Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்11Points87990Posts -
valavan
கருத்துக்கள உறவுகள்11Points1569Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்10Points20012Posts -
nochchi
கருத்துக்கள உறவுகள்9Points5896Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/04/24 in all areas
-
எமது மண்ணின் இன்றைய நிலை குறித்த தமிழ் கவி அம்மாவின் செவ்வி
எமது தாயகத்தின் இன்றைய நிலை தொடர்பாக கவிஞரும் எழுத்தாளருமான தமிழ் கவி அவர்களின் செவ்வி. 2009 வரை போராட்டத்திற்க்காக தன்னை முழுமையாக அர்பணித்ததுடன் போராட்டத்திற்து தனது பிள்ளைகளையும் கொடுத்த தமிழ்கவி அம்மாவின் ஆதங்கங்களை இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.8 points
-
பல்கலைக்கழக மாணவியை கர்ப்பமாகி தலைமறைவான கனடா வாழ் தமிழ் குடும்பஸ்தர்!
அடுத்தவர் பிரச்சனையை எம் வீட்டு பிரச்சனையாக நினைத்து எமது சமூகமும் ஊடகங்களும் 100% பொங்கியெழுவது, ஆண் பெண் காதல் கல்யாணம் ஓட்டம் விவகாரங்களில் மட்டும்தான். ஒரு சமூகத்தின் வாழ்க்கைமுறையில் உண்மையான அக்கறை கொண்டவர்கள் அந்த சமூகத்தின் வறுமை, கல்வி வேலை வாய்ப்பு, கவனிப்பாரற்ற குடும்பங்கள், விதவைகள், பெண் தலைமைத்துவத்தில் மட்டும் வாழ்க்கையோடு போராடும் குழந்தைகள், மருத்துவம், மாற்றுதிறனாளிகள், தகர கொட்டைகைகளில் வெயில்காலத்தில் நெருப்புடனும், மழைகாலத்தில் வெள்ளத்துடனும் பாம்பு பூச்சிகளுடனும் குழந்தைகளுடன் அல்லாடும் ஏழைகள் என அனைத்து விடயங்களுக்காகவும் இதே வேகத்தில் அக்கறை செலுத்தினால் இந்த அஞ்சலோட்டங்கள் பற்றியும் பேச அருகதை கொண்டுள்ளோம். சிறுமி அல்லது சிறுவன் வயதில் உள்ளவர்கள்மீது தவறான காதல் , தனித்து அழைத்து சென்று குடும்பம் நடத்துதல் என்றால் மட்டும் எம்மில் யார் வேண்டுமென்றாலும் இதுபோன்ற செய்திகள் பற்றி பேச உரிமை கொண்டுள்ளோம் , மற்றும்படி இது விவாதத்துக்குரிய ஒரு விஷயமல்ல அது அவரவர் மனமொத்த விஷயம். தம்மை சுற்றியவர்கள்பற்றி எந்த கவலையும் கொள்ளாது தமது வாழ்வை தீர்மானிப்பவர்கள் பற்றி சுற்றியிருப்பவர்கள் எதற்கு மனம் நொந்து சாவணூம்? இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால் மேலைநாடுகளில் அடுத்தவர் வாழ்க்கைமுறையை விமர்சிப்பது மூக்கை நுழைப்பது விவாத பொருளாக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.8 points
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
நான் எங்கே என்று… அடித்தும் கேட்பாங்க, ஒன்றும் சொல்லிப் போடாதீங்க. 😂 🤣6 points
-
The Sun/Son shines - சுப.சோமசுந்தரம்
4 pointsThe Sun/Son shines - சுப.சோமசுந்தரம் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பொறுப்பேற்றது தொடர்பாக எனது எண்ணவோட்டத்தைப் பதிவு செய்ய விழைவு. தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தமட்டில் இது எப்போதோ எதிர்பார்த்த நிகழ்வோ, என்னவோ ! எனவே பெரிய அளவில் எவ்விதச் சலசலப்பும் பொதுவெளியில் நிகழவில்லை எனலாம் - ஏதோ ஒன்றிரண்டு எதிர்க்கட்சியினர் வாரிசு அரசியலுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தமது வயிற்றெரிச்சலைக் கொட்டியது தவிர. அதுவும் இந்திய அரசியலில் வாரிசு அரசியல் என்பது ஏதோ இதற்கு முன் நிகழாத புதுமை போல. திராவிட முன்னேற்றக் கழகத்தை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. பொதுவாக வாரிசு அரசியலில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். அது ஒரு முதிர்ச்சியற்ற ஜனநாயகம் என்பதையே பிரதிபலிப்பதாக எண்ணுபவன் நான். அந்த முதிர்ச்சியின்மை அரசியல்வாதிகள் சார்ந்தது என்பதை விட மக்கள் சார்ந்தது என்பதுவே சாலப் பொருத்தம். ஒரு மருத்துவரின் மகனோ மகளோ மருத்துவர் ஆவதில் எனக்கு மாறுபாடு இல்லை. அதே போலவே ஒரு ஆசிரியருக்கும் இன்ன பிற தொழில் முனைவோருக்கும். இவ்வளவு ஏன், அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தீவிர அரசியலில் இறங்குவதும் இயற்கையான ஒன்றே. ஆனால் ஒரு தலைமை மருத்துவரின் மகன் அல்லது மகள் மருத்துவரான கையோடு எடுத்த எடுப்பில் தலைமை மருத்துவர் ஆக்கப்படுவது எவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றோ, அவ்வாறே ஒரு ஆட்சியாளரின் மகன் அல்லது மகள் எத்தனையோ காலம் கொள்கை பிடிப்புடன் அக்கட்சியில் அல்லது ஆட்சியில் பணியாற்றியோரை ஓரங்கட்டி ஆட்சி பீடத்தில் அமர வைக்கப்படுவது ஏற்புடையதன்று. இவை எல்லாம் ஒரு முதிர்ந்த ஜனநாயகத்தில், அரசியல் முதிர்ச்சி பெற்ற மக்கள் சமூகத்தில், கொள்கைப் பிடிப்புடன் முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதிகளைக் கொண்ட ஒரு கட்சிக்குப் பொருந்தி வருவது. இன்றைய அரசியல் சூழலில் நான் முன்னர் குறிப்பிட்ட பண்பட்ட அரசியல் பொருந்தி வருமா என்பது ஐயப்பாடே ! திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் மாறி மாறி தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டினை அநேகமாக அத்துணைத் துறைகளிலும் முன்னேற்றிக் காட்டியது தமிழ் நிலத்திற்கான பேறு. திராவிட கட்சிகளின் ஆட்சியில் ஊழல் பெருகியதாகவும், மாநிலம் சீர்கேடு அடைந்ததாகவும் மாற்றார் கூக்குரலிடலாம். பூமிதானில் யாங்கணும் துலங்கிய ஊழல் இந்தியத் துணைக்கண்டத்தில் பல்கிப் பெருகியமை உள்ளங்கை நெல்லிக்கனி. இதனால் எல்லாம் ஊழலை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது என்பது ஒரு புறம். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு சீரழிந்ததாகச் சொல்வதெல்லாம் முழுப் பொய் அன்றி வேறென்ன ? தந்தை பெரியார், அறிஞர் அண்ணா இவ்விருவரையும் சிறந்த வழிகாட்டிகளாக எண்ணும் நான் பெரிய அளவில் திமுக வின் ஆதரவாளன் என்று சொல்வதற்கில்லை. எக்காலத்திலும் அதிமுகவின் ஆதரவாளனாய் இருக்க எள்ளளவும் வாய்ப்பில்லை. இருப்பினும் கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார், தளபதி ஸ்டாலின் ஆகியோருக்கு ஒரு வகையில் நன்றிக் கடன் பட்டுள்ளேன். சுமார் ஐம்பத்தைந்து வருடங்களாகத் தேசியக் கட்சி எதுவும் தமிழ் நிலத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்வதைக் கனவிலும் நினைக்க முடியாமல் செய்தார்களே ! தேசியக் கட்சிகள் இங்கு ஆட்சி செய்வதில் அப்படி என்ன பிரச்சினை என்று நீங்கள் கேட்கலாம். அவர்கள் வந்தால் நான் தேசியம் எனும் நீரோட்டத்தில் கரைய வேண்டி இருக்குமே ! தேசிய நீரோட்டத்தில் நீந்துவது ஏற்புடைத்து. கரைவதை எங்ஙனம் ஏற்பது ? நான் ஏன் எனது மொழி, பண்பாட்டு அடையாளங்களை இழந்து இந்தியன் எனும் ஒற்றைத் தன்மையில் நிற்க வேண்டும் ? உலக அரங்கில் பன்மைத்துவம்தானே இந்தியத் திருநாட்டின் தனித்துவமாக இருக்க முடியும் ? 'ஒற்றுமை உன்னதம், ஓர்மை பாசிசம்' (Unity is noble, Uniformity is fascist) என்பதே இந்திய அரசியலமைப்பு நமக்குச் சொல்லித் தருவது; உலகுக்கும் சொல்வது. வேற்றுமையிலேயே ஒற்றுமையை நிலை நாட்டுவதில் திமுகவும் அதிமுகவும் தம் பங்கினை நெடுங்காலம் செவ்வனே நிறைவேற்றின. ஆனால் அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் அனைத்து அணியினரும் தங்கள் சுயநலம் சார்ந்து ஒரு பாசிச அரசிடம் தம்மையும் நம்மையும் அடகு வைப்பதிலேயே குறியாய் இருப்பதாய்த் தெரிகிறது (அம்மையார் சுயநலம் அற்றவர் என்று சொல்ல வரவில்லை; தம்மையும் நம்மையும் அடகு வைக்க அவரது தன்மானம் இடம் கொடுப்பதில்லை). இத்தகைய சூழலில் மதவாத, வகுப்புவாத பாசிசத்திடமிருந்து நம்மைக் காக்க மக்கள் ஆதரவுடன் உள்ள ஒரே கட்சி - நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் - திமுக என்றே தோன்றுகிறது. எனவே திமுக மேலும் உரம் பெற்றுத் திகழ்வது - அச்சங்கிலித் தொடர் தற்போது பாதகமின்றித் தொடர்வது - தமிழினத்தைப் பொறுத்தமட்டில் காலத்தின் கட்டாயமாகிறது. அதனைத் தொடர திமுகவில் வேறு தலைவர்கள் இல்லையா என்ற கேள்விக்கு, மக்கள் ஆதரவு பெற்றோர் வேறு இல்லை என்று ஆணித்தரமாய்ச் சொல்வதைத் தவிர வேறு வழி, ஒளி தெரியவில்லையே ! தோழமைக் கட்சிகளில் திறமையானோர், நேர்மைத் திறமுடையோர் உண்டு. இடதுசாரிகளில் உண்டு; தமிழர் தலைவர் தொல். திருமாவளவன் உண்டு. ஆனால் அவர்களும் பெரும்பான்மை மக்களின் ஆதரவு என்ற ஒற்றைப் புள்ளியில் அடிபட்டுப் போகிறார்களே ! சாதி பேதம் இன்றி அனைத்து சமூகத்தினருக்கான தலைவர் தொல்.திருமா என்றே சொல்லலாம். அவரையெல்லாம் 'வையத் தலைமை கொள்' என்று அழைப்பதற்குத் தமிழ் மக்கள் தம் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது. இந்த நிதர்சனங்களைப் புரிந்து, மற்றுப்பற்று இல்லாத மக்கட் பற்றாளராய் தொல்.திருமாவளவன் மற்றும் இடதுசாரித் தோழர்கள் தமிழ் அரசியலில் வலம் வருவது நமக்கான பேறு. திமுக அரசியலில் இன்று முன்னணியில் உள்ள ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி இம்மூன்று கலைஞர் கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அரசியல் முகங்களும் பண்பட்டதாகவே தோன்றுகின்றன. உதயநிதி ஸ்டாலினிடம் அரசியல் முதிர்ச்சி இல்லை என்று சமீபத்தில் சங்கிகள் ஓலமிட்டது பெரும் நகைப்பானது. அவர் சநாதனம் பற்றிப் பேசியது ஒரு முதிர்ந்த திராவிட அரசியலே ? வெள்ள நிவாரணம் தொடர்பாகப் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், "மத்திய அரசு என்ன ஏடிஎம் மெஷினா, கேட்டவுடன் பணம் கொடுக்க ?" என்று தரம் தாழ்ந்து கூறியதற்குப் பதிலடியாக உதயநிதி, "அவங்க அப்பன் வீட்டு காசையா கேட்கிறோம் ? தமிழ் மக்கள் கொடுத்த வரிப்பணத்தைத்தானே கேட்கிறோம் ?" என்று கேட்டது கூட ஒரு அனுபவம் பெற்ற அரசியல்வாதியின் பதிலாகவே வெளிப்படுகிறது. எனவே சூழல்களைக் கருத்தில் கொண்டு மாற்றார்தம் தாக்குதல்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள, எத்தனை குறை கொண்டிருந்தாலும் இன்றைக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் திராவிட முன்னேற்றக் கழகமே ! நம் நம்பிக்கை வானில் உள்ள ஒளிக்கீற்று உதயநிதி ஸ்டாலின் மட்டுமே ! போகிற வரை போகட்டும்; ஆகிற வரை ஆகட்டும். இதனை எழுதி முடித்து மீண்டும் ஒருமுறை வாசிக்கையில் எனக்கே நான் ஒரு திமுக காரனாகத் தோன்றுகிறேன். அதற்கு நான் என்ன செய்து தொலைக்க ?4 points
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
ஏராளன், நீங்கள் மன்னிப்புக் கேட்கவேண்டிய அவசியம் எதுவுமில்லை. செய்தியை இணைத்தது உங்கள் தவறில்லை. இங்கு பொய்யான செய்தி என்று சுட்டிக் காட்டப்பட்டது தமிழ் செய்தி இணையத்தளங்களின் பொறுப்பின்மையை வெளிப்படுத்தவே. பொறுப்பான இணையத் தளங்கள் எதை எழுதினாலும் வாசித்துவிட்டுப் போகாமல் சரிபிழையை விவாதிப்பது ஆரோக்கியமானது. யாழிணையத்தில் உங்கள் செய்திப் பகிர்வுகளுக்கு நன்றி.4 points
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
தன்னை வைத்து சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறு பிரசாரங்களுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறீதரன் மதுபான சாலை உரிமங்களை பெற்றுக்கொண்டதாக முகநுால் மற்றும் டிக்டொக் போன்ற சமூகவலைத்தளங்களில் அவதூறான செய்திகள் பரப்பப்படுவதாக அவர் முறைப்பாடு செய்துள்ளார். இவ்வாறான அவதூறுகள் தொடர்ச்சியாக பரப்பப்பட்டு வந்த நிலையில், அவதூறு பரப்பிய நபர்களுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸிலும், ஒட்டுசுட்டான் 'சைபர் க்ரைம்' பிரிவிலும், கொழும்பு 'சைபர் க்ரைம்' தலைமையகத்திலும் கடந்த 24.09.2024ஆம் திகதி முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இறுக்கமான நிலைப்பாட்டில் சிறீதரன் பொலிஸார் ஆரம்பித்த முதற்கட்ட விசாரணையில் ஒருவர் தாம் பதிவிட்ட செய்தி பொய்யானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். மற்றுமொரு நபர் அதிக மதுபான பாவனையால் தனக்கு மனநிலை குழம்பிவிட்டதாகவும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறி சிறீதரனிடம் தொலைபேசி ஊடாக மன்னிப்பு கேட்டுள்ளார். ஆனால், சட்ட நடவடிக்கை தொடர்பாக சிறீதரன் இறுக்கமான நிலைப்பாட்டில் இருப்பதால் இந்த விடயத்தை மறுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/fake-newses-spread-in-the-name-of-sri-tharan-1728035378 பத்தரை மாற்றுத் தங்கம் சிறிதரனைப் பற்றி அவதூறு பரப்பியவர்களை இன்ரபோல் தேடுகிறது. இன்று அனேகமாக மோகன் வீட்டுக்கதவு தட்டப்படும். அதுக்கிடையில் நீங்களாகவே அவதூறுகளை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேளுங்கள்.3 points
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
ஒட்டிசுட்டானில் கூட இப்படி ஒரு பிரிவு இருக்கின்றதா? இப்ப விளங்குதா, ஏன் நாலைந்து நாதளுக்கு தான் காணாமல் போகப் போகின்றேன் என்றவர்? ஆள் எஸ்கேப்!3 points
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
இஞ்ச பாருங்கோ ஏராளன், உதுக்கெல்லாம் மன்னிப்பு கேட்க கூடாது. எம் பணி, செய்திகளை இணைப்பது, அதுவும் நம்பகமான தளங்கள் என நாம் நம்பும் தளங்களில் இருந்து. ஒவ்வொரு செய்தியையும் உண்மைச் செய்தியா என்று தேடிப்பிடித்து, ஆராய்ந்து எல்லாம் போட முடியுமா எங்களால்? இல்லைதானே. அப்படி இப்படி என்று ஒன்றிரண்டு செய்திகள் பிழையாக வரத் தான் செய்யும். நாம் ஒன்றும் செய்ய முடியாது. வாசிப்பவர்களில் பலர் புத்திக் கூர்மையுடன் செய்திகளை அணுகி, பிழையான செய்தியா இல்லையா என கண்டு பிடித்து விடுவர். இப்படி மன்னிப்பு கேட்பதென்றால் இந்த பிழம்பு எத்தனை செய்திகளுக்கு கேட்டு இருக்க வேண்டும் 🤣 (அதுவும் முன்னர் பதிவின் செய்திகளையும் புதினத்தின் செய்திகளையும் இணைத்த காலத்தில்)3 points
-
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
எல்லோரும் செய்த தவறையே இவரும் செய்ய வாய்ப்புள்ளது. போறதுதான் போறார், முதல், ஒரு ராசியான நாட்டிற்கு போகக்கூடாதா? கொள்ளிக்கண் நாட்டிற்கா போக வேண்டும்?3 points
-
வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
பனங்கருக்கும்.... என்பது பனைமட்டையிலே உள்ள ''கருக்கு'' என்று அழைக்கும் கூர்மையான பகுதியாகும். காயங்களை ஏற்படுத்த வல்லது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி3 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
தமிழ்த் தேசியத்தை நிராகரிப்போர், சிறிலங்கா தேசியர், சிறிலங்கா தேசிய விசுவாசிகள் மற்றும் புலியெதிர்ப்பாளர்கள் என்போருக்கு அனுரவின் தேசியம் பிடித்திருக்கிறது. 30 ஆண்டுகளில் சில காணாமற்போதல்கள், தமிழ்த் தேசியத்தை நேசித்தோரை கொலை செய்தல் என நகர்ந்த யாழ் குடாநாட்டு இளையோரது மனநிலை வேறாகவே இருக்கும். இவற்றுக்கூடாகச் சிங்களத் தேசியமானது அசுர பலம் பெறப்போகிறது. அதன்பின்னரே அநுர திஸ்ஸவின் நிஜ(உண்மை)முகம் தெரியவரும். அதுவரை சிறு தேன்நிலவோட்டமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல்வரை அரசியல் ஓடப்போகிறது நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி3 points
-
ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
எல்லா முன்னேற்றங்களாலும் அழிவுகள் இருந்தன, இருக்கப் போகின்றனதானே, நொச்சி. பலநாடுகள் தங்கள் பலங்களால், நுட்ப வளர்ச்சிகளால் அழிவுகளை உலகெங்கும் நடத்திக் கொண்டும் இருக்கிறதுதானே. போன வருடம் அக்டோபர் 7ம் திகதி ஆரம்பித்த சண்டையே இன்றுவரை தொடர்கின்றது. இப்போது வேறு சில களமுனைகளுக்கும் இது பரவியுள்ளது. அது அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சண்டை இல்லை. ஹமாஸ் புதிய ஆபிரகாம் ஒப்பந்தத்திற்கு எதிராக எடுத்த ஒரு அதிரடி நடவடிக்கை அது. அன்றும் பலர் இஸ்ரேல் முடிந்தது என்றனர், இஸ்ரேல் வாங்கிக் கட்டுகின்றது என்றனர், ஹமாஸின் பலம் பற்றியும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை பரப்பினர். ஆனால் அந்த ஒரு நிகழ்வே அமெரிக்காவிற்கு போதுமானதாக இருந்தது. எல்லா நாடுகளுமே தங்கள் சுய ஆதாயத்தைத் தான் உலகெங்கும் தேடுகின்றனர். பலம் இருக்கும் நாடுகள் பாய்ந்து பாய்ந்து தேடுகின்றன. இந்தியா போன்ற நாடுகள் பதுங்கி பதுங்கித் தேடுகின்றன. உள்ளே வந்த ஊர்ப்பிடாரி வெளியே இலேசில் போகமாட்டார். அவரை உள்ளே வர விடாமல் பார்ப்பதே உத்தமம். ஈரான் எதற்காக ஹிஸ்புல்லாவையும், ஹமாஸையும் மற்றும் மேற்குக் கரையில் இன்னும் பல சின்ன குழுக்களையும் கட்டி வளர்க்கின்றது........... உலகில் சமாதானம் வர வேண்டும் என்பதற்காகவா....... இல்லை தானே, தங்களை அந்தப் பிரதேசத்தில் ஒரு வல்லரசு என்று காட்டுவதற்காகவே இந்த துணைப்படைகள். ஈரானும் அயலவர்களுக்கு அடிக்கும், அவர்களைக் கொல்லும், இலங்கை போன்ற நாடுகள் தங்கள் சொந்த மக்களையே கொன்றொழிக்க உதவும். இலங்கை அரசுக்கு இஸ்ரேல் மட்டுமா ஆலோசனைகளும், ஆயுதங்களும், சேவைகளும் வழங்கியது....... அமெரிக்கா வழங்கியது, இந்தியா வழங்கியது, ரஷ்யா வழங்கியது, உக்ரேன் வழங்கியது, பாகிஸ்தான் வழங்கியது.......... இது இன்றைய உலகில் ஒரு மிக இலாபகரமான விற்பனை. இதில் தர்மம், நெறி எல்லாம் எவரும் பார்ப்பது கிடையாது. மேலே சொன்ன எதுவுமே எந்த ஒரு நாட்டையும், அதன் நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவதற்கு அல்ல. பலமானவர்கள் செய்வது ஒரு சாராருக்கு மிக அநியாயமாகவே முடிந்து கொண்டிருக்கின்றது என்ற நிஜத்தை தான் நான் சொல்ல முயன்றிருக்கின்றேன்.3 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நாங்கள் ‘தமிழ்..தமிழ்’ என்று உயிரைக் கொடுக்கிறோம். அதுபோல்தான் மற்ற மொழி பேசுபவர்களும் இருப்பார்கள். சிங்களவர்கள், “நடந்தது எல்லாம் துன்பியல் சம்பவங்கள்’ என்றால் நாங்கள் ஒத்துக் கொள்வோமா? இன்று மூச்சு விட அவகாசம் கிடைத்திருக்கிறது. ஜனாதிபதியையே விமர்சிக்கும் அளவுக்கு நிலமை வந்திருக்கிறது. யேர்மனியில் கிழக்கு மாநிலங்களுக்குப் போக இப்பொழுது சற்று பயமாக இருக்கிறது. அந்தளவிற்கு யேர்மனியில் இனவெறி வளர்ந்து கொண்டிருக்கிறது. நாட்டில் அப்படியானதொரு நிலமை இன்றில்லை. மாவீரர் தினத்துக்கு நாட்டுக்குப் போய் படங்கள் எடுத்து வந்து யாழில் பதியக் கூடியளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது. கொஞ்சம் யதார்த்தத்தைக் கதைத்தால், தேசியவாதிகளுக்குக் கோபம் வருகிறது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வட,கிழக்கில் மக்கள் அளித்த தீர்ப்பு அங்குள்ளவர்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர்களுக்கு பக்க பலமாக ஏதாவது செய்ய முடிந்தால் செய்யலாம். தேசியம் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் ஒரு பலனும் கிடைக்கப் போவதில்லை.3 points
-
பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
தமிழர் சார்ந்த ஊடகங்கள் கருணா அம்மான் என்று விழிப்பதை தவிர்க்கணும். ஒருகாலத்தில் இயக்கத்தில் போற்றுதலுக்குரியவர்களை சகபோராளிகளால் அம்மான் என்று அழைப்பது வழமை. அதனால் அம்மான் என்ற அடைமொழி அவருக்கு சொந்தமானதல்ல ,3 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த சிங்கள இனவாத, இடதுசாரிகளின் கட்சியின் வேட்பாளர் திசாநாயக்க முதியான்சலாகே அநுர குமார திசாநாயக எனும் இனவாதியை சிங்களவர்கள் மட்டுமல்லாமல் தமிழர்களில் பெரும்பான்மையினர், குறிப்பாக இளைஞர்கள் போற்றிப் புகழ்வதும், இவரது ஆட்சியின் கீழ் தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடப்போகின்றன என்று ஆர்ப்பரித்து அவர் பின்னால் அணிவகுத்துச் செல்வதும் நடக்கிறது. இத்தேர்தலில் வன்னியில் 16,000 வாக்குகளையும் யாழ்ப்பாணத்தில் 27,000 வாக்குகளையும் பெற்றுக்கொண்டதையடுத்து இனிவரும் பாராளுமன்றத் தேர்தலில் வன்னியிலும், யாழ்ப்பாணத்திலும் தமது கட்சி சார்பாக வேட்பாளர்களை நிறுத்த இனவாதிகளின் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சமூக வலைத்தளங்களில் அநுரவைக் கதாநாயகன் எனும் நிலைக்கு உயர்த்திவைத்திருக்கும் தமிழ் இளைஞர்கள் பாராளுமன்றத் தேர்தலில் இவரது கட்சிக்கு தாமே முன்னின்று வாக்குச் சேகரிக்கும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. ஆனால், இவர்கள் எல்லோரும் எளிதாக மறந்துவிட்ட இன்னொரு பக்கம் ஒன்று இக்கட்சிக்கும் இன்றிருக்கும் அதன் தலைவருக்கும் இருக்கின்றதென்பதை இவ்விளைஞர்களுக்கு உணர்த்துவது காலத்தின் கட்டாயம். நன்கு கட்டமைக்கப்பட்ட சிங்கள இனவாதமும், தமிழரின் இருப்பிற்கெதிரான இக்கட்சியின் தொடர்ச்சியான நடவடிக்கைகளும், தமிழரின் சரித்திரத்தை மாற்றியமைப்பதில் இக்கட்சி செயற்பட்டு வரும் விதமும் இதுவரை இலங்கையை ஆண்ட ஏனைய பெளத்த சிங்களக் கட்சிகள் எவற்றிற்கும் இக்கட்சி சளைத்தது இல்லை என்பதையே காட்டுகிறது.. ஆகவே இக்கட்சி பாராளுமன்றத்திற்கு தனது ஆட்களை அனுப்பிய காலத்திலிருந்து அக்கட்சியினால் தமிழருக்கெதிராக செய்யப்பட்ட சில நடவடிக்கைகளை நான் இங்கே பட்டியலிட விரும்புகிறேன். தமிழ்நெட் இணையத்தளம் மற்றும் சங்கம் இணையத்தளம் ஆகியவற்றிலிருந்தே நான் இத்தகவல்களை பெற்றுக்கொண்டேன் என்பதையும் இத்தாள் அறியத்தருகிறேன். தமிழர்களுக்கு வழங்கப்போகும் தீர்விற்கெதிராக வடக்குக் கிழக்கில் தமிழர்களிடையே பிரச்சாரம் செய்யப்போகும் மக்கள் விடுதலை முன்னணி - 1997 சந்திரிக்காவின் மக்கள் கூட்டணியினால் தமிழர்களுக்கு வழங்கப்படவிருப்பதாக் கூறப்படும் அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை எதிர்த்து தமிழர்கள் வாழும் வடக்குக் கிழக்கின் முக்கிய நகரங்களில் பிரச்சாரம் செய்யப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கிறார். சிங்கள கிராமப் புறங்களில் தலைவிரித்தாடும் வறுமை மற்றும் போரில் ஏற்பட்டுவரும் பின்னடைவுகளால் அவர்கள் அடைந்துவரும் ஏமாற்றம் ஆகியவற்றை பிரச்சாரப் பொருளாக்கி இக்கட்சி அண்மைய தேர்தல்களில் குறிப்பிடத் தக்களவு வெற்றியினைப் பெற்று வருகிறது. தமிழர்களுக்கு பிராந்திய சுயாட்சியை வழங்க சந்திரிக்கா தயாராகி வருவதாகக் கூறி சிங்கள மக்களிடையே இனவாதம் கக்கும் பிரச்சாரத்தை கடந்த வாரம் சிங்களவர்களின் மதக் கலாசார தலைநகர் என்று போற்றப்படும் அநுராதபுரத்தில் இருந்து இக்கட்சி ஆரம்பித்து வைத்தது. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வினை எக்காரணம் கொண்டும் வழங்கிவிடக் கூடாது எனும் கருத்தினை சிங்கள மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக விதைத்து, தமிழருக்கெதிரான சிங்களவரின் இனவுணர்வைத் தூண்டிவரும் இக்கட்சி, சந்திரிக்காவின் அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாக தமிழரின் வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிப் பிராந்தியத்தின் பொலீஸ் மா அதிபராக பிரபாகரன் நியமிக்கப்படப்போகிறார் என்றும் கூறிவருகிறது. தனது கட்சியில் இனவாதம் இல்லையென்று கூறிவரும் இக்கட்சி, தமிழர்களுக்கென்று தனியான இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லையென்றும் இருப்பது சமூக, பொருளாதாரப் பிரச்சினைகள் மட்டும்தான் என்றும் கூறிவருகிறது. மேலும் தென்னாசியாவை துண்டாட அமெரிக்க உளவு நிறுவனமான சி ஐ ஏ போட்ட திட்டம்தான் தமிழர்கள் கோரிவரும் ஈழம் எனும் தனிநாடு என்றும் அது கூறுகிறது. ஸ்டாலினினது மார்க்ஸியச் சிந்தனைகளைப் பின்பற்றும் இக்கட்சி, தமிழர்களிடையே காணப்படும் சாதிய வேற்றுமைகளே அவர்களுக்கான ஒரே பிரச்சினை என்றும், அவர்களுக்கென்று இனரீதியிலான பிரச்சினைகள் கிடையாது என்றும் கூறி வருகிறது. "எமது நகரங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஆசீருடனே ஜே வி பி போன்ற இனவாதிகள் எமது பிரதேசங்களுக்கு வந்து எமக்கு இனப்பிரச்சினை என்று ஒன்றில்லை என்று வெளிப்படையாகக் கூறமுடிகிறது, புரட்சிகர மார்க்ஸிஸ்ட்டுக்கள் என்று தம்மை அழைக்கும் இவர்கள் எல்லோரும் சந்தர்ப்பவாத சிங்கள இனவாதிகள் தான்" என்று திருகோணமலையில் வசிக்கும் இடதுசாரித் தமிழர் ஒருவர் தெரிவித்தார்.2 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுரா பற்றி கதைத்தால் புலிகள் பற்றி பேசுவேண்டும் என்பது புலிக்காய்ச்சல். இந்த காய்ச்சலை கன நாளைக்கு மறைக்க முடியாது அல்லவா? இந்த திரியை பூட்ட வைக்க நீங்கள் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சியை நான் முடித்து வைக்க மாட்டேன். டொட்.2 points
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நட்பார்ந்த நொச்சி, இங்கு யாரும் தமிழ் தேசியத்தை நிராகரிக்கவில்லை. சிங்கள தேசிய விசுவாசிகளும் இல்லை. நீங்கள் நினைக்கும், விரும்பும் கருத்துக்களுக்கு எதிர் கருத்துக்களை யாராவது வைத்தால் அவர்களை, நீங்கள் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள் அல்லது தேச விரோதிகள் எனச் சாயம் பூசப் பார்க்கிறீர்கள். ஒரே இடத்தையே நீங்கள் சுற்றிச் சுற்றி வருவதால் தேசியத்துக்கு வெளியே என்ன நடக்கிறது என்று உங்களுக்குத் தெரியவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் வரையறை செய்து வைத்திருக்கும் அந்தத் தேசியத்தை விட்டு வெளியே வந்து பேசுங்கள். புலிகளின் போராட்டம் தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கான ஒரு போராட்ட வடிவம். அதில் தோற்று விட்டோம். நினைத்துப் பார்க்க முடியாத இழப்புக்களையும் சந்தித்து விட்டோம். ‘போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை’ என்று பிரபாகரன் சொன்னதை இங்கு நினைவு கூர்கிறேன். இலங்கை அரசியலில் வரலாற்றில் இல்லாத ஒரு மாற்றம் இன்று நிகழ்ந்திருக்கிறது. ‘இலங்கையில் இடதுசாரி ஆட்சியா?’ என அயல்நாடு உட்பட மேற்கத்திய நாடுகள் எல்லாம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது எங்களுக்கு ஒரு புதிய தளம் கிடைத்திருக்கிறது. அங்கேயும் ஒரு தடவை நாங்கள் முயன்று பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை. அதற்கும் கால அவகாசம் தர வேண்டித்தான் இருக்கும். நாடாளுமன்றத் தேர்தல் முடிய வேண்டும். சர்வதேசமோ, இந்தியாவோ தங்கள் நலன்களைக் கருதாமல் தமிழர்களின் உரிமைகளுக்கான ஒரு தீர்வைத் தரப் போவதில்லை என்பதும் நாங்கள் அறிந்த பாடம்தான். சர்வதேசத்தைத் திரும்பிப் பார்க்க வைக்க நாங்கள் செய்யாத ஆர்ப்பாட்டங்களா? சனல் 4 வெளியிடாத ஆவணங்களா? சங்கு ஊதித்தான் தெரியப்படுத்த வேண்டுமா? இன்று நடந்து கொண்டிருக்கும் பாலஸ்தீனக் கொலைகள், யார் சொல்லியும் கேளாமல் அடுத்த நாட்டுக்குள் புகுந்து அழிக்கும் இஸ்ரேலின் ஆணவம்… என்று பலதையும் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேசத்துக்கு புதிதாக நாங்கள் என்ன சொல்ல வேண்டி இருக்கிறது? விட்டால் தமிழ் மக்கள் சிங்களத்துடன் ஒத்துப் போய் விடுவார்களோ என்ற ஒரு அச்சம் தான் இன்று பலரைக் கிலி கொள்ள வைத்திருக்கிறது. தேசியத்தை வைத்து எழுதுபவர்கள், மக்கள் மத்தியில் தங்களைத் தக்க வைத்துக் கொள்பவர்கள் இப்பொழுது பலமாக குரல் தருவதும் அதற்காகத்தான். ஜனாதிபதிக்கான வெற்றி வாய்ப்பில் மூன்று பேர்கள் இருந்தார்கள். அதில் அனுராவும் இருந்தார். அப்பொழுது அவரைப் பற்றிய விபரங்களை மக்களுக்கு நினைவூட்டி இருக்கலாம். அவர் வென்றதன் பின்னர், இப்பொழுது எதற்கு இவ்வளவு அவசரம்? வெற்றுப் பேச்சு மறவர்களுக்கு புது வேலை ஒன்று வந்திருக்கிறது, அது அனுராவை விரைவில் வெளியே அனுப்புவது. இப்படியான செயல்களைச் செய்விக்க அயல்நாடு கூடத் தயங்காது. ஆனால் செய்பவர்களுக்கு ஏதாவது கிடைக்க வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் ஒன்று தெளிவாகத் தெரிகிறது இப்படியானவர்கள்தான் தேசியத்தை அழிப்பவர்கள் என்று. இன்னும் ஒன்று, புலம் பெயர்ந்தவர்களின் கருத்துக்களுக்காக நிழலி ஒரு திரியைத் திறந்திருந்தார். உங்களுக்கான அழைப்பையும் நான் அங்கே ஏற்கெனவே விடுத்திருந்தேன். வாருங்கள் ‘அடுத்தது என்ன?’ என்பதை அங்கே பேசுவோம்.2 points
-
சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
"பெட்டி வாங்குறார், கஞ்சா விற்கிறார், கஞ்சா விற்பவர்களை பொலிசில் இருந்து பாதுகாக்கிறார்" என்று ஒரு பெரிய போலி அவதூறுப் பட்டியல் இருக்கும் சுமந்திரனே சும்மா இருக்க, இந்த ஒரு மேட்டருக்கு சிறிதரன் ரென்சனாகியிருக்கிறார்😂! சீரியசாக: நான் இதையே விக்கி ஐயா தொடர்பான செய்தியில் கேள்வியாகக் கேட்டிருந்தேன்: விற்பனை அனுமதி எடுக்க, என்ன நடைமுறை, யார் பெயரில் அனுமதி கொடுக்கப் படுகிறது என்ற எந்த விளக்கமும் இல்லாமல் சும்மா யூ ரியூபில் வடை சுட்டவர்கள் கொஞ்சம் கோர்ட்டுக்கும் வீட்டுக்கும் அலைந்தால் நல்லது தான்😎!2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
தவறான செய்தியைப் பகிர்ந்ததற்காக யாழ் கள உறவுகளிடம் மன்னிப்பை கோரிக்கொண்டு, எனக்கு "ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு" என்ற செய்தி வியப்பைத் தந்ததால் பகிர்ந்தேன். ஆனால் வாய்ப்புக் குறைவு என்பதை சிந்திக்கவில்லை.2 points- வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
"பனங்கருக்கும் பால் சுரக்கும்" பனங்கருக்கு என்றால் பனை மட்டையின் ஓரத்தில் இருக்கும் கறுப்பு நிறத்திலான மரம் வெட்டும் வாள் முள்ளுகள் போல் இதில் இருக்கும் முட்களை "கருக்கு" என்று கூறுவது உண்டு. இந்த முட்களும் பால் சுரக்கும் என்றும் அல்லது கரடு முரடான மனதுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்று உவமைபடுத்தி கவிதையாசிரியர் எழுதியிருக்கலாம்.🥰2 points- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
மற்ற இயக்கங்கள், ஜேவிபி, எல்லாரையும் பரிசோதனை செய்யலாம், ஆனால் புலிகளை மட்டுமல்ல, "புலிகளின் பின்னால் இருக்கும் வாலைக்" கூட விமரசனம் செய்யக் கூடாது என்பது தானே "தமிழ் தேசிய வியாதி?" இந்த தீர்க்க இயலாத வியாதியை வைத்துக் கொண்டு , "மக்கள் எங்களை வெல்ல வைக்கவில்லையே!" என்று புலம்புவதில் அர்த்தம் என்ன இருக்கிறது?2 points- பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
அப்படி சேர்க்காவிடில் அனுராவுக்கு இரண்டு புள்ளிகள் அதிகமாக கொடுக்கலாம்2 points- பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ள கருணா அம்மான்
டக்ளஸ், கருணா, பிள்ளையானையெல்லாம் சேர்க்க சந்தர்ப்பம் இல்லை பாப்பம்2 points- மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
ஆம்… அனைவரின் பெயர்களையும் வெளியிட வேண்டும். அத்துடன்…. கேரள கஞ்சா, ஆப்கானிஸ்தான் அபின், பாகிஸ்தான் பான்பராக்…. போன்ற போதை வஸ்துக்களை கடத்தி காவல் துறையிடம் பிடிபடும் சமூக விரோதிகள் சார்பில்…. நீதிமன்றம் சென்று வாதடி, அவர்களை வெளியே எடுத்துவிடும் வக்கீல்களின் பெயர்களையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். 😂 🤣 முதலில்…. உங்கள் முதுகில் உள்ள ஊத்தையையும் கழுவுங்கள். மல்லாக்கப் படுத்திருந்து துப்பினால்.. அந்த அசிங்கம் உங்கள் முகத்தில் தான் விழும்? 🧐 தான்… அவசரப் பட்டு அறிக்கை விட்டு… தன்னை சுற்றவாளி என காட்ட அந்தரப் படுகிறார்…. லோயர். 🤣 கூட்டத்தில்…. குசு விட்டவன், முதலில் மற்றவர்களை நோக்கித்தான், கை காட்டுவானாம். 😂 😁2 points- புலம்பெயர் தமிழர்கள் vs புலம்பெயர் சிங்களவர்கள்
சிங்கள டயஸ்போரா Vs தமிழ் டயஸ்போரா —————————————————————- சிங்கள டயஸ்போராக்கள் எவ்வளவு துல்லியமாக புத்திசாதுரியமாக செயல்பட்டு தமக்கான ஊழலற்ற சிறந்த தலைமையொன்றை கட்டி அமைக்க வேண்டும் என்று சில வருடங்களாக செயல்பட்டு அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். உண்மையில் அனுரவின் வெற்றிக்கு மிக காத்திரமான காய் நகர்த்தல்களை புரிந்தவர்கள் சிங்கள புலம்பெயர் மக்கள் என்றால் மிகையாகாது! லண்டன் , கனடா , அமெரிக்கா, யப்பான் , ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் என சிங்கள டயஸ்போராக்கள் மிகச் சிறப்பாக செயற்பட்டு குறுகிய காலத்துக்குள் சிங்கள மக்களின் மனதில் அனுரவை இடம்பிடிக்க வைத்து இந்த அபார வெற்றியை எற்படுத்தியிருக்கிறார்கள். சிங்கள டயஸ்போராங்கள் தங்கள் தாய் மண்ணுக்கான நல்ல சிறந்த அரசியல் தலைவனை உருவாக்க வேண்டும் தம் தாய் நாடு வீறு கொண்டு முன்னேற வேண்டும் என்று இனவாதத்திற்கு அப்பால் போய் மிக நுண்ணரசியல் செய்து இன்று தமக்கான சிறந்த தலைவனை அரசியலை நிலைநிறுத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். அவர்களின் ஒரே இலக்கு தம் நாட்டின் மீதான தேசத்தின் மீதான மக்கள் மீதான தீரா காதல். அத்தனை படித்தவர்கள், அரசியல் விற்பன்னர்கள், பொருளாதார நிபுணர்கள் , சாமானிய மக்கள் என புலம்பெயர் சிங்கள டயஸ்போராக்கள் ஒரே புள்ளியில் குவிந்து நின்று செயல்பட்டார்கள், அதன் விளைவுவாக வெற்றியை பெற்றார்கள். கம்னியூச கொள்கைகளில் பின் புதைந்துள்ள JVP யிலிருந்து இரு தலைவன் மேலெழுந்து விட கூடாது என பிராந்திய வல்லரசு தொடக்கம் அமெரிக்கா ஐரோப்பா என்பன இவ்வளவு காலமும் விழிப்பாக இலங்கையில் செயல்பட்டுகொண்டிருந்தன. அலகரய போராட்டத்தில் அனுரவின் எழுச்சியின் அபரிவிததன்மையை உணர்த அமெரிக்க தூதுவர் அப்போது அனுரவை அடிக்கடி சந்தித்துப் பேசியுமிருக்கிறார். ஏன் அனுரவுக்கான மக்கள் எழுச்சியினை முன்னரே தீர்மானித்திருந்த இந்தியா என்றுமில்லாதவாறு ஜெய்சங்கரை அனுப்பி பல மாதகங்களுக்கு முன் சந்திப்புக்களை செய்திருந்தது . ஆனாலும் அனுரவின் அசுர வளர்ச்சி இந்தியா அமெரிக்காவுக்கு கண்ணுள் தூசி விழுந்தால் போல் உருத்தல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது! ஏனெனில் இப்போதுள்ள பேஉம் போட்டி நிலை பூகோள வல்லாதிக்க அரசியல் களத்தில் இலங்கை மீளவும் கம்னீசிய கொள்கை கொண்ட சீன வல்லாதிக்கம் பக்கம் சாய்ந்தால் அதுவும் கம்னீசிய கொள்கையுடனான ஆயுத போராட்ட வழி வந்த அரசு ஒன்று சீன கம்னீச பேரரசு பக்கம் சற்று சாய்ந்தால் கூட மற்றைய வல்லாதிக்கங்களுக்கு பேஉம் குடைசலாகவே இருக்கும்!அதற்கும் அவர்கள் மீண்டும் பெரும் விலையொன்றை கொடுக்க வேண்டி வரும். அனுரவின் வெற்றியை தடுக்க பல முனை முனைப்புக்களையும் முயற்சிகளையும் அந்த வல்லாதிக்க சக்திகள் மேற்கொள்ளவும் தவறவில்லை. உதாரணமாக நாட்டிலும் புலத்திலும் சிங்கள மக்கள் மத்தியில் அனுர அலை அடிக்க தொடங்கியவுடன் அரசியல் ஆய்வு புள்ளிவிபரங்களின் படி வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பெருவாரி வாக்குகள் அனுர பக்கம் சாயமல் பார்த்துக்கொள்ளவும் அந்த வல்லாதிக்கங்கள் நிகழ்சி நிரல்களை வரையவும் தவறவில்லை. அதற்காக பல தந்திரோபாய சுய வேட்பாளர் நிறுத்தல்கள் மற்றும் இதர நிகழ்வுளும் நிகழ்ந்தேறின!! இதெல்லாம் அனுர தரப்புக்குக்கும் தெரியாமலில்லை அதன் தாக்கம் தான் அவர் யாழ்பாணத்தில் நிகழ்த்திய கூட்டத்தில் " சிங்கள மக்கள் பெருவாரியாக தனக்கு ஆதரவை தரும் இச் சந்தர்பத்தில் தமிழர்களும் ஆதரவை நல்காது போனால் சரியாக இராது" என சாரப்பட கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் அக்கருத்தின் நீள , அகல, ஆழம் அறியாதோர் அதை அவரின் இனவாத கருத்தாடலாக சித்தரித்தனர். இவ்வளவு நிகழ்வுகள் மறைமுக நிகழ்சி நிரல்களுக்கு மத்தியிலும் சிங்கள டயஸ்போராக்கள் அத்தனை வல்லாதிக்க இராஜதந்திரத்துக்கு மேலாக பல படி மேல் போய் ஒற்றுமையாக காய்நகர்த்தி இராஜதந்திர வெற்றியடைந்திருக்கிறார்கள். தமக்கான தூய தலைவனை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். ஆனால் நம் புலம்பெயர் தமிழ் டயஸ்போராக்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் அவர்களின் அரசியல் நிலைபாடு என்ன ? அவர்கள் இதுவரை தமிழ் மக்களுக்காக சாதித்ததும் என்ன? குறுகிய காலத்துக்குள் சிங்கள டயஸ்போராக்கள் கண்ட வெற்றியை பல தசாப்தகாலமாக புலம்பெயர் நாடுகளில் இலங்கை எம்பசிகளின் எண்ணிக்கைக்கு அதிகமாக செயல்படும் தமிழ் டயஸ்போராக்களினால் இவ்வளவு காலமும் தமிழினத்துக்காக நிகழ்த்தப்பட்ட சாதனை என்ன? புலம்பெயர் தேசங்களில் போட்டிக்கு போட்டியாக பல அமைப்புக்களை தொடங்குவதும் தங்களுக்குள் புடுங்கு பட்டுகொள்வதும் ஈழத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் இன்னும் பல படி போய் ஒரு கட்சியின் பல உறுப்பினர்களை பிரித்தாள நிதி அனுப்பி செயல்பட்டு கொண்டிருகிறார்கள். இந்த தமிழ் டயஸ்போராக்களினான் ஈழத்தில் ஏறபடுத்தப்பட அரசியல் முயற்சி என்ன? பொருளாதார முயற்சி என்ன ? என்பதை யாரும் பட்டியல்படுத்த முடியுமா? அதிலும் பல அமைப்புக்கள் திரைமறைவில் சிங்கள புலனாய்வாளர்களோடு இயங்கிகொண்டு பேருக்கு தமிழ் டயஸ்போரா என இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டம் நிறைவடைது ஒன்றரை தசாப்தங்களை எட்டியுள்ள நிலையில் ஒரு இனத்துக்கான நீடித்த நிலைத்த அரசியலை கட்டமைக்க இயலவில்லை! ஒரு தலைவனை இனம் காண முடியவில்லை! இவர்களால் இதுவரை சாதித்தவை இன்றுமே இல்லை! ஈழ போராட்டத்தின் அவலங்களுக்கு மேல் நின்று காசு பறித்ததை தவிர... ஆனால் சிங்கள டயஸ்போராக்கள் சொற்ப காலத்தில் சிறு விதையாய் இருந்த ஒரு கட்சியை ஆலமரமாக்கியிருக்கிறார்கள்! JVP கூட்டத்தின் பேச்சை கேட்க வேண்டுமென்றால் கூட்டம் திரளும் ஆனால் வாக்கு திரளாது என்ற கருத்தியலை இரு வருடங்களுக்குள் ஒழித்துகட்டி 3% வாக்கு வங்கியை 60% மாக்கி அபரிவித அதிசயத்தை நிகழ்த்தி காட்டியிருக்கிறார்கள். தன் தேசத்துக்காக தன் இன மக்களின் விடிவுக்காக, தன் இனத்துக்கான தூய அரசியலுக்காக அனைத்து சிங்கள டயஸ்போராக்களும் ஒரு நேர்கோட்டில் நின்று அத்தனை வல்லாதிக்க சக்திகளின் இராஜதந்திர நகர்வுகளையும் முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார்கள். ஆனால் பல தசாப்தங்களாக சிங்கள மக்களை விட அதிக சனத்தொகையினை புலம்பெயர் நாடுகளில் கொண்ட எம் தமிழ் டயஸ்போராக்கள் எம் இனத்துக்கான தலைவனை அல்லது சரியான தூய அரசியல் பொருளாதார கொள்கைகளை இதுவரை கட்டியமைக்காமை தமிழினத்துக்கான சாபக்கேடு!! ஈழ நிலத்திலும் சரி புலத்திலும் சரி தமிழன் தன் நிலைபாடுகளில் ஒரு சேர மாற்றம் உண்டாகாதவரை உணர்ச்சிவசப்பட்ட உப்பு சப்பில்லாத , எதற்குமே உதவாத எதிர்கால சந்ததிக்கு உகந்தல்லாத இந்த வீணாய்போண இழிநிலை அரசியல் தான் தொடர்சியாக மிஞ்சும்! அவர்கள் இனத்துக்கான அரசியலை முன்னெடுக்கிறார்கள் ஆனால் நாங்கள் தனி மனித அரசியலை முன்னெடுக்கின்றோம். நாம் சிங்கள மக்களிடம் படிக்க நிறையவே உண்டு! நன்றி மதுசுதன் 23.09.2024 WhatsApp பகிர்வு1 point- 13வது திருத்தம் - மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் ஜெய்சங்கர் பேச்சு – இந்திய வெளிவிவகார அமைச்சு
இந்த இரண்டையும் வைத்து உங்கன்ட ராஜதந்திர நகர்வுகளை(கொள்கை வகுப்புக்கள்) எவ்வளவு காலத்துக்கு செய்யப்போறீயல்...இவ்வளவு காலமும் வலதுசாரிகள் இருந்திச்சினம் இப்ப இடதுசாரிகள் வந்திருக்கினம் கொஞ்சம் நீங்களும் மாறுங்கோ... அதுகளை பற்றி இவருக்கு தெரியுமோ ....சிறிலங்காவுக்கு வரும் சகல இந்தியா ராஜத்ந்திரிகளுக்கு இந்த இரணடையும் பற்றி கதையுங்கோ ஆனால் அதை நடைமுறை படுத்துவது பற்றி முயற்சிக்க கூடாது என கல்வெட்டில் எழுதி வைச்சிருக்கினம் போல ...1 point- சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
அனுராவின் வெற்றியில் சமுக ஊடகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளது,அரகலய போராட்டம் வெற்றியடைய இந்த யூப்டியுப் போராளிகள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள்...சில தமிழ் யூ டியுப் போராளிகள் தற்பொழுது தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர் ...பின்பு ஊழல் பற்றி பேசுகின்றனர்... லணடனிலிருந்தும் ஒர் யூ டியுப்பர் செயல்படுகிறார் போல தெரிகின்றது ... அரச அதிகாரிகளின் கடமை யாருக்கு பார் பெர்மிட் கொடுக்க வேணும் என விசாரிப்பது...1 point- 13வது திருத்தம் - மீனவர்கள் விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் ஜெய்சங்கர் பேச்சு – இந்திய வெளிவிவகார அமைச்சு
அடேய் 13வது திருத்தத்தத்தில் உருப்படியாக இருந்த வடக்கு கிழக்கு இணைப்பை வழக்கு போட்டு நிரந்தரமாகப் பிரித்தவர்களே இந்த ஜேவிபி காரங்கள்தானேயடா!!!1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
நான் நினைக்கிறேன் இது ஒரு வகை பொறாமை சம்பந்தப்பட்டதாக இருக்கக்கூடியது. தமிழ் மொழியின் தொன்மை மற்றும் தமிழர்களின் அறிவு வீரம் உழைப்பு சார்ந்த தாழ்வு மனப்பான்மையால் சிங்கள தலைமைகளால் பௌத்த மதம், மதம் மற்றும் பாடப் புத்தகங்களில் இருந்து இவை விதைக்கப்படுகின்றன. அதனால் தான் என்னதான் இருந்தாலும் கடைசியில் அவர் அங்கே தான் வந்து நிற்கிறார்கள் நிற்பார்கள்.1 point- ஓரிரவு
1 pointஓரிரவு ஞானசேகர் மணி ஏழாகிவிட்டிருந்தது. எனது டீம் லீட் சியோக் வீ அன்று மதியம் என்னிடம் ஒரு வேலையை அளித்திருந்தாள். என்னவென்று கண்டறிய முடியாத ஒரு தவறு காரணமாக அதன் மொத்த செயல்பாட்டையே நான் வேறு மாதிரி மாற்றி எழுத வேண்டும். ஏற்கனவே அது ஒருவனிடம் கொடுத்து அவனால் அந்தத் தவறைக் கண்டறியமுடியாமல் பின் அவளும் முயற்சி செய்து பார்த்துவிட்டு இறுதியில் என்னிடம் மொத்தத்தையும் மாற்றி எழுதக் கேட்டிருந்தாள். மூன்று நாட்கள் அவகாசம் கேட்டிருந்தேன். ஆனால் அதனை சோதிக்க ஆரம்பித்த இரண்டு மணி நேரத்திலேயே என்ன தவறு என்பதைக் கண்டுபிடித்துவிட்டேன். ஒரு சிறிய கவனக்குறைவான ‘கோட்’ பிழை. புதிய கண்களுக்கு எளிதில் அகப்பட்டு விடும் பிழைதான். எப்படியோ தவறவிட்டிருக்கிறார்கள். இரண்டு மணி நேரத்தில் அதை நிவர்த்தி செய்து விடலாம். அதைத் திருத்தி எழுதிக் கொண்டிருந்தேன். அதனால் தான் தாமதமாயிற்று. திங்கள் காலை வந்ததும் அவளிடம் அந்தப் பிரச்சனையை சரி செய்துவிட்டேன் என்று சொல்லி அவளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கலாம். அவளிடம் இருந்து ஒரு பாராட்டு. அவள் மகிழ்ச்சி அடையும் போது கண்ணாடிக்குள் கண்ணைச் சுருக்கி, கன்னத்தில் குழி விழ சிரிப்பது அவ்வளவு அழகாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் எங்களது வேலையை மதிப்பிட்டு அவள் தான் எங்கள் நிறுவனத்தில் தெரிவிக்கவேண்டும். எங்களுக்கு இந்த கிளைண்ட் நிறுவனத்தில் இரு வருடம் ஒப்பந்த வேலை. அவள் இங்கு முழுநேர வேலை பார்ப்பவள். எங்களது வேலை நன்றாக இருக்கும் பட்சத்தில் எங்களது ஒப்பந்தத்தை நீட்டிப்பார்கள். பிடிக்கவில்லையென்றால் அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேற்றிவிடுவார்கள். பின் எங்கள் நிறுவனம் எங்களை இடமுள்ள வேறு கிளைண்ட் நிறுவனத்தில் போடுவார்கள். எங்கும் இடம் இல்லையெனில் இரண்டு மூன்று மாதம் பொறுத்துப் பார்த்துவிட்டு வேலையை விட்டு தூக்கிவிடுவார்கள். விசாவையும் ரத்து செய்து விடுவார்கள். பின் இந்தியாவுக்குதான் திரும்பப் போக வேண்டும். அதனால் தான் ஐந்து மணிக்கு ஹரிஸ் கிளம்பும் போது கூப்பிட்டும் போகவில்லை. ‘விரைவில் வரவும். காத்திருக்கிறேன்’ என்ற செய்தியோடு ஹரிஸ் இரண்டு மதுபாட்டில்கள் இருக்கும் படத்தை எனக்கு மொபைலில் அனுப்பி இருந்தார். எனது அலுவலகத்தில் இருந்து தமன்ஜெயா எல்ஆர்டி ஸ்டேஷன் செல்ல பதினைந்து நிமிடம் நடக்கவேண்டும். ஓட்டமும் நடையுமாக சென்று சேர்ந்தேன். அங்கிருந்து ரயில் பிடித்து மஸ்ஜித் ஜமக் ஸ்டேஷன் வந்து பின் ஜலன் இப்போவுக்கு பஸ் பிடித்தேன். சாதாரணமாக பதினைந்து நிமிட பஸ் பயணம் என்றாலும் வெள்ளிக்கிழமை இந்த நேரத்தின் வாகன நெரிசலில் சென்று சேர அரைமணி நேரத்திற்கும் மேல் ஆகும். இரவில் திரும்பி வரும்போது கடந்த ஆறுமாதமாக பேருந்தில் சாலையின் இடதுபுறத்தை பார்த்தவாறு ஜன்னல் ஓரத்தில் அமர்வது என் வழக்கம். அன்றும் அப்படித்தான். பேருந்து மெல்ல மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. சௌகிட்டை தாண்டி விட்டால் இந்த வாகன நெரிசல் இருக்காது. வண்டி வேகம் எடுத்துவிடும். அப்போது நிறுத்தங்களில் கூட நிறுத்தாமல் சென்று விடுவார்கள். நாம் நிறுத்தம் வருமுன்னே மணியை அழுத்திவிட வேண்டும்.சௌகிட் சிக்னலைத் தாண்டி சில நிமிடங்கள் ஆன பின் ஒன்றை அடுத்து ஒன்று மூன்று டைல்ஸ் கடைகள் வந்த பிறகு செட்டியார் மண்டபத்திற்கு முன்னதாக அந்த சாலையில் சில தூரங்கள் இரவில் எந்த மின்விளக்குகளும், ஆள் அரவமும் இருக்காது. பேருந்து அந்த இடத்தை நெருங்கும்போதே எனது மனம் படபடக்க ஆரம்பித்துவிடும். அவள் இருக்கக்கூடாது அவள் இருக்கக்கூடாது என்று மனதில் வேண்டிக்கொள்வேன். பகல்நேரங்களில் அந்த இடத்தின் சாலையோரத்தில் இருக்கும் கட்டிடங்களைப் பார்த்திருக்கிறேன். அவற்றின் பழைய சுவர்களில் சுண்ணாம்பு பெயர்ந்து ஆங்காங்கே கருமை படிந்து காணப்படும். கீழ்தளத்தில் மெக்கானிக் கடையோ அல்லது சீனப்பண்டங்களை விற்கும் சிறிய பலசரக்குக் கடையோ இருக்கும். மேல் தளத்தில் கைவிடப்பட்ட பழைய வீடுகள். சிலவற்றின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்திருக்கும். சில செய்தித்தாள்கள் ஒட்டப்பட்டு மறைக்கப்பட்டிருக்கும் ஆனால் சூரியன் மறைந்த பிறகு கீழே அந்தக் கடைகள் இருந்ததற்கான சான்றே இல்லாமல் அந்த இடமே வெறுமையாக இருக்கும். செய்தித்தாள்கள் ஒட்டப்பட்டு மூடியிருக்கும் கண்ணாடி ஜன்னல்களில் உள்ளே மங்கலான விளக்கு எரிவது தெரியும். அந்நேரத்தில் அந்த சாலையின் ஓரத்தில் குறைவான வெளிச்சம் இருக்கும் ஏதேனும் ஒரு பகுதியில் அந்தப் பெண் நின்றுகொண்டிருப்பாள். ஒரு அவலட்சணமான விபச்சாரி. மஞ்சள் இனப்பெண். மஞ்சள் இனப்பெண்களின் வயதை எனக்கு தோராயமாகக் கூட கணிக்க இயலாது. நான் ஆரம்பத்தில் சியோக் வீயின் வயதை இருபத்தியேழாக இருக்கும் என்று தான் கணித்து வைத்திருந்தேன். ஆனால் அவளுக்கு முப்பத்தாறு வயது. திருமணம் ஆகி ஒரு குழந்தை இருந்தது. இவளைப் பார்த்தால் எப்படியும் வயது நாற்பதுக்கு அருகில் இருக்கலாம் என்று தோன்றியது. நன்றாக மெலிந்த உருவம். முகவாய் கொஞ்சம் முன்னோக்கி நீண்டு, தோள்பட்டை பகுதி துருத்தி மேல்நோக்கி இருந்தது. மார்புப் பகுதியோ பிட்டம் பகுதியோ இருப்பதற்கான எந்தத் தடயமும் இல்லை. அக்குளில் ஆரம்பித்து தொடை வரை மட்டுமே இருக்கும் உடம்புக்கு கொஞ்சமும் பொருந்தாத ஒரு வெள்ளை நிற உடை அணிந்திருந்தாள். அந்த உடை, அவள் அணிந்திருந்த செருப்பு இவையெல்லாம் பளபளப்பாக இருந்தாலும் சுத்தமாக அவளுக்குப் பொருந்தவில்லை. வாடிக்கையாளர்களை கவர்வதற்காக செய்திருந்த ஒப்பனை, பளிச்சென்று பூசியிருந்த உதட்டுச்சாயம் அவளை இன்னும் பரிதாபமாகவேக் காட்டின. கடந்து போகும் ஆண்களைப் பார்த்து அவள் செய்யும் அந்த குலைவான செயற்கை சிரிப்பு எந்த விதத்திலும் உதவிகரமாக இல்லை. பேருந்தினுள் இருந்த என்னால் அவள் மேல் என்ன மாதிரியான மலிவான வாசனை திரவியத்தின் மணம் வீசும் என்பதைக் கூட உணரமுடிந்தது. ஆறு மாத காலமாக இவளை இந்த நேரத்தில் பேருந்தில் திரும்பிவரும் போது இங்கு அவ்வப்போது பார்க்கிறேன். ஏன் இந்த இடத்தில் நின்று கொண்டிருக்கிறாள். அந்த சாலையில் யாருமே நடந்து செல்ல மாட்டார்கள். வாகனங்கள் மட்டுமே சென்று கொண்டிருக்கும். புக்கிட் பின்டாங்க் போய் நின்றால் கூடப் பரவாயில்லை. அங்கு அது போன்ற பெண்கள் நிறைய இருப்பார்கள். அதுக்கென்றே ஆண்கள் வருவார்கள். யாரேனும் ஒருவர் கூட்டிச்செல்ல வாய்ப்பு இருக்கலாம். அல்லது குறைந்த பட்சம் இன்னும் மூன்று நிறுத்தங்கள் தள்ளி சௌகிட் மார்கெட் அருகே சென்று நிற்கலாம். அங்கும் இது போன்ற பெண்கள் இருப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு வேளை வேறு பெண் என்று இன்னொரு வாய்ப்பு இருந்தால் இவளை எப்படியும் தேர்ந்தெடுக்க மாட்டார்கள் என்றா இங்கு தனியாக நின்றுகொண்டிருக்கிறாள். எங்கள் பேருந்து அவளைக் கடந்து சென்றது. அவள் நின்றிருந்த இடத்திலிருந்து இரண்டாவது நிறுத்தம் என்னுடையது. எனது அப்பார்ட்மெண்டின் தரைத்தளத்தில் இருக்கும் இந்திய மதுபானங்கள் விற்கும் கடையில் ஒரு பீர் வாங்கிக்கொண்டேன். ’உங்காளு வந்து வாங்கிட்டு போய்ட்டாரே’ என்றான் கடையிலிருந்தவன் சிரித்தவாறே. ‘நமக்கு அது பத்தாது’ என்று கூறிவிட்டு அந்தக்கடையின் பின்புறம் வழியாக சென்று எங்கள் அப்பார்ட்மெண்டின் நுழைவாயிலை அடைந்தேன். பத்தாவது மாடியில் எனது அறைக்குச் சென்று உடையை மாற்றி இரவு நேர பேண்ட்டும் டீஷர்ட்டும் அணிந்து கொண்டேன். அறையில் இருந்தவர்கள் அவர்களது லேப்டாப்பில் மும்முரமாக ஏதோ பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் என் பீரை எடுத்துக்கொண்டு கீழிறங்கி எங்கள் அப்பார்ட்மெண்டை விட்டு வெளியே வந்து இடப்புறத்தில் ஓடையைக் கடந்து செல்லும் பாலத்தின் வழியாக ஹரீஸின் அப்பார்ட்மெண்டிற்குச் சென்றேன். என்னிடம் அதன் வாயிலை திறக்கும் அட்டை இல்லையாதலால் போன் செய்த பின்பு ஹரீஸே கீழே வந்து பதினெட்டாவது மாடியில் இருக்கும் அவர் ஃப்ளாட்டுக்கு என்னைக் கூட்டிச் சென்றார். அவர் திருமணத்திற்கு முன் வரை எங்களது ஃபளாட்டில் தான் இருந்தார். எங்கள் கம்பெனி வெளியே சாஃப்ட்வேர் கம்பெனி என்று சொல்லிக்கொண்டாலும் அது ஒரு அவுட்சோர்சிங் கம்பெனி. பெங்களூரில் ஒரளவுக்கு நல்ல திறமையுடைய தேவைப்படும் கணினிமொழியில் இரண்டு அல்லது மூன்று வருட அனுபவம் உள்ளவர்களை வேலைக்கெடுத்து அவர்களை கோலாலம்பூருக்கு அனுப்பிவிடுவார்கள். இங்குள்ள அவர்களின் க்ளைன்ட் கம்பெனிகளில் நாங்கள் வேலை செய்யவேண்டும். தோராயமாக எப்போதும் ஒரு முப்பது பேர் இருப்போம். எல்லோரும் இந்தியர்கள். எல்லோரையும் அந்த அப்பார்ட்மெண்டில் ஃபளாட்டுக்கு நான்கு அல்லது ஐந்து பேர் என குடியமர்த்தியிருந்தார்கள். எல்லா வசதியும் கொண்ட நல்ல சௌகரியமான ஃப்ளாட்கள். நாங்கள் வாங்கும் சம்பளம் மலேசியர்களோடு ஒப்பிடும் போது குறைவு தான் என்றாலும் இந்திய மதிப்பில் நல்ல பணம்தான். அவர் டேபிளில் இரண்டு குவாட்டர் ப்லென்ட்ர்ஸ் ப்ரைட்டு விஸ்கியும் சிக்கனும் கடலைப்பருப்பும் தயாராக வைக்கப்பட்டிருந்தன. நான் வாங்கி வந்திருந்த எனது ஒரு பியர் கேனையும் அதனுடன் வைத்தேன். அவர் ஃப்ரிட்ஜில் இருந்து ஐஸ்குயூப்களை எடுத்து வந்து வைத்துபின்பு எங்களது ஆபீஸ் விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருவரும் மதுவருந்த ஆரம்பித்தோம். ஒரு மணி நேரத்தில் இருவரும் எங்கள் குவார்டர்களைக் காலி செய்திருந்தோம். நான் அடுத்து எனது பியரை திறந்தபோது அவர் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டார். ‘பாபி எப்ப வராங்க’ என்று ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன். ‘வருகிற பதினைந்தாம் தேதி. இன்னும் இரண்டு வாரங்களில்’ ‘அப்ப கடைசியா ஒருமுறை இப்போ புகிட் பின்டாங்க் போலாமா?’ என்றேன் நமட்டுச் சிரிப்புடன். ‘முடியவே முடியாது. கிருஷ்ணராய் இருந்த அந்த நேரம் முடிந்துவிட்டது. இப்போது இது நான் ராமராய் இருக்க வேண்டிய நேரம்’ என்றார் புன்னகையுடன். ‘குறைந்தபட்சம் மசாஜாவது’ ‘ம்ஹும். அது மசாஜோட மட்டும் நிக்காதுனு எனக்குத் தெரியும்’ ‘போய் அந்த பாகிஸ்தானி கடைல சாப்பிட்டுட்டு மட்டும் வந்திடலாம்’ அவர் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பார்சல் உணவைக் காண்பித்து ‘அதான் நான் ஏற்கனவே வாங்கி வச்சிட்டேன். இனி புக்கிட் பின்டாங்க் போகணும்னா வைஃப் வந்ததுக்கப்புறம் அவளோடதான் போகணும். மனச கட்டுப்படுத்தி வச்சிருக்கேன். நீ வேணா போய்ட்டு வா.’ ‘தனியா போகணுமே’ ‘உனக்கு போகணும்னா பனிரெண்டாவது மாடியில் இருக்கிற மஞ்சுநாத்த கூப்பிடு. அவன் எப்பவும் தயாரா இருப்பான்.’ ‘மஞ்சுநாத்? எனக்கு யாருன்னே தெரியாது.’ ‘ஃஜுரிச் க்ளைண்ட்ல இருக்கான்ல. டாட் நெட் டெவெலப்பர். கன்னடிஹா’ ‘ம்ஹும்.’ ‘நல்ல ஆளுதான் போ நீ. ஒரு வருஷமா இங்க இருக்குற, யாரச்சொன்னாலும் தெரியாதுங்கிற’ ‘எனக்கு நம்ம ஃப்ளாட்ல இருக்கிறவங்க அப்புறம் 108ல இருக்கிறவங்க மட்டும் தான் தெரியும். வேற யாரையும் தெரியாது. அவனுகதான் கீழ ரெஸ்டாரண்டுக்காச்சும் வருவாங்க. மத்த யாரும் ரூம விட்டே வெளிய வரமாட்டானுக’ ‘நீ தான் இப்பல்லாம் புகிட் பிண்டாங் போனாலும் ஒண்ணும் பண்றதில்லய. பீர் அடிச்சுட்டு இருப்ப. அப்புறம் ஏன் போகணும்னு சொல்ற. வேணும்னா கீழ போய் பீர் வாங்கிட்டு வா. நான் உனக்கு கம்பெனி கொடுக்கேன்’ ‘வேணாம். வேணாம். சும்மாதான் கேட்டேன். ஒரு நல்ல ஹஸ்பண்டா இருக்கீங்களானு டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். டெஸ்ட்ல பாஸ் பண்ணிட்டிங்க’ என்று சிரித்தேன். அவர் தனது சாப்பாட்டை முடிப்பதற்கும் நான் எனது பியரை முடிப்பதற்கும் சரியாக இருந்தது. அவர் மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்து விட்டு தனது கணினியில் பழைய கசல் பாடல்களை ஒலிக்கவிட்டார். நானும் அவரிடம் இருந்து ஒரு சிகரெட்டை வாங்கி பற்ற வைத்துக்கொண்டு அவர் வீட்டின் பால்கனியில் வந்து நின்று கொண்டேன். அந்த பதினெட்டாவது மாடியில் இருந்து கீழே பார்க்கும் போது இங்கிருந்து விழுந்தால் என்னவாகும் என்று தோன்றியவுடன் அதன் கம்பித்தடுப்பை இறுகப் பற்றிக்கொண்டேன். தூரத்தில் அந்த இரட்டைக்கோபுரம் அதன் மின் விளக்குகளோடு சிறியதாய் தெரிந்தது. அதன் அருகே தான் புகிட் பின்டாங்க் இருக்கிறது. மணி பத்தாகிறது. இப்போது அங்கு நல்ல கொண்டாட்டமாக இருக்கும். தரமான உணவகங்கள், மால்கள், இசையுடன் கூடிய பார்கள், மசாஜ் பார்லர்கள், தெருவில் நின்று ஹேப்பி எண்டிங் மசாஜுக்கு அழைக்கும் சீன முகப் பெண்கள், ஆங்காங்கே வாடிக்கையாளர்களை ரகசியமாக அழைத்து வர நிற்கும் பிம்ப்கள், அவர்கள் அழைத்துப் போகும் ஹோட்டல்கள் என்று உற்சாகம் நிரம்பி வழியும். முன்பெல்லாம் வெள்ளிக்கிழமை வந்தால் இந்நேரத்தில் ஹரீஸும் நானும் கிளம்பி இருப்போம். அவருக்குத்தான் இடங்கள் அத்துப்படி. நல்ல பெரிய ஹோட்டல்களில் உள்ள பார்லர்களுக்கு அழைத்துச் செல்வார். ரிசப்ஷனிலேயே வாக்கிடாக்கியுடன் ஒருவர் வந்து அழைத்துச் சென்று ஒரு தனிஅறையில் சென்று நம்மை உட்காரவைத்து அருந்த குளிர்பானம் கொடுப்பார்கள். அந்த அறையின் மணமும் அதன் அரையிருளான ஒளியமைப்புமே நம்மை பரவசமடையச் செய்யும். பின் வாக்கிடாக்கியில் அழைத்ததும் எல்லாப் பெண்களும் சிறந்த உடை ஒப்பனை நளினத்தோடு மயக்கும் பார்வையில் நம்முன் வந்து நிற்பார்கள். அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்ததும் அவளே நம்மை ஒரு அறைக்கு அழைத்துச்சொல்வாள். அவளே நம்மைக் குளிப்பாட்டி கட்டிலுக்கு அழைத்துச்சென்று காண்டம் அணிவித்து வழிநடத்துவாள். ஆரம்பத்தில் இருந்தே உங்களை உச்சத்திற்கு கொண்டுபோய் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இதை முடித்துவிட எல்லா முஸ்தீபுகளையும் செய்வாள். ஆனால் சில செய்யக்கூடாதவைகள் உண்டு. முகம், உதட்டில் முத்தம் கொடுக்க கூடாது என்பது போன்றவை. எனக்கு முதல் சில தடவைகள் அவை பிரச்சனையாக இல்லை எனினும் பின் அந்த செக்ஸ் அவ்வளவு உல்லாசமாய் இல்லை. மேலும் ஒவ்வொரு முறையும் முடிந்தவுடன் சிலநிமிடங்கள் இருக்கும் குற்றவுணர்வு வேறு. ஆனாலும் இத்தனை பெண்களுடன் உறவு கொண்டுள்ளேன் என்ற எண்ணிக்கைக்காக சில சமயம் சென்று வந்த பின் தவிர்த்துவிட்டேன். அதன்பிறகெல்லாம் ஹரீஸுடன் சென்றால் அவர் வருவது வரை நான் ஏதேனும் பாரில் சென்று பியர் வாங்கி அருந்திக் கொண்டிருப்பேன். அறை உள்ளேயிருந்து வந்த அந்த கசல் பாடல் பால்கனியில் லேசாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து கோலாலம்பூரின் இரவின் சப்தமும். காற்று மெலிதாக முகத்தை வருடிக்கொண்டிருந்தாலும் எனது நெற்றிப்பகுதி வியர்த்திருந்தது. மலைமேல் இருந்த கென்டிங் ஹைலேண்டின் விளக்கொளிகள் தூரத்தில் ஏதோ சிறிய நட்சத்திர கூட்டங்கள் போலத் தெரிந்தன. அந்த நட்சத்திரக் கூட்டத்திலிருந்து விலகி ஒரே ஒரு மங்கலான நட்சத்திரம் தனித்திருந்தது. அது அந்த மலைமேல் புதிதாக கட்டப்பட்டு யாருமே குடிபோகாமல் கைவிடப்பட்ட பிரசித்தியான ‘ஆம்பெர் கோர்ட்’ அப்பார்மெண்ட்டாக இருக்கலாம். அத்தனைப் பெண்கள் வரிசையில் வந்து நின்றால் கண்டிப்பாக அவளை யாரும் தேர்ந்தெடுக்கமாட்டார்கள் என்ற எண்ணம் வந்து திடுக்கிடவைத்தது. மதுவின் ஆரம்பநேர ஆசுவாசத்திற்குப் பிறகு அது உள்ளிருந்து கசடுகள், கழிவிரக்கங்கள், வீண் எண்ணங்கள் என்று எல்லாவிதமான எதிர் உணர்ச்சிகளையும் கொண்டு வர ஆரம்பித்து விட்டிருக்கிறது. அவள் நின்றுகொண்டிருந்த அந்த திசையை நோக்கிப் பார்த்தேன். கட்டிடங்களும் மரங்களும் மறைத்திருந்தன. அவள் இன்னும் அங்கு தான் நின்று கொண்டிருப்பாளா? ஹரீஸும் சிகரெட்டை ஊதியவாறு பாடலை பாடிக்கொண்டே பால்கனிக்கு வந்து என் அருகில் நின்றார். ‘ஹரீஸ் அந்த மெயின்ரோட்டுல பெட்ரோல் பங்க் பக்கத்துல ஒரு பொம்பளை நிக்கும். அதை நோட் பண்ணிருக்கீங்களா’ என்றேன். பாட்டுப் பாடுவதை நிறுத்திவிட்டு முகத்தைச் சுருக்கி என்னைப் பார்த்து ‘பாத்திருக்கேன். அவ்வளவு அவசரமா? அந்த மாதிரி ரோடு சைடுல இருக்கிற பொம்பளைக் கிட்டலாம் போகாத. அது சேப் கிடையாது’ என்று சிரித்தார். ‘இல்ல இல்ல. அதுக்கில்ல. இன்னைக்கு வரும்போது பாத்தேன். பாக்க ரொம்ப கஷ்டமா இருந்திச்சு. அங்க யாரு வருவாங்கனு அங்க நின்னுகிட்டிருக்கு’ ‘ஆமா பாவம்தான். பொதுவா இங்க ப்ராத்தல் பண்ற சீனப் பொண்ணுங்க எல்லாம் மலேசியாகாரங்க இல்ல. எல்லாம் சீனாவுல இருந்து வர்ரவங்க. இல்ல வியட்னாம், மியான்மர். அனேகமா அது மியான்மரா இருக்கும்னு நினைக்கேன். வேலைக்குன்னு கூட்டிட்டு வந்து இங்க இந்த வேலைக்கு தள்ளி விட்டுருவாங்க. இல்ல அவங்களே பணத்துக்காக மாறிருவாங்க. நிறைய பேருக்கு விசா வேலிட்டா இருக்காது. மாட்டிகிட்டா பிரச்சனைதான். கொஞ்சம் நல்லா இருக்கிற பொண்ணுங்க பார்லர்ல போய் சேர்ந்துகிடுவாங்க. கிடைக்கிற காசுல போலீசையும் கவனிச்சுகிடலாம். இத யார் சேத்துப்பாங்க. நீ போவியா? அதான் போலீசுக்கு பயந்து இங்க மறைவா வந்து நிக்கும் போல.’ அவள் சிறு பெண்ணாய் இருந்து இப்போது இப்படி ஆவது வரை அவள் கடந்து வந்திருக்க சாத்தியமான பல விதமான வாழ்க்கை முறைகள் என் கண்ணில் ஓடி மறைந்தன. அடக்கிவைக்க முயன்ற கோபமோ அழுகையோ தலையை கனக்கச் செய்தது. இருவரும் சிகரெட்டை புகைத்து முடித்தபின் ஹரிஸ் ‘இங்கயே படுத்துக்கிறியா’ என்று கேட்டார். ‘இல்ல எனக்கு இன்னொரு பீர் வேணும் போல தெரியுது. நான் வாங்கிட்டு அப்படியே ரூமுக்கு போறேன்’ என்றேன். ‘சரி. இது நான் என் மனைவியிடம் பேச வேண்டிய நேரம்’ என்று மீண்டும் கணினி அருகே சென்று உட்கார்ந்து கொண்டார். போதை மிதமாக ஏறி இருந்தது. அவரிடம் விடைபெற்று கீழே வந்தேன். அங்கிருந்த திறந்தவெளி உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எனது அப்பார்ட்மெண்ட் நோக்கி நடந்தேன். பாலத்தைக் கடக்கும் போது அந்த ஓடையின் சத்தம் தெளிவாகக் கேட்டுக்கொண்டிருந்தது. சென்று பாலத்தின் கீழ் எட்டிப் பார்த்து நின்றேன். சிறிது நேரத்தில் ஒடையின் சத்தமும் மறைந்து ஒரே நிசப்தம். ஏனோ அந்த நிசப்தம் மனதை தொந்தரவு செய்தது. ஓடை தனியாக ஓடி இருட்டில் கலந்து மறைந்தது. அவள் இன்னும் அங்கு நிற்கிறாளா என்று சென்று பார்த்துவிடலாம் என்று தோன்றியது. எனது அப்பார்ட்மெண்ட்டை தாண்டி அந்த சாலையை அடைந்து வலப்புறம் திரும்பி சாலையின் மறுபக்கத்தில் நடக்க ஆரம்பித்தேன். ஒரு பத்து நிமிடம் நடந்திருப்பேன். ஒரு சிறிய உணவகம் ஆளில்லாமல் அரை இருளில் திறந்திருந்தது. அதுதவிர அந்த இடத்தில் எந்த ஆள் நடமாட்டம் இல்லை, ஒருசில வாகனங்கள் இருமருங்கிலும் சென்று கொண்டிருந்தன. அவள் இன்னும் அங்கு இருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டேன். பெட்ரோல் பங்க்கை தாண்டிய போது அவளைக் அங்கிருந்து காணமுடிந்தது. இன்னும் அந்த இடத்தில் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு ஏதோ யோசனையில் நின்று கொண்டிருந்தாள். பேருந்திலிருந்து பார்த்தபோது எப்படி இருந்தாளோ அப்படியே இருந்தாள். முகம் சோர்ந்திருந்தது. நான் அவளுக்கு நேரெதிரெ சாலையின் எதிர்புறத்தில் நின்று கொண்டிருந்தேன். இருட்டில் இருந்தது அவளுக்குத் தெரிய வாய்ப்பில்லை. சிறிது நேரம் நின்று அவளைக் கவனித்துக்கொண்டிருந்தேன். அங்கேயே முன்னும் பின்னும் எதையோ முனகியபடி நடந்து கொண்டிருப்பாள். ஏதேனும் இருசக்கரவாகனம் கடக்கும் போது ‘ஹே’ என்று சொல்லி சிரிப்பாள். பின் மீண்டும் நடை. பின் கைப்பைக்குள் இருந்து ஒரு கையடக்கமுள்ள ஒரு கண்ணாடியை எடுத்து தனது ஒப்பனையை சரிபார்த்துக் கொள்வாள். என்ன நினைத்துக் கொண்டிருப்பாள். தான் அவலட்சணமாக இருக்கிறோம் என்பது அவளுக்கு தெரிந்திருக்கும் அல்லவா? மனம் மேலும் கனமானது. யாருமே வரவில்லை என்றால் அவள் இதை விட்டுத்தொலைத்திருப்பாள் இல்லையா? ஆறு மாதங்களாக இங்கு இருக்கிறாள் என்றால் யாரேனும் இவளை அழைத்துச் செல்கிறார்கள் என்று தானே அர்த்தம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொள்ள முயன்றேன். இருபது நிமிடங்கள் அவளைக் கவனித்திருப்பேன். திடீரென்று அந்த எண்ணம் தோன்றியது. எனது பேண்ட் பைக்குள் துழாவிப் பார்த்தேன். நூறு ரிங்கெட் இருந்தது. சாலையைக் கடந்து அவளை நோக்கி நடந்தேன். திடீரென்று அங்கு முளைத்து தன்னை நோக்கி வந்த உருவத்தைக் கூர்மையாக நோக்கினாள். பின் வெளிச்சத்தில் என்னைக் கண்டதும் ஒருவேளை சாலையைக் கடக்கிறான் என்று நினைத்துக்கொண்டாள் போல அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. அவளை நெருங்கும் போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து ‘ஹே’ என்று உடலை அசைத்தவாறு சிரித்தாள். நான் எனது பதற்றத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ‘ஹாய் ஹௌ மச்’ என்றேன். அவளுக்கு புரியவில்லை. அவளைக் காட்டி ‘மசாஜ், ரிங்கிட்ஸ்’ என்று கூறி எவ்வளவு என்பது போல் கையைக் காட்டினேன். அவள் மலாயில் ஏதோ சொன்னாள். பின் எனக்கு புரியவில்லை என்றவுடன் ‘மசாஜ்’ என்று சொல்லிவிட்டு இல்லை என்பது போல் தலையை ஆட்டி பையிலிருந்து அவள் மொபைலை எடுத்து அதில் 80 என்று டைப் செய்து காண்பித்து ‘செக்ஸ்’ என்றாள். எண்பது ரிங்கிட்ஸ் அவளுக்கு அதிகம் தான் என்று மனதில் தோன்றி மறைந்தது. ‘காண்டம்’ என்று கேட்டதும் அவள் தனது கைப்பையைக் காட்டினாள். நான் பாக்கெட்டில் இருந்து நூறு ரிங்கட்டை எடுத்து அவளிடம் நீட்டினேன். சிரிப்புடன் அதை வாங்கி பையில் போட்டுக்கொண்டு என்னை வா என்று செய்கை செய்துவிட்டு முன்னால் நடந்தாள். போதை இன்னும் கொஞ்சம் வடிந்திருந்தது. அந்த சாலையில் இருந்து அவளுக்கு பின்புறம் ஒரு குறுகலான தெரு சென்றது. அதை நான் இவ்வளவு நாட்களாக கவனித்ததில்லை. அதில் நுழைந்து இடப்புறம் திரும்பினாள். அது இன்னும் கொஞ்சம் குறுகலான தெரு. அந்த தெருவிலும் ஓரிரு தெருவிளக்கைத்தவிர எந்த வெளிச்சமும் இல்லை. அதிலிருந்த இரண்டாவது கட்டிடத்தின் ஒரு ஆள் மட்டுமே செல்லக்கூடிய மேல்நோக்கி செல்லும் படிக்கட்டுகளில் ஏறினாள். அது ஒரு பழைய கட்டிடம். வெளியே சுண்ணாம்பு போய் கருப்படித்திருந்தது. சுவரின் இடைவெளியில் ஆங்காங்கே செடிகள் முளைத்துநின்றன. தெருவிளக்கின் மீதமுள்ள வெளிச்சம் தவிர முழுக்கட்டிடமே இருண்டு இருந்தது. நான் எதுவும் பேசாமல் அவளைப் பின்தொடந்து சென்றேன். முதல் மாடியில் சென்று ஒரு அறையின் முன் நின்று அதன் கதவைத் திறந்தாள். அது தாழ்மட்டுமே போடப்பட்டிருந்தது. பூட்டிடப்படவில்லை. அந்த சமயத்தில் சுற்றி நோட்டமிட்டேன். அதே போல் நிறைய அறைகள் இருந்தன. சில அறைகளின் கதவின் இடைவெளியில் இருந்து மஞ்சள் விளக்கின் வெளிச்சமும் முணுமுணுப்புகளும் கசிந்து வந்து கொண்டிருந்தன. அறையின் உள்ளே நுழைந்ததும் மின்விசிறியை ஆன் செய்துவிட்டு கதவை தாழ்ப்பாள் போட்டாள். ஒரு சிறிய அறை ஒரு வாஷ்ரூம். அவ்வளவு தான். அந்த அறையையே ஒரே ஒரு பழைய படுக்கை நிறைத்திருந்தது. அதன் அருகே ஒரு சிறிய மேஜை. மேஜை மேல் ஒரு விளக்கு. கீழே குப்பைக்கூடை. படுக்கைக்கு பின்னேமூடி இருக்கும் கண்ணாடி ஜன்னல். அதன்மேல் செய்திதாள்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்தப் படுக்கையை தவிர்த்து இரண்டு ஆட்கள் மட்டுமே நிற்க அங்கு இடம் இருந்தது. அந்த அறையை இதற்கு மட்டும் தான் பயன்படுத்துகிறாள் போலும். லேசான மஞ்சள் வெளிச்சம் அந்த மேஜை மேல் இருந்த விளக்கிலிருந்து வந்து கொண்டிருந்தது. அந்தக் குறைந்த வெளிச்சத்திலும் மூட்டைபூச்சியின் ரத்ததடங்கள் சுவர் முழுக்க தெரிந்தன. மின்விசிறி ஓடிக்கொண்டிருந்தாலும் அந்த அறையில் புழுக்கம் நிறைந்திருந்தது. அவள் தனது பையில் இருந்து ஒரு காண்டம் பாக்கெட்டை எடுத்து என்னிடம் கொடுத்து அவள் உடையை கழற்றிவிட்டு படுக்கையில் மல்லாந்து படுத்துக்கொண்டாள். அவள் உடம்பில் எந்த கவர்ச்சியும் இல்லை. நானும் எனது உடையை கழற்றிவிட்டேன். ஆனால் காண்டத்தை மாட்டும் அளவுக்கு இன்னும் உணர்ச்சி வரவில்லை. அதை கையிலேயே வைத்துக்கொண்டு அவள் உடல் மேல் சென்று படுத்து என் முகத்தை அவள் முகத்தில் இருந்து விலக்கி தலையணையை பார்த்தவாறு வைத்து கண்களை மூடி அவள் உடலை என்னுடைய உடலோடு தேய்த்தவாறு அவளது உடலை ஒவ்வொரு நடிகைகளின் உடலாக கற்பனை செய்யத்தொடங்கினேன். ஆனால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. பின் அந்த உடலை சியோக் வீயின் உடலாக கற்பனை செய்த போது உடம்பு முழுக்க வெப்பம் அதிகரித்து விரைப்பு உண்டானது. அவசரமாக எழுந்து காண்டத்தை மாட்டிவிட்டு அதே நிலையில் சியோக் வீயை நினைத்து அவள் மீது வேகமாக இயங்கினேன். அவள் கைகள் என் முதுகின் மீது அலைபாய்ந்தது. அவளிடமிருந்து வந்த முனகல் சீரான இடைவெளியில் மிக செயற்கையாக இருந்தது. பத்து நிமிட இயக்கத்திற்கு பின் உச்சம் வெளிவரும் வேளையில் அவளிடமிருந்து விலகி எழுந்து விட்டேன். அப்போதுதான் பார்த்தேன். காண்டம் முழுவதுமாகவே கிழிந்திருந்தது. அதைப் பார்த்ததும் உடலில் கணநேரத்தில் வெப்பம் அதிகரித்து வியர்த்துக் கொட்டத்தொடங்கியது. இதயதுடிப்பின் வேகம் அதிகரித்து என் காதுகளால் தெளிவாக கேட்கமுடிந்தது. கொஞ்சநஞ்ச போதையும் மொத்தமாக வடிந்திருந்தது. எனது எண்ணங்கள் எல்லாம் சூன்யமாக ஆனது. கால்கள் தள்ளாடியது. அவள் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்து பேயறைந்தது போல் இருந்த எனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அனிச்சையாக காண்டத்தை கழற்றி குப்பைக்கூடையில் போட்டுவிட்டு விறுவிறுவென்று எனது உடையை மாட்டிக்கொண்டேன். இன்னும் இதயம் வேகமாகத்தான் அடித்துக் கொண்டிருந்தது. மூச்சு விட கடினமாயிருந்தது. உடலில் நடுக்கம் குறைந்தபாடில்லை. தொண்டை வறண்டுவிட்டிருந்தது. படுக்கையில் தளர்ந்து உட்கார்ந்தேன். அவள் எழுந்து வாஷ்ரூமிற்குச் சென்று வந்து மேஜை அருகே இருந்த ஹேங்கரில் இருந்து தனது உடையை எடுத்தாள். நான் சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு அவளைப் பாராமல் ‘எய்ட்ஸ்?’ என்று கேட்டேன். அவளிடம் இருந்து பதில் வரவில்லை. பின் அவளை நோக்கி முகத்தைத் திரும்பி அவளைக் காண்பித்து நடுங்கும் குரலில் மீண்டும் ‘எய்ட்ஸ்?’ என்று கேட்டேன். அவள் அதைப் புரிந்து கொண்டு தலையைக் குனிந்து என்னைப் பார்த்து லேசாக சிரித்துவிட்டு ‘இல்லை’ என்று தலையாட்டினாள். உட்கார்ந்திருந்தவாறே கண்களை மூடி என்னை ஒருங்கிணைக்க முயன்றேன். எனது உடல் கொஞ்சம் ஆசுவாசமடைந்திருந்தது போல் தோன்றியது. திடீரென்று அவளின் அந்தப் பார்வை நினைவுக்கு வர அது ஒரு காயம்பட்ட ஆட்டுக்குட்டியின் பார்வையை ஒத்திருந்ததை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தேன். அங்கிருந்து உடனே போகவேண்டும் போல் தோன்றியது. நான் அவளிடம் மேற்கொண்டு எதுவும் பேசாமல் வேகமாக எழுந்து சென்று அறைக்கதவை திறக்க முயன்றேன். குறைவான வெளிச்சத்தில் அதன் தாழ்தட்டுப்படவில்லை. மீண்டும் அந்தப் பார்வையை எனது பிடரியில் உணர்ந்தபோது வெறிகொண்டு கதவைத் தள்ள முயன்றேன். அது திறக்கவில்லை. அவள் நிர்வாண உடலுடன் மெதுவாக நடந்து வந்து கதவின் மேலேயிருந்த தாழை விலக்கிவிட்டாள். நான் அவளை ஏறெடுத்தும் பார்க்காமல் தலைகுனிந்து மௌனமாக கதவைத்திறந்து வேகமாக வெளியேறினேன். திங்களன்று சியோக் வீயிடம் அந்த வேலையை முடித்து விட்டதைக் கூறியதும் அவள் கண்கள் சுருங்கச் சிரித்தாள். ஏனோ அந்த சிரிப்பை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. அந்த இரவுக்குப்பின் இப்போதெல்லாம் நான் வேலை முடிந்து வரும்போது பேருந்தில் இடப்புற ஜன்னல் இருக்கையில் அமர்வது இல்லை. அந்தப் பெண் அதே இடத்தில் நின்றுகொண்டிருக்கிறாளா என்பதும் தெரியவில்லை. ஆனால் அவ்வப்போது அவளது பார்வையை எனது பிடரியில் உணருகிறேன். https://solvanam.com/2024/05/26/ஓரிரவு/1 point- சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
இப்ப விளங்குதா, ஏன் நாலைந்து நாதளுக்கு தான் காணாமல் போகப் போகின்றேன் என்றவர்? ஆள் எஸ்கேப் இவரைத் தேடித்தான் இன்ரபோல் போகுது. அது தான் எல்லோரும் தொப்பு தொப்பென்று கால்ல விழுகிறாங்களாமே? கோடுவரை போகாது. ஒரு மன்னிப்பு அவ்வளவு தான். இனிமேல் கையூட்டு வாங்கினாலும் பிரச்சனையே இல்லை. மூச்சுவிட மாட்டானுகள்.1 point- சிறீதரன் தொடர்பாக திடீரென பரவிய அவதூறு தகவல்: விசாரணையில் வெளிவந்த உண்மை.
அண்ணை செய்தி இணைக்க முடியாது எனவும், போனூடாக பின்னூட்டமிடுவதாகவும் குறிப்பிட்டிருந்தவர் சிறி அண்ணை.1 point- தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
உடுக்கடிக்க நிலாந்தன் மாஸ்டர், யதீந்திரா, தமிழரசு பேர்வழிகள் இந்த ஜோக்களுக்கு இருக்கிறார்களே!😂1 point- மதுபான நிலைய அனுமதிப்பத்திர விவகாரத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை அரசாங்கம் வெளியிடவேண்டும் - சுமந்திரன்
சாத்தான் குட்டிச் சாத்தான் ஆகிறது,....🤣1 point- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியா செல்வார் என தகவல்
அதே அதே,......🤣1 point- வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
பனங்கருக்கும் பால் சுரக்கும் அத நெனச்சே நீ கொண்டாடு பசி மறக்கும் நாள் பிறக்கும் வலி மறந்தே நீ கூத்தாடு......! காலம் எப்போதும் இப்படியே இருக்காது தம்பி . ....... ஒருநாள் உன்னுடைய உடல் வலியும் மாறும் , பசிப்பிணியும் தீரும் கலங்காதிரு . .......அந்த வேளை கூடிவரும் பொழுது பனங்கருக்கும் ( "ம்" ஐ கவனிக்கவும் ) பால் சுரந்து உன் பசி போக்கும் ........! பொதுவா கருக்குள் இருந்து பால் சுரக்காது, ஆனால் இது கவிஞரின் சிறப்பான உவமை . .....அந்த வாழை படமே உடல் வலியோடும் பசிப்பிணியோடும் நகர்ந்து செல்லும் படம் . .......! --- " பூ வாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால் " --- தீ வந்து விறல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால் " அதாவது ஓவியத்தில் இருந்த பூவும் மனக்காது , தீயும் சுடாது .....அதுபோல் அந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்ற மிகையான கற்பனை ......! --- அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவனே . .....! வானத்துக்கு மனமும் கிடையாது குணமும் கிடையாது அதுபோல ......! (விரல் )1 point- தமிழரசு விரும்பினால் எம்முடன் இணையட்டும்; சுரேஷ் பிரேமச்சந்திரன்!
கட்டுக் காசும் தேறாது இந்த மண்டையன் குழு தலைவருக்கு1 point- வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
நான் படத்தை பார்க்கவில்லை. அனால் வரிகளை பார்க்கும் போது, பனங்கறுக்கும் (உண்மையில் இதுவா உச்சரிப்பு அல்லது பணங்கறக்கும் என்பதை பனங்கறுக்கும் என்று உச்சரிக்கப்பட்டு விட்டதோ என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது) பனங்கறுக்கும், பால் சுரக்கும் என்பது தான் (பாடல் வரிகளின் உண்மையான) உச்சரிப்பானால், பனங்கறுக்கும் என்பது பனங்கிழங்கு அறுவடை என்ற கருத்தை , பால் சுரக்கும் என்ற தொக்கினால் எடுக்கிறது. அவை இரண்டும், பனங்கறுக்கும், பால் சுரக்கும் என்பது, இயற்கை தரும் வளத்தையும், அவை இயற்கையாக தரும் தாய்மை தன்மையை ( பாடலி உருவகப்படுத்துவதற்க்கும்) , (எதிர்கால) செழிப்பையும் குறிக்கிறது (பாடலின் அல்லது படத்தில் வரும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு). மற்றது, (பனங்)கருக்கு (மட்டை) என்பதே சரி, வெய்யிலில் கருகி, குறிப்பாக கருகி, கருமையாக பனை மட்டையின் கூரிய விளிம்பாக இருப்பது. கருகிய தன்மையை வளத்துடன், செழிப்புடன் ஒப்பிட முடியாது.1 point- வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
பனங் கறுக்கும்: பாளை தள்ளாத் காலப்பகுதியில் பனை மரங்களின் ஓலைகள் மிகவும் ஐதாக நெருக்கமின்றிக் காணப்படும். பாளை வெளித் தள்ளும் காலப்பகுதியில் (Season) பனை மரங்கள் பனங்காய்களால் நிரம்பி பனை மரமே கறுத்துப்போய் கறுப்பாகக் காணப்படும். பால் சுரக்கும் என்பது பால் : பதநீர் / கள்ளு சுரக்கும் . பாளை வெளித்தள்ளும் காலத்தில்தான் பதநீர் / கள்ளு இற்க்க முடியும். இது எனது கற்பனை/யூகம் மட்டுமே. 😁1 point- வாழை படப் பாடல்: தென் கிழக்கு தேன் சிட்டு ... இதில் வரும் "பனங் கறுக்கும்" அர்த்தம் என்ன?
தேடலில் இரண்டு பொருட்கள் வந்தன: 1. பனங்கறுக்கு: தொரட்டி. தேங்காத் தொட்டி. நாச்சோத்துக் கும்பம். உரிக்காக் கொடி. கத்தக்கொடி. தொரட்டி கூட பால் சுரக்கும் என்று மிகையாக சொல்லி இருக்கின்றார்கள் போல. __________________________ 2. ஒரே சொல்லாகப் பார்த்தால், கருக்கு மட்டையை இப்படி எழுதலாம் போலத் தெரியுது. பனங்கறுக்கு(ம்) பால் சுரக்கும் என்று இங்கேயும் மிகையாகச் சொல்ல வந்திருக்கின்றார்கள் போல. இது விக்கியில் இருந்து. கருக்கு மட்டையை பனங்கறுக்கு மட்டை என்று எழுதும் வழக்கம்.1 point- லெபனான் மீது தரைவழி தாக்குதலை மேற்கொள்வதற்கு இஸ்ரேல் தயாராகின்றது - இஸ்ரேலின் பாதுகாப்பு அதிகாரி
1 pointவிசுகர்! உங்களுக்கு நல்லவடிவாய் தெரியும் எனக்கு உலக நடப்புகள் தெரியாதெண்டு. ஹிஸ்புல்லா பற்றி கொஞ்சம் சொல்லுங்கோ தெரிஞ்சு கொள்ளவம்.1 point- தமிழரசு கட்சி எங்கு செல்லுகின்றது?
1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
அநுரவின் வெளிவிவகார அமைச்சரான விஜித்த ஹேரத்தின் பின்னணி பல ஈழத்தமிழர்களின் இன்றைய கதாநாயகனாக பவணி வரும் இலங்கையின் ஜனாதிபதியான அநுர குமார திசாநாயக்கவின் வலது கரமும் நெருங்கிய சகாவுமான விஜித்த ஹேரத் இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றிருக்கிறார். தமிழர் மீதான இனக்கொலை அரச மயப்படுத்தப்பட்டதிலிருந்து இலங்கையின் வெளிவிவகார அமைச்சர்களாகப் பணியாற்றிய எல்லோருக்கும் கொடுக்கப்பட்ட வேலை ஒன்றுதான், அதுதான் தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதம் என்று சர்வதேசத்தில் சித்தரித்து, தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை உலகெங்கும் சென்று நியாயப்படுத்துவது. ஹமீது, ரஞ்சன் விஜேரத்ன, ஹரல்ட் ஹேரத், டிரோன் பெர்ணான்டோ, லக்ஷ்மன் கதிர்காமர், அநுர பண்டாரநாயக்க, மங்கள சமரவீர, ரோகித போகொல்லாகம, ஜி எல் பீரிஸ், ரவி கருணநாயக்க, திலக் மாறப்பன என்று 1983 ஆம் ஆண்டிலிருந்து 2024 வரை இருந்த எல்லோருமே செய்த அதே பணியினை ஆற்ற தற்போதைய அமைச்சர் விஜித்த ஹேரத்தும் வந்திருக்கிறார். அவர் வெளிவிவகார அமைச்சராக ஆற்றிய முதலாவது பணி ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை அவையில் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் ஈடுபட்ட இராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கெதிரான சர்வதேச விசாரணைப்பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்து வருவதற்காக சவுதி அரேபியாவிற்கு வாழ்த்துக் கூறியமை என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போதைய ஜனாதிபதியை, அவரது அமைச்சரவையினை தமிழர்களின் காவல் தெய்வங்கள் என்று வழிபட ஆரம்பித்திருக்கும் தமிழ் அபிமானிகளுக்கு அநுரவின் சகாவான விஜித்த ஹேரத்தின் பின்னணி பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். விஜித்த ஹேரத், ஒரு தீவிர சிங்கள தேசியவாதியும் ஜனதா விமுக்தி பெரமுன எனும் தீவிரவாத சிங்கள இடதுசாரிக் கட்சியின் மிக மூத்த உறுப்பினருமாவார். இவர் அநுர குமாரவினால் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர், சமய விவகாரங்களுக்கான அமைச்சர், தொழிநுட்ப ஊடகத்துறை, சுற்றுப்புறச் சூழல், நீர் வழங்கல், தோட்டத்துறை, சமூகவியல், வீடமைப்பு மற்றும் போக்குவரத்து போன்ற அமைச்சுக்களுக்குப் பொறுப்பானவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நாம் இவரது கடந்தகால செயற்பாடுகளைப் பார்க்கலாம். மக்கள் விடுதலை முன்னணிக்கு அவர் காட்டிவரும் அசைக்கமுடியாத விசுவாசமே அவரை அநுரகுமாரவின் நெருங்கிய சகாவெனும் நிலைமைக்கு உயர்த்தியது. விஜித்த ஹேரத் மக்கள் விடுதலை முன்னணியின் நீண்டகால உறுப்பினர். மாணவராக இருந்த காலத்தில் 1986 ஆம் ஆண்டு அவர் அமைப்பில் இணைந்தார். இவர் அமைப்பில் இணைந்த சில மாதங்களின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி இலங்கை அரசிற்கெதிரான இரத்தக்களறி மிகுந்த ஆயுதக் கிளர்ச்சியை ஆரம்பித்தது. 1999 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தல்களிலேயே அவர் முதன்முதலாக தேர்தலில் இறங்கினார். அத்தேர்தலில் கம்பகா மாவட்டத்தில் போட்டியிட்டு வெறும் 605 வாக்குகளையே அவர் பெற்றார். 2000 ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு 8,000 வாக்குகளுடன் வெற்றிபெற்ற அவர் அதன் பின்னர் அத்தொகுதியைத் தொடர்ச்சியாகத் தக்கவைத்து வருகிறார். பாராளுமன்ற கோப்புக்களைப் பார்க்கின்றபோது விஜித ஹேரத் எப்போதுமே பொது நிதித்துறை, மீன்வளத்துறை, பொதுப்பணித்துறை, மற்றும் விவசாயம் சார்ந்த பாராளுமன்றக் கமிஷன்களில் அங்கம் வகித்திருப்பது தெரிகிறது. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல சட்டங்களின்போது ஹேரத் சார்பாக வாக்களித்த போதிலும், அவரால் இதுவரை எச்சட்டமும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இலங்கை சுதந்திரக் கட்சியுடன் 2004 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணி இணைந்து ஆட்சியமைத்தபொழுது விஜித்த ஹேரத் அந்த அரசாங்கத்தின் கலாசார அமைச்சராகவும், தேசிய பாரம்பரிய அமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். பாராளுமன்றத்தில் அதிகம் பிரபலமாகாத ஒரு உறுப்பினராக ஹேரத் இருந்த போதிலும் அநுரவின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவராக அவர் வலம் வந்தார். விஜித்த ஹேரத்தின் போரிற்கான ஆதரவும், நீதிவழங்கலுக்கு எதிரான அவரது நிலைப்பாடும் 2008 ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியினால் கொழும்பு ஐ நா அலுவலகத்திற்கு முன்னால் ஒழுங்குசெய்யப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்ளும் விஜித ஹேரத் அரச அடக்குமுறைக்கெதிரான தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டக் காலம் முழுவதும் மக்கள் விடுதலை மார்க்ஸிஸச் சிந்தனைகளை முன்வைத்து தமிழ் மக்கள் மீதான இராணுவ அடக்குமுறையினை நியாயப்படுத்தியே வந்தது. ஏனைய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களைப் போலவே விஜித்த ஹேரத்தும் தமிழர்களுடனான சமாதானப் பேச்சுக்களுக்கு மிகக் கடும் எதிர்ப்பினைத் தொடர்ச்சியாக காட்டி வந்திருந்தார். 2004 பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சியாக ஆட்சியில் அமர்ந்த மக்கள் விடுதலை முன்னணி, புலிகளுடனான பேச்சுக்களுக்கு தொடர்ச்சியான எதிர்ப்பினைக் காட்டி வந்தது. மேலும், 2004 சுனாமிப் பேரிடரின் பின்னரான இணைந்த சுனாமி நிவாரணக் கட்டமைப்பிற்குக் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து அதனைத் தோற்கடித்ததுடன், பேச்சுக்களை இரத்துச் செய்தால் மகிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கவும் தயார் என்று பகிரங்கமாக அறிவித்தது. 2006 ஆம் ஆண்டி ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகவே இராணுவத் தீர்விற்கான தனது ஆணையினை அப்போதிருந்த மகிந்த அரசிற்கு வழங்கியதுடன் முள்ளிவாய்க்கால் இனக்கொலைக்கும் உறுதுணை வழங்கியது. 2007 ஆம் ஆண்டு கொழும்பில் அமைந்திருக்கும் இங்கிலாந்து தூதரகத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் விடுதலை முன்னணியினர், கூடவே விஜித்த ஹேரத் இறுதி யுத்த காலத்தின்போது இலங்கை இராணுவத்தினர் பரந்தளவில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என்று மேற்குலக நாட்டு இராஜதந்திரிகள் அறிவித்து வந்த நிலையில் விஜித்த ஹேரத் தனது அமைப்புடன் இணைந்து இங்கிலாந்து தூதரகத்திற்கு முன்பாகவும் ஐ நா அமைப்பின் அலுவலகம் முன்பாகவும் அன்றைய மனிதவுரிமைக் கவுன்சில் ஆணையாளர் லுயிஸ் ஆர்பருக்கெதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்திருந்தார். 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் கூட்டுப் படுகொலைகளுக்குப் பின்னர் சர்வதேசத்தில் உருவாகி வந்த சுதந்திரமான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரல்களை விஜித்த ஹேரத் தொடர்ந்தும் எதிர்த்து வந்தார். "போரில் நடந்ததாகக் கூறப்படும் மனிதவுரிமை மீறல்களை விசாரிப்பது அவசியம் என்றால், அது உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றின் ஊடாக மட்டுமே விசாரிக்கப்பட முடியும். இலங்கையினை விமர்சிக்கின்ற மேற்குநாடுகள் இன் கோரிக்கைக்கு அமைவாக விசாரணைகளை நாம் நடத்தப் போவதில்லை" என்று 2015 ஆம் ஆண்டு விஜித்த ஹேரத் கூறியிருந்தார். இதுபற்றி மேலும் வாசிப்பதற்கு கீழுள்ள இணைப்பை அழுத்துங்கள். https://www.tamilguardian.com/content/sri-lankan-ministers-reject-un-investigation-mass-atrocities புதிய வெளிநாட்டு அமைச்சர் விஜித்த ஹேரத்தின் முதலாவது பணி ஐ நா மனிதவுரிமை சபையில் கொண்டுவரப்பட்ட போர்க்குற்ற விசாரணைக்கான சர்வதேசப் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்த சவுதி அரேபியாவிற்கு நன்றி கூறியதே. கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்ற சில மணித்துளிகளுக்குப் பின்னர் சவுதி அரேபிய நாள் நிகழ்வில் உரையாற்றிய ஹேரத் ஐ நா மனிதவுரிமைச் சபையில் இலங்கை ராணுவப் போர்க்குற்றவாளிகளுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறையினை எதிர்த்து வாக்களித்த சவுதி அரேபியாவிற்கு அவர் நன்றி தெரிவித்திருந்தார். மக்கள் விடுதலை முன்னணியினருடனான ஹேரத்தின் ஆரம்ப காலம் 1987 ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக தமிழர்களின் தாயகமான வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைப் பகிர்ந்து கொடுக்கலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால் தீவிர சிங்களத் தேசியவாதியான விஜித்த ஹேரத் தமிழ் மக்களுடன் அதிகாரப் பகிர்வென்பதே கிடையாதென்று தொடர்ந்து வாதாடி வந்தார். விஜித்த ஹேரத் போன்ற மக்கள் விடுதலை முன்னணியினரின் தலைவர்களிடம் மேலோங்கி நின்ற சிந்தனையான தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிரக் கூடாதெனும் நிலைப்பாட்டினால் அவ்வமைப்பு தெற்கின் கிராமப்புறச் சிங்கள இளைஞர்களிடையே பிரபல்யம் அடையத் தொடங்கியது. மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்த்தாபகரான ரோகண விஜேவீர "தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையென்பது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் தூண்டுதலின்பேரில் உருவாக்கப்பட்டது" என்று பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். ரோகண விஜேவீரவின் இந்த பிரச்சாரமே தமிழ் மக்களுக்கெதிரான இவ்வமைப்பின் நீண்டநாள் காழ்ப்புணர்விற்குக் காரணமாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. இலங்கை அரசாங்கங்களுக்கெதிராக இரு முறை ஆயுதப் போராட்டங்களில் மக்கள் விடுதலை முன்னணி ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சிங்கள இளைஞர்களின் மரணங்களுக்குக் காரணமாக இருந்தபோதிலும் கூட, அதே காலப்பகுதியில் உரிமைக்காகப் போராடி வந்த ஈழத்தமிழர் சார்பாக கிஞ்சித்தும் அவ்வமைப்பு இரக்கமோ அக்கறையோ காட்டவில்லை. மாறாக இக்கட்சியிலிருந்தே இலங்கை சந்தித்த அதிதீவிர சிங்கள இனவாதிகள் உருப்பெற்று வெளிக்கொணரப்பட்டார்கள் . மக்கள் விடுதலை முன்னணியினுடனான தனது ஆரம்ப காலம் குறித்தும் 1987 ஆம் ஆண்டு ஆயுதக் கிளர்ச்சி குறித்தும்விஜித்த ஹேரத் பின்வருமாறு நினைவுகூர்ந்தார். "அன்றைய காலகட்டத்தில் நாட்டில் சிவில் யுத்தம் ஒன்று நடந்து வந்தது. நாம் இந்திய இராணுவத்திற்கெதிராகப் போராடினோம். அக்காலத்தில்தான் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனவிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றும் செய்யப்பட்டது" . "அவ்வொப்பந்தம் இலங்கை மக்களை வெகுவாகப் பாதித்திருந்தது. ஒப்பந்தத்தின் ஊடாக எமது திருகோணமலையில் அமைந்திருந்த எண்ணெய்க் குதங்களை இந்திய அரசாங்கத்திற்கும் இந்திய நிறுவனம் ஒன்றிற்கும் கொடுக்கவேண்டி ஏற்பட்டது. அவ்வாறே எமது நாட்டின் உளவீட்டு விவகாரங்களில் இந்தியா மூக்கை நுழைக்கத் தொடங்கியது. இந்தத் தலையீட்டினை எதிர்த்தே நான் ஆயுதம் ஏந்திப் போராட வேண்டிய அவசியம் ஏற்பட்டது". "நான் அப்போது மக்கள் விடுதலை முன்னணியின் ஒரு உறுப்பினராக இருந்தேன். நாம் பல்வேறான ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தினோம். இந்திய ஆக்கிரமிப்பிற்கெதிரான ஜனநாயகவழி ஆர்ப்பாட்டங்கள் பலவற்றை நாம் முன்னெடுத்தோம்". தமிழருடனான அதிகாரப் பகிர்விற்கெதிரான உறுதியான விஜித்த ஹேரத்தின் நிலைப்பாடு பொலீஸ் அதிகாரங்களோ காணி அதிகாரங்களோ மாகாணசபைகளுக்குக் கொடுக்க அனுமதிக்கப்போவதில்லை தேர்தலுக்கு 72 மணிநேரமே இருக்க மீண்டும் உறுதிப்படுத்திய மக்கள் விடுதலை முன்னணி 2021 ஆம் ஆண்டு விஜித்த ஹேரத் வழங்கிய செவ்வியொன்றில், "எமது நாட்டில் நாம் பிரிவினையினை முற்றாக எதிர்க்கிறோம். ஏனென்றால் இந்த நாட்டில் இருப்பதாகக் கூறப்படும் இனப்பிரச்சினைக்கு பிரிவினை ஒரு தீர்வாக அமையாது என்று நாம் உறுதியாக நம்புகிறோம்" என்று கூறினார். அவர் தொடர்ந்து பேசும்போது, "மக்கள் விடுதலை முன்னணியினால் வெளியிடப்பட்ட புத்தகம் ஒன்றில், "பிரிவினை எப்படி இலங்கையில் இருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமைய மாட்டாது, அவ்வாறே சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வும் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்று கூறினார். "இனப்பிரச்சினைக்கான தீர்வு எவ்வாறானதாக அமையவேண்டுமெனில், இலங்கை மக்கள் அனைவருக்கும் இன, மத, அல்லது வேறு எந்த அடிப்படையிலோ அல்லாமல் ஒரேவகையான உரிமைகளை வழங்குவதனூடாக மட்டும்தான்" என்று அவர் கூறினார். "நாம் புலிகள் இயக்கத்திற்கெதிராகப் போராடினோம். ஏனென்றால் அது எமது மக்களைப் பிரிக்க முயன்றது. அவ்வியக்கத்திற்கெதிராக இன்னும் பல்வேறு வகையான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்தோம். இறுதியில் எமக்குத் தேவையான வெற்றியை நாம் அடைந்துகொண்டோம். நாம் புலிகள் இயக்கத்தை தத்துவாந்த ரீதியில் மட்டுமல்லாமல் எல்லாவழிகளிலும் தோற்கடித்து அழித்தோம்". 13 ஆவது திருத்தத்தினூடாக மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ரீதியில் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரங்கள் பகிரப்படலாம் என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதனையும் கடுமையாக எதிர்த்து வந்தார் விஜித்த ஹேரத். 2005 இல் அவர் பேசும்போது வடக்கையும் கிழக்கையும் இணைத்து ஒரு மாகாணமாக உருவாக்குவதை தாம் எதிர்ப்பதாகக் கூறினார். 2015 இல் சிங்கள இனவாதிகளின் ஆங்கில நாளேடான தி ஐலணட்டில் பேட்டியளித்த ஜேரத் "மக்கள் விடுதலை முன்னணி சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வை முற்றாக எதிர்க்கிறது" என்று கூறினார்." தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்கள் குறித்து அக்கறை காட்டினாலும் கூட சமஷ்ட்டி அடிப்படையிலான தீர்வு இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று உறுதியாக நாம் நம்புகிறோம்" என்று கூறினார். மேலும், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி குறிப்பிடப்பட்டிருக்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது என்பதை அவர் தீவிரமாக எதிர்த்தார். "இலங்கை இந்திய ஒப்பந்தத்தினூடாக தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களை நீதிமன்றத்தினூடாக பிரித்துப்போட்டது எமது கட்சியான மக்கள் விடுதலை முன்னணியே. இந்த மாகாணங்கள் இரண்டும் தனித்தனியாக, சுதந்திரமாக இயங்க வேண்டும்" என்று அவர் கூறினார். இந்திய இலங்கை ஒப்பந்தப்படி 1987 ஆம் ஆண்டிலிருந்து இவ்விரு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் 2005 இல் மக்கள் விடுதலை முன்னணி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் 2006 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வடக்குக் கிழக்கு இணைப்பு நிரந்தரமாக பிரிக்கப்படுவதாகவும், இம்மாகாணங்கள் இணைந்திருப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் தீர்ப்பு வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. மக்கள் விடுதலை முன்னணியும், தீவிர இனவாத அமைப்பான ஜாதிக ஹெல உறுமயவும் வடக்குக் கிழக்கு மாகாண்ங்களின் இணைப்பிற்கெதிராகத் தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வந்ததுடன் நீதிமன்றத்திற்கு அதனை இழுத்துச் சென்று, மாகாணங்கள் பிரிக்கப்பட்டபோது வீதிகளில் கொண்டாடி ஆர்ப்பரித்தனர். 2019 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர் மாநாடொன்றில் பேசிய விஜித்த ஹேரத், "வடக்குக் கிழக்கு மாகாணங்களை இணைத்து வைத்திருப்பதனூடாக சர்வதேசத்திற்கு இந்த இணைந்த மாகாணத்தில் தமிழ் மக்களே பெரும்பான்மையாக வாழ்கிறார்கள் என்று காண்பித்து, ஆகவே இம்மாகாணங்களுக்கு தனியான அதிகாரம் தேவையென்று கோருவதே தமிழ்ப் பிரிவினைவாதிகளின் நோக்கமாகும்" என்று விஜித்த ஹேரத் கூறினார். "இதே கோரிக்கையினைத்தான் தமிழ்க் கட்சிகள் ஒவ்வொரு தேர்தலிலும் முன்வைத்து வருகின்றனர். ஆனால் நாம் இந்தக் கோரிக்கையினை எப்போதுமே நிராகரித்தே வந்திருக்கிறோம்" என்றும் அவர் கூறினார். இவ்வருடம் மாசி மாதத்தில் அநுர குமாரவுடன் தில்லிக்குப் பயணமாகிய விஜித்த ஹேரத், இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும், பூகோள ஒருமைப்பாட்டையும் உறுதிப்படுத்தும் விதமாக அரசியலில் ஈடுபடும் என்று உறுதிப்படுத்தியிருந்தார். 1987 ஆம் ஆண்டில் தமது அமைப்பு நடத்திய ஆயுதக் கிளர்ச்சி குறித்துப் பேசும்போது, " நாம் மிகவும் தீவிரமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை பல ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்த்தோம். எமது செயற்பாடுகளை இலங்கையின் ஒருமைப்பாட்டையும், இறையாண்மையினையும் காக்கப் பாவிக்கிறோம். அதற்காகப் பல உயிர்த்தியாகங்களை நாம் புரிந்திருக்கிறோம்" என்று கூறினார். "இதுகுறித்த எமது நிலைப்பாடு என்றுமே மாறப்போவதில்லை" என்றும் அவர் மேலும் கூறினார். 2024 ஆம் ஆண்டு புரட்டாதி மாதத்தின் இறுதிப்பகுதியில், தேர்தலுக்குச் சற்று முன்னரான நாட்களில் பேசிய விஜித்த ஹேரத், "மகாணசபை அமைப்பு முறை இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வாகாது. இந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பையும், ஒற்றையாட்சியையும், ஒருமைப்பாட்டினையும் பாதுகாக்க நாம் மிகப்பெரிய தியாகங்களைச் செய்திருக்கிறோம். நேற்றும், இன்றும், நாளையும் இதுதொடர்பான எமது நிலைப்பாடு மாறப்போவதில்லை. இந்த நாட்டின் ஒருமைப்பாட்டினை எவ்விலை கொடுத்தாவது பாதுகாப்பது எமது கட்சியின் தலையாய கடமையாகும்" என்று அவர் பிரகடணம் செய்தார். அகில இலங்கை பெளத்த காங்கிரஸின் மாநாடு ஒன்றில் பேசிய விஜித்த ஹேரத், "பெளத்த மதத்திற்கான முன்னுரிமையினைக் கொடுப்பதில் தமது கட்சி எப்போதும் உறுதியாக நிற்கும்" என்று கூறினார். "நாம் அன்றே இதுகுறித்து உறுதிப்படுத்திவிட்டோம். அதையே நாம் இப்போதும் நினைவுபடுத்துகிறோம். இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு மாகாணசபை அமைப்பு முறை தீர்வாகாது. எமது அரசியலமிப்பின் 9 ஆவது அத்தியாயம் எக்காரணம் கொண்டும் மாற்றப்பட மாட்டாது என்று என்னால் உறுதிபடக் கூறமுடியும்" என்று அவர் கூறினார். இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தில் 9 ஆம் அத்தியாயம் என்பது பின்வருமாறு கூறுகிறது, "இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு எல்லாவற்றைக் காட்டிலும் முன்னுரிமையும், உயர்ந்த இடமும் வழங்குகிறது. ஆகவே பெளத்த மத்தத்தைப் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதென்பது ஒவ்வொரு அரசினதும் தலையாய கடமையாகும். ஏனைய மதங்களுக்கான இடம் அத்தியாயம் 10 மற்றும் 14 இல் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய வழங்கப்படும்" என்று கூறப்பட்டிருக்கிறது. "முன்னைய அரசாங்கங்கள் பெளத்த மதத்திற்கு வழங்கிய அதே முன்னுரிமையினையும், உயர்ஸ்த்தானத்தையும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசும் வழங்கும்" என்று விஜித்த ஹேரத் அங்கு உறுதி வழங்கினார். https://www.tamilguardian.com/content/who-sri-lankas-foreign-minister-vijitha-herath1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
பழகுவதற்கு இனிமையனவர்கள் அது வேறு ஐலன்ட். நான் கடந்த மாதம் முழுவதும் பாணந்துறையில் 100% சிங்களவர்கள் வசிக்கும் ஒரு கிரமத்தில்தான் ஒரு ஆடிட் கணக்கியல் பகுப்பாய்வு வேலைக்காக சென்றிருந்தேன். மிகவும் அழகிய ரம்மியமான சூழ்நிலையில் இந்த தொழில்சாலை அமைந்திருந்தது. பாண், பருப்பு எல்லாம் வைத்த்து சாப்பிட தருவர்கள், போதுமா மாத்தியா?, போதுமா மாத்தியா? என்று கேட்டு கேட்டு தட்டில் போடுவார்கள். ஆனால் இலங்கையில் அதிகாரப்பகிர்வை பற்றி கொஞ்சம் கதைத்து பாருங்கள் இலங்கை சிங்கள பொளத்த நாடு, தமிழர்களுக்கு எவ்வாறு அதிகார பகிர்வு கொடுப்பது என்று கூச்சல் போடுவார்கள். சும்மா சுற்றுலா சென்று வந்து ஒரிருவரின் நல்ல பண்புக்களை அவதனிப்பதனால் அவர்களிடம் இனவாதம் இல்லை என கூற முடியாது. நான் இவர்கள் மத்தியில் பல தசாப்தங்களாக வாழ்கின்றவன் எனக்கு நன்கு தெரியும் இவர்களது மனப்பாங்கு. "எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கிறார்கள்" ஆம் இது உண்மை.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சிரிக்க மட்டும் வாங்க
1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இதிலே எழுதியது மட்டுமல்ல எவ்வளவு கீழ்தரமாக பதிவு செய்கிறார்கள். நடந்தவைகளைத் தானே எழுதியிருக்கிறார்கள் என்று கூட யோசிக்கத் தோன்றவில்லை. ஊரிலே மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். வாக்கே இல்லாத நாம தான் அடித்துப் புடுங்குகிறோம்.1 point- அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
இலங்கைத் தமிழ் சிங்களம் இரண்டுக்குமான முதன்மையான எதிரி/பரம வைரி இந்தியாவே. தமிழரின் இரண்டாவது பிரதான எதிரியாக இதுவரை இருந்து வந்தது சிங்கள இனவாதிகள். மூன்றாவது எதிரியாகத் தற்போது வெளிக்கிளம்பியிருப்பது புலம்பெயர்ஸ் வியாபாரிகள் கூட்டம். சிங்களம் இறங்கி வந்தாலும் புலம்பெயர் வியாபாரக் கொள்ளைக் கூட்டம் இலங்கை இனப்பிரச்சனையை கொதிநிலையில் வைத்திருக்கவே விரும்பும்..1 point - ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவுடன் பங்கேற்கமாட்டோம்; பிரிட்டன், பிரான்ஸ் அறிவிப்பு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.