Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மான் வத்தலை சமைப்பது எப்படி? உதவி கோருகின்றான் சாப்பாட்டு ராமன் நிழலி

Featured Replies

போன ஞாயிற்றுக் கிழமை ரொரன்டோவில் இருக்கும் Finch & Tapscot பகுதியில் உள்ள Greenland தமிழ் கடைக்கு சேவல் இறைச்சி வாங்கப் போயிருந்த போது அங்கு 'மான் வத்தல்' விற்கப்படுவதை பார்துவிட்டு வாங்கி வந்தேன்...ஆனால் எப்படி அதை சமைப்பது இங்கு ஒருவருக்கும் தெரியுது இல்லை

மான் வத்தலை எப்படி சமைப்பது? கறியாக; குழம்புக் கறியாக சமைக்கு முடியுமா? தெரிந்தவர்கள் எழுதி என் வயிற்றில் மான் வார்க்கவும்

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி. இன்னொரு பதிவில மரத்தை வெட்ட கூடிழந்து அழியும் குருவிக் குஞ்சுக்காக அழுகிறாய்யா. இஞ்ச பார்த்தா.. அருகி வரும் மானினங்களை வேட்டையாடி அதுவும் வத்தல் போட்டு அதை எப்படி சமைச்சு உருசிச்சு சாப்பிறது என்று கேட்கிறாய்ங்கையா..! என்னே வேடிக்கை மனிதர்கள்.

அதுசரி.. மான் வேட்டை பல நாடுகளிலும் சட்ட விரோதமாச்சே. எப்படி இது கனடாவுக்குள்ள வந்திச்சு..! கனேடிய பொலிஸ்.. உசார்..பிளீஸ்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வென் நீரில் வத்தலை முப்பது நிமிடம் நன்கு ஊறவிடவும்

அதன் பின்பு இறைச்சி சமைப்பது போல் சமைக்கவும் இறைச்சி மொச்சை வாடை வராமல் தடுப்பதற்காக சரக்கு தூள் கொஞ்சம் கூடப்போடவும்

உண்மையிலும் நீங்கள் சாப்பாட்டு ராமன்தான் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்சாரிகளின் தொல்லை தாங்கமுடியலயப்பா...... :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

மான் வத்தல் இங்கு ஒரு இடமும் விற்கிறார்கள் இல்லை.

எனக்கு, ஒரு கிலோ வாங்கி... பார்சல் பண்ணி விடவும். :lol:

கடைகு பெயர் Greenlandபா கிலின்சுதுபோ :icon_idea:

icon_users.png0 Follow this topic

av-4796.jpg

மான் வத்தலை சமைப்பது எப்படி? உதவி கோருகின்றான் சாப்பாட்டு ராமன் நிழலி

மான் ராமன் என்டும்கிடகு

என்னபா ராமாயணம் இது?????????

சாபாடு ராமாயனமோ??????????

  • கருத்துக்கள உறவுகள்

மான் வத்தல் என்டு என்னத்தைக் கொண்டு வந்து விக்கிறாங்களோ தெரியாது...நான் ஒரு தரமும் சமைச்சதில்லை ஆனால் என் அம்மா வத்தலை சுடு தண்ணீரில் ஊற வைத்து விட்டு பின்னர் சாதரண இறைச்சிக் கறி சமைக்கிற மாதிரி தான் சமைத்து தந்து சாப்பிட்டு இருக்கிறன்...உண்மையான வத்தலாய் இருந்தால் செம டேஸ்டாக இருக்கும்

மான் வத்தலை எப்படி சமைப்பது?

நன்றி

இவ்ளோதானா ,,, நானும் என்னமோ ஏதோன்னு நெனைச்சேன்!

செய்முறை விளக்கம்

மான் வற்றலை ,, கண்டதுண்டமாக வெட்டவும்!

பின்னர் பாவனை காலியான,, பழைய ஜட்டி ஒன்றில் சுற்றவும்!

அப்புறம் பளார் பளார்னு ,, அந்த பொதியை சுவரில் அறையவும்!

இப்போ வற்றல் சொவ்ற் ஆயிடும்...

அப்புறம் ... வெங்காயம், தக்காளி.. கடுகு சீரகம்...

கொஞ்சம் மஞ்சள்தூள் .. சின்னதா டீஸ்பூன் அளவில ஹார்லிக் லிக்,, ஜிஞ்சர் ..

ஏலம் கறுவா...............

இதெல்லாம் சுத்தமாவே சேர்க்கவேண்டியதில்ல...

சூடான சட்டியில ,, ஜட்டியில போட்டு சுவரில அறைஞ்ச மன் வற்றலை போடுங்க...

ஒரு வாட்டி ஜன்னல் வழியா எட்டி பாருங்க ,, /மேக் சுஅர் பண்ணுங்க பக்கத்து வீட்டுக்காரன் இன்னும் உயிரோட இருக்கானான்னு!

அவன் மட்டுமில்ல ,,உங்க ஊரையே விட்டு மொத்த ஜனமும் காலி பண்ண்ணிட்டுதுன்னா, இனியென்ன தயக்கம் .....

உங்க மணமணக்கும் மான் வத்தல் கறி பாரிய வெற்றி! (சும்மா கலாய்ப்பு&டமாசு) :)

:D :D :lol: :lol:

மான், மரை என்று snow dog-ல் வத்தல் போட்டு விற்றாலும் விற்பார்கள்... குடல் கறிக்கு உதவி கேட்டு கடைசியில மச்சாள் தானே சமைச்சவ...

முன்பு GREENLANDS PARKING LOT தான் எமது பாதாள உலகம் .வெள்ளி,சனி இரவு திருவிழா கோலம் பூணும்.

வத்தல் என்றால் அப்படியே தின்ன வேண்டியதுதான் என்று நினைத்தேன் .எதற்கும் எமது சமையல் எக்ஸ்பேட் தயா அண்ணனிடம் கேட்டு நாளை எழுதுகின்றேன்.எமது பாட்டிகளுக்கு எப்பவும் டேஸ்ட் கொண்டுவருவது அவரின் பொறுப்பு

  • கருத்துக்கள உறவுகள்

அறிவிலியின் சமையல் முறை கம கம என்று மணம் வீசுகிறது ............இன்னும் சிரிச்சு முடியவில்லை அதுக்குள்ளே ஜட்டி வேற ...... :D

  • கருத்துக்கள உறவுகள்

இவ்ளோதானா ,,, நானும் என்னமோ ஏதோன்னு நெனைச்சேன்!

செய்முறை விளக்கம்

மான் வற்றலை ,, கண்டதுண்டமாக வெட்டவும்!

பின்னர் பாவனை காலியான,, பழைய ஜட்டி ஒன்றில் சுற்றவும்!

அப்புறம் பளார் பளார்னு ,, அந்த பொதியை சுவரில் அறையவும்!

இப்போ வற்றல் சொவ்ற் ஆயிடும்...

அப்புறம் ... வெங்காயம், தக்காளி.. கடுகு சீரகம்...

கொஞ்சம் மஞ்சள்தூள் .. சின்னதா டீஸ்பூன் அளவில ஹார்லிக் லிக்,, ஜிஞ்சர் ..

ஏலம் கறுவா...............

இதெல்லாம் சுத்தமாவே சேர்க்கவேண்டியதில்ல...

சூடான சட்டியில ,, ஜட்டியில போட்டு சுவரில அறைஞ்ச மன் வற்றலை போடுங்க...

ஒரு வாட்டி ஜன்னல் வழியா எட்டி பாருங்க ,, /மேக் சுஅர் பண்ணுங்க பக்கத்து வீட்டுக்காரன் இன்னும் உயிரோட இருக்கானான்னு!

அவன் மட்டுமில்ல ,,உங்க ஊரையே விட்டு மொத்த ஜனமும் காலி பண்ண்ணிட்டுதுன்னா, இனியென்ன தயக்கம் .....

உங்க மணமணக்கும் மான் வத்தல் கறி பாரிய வெற்றி! (சும்மா கலாய்ப்பு&டமாசு) :)

இப்படி எல்லாமா சமைப்பாக...!!!!! :D

போன ஞாயிற்றுக் கிழமை ரொரன்டோவில் இருக்கும் Finch & Tapscot பகுதியில் உள்ள Greenland தமிழ் கடைக்கு சேவல் இறைச்சி வாங்கப் போயிருந்த போது அங்கு 'மான் வத்தல்' விற்கப்படுவதை பார்துவிட்டு வாங்கி வந்தேன்...ஆனால் எப்படி அதை சமைப்பது இங்கு ஒருவருக்கும் தெரியுது இல்லை

மான் வத்தலை எப்படி சமைப்பது? கறியாக; குழம்புக் கறியாக சமைக்கு முடியுமா? தெரிந்தவர்கள் எழுதி என் வயிற்றில் மான் வார்க்கவும்

நன்றி

என்னிடம் தந்தால் கறி வைத்துவிட்டு கொஞ்சத்தை உங்களுக்கு தருகிறேன் :D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மான், மரை என்று snow dog-ல் வத்தல் போட்டு விற்றாலும் விற்பார்கள்... குடல் கறிக்கு உதவி கேட்டு கடைசியில மச்சாள் தானே சமைச்சவ...

குட்டிக்கு, ஞாபகசக்தி அதிகம். :rolleyes::D:lol:

பின்ன என்ன சிறி அண்ணா? :rolleyes::o பாவம் நுனா, தமிழரசு, ரதி இவையோட நானும் எப்பயோ சமைச்சதைக் கனகாலத்திற்குப் பிறகு ஞாபகப் படுத்தி எழுதினனால்....

நிழலியானந்தாவின் பதில்... :D :D

...கடைசியில் என் மனைவியின் மச்சாளிடம் சமைத்து தாருங்கள் என்று கேட்டு, அவவிடமே ஆட்டுக் குடலை கொடுத்து சமைக்கச் சொல்லி இன்று சாப்பிட்டேன்... புட்டும் ஆட்டுக் குடல் கறியும் மிகச் சிறந்த ஒரு கலவை.....ஏவ்வ்.. .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போன ஞாயிற்றுக் கிழமை ரொரன்டோவில் இருக்கும் Finch & Tapscot பகுதியில் உள்ள Greenland தமிழ் கடைக்கு சேவல் இறைச்சி வாங்கப் போயிருந்த போது அங்கு 'மான் வத்தல்' விற்கப்படுவதை பார்துவிட்டு வாங்கி வந்தேன்...ஆனால் எப்படி அதை சமைப்பது இங்கு ஒருவருக்கும் தெரியுது இல்லை

மான் வத்தலை எப்படி சமைப்பது? கறியாக; குழம்புக் கறியாக சமைக்கு முடியுமா? தெரிந்தவர்கள் எழுதி என் வயிற்றில் மான் வார்க்கவும்

நன்றி

தம்பி!கறி,குழம்பு எண்டு எங்கடை மிளகாய்த்தூளுகளை போட்டு பொன்னானசாமனை பாழடிக்காமல்......சனிக்கிழமையிலை தண்ணிஅடிக்கேக்கை.....மான்வத்தலை பேப்பர்சைஸ்சிலை சீவி..... நுனிநாக்கிலை வைச்சுப்பாருங்கோ...சொர்க்கமே தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி.. மான் வேட்டை பல நாடுகளிலும் சட்ட விரோதமாச்சே. எப்படி இது கனடாவுக்குள்ள வந்திச்சு..! கனேடிய பொலிஸ்.. உசார்..பிளீஸ்..! :):icon_idea:

கனடாவில் காட்டில் போய் வேட்டையாடலாம்..! :rolleyes: சீசன் திறக்கும்போது ராக் (tag) வாங்கிக்கொண்டு குறிப்பிட்ட காட்டுக்குப் பகுதிகளுக்குச் சென்று வேட்டையாடலாம்..! இலையுதிர்காலப் பகுதியிலேயே அனுமதி தருவார்கள்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனியிலும் இலையுதிர் காலங்களில் ஆசைதீர மான்வேட்டையாடலாம்.இல்லையென்றாலும் வருடம்முழுவதும் அவுஸ்ரேலியாவிலிருந்து மான் இறைச்சி இறக்குமதி செய்யப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

மான் வத்தல் போடுறது குறைவு.

மரை வத்தலாக இருக்கும்!!! :D

  • தொடங்கியவர்

அடப்பாவி. இன்னொரு பதிவில மரத்தை வெட்ட கூடிழந்து அழியும் குருவிக் குஞ்சுக்காக அழுகிறாய்யா. இஞ்ச பார்த்தா.. அருகி வரும் மானினங்களை வேட்டையாடி அதுவும் வத்தல் போட்டு அதை எப்படி சமைச்சு உருசிச்சு சாப்பிறது என்று கேட்கிறாய்ங்கையா..! என்னே வேடிக்கை மனிதர்கள்.

அதுசரி.. மான் வேட்டை பல நாடுகளிலும் சட்ட விரோதமாச்சே. எப்படி இது கனடாவுக்குள்ள வந்திச்சு..! கனேடிய பொலிஸ்.. உசார்..பிளீஸ்..! :):icon_idea:

இங்கு மான் இறைச்சி, மரை இறைச்சி எல்லாம் சர்வசாதாரணமாக தமிழ் கடைகளில் விற்பினம். இசை சொன்ன மாதிரி குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதியும் கொடுப்பார்கள் (ஆனால் வேட்டையாடியதை விற்கக்கூடாது). கனடாவில் இருக்கும் காடுகளின், புதர்களின் அளவைப் பார்க்கும் போது கோடிக்கணக்கில் மான்கள் இருக்கும் என்று நினைக்கின்றன்... சும்மா கொஞ்சம் காட்டுப் பகுதி பக்கம் drive போனாலே நிறையப் பார்க்கலாம்

அதோட... பாவம் புண்ணியம் பார்த்தால் மீனைக் கூட சாப்பிட முடியாது. இயற்கை தந்த வேட்டைப் பற்கள் அநியாயமாகிப் போய்விடும் :D

வென் நீரில் வத்தலை முப்பது நிமிடம் நன்கு ஊறவிடவும்

அதன் பின்பு இறைச்சி சமைப்பது போல் சமைக்கவும் இறைச்சி மொச்சை வாடை வராமல் தடுப்பதற்காக சரக்கு தூள் கொஞ்சம் கூடப்போடவும்

உண்மையிலும் நீங்கள் சாப்பாட்டு ராமன்தான் :lol: :lol:

நன்றி தமிழரசு.... கறிக்குள் ஒரு கத்தரிக்காயைப் போட்டால் இன்னும் ருசியாக இருக்குமாம் என்று கேள்விப்பட்டன்...உண்மையா?

இந்த சம்சாரிகளின் தொல்லை தாங்கமுடியலயப்பா...... :lol::icon_idea: :icon_idea: :icon_idea:

grrr......... அடுத்த முறை கனடாவுக்கு வரும் போது வெறும் salad டும் கடிக்க பச்சை மிளகாயும் தான் வீட்டுக்கு வரும் போது தருவன்

நிழலி,

மான் வத்தல் இங்கு ஒரு இடமும் விற்கிறார்கள் இல்லை.

எனக்கு, ஒரு கிலோ வாங்கி... பார்சல் பண்ணி விடவும். :lol:

Email இல் attach பண்ணி அனுப்பவா....இதே கடையில் காட்டுப்பன்றி வத்தலும் இருக்கு...

மான் வத்தல் என்டு என்னத்தைக் கொண்டு வந்து விக்கிறாங்களோ தெரியாது...நான் ஒரு தரமும் சமைச்சதில்லை ஆனால் என் அம்மா வத்தலை சுடு தண்ணீரில் ஊற வைத்து விட்டு பின்னர் சாதரண இறைச்சிக் கறி சமைக்கிற மாதிரி தான் சமைத்து தந்து சாப்பிட்டு இருக்கிறன்...உண்மையான வத்தலாய் இருந்தால் செம டேஸ்டாக இருக்கும்

நான் வாங்கிக் கொண்டு வந்தது உண்மையானதா இல்லையா என்று தெரியவில்லை,,,,காக்கா வத்தலாக இருந்தாலும் டேஸ்டாக இருந்தால் சரி

Edited by நிழலி

  • தொடங்கியவர்

மான், மரை என்று snow dog-ல் வத்தல் போட்டு விற்றாலும் விற்பார்கள்... குடல் கறிக்கு உதவி கேட்டு கடைசியில மச்சாள் தானே சமைச்சவ...

என்ன இருந்தாலும் மனிசியின் கையால சமைச்சதை சாப்பிடுவதை விட மச்சாளின் கையால சமைச்சதை சாப்பிடுவது ஒரு தனி கிக்... சாப்பிட்ட பிறகு "மச்சான் டேஸ்ராக இருந்ததா" என்று கேட்க "நான் ஒரு அன்புப் பார்வையுடன் ஓம் மச்சாள் என்ற மனிசிக்கு இப்படி சமைக்க தெரியாது" என்று சொல்ல..."இனி என்ன வேணும் என்றாலும் கேளுங்கள் என்று அவா சொல்ல".....

என்னிடம் தந்தால் கறி வைத்துவிட்டு கொஞ்சத்தை உங்களுக்கு தருகிறேன் :D:rolleyes:

வீட்டு விலாசத்தை தாருங்கள்,...கொண்டு வாரன்

பின்ன என்ன சிறி அண்ணா? :rolleyes::o பாவம் நுனா, தமிழரசு, ரதி இவையோட நானும் எப்பயோ சமைச்சதைக் கனகாலத்திற்குப் பிறகு ஞாபகப் படுத்தி எழுதினனால்....

நிழலியானந்தாவின் பதில்... :D :D

...நீங்கள் எழுதியதெல்லா செய்முறையையும் காட்டத் தான்... அவா இதை விட தான் நல்லாச் சமைப்பன் என்று சொல்லி சமைச்சுத் தந்தா...ஹி ஹி

தம்பி!கறி,குழம்பு எண்டு எங்கடை மிளகாய்த்தூளுகளை போட்டு பொன்னானசாமனை பாழடிக்காமல்......சனிக்கிழமையிலை தண்ணிஅடிக்கேக்கை.....மான்வத்தலை பேப்பர்சைஸ்சிலை சீவி..... நுனிநாக்கிலை வைச்சுப்பாருங்கோ...சொர்க்கமே தெரியும்.

...ஒன்றும் தூவாமல் சாப்பிட ஒரு ஆசை வந்தது....ஆனால் வயிற்றுக் குத்தும் என்ற பயத்தில் அப்படியே விட்டு விட்டன்...

மான் வத்தல் போடுறது குறைவு.

மரை வத்தலாக இருக்கும்!!! :D

..எனக்கும் அந்த டவுட்டு வந்தது...கேட்டுப் பார்த்தன்...மான் தான் என்று அடித்து சொன்னார்கள்...அதே கடையில் காட்டுப் பன்றி வத்தலும் இருக்கு

  • தொடங்கியவர்

முன்பு GREENLANDS PARKING LOT தான் எமது பாதாள உலகம் .வெள்ளி,சனி இரவு திருவிழா கோலம் பூணும்.

வத்தல் என்றால் அப்படியே தின்ன வேண்டியதுதான் என்று நினைத்தேன் .எதற்கும் எமது சமையல் எக்ஸ்பேட் தயா அண்ணனிடம் கேட்டு நாளை எழுதுகின்றேன்.எமது பாட்டிகளுக்கு எப்பவும் டேஸ்ட் கொண்டுவருவது அவரின் பொறுப்பு

GREENLANDS கடையில் இருக்கும் ஆட்டுறைச்சி கூட விலை கூடியது. ஆடு என்றால் கிடாய் ஆடுதான் என்று சொல்லி ஒரு இறாத்தல் 7.50 இற்கு விற்கின்றார்கள். stouffville எல்லாம் கழிந்து, மார்க்கம் கடற்கடை எல்லாம் தாண்டி மார்க்கம் வீதி முடிந்த பின் இடப் பக்கமாக திரும்பினால் corn 1. corn 2 என்று தொடர்ந்து வரும்..அந்த இடங்களில் பல தமிழர்கள் 100 ஏக்கர் அளவுகளில் நிலம் வாங்கி வைத்து அதில் farm வைத்துள்ளனர். அவர்களில் எனக்குத் தெரிந்த ஒருவர் தான் இந்தக் கடைக்கு சப்ளை செய்பவர்...அவரிடம் கேட்டேன் உண்மையில் கிடாய் ஆடா என்று...ஓம் என்றார்..மற்ற் தமிழ் கடைகளில் 99 வீதம் மறிதான் கொடுப்பார்களாம்

தயா அண்ணையிடம் மறக்காமல் கேட்கவும்...அடுத்த பார்ட்டியில் வீட்டில் மான் வத்தல் போடுவோம்..

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் காட்டில் போய் வேட்டையாடலாம்..! :rolleyes: சீசன் திறக்கும்போது ராக் (tag) வாங்கிக்கொண்டு குறிப்பிட்ட காட்டுக்குப் பகுதிகளுக்குச் சென்று வேட்டையாடலாம்..! இலையுதிர்காலப் பகுதியிலேயே அனுமதி தருவார்கள்..! :D

மான் population அதிகரிக்கும் காலங்களில் population control க்காக இப்படி வளர்ந்த மான்களை வேட்டையாக சில நாடுகள் அனுமதிப்பதுண்டு. ஆனால் வத்தல் போட்டு காசாக்க அனுமதியில்லை. அது சட்ட விரோதம். சிறீலங்காவில்.. இந்தியாவில்.. மான் வேட்டை சட்ட விரோதம்..! :icon_idea:

இங்கு மான் இறைச்சி, மரை இறைச்சி எல்லாம் சர்வசாதாரணமாக தமிழ் கடைகளில் விற்பினம். இசை சொன்ன மாதிரி குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதியும் கொடுப்பார்கள் (ஆனால் வேட்டையாடியதை விற்கக்கூடாது). கனடாவில் இருக்கும் காடுகளின், புதர்களின் அளவைப் பார்க்கும் போது கோடிக்கணக்கில் மான்கள் இருக்கும் என்று நினைக்கின்றன்... சும்மா கொஞ்சம் காட்டுப் பகுதி பக்கம் drive போனாலே நிறையப் பார்க்கலாம்

அதோட... பாவம் புண்ணியம் பார்த்தால் மீனைக் கூட சாப்பிட முடியாது. இயற்கை தந்த வேட்டைப் பற்கள் அநியாயமாகிப் போய்விடும் :D

இங்கு பிரிட்டனிலும் ஊரில் உள்ள மான் போல மான்களும் இருக்குது. நான் காட்டுக்குள்ள போய் பார்த்திருக்கிறன். ஊரில காடுகள் அடர்த்தி. இங்க அப்படி இல்ல. ஆனால் நடைபாதைகள் உண்டு. சில இடங்களில் தங்கி நிற்க வசதி செய்திருக்கிறார்கள். வாகனங்களில் செல்ல முடியாது. மிதிவண்டி அல்லது நடை தான். அதுவும் ஏற்றமுள்ள பாதை என்றால்.. கால் வலி இலவசமாக கிடைக்கும்..! ஆனால் ஒன்று.. எங்கும்.. காடு காடு தான்..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, நெடுக்கு சொன்னதுபோல வேட்டையாடுவதை விற்க முடியாது..! எங்கள் வீட்டிற்கு முன்னால் மூன்று நாடு ன்கு மான்கள் அடிக்கடி சுற்றித்திரியும்..! ஆனால் ஊருக்குள்ளை ஒண்டும் செய்ய ஏலாது..! :D

Reason for Edit: எழுத்துப்பிழை :D

Edited by இசைக்கலைஞன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.