சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
984 topics in this forum
-
-
பனம்பழஞ் சூப்பி யாழ்ப்பாணத்திலிருந்து தம்பி செந்தூரன் தபாலில் அனுப்பிய பொதி நேற்று பத்திரமாக மெல்பேர்ண் வந்தடைந்தது. மறந்தும் மறவாத மண்ணின் வாசனையை தாங்கிவந்த அந்தப் பொதிக்குள், பருத்தித்துறை வடை, வல்வெட்டித்துறை வடகம், பருத்தித்துறை பப்படம், வல்வெட்டித்துறை எள்ளுப்பா, கன்னாதிட்டி மோர் மிளகாய், பனங் குட்டான் இவற்றோடு கற்பகம் நிறுவனம் தயாரிக்கும் பனம் சொக்கலேட்டும் (Palm Chocolate) இருந்தது. அடுத்த முறை பினாட்டும் புளுக்கொடியலும் அனுப்பச் சொல்லோணும். கிட்டத்தட்ட அந்தக் கால புளூட்டோ டொபியை ஞாபகப்படுத்திய பனம் சொக்கலேட்டை வாயில் போட்டு கடிக்கும் போது, ஏனோ சிறுவயதில் சூப்பிய சுட்ட பனம்பழத்தின் ஞாபகம் வந்து தொலைத்தது. …
-
- 66 replies
- 5.4k views
- 2 followers
-
-
உபத்திரவ நாய்: மரநாய். காட்டு நாய் பார்த்திருப்பீர்கள். இது மரநாய். Weasels மிக மோசமான ஒரு உபத்திரவ விலங்கு. மிகவும் துணிச்சல் மிக்கது. தன்னிலும் பார்க்க மிகவும் பெரிய விலங்குகளையே உண்டு, இல்லை என்று பண்ணி விடும். சாப்பிட முடியுமோ இல்லையோ, கொல்ல முடியுமோ இல்லையோ, அரியண்டம் கொடுப்பதில் கில்லாடி. கோழிக்கூட்டினுள் புகுந்து, முட்டையினை அலேக்காக தூக்கிக் கொண்டு ஓடுகிறது. பாம்பினை கூட பொறுத்த இடத்தில் பிடித்து, அலற வைக்கிறது. பெரும்பாலும், கழுத்தை குறி வைத்து கவ்விக் கொள்வதால், பாதிக்கப்படும் விலங்குகள், ஒன்றுமே செய்ய முடியாமல், தடுமாறி, அங்கும் இங்கும் ஓடும். உருளும், புரளும். 😯 இந்த வீடியோவில், தாய் பறவை இல்லாத நேரத்தில், ஒரு மரப்பொந்தினுள் புகுந்து…
-
- 60 replies
- 9.1k views
-
-
ரணிலும், பிள்ளையானும்... முக்கிய ஆலோசனையில். 😂 பெண்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபாய் வழங்கி, 24 மாதங்களில் வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் ஒன்று அமுல் படுத்தப்படும். - சஜித் பிரேமதாச.- ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு விசேட சுகாதார சேவை. - அனுரவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதிமொழி. - ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில், விசாரணைக்கு தனிக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்படும். - நாமல் ராஜபக்ச.- உங்கள் வாய்... உங்கள் உருட்டு. 😂 யாராய் இருக்கும்.... 😂 🤣
-
-
- 54 replies
- 3.6k views
- 1 follower
-
-
-
-
- 53 replies
- 2.7k views
- 1 follower
-
-
சமூக ஆர்வலர் பரதன் நவரத்தினம் (கனடா) கதைப்பமா.... நம்ம யாழ் கள அர்ஜுன் அண்ணா அவர் கடந்து வந்த தனது போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். இந்த நேர்காணல் எண்பதுகளின் இயக்க வரலாற்றில் ஒரு துளி. யாழ் கள தோழர்கள் பார்க்கவேண்டும்😑
-
- 52 replies
- 5.1k views
-
-
சதிக் கோட்பாடுகள் மீதான எமது தீராத ஆசை ! அண்மையில் வேலைத்தளத்தில் நண்பர் ஒருவருடன் அளவலாவிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்க ரெட்டைக் கோபுரத் தாக்குதல்பற்றியும் பேச்சு எழுந்தது. இதுபற்றி மேலும் எழுதுவதற்குமுன்னர், அந்த நண்பர் பற்றிய சில விடயங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அவர் ஒரு வெள்ளையினத்தவர், வாழ்க்கையின் அதிகமான நேரங்களை தனிமையில் கழிப்பவர். பெரும்பாலான தருணங்களில் தனிமையில் இருக்கும் அவருக்கு தாழ்வு மனப்பன்மை இருப்பதென்பது அவரது சில செயல்கள் மூலம் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும். மெளனமே பெரும்பாலும் அவரது மொழியாக இருப்பினும், சில விடயங்கள் பற்றிப் பேசும்பொழுது அவரது சுபாவம் மாறிவிடும். அப்படியொன்றுதான் இந்த ரெட்டைக் கோபுரத் தாக்குதல் தொடர்பாக அவர் கொண்டிருக்கும் …
-
- 45 replies
- 4.4k views
-
-
சிங்களவர்களை... திருமணம் செய்ய, முண்டியடிக்கும் யாழ் பெண்கள்... குறிப்பாக பல்கலைக்கழக மாணவிகள் சக சிங்கள மாணவர்களை திருமணம் செய்வதை காதலிப்பதை இப்போது ஒரு பேசனாக கொண்டுள்ளார்கள்... சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு விவாகப் பதிவாளரோடு பேசும்போது அவர் சொன்ன விடயம்... யாழ்ப்பாணத்தில் இப்போது பொலிஸ், ஆர்மி, CID யினரை திருமணம் செய்யும் படித்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு தனியார் அரச துறையில் பணியாற்றும் சிங்களவர்களை மணமுடிக்கும் போக்கும் அதிகரித்திருப்பதாக கூறினார். தன்னிடம் விவாக பதிவுக்கு வரும் கணிசமான ஆசிரியைகள்... சிங்கள பொலிஸ், மற்றும் CID யினை விரும்பி மணமுடிக்கும் போக்கு இருக்கிறது என்று கூறினார். முன்பு சிங்கள ஆண்களை மண…
-
- 45 replies
- 4.3k views
-
-
யாழ்ப்பாணத்து அறிவுஜீவித்தனம் என்றால் என்ன? முற்குறிப்பு: அறிவு என்பது வேறு மதிநுட்பம் அல்லது புத்திக்கூர்மை அல்லது புத்திசாலித்தனம் என்பது வேறு என்பதே எனது புரிதல். இங்கு நான் அறிவு எனக் கருதுவது கல்வி மூலம் பெறப்பட்ட அறிவாகும். அறிவுஜீவிகள் எல்லோரும் மதிநுட்பம் உள்வர்களாக இருக்க வேண்டியதில்லை. அதே போல் மதிநுட்பம் வாய்ந்தவர்கள் எல்லோரும் கல்வியறிவைப் பெற்றவர்களாக இருக்க வேண்டியதில்லை. அறிவு மட்டம் அதிகரிக்க அதிகரிக்க மதிநுட்பம் குறைந்து செல்லும் என்றொரு விதி இல்லை. ஆனால் நடைமுறையில் அப்படித்தான் உள்ளது என்பதையும் மறுக்க முடியாது. ஒரு 5 வயதுக் குழந்தையைவிட வளர்ந்த ஒரு அறிவுஜீவியின் மதிநுட்பம் குறைவாகவே உள்ளது என்ப…
-
- 43 replies
- 3.5k views
-
-
மேலே உள்ள உள்ள படத்தில் சுமந்திரனுக்கு அருகில் கறுப்பு வட்டத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? இவர் யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் ஒருவராகிய இளங்கோவன். இவர் தந்தை செல்வாவின் பேரன் என்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். 1977ல் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் வாய்ப்பு கேட்டபோது வாரிசு அரசியலுக்கு இடமில்லை என மறுக்கப்பட்டது. இப்போது அதே சந்திரகாசனின் மகனுக்கு தந்தை செல்வாவின் பேரன் என்று வழங்குவது “வாரிசு அரசியல்” இல்லையா? தந்தை செல்வாவின் பேரன் என்பதைவிட வேறு என்ன தகுதி இவருக்கு இருக்கிறது? இவர் தொண்டு நிறுவனம் மூலம் இந்தியாவில் அகதிகளுக்கு உதவி செய்து வருகிறாராம். சரி. அகதிகளுக்கு என்ன உதவி செய்துள்ளார் என்று க…
-
-
- 37 replies
- 1.8k views
- 1 follower
-
-
மது என்றால் எல்லாமே நாலு கிளாஸ் ஐந்து கிளாஸ் குடித்தால் ஒரு வெறி போன்ற உணர்வை கொடுக்க கூடியது. இதில் என்னதான் அப்படி பிரிவினை எல்லாம் இருக்கிறதோ தெரியவில்லை. இங்கிலாந்து மகாராணி குடிக்கும் மதுவில் இருந்து சுன்னாகம் சுப்பண்ணை குடிக்கும் கள்ளு வரை கொடுக்க கூடியது வெறிதான். ஒரு தமிழக தமிழரின் பார்வையில் இந்த மது வகைகள் ... மதுவில் அதிக ரசனை இல்லாது போனாலும் அவரது ரசனையை ரசிக்காமல் போக முடியவில்லை அதனால் இங்கு பதிகிறேன். தனிப்பட நான் வோட்கவை தவிர வேறு எதுவும் குடிப்பதில்லை காரணம் விஸ்கி பிராந்தியில் இருக்கும் மணம் எனக்கு வாந்தி வார மாதிரி இருக்கும் மற்றது பியர் என்றால் கைனெக்கென் மற்றும் கொரோனா. தவிர நல்ல ரெட் வைன் என்றால் ஒரு கிளாஸ் அல்லது…
-
- 36 replies
- 6.5k views
- 2 followers
-
-
இது யாழ்ப்பாணத்தில் சாதி இல்லை என்று நிறுவுகின்ற ஒரு கட்டுரை இல்லை. அங்கு சாதி ஒரு கோரமான பூதமாக இன்றைக்கும் கை பரப்பி நிற்கின்றது என்ற உண்மையை முதலிலேயே சொல்லிவிடுகின்றோம். அது யாழ்ப்பாணத்தையும் தாண்டி புலம்பெயர்ந்த தேசங்கள் வரை கால் பரப்பியுள்ளது. நிற்க ஒவ்வொரு வருடமும் யாழ் நூல் நிலை எரிப்பு நினைவு நாளின்போது ஒரு தரப்பினர் அதைப் புலிகளின் ‘தலித் விரோத’ நாளாகவும் அனுஷ்டிக்கின்றனர். அதற்கு 2003.02.14ம் திகதி மீளத் திறக்கப்படவிருந்த யாழ் நூலக திறப்பு விழாவை புலிகள் தடுத்து நிறுத்தியதை அவர்கள் காரணமாக முன்வைக்கின்றனர். ஏனெனில் அன்றைய யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் தலைமையில் நூலகம் திறக்கப்படவிருந்தது. செல்லன் கந்தையன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத…
-
- 35 replies
- 5.5k views
-
-
புங்குடுதீவு கண்ணகை அம்மன் என வழங்கும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம் காண வாரீர் வாரீர் பேழையில் வந்த தாய்த்தெய்வமே .. எங்கள் கண்ணகித்தாயவளே.. 25.06.2023 …. https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0PRyaECs4iv4XPf3hWsCRUswU9FwBv9RQ56YobxSfevRQDq1NXYbaW3ouEoXQBbcCl&id=100063741202580
-
- 34 replies
- 2.1k views
-
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்.. https://www.facebook.com/share/v/14PdFXjdaUp/
-
-
- 34 replies
- 1.7k views
- 1 follower
-
-
சோறு - சாதம் இந்த சொற்களுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. நம்மில் எத்தனைப் பேர் பொதுவெளியில் சோறு என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்? கல்யாண விருந்தில் சத்தமாக "சோறு கொண்டு வாங்க" என்று நாம் கூப்பிடுகிறோமா? கூப்பிடுவதில்லை. காரணம், நம்மை அறியாமல் சோறு என்ற சொல்லை ஒரு தாழ்ச்சிக்குரிய ஒன்றாக மாற்றி வைத்திருக்கிறார்கள். நகைச்சுவைத் துணுக்குகளில், திரைப்படங்களின் நகைச்சுவைக் காட்சிகளில் பிச்சைக்காரர் கதாபாத்திரம் "அம்மா, தாயே சோறு போடு தாயீ" என்று கூறுவதாக வரும். எந்த பிச்சைக்காரனாவது "அம்மா தாயே சாதம் போடுங்க" என்று வருகிறதா? அது ஏன்? திட்டமிட்டுச் சோறு கீழான ஒன்றாக காட்டப்படுகிறது; சாதம் உயர்வான ஒன்றாக மாற்றப்படுகிறத…
-
- 34 replies
- 6k views
-
-
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையை நோக்கும்போது தோன்றுகிறது - ஒரிசா, பீகார் பகுதியிலிருந்து பல நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கைக்குச் சென்றவர்கள் சிங்களவர்களாகி பூர்வ தமிழ்க்குடிகளை சிறுபான்மையினர் ஆக்கிக் கோலோச்சுவதும், கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்கள் இந்திய நிலப்பரப்பைத் தமதாக்கி வர்ணாஸ்ரமம் போன்ற கருமாந்திரங்களை நம்மீது ஏற்றி கீழ்க்காணும் ஒளிப்படத்தில் தோழர் குறிப்பிடும் apartheid ஐ அரங்கேற்றியதும், செவ்விந்தியர்களைக் கொன்று குவித்து அமெரிக்காவை வந்தேறிகள் கைப்பற்றியதும் உண்மையாய்த்தான் இருக்க வேண்டுமென்று. ஆனாலும் பாலஸ்தீன நிலை பதிவு செய்யப்பட்ட, யாரும் மறுக்க முடியாத சமீபத்திய சோக வரலாறு. பாலஸ்தீனர்களிடம் கையேந்தி உள்ளே வந்த கயவன் அவர்கள் தலைக்கே விலை வைப்பது நம் கண் …
-
- 34 replies
- 3.3k views
- 1 follower
-
-
•எங்கு நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகிறதோ அங்கு விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள் - சே அவர்கள் முதலில் யாழ் நூலகத்தை எரித்தார்கள். பின்னர் ஒன்றரை லட்சம் தமிழ் மக்களை எரித்தார்கள். ஆனால் வேடிக்கை என்னவெனில் எரித்தவர்கள் நல்லவர்கள் என்றும் அவர்களுடன் 5 வயது முதல் சேர்ந்து வாழக் கிடைத்தது தனது பாக்கியம் என்று ஒரு தமிழ் தலைவர் கூறுகிறார். அதைவிட வேடிக்கை என்னவெனில், ஏன் எமது நூலகத்தை எரித்தீர்கள் என்று கேட்ட தமிழ் இளைஞர்கள் பயங்கரவாதிகளாம். அவர்கள் அப்படி கேட்டது வன்முறையாம். அதை தன்னால் ஒருபோதும் ஆதரிக்க முடியாது என்று அந்த தலைவர் பெருமையுடன் பேட்டி தருகிறார். எப்படி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பிரபாகரனின் பய…
-
- 33 replies
- 4.5k views
- 1 follower
-
-
கடற்தொழில் அமைச்சர் என்றால் எப்படி இருக்கவேண்டுமென்று வடக்கின் மிகபெரிய கடற்தொழில் நகர்களில் ஒன்றான வல்வெட்டிதுறை மக்கள் பேசுகிறார்கள்.
-
-
- 32 replies
- 2.2k views
-
-
நான் செய்வதெல்லாம் களவு இனி செய்ய மாட்டேன்.மற்றவர்களும் செய்யாதீர்கள் என்று கம்பனியை விட்டுப் போன இளைஞன் மரணம். பொலிஸ் ரிப்போட்டும் தற்கொலை என்கிறது. ஆனால் குடும்பத்தார் இது கொலை என்று தனி விசாரணைப்படையின் உதவியுடன் விசாரணை தொடர்கிறது.
-
-
- 30 replies
- 1.8k views
- 2 followers
-
-
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது. 2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன். சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது. ஆனால் இரண்டாய…
-
-
- 29 replies
- 1.5k views
- 1 follower
-
-
விதிக்கபட்ட உனது நேரம் சரியானதுதான்! ஒருவன் 20 வயதில் திருமணம் செய்கிறான். ஆனால், 10 வருடங்கள் கழித்தே குழந்தை கிடைக்கிறது ...! இன்னொருவன் 30 வயதில் திருமணம் செய்கிறான். 1 வருடத்தில் குழந்தை கிடைக்கிறது...! ஒருவன் 22 வயதில் பல்கலைக்கழக பட்டதாரி ஆகிறான். ஆனால்,5 வருடங்களுக்குப்பின்பே தொழில் கிடைக்கிறது...! இன்னொருவன் 27 வயதில் பட்டதாரி ஆகிறான். அடுத்த வருடமே தொழில் கிடைத்து விடுகிறது...! ஒருவர் 25 வயதில் நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 45 வயதில் அவர் மரணித்து விடுகிறார்...! இன்னொருவர் 50 வயதில் நிறுவனத்தில் தலைவர் ஆகிறார்.90 வயது வரை வாழ்ந்து வி…
-
- 28 replies
- 2.3k views
- 2 followers
-
-
தயவு செய்து முழுவதுமாக வாசிக்கவும்! சுமந்திரன் பேசிய வழக்குகள்! 1. வெளியேற்ற வழக்கு (2007) ஜூன் 2007 இல், கொழும்பில் உள்ள லாட்ஜ்களில் வசிக்கும் தமிழர்கள் காவல்துறையினரால் நகரத்திலிருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்டு வடக்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அன்று காலை உச்சநீதிமன்றத்தில் ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்தது, செய்தித்தாள் அறிக்கைகளை மட்டுமே ஆதாரமாகக் க…
-
- 28 replies
- 5.3k views
- 1 follower
-
-
பச்சை மிளகாய் உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பார்கள். அதே போல தான் , சில உணவுப் பண்டங்களிற்குப் பச்சை மிளகாய் சேர்க்காவிட்டால் அந்தப் பண்டத்தையும் குப்பையில் தான் போட வேண்டும். பச்சை மிளகாய் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது CIMA காலத்தில் நண்பனான ரஜீவ் தான். சொன்னா நம்பமாட்டீங்க, கொஞ்சமாக பச்சை மிளகாய் வாங்கிட்டு வாடா என்று ரஜீவின் அம்மா சொன்னதைக் கேட்டுக் கொண்டு விடு விடுவென கடைக்குப் போன ரஜீவ் வாங்கி வந்தது இரண்டு கிலோ பச்சை மிளகாய். என்னுடைய வாழ்க்கையில் மட்டும் இல்லை, உங்கள் வாழ்க்கையிலும் வீட்டுத் தேவைக்கு இரண்டு கிலோ பச்சை மிளகாய் வாங்கிக் கொண்டு வந்த ஒரே விண்ணன் இவராகத்தான் இருப்பார். …
-
- 27 replies
- 3.6k views
- 2 followers
-
-
சட்டம் பயிலும் மாணவர்களுக்கும், சட்டவியலில் ( பிராக்டிஸ் ) பயிற்சி எடுப்பவர்களுக்கும், அமெரிக்க நீதிமன்றங்கள் வரப்பிரசாதம். வழக்குகளை நேரலை செய்வது பிரிட்டிஸ் நீதிமன்ற வழமை இல்லை, ஆனால் அமெரிக்க நீதிமன்றங்களில் இது வழமை. இந்த வகையில், அமெரிக்க நீதிமன்றில் நடைபெறும், பைரேட் ஒவ் த கரிபியன் பட நடிகர் ஜோனி டெப்பிக்கும், அவரது முன்னாள் மனைவி, அம்பர் க்கேட்டுக்கும் நடக்கும் வழக்கின் தொகுப்புரை நேற்றிரவு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அழகின் பின்னால் இருக்கும் நச்சாபத்தை, புட்டுப்புட்டு வைத்தார், டெப்பின் வக்கில். கொடுரமான வீட்டு வன்முறை பாதிப்பாளர் (Victim of Domestic Violence) என்று அம்மணி டெப்ப்க்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். போலீஸில்…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தரமாட்டார்கள்! – யோகரட்ணம் யோகி. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு விடயத்தை திரும்ப, திரும்பக் கூறி வருகிறார். அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் தெரிவிக்கப்பட்டதுதான். இந்திய-இலங்கை ஒப்பந்தங்களை நாங்கள் ஏற்காதபோதும் ஏதோ ஒரு வகையில் அதனைச் செயற்படுத்தி தமிழ் மக்களினது விருப்பங்களைத் தீர்க்குமாக இருந்தால் நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்று தலைவர் பிரபாகரன் கூறிய போதும் ஒன்றைச் சுட்டிக்காட்டினார். சிங்கள இனவாத பூதமானது இதனையெல்லாம் விழுங்கிவிடும் என்றார். ஆனால் அப்போது அதனைக் கேட்கவில்லை. பலர் அதனைச் சாட்டாக வைத்துக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதாகவும் மக்களாட்சி முறைக்…
-
- 21 replies
- 1.9k views
-