Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    19134
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  3. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38770
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3061
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/07/24 in Posts

  1. சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக்கும் இலவச விளம்பரம்தான் அவரைப் பற்றி வரும் பதிவுகள். இந்தத் திரி யாழில் வந்ததற்கு பின்னர் குறைந்தது 3 - 4 பேராவது யாழிலிருந்து அந்த உதிரிப் பெண்ணை சமூகவலைத் தளங்களில் பின்தொடர்வார்கள்! மேலும் அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து அடித்து எந்தப் படிப்பினையையும் அவருக்குக் கொடுக்கவில்லை. தாமும் அவரைப் போல தரம் தாழ்ந்து, தலைவருக்கும் புலிகளுக்கும் அவமானத்தைத்தான் கொடுத்துள்ளார்கள். வீதியில் நாயின் மலம் 💩 இருந்தால் அதை விலத்தி நடப்பதுபோல சமூகவலைத் தளங்களில் கொட்டப்படும் மலங்களில் இருந்து தூர விலகவேண்டும். ஆனால் சிலர் மலநாற்றத்தை முகர்ந்து பின் தொடர்கின்றனர்!
  2. தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை இந்தப் பெண் குறித்து நான் நேற்றுவரை அறிந்திருக்கவில்லை. இப்படியொருவர் இருப்பதும் எனக்குத் தெரியாது. ஆனால், நேற்று இத்தாலியில் இருந்து எனது நெருங்கிய உறவினர் ஒருவர் பேசும்போது, "அண்ணா, சுஜிக்கு விழுந்த அடி பாத்தனீங்களோ? அவளின்ர வாய்க்கு நல்லா வேண்டிக் கட்டியிருக்கிறாள்" என்று கூறவும், யார் சுஜி என்று கேட்டேன். "உங்களுக்குத் தெரியாதே? அவளின்ர வீடியோக்களைக் காது குடுத்துக் கேக்க முடியாது. அவ்வளவும் தூஷணம். நான் இப்படி தூஷணங்களை வாழ்நாளில கேட்டிருக்க மாட்டன், அதுவும் ஒரு தமிழ்ப் பெண் பேசுவாளென்டு கனவிலையும் நினைக்கையில்லை. அனுப்பிவிடுறன், பாருங்கோ" என்று சொல்லவும், சரி பார்க்கிறேன் என்று கூறினேன். தலைவர் குறித்தும், போராளிகள், மாவீரர்கள் குறித்தும் அவதூறு பேசுவோரைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஓரளவிற்கு என்ன பேசுவார்கள் என்பது குறித்த அனுமானமும் எனக்கு ஓரளவிற்கு இருந்தமையினால், இவள் புதிதாக என்னதான் பேசிவிடப்போகிறாள் என்று, மனதைக் கல்லாக்கிக்கொண்டு பார்க்கத் தொடங்கினேன். இன்ஸ்ட்ரகிராம் தளமாக இருக்கவேண்டும். நேரடியாக தனது முகத்தைக் காட்டிக்கொண்டு, துணைக்கு ஒரு மூன்று அல்லது நான்கு நபர்களை நேரலையில் அழைத்து வைத்துக்கொண்டு தலைவரைப் பற்றியும், மாவீரர் பற்றியும் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தூஷண வார்த்தைகளால் இடைவிடாது திட்டுகிறாள். மகிந்தவையும், சிங்கள இராணுவத்தையும் அடிக்கொருமுறை போற்றும் இவள், தமிழருக்கென்று நாடு கிடைக்கக் கூடாதென்பதை மிகவும் ஆணித்தரமாகக் கூறுகிறாள். தனது நேரலைக் கருத்துக்களை கேட்பவர்களும் தொலைபேசியில் பேசலாம் என்று கூறிவிட்டு, அப்படி வந்து அவளது கருத்துக்களை விமர்சிப்பவர்களை மிகவும் கீழ்த்தரமாக, அவர்களின் தாயை, தங்கையை, அக்காவை வைத்து செவிகொடுத்துக் கேட்கமுடியாதளவிற்கு வைகிறாள். ஒருகட்டத்தில் "உனது தாயை....... பண்ணுவதற்கு இப்போதே ஆமிக்காரர் கொஞ்சப்பேரை அனுப்புகிறேன், பாக்கிறியாடா?" என்றும், "நீ இருக்கிற இடத்தைச் சொல்லுடா, இப்பவே மகிந்தவின்ர ஆமியை அனுப்பி உனக்கு .... அடிக்கிறேன்" என்றும் மிகவும் அருவருக்கத் தக்க வகையில் தொடர்ந்தும் பேசுகிறாள். இவளது கருத்துக்களை மறுதலித்து, இவளின் நோக்கத்தை வெளிப்படுத்த முனைந்தவர்களை உடனடியாக நேரலையில் இருந்து தடுத்து, மற்றையவர்களை விவாதத்திற்கு அழைக்கிறாள். இவளுக்கு ஆதரவாக நேரலயில் பேசும் ஒரு சிலரும் அவளைப்போன்றே தமிழர்களை ஒரு இனமாக கொச்சைப்படுத்தி வருகிறார்கள். "கருணாவைக் கூப்பிடட்டுமாடா? அவன் வந்து உங்களுக்கெல்லாம் இன்னொருக்கா ...அடிக்கச் சொல்லவாடா?" என்று இன்னொரு கருத்தாளரிடம் அட்டகாசமாகச் சொல்கிறாள். பிரான்ஸ் நாட்டின் பரீசில் இருக்கலாம் என்று நம்பப்படும் இவள் சில நாட்களுக்கு முன்னர் தன்னை எவரும் அடையாளம் காண்மாட்டார்கள் என்கிற துணிவில் லா சப்பல் எனும் பகுதியூடாக நடைபவணியில் செல்லும்போது ஒரு தமிழ் இளைஞர் இவளைப் பார்த்துவிடுகிறார். அவளருகில் சென்று "நீதானே தலைவரையும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்திப் பேசுபவள்?" என்று கேட்கவும் அதே வைராக்கியத்துடன், "என்னடா செய்யப்போகிறாய், நான் அப்படித்தான் சொல்லுவன்டா" என்று ஆரம்பிக்கிறாள். இவர்களுக்கிடையிலான வாக்குவாதம் வீதியில் நடந்துசென்ற இன்னும் பல தமிழர்களை ஈர்க்கவே அவர்களும் அவளை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். இதனையடுத்து அவளைச் சுற்றிவளைத்த தமிழ் இளைஞர்கள், அவளை நோக்கி மிகுந்த ஆத்திரத்துடன் கேள்விகளை முன்வைக்க அவளும் பதிலுக்குப் பேச எத்தனிக்கிறாள். இந்தவேளையில் "என்ர அம்மா உனக்கு வேசியாடி?" என்று ஒரு இளைஞர் அவளைக் கேட்டுக்கொண்டே அவளது முகத்தில் முதலாவதாக அறைகிறார். நிலைகுலைந்து போன அவள், தனது குரலை அடக்கிக்கொண்டு, "அண்ணா, இங்க பாருங்க.." என்று தனது அகம்பாவம் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டு ஒதுங்கப் பார்க்கிறாள். ஆனால், அவளை விடாது தொடர்ந்த இளைஞர்கள் மூன்று நான்கு முறை அறைகிறார்கள். பயம் பற்றிக்கொள்ளவே, வீதியில் இருந்த கடையொன்றிற்குள் நுழைய அவள் எத்தனித்தபோதும், கடை உரிமையாளரான தமிழர், "இஞ்சை வரவேண்டாம், வெளியால போ" என்று கூறி கதவைத் திறக்க மறுக்கிறார். கடை இடுக்கில் மாட்டிக்கொண்ட அவளை இளைஞர்கள் சூழ்ந்து நின்று மீண்டும் கேள்வி கேட்கின்றனர். இடையே வீதியால் சென்ற இன்னொரு இளைஞர் தான் கொண்டுவந்த முட்டையை அவள் முகத்தின்மீது எறிய, அவளது அச்சம் அதிகரிக்க ஒடுங்கியபடியே நிற்க, இரண்டாவது முட்டையும் வீசப்படுகிறது. தமிழ் இளைஞர்களிடமிருந்து தப்பிக்க வேறு வழியின்றி, "எனக்குப் பீரியட்ஸ் அண்ணா, எனக்குப் பீரியட்ஸ் அண்ணா, அடிக்க வேணாம்" என்று வயிற்றைக் காட்டிக் கெஞ்சவும், கூட்டத்தில் இருந்த ஒரு தமிழர், "பொம்பிளையடா, அடிக்காதையுங்கோ, விடுங்கோ, சுஜி, நீ தலைவற்ற படத்தை உன்ர இன்ஸ்ட்டகிராமில் காட்டிக்கொண்டு அவரைக் கொச்சைப்படுத்துறது நிப்பாட்டு, இனிமேல் தலைவரைப் பற்றியும், போராட்டத்தைப் பற்றியும் பேசக்கூடாது" என்று கேட்க, அருகிலிருந்த இளைஞர், "ஏன் அண்ணா இவளிட்டை போய்க் கெஞ்சிறியள்? இவள் செய்த வேலைக்கு ஏன் கெஞ்சுறியள்" என்று ஆத்திரத்துடன் கேட்கிறார். இந்தச் சம்பவத்தை அருகில் நின்ற பலரும் தமது கையடக்கத் தொலைபேசிகளில் படமாக்கியிருக்கிறார்கள். யூ டியூப், முகப்புத்தகம் என்பவற்றில் ஒவ்வொரு கோணத்தில் இவளின் அகம்பாவம் உடைக்கப்படும் ஒளிப்படங்கள் வலம் வருகின்றன. குறிப்பு :இவள் பேசும் தமிழ் மொழியின் உச்சரிப்பு தமிழர் தாயகத்திற்குச் சொந்தமனாதல்ல. முழுக்க முழுக்க கொழும்புத் தமிழ் . அவளே, "நான் கொழும்புத் தமிழடா, உங்கட தமிழ் இல்லடா" என்றே தன்னை அறிமுகப்படுத்துகிறாள். இவளது வீடியோக்களை நான் இணைக்கவில்லை. வேண்டுமானால் தேடிப்பாருங்கள். விசுகு அண்ணை, உங்களுக்கு இதுகுறித்து ஏதாச்சும் தெரியுமோ?
  3. ஒரு இனத்தை பற்றி இழிவாக கதைப்பதை காட்டியே ரிப்போர்ட் செய்து இலகுவாக அவரின் சமூக வலைதளம்களை முடக்கலாம் அப்படி இருக்கையில் இப்படி அடிப்பதால் இன்னும் மேலும் மேலும் அவருக்கு இலவச விளம்பரம் கொடுத்துள்ளார்கள் அடி விழும் காணொளி வரும் மட்டும் இப்படியான ஆள் இருக்கிறார் என்றே தெரியாது . தலைவர் ஒழுக்கமான கட்டுகோப்பான தமிழர் படையை உருவாக்கியிருந்தார் .த
  4. கோசான் திரியினை இணைக்கும் போதே கொஞ்சம் ஜனரஞ்சகமான கருத்துக்களோடு இணைப்பதன் நோக்கம் மற்ற திரிகளை விட ( போட்டி திரிகளை விட) அதிக பக்கம் செல்லவேண்டும் என்பதற்காகத்தான்😁. எங்களுக்குத்தான் இந்த சூட்சுமம் விளங்காமல் இந்த திரிக்குள்ள நின்று மன்றாட வேண்டியுள்ளது.
  5. வாசகர்களை ஏமாற்றக்கூடாதேயென்று நாங்கள் கண்விழித்து எழுதிக்கொண்டிருக்கிறோம், எங்கள் தவிப்பு இவர்களுக்கு எங்கே புரியப்போகிறது?
  6. என் வீட்டின் சாளரங்களை விருப்பப்பட்ட நேரம் நான் திறக்க விரும்புகிறேன் பனி மூடிய வீதிகள் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும் எப்போதாவது ஒரு வசந்த நாளை நான் எதிர்பார்த்திருக்கிறேன் குளிர் சலித்துப் போய்விட்டது இப்போது என் மனம் சூடான ஒன்றை விரும்புகிறது தியா - காண்டீபன்
  7. பொதுவெளியில் இந்தப் பெண் பேசும் வார்த்தைகள் சகித்துக் கொள்ளக் கூடியவை அல்ல. சிறுவர்களும் இதனை கேட்க முடியும். அந்த வகையில் இவரின் காணொளிகளுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்வதன் மூலம்.. இவரின் அநாகரிகத்துக்கு முடிவுகட்டலாம். இவர்கள் எப்பவும் நீடித்து நிலைக்கப் போவதில்லை. இப்படி சிலது காலத்துக்கு காலம் வந்து போயிடுங்கள். அதுகளை காலமே தண்டிக்கும். உணர்ச்சி வசப்பட்டு இவர்களை தண்டிக்க சட்டத்தை கையில் எடுத்து பிரான்ஸ் காவல்துறையின் அடாவடிக்கு இலக்காவதில் இருந்து இளைஞர்கள் புத்திசாதுரியுமாக விலகி இருந்து கொள்வதே சிறப்பு.
  8. படங்கள் II 👆🏼 நான் கடைசியாக பார்த்த போது படர்தாவரம் (எதோ நெல்ல்லா என முடியும் பெயர் என நினைவு) படந்து, பச்சை பாசியும் கமண்டி கிடந்த ஆரிய குளம் இப்போ. அதனருகில் முன்னைய சுண்டல் வண்டியின் updated version. முன்னர் போல் அல்லாது இவற்றில் சுண்டல் மட்டும் அல்லாது, அவித்த, பொரித்த மரவெள்ளி, இன்னும் பலவகை நொறுக்குத்தீனிகள் கிடைக்கிறன. பண்ணை பூங்கா👆🏼. அம்மாச்சியில் சாப்பாடு. அப்பம், கீரை வடை, புட்டு, மதிய நேரச்சோறு, பப்பா ஜூஸ்.
  9. சம்பந்தப்பட்டவர்கள் அந்த பெண்ணை உணர்ச்சி மிகுதியால் தாக்கிவிட்டதாகவே தெரிகின்றது. ஆனால் பல காணொளிகளில் போரட்டங்களை கொச்சப்படுத்தி தூசனங்களால் அந்த பெண் பேசும் போது பல இடங்களில் அப்படி பேச வேண்டாம் என மன்றாட்டமாக கேட்டதையும் உன்னிப்பாக கவனித்தவர்கள் அவதானித்திருக்கலாம். அந்த சிறிய தாக்குதல் சரியென நினைப்பவர்களுக்கு அது சரியாகத்தான் இருக்கும். பிழையென நினைப்பவர்களுக்கு அது பிழையாகத்தான் இருக்கும். ஈழத்தமிழர்கள் அரசியல் போராட்டத்திலும் சரி ஆயுத போராட்டத்திலும் சரி இதுவரைகாலமும் புனிதர்களாக இருந்து எதை சாதித்தார்கள். உலக அரசியல் என்று பார்த்தால் ஈழத்தமிழர்கள் வேற்றுநாட்டு கொடியைக்கூட ஆர்ப்பாட்டங்களில் எரித்து கேவலப்படுத்தியவர்கள் இல்லை என நினைக்கின்றேன். அந்தை காணொளிய வெளியே விடாமல் தவிர்த்திருக்கலாம். ஈழத்தமிழர் வரலாற்றில் இப்படியான சம்பவங்கள் முன்னர் நடந்ததுண்டா?
  10. கொஞ்சமாவது சூடு சுரணை இருந்து வெளியே நடமாட வேண்டும் என்றால் தன்னை மாற்றிக் கொள்ள முயலுவார். இல்லை என்றால் இனி வீட்டுக்குள் இருந்து குலைக்க வேண்டியது தான். (இந்த தாக்குதல் செய்தவர்களுடன் முரண்பட்டேன் முதலில். சில வீடியோக்களை அனுப்பி பார்த்தபோது அவர் சவால் விட்டு ல சப்பலுக்கு வந்திருப்பது தெரிந்தது.)
  11. நன்றி ரஞ்சித் இணைப்பிற்கு, அந்த பெண்மணி செய்ததை விட அவரை தாக்கியவர்கள்தான் மாவிரர்களையும், விடுதலை போராட்டத்தினையும் கொச்சைப்படுத்தியுள்ளார்கள்.
  12. 👍.... உண்மையில் அவர் ஒரு அற்புதம் தான். நான் அவருக்கு இன்ஸ்ரக்டராக இருந்திருக்கின்றேன். எதையும் விளங்கிச் செய்ய வேண்டும் என்று கொஞ்சம் பிடிவாதமாக இருப்பார். பொதுவாக பலர் முந்தைய வருடங்களில் இருந்து பிரதி எடுத்து வேலையை முடித்து விட்டு போய் விடுவார்கள்.....😀 மேலே படித்து முடித்து விட்டு நாட்டிற்கு திரும்பிப் போன வெகு சிலர்களில் அவரும் ஒருவர்...🙏
  13. அப்படி சூடா எதைத் தான் மனம் விரும்புகிறதோ?
  14. படம் பார் பாடம் படி நான் கண்டு வந்து சொன்னதை கோஷான் முதலைகளோடு கும்மாளம் அடித்து விட்டு, பாண் இல்லாவிட்டில் என்ன கேக் சாப்பிடுங்கள் என சொல்கிறார் என கூறியவர்கள் கவனத்துக்கு. மேலே நீர்கொழும்பு, மாத்தறை பகுதிகளில், சிஙக்ளவர்களால் நடத்தப்படும் துணிக்கடைகளில் இன்று பொருட்கள் வாங்கி விட்டு, காசு கட்ட காத்து நின்ற கூட்டம். இவர்கள் வெளிநாட்டு காசில் வாழும் தமிழர்கள் அல்ல, பெருநாளுக்கு உடுப்பு எடுக்கும் முஸ்லிம்களும் அல்ல. தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு உடுப்பு எடுக்கும் சராசரி, சிறு நகர்ப்புற சிங்கள மக்கள். மாத்தறையில் காசு கட்டி முடிக்க ஒரு மணத்தியாலம் ஆகியது என ஒருவர் கூறியுள்ளார்.
  15. சிங்கள அரசியல்வாதிகள் தேனும், பாலும் ஓடுது என்கிறார்கள். உலக வங்கி இப்பிடி சொல்லுது. இதிலை யாரோ ஒரு பகுதி பொய் சொல்லுது என்பது மட்டும் உண்மை. 😂
  16. "சங்க கால இலக்கிய காதலர்கள்: ஆதிமந்தி - ஆட்டனத்தி" / "Love story of Sangam lovers: Athimanthi- Attanathi [தமிழிலும் ஆங்கிலத்திலும்] உலகப் புகழ் பெற்ற காதலர்கள் ரோமியோ - ஜூலியட், சகுந்தலை - துஷ்யந்தன், லைலா - மஜ்னூன், மும்தாஜ் - ஷாஜஹான், கிளியோபட்ரா - மார்க்ஆண்டனி, அம்பிகாபதி - அமராவதி, தேவதாஸ் - பார்வதி, உதயணன் - வாசவதத்தை, போன்றோர்களுக்கு சமமான காதல் கதை ஒன்று எமது இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட சங்க இலக்கியத்தில் கூறப்பட்ட்டுள்ளது. இந்த காதலர்கள் ஆதிமந்தி - ஆட்டநத்தி என்ற ஆடுகளமகள் - ஆடுகளமகன் ஆகும். இது ஏனோ பலருக்கு இன்னும் தெரியாமல் இருப்பது ஒரு கேள்விக்குறியே? இந்த சோகக் காதல் கதையை குறுந்தொகை 31, அகநானுறு 45, 76, 135, 222, 236, 376, 396 மற்றும் சிலப்பதிகாரம் போன்றவற்றில் பாடியிருக்கிறார்கள். இது ஆட்டக்காரி [ஆடுகளமகள்] "ஆதிமந்தி" யின் காதல் கதை .. இவளை சோழன் கரிகாலனின் (கரிகால் சோழனுக்கு திருமாவளவன், மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு.) மகள் எனவும், அது போல ஆட்டனத்தியை (ஆட்டன்+அத்தி) சேர நாட்டரசனாகவும் பலர் கருதுகின்றனர். எது எப்படியாயினும் இவர்களைப் பற்றி பரணர், வெண்வீதியார் [வெள்ளி வீதியார்]போன்ற புலவர்கள் போற்றி யுள்ளதுடன் சிலப்பதிகாரமும் இந் நிகழ்ச்சியைப் பற்றிச் சொல்கிறது. இனி இந்த சங்க கால காதலர்களின், கண்ணகியின் முன்னோடியாக கருதப்படும் ஆதிமந்தியின், காதல் கதையை மேல் கூறப்பட்ட சங்க பாடல்கள் மூலம் பார்ப்போம். மலை நேரம் காவேரி ஆறு இன்று ஏனோ மெதுவாக ஓடுகிறது. தனது மனதை யாரிடமோ பறி கொடுத்தது போல தட்டுத் தடுமாறி ஓடிக்கொண்டு இருக்கிறது. சூரியன் தனது கதிர்களை மடக்கிக் கொண்டு காவேரி ஆற்றில் குளிக்க போய் கொண்டு இருக்கிறான். பறவைகள் மரக் கிளைகளை நோக்கி ஆரவாரமாக பறந்து கொண்டு இருக்கிறது. வண்டுகள் மலர்களை சுற்றி ரிங்காரம் இடுகின்றன. காதலர்களை வரவேற்பது போல சந்திரன் பிரகாசமாக ஒளி பரப்பிய படி மேகத்தினுடாக எட்டிப் பார்க்கின்றான். ஒவ்வொரு நாளும் இந்த நேரம் தனது தோழியுடன் காவேரி ஆற்றங்கரையில் உலா வரும் ஆதிமந்தியை இன்று காண வில்லை. தோழி தான் முந்தி வந்து விட்டேனோ என்று ஒரு தரம் தடு மாறினாள். வாடைக்காற்று கொஞ்சம் குளிராக இன்று வீசுகின்றது. தன்னை மேல் அங்கியால் இறுக்கமாக போர்த்துக் கொண்டு அங்கும் இங்கும் தேடினாள். அதோ .. அந்த கற்பாறைகளுக்கிடையில் காவேரியை வெறுத்து பார்த்துக் கொண்டு ஆதிமந்தி இருப்பதை தோழி கண்டாள். அந்த காவேரியே அவள் கண்களில் இருந்து ஓடுவது போல அவள் அங்கு இருந்தாள். தோழிக்கு ஒன்றுமே புரியவில்லை. மெல்ல அவளின் பட்டு போன்ற நீண்ட கூந்தலை தடவிய படி, ஆதிமந்தியை என்ன நடந்தது என்று கேட்டாள். ஓ .. என்ன வென்று சொல்வேன் என தடு மாறினவள், கொஞ்ச அமைதியின் பின், தோழி தனக்கு நல்ல பதில் ஒன்று தருவாள் என்ற ஒரு அவாவில், தோழியின் முகத்தை பார்த்த படி சொல்ல தொடங்கினாள். "மள்ளர் குழீஇய விழவி னானும் மகளிர் தழீஇய துணங்கை யானும் யாண்டும் காணேன் மாண்தக் கோனை யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே." [குறுந்தொகை 31] தம் மாண்தக்கோனை (தனக்கேற்றவனாக கருதிய தலைவனை), என் காதலனை, அந்த நீச்சல் - நடன விளையாட்டு வீரன் ஆட்டன் ஆத்தி என்பவனை, பலம் உடைய போர் வீரர்கள் [மள்ளர்] விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் தம்முள் பொழுது போக்காக தழுவி வட்டமாக நின்று கை கோத்துக் கொண்டு ஆடுகின்ற துணங்கை நடனம் ஆடும் இடங்களிலும் காண முடியவில்லை. நானும் ஓர் ஆடுகள மகள் [ஆட்டக்காரி]. அந்த ஆட்டக்கார [ஆடுகளக்] கூட்டத்துக்குக் தலைவனான (குரிசில்) அவனை நினைத்து என் சங்கு கைவளையல் நழுவுகிறது தோழி என நாணம் கடந்து வருந்தி முறையிட்டாள். தோழிக்கு சிரிப்பு தான் வந்தது. இதுக்கு ஏன் இந்த கவலை நாளை ஆட்டநத்தி எமது அரசன் முன்னிலையில் ஆடப் போகிறான். நீயும் நானும் முன் வரிசையில் இருந்து பார்க்கப் போகிறோம். பிறகு என்ன வேண்டும்? இன்று அவன் தனது சக ஆட்டக்காரி காவேரியுடன் ஒத்திகை பார்க்கிறானோ என்னவோ என சமாதானப் படுத்தினாள். சோழ நாட்டு மக்களுக்கு தாய், தெய்வம் எல்லாம் இந்த காவிரி தான். அவள் கருணையால் தான் சோழ நாட்டு ஆற்றுக் கரையில் முப்போகம் முழுசாக விளைகிறது. ஆமாம் புனலாய்ப் [வெள்ளமாய்] பெருகி, ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நெஞ்சில் பால் வார்ப்பவள் அவள். அந்த தெய்வத்தின் தரிசனம் காண கரையெல்லாம் காவேரி அன்னைக்குப் பொங்கலிட்டு, நீரில் அகல்விளக்கு ஏற்றி விட்டு, ஆட்டனத்தி - காவேரியின் நீச்சல் நடன விழா காண மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருந்தது. ஆதிமந்தியும் தன காதலனின் நடனம் காண சீவி சிங்காரித்து பொன்மகளென, தன் தோழியுடன் புறப்பட்டு வந்திருந்தாள். இவளும் ஆடற்கலையில் தேர்ந்த வட்ட விழி அழகிதானே. நொப்பும் நுரையுமாய் துள்ளிக் குதித்து வரும் காவேரியை பார்த்து அவள் நெஞ்ச மெலாம் கூத்தாடுகிறது. அவனுடன் தான் ஆடுவது போல ஒரு கற்பனையில் மிதந்தாள். தன்னவன் நெஞ்சில் தலை சாய்த்து .. காதலன் கைபிடித்து .. நீரில் நனைந்து எழுந்து தலை கோதி .. அப்பப்பா அத்தனையையும் அனுபவித்து விடவேண்டு மென்று அவள் ஆசை ... நீண்டு கொண்டே போனது. தழைத்த கதிர்களையுடைய வயல்களை கொண்ட கழார் என்னும் ஊரிலுள்ள காவேரியாற்றுத் நீர்த்துறையில், ஆட்டனத்தி என்பவன், காவேரி என்ற ஆட்டக்காரியுடன் [நீச்சல் மகளுடன்] சேர்ந்து இன்று நீச்சல் நடனம் ஆடப்போகிறான். இந்த நீச்சல் நடனம் அதுவும் ஆரவாரம் பொருந்திய சுற்றத்தினருடன் சோழன் கரிகால்வளவன் கண்ணுற்று மகிழ அவன் முன்னிலையில் நடக்கப் போகிறது. அவ்வளவு பெருமை பொருந்திய அந்த நடனத்தை எல்லோரும் எதிர் பார்த்து இருக்க, சோழன் கரிகாலனை வணங்கி விட்டு அந்த ஆட்டனத்தி தனது சக ஆட்டக்காரி காவேரியுடன் நீரில் இறங்கினான் எங்கும் ஒரே அமைதி எல்லோர் கண்களும் அந்த ஆட்ட காரர்களிடமே! "ஒலி கதிர்க் கழனி, கழாஅர் முன்துறை, கலி கொள் சுற்றமொடு கரிகால் காண, தண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை ஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள, கருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று, இரும் பொலம் பாண்டில், மணியொடு தெளிர்ப்ப, புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து, காவிரி கொண்டு ஒளித்தாங்கு" (அகநானுறு 376) நான்கு திசையும் இன்னிசை முழங்கிற்று. கரிய கச்சினைக் [அரைக்கச்சை] கட்டிய ஆட்டனத்தி தன் காலில் அணிந்திருந்த கழல் [சலங்கை] நீருக்கு வெளியே தெரியும்படி புரட்டி ஆடி காட்டினான். வயிற்றிலிருந்த பொலம்பாண்டில் [பொன்னாலான உருண்டையான] மணி ஒலிக்கும்படி தன் உடம்பையே நீளவாக்கில் உருட்டி ஆடி காட்டினான். அப்படி ஆடி மன்னரையும் மக்களையும் மகிழ்வித்து கொண்டிருக்கையில் அந்த ஆறே இவர்கள் நடனத்தை கண்டு பூரித்தது போல திடீர் என கொந்தளித்தது. இவனுடன் சேர்ந்து நீச்சல் நடனம் ஆடிய நீண்ட கரிய கூந்தலை யுடைய காவேரி இவனது அழகில் மயங்கி ஆற்று வெள்ளம் காவேரியை ஈர்த்த போது அவனை வௌவிக் கொண்டும் [பிடித்துக்கொண்டு ], தன் கூந்தலால் மறைத்து கொண்டும் அவனை ஆற்றோடு இழுத்துச் சென்றாள். என்றாலும் காவேரியை ஆறு அடித்துச் சென்றுவிட்டது. காவேரி ஆற்று வெள்ளத்தில் மாண்டு போனாள். ஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான். அங்கே நீராடிய மீனவன் தலைவனின் மகள் மருதி என்பவள் அவனைக் காப்பாற்றி அவனுக்கு தேவையான வைத்தியம் செய்தாள். அவனும் மெல்ல மெல்ல தேறினான். மருதிக்கு அவன் மேல் ஒரு மோகம் ஒரு காதல் அரும்ப தொடங்கிற்று. அவனே தன தலைவன் என முடிவும் எடுத்து விட்டாள். அப்படி இருக்கும் தருவாயில் ......, ஆதிமந்தி ஆட்டனத்தியை தேடி பேதுற்றுப் புலம்பிக் கரை யோரமாக ஓடினாள். தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக் கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். நீரோட்டத்தின் வழியே கடற்கரையிலே பின் சென்று, “மலையொத்த தோள்கள் கொண்டவனே” என்று கதறினாள். "கச்சினன் கழலினன் தேம்தார் மார்பினன் வகையமைப் பொலிந்த வனப்பமை தெரியல் சுரியலம் பொருநனைக் கண்டிரோ" என ஆதிமந்தி பேதுற்று இனைய ....... [அகநானுறு 76:7-10] "கச்சினையும் [cloth tied around his body] கழலினையும் [war anklets] தேன் ஒழுகும் மாலையணிந்த மார்பினை உடையவனும், பலவகை மலர்களால் தொடுக்கப்பட்டு விளங்கிய அழகமைந்த மாலையை உடையவனும் ஆகிய சுருண்ட மயிரினையுடைய அழகிய கூத்தனாகிய (பொருநனாகிய) ஆட்டனத்தியைக் கண்டிரோ?" என்று கண்டவர்கள் எல்லோரிடமும் மயக்கமுற்று வருந்தி வினாவினாள். இதை மருதியும் கேட்டாள். ஆதிமந்தி கூறிய அடையாளங்கள், தான் காப்பற்றிய, தன் மனதை கவர்ந்த, தன் தலைவனாக முடிவெடுத்த இவனின் அடையாளங்களுடன் ஒத்து போவதை கண்டு திடுக்கிட்டாள். "முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண் கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும் ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின் மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதி மந்தி காதலர் காட்டிப் படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின் மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்" [அகநானூறு 222, பரணர், குறிஞ்சி திணை] அவனைப் பார்த்ததாக யாராவது சொல்ல மாட்டார்களா என்று ஆதிமந்தியின் நெஞ்சின் ஏக்கம் அவள் வினாவில் இருந்து நெடு மூச்சாய் வெளிப்படுகிறது .. அந்த நேரத்தில் உண்மை தெரிந்துகொண்ட மருதி ஆட்டனத்தியை ஆதிமந்தியிடம் ஒப்படைத்து "இதோ! .." என்று அவள் காட்ட, ஆட்டநந்தியைக் கண்டு சந்தோஷத்தில் அவள் கன்னம் மீண்டும் நனைகிறது; இந்த நனைதல் சூடாய் இல்லை; சுகமாய் இருக்கிறது. அந்த சுகத்தோடு வெட்கமும் சேர்ந்து அவள் கன்னம் சிவக்கின்றன. ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்து விட்ட மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள், அப்படி பட்ட சிறந்த சிறப்பினை உடையவள் இந்த கற்பரசி மருதியாகும் என சங்க பாடல் மேலும் கூறுகிறது ! இந்தக் கதையை பாவேந்தர் பாரதிதாசன் சேர தாண்டவம் என்று நாடகமாக எழுதினார். இதையே தழுவி எடுக்கப்பட்ட படம் மன்னாதி மன்னன். அதில் அஞ்சலிதேவி தண்ணீரோடு போன எம்.ஜி.ஆரைத் தேடி “காவேரித்தாயே காவேரித்தாயே” என்று பாடுவார். மேலும் அகநானுறு 45 "காதலர் கெடுத்த சிறுமையொடு நோய்கூர்ந்து ஆதிமந்தி போல பேதுற்று அலந்தனென் உழல்வென் கொல்லோ," - வெள்ளிவீதியார், 135 "பசலை பாய்ந்த நுதலேன் ஆகி, எழுது எழில் மழைக் கண் கலுழ, நோய் கூர்ந்து, ஆதி மந்தியின் அறிவு பிறிதாகிப் பேதுற்றிசினே காதல் அம் தோழி!" - பரணர், 236 "தோட்டு இருஞ் சுரியன் மணந்த பித்தை, ஆட்டன் அத்தியை காணீரோ?’ என நாட்டின் நாட்டின், ஊரின் ஊரின்,கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித் தன்று எனக் கலுழ்ந்த கண்ணள், காதலர் கெடுத்த ஆதி மந்தி போல, ஏதம் சொல்லிப், பேது பெரிது உறலே." ,396 "மந்தி பனிவார் கண்ணள் பலபுலந்து உறைய அடுந்திறல் அத்தி ஆடுஅணி றனஇ நெடுநீர்க் காவேரி கொண்டு ஒளித்தாங்கு" - பரணர், ஆகியவற்றிலும் ஆட்டனத்தி ஆதிமந்தி காதல் குறிப்புகள் காணப்படுகின்றன அது மட்டும் அல்ல "-- உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று ‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்" என்று இளங்கோ ஆதிமந்தியின் காதல் வலிமையை சிலப்பதிகாரத்தில், வஞ்சின மாலை: 10 to 15 எடுத்துச் சொல்கிறார். [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] "Love story of Sangam lovers: Athimanthi- Attanathi" Over two thousand years old Tamil Sangam poems had mentioned a true love story of "Athimanthi - Attanathi",which is immortal & parallel with the world most famous lovers such as Romeo and Juliet, Shakuntala & Dushyant, Layla and Majnun, Mumtaz Mahal & Shah Jahan, Cleopatra and Mark Antony, Ambikapathi Amaravathi, Devadas Parvathi & Udayana and Vasavadatta. This is the love story of two sangam period dancers "Athimanthi -Attanathi". However, surprised to note that most of us still doesn't know their love story, which is mentioned in Kurunthogai 31, Akananuru 45, 76, 135, 222, 236, 376, 396 as well as Silappathikaram of Ilango Adikal. There are two different school of thoughts or opinions among scholars. Some say that Athimanthi was the daughter of king Karikalan who also goes by the name Karikal - peru - valattan & called her as princes Athimanthi. Similarly they consider, Attanathi too as a chera king. Others say that both are just dancers as no Sangam poems ever mentioned that she was his daughter. What ever is true, the sangam poets Paranar & Velli Veethiyar had described their true, wonderful, inspiring & romantic love story. Further Silappathikaram too mentioned about the greatness of their love. She can also be seen as a forerunner of Kannaki. Let us now look about Athimanthi's - the great, heart-breaking and romantic love story based on those Sangam poems. Today the Cauvery river is flowing very slowly - clumsily and in awkwardly, Like some one had snatched her. Sun about to plunge into the water for his evening bath, Birds are singing and flying back to the tree branches. We can hear the gentle sound of bees buzzing from flower to flower. Moon just coming out of clouds as welcoming evening romantic lovers. But Athimanthi is not there for her daily routine walk with her friend. Friend confused whether she came to the walk early today. Today the north wind blowing little cold. She wrapped her tightly with upper cloth and searched Athimanthi at Cauvery river bank here & there. There ... Athimanthi Look frustrated, sit on a hillock among the rocks as that the Cauvery river itself flowing from her eyes. Friend could not understand any thing. She went closer to her & looked up at her. She unfasten silk like long hair of Athimanthi, running her fingers through the soft fall, Asked gently "What happened to her" Ohhh ... how can I say -- She confused. After few lapse .. she continued .. Hoping that the friend will tell her good and pleasant answer. Athimanthi started to tell her plight, looking her friend face with eagerly. "I cannot find my esteemed man among warriors at their festival, nor with the thunangai girls who hug and dance. I am a dancer whose love for him has made my shell bangles slip off my wasting hands. My proud lover is a dancer too." [Kurunthokai/குறுந்தொகை 31] I was looking for my lover, the dancer - Attanathi .. Where the warriors are gathered in their festival .. Where Thunangai dances [துணங்கை – Thunangai dance was performed by young women. It was performed during festivities. It was also performed in the battlefield by victorious soldiers. / Kurunthogai [குறுந்தொகை] 364:--women with bright bangles and bamboo like arms dance bending their forearms --] were performed by women during festivals ,.. I can’t find him .. my esteemed man is not there .. I am a dancing girl .. bangles made from cutting conch shells, slipped from my hands now .. My esteemed hero is a dancer too .. Athimanthi complained to her friend very openly, without showing any shyness, Her friend laughed at Athimanthi's complaints. Why are you worrying for this? You know very well .. Attanathi will perform dance front of our king, Chola Karikalan tomorrow. As we already planned, We will sit in front raw & watch Cauvery river dance festival closely. Then what do you want more than that? He may be doing rehearsal today with co-dancer Kaveri. So do not worry any more .. Be happy. Her friend replied to her. For Chola country, This Cauvery river is their Mother, Goddess & every thing. Because of her mercy, they do cultivation three times in a year. This Cauvery water helps thousand & thousand of farmers & make them happy. Today all Chola country people had paid a respect to this great Cauvery goddess, by observing Pongal feast along the river bank as well as lighting lamps in the river water and waiting happily to see the Attanathi - Kaveri water dance about to commence. Athimanthi dressed elegantly, appropriately for this dance occasion & came to this festival with her friend, excited to see her lover's dance. She is also a beautiful & talented dancer. She was so happy to see the flow of the Cauvery water where her lover is going to dance today. She imagine, She was dancing with him instead of Kaveri. In the front port of Kazhar city where groves are dense with marutham trees and fields are heavy with grains, Attanathi with his co dancer Kaveri is going to perform water dance festival Today. This water dance will be held in front of Chozha king Karikalan , who will watch with his happy relatives, As every one is expecting to see this wonderful dance, Attanathi greet [salute] Chola king, Karikalan & went into the Cauvery water with his co dancer Kaveri. He was a very handsome man and a talented dancer. Silent Everywhere ... everyone eyes look only both dancers & nothing else. "In the front port of Kazhar city where fields are heavy with grains, Chozha king Karikalan watched with his happy relatives, Athi dance with desire in the flowing river water donning crafted anklets with bright spots, swirling on his red feet, cloth tied around his beautiful waist, and with jingling, golden round bells. Like Kaveri who took him," [Akananuru/அகநானுறு 376] With beautiful music in all four direction, Attanathi who wore black cloth tied around his body, danced such a way that the bright spots crafted anklets [chalangai] rolling on his red feet & big golden round bells tied around his beautiful stomach make sound along with flowing water. While he dance with desire with co dancer Kaveri, like Cauvery river itself excited by looking his dance, it swell [rise up] suddenly. When Cauvery river seized him & dragged him into the river, the co dancer, who had a long beautiful dark hanging hair, attracted by his handsome, held the hand of beautiful Attanathi, hiding [protecting] him with her long hair. However Kaveri had died in the continuous non-breaking river water swell & Attanathi was unconsciously left at the bank of the river by the rise up of the river. A young lady named Maruthi saved Attanathi. She was a daughter of a headman of fisherman. She treat him with full attention as one of them. Attanathi slowly but steadily recovered. Mean time unknowingly Maruthi fell in love with him and wants to marry him too. She already decided that he is her man, her Lover, her Husband. While her excessive love & affection has made her to think this way ......., Athimanthi is confused and sad and she is searching for her handsome lover in every country, every town and wonders whether the ocean took him or the river took him. She roam around the river flow & are crying, whether any one found my lord, "who has high & flourishing strong shoulders" "Attanathi with tight kachai clothing, war anklets,chest with honey-oozing, splendid, perfect flower garland and curly hair, leaving Athimanthi to be confused and sad, asking, “Did you see my lord?”." [Akananuru/அகநானுறு 76:7-10] He with cloth tied around his body, He with war anklets, His chest with flower garlands with honey, perfectly arranged splendid garland, He with curly hair, He is beautiful & handsome man, did you see my lover? She asked each & every one who come across on her way. Maruthi too heard this. She was shocked to hear the descriptions which Athmanthi told coincide with him, Who she rescued, Whom she lost her heart, Who she decided as her man / lover / husband. "May you achieve esteemed fame like Maruthi who is fit for songs. She showed the searching, confused and baffled Athimanthi where her lover was, the splendid and greatly handsome dancer Attan Athi who danced with desire, with lifted, high and strong shoulders, who was seized by Kavery with dark hanging hair when he danced at Kazhar town’s big port with endless festivities where the mud on the drum eyes don’t dry." [Akananuru/அகநானூறு 222] When Athimanthi confused and baffled , asking, “Did you see my Lover, the handsome dancer, with thick black, curled fragrant hair, bull - like elegant walk ...., with the hope that some one may help her ..., Maruthi instantly understood the truth and reluctantly returned him to his Lover, Athimanthi. Her eyes once again moisten with tears & streaming down her Beautiful and glowing rosy cheeks. But it is not hot ,It gives her pleasure & happiness. . After Maruthi shows Athimanthi where her lover is, she dies [suicide], plunging herself in the ocean as she don't have any other love or affection in life. Because of this, She achieved esteemed fame & consider as she is fit for songs by sangam poets. The greatest modern Tamil Poet Bharathidasan wrote a drama called "CHERA THANDAVAM" [சேர தாண்டவம்] based on this love story. In the year, 1960, based on this story a Tamil move "Mannathi Mannan" [மன்னாதி மன்னன்] was produced, acted by M G R. Further more Akananuru 45:- "I am struggling greatly with dreadful affliction. Will I roam around in confusion like Athimanthi?"-,135:- "My beloved, beautiful friend! I am confused like Athimanthi whose thinking was warped, afflicated by this love disease. My dark skin has pallor, my sprout - like beauty ruined, my forehead is pale, and my painting-like eyes are crying." -,236:- "I escaped without being confused like crying Athimanthi who searched in every country, in every town, and wondered whether the ocean took him or the river took him, her lost lover Attanathi with thick black, curled fragrant hair, bull-like elegant walk and flourishing strong shoulders."-, and 396:- "Like the Cauvery river which fell in love with the beautiful dancer Athi and took him away from his wife Athimanthi," are also describe their [Attanathi-Athimanthi] love story. Not only that even Silappathikaram too mentioned this story in Vanchina maalai /வஞ்சின மாலை: 10 to 15,as below: "-- உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று ‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்" [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
  17. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் - சுப. சோமசுந்தரம் அவ்வப்போது ஈடுபடும் இலக்கிய வாசிப்பில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தற்செயல் நிகழ்வாக இரு வேறு இலக்கியக் கூறுகள் கண்ணில் பட்டுத் தெறித்தன. ஒன்று, ஒரே பார்வையில் இரு பொருள் கொண்ட காதலவர் நோக்கு. இன்னொன்று, ஒரே பாடலில் ஈரணிகள் அமைந்து தரும் இன்பம். ஒவ்வொன்றும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களாய்த் தெரிந்தன. ஒவ்வொன்றையும் தனித்தனியே எழுதலாமே என்ற நியாயமான எண்ணம் தோன்றியது உண்மை. ஒரே கட்டுரையில் இரு கூறுகளை வைப்பதும் தலைப்புக்குப் பொருந்தி வருமே என்று உடனே அநியாயமான எண்ணம் தலை தூக்கியதால், அநியாயத்துக்கு எழுதிய கட்டுரை இது எனக் கொள்ளலாம். பார்வை ஒன்று பொருள் இரண்டு எந்த ஒரு பொருளையும் இயன்றவரை வள்ளுவப் பெருந்தகையிடம் தொடங்குவது மங்களகரமாய் அமையும் என்ற நல்ல நம்பிக்கையோ அல்லது மூடநம்பிக்கையோ மனதில் படிந்து விட்டது போலும். வள்ளுவன் காட்டும் தலைவன் தன் தலைவியின் உளக்குறிப்பை அவள் பார்வையில் அறிகிறான். "இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றந்நோய் மருந்து" (குறள் 1091; அதிகாரம் : குறிப்பறிதல்; காமத்துப்பால்) பொருள் : இவளது மையுண்ட கண்ணில் (உண் கண்) - பார்வையில் - இரு பொருள்கள் (இருநோக்கு) உள்ளன. ஒன்று - என் உள்ளத்தில் காதல் - நோய் தருவது; மற்றொன்று, அந்நோய்க்கு மருந்தாவது. காதல் கொண்டோர் தமக்குள் காதல் பார்வையை பரிமாறிக் கொண்டாலும், ஏனையோர்க்கு அக்காதலை மறைத்த பொதுப்பார்வை காதலர்க்கே உரித்தானது. "ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே உள" (குறள் 1099; அதிகாரம்: குறிப்பறிதல்; காமத்துப்பால்) (ஏது - குற்றம்; ஏதிலார் போல - குற்றமற்றவர் போல - இங்கு ஏதும் அறியாதார் போல எனப் பொருள் கொள்ளுதல் வேண்டும்) சீவக சிந்தாமணியின் நாயகன் சீவகன் பல்லவ நாட்டிலிருந்து ஏகி தக்க நாட்டின் தலைநகராகிய கேமமாபுரத்தை அடைகிறான். அங்கு சுபத்திரன் என்னும் வணிகன் தன் மகள் கேமசரிக்குச் சீவகன் உற்ற தலைவனாகலாம் என்ற எண்ணத்தில் சீவகனைத் தனது இல்லத்திற்கு விருந்துண்ண அழைக்கிறான். சீவகன் அவ்வில்லத்தின் வாயிலை அடைந்த மாலைப்பொழுதில் மனையின் முற்றத்தில் பெற்றோர், உற்றார் சூழ கேமசரி யாழோடு வீற்றிருக்கிறாள். சீவகனைக் கண்டவுடன் காதல் கொள்கிறாள். தனக்கு மட்டும் காதற் பொருளை உணர்த்தி ஏனையோர்க்குக் கள்ளமில்லாத பொதுப்பொருள் உணர்த்திய அவளது பார்வைக்கு இவ்வுலகையே விலையாய்த் தரலாம் என்று பாவையவளின் பார்வை நலம் பாராட்டுகிறான் சீவகன் : "காதன்மை கண்ணுளே அடக்கிக் கண்ணெனும் தூதினாற் துணிபொருள் உணர்த்தித் தான்தமர்க்கு ஏதின்மை படக்கரந்திட்ட வாட்கண் நோக்கு ஓத நீரமுதும் உலகும் விற்குமே" (சீவக சிந்தாமணி பாடல் 1485; கேமசரியார் இலம்பகம்) (பொருள் கொள்ள வசதியாக சீர்கள் பிரித்துத் தரப்பட்டுள்ளன). பொருள் : தான் மனதில் என் மீது கொண்ட - காதலைக் (காதன்மை - காதல் தன்மை) கண்ணில் அடக்கி அந்தக் கண் எனும் தூதினால் தான் எண்ணிய - காதல் - பொருளை (துணி பொருள் - துணிந்த பொருள்) உணர்த்தி, தான் தன் சுற்றத்தார்க்குக் (தமர்க்கு) கள்ளமில்லாத பார்வை மட்டும் தெரியுமாறு (ஏதின்மை பட) - அக்காதற் பொருளை - மறைத்திட்ட (கரந்திட்ட) வாள் போன்ற அவளது கூரிய பார்வைக்கு (வாட்கண் நோக்கு), பாற்கடலைக் கடைந்தெடுத்த அமுதையும் (ஓத நீர் அமுதும்) இந்த உலகத்தையும் விலையாய்த் தருதல் தகும் (உலகும் விற்குமே). பாடல் ஒன்று அணி இரண்டு இங்கும் தொடங்கி வைக்க வள்ளுவனைத்தானே அழைக்க வேண்டும் ! "மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" (குறள் 90; அதிகாரம் : விருந்தோம்பல்) பொருள் : அனிச்ச மலரானது நாம் முகர்ந்து பார்த்த (நோக்க) அளவில் - நம் மூச்சுக்காற்றின் வெம்மையால் - வாடிவிடும் (குழையும்). அதுபோல - அவர்கள் வரவினால் - மகிழ்ச்சியைக் காட்டாத நம் பார்வையைக் (முகம் திரிந்து நோக்க) கண்டு விருந்தினர் மனம் வாடிப் போகும் (குழையும் விருந்து). மேற்கொண்ட பொருள் கோளினால் குறள் எடுத்துக்காட்டுவமை அணியின்பாற் பட்டது ('அதுபோல' என்று உவம உருபை எடுத்துக்காட்ட வேண்டியுள்ளதால்). இக்குறளைச் சிறியதொரு விலகலுடன் பொருள் கொள்வாரும் உண்டு. அஃதாவது, "அருகில் எடுத்து முகர்ந்து பார்த்த அளவில் அனிச்சம்பூ வாடிப் போகும். ஆனால் விருந்தினரோ, சற்றுப் பழகிய பின் என்றில்லாமல், முகம் மாறி நோக்குவதாலேயே வாடிப்போவர்" என்பதாம். இப்பொருள் கோளின்படி குறள் வேற்றுமை அணியின்பாற் பட்டது. வாடிப்போதலில் ஒற்றுமையைக் கூறி, முகர்தலும் நோக்குதலும் என்ற அளவீட்டின் படி வேற்றுமைப் படுத்துவதால் வேற்றுமை அணியானது. இரு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையைக் கூறிப் பின் வேற்றுமைப்படுத்திக் காட்டுவது வேற்றுமை அணியாம். மேற்கண்ட குறளில் வெவ்வேறு வகையில் பொருள் கொண்டமையால் இரு வேறு அணிகள் அமைந்து நின்றன. மாறாக, ஒரு பொருளுக்கே இரு வேறு அணிகள் அமையவும் காணலாம். சீவக சிந்தாமணியில் முற்சொன்னவாறு பல்லவ நாட்டிலிருந்து தக்க நாடு செல்லும் சீவகன் மலை சூழ்ந்த கானகத்தின் வழியே செல்கிறான். சுனைகளாகிய கண்களையும் சுனைகளைச் சூழ்ந்த குவளை மலர்களாகிய விழிகளையும் கொண்ட மலையாகிய மங்கை கானகத்தின் வழியே வரும் சீவகனின் துன்பம் கண்டு இரங்கி அழுவது போல மலையருவி வீழ்வதாய்த் திருத்தக்க தேவர் (சீவக சிந்தாமணி ஆக்கியோர்) பாடுகிறார். சுனைகளாகிய கண்கள், குவளையாகிய விழிகள் என்றெல்லாம் உருவகித்ததால் அங்கு உருவகவணி ஆளுமை கொண்டது. அம்மலைசூழ் கானகத்தில் இயற்கையான நிகழ்வில் புலவர் தம் (கதைக்கான) குறிப்பை ஏற்றியதால் தற்குறிப்பேற்ற அணியானது. "சுனைகள் கண்க ளாகச் சூழ்ந்த குவளை விழியாவனைய லாகா வுருவ நோக்கி மைந்தற் கிரங்கிஇனைவ போலும் வரையின் னருவி யினிதி னாடிநனைகொள் போது வேய்ந்து நாதற் பாடு கின்றான்" (சீவக சிந்தாமணி பாடல் 1417; கேமசரியார் இலம்பகம்) பொருள் : சுனைகள் கண்களாக - சுனைகளாகிய கண்களைக் கொண்டு; சூழ்ந்த குவளை விழியா - (சுனைகளைச்) சூழ்ந்த குவளை மலர்களாகிய விழிகளைக் கொண்டு; வனையலாகா உருவ நோக்கி - (சிற்பியால்) வடிக்க இயலாத (சீவகனின் பொலிவான) உருவம் நோக்கி; மைந்தர்க்கு - வீரனாகிய சீவகனுக்கு; இரங்கி - இரக்கமுற்று; இனைவ போலும் - அழுவது போன்ற; வரையின் அருவி - மலையின் அருவியில்; இனிது ஆடி - இனிமையாய் நீராடி; நனைகொள் போது - தேனில் நனைந்த மலர்களை; வேய்ந்து - தூவி; நாதற் பாடுகின்றான் - அருகனாகிய நாதனைப் போற்றிப் பாடுகின்றான். வஞ்சப்புகழ்ச்சி அணியை நம்மில் பெரும்பாலானோர் அறிவோம். அறியாதவர்களும் அதனை அன்றாட வாழ்க்கையில் அனாயசமாகப் பயன்படுத்துவர். அவ்வணியில் இரண்டு வகை உண்டு - புகழ்வது போல் இகழ்தல், இகழ்வது போல் புகழ்தல் என்பன. ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறு பாடல்களில் எடுத்தாளப்படுவதுண்டு. இரண்டும் ஒரே பாடலில் அமைந்து இன்பம் பயப்பது அருகி வருவது. அவ்வாறான புறநானூற்றுப் பாடலொன்றில் புலவரான கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் (!), பாடல் பெறும் சோழன் கடுமான் கிள்ளியை இகழ்வது போல் புகழவும், அவர்தம் பகைவரைப் புகழ்வது போல் இகழவும் காணலாம். "நீயே, அமர்காணின் அமர்கடந்து, அவர் படை விலக்கி எதிர் நிற்றலின், வாஅள் வாய்த்த வடுவாழ் யாக்கை யொடு, கேள்விக்கு இனியை, கட்கின் னாயே! அவரே, நிற்காணின் புறங் கொடுத்தலின், ஊறுஅறியா மெய் யாக்கை யொடு, கண்ணுக்கு இனியர்; செவிக்குஇன் னாரே! அதனால்,நீயும் ஒன்று இனியை;அவரும்ஒன்றுஇனியர்; ஒவ்வா யாவுள, மற்றே? வெல்போர்க் கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி! நின்னை வியக்குமிவ் வுலகம்; அ·து என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே" (புறநானூறு பாடல் 167) பொருள் : போர்க்களத்தைக் கண்டவிடத்து (அமர்காணின்) நீயே நேரில் களம் புகுந்து (நீயே அமர் கடந்து), பகைவர்தம் படை விலக்கி அவர் எதிர் நிற்கிறாய்; ஆதலின் வாளினால் வாய்த்த (வாஅள் வாய்த்த) ஆழமான வடுக்களால் ஆன (வடு ஆழ்) மேனியுடன் (யாக்கையோடு) - புகழினால் - கேட்பதற்கு இனிமையானவனாய்த் திகழ்கிறாய் (கேள்விக்கு இனியை); பார்ப்பதற்கு - வடுக்கள் பட்டதால் - இனியனாய் இல்லை (கட்கு - கண்ணுக்கு - இன்னாயே). அவரே - அப்பகைவரே - உன்னைக் கண்டதும் புறமுதுகிடுவதால் (நிற்காணின் புறங்கொடுத்தலின்), குறையற்ற (ஊறு அறியா) தத்தம் மேனிப் பொலிவுடன் (மெய்யாக்கையொடு) கண்ணுக்கு இனிமையானவர்; புகழற்று - கேட்பதற்கு இனிமையற்றோர் (செவிக்கு இன்னாரே). அதனால் நீயும் ஒரு வகையில் இனிமையானவன்; அவரும் ஒருவகையில் இனிமையானோர். இருவருக்கும் பொருந்தாத தன்மை எவை உண்டு ? (ஒவ்வா யாவுள மற்றே ?) வெல்லும் போர் புரியும் வீரக்கழல் புனைந்த (வெல்போர்க் கழல் புனை) சீரிய திருவடிகளையும் (திருந்தடி), விரைந்து செல்லும் குதிரையையும் உடைய (கடுமான்) கிள்ளியே ! உன்னையே புகழும் (வியக்கும்) இவ்வுலகம். அதன் காரணம் என்ன, பெருமைக்குரியவனே (என்னோ பெரும) ! எனக்குச் சொல்வாயாக (உரைத்திசின் எமக்கே) ! சான்றோர் கேண்மையால் வாசிப்பில் இன்பம் கொண்டு எதையெதையோ வாசிக்க, எதையெதையோ பொருத்திப் பார்க்கத் தோன்றுகிறதே ! தோன்றியதோடு நில்லாமல், சிறியளவு ஆட்டமாயிருப்பினும் ஆடியகால் நில்லாது என்பதற்கு இயைய, எழுதுகோலைக் கை தேடுகிறதே ! சரி விடுங்கள், அமர்காணின் தினவெடுக்கும் தோள்கள் இல்லாவிடினும் எழுத அரிப்பெடுக்கும் கையாவது வாய்க்கப் பெற்றதே!
  18. (குறுங்கதை) ஒரு கிலோ விளாம்பழம் --------------------------------------- பல வருடங்களின் பின், சரியாக எண்ணிச் சொன்னால், 27 வருடங்களின் பின் அவன் தன் சொந்த ஊரில் அன்று கால் வைத்தான். வான் ஓடி வந்தவருக்கு எந்த ஒழுங்கையில் திரும்ப வேண்டும் என்று சொல்கின்றேன் என்றவன் சந்தியில் திடீரென்று வானை நிற்பாட்டச் சொன்னான். 'ஏன் அண்ணை, இங்க கடையில எதுவும் வாங்க வேண்டுமே?' 'இல்லை, இல்லை, நான் ஒழுங்கையை விட்டிட்டன். சந்திக்கு முன்னமே ஒழுங்கை வந்திருக்க வேண்டும்.......' சந்தியிலிருந்து அவன் வீட்டுப் பக்கம் இருக்கும் ஒழுங்கைகளை ஒவ்வொன்றாக மனதில் எண்ணிப் பார்த்தான். மூன்றாவது ஒழுங்கை தன் ஒழுங்கை என்று எண்ணி முடித்தவன், வானை திருப்பச் சொன்னான். ஒழுங்கை உடனேயே வந்துவிட்டது. அன்று தூரமாக இருந்தவை எல்லாம் இன்று அருகருகிலேயே இருப்பது போல தோன்றியது அவனுக்கு. அவன் வீட்டு ஒழுங்கை குறுகலாகத் தெரிந்தது. முன்னர் ஒன்றாக நான்கு நண்பர்கள் நான்கு சைக்கிள்களில் ஒரே கிடை வரிசையில் இதில் எப்படி போய்க் கொண்டிருந்தோம் என்று ஆச்சரியப்பட்டான். வீடு திருத்த வேலைகள் முடிந்து அழகாக இருந்தது. வீட்டின் முன் நின்ற வேப்ப மரத்தின் சில பெரிய கிளைகள் இப்பொழுது இல்லை. ஒரு விமான குண்டு வீச்சில் ஒரு குண்டு வீட்டின் பின்னேயும், இன்னொன்று முன்னேயும் அவனின் குடும்பம் இங்கிருக்கும் போதே விழுந்திருந்தது. அப்பவே அந்தப் பெரிய கிளைகள் சேதமாகி இருந்தன. பின்னர் அவை பட்டுப் போய் தறித்து விட்டார்களாக்கும் என்று நினைத்துக் கொண்டான். இப்பொழுது வீட்டில் தூரத்து சொந்த முறையிலான இருவர்கள் இருந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்றனர். இரண்டு நாட்களில் எல்லாமே முற்றாக பழகிவிட்டன, கருக்கல் பொழுதுகளில் படையாக வரும் நுளம்புகள் உட்பட. இப்பொழுது ஒழுங்கைகள் எதுவும் குறுகலாகத் தெரியவில்லை. நெருக்கமான மற்றும் தெரிந்த மனிதர்கள் இருந்த, நடமாடிய இடங்கள் பலவும் வெறும் இடங்களாக மட்டும் இருந்தது தான் வெளியேற வழி தேடிக் கொண்டிருக்கும் ஒரு சோகமாக மனதில் ஒரு மூலையில் இரண்டு நாட்களில் நிரந்தரமாக குடி வந்திருந்தது. இடத்தை தேடி வந்திருக்கின்றேனா, அல்லது அந்த மனிதர்களை தேடி வந்திருக்கின்றேனா என்பது அவனுக்குள் ஒரு குழப்பமாக இருந்தது. பழகிய மனிதர்கள் இல்லாவிட்டால், பழகிய இடங்கள் மெது மெதுவாக அந்நியம் ஆகுமோ? அடுத்த நாள் காலையில் சைக்கிளை எடுத்துக் கொண்டு இலக்கில்லாமல் போய் கொண்டிருந்தவனுக்கு திடீரென விளாத்திக் காணியின் நினைவு வந்தது. அங்கும் எவரும் இருக்கப் போவதில்லை, ஆனால் அந்த விளாமரமாவது நிற்குமா என்ற எண்ணம் வர, சைக்கிளை அதிகமாக மிதித்தான். ஒரு காலத்தில் நித்திரை கொள்ளும் பொழுதுகளை விட்டால், அவனின் மிகுதி வாழ்க்கை அந்த விளாமரத்தை சுற்றியே போயிருந்தது. அந்தக் காணியில் ஒரு பகுதியில் கரப்பந்தாட்ட மைதானம் ஒன்றை இவனும், நண்பர்களும் உருவாக்கியிருந்தனர். மூன்று பக்கமும் வீடுகள் இருந்த படியால், பழைய மீன் வலைகளை உயர்த்திக் கட்டி, தடுப்புகள் கூட செய்து வைத்திருந்தனர். சில இரவுகளில் 'மின்னொளியில் கரப்பந்தாட்டம்' என்று விளம்பரப்படுத்தி போட்டிகளும் வைத்தார்கள். பல பகல் நேரங்களில் விளாமரத்தின் கீழ் இருந்து ரம்மி விளையாடி இருக்கின்றார்கள். அவனூரில் 304 மற்றும் வேறு விதமான சீட்டு விளையாட்டுகளை விட, ரம்மி விளையாட்டே அன்று பிரபலமாக இருந்தது. அவர்களுக்கு தமிழ்நாட்டுடன் இருந்த நெருக்கமான தொடர்பும் இதற்கு ஒரு காரணமாக இருந்திருக்க வேண்டும். மூன்று சீட்டுகளில் விளையாடப்படும் மங்காத்தா என்னும் ஒன்றையும் இடையிடையே விளையாடுவார்கள். ஒரு தடவை ஒரு அண்ணனை உயிருக்கே ஆபத்து என்ற நிலையில் மந்திகை ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போக வேண்டி வந்தது. அந்த அண்ணன் பிழைப்பானோ என்பதே சந்தேகமாக இருந்தது. மருத்துவர்கள் பல கேள்விகளின் பின், அண்ணனுக்கு முன்னர் விளாத்தி முள் ஒன்று குத்தி, அதை கவனிக்காமால் விட்டதால், அது இப்பொழுது ஏற்பு வலியாகி விட்டது என்பதை கண்டு பிடித்து, சிகிச்சை அளித்து காப்பாற்றி விட்டனர். இப்படி நினைத்துக் கொண்டே அந்த சின்ன ஒழுங்கையின் முனையை அடைந்தவனுக்கு ஒழுங்கையின் அடுத்த முனையில் விளாமரத்தின் உயர்ந்த கொப்புகள் தெரிய ஆரம்பித்தது. கோவிலுக்கு கோபுரம் தெரிவது போல. எல்லாமே மீண்டும் வந்து விட்டன என்பது போல அந்தக் கணத்தில் அவனுக்கு தோன்றியது. மரம் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தது. முழுக் காணியுமே புதர்களாக, வழி எதுவும் இல்லாமல் கிடந்தது. சுற்றி இருந்த வீடுகள் சேதமாகி இருந்தன. ஒரு காய் கூட மரத்தில் இல்லை. இந்திய இராணுவம் மக்களை கூட்டமாக கொன்ற அந்த இரண்டு நாட்களில், இந்த விளாமரத்தின் ஒரு பக்கத்தில் இருந்த வீடொன்றில் எட்டுப் பேர்கள் கொல்லப்பட்டிருந்தனர். விளாத்தியின் உச்சியில் இருந்து பார்த்தால் ஊர்ச் சந்தி தெரியும். கொல்லப்பட்ட மக்களில் பெரும்பாலானவர்கள் சந்தியில் வைத்தே கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் இந்த விளாமரம் என்றுமே காய்க்கவில்லை போல. முன்னர் இருந்ததை விட கனத்த மனதுடன் வீடு வந்து சேர்ந்தான். வீட்டில் இருப்பவர்களிடம் சந்தையில் விளாம்பழம் வாங்க முடியுமா என்று கேட்டான். சந்தையில் இருக்கின்றது, ஆனால் அவனை தனியே போக வேண்டாம் என்றனர் வீட்டிலிருப்பவர்கள். ஏன் என்று இவன் முழிக்க, வெளிநாடு என்று தெரிந்தால் உங்களை ஏமாற்றி விடுவார்கள் என்ற பதில் வந்தது. ஒரு கிலோ விளாம்பழம் 150 ரூபாய்கள் என்று சொன்னர் அதை விற்றுக் கொண்டிருந்தவர். அங்கு அவர் ஒருவரிடம் மட்டுமே விளாம்பழம் இருந்தது. அவனுடன் போனவர் பேரம் பேசினார். பேசிக் கொண்டே இருந்தார்கள். 150 ஐ கொடுத்தே வாங்குவோமே என்று இவன் மெதுவாகச் சொன்னான். இல்லை, இல்லை, இவர்கள் ஏமாற்றுகின்றார்கள், நாங்கள் வேறு இடத்தில் வாங்குவோம் என்று, அன்று விளாம்பழம் வாங்காமலேயே இருவரும் திரும்பி வந்தனர். பின்னர், சில ஒன்று கூடல்கள், சந்திப்புகள், உள்ளூர் பிரயாணங்கள் என்று நாட்கள் ஓடி முடிந்தன. கொழும்பு திரும்பும் பொழுதும் வந்தது. ஆனால் விளாம்பழம் வாங்கப்படவேயில்லை. உறவினரும் அதை எப்பவோ மறந்து விட்டார், இவனைப் போலவே. கொழும்பு திரும்பி அடுத்த நாள் பகல் வெள்ளவத்தையில் நடந்து கொண்டிருந்தவன் அங்கு விளாம்பழங்களை ஒரு தெருக்கடையில் பார்த்தான். ஒரு கிலோ 200 ரூபா என்றார்கள். அப்படியே ஒரு கிலோ வாங்கினான். வீட்டில் அவனின் சின்னம்மாவிடம் அவன் தெருவில் வாங்கி வந்த விளாம்பழங்களை காட்டினான். பழங்களை கையில் எடுத்தும், மூக்கின் அருகிலும் வைத்துப் பார்த்த அவனின் சின்னம்மா 'இவை பழங்களே இல்லை. உள்ளுக்குள் பூஞ்சணம் கிடந்தாலும் கிடக்கும். ஊரில் நல்ல பழங்கள் இருக்குதே. அங்கேயே நீ வாங்கியிருக்கலாமே' என்றார்.
  19. இரண்டு இனங்களுக்கும் விளங்கவில்லை ....நாட்டை உருவாக்கியவர்கள் நல்ல நிலையில் தான் கொடுத்து விட்டு சென்றார்கள் தங்களுடன் சேர்ந்து பயணித்தால் சிறப்பாக வாழலாம் என்று....சேர் பொன் ராமநாதன் ,அருணாச்சலம் போன்ற தலைவர்கள் பல்கலாச்சார சமுகமாக வாழ வேணும் என்ற நல்லெண்ணத்துடன் நல்லிணக்கமாக செயல்பட்டனர்..... ஆனால் காலப்போக்கில் பல சித்தாத்தங்கள் அரசியல் தலைவர்களால் மக்களுக்கு புகுத்தப்படதின் விளைவு .... நாட்டில் பல்கலாச்சாரம் போய் பல் வல்லாதிக்க சக்திகளின் சித்தாந்த,அரசியல் மாட்டி தத்தளிக்கின்றது
  20. அதுவே…. நான் இலங்கை போன பின், அங்கே உருவாகிய பொருளாதார நெருக்கடி, அறகளை, ரணில் வருகை, அதன் பின்னான முன்னேற்றம் எல்லாமுமே “உருவாக்கப்பட்ட நெருக்கடி” manufactured crisis என நம்பத்தலைபடுகிறேன். ரோலிங்கில் போய் கொண்டிருந்த நாட்டை, கோவிட் மற்றும் இந்த உருவாக்கப்பட்ட நெருக்கடி, பொருள்களை சர்வதேச சந்தையில் வாங்க முடியாதவாறு செய்துள்ளது. அதை பயன்படுத்தி சில நாடுகள் இலங்கயின் அத்தனை அரசியல் கட்சியையும், பெளத்த பீடத்தையும் தமது பூரண கட்டுப்பாட்டில் எடுத்து விட்டன. அது மட்டும் இல்லாமல் - இலங்கைக்காக பொருள் விநியோகமும் இவர்களின் முகவராகிய தனியாரிடம் போய் விட்டது. இருக்கும் நாட்டின் இலாபமீட்டும் சொத்துக்களும் இவர்களிடமே விற்கப்படுகிறது. ஆனால் ஒரு சிறுபான்மையாக - நான் இந்த நிலையை வரவேற்கிறேன்.
  21. இது விளங்கினால் இந்த இனம் எப்போதோ தனக்கென ஒரு நாட்டை அடைந்திருக்கும். இங்கே மேலே கருத்து எழுதிய பலர் - வாசித்தும், வாசிக்காதது போல நடிக்கும் பந்தியை மீள இணைக்கிறேன்.
  22. கோசான், நான் உங்களை லேட்டாக ஆனால் லேட்டஸ்ட்டாக வரவேற்கின்றேன். 👏 (R. விஜியின் தாக்குதலுக்குப் பயந்துவிட்டீர்கள் போலுள்ளதே. 😂)
  23. கண்ணை மூடிக்கொண்டு பூனை பால் குடிக்கும் பொழுது உலகம் இருட்டு என் நினைக்குமாம் .... அதுபோல சுமத்திரன் விளக்கம் கொடுக்கிறாராம் அதை நாங்கள் நம்ப வேணுமாம்... மற்றவருக்கு(அனுராவுக்கு) இந்த மொழிவாரியான மாகாண அமைப்பு நல்லது என்ற விடயம் தெரியாது என காதில பூ வேற.அவர் சார்ந்த இடதுசாரி பிதாமக்களின் கொள்கையே சிறுபான்மை மக்களின் அடையாளங்கள் காப்பாற்ற பட வேணும் என்பது தானே....போற போகை பார்த்தால் ...இலங்கை கம்னியுஸ்ட் கட்சி தோழர் சண்க்கு,பாலாவுக்கு எல்லா பாடம் எடுத்தவர் என அறிக்கை விட்டாலும் விடுவார். அரசியல் சாணாக்கியம் ....83 ஆம் ஆண்டு திட்டமிட்டு இன கலவரம் செய்த கோஸ்டிகள் இப்ப அரசியல் பாடம் எடுக்கினம் ...அன்றைய யு.என்.பி கட்சியை பலவீன படுத்த அவர்கள் இதை செய்தார்கள்....தங்களது கொள்கையை நிலை நாட்ட எதுவும் செய்வார்கள் இது மற்றுமோர் உதாரணம்
  24. காசும், நேரமும் இருந்து கூட்டம் அலைமோதும் அளவுக்கு - நாட்டு நிலமை. தெரிவித்தது 2024 இல் சிறீலங்காவிற்கு பயணம் செய்தவர். உலக வங்கிக்கு இந்த விடயம் தெரியாது போல………..
  25. இருக்கலாம், ஆனால் நீங்கள் இணைத்த வீடியோவில் இருக்கும் "டாக்டர் மன்டெல்" உண்மையான டாக்டர் அல்ல😂! Chiropractor எனும் வகையைச் சேர்ந்த போலி டாக்டர். Chiropractors மருந்தியல், அடிப்படை உடற்றொழிலியல், என்று எதையும் படித்துப் பட்டம் பெறுவதில்லை. இவர் போல பலர், "Dr. என்றால் டாக்டர் தான்" என்று நம்பும் அப்பாவி மக்களை ஏமாற்றியபடி இருக்கின்றனர் என்பது உண்மையே.👇
  26. "அத்தியடி, யாழ்ப்பாணம், இலங்கை" ["சொர்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா? அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக் கீடாகுமா?"-"ஊரு விட்டு ஊரு வந்து" என்று கேட்ட வரிகள் தான் எனது இந்த கட்டுரையின் வேர்.] பழமை வாய்ந்த அத்தியடி ஸ்ரீ சிதம்பர நடராஜா வீரகத்திப் பிள்ளையார் கோவிலும் அதனுடன் அமைந்த வாசிக சாலையும் நம்ம அத்தியடிக்கு, யாழ் நகரில் உள்ள சிறு இடத்திற்கு, முக்கிய அடையாளமாக இருந்தது. எனினும் இன்று அந்த வாசிகசாலை அங்கு இல்லை. அது ஒரு பெரும் குறையே? ஒரு 5 நிமிஷம் உட்கார்ந்தால் போதும் எப்பேர்ப்பட்ட[எவ்வகையான] கவலையும் தணியும். இதை நான் பெருமையாகவே சொல்வேன்.விடுதலை நாட்களில், ஓய்வு நேரங்களில் கூடும் இடம் அவை இரண்டும் தான். வாசிகசாலை ஊர் புதினம் அறிய ,கோவில் முற்றம் நண்பர்களை சந்தித்து அளவளாவ, பின் ஒன்று சேர்ந்து விளையாட. சித்திரைப் புதுவருட தினத்தில் யாழ் அத்தியடி பிள்ளையார் கோயில் வருடாந்த தேர் உற்சவம் நடைபெறும். கைவிசேசத்துடன் கொண்டாட்டமும் கலை கட்டும். "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்பது ஔவையாரின் முது மொழி. "ஆலயம்- இது ஆன்மாக்கள் இலயப்படும் அல்லது ஒன்று படும் இடம் என்றும், கோயில்- கோன்(அரசன்) உறையும் இடம் எனவும் பொருள் கூறுவார்கள். எமக்கோ பெரியவர்கள் ஆனபின்பும், இன்று வெளிநாடுகளில் உள்ள மதுக் கடை அல்லது பொது விடுதி [pub] கள் நண்பர்களை சந்திக்க உதவுவது போல அது தொடர்ந்து இருந்தது. எம்மை பார்த்து கொண்டு யாழ் ரயில் நிலையம் ,எமது ஒரு பக்க எல்லையில் அமைந்துள்ளது ."நாம் "ஊர்விட்டு ஊர் சென்று வாழ்ந்தாலும் யாழ் மண் வாசம் மனம் விட்டு போகாதே, யாழ் தேவி ரெயில் ஏறுவோம், எங்கள் இதயத்தின் மொழி பேசுவோம்" என்று "கவிஞர் சதீஸ்" எழுதிய பாடல் வரிகளை இது நினைவூட்டும். ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் நெஞ்சில் பின்னிப் பிணைந்த யாழ்தேவியின் சத்தத்தையும் ஆரவாரத்தையும் கேட்காத நாட்களே இல்லை . "ஆறுமுக நாவலன் அடியிணை பரவுதும் தேறு முகவின்பந் திகழ்தரற் பொருட்டே" என "நாவலர் சற்குருமணிமாலை" போற்றும், தமிழும் சைவமும் தந்த நல்லை நகர் ஆறுமுக நாவலர் வீடு, இன்றைய நாவலர் மண்டபம், எமது வீட்டிற்கு பின்னால் உடனடியாக உள்ளது. நாம் சிறுவராக இருந்த போது அங்கு நாம் விளையாடுவது உண்டு. 1952, 1956 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டிகளிலும் மூன்று ஆசியப் போட்டிகளிலும் இலங்கைக்காக விளையாடிய நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் (Dr Nagalingam Ethirveerasingam) அத்தியடியில் வசித்தவர் மட்டும் அல்ல, நான் படித்த அதே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மாணவனும் கூட. நாவலர் கூட அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில்-இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் - பாடசாலை மாணவராகவும் ஆசிரியர் ஆகவும் இருந்தவரே! பொதுவாக யாழ்ப்பாண நகர்,யாழ் கோட்டை, சந்தை பகுதியையும் வைத்திய சாலை, பேருந்து, புகையிரத, நிலையத்தையும் முதன்மை வீதிகளையும் உள்ளடக்கியுள்ளது. வட அமெரிக்கரின் பேச்சுப்பாங்கில் இதை "downtown." எனவும் கூறலாம். இதன் எல்லையில் தான் அத்தியடி உள்ளது. யாழ் நகர் மக்கள் பொதுவாக தாம் யாழ்ப்பாணம் என்றே கூறுவார்கள். கொஞ்சம் யாழில் எங்கே என்று கேட்கும் போதுதான் அத்தியடி, ஆணைப்பந்தியடி, நல்லூர், கந்தர்மடம், .. இப்படி வட்டாரம், இடக்குறிப்பையும் சேர்த்து கூறுவார்கள். இது ஒரு நல்ல பண்பாடு. மேலும் யாழ்ப்பாணத்திற்கே அணித்தான நெடிந்துயர்ந்த பனை மரங்களை ஆங்ககாங்கே காணாலாம். பனை மரம் புயலுக்கு பயங்கரமாக ஆடி அசைந்தாலும் ,நாணல் போல வளைந்து தப்பிக் கொள்ளாதது .அது வளைவதை விட ,வளையாமல் உடைவதையே விரும்புவது.இன்னல், துன்பம் வரும் போது,யாழ்ப்பான மக்கள்,பனை மரத்தின் இந்த சிறப்பான தன்மையை உதாரணமாக எடுத்து ,தாமும் அது போல் உற்சாகத்துடன் தைரியம், துணிச்சலுடன் தளர்வுறாத, விடாப்பிடியாய் எதிர்க்கின்ற ஒரு இயல்புக்குணம்/ பண்பை வளர்த்துள்ளார்கள் .இது பொதுவாக பெருமை படக்கூடிய ஒரு விசேஷ குணமாகும் . "யாழ்பாணம் போனேனடி பொன்னம்மா யாழ்பாணம் போனேனடி"என்ற அறு[60]வது எழு[70]பதில் எல்லாராலும் முணுமுணுக்கப்பட்ட அந்த பாடல் வரிகளும் எனக்கு இப்ப ஞாபகம் வருகிறது.அப்ப நான் பாடசாலை,பல்கலைக்கழக மாணவன். யாழ்பாணம் பொதுவாக சுவர்க்கம் என்று சொல்லும் அளவிற்கு நேசமான,நட்புணர்வுள்ள மக்களையும் உயர் பண்பாட்டையும் ஆரோக்கியமான காலநிலையையும் ,கண்ணைக் கவருகிற சுற்றுப்புறத்தையும் கொண்டது' 18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட "யாழ்ப்பாண வைபவமாலை" எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன்[யாழ்+பாணன்] ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றிடல் எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்ட தென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப் பிரதேசத் துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்று கூறுகிறது .போர்த்துகேயர் வருகைக்கு பின் காலப்போக்கில் மெல்ல மெல்ல திரிபு அடைந்து யாழ்ப்பாணம் [Yarlpaanam]- யாப்பாணம்- ஜப்பாணம்- ஜப்பணம் - ஜவ்வணம் [Jaffanam]- ஜவ்ண [Jaffna] இப்படி பிரித்தானியர் காலத்தில் முற்றுப் பெற்றிருக்கலாம்? என அறிகிறேன். யாழ்ப்பாணம் எங்கும் சேவல் கூவுகிறது. பொழுது விடிகிறது. சூரியன் சுடுகிறது. குயில்கள் பாடுகின்றன.வெள்ளை மல்லிகையின் நறுமணம் எங்கும் பரவுகிறது இந்த சொர்க்கத்தில் நித்திரை செய்து எழும் போது என்னவொரு சுகம்!மலையில் சூரியன் மேற்கு திசையில் மறைவதை பனை மரங்களின் "நிழல் படம்"[நிழல்வடிவம்] வழியாக பார்ப்பதில் என்ன பேரின்பம்!!அதன் பின் மங்கும் அந்தியொளியில் பனை தந்த அமிர்தத்தை அவசரமாக விழுங்குவதில் காணும் இன்பமோ- சொல்லில் அடங்கா மகிழ்ச்சி!!! அத்தியடி பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் இருக்கும் மதகு, தெரு கம்பம் இவைதான் எங்களின் பாராளுமன்றம்! இதுவே எங்களின் வெள்ளை மாளிகை!! இறுதியாக, சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் இயற்றிய ஒரு பாடலை முடிவுரையாக இங்கு தருகிறேன். "சித்திவரும் புத்திவருஞ் செல்வமொடு கல்விவரும் பத்திவருங் கீர்த்தி பரம்பிவரும்- அத்தி அடிவாழ் விநாயகனை யன்போடு நம்பிப் படிமேல் வணங்கு பவர்க்கு" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  27. 👍.... பொதுவாகவே பல மரக்கறிகளும், இலை தழைகளும் நல்லவையே என்பது என் அபிப்பிராயமும் கூட. அவை ஒரு நிவாரணி என்று சொல்லபடும் போது தான், ஏற்றுக் கொள்ள ஒரு தயக்கம். வீட்டில் வாரத்திற்கு ஒரு தடவை வெந்தயம், பூண்டுக் குழம்பு செய்வார் எனது மனைவி. அருமையாக இருக்கும், இது கேள்வி - பதில் - விளக்கம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஒரு சக்தி என்பதால், நான் அங்கு விளக்கம் எதுவும் கேட்பதில்லை.......😀
  28. அப்பிள் வினிகர், உள்ளி, வெந்தயம், வெங்காயம் - இவை தரும் ஆரோக்கிய நன்மைகள் பற்றிய செய்திகளை "மருத்துவ தகவல்கள்" என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், இவற்றின் மருத்துவ குணங்கள் பற்றிய தகவல்கள் சிறிதும் மருத்துவ அறிவியலில் பயிற்சியோ, அனுபவமோ இல்லாத தரப்பிடமிருந்து தான் பெரும்பாலும் வெளிவருகின்றன. மிக அரிதாக சில சந்தர்ப்பங்களில், போசணையியலில் தகுதி பெற்ற (dietician) சிலரிடமிருந்து வருகின்றன. இந்த போசணையியல் தகுதி கூட இரு வருடங்களில் மேலோட்டமாகக் கற்ற பின்னர் கிடைக்கும் BS தகுதியேயொழிய, ஆழமான மருத்துவ, உயிரியல் அறிவினால் கிடைக்கும் தகுதி அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். எனவே, இவை "மருத்துவ தகவல்கள்" என்பதை விட quack களால் இணையத்தில் வெளியிடப் படும் "போலி மருத்துவத் துணுக்குகள்" என்ற வகைக்குள் அடங்கும். மேலே பிபிசி தந்திருப்பது போன்ற ஆக்கங்களில் தான் இந்த "துணுக்குகள்" தகுதி பெற்ற நிபுணர்களால் சீர் தூக்கிப் பார்க்கப் படும். அவர்கள் கூட "தெரியாது" என்று தான் சொல்ல முடியும், ஏனெனில் இவை பற்றி முறையான ஆய்வுகள் மருத்துவ உலகில் செய்யப் படவில்லை.
  29. தமிழினவிடுதலைக்கும், விடுதலை உணர்வுக்கும் மற்றும் தனிமனித உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் இடையேயான ஊடாட்டம் என்பது சம்பவச்சூழலை மையங்கொண்டே நகரும். கூட்டுச்சேர்ந்து அழிகப்படுகின்றோம், கொல்லப்படுகின்றோம், கொடுமைகளுகுள்ளாக்கப்படுகின்றோம் என்ற சிந்தனையோடு வீதியால் செல்லும் ஒருவரது கண்ணிலே, தனது இனத்திற்கு எதிரான அவதூறாளனைக் காணும்போது உணர்சிமேலீட்டினால் இயல்பாக எழுகின்ற கொந்தளிப்பு வன்முறை எதிர்ப்பாக வடிவம் பெறுகிறது. மனித நடமாட்டப் பகுதிகளில் அது சில மணித்துளிகளில் குழுச் செயற்பாடாகப் பரணிமிக்கிறது. சிலர் இதனை ஏன் மிதிப்பான் எனக் கடந்துவிட சிலரோ அகற்றிவிட முனைந்து அதன்மேல் வீழ்தல் நிகழ்கிறது. தமிழர்களுள்ளே பண்டாரவன்னியன் காலம் முதல் தொடர்கதைதானே. இதுபோன்ற பிழைப்புவாதிகள் இருக்கவே செய்வர். சமகாலத்திலே சட்டாம்பிள்ளை; சும் செய்யததை, செய்வதை நாம் கடந்து செல்வதுபோல் இதுபோன்ற தரங்கெட்டோரைக் கடந்துவிட வேண்டும். ஈடுபட்டவரால் கடந்துவிட முடியவில்லை. கைக்கூலிகளை நாம் இனங்காணவேண்டும். வெளிப்படுத்த வேண்டும் என்ற அளவிலே இருப்பதற்கான கருத்தாடல்கள் வலுப்பெற வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  30. இந்தியாவின் சமாதான முயற்சிகளை தனது இராணுவத்தினரின் நலனுக்காகப் பாவிக்க எண்ணிய ஜெயாரும், தொடர்ச்சியான தாக்குதல்களில் இறங்கிய போராளிகளும் தமிழ்ப் போராளி அமைப்புக்களின் தலைவர்கள், குறிப்பாக பிரபாகரன் இந்தியாவின் இலங்கை தொடர்பான புதிய வெளியுறவுக் கொள்கை குறித்து மிகுந்த அதிருப்தியடைந்திருந்தார். ஆகவே, இந்தியாவின் இந்தத் திடீர் மாற்றத்தால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சூழ்நிலையினைக் கையாள்வது குறித்து ஆராய ஈழத்தேசிய விடுதலை முன்னணி - புலிகள் கூட்டமைப்பு அடிக்கடி சந்தித்துக் கலந்துரையாடல்களில் ஈடுபடத் தொடங்கியது. அதுபோன்றே, இந்தியாவால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த புதிய சூழ்நிலையினைத் தமக்குச் சார்பாகப் பயன்படுத்த நினைத்த ஜெயவர்த்தனவும், லலித்தும், இந்தியாவின் புதிய வெளியுறவுக் கொள்கையூடாக தமிழர்களின் ஆயுத விடுதலைப் போராட்டத்தையும், அவர்களின் கோரிக்கையான தனிநாடு அல்லது சுயாட்சி நிறைந்த பிராந்தியம் எனும் கருப்பொருளையும் முற்றாகவே சிதைத்துவிட கங்கணம் கட்டினர். தனது இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு, அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மூச்சுவிடுவதற்கான சந்தர்ப்பம் ஒன்றினை உருவாக்கிக் கொடுக்க நினைத்தார் ஜெயார். யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கினை நிலைநாட்டும் கடமைகளை முற்றிலுமாகக் கைவிட்டிருந்த பொலீஸார் தமது முகாம்களைக் காப்பாற்றிக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கியிருந்தனர். வடக்குக் கிழக்கின் ஏனைய பகுதிகளில் பொலீஸாரும் இராணுவத்தினரும் கூட்டாக கவச வாகனத் தொடரணிகளில் ரோந்து புரிந்து வந்தனர். போராளிகள், இந்த ரோந்து தொடரணிகள் மீதும், இராணுவ முகாம்கள் மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதும் தமது தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திக்கொண்டே வந்தனர். சித்திரை 10 ஆம் திகதி ஈழத் தேசிய விடுதலை முன்னணியுடன் இணைந்துகொண்ட அதே நாள், புலிகள் யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்திருந்தனர். இத்தாக்குதல் அரசாங்கத்தின் உயர் மட்டத்திலும், பாதுகாப்புத் துறையினரின் அதிகாரிகள் மட்டத்திலும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதற்குப் பதிலடியாக தமிழ் மக்கள் மீது பழிவாங்கும் தாக்குதல்களுக்கு ஜெயார் உத்தரவிட்டார். இது அன்று நிலவிய சூழ்நிலையினை மோசாமக்கி விட்டிருந்தது.இத்தாக்குதல்கள் போராளிகளை நோக்கி மக்களை மேலும் தள்ளிவிட்டது. பெருமளவு இளைஞர்கள் போராளி அமைப்புக்களில் இணைந்துகொண்டதுடன், தமிழ் மக்களைக் காக்கும் வீரன் என்கிற நிலைக்குப் பிரபாகரன் மக்கள் மத்தியில் உயர்ந்துகொண்டிருந்தார். தமிழ் மக்களைக் காக்கும் நோக்கில் புலிகளுடன் இணைந்து ஏனைய போராளி அமைப்புக்களும் கண்ணிவெடித் தாக்குதல்கள் மற்றும் பொலீஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் என்பவற்றில் ஈடுபடலாயினர். இராணுவத்தினரும், பொலீஸாரும் முகாம்களுக்குள் தொடர்ந்தும் முடக்கப்பட்டு வந்ததுடன் அவர்களின் ரோந்து அணிகள் மீது பதுங்கியிருந்து தாக்கும் செயற்பாடுகளும் போராளிகளால் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வந்தன. சித்திரை 17 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து படகு மூலம் தமிழ்நாட்டிற்குத் தப்பிச் செல்ல எத்தனித்த 27 தமிழ்ப் பொதுமக்களை கடற்படை சுட்டுக் கொன்றிருந்தது. இத்தாக்குதலுக்குப் பழிவாங்க மாத்தையா தலைமையிலான புலிகளின் அணியொன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பகுதியில் ரோந்து சென்ற பொலீஸ் இராணுவ‌ வாகனத் தொடரணி மீது சித்திரை 21 ஆம் திகதி (1985) தாக்குதலொன்றினை மேற்கொண்டது. படகில் கொல்லப்பட்ட அனைவரையும் பயங்கரவாதிகள் என்று அழைத்த லலித் அதுலத் முதலி, கடற்பயணத் தடையினை மீறி எவர் சென்றாலும் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது சரியென்று பாராளுமன்றத்தில் கூறினார். ஒட்டுசுட்டான் கண்ணிவெடித் தாக்குதலில் நான்கு இராணுவத்தினர் பலியாகினர். தம்மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் தாக்குதலில் இராணுவ இறங்கியது. புலிகளின் தாக்குதல் நடைபெற்ற பிரதேசத்தைச் சுற்றிவளைத்த இராணுவம், அங்கிருந்த 24 இளைஞர்களை இழுத்துச் சென்று சுட்டுக் கொன்றது. தம்மால் கொல்லப்பட்ட தமிழர்களை அனைவரையும் புலிகள் என்று அறிவித்த இராணுவம், கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பின்னரான துப்பாக்கிச் சண்டையில் இவர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் அறிவித்தது. பின்னர், அதேநாள், அப்பிரதேசத்தில் வான் ஒன்றில் பயணித்த 10 தமிழர்களை வீதியில் இறக்கிய இராணுவம், அவர்களையும் வரிசையில் நிற்கவைத்துச் சுட்டுக் கொன்றது. அங்கு கொல்லப்பட்ட பத்து அப்பாவிகளும் புலிகளின் பட்டியலில் இராணுவத்தினரால் சேர்க்கப்பட்டார்கள். மறுநாளான சித்திரை 22 ஆம் திகதி, முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பகுதியில் சென்ற இராணுவ தொடரணி மீது மாத்தையா தலைமையிலான புலிகள் அணி நடத்திய தாக்குதலில் 20 இராணுவத்தினர் சம்பவ இடத்தில் பலியானார்கள். சித்திரை 25 ஆம் திகதி, என்றுமில்லாதவாறு புளொட் அமைப்பு ஒரு தாக்குதலில் இறங்கியது. சிங்களப் பகுதியான மதவாச்சி பொலீஸ் நிலையம் மீது புளொட் நடத்திய தாக்குதலின் போது 12 ரைபிள்களும், 24 ஒற்றைச் சன்னத் துப்பாக்கிகளும், ஒரு உப இயந்திரத் துப்பாக்கியும், துப்பாக்கி ரவைகளும் அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இத்தாக்குதலில் சிங்களப் பொலீஸ்காரர் ஒருவர் கொல்லப்பட்டார். தேசிய புரட்சி குறித்துப் பேசிவந்த புளொட் , ஒரு சிங்களவரைக் கொன்றதற்காக சிங்கள மக்களிடம் மன்னிப்புக் கேட்டிருந்தது. புலேந்திரனுடன் பிரபாகரன் 1987 ல் அதேநாள், அம்பாறை மாவட்டத்தில் விசேட அதிரடிப்படை மீது ஈரோஸ் அமைப்பு நடத்திய தாக்குதலில் ஆறு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டனர். மறுநாள், சித்திரை 26 ஆம் திகதி, புலிகளின் திருகோணமலை மாவட்டத் தளபதி சந்தோசம் மாஸ்ட்டரும், புலேந்திரன் அம்மானும் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கட்டைப்பறிச்சான் பகுதியில் இராணுவ ரோந்தணி மீது தாக்குதல் ஒன்றினை நடத்தினர். கண்ணிவெடியில் அகப்பட்ட இராணுவத்தினர் பயணம் செய்த ஜீப் வண்டி சிதறியபோது, ஒரு லெப்டினன்ட் தர அதிகாரியும் ஆறு சிப்பாய்களும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதல் நடைபெற்று இருநாட்களுக்குப் பின்னர், சித்திரை 28 ஆம் திகதி, யாழ்ப்பாண மாவட்டத்தில் இருவேறு கண்ணிவெடித் தாக்குதல்கள் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்டன. இவற்றில் முதலாவது தாக்குதலை நடத்திய கிட்டு, ஈழநாடு பத்திரிக்கையிடம் பேசும்போது பிரபாகரனின் வழிநடத்துதலிலேயே அத்தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறினார். யாழ்ப்பாணத்தின் கரவெட்டிப் பகுதியில், நவிண்டில் வீதியில் கண்ணிவெடி நிலத்திற்குக் கீழ் புதைக்கப்பட்டிருந்தது. "தொடரணியின் முன்னால் வரும் ஜீப் வண்டியை இலக்குவைத்து கண்ணிவெடியை இயக்குவதென்றும் தீர்மானித்தோம். ஜீப் தாக்குதலுக்குள்ளானதும், பின்னால் வந்துகொண்டிருந்த துருப்புக் காவியில் பயணிக்கும் இராணுவத்தினர் உடனேயே வெளியில் குதித்து பதில்தாக்குதலுக்கு நிலையெடுப்பார்கள் என்று நான் அனுமானித்தோம். அவர்கள் நிலையெடுக்கக் கூடிய இடங்கள் என்று நாம் கருதிய இடங்களில் எமது போராளிகளை நிலைவைத்திருந்தோம். இராணுவத்தினர் நிலையெடுக்கும்போது அவர்கள் மீது தாக்குதலைத் தொடுக்குமாறு போராளிகளுக்குப் பணித்திருந்தோம். நாம் நினைத்தவாறே அனைத்தும் நடந்தது" என்று கிட்டு கூறினார். எட்டு வாகனங்கள் அடங்கிய தொடரணியின் முன்னால் வந்த ஜீப் வண்டி தாக்குதலுக்கு உள்ளானது. அதிலிருந்து எட்டு இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். பின்னால் வந்துகொண்டிருந்த துருப்புக் காவி வாகனங்களில் பயணித்த இராணுவத்தினர் உடனடியாக வாகனங்களை விட்டிறங்கி அயலில் இருந்த தோட்டக் காணிகளில் நிலையெடுத்துத் தாக்கத் தொடங்கினர். ஆனால், அக்காணிகளில் ஏற்கனவே மறைந்திருந்த புலிகளின் தாக்குதல் அணி, இராணுவத்தினரின் பதுங்கு நிலைகளுக்குப் பின்னால் இருந்து இராணுவத்தினர் மீது மீது தனது தாக்குதலை ஆரம்பித்தது. இத்தாக்குதலில் மேலும் பத்து இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மொத்தமாக 18 இராணுவத்தினர் அன்றைய தாக்குதலில் கொல்லப்பட்ட, புலிகளின் தாக்குதல் அணி இழப்பின்றி முகாம் திரும்பியது. அதேநாள் மாலை, பருத்தித்துறை பொலீஸ் நிலையத்திற்கருகில் பதுங்கியிருந்த புலிகள், அருகிலிருந்த இராணுவ முகாமிலிருந்து வெளியே வரவிருந்த இராணுவத்தினருக்காகக் காத்திருந்தனர். வெளியே வந்த ஜீப் வண்டி மீது கிர்னேட்டுக்கள் கொண்டும், பெற்றொல்க் குண்டுகள் கொண்டும் தாக்குதல் நடத்தினர். ஜீப் தீப்பற்றிக்கொள்ள அதில் பயணித்த நான்கு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சித்திரை 30 ஆம் திகதி, குருநகர் இராணுவ முகாமிலிருந்து கொழும்புத்துறை நோக்கிப் பயணித்து, பின்னர் அரியாலையூடாக நெடுங்குளம் வீதி வழியே வந்த இராணுவத் தொடரணியுடன் புலிகள் நேரடியான துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். கடுமையான சண்டையில் பத்து இராணுவத்தினர் கொல்லப்பட இராணுவத் தொடரணி பின்வாங்கிச் சென்றது.
  31. வணக்கம் வாத்தியார்.......! ஆண் : மழை வருது மழை வருது குடை கொண்டு வா மானே உன் மாராப்பிலே ஹொய் பெண் : வெயில் வருது வெயில் வருது நிழல் கொண்டு வா மன்னா உன் பேரன்பிலே ஆண் : மழை போல் நீயே பொழிந்தாய் தேனே பெண் : இரவும் இல்லை ஆண் : பகலும் இல்லை பெண் : இணைந்த கையில் ஆண் : பிரிவும் இல்லை பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் ஆண் : நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் நதிகள் மீதும் நடந்து பார்ப்போம் பெண் : சுகங்கள் யாவும் அளந்து பார்ப்போம் உனது தோளில் நான் பிள்ளை போலே உறங்க வேண்டும் கண்ணா வா......! --- மழை வருது மழை வருது ---
  32. உயிர்த்தெழுதல் போலவே பல சமயங்களில் ஒருவர் உயிர்த்தெழவே மாட்டார் என்ற நம்பிக்கையும் தேவையானது. எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஜெயலலிதாவின் சமாதியின் முன் அமர்ந்து தியானம் செய்வது ஜெயலலிதா மீண்டும் வரவே மாட்டார் என்ற நம்பிக்கையிலேயே......! உங்களின் இந்தப் பதிவில் இதுதான் உச்சம்....... சரி .....ஒரு சந்தேகம்..... ....சசிகலா அம்மையார் சமாதியில் சடார் சடார் என்று சாத்தினதும் இந்த நம்பிக்கையில்தானே ..........! 😁
  33. இதுக்குத்தான் ஒரு திருமணத்தின் தேவை அவசியமாகின்றது.......மாரியில் வாங்கிற ஏச்சில் உடல் சூடாகிடும்.....கோடையில் ஒரு பாசமான பார்வை போதும் வீடே ஏ சி யாகிவிடும்......! 😁
  34. இது, வீட்டுக்காரிக்கு தெரியுமோ? இல்ல..... வீட்டுக்கும் இல்லாம, பக்கத்துக்கு வீட்டுக்கும் இல்லாம மிளகாய்த்தூள் குப்பையிலே போய் விழுந்திடுமோ என பயமாய் இருக்கு. பிறகு, சுமந்து கொண்டு வந்து கொடுக்கிறவைக்கும் மிளகாய்த்தூளால் அர்ச்சனை நடக்கலாம். சீ சீ ...... சிறியர் மருத்துவமையிலேயே ரொம்ப நல்ல பிள்ளையாய் கண்ணை மூடிக்கொண்டு இருந்த ஆளாச்சே!
  35. https://yarl.com/forum3/forum/247-யாழ்-26-அகவை-சுய-ஆக்கங்கள்/ மேலே உள்ள சுட்டியை அழுத்தி பாருங்கள்.எல்லாமே பத்திரமாக இருக்கிறது. அதற்கு யாயினியைக் கேட்டால் அவ என்ன தான் செய்வா?
  36. இந்த மனசே இப்படித்தான் குளிராக இருந்தால் சூடடை விரும்பும் சூடாக இருந்தால் குளிர்மையை விரும்பும். இக்கரையும் அக்கரையுமாய் தாவித்தறி கெட்டு ஓடும். வாழ்க்கை என்றால் அதையே அப்படியே ஏற்றுக் கொண்டு தான்வாழவேண்டும்.
  37. "மூன்று அந்தாதிக் கவிதைகள்" "விமானம்" "விமானம் பறந்தது இராவணன் வீற்றிருக்க வீற்றிருந்த கோலம் வீரத்தை செப்பியது செப்பிய வார்த்தைகள் உண்மை பேசின பேசிய திசையில் பறந்தது விமானம்!" .............................................. "அறுவடை" "அறுவடை கொடுத்த விளைச்சல் பணமாக பணம் சேர்ந்து திருமணம் கைகூட கைகூடிய நன்னாள் கொட்டிய மகிழ்ச்சியில் மகிழ்ந்த வாழ்வில் குழந்தையே அறுவடை!" .............................................. "அன்பு" "அன்பு கொண்டு மழலைகள் ஒன்றாய் ஒன்று கூடி இன்பம் பொழிய பொழிந்த மகிழ்வு உள்ளத்தை நிரப்புதே! நிரப்பிய மதுவை கிண்ணத்தில் ஏந்தி ஏந்திய காதலை அவளில் கொட்டி கொட்டிய ஆசையில் தெரிந்ததே அன்பு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  38. "தலை தீபாவளி" எனக்கு திருமணம் செப்டம்பர் நாலாம் திகதி நடந்தது, என் மனையாள், என் பாடசாலையிலேயே என்னைவிட இரண்டு ஆண்டு குறைய படித்த மாணவி. ஆகவே அவரை நன்றாக எனக்கு முதலிலேயே தெரியும் . அதே போல அவருக்கும் என்னையும் என் போக்கையும் மிக நன்றாகத் தெரியும் . 'சமயமா ? மானிடமா?' என்ற விவாத போட்டியில் நாம் எதிர் எதிர் அணிக்கு தலைமை தங்கி உள்ளோம். என்றாலும் இது பெற்றோர் முடிவு எடுத்த ஒன்று. அவள் மிகவும் சமயத்திலும் அதன் கொண்டாட்டங்களிலும் நம்பிக்கை உள்ளவள். நான் எதிலும், அது பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வந்தாலும், எடுத்தவுடன் நம்பிக்கை கொள்ளுவதில்லை, அலசி ஆராய்ந்தே, அது ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தால் மட்டுமே, ஏற்றுக் கொள்வேன். குறிப்பாக தமிழர் பண்பாட்டுக்கு அல்லது தமிழரை இழுவுபடுத்தும் எதையும் நான் ஏற்றுக் கொளவதில்லை. அது மட்டும் அல்ல தமிழர் சமயமான சைவ சமயம் இந்து மதத்துக்குள் [வைதீக மதம்] உள்வாங்கப்பட்டதே, அது தன் தனித்துவத்தை இழக்க காரணம் என்பதே என் வாதம். உதாரணமாக முருகன்- ஸ்கந்தன் ஆகியதை அல்லது சிவன்- ருத்திரன் ஆனதை கூறலாம். நாம் இருவரும் இந்த விடயங்களில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் மிக அன்பாக, நட்பாக, விட்டுக்கொடுப்புடன் வாழ்க்கை ஆரம்பித்தது. எந்தவித பிரச்சனையும் எமக்கிடையில் வரவில்லை. நல்ல புரிந்துணர்வுடன் குடும்ப வாழ்வு நகர்ந்தது. அவர் ஒழுங்காக விரதங்கள், ஆலயம் போவது, எல்லாம் கடைப்பிடிப்பார். அது அவரின் தனிப்பட்ட விடயம். அவரின் சுதந்திரம். நான் தலையிடுவதில்லை. நான் பிறவியில் சைவம் [சைவ உணவு உண்பவன்] என்பதால், அது உண்மையில் என்னை தாக்கவே இல்லை. இரண்டு மாதம் கழிய தீபாவளி நாள் நெருங்கி வந்தது. அவள் அது 'எமது' தலை தீபாவளி என்று பெரிதாக கொண்டாட வேண்டும் என ஒரு திட்டமே போடத் தொடங்கிவிட்டார். அவர் அதை கொண்டாடுவது பற்றி எனக்கு கவலை இல்லை. அதற்குத் தேவையான பணம், நேரம் ஒதுக்கி கொடுப்பதிலும் பிரச்சனை இல்லை. ஆனால் அது 'எமது' என்று என்னையும் அதற்குள் இழுப்பதில் தான் பிரச்சனையாக எனக்கு இருந்தது. என் மனச் சாடசிக்கு விரோதமாக என்னால் என்னை ஈடுபடுத்த முடியாது. அது அவளுக்கும் தெரியும். என்றாலும் அவள் பிடிவாதமாக அதில் இருந்தாள் தீபாவளி என்ற பெயரில்,உண்மையில் ஒரு இறப்பை கொண்டாடுகிறார்கள். அதுவும் ஒரு தமிழ் [திராவிட] அரசனின் மரணத்தை விழாவாக கொண்டாடுகிறார்கள்! ராமர் என்ற தனியொருவரை தீபத்துடனும் புத்தாடையுடனும் சிறந்த உணவுகளுடனும் கொண்டாடட்டும். அதே போல கிருஷ்ணாவையும் கொண்டாடட்டும். அதில் ஒருவருக்கும் ஆட்சேபம் இல்லை. ஆனால், ஏன் ஒரு மரணம் கொண்டாடப் படவேண்டும்? அது தான் என் கேள்வி . உதாரணமாக காலிஸ்தானார்கள் இந்திரா காந்தியின் படு கொலையை விழாவாக கொண்டாடினால், அதற்கு நீ எவ்வாறு முகம் கொடுப்பாய் ? இதைத்தான் நான் அவளிடம் விளக்கமாக கேட்டேன். ராணுவத்தை ஏவிய நடவடிக்கைக்காக இந்திரா காந்தியை மன்னிக்க சீக்கியர்களில் பலர் தயாராக இல்லை. அவர்களுக்கு இந்திரா காந்தி ஒரு மோசமான பெண். மறவர்களுக்கு அவள் ஒரு நல்ல பெண். ஆகவே கொலை மற்றும் எதிர் கொலை போன்றவை ஒரு கொண்டாட்ட நிகழ்வாக மாறக்கூடாது. ஒரு தேசமோ ஒரு தேசத்தின் ஒரு பகுதியோ ராமரின் பிறந்த தினத்தையோ அல்லது முடிசூட்டு விழாவையோ கொண்டாடுவதில் ஒரு தவறும் இல்லை. ஆனால் தமிழர்களின் [திராவிடர்களின்] பிரதிநிதியாக கருதப்படும் ராவணன் உருவப் பொம்மை ஏன் எரிக்க வேண்டும்? இது, இருதரப்பினர்களுக்கும் இடையில் அவர்களின் பகையான உறவை ஞாபகப்படுத்தவே உதவும் என அவளுக்கு விரிவாக எடுத்து கூறினேன். ஆனால் அவள் அதில் விட்டுக்கொடுப்பு செய்ய மறுத்துவிட்டாள். தலைத் தீபாவளி என்பது திருமணமான புதுத் தம்பதிகள் கொண்டாடும் முதல் தீபாவளிப் பண்டிகையாகும். இப்பண்டிகையின் பொழுது மணமகன், மணமகள் வீட்டினருடன் இப்பண்டிகையை கொண்டாடுகிறார். நீங்க எங்கள் வீட்டிற்கு வந்து அப்பா அம்மா என் சகோதரர்களுடன் அதில் பங்குபற்றவேண்டும். இது நான் கல்யாணத்துக்கு முன்பே கண்ட கனவு! என் நம்பிக்கை!! . அவள் கோபமாக சொல்லிவிட்டு படுக்கை அறைக்கு போய் படுத்துவிட்டாள் ! எனக்கு இது தலை தீபாவளியா அல்லது தலை போகும் தீபாவளியா புரியவில்லை. அன்று என்னுடன் சமயமா ? மானிடமா ? என்ற விவாதத்தில் தோற்று கண்ணீருடன் கோபமாக போனது ஞாபகம் வந்தது. நான் ஏளனச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டு கைதட்டிக் கொண்டு இருந்தேன் . ஆனால் இன்று நிலைமை வேறு? ஆனால் நாம் தமிழர். உலகின் மூத்த குடிகளில் ஒருவன். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பறைசாற்றிய இனம் என்ற கர்வமும் என்னை விட்டு விலகவில்லை? அவள் இரவு சாப்பாடு சாப்பிடவும் இல்லை, ஏன் இரவு உடை கூட மாற்றவில்லை, அப்படியே கட்டிலில் குறுக்காக படுத்து இருந்தாள். நான் ஒரு தேநீர் மட்டும் குடித்துவிட்டு, இரவு செய்திகளை பார்த்துவிட்டு அறைக்கு வந்தேன். அவள் குறுக்காக மட்டும் அல்ல, கைகளையும் நீட்டி, நான், தனக்கு பக்கத்தில் படுக்காதவாறு போர்வையால் மூடி படுத்து இருந்தாள். உண்மையில் நித்திரையா ஊடலா எனக்கு தெரியாது? "நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவது அன்றே, வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்றும் இலமே" என்ற வரி என் நெஞ்சில் மின்னலாக வந்தது. உனக்கான துன்பத்துக்கு காரணமான நீயே அதற்கான ஆறுதல் என்றது இனி என் வாழ்க்கை இனிய வாழ்க்கை என்று ஒரு போதும் எண்ணாதே. பிறப்பு இறப்பு போல இன்ப துன்பமும் உண்டு என எச்சரிக்கையும் விட்டது. அது உண்மையில் அவளுக்கு சொல்ல வேண்டியது. தேவையில்லாமல் தானே தன் தலைக்கு வலிய துன்பத்தை வாரிப் போட்டுக்கொண்டு, மற்றவரையும் படுக்கவிடாலால் வருத்திக் கொண்டு படுத்து இருப்பவள் அவள்தானே! குடும்பம் என்றால், ஒருவரை ஒருவர் வீட்டுக் கொடுத்து நடக்கவேண்டும். ஆனால் அதற்காக எம் மானத்தை விற்கமுடியாது. எனவே காலை நாம் இருவரும் அவளின் தாய் வீட்டுக்கு போவதாகவும், என்றாலும் ஏதாவது சாட்டு சொல்லி, கொண்டாட்டத்தின் பொழுது அதில் இருந்து விலகுவதாகவும் யோசித்தேன். நான் மற்ற அறையில், அவளை குழப்பாமல் படுத்துவிட்டேன். ஆனால் எனக்கு நித்திரை வரவில்லை. கண் மூடி சும்மா படுத்து இருந்தேன். ஓர் சில மணித்தியாலத்தில் பின், யாரோ என் கதவை மெல்ல திறப்பது கேட்டது. மெல்ல கண் திறந்து பார்த்தேன். அவள் தான் ! இரவு உடையில், அழகு தேவதையாக, என் கிட்ட வந்து, என்னை தட்டினாள். "சரி நாம் இறப்பை கொண்டாடாமல் முடிசூட்டு விழாவை மட்டும் கொண்டாடுவோம், இப்ப எழும்பு வாங்க சாப்பிட " என்று கையை பிடித்து இழுத்தாள்! இருவரும் சாப்பிட்ட பின், அவள் திருஞானசம்பந்தர் தேவாரம் ஒன்றை எனக்கு கேட்கக்கூடியதாக "வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்" பாடிக்கொண்டு, மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ? என்று அழாக்குறையாக கேட்டாள். எனக்கு சிரிப்புத் தான் வந்தது. கபாலீச்சரம் என்னும் கோயிலில் [சிவன் கோவில்] விளங்கும் பெருமானைக் என்று குறிப்பிட்டதை அவள் கவனிக்கவில்லை போலும். "மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி, பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர, வருகதில் அம்ம!" [அகநானுறு 141] தெருவெங்கிலும் விளக்கு வைக்கின்றனர். மாலைத் தோரணம் கட்டுகின்றனர். பழமை மேம்பாடு கொண்ட நம் ஊரில் எல்லாரும் கார்த்திகை என்ற விளக்கீட்டு விழாவை [தீபம் + ஆவளி / விளக்கு வரிசை] கொண்டாடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் விழாக் கொண்டாட அவர் வரவேண்டும் என்ற அவளின் ஏக்கம் முழுதாக தேவாரத்தை பார்க்க விடவில்லை போலும். தலை தீபாவளி, தலை போகாமல் , புரிந்துணர்வுடன் அவள் தீபாவளியாகவும் நான் கார்த்திகை விளக்கீடாகவும் ஒன்றாக இரு தரப்பு குடும்பகங்களுடனும் ஆனால் மரணத்தை, இழவு படுத்துதலை தவிர்த்து மகிழ்வாக கொண்டாடினோம்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  39. உங்கள் விமர்சனத்துக்காகவே ஒருமுறை காடு படத்தைப் பார்க்க வேண்டும் போல உள்ளது. நன்றி நொச்சி.
  40. உங்களுடைய விமர்சனம் நன்றாகவே உள்ளது.......நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்க வில்லை......ஒருமுறை தேடிப் பார்க்கத்தான் வேண்டும் .......! 👍 நன்றி நொச்சி .......!
  41. நானும் இந்த அர்த்தத்தை நம்பிக்கொண்டிருந்தேன். ஒர் இந்திய பாண்டிச்சேரி கத்தோலிக்க பாதிரியார் ஒரு பிரசங்கத்தில் இப்படி கூறினார்.
  42. கிண்ணியாவில் பிள்ளயார் கோவில் இடித்து புத்தர் சிலை வைக்கும் போது உங்கடை பம்மந்தர் கொழும்பு இலவசமாய் கிடைக்கும் வீட்டுக்கு வாய திறந்து கொண்டு கிடந்தவர் கிண்ணியா பற்றி ஒரு வார்த்தை கேட்கவில்லை ஏன் இதுவே ஒரு முஸ்லிம் இடத்தில் நடந்தால் அவங்கடை அரசியல்வாதிகள் சும்மா இருப்பார்களா ?
  43. என்று கூறி, இந்தக் கட்டுரை சொல்ல வந்ததுக்கு எந்த சம்பந்தமும் இல்லாம. தமது வழக்கமான புலி எதிர்ப்பு / தலைவர் மீதான காழ்ப்புணர்வு அரிப்பை சொறிந்து சுய இன்பம் கண்டார் இதை எழுதிய ராகவன். சம்பந்தப்பட்டவர்கள் ஒருவரும் இன்று இல்லையே என்பதால் அவர் எனக்கு (மட்டும்) சொன்னார், காதில் குசுகுசுத்தார், என்று இப்படி இன்னும் எத்தனையும் எழுதலாம். இந்த வருடாந்திர இலக்கிய கூட்டம் என்பதே புலி எதிர்ப்பு காச்சலாம் நன்கு பீடிக்கப்பட்டு புலிகள் இல்லாமல் போய் 15 ஆண்டுகள் போன பின்னும் கூட, இன்னும் அந்த காச்சலின் தீவிரத்தால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை அதிகம் கொண்ட கூட்டத்தால் நிகழ்த்தப்படும் நிகழ்வு.
  44. ஆனந்தசங்கரியர் தமிழர் விடுதலைக்கூட்டணியை முடக்கியதுபோல இப்போ சுமந்திரன் தமிழரசுக்கட்சியை முடக்கிவிட்டார் இனிமேல் சிங்களவன் காலடியில மெதுவாகப்போய் விழுந்துகிடக்கவேண்டியதுதான். பார்க்க சட்டத்தரணி தவராஜா அவர்களது பத்திரிகையாளர் சந்திப்பு. இப்போதான் சுமந்திரன் சரியான முகவரிக்குப்போன கடிதமாக அங்க இங்க எண்டு திரிஞ்சு செல்லிடம் சென்றிருக்கிறார். மாகாப்பிரபு இங்கையும் வந்திட்டியளோ எனச் சிங்களவன் தலையில கைவைக்கப்போகிறான். ஆமை புகுந்தவீடும் ஆமினா புகுந்தவீடும் உருப்படாது எனச்சொல்வது சுமந்திரன் விடையத்தில சரியாகப்படுகுது. அதுசரி நீதிமன்றில் குட்டையை குழப்பிவிட்டு கோணேஸ்வரம் கோயிலுக்கு ஏன் போனவராம் கடவுளே கண்பியூஸ் ஆகப்போகிறார். இந்த மேதாவி கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவரெல்லோ. அப்ப இவர் தனது இனத்துக்கு மட்டுமல்ல தான் சார்ந்த சமயத்துக்கும் விசுவாசம் இல்லாதவரா?
  45. இரண்டும் முரண்பட்டுக் கொண்டன. கடுமையாக முட்டி மோதிக் கொண்டன. முடிவில் இரண்டுமே செத்து மடிந்து விட்டன. நடந்த சண்டையில் இரண்டில் ஒன்றும் வெற்றிபெறவில்லை. மாறாக ஓநாய்க்கு எவ்வித சிரமமுமின்றி இரண்டும் உணவாகி விட்டன. இதற்கு இரண்டுமே ஒரே பரம்பரை, ஒரே இனம்; ஒரே வீட்டைச் சேர்ந்தவை. இது போன்றுதான் சிலவேளை நமது குடும்பத்தினுள் நிகழும் சண்டைகளும் கூட நமக்கு மத்தியில் பிரிவையும் பகையையும் தவிர வேறு எதுவும் மிஞ்சப் போவதில்லை. நமது சகோதரனுடன் நாம் சண்டையிட்டு வெற்றியீட்டினால் அதன்மூலம் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அர்த்தமல்ல. மாறாக நமது சண்டையினால் மூன்றாம் நபரான எதிரியின் சந்தோஷத்திற்கு நாம் இரையாகி/விடுவதோடு பேரிழப்புகளுக்கும் ஆளாகி விடுகின்றோம். உலகில் குறைகள், பிரச்சினைகள் இல்லாத மனிதர்களில்லை. உறவுகள்,நட்புகள் நிலைக்க அவர்களது குறைகளையும் சற்று சகித்து வாழ பழகுவோம் மகிழ்ச்சியுடன் வாழ விரும்பினால். எல்லாவற்றிலும் குறை காண வேண்டாம் அனைத்திலும் நுட்பம் பார்க்கவேண்டாம் விட்டுக்கொடுத்து வாழ்வோம் உறவு செழிக்கும் அன்பு தழைக்கும். 🙏 முகநூலிருந்து......
  46. நாட்டின் இனவாத அரசியல் தலைவர்களே பறந்து பறந்து மற்றைய நாடுகளிடம் யாசகம் பெற்று கொள்ள திரிகையில் யாசகம் பெரும் சிறுவர்களின் எதிர்காலம் பற்றி ஓநாய் அழுகை அழுவது வியப்பாக உள்ளது . புத்தனே யாசகம் பெற்றுத்தானே வாழ்ந்தார் என்று சண்டைக்கு வரகூடாது அதுவேறை.
  47. வணக்கம், யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் சிறப்புப் பகுதியில் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக. கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம். இதுவரை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......! (suvy) புதனும் புதிரும் ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே ( சுப.சோமசுந்தரம்) (தீ) சுவடு (தனிக்காட்டு ராஜா) இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024. ( ஈழப்பிரியன்) மரணம் (ரஞ்சித்) களியாட்டத்தில் கலாட்டாவா ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா? (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன். ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும் ( Kavi arunasalam) மயிலம்மா. ( suvy) வல்வை மண்ணில் பிரித் (nedukkalapoovan) ஆதி அறிவு ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை ( ரசோதரன்) என்ன பார்ட்டி இது?? (விசுகு) முடிவிலி (ரசோதரன்) மழைப் பாடல்கள் (ரசோதரன்) மின் காற்றாலைத் தோட்டம். ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும் (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா. (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம் (ரசோதரன்) இந்த ஏழு நாட்கள் (ரசோதரன்) தோற்கும் விளையாட்டு (ரசோதரன்) அன்றுபோல் இன்று இல்லையே! ( பசுவூர்க்கோபி) வாசலும் வீடும் (ரசோதரன்) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) மேய்ப்பன் (ரசோதரன்) ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்) தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி) விழல் (ரசோதரன்) இதுவரை பதியப்பட்ட 30 ஆக்கங்களில் புதிதாக இணைந்த உறுப்பினர் ரசோதரன் 12 ஆக்கங்களை பதிந்துள்ளார். உற்சாகமாக சுய ஆக்கங்களை பதியும் உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. சுய ஆக்கங்கள் எழுதக்கூடிய ஆற்றல் உள்ள உறுப்பினர்கள் பலர் இன்னும் பதியாமல் பார்வையாளார்களாக உள்ளனர். யாழ் அகவை 26 க்கு இன்னும் 15 நாட்களே உள்ளன என்பதால் விரைவில் ஆக்கங்களைப் பதியுங்கள். குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவுபெறும். இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் " பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும். சக கள உறுப்பினர்கள், பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம். நன்றி
  48. என்ன தான் பால் வைத்தாலும் பாம்பு ஒரு நாளைக்கு கொத்தியே தீரும் என்பார்கள். சிங்கள தலைவர்கள் இந்தா பிரச்சனையை தீர்க்கிறேன் அது இது என்று தமிழருக்கு உறுதியளித்து விட்டு கடைசியில் பிரட்டுவது போல பாம்பும் படம் காட்டி காட்டியே கொத்திவிடும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.