Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 06/03/23 in all areas
-
கோரி..... போர் தொடுக்கவோ? சச்சியரின் அறிக்கைகளில் இருந்து விளங்கவில்லை... இந்திய இந்து மத அமைப்புகளின் கொள்கை என்னவென்று? கோவில்கள் இடித்து விகாரைகள் எழும்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள் வேறு என்ன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்? வேண்டுமென்றால் ஒரு கண்டன அறிக்கை விடுவார்கள் அவ்வளவே.3 points
-
நானும் ஏதோ, ஆயிரம் ஆண்டுகளா சாப்பிடும் மண் சட்டி சமையல் பிழையோ என்று பார்த்தால், வடக்கத்தி ஹிந்திக்காரன் கம்பெனி, தமிழனின் கறி சட்டி செய்ய வெளிக்கிட்டு, கையை சுட்டு இருக்கிறார்கள். 🤦♂️2 points
-
கஜேந்திரகுமாரைப் பிடிக்காதவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள்.2 points
-
1969இல் துலாபாரம் என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது. யாருமே துணையில்லாமல் தனித்து நின்று போராடும் ஒரு பெண்ணின் கதை. ஒன்றுமே இனிச் செய்ய முடியாது என்ற நிலை வந்த போது உணவில் விசம் கலந்து தானும் உண்டு பிள்ளைகளுக்கும் அவள் கொடுப்பாள். பிள்ளைகள் இறந்து போக அவள் மட்டும் பிழைத்துக் கொள்வாள். அவள் மேல் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றில் விசாரணை நடக்கும். இதுவே அந்தப் படத்தின் கதை. சமீபத்தில் யேர்மனியில் நடந்த வழக்கு ஒன்று என்னை 1969க்கு திரும்பி அழைத்துப் போனது. துலாபாரம் படத்தில் இடம் பெற்ற “காற்றினிலே பெருங் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் ஒளி இருக்கும்…” என்ற ஜேசுதாசின் பாடல் இப்பொழுது எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உணவில் மரணம் விளைவிக்கும் வில்லைகளைக் கலந்து கொடுத்து தனது மகனைக் கொலை செய்ததற்காக 53 வயதான உர்சுலாவுக்கு யேர்மனி நாட்டில் ஹில்டெஸ்கைம் நகர நீதிமன்றம் மூன்றரை வருடங்கள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. உருசுலாவின் மகனான ஜோனாஸ் உடல் மற்றும் மன ரீதியான மரபணு குறைபாடுள்ள அரிதான ஒரு நோயுடனே பிறந்தவன். 17 வயதான ஜோனாஸை அவனது தாயான உருசுலா கொலை செய்தாள் என வழக்கு பதிவாகி இருந்தது. மே மாதத் தொடக்கத்தில் ஆரம்பித்த வழக்கில், “ எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இதற்கு மேலும் என்னால் முடியவில்லை.” 53 வயதான உர்சுலா, ஜோனாஸை கொலை செய்ததற்கான வழக்கு விசாரணையின் போது இப்படிச் சொன்னாள். 2021 மார்ச் மாதம் சொக்கிலேற் புடிங்கும் அப்பிள் பழக்களியும் சேர்ந்த ஒரு இனிப்புப் பதார்த்தத்தில் மரணம் விளைவிக்கக் கூடிய மருந்து வில்லைகளை கலந்து தனது மகனுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டாள். ஜோனாஸ் இறந்து போனான். மரணம் ஏனோ உர்சுலாவை நெருங்கி வராமல் ஒதுங்கிக் கொண்டது. “ஒவ்வொரு தினமும் எனக்கு கடுமையானதாக இருந்தது. மனதால், உடலால் ஊனமுற்ற ஒரு 17 வயது இளைஞனை இரவு பகல் என்று நாள் முழுவதும் வைத்துப் பராமரிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. அது தவிர ஜோனேஸ் வேறு ஒரு கற்பனை உலகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தான். நீருக்கு அடியில் ஒரு உலகம் அங்கே றோஸ் நிறத்தில் ஒரு குதிரை என்று கதைகள் சொல்வான். என்னிடம் போதுமான பணமும் இல்லை அவனை வைத்து பராமரிக்க எனது உடலில் தெம்பும் இல்லை. நான் இறந்து போனால் அவன் தனித்து தவித்துப் போவான். ஆகவே இருவரும் இறந்து போய் விடலாம் என்ற எண்ணத்துடனே உணவில் மரணம் விளைவிக்கும் வில்லைகளைக் கலந்து அவனுக்கும் கொடுத்து நானும் உண்டேன். அவன் போய்விட்டான். நான் இருக்கிறேன்” என்று நீதிமன்றத்தில் உர்சுலா தனது நிலையைச் சொன்னாள். “வாழ்க்கையானது எல்லோருக்கும் பொதுவானது. அது ஒருவருக்கு குறைபாடு இருக்கிறதா இல்லை அவர் சுகதேகியா எனப் பார்ப்பதில்லை. இங்கு ஒரு இளைஞன் மரணித்திருக்கிறான். அதுவும் அவன் விரும்பாமலே என்பதுதான் கவனத்தில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டும். ஜோனாஸ் முற்றிலும் பாதுகாப்பற்றவர். அவரது இயலாமை காரணமாக, 17 வயதான அவருக்கு எப்பொழுதும் சிறப்பு கவனிப்பு தேவைப்பட்டது. ஜோனாஸின் இயலாமைக்கான உதவி அவனின் தாய் உர்சுலாவிடம் இருந்தே கிடைத்துக் கொண்டிருந்தது. அதை தவறாகப் பயன் படுத்தி உர்சுலா ஜோனேஸை கொலை செய்திருக்கிறார்” நீதிபதியின் தீர்ப்பு ஆறு வருடங்களும் ஆறு மாதங்களும் உருசுலா சிறையில் இருக்க வேண்டும் என்றிருந்தது. உங்களுக்கு தற்கொலை எண்ணங்கள் உள்ளதா அல்லது உறவினர்/ அறிமுகமானவர்களிடம் அவற்றை கவனித்தீர்களா?யேர்மனியில் உங்களுக்கான ஆலோசனைகள், உதவிகள் இலவசமாக 24 மணி நேரமும் கீழே உள்ள தொலைபேசி இலக்கங்களில் 0800 / 111 0 111 அல்லது 0800 / 111 0 222 கிடைக்கின்றன. telefonseelsorge.de இணையத்தினூடும் தொடர்பு கொள்ளலாம் காக்கியான் 02.06.20232 points
-
அண்மைக் காலமாக போதைப்பொருள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வருகின்றது. போதைப் பொருட்களுடன் யாராவது பிடிபட்டால் அல்லது அதன் பாவனையால் பாதிக்கப்பட்டால் மட்டுமே செய்தி ஊடகங்களில் வரும் என்பதைச் சில மாதங்களுக்கு முன்னர் யாழ் சென்றிருந்தபோது காணக் கூடியதாக இருந்தது. மற்றும்படி யாழ் ஊடகங்கள் பெரிதாக இது பற்றி எழுதுவதாகத் தெரியவில்லை. ஊடகங்களில் வரும் செய்தியை வாசித்துவிட்டு இது சிங்கள அரசாங்கத்தினதும் இராணுவத்தினரினதும் திட்டமிட்ட தமிழ் சமுதாய அழிப்பு என்று கூறிவிட்டுக் கடந்து போனோம். இக் கருத்தில் முற்றுமுழுதான உண்மை இல்லை. போதைப் பாவனை தமிழர் பகுதியெங்கும் பரவிக் கொண்டே செல்கிறது. பாடசாலை மாணவர்களுக்குப் போதைப்பொருள் பாவனையைப் பழக்குவது, விற்பனை செய்வது யார் போன்ற தகவல்கள் பலருக்கும் தெரியும். பல ஊர்களில் இதற்குப் பொறுப்பாளர்கள் அவர்களுக்குக் கீழே வேலை செய்பவர்கள் என கட்டமைப்புகளும் உண்டு. ஒவ்வொரு ஊரிலும் ஏதாவது விதத்தில் ஒரு இளைஞர் குழு மறைமுகமாக இயங்கும். அல்லது மிகப் பெரிய குழு ஒன்றின் கிளை இருக்கும். இளைஞர்களுக்கு வேண்டியது ஒரு ‘கெத்து’. ஏதாவது ஒரு விததில் தன் திறமையை வெளிப்படுத்த முடியாத சில இளைஞர்களுக்கு அது இக் குழுக்களில் இணைவதால் கிடைக்கிறது. இதற்குப் பொறுப்பானவர்கள் மீது நேரடியாகக் கைநீட்டுவது ஆதாரமில்லாத விதத்தில் அவதூறு செய்வதாக ஆகலாம் என்பதால் இதற்குமேல் வெளிப்படையாக இது பற்றி விவாதிக்க முடியாது. இதை எழுதுவதன் நோக்கம் குற்றவாளிகளைத் தேடித் தண்டிக்க வேண்டும் என்பதல்ல. அது முடியாத காரியம். ஆகவே இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்று விவாதிக்கவே. சிவில் அமைப்புகள் அல்லது பொதுநல நிறுவனங்கள் மூலமாக இப் பிரச்சனையை அணுகலாம். அவர்கள் மூலமாக விளிப்புணர்வை ஏற்படுத்த முடியும். ஆனால் இவற்றைச் செய்ய முன்வரக்கூடிய பலமான அமைப்புகள் உள்ளனவா தெரியவில்லை. இது பற்றித் தேடியபோது அருண் சித்தார்த்தின் சிவில் அமைப்புத்தான் கூகிளில் முன்னே வருகிறது. நான் நினைக்கிறேன், பொழுதுபோக்கு, கலை, விளையாட்டு போன்றவற்றை ஊக்குவிப்பதன் மூலம் இளைஞர்களின் கவனத்தைத் திருப்பலாம் என்று. உங்கள் கருத்து என்ன ? (திரியை நாற்சந்தியில் ஆரம்பிக்கிறேன். வேறு பகுதிக்கு மாற்றுவது பற்றி யோசிக்க வேண்டும்)1 point
-
சான்றாண்மை - சுப. சோமசுந்தரம் தற்காலத்தில் சான்றாண்மை எனும் சொல் அறிவுக் களத்தில் சிறந்து நிற்றலையே குறிக்கிறது. பரிமேலழகர் காலத்திலேயே இப்பொருள் மட்டும் குறிக்கும் வழக்கம் பரவலாக ஏற்பட்டிருக்க வேண்டும். "ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" (குறள் 69; அதிகாரம்: மக்கட்பேறு) எனும் பொய்யாமொழிக்கு உரை சொல்ல வந்த பரிமேலழகர் "தன் மகன் கல்வி கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையார் சொல்லக் கேட்ட தாய் தான் அவனைப் பெற்ற பொழுதை விட மகிழ்வாள்" என்றுரைக்கக் காணலாம். மணக்குடவர் 'சான்றோன்' என்பதனை விரித்துரையாமல் குறளில் உள்ளவாறு சான்றோன் என்றே தம் உரையில் சுட்டுகிறார். பெரும்பாலான உரையாசிரியர்கள் சான்றோன் என்பதன் பொருளை பரிமேலழகர் வழிநின்றே உரைக்கின்றனர். மு.வரதராசனார் போன்ற வெகுசில உரையாசிரியர் பெருமக்களே 'நற்பண்பு நிறைந்தவன்' என்று மேற்கூறிய குறளில் வரும் சான்றோனைக் குறிக்கின்றனர். பரிமேலழகர் காலமானாலும் தற்காலமானாலும், 'சான்றோர்' என்பது நூலுடையாரை (நூலறிவுடையாரை) மட்டும் குறிக்காமல், கற்றலும் கற்றவழி நிற்றலும் உடையாரைக் குறிப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெள்ளிதின் விளங்கி நிற்பது. வள்ளுவத்தில் 'சான்றாண்மை' அறிவுக்களம் மட்டுமின்றி பரந்துபட்ட பொருளிலேயே காணப்படுகிறது. அஃது சால்புடைமையாகவே கொள்ளப்படுகிறது. 'சால்புடைமை' இன்றளவும் தகைசால் பண்புகளைக் குறிப்பதாகவே வழக்கில் உள்ளது. "கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை சொல்லா நலத்தது சால்பு" (குறள் 984; அதிகாரம்: சான்றாண்மை) "சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்" (குறள் 986; அதிகாரம்: சான்றாண்மை) "இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு" (குறள் 987; அதிகாரம்: சான்றாண்மை) "இன்மை ஒருவற்கு இழிவன்று சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்" (குறள் 988; அதிகாரம்: சான்றாண்மை) எனும் குறட்பாக்களில் 'சான்றாண்மை' குறிக்க வந்த வள்ளுவன் சால்புடைமையையே குறிக்கிறான். அவ்வதிகாரத்தில் 'சான்றாண்மை' எனும் சொல்லாட்சி வரும் வேறு சில குறட்பாக்களுக்குச் சொல்ல வந்த உரையில் உரையாசிரியர் மு.வரதராசனார் சால்புடைமையையே குறிப்பதும் குறித்து நோக்கத்தக்கது. "ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும்" எனும் வள்ளுவனின் வாக்கு முன்னோர் மொழியாய் "ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே" என்றும் "ஈன்ற ஞான்றினும் பெரிதே" என்றும் புறநானூறில் ஒலிக்கக் காணலாம். "நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன் முலைஅறுத் திடுவென் யான்எனச் சினைஇக் கொண்ட வாளொடு படுபிணம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே" (புறநானூறு 278) எனும் புறநானூற்றுப் பாடலில் செருகளத்தில் புறமுதுகிட்டான் தன் மகன் எனத் தவறான செய்தி கேட்டு வெகுண்டெழுந்த தாய் களத்திற்கே சென்று அவன் மார்பில் புண்பட்டு வீரமரணம் எய்தியதைக் கண்டதும் அவனை ஈன்ற பொழுதினும் பெரிதும் மகிழ்ந்தாள் என்று வருகிறது. இதுபோலவே "மீன் உண் கொக்கின் தூவியன்ன வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே" (புறநானூறு 277) எனும் பாடலில் களிற்றியானையைக் கொன்று தன் மகன் இறந்துபட்டான் எனக் கேட்டதும் அவள் பெற்ற உவகை அவனைப் பெற்ற போது அடைந்த மகிழ்வினும் பெரிது என அறிவிக்கப் பெறுகிறது. மேற்கூறிய இரு புறநானூற்றுப் பாடல்களிலும் ஈன்ற ஞான்றினும் எய்திய உவகை, மகன் போர்க்களத்தில் வீரனாய் நின்றமைக்கே ! அறிவுக் களத்தில் சார்புடையோன் அறிஞனாகவும், போர்க்களத்தில் சால்புடையோன் அப்பொருகளத்தின் அறம் அறிந்தொழுகும் வீரனாகவும் நிற்பதுதானே இயல்பு ! எனவே அவை அறமும் போர் அறமும் சான்றாண்மையின்பாற் கொளல் தகும். முன்னோர் மொழி பொன்னே போல் போற்றிய வள்ளுவன், ஈன்ற பொழுதினும் உவகை தந்த சான்றோனைக் குறித்தது இவ்விரு பொருள் பற்றி மட்டுமல்லாமல், 'தகைசால் பண்புடையோன்' என்று அனைத்து அறங்களையும் உள்ளடக்கியது போலும். அங்ஙனம் கொள்வதே புறநானூறு தோன்றிய சங்க காலத்தும் வள்ளுவம் தோன்றிய சங்க மருவிய காலத்தும் பொருந்தி வருவது. சான்றோர் சிலரும் அவ்வாறு கொண்டது இக்கருத்திற்கு மேலும் வலு சேர்ப்பது. நிறைவாக இக்கருத்தை வலியுறுத்த அன்னையரில் ஒருவரையே அழைக்கலாமே ! "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" (புறநானூறு 312) எனும் பாடலில் பெண்பாற் புலவரான பொன்முடியார் தாமே தாய்மையின் குறியீடு ஆகிறார்; உருவகம் ஆகிறார். இங்கு சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்னும் இடத்தில் வீரனாய் ஆக்குதல் தந்தையின் கடமை என்றே பொருள்பட்டிருக்க வேண்டும். ஏனெனில் தந்தையரில் சாமானியர் அனைவரும் அறிவுக் களத்தில் முன்னின்று இருக்க வாய்ப்பில்லை. ஆனால் காதலும் வீரமும் முன்னின்ற சமூகத்தில் ஆணுக்கான முதன்மைத் தகுதியாய் வீரமே கொள்ளப்பட்டதால், தந்தையர் வீரராய்ப் போற்றப்பட்டு அங்ஙனமே மகனை உருவாக்குவர் எனக் கொள்வதே இயல்பு. எனினும் சங்கப் பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கும் தன்மையன எனும் நோக்கில் வீரம், கல்வி மற்றும் உயர்பண்புகள் அனைத்தையும் இப்பாடல் குறிப்பதாய்க் கொள்வது தற்காலத்திற்கான சிறப்பு. "வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே" என்றது வீரம் பற்றியதாகவே இருப்பினும், அவனுக்கான களத்தை அமைத்துத் தருதல் இச்சமூகத்தின் கடமை என்றும், "களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே" என்றது வினைமுடித்து வருதல் மகனின் கடமை என்றும் உருவகிப்பது அறிவுலகில் வழக்கம்தானே ! அதுபோல் வீரமாய் முன்னின்ற 'சான்றாண்மை' இன்று பரந்து பட்டது எனலாமே !1 point
-
இவரால் கொல்லப்பட்டவர்களுக்கும், பின்னாட்களில் சோனியாவினால் கொல்லப்பட்டவர்களுக்கும் இவர்கள் அஞ்சலி செலுத்துவார்களா? அண்மையில்க் கூட புலிகளின் தலைமை கொல்லப்பட வேண்டும் , ஆகவே அது நடக்கும்வரை போரை நிறுத்தக் கூடாதென்று சோனியா இட்ட கட்டளை பற்றிப் படித்தேன். மனம் ஆறுதில்லை.1 point
-
நாங்கள் பாவிக்கிற சட்டி வெடிக்கிறேல்லை...கனடாவிலைதான் இருக்கிறம்...சமைக்கிறனாங்கள்..1 point
-
1 point
-
இந்த சமாதானத்திற்குப் பின்னால நிக்கிறவை ஒருதரையும் காணவில்லையே...கொலிடய் கழிக்கப் போனவரோ ?1 point
-
பையன் ..... பேதைக்கு அடுத்து வரும் பெதும்பை சரியாக இருக்கும்......மற்றும் சிறுவனுக்கு பெண்பாலான சிறுமி என்னும் சொல்லையும் பாவிக்கலாம் என்று நினைக்கிறன்...........!1 point
-
விகாரை எங்கு இருக்கு? உங்க ஆள் இந்த பத்தை காணிக்குள் என்ன செய்கிராரராம் ?😀1 point
-
அந்த விவகாரத்தில் என்ன நடிப்பைக் கண்டீர்கள். ஏனைய தலைவர்களைப் டபோல் கண்டும் காணாமல் இருக்கச் சொல்கிறீர்களா?1 point
-
இந்தியாவுடன் சேர்ந்து தமிழர்கள் சிங்கள தேசத்தை ஆக்கிரமித்துவிடுவார்களோ என்ற அந்தக்கால அச்சம்தான் இன சிக்கல்களுக்கான ஆரம்பபுள்ளியென்று கூறுகிறார்கள். இன்று எந்தவிதமான பலமும் எம் பக்கம் இல்லாத காலகட்டத்தில் உசுப்பேத்தும் அந்தக்கால பேச்சை இவர் ஆரம்பிக்கிறார். எந்த காலத்திலும் இந்தியாவாலோ அல்லது இந்திய அமைப்புகளாலோ நமக்கு எதுவித நன்மையும் கிடைக்கபோவதில்லை என்பது கருங்கல்லில் செதுக்கிய முடிவு. மத ஆக்கிரமிப்பு விகாரை மயமாக்குதலை கண்டித்து அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவியை ராஜினாமா பண்ணலாமே? அது உலகத்தின் கவனத்தை ஈர்க்க பெரிய உதவியாய் இருக்கும். பாராளுமன்ற அங்கத்தவர் பதவியை ராஜினாமா செய்தால் எமது மக்கள் பிரச்சனைகளுக்காக போராட முடியாது போய்விடும் என்று சப்பை கட்டு கட்டுவீர்கள். பதவியை வைத்துக்கொண்டு இப்போ மட்டும் என்ன பண்ணுகிறீர்கள்?1 point
-
பாதுகாப்ப அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி திரைமறைவில் தமிழருக்க எதிராக எல்லாவற்றையும் செய்து கொண்டு மறுகரையில் இனப் பிரச்சனைக்கு தீர்வு எப்படி வழங்கப் போகிறார். இதே மாதிரியே தந்தை குமார் பொன்னம்பலத்தையும் சந்திரிகா போட்டுத் தள்ளினார்.1 point
-
ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோனெனக் கேட்ட தாய் - திருவள்ளுவர் துணையற்ற தாய்க்குத் துணைதேடித் தந்த இணையில்லா மக்கள் இறை. - கருக்குறள்1 point
-
அது கடந்த வருடம் கார்த்திகையில் ஊரில் நிற்கும்போது நடந்தது, அது இப்ப சர்வ சாதாரணம் தங்கையின் பின் தொடர்ந்தவரை அண்ணன் கூட்டாளிகளுடன் கட்டி வைத்து அடிக்க, அடி வாங்கியவரின் கூட்டம் முகநூல் மூலம் கூடி அந்த ஊரையே முற்றுகையிட்டு ஒரே அடிதான் 😁, பல செய்திகள் வெளியில் வருவதில்லை ஒரு சிலரின் நடவடிக்கைக்கா இப்படி எமது தலைநகரை பெயர் மாற்றி கேவலப்படுத்தலாமா1 point
-
1 point
-
இருந்து பாருங்கள்! தானே, ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதாக எழுதுவார் பின்னொருநாள். சிலரது கனவுகள் நிறைவேறா பட்ஷத்தில் திறமை வளமை இல்லாவிட்டால் இப்படி புழுகி விட்டு பிரபல்யம் தேடுவது வழக்கம். இங்கு இவர் தேடுவது பிரபல்யம் வாக்கு சேகரிக்க. அதற்கான காரணம், இனத்தை விற்பதை தவிர வேறு தகுதி, திறமையேதும் இவரிடமில்லை. அரச அதிகாரம் தேவையில்லை அபிவிருத்தி போதும் அதற்காகவே அரசோடு ஜனநாயகத்தில் இணைந்தோம் என்று அறிக்கை விட்டவர்கள், இப்போ ஜனநாயகமுமில்லை அபிவிருத்தியுமில்லை ஒன்றுமில்லாமல் மீண்டும் தமிழர் வேண்டும் என்கின்றனர், இன்னும் சிலர் மக்களின் காணிகளையே காப்பாற்ற முடியாமல் உளறுகின்றனர். அரசியல் என்றால் என்ன? மக்களின் பிரச்சனை என்ன? அதற்கு தீர்வு என்ன என்று தெரியாதவர்கள் இப்படி எல்லா அமைச்சும் தங்களுக்கு கீழ்த்தான் இயங்குகிறது என்று கனவு காண்பதும், அறிக்கை விடுவதும் வழமை. இவர் எதிலுமே நிலையாய் இருந்ததில்லை, தானாக உழைத்து வாழவும் தெரியாது. தன் பிழைப்புக்காக இனத்தை விற்பது இவரது தொழில். இவரை ஒரு அரசியல் நகைச்சுவையாளனாகவே கருத முடியும். மிகவும் கஸ்ரப்பட்டு முடிந்தளவு மரியாதையாக எழுதுகிறேன் இல்லையெனில் பலருக்கு இரத்தக்கொதிப்பு வந்துவிடும் என்னால் மின்வாரியம், தியேட்டர் உரிமையாளர் எங்கே? விரைந்து நிலுவையை வசூலிக்கவும் இவரிடமிருந்து.1 point
-
கடற் தொழில் அமைச்சர் இப்போ... பாதுகாப்பு அமைச்சரின் வேலையையும் பார்க்கிறார். 😂1 point
-
கடவுளே! இந்த மனிஷனின் அலப்பறை தாங்கமுடியவில்லை. யாரிடம் முறையிடுவது என்று தெரியாத பொலிஸாரா இங்கு கடமையிலுள்ளனர். இவர் தனக்குத்தானே கவுண்டமணி ரேஞ்சில் கதை வசனம் எழுதி வெளியிடுகிறாரா? என்றொரு சந்தேகமெனக்கு. ஏன் ஜனாதிபதிக்கும் மாவட்ட பொலிஸ்மா அதிபருக்குமிடையில் அப்படியென்ன பகை இவர் பேசித்தீர்க்குமளவிற்கு. தன்ர படையை சேர்க்கப்போகிறாரோ? இந்தியாவிலிருந்து ஒரு இரவில் சாமான் தருவித்துவிட்டார். இவருக்கே இது கொமெடியாகத்தெரியவில்லையோ? அல்லது இது இவரது வியாதியோ?1 point
-
ஹரி இல்லாமல் தனியாக சுற்றும் மேகன்: பிரபலங்களிடம் கெஞ்சுவதாக கேலி இளவரசர் ஹரியைப் பிரிய மேகன் திட்டமிட்டுவருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகிய நிலையில், ஹரியை வீட்டில் விட்டுவிட்டு மேகன் மட்டும் பார்ட்டிகளுக்குச் செல்வதாக ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஹரி இல்லாமல் பார்ட்டிக்குச் செல்லும் மேகன் ஹரியும் மேகனும் நகமும் சதையும்போல், கைகளைப் பிடித்துக்கொண்டே சுற்றிக்கொண்டிருந்த காலம் போய், இப்போது ஹரியை வீட்டில் விட்டுவிட்டு, மேகன் மட்டும் பார்ட்டிகளுக்குச் செல்வதாக ஹெரிவிக்கிறார் Petronella Wyatt என்னும் ஊடகவியலாளர். ஹரி மேகன் வீட்டுக்கு அருகே வாழும் தன் நண்பர்கள் பங்கேற்கும் பார்ட்டிகளில் இப்போதெல்லாம் அடிக்கடி மேகனைப் பார்க்கமுடிவதாக அவர் கூறுகிறார். அதுவும், ஹரியை வீட்டில் விட்டுவிட்டு தனியாக பார்ட்டிகளுக்கு வரத் துவங்கியுள்ளார் மேகன் என்கிறார் Petronella Wyatt. பிரபலங்களிடம் கெஞ்சல் சமீபத்தில் Petronella பார்ட்டி ஒன்றிற்குச் சென்றிருந்தாராம். அப்போது, தன்னுடன் பார்ட்டியில் பங்கேற்ற பிரபலம் ஒருவருக்கு மேகனிடமிருந்து குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அவருக்கு மட்டுமல்ல, அந்த பார்ட்டியில் பங்கேற்ற பல பிரபலங்களுக்கு மேகன் குறுஞ்செய்திகள் அனுப்பியுள்ளார். அதை அவர்கள் Petronellaவிடம் காட்டியுள்ளார்கள். நாம் சேர்ந்து ஜாலியாக சுற்றலாமா என கெஞ்சும் தோரணையில் அந்த குறுஞ்செய்திகள் இருந்துள்ளன. அவற்றைக் காட்டி அவர்கள் கேலி செய்து சிரித்துள்ளார்கள். மேகனுடைய குறுஞ்செய்திகளுக்கு நீங்கள் பதில் அனுப்புவீர்களா என Petronella கேட்க, அந்த பிரபலங்கள், ஆம், அவர் ஒரு கோமகள் அல்லவா, அதனால் அவருக்கு பதில் அனுப்புவோம், ஆனால், அவரால் பட்ட பாடு போதும் என்று சொல்லி சிரிக்கிறார்கள் என்கிறார் அவர். https://news.lankasri.com/article/meghan-walking-without-harry-1685681684?itm_source=parsely-top1 point
-
மதிசுதா என்ற ஈழத்து இயக்குனர் பொது சனங்களின் பங்களிப்புடன் தயாரித்து இயக்கிய வெந்துதணிந்தது காடு என்ற திரைப்படத்தை வெளியீடு செய்வதற்கு பிரான்சில் தடையா ? எதற்காக ? யார் இந்த தடையை அமுல்படுத்துகின்ற அமைப்பு. ஈழத்திலிருந்து நம்பிக்கையான படைப்பாளியாக தன்னை வெளிப்பாடுத்திக் கொண்டுள்ள மதிசுதாவின் கலைப் பயணத்தை தடுத்துநிறுத்துவதன் நோக்கமென்ன ? பேஸ்புக் தகவல்களின் படி புத்தரின் உருவப்படமும், பிரதான பாத்திரமான தாய் பேசுகின்ற போரை நிறுத்தத் சொல்லுங்கள் என்ற ஒரு வாக்கியமும் தான் பிரசனையாக உருவெடுத்துள்ளதாக சொல்கிறார்கள். இது இரண்டுமே மிக எளிய காரணங்கள். ஆயுதங்கள் மௌனிக்க சொன்னதே புலிகள் தானே. ********** எது விளக்கம். எத்தனையோ படங்கள் வெளியீடுசெய்யபப்டுகின்ற பிரான்சில் இதற்கு மட்டும் தடையென்பது பிரான்சில் இன்னும் வறட்டு தேசியவாதிகள் மிஞ்சி இருக்கிறார்கள் என்பதன்றி வேறென்ன.1 point
-
1 point
-
செய்யும் போதனைக்கும் அதன் பெயரால் நடக்கும் செயல்களுக்கும் வேறுபாடு ஏற்படும்போது எழும் விமர்சனங்களை தவிர்க்கமுடியாது. ஒன்று உங்கள் செயல்களை மாற்றுங்கள் அல்லது பவுத்தம் என்று மூடுவதை நிறுத்துங்கள். பவுத்தர்களின் எதிர்மறையான செயற்பாடுகளே விமர்சனத்திற்கு காரணம் என்பதை சிறு பிள்ளையும் அறியும், வெறும் அறிக்கைகளால் மாற்ற முடியாது. கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் போது உங்கள் இந்த சிந்தனை எங்கே போனது? மதமென்றால் பவுத்தம் என்பதுதான் உங்கள் சிந்தனையோ? உங்கள் காலத்தில் தேவாலய குண்டு வெடிப்பிற்கு பொறுப்பெடுக்காமல் தப்பித்துக்கொண்டு, வந்துவிட்டார் கருத்துச்சொல்ல!1 point
-
இனிமேல் வங்குரோத்து நாடு என்று யாரும் எம்மை கூற முடியாது. நாங்கள் இனி எல்லா கடனையும் செலுத்துவிடுவோம். இனிமேல் கடன் வாங்குவதில்லை என்று இலங்கை அரசு தீர்மானித்திருக்கிறது.1 point
-
கஜேந்திரகுமார் நாடகங்களில் இதுவும் ஒன்று .1 point
-
கட்டடங்களை கட்டுவதிலோ, அழகுபடுத்துவதிலோ, விழாக்களை கொண்டாடுவதிலோ, கல்வி முன்னேறுவதில்லை. மாறாக ஆசிரியர்கள் சம்பளத்திற்காக இந்த தொழிலை பாக்காமல் சேவையாக செய்ய வேண்டும். அன்று தொட்டு கஸ்ரம் நிறைந்ததும் ஊதியம் குறைந்ததும் சுமைகள் நிறைந்ததும் இந்தத் தொழில். முன்னைய காலத்திலும் ஆசிரியர்கள் பிறர் பிள்ளை தலை தடவ தன் பிள்ளை தானே வளரும் என்று வாழ்ந்தார்கள். தங்கள் வகுப்பில் சிறந்த, வசதியற்ற மாணவர்களை தேடிச்சென்று ஊக்கமும் உதவியும் கொடுத்து முன்னேற்றி சமுதாயத்தில் முன் நிலைக்கு கொண்டு வந்தவர்களும் உண்டு. இன்று சுயநலம், ஆசிரியர்களுக்கிடையில் போட்டி, பிள்ளைகளை பழிவாங்கல் இப்படி பல ஊழல்கள். சேவை மறைந்து தொழிலாக கொள்கிறார்கள். கட்டாய வகுப்பேற்றம், பயிற்சி அற்ற ஆசிரியர்கள், பொறுப்பற்ற ஆசிரியர்கள், அதிக தண்டனையளிக்கும் ஆசிரியர்கள். பிள்ளைகளின் தகுதியை, வசதியை அறிந்து அதற்கேற்ப தங்கள் கற்பித்தல் முறையை மாற்றியமைக்கத் தெரியாதவர்கள், பிள்ளைகளின் ஆற்றலுக்கேற்ப தம்மை மாற்றியமைக்கத் முடியாதவர்கள் தமது திறமைக்கேற்ப பிள்ளைகளை எதிர்பார்ப்பவர்கள் இதனால் விரக்தியடைந்து பாடசாலையில் இருந்து விலகி தவறான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களை கவனிப்பதற்க்கு பெற்றோருக்கு நேரமில்லை. பொருளாதார தனித்த வாழ்க்கைச் சுமை. கல்வியில், பொருளாதாரத்தில், ஒழுக்கத்தில் சிறந்து விளங்கிய சமுதாயம் இன்று பல சவால்களுக்கு முகம் கொடுத்து எங்கே நிற்கிறது? உண்மையை சொன்னால் பலர் எனக்கு எதிராக வரிஞ்சு கட்டிக்கொண்டு வருவார்கள். விமர்சனம், ஊதியம், வசதி இவற்றை கடந்ததே ஆசிரியத்தொழில். எல்லாவற்றையும் நவீன தொழில் முறையில் பார்க்கத்தொடங்கிவிட்டோம். ஆசிரியருக்கும் மாணவனுக்குமிடையிலான உறவு புரிந்துணர்வு, ஏற்றுக்கொள்ளல் மிக முக்கியம். எனது மாணவன் அடுத்த ஆண்டு வகுப்பேற்றதிற்கு தகுதியானவனா? அதற்கு நான் சரியாக வேலை செய்கின்றேனா? என ஆராய வேண்டும். இது தொழிலல்ல சேவை. "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்." ஏன் அப்படிசொன்னார்கள்?1 point
-
2008ல் இருந்தா😵 தகவலுக்கு நன்றி. அமெரிக்கா ஒரு காகித புலி. அது கிழிந்து விழஆரம்பித்துவிட்டது அங்கே இருந்து தப்பி ஓடுவதற்கு அங்கே உள்ள ஈழதமிழர்கள் எல்லாம் திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.விசுகு அய்யாவிற்கு இரகசிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை போலும்.1 point
-
ஆம், அது தான் யாழின் சிறப்பம்சம், ஏதாவதொரு விடயத்தில் ஒத்த கருத்து இருக்கும், சில விடயங்களில் violent disagreement இருக்கும்!😂 மேலே நீங்கள் விரிவாக எழுதியிருக்கும் கருத்துடனும் நான் 100 வீதம் உடன்படுகிறேன். நான் படித்த பாடசாலையில் இடை நிலைப்பாடசாலையில் விஞ்ஞானக் கல்வியை மேம்படுத்த அந்தப் பாடசாலையில் நான் எல்லா மட்டத்திலும் தொடர்பு கொண்டும் ஒன்றும் நகரவில்லை. ஆனால், ஐரோப்பாவிலிருந்து கீரிக்கட்டு விளையாட்டிற்கு பணம் அனுப்புவோரிடம் தினசரித் தொலைபேசித் தொடர்பில் இருப்பார்களாம். இந்த நிலையில், புதிய நிர்வாகம் கடந்த மாதம் பதவிக்கு வந்து சில படங்களை இணையத்தில் போட்டிருக்கிறார்கள். விஞ்ஞான ஆய்வு கூடம் 90 இல் கோட்டை அடிபாட்டுக் காலத்தில் இருந்ததை விட கேவலமான நிலையில் இருக்கிறது. ஆனால், கீரிக்கட்டு விளையாட்டிற்குக் காசு சேர்க்கும் அலுவல் தீவிரமாகத் தொடர்கிறது. இதை எழுதி என்ன பயன்?1 point
-
ஜேர்மனியை சேர்ந்த ஒரு மருந்து நிறுவனத்தின்... லோகோவை திருடிய தீம்கா. 😂1 point
-
பாடசாலை நிர்வாகம் -> தாய்ச் சங்கம் (பழைய மாணவர் சங்கம் - தாயகம்) -> பழைய மாணவர் சங்கம் - புலம் பெயர் இந்த வழியில் செயற்பட்டால் பல விடையங்களை வினைத் திறன் மிக்கதாகவும் சீராகவும் செய்ய முடியும். ஆனால் ஊழல்களுக்காக பெரும்பாலான அதிபர்களும் ஆசிரியர்களும், தமது பெயருக்காக & படம் காட்டுவதற்காக பழைய மாணவர்களும் நேரடியாக ஈடுபடுவதால் எல்லாம் அரை குறையாகவே தொங்கி நிற்கின்றன. 80/90 களில் எந்தவிதமான பழைய மாணவர் சங்கங்களின் உதவிகளும் இன்றி பாடசாலைகள் இயங்கின. இன்றும் கூட புலம்பெயர் நாடுகளில் பழைய மாணவர் சங்கம் இல்லாத பல பாடசாலைகள் உள்ளன. இன்று பெரிய பாடசாலைகள் ஊதிப் பெருத்து அளவிற்கு அதிகாமான மாணவர்களை உள்வாங்கி ஓவ்வொரு வகுப்பிலும் அனுமதிக்கப்பட்ட மாணவர் தொகையை விட அதிகளவில் வைத்திருப்பதால் ஆசிரியர்களின் வேலைச் சுமையும் அதிகரித்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு துறைகளும் 80/90 களில் இருந்ததைப் போல் இல்லாமல் விரிவடைந்துள்ளது. நாம் படித்த காலங்களில் A/L இல் 4 பிரிவுகள் ஆனால் தற்போது பல பிரிவுகள் அதேபோல் விளையாட்டிலும். ஊட்டப் பாடசாலைகள் (Feeding schools) தொடர்பாக பெரிய பாடாசாலைகளுக்கோ அல்லது அதிகாரிகளுக்கோ சிறிதளவேனும் அக்கறை இல்லை. @நியாயத்தை கதைப்போம் ஊரில் உள்ளவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இன்று நாம் செய்வது போல் நிச்சயம் எமது பிள்ளைகள் செய்யப் போவதில்லை. வெளிநாட்டில் தங்கி இருக்காமல் உள்ளூரிலேயே விடைகளைக் காண முயல வேண்டும். யாழில் 7 பாடசாலைகளில் படித்திருக்கிறேன். அதில் இரண்டு பாடசாலைகளுடன், நண்பர்களுடன் இன்றுவரை நேரடியாக தொடர்பில் இருக்கிறேன்.1 point
-
எனது நண்பரான ஆண்டு ஐந்து வரையான பாடசாலை அதிபரை இது தொடர்பாக வினவியபோது தனது பாடசாலையிலும் ஐந்தாம் வகுப்பில் ஒரு மாணவரும் ஏனைய வகுப்புகளில் சில மாணவர்களும் எழுத்து தெரியாது கற்பதாக தெரிவித்தார். ஆசிரியர்கள் 2.30 மணிவரை நின்று கற்பித்தாலும் சில பெற்றோர் நாளாந்தம் வேலைக்காக(நாட் சம்பளத்திற்கு) சென்று வருவதால் வீட்டுப் பாடங்களில் அக்கறை செலுத்துவதில்லை என்றும் ஆசிரியர்கள் தங்களால் முடிந்தளவு அக்கறை செலுத்திகற்பிப்பதாக குறிப்பிட்டார்.1 point
-
நியாயம், பதிலுக்கு நன்றிகள், ஆனால் நீங்கள் குறிப்பிடும் இந்த "தற்காலிக நிவாரணம்" என்பது இப்போது எத்தனை ஆண்டுகளாகப் போய்க்கொண்டிருக்கிறது? என் சொந்த அனுபவத்தின் படி 2012 இலிருந்து இந்தப் போக்கு இருக்கிறது, இதற்கு முன்னராகக் கூட இருக்கலாம். 10 வருடங்களாக பாடசாலைகளின் கற்பித்தல் நடவடிக்கைகளை மேம்படுத்த "தற்காலிக நிவாரண" அடிப்படையில் புலம்பெயர்ந்தோர் நிதி வழங்கியிருக்கிறார்கள். ஆனால், இன்றும் 9 ஆம் வகுப்பில் தமிழ் வாசிக்க இயலாத பிள்ளை இருக்கிறதென்றால் பிரச்சினை எங்கே இருக்கிறதென நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் குறிப்பிட்டது போல ஆசிரியர், பள்ளி நிர்வாகம், வீட்டில் பெற்றோர் இவர்கள் 90 களின் யுத்த காலத்தில் இருந்ததை விட எதை வித்தியாசமாகச் செய்கிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்? ஒரு சில ஆசிரியர்கள் தான் கடமை செய்யாமல் இருக்கின்றனர் என்ற உங்கள் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. ஒரு சில ஆசிரியர்கள் தான் ஒழுங்காகக் கடமை செய்கின்றனர் என்பதே சரியென எனக்குத் தெரிந்த தகவல்கள் கூறுகின்றன. 90 களில், உயர்தர வகுப்பில் பாடத்திட்டம் பூரணப் படுத்தாமல் ரியூசன் போக ஊக்குவிக்கும் ஆசிரியர்கள் ஒரு சிலர் இருந்தனர். இப்போது, இத்தகைய ஆசிரியர்கள் எல்லா வகுப்பிலும் இருக்கின்றனர், இது தான் பிரச்சினையின் அடிப்படை என நான் கருதுகிறேன்.1 point
-
உலகில் ஆகக்கூடிய கெட்ட செயல் கொடுக்கும் உணவை தட்டி விடுதல் என்பேன் எனவே அதை ஒரு போதும் நான் செய்யேன் வாழ்த்துக்கள் என்று கூட சொல்லமுடியவில்லை உதவுங்கள். நன்றி1 point
-
அது வேறை ஒண்டுமில்லை சிறித்தம்பி! விழுந்து விழுந்து எழும்பி அது பழக்கத்துக்கு வந்துட்டுது. என்ன ஒண்டு இந்தமுறை மண்சாக்கு சாட்டு அவ்வளவுதான்... பைடன்ரை விழுந்தோம்பல்களை பார்க்க எனக்கு இந்த நாடகம் தான் ஞாபகத்துக்கு வந்தது1 point
-
ஊரில் உள்ளவர்கள் உடல் உழைப்பை கொடுக்கட்டும். நீங்கள் காசை கொடுங்கள். வைத்துக்கொண்டா வஞ்சகம் செய்கின்றார்கள். நீங்கள் படித்த பாடசாலைக்கு உதவுவது வெளியாருக்கு உதவிவது போன்றது இல்லையே.1 point
-
அண்ணா, கருணாநிதி சம்பந்தன் ஐயா எல்லாரும் நாற்காலில் இருந்து கொண்டே தான் அரசியல் செய்கிறர்கள். ஜோ பைடன் நடந்து திரிகிறார் எல்லோ.1 point
-
இங்க உள்ளவர்கள் இருக்கிற காணி வீடு வளவுகளை விற்று வெளிநாட்டுக்கு அனுப்புகிறார்கள். பொருளாதார நெருக்கடி காரணமாக பல பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்துள்ள சாப்பாடு கிடைக்காத நிலை பலர் பத்து நிமிடம் கூட நிற்க முடியாமல் மயங்கி விழுகிறார்கள். தந்தைக்கு வேலை இல்லாத பிள்ளைகள் பலர் பாடசாலைக்கு வர மறுக்கிறார்கள் பாடசாலைக்கு வசதிகள் சேவைகள் கட்டணம், மின்சார கட்டணம், சப்பாத்து, காலுறை என்பவற்றுக்கான செலவை ஈடு செய்ய முடியாதவர்களாக இருக்கிறார்கள்1 point
-
உல்லாசம் தேடியவர், கைலாசம் போனார். 😂 🤣 பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி... கள்ளக் காதலன் பலி. 😍1 point
-
“ இந்தியாவில் 2 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பயன்பாட்டிலிருந்து நீக்கவுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்குள் 2,000 ரூபாய் நாணயத்தாள்கள் பெறப்படும் என அந்த வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. காரணம் இதுவே1 point
-
Vase, இந்தியா, இலங்கை இரண்டும் வெவ்வேறு நாடுகள். ஆகவே இங்கு பெயர் பதிவுகளைப் பற்றி கவலைப் படத்தேவையில்லை. ஆனால் “கொத்துக் கொத்தாக அங்கே தமிழர்களைக் கொலை செய்தபோது நாங்கள் ரீவி பார்ததுக் கொண்டிருந்தோம்” என்றெல்லாம் தமிழக சினிமா திரைப் படங்களில் வசனங்களை வைக்கத் தெரிந்தவர்கள். குறைந்தபட்சம் ஈழத் தமிழர்கள் இந்தத் தலைப்பில் ஏற்கனவே படம் எடுப்பதால் விட்டுக் கொடுத்திருக்கலாம் என்பதுதான். அத்துடன் இந்தப் பெயர் பிரச்சனை ஏற்கனவே முடிந்து விட்டது. ஆகவே இனி கதைப்பதில் ஏதும் நடந்து விடப் போவதி்லை. எனது ஆதங்கம் எல்லாம், வெளி நாடுகளில் ஈழத் தயாரிப்பான வெந்து தணிந்த காடு திரைப்படத்தை காட்சிப் படுத்த புலம் பெயர் தமிழர்கள் முன் அவர் வேண்டும் என்பதேயாகும்.1 point
-
பட மூலாதாரம்,ANI 2 ஜூன் 2023, 16:37 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் அருகே சென்னையை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. ரயில் விபத்தில் காயமடைந்த 132 பயணிகள் கோபால்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்துள்ளார். இது தவிர, காயமடைந்த 47 பேர் பாலசோரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். செய்தி முகமைகளின்படி, சென்னையில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதியதால், அதன் பல பெட்டிகள் தடம் புரண்டன. பாலசோர் அருகே உள்ள பஹனகா பஜார் ஸ்டேஷன் அருகே இந்த விபத்து நடந்தது. மூன்று ரயில்களுக்கு நடுவே நடந்த விபத்து இதுகுறித்து ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, “சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சுமார் 10 பெட்டிகள் பாலசோர் அருகே தடம் புரண்டன. இந்த ரயிலக்ள் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌரா செல்லும் ரயிலின் மீது மற்றொரு பாதையில் மோதியது. இதன் காரணமாக சில பெட்டிகள் யஸ்வந்த்பூர் ஹௌரா ரயிலும் தடம் புரண்டது,” என்று தெரிவித்துள்ளார். ஒடிசாவின் தலைமைச் செயலாளார் பிரதீப் ஜெனா, “ரயிலின் சில பெட்டிகள் தடம் புரண்ட பிறகு அருகிலிருந்த சரக்கு ரயில் மீது மோதியது,” என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசியவர், “பாலசோர் மருத்துவக் கல்லூரி, எஸ்சிபி மருத்துவக் கல்லூரி, பாலசோர் மாவட்ட மருத்துவமனை, பத்ரக் மாவட்ட மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தயார் நிலையில் உள்ளன,” என்று கூறினார். உதவிக்கு வந்த மேற்கு வங்க முதல்வர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ரயில்வே துறையுடன் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, தனது மாநிலத்தில் இருந்து ஒரு குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த இடத்திற்கு மாநில அரசு நிவாரண மற்றும் மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது. மருத்துவக் குழுக்களும் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 இதுவரை கிடைத்த தகவலின்படி, குறைந்தபட்சம் மூன்று ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக புவனேஸ்வரை சேர்ந்த பிபிசியின் செய்தியாளர் சுப்ரதா பதி தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து உறுதியான தகவல் இன்னும் கிடைக்கவில்லை. ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் கியான் ரஞ்சன் தாஸ், “அருகிலுள்ள மாவட்டங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளதாக” கூறினார். பிடிஐ, ஏஎன்ஐ செய்தி முகமைகள் ரயிலின் சில பெட்டிகள் கவிழ்ந்திருப்பதைக் காணக்கூடிய வகையிலான சில படங்களை வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் பலர் உயிரிழக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பட மூலாதாரம்,ANI பிரதமர் இரங்கல் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், “இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன, என்று தெரிவித்துள்ளார். ரயில்வே துறையின் தற்காலிக உதவி எண் மக்களுக்கு உதவுவதற்காக 044- 2535 4771 என்ற தற்காலிக உதவி எண் உருவாக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து தொடர்புகொள்வோருக்கு ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே ட்விட்டரில் அறிவிப்பு. Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 ஹௌரா, காரக்பூர், பாலசோர், ஷாலிமார் ரயில் நிலையங்களில் உதவி எண்கள் இயக்கப்பட்டுள்ளதாக காரக்பூர் மண்டல ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு ஆலோசித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்துள்ளார். மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒடிசா மாநில முதல்வர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சரையும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/czr07ny9ve8o0 points
-
ஒடிஷா ரயில் விபத்தில் பலி 238-ஆக உயர்வு - 650 பேர் காயம்: கோர விபத்து நேரிட்டது எப்படி? பட மூலாதாரம்,ANI 2 ஜூன் 2023 புதுப்பிக்கப்பட்டது 25 நிமிடங்களுக்கு முன்னர் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே 2 பயணிகள் ரயில்களும், ஒரு சரக்கு ரயிலும் மோதிக் கொண்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 238 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 650 பேர் படுகாயம் அடைந்தனர். காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியன விபத்தில் சிக்கி பயணிகள் ரயில்கள் ஆகும். விபத்து நடந்த இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. இதனால், அந்த மார்க்கத்தில் செல்லும் சென்னை - ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விபத்தில் 238 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 650 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தென்கிழக்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. அதன்படி, காயமடைந்தவர்கள் பாலசோர், கோபால்பூர், காந்தபாரா, சோரோ, பாத்ரக் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Twitter பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 1 மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ராணுவம் பாலசோர் ரயில் விபத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ராணுவமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ராணுவ மருத்துவர்களும், பொறியாளர்களும் விபத்து நேரிட்ட இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தின் கிழக்குப் பிராந்தியத்தின் பல்வேறு தளங்களில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைகின்றன. விபத்துக்குள்ளான ரயில்களில் இருந்து உயிருடன் மீண்டவர்களை அப்புறப்படுத்தும் பணியிலும், காயமடைந்த பயணிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியிலும் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 2 விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் சென்றுள்ளார். அத்துடன், உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் அறிவித்துள்ளார். பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 3 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 3 விபத்து நேரிட்டது எப்படி? ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பாலசோர் அருகே பஹானாகா பஜார் ஸ்டேஷன் என்ற இடத்தில் சரக்கு ரயில் ஒன்றின் மீது மோதியதில் அதன் சில பெட்டிகள் தடம் புரண்டன. அந்த பெட்டிகளை ரயில்வே ஊழியர்கள் மீட்டு அருகே இருந்த தண்டவாளத்தில் நிறுத்திவைத்திருந்தனர். அந்த சமயத்தில், அந்த தண்டவாளத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால்தான் இந்த கொடூரம் நேரிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES இதுகுறித்துப் பேசிய ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா, “சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் சுமார் 10-12 பெட்டிகள் பாலசோர் அருகே தடம் புரண்டன. அப்போது தடம் புரண்ட அதன் ரயில் பெட்டிகள், அதற்கு அருகே மற்றொரு தண்டவாளத்தில் யஸ்வந்த்பூரில் இருந்து ஹௌராவுக்கு சென்றுகொண்டிருந்த ரயிலின் மீது மோதியது. இதன் காரணமாக அதிலும் சில பெட்டிகள் தடம் புரண்டன,” என்று தெரிவித்துள்ளார். ஒடிசாவின் தலைமைச் செயலாளார் பிரதீப் ஜெனா, “இரண்டு ரயிலிலும் சில பெட்டிகள் தடம் புரண்ட பிறகு அருகிலிருந்த சரக்கு ரயில் மீதும் மோதியது,” என்று தெரிவித்தார். மேற்கொண்டு பேசியவர், “பாலசோர் மருத்துவக் கல்லூரி, எஸ்சிபி மருத்துவக் கல்லூரி, பாலசோர் மாவட்ட மருத்துவமனை, பத்ரக் மாவட்ட மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவக் குழுக்கள் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காகத் தயார் நிலையில் உள்ளன,” என்று கூறினார். Twitter பதிவை கடந்து செல்ல, 4 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 4 உயிர் தப்பியவர்கள் கண்டது என்ன? விபத்தில் உயிர் தப்பிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணி ஒருவர், ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய போது, விபத்தின் போது கண்ட காட்சிகளை விவரித்தார். "ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு சென்று கொண்டிருந்தேன். விபத்து நடந்தபோது தூங்கிக் கொண்டிருந்தேன். விபத்து நடந்த போது பலத்த சத்தம் கேட்டது. ஸ்லீப்பர் பெட்டியில் மேல் படுக்கையில் இருந்தபடி மின்விசிறியை கெட்டியாக பிடித்துக்கொண்டேன். ரயிலில் இருந்து கீழே இறங்கிப் பார்த்த போது, எல்லோரும் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். என்னை காப்பாற்றுங்கள், எனக்கு உதவுங்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள்.ஆனால் யாருக்கு உதவுவது?ஆனால் அதற்குள் ரயிலின் கேண்டீன் தீப்பிடித்தது. அதனால் நாங்கள் ஓடிவிட்டோம்.” என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,ANI 2 வயது குழந்தை தப்பிப் பிழைத்தது விபத்தில் தப்பிய மற்றொருவர், "விபத்து நடந்தபோது 10 முதல் 15 பேர் என் மீது விழுந்தனர். பெருங்குழப்பமாக இருந்தது. நான் மனிதக் குவியலின் அடிப்பகுதியில் இருந்தேன்” என்றார். "எனக்கு கையிலும் கழுத்தின் பின்புறத்திலும் காயம் ஏற்பட்டது. நான் ரயில் போகியில் இருந்து வெளியே வந்தபோது, யாரோ ஒருவர் கையை இழந்திருப்பதையும், ஒருவரின் காலை இழந்ததையும், ஒருவரின் முகம் சிதைந்திருப்பதையும் பார்த்தேன்," என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் கூறினார். நேரில் பார்த்த மற்றொருவர், "யாருக்கும் கை இல்லை. யாருக்கும் கால் இல்லை. எல்லோரும் இப்படியே கிடக்கிறார்கள். விபத்து நடந்தபோது யாரும் இல்லை. பயணிகள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உதவினார்கள். எல்லோரும் பயந்தார்கள். அப்போது யாரை காப்பாற்றுவது என புத்தி கூட வேலை செய்யவில்லை.” “எங்கள் இருக்கைக்கு அடியில் இரண்டு வயது குழந்தை உயிருடன் இருந்தது. உயிர் பிழைத்துக் கொண்டது.” என்று மற்றொருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES மருத்துவமனைக்கு வெளியே மக்கள் கூட்டம் விபத்து நடந்த இடத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மற்றும் 50 பேருந்துகள் நிறுத்தப்பட்டு நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. தடம் புரண்ட பெட்டிகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். பாலசோர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை மையத்திற்கு வெளியே மக்கள் கூடியுள்ளனர். நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், ஆனால் செய்தி எழுதும் வரை, தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் மக்கள் சிக்கியுள்ளதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,ANI ரயில்வே அமைச்சர் அஸ்வினி நேரில் ஆய்வு விபத்து குறித்த செய்தி அறிந்ததும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விபத்து நேரிட்ட பாலசோருக்கு விரைந்தார். அங்கே விபத்து நேரிட்ட இடத்தில் நிலைமையை நேரில் ஆய்வு செய்தார். விபத்து நேரிட்டது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். தற்போதைய நிலையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்று கூறிய அவர், தண்டவாளங்களை சரிசெய்து, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் கிடைத்த பிறகே அந்த மார்க்கத்தில் மீண்டும் ரயில்களை இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். உயர் மட்ட விசாரணை - நிவாரணம் அறிவிப்பு பாலசோர் ரயில் விபத்து தொடர்பாக உயர்மட்டக் குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்த அமைச்சர், அதேநேரத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையரும் தனியாக விசாரணை நடத்துவார் என்று தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா 10 லட்சம் ரூபாயும் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 5 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 5 பிரதமர் இரங்கல் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய தான் பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ள பிரதமர், “இந்த விபத்து குறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உடன் பேசினேன். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன, என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு ஒடிஷா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுககு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழ்நாட்டில் ஒருநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவரது இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், செம்மொழிப் பூங்கா மலர்க் கண்காட்சிக்கு முதல் அமைச்சர் செல்லும் நிகழ்ச்சி ரத்தாகியுள்ளது. பாலசோர் ரயில் விபத்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை சென்னையில் மாநில அவசர நிலை நடவடிக்கை மையத்தில் இருந்த படி கண்காணித்து வருகின்றனர். அங்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாலசோர் நிலவரத்தை கேட்டறிந்தார். விபத்திற்குள்ளான ஹவுரா - சென்னை கோரமண்டல்ஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பயணிகள் எத்தனை? அவர்களது தற்போதைய நிலை என்ன? அத்தனை பேரின் தற்போதைய நிலவரம் என்ன? பாதுகாப்பாக இருக்கிறார்களா? அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்து தரப்பட்டுள்ளனவா? என்பது குறித்து அவர் கேட்டறிந்தார். Twitter பதிவை கடந்து செல்ல, 6 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 6 சென்னையில் இன்று மாலை நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுவதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையின் தற்காலிக உதவி எண் மக்களுக்கு உதவுவதற்காக 044- 2535 4771 என்ற தற்காலிக உதவி எண் உருவாக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இருந்து தொடர்புகொள்வோருக்கு ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக 044-25330952, 25330953, 25354771 ஆகிய எண்களையும் 94458 69848 என்ற வாட்ஸ் அப் எண்ணையும் தொடர்புகொள்ளலாம் என தெற்கு ரயில்வே ட்விட்டரில் அறிவித்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 7 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Twitter பதிவின் முடிவு, 7 ஹௌரா, காரக்பூர், பாலசோர், ஷாலிமார் ரயில் நிலையங்களில் உதவி எண்கள் இயக்கப்பட்டுள்ளதாக காரக்பூர் மண்டல ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்த இடத்திற்கு தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரயில் விபத்து குறித்து ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை தொடர்பு கொண்டு ஆலோசித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விபத்து குறித்த விவரங்களைக் கேட்டறிந்துள்ளார். மேலும், இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒடிசா மாநிலத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளான செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். ஒடிசா மாநில முதல்வர் கூறிய தகவல்கள் கவலையளிக்கிறது. விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க போக்குவரத்துத் துறை அமைச்சரையும் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளையும் ஒடிசாவுக்கு விரைந்து செல்ல உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,SUBRAT PATI திருப்பிவிடப்பட்டுள்ள பிற ரயில்கள் இந்த விபத்து காரணமாகப் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன என்று தூர்தர்ஷன் தெரிவித்துள்ளது. ஹவுரா-புரி விரைவு ரயில், ஹவுரா-யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ், ஹவுரா சென்னை மெயில், ஹவுரா-புரி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொல்கத்தா சென்னை கோரமண்டல் ரயில் விபத்து அவசர கால உதவி எண்கள்: 06782-262286 ( ஒடிசா அரசு உதவி எண் ) ரயில்வே உதவி எண்கள்: 033-26382217 (ஹவுரா), 8972073925 (காரக்பூர்), 8249591559 (பாலசோர்) மற்றும் 044- 25330952 (சென்னை) https://www.bbc.com/tamil/articles/czr07ny9ve8o0 points
-
நான் நினைக்கிறேன் இந்த விடயத்தில் தான் நானும் ஜஸ்ரினும் முதன் முதலாக ஓர் கோட்டில் நிற்கின்றோம்0 points
-
அதாவது ஊரில் உள்ளவர்கள் உடைவதையும் கவனிக்கத்தேவையில்லை அதுவும் நீங்கள் வந்து பார்த்து திருத்திக்கொடுங்கள் அது தானே உங்களது வேலை என்கிறீர்கள்?? இப்போ முதலில் நீங்கள் குறிப்பிட்ட அவர்களிடம் பணமில்லை உழைப்பு இருக்கு என்ற உங்கள் கருத்து என்னாச்சு தம்பி??0 points
-
இவர்கள் பரந்த இந்தியாவின், ஹிந்து ராஜியத்தின் காவளாளிகள். இந்து சமயத்திற்குள்ளிருந்து பெளத்தம் வெளிப்பட்டதால் அது ஹிந்துக் குடும்பத்தின் கிளைகளில் ஒன்று. பிறகு ஏன் இவர்கள் பெளத்த மேலாதிக்கத்தை எதிர்க்கப்போகிறார்கள்? இவர்களின் எதிரி கிறீத்துவமும், கிறீத்துவர்களுமே0 points