Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்திரிக்கு தடை?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருத்தமான செய்தி..... i miss you sathiri,

  • Replies 91
  • Views 9.8k
  • Created
  • Last Reply

படைப்பின் அருமையை மிகவும் தெளிவாக புரிந்த சாத்திரிதான், தனது ஒரு பதிவை அகற்றி விட்டோம் (மட்டுறுத்தி விட்டோம்) என்ற காரணத்திற்காக தான் எழுதி மற்ற கள உறவுகளால் நூற்றுக்கும் மேற்பட்ட கருத்துகள் பதிந்த தன் ஏனைய பதிவுகளை, சடுதியாக அகற்றினார்.

அவரது படைப்புகளின் கனதி, அதற்காக மற்றவர்கள் மினக்கெட்டு எழுதும் பதில்கள் என்பனவற்றின் கனதி, அப்படியான பதில்களை மட்டுறுத்தி தனிநபர் அவமதிப்புகளை முடிந்தளவு அகற்றும் எமது பணியின் கனதி என்பன புரிந்தமையால் தான் அந்த அகற்றுதலை மிக மோசமான கள மீறலாகக் கொண்டும், அவரது செயல் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு எதிரான மோசமான பதில் நடவடிக்கையாக கொண்டும் நிர்வாகத்தில் இருக்கும் எம் மூவராலும் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டு தற்காலிகத் தடை விதித்தோம்.

யாழில் ஒரு பதிவை மட்டுறுத்துவது, ஏனைய உறவுகளின் கருத்துகளுக்கு மதிப்பளித்து சிலவற்றை அகற்றுவது என்பது வழக்கமான ஒரு விடயம். இதை மூத்த யாழ் உறுப்பினரும், ஒரு நிகழ்வை/ சம்பவத்தை பல கோணங்களில் பார்க்க வல்லவருமான நண்பர் சாத்திரி அவர்கள் ஏற்றுக்கொள்ளாமையும், ஏற்றுக் கொள்ளாது பதிலடியாக மோதல் மனப்பான்மையுடன் தன் கருத்துகளை நிர்வாகத்தின் அனுமதி இன்றி அகற்றிக் கொண்டு வந்தமையும் ஏற்றுக் கொள்ள முடியாதவை

ஒருவர் தொடர்ந்து யாழில் எழுதுதோ அல்லது எழுதாமல் விடுவதோ அவரவர் சொந்த விருப்பம். ஆனால் யாழின் நிர்வாகம் என்ற அளவில் சாத்திரி மீண்டும் வந்து எழுதுவதையும், தொடர்ந்து எம்முடன் இணைந்திருப்பதையும் தான் எதிர்பார்க்கின்றோம்.

நன்றி வணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி,

விதண்டாவாதம் செய்வதாக நினைக்க வேண்டாம். வளமையாக எச்சரிக்கை கொடுத்துத்தானே களவிதியை மீறுவோரை தடைசெய்வீர்கள். அல்லது தண்டனை கொடுப்பீர்கள். ஆனால் சாத்திரியை நிறுத்தம் செய்தமைக்கு ஏதாவது முன்னெச்சரிக்கை கொடுத்தீர்களா ? (முடிவெடுத்த மூன்று பேரும்)

அப்படி நீங்கள் கொடுத்த எச்சரிக்கையை இங்கே எல்லா கள உறவுகளும் பார்க்க விடுதல் உங்கள் மீதான நம்பிக்கையை வலுக்க உதவும்.

எனது கருத்து சாத்திரிக்கு வக்காளத்து வாங்குவதாக நிழலியும் கள உறவுகளும் கருத வேண்டாம்.

ஏனெனில் சிலருக்காக சில முடிவுகள் எடுக்கப்படுவது எதிர்காலத்தில் கருத்தாளர்கள் மீதான அடக்குமுறையாகவே படுகிறது.

கருத்தாடலில் இங்கு சிலர் பாலியல் தொனியில் நட்பினை பங்கிடுவது வரை நடத்துகிறார்கள் ஆனால் அவர்களை சிறந்த வீரக்கருத்தாளர்களாக ஏற்றுக் கொண்டுள்ளது நிருவாகம். ஒருவரின் கருத்துக்கு அதாவது ஆண்களாயின் அவர்களது கருத்து ஆதரவு அல்லது கருத்து எழுதினால் உடன் அவரை(ளை) தொடுத்து எழுதுகிற வக்கிரமானவர்களை இந்தக்களம் அனுமதித்துள்ளது. அவர்களை எவ்வித நிபந்தனைகளும் இன்றி மன்னித்திருக்கிறது. மன்னித்துக் கொண்டே வருகிறது என்பதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இப்படிக் கேட்டதற்காகவும் மட்டுறுத்தித் தலைவர்களை அவமதிப்பதாக என்னையும் தடைசெய்யுங்கள் நிழலி என களவிதியமைக்கவும் ஆள் வரலாம்.

இது எனது தாழ்மையான கருத்து.

இன்று சில மணித்தியாலம் முதல் அலைமகள் ஒரு கருத்து எழுதியிருந்தார். அதில் எவ்வித தாக்குதலும் இல்லை. ஆனால் ஒரு மட்டுறுத்தி அதனைத் தூக்கிவிட்டது. அலைமகளின் கருத்து மட்டுறுத்திய நிழலியைத் தாக்கியதாகவோ மற்றைய மட்டுறுத்திகளை தாக்கியதாகவோ எழுதப்படவில்லை. ஆனால் அலையின் கருத்து வெட்டப்பட்டது. கருத்துரிமை மறுப்பாகவே இதனைக் கொள்ள முடிகிறது.

சாத்திரிக்கு தடை என்பதை சாத்திரிக்கு உடை என்று வழக்கம் போல் பின்னிரவு மப்பில் வாசித்து ,

சாத்திரி ஏதோ நிர்வாணமாக போஸ் கொடுத்து விட்டார் என்று (அப்படி பார்க்க ஒரு ஆசைதான் ,அதுவும் காம்பில் விடிய எழும்பி கழுவிய இடத்தை பார்க்கும் ஆவல் ) யாழ் முழுக்க அலசினால் அப்படி ஒன்றையும் காணோம் .மனுசி பேசிக்கொண்டு கிளாசை பறித்த பின் பிஸாவை கடித்துவிட்டு திரும்பி பார்க்க அது உடை அல்ல தடைஎன்று விளங்கியது .

இப்பொழுது தெரிகின்றது ஏன் உங்களுடன் பலர் பகைத்து கருத்து எழுதவேண்டி உள்ளது என்று :D

இன்று சில மணித்தியாலம் முதல் அலைமகள் ஒரு கருத்து எழுதியிருந்தார். அதில் எவ்வித தாக்குதலும் இல்லை. ஆனால் ஒரு மட்டுறுத்தி அதனைத் தூக்கிவிட்டது. அலைமகளின் கருத்து மட்டுறுத்திய நிழலியைத் தாக்கியதாகவோ மற்றைய மட்டுறுத்திகளை தாக்கியதாகவோ எழுதப்படவில்லை. ஆனால் அலையின் கருத்து வெட்டப்பட்டது. கருத்துரிமை மறுப்பாகவே இதனைக் கொள்ள முடிகிறது.

தனியொருவரைத் தாக்கி எழுதப்பட்ட கருத்து என்பதால் அலைமகள் எழுதிய கருத்தை நீக்கியிருந்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தனியொருவரைத் தாக்கி எழுதப்பட்ட கருத்து என்பதால் அலைமகள் எழுதிய கருத்தை நீக்கியிருந்தேன்.

இணையவன்,

அலைமகள் எவரையும் தனித்து தாக்கவில்லை. பொதுவாகவே அலைமகள் எழுதியிருந்தார்.அக்கருத்தை தரவா இணையவன் ?

Edited by shanthy

இப்பொழுது தெரிகின்றது ஏன் உங்களுடன் பலர் பகைத்து கருத்து எழுதவேண்டி உள்ளது என்று :D

என்னோடு பகைத்து என்ன செய்ய போகின்றீர்கள் .உலக மகா கள்வர்களை எல்லாம் இன்னமும் கூட்டு வைத்துக்கொண்டு பச்சைத்தண்ணி அடிக்கும் எங்களை பகைக்க நிற்கின்றீர்கள் .

நீங்களும் உங்கள் கொள்கைகளும் போராட்டங்களும்.

நிர்வாகம் எடுத்த முடிவு சரி எனில் ஏன் திரும்ப திரும்ப இதில் நிண்டு விளக்கம் கொடுப்பான்

இந்த திரியை இழுத்து பூட்டி விடுங்க

என்னோடு பகைத்து என்ன செய்ய போகின்றீர்கள் .உலக மகா கள்வர்களை எல்லாம் இன்னமும் கூட்டு வைத்துக்கொண்டு பச்சைத்தண்ணி அடிக்கும் எங்களை பகைக்க நிற்கின்றீர்கள் .

நீங்களும் உங்கள் கொள்கைகளும் போராட்டங்களும்.

இதிலையும் அரசியலா அர்ஜுன் முடியல :lol:

தனியொருவரைத் தாக்கி எழுதப்பட்ட கருத்து என்பதால் அலைமகள் எழுதிய கருத்தை நீக்கியிருந்தேன்.

தனிப்பட்டவர் மீதான கருத்தாக தான் எனக்கு தெரிந்தது

இணையவன்,

அலைமகள் எவரையும் தனித்து தாக்கவில்லை. பொதுவாகவே அலைமகள் எழுதியிருந்தார்.அக்கருத்தை தரவா இணையவன் ?

நீக்கப்பட்ட கருத்து மோகனின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. உங்களுடன் இது பற்றி அனாவசியமான விவாதம் செய்ய விருப்பமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நீக்கப்பட்ட கருத்து மோகனின் பார்வைக்கு விடப்பட்டுள்ளது. உங்களுடன் இது பற்றி அனாவசியமான விவாதம் செய்ய விருப்பமில்லை.

அப்ப வீணாண விவாதமோ இணையவன் இவ்வளவு நேரமும் இங்கை நடந்தது ? அட நானும் வீணாக்கீட்டேன் நேரத்தை. :blink::mellow:

முன்னொரு காலத்தில் வாழ்ந்து வந்த குருவிக்கு மரத்தில் கூடு கட்ட தடை விதித்த பொழுது ..விதிக்க பலர் குரல் எழிப்பிய பொழுது ..அது குஞ்சு பொரிக்க தெரியாத குருவி பாவம் அதை விட்டுடுங்க என்று வக்கலாத்து வாங்கிய மிதவாத சாத்திரிக்கு ...என்னத்தை சொல்லுறது .. தனிப்பட்ட பழிவாங்கலின் உசுப்பேத்தலுக்கு நிர்வாகம் தலை விரித்து கொண்டு நிற்குது என்று தான் எனக்கு தோன்றுகிறது ..உருவாக்கம் செய்வது எவ்வளவு கஸ்டம் என்பது ஒவ்வொரு படைப்பாளிக்கு தெரிந்த விடயம் ..அதை நீக்கவேண்டிய காரணம் என்ன் கஸ்டமோ கோதாரியோ தெரியாது ..அதையாவது ஒரு முறை விளக்கம் கேட்டுட்டு செய்திருக்கலாம் என்றது எனது ஆதங்கம்

Edited by நிழலி

கருத்துக்களம் என்பது பல்வகையான கருத்துக்களை எழுதும் களம். ஆயினும் கருத்தாளர்களின் கருத்துக்களில் சுயவிருப்பின் பேரில் கருதர்தாளர்களின் கருத்துரிமையை மதிக்காமல் கருத்துக்களை வெட்டுவதும் கருத்தாளர்களை நீக்குவதுமான கடும்போக்கை கடைப்பிடிக்கும் மட்டுறுத்தினர் இக்கள விதியை மீறுவதாகவே தெரிகிறது. கருத்துரிமையை மதிக்கத் தெரியாது கருத்தாளரை அவமதித்தல் , நீக்குதலும் , களவிதிக்கு முரணானது. மட்டுறுத்தினர்கள் மீதும் நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும்.

நன்றி வணக்கம்

Edited by நிழலி

பலரும் சாத்திரி மேல் வைத்திருக்கும் தனி அன்பு காரணமாக அவரை தடை செய்தமை பிழை என கருதுகிறார்கள்.

உண்மையில் 'யார் செய்தார்' என்பதை விட அவர் எவராயினும் அவர் 'கள விதிமுறைகளை மீறினாரா? இல்லையா?' எனப்பார்ப்பதே நடுநிலமை ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் 'யார் செய்தார்' என்பதை விட அவர் எவராயினும் அவர் 'கள விதிமுறைகளை மீறினாரா? இல்லையா?'

அகூதா உங்கள் கருத்தே எனதும். ஆனால் சிலர் எல்லா இடங்களிலும் விதிவிதியென்று மிரட்டுவது கருத்துரிமை மறுப்பல்லவா ?

எனப்பார்ப்பதே நடுநிலமை ஆகும்.

உண்மைக்கு முன்னால் நடுநிலமை என்பது பொய்யென்று கப்டன் கஜன் சொல்லியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் தான் எழுதிய கருத்தை நீக்க முடியாது அல்லது மாற்ற முடியாது என களவிதி ஒன்று உள்ளது என நினைக்கிறேன்.

உண்மைக்கு முன்னால் நடுநிலமை என்பது பொய்யென்று கப்டன் கஜன் சொல்லியிருக்கிறார்.

நான் கூற வந்த நடுநிலை கருத்துக்களை முன்வைப்பதில் உள்ள நடுநிலமை, போர்க்களத்தில் உள்ள பக்கச்சார்பையோ இல்லை நடுநிலமையையோ குறிப்பிடவில்லை.

பலரும் சாத்திரி மேல் வைத்திருக்கும் தனி அன்பு காரணமாக அவரை தடை செய்தமை பிழை என கருதுகிறார்கள்.

உண்மையில் 'யார் செய்தார்' என்பதை விட அவர் எவராயினும் அவர் 'கள விதிமுறைகளை மீறினாரா? இல்லையா?' எனப்பார்ப்பதே நடுநிலமை ஆகும்.

இதைத்தான் நாங்களும் கேட்கின்றோம் மடியில் கனம் இல்லையென்றால் ஆதாரத்தை காட்டவேண்டியது தானே ? என்மூலம் சாத்திரி விட்ட பதிலுக்கு நிர்வாகதின் தரப்பு என்ன பதில் தரபோகிறது ? விட்ட ஒரு பிழையை மூடி மறைக்க ஏன் இந்தப் பகீரதப் பிரையத்தனம்??????????

அவர் களவிதியை மீறினார் என்றுதான் தெரிகிறது.

அதே நேரம் நிர்வாகம் அவரை உடன் தடுத்ததற்கு காரணம் அவசரம் என்றும புரிகிறது. ஏனெனில் இவர்கள் தாமதிக்கத்தாமதிக்க அவர் தொடர்ந்து தனது ஆக்கங்களை அழிக்க இடமளிப்பதாக நிர்வாகம் உணர்ந்திருக்கலாம்.

ஒரு ஆக்கத்தை ஆக்குவது எவ்வளவு கடினமானது என இங்கு பலரும் எழுதுகின்றனர். அதேநேரம் ஒரு இணையத்தை அதிலும் ஒரு கருத்துக்களத்தை சரிவர தப்புக்கள் மற்றும் சட்டங்களுக்குட்பட்டு நடாத்துவது எவ்வளவு கடினம் என்பதனை எவரும உணர்ந்ததாக தெரியவில்லை.

நான் நினைக்கிறேன் தன்னிடம் உள்ள கேள்விகளை சாத்திரியார் வந்து கேட்பதும் அதற்கு நிர்வாகம் அவருக்கு பதில் தருவதுமே முறை என்று.

அண்ணா விசுகண்ணா இங்குள்ள கேள்வி , நிர்வாகம் சாத்திரி விடையத்தில் எதுவித முன் அறிவித்தலும் குடுக்காமல் அரஜகத்தனமாக ஏன் தடை செய்தது என்பதே . மேலும்,< பவாம் பிரபாகரனில் > சாத்திரியுடன் கடிதத் தொடர்பை வைத்த நிர்வாகம் ஏன் இப்பொழுது வைக்கவில்லை ?? இதற்கு அவர்கள் பதில் என்ன ??

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் தன்னிடம் உள்ள கேள்விகளை சாத்திரியார் வந்து கேட்பதும் அதற்கு நிர்வாகம் அவருக்கு பதில் தருவதுமே முறை என்று.

இது தான் உண்மை

சாத்திரி மீண்டும வந்ததும நிழலியும் சாத்திரியுயும் வெள்ளி இரவு தொடங்கினார்கள் என்றால் முழு இரவும் பேசிக்கொண்டிருக்கப்போகிறார்கள். அதைப்பார்த்து நாம் தான் தூர நிற்கப்போகின்றோம். :D :D

அண்ணா விசுகண்ணா இங்குள்ள கேள்வி , நிர்வாகம் சாத்திரி விடையத்தில் எதுவித முன் அறிவித்தலும் குடுக்காமல் அரஜகத்தனமாக ஏன் தடை செய்தது என்பதே . மேலும்,< பவாம் பிரபாகரனில் > சாத்திரியுடன் கடிதத் தொடர்பை வைத்த நிர்வாகம் ஏன் இப்பொழுது வைக்கவில்லை ?? இதற்கு அவர்கள் பதில் என்ன ??

அது அவர்களுக்குள் இருக்கும் இரகசியம்.

சாத்திரி வர வெளியில் வரும் தானே?

நானும் நீங்களும் மென்று என்னதான் நடக்கப்போகிறது???

மற்றும் சிவப்பால் எழுதுவதும் களவிதிகளுக்கு முரணாகும்.

சிவப்பு நிர்வாகத்தினருக்கான நிறம். :lol:

நான் நினைக்கிறேன் தன்னிடம் உள்ள கேள்விகளை சாத்திரியார் வந்து கேட்பதும் அதற்கு நிர்வாகம் அவருக்கு பதில் தருவதுமே முறை என்று.

ஒரு கருத்துக்களத்தில் பிழை நடந்தால் அதை யாரும் கேக்கலாம் அகூதா . சாத்திரி தான் வரவேணுமென்று இல்லை . மேலும் அவர் வரமுடியாத நிலையிலேயே என் மூலம் செய்தியை அனுப்பினார் . ஆக உரிமையுடன் கேட்பது தப்பில்லை என்றே நினைக்கின்றேன் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

மற்றும் பாவம் பிர........

மற்றும் தேசம் காத்தவர்கள் போன்றவற்றுக்கு எனக்கு தடை விதித்திருந்தார் சாத்திரி

எனவே அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. :lol::icon_idea: :icon_idea:

ஒரு கருத்துக்களத்தில் பிழை நடந்தால் அதை யாரும் கேக்கலாம் அகூதா . சாத்திரி தான் வரவேணுமென்று இல்லை . மேலும் அவர் வரமுடியாத நிலையிலேயே என் மூலம் செய்தியை அனுப்பினார் . ஆக உரிமையுடன் கேட்பது தப்பில்லை என்றே நினைக்கின்றேன் :) :) :) .

தடை செய்யப்பட்ட ஒருவர் வேறு பெயரில் வருவதும் களவிதிக்கு முரணானது தானே???? :lol: :lol: :lol:

ஒரு கருத்துக்களத்தில் பிழை நடந்தால் அதை யாரும் கேக்கலாம் அகூதா . சாத்திரி தான் வரவேணுமென்று இல்லை . மேலும் அவர் வரமுடியாத நிலையிலேயே என் மூலம் செய்தியை அனுப்பினார் . ஆக உரிமையுடன் கேட்பது தப்பில்லை என்றே நினைக்கின்றேன் :) :) :) .

இன்னும் பதினான்கு நாட்களில் சாத்திரியார் வரட்டும். அவர் பகிரங்கமாக இல்லை பிரத்தியேகமாக தனது ஆதங்கத்தை முன்வைக்கலாம்.

இது ஒன்றும் பிரச்சனை இல்லாமல் சுமுகமாக ஒரு தரப்பு இன்னொரு தரப்பிற்கு இணங்கி முடியலாம்.

நாம் எல்லோரும் தலையிட்டு இதை பெரிதாக்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

நன்றி வணக்கம்.

சாத்திரி விலகிச் செல்வது கவலை அளிக்கும் விடயம். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.