Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. 61ம் ஆண்டு பிறந்த நிலாமதியின் தம்பி 28-01- 2020 ல் ஜேர்மனியில் காலமானார். 04- 02-2020ல் மதியம் ஒருமணிக்கு நல்லடக்கம் செய்யப்படும் என்பதை யாழ் இணைய நண்பர்களுக்கு தெரிவிக்கும்படி நிலாமதி கேட்டிருந்தார். நிலாமதிக்கும் அவரது உறவுகள் அனைவருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள்.

  2. எங்கள் பாசமிகு தந்தையார் திடீர் சுகவீனம் காரணமாக எம்மை மீளாத்துயரத்தில் ஆழ்த்தி பூவுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்று விட்டதை யாழ் கள உறவுகளுக்கு மிக மன வருத்தத்துடன் அறிய தருகிறோம். அன்னார் ஓய்வு பெற்ற அரச மருத்துவ சேவை உத்தியோகத்தரும் ஆவார். நெடுக்ஸ் 18.03.2025.

  3. யாழ்கள உறவான, பாஞ்ச் அண்ணாவின் மாமியார்... இலங்கையில் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும், பாஞ்ச் அண்ணாவிற்கும், அவர் மனைவிக்கும், குடும்பத்தினருக்கும்.... எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரி ன் ஆத்ம சாந்திக்காக, இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

  4. என் மதிப்புக்குரிய வாசகர்களுக்கு இந்தச் செய்தி கள நிபந்தனைக்கு உட்பட்டதோ இல்லையோ தெரியவில்லை....? இருந்தும் கூறவேண்டியுள்ளது.. என் ஆக்கங்களை படித்து கருத்துச் சொல்லும் வாசகர்களுக்காக... எனது அண்ணன் தாயகத்தில் அகால மரணம் அடைந்து விட்டதனால் எனது ஆக்கங்கள் என் மன நிலை சாதாரண நிலைக்குத் திரும்பும் வரைக்கும் சில காலத்துக்கு வரமாட்டாது என்பதை மிகவும் கவலையுடன் அறியத் தருகிறேன்.... இளங்கவி

  5. இன்று 17/03/2023 எமது அண்ணா(பெரியம்மாவின் மகன்) கனகசபை சிறிகாந்தன் அவர்கள் இறையடி எய்திவிட்டார் என்பதை உறவுகளுக்கு அறியத்தருகிறேன். அவரும் எங்களைப் போலவே ஒரு Muscular Dystrophy யால் பாதிக்கப்பட்டவர்.

  6. யாழிணைய உறவு சகோதரி யாயினியின் தந்தையார் காலமானார். அன்னாரின் பிரிவால் துயருற்று இருக்கும் சகோதரிக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.

  7. யாழ்களத்தில் தமிழகத்தில் இருந்து இணைந்திருந்த எனது அன்புத் தோழர் தமிழுணர்வாளர் புரட்சிகரதமிழ்தேசியனின் மகள் ஹெமா அவர்கள் கடந்த ஆண்டு டிசம்பர் சென்னை வெள்ளத்தில் இறைபதம் அடைந்தாள். மகளின் பிரிவால் துயருற்றிருக்கும் தோழருக்கும் சகோதரிக்கும் இறைவன் சமாதானத்தைக் கொடுப்பானாக. மகளின் ஆத்மா அமைதியாக இளைப்பாறுவதாக!

  8. ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் (ஆங்கிலப் பேராசிரியர்- எதியோப்பிய பல்கலைக்கழகம், முன்னாள் விரிவுரையாளர்- கிழக்கு பல்கலைக்கழகம்) தோற்றம் : 16 டிசெம்பர் 1967 — மறைவு : 10 சனவரி 2018 யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், எதியோப்பியா வை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஜோன் மனோகரன் கெனடி விஜயரத்தினம் அவர்கள் 10-01-2018 புதன்கிழமை அன்று எதியோப்பியாவில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரத்தினம்(ஆசிரியர்) சிவயோகம்(அதிபர்) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற மரியசந்தானம்(அரச உத்தியோகத்தர்), பூமணிதேவி(ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாநிதி நதிரா(கிழக்குப் பல்கலைக்கழக தமிழ்த்துறை சிரேஸ்ட விர…

    • 42 replies
    • 4.3k views
  9. யாழ் கள கனடா வாழ் உறவான சபேஷ் இனது தந்தையார் நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் காலமானார் எனும் செய்தியை மிகுந்த துயரத்துடன் பகிர்கின்றேன் இங்கு. அன்னாரின் உடல் யாழ்ப்பாணத்தில் இருந்து கனடாவுக்கு விரைவில் எடுத்து வரப்பட்டடு அஞ்சலிக்காக வைக்கப்படும் என அறிய முடிகின்றது. இறுதிக் கிரியைகள் தொடர்பான விபரங்களை தகவல்கள் கிடைத்தவுடன் அறியத் தருகின்றேன். தந்தையை இழந்து வாடும் சபேஷ் இற்கும் அவர் குடும்பத்தினருக்கும் எம் ஆழ்ந்த இரங்கல்கள்.

  10. இயக்குநர் பாலச்சந்தர் காலமானார் டிச 23,2014 19:37 சென்னை: நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், நடிகர், கதாயாசிரியர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி சீரியல் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.பாலச்சந்தர். "இயக்குநர் சிகரம்' மற்றும் "தமிழ் சினிமாவின் பீஷ்மர்' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் திரையுலக வரலாற்றில் தனி இடம் பிடித்த இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார் 1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில், சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மாள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை ந…

    • 40 replies
    • 3.8k views
  11. யாழ் கள உறவு வாதவூரனின் தந்தையார் அண்மையில் தாயகத்தில் காலமானார். தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் வாதவூரன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  12. வசம்புவின் ஐந்தாவது ஆண்டு நினைவஞ்சலிகள். 5ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வைசி)மண்ணில் : 12 ஓகஸ்ட் 1958 — மண்ணுக்காக : 18 ஒக்ரோபர் 2010

  13. கள உறவு அரவிந்தனின் சகோதரியின் மகள் (7மாதக்குழந்தை) கனடாவில் சென்ற 4ம்திகதி மரணமடைந்துள்ளார். மருமகளின் இழப்பில் துயருற்றிருக்கும் அரவிந்தனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். கனநாள் அரவிந்தன் களத்தில் எழுதவில்லை. இன்று பேஸ்புக்கில் வந்திருந்த நேரம் உரையாடிய போது இத்துயரை பகிர்ந்து கொண்டார். அரவிந்தனின் சகோதரி பாமினி , கணவர் வரதண்ணா ஆகியோரின் துயரில் பங்கெடுப்பதோடு அவர்கள் ஆன்மபலம் பெற்று வரவும் வேண்டுகிறேன்.

  14. நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி' என்ற பாடல் உட்பட தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கனடாவில் சாவடைந்துள்ளார். யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். சிறுவயதிலேயே வாய்ப்பாட்டு, பண்ணிசை, வீணை, வயலின் எனும் கலைகளைத் தமது தந்தையாரான 'கலாபூஷணம்' 'சங்கீதரத்தினம்' வர்ணகுலசிங்கம் அவர்களைக் குருவாக் கொண்டு கற்கத் தொடங்கியவர். பின்னர் மிருதங்கம், …

  15. சக கள உறவு அஞ்சரனின் உறவின் அகால மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறோம். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மாணவிக்கு கண்ணீரஞ்சலி.

    • 38 replies
    • 3.9k views
  16. எமது களஉறவாகிய N.SENTHIL இன் தந்தையாரான திரு. நாகரத்தினம் (அகவை 61) அவர்கள் இன்று காலை இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று மாலை சொந்த ஊரான திண்டுக்கலில் நடைபெறுகின்றது என்பதை யாழ்கள உறவுகளிற்கு கவலையுடன் அறியத்தருகின்றோம். அன்னாரின் மறைவிற்கு ஆழ்ந்த கவலைகளையும் தெரிவித்துகொள்கின்றோம்.

    • 37 replies
    • 6.7k views
  17. எனது அத்தான் - என் அப்பாவின் அக்காவின் மகனும், எனது மூத்த அக்காவை திருமணம் செய்த எங்கள் சொந்த மச்சானும் ஆகிய திரு தம்பு சுப்பிரமணியம் நேற்று இலங்கையில் காலமானர். எனது 5 வயதிலேயே அப்பாவை இழந்த எனக்கும் எங்கள் குடும்பத்தையும் தனது சொந்த உறவாக கவனித்து வந்தவரின் இழப்பு எங்கள் குடும்பத்தை நிலைகுலையச் செய்துவிட்டது. இன்னமும் நானும் எங்கள் குடும்பமும் அவரின் இழப்பை தாங்கமுடியாமல் தவிக்கின்றோம். இந்தத் துயரச்செய்தியை எனது யாழ் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

    • 37 replies
    • 3.2k views
  18. எங்கள் சாந்தியக்காவின் தந்தை மரணம் அடைந்துள்ளார் ரமேஸ் வவுனியனின் மாமனாரும் சாந்தி ரமேஸ்ன் தந்தையும் ஆகிய ஆனந்தசடாட்சரம் அவர்கள் மரடப்பு காரனமாக மரணம் அடைந்துள்ளார்.. சந்தியக்காவுக்கு ரமேஸ் அண்ணாவுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

  19. கள உறுப்பினர் மதனுடைய அம்மப்பா யாழ்பாணத்தில் கடந்த 26 ம் திகதி காலமாகிவிடார். அன்னாரின் ஆத்மா சந்தியடைய பிரார்த்திப்பதுடன், அவரது குடும்பத்தினரிற்கு எமது வருத்ததை தெரிவித்துகொள்கிறோம்.

    • 36 replies
    • 7.1k views
  20. நிழலியின் தாய்மாமனார் காலமாகி விட்டார். நிழலியின் தாய்மாமனார் காலமானதையிட்டு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கின்றோம். உற்றார் உறவினர்களின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகின்றோம்.

  21. [size=4]மரண அறிவித்தல்[/size] திரு வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்திரன், கண்ணாடி நாதன்) [size=3]தோற்றம் 19-10-1968[/size] [size=3]மறைவு 13-07-2012[/size] மரண அறிவித்தல் யாழ்ப்பாணம் குப்பிளான் தெற்கை பிறப்பிடமாகவும் சுவிஸ் லுசெர்னை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சந்திரலிங்கம் (சந்தி…

    • 36 replies
    • 3.2k views
  22. கழுத்தில் தங்கச்சங்கிலி கிடையாது கையில் தங்க மோதிரமும் கிடையாது. எளிமையான மனிதர் மட்டுமல்ல அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் நிறையவே உண்டு என்பதையும் விட்டுச்சென்றிருக்கிறார். எந்த மன்னாதிமன்னனாயினும் மேலங்கி இல்லாமல்த்தான் கோவிலுள் நுழையலாம் என சட்டம் வைத்தவர் ஆழ்ந்த அனுதாபங்கள்.

  23. பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 62. அவரது இறு‌தி அ‌ஞ்ச‌லி இ‌ன்று (‌தி‌ங்க‌ட்‌கிழமை) நடைபெறு‌கிறது. அனுராதா ரமண‌னு‌க்கு கட‌ந்த 10 ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்பு இருதய‌த்‌தி‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌பிர‌ச்‌சினை‌க்காக இருதய அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்டா‌ர். அறுவை ‌சி‌கி‌ச்சையை‌த் தொடர்ந்து அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அ‌வ்வ‌ப்போது உட‌ல் பரிசோதனை செய்து கொ‌ள்வது வழக்கம். அதுபோல கடந்த 5-ந் தேதி வழக்கமான பரிசோதனைக்காக அனுராதா ரமண‌ன் மரு‌த்துவமனை‌க்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு சிறுநீரகம் செயல் இழந்‌திரு‌‌ப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு ரத்த சுத்திகரிப்பு (பிளட் டயலிசிஸ்) செய்யப்பட்டது. இருப்பினும் அவரது உ…

  24. கி பி அரவிந்தன் அவர்கள் இன்று காலை காலமாகி விட்ட துயர செய்தி கிடைத்தது 70 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிவகுமரோடு தீவிரமாக இயங்கிய சிலரில் இவரும் ஒருவர் .பின்னர் ஈழப்புரட்சிகர அமைப்பின் மைய உறுப்பினராக இருந்து நீண்டகாலம் செயற்பட்டவர். 1977 இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தவர். பாலம் இதழின் வெளியீட்டிற்காக தமிழகத்தில் இருந்து பங்களித்தவர். புலம்பெயர்ந்து பிரான்ஸில் இருந்த சுந்தர் இறுதிவரை அங்கே குடியுரிமை பெறாமல், அதற்காக விண்ணப்பிக்காமல் வாழ்ந்தவர். அப்பால் தமிழ் என்ற இணையத்தளத்தை இயக்கியவர். அதற்கு முன் மௌனம் என்ற இலக்கிய இதழை நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டார். பல கவிதை நூல்களை வெளியிட்ட கி.பி.அரவிந்தனின் அண்மைய நூல் பிர…

  25. அமரர் குமாரசாமி கிருபாகரமூர்த்தி ஓய்வுநிலை ஆசிரியர் பிறப்பு : 13.04.1976 இறப்பு : 09.05.2024 அண்ணாவின் பிரிவால் துயருற்று இருக்கும் @வாதவூரான் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி. எம்மைப்போல MUSCULAR DYSTROPHY யால் பாதிக்கப்பட்டவர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.