Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துச் சிறுமியின் சோக கீதம்! அழுதது கண்கள்!! ஆறெனப் பாய்ந்தது கண்ணீர்!!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

z.singer.jpg

video123.gifஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமை வேறெந்த இனத்துக்கும் நடக்கக் கூடாது என்பதுதான் இற்றைவரை எம்மினம் நினைப்பது.

அந்தளவுக்கு எம்மினம் பட்ட துன்பங்கள் வார்த்தைகளாலையோ, வரிகளாலையோ கூறிவிட முடியாது. அதிலும் புலம்பெயர் நாடுகளில் இருக்கக் கூடிய ஈழத் தமிழர்கள் தங்கள் நாடு, ஊர், வீடு என்பவற்றையிழந்ததுமட்டுமன்றி அதனை எப்போது காண்போம் என்ற ஏக்கமும் அவர்களை வாட்டி வருகின்றது.

ஆனால் கனடாவில் பிறந்து வளர்ந்திருக்கக் கூடிய பிஞ்சுப் பாலகி தனது ஊரையும், தன் வீட்டையும் நினைத்து தமிழ் மக்களுக்கு நடந்த சோகத்தை உலகெங்கும் எடுத்துக் கூறியுள்ளார் தனது பாடல் மூலம்.

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற யூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஈழத்துத் தமிழ்ச் சிறுமியின் பாடல் வரிகளைக் கேட்கும் போது, கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுக்கின்றது.

புலத்தில் வாழ்ந்தாலும் ஊரின் நினைவலைகளுடன் வாழும் எத்தனையோ ஈழத் தமிழர்களுக்கு இப் பாடல் வரிகள் கண்ணீரைப் பரிசளித்திருக்கும்.

அதிலும் இப் பாலகி தனது நாடு, ஊர், வீடு என்பதைக் கண்டிருக்க அவரின் வயது இடமளித்திருக்காது. இருந்தும் பெற்றோர்களின் ஊர்பற்றுத்தான் இச் சிறுமியின் மனத்திலும் ஆழப் பதிந்துள்ளது.

எனவே இப் பற்றாளர்கள் இருக்கும் வரை நிச்சயம் நாம் நிம்மதி பெறுவோம்,"ஈழமும் பெறுவோம்". அதனைத்தான் இந் நிகழ்ச்சியின் நடுவர்களும் எடுத்துக் கூறியுள்ளனர்.

http://youtu.be/aiGS6Hpcxgc

http://www.eeladhesa...ndex.php?option

சிறுமிக்கும் பெற்றோருக்கும் பாராட்டுக்கள்.

இவர்கள் செய்கையால் பல மில்லியன்கள் நேயர்களுக்கு எமது மக்களின் துயரம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்த சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்தி, உலகுக்கு ஈழ தமிழரின் நிலமையைச்சொன்ன சரிகாவுக்கு பாராட்டுக்ககளும் நன்றிகளும்!!!!

என்னும் பாதுகாப்பான நாடாக சிறிலங்கா இல்லை என்பதினை தெளிவாக உலகறிய வைத்த சரிகாவின் அம்மாவுக்கு நன்றிகள் ......

உணர்வுகளுக்கு மதிப்பளித்த மனோ அவர்களுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து பாடகிக்கு வாழ்த்துக்கள் .. மலையாளிகள் இங்க பாடுவதில் கோலொச்சு வதை விட கொஞ்சம் தமிழர்நாட்டு ஸ்லாங்குகளை கரெக்ட் செய்தால் நல்ல பாடகிகளை ஈழநாட்டில் இருந்தும் தரமுடியும் .. கொஞ்சம் அப்படியே சங்கீத ஞானமும் பிராக்டிசும் வேண்டும்..

டிஸ்கி:

சுயபரிதாபம் என்றைக்கும் சுய பரிதாபமாகவே இருக்கும் எல்லோரும் உச்சு கொட்டி போய்விடுவார்கள்.. டிவி காரன் காசு பார்த்து போடுவான் .. இங்க என்ன சினிமா நடக்குதா அல்லது அனாதை பிணத்தை போட்டு காசு வசூல் பண்றாங்களா ?? அடுத்தது என்ன ??

எனக்கு தெரிந்து கோக்க நென்ட் ஆயில் ( தேங்காய் எண்ணை ) உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால் கொஞ்சம் குரலில் மினுமினுப்பு வரும் என நினைக்கெரேன் லவங்கம் திப்பிலி எக்ஸ்டா சேர்பதால் வராது..

வாழ்த்துக்கள் சரிதா குட்டி!

உன்னைப்போல் பல குட்டிகள் வரவேண்டும்.சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திய சரிதாவிற்கு மீண்டும் வாழ்த்துக்கள்.இந் நிகழ்ச்சி தொகுப்பாளர் ம கா ப ஆனந் கூறிய வார்த்தைகள் என்னை ஆறுதலடைய வைத்துள்ளது."வெளி நாடுகளில் வாழும் தமிழர்கள் வாழ்க்கை வெளியேதான் பகட்டு ஆனால் ஒரு மூலையில் நாடும் வீடும் என்ற தவிப்புடன் தான் வாழ்கிறார்கள்."

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தின் சின்னக்குயில் சரிகாவுக்கு பாராட்டுக்கள்.

ஈழத்துப் பெண்கவிஞர் தமிழ் நதியின் எண்ணத்துளிகள் சிந்திய ஈரவரிகள்

சரிகா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

நானும் ஓர் புலம் பெயர் தமிழன் என்பதற்கப்பால் ஓர் இசை கலைஞன் என்ற வகையில் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் எழுதுகிறேன் அருமை அருமை அருமை ஆம் காலத்தின் தேவைக்கேற்ப எழுத்துக்கள்,அந்த எழுத்துக்களுக்கு

அமைந்தால் போல் அருமையான மெலோடி இசை,முக்கியமாக என் பிஞ்சு குஞ்சின்

அந்த இனிமையான் குரல். அந்தப்பாடலின் சூழலுக்கேற்ப பாவத்துடன் பாடிய அந்த

பக்குவம், எல்லாமே சிறப்பாக இருக்கின்றது.இதனை இணைத்த தமழரசுக்கு இதயம் கனிந்த நன்றிகள்

மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத்தடையில்லை,நாங்கள் மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல ...... இதே உணர்வைத்தான் இந்தப்பாடலிலும் உணர்கிறேன். நன்றி

தமிழ் ஈழத்தில் யாழ். கடலோரக் கிராமத்திலிருந்து துரத்தப்பட்டு அகதிகளாக வாழும் சிறுமியின் வேதனையும், விம்மலும், ஏக்கமும் விஜய் தொலைக்காட்சியின் யூனியர் சுப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் பாடலாக ஒலித்தது. இதயத்தை உருக்கி…. கண்ணீரை வரவழைக்கும் இந்த பாடலை ஒவ்வொரு தமிழ் இதயங்களும் கேட்க வேண்டும்.

மயிலிட்டி என்ற கடலோரக் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் சரிகா என்ற அந்த சிறுமியின் பாடல்வரிகள் கேட்பவர்கள் அனைவரையும் கண்கலக்க வைத்தது.

மறந்து போகுமோ மண்ணின் வாசனை….

தொலைந்து போகுமோ தூர தேசத்தில்…….

வேப்பமரத்து குயிலே என் வீடு இன்னும் இருக்கிறதா..

ஏக்கமுடன் நீ பாடும் ஒற்றைக்குரல் ஒலிக்கிறதா…

வேப்பர நிழல் ஓரம் மெல்ல விழி மூடுகையில்…

கேட்குதடி உன் பாடல் தேம்புதடி என் இதயம்

வந்த இடம் ஒட்டவில்லை…. வாழ்நிலமோ எட்டவில்லை

சொந்தங்களும் பக்கமில்லை சொல்லி அழ நேரமில்லை

இந்த நிலை மாறி எங்கள் சொந்த மண்ணை சேர்வதெப்போ

அன்னை நிலம் முத்தமிட்டு அழுது துயர் தீர்வதெப்போ

நன்றி தினக்கதிர்

நாமே .. எம் தாயகத்தில் பிறந்து, போர் சூழ்நிலையால் துரத்தப்பட்டு, அதனால் அடைக்கலம் தேடியவர்கள் கூட ... பகிரங்கமாக எம் நிலையை கதைக்க வெட்கப்படுகிறோம்/தவிர்க்கிறோம் ... ஆனால் எம் தாயகமே தெரிந்திராத இச்சிறுமி ... அங்கு தமிழகத்தில் சொல்லக்கூடிய பாசையில் மனதை தொடும்படி சொல்லியது மட்டுமல்லாது, எம் போன்றவர்களுக்கும் ஓர் சூடு போட்டிருக்கிறாள்! ... பெற்றவர்களுக்கு நன்றிகள்!

வாழ்த்துக்கள் சரிகா!

சரிகாவின் அம்மா எங்கட கந்தப்புவின் சினெகிதி

சரிதாக்குட்டிக்கு எமது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். அவரை உருவாக்கிய அவரது பெற்றோருக்கும் இதனை இப்பகுதியில் இணைத்த தமிழரசுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும். தமிழரின் சுதந்திர தீயை மீண்டும் மூட்ட சரிதாக்குட்டி போன்று ஒரு தீக்குச்சி காணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கண்களை கசிய வைத்த... சரிதாவுக்கும், பெற்றோருக்கும், நிகழ்ச்சியை நடத்திய விஜய் தொலைக்காட்சிக்கும் நன்றிகள்.

original version

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பாடலை வர்ணாராமேஸ்வரன் குரலில் இணைத்த நீலப்பறவைக்கு நன்றி.

முன்பு ஒரு முறை, வர்ணாமேஸ்வரனுடன் பேட்டி காண்பதற்காக.. கலைஞன் என்னும் மாப்பிள்ளை யாழ்களத்தில் எம்முடன் கேள்விகளை கேட்கச் சொன்னார். நாம் கேட்ட கேள்வியில்... முரளி இந்தப்பக்கம் வரவில்லைப் போலுள்ளது.

இன்று இந்த வீடியோவை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது...

கிடைக்கும் சின்னதொரு சந்தர்ப்பத்தையும் தம் அவலத்தை உலகுக்கு மகள் குரல் மூலம் காட்ட முனைந்த அந்த தாயிற்கும், இவர்களை தமிழகம் அனுப்பி 1 வயது குழந்தையை உறவுகளின் துணையுடன் பார்க்கும் தந்தைக்கும் மனமார்ந்த நன்றிகள்

கிடைக்கும் சின்ன சந்தர்ப்பத்திலும், போராட்டத்தை கொச்சைப் படுத்தி இயன்றவரை சிங்கள அர(க்க)ச இயந்திரத்தின் அக்கிரமத்தை சமப்படுத்த முனையும் ஒரு சிலரையும் இந்த தாயையும் ஒப்பிட்டு பார்க்கின்றேன்....வெறுப்பாக இருக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

சரிகா வுக்கு நன்றிகள் இதே போல பல சிறுமிகள் சிறுவர்கள் உருவாகவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் என்றாலே எனது மூளைக்கு எட்டுவது சோழ மன்னனின் ராஜ்கியம்தான்.

காரணம் தெரியாது அது எனது அணுவோடு சம்மந்தபட்டது என்று நினைக்கிறேன்.

ஈழ மண் என்றாலே வருவது தொலைந்துபோன மாவீரரின் இரத்த வாசம் தான்.............

"விடியும் விடியும் என்றீர்கள்,,,,,,,,,,,, விடியல் தேடி சென்றீர்கள்" அந்த அக்கினி குழந்தைகளின் வாசத்தை மறுபடியும் என்னில் நிரப்பிவிட்டாள் இந்த சிறுமி.

கண்ணிலே உண்மையிலேயே கண்ணீர்தான்.

வீரச் சிறுமிக்கும், வீரப் பெற்றோருக்கும் நன்றிகள் பல!

கிடைக்கும் சந்தர்பங்களை மிக அழகாகப் பயன்படுத்தியுள்ளார்! கூட்டமைப்பினர் உட்பட அனைத்து ஈழத் தமிழ் அரசியல்வாதிகளும் இந்தப் பெற்றோரிடம் பாடம் கற்க வேண்டும்!

இந்த தாயகம் திரும்பும் (குறைந்த பட்சம் சொந்த நில புலங்களை மீட்டு தக்கவைக்கும்) உணர்வுகள் எத்தனை புலம் பெயர்ந்தவர்களிடம் உள்ளது? இச்சிறுமி விதைத்த விதை அனைத்து புலம்பெயர் தமிழ் நெஞ்சங்களிலும் தளைத்து பெருவிருட்சமாக வேண்டும் என்பது எனது அவா.

ஆண் அறிவிப்பளரின் சாதுரியமான உணர்வுகள் தமிழினத்துக்கு உற்சாகம் அளிக்கிறது. பெண் அறிவிப்பாளர் வெறும் சினிமா மோகத்தில் மயங்கி மதியிழந்தவராக உள்ளார்.

இணைத்தவர்களுக்கும் நன்றி!

  • கருத்துக்கள உறவுகள்

இச்சிறுமியின் தாயார் கட்டுவனைச் சேர்ந்தவர். எப்பொழுது ஈழப்போர் வெடித்தாலும் முதலில் யாழ்ப்பாணத்தில் மக்கள் வெளியேறும் இடங்களில் ஒன்று கட்டுவன். பலாலி இராணுவமுகாமுக்கு அருகில் இருக்கும் ஊர் கட்டுவன். யாழ்ப்பாணத்தின் பெரும்பாலன இடங்களுக்கு மக்கள் சென்றுவரலாம். கட்டுவனில் இருந்து கடைசியாக மக்கள் 90ம் ஆண்டுதான் வாழ்ந்திருக்கிறார்கள். பிறேம் கோபால் , மாயா வரிசையில் சரிகா என்ற ஈழத்துக்கலைஞரும் எங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். நன்றி சரிகாவுக்கும் ,அவரது பெற்றோர்களுக்கும்.

சரிகாவுக்கு எனது வாழ்த்துக்கள்! கூடவே அவரின் குடும்பத்தாருக்கும் நன்றிகள் .....

உலகம் பூராவும் கொண்டுசென்று மக்களிடம் சேர்த்த விஜய் டிவிக்கும் நன்றிகள்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச்சிறுமியின் தாயார் கட்டுவனைச் சேர்ந்தவர். எப்பொழுது ஈழப்போர் வெடித்தாலும் முதலில் யாழ்ப்பாணத்தில் மக்கள் வெளியேறும் இடங்களில் ஒன்று கட்டுவன். பலாலி இராணுவமுகாமுக்கு அருகில் இருக்கும் ஊர் கட்டுவன். யாழ்ப்பாணத்தின் பெரும்பாலன இடங்களுக்கு மக்கள் சென்றுவரலாம். கட்டுவனில் இருந்து கடைசியாக மக்கள் 90ம் ஆண்டுதான் வாழ்ந்திருக்கிறார்கள். பிறேம் கோபால் , மாயா வரிசையில் சரிகா என்ற ஈழத்துக்கலைஞரும் எங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். நன்றி சரிகாவுக்கும் ,அவரது பெற்றோர்களுக்கும்.

உலகில் உள்ள அனைத்து உயிர்களின் வாழ்விற்கும் தானே காரணமாய் விளங்கும் மழை, ஏன் இன்னும் பொய்த்துப் போய் விடவில்லை. இன்னும் ஒரு சிலராக உள்ளவர்களிடமாவது உண்மையான மனிதப்பண்பு அது காண்பனதால் போலும் என்கிறது திருக்குறள்.

தமிழ் உணர்வாளர்களிடம் இன்னமும் தமிழீழத்தின் கனவு பொய்த்துப் போகாமல் இருப்பதற்கும் இவர்கள் போன்றோரைக் காண்பதால் போலும்!

C.M.R இல் சுகல்யாவின் குரலில் அடிக்கடி ஒலிக்கும் இந்த இனிமையான பாட்டு.

இதையும் அரசியலாக்கி விற்க பலர் தயார் நிலையில் போலுள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

C.M.R இல் சுகல்யாவின் குரலில் அடிக்கடி ஒலிக்கும் இந்த இனிமையான பாட்டு.

இதையும் அரசியலாக்கி விற்க பலர் தயார் நிலையில் போலுள்ளது.

அடுத்தவனின் வயல்காடு மலர்ச்சியில் திளைப்பதைப் பார்த்து பொறுக்கான் மழையை சபித்தது போல் உள்ளது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.