Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னையில் இலங்கை கால்பந்து அணி திருப்பி அனுப்பப்பட்டது - முதல்வர் அதிரடி!

Featured Replies

[size=2]

[size=2]இன்று முதல்வர் ஜெயலலிதா இலங்கை கால்பந்து அணியை திருப்பி அனுப்பி அதிரடியான துணிச்சலான செயலை செய்துள்ளார் . அதன் விவரம் வருமாறு [/size][/size]

[size=2]

[size=2]முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’இலங்கை முகாம்களில் வாடிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பிச் சென்று சிங்களர்களுக்கு சமமான உரிமைகளை பெறும் வரை பிற நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படவேண்டும் என்று

,

தமிழக சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது மத்திய அரசு எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், அவ்வப்போது இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.[/size][/size][size=2]

[size=2]தமிழர்களுக்கு எதிரான மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடும் கண்டனத்தை நான் வெளியிட்டவுடன், இலங்கை ராணுவ வீரர்களை இந்தியாவில் உள்ள வேறு மாநிலத்திற்கு அனுப்பி தொழில்நுட்பப் பயிற்சியை மத்திய அரசு தொடர்ந்து அளித்து வருகிறது.[/size][/size][size=2]

[size=2]அண்மையில், இரண்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அறிந்தவுடன், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஒட்டுமொத்த தமிழகமும் இதே கோரிக்கையை விடுத்தது.[/size][/size][size=2]

[size=2]ஆனால், மத்திய அரசு அதற்கு கிஞ்சித்தும் மதிப்பளிக்கவில்லை. மாறாக, இதுபோன்ற பயிற்சிகள் அளிப்பது நிறுத்தப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தெரிவித்து, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. [/size][/size][size=2]

[size=2]இந்தச் சூழ்நிலையில், இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் கால்பந்து விளையாட்டில் தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் வர மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது.[/size][/size][size=2]

[size=2]மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். [/size][/size][size=2]

[size=2]இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் கால்பந்து விளையாட்டில் பயிற்சியை பெறும் வண்ணம், சென்னையில் உள்ள பாரத ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் அலுவலர் ஒருவரை ராயல் காலேஜ் ஆப் கொலம்போ நிர்வாகம் தொடர்பு கொண்டு,

இங்குள்ள கால்பந்து அணிகளுடன் நட்பு ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும், இதன்பேரில், பாரத ரிசர்வ் வங்கியின் அலுவலர் அதற்கான ஏற்பாட்டினை செய்ததாகவும், 30.8.2012 அன்று தமிழகம் வந்த இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்கள் 31.8.2012 அன்று சென்னை சுங்க இலாகா அணியுடன் நேரு விளையாட்டரங்கில் விளையாடியுள்ளதாகவும் எனக்கு தகவல் வரப்பெற்றது. [/size][/size][size=2]

[size=2]இதனை அறிந்த நான் இதுகுறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டேன். அந்த விசாரணையில்,

பாரத ரிசர்வ் வங்கி அலுவலர் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியினை நடத்துவதற்கு வாய்மொழியாக நேரு விளையாட்டரங்கத்தின் பொறுப்பு அதிகாரியை அணுகியதாகவும், அதன் பேரில், நேரு விளையாட்டரங்கத்தின் பொறுப்பு அதிகாரி விளையாட்டுப் போட்டிகளுக்கு நேரு விளையாட்டரங்கத்தை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதி வழங்கியதாகவும் தெரிய வந்தது. [/size][/size][size=2]

[size=2]நேரு விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்குதான் இந்த அதிகாரம் உள்ளது. [/size][/size][size=2]

[size=2]தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை விளையாட்டு வீரர்களை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட அனுமதி அளித்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரி கொச்சைப்படுத்தியுள்ளார். [/size][/size][size=2]

[size=2]எனவே, இந்த அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்து துறைவாரியான நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்று நான் உத்தரவிட்டுள்ளேன். [/size][/size][size=2]

[size=2]இலங்கை கால்பந்து வீரர்களை இலங்கைக்கு உடனடியாக திருப்பி அனுப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நான் உத்தரவிட்டுள்ளேன். [/size][/size][size=2]

[size=2]இதேபோன்று வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியுடன் கால்பந்து போட்டி விளையாட சென்னை வந்துள்ள இலங்கை, ரத்தினபுராவைச் சேர்ந்த ஹில்பர்ன் இன்டர்நேஷனல் பள்ளியின் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளர் ஆகியோரையும் திருப்பி அனுப்பிட நான் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று கூறப்பட்டுள்ளது. [/size][/size]

[size=3]

[size=1]தமிழக முதல்வர் அவர்களுக்கு அலை செய்திகள் குழுமத்தின் சார்பாக நமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் . [/size][/size]

http://www.newsalai.com/2012/09/blog-post_6108.html#.UEN0OZc54pk.facebook

  • Replies 54
  • Views 3.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்குப் போனால்... பிரச்சினை வரும் என்று தெரிந்தும்... திரும்பத்,திரும்ப அங்கே ஏன் போகின்றார்கள்?

சிநேகபூர்வ விளையாட்டுக்குப் போவதென்றால்... பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், மாலைதீவு என்று போகவேண்டியது தானே...

[size=4]நன்றிகள் தமிழக உறவுகளுக்கு. [/size]

[size=1]

[size=4]சிங்களம் ஒரு நியாயமான தீர்வை பெற்றுத்தர தீர்க்கமான அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும். [/size][/size]

துணிந்து செயற்படும் முதல்வர் செயலலிதா அவர்களுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிற்கு நன்றிகள் ..... [/size]

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

அம்மையாருக்கு நன்றிகள்

நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹா!ஹா!ஹா! இந்தியாவின் பிரதமர் ஜெயலிதாவா?மன்மோகன்சிங்கா?மாநில அரசு ஒரு வரையறைக்க உட்பட்டுத்தான் எதையும் செய்ய முடியும் என்ற கருணாநிதி எங்கேஃ தன்னிசையாக முடிவெடுக்கும் ஜெயலலிதா எங்கெ?

சபாஸ் ஜெயலலிதா!!!!!!!!தமிழக முதல்வருக்கு நன்றி!!!!

[size=4]நன்றிகள் தமிழக உறவுகளுக்கு. [/size]

[size=1][size=4]சிங்களம் ஒரு நியாயமான தீர்வை பெற்றுத்தர தீர்க்கமான அழுத்தங்களை பிரயோகிக்கவேண்டும். [/size][/size]

[size=4] டேசொவுடனான போட்டிக்கானதாக இது அமைந்து விடக்கூடாது. [/size]

[size=4]தமிழகத்தில் உள்ள சிறப்பு சித்திரவதை முகாம்களை மூடி ஈழத்தமிழர்களுக்கு ஒரு உள்ளூர் சுதந்திரத்தை முதலில் முதலமைச்சர் தரலாம். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டையும் அரசியலையும் ஏன் ஒன்றாக பார்கிறார்கள் என்று?

அந்த வேதாளம் வந்து கருத்து எழுதும் என்று பார்த்தேன் இன்னும் காணவில்லை.

வேறு வேறாக பார்ப்பவர்கள் ஏன் தமிழ் நாட்டுக்குள்ளேயே கோல் அடிக்க நிற்கிறார்கள்? என்று கேள்வியை நாங்கள் கேட்கலாம்.

பதில் எழுதி பழக்கம் இருந்தால்தானே ?

  • கருத்துக்கள உறவுகள்

http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-prn1/523076_3705046621531_1499942129_n.jpg

சிங்களவனுக்கு துணிவிருந்தால் இந்திய கிரிக்கட் அணியைத் திருப்பி அனுப்பட்டும்.

நன்றி-முகநூல்

தமிழ்நாட்டு சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வழியில்லை .உதைபந்துவீரர்களை திருப்பி அனுப்பிஇருக்கின்றார் .

இதுவும் ஒருவித அரசியல் தான் .இதற்கும் ஒரு விழா எடுத்தாலும் எடுப்பார்கள் .

ஊரில தான் படிக்கவில்லை புலம் பெயர்ந்தாவது புத்தகத்தை தொட்டு பார்த்திருக்கலாம் தானே ?

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நல்ல செய்தி[/size]

[size=4]ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது.[/size]

[size=4]முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிற்கு நன்றிகள் ....[/size]

முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிற்கு நன்றிகள் .

  • தொடங்கியவர்

தமிழ்நாட்டு சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வழியில்லை .உதைபந்துவீரர்களை திருப்பி அனுப்பிஇருக்கின்றார் .

இதுவும் ஒருவித அரசியல் தான் .இதற்கும் ஒரு விழா எடுத்தாலும் எடுப்பார்கள் .

ஊரில தான் படிக்கவில்லை புலம் பெயர்ந்தாவது புத்தகத்தை தொட்டு பார்த்திருக்கலாம் தானே ?

புலவர்

[size=2]

Posted Today, 02:43 AM[/size][size=4]

ஹா!ஹா!ஹா! இந்தியாவின் பிரதமர் ஜெயலிதாவா?மன்மோகன்சிங்கா?மாநில அரசு ஒரு வரையறைக்க உட்பட்டுத்தான் எதையும் செய்ய முடியும் என்ற கருணாநிதி எங்கேஃ தன்னிசையாக முடிவெடுக்கும் ஜெயலலிதா எங்கெ?[/size]

ஜெயலலிதா சிங்கள கால்ப்பந்தாட்ட வீரர்களை தமிழ் நாட்டில் இருந்து வெளியேறச் சொன்னதை பாராட்டி சிலர் தமிழீழம் கிடைத்தது போல் முகப்புத்தகத்தில் போட்டுக்கொண்டாடுகிறார்கள்,அவர்கள் ஸ்ரீலங்காவின் வீரர்கள் அல்ல,ஒரு பாடசாலையின் விளையாட்டு வீரர்கள் அவர்களை திருப்பி அனுப்புவதால் தமிழனுக்கு ஒரு விடிவும் கிடைக்காது மாறாக அது இனங்களுக்கு இடையான வெறுப்புணர்வை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும்.....உண்மையில் ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு எத்தனையோ செய்யலாம்,ஈழத்தில் உள்ள தடுப்பு முகாம்களை விட இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் முகாம்கள் கேவலமானவை[நான் இரண்டையும் பார்த்திருக்கேன்],அங்கு அடிப்படை வசதி உட்பட எந்த இழவும் அங்கு இல்லை....அட அதெல்லாம் வேணாம் செந்தூரன்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்க முற்படுகின்றனர் என்பதையாவது அறிந்து கொள்ள முற்படலாம்....#கப்பிதனமா இருக்கு.

அருளினியன் முகப்புத்தகத்தில் இருந்து

அப்ப என்ன செய்தால் விடிவு கிடைக்கும் ................

ஜெயலலிதா சிங்கள கால்ப்பந்தாட்ட வீரர்களை தமிழ் நாட்டில் இருந்து வெளியேறச் சொன்னதை பாராட்டி சிலர் தமிழீழம் கிடைத்தது போல் முகப்புத்தகத்தில் போட்டுக்கொண்டாடுகிறார்கள்,அவர்கள் ஸ்ரீலங்காவின் வீரர்கள் அல்ல,ஒரு பாடசாலையின் விளையாட்டு வீரர்கள் அவர்களை திருப்பி அனுப்புவதால் தமிழனுக்கு ஒரு விடிவும் கிடைக்காது மாறாக அது இனங்களுக்கு இடையான வெறுப்புணர்வை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும்.....உண்மையில் ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு எத்தனையோ செய்யலாம்,ஈழத்தில் உள்ள தடுப்பு முகாம்களை விட இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் முகாம்கள் கேவலமானவை[நான் இரண்டையும் பார்த்திருக்கேன்],அங்கு அடிப்படை வசதி உட்பட எந்த இழவும் அங்கு இல்லை....அட அதெல்லாம் வேணாம் செந்தூரன்கள் ஏன் உண்ணாவிரதம் இருக்க முற்படுகின்றனர் என்பதையாவது அறிந்து கொள்ள முற்படலாம்....#கப்பிதனமா இருக்கு.

அருளினியன் முகப்புத்தகத்தில் இருந்து

விளையாட்டையும் அரசியலையும் ஏன் ஒன்றாக பார்கிறார்கள் என்று?

அந்த வேதாளம் வந்து கருத்து எழுதும் என்று பார்த்தேன் இன்னும் காணவில்லை.

வேறு வேறாக பார்ப்பவர்கள் ஏன் தமிழ் நாட்டுக்குள்ளேயே கோல் அடிக்க நிற்கிறார்கள்? என்று கேள்வியை நாங்கள் கேட்கலாம்.

பதில் எழுதி பழக்கம் இருந்தால்தானே ?

உண்மையில் ஜெயலலிதா ஈழத்தமிழர்களுக்கு எத்தனையோ செய்யலாம்,ஈழத்தில் உள்ள தடுப்பு முகாம்களை விட இந்தியாவில் உள்ள ஈழ அகதிகள் முகாம்கள் கேவலமானவை,அங்கு அடிப்படை வசதி உட்பட எந்த இழவும் அங்கு இல்லை....

உங்கள் கருத்திலிருந்து இந்த விடயத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். நிச்சயம் கைதிகளை விடுவிக்கவும் அகதிகளை நல்வாழ்க்கை வாழ வைக்கவும் வேண்டும்.

Edited by துளசி

[size=5]மு. க. ஸ்டாலின் ஐ.நா. பயணம். மூனை சந்தித்து டெசோ தீர்மானத்தை கையளிப்பார் [/size]

[size=5]In an attempt to pressurise the United Nations into acting against Sri Lanka, DMK’s heir-apparent and former deputy chief minister M.K. Stalin is all set to leave for New York on September 20 to meet UN secretary-general Ban Ki-moon and personally handover the resolutions adopted at the Tamil Eelam Supporters’ Organisation (TESO) conference that was held recently in Chennai. On his way back, he is also scheduled to stop at Geneva to hand over the same resolutions to the United Nations high commissioner for Refugees (UNHCR). [/size]

http://www.deccanchronicle.com/channels/nation/north/stalin-leave-new-york-meet-ban-228

ஸ்ரீ லங்கா அரசு, இந்திய மற்றும் சீனாவுடன் சமகாலத்தில் செய்யும் அரசியலே எமக்கு இன்று தேவை.

தமிழகத்தின் இரு பெரும் கட்சியும் எமக்காக குரல் தந்தால் மட்டுமே எமது இலக்கை நாம் விரைவாக அடைய முடியும்.

அதிகமாக ஈழத் தமிழனுக்காக குரல் கொடுக்கும் கட்சிக்கே தமிழகத்தில் அதிக வாக்கு என்ற நிலை வரவேண்டும்.

தவறுகள் என்று மட்டுமே பார்த்தால் எல்லா இடத்திலும் வெவ்வேறு கட்டங்களிலே தவறுகள் விடப்பட்டுள்ளன.

நல்லவற்றை வரவேற்போம்.

பின் குறிப்பு.

தமிழகத்தில் ( ஈழத்துக்கு வெளியே) முதல் மாவீரர் மண்டபம் முதல்வர் அம்மாவின் பூரண ஆசியுடன் கட்டப்பட்டுக்கொண்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப என்ன செய்தால் விடிவு கிடைக்கும் ................

என்ன சின்னபிள்ளையாக இருக்கிறீங்கள் இது கூட தெரியாதா?

வாழ்நாள் பூர புலிவாந்தி எடுத்து கொன்டிருந்தால் ஈழம் கிடைக்கும்.

இப்பவே கொஞ்சம் கிடைச்ச மாதிரி ஒரு பீலிங்!

[size=5]மு. க. ஸ்டாலின் ஐ.நா. பயணம். மூனை சந்தித்து டெசோ தீர்மானத்தை கையளிப்பார் [/size]

[size=4]எவ்வாறு சிங்களம் சீன + இந்திய உதவிகளை பெற்று எம்மை அழித்ததோ அதுபோன்று இரண்டு பெரிய தமிழக கட்சிகளையும் போட்டிபோட வைக்கவேண்டும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வழியில்லை .உதைபந்துவீரர்களை திருப்பி அனுப்பிஇருக்கின்றார் .

இதுவும் ஒருவித அரசியல் தான் .இதற்கும் ஒரு விழா எடுத்தாலும் எடுப்பார்கள் .

ஊரில தான் படிக்கவில்லை புலம் பெயர்ந்தாவது புத்தகத்தை தொட்டு பார்த்திருக்கலாம் தானே ?

நீங்கள் புத்தகத்தை தொடதேவயில்லை...... தொட்டவர்களுடன் தொடர்பு வைத்தாலே போதும். அதுக்காவது முயற்சி செய்யலாம்.

மனித உரிமை மீறல் என்பது இந்தியாவின் ஓவரு கோவிலில் இருந்து குறுக்கு சந்திவரை நடக்கிறது.

ஒரு நேர உணவுக்காக கையில் தட்டேந்தி தமிழ் நாட்டில் திரிபவர் இலட்சாதி இலட்சம்.

இப்படி ஒரு நாட்டில் ஒரு முகாம் இருந்தால்?

அது எப்படி இருக்கும் என்பதை உங்களை போன்றவர்கள் நேரில் போய்பார்த்தால் தான் தெரிந்துகொள்ள முடியும். எங்களுக்கு அந்த வில்லங்கம் இல்லை.

இந்தியாவில் இருக்கும் ஓவரு அரசியல்வாதியும் செய்ய எவளவோ இருக்கு.

தங்களை வளர்ப்பதை தாண்டி அவர்கள்ளல் எதுவும் செய்யமுடியாது.

அப்படி யாரவது செய்ய வந்தாலும் உங்களை போன்ற பித்தர்கள் செய்ய விட மாட்டீர்கள் என்பதற்கு. சீமான் நெடுமாறன் போன்றவர்களை பற்றி நீங்கள் எடுக்கும் வாந்திகளே ஆதாரம்.

ஏதும் செய்யாமல் இருக்கும் பலருக்குள்.............

சிங்கள அரசியலை விளையாட்டு என்று முலாம் பூசி தமிழ் நாட்டுக்கு இறக்குமதி செய்வதை அடியோடு துண்டிக்கும் ஜெயலலிதாவின் செயற்பாடு போற்றுதலுக்கு உரியது.

உங்களுடைய அடுத்த பதில்..........

இதற்கெல்லாம் பதில் எழுத வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை என்பதாகும். நேர மிச்சமாக இருக்கும் அதை எழுதவேண்டாம்.

இல்லை அகூதா! நாங்கள் அப்படி எல்லாம் செய்ய மாட்டோம். கலைஞரை நார் நாராக கிழித்து, அடித்து துரத்தி விட்டுத்தான் ஓய்வோம்.

[size=4]எவ்வாறு சிங்களம் சீன + இந்திய உதவிகளை பெற்று எம்மை அழித்ததோ அதுபோன்று இரண்டு பெரிய தமிழக கட்சிகளையும் போட்டிபோட வைக்கவேண்டும். [/size]

ஆம். அப்பொழுது தான் மற்றைய பகுதியை விட தாம் அதிகமாக செய்ய வேண்டும் (சுயநலத்திற்காக தன்னும்) என்று நினைத்து இருபகுதியும் எமது விடயத்தை மறக்காமல் இருப்பார்கள். :D நானா நீயா என்று போட்டி போட்டு எமக்கு கொஞ்சமென்றாலும் நன்மை செய்வார்கள். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.