Jump to content

Leaderboard

  1. Kapithan

    Kapithan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      8

    • Posts

      9089


  2. satan

    satan

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      9171


  3. Kavi arunasalam

    Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      7

    • Posts

      2517


  4. ஏராளன்

    ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்


    • Points

      6

    • Posts

      25332


Popular Content

Showing content with the highest reputation on 10/21/24 in all areas

  1. ஆனால் இப்பொழுது உலகத்திற்கே மனிதநேயம்பற்றிப் பாடமெடுப்பார்கள்.அவுஜ்திலேலியாவின் பூர்வகுடிகளை பாரியளவில் இனப்படுகொலைசெய்து அவர்களைச் சிறுபான்மையிலும் சிறுபான்மையினராக்கி வெள்ளையர்கள் இப்பொழுது பெரும்பான்மையினராகி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு ஹிட்லர் செய்ததுதான் இனப்படுகொலை அவர்கள் செய்தலெல்லாம் ஒன்றுமேயில்லை.அவர்களால் எத்தனை நாடுகள் இன்று வரை அடிமையாகி பொருளாதாரத்தில் நலிவடைந்து இருக்கிறார்கள்.தமிழர்களின் இன்றைய நிலமைக்கும் அவர்களே காரணம்.அமெரிக்கா>கனடாஈஅவுஜதிரேலியா ஆப்பிரிக்க நாடுகள் எல்லாம் வெள்ளையர்களின் நாடல்ல. இன்று அகதிகள் இங்குவருவதைப்பற்றிக் கூச்சல் போடும் பத்திரிகைகளளும் ஊடகங்களும் அந்த அகதிகளின் நாடுகளைக் கொண்ளையடித்து சுடுகாடாக்கியதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
    4 points
  2. ஏன், உங்களுக்கு மட்டுந்தான் கற்பனைக் கதை எழுத வருமோ? அல்லது உங்கள் கதைமட்டுந்தான் உண்மையானதோ?
    4 points
  3. தமிழ்நாடு ஆளுநர் ரவி இங்கு வந்த நாள் முதல் சநாதனம், ரிஷி அல்லது முனிவர்களால் கட்டமைக்கப்பட்ட பாரம்பரியம், நீட் தேர்வின் சிறப்பு, புதிய கல்விக் கொள்கை என்று தமிழ்ச் சமூகத்திற்கு எதிரான கேவலமான விஷயங்களையே பேசித் திரிகிறார். ஒன்றிய அரசின், இன்னும் சொல்லப் போனால் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனியத்தின், தூதுவராக முழுநேரப் பணி செய்கிறார் என்பதைத் தமிழ்நாட்டில் அறம் அறிந்தோர் அறிவர். சமீபத்தில் இந்தியத் தொலைக்காட்சித் துறையில் (தூர்தர்ஷன்) கடைப்பிடிக்கப்பட்ட 'இந்தி மாத' (!!!) நிறைவு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய ஒருவர் "தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல்திருநாடும்" எனும் வரியினை விலக்கிப் பாடினார். தமிழ்ச் சமூகத்தில் அது பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியதும், பாடியவரின் கவனச் சிதறலால் நிகழ்ந்தது என்றும், அதனால் ஆளுநருக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்புக் கோரி தூர்தர்ஷன் துரிதமாக அறிக்கை வெளியிட்டது. அதாவது, ஆளுநர் அலுவலகம் சொன்னதன்படியோ அல்லது ஆளுநரை மகிழ்விக்கத் தானாகவோ தூர்தர்ஷன் இவ்வாறு பாடவில்லையாம். இதை நம்புவதற்கு தமிழ்ச் சமூகம் எடுப்பார் கைப்பிள்ளையா, என்ன ! தூர்தர்ஷன் மன்னிப்புக் கேட்க வேண்டியது தமிழ் மக்களிடம்; ஆர்.எஸ்.எஸ்.ரவியிடம் அல்ல (ஆர்.என்.ரவி என்பது ஆர்.எஸ்.எஸ்.ரவியானது நமது கவனச் சிதறல். ஆளுநரும் தூர்தர்ஷனும் நம்பித்தான் ஆக வேண்டும்). மன்னிப்புக் கேட்கும் முகமாக மனோன்மணியம் சுந்தரனார் பாடிய அந்த முழுப் பாடலையும் ஒளி பரப்புவதே சிறந்த பரிகாரமாக அமையும். அதில், "உலக வழக்கு அழிந்து ஒழிந்து சிதைந்த ஆரியம் (சமஸ்கிருதம்)" என்று சுந்தரனார் அடிக்கும் ஆணியில் ஆளுநரும் சங்கிகளும் கதறுவது தமிழர்தம் காதுகளில் தேனிசையாய்ப் பாயும். இனி அந்த முழுப் பாடலும் பொருளும் இதற்கு முன் கேளாதோர் வாசித்து இன்புறத் தரப்பட்டுள்ளன (தமிழக அரசின் அறிவிக்கப்பட்ட வாழ்த்திற்காக மூலப் பாடலில் நீக்கப்பட்ட பகுதி தடித்த எழுத்துகளில்) : பாடல் : "நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே! அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே! பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும் ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!" பொருள் : நீர் நிறை கடலினை உடுத்தியவள் நிலமாகிய மடந்தை; அவளது எழில் மிகுந்த சிறப்பு வாய்ந்த முகமாகத் திகழ்வது பாரத துணைக் கண்டம்; அந்த எழில் முகத்திற்குத் தகுதியான சிறிய பிறை போன்ற நெற்றியே தென்னாடு (தெக்கணம் - தென்னிந்தியா); அந்நெற்றியில் வாசனைப் பொருட் கலவையினால் இட்ட திலகமே (பொட்டு) தென்னாட்டில் சிறந்த திராவிடத் திருநாடு (இன்றைய தமிழகம்); அத்திலகத்தின் வாசனை எங்கும் பரவி இன்பம் பயப்பது போல், எல்லாத் திசைகளிலும் புகழ் மணம் பரவி நிற்கும் தமிழ்ப் பெண்ணே ! பல்வகை உயிர்களையும் பல உலகங்களையும் படைத்து அழித்தாலும் ஒரு எல்லையில்லாத பரம்பொருள் முன் இருந்தபடியே இருக்கவல்லது; அப்பரம்பொருளைப் போலவே கன்னடம், இன்பத் தெலுங்கு, இனிய மலையாளம், துளு ஆகிய மொழிகள் தமிழணங்காகிய உன் வயிற்றில் உதித்துப் பலவாக ஆனாலும், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கொழிந்து போனதைப் போல் அல்லாமல் என்றும் சிதையாத உன் சீரும் சிறப்பும் வாய்ந்த இளமைத் திறத்தை வியந்து, அவ்வியப்பில் வேறு செயலற்று உன்னை வாழ்த்தி அமைகிறோம். பின்குறிப்பு : நிலத்தை மடந்தையாகவும், பாரத நாட்டை அவளது எழில் முகமாகவும், தென்னாட்டை அவளது நெற்றியாகவும், தமிழகத்தை அந்நெற்றியின் திலகமாகவும், திலக வாசனையைத் தமிழ் மணமாகவும் உருவகித்தது உருவக அணி. பாடலில் பரம்பொருள் என்று பேரா. சுந்தரம்பிள்ளை சொல்வது உலகளாவிய சிவனையே குறிக்கும் என்பர் (சுவாமி விவேகானந்தர் 1892ல் திருவனந்தபுரம் வந்திருந்தபோது, அவரது உரையின் பின் நடந்த ஆரோக்கியமான விவாதத்தில் பேரா.சுந்தரம் பிள்ளை,"I am not a Hindu, I am a Saivite" என்று வாதிட்ட குறிப்பு உண்டு). எனவே குறிப்பிட்ட மதம் சார்ந்த வரி எனும் விவாதங்களைத் தவிர்க்கவும், ஏனைய மொழிகளைப் பற்றிய குறிப்புகளைத் தவிர்க்கவும் அப்பகுதி அரசின் தமிழ்த்தாய் வாழ்த்தில் நீக்கப்பட்டது அன்றைய தமிழக அரசின் மாண்பு. இக்கட்டுரைக்கான எனது முகநூற் பதிவு கீழ்வரும் இணைப்பில் : https://www.facebook.com/share/p/MiYLxthH6xdEt9oP/
    3 points
  4. எனக்கு புரியாதது இதுதான் 👉 இந்த விடயமெல்லாம் எப்படி ஒரு செய்தி என்கிற நிலைக்குள் வருகிறது? அந்த மாணவன் பிள்ளைகளைத் துஸ்பிரயோகம் செய்கிறான் என்றால் அவனை உள்ளே தள்ளுவதற்கு வழி பார்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு ""கட்டிலுக்கடியில் நிர்வாணமாக பிடிபட்ட"" என்று எழுதும் அளவிற்கு எமது இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததா? இந்தச் செய்தியை அந்தப் பிள்ளையின் காதுகளுக்கு எட்டினால் அந்தப் பிள்ளை வாழ்நாள் முழுதும் கூனிக் குறுகாதா? சிங்களம் இறந்த பெண் போராளிகளை புணர்ந்ததற்கும் இந்த விடயத்தை செய்தியாக்கிய உதயனின் செயலுக்கும் இடையே பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. 😡
    3 points
  5. இந்த போர்க் குற்றங்களில் ஈடுபட்ட எந்த ஒரு இந்திய இராணுவத்தினனோ அல்லது இதை செய்ய ஏவிவிட்டவர்களோ இன்றுவரைக்கும் தண்டிக்கப்படவுமில்லை, இனி தண்டனைக்குள்ளாகப் போவதும் இல்லை. ஆனால் இந்த படுகொலைகளை நியாயப்படுத்தியும், கண்டும் காணாமல் இருந்த மண்டையன் குழுத் தலைவன் சுரேஸ் பிரேதசந்திரன் போன்றோர், இன்றும் தமிழ் தேசிய போராளிகளாக வலம் வருவதை கண்டு மக்கள் இனியாவது ஏமாறாமல் இருக்க வேண்டும்.
    3 points
  6. "ஒரு மனிதனின் பயங்கரவாதி மற்றொரு மனிதனின் சுதந்திர வீரன்!" / "One man's terrorist is another man's freedom fighter." "பயங்கரவாதி" என்பது அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை என்றாலும் பலவேளைகளில் சரியான அர்த்தம் இல்லாமலும் பாவிக்கப்படுவதால், அது ஒரு தெளிவான அர்த்தத்தை இன்று இழந்துவிட்டது. "பயங்கரவாத" செயலை வன்முறையின் பயன்பாடு என்று வரையறுப்போம், அங்கு ஒருவர் அநியாயமான முறையில் அப்பாவி பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கிறார். ஒரு அரச இராணுவ நடவடிக்கையின் பொழுது பாவிக்கப்படும் வன்முறைகள், அப்பாவி பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்களாம் என்று நியாயமாக எதிர்பார்க்கப்படவில்லை. எனவே, அரச இராணுவ நடவடிக்கைகள் இரு கூறுகளைக் கொண்டுள்ளன. ஒன்று நியாயமான அரச இராணுவ நடவடிக்கை மற்றது அரச பயங்கரவாத இராணுவ நடவடிக்கைகள். அதேபோல், கொரில்லா இராணுவ நடவடிக்கைகள் மற்றும் கொரில்லா பயங்கரவாத நடவடிக்கைகள் இரண்டும் இருக்கலாம். உதாரணமாக, ஒரு நாடு தனது குண்டு வீச்சு விமானங்களை மற்றொரு தேசத்தின் நீர் அமைப்பு அல்லது பிற குடிமக்களின் உள்கட்டமைப்பை அழிக்க அனுப்பினால், இது ஒரு அரசு பயங்கரவாதச் செயலாகும், ஏனெனில் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று நியாயமாக எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம், ஒரு நாடு தனது குண்டுவீச்சுகளை அதன் எதிரியின் இராணுவ விமானநிலையங்களைத் தாக்க அனுப்பினால், அது ஒரு அரச இராணுவ நடவடிக்கையாக இருக்கும். இதேபோல் ஒரு அரசாங்கத்தை கவிழ்க்க அல்லது ஒரு வெளிநாட்டு சக்தியின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவர போராடும் ஒரு குழு, ஒரு வணிக தொகுதியை அல்லது பிற குடிமக்களின் உள்கட்டமைப்பைத் தகர்க்க தற்கொலை குண்டுதாரியை அனுப்பினால், இது ஒரு கொரில்லா பயங்கரவாதச் செயலாகும். மாறாக, அத்தகைய குழு இராணுவக் கப்பலைத் தகர்ப்பதற்காக வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஒரு சிறிய படகு ஒன்றை அனுப்பினால், அது ஒரு கெரில்லா இராணுவ நடவடிக்கையாகும். ஒரு கெரில்லா குழு, இராணுவ விமானநிலையத்தைத் தாக்கினால் கூட, தளத்தில் இருக்கும் சில பொதுமக்கள் கொல்லப்படலாம் என்று சிலர் சரியாகச் சுட்டிக்காட்டலாம், அது உண்மைதான். அதேபோல, ஒரு கெரில்லா குழு ஒரு இராணுவக் கப்பலை வெடிக்கச் செய்யும் பொழுது, கப்பலில் இருக்கும் சில பொதுமக்களையும் கொல்லக்கூடும். எனவே, எல்லா வரையறைகளையும் போலவே, இங்கு நாம் ஒரு தீர்மானம் எடுக்கும் பொழுது கொஞ்சம் பொது அறிவும் பயன்படுத்தப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு மனிதன் தன் சொந்த வீட்டில் இருக்கிறான், ஆயுதம் ஏந்திய ஒருவன் உள்ளே அனுமதி இன்றி நுழைந்தான், அவன் தற்பாதுகாப்புக்காக தன்னால் தேவையானவற்றை முயல்கிறான், ஊடுருவியவன் அவனை சுட்டுக் கொன்றான், அங்கிருந்த பெண்களை வயது வேறுபாடின்றி பலாத்காரம் செய்தான். அதன் பின், அவனுடைய சொத்துக்களை எடுத்துச் சென்றதுடன் அவனுடைய வீட்டிற்கும் தீ வைத்தான். இப்போது சொல்லுங்கள் சுதந்திரப் போராட்ட வீரர் யார்? தீவிரவாதி யார்? இங்கே, வீட்டுச் சொந்தக்காரனும் பெண்ணையும் உடைமையையும் பாதுகாக்க முயன்றவனும், ஊடுருவும் நபரை தடுத்தவனும் உண்மையில் சுதந்திரப் போராட்ட வீரன் ஆகும். அதேபோல, வீட்டுக்குள் அனுமதியின்றி நுழைந்து, ஆணைக் கொன்று, பெண்ணைப் பலாத்காரம் செய்து, சொத்தை எடுத்துச் சென்றவனே பயங்கரவாதி ஆகும். செப்டம்பர் 11 அன்று மன்ஹாட்டன் மற்றும் பென்டகன் மீதான கமிக்காசே [kamikaze / தற்கொலைப்பாங்கான தாக்குதலில் ஈடுபடும்] விமானிகள் தாக்குதல்கள் சுமார் 3,000 பேரைக் கொன்ற பிறகு, அமெரிக்கா பல்வேறு தொடர்பற்ற குழுக்களின் பட்டியலை மீண்டும் பயங்கரவாத குழுவாக வலியுறுத்தியது. " இந்த அமெரிக்காவின் அவசரமான குறுகிய வரையறை அரசியல் சுதந்திரத்திற்கான உண்மையான போராட்டங்களுக்கும், பயங்கரவாத வன்முறைக்கும் இடையிலான வேறுபாடுகளை அழித்துவிட்டது என்று சொல்லலாம். "நோபல் பரிசு வென்ற யாசர் அராபத், 1973ல் சூடானில் அமெரிக்கத் தூதர் கிளியோ நோயல் [Cleo Noel] படுகொலை செய்யப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அவரது பாலஸ்தீன விடுதலை நிறுவனம், போரில் இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாதத்தைத் தேர்ந்தெடுக்கும் அமைப்புகளின் ஒரு குடைக் குழுவுமாகும். நெல்சன் மண்டேலா மற்றொரு நோபல் பரிசு வென்றவர். மதிய உணவு கவுண்டர்களில் அமர்ந்ததற்காக ராபன் தீவில் [Robben Island] ஆயுள் தண்டனை பெறவில்லை, ஆனால் ஆட்சியை கவிழ்க்க பயங்கரவாதத்தை திட்டமிட்டதற்காகவே ஆயுள் தண்டனை பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது. செப்டம்பர் 11 க்குப் பிறகு, சார்பு இல்லாத அரசியல் தன்மை அல்லது அரசியல் நேர்மை குறைந்து வருவதாகத் தோன்றுகிறது, பயங்கரவாதிகளுக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராளிகளாக இருக்கும் துணிச்சலான விடுதலைப் போராளிகளுக்கும் இடையே எங்கு கோடு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதும் இன்று கடினமாகப் போய்விட்டது. உலகின் பல நாடுகள் நீண்ட விடுதலைக்கான போராட்டங்களுக்குப் பிறகு உருவாகியுள்ளதுடன் மேலும் பயங்கரவாதிக்கும் சுதந்திரப் போராட்ட வீரருக்கும் உள்ள வித்தியாசம் முற்றிலும் ஒரு உணர்வின் விடயம் என்று பல பண்டிதர்கள் இன்று வலியுறுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நம் ஆள் போரில் கொல்லும் போது, அவன் ஒரு சுதந்திரப் போராட்ட வீரனாகிறான்; அதே மாதிரி, நமது எதிரி அதே வேலை செய்யும் போது, அவன் ஒரு பயங்கரவாதி ஆகிறான். அதாவது, இதே போன்ற செயல்கள் யார் யார் முத்திரை குத்துகிறார்கள் என்பதைப் பொறுத்து வெவ்வேறு முத்திரைகளைப் பெறுகிறார்கள் என்பதே உண்மை. 9/11 க்குப் பிறகு, வன்முறை பிரிவினைவாதிகளுக்கு உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களிடம் இருந்து அவர்களின் அனுதாபத்தை இழந்துவிட்டன. எனவே சுருக்கமாக கூறின் ஒரு பயங்கரவாதி அல்லது அவனின் இயக்கம் ஒரு சுதந்திர நாட்டை உருவாக்குவதில் வெற்றி பெறும் வரை பயங்கரவாதியாகவே தொடர்கிறான், என்றாலும் அதே நேரத்தில், அவன் வெற்றிக் கொள்ளும் பொழுது அவன் ஒரு சுதந்திரப் போராளி என்று போற்றப்படுகிறான் என்பதே உண்மை. உதாரணம் ஆங் சான் சூகியும் தலாய் லாமாவும் [Aung San Suu Kyi and the Dalai Lama] பயங்கரவாதிகள் அல்ல என்பதை உலகம் மிகத் தெளிவாக இன்று ஒப்புக்கொள்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. ஐக்கிய இராச்சியத்தின் அரசாங்கம், ஜார்ஜ் வாஷிங்டன், பெஞ்சமின் ஃபிராங்க்ளின், தாமஸ் ஜெபர்சன் மற்றும் பிரான்சிஸ் மரியன் [George Washington, Benjamin Franklin,Thomas Jefferson and Francis Marion] ஆகியோரையும் அதே தூரிகையால் தூற்றியது ஒரு வரலாற்று உதாரணம் ஆகும். உண்மையில், 1776 இல், அமெரிக்கப் புரட்சியின் ஐம்பத்தாறு தலைவர்களும் அதேவாறு முத்திரை குத்தப்பட்டனர், மேலும் பிரிட்டன் அவர்களை உயிருடனோ அல்லது உயிரற்று பிடிக்க விரும்பியது. அவர்களின் குற்றம்: அவர்கள் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டனர் என்பதே ஆகும். பகத் சிங் [Bhagat Singh] இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு சிறந்த உண்மையான சிப்பாய் மற்றும் அவனது தாய்நாட்டின் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்காக அவன் பயமின்றி உக்கிரமாக போராடினான், உண்மையில் இது எந்தவொரு உண்மையின் குடிமகனின் அடிப்படை உரிமையும் [fundamental right of every citizen of any country] ஆகும். இருப்பினும், பயங்கரவாதத்தின் நவீன வரையறையை கண்டிப்பாகப், உறுதியாக பயன்படுத்தினால், பகத் சிங்கும் ஒரு பயங்கரவாதியாக இருப்பான், அதே போல், சுபாஷ் சந்தர் போஸ் & மகாத்மா காந்தியும் கூட பயங்கரவாதிகளே. என்றாலும் அதிகாரத்திற்கு சவால் விடுபவர்களை 'பயங்கரவாதிகள்' என்று முத்திரை குத்துவது மனித வரலாற்றில் ஒரு புதிய நிகழ்வும் அல்ல. அதுமட்டும் அல்ல, பிராமணிய ரிக் வேதமும் மற்றும் சில புராண கதைகளும் இதற்கு இன்னும் ஒரு உதாரணமாகும். “வழிப்போக்கர்களிடமிருந்து கொள்ளையடிக்கும் திருடனைப்போல், தெய்வமற்ற தாசர்களுடைய (சமணத்தமிழர்களுடைய) செல்வங்களைத் திருடி இந்திரனைப்போற்றும் ஆரியர்களுக்கு அளிக்க வேண்டும். ஆரியர்களின் புகழையும் பலத்தையும் சிறப்பிக்க வேண்டும்” / மண்டலம் 1, அதிகாரம் (சூக்தம்) 103, பாடல் (சுலோகம்) 3,6 இந்திரா! ஆந்தையைப்போலும், ஆந்தைக் குஞ்சைப் போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) கொல்லவும். நாயைப் போலும் கழுகைப்போலும் உள்ள தஸ்யூக்களைக் (சமணத்தமிழர்களை) நசுக்கி ஒழிக்கவும். / மண்டலம் 7, அதிகாரம் (சூக்தம்) 104, பாடல் (சுலோகம்) 22 மேலும் ஒரு அதிகாரத்திற்கு சவால் விடுபவர்களை 'பயங்கரவாதிகள்' என்று முத்திரை குத்துவது மனித வரலாற்றில் ஒரு புதிய நிகழ்வு அல்ல என்பது மிக தெளிவாக, கிருஸ்துக்கு முற்பட்ட ரிக் வேதத்தில் மேலே பார்த்தோம். அது இன்றும் தொடர்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. உதாரணமாக, பதினெட்டாம் நூற்றாண்டில் பிரெஞ்சு ஜேக்கபின் எதிர்ப்பு குழுக்களுக்கு [French Anti-Jacobin groups] எதிராக முதன் முதலில் அப்படியான ஒன்று பயன்படுத்தப்பட்டதிலிருந்து, எதிர்ப்பாளர்களில் சிலர் எந்த வன்முறைச் செயல்களையும் செய்யாவிட்டாலும் கூட, அதிருப்தியாளர்களை 'பயங்கரவாதிகள்' என்று முத்திரை குத்துவது பல உலக நாடுகளில் மிகவும் பொதுவானதாகிவிட்டது என்பதை அறிய முடிகிறது. உதாரணமாக நாஜி மூன்றாம் ரைச் [The Nazi Third Reich] தனது எதிர்ப்பாளர்களை பயங்கரவாதிகள் என்று அழைத்தது; அதேபோல, ஆங்கிலேயர்களுக்கு எதிரான இந்திய சுதந்திர இயக்கம் பயங்கரவாதம் என்று அன்று வரையறுக்கப் பட்டது; தென்னாப்பிரிக்காவின் நிறவெறி ஆட்சிக்கு எதிராக உரிமைக்காக சமத்துவத்திற்காக போராடியவர்கள் பயங்கரவாதிகள் என அழைக்கப் பட்டனர். உதாரணமாக பெண்களின் வாக்குரிமை, அடிமைத்தனம், காலனித்துவத்தின் முடிவு என எதுவாக எடுத்துக் கொண்டாலும், மனித வரலாற்றில் எந்தவிதமான முக்கியத்துவம் வாய்ந்த சமூக மாற்றமும் எந்த வன்முறையும் இன்றி நிகழ்ந்ததில்லை என்ற உண்மையை இந்தச் சட்டத்தை உருவாக்கியவர்கள் எனோ எதோ என்று கவனிக்கவில்லை. இந்த சட்டம் நடைமுறையில் இருந்தபோது இந்த இயக்கங்கள் அனைத்தும் 'பயங்கரவாதம்' என்று முத்திரை குத்தப்பட்டிருக்கும். மேலும் அதன் தலைவர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கூட 'பயங்கரவாதிகள்' என்று குற்றம் சாட்டப்பட்டிருப்பார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை இவர்கள் அன்று இல்லை என்றால் இன்னும் பெண்களின் வாக்குரிமை, அடிமைத்தனம், காலனித்துவத்தின் முடிவு ஒன்றுமே நடந்து இருக்காது. உண்மையில் விமானத்தைக் கடத்துவது, அல்லது வங்கியை பணயம் வைப்பது, அல்லது டோக்கியோவின் சுரங்கப்பாதைகளில் ‘பயோ-கேஸ்’ [‘bio-gas’] பயன்படுத்தும் மதவாதிகள், கட்டாயம் ‘பயங்கரவாதத்தின்’ வெளிப்படையான செயல்கள் ஆகும். எனவே அவை போன்றவற்றைக் கடுமையாக கையாள வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேபோன்று, குடிமக்கள் மீது குண்டுகளை வீசி, அவர்களின் பாதுகாப்புப் படைகளை அல்லது உரிமைக்கான போராட்ட வீரர்களை சித்திரவதை செய்வது, பெண்களை பாலியல் வல்லுறவு அல்லது மானபங்கம் செய்வது மற்றும் தண்டனையின்றி வேண்டு என்று மிலேச்சத்தனமான கொல்லுவது அல்லது வலிந்து காணாமல் ஆக்குவது போன்ற செயல்களை செய்யும், செய்த அந்த ஆட்சிகளும் ‘பயங்கரவாதத்திற்காக’ தண்டிக்கப்பட வேண்டும். ஆனாலும் அது நடைபெறுகிறதா என்பது ஒரு கேள்விக்குறியே. உதாரணம் இலங்கை அரசு இன்னும் தமிழ் ஆயுத குழுக்களுக்கு எதிரான பல தசாப்த கால உள்நாட்டுப் போர் 2009 இல் முடிவடைந்ததிலிருந்து, இலங்கை தனது 22 மில்லியன் மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது ஒரு பெரிய இராணுவத்தை பராமரித்து வருகிறது மட்டும் அல்ல, அவை வடக்கு கிழக்கில் பெரும்பான்மையாக நிறுத்தி வைக்கப் பட்டிருப்பதுடன், அது இன்னும் ஐக்கிய நாடு சபையின் 'பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களை அங்கீகரிக்க வேண்டும் மற்றும் மொத்த மனித உரிமை மீறல்களில் பாதுகாப்புப் படைகளின் பங்கை ஒப்புக் கொள்ள வேண்டும்' என்ற தீர்மானத்தை ஒப்புக் கொள்ளாமலும் அதற்கு ஒரு தீர்வை உள்நாட்டில் கூட காணாமலும் இழுத்தடிப்பதைக் கூறலாம். "மனதில் உறுதி கொண்ட மக்களை சினந்து குருதி கொள்ள நினைப்பதும் ஈனமாய் எள்ளி நகை ஆடுவதும் மானமாய் வாழ விடாது தடுப்பதும் தானமாய் பிச்சை போட்டு அடைப்பதும் வனமாய் பசும் நிலத்தை மாற்றுவதும் ஊனமாய் அவனை அடித்து முறிப்பதும் இனப் படுகொலை! இனப் படுகொலை!" "விடுதலை வேண்டி வீறுகொண்ட இனத்தை படுகொலை செய்து குழியில் புதைப்பதும் நடுநிலை அற்று அடிமை ஆக்குவதும் ஏடுகளை எரித்து சரித்திரத்தை சிதைப்பதும் வீடுகளை இடித்து அகதி ஆக்குவதும் மேடுகளை போட்டு தடுத்து வைப்பதும் கூடுகளை உடைத்து குஞ்சுகளை பறிப்பதும் படுகொலை!அது இனப் படுகொலை!!" "கலை வளர்க்க தடை போட்டு அலை அலையாய் ஆமி போட்டு விலை பேசி சிலரை வாங்கி உலை வைக்கும் மந்தரை கெடுத்து சிலை சிலையாய் மக்களை மாற்றி இலை துளிராது வேரையே வெட்டி தலை நிமிரா நெருக்களை கொடுத்து கொலை செய்வது இனப் படுகொலை!!!" "இன்று என் வாழ்வின் பெருமைமிகு நாள். அடிமைப்பட்ட மக்களுக்கு, விடுதலைப் படையின் முதல் சிப்பாய் என்பதை விட பெரிய பெருமை, உயர்ந்த மரியாதை எதுவும் இருக்க முடியாது. ஆனால் இந்த மரியாதையை அதற்கேற்ப பொறுப்புடன் உள்ளது என்பதை நான் ஆழமாக உணர்ந்திருக்கிறேன். இருளிலும் சூரிய ஒளியிலும், துக்கத்திலும், மகிழ்ச்சியிலும், துன்பத்திலும் வெற்றியிலும் நான் உங்களுடன் இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன். தற்போதைக்கு, பசி, தாகம், ஏழ்மை, கட்டாய அணிவகுப்பு மற்றும் மரணத்தைத் தவிர வேறு எதையும் என்னால் உங்களுக்கு வழங்க முடியாது. ஆனால் வாழ்விலும் மரணத்திலும் நீங்கள் என்னைப் பின்தொடர்ந்தால், நான் உறுதியாக நம்புவது போல், நான் உங்களை வெற்றிக்கும் சுதந்திரத்திற்கும் அழைத்துச் செல்வேன். இந்தியாவை சுதந்திரமாகப் பார்க்க நம்மில் யார் வாழ்ந்தாலும் பரவாயில்லை. இந்தியா சுதந்திரமாக இருந்தால் போதும், அவளை விடுதலை செய்ய நம் அனைத்தையும் கொடுப்போம். கடவுள் இப்போது நம் இராணுவத்தை ஆசீர்வதித்து, வரவிருக்கும் போரில் எங்களுக்கு வெற்றியைத் தரட்டும்."-- சுபாஷ் சந்திர போஸ் ஜூலை 5, 1943 அன்று சிங்கப்பூரில் நடந்த ஐஎன்ஏ [இந்திய தேசிய ராணுவம் / INA] அணிவகுப்பை மதிப்பாய்வு செய்த பிறகு பேசிய பேச்சே இது. இது உண்மையான சுதந்திர வீரனை படம் பிடித்துக் காட்டுகிறது! பயங்கரவாதியை அல்ல !! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] Terrorist" is a word used so often and so loosely that it has lost a clear meaning. Let's define a "terrorist" action as the use of violence where one would reasonably expect harm to innocent civilians.This is to be distinguished from a "military" action, where the use of violence is not reasonably expected to harm innocent civilians. Hence, we can have both state military actions and state terrorist actions. Likewise, there can be both guerrilla military actions and guerrilla terrorist actions. If a country sends its bombers to destroy the water system or other civilian infrastructure of another nation, this would be a state act of terrorism,because harm to civilians would reasonably be expected to result. On the other hand,if a country sends its bombers to attack military airfields of its enemy, that would be a state military action. Similarly: if a group fighting to overthrow a government or end an occupation by a foreign power sends a suicide bomber to blow up a shopping centre or other civilian infrastructure,this would be a guerrilla act of terrorism.In contrast, if such a group sends a small boat filled with explosives to blow up a military vessel, that would be a guerrilla military action. Some may correctly point out that even striking a military airfield may kill some civilians who happen to be on the base,and that is true. But similarly,a guerrilla group blowing up a military vessel may also kill some civilians who happen to be on board. As with all definitions,a bit of common sense has to be applied. Let say, A man is in his own home,an armed intruder enters, he tries to defend,the intruder shoots him,rape his females and walk away with his property and set his home on fire. Now who is the freedom fighter and who is the terrorist. The freedom fighter is the man who owns the home,protect the female and property and fend off the intruder. The terrorist is the man who enters the home, kill the man, rape the females and walk away with the property. After kamikaze assaults on Manhattan and the Pentagon on September 11 killed about 3,000 people, the U.S. reiterated its list of various unrelated groups which Washington described as terrorist organizations. "This narrow definition has erased the distinctions between genuine struggles for political independence and terrorist violence. "Nobel Prize winner Yasser Arafat has been charged in the cold-blooded assassination of U.S. Ambassador Cleo Noel in the Sudan in 1973. His PLO is an umbrella group embracing organizations for whom the weapon of choice in the war against Israel is terror. Nelson Mandela, another Nobel Peace Prize winner, did not get life imprisonment on Robben Island for sitting in at lunch counters, but for plotting terror to overthrow the regime. Though political correctness seems to be on the wane after September 11, It is hard, we are then told, to know exactly where the line exists between terrorists and the brave would-be liberators of oppressed people–freedom fighters. Besides, many nations in the world have come into existence after lengthy struggles for liberation. Many pundits assert that the difference between a terrorist and a freedom fighter is purely a matter of perception. When our guy kills in battle, he’s a freedom fighter; when our enemy does, he is a terrorist. Similar acts get different labels depending on who is doing the labeling. Post-9/11, governments across the world lost sympathy for violent separatist movements. In short, a terrorist is a terrorist right up till he succeeds in creating an independent country, at which point he is hailed as a freedom fighter. The world very clearly acknowledges that Aung San Suu Kyi and the Dalai Lama are not terrorists but are agitating for legitimate causes. The government of the United Kingdom, had also smeared George Washington, Benjamin Franklin,Thomas Jefferson and Francis Marion, with the same brush. In fact, back in 1776,all fifty-six leaders of the American Revolution were branded, and Britain wanted them ‘dead or alive.’ Their crime: they signed the American Declaration of Independence. Bhagat Singh was a great soldier of India's freedom struggle and his fight was to restore the freedom of his mother land, which is the fundamental right of every citizen of any country. However, if the modern definition of terrorism were to be strictly applied, Bhagat Singh too would be a terrorist,Similarly, Subhash Chandra Bose & Mahatma Gandhi too. Branding those who challenge authority, as ‘terrorists’ is not a new phenomenon in human history. Ever since its first usage against the French Anti-Jacobin groups in the eighteenth century,it had become increasingly more common for states to brand dissidents as ‘terrorists’, even when some of the dissidents had not committed any acts of violence. The Nazi Third Reich called its dissenters terrorists; to the British the Indian Freedom Movement was terrorism; to the Apartheid regime of South Africa those who fought for equality as human beings were terrorists. The framers of this piece of legislation have tragically overlooked the fact that no social change of any significance has ever taken place in human history without some violence – be it the women’s right to vote, the end of slavery,or the end of colonialism. If this law was in place then all these movements would have been labeled as ‘terrorism’, and the leaders, and even their supporters, would have been charged as ‘terrorists.’ Some, such as hijacking a plane, or holding up a bank, or cultists using ‘bio-gas’ in the subways of Tokyo, are obvious acts of ‘terrorism’ and should be dealt as such. Similarly, those regimes that bomb civilians and direct their security forces to torture, rape and kill with impunity, should also be punished for ‘terrorism.’ "I have said that today is the proudest day of my life.For an enslaved people,there can be no greater pride,no higher honour, than to be the first Soldier in the Army of Liberation. But this honour carries with it a corresponding responsibility and I am deeply conscious of it. I assure you that I shall be with you in darkness and in sunshine, in sorrow and in joy, in suffering and in victory. For the present, I can offer you nothing except hunger, thirst, privation, forced marches and death. But if you follow me in life and in death, as I am confident you will, I shall lead you to victory and freedom.It does not matter who among us will live to see India free. It is enough that India shall be free and that we shall give our all to make her free. May God now bless our Army and grant us victory in the coming fight." -- Subhas Chandra Bose After reviewing INA parade at Singapore on July the 5th, 1943. [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]
    3 points
  7. நான் எழுத நினைத்தேன்” இடம் கந்தர்மடம். என்றபடியால். தவிர்த்து விட்டேன் அங்கே ஒருவர் பசியில். வடியிருந்தால். திரும்பியும். பார்த்து இருக்கமாட்டார்கள்
    2 points
  8. கண்டிப்பாக இது ஒரு செய்திதான். ஏனெனில் 18 வயதுக்கு மேற்பட்ட இருவர் தம் சுயவிருப்பிற்கிணங்க உடலுறவு கொள்வதை மூர்க்கத்தனமாக தடுக்கின்ற, அதை எதிர்க்கின்ற ஒரு சமூகமாகவே இன்னும் யாழ் / தாயக சமூகம் உள்ளது என்பதை இந்த செய்தி மீண்டும் தெளிவாக காட்டுகின்றது. இதில் சம்பந்தப்பட்ட அயலவர்களை தூக்கி உள்ளே போட வேண்டும்.
    2 points
  9. உங்களது இதே எண்ணம் எனக்கும் காலையில் இருந்தது. எழுத நேரம் கிடைக்கவில்லை. சமீபத்தில் திலீபனின் நினைவுநாள் வந்தது. யாழ்ப்பாணத்தில் இருக்கும் இந்திய (உப)தூதராலயம் கண்டு கொள்ளவேயில்லை. சில தினங்கள் கழித்து வந்த காந்தி நினைவு தினம் பொது மக்களோடு யாழ்ப்பாணத்தில் நினைவு கூறப்பட்டிருக்கிறது. ‘ திராவிடம்’ என்ற சொல்லைச் சேர்த்துப் பாடவில்லை என்பதற்காக தமிழகத்தில் ஆளுனரிடம் சண்டைக்குப் போகிறார்கள். நாங்கள் எங்களுக்குள்ளேயே குத்தி முறிந்து கொண்டிருக்கின்றோம். குறைந்த பட்சம் தூதராலயத்துக்கு முன் படங்களை வைத்தாவது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கலாம். சிறிய நாடு. அதற்கு இரண்டு இந்தியத் தூதராலயம்.
    2 points
  10. “வழக்கம் போல்தான். நீங்கள் ஒரு சேவையைப் பெறக் கட்டணம் செலுத்தவில்லை என்றால், அங்கு நீங்கள் தான் விற்கப்படுகிறீர்கள்” 😂அழகான வாக்கியம். சில தனியார் நிறுவனங்கள் எக்ஸ் தளத்தில் இருக்கும் சில ஆயிரம் பரிமாற்றங்களை "ஒரு செய்திக்கு இத்தனை டொலர்கள்" என்று விலைபேசி தம் ஆராய்ச்சிகளுக்காக (consumer research) வாங்கிக் கொள்வதாக அறிந்திருக்கிறேன். அப்படி கம்பனிகள் செலவு செய்யும் சில ஆயிரம் டொலர்கள், பின்னர் அவர்களுக்கு மில்லியன்களாக மீளக் கிடைக்கும் வாய்ப்புகள் வரும். பூட்டி விட்டு பேசாமல் இருங்கள். விளம்பரம் வருவது கூட பரவாயில்லை.உங்களையே விற்று காசு பார்ப்பார் சக்கர்பேர்க். இவரோடு சேர்ந்து மில்லியன் டொலர்கள் சம்பளத்திற்கு வேலை செய்து செற்றிலான சிலர், பின்னர் வெளியேறி வந்து "சமூகவலைத் தளங்களின் தீமைகள்" என்று புத்தகம் போட்டு, நேர்காணல்கள், உரைகள் ஆற்றி மேலும் சில மில்லியன்கள் பார்ப்பர்😂.
    2 points
  11. யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு யாழ். போதனா வைத்தியசாலையினுள் அத்துமீறி உள்நுழைந்த இந்திய இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட 68 பேரின் நினைவேந்தல் இன்றைய தினம் திங்கட்கிழமை (21) யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21, 22ஆம் திகதிகளில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய அமைதிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அத்தாக்குதல் சம்பவத்தில் வைத்தியசாலையில் கடமையில் ஈடுபட்டிருந்த மூன்று மருத்துவர்கள், இரண்டு தாதியர்கள், மேற்பார்வையாளர் உட்பட 21 மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சிகிச்சை பெற்றுவந்த 47 நோயாளர்கள் என 68 பேர் படுகொலை செய்யப்பட்டனர். https://www.virakesari.lk/article/196770
    2 points
  12. தேர்தல் பேச்சுக்கள்? அப்படி ஒன்று செய்யாவிட்டால், இவரை நிம்மதியாக ஆட்சி செய்ய விடமாட்டார்கள் சம்பந்தப்பட்டவர்கள். குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். கடைசியில் அநுராதான் ஊழல் செய்தவர் என்று கதையை மாற்றி விடுவார்கள்.
    2 points
  13. யாழில் ஏற்கனவே இப் படம் இணைக்கப்பட்டு ரில்வின் சில்வா என்று குறிப்பிட்ட பதிவு நீக்கப்பட்டது. ஜேவிபியின் கடும் இனவாத செயற்பாடுகள் பல ஆதாரங்களாக கண் முன்னே இருக்கும் போது இவ்வாறான போலி செய்திகளை ஊடகவியலின் அடிப்படையே தெரியாத யூடியூப்பர்கள் சொல்வதை நம்பி இணைப்பதும் பரப்புவதும் எதிர்மறையான விளைவுகளை தமிழர்களுக்கு தோற்றுவிப்பதுடன் மேலும் இனவாத சக்திகளைத்தான் பலப்படுத்தும்.
    2 points
  14. 🤣........... சரியான கிறுக்கும், கிராக்கியும் பிடிச்ச மனுசன்.................. எவரும் எதிர்பார்க்காத மாதிரி புதுமையாக நல்லதும் செய்யும் இந்த ஆள், அதே போல தேவையே இல்லாத இன்னொன்றையும் செய்யும் இந்த மனுசன். இவரிடம் பரிசு வாங்குகிறவன் மிச்ச வாழ்க்கை முழுவதும் ஒரு செத்த மனிசன்...........
    2 points
  15. திராவிடம் எனும் சொல் தமிழ்நாட்டிற்கு ஏன்? தேவையில்லாத ஆணிய புடுங்குவதே சிறப்பு.
    2 points
  16. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) 28) வன்னி 29) மட்டக்களப்பு) 30)திருமலை 31)அம்பாறை 32)நுவரெலியா 33)அம்பாந்தோட்டை 34)கொழும்பு 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் 39) உடுப்பிட்டி 40) ஊர்காவற்றுறை 41) கிளிநொச்சி 42) மன்னர் 43) முல்லைத்தீவு 44) வவுனியா 45) மட்டக்களப்பு 46) பட்டிருப்பு 47) திருகோணமலை 48) அம்பாறை 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 54)தமிழரசு கட்சி 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்
    1 point
  17. இன்றைய நீயா நானா நிகழ்ச்சியை முடிந்தவர்கள் பாருங்கள். எப்படி எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். சாதாரணமாக காற்சட்டை பாக்கெற்றில் வைத்திருக்கும் கடனட்டையை பாக்கெற்றுக்கு பக்கத்தில் வைத்தால் தொடரூந்திலோ பேரூந்திலோ போகும்போது சாடையாக அதில்பட்டால் நமக்கு புரியவா போகுது ஆனால் எமது கடனட்டை அவர்களின் சிறிய ஒரு தீப்பெட்டியளவு சாதனத்தில் பதிவாகிறது. இதே மாதிரி இன்னும்இன்னும் வழிகளில் ஏமாறியவர்களின் கதைகளைக் கேட்க தலையே சுற்றுகிறது. நம்மவர்கள் யாரும் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இப்படி ஏதாவது நடந்திருந்தால் அதன் அனுபவத்தை எழுதுங்கள். இதை இறைச்சிக்காக வளர்க்கப்பட்ட பன்றிகள் என்கிறார்கள்.புரியலையா நாங்க தான் அந்த பன்றிகள். Full Show;- https://www.hotstar.com/in/shows/neeya-naana/1584/neeya-naana/1700049182/watch https://www.tamildhool.net/vijay-tv/vijay-tv-show/neeya-naana/page/3/ மேலே உள்ள தளத்திலேயே நான் பார்ப்பேன்.
    1 point
  18. பட மூலாதாரம்,DOORDARSHAN படக்குறிப்பு, பிரசார் பாரதி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி கலந்துகொண்ட விழா 18 அக்டோபர் 2024, 13:23 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை பிரசார் பாரதி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18) நடந்த ஒரு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடுபட்டது. இது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்’, என்று பதிவிட்டுள்ளார். மேலும், “தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார். மன்னிப்பு கேட்ட பிரசார் பாரதி இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து பிரசார் பாரதி இது குறித்து ஒரு விளக்கக் குறிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் 'தவறுக்கு மன்னிப்பு கோருவதாக' அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. அதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்பித்த, சென்னை தூர்தர்ஷன் நடத்திய இந்தி மாத நிறைவு விழாவில், ‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியைத் தவறவிட்டு விட்டார்’, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தமிழையோ, அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவரிடம் இல்லை. வேண்டும் என இதனை யாரும் செய்யவில்லை,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இனவாதக் கருத்து’ - ஆளுநரின் பதில் இந்தச் சர்ச்சை குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்டாலினின் குற்றச்சாட்டு ‘பொய்யானது’ என்றும், ‘இனவாதம்’ என்றும் கூறியிருக்கிறார். எக்ஸ் தளத்தில் அவரது பதிவில், “ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச் சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் [மு.க.ஸ்டாலினுக்கு] நன்றாகத் தெரியும்,” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், “நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது,” என்று கூறியிருக்கிறார். “ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது,” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், ‘இனவாதக் கருத்துக்களையும் தவறான குற்றச்சாட்டுகளையும் அவசரகதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் தான் இருப்பதாக’ ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் வரலாறு இந்நிலையில், 'நீராரும் கடலுடுத்த' என்று தொடங்கும் இந்தப் பாடலின் பின்னணி என்ன? இது எப்படி தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரிக்கப்பட்டது? என்பதன் வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கலாம். இந்தப் பாடல் தமிழறிஞர் பெ.சுந்தரனார் 1891-இல் வெளியான தமது 'மனோன்மணீயம்' என்ற நாடக நூலுக்கு எழுதிய தமிழ் வாழ்த்துப் பா. 1970ம் ஆண்டு ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்தபோது இது தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டது. அன்றே நீக்கப்பட்ட வரிகள் அப்படி ஏற்கும்போது சம்ஸ்கிருதம் போல அழியாத தமிழின் சிறப்பாக சுந்தரனார் குறிப்பிடும் சில வரிகளை நீக்கிவிட்டே அது அதிகாரப்பூர்வ வாழ்த்தாக ஏற்கப்பட்டது. "பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்" என்பவையே அந்த நீக்கப்பட்ட வரிகள். படக்குறிப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசாணை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்... மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையில் அது பாடப்படவேண்டும் என்பது அரசாணை. இதில் எங்கும், இந்தப் பாடல் இசைக்கப்படும் போது எழுந்து நிற்பதைப் பற்றியோ, அவமதிப்பவர்களுக்கான தண்டனை பற்றியோ குறிப்பு இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான மா.ராசேந்திரனிடம் கேட்டோம். 1970-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது என்றார். மதச் சார்பற்ற அரசுக்கு மத நம்பிக்கையோடு கூடிய ஓர் இறைவணக்கப் பாடலைப் பாடுவது பொருத்தமாக இருக்காது என்பதால், மொழி வணக்கப்பாடல் அறிமுகமானது என்பதையும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,FACEBOOK/PG/KALAIGNAR89 படக்குறிப்பு, 1970-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது பாரதிதாசன் பாடல் பரிசீலனை பாரதிதாசன் பாடல் ஒன்றும் இதற்கான பரிசீலனையில் இருந்தது என்று கூறிய ராசேந்திரன், இறுதியில் சுந்தரனாரின் பாடல் சிறப்பாக இருந்ததாக முடிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டது என்றார் அவர். நல்லிணக்கத் தன்மையுள்ள பாடல் இது என்று குறிப்பிட்ட ராசேந்திரன், மாநிலத்தின் ஆட்சி மொழியாக உள்ள ஒரு மொழியை அரசு நிகழ்ச்சிகளுக்கு முன்பு வாழ்த்திப் பாடுவது பண்பான செயல் என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தது சர்ச்சையானது இதற்கு முந்தைய சர்ச்சை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைச் சுற்றி அரசியல் சர்ச்சை உருவாவது இது முதல்முறை அல்ல. 2018-ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றிவிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுகுறித்து அப்போது பிபிசி தமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத சங்கரமடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், தமிழை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று கூறியிருந்தார். "மடத்தில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களுக்கு கூட பக்தர்கள் எழுந்து நிற்பார்களே ஒழிய மடாதிபதிகள் எழுந்து நிற்க மாட்டார்கள்" என்று கூறிய அவர் "இது எங்கள் சம்பிரதாயம்" என்றும் தெரிவித்தார். தேசிய கீதம் பாடும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றாரே ஏன் என்ற கேள்விக்கு, "தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காவிட்டால் அது குற்றம்" என்று கூறிய அந்த நிர்வாகி, "தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து 2021-ஆம் ஆண்டு, அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. (இந்தக் கட்டுரையில் 2018-ஆம் ஆண்டு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தது சர்ச்சையானபோது பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து தகவல்கள் எடுத்தாளப் பெற்றுள்ளன.) https://www.bbc.com/tamil/articles/cevy348ep89o
    1 point
  19. எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 22.10.2007 அன்று “எல்லாளன் நடவடிக்கை”யின் போது சிறிலங்காவில் உள்ள அனுராதபுர வான்படைத்தளத் தளத்தில் ஊடுருவி கரும்புலிகளும் – வான்புலிகளும் தகர்த்தழித்த வரலாற்றுச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அருண் ஆகிய 21 கரும்புலி மாவீரர்களின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழ் மக்களின்விடுதலைப் போராட்டம் தொடக்க காலத்தில கெரில்லா போராட்டமாக காணப்பட்டு அதன் வளர்ச்சிப்படிகளில் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தி மரபுவழி போராட்டமாக வளர்ச்சிகண்டு பின் ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் போராட்டமாக பல கட்டமைப்புக்களை தன்னகத்தே கொண்டு விடுதலைக்காக போராடிய காலகட்டத்தில் 2007 ஆம் ஆண்டு பத்தாம் மாதம் 22 ஆம் நாள் விடுதலைப்புலிகளின் பரிணாம வளர்ச்சியின் ஒரு படிக்கல்லான தாக்குதலாக சிங்களபடையின் குகை என்றும் வான்படை தரைப்படையினை கொண்ட அனுராதபுரம் வான்படைத்தளத்தில் தரைவழியாக நகர்ந்து சென்று தாக்குதல் தொடுத்து ஸ்ரீலங்கா வன்படையினரின் இருபதிற்கு மேற்பட்ட வான்கலன்களை அழித்து தளத்திற்கு பாரியசேத்தை ஏற்படுத்தி ஸ்ரீலங்காப்படைக்கு பின்னடைவினை ஏற்படுத்தி வீரவரலாறான 21 சிறப்பு கரும்புலி மறவர்களின் நினைவு நாளும் ஆகும். தமிழீழ தேசியத்தலைவர் நேரடி வழிகாட்டலில் உருவான கரும்புலிகள் அணி இறுதியாக தலைவர் அவர்களுடன் உணவருந்தி புகைப்படம் எடுத்துவிட்டு விடைபெற்று தரைவழியாக தமிழீழத்தின் எல்லைப்பகுதிகள் ஊடாக கரடு முரடான பாதையினையும் பள்ளத்தாக்கினையும் கடந்துசென்று அனுராதபுரம் என்ற சிங்களவனின் குகைக்குள் சென்று அங்கு தரித்து நின்ற வான்கலங்கள் அனைத்திற்கும் தீ முட்டிய அந்த தீராத வீரர்களை நினைவிற் கொள்கின்றோம். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் பெயர்சூட்டி வைக்கப்பட்ட நடவடிக்கைதான் இந்த எல்லாளன் நடவடிக்கை. அனுராதபுர வான்படைத்தளத்தில் 21 சிறப்பு கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீ அன்று அந்த விமான நிலையத்தினை சுட்டெரித்துக்கொண்டிருந்தது சிங்களப் படையின் உதவிக்கு வந்த உலங்கு வானூர்தியும் விடுதலைப்புலிகளால் சூட்டுவிழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழர் தேசம் தலைநிமிரச்செய்த இந்த காவிய நாயகர்களை என்றும் நெஞ்சில் சுடரேற்றி வணங்குவோம். தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் தேசத்தின் புயல்கள்… தேசப்புயல்களின் வீரவணக்க நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களும், தமிழீழ தேசமும்… தமிழீழ இலட்சியக் கனவுகளுடன் வரலாற்று வெற்றிகளுக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்கள்… கரும்புலி லெப். கேணல் இளங்கோ அவனது சாதுவான அந்தச் சிரிப்பு, அவனுக்குள்ளே குடியிருந்த எரிமலையின் மறுபக்கம். இம்ரான்-பாண்டியன் படையணியின் இரகசியமான சிறப்புப் பணியொன்றை ஆற்றிய சில ஆண்டுகாலப்பகுதியில் அவனது செயற்பாடுகள் பற்றி இங்கு விவரிக்க முடியாது. பின்னர் லெப்.கேணல் விக்ரர் கவச எதிர்ப்பு அணியில் இணைந்துகொண்டான். அவ்வணியில் இருந்து அவன் சாதித்துக் காட்டிய வீரம் வித்தியாசமானது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடாரப்புத் தரையிறக்கத்தின் மூலம் உள்ளே நுழைந்த படையணியில் அவனது தலைமையிலும் ஓரணி கவச எதிர்ப்பு ஆயுதங்களுடன் களமிறங்கியிருந்தது. கேணல் பால்ராஜ் தலைமையில் நிலையெடுத்திருந்த விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் நோக்குடன் பலமுனைகளில் முன்னேறிவந்த எதிரியுடன் கடும்சமர் இடம்பெற்றது. எதிரியின் கவசவாகனத்தைத் தாக்கி அதிலிருந்த 50 கலிபர் துப்பாக்கியை கைப்பற்றி, அதன்மூலம் எதிரியின் மீதே தாக்குதலை நடத்திய இளங்கோவின் வீரம் அன்று அந்தச் சமர்க்களத்தை வெல்வதற்கு உறுதுணையாக அமைந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த காலம் தொடக்கம், பல்வேறு சிறப்பு பணிகளில் ஈடுபட்டவன். ஆனால் ஒவ்வொரு பணியிலும் அவனது முழுமையான ஈடுபாடு இருக்கும். உள்ளகப் புலனாய்வுப்பணி தொடக்கம் ஊடுருவிதாக்குதல் வரை அவனது பணிகள் நீண்டவை. அவனது அந்த அனுபவங்களே எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பு அணியின் பொறுப்பாளனாக நியமிக்கப்படும் அளவுக்கு அவனைப் புடம்போட்டது. சிறப்பு நடவடிக்கைகளைப் பொறுத்தவரை சிறிய அணிகளே பொருத்தமானவை. அதன் மூலமே சாதகமான மறைப்பை பயன்படுத்தி எதிரிக்குப் பேரழிவைக் கொடுப்பதுடன் – நெருக்கடியான நிலைமைகளின் கீழ் – அணியை ஒழுங்கமைப்பதும் இலகுவானது. 21 பேர் கொண்ட பெரிய அணியையும் அதற்குத் துணையான வேறு அணிகளையும் நெறிப்படுத்தி வழிகாட்டி பெருந்தலைவன் அளித்த பணியைச் சிறப்பாகவே அவன் முடித்து வைத்தபோது – சிங்கள தேசமே ஆட்டங்கண்டது. கரும்புலி லெப். கேணல் வீமன் பாலா அண்ணை ஊருக்கு வந்தால் இவன்தான் அவருக்கு மெய்ப்பாதுகாப்பாளன். தேசியத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர் அணியில் சில ஆண்டுகள் பணியாற்றிய இவனை தலைவரேதான் பாலா அண்ணையின் பாதுகாப்பாளராக நியமித்தார். மிக இளவயதில் போராட்டத்தில் இணைந்த வீமன் தொடக்கத்தில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப்பள்ளியில் கல்வி பயின்றான். 1995 இன் இறுதிக்காலப்பகுதியில் – யாழ்.குடாநாட்டை முற்றாகக் கைப்பற்றவென சிறிலங்காப்படைகள் மும்முரமாக முயன்றுகொண்டிருந்த காலப்பகுதியில் படைத்துறைப்பள்ளியிலிருந்து சிறப்பு இராணுவப் பயிற்சிக்கெனத் தேர்வு செய்யப்பட்ட அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தொடரமுடியாத வண்ணம் போர் நிலைமைகள் மாறின. புலிகள் யாழ்.குடாநாட்டை விட்டு வெளியேறி வன்னிக்கு வந்தபோது அவனது சிறப்பு இராணுவப் பயிற்சிகள் தற்காலிகமாகக் கைவிடப்பட்டன. வன்னிக் காடுகளில் மாறிமாறி வெவ்வேறு வேலைத்திட்டங்களில் ஈடுபட்ட வீமனும் அவனது அணியும் மீண்டும் தமது சிறப்புப் பயிற்சிகளைத் தொடர்ந்தனர். பின்னர் வன்னியின் இறுதிப்போரில் வீரச்சாவடைந்த கேணல் வசந்தன் மாஸ்டரின் மேற்பார்வையில்தான் அப்போது வீமனும் அவனது அணியும் சிறப்புப் பயிற்சிகளைப் பெற்றனர். பல தற்காப்புக் கலைகள் உட்பட சிறப்புப் பயிற்சிகளைப் பெற்று அந்த அணி புடம்போடப்பட்டது. இந்நிலையில்தான் தலைவரின் மெய்ப்பாதுகாப்புப் பணியில் வீமன் இணைத்துக் கொள்ளப்பட்டான். வீமன் சிறந்த சமையலாளனாயும் விளங்கினான். வீமன் பல்வேறு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டான். எல்லாவற்றிலும் சிறப்பாகச் செயற்பட்ட காரணத்தால் வீமன் எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தான். பாலா அண்ணை வன்னிக்கு வருகை சந்தர்ப்பங்களில் வீமனே அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டான். அது யுத்தநிறுத்த காலப்பகுதியா அமைந்தபோதும் வீமனுக்கும் மற்றவர்களுக்கும் அது நிம்மதியான காலமன்று. அந்தக்காலப்பகுதியில் பாலா அண்ணையையும் தலைவரையும் தாக்குவதற்கென்று சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமையும் எதிரியின் நீண்டதூர ஊடுருவித்தாக்கும் அணிகள் வன்னிக்குள் நகர்ந்திருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. அந்நேரத்தில் புலிகளின் படையணிகள் முக்கிய சாலைகள் முழுதும் 24 மணிநேரமும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்ததை வன்னியில் வாழ்ந்த மக்கள் நன்கறிவர். அந்த இக்கட்டுக்குள்ளும் வீமனும் அவனது அணியும் தளராமல் பணியாற்றினார்கள். சரியான தூக்கமின்றி, உணவின்றி, ஓய்வின்றி தமது கடமையைச் செய்தார்கள். வீமன் மேல் கொண்ட நம்பிக்கையால்தான் தலைவர் வீமனை பாலா அண்ணையின் பாதுகாப்பாளனாக நியமித்தார். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்துகொண்ட வீமன் எல்லாளன் நடவடிக்கையில் இளங்கோவின் உதிவிப் பொறுப்பாளனாகத் தேர்வு செய்யப்பட்டான். கொடுத்த பணியைச் சிறப்பாக முடித்து ஏனையோரோடு லெப்.கேணல் வீமனும் கண்மூடினான். கரும்புலி லெப். கேணல் மதிவதனன் என்னேரமும் கலகலப்பாகவே இருப்பான். அவனது கலகலப்பும் துடியாட்டமும் எல்லோரிடமும் அவனை நெருக்கமாக வைத்திருந்தது. அடிப்படை இராணுவப் பயிற்சியின் பின்னர் வெவ்வேறு பணிகளைச் செய்து இறுதியில் வந்து சேர்ந்தது கனரக ஆயுதப் பயிற்சியாசிரியனாக. சில விமான எதிர்ப்புப் பீரங்கிகள், கடற்சண்டைக்கான ஆயுதங்கள் என்பவற்றுக்கான பயிற்சியாளனாக இவன் தேர்வானான். அப்போது இம்ரான்-பாண்டியன் படையணியின் ஓரங்கமாக இருந்த லெப்.கேணல் ராதா வான்காப்பு அணியில் பயிற்சிக்கெனச் சென்ற இவனின் திறமை இறுதியில் இவனைப் பயிற்சியாளனாக்கியது. பின்னர் வன்னியின் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் கருணாகரனின் வழிகாட்டலில் வளர்ந்த மதிவதனன் பின்னர் தனித்துப் பயிற்சியளிக்கும் நிலைக்குத் தன்னை வளர்த்துக் கொண்டான். கருணாகரன் வேறு கடமைக்கென பயிற்சிக் கல்லூரியிலிருந்து வெளியேறியபின்னர் மதிவதனனே அவ்விடத்தையும் நிரப்பினான். தனது ஆற்றலாலும் ஆளுமையாலும் போராளிகள் பலரைத் திறம்பட வளர்த்துவிட்டவன் மதிவதனன். பின்னர் கரும்புலிகள் அணியில் இணைந்து எல்லாளன் சிறப்பு நடவடிக்கைக்கான அணியிலும் இணைத்துக் கொள்ளப்பட்டான். தரப்பட்ட பணியைச் சிறப்பாக முடித்து ஏனையவர்களோடு தன்னையும் வெற்றிக்காக ஆகுதியாக்கிக் கொண்டான். கரும்புலி மேஜர் இளம்புலி இம்ரான் பாண்டியன் படையணியில் மருத்துவப் போராளியாய் தனது கடமையைச் செய்துகொண்டிருந்தவன். இவனும் நல்ல கலகலப்பாகவும் துடியாட்டமாகவுமே இருப்பான். அனேகமான பயிற்சி முகாம்களில் மருத்துவப் போராளியாகப் பணியாற்றியிருந்தான். சில போர்க்களங்களில் இவனின் பங்களிப்பு மற்றவரிடையே இவனைப் பிரபலப்படுத்தியது. இவனது நீண்டநாள் விரும்பத்தின்படி கரும்புலிகள் அணியில் இணையும் வாய்ப்புக் கிடைத்தது. பின்னர் எல்லாளன் நடவடிக்கைக்கான சிறப்பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டான். அந்நடவடிக்கையில் புலிக்கொடியோடு சென்று தான் நினைத்ததைச் சாதித்து வீரகாவியமானான். இவர்களோடு…, கரும்புலி மேஜர் சுபன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கொண்ட இராஜவதனி டி-8 உருத்திரபுரம் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கதிரவன் ஜீவகாந்தன், கரும்புலி மேஜர் காவலன் என்று அழைக்கப்படும் 4 ஆம் கட்டை பூநகரி, கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகம் சத்தியன், கரும்புலி மேஜர் எழில்இன்பன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், தாரணி உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட விமலநாதன் பிரபாகரன், கரும்புலி மேஜர் கனிக்கீதன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பைச் சேர்ந்த இராசன் கந்தசாமி, கரும்புலி கப்டன் தர்மினி என்று அழைக்கப்படும் கிளிநொச்சி 3 ஆம் வாய்க்கால் சுந்தரராஜ் வளர்ச்சித்திட்டத்தைச் சேர்ந்த கணேஸ் நிர்மலா, கரும்புலி கப்டன் புரட்சி என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், இல. 34 பரமேஸ்வரி உருத்திரபுரத்தை இடைக்கால முகவரியாகவும் கொண்ட செல்வராசா தனுசன், கரும்புலி கப்டன் கருவேந்தன் என்று அழைக்கப்படும் கிளிநொச்சி வட்டக்கச்சி எண் 6 ஹட்சன் வீதியைச் சேர்ந்த மயில்வாகனம் சதீஸ்குமார், கரும்புலி கப்டன் புகழ்மணி என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், இல. 19, 1 ஆம் வட்டாரம் முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட தர்மலிங்கம் புவனேஸ்வரன், கரும்புலி கப்டன் புலிமன்னன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், பாக்கியநாதன் எம்ஆர் ஓட்டுனர் சிவன் கோவிலடி நாச்சிக்குடாவை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணபதி நந்தகுமார், கரும்புலி கப்டன் அன்புக்கதிர் என்று அழைக்கப்படும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பெரியசாளம்பனை நிலையான முகவரியாகவும், ரா.இந்திரா அம்மன் கோவிலடியை கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட வில்சன் திலீப்குமார், கரும்புலி கப்டன் சுபேசன் என்று அழைக்கப்படும் மன்னாரை நிலையான முகவரியாகவும் ச.நாகேந்திரம் வட்டக்கச்சி சந்தையடி கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட நாகராசா மகாராஜ், கரும்புலி கப்டன் செந்தூரன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும் ஜெகன் உதயநகர் கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கணேசநாதன் தினேஸ், கரும்புலி கப்டன் பஞ்சீலன் என்று அழைக்கப்படும் மட்டக்களப்பை நிலையான முகவரியாகவும், நாகரத்தினம் கணுக்கேணி முள்ளியவளையை இடைக்கால முகவரியாகவும் கொண்ட சிவானந்தம் கஜேந்திரன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகக் கொண்ட கந்தையா கீதாஞ்சலி, கரும்புலி கப்டன் அறிவுமலர் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சேவியர் உதயா, கரும்புலி கப்டன் ஈழத்தேவன் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கராசா மோசிகரன், கரும்புலி லெப். அருண் என்று அழைக்கப்படும் யாழ்ப்பாணத்தை நிலையான முகவரியாகவும், கனகநாதன் கரியாலை நாகபடுவான் முழங்காவிலை இடைக்கால முகவரியாகவும் கொண்ட பத்மநாதன் திவாகரன் ஆகிய கரும்புலிகள் வீரச்சாவடைந்தனர். நீளும் நினைவுகளாகி…. தாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம். “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” https://thesakkatru.com/memorial-day-of-black-tigers-soldiers-who-died-in-the-operation-ellalan/
    1 point
  20. இவருக்கு பதவி ஒண்டும் குடுக்கேல்லையாம் அதாலை choonஆகி வெளியில வந்திட்டாராம். இந்த அழுகிப்போன மாம்பழங்கள் 5% கூட தேறாதுகள்! என்ன ரப்பர் முள்ளுகளை கடிச்சுக்கொண்டு திரியுற பட்டாசு கோஷ்டிக்கு நவம்பர் 14 வரை மல்டிபிள் ட்ரீட்ஸ் தான்😂
    1 point
  21. அரசியலில் நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. நலன்கள் மட்டுமே இருக்கின்றன என்று சும்மாவா சொன்னார்கள்? 🤣
    1 point
  22. (நெவில் அன்தனி) அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு மற்றும் மத்திய மாகாண பாடசாலைகள் பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளன. கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மெய்வல்லுநர் போட்டிகள் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்றுவருகின்றது. 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் மன்னார், தோட்டவெளி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வீராங்கனை ஏ. யதுர்ஷிகா 37.39 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் மாவட்ட பாடசாலைகள் சார்பாக வீராங்கனை ஒருவர் பதக்கம் வென்றது இதுவே முதல் தடவையாகும். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 2.90 மீற்றர் உயரம் தாவிய அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை எஸ். நிருஷிக்கா தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். அவரது சக பாடசாலை வீராங்கனை எஸ். டிலக்ஷிகா (2.70 மீ.) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் 4.30 உயரத்தைப் பாய்ந்த தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி வீரர் எஸ். துஷாந்தன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதேவேளை, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி வீரர் எஸ். ஜே. சஞ்சீவன் (7.13 மீ.), 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் எஸ். கஜனன் (4.00 மீ.), 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பளை மத்திய கல்லூரி வீரர் கே. தனாதீபன் (46.71 மீ.) ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி வீராங்கனை வீ. சங்கீதா (32.31 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர். இது இவ்வாறிருக்க மத்திய மாகாணத்தின் மாத்தளை இந்து தேசிய பாடாசாலை வீரர் எஸ். துதிஹர்ஷிதன் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 4:06.11 நிமிடங்களில் நிறைவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/196733
    1 point
  23. இலங்கையின் புதிய கடவுச் சீட்டின் 6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் படம் உள்ளது. இலங்கையில் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கடவுச்சீட்டு தொடர்பான சில தகவல்கள். இலங்கையில் 21.10.2024 இல் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கடவுச்சீட்டுக்களின் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இராஜதந்திர கடவுச்சீட்டு, உத்தியோகபூர்வ கடவுச்சீட்டு மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்கள் மூன்று வெவ்வேறு வர்ணங்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் சாதாரண கடவுச்சீட்டு கருமைநிறம் புலப்படக்கூடிய வகையில் கருநீல நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டில் கீழ்வரும் அம்சங்கள் பாதுகாப்பு அம்சங்களுடன் புறவூதாக் கதிர்களில் ஒளிரக்கூடியவகையில் அச்சிடப்பட்டுள்ளன. 4-5 ம் பக்கத்தில் தலதாமாளிகை 6-7 ம் பக்கத்தில் நல்லூர் கந்தசுவாமி கோவில் 8 ம் பக்கத்தில் கொழும்பு புனித லூசியா தேவாலயம் 9 ம் பக்கத்தில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் 10-11 ம் பக்கத்தில் அம்பாறை சேனாநாயக்க சமுத்திரம் 12-13 ம் பக்கத்தில் அனுரதபுர ரூவன்வெலிசாய மகா விகாரை 14-15 ம் பக்கத்தில் பதுளை ஒன்பது வில் பாலம் 16-17 ம் பக்கத்தில் மட்டக்களப்பு வாவி 18-19 ம் பக்கத்தில் கொழும்பு தாமரைக் கோபுரம் 20-21 ம் பக்கத்தில் காலி கோட்டை 22-23 ம் பக்கத்தில் கம்பகா இறப்பர் தோட்டம் 24-25 ம் பக்கத்தில் ஹம்பாந்தோட்டை உப்பளம் 26-27 ம் பக்கத்தில் களுத்துறை STILT மீனவர்கள் 28 ம் பக்கத்தில் பின்னவல யானைகள் சரணாலயம் 29 ம் பக்கத்தில் கிளிநொச்சி அடையாளமாக இலங்கை சாம்பல் இருவாச்சி பறவை 30 ம் பக்கத்தில் குருநாகல் யாப்பகூவா குன்றுகள் 31 ம் பக்கத்தில் தலைமன்னார் படகுத்துறை 32-33 ம் பக்கத்தில் சிகிரியா குன்று 34 ம் பக்கத்தில் மாத்தறை வெளிச்சவீடு 35 ம் பக்கத்தில் யால தேசிய பூங்கா 36 ம் பக்கத்தில் முல்லைத்தீவு கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் 37 ம் பக்கத்தில் நுவரெலியா தேயிலை தோட்டம் 38-39 ம் பக்கத்தில் பொலநறுவை பழமை நகரம் 40-41 ம் பக்கத்தில் புத்தளம் டொல்பின் காட்சிக்காணல் 42-43 ம் பக்கத்தில் சிவனொளிபாதமலை 44 ம் பக்கத்தில் திருகோணமலை புறாத்தீவு 45 ம் பக்கத்தில் வவுனியா அரிசி அறுவடை என்பன அச்சிடப்பட்டுள்ளன. AB Amam
    1 point
  24. சிங்கம் பெரிதாகிக் கொண்டு வர, எழுத்துக்கள் சிறிதாகி.. தமிழ்... மூன்றாம் இடத்திற்கு போய் விட்டது ஈழப்பிரியன். கடன் கொடுக்கும் உலக வங்கியை பந்தம் பிடிக்க, ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்கள். 😂
    1 point
  25. இலங்கைக்கு வந்துள்ள புதிய கடவுச் சீட்டு.
    1 point
  26. 1) மேற்கைப் பகைக்க வேண்டிய தேவை இலங்கைக்கு இல்லை. சிங்களத்திற்கு இந்தியா மட்டும்தான் எதிரி. அது இந்தியாவிற்கெதிராக மேற்குலகுடனும் சேர்ந்துகொள்ளும் அல்லது சீனாவுடனோ/ பாகிஸ்தானுடனோ சேரும். 2) சிங்களத்திற்கு இருக்கும் ஒரே கொள்கை இந்தியாவின் ஹிந்துத்துவாவிலிருந்து சிங்களத்தையும் , தேரவாத பெளத்த சமயத்தைப் பாதுகாத்துக் கொள்வதுதான். ஏனென்றால் உலகில் சிங்களமும் தேரவாத பெளத்த சமயமும் உள்ள ஒரே இடம் இலங்கை மட்டுமே. சிங்களவர்கள் உயிரைக் கொடுத்து அதனைப் பாதுகாப்பார்கள். எனவே, வலதுசாரி இடதுசாரி என்கிற எதுவுமே சிங்களத்திற் ஒரு பொருட்டல்ல. அது தன்னைப் பாதுகாக்க யாருடனும் கூட்டுச் சேரும். 3) ******இலங்கையை ஒரு சிங்கப்பூர் ஆக அல்லது தாய்வானாக மேற்குலகால் மாற்றப்படுமானால் எமக்கு அங்கே ஒரு நிரந்தரமான பிடி இருக்க வேண்டும். ******** 4)) அதற்கு எமது நிலம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு எமது குடிப்பரம்பல் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு எமது மக்கள் பொருளாதார ரீதியில் பலம் மிக்கவர்களாக இருக்க வேண்டும். (தமிழ்நாடு எமது தந்தை நிலம் என்று நாம் கூறும்வரை சிங்களம் எம்மை எதிரியாகவே நோக்கும்.)
    1 point
  27. இலங்கை தேர்தல் பற்றி நம்பிக்கையான கருத்துக்கணிப்புகள் இல்லை. எனவே இந்தப் போட்டியில் ஊகித்துத்தான் பதில்களை போடவுள்ளேன். 😁
    1 point
  28. நம்பிக்கைத்துரோகிகளால் ஏற்பட்ட மனஉளைச்சல். விக்கியரை விரட்ட மாவையரை கொம்பு சீவினர், பின்னர் மாவையருக்கே குழி பறித்தார். பாவம் மாவையர், ஒரு வாயில்லாப்பூச்சி. சுமந்திரனை கட்சிக்குள் சேர்த்தவர் இவர்தான் என்று சொல்லிக்கொள்கிறார்கள். சம்பந்தர் இருந்தபோது அவர்மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். அவர் சொல்வதை தலைமேல் தாங்கினார். எதிர்த்து கதைத்தது கிடையாது. அவரை கதைக்க சம்பந்தர் விட்டதுமில்லை. தட்டி அடக்கியே வைத்திருந்தார். அதையே நேற்று வந்த சுமந்திரனும் கடைப்பிடித்தார். சுமந்திரனை எதிர்த்தால், கட்சியை நடுவீதிக்கு கொண்டு வந்து விடுவார் என்பதால் அமைதியாக இருந்தார். அதை தெரிந்துகொண்ட சுமந்திரன் அதையே தனது ஆயுதமாக பயன்படுத்தி தனது திட்டங்களை நிறைவேற்றத்தொடங்கினார். எது நடந்துவிடக்கூடாது என பயந்து மாவையர் அமைதி காத்தாரோ அதுவே நடந்தது. இப்போதும் கட்சியை பாதுகாப்பதற்காக மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்தவரை வைத்தியசாலையில் கொண்டுபோய் விட்டிருக்கிறது. தன் வாழ்நாள் முழுவதையும் வீட்டுக்காக செலவழித்தவர்.
    1 point
  29. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதிலும் காட்டிலும் யாருக்கு வாக்களிக்க கூடாது என்பதில் தெளிவாய் இருங்கள்...
    1 point
  30. நன்றி உண்மையாக இலங்கை நிலவரம் எனக்கு தெரியாது, இந்த போட்டியில் இறுதியாகத்தான் வருவேன் என தெரியும் ஒரு சுவாரசியத்திற்காக கலந்து கொண்டுள்ளேன், சும்மா ஒரு குத்து மதிப்பாக போட்டுள்ளேன் அவ்வளவுதான். உண்மையில் எனக்கு இலங்கை நிலவரம் தெரியாது, சும்மா விளையாட்டாக கலந்துள்ளேன், நிச்சயமக இந்த போட்டியில் இறுதியாக வருவேன் என தெரியும் இதன் மூலம் சில கள உறவுகளுக்கு உள ரீதியான ஒத்தடம் கொடுக்க விரும்புகிறேன். 😁
    1 point
  31. நான் போட்டியில் 13 ஆம் திகதி கலந்து கொள்கிறேன்....தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணம் செல்ல வேண்டியிருக்கு அங்கு சென்று களநிலவரங்களை ஆராய்ந்து பதில் போடுகிறேன்😅
    1 point
  32. தமிழர்களுக்கு பிரச்சணை இருக்கு என சொல்லவே பயப்படுகிறார்கள்.....இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் உள்ள இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தமான விடயமாக இருக்கலாம்...அந்த ஒப்பந்ததை நன்றாக புரிந்து கொண்டவர்கள் ஜெ,வி,பி யினர் ....ஈழத்தமிழரை வைத்து இந்தியா தனக்கு தேவையானதை எழுதி எடுத்து விட்டது....அதனால் தான் தமிழருக்கு பிரச்சனை இல்லை என சொல்லி அந்த ஒப்பந்ததை ரத்து செய்ய முயல்கின்றனர் .... அந்த ஒப்பந்தத்தை இல்லாமல் பண்ண அமெரிக்கா மற்றும் மேற்குலக‌ நாடுகளும் அனுரா அரசை ஊக்கிவிக்கலாம்...சீனா இந்த விடயத்தில் அலட்டிக் கொள்ளாது,,,, ஜெ.வி.யினருக்கு இந்த விகிதாசார முறை பெரும்பான்மையை பெற உதவலாம்
    1 point
  33. யேர்மனியில் இப்படியான செயல்களுக்கு அனுமதி இல்லை.
    1 point
  34. அதெல்லாம் வராது எப்படி பார் பெர்மிட் லிஸ்ட் நெருப்பு காணாமல் போனதோ அது போல் இந்த கூத்தும் காணாமல் போகும் இதெல்லாம் வழக்கமான அரசியல் நாடகங்ககள் .
    1 point
  35. தனியாக விருப்பு வாக்குகளை அளித்து தூய்மையான அரசியல் செய்யும் முறைமை ( தொகுதி ரீதியான ) ஒழிக்கப்பட்டு பல ஆண்டுகள் சென்றுவிட்டன . இப்போது விருப்பு வாக்குக்களை களவாடும் அரசியல்வாதிகளுக்கு சார்பான விகிதாசார முறைமை ....ஆகவே நீங்கள் அளிக்கும் விருப்பு வாக்குக்கள் அனைத்தும் ஊழலையும் லஞ்சத்தையும் தொழிலாகக் கொண்ட அரசியல்வாதிக்கே கிடைக்கும் அல்லது அவர்கள் அதனைத் தங்களுக்கானதாக அபகரித்துக் கொள்வார்கள். அதற்காகவே புதியவர்கள் என்ற பெயரில் அவர்களது பினாமிகளைப் பல கடசிகளும் குழுக்களும் தேர்தலில் வேட்பாளர்களாகத் தெரிவு செய்துள்ளார்கள் . தொகுதி ரீதியிலான தேர்தல்முறையில் ஊழல்வாதிகளை அடுத்த தேர்தலிலேயே அடித்து விரட்டி விடலாம் .
    1 point
  36. ஊள்ளுராட்சி மன்றங்கள்,பிரதேச சபை ,மாநகரசபை போன்றவை மக்களின் அன்றாட பிரச்ச்னையைகளை தீர்க்க முடியும் அரச அதிகாரிகள் ஒழுங்காக செயல் பட்டால்,அவர்கள் (அரச அதிகாரிகள்) தான் 30/40 வருடங்கள் சேவையில் இருப்பவர்கள். மேலும் மாகாணசபைகள் ஒழுங்காக இயங்கினால் மக்களின் அன்றாட பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசுக்கு சுமைகள் குறைவாக இருக்கும்... பாராளுமன்றம் மன்றம் மக்களின் உரிமைகளை சொல்ல உதவ வேண்டும் ...நீண்ட நாட்களாக தமிழ் மக்களின் குரலாக இந்த பா.உ சொல்வதை கணக்கில் எடுக்காமல் சிறிலங்கா பாராளுமன்றம் செயல் ப்டுகிறது ...ஜனநாயகம் மரபு என்றால் இதை செவி மடுத்து ஆக்க பூர்வமான செயல்களில் இடுபட வேண்டும்
    1 point
  37. என்னதான் குத்தி முறிங்சாலும் தமிழ்த்தேசியக் 4ட்டமைப்பை உடைத்து தமிழரசுக்கட்சியையும் உடைத்து விட்ட சுமத்திரனுக்கு சொம்பு தூக்க நாலுபேர் இருக்கினம் .இந்தத் தேர்தல் அவர்களுக்கு நல்ல பதில் சொல்லும். பார்சிறியை கையோடை வைச்சிருக்கிறது க்கும் காரணம் இருக்கு.
    1 point
  38. இந்த போரில் கிள்ளி பார்த்தாலும் ஆச்சரியம் தீராதது இஸ்ரேலின் உளவுதுறைதான். எப்படி இவர்களால் இதெல்லாம் முடியுது என்பது பிரமிக்கவைப்பது. கமாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையை அழிப்போம் என்று அறிவித்தார்கள் சொல்லி ஒரு சிலமாதங்களிலேயே ஒட்டுமொத்தமாக காலி பண்ணுகிறார்கள், ஏனையவர்களுக்கு இதெல்லாம் பாகிஸ்தான் பார்டருக்கு போய் தீவிரவாதிகளை அழித்து அதன் தலைவரை தமிழ்நாட்டுக்கு பிடித்துவரும் விஜயகாந்த் படங்களில் மட்டுமே சாத்தியம் ஆனானப்பட்ட அமெரிக்காவே உலகமெங்கும் அவர்களின் படைகளை கொண்டு கடைவிரித்தும், தன்னால் தேடப்படுகிறவர்களாக அறிவித்தவர்களை பல வருடங்களின் பின்னரே வேட்டையாட முடிகிறது, அதிலும் அமெரிக்காவால் தேடி களைத்துபோன ஒருசிலரை இஸ்ரேலே இந்தபோரில் தேடி போட்டு தள்ளியிருக்கிறது. இத்தனைக்கும் அவர்களெல்லாம் நிலத்தடியிலும் பாதுகாப்பான நாடுகளிலும் அடிக்கடி இடத்தை மாற்றி, தொடர்பாடல் முறையை மாற்றி பதுங்கியிருந்தவர்கள், இஸ்ரேலின் இந்த சாகசங்களுக்கு அவர்களின் ஏஐ தொழில்நுட்பம் பாதி காரணமென்றாலும் மீதிகாரணம் இஸ்ரேலுக்கு உளவுதகவல் சொல்லி கூட இருந்து குழி பறிக்கும் அங்குள்ள முஸ்லீம்களே. தொழில்நுட்பம் முகங்களை குரல்களைதான் தேடி கண்டு பிடிக்கும், இந்த கட்டிடத்துக்கு இத்தனை மணிக்கு ஒன்றுகூட வருகிறார்கள் என்றெல்லாமா சொல்லும்?
    1 point
  39. இவ‌ர்க‌ள் இழ‌க்க‌ கூடாத‌ ப‌ல‌ உயிர்க‌ளை ஒரு வ‌ருட‌த்துக்குள்ளையே இழ‌ந்து விட்டின‌ம்.....................மொசாட் மிக‌வும் ஆவ‌த்தான‌வ‌ர்க‌ள் என்பதை இவ‌ர்க‌ள் எப்ப‌ உண‌ர‌ போகின‌மோ தெரிய‌ல‌......................
    1 point
  40. இது உண்மைதான், ஆனால் இந்த கொடுமை எவ்வளவு காலமாக இந்த மக்கள் உலகின் கண் முன்னால் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள், எமது போராட்டம் முடிவுக்கு வந்த காலத்தில் நிலவிய உலக ஒழுங்கு தற்போது இல்லை என்றே சொல்லலாம் அதனால் இப்படியான ஒரு நிலை நிலவுகிறது இதுவே அப்படியான ஒரு கால கட்டமாக இருந்தால் இஸ்ரேல் மிக மோசமான முறையில் அடக்கி இருப்பார்கள் அது போல இவ்வலவு காலம் இந்த மோதல் நீடித்திருக்காது, அத்துடன் இவ்வாறான தாக்குதலில் கமாஸ் இறங்கியிருக்காது. வல்லரசுகளின் போட்டியில் (நான் கருதுகிறேன் இரஸ்சியா இதற்Kஉ பின்னால் இருக்கலாம்) சிங்குண்டு மீண்டும் இந்த மக்கள் பேரழிவிற்குள் தள்ளப்பட்டுள்ளார்கள். Rule base world order மூலம் அமெரிக்கா நீதியற்ற முறையில் இந்த மக்களை ஒரு தலைமுறயாக அழித்துவருகிறார்கள், இதனை கண்ணிருந்த குருடர்களாக சிலரும், வேறு சிலர் அதனை நியாப்படுத்தி இந்த கொலைகளில் தார்மீக பங்கினை ஏற்பவர்களாகவும் மனிதர்கள் என்ற பெயரில் திரிகிறார்கள். ஆனால் இன்னும் உடையாமல் நிமிர்ந்து நிற்கும் இந்த ஓர்மம் எங்கிருந்து இவர்களுக்கு கிடைக்கிறது (என்னை பொறுத்தவரை உலகம் இவர்கள் அழிவதை பற்றி கவலைப்படாது, இப்படி அழிவதனை விட வேறு ஏதாவது முறையில் சிந்திக்கலாம், ஆயுதங்களை மெளனிப்பது கூட புத்திசாலித்தனம்தான் அவர்களுக்கான காலம் வராமலா போய்விடும்?).
    1 point
  41. இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர் இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர் அக்டோபர் 22, 2020/தேசக்காற்று/கரும்புலிகள் காவியங்கள், சமர்க்களங்கள்/0 கருத்து எல்லாளன் நடவடிக்கை: இதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர். 22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி aவீரர்களைத் தனக்கு அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்தினான். “எங்களிடம் இருக்கிற ஆயுதமெல்லாம் எதிரியின்ர இலக்குகளை அழிக்கிற ஆயுதங்கள். நாங்கள் வடிவா நிதானமா சண்டை பிடிப்பம். நாங்கள் இப்ப உள்ளுக்க போறம். சண்டை பிடிக்கிறம். எதிரியின்ர விமானங்களை உடைக்கிறம். விடுதலைப் புலிகளெண்டா ஆரெண்டுறதை சிங்களப் படையளுக்குக் காட்டுவோம்….” இளங்கோவின் குரல் உறுதியாய் ஒலித்தது. “வீமண்ணை என்ன எதிர்ப்பு வந்தாலும் நீங்கள் எம்.ஐ.24 நிக்கிற இடத்துக்கு வேகமாய்ப் போங்கோ. ஹெலி ஒண்டையும் எழும்ப விடாம அடிச்சு நொருக்குவம். அப்ப நாங்கள் வெளிக்கிடுவம்.” இளங்கோவின் அனுமதி கிடைத்ததும் எல்லோரும் தங்கள் ஆயுதங்களை இயங்கு நிலைக்கு தயார் படுத்தியபடி உற்சாகமாக நகர தொடங்கினார்கள். இந்த நாளுக்காக அவர்கள் எத்தனை வருடங்கள் காத்திருந்தார்கள். எத்தனை கடின பயிற்சிகளுக்குள் மூழ்கியிருந்தார்கள். எல்லாமே இந்த நாளுக்காகத்தான். சின்னப் பிசகென்றாலும் எல்லாமுமே தலைகீழாக மாறிவிடும். அதனால் பயிற்சி கடுமையாக இருந்தது. யாரும் அசைந்து கொடுக்கவில்லை. பயிற்சிகளால் உடல் களைப்படையும். ஆனால் அவர்கள் சோர்ந்ததேயில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் இலக்கு பற்றியதாகவே இருந்தது. பயிற்சித் தளத்தில் பயிற்சி ஆசிரியரின் சொல்லை அவர்கள் என்றுமே தட்டிக் கழித்ததில்லை. பயிற்சி சிறிது கடுமையாக இருந்தால் தங்குமிடத்தில் ஆசிரியரை அன்பாகக் கிண்டலடிப்பார்கள். அங்கு சிரிப்பொலிகள் எழும். கைகள் ஆயுதங்களைத் துப்பரவு செய்து கொண்டிருக்கும். இப்படி கழிந்தன அந்த நாட்கள். அமைதியான அந்த இரவில் வண்டுகளின் ரீங்கார ஒலிகளும், சில பறவைகளின் இடைவிட்ட ஓசைகளும் அந்த விமானத் தளத்தைச் சூழ கேட்டுக் கொண்டிருந்தன. இந்த அமைதியைக் குலைக்காதவாறு அவர்கள் அந்தப் படைத்தளத்தின் தடைவேலியை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கரும்புலி வீரனும் தான் தாக்குதல் நடாத்தும் விதத்தை மனதில் ஒத்திகை பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது தலைவர் அவர்கள் இறுதியாகச் சொல்லிவிட்ட வரிகள் ஞாபகத்திற்கு வந்தன. “நீங்கள் 21 பேரும் போறியள். நிச்சயம் நிறையச் சாதிப்பீங்கள். எங்களாலையும் செய்யமுடியும் எண்டதை உலகத்துக்கு நாங்கள் காட்டுவோம். உங்கட பேரை நாங்கள் சொல்லத் தேவையில்லை. இந்த உலகம் கட்டாயம் உங்கட பேரை உச்சரிக்கும்.” தலைவரின் உணர்வை அவர்கள் நன்கு புரிந்தவர்கள். தலைவருடன் கூடவிருந்து வாழ்ந்தவர்கள். அவரின் ஒவ்வொரு அசைவினதும் அர்த்தத்தையும் தெளிவாக புரிந்து வைத்திருந்த அந்த வீரர்கள் தலைவரைப் பார்த்து தாங்கள் சாதிப்போம் என்ற உறுதிமொழியை முகத்தில் பூத்த புன்னகைமூலம் காட்டினார்கள். அந்த இடத்தில் “அண்ணை தேசிய கொடியைக் கொண்டு போகட்டுமா?” என இளம்புலி கேட்டான். “நீங்கள் கொண்டுபோகலாம். அதுக்குத் தடையில்லை. ஏனெண்டா இது முற்று முழுதான இராணுவத் தளம். நீங்கள் உங்கட உச்ச வீரத்தை காட்டுங்கோ. ஆனால் ஆரும் அதிகாரியளின்ர பிள்ளையள் சிலநேரம் அங்க நிக்கக்கூடும். தாக்குதல் நடத்தேக்குள்ள அவைய பத்திரமா அகற்றி அவையளுக்கு ஒன்றும் நடக்காம பார்த்துக்கொள்ளுங்கோ.” தலைவரின் கவனம் அவர்களுக்குப் புரிந்தது. உண்மையில் சிங்களப் படைகளைப் போல் பிணந்தின்னிக் கழுகுகளாக அவர்கள் செல்லவில்லை. அவர்களின் ஓரே மூச்சு, சுதந்திரமான தேசம் தான். அதற்காகத்தான் இவர்கள் வெடிசுமந்து போனார்கள். இந்தக் கரும்புலி அணிக்குள் மூன்று பெண் கரும்புலிகளும் இருந்தார்கள். அவர்களில் அறிவுமலர் என்ற பெண் கரும்புலி மிகவும் இரக்க சுபாவமுடையவள். பயிற்சி நாட்களில் இவளின் தங்ககத்தில் ஒருநாள் தலைக்கு அணியும் சீருடை தொப்பிக்குள் எலிக்குஞ்சுகள் கீச்சிட்டுக்கொண்டிருந்தன. எலிக்குஞ்சுகளை இவர்கள் கண்டு விட்டதால் அச்சமடைந்த தாயெலி அங்குமிங்கும் ஒடியபடியிருந்தது. கூட இருந்தவர்கள் அதை வெளியில் விடுவோமென ஆலோசனை சொன்னார்கள். ஆனால் அவள் மறுத்துவிட்டாள். அதை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டாள். தாயெலி அதை ஒவ்வொன்றாக வாயில் கவ்வி இன்னொரிடத்திற்கு கொண்டு சென்றது. கடைசி எலிக்குஞ்சை தாயெலி காவிச் செல்லும்வரை அவள் காவலிருந்தாள். இத்தனை மென்மையான உள்ளங்களிலிருந்து எதிரிகளை அழிக்க வேண்டுமென மனவலிமை பிறக்கின்ற தென்றால் சிங்களதேசம் எத்தகைய கொடுமைகளை எங்கள் மீது புரிந்திருக்கிறது. நேரம் விடிகாலை 3.00 மணி அமைதியாயிருந்த அந்த தளத்தில் தங்களுக்கு சாதகமான இடத்தில் தடையை அகற்றுவதற்காக தடைவேலியை கரும்புலிகள் அணி நெருங்குகின்றது. கரும்புலி வீரர்கள் சிலர் தங்கள் சீருடையிலிருந்த பைகளைத் தட்டிப் பார்க்கின்றார்கள். இவர்கள் வன்னித் தளத்திலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நடவடிக்கைகான தளபதியை அவசர அவசரமா அழைத்த தலைவர் “பெடியள் வெளிக்கிட்டிட்டாங்களா?” என்று கேட்டார். “இல்லையண்ணை. இனித்தான்…” “அப்பிடியெண்டா அவங்களிட்டச் சொல்லுங்கோ கடைசியா முகாமுக்குள்ள இயங்கேக்கையும் பொக்கற்றில சொக்கிலேற்றுகளைக் கொண்டுபோகச் சொல்லுங்கோ. இவங்கள் கடைசி நேரம் விட்டிட்டுப் போடுவாங்கள். பிறகு நீண்டநேரம் சண்டை பிடிச்சா களைச்சிடுவாங்கள். ஆனபடியா மறக்காம கொண்டுபோகச் சொல்லுங்கோ.” அந்த வீரர்கள் புறப்பட்ட கணம் முதல் தலைவர் அந்த வீரர்கள் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். பெரும் இலட்சிய நெருப்பைச் சுமந்து செல்லும் அந்த வீரர்கள் உச்சமான சாதனை புரிந்துதான் இந்த மண்ணில் வரலாறாக வேண்டுமென அவர் துடித்துக் கொண்டிருந்தார். அதை நன்கு புரிந்து வீரர்கள் இங்கே சாதிக்கும் கணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். அநுராதபுர வான்படைத் தளத்தைச் சூழ கோயில் திருவிழாபோல் வெளிச்சம் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த வெளிச்சத்தில் மிகவும் அமைதியாக எழிலின்பனும் பஞ்சீலனும் தடையை நெருங்குகின்றார்கள். வேகமாக தங்களிடமிருந்த கம்பி வெட்டும் கருவியால் தடையை வெட்டத் தொடங்குகின்றார்கள். அவர்களிலிருந்து 15 மீற்றரில் இளங்கோ நிலையெடுத்திருந்து அணிக்கான கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான். அன்புக்கதிரும் புரட்சியும் தடை அகற்றும் பகுதிக்கு அண்மையாக இருந்த காப்பரணை நோக்கி தங்கள் இரவுப் பார்வைச் சாதனம் பொருத்தப்பட்ட ஆயுதத்தால் குறிபார்த்தபடியிருந்தார்கள் அவர்களின் குறிக்காட்டிக்குள்ளால் அந்த காவலரணில் இருந்த விமானப்படைச் சிப்பாயின் முகம் தெரிந்தது. ஆனால் அவன் இவர்களைப் பார்க்க மனமில்லாதவன் போல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்குத் தெரியாமல் இங்கே அதிவேகமாய் தடை வெட்டப்பட்டுக் கொண்டிருந்தது. வான்படைத்தளத்தின் பாதுகாப்புக் கருதி எதிரி அதிக தடைகளை ஏற்படுத்தி இருந்தான். கம்பிவலை வேலி, பட்டுக்கம்பி வேலி, முட்சுருள், கண்ணிவெடிகள் என ஏராளமான தடைகள். தாங்கள் தளத்தில் பயிற்சி செய்தபடி, பயிற்சியை விடவும் வேகமாக தடையை அகற்றிக்கொண்டிருந்தார்கள். தடையில் மின் பாய்ச்சல் இருக்கின்றதா இல்லையா என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்கள். குறுகிய நேரத்தில் தடை அகற்றப்படுகின்றது. தடை அகற்றப்பட்டதற்கான சைகையை இளங்கோவிற்கு வழங்க திறக்கப்பட்ட பாதைக்குள்ளால் அணிகள் வேகமாக உள்நுழைகின்றன. இப்போது அவர்கள் சாதிப்பது உறுதியாகிற்று. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சிப் பிரகாசம். தங்கள் நீண்ட கனவு நிறைவேறப் போவதற்கான ஆனந்தச் பூரிப்பு. இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கின்றான். “நாங்கள் இறங்கப்போறம். இப்ப தொடர்பிருக்காது. விமானத்தளத்தின்ர மையத்துக்குப்போன பிறகுதான் தொடர்பெடுப்பன்.” இளங்கோ நிலைமையைச் சொல்லி விட்டு அணியுடன் உள்நுழைகின்றான். நடப்பதை சற்றும்புரியாத விமானப் படைத்தளம் அமைதியாகவே கிடந்தது. அன்று இரவு பயிற்சி விமானமும், பீச்கிறாவ்ற்றும் வந்து இறங்கியதாக மிகுந்த மகிழ்ச்சியோடு கட்டளைப் பீடத்திற்கு தெரியப்படுத்தினார்கள். நடக்கப்போவதை அறியாத அந்த விமானம் எரிபொருள் தாங்கி முழுவதும் எரிபொருள் நிரப்பியபடி பற்றி எரிவதற்குத் தயாராயிருந்தது. உள்நுழைந்த அணி அங்கிருந்த கிறவல் மண்புட்டியை தாண்டும் போதுதான் காவலில் இருந்த சிப்பாய் முகாமில் மனித உருவங்களைப் பார்த்துத் திகைத்து நின்றான். பயப்பீதியால் “டோ… டோ…” என்று அவன் கத்தத் தொடங்கினான். சுமார் இரண்டு நிமிடங்கள் வரை எதிரிச்சிப்பாய் கத்தித் தொலைத்தான். அத்தோடு அங்கு நிலவிய நிசப்தத்திற்கு முற்றுப்புள்ளி கிடைக்கிறது. சுபேசனின் ‘லோ’ முழங்கியது. காவலரணில் பட்டு பெருமோசையோடு அது வெடித்துச் சிதறியது. கரும்புலிகளின் வீரசாகசம் சிங்களத்தின் கோட்டையான அநுராதபுரத்துக்குள் தொடங்கியது. எதிரி நிலைகளைத் தகர்த்தபடி வேகமாக அணிகள் உள்நுழைகின்றன. இளங்கோ வேகமான முறையில் கட்டளைகளைப் பிறப்பிக்க கரும்புலி வீரர்கள் தங்கள் இலக்குகளை நோக்கி தங்கள் உடலில் சுமந்த நவீனகரமான வெடிபொருட்களோடும் ஆயுதங்களோடும் ஓடிக் கொண்டிருந்தார்கள். சமநேரத்தில் வன்னியில் விடுதலைப் புலிகளின் வான்படைத்தளத்தில் அச்சமென்றால் எதுவென்று தெரியாது, எப்போதும் எதற்கும் துணிந்த வானோடிகள் தங்கள் இலகுரக விமானத்திலேறி அநுராதபுர வான்படைத்தளத்தை நோக்கி விரைந்தார்கள். வீமன் தனது அணியை அழைத்துக் கொண்டு எம்.ஐ.24ரக உலங்கு வானுர்தி தரிப்பிடம் நோக்கி முன்னேறினான். இளங்கோ மற்றைய அணியை அழைத்துக்கொண்டு பிரதான விமானத்தரிப்பு கொட்டகையை நோக்கி ஓடினான். இளங்கோ தானும் சண்டையிட்டபடி அணியையும் வழிநடத்தினான். எந்தவித பதட்டமுமில்லாமல் மிகவும் தெளிவான முறையில் இளங்கோவின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. சண்டையென்றால் சோளம் பொரி சுவைப்பதுபோன்ற உணர்வவனிற்கு. பதட்டமென்றால் என்னவென்று இளங்கோ புத்தகத்தில்த்தான் படித்தறிய வேண்டும். அனுபவத்தில் அதைப்பற்றி அவனுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. எத்தனை சண்டைக் களங்களில் எதிரியைப் பந்தாடியவன். வன்னியில் நடந்த புகழ்பெற்ற சமர்களிலெல்லாம் அவனின் துப்பாக்கி முழங்கியிருக்கின்றது. ஓயாத அலைகள் – 3 நடவடிக்கையில் ஜெயசிக்குறுப் படையை விரட்டியடித்த பெருஞ் சமரில் ஒட்டுசுட்டானிலிருந்த கட்டைக்காட்டுப் பாலத்தை சிங்களப் படைகளிடமிருந்து மீட்பதற்காக எதிரிப்படை மீது அதிரடியாய்ப் புகுந்து எதிரிகளை மண்ணில் புரளவைத்து கட்டைக்காட்டுப் பாலத்தை எல்லோரும் வியக்கும்படி கைப்பற்றியவன் இந்த இளங்கோ. இத்தாவில் சமர்க்களத்தில் பெண் போராளிகளின் நிலைகளை ஊடறுத்து உள் நுழைந்த கவசப்படை கவசவண்டிகள் மீது துணிகர தாக்குதலை மேற்கொண்டு ஒரு பவள் கவசவாகனத்தை மடக்கிப் பிடித்து அதிலிருந்த எதிரிமீது தாக்குதலைத் தொடுத்து மின்னல் வேகத்தில் அந்த பவள் கவச வாகனத்தில் பாய்ந்து ஏறி அதில் பூட்டப்பட்டிருந்த 50 கலிபர் துப்பாக்கியைக் கைப்பற்றி அதிலிருந்தபடியே எதிரியைத் தாக்கி பெரும் சாகசம் நிகழ்த்திய இளங்கோ இந்தக் களத்திலா அசைந்து கொடுப்பான்? அநுராதபுர படைத்தளம் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அதிர்ந்துகொண்டிருந்தது. பெரும் இறுமாப்போடு நீண்ட தடைகளையும் மண் அணைகளையும் காவல்நிலைகளையும் அமைத்து விட்டு ‘முடிந்தால் புலிகள் புகுந்து பார்க்கட்டும்’ என்று நினைத்திருந்த எதிரிகளுக்கு ‘முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும்’ என்ற சவாலோடு கரும்புலிகள் விமானங்களை நோக்கி ஓடினார்கள். இந்த விமானங்கள் மீது எத்தனை கோபம் அவர்களுக்கிருந்தது. எங்கள் தாய் நிலத்தில் எங்கள் பிஞ்சுக் குழந்தைகள் தசைத் துண்டுகளாய் சிதறவும், எங்கள் தாய்க்குலம் ஓவென்று கதறி அழுவதற்கும் தினம் தினம் சாவின் வாடையே எங்கள் தாய் நிலத்தின் வாசல்களில் வீசுவதற்கும் கொடிய எதிரிக்கு உதவுவது இந்த விமானங்கள் தானே. இந்த விமானங்களை அழிப்பதால் சிதையப்போவது விமானங்கள் மட்டுமல்ல, சிங்கள அரசினதும் அதன் படையினதும் ஆக்கிரமிப்பு ஆசை நிறைந்த போர்வெறிக் கனவுந்தான். சண்டை தொடங்கி கொஞ்ச நேரத்திற்குள் விமானத்தளத்தில் நின்ற விமானங்கள் பெருமோசையோடு வெடித்துச்சிதறி எரிந்து கொண்டிருந்தன. தங்களைக் காக்கமுடியாத ஆற்றாமையோடு கரும்புலி வீரர்களுக்குக் கட்டுப்பட்டு அவை கவனமாக சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளை போல எரிந்து கொண்டிருந்தன. அந்த விமானங்களைப் பாதுகாக்க வேண்டியவர்கள் எங்கள் தேசத்தின் புயல்களின் வீச்சில் அகப்பட்டு செத்துவீழ்ந்திருந்தார்கள். எஞ்சியோர் அந்தத் தளத்தை விட்டே ஓடித்தப்பினார்கள். அந்த விமானப் படைத்தளத்தின் ஓடுபாதையின் இடது புறமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘எம்.ஐ – 24’ ரக உலங்கு வானுார்தியை நெருங்கிய வீமனின் அணி அந்த உலங்குவானுார்தி மீது தாக்குதலைத் தொடுக்கின்றது. சிங்களப் படையின் பலம்மிக்க உலங்குவானுர்தியான எம்.ஐ-24 ஒன்று வெடித்துச் சிதறியபடி எரிந்துகொண்டிருக்கின்றது. மற்றைய ‘எம்.ஐ – 24’ உலங்குவானூர்தி மீது தாக்குதல் தொடுத்தபோதும் அது சேதமாகிக்கொண்டே இருந்தது. பற்றி எரியவில்லை. அதன் மீது தொடர்ச்சியாக வீமனின் அணி தாக்குதலை தொடுத்தது. இந்தக் கணத்தில் சிங்களப் படையால் விமானத்தளத்தை நெருங்கவே முடியவில்லை. அவர்களின் கண்முன்னாலேயே அவை வெடித்து பெரும் தீப்பிழம்பை வீசியபடியும் கரும்புகையை கக்கியபடியும் எரிந்துகொண்டிருந்தன. மறுபக்கம் இளங்கோ பிரதான விமானத் தரிப்பு கொட்டகையை நோக்கி தனது மற்றைய அணியை சண்டையிட்டபடி நகர்த்தினான். அந்த கொட்டகை மீது கருவேந்தன் ‘லோ’ வால் தாக்க அங்கிருந்த விமானங்கள் தீப்பற்றத் தொடங்கின. அவர்கள் விமானக் கொட்டகையையும் ஒடுதளத்தில் தரித்து நின்ற விமானங்கள் மீதும் தாக்க அவையும் தீப்பற்றி எரியத் தொடங்கின. அநுராதபுர வான்படைத்தளத்தினுள் எதிரியின் விமானங்களுக்குத் தங்கள் உடலில் சுமந்து வந்த வெடி பொருட்களால் தாக்கி அவை எரியும் காட்சியை ஆனந்தத்தோடு பார்த்தபடி நிலைமையை வன்னியிலுள்ள கட்டளைப் பீடத்திற்கு அறிவித்தான் இளங்கோ. “என்னண்டா வீமனாக்கள் எம்.ஐ-24 ஒண்டை எரிச்சிட்டாங்கள். மற்றது தாக்கி சேதப்படுத்தியிருக்கு அது எரியேல்ல. இஞ்சால என்ர பக்கம் ஒரு கே-8 விமானமும் இன்னுமொரு விமானத்தையும் ரண்வேயில தாக்கி எரிச்சிருக்கிறம். பெரிய கங்கருக்குள்ள நிற்கிற விமானங்களுக்கு அடிச்சிருக்கிறம். தொடர்பில நில்லுங்கோ பார்த்து அறிவிக்கிறன்.” கட்டளை மையத்திற்கு இளங்கோ நிலைமைகளை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறான். சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. அந்த வான்படைத் தளத்துள் நடந்த தொடக்கச் சண்டையின் போது உள்ளிருந்த எதிரிகளின் தடைகளை தகர்த்தெறிந்து எழிலின்பன், பஞ்சீலன், சுபேசன், ஆகியோர் தங்களுக்குத் தரப்பட்ட பணியை சரிவர நிறைவேற்றிய திருப்தியோடு வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். கரும்புலிகளின் நெஞ்சில் எரிந்த விடுதலைத் தீயின் ஒளிப்பிழம்புகள் அந்த விமானத் தளத்தை சுட்டெரித்துக் கொண்டிருந்தன. சிங்களப் படைகளால் துளியளவேனும் கரும்புலி வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அவர்கள் எத்தனைதான் முயன்றாலும் விமானத்தளம் கரும்புலி வீரர்களின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. முன்னேறிய படையினர் அடித்துவிரட்டப் பட்டனர். சமாதானம் என்ற மாயையைக்காட்டி எங்கள் விடுதலைப் போரை சிதைத்து விட சிங்களத் தேசம் மும்முரமாக ஈடுபட்டபோது, இவர்கள் எந்த நொடிப்பொழுதும் கரும்புலியாகி எதிரியின் குகைக்குள் புகுந்து பகைவனுக்கு பெரும் சேதம் விளைவித்து தலைவனுக்கு பலம் சேர்க்க காத்திருந்தார்கள். தலைவரோடு கூடவிருந்து அவரின் சுமைகளைத் தாங்கியவர்கள். அந்த உணர்வோடுதான் எதிரியின் கற்பனைகளைச் சிதைத்துவிட்டு மீண்டும் இங்கு போர்மேகம் கருக்கொண்டபோது கரும்புலியாய் பிறப்பெடுத்தார்கள். தங்கள் இலக்கை அழித்தொழிக்கும் அந்த நாளுக்காக அவர்கள் எத்தனை இரவுகள் காத்திருந்தார்கள். அவர்களின் நெஞ்சில் பிறந்த விடுதலைப்பற்று இன்று அநுராதபுரத்து வான்படைத் தளத்தை சிதைத்துக் கொண்டிருந்தது. அநுராதபுர வான்படைத்தளத்தின் மையத்தில் நின்று விமானத்தளத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபடி விமானங்கள் நிற்கும் திசைகளுக்கு கரும்புலிகளை நகர்த்தினான் இளங்கோ. வீமன் மறுபுறத்தே நின்றபடி தனது அணியை வழிநடத்தினான். இந்த வீரர்களை எதிர்த்துச் சமரிடும் திறன் சிங்களப் படைக்கு எங்கே இருக்கின்றது? வீமன் தலைவருக்கு நெருக்கமாக நின்று பணிபுரிந்தவன். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மெய்க்காவலர் அணிக்குப் பொறுப்பாக நின்று செயற்பட்டவன். அந்தப் பெரு மனிதனின் மனதைப் புரிந்து அவரோடு இசைந்துபோய் அவரின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதில் வல்லவனாயிருந்தான் வீமன். ஆனால் பாதுகாப்பு நடைமுறைகளில் அவன் தளர்வு காட்டியதில்லை. தேசத்தின் குரல் பாலா அண்ணன் அவர்கள் இங்கு வந்தால் அவர் கேட்பது வீமனைத்தான். அத்தனை பற்றும் பாச உணர்வும் வீமனிடத்தே அவருக்கிருந்தது. அந்த வீமன்தான் இன்று அநுராதபுர வான்படைத்தளத்தை அதிரவைத்துக் கொண்டிருந்தான். தங்கள் தீரம் மிகு செயல்களால் விடுதலைப் போருக்குப் பலம் சேர்த்த கரும்புலி வீரர்கள் சிலர் தங்கள் உடலோடு சுமந்து வந்த வெடிபொதியை வெடிக்க வைத்து தங்களை இந்தத் தேசத்திற்காக அர்ப்பணித்துக்கொண்டிருந்தனர். நெஞ்சிலே காயமடைந்த காவலன் அணித்தலைவன் இளங்கோவிடம் அனுமதி பெற்றபின் தன் மார்போடு பொருத்தப்பட்டிருந்த கந்தகப்பொதியை வெடிக்க வைத்து காற்றோடு கலந்து போனான். அநுராதபுர வான்தளத்தில் அந்த வீரர்கள் மூட்டிய தீ பிரகாசித்து எரிந்து கொண்டிருந்தது. களத்தில் நின்றபடி அணியை வழிநடத்திய இளங்கோ காயமடைந்தான். அவனால் நகரமுடியவில்லை தனது காயத்திற்கு கட்டுப்போட்டு விட்டு அவன் தெளிவாக கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான். அந்தக் கரும்புலிகளுள் ஒரிருவரைத் தவிர மற்றைய எல்லோரும் எதிரியின் குண்டுமழையால் வீர வடுவேந்திய போதும் அவற்றிற்குக் கட்டுப் போட்டுவிட்டு தொடர்ந்தும் சண்டையிட்டனர். காயங்களின் வேதனை அவர்களை வாட்டவில்லை. சிங்களம் எங்கள் தேசம் மீது புரிந்த கொடுமைகளின் வடுக்கள்தான் அவர்களின் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. அதற்காகத்தான் இன்று எதிரியின் கோட்டைக்குள் முழக்கமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களப்படை மீண்டும் தங்கள் தளத்தை கைப்பற்ற முன்னேறுகின்றார்கள். இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கிறான். “என்னண்டா ட்ரக்கில வந்து இறங்கி அடிச்சுக்கொண்டு வாறாங்கள். நாங்கள் திருப்பித் தாக்கிறம்.” “நீங்கள் உங்கட ஆக்களை வச்சு நல்லாக் குடுங்கோ. எங்கட விமானங்கள் உங்களுக்கு துணையா இப்ப தாக்குதல் நடாத்துவினம்.” இளங்கோ கட்டளை மையத்துடன் தொடர்பிலிருந்தான். திடீரென முகாமைச் சூழ இருந்த எதிரிகளின் ஆயுதங்கள் வான்நோக்கி குண்டுமழையை பொழிந்தன. உண்மையில் அப்போது வானத்தில் எமது விமானங்கள் தென்படவில்லை. எதிரியின் ராடார் திரையில் எமது விமானம் தென்படுவதாகத் தகவல் கிடைத்ததுமே பீதியால் கண்மண் தெரியாது சுட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களின் இந்த இரைச்சல்களுக்கூடாகவே விடுதலைப் புலிகளின் திறன் வாய்ந்த வானோடிகள் தங்களுக்குத் தரப்பட்ட இலக்கின் மீது கனகச்சிதமாக குண்டுகளை வீசிவிட்டு மீண்டும் தளம் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அநுராதபுர வான்தளத்தில் தரையாலும், வானாலும் கரும்புலிகள் தொடுத்த தாக்குதலால் சிங்களச் சிப்பாய்களும் அவர்களது அதிகாரிகளும் கதிகலங்கி போயினர். முன்னேறி வந்த சிங்களப் படையினர் எமது வான்படையின் வரவைக் கேள்வியுற்றதுமே ஒடித் தப்பிக் கொண்டனர். இளங்கோ இந்த நிலைமையை விமானத்தளத்தின் மையத்திலிருந்தபடி கட்டளை பீடத்திற்கு அறிவித்தான். எதிரியின் இலக்குகளை தகர்த்துக் கொண்டிருந்த செந்தூரன் காயமடைந்தான். அவனால் இனிச் செயற்பட முடியாத அளவு பாரிய காயம். அவன் இன்று நிறையவே சாதித்துவிட்டான். அவன் மனதில் நிறைந்த திருப்தியிருந்தது. அவன் புகழ்மணியிடம் தனது உடலில் பொருத்தப்பட்ட வெடிகுண்டை இயக்கிவிடும்படி பணிக்கின்றான். அந்தக் கணத்தில் கரும்புலி வீரர்களின் மனத்தில் எழுந்த உணர்வை எப்படிச் சொல்வது? எத்தனை வருடங்களாக ஒன்றாக இருந்து ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்த வீரர்கள். இன்று பிரியப் போகின்றார்கள். ஆனாலும் சாதித்துவிட்டோம் என்ற பெருமிதத்தோடு அவனது ‘சார்ச்சை’ இழுத்துவிட்டான் புகழ்மணி. சில கணங்களில் செந்தூரன் இந்த தேசத்திற்காக அணுவணுவாக வெடித்து சிதறினான். இளங்கோ தங்களால் அழிக்கப்பட்ட விமானங்களின் தரவுகளை சொல்லிக் கொண்டிருந்தான். அவற்றில் ஒன்றினது இலக்கத்தைக்கூட தெளிவாக பார்த்து அறிவித்துக் கொண்டிருந்தான். “என்னண்டா வீமன்ணையாக்கள் ஒரு எம்.ஐ-24ஐ முற்றா எரிச்சிட்டினம். ஓண்டு சேதத்தோட நிக்குது. அது அடிக்க அடிக்க எரியுதில்லை. என்ர பக்கம் ரக்சி வேயில ஒரு கே-8 எரிஞ்சு முடிஞ்சுது. அதவிடவும் இன்னொண்டும் வெளியில எரிஞ்சிருக்கு. பெரிய கங்கருக்குள்ள 3யூ.ஏ.வி உம் ஒரு பெல்லும் எரியுது. அதைவிடவும் உள்ளுக்க விமானங்கள் எரியுது. ஆனால் நெருப்பு எரிஞ்சு புகையா கிடக்கிறதால எங்களால பார்க்க முடியேல. விளங்கிற்றுதா?” “ஓமோம் விளங்கிற்று. நீங்கள் தொடர்பில நிண்டு நிலைமையை அறிவிச்சுக்கொண்டிருங்கோ.” இளங்கோ சுற்றிவர எரிந்துகொண்டிருக்கும் விமானங்களுக்கு நடுவே காயம் அடைந்த படி சண்டையை நடாத்திக் கொண்டிருந்தான். இரவு வந்து இறங்கிய பீச் கிறாவ்ச் அந்தத் தளத்தில் இருந்த கோபுரத்தின் மறைவில் நின்றதை இப்போது தான் கண்டார்கள். உடனடியாகவே வீமன் தனது கிறனைட் லோஞ்சரால் அதன் மீது தாக்க அது பற்றி எரியத் தொடங்கியது. இப்போது கரும்புலிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. பீச் கிறாவ்ற் விமானம் மிகவும் பெறுமதிவாய்ந்தது. அத்தோடு மற்றைய விமானங்களைவிடவும் இது முக்கியமாக அழிக்கப்பட வேண்டுமென ஏற்கனவே சொல்லப்பட்டுமிருந்தது. இளங்கோ கட்டளை மையத்துடன் மீண்டும் தொடர்பெடுக்கின்றான். “என்னண்டா இப்ப ‘பீச் கிறாவ்ற்’ ஒண்டை அடிச்சு எரிச்சிட்டம். புதுசா மினுங்கிக் கொண்டு நிண்டது. வெடிச்சுவெடிச்சு எரியிற சத்தம் உங்களுக்கும் கேக்குமெண்டு நினைக்கிறன்.?” இளங்கோ ஆனந்த பூரிப்போடு பீச் கிறாவ்ற் வெடித்து எரியும் சத்தத்தை தொலைத் தொடர்புக் கருவியூடாகக் கேட்குமாறு கட்டளைப்பீடத்திற்கு தெரிவித்துக் கொண்டிருந்தான். சிங்களப் படையின் அந்தப் பெரும் விமானத்தளம் இப்போது கரும்புலி வீரர்களிடம் மண்டியிட்டுக் கொண்டது. இப்போது அங்கே கரும்புலிகள் நினைத்தது மட்டும்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தங்களது விமானங்களைப் காப்பாற்றும் நப்பாசை சிங்களத்திடம் இருந்து இன்னும் போகவில்லை. எரிந்து கொண்டிருக்கும் விமானங்களையாவது காப்பாற்றுவோம் என எண்ணி அவர்கள் தீயணைப்பு வாகனத்தோடு விமானத்தளத்துள் நுழைந்தார்கள். அப்போது புகழ்மணி தனது பி. கே ஆயுதத்தால் அவர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதலை தொடுக்க அவர்களும் ஓடித்தப்பிக் கொண்டனர். ஆனாலும் தொடர்ச்சியாக வான் படைத்தளத்தின் எல்லையில் நின்றவாறு கரும்புலிகள் மீது தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தனர். இப்போது அந்தத் தளத்தில் பி.கே ஆயுதத்தைவைத்து சுட்டுக்கொண்டிருந்த புரட்சி காயமடைய அவன் தனது சார்ச்சை இழுத்துவிடுமாறு தர்மினியிடம் வேண்டிக்கொண்டான். அந்தக் கரும்புலி வீராங்கனை அந்த வீரனுக்கு கடைசி விடை கொடுத்து அவனது சார்ச்சை இழுத்து விட்டாள். அந்த வீரனும் தனது தாய் தேசத்திற்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்டான். அவனது பி.கே ஆயுதத்தை தர்மினி எடுத்து மதியிடம் கொடுத்தாள். மதிவதனன் இப்போது ஒரு கரும்புலி வீரனாயினும் அவனொரு கனரக ஆயுதப்பயிற்சி ஆசிரியர். எத்தகைய கனரக ஆயுதத்தையும் எடுத்தவுடன் கையாளும் திறன் வாய்ந்தவன். அவன் உருவாக்கிய போராளிகள் இப்போதும் களங்களில் கனரக ஆயுதங்களுடன் நிற்கிறார்கள். எந்த ஆயுதத்தையும் இலகுவாகக் கையாளும் அந்தக் கரும்புலி வீரன் வீரச்சாவடைந்த சகதோழனின் துப்பாக்கியை எடுத்து ரவைகளை பொழிந்து கொண்டிருந்தான். தர்மினி ஒரு துடிப்பான போராளி. அவளும் அந்தக் களத்தில் கண்ணில் காயமடைந்த போதும் தனது இயக்கத்தை அவள் நிறுத்திக் கொள்ளவில்லை. தனது காயமடைந்த கண்ணிற்கு கட்டுப் போட்டுவிட்டு அவள் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். புலிமன்னனும் கடும் காயத்திற்குள்ளானான். அவனிற்கு இடுப்பிற்கு கீழ் இயலாமல் போனது. அவனால் நகர முடியாது போனாலும் பெரும் மனவுறுதியைக் கொண்ட அந்த வீரன் தனது பி.கே ஆயுதத்தால் தொடந்தும் சூடுகளை வழங்கிக் கொண்டிருந்தான். அநுராதபுர வான்படைதளம் எங்கும் பெரும் தீயின் வெளிச்சம். துப்பாக்கி வேட்டுக்களினதும் குண்டுகளினதும் காதை கிழிக்கும் வெடியோசைகள். இவற்றிற்கு நடுவே நின்ற படி கரும்புலிகள். தொடர்ந்தும் சண்டையிட்டார்கள். அந்த தளத்தை சூழ இருந்த சிங்கள விமானப்படையால் எதுவும் முடியாது போக தங்கள் ஆற்றாமையால் மன்னாரிலிருந்தும், வவுனியாவிலிருந்தம் விசேட படை அணிகளை அநுராதபுரத்திற்கு அழைத்தனர். இப்போது அந்தத் தளத்தில் சண்டை இன்னும் வலுவுற்றது. எஞ்சியிருந்த கரும்புலி வீரர்கள் மூர்க்கமாகச் சமரிட்டார்கள். இளங்கோவிற்கு மீண்டும் இருமுறை காயம் ஏற்படுகின்றது. அந்தக் காயத்தின் வலியையும் கடந்து அவன் நிதானமாக கட்டளை மையத்துடன் தொடர்பெடுக்கிறான். “எனக்கு திரும்பவும் ரெண்டிடத்தில காயம் வந்திட்டுது. நான் எனக்கு தந்த கடமையை சரியாச் செய்திருக்கிறன். அண்ணையிட்டச் சொல்லுங்கோ. நான் என்ர அணியோட சேர்ந்து சாதிச்சிட்டனெண்டு. நீங்கள் எல்லோரும் அண்ணையை கவனமா பார்த்துக் கொள்ளுங்கோ. அண்ணைதான் எங்களுக்கு முக்கியம். என்ர நண்பர்களிட்ட சொல்லுங்கோ நான் என்ர கடமையைச் சரியாக செய்திருக்கிறன் எண்டு. இனி நீங்கள் தான் அண்ணைக்கு நிறையச் செய்து குடுக்க வேணுமெண்டு சொல்லுங்கோ…” இந்த வார்த்தைகளோடு இளங்கோவின் குரல் அடங்கிப்போகிறது. அதன் பின் அவன் குரலை கேட்க முடியவில்லை. சற்று முன்தான் வீமனும் அந்த அநுராதபுர தளத்துள் வெடித்து சிதறி வரலாறான செய்தியை இளங்கோ சொல்லியிருந்தான். இளங்கோ அந்த அணியை வைத்து நிறையவே சாதித்து விட்டான். தலைவர் நினைத்ததை விட அதிகமாய் அவன் சாதித்துவிட்டான். தனது மனதில் எத்தனை பெரும் சுமைகளை அந்த வீரன் இன்று வரை சுமந்திருக்கிறான். சமர்க்களங்களில் எத்தனை அர்ப்பணிப்புக்களை கண்டிருக்கிறான். அதன் பதிவுகள் அவனது நாட்குறிப்பில் இப்படியிருக்கின்றது… “கடும் சமர் மத்தியிலேயே தலையில் காயம் பட்டு வார்த்தைகள் வெளிவர முடியாத நிலையிலேயே என் மடியில் தலைவைத்தபடியே என்னைக்கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு என் கரம் இறுகப்பற்றியபடியே என் மடியினிலே உயிர்விட்ட உயிர்த்தோழன் மேஜர் மனோவை என் கண்ணால் பார்த்திருக்கிறேன்.” “ஊடறுப்புச் சமருக்காக நெஞ்சுமுட்ட நீருக்குள்ளால் நகர்ந்து கொண்டிருந்த போது எதிரியின் சரமாரியான செல் மழையில் மார்பில் காயப்பட்ட பெண் போராளி குப்பி கடிக்க முற்பட்ட போது குப்பியை பறித்துவிட்டு ஒரு கிலோ மீற்றர் தூரம் நீருக்குள்ளால் தோளில் காவிச் சென்று கரை சேரும் போது என் தோளிலேயே உயிர் பிரிந்த பெண் போராளியைப் பார்த்து இருக்கின்றேன்.” இது அவனது குறிப்பு பொத்தகம் சொன்ன அவனின் உணர்வுகள். இந்த உணர்வுகளைச் சுமந்து தானே இன்று அவன் சமரிட்டான். அவன் மட்டும் என்ன 21 கரும்புலி வீரர்களும் இப்படிப் பட்ட உணர்வுகளை சுமந்து தானே இன்று கரும்புலியாக உருவாகியிருந்தார்கள். அந்த உன்னத வீரர்களின் இலட்சிய தாகத்தின் முன்னாலும் அசையாத மனவுறுதியின் முன்னாலும் நெஞ்சை நிமிர்த்திய வீரத்தின் முன்னாலும் சிங்களக் கூலிப்படைகளால் எப்படி தாக்குப் பிடிக்க முடியும்? அந்த உன்னத வீரர்களை எதிர்கொள்ளும் துணிவு இவர்களுக்கு எங்கேயிருக்கின்றது? எதிரிகள் கலங்கி நிற்க ஆச்சரியத்தோடு வியந்து நிற்க எஞ்சியிருந்த ஒவ்வொர கரும்புலி வீரனும் மூர்க்கமாக போராடினான். விடிகாலை 3.20 மணிக்கு தொடங்கிய சண்டை காலை 9.00 மணிவரையும் தொடர்ந்த போதும் சிங்களப் படையால் உள்நுழைய முடியவேயில்லை. கடைசியாக கவச வாகனங்களை கொண்டு வந்து பெரும் குண்டு மழை பொழிந்துதான் அவர்களால் தங்கள் வான் படை தளத்தினுள் நுழைய முடிந்தது. அப்போது தங்களுக்கு தரப்பட்ட பணியை கரும்புலி வீரர்கள் உச்சமாக நிறைவேற்றி முடித்து வீரச்சாவை அணைத்திருந்தார்கள். சிங்கள தேசம் தனது ஆற்றாமையின் வெளிப்பாடாய் தங்கள் கோபங்களை கரும்புலி வீரர்களின் வித்துடலில் தான் தீர்த்துக்கொண்டது. பாவம் சிங்களப் படைகள். சிங்கத்தின் வழிதோன்றல்களுக்கு நாகரீகம் பற்றி புரிந்திருக்க நியாயமில்லைதான். ஆனால் கரும்புலிகள் வென்று விட்டார்கள். தலைவர் சொல்லி விட்டது போல வெற்றி பெற்ற அவர்களின் உன்னத அர்ப்பணிப்பால் உலகமிப்போது அவர்களின் பெயரை உச்சரிக்கின்றது. சிறீலங்காவின் ஜனாதிபதியான மகிந்த ராஜபக்சவை நவீன துட்டகைமுனுவாகச் சித்தரித்தபடி ஆழிக்கூத்தாடிய சிங்களத்தின் மீது, நவீன எல்லாளனாக புகுந்து அவர்களின் துட்டகைமுனு கொட்டத்தை அடக்கி முறித்ததுதெறிந்திருக்கிறார்கள். அந்த வீரர்கள் தனியே அநுராதபுர வான்படைதளத்திற்கும் மட்டும் தீ மூட்டவில்லை. பெரும் விடுதலை தீயை பலநூறு போராளிகளின் இதயங்களில் மூட்யிருக்கிறார்கள். நிச்சயமாய் இனிவரும் களங்களில் அவர்கள் சிங்களத்தின் தலையில் பேரிடியாய் இறங்குவார்கள். நினைவுகளுடன்: புரட்சிமாறன். நன்றி – விடுதலைப்புலிகள் இதழ் (ஐப்பசி, கார்த்திகை 2007). https://thesakkatru.com/operation-ellaalan-on-anuradhapura-air-force-base/
    1 point
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.