆக்களுக்கு சைக்கிள் என்றால் "றளி" தான் ஞாபகம் வரும். அதுக்குப்பிறகு ஹீரோ, லுமாலா எல்லாம் வந்திச்சு. ஆனா இந்த "றளி" சைக்கிளை அடிக்கிறதுக்கு.... எந்த சைக்கிளும் இல்லை என்ற எண்ணந்தான், இன்னும் யாழ்ப்பாணத்தில இருக்கு! அதின்ர "பெல்" சத்தம் இண்டைக்கும் எங்கட யாழ்ப்பாண அஞ்சல் திணைக்களத்தின் மணியோசையாக இருக்கிறது என்பது ... மின்னஞ்சல் வந்த காலத்தின் பின்னும் தொடரும் பாரம்பரியம். :)

பழைய ஞாபகங்களினைக் கிளறுவதில் கோ கில்லாடிதான். ஒத்துக்கொள்கின்றேன்! :) 1

கவிதை உங்கள் அளவிற்கு இல்லை கருத்திற்கு நன்றிகள் கவிதை :) :) .

  • தொடங்கியவர்

எங்கடை வீட்டிலை வூல்சிலியுமில்லை ரொபினுமில்லை.....தனிய பட்டைதான்....விடிய வெள்ளன விடிவெள்ளி வெளிக்க நானும் அப்புவும் தோட்டத்துக்கு வெளிக்கிட்டமெண்டால்.....பொயிலைக்கண்டுக்கும் மிளாகாய்கண்டுக்கும் துரவிலையிருந்து தண்ணியிறைப்பம்...அதுசரி உங்கை ஆருக்கும் துரவு,பட்டை எண்டால் என்னெண்டு தெரியுமோ?

இதாலைதான் என்ரை அப்பு வாட்டர்பம் வாங்கேல்லை எண்டு நினைக்கிறன் :D

மற்ரது என்னெண்டால் எங்களிட்டை நீங்கள் சொன்ன சயிக்கிளும் இருந்ததுதான்.....இருந்தாலும் மாட்டுவண்டிலை மாதிரி ஒரு ஓல் இன் வன் வாகனத்தை நான் இண்டுவரைக்கும் காணேல்லை.

குசா நான் கொஞ்சம் போடுறன் சரியோ எண்டு சொல்லுங்கோ :):):icon_idea:.

இது மாட்டு வண்டில்

23643228.png

11938950.png

இது பட்டை

98552332.jpg

30371842.png

29306467.png

இது துரவு

41766168.png

23643228.png

11938950.png

இதிலை எந்த வண்டில் நல்லாய் இருக்கும் நிலாக்கா? முதலாவது convertible முகத்தில் காத்துப் பட நல்லாயிருக்கும், இரண்டாவது மழைக்கு நல்லது. ம்..........

  • தொடங்கியவர்

இதிலை எந்த வண்டில் நல்லாய் இருக்கும் நிலாக்கா? முதலாவது convertible முகத்தில் காத்துப் பட நல்லாயிருக்கும், இரண்டாவது மழைக்கு நல்லது. ம்..........

இது நான் குசாவுக்குப் போட்டது உங்களுக்கு வாடகைக்கு விடமாட்டன் :):):) .

இது நான் குசாவுக்குப் போட்டது உங்களுக்கு வாடகைக்கு விடமாட்டன் :):):) .

கோ! மாட்டு வண்டிலுக்கு வாடகையா :rolleyes: இடம் அறிந்து கதையுங்கோ கனக்க கதைத்தால் அடுத்த நாள் வண்டில் இருக்காது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை வீட்டிலை வூல்சிலியுமில்லை ரொபினுமில்லை.....தனிய பட்டைதான்....விடிய வெள்ளன விடிவெள்ளி வெளிக்க நானும் அப்புவும் தோட்டத்துக்கு வெளிக்கிட்டமெண்டால்.....பொயிலைக்கண்டுக்கும் மிளாகாய்கண்டுக்கும் துரவிலையிருந்து தண்ணியிறைப்பம்...அதுசரி உங்கை ஆருக்கும் துரவு,பட்டை எண்டால் என்னெண்டு தெரியுமோ? :(

இதாலைதான் என்ரை அப்பு வாட்டர்பம் வாங்கேல்லை எண்டு நினைக்கிறன் :D

மற்ரது என்னெண்டால் எங்களிட்டை நீங்கள் சொன்ன சயிக்கிளும் இருந்ததுதான்.....இருந்தாலும் மாட்டுவண்டிலை மாதிரி ஒரு ஓல் இன் வன் வாகனத்தை நான் இண்டுவரைக்கும் காணேல்லை. :wub: :wub: :icon_idea:

என்னுடைய நிலையும் இதே நிலைதான்

ஒரு முறை நிறைய வெங்காயம் பயிர்செய்தோம் ஜுரியா பசலை போடும் நேரத்தில் அப்பாவிற்கு அம்பாள் (சின்னமுத்து ) வருத்தம் வந்துவிட்டது. அங்கே கோவிலில் பொய் முழுகி 11ம்நாள் பூசை என்று எல்லாம் முடியத்தான் வீட்டுக்கு வெளியில் விடுவார்கள்.

எனது நிலை அதோ கெதிதான்............ இன்று நினைக்கும் பொது கூட ஒவ்வரு வலியும் தெரிகிறது. விடி வெள்ளி வர போனாலும் நான் இறைத்துகொண்டு இருக்கும்போதே மற்ற மாணவர்கள் பள்ளிக்கு போய்கொண்டு இருப்பார்கள். ஓடிவருவேன் ஒருவாளி தண்ணியிலே குளிப்பு இருக்கும் சாப்பாட்டை ஒரே அமத்து அதே வேகத்தில் ஓடிபோய் பள்ளியில் நிற்பேன்.

இவ்வளவு கஸ்ரப்பட்டுப் படிச்சிருக்கிறியள் , சந்தோசமாய் இருக்கு . சின்னவயசில கஸ்ரப்பட்டவை தான் பல சாதனைகளைப் படைச்சிருக்கினம் . கதையோட கதையா , நீங்கள் நல்ல நகைச்சுவையாக எழுதக்கூடியவர் :icon_mrgreen::D . ஒரு சில இடங்களில் பாத்திருக்கின்றேன் . ஏன் நகைச்சுவையாகவே கருத்துக்களைப் போடலாமே ?? எப்பபார் அதிஉயர் பதட்டத்தோடை எழுதிக்கொண்டு :lol::lol::D:icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

குசா நான் கொஞ்சம் போடுறன் சரியோ எண்டு சொல்லுங்கோ :):):icon_idea:.

இது மாட்டு வண்டில்

23643228.png

11938950.png

இதில் முதலாவது தானே சாரதியாக இருந்து கொண்டு சிறு சாமான்களை அருகே வைத்துக் கொண்டு போவது!

மற்றது றைவர் வைத்து ஓடுவது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.