அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9207 topics in this forum
-
சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா? July 6, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — முதுபெரும் தமிழ் அரசியல் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து கடந்த திங்கட்கிழமையுடன் (ஜூன் 30) சரியாக ஒரு வருடம் கடந்துசென்றது. முதலாவது நினைவு தினத்தில் அவரை இலங்கை தமிழச் சமூகம் நினைவுகூருவதற்கு தவறிவிட்டது. வடக்கு,கிழக்கு மாகாணங்களில் எந்தவொரு இடத்திலும் நினைவு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாகவோ அல்லது பத்திரிகைகளிலாவது நினைவஞ்சலி குறிப்பு ஒன்று வெளியானதாகவோ நாம் அறியவில்லை. சம்பந்தன் பல வருடங்களாக தலைமை தாங்கிய இலங்கை தமிழரசு கட்சியும்கூட அவரை நினைவு கூருவது குறித்து சிந்திக்கவில்லை. சம்பந்தன் மீதான சகல விமர்சனங்களுக்கும் அப்பால், சிங்களத் தலைவர்களினதும் சர்வதேச சமூகத்தினதும் மதி…
-
-
- 31 replies
- 1.4k views
- 2 followers
-
-
மன உளைச்சல். சில வருடங்களாகவே இது இருக்கிறது. வெளியே சொல்லவும் முடியாமல், உள்ளே வைத்திருக்கவும் முடியாமல், வேதனையும், இயலாமையும், வெறுப்பும், கையாலாகத்தனமும், கோபமும்....இப்படியே நேரத்திற்கொன்றாக மாறும் உணர்வுகளுடன் கழிகிறது பொழுது. விடை தெரியாத கேள்விகளில் ஆரம்பித்து, இப்படியிருக்கலாம் என்று சமாதானம் செய்து, இனி என்ன செய்யலாம் என்று யோசித்து, எதுவும் முடியாதுடா உன்னால் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, அப்போதைக்கு மட்டும், என்னால என்னதான் செய்ய ஏலும் என்று கையாலாகத்தனத்துடன் கேட்டுவிட்டு நகர்ந்துவிடுவதோடு அப்போதைக்கு அந்தப் பிரச்சினை முடிந்துவிடும். ஆனால், சில நாட்களில் மீண்டும் அதே பிஒரச்சினை, அப்படியிருக்கேலாது, ஏதாவது செய்யவேணும். பார்த்துக்கொண்டிருந்தால் எ…
-
- 30 replies
- 3.4k views
-
-
கால அவகாசம் என்னும் துரோகத்திற்கு தயாராகிறதா கூட்டமைப்பு.? பொதுவாழ்வில் இருப்பவர்கள், எப்போதும் விமர்சனங்களை செவிமடுக்க வேண்டும். கீழிலிருந்து வரும் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் உள்ளீர்க்க வேண்டும். அவைகளிலிருந்து தமது கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி கொள்ளுதல் வேண்டும். மாபெரும் தலைவர்களும் பெரும் மாற்றங்களை உருவாக்கிய மனித ஆளுமைகளும் மக்களின் மனங்களிலிருந்தே சாதனைக்கும் மாற்றங்களுக்குமான தீரக்கதரிசனங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதுவே வாழ்வுக்கான கற்றலும் அடிப்படையுமாகும். இன்று நம் சூழலில் இச்சிந்தனை எப்படி இருக்கிறது? இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் …
-
- 30 replies
- 2.8k views
- 1 follower
-
-
கனடாவில் புலிகள் மீதான தடைக்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் கடும் எதிர்ப்பு என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கனடியதமிழர்கள் ஜனநாயக ரீதியாக என்ன எதிர்ப்பினை காட்டினார்கள்.? சும்மா வாய்க்குள் மெண்டு விட்டு செத்த பிணமாய் படுத்துக்கிடக்கிறார்கள். ஜனாநாயக ரீதியான எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு கனடாவில் தடை இல்லைத்தானே. அப்போ உந்த தமிழர், தமிழர் அமைப்புக்கள் எல்லாம் எங்கே? :twisted: :evil:
-
- 30 replies
- 6.3k views
-
-
பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன் அங்கும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று குண்டுவீச்சு விமானங்களுக்கு மட்டும் அவ்வப்போது தெரிந்திருக்கும். புன்னனாலைக் கட்டுவன் கடந்து பலாலி இராணுவமுகாமின் வேலியை எட்ட நின்று பார்த்துத் திரும்பியர்களிலிருந்து துப்பாக்கியால் சுட்டு சில இராணுவச் சிப்பாய்களைக் கொன்றவர்களுக்கும் கூட மத்தாளோடையைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முன்னொரு காலத்தில் மரணம் தெருக்களில் துப்பாக்கியோடு அலைந்த போது அதனை வழி நடத்தியவர்கள், இன்று எல்லாம் முடிந்து போனது என ‘இந்திய இறக்குமதிச் சரக்கான தலித்தியம் என்ற’ சாதி வாதத்தை வழி நடத்துவதை இன்னும் எந்த மத்தாளொடை வாசியும் கேள்விப்பட்டிருக்க மாட்டான். புலிகளின் அழிவிற்குப் பின்னர் இ…
-
- 30 replies
- 4.6k views
-
-
இலங்கைத் தீவில் ஒரு சீன நகரம் – அகிலன் 6 Views இலங்கையின், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்ததும், எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டதுமான கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம், பாராளுமன்றத்தில் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்துக்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் வழங்கப்பட்ட நிலையிலேயே 91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா அச்சத்தில் முடங்கிக் கிடக்க, மக்களின் கவனம் அந்த அச்சத்தில் இருக்க, பாராளுமன்றத்தில் சட்டமூலத்தை ராஜபக்ச அரசாங்கம் இலகுவாக முன்னகர்த்தி விட்டது. கொரோனா அச்சம் இதற்காகவே இந்தக் காலப் ப…
-
- 30 replies
- 2.3k views
-
-
தமிழரசில் சுமந்திரன்: காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதையல்ல……! January 2, 2025 — அழகு குணசீலன் — தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டமும், பொதுச்சபையும் திருகோணமலையில் கூடி கலைந்தது போல், வவுனியாவில் மத்திய செயற்குழு கூட்டம் கூடி ஊடகங்களுக்கு “பம்பலாக” கலைந்திருக்கிறது. நீதிமன்றத்தில் நான்கு வழக்குகளுக்காக ஏறி, இறங்கவேண்டிய நிலையில், நடந்து முடிந்த வவுனியா கூட்டம் கட்சியின் உள் மோதல்களுக்கு “தீர்வு” காணப்பட்டதுபோன்ற ஒரு தோற்றத்தையும், இது தீர்வல்ல “பிரிவு” என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஆகக்குறைந்தது முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்களுக்கு இது முள்ளை முள்ளால் எடுத்த நிம்மதி. தமிழரசுக…
-
-
- 30 replies
- 1.6k views
- 1 follower
-
-
கனடா தினத்தில் நாட்டுக்கு... ஒரு நன்றி மடல் ........... தாயாக மண்ணில் இருந்து ..விரும்பியோ விரும்பாமலோ . .புலம் பெயர்ந்து வந்த எங்களை ,ஆதரித்த இம் மண்ணுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள் ,கொடியவனின் குண்டுமழை இல்லாமல் , உணவு உடை உறையுள் தந்த ஆண்டவனுக்கும் நன்றிகள் நிலாமதி i
-
- 30 replies
- 4.7k views
-
-
இந்த அரசியல் குப்பையை கிளறித்தான் ஆகவேண்டுமா என்பது போலிருக்கும், சில சமயம் யார் எக்கேடு கெட்டு போனாலென்ன என்ரை அலுவலை மட்டும் பாத்துக்கொண்டிருப்பம். (இதுதான் என் மனைவி சொல்லும் வேதம்) கடைசி சொல்ல வருவதை ஒருவித நாகரீகத்துடன் சொல்லாம் என்பதும் போலிருக்கும், எதுவாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை அந்த நேரம் சொல்லாமல் விட்டு ,அதுவும் சொல்லப்படவேண்டிய பாணியில் சொல்லாமல் விட்டு காலம் கடந்தபின் சொல்லாமல் வீட்டு விட்டோமே என்று அங்கலாய்ப்பதில் எதுவித பயனுமில்லை. யாழில் பலர் என்னை விட வயதில் குறைந்தவர்கள் என்பதும், அதைவிட அரசியல் அனுபவத்தில் மிக மிக குறைந்தவர்கள் என்றும் எனக்கு தெரியும். நடைமுறையிலும் எந்தளவு செய்தார்கள்,யார் யாரை சந்தித்தார்கள், எவற்றை எல்லா…
-
- 30 replies
- 3.8k views
-
-
ஒரு புலப்பெயர்ச்சி அலை? நிலாந்தன். கனடாவில் வசிக்கும் ஒரு நண்பர் சொன்னார்..கனடாவுக்கு விசிட் விசாவில் வருபவர்களுக்கு படிவங்களை நிரப்பி கொடுப்பதற்கு என்று கிட்டத்தட்ட 30 மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன என்று.அம்மையங்களில் ஒரு படிவத்தை நிரப்புவதற்கு ஆயிரம் கனேடியன் டாலர்கள் அறவிடப்படுகின்றன என்றும் அவர் சொன்னார்.கிட்டத்தட்ட இலங்கை ரூபாயில் இரண்டரை லட்சம். கனடாவில் இருக்கும் தமிழர்கள் தாயகத்தில் உள்ள தமது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களை அவ்வாறு அழைக்கலாம் என்று ஒரு கதை பலமாக உலாவுகிறது. அதனால் நெருங்கிய உறவினர்கள் மட்டுமல்ல, நண்பர்கள் தெரிந்தவர்கள் போன்றவர்களும் கனடாவில் இருப்பவர்களை அனுகி தமக்கு விசா பெற்றுத் தருமாறு கேட்கின்றார்கள். இது சம்பந்தமாக அண்…
-
- 30 replies
- 2.8k views
- 1 follower
-
-
அண்மையில் யாழ்ப்பாண மாணவர் பேரவை வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் வரும் ஜனாதிபதிதேர்தலை தமிழ்மக்கள் புறக்கணிக்கவேண்டும் எண்டு தெரிவித்திருந்தார்கள்,, இது பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள்,,,வரும் ஜனாதிபதித்தேர்தலில் தமிழீழ மக்கள் என்ன செய்யவேண்டும்?? :!: :?:
-
- 29 replies
- 6.1k views
-
-
கொஞ்சம் வாங்க பேசலாம் - 5 - புலிகளின் மீதான தடை விலகலும் + தமிழரின் செயற்பாடுகளும்.... நேற்றையிலிருந்து செய்திகளையும் கருத்துக்களையும் பார்த்திலிருந்து..... பலரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி தெரிகிறது.. ஆனால் இந்த வழக்கை தாக்கல் செய்தவரே இது தமிழர்களின் வெற்றி என்ற போதும் இதை ஒரு தனி மனிதரின் முயற்சி என்பது போலவும் அமைப்புக்களை குறை கூறுவதிலும் ஒரு சிலர் முனைந்திருப்பது வருத்தம் அளிக்கிறது.. இங்கு கருத்தெழுதுபவர்கள் புலத்திலுள்ள எந்த அமைப்பிலாவது இருக்கின்றீர்களா? ஒருங்கிணைப்புக்குழு மக்களவை நாடுகடந்த அரசு உலகத்தமிழர் அமைப்பு பேரவைகள் ஏன் புலம் பெயர்தேசத்து (தமிழரற்ற) அமைப்புக்கள்..... எதிலாவது அங்கத்தவராக உறுப்பினராக சந்தாதாரராக…
-
- 28 replies
- 2.2k views
-
-
மண்குதிரையில் சவாரி செய்யும் கஜே கோஸ்டி...... அண்மைக்காலமாக நம்மட உறவுகள் சிலர் நடந்ததை மறந்து மீண்டும் ஒரு மாயைக்குள் விழத்தொடங்கியுள்ளனர்.....அதுதான் உந்த ஏமாத்து அப்புகாத்துகளின் மண்குதிரை சவாரியில். தமிழர்களின் இழப்புக்களாலும் தியாகங்களாலும் கிடைக்கும் ஒரு சமாதான இடைவெளியில் தங்களது குதிரையை கொணந்து ஓடவிடுவதில் கஜே கோஸ்டிக்கு நிகர் யாரும் கிடையாது. இப்படியே கொண்டுவரும் மன்குதிரையை சோடிச்சு அதில் அப்பாவிதமிழர்களை உசுபேத்தி ஏத்திவிடுவதில் மகா சூரர்கள்...அதுக்கு சிலர் விளங்கிக்கொள்ளாமல் பிற்பாட்டு பாடுவதே மிகவும் கவலைக்குரிய விடயம். மண்குதிரை உடைந்து உசுபேறி ஆடிய மக்கள் இன்னலில் மாட்டும் போது இந்த கஜே கோஸ்டி நிண்ட இடம் தெரியாமல் ஓடிவிடும்... ஆமிக்காரனுக்கு 40000 சவப்பெ…
-
- 28 replies
- 1.8k views
-
-
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காகக் களமிறங்கியுள்ள தமிழ் தேசியக் 4ட்டமைப்பின் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். சர்வதேச விசாரணைகளை ஆதரிப்போம் என்கிறார் ஒருவர். தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவோம் என்கிறார் இன்னொருவர். விடுதலைப் புலிகளின் இலட்சியம் வீண்போக விட வேண்டாம் என்கிறார் இன்னொருவர். இந்த நிலையில் கட்சியின் கொள்கையை இவர்கள் பிரதிபலிக்கிறார்களா அல்லது வாக்குகளைப் பறிக்க தமதிஸ்டத்திற்கு அள்ளி வீசுகிறார்களா என்று புரியாத நிலையில் யார் என்ன சொன்னாலும் கட்சியின் அரசியல் நகர்வுகள் என்றாலென்ன அரசுடனான பேச்சுக்கள் என்றால் என்ன சர்வதேச அதிகாரிகளுடனான பேச்சுக்கள் என்றால் என்ன சகல முடிவுகளையும் எடுக்கப் போவது சம்பந…
-
- 28 replies
- 3.4k views
-
-
அண்மையில் (கடந்த 2ம் திகதி) அவசர சந்திப்புக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பை வரும்படி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைத்திருந்தமை குறித்த செய்தியை நீங்கள் படித்திருப்பீர்கள்...ஆனால் திகதிப்பிரச்சினைகாரணமாக தமிழ்தேசியக்கூட்டமைப்பு இந்த சந்திப்பில் கலந்துகொள்ளமுடியாதென்றும் வேறொரு திகதியில் சந்திப்பை வைக்குமாறு கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன..அவைகுறித்த இரண்டு செய்திகளையும் கீழே இணைத்துள்ளேன்... பேச்சுக்கு வருமாறு மகிந்த ராசபக்ச விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்ல வேண்டுமா அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமா? தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்வதில் உள்ள சாதக பாதகமான விடயங்கள் என்பவை சம்பந்தமான உங்கள் எண்ணங்கள்,கருத்து…
-
- 28 replies
- 2.4k views
-
-
"இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக பிரித்தானிய தமிழர்கள் போட்டியிடுகின்றனர்" 2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து பொதுத் தேர்தல் ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரித்தானியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களாக முன்பை விட அதிகமான பிரிட்டிஷ் தமிழர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். "British Tamils running to become UK Member of Parliament" With the 2024 UK General Election set to take place on July 4, more British Tamils than ever before have been named as candidates with a range of Britain’s political parties. உமா குமரன், தொழிற் கட்சி Uma Kumaran, Labour Party Candidate for Stratford…
-
-
- 27 replies
- 1.5k views
- 1 follower
-
-
90 களின் நடுப்பகுதியில், தினமுரசில் வெளிவந்துகொண்டிருந்த அல்பேர்ட் துரையப்பா முதல் என்று ஆரம்பிக்கும் அரசியல் தொடரில் எழுதிவந்த அற்புதன், ஒருமுறை ரஜிணி திரணகமவின் கொலை பற்றிக் குறிப்பிடும்பொழுது, அனைவரும் நினைப்பது போல இக்கொலையைப் புலிகள் செய்யவில்லை. ஈ. பி. ஆர். எல். அப் குழுவே செய்தது என்று எழுதியிருந்தார். இதனால், ரஜிணியைக் கொன்றது அக்குழுதான் என்று நாம் நம்பி இன்றுவரை தொடர்ந்தும் வேறு வேறு இடங்களிலும், என்னுடன் பேசுபவர்களிடமும் கூறி வருகிறேன். இன்று ஆங்கில இணையத்தளமான கோராவில் சில நண்பர்கள் இதுபற்றிக் கேட்டபோது, தினமுரசில் படித்ததைச் சொன்னேன். ஆனால், உறுதிப்படுத்தமுடியவில்லை. இதுபற்றித் தேடலாம் என்று தொடங்கியபோது இக்கொலை தொடர்பான சில கட்டுரைகளைப் படிக்கும் வாய்ப்புக் …
-
- 27 replies
- 3.1k views
-
-
தமிழரசுக்கட்சியை தொலைத்த வடக்கும், தேடியெடுத்த கிழக்கும்…! November 15, 2024 — அழகு குணசீலன் — தமிழ்த்தேசிய அரசியல் வடக்கில் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ், வன்னி மாவட்டங்களில் தமிழரசு(2), காங்கிரஸ் (1), ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பு(1), இணைந்து நான்கு ஆசனங்களை பெற்றுள்ளன. கிழக்கில். இதற்கு மாறாக மக்கள் பெரும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். தமிழரசு மட்டும் தனித்து ஐந்து ஆசனங்கள். இந்த முடிவு தமிழ்த்தேசிய அரசியலின் காப்பாளர்கள் யார்? என்ற கேள்வியை எழுப்புகிறது. வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளை பாருங்கள். யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் பழம்பெரும் தமிழரசுக்கட்சி வரலாற்றில் முதல் தடவையாக தென்னிலங்கை கட்சி ஒன்…
-
-
- 26 replies
- 1.2k views
-
-
ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா! என்.கே.அஷோக்பரன் Twitter: @nkashokbharan எதிர்வரும் பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன். டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர். இலங்கை 1948ல் சுதந்திரம் பெறும் போது அவருக்கு 15 வயது கழிய ஒரு நாள் குறைவு. இலங்கைச் சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பணிபுரிந்த அவர், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது 44 ஆவது வயதில், திருகோணமலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட…
-
- 26 replies
- 2.7k views
-
-
அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள்... மனித உரிமைகளும் ஈழத்தமிழர் வாழ்வுரிமையும்..! முள்ளிவாய்க்கால் நோக்கிய அமெரிக்க நகர்வுகள்: 1996 ஆம் ஆண்டு கிளிங்டன் நிர்வாகம் சந்திரிக்கா அம்மையாருடன் ஒட்டி உறவாடிய காலத்தில் ஈழக் களத்தில், சிங்கள பேரின தேசியவாதிகளின் பயங்கரவாத சிங்கள இராணுவம் வெற்றிக் களமாடிக் கொண்டிருந்த நேரத்தில் இதோ புலிகளின் கதை முடியப் போகிறது என்ற நேரத்தில் எடுத்த முடிவுகளில் முக்கியமான சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் விடுதலைப் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகளை இணைத்துக் கொண்டமை. இத்தனைக்கும் விடுதலைப்புலிகள் எந்த அமெரிக்க பிரஜையையும் குறிவைத்து தாக்குதல்களும் செய்யவில்லை அமெரிக்காவிற்கு அரசியல்ரீதியிலும் கொள்கை ரீதியிலும் எதிராக செயற்பட்ட…
-
- 25 replies
- 2.2k views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1982ம் ஆண்டில் பிரபாகரன் முதலும் கடைசியுமாக அப்போதைய மெட்ராஸுக்கு வந்தார் கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம். 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களில் ஒருபிரிவினர் இன்றும் அதனை ஏற்க மறுக்கின்றனர். இப்படியான சூழலில், பிரபாகரனின் கடைசி தருணங்கள் குறித்து இந்த கட்டுரை அலசுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் த…
-
-
- 25 replies
- 1.7k views
- 2 followers
-
-
இலங்கையின் பூர்வீக குடிமக்களான தமிழ்மக்களின் சுதந்திரம் உண்மையிலேயே பறிபோனது பிரிட்டிஷ் வல்லாதிக்கத்திடமிருந்து இலங்கை சுதந்திரமடைந்த பொழுதில்தான். இலங்கை மண்ணில் தார்மீக உரித்துடைய தமிழர்கள் வந்தேறு குடிகளான சிங்களவரினால் இரண்டாந்தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். சிங்களவரின் பெரும்பான்மை என்கின்ற பலம் தமிழர்களின் அரசியற் பலத்தினை தோற்கடிக்க பெரும் சாதகமாக அமைந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் என்ற ஒன்று உருவானது இலங்கை அரசின் சிங்கள மேலாதிக்கக் கொள்கையினால்தான். அகிம்சை வழியில் போராடி தளர்ந்துபோன இனத்துக்கு ஆயுதப் போராட்டம் என்ற ஒன்று மட்டுமே அந்த நேரத்தின் சரியான தீர்வாக அமைந்தது. அதனை தமிழர் தரப்பில் இறுதிவரை இலட்சியம் தவறாமல் கொண்டுநடத்தியவர்கள் தேசியத்த…
-
- 25 replies
- 2.7k views
-
-
சுமந்திரன் சென்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம்! வெளியான பகீர் வீடியோ. கட்சியில் வெற்றி பெற்றவர்களும் வாக்காளர்களும் விரும்பியவர்களை விட சுமந்திரனின் ஆதரவாளர்களை பதவியில் அமர்த்த முற்பட்டவேளை கூட்டம் நுச்சல் குழப்பமாக இருந்தது.
-
-
- 25 replies
- 1.4k views
- 3 followers
-
-
சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு வார்த்தை சமஷ்டி எனலாம். அதுபோலவே தமிழர்கள் மத்தியில் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு வார்த்தை தேசியம் எனலாம். ஈழத் தமிழர்கள் மத்தியில் இரண்டு கட்சிகளின் பெயர்களில் தேசியம் என்ற வார்த்தை உண்டு. இப்பொழுது மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதும் தேசியம் என்ற வார்த்தை அடிக்கடி பிரயோகிக்கப்படுகின்றது. இதில் கூட்டமைப்பில் உள்ள தீவிரமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் பற்றிக் கதைக்கிறார்கள். மிதமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் கதைக்கின்றார்கள்.குறிப்பாக இணையத் தளப் பிரசாரங்களில் ''தேசியம் வெல்ல வாக்களிப்போம்' என்றெல்லாம் சுலோகங்கள் வருகின்றன. சில மாதங்களிற்கு முன்பு எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினை…
-
- 25 replies
- 1.9k views
-
-
அலுவலகத்தில் ஒரு நண்பர். வெள்ளையர். அமெரிக்கர். ஒரு விடயம், துல்லியமாக சொன்னார்: அசந்து போனேன். மறுக்கவோ, நிராகரிக்கவோ முடியவில்லை. உலகின் அண்மைய ஆயுத விடுதலைப் போராட்டங்களில் வெற்றி பெற்ற ஒரே ஒரு போராட்டம் எத்தியோபியாவிற்கு எதிரான எரித்திரிய மக்கள் முன்னெடுத்த போராட்டமே ஆகும். அந்த போராட்ட அமைப்பின் தலைமை ஒரு பட்டம் பெற்ற பொறியியலாளர். மிகச் சரியான முடிவுகளை மிகச் சரியான தருணங்களில் எடுத்திருந்தார். உங்கள் போராட்ட தலைமைக்கும் அந்த போராட்ட தலைமைக்கும் இருந்த மிகப் பெரிய வேறுபாடு இது ஒன்று தான் என்றார். ***** எமது இனமானது கல்வியினால் முன்னேறிய இனம். வட அமெரிகாவில், அமெரிக்க சுதந்திர பிரகடனத்துடன், முதலாவது பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வீழ, இரண்டாவது பிரிட்டிஷ் சா…
-
- 25 replies
- 2.1k views
-