Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    19667
    Posts
  2. வீரப் பையன்26

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    16861
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    88820
    Posts
  4. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20351
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/19/24 in all areas

  1. சிறிய வயது பெட்டைகள் இந்தா பார் செய்து காட்டுகிறேன் என்று சவால் விட்டுட்டுப் போயிருப்பார்கள். மூட்டை மூட்டையாக தூக்கிக் கொண்டு போறதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை மட்டும் மடக்கி பிடித்திருக்கிறார்கள். கட்டாருடன் கதைத்து 7 பேரை விடுதலை செய்த மாதிரி ஜெய்சங்கர் வந்து கதைத்து இவர்களையும் விடுவிக்க வேண்டும்.
  2. "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்" உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் . அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது: "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008] இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை. ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம். என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது. ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும் ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி: எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன். குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 , பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில், "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody'] என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம், "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்] 'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம், "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்" 'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான். அவள் அவனுக்குப் பதிலளித்தாள்: "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  3. அப்படி சொல்ல முடியாது….. இந்த மிசைல்தான் எமது கண்ணுக்கோ, ரேடாருக்கோ புலப்படாதே? ஆகவே அதை ஈரான் பாவிக்கவில்லை என எப்படி கூற முடியும்?
  4. பையன் மைண்ட் வொய்ஸ்: அப்பாடா .......... பெரியப்பாவுடன் 10 பேர் ஆச்சுது ....... இனி போட்டிக்கு பங்கமில்லை........! 😂 கிருபன் & பையன்.......! 🤣
  5. ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில் நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
  6. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் அண்ணா🙏🥰...................................................... வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰............................................
  7. அட… இந்திய வியாதி, அமெரிக்காவிற்கும் தொற்றி விட்டதா.
  8. போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்! இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  9. 🤣 இந்த நுளம்பு கூட்டத்தை அவர்கள் பாணியில் சில ஒபாமாக்கள், விஜி களை ஏவி எதிர்கொள்ளுவதுதான் புத்திசாலித்தனம். அல்லது நீர்யோக நகரம், கொஸ்டரீக்கா போன்றனவற்றையும் கையில் எடுக்கலாம். சீரியசாக எடுத்தால் எமக்கு மண்டை காய்ந்து விடும். ————— உண்மையில் ஓரளவுக்கு சாத்தியமான எடுகோள், பலூசிஸ்தான் போலான் கணவாய் வழி மேற்கே இருந்து ஈயுரேசியர், பேர்சியன்ஸும், வடக்கே கைபர் கணவாய் வழி வந்த மத்திய ஆசியர், மங்கோலியர், பிராமணரும் (வேதங்களை நம்பியோர்)….. சிந்து சமவெளியில் இருந்த திராவிட/தொன் தமிழ் நாகரீகத்தை பிரதியீடு செய்ய, திராவிட/தொல் தமிழர் விந்திய மலைக்கு தெற்கே ஒதுங்கினர். இங்கே திராவிடம் எனப்படுவது தொல் தமிழையே. இன்று தென்னிந்தியாவில் காணப்படும் மக்களின், மொழிகளின், பண்பாடுகளின் தோற்றுவாய். அலர்ஜி உபாதைகள் இருப்போர் திராவிட என்பதற்கு பதில் தொந்தமிழ் என்றோ அல்லது X நாகரீகம் எனவோ அழைத்துக்கொள்ளலாம். ஆனால் X பெர்சியாவில் இருந்து வந்தது என்பது - சந்தேகமே இல்லாமல் - product of Costa Rica தான்🤣.
  10. ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம் அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
  11. பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர். ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.
  12. ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
  13. இஸ்ரேல் ஈரான் மீதுதாக்குதல் தொடங்கிவிட்டதா. நான் பையன்26 றின் சகோதரி கல்யாணி அக்கா இஸ்ரேல் தாக்குதலை 22 ம் திகதி தொடங்கும் என்பதை நம்பி திங்கள் லீவுக்கு விண்ணப்பித்து விட்டேன்
  14. ஈரானும், இஸ்ரேலும் சும்மா நொட்டி விளையாடிக் கொண்டு இருக்கின்றார்கள். தம்மிடம் இருக்கும் அணு, இரசாயன ஆயுதங்களை பாவித்து தமது பலத்தை உலகறிய செய்யவேண்டும். புண்ணிய பூமி - மத்திய கிழக்கு வெடித்து சிதறுவதை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்.
  15. முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான்
  16. சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்" இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
  17. 1)RR, CSK,SRH, KKR 2) 1# RR 2# CSK 3# SRH 4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
  18. அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
  19. முடிவுரை: நாங்கள் நின்றது ஸ்பெயின் நாட்டின் ஒரு தீவு. Majorque (Mallorca) 3600 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தனித்தீவு என்பதால் எப்பொழுதும் மாறி மாறி (ரோமேனியர் போர்த்துகல் அராபியர்கள்....) ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களின் பட்டியல் நீளமானது. கிட்லரால் தம்மை பிடிக்க முடியவில்லை காரணம் தங்கள் நாட்டில் பாதுகாப்பு உத்தரவாதம் தரும் மலைகள் என்கிறார்கள் அங்குள்ள மக்கள். இந்த Majorque என்பதே அராபியர்கள் வைத்த பெயர் தான். அருகே பக்கத்தில் உள்ள இன்னொரு சிறிய தீவுக்கு Minorque என்று பெயர் வைத்துள்ளனர். மலையும் கடலும் உள்ள தீவு என்பதால் ஆதி மனிதர்கள் கற்களை கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்துள்ளனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்ந்த மக்கள் முதன் முதலாக கற்களால் அரணமைக்கு வாழ்ந்த இடத்தையும் பார்வையிட்டோம். அந்த இடத்தை ஒரு காட்சியகமாக வைத்து இருக்கிறார்கள். அந்த அரணின் நுளைவாயிலில் 8 தொன் கல் ஒன்றை இரண்டு மீற்றர் உயரத்தில் வைத்து இருப்பதை எங்களுக்கு வழிகாட்டியாக வந்தவர் பெருமையுடன் சொன்னார். நான் அவருக்கு தஞ்சாவூரை காட்டினேன். அதிசயித்தார். Majorque இன் சனத்தொகை கிட்டத்தட்ட 1 மில்லியன் ஆனால் அங்கு எப்பொழுதும் சனத்தொகையாக 3 மில்லியன் மக்கள் இருப்பார்கள். அதாவது 2 மில்லியன் மக்கள் சுற்றுலா வந்து போவார்கள். இதனுடைய விமான நிலையம் Palma. ஒரு நிமிடத்திற்கு ஒரு விமானம் ஏற ஒன்று இறங்கியபடி இருக்கும். இதன் வரலாற்றை பார்த்தால் மிகவும் வறண்ட பிரதேசம். குடிநீர் வசதி இல்லை. ஆனால் இன்று பச்சை பசேல் என்று இருக்கிறது. அநேகமாக அந்த மக்களுக்கு தேவையான மரக்கறி வகைகள் பழங்கள் இறைச்சி மீன் என்பன அங்கேயே கிடைக்கின்றன. கிடைக்கும் மழைத் தண்ணீரை நிலத்திற்குள் சேமித்து தங்கள் தண்ணீர் தேவையின் பெரும் பகுதியை பூர்த்தி செய்கிறார்கள். ஸ்பெயின் நாட்டின் அதி கூடிய வசதியும் வருவாயும் வேலை வாய்ப்பும் பணச்செழிப்பும் கொண்ட பிரதேசமாக இத்தீவு இன்றுள்ளது. இது எம் போன்ற பலருக்கும் ஒரு நல்ல உதாரணமாகும். எனக்கு எங்கே போனாலும் என் நாடு என் ஊர் என்று தான் மண்டைக்குள் ஓடும். இங்கும் அப்படி தான். நானும் இவ்வாறான ஒரு வரட்சியான காலநிலை மற்றும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவை பிறப்பிடமாகக் கொண்டவன் தான். ஆனால் என் தீவின் இன்றைய நிலைமை மற்றும் அங்குள்ள மக்களின் வாழ்வியலை பார்க்கும்போது இத்தீவு என்னை மிகவும் பாதித்தது. ஆனால் நாங்கள் முக்கியமாக நான் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இல்லை. எனது இனத்தின் சாபமோ என்னவோ நான்கு பேர் மட்டும் தான் எல்லாவற்றையும் செய்யட்டும் என்று தூங்கி விடுகிறது. நாங்கள் நின்ற இடம்: camp de mar நின்ற கோட்டல்: alua camp de mar நன்றி.
  20. ஏது முதல் இலங்கைத் தமிழரா? டாய் இந்தியனே, பல தேர்தல்களின் வாக்குச் செலுத்திய எங்கடையாக்களைத் எனக்குத் தெரியும். 😁 இந்த அன்ரி, சட்டப்படி ஆதார் அடையாள அட்டையை எடுத்திருக்கா. அதனாலை படம் போட்டுக் காட்டுறாங்கள். அதனலை பெரிசா போடுராங்கள். வேறொன்டுமில்லை!
  21. மக்களவைத் தேர்தல் 7 PM நிலவரம்: தமிழகத்தில் 72.09% வாக்குப்பதிவு - கள்ளக்குறிச்சி தொகுதியில் அதிக வாக்குகள் திருக்காட்டுப்பள்ளி அருகே சரக்கு வாகனத்தில் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விட்டலபுரம் வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய லூர்துபுரம் கிராம மக்கள். சென்னை: தமிழகத்தின் 39 மக்களவைத் தொகுதிகளிலும் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% சதவீதம் வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் 75.64 சதவீத வாக்குகளும், பதிவாகின. மத்திய சென்னையில் குறைந்தபட்சமாக 67.37 சதவீத வாக்குகளும் பதிவாகின. சென்னையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியது: “தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்னும் சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர். விளவங்கோடு இடைத்தேர்தல் நிலவரம் இன்னும் சிறிது நேரத்தில் வெளியிடப்படும். இந்த எண்ணிக்கை சதவீதத்தில், தபால் வாக்குகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த சதவீத எண்ணிக்கை வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மட்டுமே. கடந்த 2019 தேர்தலில் 7 மணி நிலவரப்படி கிட்டத்தட்ட 69 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. அத்துடன் இதை ஒப்பிடுகையில் இந்த வாக்கு சராசரி நன்றாகவே இருக்கிறது. பல இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த காரணத்தால், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான நேரத்தில் அதிகமானோர் வாக்களிக்க வந்துள்ளனர். 6 மணிக்குள் வந்த பலரும் ஆர்வத்துடன் டோக்கன் பெற்றுக்கொண்டு வாக்களிக்க காத்திருந்தனர். நாளை பகல் 12 மணிக்கு துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியாகும். ADVERTISEMENT முக்கியத் தகவல்: தேர்தல் ஆணையத்தில் இருந்து ஓர் அறிவுறுத்தல் வந்துள்ளது. அடுத்த கட்டமாக கேரளா, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் மட்டும் பாதுகாப்பு படையினர் சோதனை தொடரும். மற்ற இடங்களில் பாதுகாப்பு படையினரை திரும்ப பெற உள்ளோம்” என்று அவர் கூறினார். தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெரிய அளவிலான அசாம்பவித சம்பவங்களின்றி வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு சில இடங்களில் தாமதாக தொடங்கப்பட்டது; சில இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது போன்ற சின்னச் சின்ன சலசலப்புகள் மட்டுமே ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பி வைக்கும் பணிகளில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி வாரியான வாக்குப்பதிவு - இரவு 7 மணி நிலவரம்: கள்ளக்குறிச்சி - 75.67% தருமபுரி - 75.44% சிதம்பரம் - 74.87% பெரம்பலூர் - 74.46% நாமக்கல் - 74.29% கரூர்- 74.05% அரக்கோணம் - 73.92% ஆரணி - 73.77% சேலம்- 73.55% விழுப்புரம்- 73.49% திருவண்ணாமலை - 73.35% வேலூர் - 73.04% காஞ்சிபுரம் - 72.99% கிருஷ்ணகிரி - 72.96% கடலூர் - 72.40% விருதுநகர் -72.29% பொள்ளாச்சி -72.22% நாகப்பட்டினம் - 72.21% திருப்பூர் - 72.02% திருவள்ளூர் - 71.87% தேனி - 71.74% மயிலாடுதுறை - 71.45% ஈரோடு - 71.42% திண்டுக்கல் - 71.37% திருச்சி -71.20% கோவை - 71.17% நீலகிரி - 71.07% தென்காசி - 71.06% சிவகங்கை -71.05% ராமநாதபுரம் -71.05% தூத்துக்குடி - 70.93% திருநெல்வேலி - 70.46% கன்னியாகுமரி - 70.15% தஞ்சாவூர்- 69.82% ஸ்ரீபெரும்புதூர் - 69.79% வட சென்னை - 69.26% மதுரை - 68.98% தென் சென்னை -67.82% மத்திய சென்னை - 67.35% ஆளுநர் ரவி மகிழ்ச்சி: “ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது. இதில் நானும் பங்கெடுத்ததில் மகிழ்ச்சி” என்று சென்னையில் வாக்குச் செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் பேசினார். | வாசிக்க > “ஜனநாயகப் பெருவிழா இது!” - சென்னையில் வாக்களித்த ஆளுநர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி சசிகலா நம்பிக்கை: "ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, எங்களுள் உள்ளவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு" என்று வாக்களித்த பிறகு வி.கே.சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார். | வாசிக்க > “எங்களுள் உள்ளவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு” - வாக்களித்த பின்பு சசிகலா நம்பிக்கை தேர்தல் புறக்கணிப்புகள்: தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விரிவாக வாசிக்க > ஏகனாபுரம் முதல் வேங்கைவயல் வரை: தேர்தல் புறக்கணிப்பும் பின்புலமும் சேலத்தில் இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு: சேலம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பழைய சூரமங்கலம் தனியார் பள்ளிக்கு மனைவியோடு வாக்களிக்க வந்த பழனிசாமி என்பவர் வரிசையில் நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் ஏற்கனவே இருதய அறுவை சிகிச்சை செய்து தொடர் மருத்துவத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கெங்கவள்ளியில் வாக்களிக்க வந்த மூதாட்டி சின்ன பொண்ணு என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவு தொடங்கியவுடனேயே... - தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் முதல் நபராக வாக்களித்துச் சென்றார். வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே வரிசையில் காத்திருந்து வாக்குப்பதிவு செலுத்தினார். அதேபோல், சேலம் சிலுவம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்களித்தார். தனது குடும்பத்துடன் வந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் காரைக்குடியில் கண்டனூரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது வாக்கை செலுத்தினார். ப.சிதம்பரம் வாக்களித்துவிட்டு அளித்தப் பேட்டியில், “தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெறும்” என்றார். மலையாளத்தில் வேட்பாளர் பட்டியல்: நீலகிரி மாவட்டத்தில் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்திலும் அச்சடிக்கப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், குன்னூர் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 20 சதவீதம் மலையாள மக்கள் வசிக்கின்றனர். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 689 வாக்குச்சாவடிகளிலும் வேட்பாளர் பெயர் பட்டியில் தமிழ் மற்றும் மலையாளத்தில் அச்சடிக்கப்பட்டு, வாக்குச்சாவடிகளில் ஒட்டப்பட்டிருந்தது. தமிழகத்தில் மலையாளம் மக்கள் அதிகம் வசிக்கும் நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வேட்பாளர் பெயர் பட்டியல் மலையாளத்தில் அச்சடிக்கப்படுவது குறிப்பிடதக்கது. அரசியல் பிரபலங்கள் வாக்களிப்பு: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மனைவி கிருத்திகாவுடன் சென்னை எஸ்ஐடி கல்லூரி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். திருச்சியில் தில்லைநகர் மக்கள் மன்றம் வாக்குச்சாவடி மையத்தில் அமைச்சர் கே.என். நேரு வாக்களித்தார். தென்சென்னை தொகுதியில் சாலிகிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்தார் முன்னாள் ஆளுநரும், தென்சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன். கோடம்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு. திருச்சியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ். தருமபுரி பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தென்சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் குடும்பத்துடன் வாக்கு செலுத்தினார். திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்து கிராமத்தில் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் வாக்களித்தார். “கோவையில் ஒரு வாக்காளருக்காவது பாஜக சார்பில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டது என நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலில் இருந்து விலகத் தயார். பண அரசியலுக்கு மக்கள் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்னை தேனாம்பேட்டை SIET கல்லூரியில் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “நான் என்னுடைய வாக்குரிமைக்குரிய ஜனநாயக கடமையை ஆற்றியிருக்கிறேன். அதேபோல் வாக்குரிமை பெற்றிருக்கக்கூடிய அனைவரும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும். மறந்திடாமல், அதை புறக்கணித்திடாமல், தங்களது ஜனநாயக கடமையை ஆற்றிடவேண்டும் என்று உங்கள் மூலமாக நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.” என்றார். திமுகவுக்கான வெற்றி வாய்ப்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்ப, “நீங்கள் நினைப்பது போல இந்தியாவுக்கு வெற்றிதான்” எனக் கூறிச் சென்றார். இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... - மேலும் முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில், “நாடு காக்கும் ஜனநாயகக் கடமையை ஆற்றினேன்!. அனைவரும் தவறாது வாக்களியுங்கள். குறிப்பாக, First time voters-ஆன இளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களியுங்கள்! நம் இந்தியாவின் எதிர்காலம் உங்கள் கையில்... #Elections2024” என்று பதிவிட்டுள்ளார். வாக்குப்பதிவு நிலவரம்: முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 24.37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கள்ளுக்குறிச்சியில் வாக்குப்பதிவு அதிகமாகப் பதிவாகி வருகிறது. படம்:ஜெ.மனோகரன் வேங்கைவயலில் வாக்குச் செலுத்த யாரும் வரவில்லை: வேங்கைவயல் கிராமத்தில் இதுவரை பொதுமக்கள் யாரும் வாக்குச்செலுத்த வரவில்லை. ஏற்கனவே, அவர்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர். இந்நிலையில், தற்போது வரை பொதுமக்கள் யாரும் வாக்குச் செலுத்த வரவில்லை. ரஜினி வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு: சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இந்த வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர். இயந்திர கோளாறு காரணமாக நடிகர் கவுதம் கார்த்திக் உட்பட பொதுமக்கள் சிறிது நேரம் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் கோளாறு சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது. வேலூரில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு: வேலூர் காந்திநகர் பகுதியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலை 7 மணிக்கு முன்னதாகவே வாக்குப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் வரிசையில் நீண்ட நேரமாக காத்துக்கிடக்கின்றனர். 7 கட்டங்களாக தேர்தல்: இந்தியாவின் 18-வது மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் மற்றும் 19 மாநிலங்களில் 62 தொகுதிகள் என 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுதவிர, தமிழகத்தில் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலும் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 மக்களவை தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. மாலை 6 மணிக்கு வாக்காளர்கள் அதிக அளவில் காத்திருந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி, அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தை பொருத்தவரை 39 தொகுதிகளில் 874 ஆண்கள், 76 பெண்கள் என 950 வேட்பாளர்கள் மக்களவை தொகுதிகளில் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில், தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்தலில், 10.92 லட்சம் முதல்முறை அதாவது 18-19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதுதவிர, பதிவு செய்ததன் அடிப்படையில் 85 வயதுக்கு மேற்பட்ட 6.14 லட்சம் வாக்காளர்கள், 4.61 லட்சம் மாற்றுத் திறன் வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.hindutamil.in/news/tamilnadu/1233008-lok-sabha-elections-2024-phase-1-voting-live-updates-in-tamil-nadu.html
  22. குமாரசாமி அண்ணை… தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
  23. இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம் அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம் அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  24. டிரம்ப் இந்த range இற்கு அவரது தீவிர ஆதரவாளர்களை கொண்டு வந்து கொஞ்ச நாளாகிவிட்டது.
  25. "காலம் மாறும் கவலைகள் தீரும்?" 'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது! அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில் அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான். யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அவனின் பொல்லாத காலம் இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும், அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய், விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் . எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும் தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள். அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது! “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்” தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!! அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் ! "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!" இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!! "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும் ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
  26. உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை... எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
  27. இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்?
  28. வடை போய் தங்கம் வந்தது டும் டும் டும்☺️
  29. 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
  30. வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  31. வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ந‌ண்பா🙏🥰............................................
  32. 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். CSK, KKR, RR,SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) CSK #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) KKR #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator RR 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Jos Buttler 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jos Buttler 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH
  33. 0.50 ஈரோ பொருளை 2 ஈரோவுக்கு விற்றது சப்பை மேட்டர்தான்….. இது எழுதாமலே விளங்க வேணும்…. எழுதியிம் விளங்கவில்லை எண்டால் கஸ்டம்தான்🤣. ————— அம்சமான ஹம்சமாலி ரேஞ் ரோவரில் சுத்துறா…. அர்ஜூன் மகேந்திரன் அப்பீட்டு…. இலங்கை கிரிகெட்டில் கொள்ளை ரிப்பீட்டு…. திறைசேரியிலே திருட்டு…. ஷப்டர் தன் கழுத்தை தானே நெரித்தார்……. இதெல்லாம்தான் சப்பை மேட்டர்….80 ரூபா வடை அல்ல🤣. பிகு அது சரி எங்க நம்மட குட்டி சிறிதரன்? ஒரு கேள்வியோடு ஓடினவர்தான் - 2 நாளா தலை கறுப்பை காணோம்🤣 @பையன்26 பாருங்கோ சிறி அண்ணாவும் இது இப்ப நடந்தது என்கிறார்.
  34. ஏற்கனவே எனது ஐடியாவை சொல்லி அந்த கருத்தை மறுதலித்த உறவை நோக்கி வைக்கப்பட்ட கேள்வி என்பதை வாசித்து கிரகித்து கொண்டு பின்னர் கேள்வி கேட்க வேண்டும். 😂
  35. அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of war,) ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும் உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம் கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது . எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது. கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும் , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில் இருந்து தெரிகிறது. இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும். இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.
  36. Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர். இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர். படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
  37. பெற்றி பெற‌ வாழ்த்துக்கள் க‌ந்த‌ப்பு அண்ணா🙏🥰..........................
  38. அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக செய்து முடிக்கலாம். தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
  39. அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம் ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  40. உங்களுக்கு மேலே இருப்பது என் பதில். இப்போ யார் கோமாளி🤣 இதுவும் சீமான் ப்ரோ விட்டா இன்னொரு அவிட்டா. இல்லை என்றால் இப்படி தேர்தல் ஆணையம் சொன்ன ஆதாரம் எங்கே? அண்ணன் சொல்வதை எல்லாம் மொக்கு தம்பிகள் நம்பலாம். எல்லாரும் நம்ப தேவையில்லை. நீங்கள் ஏலவே என்னை 200 உபி என பல இடங்களில் எழுதிவிட்டீர்களே. எனக்கு ஒரு நற்பெயர் மீதும் ஆர்வம் இல்லை. அப்படி புற இருக்கோ இல்லையோ இ டோண்ட் கேர். இருந்தாலும் - சீமான் முகத்திரையை கிழிக்காமல் அந்த பெயரை தக்கவைப்பதிலும் பார்க்க கெட்ட பெயரே மேல்🤣
  41. கமாசையே ஒன்றும் செய்ய முடியவில்லை. ஈரானுடனான தாக்குதலில் அநேகமாக அணு ஆயுதம் பயன்படுத்தப்பட சாத்தியமுண்டு. ஆயுதங்களை விற்று தள்ளுவதே எமது குறிக்கோள். நண்பனெல்லாம் பிறகு தான். --யாராக இருக்கும்? According to a survey performed by The Hebrew University of Jerusalem, 74% of the Israeli public opposes an Israeli counter-attack in Iran if it would undermine the security alliance between the United States, the United Kingdom, France, and several moderate Arab countries, including Jordan and Saudi Arabia. 7 பத்தும் ஒரு 4ம் சேர்ந்தால் 74. முதல் பந்தியில் 74 என குறிப்பிடபட்டுள்ளது. அவசரகுடுக்கைகளாக .......
  42. 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும். CSK, RR, KKR, SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் ) RR #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) CSK #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்) RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7) மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) RIYAN PARAG 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH
  43. 300 ரூபாய்க்கு கொத்து ரொட்டி கிடையாது. வேணும் என்றால்… ஒரத்திலை நின்று, கொத்து ரொட்டி கொத்துற… சத்தத்தை கேட்டுட்டு போகலாம். 😂 🤣
  44. உந்த ஆறில எங்கண்ட ஒண்டும் இருக்கு. அதுக்கு பிரசாந்த் பரமலிங்கம் எண்டு பேர்!
  45. குமாரசாமி அண்ணை... நீங்கள் கேட்பதும் நியாயமானதே. மொடல் அழகி என்றுவிட்டு.... அதற்கு பொருத்தமான படத்தை இணைக்காமல் விட்டது எனது தவறுதான். 😂
  46. இல்லையண்ணை படிப்பறிவு இல்லாத தமிழ் ஒழுங்கா வாசிக்க தெரியாத பெருமாள் இந்த இணைப்பை இணைத்து இருக்கிறார் எதுக்கும் ஒருக்கா இந்த செய்தியை fact check செய்து பார்த்து விட்டு சொல்றன் .😀 இடியாப்ப கொத்து 1800 ரூபா முழு பொய் அந்த வெள்ளை தனக்கு நிறைய யூடுப் subscribers வேணுமென்பதற்காக விட்ட புளுகு பொய் .😀
  47. பெயர் மட்டும் தானே மாத்தி தரேலுமோ கேட்டனான்......இப்பிடி பிரிச்சு மேய்ஞ்சிருக்கிறியளே? 😂 நியாயமா? தர்மமா? அடுக்குமா? 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.