Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

  1. Dr Abdul Kalam அவர்கள் மறைந்த நேரம் வாய் விட்டு அழுதேன். அந்த நேரம் கிறுக்கியது … நானும் இட்ட தீ மூள்க மூள்கவே.... இன்றைய காலை குளியலின் வெந்நீர் சூடு காலில் அறைகின்றது வழமையை விட வேகமான வெப்பத்துடன் வெந்நீர் தூவலுடன் எந்தன் கண்ணீரும் கலந்து அங்கே யார் ஐயா நீங்கள் மனதில் ஏன் ஐயா எங்களுக்கு இந்தப் பாரம் … நாள் ஒன்றுக்கு மேல் நான் கண்ணீர் சிந்தியது இதுவரை நான்கு தடவைகள் தான் – நேசத்துக்குரியோரை இழந்த நேரங்கள் இப்போது மீண்டும் ஒரு தடவை அந்த சோகம் யார் ஐயா நீங்கள் மனதில் ஏன் ஐயா எங்களுக்கு இந்தப் பாரம் … குழந்தைகள் இல்லை யே…

  2. “வந்துட்டான்யா வந்துட்டான் எழுதியே கொல்லப் போறான் “ என்ற மைன்ட் வொய்ஸ் நல்லாவே கேட்குது. சீ சீ அப்படி செய்வேனா என்ன? இது ஒரு உண்மைக்கதை.சின்னக்கதை. ஆனாலும் பிரபல்யமான கதை. இது சுவியின் ஊரவர் என்றபடியால் அவரும் தெரிந்ததை விபரமாக எழுதலாம். இதை அறவே மறந்தே போனேன்.இருந்தாலும் சைக்கிள்கடை என்று சிறி கேள்வி எழுப்பத் தான் ஞாபகத்துக்கு வந்தது. யாழ் இந்துவில் மழைக்கொதுங்கிய வேளை எட்டாம் வகுப்பிலேயே ஒரு பாடம் இரண்டு பாடம் என்று நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது.யாரிடமாவது சைக்கிள் இரவல் வாங்கிறது.இரண்டு மூன்று பேர் சேர்ந்து கீரிமலை சேந்தாங்குளம் பண்ணை வெள்ளைக் கடற்கரை இப்படி எங்காவது திரிவது. …

  3. நான் வீழ்வேன் என்று நினைத்தாயா பாரதியின் தோளில் ஏறி நின்று வான் முழுக்க வரைந்து வைப்பேன் என் வர்ணக் கனவுகளை பித்தனை போல் வாழ்ந்து எத்தனை முறை வீழ்ந்தாலும் இன்னுமோர் யுகதிட்காய் எழுந்து வர வரம் தாடி சுவரோடு உதைத்தபடி என் ஜீவன் போகுமட்டும் வாடா பாரதி வா வந்து பலம் தாடா என் சிந்தை தெளிவாக்கி

    • 0 replies
    • 1.3k views
  4. கடந்த ஆண்டு சித்திரையில் நானும் கணவரும் வரலாற்றுத் தொன்மை மிக்கதும் கடல் வணிகத்துக்குப் பெயர் போனதுமான கிரேக்கத்தின் தலைநகரான எதென்சுக்குச் சென்றோம். கிரேக்கரின் இடிபாடுகளுடன் காணப்படும் கட்டடங்களை தொலைக்காட்சிகளில் பார்க்கும்போதெல்லாம் கட்டாயம் அங்கு செல்ல வேண்டும் என்ற என் ஆசை கடந்த ஆண்டே நிறைவேறியது. ஆனாலும் ஒருவித பயம் இருந்துகொண்டே இருந்தது. அங்கு பார்க்கக்கூடிய இடங்களைப் பட்டியலிட்டு அதற்கு அண்மையில் உள்ள ஒரு தங்குமிடத்தையும் ஒழுங்கு செய்துகொண்டோம். ஒரு நாளுக்கு இருவர் தங்குவதற்கு 70 பவுண்ஸ்கள் மட்டுமே. காலை உணவு ஒருவருக்கு 5 யூரோஸ். எனவே அதையும் சேர்த்து பதிவுசெய்தாகிவிட்டது. இணையங்களில் தேடித் பார்த்தபோது பெரிதாகக் களவுகள் இல்லை என்றாலும் இரவில் தனியாக…

  5. நேற்று SICK அடிச்சுப் போட்டு வீட்டில Gardening செய்தது தான் நினைவுக்கு வருகுது , பின்னால் இணைத்திருக்கும் விடயத்தை இன்றையை லஞ்ச் பிரேக் இல் வாசித்த போது. PRINCIPLE 5: The Eagle tests before it trusts. When a female eagle meets a male and they want to mate, she flies down to earth with the male pursuing her and she picks a twig. She flies back into the air with the male pursuing her. Once she has reached a height high enough for her, she lets the twig fall to the ground and watches it as it falls. The male chases after the twig. The faster it falls, the faster he chases it. He has to catch it before it falls to the ground. He then brings it back to the female eagle…

    • 4 replies
    • 829 views
  6. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பது பலருக்கு ஆவலாக இருந்தாலும் அதற்கான முயற்சியில் இறங்குவது கடினமானது. உடல் எடையைக் குறைக்கப் பல விதங்களாக முயன்று பார்த்திருப்பீர்கள். உணவின் அளவையும் கலோரிகளையும் கட்டுப் படுத்தி உடலையும் மனதையும வருத்தி மெலிய வைப்பது கடினம். எமது உடல் மிகவும் புத்திசாலியானது. உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கும்போது தனக்குக் கிடைக்கும் சொற்ப உணவைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமிக்க முயலும். இவ்வாறு சேமிக்கப்பட்ட கொழுப்பை மீண்டும் கலோரிகளாக மாற்றி இலகுவில் பாவிக்க முடியாது. நீண்டநேர உடற்பயிற்சி நல்ல பலனைத் தரும். கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் எடை மீண்டும் ஏறிவிடும். முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் கொழுப்பைக் கொழுப்பால் கரைக்கும் முறை தற்போது மேல…

  7. மனிதாபிமானம் (சிறு கதை) அண்மையில் ஒரு உணவகத்தில் சாப்பிடச்சென்றிருந்தேன். அது ஒரு அல்யீரிய நாட்டவருக்கு சொந்தமான உணவகம். அன்று PSG இன் உதை பந்தாட்டம் இருந்ததால் உணவை ஓடர் செய்து விட்டு அவரது அகண்ட திரையில் விளையாட்டையும் பார்க்க தயாரானேன். சிறிய நேரத்தில் அந்த உணவக முதலாளி ஒருவரை அழைத்து வந்து எனக்குப்பக்கத்து மேசையில் இருந்தி விட்டு என்ன சாப்பிடுகின்றீர்கள் என்று கேட்க அவரும் ஒரு சிறிய சாப்பாட்டை சொல்லி இன்று இது மட்டும் போதும் எனக்கு என்றார். குடிக்க என்ன வேண்டும் என்ற கேள்விக்கு ஒன்றும் வேண்டாம் என்றபடி முதலாளியை இரு கையெடுத்துக்கும்பிட்டார். …

  8. இரு வாரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நின்றபோது பெரும்பாலும் ஓட்டோவில தான் திரிந்தது. பணச்செலவுதான் அதிகமே தவிர தாங்கமுடியாத வெய்யிலில் நடந்து செல்வதோ அல்லது பஸ்சுக்காகக் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கணவருடன் சென்றபோது அந்தாள் என்னை ஓட்டோவே பிடிக்க விடாமல் பஸ்சிலும் சைக்கிளிலும் கொண்டு திரிந்து சிலோனே வெறுத்துப்போயிருந்த எனக்கு, கணவன் இல்லாமல் தனியாகச் சென்றது ஒருவித சுதந்திரமாகவும் நின்மதியாகவும் இருந்தது. அதுக்காக அதிக பணம் கொடுத்து ஓட்டோவில் திரியவில்லை. எங்கள் அயலில் ஓட்டோ ஓடுபவர் நியாய விலையைக் கூறியதால் நின்ற இரு வாரங்களில் பன்னிரண்டு நாட்கள் அதிலேதான். மனுசனுக்கு குர்தா தைக்க யாழ்ப்பாணத்தில் ஒரு கடையில் கொடுத்திருந்தேன…

  9. விடயம் பெரிதாக ஒன்றுமில்லை , வீட்டில் சில திருத்தவேலைகள் தற்சமயம் மேற்கொண்டு வருகிறோம் , நிலத்துக்கு tile மாற்றும் tradie ஒரு வியட்னாமியன். சுட்டுப்போட்டாலும் ஒரு ஆங்கில வார்த்தை வராது. சொல்லக் சொல்ல ஓமெண்டு தலையாட்டிப் போட்டு, முழு இடத்துக்கும் primer பூசி விட்டுப் போய் விட்டான் , ஒரு இடமும் கால் வைக்க ஏலாது . அளவாகப் புளித்தப் போயிருந்த தோசையையுடன் நல்ல சாம்பலும் குழம்பும் சேர்த்துச் சாப்பிடலாம் என்றிருந்த எனக்கு மனைவியின் “ இன்றைக்கு நோ சமையல் விரும்பினால் pizza எடுங்கோ இல்லாட்டி சும்மா படுக்கப் போனாலும் ஓகே தான்” என்ற வார்த்தைகள் விசரைத் தான் கொடுத்தது. இண்டைக்கு இடைக்கிடையே என்ன வேலை செய்யுறாங்கள் என்று supervise பண்ணி களைச்சுப் போச்சு எண்ட …

  10. Started by Innumoruvan,

    உணர்வுகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தாயகத்தில் போர் நிகழும் போதும்கூட நிகழ்ந்திராதவகையில் வெறும் அமெரிக்க அரசியல் பேசி நண்பர்கள் இன்று பிரிந்து போகிறார்கள். யாரும் யாரிலும் தங்கியில்லை. எவரையும் எவரிற்கும் பேணத்தேவையில்லை. தன்னைத் தான் பார்க்கவிரும்பும் உயரத்தில் இருந்து பத்துமடங்காவது அதிகப்படி உயரத்தில் வைத்துப் பிறரிற்குத் தன்னைக் காட்டவேண்டிய கட்டாயம் பலரிற்குள் உணரப்படுகிறது. இது காலாதிகாலமாக இருந்த வரட்டுக்கவுரவம் தான் என்று கொள்ளினும், ஒரு சிறு, ஆனால் மிகமுக்கிய வித்தியாசம் இன்று முனைப்பெடுக்கிறது. அதாவது, மற்றையவன் தன்னைப் பார்;பது பக்கவிளைவு, தான் நினைக்கும் உயரத்தில் தான் இருந்தே ஆகவேண்டும் என்ற சமாதானப்படுத்தமுடியா அடம் சுயத்…

    • 3 replies
    • 1.5k views
  11. Started by uthayakumar,

    Brexit நரிகளோடு நாடகம் ஆடும் தெரேசா மே Dances with wolves. பிரித்தானியாவிலஇன்று அனைவராலும்பேசப்படும் ஒரு மிக முக்கியமான செய்தியாக பிரெக்ஸிட் இருப்பதை காண முடிகின்றது .சுமார் இரண்டு வருடத்திற்கு முன்பு பிரித்தானிய ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து தனித்து இருக்கவேண்டுமா அல்லது சேர்ந்து இருக்க வேண்டுமா என்ற பொது வாக்கு எடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்து இருக்க வேண்டும் என்று பெரும் பான்மை மக்களால் தீர்ப்பு வழங்கபட்டது . இதை தொடர்ந்து எந்த வித பொருளாதார ஒப்பந்தமும் செய்யப்படாமல் ஒரு இழுபறி நிலைமையே காணப்படுகின்றது .இந்த நிலையில் பிரித்தானிய பிரதமர் பழமைவாத தேசிய நரிகளோடு நாடகம் ஆடிக்கொண்டு இருக்கின்றார் . 50 ஆண்டு வரை ஐ .யூ உடன் சேர்ந…

    • 12 replies
    • 2.7k views
  12. தெய்வீக இசை என உனை உணர்ந்தோர் போற்றுவார்; 'சலிப்பான சங்கீதம்' எனப் புரியாதோர் தூற்றுவார். மும்மூர்த்திகள் பரப்பிய கர்நாடக சங்கீதம் - இது நூற்றாண்டுகள் தாண்டி நாம் பெற்ற பொக்கிஷம்! "ராகத்தில் சிறந்த ராகம் எது?" என நானறியேன்; "அடியார் எப்படிப் பாடினாரோ!" என வியந்தேன். இசைப்பாமரன் எனை உன் சுரங்கள் எனும் கரங்களால் ரகசியமாய் வருடி உன்னுள் ஈர்த்த அன்பை என் சொல்ல?! ஆண்டவன் படைத்த பொம்மை தான் நான்; புலம்பெயர் தேசத்து யந்திர வாழ்வில் - எந்தன் மனிதம் கெடாமல் காத்தது உன் இனிய அதிர்வலைகள்; என் ஆவி குளிர மண்ணுலகிலும் சொர்கம் தந்தாய்! மனப்பசியால் நலிந்திருக்க பெருவிருந்து தந்தாய், தனித்துத் திக்கற்று நிற்க புகலிடமாய் நீ ஆனாய். சங்கீதமே! நீ ஆனந்…

  13. ஒரு மாதத்துக்கு முன்னர் நான் வைத்தியசாலைக்குச் சென்று இரத்தப் பரிசோதனை முடித்து கார் பாக் செய்திருந்த இடத்துக்கு வருகிறேன். பிரதான சாலையில் கரையிலேயே தான் என் கார் நின்றது. என்னைக் கடந்துகொண்டு ஒருவர் பெட்டி ஒன்றைத் தூக்கிக்கொண்டு செல்கிறார். அவர் கடந்து சென்றதன் பின்னர் தான் எனக்கு அவரைப் பார்த்ததுபோல் இருக்க, நான் கார் கதவைத் திறந்தபடி தலை திருப்பி அவரைப் பார்க்கிறேன். யோசித்துக்கொண்டிருக்க எனக்கு நினைவு வந்துவிட்டது. முன்பு ஒரு தடவை சந்தித்த யாழ் உறவுதான் அவர் என்று. அவர் ஒரு கடைக்குள் நுழைய நின்று கதைத்துவிட்டுச் செல்வோமா என்று எண்ணிவிட்டு அவர் எதோ அலுவலாக இருக்கிறார். எனக்கும் காலை தேநீர் கூடக் குடிக்காத தவிப்பு. சரி இன்னொருநாள் பார்ப்போம் என்றுவிட்டுச் சென்றுவி…

  14. வந்தவனின் பெல்ட் சரியாக வேலை செய்யவில்லை என்பதால் மற்றுமொரு நட்சத்திர விடுதியில் நடந்திருக்கக் கூடிய அனர்த்தம் தப்பி விட்டது என ஓர் செய்தி (23/04/2019) . பெல்ட் என்பது பழைய ஞாபகம் ஒன்றை கிளறி விட்டது. முகத்திலே இலகுவாகப் பேய்க்காட்டுப்படக் கூடிய ஆள் என்று எழுதி வைத்திருக்கோ என்னமோ தெரியவில்லை , எங்க சாமான் வாங்கப் போனாலும் எதாவது ஒண்டு நடக்கும். அது பழைய காலத்தில பெற்ராவில (புறக்கோட்டை) நூற்றுச் சொச்ச ரூபாவிற்கு இடுப்புப் பட்டி வாங்கிய நாட்கள் என்றாலென்ன, இப்ப 5.20 வெள்ளி பெறுமதியான யாழ்ப்பாணத்து மிளகாய்த்தூள் என்றாலென்ன, 1,399 வெள்ளி பெறுமதியான Lap Top எண்டாலென்ன எதையாவது அமத்தி அடிச்சு தலையில கட்டப் பார்க்கினம் . ஒண்டுக்கு இரண்டு ரீடிங் கிளாஸ் எடுத்துக் க…

  15. இல்லாத ஊருக்கு வழி சொல்லும் கதைகள்! செப்ரெம்பர் 11, 2001 இல் நான்கு விமானங்களைப் பயங்கர வாதிகள் கடத்திச் சென்று அமெரிக்காவின் கிழக்குக் கரைகளில் இருந்த இலக்குகளைத் தாக்கியதை யாவரும் அறிவர். கடத்தப் பட்ட விமானங்களுள் ஒன்று அமெரிக்காவின் பென்ரகன் எனப்படும் பாதுகாப்புத் தலைமையகத்தின் மேற்குப் பகுதியைத் தாக்கியதில் ஒரு பாரிய ஓட்டையுடன் கட்டிடத்தின் பெரும்பகுதி இடிந்து வீழ்ந்தது. ஜெசி வென்சுரா, இப்போதும் வாழும் 67 வயது முன்னாள் அமெரிக்க அரசியல் வாதி. தனது அரசியல் பதவிகள் தீர்ந்து போன பின்னர், தொடர்ந்து பொது வாழ்வில் நிலைக்க அவர் தேர்ந்தெடுத்த பாதை சதித்திட்டங்கள் (conspiracy theories) குறித்த விவரணப் படங்கள் தயாரிப்பது. 9/11 தாக்குதல் உண்மையில் அமெரிக்க அரசின் உளவுத…

  16. இயந்திர மயமான வெளிநாட்டு வாழ்க்கையில் காலம் தொலைந்து போகிறது இன்று தான் வெள்ளிக் கிழமை மாலை, நாளை சனிக்கிழமை வார விடுமுறை ஆரம்பிக்கிறது . வெளி நாட்டு வாழ்க்கையில் சனி ஞாயிறுக் கிழமைகள் எப்படி பறந்து போகிறதென்றே தெரியவில்லை. தி ங்கள் மீண்டும் ஓடத்தொடங்க வெள்ளி வந்துவிடும். வா ரங்கள் மாதங்கள் என்றுஆகி வருடங்கள் உருண்டோடி விடுகின்றன. அன்று சனிக்கிழமை விடுமுறை என்று காலையில் ஆறுதலாக பரபரப பில்லாமல் .. எழுந்தாள் மைதிலி ...கணவனுக்கும் காபி கலந்து வெளியே இயற்கையை ரசித்தவாறு பருகிக் கொண்டு இருந்தார்கள். வசந்தத்தின் முடிவும் கோடையின் ஆரம்பமாகவுள்ள உள்ள காலம் . கண்ணாடி ஜன்னலால் பார்க்கும்போது அழகழகாய் றோஜா க்கள் பூத்திருந்தன . கணவன் மாதவன் மாலைநேரங்…

  17. Started by suvy,

    கவிதையோ கவிதை கதையோ கவிதையோ எதுவோ ஒன்று இணையம் 21 க்கு இயற்றிடலாம் என்று தண்டோரா போட்டு விட்டனர் இன்று பண்புடன் ஏற்று அதை செப்புதல் நன்று மண்ணில் விதையிடில் மரம் முளைக்கலாம் மரத்தின் கிளையில் கவிதை பறிக்கலாமோ மயங்கிய மதியை மனசுக்குள் தேற்றி அறிவெனும் ஒளியை அகலினில் ஏற்றி ஒரு கை பார்க்க புடைத்தது நெற்றி கொப்பியடித்தால் கிடைத்திடும் வெற்றி காலம் கடந்த பட்டுக்கோட்டை பாடல்களை பக்குவமாய் தறித்து இட்டு கட்டிடலாமோ காலத்தால் அழியாத கண்ணதாசன் கவிதைகளை கன்னா பின்னா என்று உரு மாற்றிடலாமோ அவதாரபுருஷன் வாலியின் வாலிப வரிகளை வாலைப் பிடித்து வளைத்து போடலாமோ …

  18. இன்று இங்கே சனி காலை நேரம். வழமையாக இரவு படுக்கப் போக எப்படியும் 11, 11.30 ஆகி விடும். புலம் பெயர்ந்தும் மாறாத பழக்கங்களில் இதுவும் ஒன்று. அதிசயமாக நேற்று இரவு 10 மணிக்கே படுக்கைக்கு போயாயிற்று । காலையில் துணைவியார் அதிசயமாக நல்லதொரு "mood " உடன் என்னப்பா இரவெல்லாம் ஒரே கனவு என்று கொண்டு வந்தார்। தேடிக் கதைக்க வரும் அருமையான சந்தர்பங்களை விட மனமில்லாமல் கையில் இருந்த வேலை எல்லாவற்றையும் விட்டு விட்டு என்னப்பா என்ன விஷயம் என்று கேட்டேன். இல்லையப்பா சிங்களவர் , சோனகர் , தமிழர் எல்லோரும் ஒரே சண்டை , நீர்வேலியில் வைத்து நாங்கள் எல்லோ இடையில் மாட்டுப்பட்டுப் போனோம்। ஓடித் தப்பிக்கலாம் எண்டால் கை கால் ஒண்டும் வேலை செய்யுதில்லை அப்பிடியே இறுக்கிப் போச்சுது ,…

  19. Started by putthan,

    "லண்டனிலிருந்து சுதா வந்திருக்கிறாள் வீ க்கென்ட் பின்னேரம் வாறீயா போய் சந்திப்போம்" "யார் மச்சான் சுதா" "டேய் டேய் சும்மா பம்மாத்து விடாத முந்தி நீ சுழற்றிகொண்டு திரிஞ்சாய் கலா, அவளோட போவள் 'இரட்டை பின்னல்' அவளைத்தான் சொல்லுறன்" "கலா ...." " டேய் நீ எனக்கு விசரை கிளப்பாதை" "யாரப்பா போனில் சுதா,கலா என்று முழுசிக்கொண்டிருக்கிறீயள்" "மச்சி வைடா மனிசி வாராள் பிறகு ,நான் எடுக்கிறன்" "குகன் எடுத்தவன் யாரோ கலாவின்ட பிரண்டாம் சுதா லண்டனிலிருந்து வ‌ந்திருக்கிறாளாம், மீட் பண்ண வரட்டாம்." "போய் மீட் பண்ணுங்கோவன்" "மீட் பண்ணலாம் , சுதா யார் என்று யோசிக்கிறன்" "என்ன உங்களுக்கு டிமஞ்சியா கிமஞ்சியா எதாவது வந்திடுதே" " ஏ…

  20. கொல்வது கொலை விடிகாலை இருள் விலகும் தருணம். அந்தத் தென்னந்தோப்புக்குள் நிலை எடுத்தபடி அவள் அவதானமாக நகர்ந்தாள். கைகள் பிஸ்டலில் பதிந்திருக்க விழிகள் தூரத்தில் நாய்கள் குரைக்கும் திசை நோக்கி உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்ததன. ஒரு இராணுவப் படைநகர்வு பாரிய அளவில் முன்னெடுக்கப்படுவதற்கான ஆயத்த கூப்பாடுகள் அந்த விடிகாலை இருளைக்கிழித்தன. அரவம் காட்டக்கூடாது என்ற மேலிடத்துக்கட்டளை அவளை அசைவித்துக் கொண்டிருந்தது. பெக்கி சேர்ட், இலகுவாக ஓடுவதற்கும் தடை தாண்டுவதற்கும் ஏற்றாற்போல் பான்ட், இடுப்பிலே கட்டப்பட்டிருந்த பெல்டின் இடது பக்கம் பிஸ்டல் வலதுபக்கம் இரண்டு கிரனைட்டுகள் கழுத்தில் குப்பி. மிடுக்கான தோற்றம், பெண்மையை வெளிப்படுத்தாத பிரிதொரு கம்பீரம். விழிகளில் மருட்சி …

  21. Started by putthan,

    "பல தடவைகள் தாயகம் சென்று வந்த சுரேஸுக்கு இந்த தடவை போவது ஒரு வித புத்துணர்ச்சியை அவனுக்கு கொடுத்தது.சில சமய‌ங்களில் அவனை அறியாமலயே சிரிப்பதும் உண்டு.ஏன் சிரித்தேன் என்று எண்ணும் பொழுது அவனுக்கே வெட்கமா இருந்தது. "இஞ்சாரும் ஊருக்கு போற நாள் வந்திட்டுது டிக்கட் அலுவல் எல்லாம் பார்த்தாச்சோ" "காசு டிரான்சவர் பண்ண வேணும் அதுக்கு இப்ப கனகாசு போகப்போகுது" "போகவெளிக்கிட்டால் காசு போகத்தானே செய்யும்" "என்ன இந்த முறை ஊருக்கு போறது என்றவுடன் என்னை விட நீங்கள் உசாரா இருக்கிறீயள் போல" "இஞ்சாருமப்பா இந்த தடவை சிறிலங்கா போகும் பொழுது கொழும்பில் ஒரு நாள் நின்று போட்டு அடுத்த நாள் ஊருக்கு போவம்" "இதென்ன புதுக்கதையா இருக்கு நீங்கள் தானே வழமையா . ஒரு கிழமைஅக்க…

  22. கற்பனை என்று ஒன்றில்லை…. அண்மையில் வயதில் குறைந்த உறவினரொருவர் அவரது 3 பிள்ளைகளுடன் வீட்டிற்கு வந்திருந்தார். (முதல் தடவையாக 15 ஆண்டுகளின் பின்னர்) மூவரும் 3 விதமான கெட்டித்தனம் நிறைந்தவர்களாக இருந்தனர். இரண்டாவது பையன் ஒரு 8 அல்லது 9 வயது இருக்கும். சற்று நேரம் கதைத்துக் கொண்டிருந்து விட்டு அப்பால் போனவன் ஒரு 15 நிமிடங்களில் திரும்பி வந்து இதைப் பாருங்கோ அங்கிள் என்று ஒரு தாளை நீட்டினான். அச்சு இயந்திரத்தில் பதிப்பித்தது மாதிரி மிகுந்த வேலைப்பாடுகளுடன் கூடிய Lion King படம், பென்சிலாலேயே வெவ்வேறு வகையான shades filling உடன் அவன் அந்த 15 நிமிடத்தில் வரைந்தது- என்னால் நம்ப முடியவில்லை . அவனைப் பற்றி பெற்றோர் சொன்னது இது தான் .அவனுக்கு வாய் பேச்சு வர மிகுந்த …

  23. அப்ப எனக்கு ஒரு பதின்மூன்று பதின்நான்கு வயதிருக்கும். எனது அன்ரி மன்னாரில் ஒருபாடசாலையில படிப்பிச்சுக்கொண்டு இருந்தா. நான் அதுவரை அங்கு சென்றதில்லை. ஒரு பெரிய பள்ளி விடுமுறைக்கு அன்ரி எங்களை எல்லாம் அங்கு கூட்டிக்கொண்டு போவதாகக் கூறியவுடன் மனதில ஏற்பட்ட சந்தோசத்தைச் சொல்ல முடியாது. அங்க போற நாளை ஒவ்வொருநாளும் எண்ணியபடி காத்திருக்க ஆரம்பிச்சம் நானும் என் தம்பி தங்கைகளும். அப்போதெல்லாம் எந்த விடயத்தையும் மனதில் வைக்க முடியாது அக்கம் பக்கத்தில் உள்ள எம் வயதுக்காரருக்குச் சொல்லிவிடுவோம்தானே. அப்பிடி நாங்கள் மன்னார் போவதும் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு ஆட்களுக்கு எல்லாம் தெரிய, எங்களோட வர அவர்களும் ஆசைப்பட, என்னும் இரண்டு பேரை மட்டும் எம்மோடு கூட்டிக்கொண்டு போக அன்ரியும் சம்…

  24. கஞ்சா விற்கும் காஞ்சனாவும் கண்ணி வைக்கும் காவலனும்,,,,,,,, ! போதை தரும் வாதை சிரிப்புக்குமட்டும்,சிந்திக்கக்கூடாது......! 🥀..............(1) அந்த நீதிமன்ற வளாகம் அன்று காலை ஒரே பரபரப்பில் இருக்கின்றது.வக்கீல்களும், தரகர்களும்,கட் சிக்காரர்கள் வாதிகள்,பிரதிவாதிகள்,வேடிக்கை பார்க்க வந்தவர்கள்,சின்னசின்ன வியாபாரம் செய்பவர்கள் என்று பலராலும் நிரம்பி வழிகின்றது.அது தற்காலிக கட்டிடத்தில் நடைபெறுவதால…

  25. கடவுள் படைக்காத மனிதர்கள்! அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக வரும் முன்னர் சில ஆண்டுகள் முன்பிருந்தே அடிப்படை வாதக் கிறிஸ்தவர்களின் (evangelical Christians) கை கொஞ்சம் கொஞ்சமாக ஓங்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் பழமை வாதக் கொள்கைகளும் அக்கொள்கைகளை மதச் சார்பின்மையுடய அமெரிக்க சட்டத்தினுள் குறுக்கு வழிகளில் புகுத்தி மற்றவர்களின் நம்பிக்கைகளைத் தாங்கள் தீர்மானிக்கும் தீவிரமும் இவர்களை நான் "கிறிஸ்தவ தலிபான்கள்" என்று அழைக்கக் காரணங்கள். இந்தப் பழமை வாதக் கிறிஸ்தவர்களின் நீண்ட கால இலக்குகளில் ஒன்று டார்வினின் கூர்ப்புக் கோட்பாடு (theory of evolution). 1859 இல் சார்ள்ஸ் டார்வின் உயிரியல் உலகின் மிக முக்கியமான முன் மொழிதலான "உயிரினங்களின் கூர்ப்பு" எனும் தியரியை ஒரு நூலா…

    • 14 replies
    • 3.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.