கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
648 topics in this forum
-
**நாம் வாழ்க்கையில் உயர்வதை கண்டு மகிழ்ச்சியடையும் நண்பர்கள் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்** அது 2005ம் ஆண்டின் நடுப்பகுதி என நினைவு..வன்னி ரெக்கின் 3து batchல படிப்பதற்கு இடம் கிடைத்திருந்தது நாட்டின் வடகிழக்கு பகுதியின் பல்வேறு இடங்களைச்சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள்.ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாத 4 பேரை ஒரே ரூமில் போட்டார்கள் வாழ்க்கையின் முதல் முதல் ஹொஸ்டல் வாசம். முதலில் பெரிதாக ஒருவரிற்கொருவர் எந்த ஈர்ப்பும் இல்லை ரூம் மேட் என்ற அளவில் மட்டுமாகவே தொடர்ந்தது .எனக்கு நண்பர் கூட்டம் அவ்வளவாக சேர்வது குறைவு . அவனோ நண்பர் கூட்டத்துடனே திரிவான்.. அத்துடன் அவனின் பாடப்பிரிவு நெட்வோர்கிங் ,நானோ எலக்ட்ரோனிக்ஸ் ஹொஸ்டல் வாழ்க்கையில் சண்டை…
-
- 9 replies
- 3.4k views
-
-
உன்னை எனக்கு அதிகம் பிடிப்பதில்லை, நாளும் ஒற்றன் போல் என்னைப் பின் தொடர்கிறாய். என்னை உனக்குப் பிடிக்குமா என்று நான் ஒருபோதும் எண்ணியதில்லை. என்னைப் பற்றி உனக்கு முற்றிலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை (ம்ம்ம் சரி கொஞ்சமாகத் தெரிந்திருக்கலாம்...). ஆனாலும் நாமிருவரும் பிரிந்ததில்லை, அதில் எனக்கு எந்தவொரு வியப்புமில்லை – இது காலங்காலமாகத் தொடர்வதுதானே! அவளும் உன்னை வெறுக்கிறாள், உன் மீதுள்ள பொறாமையே அதற்குக் காரணம். நாம் நெருங்கியிருப்பதைச் சபிக்கிறாள், அதைப் பலமுறை என்னிடமே சொல்லிருக்கிறாள். அப்போதெல்லாம் சிரித்து மழுப்பிவிடுவேன். ஆனாலும் உன்னைச் சபிக்க என் மனம் முன் வருவதில்லை. நீ ஆடையின்றி நிர்வாணமாயிருப்பதை நான் ரசிக்கவில்லை, அதை என்னால் …
-
- 7 replies
- 5.9k views
- 1 follower
-
-
கந்தவனம்! ஆள் ஊரிலை பெரிய காய். ஆள் கரிக்கறுப்பு எண்டாலும் கட்டுமஸ்தான உடம்பைக்கண்டு மயங்காத கன்னியர் இல்லை எண்டே சொல்லலாம். சிங்கன் பாலர் வகுப்புக்கு வாத்தியார் எண்டாலும் தான் பெரிய பேராசிரியர் மாதிரித்தான் ஊருக்குள் திரிவார்.சனசமூக நிலைய கூட்டம் அல்லது பல நோக்கு கூட்டுறவு சங்க தேர்தல் வந்தால் ஆளை பிடிக்கேலாது.தன்ரை கையில தான் இந்த பிரயளமே உருளுவது போல் அவரும் ஊர் முழுக்க உருண்டு பிரண்டு திரிவார்.....அதிலும் அவர் குளக்கரையில் நின்று தேகாப்பியாசம் செய்யும் அழகே தனியழகு....அதற்கென்றே ஒரு சில கன்னியர் கூட்டம் அவர் வரும் நேரம் பார்த்து நீராட வருவர். அவரும் ஒரு நாள்...... மிச்சம் மீதி வேலிக்காலை வரும்......
-
- 17 replies
- 6.5k views
- 2 followers
-
-
மொழியிழந்த முகம் -சுப.சோமசுந்தரம் களையிழந்த முகம் அல்லது ஒளியிழந்த முகம், புரிகிறது. அது என்ன மொழியிழந்த முகம்? முன்னது தானே சரியாகலாம் அல்லது எளிதில் சரி செய்யலாம். பின்னது கிட்டத்தட்ட உயிரிழந்த உடல் போல. இதயத் துடிப்பு நின்றபின் சிறிய கால அவகாசத்தில் உயிர்ப்பிப்பது போல் குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்ய முயலலாம் என்பது நம் எண்ணம். சரி, கதைக்கு வருவோம். நமது பரிதாபத்துக்குரிய கதாநாயகன் சுஷாந்த். அப்படித்தான் இவன் அப்பனும் ஆத்தாளும் பெயர் வைத்தார்கள். ஸ,ஷ,ஹ,ஜ இல்லாத பெயருக்குப் பரலோகத்தில் இடமில்லை என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவர்கள். பெயர் முடிவில் sudden brake வேறு (ஆங்கி…
-
- 0 replies
- 3.3k views
- 1 follower
-
-
கலியாணப்புரோக்கர்களும் அவர் பின்னே ஞானும் *இது எனது மற்றும் நெருங்கிய நண்பர்கள் சிலரின் வாழ்க்கையில் நடந்த நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் பற்றிய பதிவு * யார் மனதையும் புண்படுத்த அல்ல* கலியாணப் புரோக்கர்கள் கேட்கும் கேள்விகளை விட interview ல கேட்கிற கேள்விகள் கொஞ்சமாவது easy ஆக இருக்கும் போல தோணுறது எனக்கு மட்டும் தானோ என்னவோ.. கலியாணப்புரோக்கர்களுடனான எனது சம்பந்தம் ? தொடங்கினது 2012 க்கு பிறகு தான்..என நினைவு எப்ப நான் வயசுக்கு வந்தனோ..இல்லை..இல்லை ... எப்ப வேலை கிடைச்சுதோ அப்போதிருந்தே புரோக்கர் களை தேடி அப்பாவும் அம்மாவும் ஓடத்தொடங்கி விட்டனர். என்னோட கதைத்த ப்ரோக்கர் முதல் முதல் சொன்ன விசயம் இப்போதும் என் நினைவில் உள்ளது தம்பி இப…
-
- 14 replies
- 5.6k views
- 1 follower
-
-
ஊருக்குள் எல்லா இயக்கங்களும் உலவி திரிந்த ஒரு காலம் இருந்தது. விரும்பிய இயக்கத்துக்கு போவதுவும் வீண்பழி சுமத்தி யார்மீதும் குண்டுகள் பாயாத வாழ்வும் இருந்தது. அதுவெல்லாம் ஒரு நல்ல கனவு போல பின்னாளில் கலைந்து போனது. இந்திய இராணுவம் குடியிருந்த காலை பொழுதொன்றில் தம்பசெட்டியில் இருக்கிற ரவியின் வீட்டுக்குள் துப்பாக்கிகள் சுமந்த ஐந்து இளைஞர்கள் நுழைகிறார்கள். ரவியின் கைகளையும் கண்களையும் துணியால் கட்டி அவனை அழைத்துக் கொண்டு நடைதூரத்தில இருக்கிற குகனின் வீட்டுக்கு போகிறார்கள். ரவியின் மூலமாக குகனை கூப்பிடுகிறார்கள். வெளியில் வருகிற குகனையும் பிடித்து கைகளை கட்ட முயற்சிக்கிறார்கள். இளைஞர்களை தள்ளிவிட்டு குகன் பாய்ந்து ஓடிவிடுகிறான். தங்கள் பிடியில் இருந்த ரவியை சுட்ட…
-
- 3 replies
- 3k views
-
-
இந்தியாவுக்கு போனால் அதிகமாக கோவிலுக்கு போவது வழமை நான் ஒரு கோவிலுக்கு போவம் என்று நினைத்தால் என்ட பெட்டர்காவ் நாலு கோவிலுக்கு போகவேணும் என்று சொல்லுவார்.அது மட்டுமல்லாது இந்த மனித சாமிமார் அவர்களின் ஆச்சிரமம் அது இது என்று போவதும் வழக்கம். முதல் தடவையாக புட்டபத்திக்கு போனேன் .காரில் போகும் பொழுதே சாரதி இது சாய் பல்கலைகழகம் ,இது சாய் சங்கீதபாடசாலை,சாய் மருத்துவமனை,சாய் விமான நிலையம் என ஒரு பெரிய நகரத்திற்க்கு தேவையான சகல கட்டமைப்புக்களும் இருப்பதை காட்டிக்கொண்டே வந்தார் .ஒரு தனிநபரால் எப்படி இது சாத்தியம் என்று மனதில் கேள்வி எழுந்தது ,நான் அந்த கேள்வியை கேட்டிருந்தால் நிச்சமாக சாரதியின் பதில் அவர் கடவுள் அவரால் இதுவும் செய்யமுடியும் இதற்கு மேலும் செய்ய…
-
- 17 replies
- 5k views
-
-
ஒவ்வொரு வருடமும் நடக்கும் இராபோசண விருந்துக்கு நான் போவது வழமை இந்த இராபோசண விருந்தை ஒழுங்கு செய்வதில் எனது நண்பர் ஒருவரும் முக்கிய பங்கு வகிக்கின்றார்.இந்த தடவையும் சென்றிருந்தேன் இருபதைந்து டொலருக்கு ஒரு டிக்கட்டை எடுத்து போட்டு நானும் ஷரிட்டிற்க்கு காசு கொடுக்கிறனான் என்று சொல்லுவதில் எனக்கு ஒரு பெருமை. என்னை மாதிரி கொஞ்ச சனம் புலத்தில இருக்கினம்.இன்னும் சிலர் இருக்கிறார்கள் அமைப்புக்களின் பணத்தை பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு கொடுத்து அதை தாங்கள் வழங்குவது போன்று ஒரு புகைப்படுத்தை எடுத்து முகப்புத்தகத்திலும் வட்சப்பிலும் போட்டுவிடுவார்கள். அதை பார்ப்பவர்கள் நினைப்பார்கள் இவருடைய பணத்தில் தான் உதவிகளை செய்கிறார்கள் என்று. எது எப்படியோ தேவையானோருக்கு பணம…
-
- 25 replies
- 5.5k views
-
-
அருகில் உள்ள உணவகமொன்றில் வேலை செய்யும் என்னுடைய பிரெஞ்சு கார நண்பனொருவன் இன்று என் வேலையிடத்துக்கு காலையிலேயே சோகத்தோடு வந்தவன் பாரில் நின்ற என்னிடம் ஒரு கிளாஸ் விஸ்க்கி வேணுமென்றான் . காலங்காதாலையேவா என்ன பிரச்னை என்றேன் ..குடிக்கிறதுக்கு நேரம் காலம் என்று ஏதாவது சட்டமிருக்கா என்றான் ..இல்லைதான் உனக்கு வேலை இல்லையா என்றதும் அதெல்லாம் தன்பாட்டில் நடக்கும் என்றவனுக்கு விஸ்கியை ஊற்றி கொடுத்தபடி மேலே சொல்லு என்றேன் .. எனக்கும் மனிசிக்கும் பிரச்னை ... இதை தானே ஆறு மாதமாய் சொல்கிறாய் புதிதா வேறை ஏதாவது சொல் .. இப்போ பெரிய பிரச்னை ... என்ன உன்னை போட்டு அடிச்சாளா .... அதெல்லாம் அப்பப்போ நடக்கிற சின்ன பிரச்னை ... அப்போ நீயே சொல்லு .... …
-
- 3 replies
- 5k views
-
-
போராட்டத்துக்குக் கட்டியங்கூறி பண்டார வன்னியன் நினைவில் அரை நூற்றாண்டுகளின் முன்னம் 1968ல் எழுதபட்ட எனது முதல் கவிதை மொழி பெயர்புடன் . . நகர்கிறதுபாலி ஆறு - வ.ஐ.ச.ஜெயபாலன் அங்கும் இங்குமாய் இடையிடையே வயல் வெளியில் உழவு நடக்கிறது இயந்திரங்கள் ஆங்காங்கு இயங்கு கின்ற ஓசை இருந்தாலும் எங்கும் ஒரே அமைதி ஏது மொரு ஆர்ப்பாட்டம் இல்லாமல் முன் நோக்கி பாலி ஆறு நகர்கிறது. ஆங்காங்கே நாணல் அடங்காமல் காற்றோடு இரகசியம் பேசி ஏதேதோ சலசலக்கும். எண்ணற்ற வகைப் பறவை எழுப்பும் சங்கீதங்கள். துள்ள…
-
- 0 replies
- 3.5k views
-
-
ஓடிப் போனவள் .. -சிறுகதை-சாத்திரி வேலை முடிந்து வெளியே வந்ததும் கைத்தொலைபேசியை எடுதுப்பர்தேன். நாங்கள் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டோம் என்று குறுஞ்செய்தி வந்திருந்தது. ‘பெண்டாட்டி ஊருக்கு போயிட்டா.’ என்கிற மகிழ்ச்சி மனதில் துள்ளியது. கோடை விடுமுறை மனைவியும் மகளும் ஊருக்கு போய் விட்டார்கள். எனக்கு புதிய வேலைஎன்பதால் லீவு எடுக்க முடியவில்லை. இல்லையில்லை, லீவு எடுக்க விரும்பவில்லை என்றும் சொல்லலாம். அவர்களை ஊருக்கு அனுப்பி விட்டுக் கொஞ்சம் தனிமையாக இருக்க மனது விரும்பியது. இன்று பிரான்சின் குடியரசு தினம். பொதுவிடுமுறை நாள். ஆனால் எனக்கு மட்டும் சரியான வேலை. நாடு முழுவதும் ஏன் உலகம் முழுவதுமே விடுமுறையானாலும் உணவு விடுதிகளி…
-
- 19 replies
- 6.4k views
-
-
காலை 7 மணி கைத்தொலைபேசியும் வீட்டு தொலைபேசியும் மாறி மாறி அடிக்க. . யார்ராது காலங்காத்தால என்று எரிச்சலோடு போனை எடுத்தால் .. மனிசி பதட்டதோடு " என்னங்கோ. மரியா வீட்டு பெல்லை கனநேரமா அடிக்கிறேன் நாய்கள். குலைக்கிற சத்தம் தான் கேட்கிது கதவு திறக்கேல்ல . எனக்கு பயமாயிருக்கு. கெதியா வாங்கோ" என்றார் . ஆறுதலாக சோம்பல் முறித்து கொட்டாவி விட்டபடி. 10 மணிக்கு எழும்பும் நான் அரக்கப்பரக்க. எழும்பி சப்பாத்தை கொழுவிக்கொண்டு ஓடிப்போனேன் . மழை வேறு 4 வது நாளாக. விடாமல் அழுதுகொண்டேயிருந்தது .மரியா வீட்டுக்கு போவ துக்கிடையில் அவரைப்பற்றி சொல்லி விடுகிறேன். மரியா வயது 78 .வீட்டுக்கு அருகிலிருக்கும் வசதியானவர்கள் வசிக்கும். அதி நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் 7 வது ம…
-
- 6 replies
- 4.4k views
-
-
"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்" " ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி" "வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்" "போடி நான் வரவில்லை மயிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்" " அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்" "ஊ ஊ ஊ " "என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்" "அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு நின்றனாங்கள் ஊஊஊஊ" "சும்மா ஊளையிடாமல் விசயத்திற்கு வா" "எங்களை கண்ட மை…
-
- 22 replies
- 5.6k views
-
-
தண்ணிய குடியேன்டா நானும் எத்தின தடவையம்மா குடிச்சிட்டன் இந்த விக்கல் போகமாட்டேன் என்கிறது இந்தா கொஞ்சம் சீனியை வாய்க்க போடு ம் தாங்கோ அப்பவும் நிக்காட்டி கொஞ்சம் நித்திரைய கொள்ளு சரி சரி என கட்டிலில் சாய்ந்து படுக்க ஆரம்பித்தாலும் விக் இக் விக் என விக்கல் விடுவதாக இல்லை அப்படியே தலையணையை பிடித்து முகத்தை இறுக்கிய படி கண்களை மூட நித்திரை இறுக பிடித்துக்கொண்டது பல மணிநேரம் கழிந்த பிறகு எழுந்தேன் எல்லாம் இருட்டாக இருந்தது மின் ஆழியை அழுத்திய போது மின்சாரம் இருக்க வில்லை கும் இருட்டில் தட்டி தடிவி ஒரு சிமிழி விளக்கை கதவு மூலையில் இருந்து எடுத்து நேரத்தை பார்க்க நேரமோ நிற்காத மேகமாய் ஓடியோடி களைப்பில்லாத மூன்று கால் குதிரை போல மரதன் ஓடி இரவு பன்னிரண்டு முப்பதை காட்ட…
-
- 12 replies
- 3.9k views
-
-
Sunday, June 17, 2018 நூறாய் பெருகும் நினைவு நீங்க இலங்கையா? கேட்போருக்கு..., ஓமோம்... சொல்லியும் ! நீங்க இந்தியாவா? கேட்போருக்கு...., ஆமாங்க... சொல்லியும் கடந்து போகிறேன் மனிதர்களை. அப்ப ஊரில எந்த இடம்? சிலருக்கு பூராயம் ஆராயாமல் பொச்சம் அடங்காது நீளும் கேள்விக்கு வாயில் வரும் ஊரைச் சொல்லிக் கடக்க முயல்வேன். அதையும் மீறி வரும் கேள்வி இது :...., …
-
- 11 replies
- 4k views
-
-
அந்த கரித்துண்டை தூக்கி அங்காலை எறியுங்கோ கார்ல் ஒல்காß ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்தபோது என்னுள் இருந்த வழமையான கலகலப்பு இல்லாமல் போயிருந்தது.குமாரசாமி அண்ணன் எனது வேலையிடத்துத் தோழன். தோழன் என்று ஒருமையில் சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது தோழர் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் குமாரசாமி அண்ணன் என்னைவிட ஆறு வயதுகள் மூத்தவர். ஆனால் குமாரசாமி அண்ணன் வயது வித்தியாசத்தை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு “கவி, கவி..” என்று சொல்லி ஒரு சம வயது நண்பனாகவே என்னுடன் பழகிக் கொண்டிருந்தார். “கத்தரிக்காயை நல்ல மெல்லிய துண்டுகளாகச் சீவி சின்னன் சின்னனா வெட்டி எண்ணையிலை போட்டு ‘கலகல’ எண்டு பொரிச்செடுத்து வைச்சிட்டு, ஊர் வெங்காயத்தையும் பிஞ்சு மிளகாயையும் …
-
- 8 replies
- 2.8k views
-
-
அவர்கள் வாழட்டும் கலா பாக்யராஜ் தம்பதிகளுக்கு இறைவன் கொடுத்த பிள்ளைச் செல்வங்கள் மூன்று ஆண் குழந்தைகள். புலப்பெயர்ந்து ஜேர்மனி சென்ற இவர்கள் படட கஷ்டங்கள் ஏராளம் குழந்தைகள் இரண்டு வருட இடைவெளியில் பிறந்ததால் மனைவி அவ்ர்களைக் கவனிக்க கணவன் இரண்டு வேலை செய்து பிள்ளைகளை அன்போடும் பன்பொடும் கண்ணுங் கரு த்துமாய் வளர்த்தார். உறவினர்கள் லண்டனில் வாழ்ந்ததால் இவர்களும் அங்கு சென்று குழந்தைகளை வளர்க்க எண்ணினார்கள். இடம் மாறி அங்கு சென்ற பின் இலகுவாக இருக்கவில்லை வாழ்க்கை முறை. மொழிமாற்றம் என குழந்தைகள் கஷ்ட படவே ஒரு வாத்தியாரை ஓழுங்கு செய்து ..அவர்களுக்கு ஆங்கிலத்தில் முழுத்தேர்ச்சி அடைய ஆன மட்டும் முயற்சி செ ய்தார் தந்தை . பிள்ளை கள் வளர…
-
- 12 replies
- 3.8k views
-
-
எங்கே அவன் தேடுதே சனம் அவரை எல்லோரும் நாட்டாமை என்றுதான் அழைப்பார்கள். மற்றவர்கள் அவரை நாட்டாமை என்று அழைப்பதில் அவருக்கு நிறைந்த மகிழ்ச்சி. கலியாண வீடா? சாமத்தியச் சடங்கா? பிறந்தநாள் விழாவா? இல்லை செத்த வீடா? எங்கள் நகரத்தில் தமிழர்களுடைய எந்த நிகழ்வானாலும் நாட்டாமையே பிரதம விருந்தினர். புலம் பெயர்ந்து யேர்மனிக்கு வந்த காலத்தில் வேலை செய்வதற்கான அனுமதி எங்களுக்குக் கிடையாது. அப்படியான நிலையிலேயே நாட்டாமை, பூ விற்றுக் காசு சேர்த்தவர். பூ விற்பவர் என்பதால் அவரது பெயரோடு ‘பூ’ என்பது அடைமொழியாயிற்று. அதாவது ‘பூ சபா’ என்றாயிற்று. சேர்த்த பணம், அதனால் வந்த அங்கீகாரம் அதோடு இணைந்த ஆணவம் எல்லாம் சேர்ந்ததால் காலம் செல்ல அவர் நாட்டாமை ஆகிப்போனார். அதெப்படி பூ வி…
-
- 24 replies
- 3.8k views
-
-
எங்க ஊர் முதலாளி ஒரு காலத்தில் நகரத்தையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமை மிகுந்தவர் முதலாளி. எங்கள் துறைமுகப் பகுதியில் கடலின் ஆழம் போதாது, வணிகக் கப்பல்கள் அங்கு வர முடியாது என்ற நிலை இருந்த போது, துறைமுகத்துக்கு ஒரு மைல் தள்ளி வணிகக் கப்பல்களை நிறுத்திவிட்டு, படகுகளில் போய் பொருட்களை ஏற்றி, கரைக்கு கொண்டுவரலாம் என்று செய்து காட்டி பலருக்கு நகரத்தில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த பெருமை முதலாளியினுடையது. முதலாளிக்கு வணிகத் திறமை மட்டுமல்ல பெண்களை வசியப் படுத்தும் கலையும் நன்றாக வரும். முதலாளியுடன் நெருக்கமாகப் பழகும் அவரது நண்பர்களுக்கு, குழந்தை பிறக்கும் போது, தங்களது குழந்தை முதலாளியைப் போல இருந்து விடுமோ என்ற அச்சம் ஒட்டிக்…
-
- 10 replies
- 3.4k views
-
-
முத்து அக்கா முத்து அக்காவிடம் கனக்க மஞ்சள் பைகள் இருந்தன. அழுக்கின் கறைகள் இல்லாமல் சிவப்பு நிறத்தில் ‘முருகா முருகா’ என்ற பெரிய எழுத்துக்களுடன் பளிச்சென்று தூய்மையாக எப்போதும் ஒரு மஞ்சள் பை அவர் கையில் தொங்கிக் கொண்டிருக்கும். பால் வியாபாரம்தான் முத்து அக்காவின் குடும்பத்துக்கான ஆதாரம். எங்கள் தெருவில் அநேகமான வீடுகளுக்கு முத்து அக்காதான் பால் கொண்டு வந்து கொடுப்பார். சாரயப் போத்தல் - ‘முழுப் போத்தல்’, எலிபன்ற் பிராண்ட் சோடாப் போத்தல் - அரைப் போத்தல் என்ற அளவில் அவரது பால் வியாபாரக் கணக்கு இருக்கும். காலையில் ஆறு மணிக்கே எங்கள் தெருவிலுள்ள ஒவ்வொருவர் வீட்டு அடுப்பிலும் பால் கொதிக்க ஆரம்பித்து விடும். அதிலும் எங்கள் வீட்டில்தான் முதலில் பால் பொங்க ஆர…
-
- 11 replies
- 4.3k views
-
-
யார் சொல்லுவார்? சமீபத்தில்(25.03.2018) யாழின் கருத்துக்களத்தில் நவீனன் தரவிட்டிருந்த இணைப்பின் தலையங்கம் ஒன்று, பழைய நினைவொன்றை என்னுள் மீட்டிப்பார்க்க வைத்தது. “பாரிசில் ஈழத்து மாணவி ஒருவர் கடத்தல்” என்பதே அந்தத் தலையங்கம். 83, 84 ஆண்டு காலங்களே அதிகமான தமிழர்கள் யேர்மனிக்கு புலம் பெயர்ந்த காலங்களாக இருந்ததன. ஈழத் தமிழர்களுக்கு வடக்குத்தான் அதிகம் பிடிக்குமோ என்னவோ, பல ஈழத்தமிழர்கள் யேர்மனியின் வட திசை சார்ந்த மாநிலமான Nordrhein-Westfalen இலேயே அப்பொழுது தங்கிக் கொண்டார்கள். புலம் பெயர்ந்து வந்த போதும் தாங்கள் சார்ந்த போராட்டக்குழுக்களை யேர்மனியில் காலூன்ற வைப்பதற்கு அவற்றின் அபிமானிகள் அன்று பெரும் முயற்சி எடுத்துக்கொண்டார்கள். இதில் தெற்கு யேர்மனியில்…
-
- 9 replies
- 2.9k views
-
-
தங்கக் கூண்டு என் பெயர் எழில். பருவப் பெண்களுக்கே உரிய வாழ்க்கை பற்றிய கனவுகள் எனக்கும் உண்டு - பிரத்தியேகமாக எனக்கென்றே பிரம்மனால் படைத்து அனுப்பப்பட்ட தலைவன் வெண்புரவியில் வந்து சேருவான் போன்ற அதீதமான கற்பனைகள் தவிர. இந்த மாதிரியான கற்பனைகள் தோன்றாததற்குக் காரணம் பாழாய்ப் போன(!) வாசிப்புப் பழக்கமும், என் தந்தையாரால் நேர்முகமாகவும் நூல் முகமாகவும் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகுத்தறிவாளர்களின் சிந்தனைகளும் என்றே நினைக்கிறேன். என் விருப்பம் போல் அறிவியலில் ஆய்வு மாணவியானேன். என் விருப்பம் போல் ஏனைய பிறவும் வாசித்துத் தள்ளினேன். எழுத்து பற்றி என்னுள் எழுந்த வேட்கை என்னை சிறு பத்திரிக்கைகளில் எழுத வைத்தது. சான்றாண்மை மிக்க ஒரு சிலரின் கேண்ம…
-
- 20 replies
- 4k views
- 1 follower
-
-
அழைப்பு மணி ஒலித்த பத்தாவது நிமிடம் கதவு திறக்கிறது. புலநாய்வில் கைதேர்ந்த சீலனிற்கு ஒரு தடவைக்கு மேல் மணி ஒலி எழுப்பும் அவசியம் இருக்கவில்லை. உள்ளே அவர்கள் இருக்கிறார்கள் என்பதும் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பதும் மணியினை அமிழ்த்து முன்னரே அவனிற்குத் துல்லியமாய்த் தெரிந்திருந்தது. அதனால் கதவு திறக்கும் வரை பொறுமையாய்க் காத்திருந்தான். நிலா கதவினைத் திறந்தாள். பம்பாய் வெங்காயத்தின் மூன்றாவது அடுக்கின் நிறத்தில் அழகிய மென்மையான மேற்சட்டை அணிந்திருந்தாள். வெள்ளி நிறத்தில் பாதணிகள் அணிந்திருந்தாள். அவள் தொப்புளிற்கும் பாதணிகளிற்கும் இடைப்பட்ட பகுதியில் எந்த ஆடையும் இருக்கவில்லை. விமான ஓடுதளத்தில் பாதைதெரிவதற்காகப் பொருத்தப்பட்டிருக்கும் விளக்குகள் போன்று, அவளது ப…
-
- 14 replies
- 3.2k views
-
-
காளிதாசரைப் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வாசித்ததுண்டு ஆனால் அக்கவிஞனின் படைப்புகளின் சுவையை இதுவரைப் பருகியதில்லை அதற்கான வாய்ப்பும் அமையவில்லை. இணையத்தில் சங்கப்பாடல்களைத் தேடிக்கொண்டிருந்த வேளையில் அவர் இயற்றிய ஓரிரு பாடல்களை வாசிக்க முடிந்தது, அதனூடே அக்கவிஞனின் வரலாற்றையும் அவரின் கவித்தொகுப்புகளைப் பற்றிய தேடலும் தொடங்கிற்று. அத்தகு கவிஞனின் சிறப்பை உணர்த்தும் சில எடுத்துக்காட்டுகளை பின்வருமாறு காணலாம்; “கற்கும்போதே இதயத்தில் இனிக்குமாம் இரு வித்தைகள்… ஒன்று கலவி மற்றொன்று காளிதாசனின் கவிதை….” “காளிதாசனின் கவிதை இளமையான வயது கெட்டியான எருமைத் தயிர் சர்க்கரை சேர்த்த பால் மானின் மாமிசம் அழகிய பெண் துணை என் ஒவ…
-
- 0 replies
- 2.7k views
-
-
நெரிசலில் ஓர் மோகம் மத்திய இலண்டனில் உள்ள தலைமை அலுவலகத்தின் பாரிய சுழல் கதவுகளினூடாக வெளியே வந்தபோது டிசம்பர் மாதக் குளிர் வேகமான காற்றினால் சுழன்றடித்து ஊசிகளாக காது மடல்களினூடு உள்ளிறங்கிக் குத்தத் தொடங்கியது. அவசர அவசரமாக ஜக்கற்றின் zipபைக் கழுத்து வரை உயர்த்தி பொத்தான்களை பூட்டிக்கொண்டு லண்டன் பிரிட்ஜ் ரியூப் (சுரங்க ரயில்) ஸ்ரேசனை நோக்கி விரைந்து நடக்கும்போது அருகிலிருந்த அதியுயர் கட்டடத்தில் இருந்த கடிகாரம் ஐந்துமுறை அடித்து ஓய்ந்தது. நெரிசல் மிகுந்த பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென்று காலையில் புறப்படும்போது நினைத்திருந்தாலும் அலுவலகத்தில் முக்கியமான மேலாளர்களுடன் நடந்த கூட்டம் விரும்பியமாதிரி குறித்த நேரத்திற்கே முடிந்திருக்கவில்லை. அலுவலக வேலைகள் முடியும் ஐந்து ம…
-
- 47 replies
- 8.6k views
- 1 follower
-