Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆறு மாதத்தில் பிறந்த குழந்தை ஆரோக்கியமாக வளர முடியுமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய அக்காவிற்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதற்காக ஆறு மாதத்தில் குழந்தையை பிறக்க வைத்துள்ளார்கள்.ஆனால் குழந்தை உயிருடன் உள்ளது.எனது கேள்வி என்னவென்றால் இந்த குழந்தை தப்பி ஆரோக்கியமாக வளர முடியுமா? ஏனென்றால் குழந்தை இறக்கும் பட்சத்தில் அக்காவை மன ரீதியாக தேற்றுவது மிகவும் கடினம்.இதைப்பற்றி பூரண விளக்கம் ஆராவது தந்தால் திருப்தியாக இருக்கும்.

எனக்குத் தெரிந்த ஒருவர் ஆறு மாதத்தில் பிறந்து ஆரோக்கியமாக நல்ல உயரமாக வளர்ந்து எந்தவித குறைபாடுகளுமின்றி இருக்கிறார்.

வாதவூரான், எனக்குத் தெரிந்து ஒரு குழந்தை 27 வாரங்களில் (40 - தான் சாதாரணம்) பிறந்தது. அது இப்போது வளர்ந்து பள்ளிக்கும் செல்கிறது. முதல் சில வாரங்கள் incubator இல் வைத்திருந்து, தாய்ப்பால் கொடுத்து வளர்த்தார்கள்.

எனவே உங்கள் சகோதரியின் குழந்தையும் நன்றாக வளர சாத்தியம் உள்ளது. எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியல்லவே. என்றாலும், மனதை தளரவிடாது காத்திருங்கள். மேல் நாடுகளில் என்றால், மருத்துவம் நன்றாக முன்னேறியுள்ளது.

அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

குறை மாதங்களில் பிறந்த சில குழந்தைகளை நானும் பார்த்திருக்கிறேன். முழு மாதங்களில் பிறந்த பலரை விட இவர்கள் ஆரோக்கியமாகவே உள்ளார்கள். உங்கள் அக்காவின் குழந்தையும் ஆரோக்கியமாக வளரும் என்று கடவுள் மேல் நம்பிக்கை வைத்து உங்கள் அக்காவையும் தேற்றுங்கள் அவவை மனம் தளர விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாம் நல்லதே நடக்கும்! :) God bless!!

எனக்குத் தெரிந்த ஒரு பையன் குறை மாதத்தில் பிறந்தான் (சரியான மாதம் தெரியவில்லை. விசாரித்துச் சொல்கிறேன்). வைத்தியசாலையில் நீண்ட காலம் வைத்திருந்தார்கள். பாடசாலையிலும் அவனுக்கு விசேட உதவிகள் கிடைத்தன.

இப்பொழுது சாதாரண, ஆரோக்கியமான பையனாக உள்ளான். ஒரு குறையுமில்லை. உங்களது அக்கா மேல்நாடுகளில் வசிப்பவராயின், விசேட கவனம் செலுத்துவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான், எனக்குத் தெரிந்து ஒரு குழந்தை 27 வாரங்களில் (40 - தான் சாதாரணம்) பிறந்தது. அது இப்போது வளர்ந்து பள்ளிக்கும் செல்கிறது. முதல் சில வாரங்கள் incubator இல் வைத்திருந்து, தாய்ப்பால் கொடுத்து வளர்த்தார்கள்.

எனவே உங்கள் சகோதரியின் குழந்தையும் நன்றாக வளர சாத்தியம் உள்ளது. எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியல்லவே. என்றாலும், மனதை தளரவிடாது காத்திருங்கள். மேல் நாடுகளில் என்றால், மருத்துவம் நன்றாக முன்னேறியுள்ளது.

அவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

இது 25 வாரங்கள் தான் ஆகிறது இது நீண்ட காலத்தின் பின் கிடைத்த ஒன்று.இங்கையில்லை ஊரிலை தான்.கர்ப்பம் ஆகியவுடன் நிறைய சந்தோசமாக இருந்தா.கலகலப்பானவ இதற்கு முதல் இரண்டு தடவைகள் மூன்று மாதத்திற்குள் கருசிதைவு ஏற்பட்டு அதன் பிறகு மிகவும் அமைதியாக இருந்தார்.இப்ப கொஞ்ச நாளாக தான் பழையபடி கலகலப்பாக மாறியிருந்தார்.அதற்குள் இப்படியாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த ஒரு அக்காவின் 4 பிள்ளைகளும் (2 ஆண், 2 பெண்) குறை மாதத்தில் தான் பிறந்தார்கள்.(கனடாவில்).அவர்கள் பிறந்து பல நாட்கள் வைத்திய சாலையிலேயே செலவளித்தார்கள்.மூச்சுக்கோளாறு,இதய க்கோளாறு என அப்பிள்ளைகள் அவதிப்பட்டார்கள்.ஹெலிகொப்டர் மூலம் வேறு வைத்தியசாலைக்கு கூட அனுப்பட்டார்கள்.குழந்தைகளுக்கு 2 வயது வரை நிறை குறைவாகவும்,நோயாலும் அவதிப்பட்டார்கள்.

தற்போது அவர்கள் பாடசாலை செல்லும் வயதை எட்டியதோடு மட்டுமில்லாமல் கெட்டிக்காரர்களாகவும் நோய் இல்லாமல் இருப்பதாகவும்,உடல் வளர்ச்சியில் சாதாரண பிள்ளைகள் போல இருப்பதாவும் தான் பட்ட கஸ்டங்களையும் இப்போ சந்தோசமாக இருப்பதாகவும் தாயார் ஒரு முறை என்னிடம் கூறி இருந்தார்.

வாதவூரான், அக்காவும் குழந்தையும் நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனியவன் அண்ணா,ஈஸ் அண்ணா,குட்டி அண்ணா, தப்பிலி அண்ணா மற்றும் நுனாவிலான் அண்ணா,இங்கை என்றால் நான் யோசிக்க மாட்டன் ஆனால் ஊரிலை வசதி குறைவு தானே

  • கருத்துக்கள உறவுகள்

வைத்திய கண்காணிப்பு உள்ள வரை கவலைப்பட த்தேவை இல்லை. அக்க மன ஆறுதல் பெற வாழ்த்துக்கள். ....

  • கருத்துக்கள உறவுகள்

குழந்தையை நிச்சயமாக காப்பாற்ற முடியும். தகுந்த.. இங்கியுபேற்றர் வசதி இருப்பின்.. நிச்சயம் குழந்தையைக் காக்க முடியும்..! இப்படி காக்கப்பட்ட பல நிகழ்வுகள் முன்னர் நடந்துள்ளன.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்கண்ணா நிலாமதி அக்கா .எனக்கு இப்போது நிறைய நம்பிக்கை வருகிறது அக்காவையும் தைரியப்படுதுவேன்.அணிவருடைய ஆதரவுக்கும் மீண்டும் நன்றி

ஊரில் இவ்வாறு பிறந்த குழந்தைகள் ஊரிலேயே வைத்தியசாலையில் கண்காணிக்கப்பட்டு தற்போது திடகாத்திரத்துடனும், சிறந்த கல்வியுடனும், செழிப்புடனும் ஊரிலேயே சிறப்புடன் வாழ்கின்றார்கள். ஆனால் அதிககவனமும், முயற்சியும் தேவை. குறிப்பாக நல்லதொரு வைத்தியநண்பர் போன்றோருடன் நேரடித்தொடர்பில்/கண்காணிப்பில் இருப்பின் மேலதிக‌ பாதுகாப்பானது.

முன்னைய எனது பதிவில் குறிப்பிட்ட பையன், ஆறு மாதங்களில் பிறந்தவராம்.

இதனைவிட ஊரில் நாற்பது வருடங்களிற்கு முன்பு குறை மாதத்தில் பிறந்தவரையும் அந்த நேரத்தில் இருந்த incubator இல் சிலகாலம் வைத்து வளர்த்து நன்றாக உள்ளார்.

அக்கா இருக்கும் ஊரில் மருத்துவ வசதிகள் குறைவென்றால், வேறு நல்ல ஒரு வைத்தியசாலைக்கு மாற்ற முயலுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான் என்னுடைய இளைய மகன் ஏழுமாதங்கள் நிறைவடையாத நிலையில்தான் பிறந்தான் அவன் பிறந்தபோது அவனுக்கு சுவாசிக்கக்கூடிய சக்தி மிகக் குறைவாக இருந்தது அத்தோடு வாயை அசைத்து பால்கூட அருந்தமுடியாத நிலையில் மூக்கின் ஊடாக டியூப் வைத்தே பால் பருக்கினார்கள். ஒரு வாரமாக என்னைத் தவிர தொட்டுப்பார்க்கத் தந்தையைக்கூட தாதிகள் அனுமதிக்கவில்லை......4 வாரங்களாக கண்ணாடிப. பெட்டிக்குள் வயர்கள் சுற்றிய நிலையில்தான் இருந்தான்.... படிப்படியாக அவன் வாயசைத்துப் பால் அருந்தத் தொடங்கும்வரை எங்களுக்கும் மிகத் துயரமான நாட்களாக அந்நாட்கள் இருந்தன... ஆனால் இப்போது அவனிடம் சில விசேட தன்மை இருப்பதை உணர முடிகிறது என்ன விடயமாக இருந்தாலும் துரிதமாக கற்றுக் கொள்ளும் வேகம் ஆச்சர்யப்படவைக்கிறது. வேறு சிலரும் இப்படிப்பட்ட தங்கள் பிள்ளைகளிடம் அத்தகைய துரிதமான தன்மையை அவதானிப்பதாகக் கூறினார்கள். உங்கள் அக்காவைக் கவலைப்படவேண்டாம் என்று சொல்லுங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன் அண்ணா ,தப்பிலி அண்ணா மற்றும் சகாரா அக்கா நன்றி உங்கள் ஆறுதல் வார்த்தைகளுக்கு.நிச்சயமாக எனக்கு நூறுமடங்கு தெம்பு வந்திருக்கிறது.முதலில் குழந்தை இறந்து விட்டதாகவே சாதாரண மருத்துவர்கள் கூறியுள்ளார்கள் பின்னர் குழந்தை மருத்துவர் வந்து செயற்கை சுவாசம் கொடுத்த பின்னரே குழந்தை அழுதுள்ளது.தப்பிலி அண்ணா அக்கா யாழ் போதனா வைத்தியசாலையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவலைப்படாதீர்கள் வாதவூரான்!எல்லாம் நல்லபடியாக நடக்கும்.இப்படியான பிரச்சனைகளை பல இடங்களில் கேள்விப்பட்டுருக்கிறேன்.இதுவரைக்கும் நல்லபதிலாகவே இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாத்தா எல்லாம் நல்லபடியாக நடந்தால் சந்தோசம் தான்

நன்றி தாத்தா எல்லாம் நல்லபடியாக நடந்தால் சந்தோசம் தான்

வாதவூரான்,

கவலை வேண்டாம் எனக்குத் தெரிந்து ஊரில் குறை மாதம் பிறந்த அனைவரும் ஆரோக்கியமாகவே இருக்கின்றனர்.

மிக முக்கியமான விடயம் என்னவெனில் உங்கள் அக்கா மிகத் தைரியமாக இருப்பதற்கான வழிவகைகளைச் செய்யுங்கள். உங்கள் அக்காவின் மனநிலையும் ஆரோக்கியமுமே முதல் தேவை. குழந்தையை மருத்துவர்கள் பார்த்துக் கொள்வார்கள், அக்காவை அவரைச் சுற்றி உள்ளவர்கள் தைரியம் கொடுத்து பார்க்கச் சொல்லுங்கள். அக்காவின் ஆரோக்கியமே பிள்ளையின் ஆரோக்கியத்தின் முதல் தேவை. எது நடப்பினும் அதனை ஏற்கும் மனநிலைக்கு அக்காவை (மிகைப்படுத்தப்பட்டளவில் நம்பிக்கைகள் கொடுப்பது கூட தவறானது) கொண்டுவருவது முக்கியம்

நிழலி சொன்னது போன்று அக்காவினுடைய ஆரோக்கியம் தான் முக்கியம். அவரை சந்தோசமாக இருக்க சொல்லுங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது, மிக நெருங்கிய நண்பர்கள் பலர், குறைமாதத்தில் பிறந்தவர்கள் தான்!

எந்தக் குறைகளும் அவர்களிடம் இல்லை!

அக்காவுக்கு விளங்கப் படுத்துங்கள்!

நீங்கள் சொல்வதைப் பார்த்தால், இது ஒரு 'Special Baby' போல!

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான், உங்கள் மருமகன்/ள் உங்களை இன்னும்... கொஞ்சக் காலத்தில்

மாமா என்று சொல்லி கூப்பிடுவார். கடுமையான யோசனை வேண்டாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதல் சொன்ன அனைவருக்கும் நன்றி.குழந்தை 850 g நிறை குறைவு 50 க்கு 50 தான் சந்தர்ப்பம் என்று வைத்தியர்கள் கூறியுள்ளார்கள்.இனி ஆண்டவன் சித்தம்

உங்கள் அக்காவின் குழந்தை நலம் பெற வேண்டுகிறேன்.

இவ்வாறு பிறக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்கு மேற்குலக நாடுகளில் சிறப்பாக வடிவமைத்த பிரிவு உண்டு.

http://en.wikipedia.org/wiki/Neonatal_intensive_care_unit

அண்மையில் கனடாவில் யாழ் போதனா வைத்தியசாலையில் இவ்வாறான ஒரு பிரிவை அமைக்க நிதி சேர்க்கப்பட்டது. அதையும் சிங்கள அரசு தடைகள் போடுவதால் கனேடிய அரசு ஊடாகவே செய்ய முடிந்தது (கனேடிய வைத்தியசாலைக்கும் நிதி சேகரிக்கப்பட்டது).

இவ்வாறான பிரிவுகள் முழுமையாக செயற்படும்பொழுது உயிர்கள் காப்பற்றப்படும்.எமக்கும் பெருமை கிட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா அண்ணா

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரன்.. அக்காவும் குழந்தையும் நலமுடன் பல்லாண்டுகாலம் வாழ வாழ்த்துக்கள்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.