கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தங்கைகள் தேவைப்படுகிறார்கள்... நடை பழகும் நாட்களில் கைபிடித்து கொள்ள அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்... அடம் பிடித்தோ அழுது புரண்டோ பொட்டோ, பூவோ முதல் முதலில் தங்கைக்கே வாங்குகிறான் அண்ணன்... '' அ" வில் தொடங்கி சைக்கிள் பழக்கி மகிழுந்து வரை அண்ணன்களே ஆசிரியர் தங்கைகளுக்கு... அண்ணனாக மட்டுமன்றி நண்பனாகவும் சில நேரங்களில் தந்தையாகவும் மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்... தங்கைகளின் எந்தவித கோரிக்கையும் அண்ணன்களிடமே வருகிறது தங்கைகளுக்கான முதல் சிபாரிசை அண்ணன்களே முன்னெடுக்கிறார்கள்... அக்காக்களிடம் மறைத்த அண்ணன்களின் காதலை அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்... அண்ணன்களுக்காக அப்பாக்களிடம் கோபம் கொள்வதில் தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்... தங்கைகளி…
-
- 8 replies
- 26.7k views
-
-
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற தலைப்பில் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ எழுதி வாருங்கள் என்று இரண்டாம் வகுப்பு ஆசிரியை சொல்வது அலுவலகத்தில் அமர்ந்திருந்த எனக்குக் காதில் விழுந்தது.. நான் இரண்டாம் வகுப்பு படிக்கவில்லையாயினும் எழுதி பல மாதங்கள் ஆனதால் ஏதேனும் எழுத எண்ணினேன்.. மரங்களைப் பாட வருகிறேன் நண்பர்களே.. மரமா? என்கிறீர்கள்.. மரம் மட்டமில்லை நண்பனே.. மரம் இல்லையேல் மனித இனமில்லை.. காற்றைச் சலவை செய்யும் இலவச இயந்திரம் மரம்.. மாசகற்றும் மாண்புள்ளது மரம்.. தாய்க்கு அடுத்து நம்மைத் தாலாட்டுவது மரம்.. உயிருண்டு மரத்திற்கு.. உங்களுக்குத் தெரிந்திருக்கும்.. இன்னொரு உண்மை சொல்லட்டுமா? ஆயுள் அதிகமுள்ள உயிரும் மரம்தான்.. அகழ்வாரைத் தாங்கும் ந…
-
- 3 replies
- 25.8k views
-
-
-
-
நல்ல பழங்களை ..... தட்டில் அடுக்கி வைத்து ..... நலிந்த பழங்களை....... கொடையாய் கொடுக்கும் ..... கலியுக தர்மவான்கள்.......!!! பகட்டுக்கு பிறந்தநாள் ..... பலவிதமான அறுசுவை ..... உணவுகள் - நாலுபேர் ....... புகழாரம் ....... விடிந்த பின் பழைய சாதம் ..... ஏழைகளுக்கு அள்ளி.... கொடுக்கும் ....... கலியுக தர்மவான்கள்.......!!! & சமூக சிந்தனை கவிதைகள் கவிப்புயல் இனியவன்
-
- 20 replies
- 22.7k views
-
-
வா தோழியே .... எல்லோரும் பொறாமை படும் ...... அளவுக்கு நட்பாய் இருப்போம் ...... இப்படியும் நட்பாக இருக்க ..... முடியுமா என்பதை ...... நிரூபிப்போம் .......!!! கையில் முத்தமிட்டால்...... காதலியாகிவிடுவாள் ..... கை கொடுத்து உறவுவந்தால் ..... நண்பியாகிறாள் - நீ நண்பி .......!!! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ நீ காதலியில்லை என்தோழி ஆண் பெண் நட்பு கவிதை ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் ,கவிநாட்டியரசர் ^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
-
- 4 replies
- 22.4k views
-
-
பள்ளிச் சீருடையில் பட்டென்று வந்தவளா இவள்.. கண்கள் அகல விரிய பார்வை விழுந்தது அவள் மீது..! நேற்று அவள் வகுப்பில் என்னோடு கதிரைக்கு சண்டை பிடிக்க தள்ளி விட்டதில் சிறு உரசல் கத்தியே உயிரை எடுத்தாள் வாத்தியார் தந்த அடியோடு அது நினைவில் பதியும் வரை. அன்று அவள் சிறுமி நான் சிறுவன். வளர்ந்தோம் இருவரும் பருவமும் வந்து சேர்ந்தது அவள் கடைக்கண் பார்வை வீச நானும் பதிலுக்கு பேச ஆசைகள் அரும்பின அதற்கு அன்பு என்று பெயரிட்டோம். கடிதங்கள் பரிமாறி கடலையும் போட்டு கையும் கோர்த்து வலண்டைனும் கொண்டாடினோம். காலமோ ஓட்டமாய் ஓடியது.. ஓர் நாள் சொன்னாள் "அப்பாக்கு லண்டனில் நிரந்திர விசா வந்திட்டுது நாங்களும் போகப் போறம்." மின்னலா…
-
- 146 replies
- 22.1k views
-
-
பா.விஜயின் கவிதை நிழல் தேடாதே உன் நிழலில் ஒரு ஊரையே நிற்கவை ! முட்களில் மோதிக் கிழியாதவனுக்குப் பூக்களைத் தடவும் தகுதி கிடையாது ! மகிழ்ச்சியாய்ச் சிரி கவலைகளைப் பிய்த்துக் காற்று மண்டலத்திற்கு அப்பால் வீசு ! எதைக் கண்டும் பிரமிக்காதே பிரமிப்பைப்போல் ஒரு பின்னடைவே கிடையாது ! தோல்வி என்பது சிந்திக்கத் தெரியாதவனின் சித்தாந்தம் ! நிலாவைத் தொட்டது மூன்று தோல்விகளுக்குப் பிறகுதான் ! நீ எழுந்தால் ஒரு எட்டு வந்து பார்க்காதவன் நீ விழுந்தால் விழுந்து விழுந்து விசாரிப்பான் கவனி ! இளைஞனே இரைப்பையையும் நம்பிக்கையையும் காலியாக விடாதே ! நடக்குமா என்ற கேள்வி- உன் நம்பிக்…
-
- 12 replies
- 21.1k views
-
-
01, ஒரே பத்திரிகையில் பிறந்த நாள் வாழ்த்தும் நினைவஞ்சலியும் வாழ்க்கை 02, வீடு எரிகிறது ஒளி கிடைக்கிறதாம் வடக்கில் வசந்தம் 03, நெற்றிக் குங்குமப்பொட்டுக்கள் அழிக்கப்படுகின்றன கிழக்கில் உதயம் 04, கள்ளர் நாடாளுமன்றில் நல்லவர் தெருவில் வீடும் நாயும் 05, தேர்தலில் ராஜ பக்சர்களின் நாகாஸ்திரம் கள்ள வாக்கு 06, புளியமரத்தடி முனியை கண்டதில்லை,பயமுமில்லை கண்டதும் பயமும் வெள்ளை வானுக்குத்தான் 07, நிலவு உறங்கும் இரவு ,நாய்கள் ஊளையிடும், கோழிகள் கூவாது ஏனெனில் களவாடப்பட்டிருக்கும் இந்திய அமைதிப்படைக்காலம் 08, என்னைப்போல்எப்படி நீ நடித்தாலும் என் உணர்வை உணராய் விம்பம் 09, அம்பு துப்பாக்கிரவை ஆயிற்று சேலையும் அப்படித்தான் உலக …
-
- 8 replies
- 21k views
-
-
காத்திருப்பு உன்னைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. உனது குரலில் அன்பை அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறது மனம். பாசம் நிறைந்த உன் பார்வைக்குள் நனையும் நாளின் நினைவுகளில் கழிகிறதென் நிகழ்காலம். கால நீட்சியில் உனது கோலத்தில் எழில் கூடியிருக்கும் என்று நினைக்கிறேன் இத்தனை காலப் பிரிவினால் நீயும் என்னைப் போலவே தவித்தபடி இருக்கலாம். நேரில் பேச வேண்டிய செய்திகளை சுமக்கின்ற எங்களின் மனங்களில் சுமைகளை மாற்றிக் கொள்கின்ற நாளின் வருகையை எதிர்பார்க்கின்ற கணங்களில் அழிவுகள் வருடங்களாக நகர்கின்ற பொழுதிலும் தொடர்கிறது உனக்கான எனது காத்திருப்பு. பேசிக்கொள்ள நேரமற்ற விதமாய் உணர்வுமிக்க பொழுதொன்றில் சந்திக்கனும் உனது கனிவான பார்வையே போதும் இன்னும் ஆய…
-
- 15 replies
- 20.9k views
-
-
மரண வீடு எல்லா செத்த வீடுகளிலும் என் மனம் என் சாவுக்காக அழுகின்றது, தான் செத்த பின் தனக்காக அழ முடியாத் துயரம் அதுக்கு, பாவம். வளர்த்தப்பட்ட உடலில் தன் உடலை ஒட்டி அழும் மனிதர்களில் தன் மனிதர்களை ஒட்டி வேவு பார்க்கின்றது கள்ள மனசு ஒவ்வொரு சாவு வீடும் தனக்கான ஒரு ஒத்திகை பார்க்கும் இடம் என்று சொல்லுது மனம் எல்லாச் சாவுகளின் செய்திகளின் போதும் எல்லா மரணம் பற்றிய தகவல்களின் போதும் விக்கித்து தன் சாவை நினைத்து ஒரு கணம் தடுமாறுகின்றது எல்லா வீதி விபத்துகளும் என்னை அச்சுறுத்துவன போன்றுதான் எல்லாச் சாவுகளும் என்னை அச்சுறுத்துகின்றன செத்தவருக்காக அழும் கண்ணீர் துளிகளில் பல எனக்காக அழுவன என கண்க…
-
- 21 replies
- 20.7k views
-
-
சித்தப்பா அன்பின் உருவானவரே! பாசத்தின் உறைவிடமானவரே! தந்தைக்கு நிகர் அற்றவரே! தாய் போன்று எமை வளர்த்தவரே! தந்தையின் உடன் பிறப்பே!- தந்தை போன்றே எமை காத்தவரே! அறியா வயதில் அப்பா முகம் பார்க்க ஏங்கியதில்லை – என் அப்பாவாக நீங்கள் இருந்தீங்கள் - ஆனால் தந்தையுடன் வாழ்ந்தாலும் தங்கள் முகம் பார்க்க ஏங்கதா நாள்லிலை அன்னை மடி தேடியதில்லை அன்னை உருவில் உங்கள் அன்பு ஆசைப்பட்டதை வாங்கியும் தந்தீங்கள் - என் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றியும் வைத்தீங்கள் தப்புக்களை தட்டியும் கேட்டீங்கள் வாழ்க்கையெனும் பாதையில் வீறு கொண்டு நடக்கவும் செய்தீர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டிடும் போதெல்லாம் - அவை தோல்வியல்ல வெற்றியின் அறிகுறி என்று உற்சாக…
-
- 17 replies
- 19.8k views
-
-
சொல்வனம் படம்: கே.ராஜசேகரன் அன்பு எனும் நான் என் அன்பு ஒரு குருட்டுப் பிச்சைக்காரனின் கைத்தடி மனமுவந்து பெறும் திருநங்கையின் ஆசி குஷ்டரோகியின் நாற்பட்ட புண்ணுக்கான களிம்பு நிறைமாதக் கர்ப்பிணியின் மசக்கை முதிர்கன்னி எதிர்நோக்கும் ஆளரவமற்ற தனிமை ஊமைச்சிறுமி யாசகம் பெற்ற ஐந்து ரூபாய் பணம் மடி முட்டிக் கவ்வும் மறியின் காம்பு இளங்கன்று மேனியை வருடும் பசுவின் நா வானம் பார்த்த வறண்ட பூமியின் முதல் தூத்தல் கால்கடுக்கக் காத்திருக்கும் முதியவளின் கடைசிப்பேருந்து தடம் மறந்த குட்டியானைச் செவிமடுக்கும் தாய் யானைப் பிளிறல் சத்தம் கலைமான்கள் அருந்தும் காட்டுச்சுனை இணைக்கென பாதியிரவில் பார்சலாகும் மூன்று பரோட்டா முதுகாவலாளியின் குட்டித் தூக…
-
- 41 replies
- 18.9k views
-
-
இரண்டு ஈர உதடுகள் என்னை முத்தமிட்டு நீங்கின ஒன்றில் பொத்தி வைத்த காதலும் வெளிப்படுத்தி வெளிப்படுத்தி அடங்கா(த) காமமும் நிறைந்து இருந்தன இன்னொன்றில் வெள்ளை நிறத்தில் அன்பு இருந்தது "இவன் என் அப்பா" என கட்டிப் பிடித்து இறுக்கி சிரிக்கும் சின்னச் சிறுக்கியின் பாசம் இருந்தது இரண்டு முத்தங்களிலும் என் வாழ்வு தொங்கி நின்றது ******** அவர்களை அனுப்பிவிட்டு வீடு செல்கின்றேன் வாசல் திறக்கும் போது சூனியம் அப்பிக் கொள்கின்றது கட்டிலும், தொட்டிலும் சோபாவும், சட்டியும் முட்டியும், முட்டை பொரித்த பின் எஞ்சிப் போன தாச்சியும் சிந்தப் பட்ட ஒரு சொட்டு எண்ணெயும், என்னவள் கழட்டிப் போட்ட பனிச் சப்பாத்தும் என்…
-
- 77 replies
- 18.4k views
-
-
தியாக சரித்திரங்களின் நாயகர்கள் தாயக மண்ணின் காவலர்கள் தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் - தமிழீழத் தாய்க்காக களமாடிய.... மாவீரர்கள்! கந்தகக் காற்றைச் சுவாசித்து... விடுதலை ஒன்றையே யாசித்து... அவர்கள் புரிந்தது பெருந்தவம் தம்மையே உருக்கி.... எம்மைக் காத்த காவல் தெய்வங்கள் ! மண்ணின் நிரந்தர விடியலுக்காய், நிரந்தரமாய் மண்ணுள் உறங்கும் வீரத் தமிழ்ச் செல்வங்கள் ! எதிரியின் தோட்டாக்கள் கூட இவர்களைப் பார்த்து அஞ்சும்! மரணம் கூட இவர்களிடம் கெஞ்சும்! இவர்களின் தியாகம் மரணத்தையும் விஞ்சும்!! புன்னகைத்தபடியே போர்க்களம் புக இவர்களால் மட்டுமே முடிந்தது! எம் தேசமே இவர்களால்தான் விடிந்தது!! தாயக மண்ணைத்தான் நேசித்தார்கள்- அதன் விடுதலை ஒன்றைத்தான் சுவாசித்தார…
-
- 2 replies
- 18.3k views
-
-
தோல்வி எனைத் தொடும் முன்னே தோழமையுடன் தோள் கொடுப்பாயடி. கவலைகள், மனதை காயப்படுத்தும் முன்னே காயத்தை ஆற்றும், மருந்தாக, வருவாயடி,,,! ஒரு நாள் பேசாவிட்டால் ஒரு ஜென்மம் போனதடி - என நீ துடிப்பதை நான் நன்கு அறிவேனடி! நினைவினில் நிஜமானவளே - என் கனவிலும் கரைந்தாயடி.. என் தோழி என்ற உரிமையுடனே உன் தோளில் சாய்வேனடி.. உன் சிநேகிதி என்ற உரிமையுடனே உனை நான் அதிகாரமும் செய்வேனடி! என் ஒற்றை விழியாக என் தோழி ,- நீ என்னில், என்றுமே வாழ்வாயாடி.. !
-
- 37 replies
- 18k views
-
-
கவிதைகள் ----------------------------------------------- எனக்கு வந்த கடிதம்---------------------------------- அன்பானவளே நீ நலமாக இருக்கின்றாயா---- நீ எப்பவும் படிப்புபடிப்பு என்று செல்கின்றாய்- நான் நீ போகுமிடமெல்லாம் வருகின்றேன் அது உனக்குத் தெரியாது ஆனால் நீ நல்ல பெண் ஏதோ உன் அழகு என்னை மயக்கியது? உன் நல்ல குணம் நடைகள் எனக்குப் படித்தது எவ்வளவோ பணம் இருந்தும் நீ ஒரு சராசரி மனிதர் போல இருப்பாய் --- என் காதலை என்னிடம் நேரில் சொல்ல எனக்குப் பயமாக இருக்கின்றது என் காதலை நீ ஏற்றுக் கொள்ள மாட்டாய் என எனக்குத் தெரியும் இருந்தாலும் நான் நேரில் சொல்லாட்டியும் கடிதம் முலமாக எழுதி அனுப்புகின்றேன் நீ அத…
-
- 141 replies
- 17.7k views
-
-
மோகிப்போம் வா......... ( 18+) மெதுமெதுவாய் மேல் எழும்பும் கறையான் புற்றைப்போல் , என் மனதை அரிப்பவளே வா ......... பள்ளியறையில் மோகிப்போம் வா . ஆனானப்பட்ட வாத்ஸசாயனனே முயற்சி செய்துதான் எழுதினான் காமசூத்திரத்தை . எனக்கும் உனக்கும் என்னதான் வெட்கம் சயனவறையில் ??? அடி என்னவளே !!!! மோகம் என்றால் என்னவென்று தெரியுமா ??? கண்டவுடன் ருசிப்பதல்ல கண்டு ரசிப்பது ........ அடி சூரியகாந்தப்பூவே !!!!! இரவின் மடியில் என் ஆண்மையும் , உன் பெண்மையும் அவசியம் . இதைவிடப் , பொறுமையும் திறமையும் என்ற இரு மைகள் அத்தியாவசியமடி ........ அடி என் வெல்லக்கட்டியே !!!!!!! நாங்கள் என்ன மிருகங்களா உச்சக்கட்டத்தை நோக்கி உடனே செல்ல ....... காதல் இல்லாத காமமும் ,…
-
- 25 replies
- 17.6k views
-
-
உன் புன்னகை ஒரு பரவச தேசத்தின் பளிங்கு மாளிகை போல் பரிசுத்தமானது உன் புன்னகை. அது இரவை உடைக்கும் ஓர் மின்னல் கோடு போல தூய்மையானது தேவதைக் கனவுகளுடன் தூக்கத்தில் சிரிக்கும் ஓர் மழலைப் புன்னகையுடனும் ஒப்பிடலாம் உன் புன்னகையை. எனக்குள் கவிழ்ந்து வீழும் ஓர் பூக்கூடை போல சிதறுகிறது உன் சிரிப்பு. ஒரு மின்மினியை ரசிக்கும் இரவு நேர யாத்திரீகனாய் உன் புன்னகையை நேசிக்கிறேன். ஆதாமுக்கு ஆண்டவன் கொடுத்த சுவாசம் போல எனக்குள் சில்லிடுகிறது உன் புன்னகை. எனினும் உன் புன்னகை அழகென்று உன்னிடம் சொல்ல மட்டும் ஆயுள் கால தயக்கம் எனக்கு. நீ புன்னகைப்பதை நிறுத்தி விடுவாயோ …
-
- 4 replies
- 17.6k views
-
-
இட்ட முட்டை சுடுகிறது எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் ஏக்கத்தோடு பார்த்தது கோழி @ கடத்தல்காரன் கையில் பணம் வன அதிகாரிகள் பாராமுகம் ஓடமுடியாமல் தவிர்க்கும் மரம் @ காடழிப்பு ஆற்று நீர் ஆவியானது புலம்பெயரும் அகதியானது கொக்கு @
-
- 70 replies
- 17.2k views
-
-
அப்பா என்றால் அன்பு……. எம் முகவரிகளுக்கு முதலெழுத்து எம் அகரங்களுக்கு தலையெழுத்து நாம் முந்தி நின்று முகம்காட்ட தன்னை தந்து உருவாக்கிய சிற்பி குடும்பச் சுமைகளில் அன்னைக்கு ஊன்று கோல் இடுக்கண் சமயங்களில் இவரின் சொல் ஆறுதல் மனம் நோகும் வேளையிலோ இவர் வாய் மொழி மயிலிறகு குடும்ப வட்டத்திற்குள் உலகத்தையே உற்று நோக்கிய தத்துவ ஞானி இசை இவரது உயிர் இனிமை இவரது குணம் மௌனம் இவர் தரும் தண்டனை மனமெல்லாம் மழலைகள் சிந்தனை அன்பு இவரது மந்திரம் இவரிடம் இல்லை என்றும் தந்திரம் கல்விக்கு இவர் வாழ்வில் முதலிடம் கடமைதான் இவரது புகலிடம் இறைவனுடன் உறவாட விருப்பம் ஏராளம் இவரின் கை மட்டும் கொடுப்பதில் தாராளம் ஏம் தந்தை எமைப்பிரிந்து ஆண்டுகள் பதினாறாகு…
-
- 11 replies
- 17.1k views
-
-
வீரம் வெல்லும் வேளையிது ஈழம் பெறும் காலமிது சுற்றப் பகை நாமழித்து முடிசூடும் நேரமிது (வீரம்) வெற்றிதரப் பிறந்து வரும் புத்தாண்டடா வெல்லும் வழி சொல்லுகின்ற தமிழ் ஆண்டடா (வேறு) அண்ணன் ஆணைக்கே தாள் பணிந்தோம் வெல்லும் நாளுக்கே வாழ்த்துரைப்போம் வாழ்வென்றால் இது வாழ்வுமில்லை போரென்றால் இது போருமில்லை வாழ்வும் சாவும் எமக்கொன்றே மானம் தானெங்கள் வரலாறே வெல்வோம் நாமெங்கள் தாய்மண்ணே ஆள்வோம் தமிழர்கள் எங்கள் மண்ணே போரென்றால் புலிவீரம் பேசும் பேச்சென்றால் தமிழ் மானம் பேசும் ஏய்த்து மாய்த்த காலம் போச்சே எங்கள் தலைவரின் காலம் ஆச்சே அண்ணன் இடுவான் ஆணையொன்றே ஆணை முடிப்போம் பகையை வென்றே சுவ…
-
- 7 replies
- 17.1k views
-
-
தை - திருமகளே வருக வருக .... தைரியம் துணிவு சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி உம்மை அழைக்கிறேன் தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே .... தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை
-
- 6 replies
- 17.1k views
-
-
ரசித்த சில குட்டிக் ஹைக்கூக் கவிதை வரிகளுக்குக் காட்சி கொடுத்தால் நன்றாக இருக்குமா என்று நினைத்தேன்... (வரிகளுக்குச் சொந்தக்காரரின் பெயரை மறக்காமல் இணைத்துள்ளேன் ) தொடரும்...
-
- 17 replies
- 17k views
-
-
அம்மம்மா அம்மா என்று அறிமுகம் ஆனவரே அம்மாவின் அன்பையும் சேர்த்து தந்தவரே அம்மாக்கு நிகர் அம்மாம்மா என்ற புதிய மொழியை சொல்ல வைத்தவரே ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு அன்னை பிரியும் போது உங்கள் மடியில் கிடத்தினாள் நீங்கள் எம்மை உமது முதுகில் அல்லவா சுமந்தீர்கள் ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள ஆனாலும் மனம் உங்கள் அன்பைக்காவே ஏங்கின்றது ஆயிரம் புத்திமதிகள் அன்புடனே கூறும் நீங்கள் ஆதரவாய் அரவணைப்பீர்களே நாம் தோற்கும் போதும் எத்தனை அடிகள் வாங்கினாலும் குட்டி நாய்கள் போல் உங்கள் காலடியையே சுற்றி சுற்றியே வருவோம் காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர் நீர் கண் மூடு…
-
- 30 replies
- 16.8k views
-