தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
கடிதம் தமிழில்லையா ? ** தமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களில் ஆங்கிலச் சொற்களை எளிதாய் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். “இப்ப டைம் என்ன ?” என்பதில் எது ஆங்கிலச் சொல் ? ‘டைம்’ என்பது ஆங்கிலச் சொல். இது உடனே நமக்குத் தெரிகிறது. டைம் என்பதற்கு நேரம் நல்ல தமிழ்ச்சொல். ‘இப்ப நேரம் என்னாச்சு ?” என்று தமிழில் கேட்கலாம். “டைம் ஆச்சு. கிளம்புங்க” என்பதைப் போலவே “நேரம் ஆச்சு. கிளம்புங்க” என்று சொல்வதும் வழக்கத்தில் இருக்கிறது. ஆங்கிலத்தைப் போலவே வடசொற்களையும் அடையாளம் கண்டுபிடித்துவிடுவோம். ”நல்ல உதாரணத்தோடு பேசினான்” என்பதில் வடசொல் எது ? ‘உதாரணம்’ என்பது வடசொல். உதாரணம் என்பதற்கு ‘எடுத்துக்காட்டு, சான்று’ ஆகியன தகுந்த தமிழ்ச்சொற்க…
-
- 1 reply
- 2.5k views
-
-
மக்களின் பேச்சுத் தமிழை, ‘நல்ல தமிழ்’ வாதத்தைக் கூறிப் புறக்கணித்துவிடக் கூடாது. தமிழ் மொழிக்கு அடைமொழிகள் தந்து பாராட்டுவது புலவர்களின் மரபு. மொழிக்கு மட்டுமல்லாமல், மனிதர்களுக்கும் மற்றவற்றுக்கும் அடை கொடுப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் ஓர் அம்சம் என்றுகூடச் சொல்லலாம். நல்ல என்ற சொல் தமிழுக்கு உள்ள பழமையான அடைகளில் ஒன்று. ‘நற்றமிழ்’ என்னும் வழக்கைப் புறநானூற்றில் காண்கிறோம். தமிழ் நல்ல மொழி என்பது இதன் பொருள். இந்த வழக்கு மற்ற மொழிகள் கெட்ட மொழிகள் என்று சொல்ல வரவில்லை. நமக்கு நம் பிள்ளை நல்ல பிள்ளை என்பது போல, நமக்குத் தமிழ் நல்ல மொழி என்கிறது. நல்ல என்ற சொல்லின் பொருள் நல்ல என்ற சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உண்டு. அந்தப் பொருள்கள் தமிழரின் கலாச்சாரப் பா…
-
- 1 reply
- 1.2k views
-
-
தினம் ஒரு தமிழ்ப் பாடல் - சுப.சோமசுந்தரம் "தேனுக்குள் இன்பம் கறுப்போ சிவப்போ வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்! தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல் ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!" --------------திருமந்திரம் பாடல் 3065. பாடற் குறிப்பு : புற வழிபாட்டை விட அக வழிபாட்டுச் சிறப்பைக் கூறும் திருமூலரின் மற்றொரு பாடல். எளிமையான வரிகள். இப்பாடலுக்கான எந்த உரையும் பாடலை விட எளிமையாக அமைய முடியாது. இருப்பினும்.... பாடற் பொருள் : தேனின் சுவை கறுப்பா சிவப்பா ? வானுக்குள் ஈசனைத் தேடும் மதியற்றோரே ! (இங்கு வான் என்பது புறவுலகிற்கான குறியீடு). தேனுக்குள் அதன் சுவை காட்சிப்படுத்த முடியாமல் ஒன்றறக் (inherent) கலந்ததைப் போல், இந்த ஊனுடம்புக்குள்ளேயே ஈச…
-
-
- 1 reply
- 561 views
- 1 follower
-
-
ராவணன் தமிழன் "தமிழர் காதல்", ஆயிரம் வருடங்களிற்கு முன்னரே தமிழர், தம் காதலை பாடி வைத்தார்கள், இப்படிதான். "யாயும் ,ஞாயும் யாரா கியரோ" , (நானும், நீயும் யார், எவர் என்று அறியாதவர்களாக இருக்கட்டும், நானும், நீயும், முன் ,பின்ன தெரியாதவர்களாக இருக்கட்டும், எப்படி யாவது இருதுட்டு போகட்டும், இழவு ) "எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்", ( எம் இருவரது ,அப்பன், ஆத்தாள் முன்ன, பின்ன , எப்போதும், ஒருவருக்கு ,ஒருவர் அறிந்திருக்கு மாட்டார்கள், அதற்கான வாய்ப்பே இல்லை) "யானும், நீயும் எவ்வழி யறிதும்", ( நான் எப்படி பட்டவன், நீ எப்படி பட்டவள், பணம் , இருக்க, பந்தம் இருக்கா, சொந்தம் , இருக்கா, வேலை இருக்க, வெட்டி இருக்கா, கடவுள், இருக்கா, மதம், இருக…
-
- 1 reply
- 1.4k views
-
-
வள்ளுவன்ர குரல் யான் என தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் பொருள் உடலை “யான்” எனவும், பொருள்களை “எனது” எனவும் நினைக்கின்ற மயக்கத்தை போக்குகின்றவன் வானோர்க்கும் எட்டாத உயர்ந்த உலகம் சேர்வான் இப்பிடியெல்லாம் கனக்க சித்தர்மார் எவ்வளவு அழகாக சொல்லிப்போட்டு போட்டினம்.
-
- 1 reply
- 721 views
-
-
தோற்றவர் வென்றார் - சுப. சோமசுந்தரம் இத்தலைப்பு வள்ளுவத்திலிருந்து சுடப்பட்டது என்பது இந்த எழுத்துக்கான பேறு. ஆனால் இத்தலைப்பில் எனது பேசுபொருள் வேறு என்பதைச் சுட்டுவதும் என் கடமை. வள்ளுவன் காமத்துப்பாலில், "ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப்படும்" (குறள் 1327) என்று காதற் களத்தில் ஊடலில் தோற்பதைச் சொல்வான். தமிழர் வாழ்வில் தலையாயவை காதலும் வீரமும்தாமே ! இங்கு நாம் மற்றொரு துறையான வீரத்தைக் கையிலெடுத்துப் பொர…
-
- 1 reply
- 1k views
- 2 followers
-
-
குறிஞ்சித்திணைப் பாடல்களில் இவை காணப்படுவதால் புவியியல், வேதியல் என்பன போன்று மலையும் மலை சார்ந்தவற்றையும் குறிஞ்சியியல் (credit: திருவள்ளுவன் இலக்குவனார் ) என்றே நாம் தனியியல் கண்டு பல கலைச்சொற்களைப் புதுப்பிக்க இயலும். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலையியல் தொடர்பான கலைச் சொற்கள் : அடிவாரம், தாள், வெற்பு - மலையின் அடிப்பகுதி (spur / Foot of a hill/mountain) அடுக்கம் - பன்மலை வரிசை (a complex mountain range.) அறைவாய், கணவாய், கண்டி - (mountain pass) ஆரிப்படுகர் - (very difficult mountain path with ascents and descents) அரிதின் முயன்று ஏறியும் இறங்கியும் செல்லும் கடிய மலை வழி கது, கிழிப்பு, பிளப்பு, விடர், விடரளை, விடம்பு,…
-
- 1 reply
- 2.8k views
- 1 follower
-
-
தும்மல் விளைவித்த ஊடல்! தும்மல்' என்ற செயல் உடற்கூற்றியல் சார்ந்த நிகழ்வு. அளவுக்கு மீறிய நெடியைத் தாங்கமுடியாமல், அதை முகர்வதால் மூச்சு விடுவதில் உருவாகும் தடையழர்ச்சியின் வெளிப்பாடாக, திணறல் ஏற்பட்டு அதை, விடுவிக்க மூக்கும் வாயும் முழு ஆற்றலுடன் மூச்சை வெளியேற்றுவதால் உண்டாவது. தும்மல், "நீர்க்கோவை'யாலும் (ஜலதோஷம்) ஏற்படும். இஃதன்றி, காற்று மாசு, சுற்றுச்சூழல், உணவு, உடை, அணிகலன் இவற்றின் ஒவ்வாமையாலும் தும்மல் வரும். இவைதவிர மனவியல் காரணங்களாலும் தும்மல் உருவாகும் என்று கூறப்படுகிறது. மங்களகரமான செயல்களைப் பற்றிப் பேசும்போது தும்மல் போடுபவர்கள் கடிந்துகொள்ளப்படுவதும் நடைமுறையில் உள்ளது. தும்முபவர் ஒற்றைத் தும்மலுடன் நிறுத்திவிடாமல், மேலும்…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
தமிழர் திருமண முறை-அன்று முதல் இன்று வரை - ச.மாடசாமி குடும்பமும் திருமணமும் ""இந்தியர்கள் எங்கே சென்றாலும் தங்கள் குடும்பப் பின்னணியை கூடவே எடுத்துப் போகிறார்கள். அதன் காரணமாய் எப்போதும் தங்கள் குடும்பத்துக்குள் இருப்பது போலவே உணர்கிறார்கள்''! என்பது உளவியல் அறிஞர் ஆலன் ரோலண்ட் கருத்து. "வனத்தில மேஞ்சாலும் இனத்தில வந்து அடையணும்" என்ற தமிழ்ச் சிந்தனை அவர் கூற்றை நிரூபிக்கத்தான் செய்கிறது. அவரவரினன் குடும்பம் அவரவருக்குள் ஒண்டிக் கிடக்கிறது.தூரங்களால்-நாகரிகங்களால்-சொந்தக்குடும்பத்திலிருந்து பிரிந்து கிடப்பவரும் இதற்கு விதிவிலக்கு அல்ல. குடும்பத்தின் பிடிமண் எல்லோருக்குள்ளும் கொஞ்சம் கிடக்கிறது. வீட்டுக்குள் பண்பாட்டுப் பிரச்சினை தோன்றும் போதெல்…
-
- 1 reply
- 9.1k views
-
-
மகாபாரதம் படிப்பது எப்படி மகாபாரதம் முழுமையாகப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறேன், அதை எப்படித் துவங்குவது, என்ன புத்தகத்தை நீங்கள் சிபாரிசு செய்வீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார், இதே கேள்விகளை பல நேரங்களில் பலரும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள், ஒவ்வொரு முறை பதில் சொல்லும் போது இதைப்பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன், இன்றைக்கு நண்பர் கேட்டதும் நான் பயின்ற வழிமுறைகளைத் தெரிவித்தேன் மகாபாரதம் படிக்க ஆரம்பிக்கும் போது முதலில் எதற்காகப் படிக்க ஆரம்பிக்கிறீர்கள் என்பது முக்கியமானது, காரணம் அதைப்பொறுத்து தான் எவ்வளவு காலம் தேவைப்படும் என்பது முடிவு செய்யப்படும் வெறும்கதையை மட்டும் வாசிப்பது என்றால் ஆறுமாத காலத்திற்குள் உங்களால் மகாபாரதத்தை வா…
-
- 1 reply
- 3.6k views
-
-
திருகோணமலை மாவட்டம் ஈழத்து இலக்கியத்தைப் பொறுத்த அளவில் மிக முற்போக்கான ஒருமாவட்டமாக திகழ்ந்திருக்கின்றது எனலாம். இதற்கு எண்பிற்பாக ஈழத்தின் முதல் நாவல் எனச் சில்லையூர் செல்வராஜன் போன்ற சிலராலும், சித்திலெப்பை அவர்களின் ’அசென்பேயிண்ட சரித்திரம்’ நாவலுக்கு அடுத்த இரண்டாவது நாவலென கமாலுதீன் போன்ற வேறு சிலராலும் கூறப்படும் ’ஊசோன்பாலாந்தைகதை’ எனும் நாவல்(1891) திருகோணமலை பெரிய கடையைச் சேர்ந்த எஸ்.இன்னாசித்தம்பி அவர்கள் எழுதியதும், தமிழ் கூறும் நல்லுலகின் முதலாவது வரலாற்று நாவல் எனக் கூறப்படும் 'மோகனாங்கி 'யைப்(1895) படைத்த தி.த.சரவணமுத்துப் பிள்ளையைப்(1867-1922) பெற்றெடுத்த மண்ணும், புதுக்கவிதை எனும் வடிவம் தமிழில் சி.சு.செல்லப்பாவின் 'எழுத்து' போன்ற பத்திரிகைகளில் வெளிவரத்…
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழ் இலக்கியத்தில் கூறப்படும் நீர் மேலாண்மை... வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார். "இடியுடைப் பெருமழை எய்தா ஏகப் பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' (வரி.26-28) இப்பாடலடியில், "மழை பிணித்து ஆண்ட மன்னவன்' என்பதன் பொருள், முறையாகப் பெய்யும் மழை நீரை ஏரி, குளங்…
-
- 1 reply
- 2.5k views
-
-
-
- 1 reply
- 895 views
-
-
நினைவு கூர்தலா, நினைவு கூறுதலா ? எது சரி ? நினைவு கூறுதல், நினைவு கூர்தல் என்னும் இருவகையான தொடர்களுக்குள் குழப்பம் வருகிறது. “என் இளமைக் காலத்தை நினைவு கூறுகிறேன்” என்று எழுதுவதா ? “என் இளமைக் காலத்தை நினைவு கூர்கிறேன்” என்று எழுதுவதா ? அத்தொடரின் பொருள் என்ன ? ஒன்றினை ஆழ்ந்து நினைத்துப் பார்க்கும் செயல் என்று தெரிகிறது. நினைவு மேலோட்டமானதாக இருக்கும்போது அதனை மேலும் துலக்கமாக எண்ணிப் பார்ப்பது. ஒன்றுக்கு இரண்டுமுறை நினைத்துப் பார்ப்பது. நினைவுக்குள் சரிபார்ப்பது. இதுதான் அத்தொடரின் பொருள். நினைவு கூறுதல் என்றால் என்ன ? கூறுதல் என்பதற்குப் பொருள் தெரியும். ஒன்றினைச் …
-
- 1 reply
- 8.7k views
-
-
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம் தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெ...ழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம் அ -----> எட்டு ஆ -----> பசு ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி உ -----> சிவன் ஊ -----> தசை, இறைச்சி ஏ -----> அம்பு ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை கா -----> சோலை, காத்தல் கூ -----> பூமி, கூவுதல் கை -----> கரம், உறுப்பு கோ -----> அரசன், தலைவன், இறைவன் சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல் சீ -----> இகழ்ச்சி, திரு…
-
- 1 reply
- 1.1k views
-
-
பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் – நடன காசி நாதன் இன்றைக்கிருக்கும் தமிழ் எழுத்தின் மிகப் பழைய வடிவத்தைப் ”பண்டைத் தமிழ் எழுத்து” என்கிறோம். இவ்வெழுத்தைச் சிலர் தற்பொழுது ”தமிழ் பிராமி” என்றும்”தாமிழி” என்றும் எழுதுகின்றனர். தமிழ் பிராமி என்றழைப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ் மொழிக்காக உருவாக்கப்பெற்ற பிராமி எழுத்து என்றும்,அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமியிலிருந்து இவ்வெழுத்துத் தோன்றியதே எனினும் அதிலிருந்து வேறுபட்டது என்றும் கூறுகின்றனர். அவ்வாறெனில் பிராகிருத மொழிக்காக எழுதப்பெற்ற எழுத்தைப் ”பிராகிருத பிராமி” என்று அழைப்பதுதானே சரியாகும். மேலும் அப்பிராமி எவ்வெழுத்திலிருந்து தோன்றியது? திடீரென்று அவ்வெழுத்தை மௌரியர் உருவாக்கிக் கொள்கையில் மற்ற பகுதி மன்னர்கள், க…
-
- 1 reply
- 3.5k views
-
-
<p>வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள். கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார். கணக்கதிகாரப் பாடல் : 50 வட்டத்தின் சுற்றளவில் தமிழர்கள். கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார். கணக்கதிகாரப் பாடல் …
-
- 1 reply
- 1.2k views
-
-
சுந்தர ராமசாமி தமிழ் என்பது தமிழன் சக தமிழனுடன் கொள்ளவேண்டிய உறவின் அடிப்படை தமிழ்வழிக் கல்வியை அமல்படுத்துவதில் தமிழ் எழுத்தாளர்கள் ஆற்ற வேண்டிய பங்கு முக்கியமானது. தமிழ் வாழ்வு, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகிற ஒரு வரலாற்று நிகழ்வுதான் தமிழ்வழிக் கல்விக்கான போராட்டம். இவ்வரலாற்று நிகழ்வை தெளிவற்ற, மேலோட்டமான சிந்தனைகள் சார்ந்து படைப்பாளிகள் எதிர்கொள்ள முடியாது. அதிகாரத்தைச் சுயநலம் சார்ந்து சுரண்டுவது தமிழ் அரசியலின் பொதுக்குணம். அச்சுரண்டலுக்குத் துணை நிற்கும் முகமூடிகளை அரசியல் இயக்கங்கள் உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும். தமிழ் வாழ்வைச் செழுமைப்படுத்துவது படைப்பாளிகளின் பொதுக் குணமாக மலர வேண்டும். தாய்மொழிவழிக் கல்வி அடிப்படை தாய்மொ…
-
- 1 reply
- 954 views
-
-
ஆரியப் புரட்டும் அயிரமீனும் பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி சமஸ்கிருதத்திலிருந்தே பல தமிழ்ச் சொற்கள் உருவாயின என்று ஆரியர்கள் காலம் காலமாகப் புளுகி வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் மிகவும் முக்கியமான சொல் தமிழில் நாம் புழங்கிவரும் "ஆயிரம்" என்னும் சொல்லாகும். ஆயிரம் என்னும் சொல் 'ஸகஸ்ர' என்னும் வடசொல்லில் இருந்தே பெறப்பட்டதாகக் காட்டுவர் ஆரியர்கள். தரம் உயர்ந்த வைரம், தரம் குறைந்த வைரம் என்று வைரக்கற்களின் தரத்தைச் சோதித்து அறிய சாமானியனால் இயலாது; ஆனால், 'மணிநோட்டகன்' எனப்படும் வைரப் பரிசோதகன் எளிதில் கண்டுபிடித்துவிடுவான். அதுபோல், சொற்களின் வேர், சொற்பொருள் காரணம் போன்றவை மொழிநூல் இலக்கணம்…
-
- 1 reply
- 2.1k views
-
-
[size=6]தமிழ் இலக்கியத்தின் ஆரோக்கியம் இன்றும் நாளையும்[/size] [size=4]வி. ஜீவகுமாரன்[/size] [size=2] [size=4]அனைத்துலக தமிழ் மகாநாட்டில் தமிழ் இலக்கியமும் சமூகமும் இன்றும் நாளையும் என்பது பற்றி கட்டுரை எழுதுவது என்பது பூதத்தை பிடித்து பானைக்குள் அடக்கும் முயற்சியாகும். இலக்கியத்தின் ஒவ்வோர் பிரிவு பற்றி எழுதுவதாயின் அவையே பெரிய கட்டுரைக் கோப்புகளாக அமைந்து விடும். எனவே இலங்கை மற்றும் இலங்கையர் புலம் பெய்ர்நது படைக்கும் இலக்கியத்தின் ஆரோக்கியம் இன்றும் நாளையும் எவ்வாறு இருக்கின்றது அல்லது இருக்கப் போகின்றது என்பதனை பின்ணினைப்புகளுடன் கூடிய ஓர் ஆராய்ச்சிக் கட்டுரையாக அன்றி நிஜ உலகின் தரிசனங்களை மட்டும் வைத்து அலசுவதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.[/size][/size] …
-
- 1 reply
- 1.8k views
-
-
இணையத்தில் தகவல்களைத் தேடும் எவரும் செய்யும் முதல் ‘க்ளிக்’ விக்கிப்பீடியாதான். அறிவுப் புரட்சியின் குறியீடாக அது மாறிவருகிறது. அது லாப நோக்கு இல்லாமல், பலரால் கூட்டாகத் தொகுக்கப்படும், பல மொழிகளில் உள்ள இணையக் கலைக்களஞ்சியம். வரும் காலங்களில் மாணவர்களையும், விக்கிப்பீடியாவையும் பிரிக்க முடியாது. அவர்களின் கல்விக்கும், அறிவுத் திறன்களின் தோழனாக அது மாறியுள்ளது. பள்ளிகளில் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகளில் ஆரம்பித்து கல்லூரிகளில் செய்யும் புராஜெக்ட்கள் வரை மாணவர்கள் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துகிறார்கள். 2001 -முதல் செயல்படும் விக்கிப்பீடியா உலகம் முழுவதும் 280 மொழிகளில் இயங்குகிறது. இந்தியாவில் 22 மொழிகளில் விக்கிப்பீடியா இயங்குகிறது. 2003 முதல் செயல்படும் தமி…
-
- 1 reply
- 590 views
-
-
தாய்மொழியின் சமத்துவமும், அயல்மொழியின் ஆதிக்கமும்! மொழிகளின் இயற்கை புரிந்துவிடு! மனிதர்க்குத் தமிழே ஆதிமொழி!-5 பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி. "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!" - பாவேந்தர் பாரதிதாசன் "காக்கா எல்லா நாட்டுலயும் கா கா -ன்னுதான் கத்துது! எல்லா நாட்டுலயும் குயில் கூகூ-ன்னுதான் கூவுது; எல்லாக் காட்டு யானையும் ஒரே மாதிரித்தான் பிளிறுது; இந்த மனிதன் மட்டும் ஊரூருக்கு வேற வேற மொழி பேசறானே! அதெப்படிப்பா?", என்றபடியே வந்தார் நண்பர். "மொழிகளின் இயற்கை குறித்துச் சொல்றேன்னு சொன்னது உண்மைதான்! அதுக்காக என்ன வைச்சு செய்யதுன்னு முடிவு பண்ணிட்டியாப்பா!", என்றேன் சற்று பயத்துட…
-
- 1 reply
- 1.6k views
-
-
தனித்தமிழ் இயக்கம் வெளியிட்ட நுட்பவியல் கலைச்சொற்கள் WhatsApp - புலனம் Facebook - முகநூல் Youtube - வலையொளி Instagram - படவரி WeChat - அளாவி Messanger - பற்றியம் Twitter - கீச்சகம் Telegram - தொலைவரி Skype - காயலை Bluetooth - ஊடலை WiFi - அருகலை Hotspot - பகிரலை Broadband - ஆலலை Online - இயங்கலை Offline - முடக்கலை Thumbdrive - விரலி Hard disk - வன்தட்டு Battery - மின்கலம் GPS - தடங்காட்டி CCTV - மறைகாணி OCR - எழுத்துணரி LED - ஒளிர்விமுனை 3D - முத்திரட்சி 2D - இருதிரட்சி Projector - ஒளிவீச்சி Printer - அச்சுப்பொறி Scanner - வருடி Smartphone - திறன்பேசி Sim Card - செறிவட்டை Charger - மின்னூக்கி Digital - எண்மின…
-
- 1 reply
- 639 views
-
-
முக்கடலும் முத்தமிடுகின்ற குமரி மாவட்டத்து நாஞ்சில் நாட்டுப் பகுதியில் ஒளவையார்க்கு திருத்தலங்கள் அமைந்துள்ளன. அத் திருத்தலங்களில் தாழக்குடியிலும் குறத்தியறையிலும் உள்ள திருத்தலங்கள் முதன்மையானவையாகும். தாழக்குடி ஒளவையார் திருக்கோவில் தாடகை மலையடிவாரத்தில், தோவாளைச் சாணல் கரையோரத்தில் நாவற்மரச் சோலையும் மாந்தோப்புகளும் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. நாவற்சோலையைப் பார்க்கும்போது "பாலமுருகன் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?'' என்ற கேள்வியினை எழுப்பி ஒளவையாரது அறிவினையும் ஞானத்தையும் சோதித்தது நமக்கு ஞாபகம் வருகிறது. நாஞ்சில் நாட்டு மக்கள் ஆடி மாத செவ்வாய்க்கிழமையும், தை மாத செவ்வாய்க்கிழமையும் "கூழுக்குக் கவிபாடிய கூனக் கிழவி' என வாயாற வாழ்த்துப் பாடிக் கொண்…
-
- 1 reply
- 646 views
-
-
தத்துவமும் , தமிழரும் நான் யார்? உலகம் தோன்றியது எப்படி போன்ற கேள்விகள் நாகரீகமடைந்த மனிதனின் சிந்தனையில் தோன்றி போது, அவனுடைய பகுத்தறிவால் சிந்தித்த போது உருவானது தான் தத்துவம். அந்த தத்துவத்தை வணிக நோக்கிலும், அதிகார நோக்கிலும் உபயோகபடுத்த, அதன் மூலத்தை மறைத்து , தத்துவத்தின் சாராம்சத்தை அழித்து , அதனை சுற்றி மக்களிடம் வணிகப்படுத்த உருவாக்கப்பட்ட அமைப்பு தான் மதங்கள். எனவேதான் உண்மையான ஆன்மீகவாதிகளான சித்தர்கள் மதங்களை எதிர்த்தனர். "மெய்பொருள் காண்பது அறிவு" என்னும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்ட தமிழர்கள் பழங்காலத்தில் பல்வேறு தத்துவங்களை திறந்த மனதோடு ஆராய்ந்து, வாதிட்டு வந்ததை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் காண்கிறோம். ஒரு உதாரணம் மணிமேகலையில் வரும் …
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-