Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46791
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    3061
    Posts
  4. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    34974
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/25/24 in Posts

  1. அண்ணை, இந்தப்பட்டியலில இருக்கிற இரண்டுபேர் பற்றி மட்டும் ஒரு விடயம் சொல்லவேணும். கதிர்காமர் ‍ துரோகியல்ல, எதிரி. சமாதானம் யுத்தம் என்கிற பெயரில சந்திரிக்கா செய்த இனக்கொலை யுத்தத்தில சந்திரிக்காவுக்குக் கொள்ளி எடுத்துக் கொடுத்தவர். அவர் தன்னைத் தமிழன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்துபோட்டு சந்திரிக்காவின்ர பக்கம் தாவினவர் எண்டால் பரவாயில்லை, அந்தாள் பிறவியில இருந்தே கொழும்பு மேற்தட்டு வர்க்க சிங்களவர்களின் நண்பர். கருணாநிதி உலகத் தமிழினத்தின்ர தலைவர் எண்டு சொல்லிக்கொண்டு முள்ளிவாய்க்கால் இனக்கொலையில தன்ர குடும்ப வாரிசுகளுக்கு என்ன கிடைக்கலாம் எண்டு இலாப நட்டம் பார்த்தவர். சனம் ஆயிரக்கணக்கில சோனியாவின்ர ஏவலில கொல்லப்பட்டுக்கொண்டிருக்கேக்கை தில்லியில கூடாரம் அடிச்சு பதவி கேட்டவர். அவர் துரோகியேதான். அப்ப மற்ற ஆக்கள்? அவையள ஆர் துரோகியெண்டு சொன்னது? புலிக்காய்ச்சல் பிடிச்சால் உப்பிடி ஆளாளுக்கு ஆயிரம் பட்டியல் போட்டுக்கொண்டு வாரதுதான். இப்ப கொஞ்சக்காலமாய்ப் புலிக்காய்ச்சல் பிடிச்சு மூடிக்கொண்டு கிடந்ததெல்லாம் எழும்பி வந்து வாந்தி வாந்தியாய் எடுக்குதுகள். பாக்கவே சகிக்கேல்லை. தமிழ்ச்சனத்துக்கு நண்மையாக் கதைக்கிறம் எண்ட பெயரில தங்கட வக்கிரத்தைக் கொட்டுதுகள்.
  2. நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம். செய்யவும் போவதில்லை. ஆனால் எவனாவது களத்தில் இறங்கி செயற்பட்டால் அல்லது சிறை சென்றால் நக்கல் நையாண்டி??
  3. இந்த செய்தி அரசியல் லாபம் கருதி தேர்தல் காலத்தில் வந்திருக்கிறதாகத்தான் தெரிகிறது. ஆனால் 1 - 2015 இல் ஆரம்பமான சமஷ்டி அரசமைப்பு பணியை முன்னோக்கி கொண்டு செல்லுதல் என்பது முதலாவது நிபந்தனை. 1- ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 இல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் என்பது இரண்டாவது நிபந்தனை. அதனை மீள நடைமுறைப்படுத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. உண்மையில் இவை ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் அது தமிழர்களுக்கு பெரிய வரப்பிரசாதம் என்று தான் சொல்லவேண்டும்.
  4. சுமந்திரன் எதிர் பட்டாசு ரெஜிமென்ற்றின் "தோசை, இட்லி, குண்டு தோசை" என்று, ஒரே சரக்கை நேரத்திற்கேற்ப மாற்றிப் போடும் நிலையில்லா மூளைக்கு, இந்த செய்திக்கு அவர்கள் இட்டிருக்கும் பதில்கள் நல்ல உதாரணம்😂. இதே சுத்த இனவாதியான கம்மன்பில, 2016 இல் இருந்து புலிகள் பற்றியும், தமிழ் தேசியம் பற்றியும் சொல்லியிருப்பவை பொய் என்பார்கள், ஆனால் சுமந்திரன் பற்றி அவர் இப்பொது சொல்வது உண்மை என்கிறார்கள்! இந்த பட்டாசு படையணியை தாயக மக்கள் கண்டுகொள்ளாமல் விட்டு 10 ஆண்டுகள் ஆகி விட்டன! புலத்தில் மட்டும் தான் இந்த சத்தம்!
  5. ரஜினி திரணகம துரோகி கதிர்காமர் துரோகி நீலன் துரோகி ரட்ன ஜீவன் கூல் துரோகி சம்பந்தன் துரோகி கருணாநிதி துரோகி ப சிதம்பரம் துரோகி இப்போது சுமந்திரனும் துரோகி ஆக பாலசிங்கம் கொஞ்ச நாள் உயிரோடு இருந்து இருந்தால் அவரும் துரோகி ஆக யாரெல்லாம் தமிழ் மக்களுக்குள் உலக ஒழுங்கை மனதில் கொண்டு கொஞ்சம் நிதானமாக சிந்திக்கின்றார்களோ அவர்கள் எல்லாம் துரோகி.
  6. குருவே இந்திய வீர‌ர்க‌ளின் அன்மைக் கால‌ விளையாட்டு ச‌ரி இல்லை இல‌ங்கையிட‌ம் ஒரு நாள் தொட‌ரில் தோல்வி இப்போது சொந்த‌ ம‌ண்ணில் நியுசிலாந்திட‌ம் இர‌ண்டாவ‌து தோல்வியும் உறுதியாகி விட்ட‌து ப‌ல‌ம் இல்லா வ‌ங்கிளாதேஸ்ச‌ வென்றார்க‌ள் , இல‌ங்கையிட‌ம் தோல்வி அடைந்த‌ நியுசிலாந்தை சொந்த‌ ம‌ண்ணில் வெல்ல சிர‌ம‌ ப‌டுகின‌ம்😁 கோலி ரோகித் ச‌ர்மா இவ‌ர்க‌ள் அடுத்த‌ 50ஓவ‌ர் உல‌க‌ கோப்பைக்கு முத‌லே ஓய்வை அறிவித்தால் இருக்கிற‌ கொஞ்ச‌ ந‌ஞ்ச‌ மான‌த்தை த‌ன்னும் காப்பாற்றி கொள்ள‌லாம் நியுசிலாந் 301 ர‌ன்ஸ் முன்நிலையில் நிக்குது இன்னும் கூடுத‌லா 100ரன்ஸ் அடிச்சால் இந்தியாவை வென்று விடுவினம்.................சிரிக்க கூடாது சில‌து விளையாட்டு நாளையோட‌ கூட‌ முடிந்து விடும் 😁 இப்ப‌ எல்லாம் ஜ‌ந்து நாள் விளையாட்டு 3 அல்ல‌து 4 நாட்க‌ளில் முடிந்து விடுது 18 வ‌ருட‌த்த‌ முன்னேக்கி பார்த்தால் ப‌ல‌ விளையாட்டு 5 நாள் ஆகியும் வெற்றி தோல்வி இன்றி ச‌ம‌ நிலையில் முடிந்து இருக்கு 20ஓவ‌ர் வ‌ருகைக்கு பிற‌க்கு இள‌ம் வீர‌ர்க‌ளுக்கு பொறுமை அற‌வே இல்லை குருநாதா😁.........................
  7. 🤣........... குரல்தர வல்ல வல்லுநர் பையன் சார் @வீரப் பையன்26 வந்து, கோலியையும் ரோகித்தையும் அந்தக் குழிக்குள் போட்டு மூடச் சொல்லுவார் என்று தெரிகின்றது.............
  8. 🤣............. முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன அரசியலைத் துறந்து சினிமா எடுக்க போய்விட்டார். உதய கம்மன்பில பந்துல எடுக்கப் போகும் படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதலாம். ஈஸ்டர் குண்டுவெடிப்பு கதை, சமஷ்டி கதை என்று ஒவ்வொரு வாரமும் தூள் கிளப்புகின்றார் கம்மன்பில............ சமஷ்டியா.............. ஒரு சட்டி கூட எங்களுக்கென்று தனியாக கொடுக்க மாட்டார்கள் எந்த பெரும்பான்மை கட்சிகளும், அரசியல்வாதிகளும்...........
  9. அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும் என்று பார்த்துக் கொண்டிருந்த சுமந்திரனுக்கு.... சம்பந்தன் செத்துப் போனது, "ரூட் கிளியர்" ஆகி இருக்கு. சம்பந்தன் உயிருடன் இருந்திருந்தால் இந்தப் பதவியையம் தனக்கே வேணும் என்று அழுது அடம் பிடித்து எடுத்திருப்பார். இப்போ.... சுமன் காட்டில் அடை மழை பெய்யப் போகுது.
  10. குட்டையை குழப்பி மீன்பிடிக்க நினைக்கிறார் கம்மன்பில, இல்லை என்று சொன்னால் தமிழரின் வாக்கு, ஆதரவு குறையும் அனுராவுக்கு. ஆம் என்று சொன்னால் சிங்களவரின் வாக்கு குறையும். அதனாலேயே ஜனாதிபதி தெளிவுபடுத்தட்டும் என்கிறார். தானே இனப்பிரச்சினையை கிழப்பாமல், யோசனை கொடுக்கிறாராம். இறுதியில் சிறைக்குத்தான் போகப்போகிறார். ஆளான ஆளெல்லாம் வாய் மூடி இருக்கினம், இவர் துள்ளுவதைப்பார்த்தால்; நிறைய ஊழலில் சிக்கப்போகிறார் போலுள்ளது. ஏற்கெனவே வெளிநாட்டுக்காரர் ஒருவரின் காணியை கள்ள உறுதி முடித்து விற்பனை செய்த வழக்கு உள்ளது இவர்மேல். சுமந்திரன் இதை செய்ய நினைத்திருக்க மாட்டார், ஒருவேளை கம்மன் பில செய்யும் காமெடியில் நடந்தாலும் நடக்கலாமே தவிர சுமந்திரனுக்கு உந்த உணர்வு தவறியும் வராது. இப்போ நாட்டில் ஒரு குழப்பம் வெடிக்க வேணும், அதில் கம்மன் பில வாக்கு அள்ள வேண்டும்! பரவணிக்குணம்.
  11. அறுகம் பே (குடா) வில் யூதர்களின் வணக்கம் ஸ்தலம் இருக்காம்....‍ஹொட்டல் நடுத்தினமாம், காணிகளை சொந்தமா வாங்கி வைச்சிருக்கினமாம் .... இதில நம்ம ஆளுக்கு இலங்கையர் என்ற உணர்வுடன் நகர வேணுமாம்... கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் ..மற்றவர் கொழும்பு ....ஈராக்கில் பணி புரிந்தவர்...இனி பயங்கரவாத தடைச்சட்டம் தொடரும்...தேசத்தின் நல்ன் கருதி... செகுவார 1969 ஆம் ஆண்டு வந்தவர் அவர் வ்ந்து போன பின்பு 71 ஆம் ஆணடு புரட்சி ....இவ்ரின் தலைவர் செய்தார்.. சீடன் கியூபா தலைவரை அழைக்கின்றார்... கியூபா ஜனாதிபதி வருகின்றார் .. பொது நல அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றார் ... பொருளாதார நெருக்கடிக்கு தள்ள துடிக்கினம் போல
  12. எரியும் ரகசியங்கள் ----------------------------- ஒருவருக்குமே சொல்லாத ஒன்றை உங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலர் சொல்லியிருப்பார்கள் ரகசியம் பத்திரம் என்று நீங்களும் உங்களின் சில ரகசியங்களை சிலருக்கு மட்டும் சொல்லியிருப்பீர்கள் பத்திரம் என்று வீடு ஒன்று வாங்கும் விசயம் கூட ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த வீட்டை வாங்க முன் இன்னார் இன்னாரை கட்டப் போகின்றார் அதுவும் ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அவர்கள் கட்ட முன்னர் எப்போதும் வெளியே சொல்லி விடாதே என்று சத்தியமும் கேட்டிருப்பார்கள் அந்த வீட்டை வாங்கிய பின் அவர்கள் கல்யாணத்தை கட்டிய பின் சத்திய சோதனை சங்கடம் இல்லை உங்களுக்கு இதைவிட உலகில் உங்களைத் தவிர எவருக்குமே தெரியாத உங்களின் ரகசியங்களும் பலவும் உண்டு சிலருக்கு அவர்களின் எல்லாமே ரகசியங்கள் 'பொத்தர்' என்று பெயர் வைக்கலாம் அவர்களுக்கு வெகு சிலருக்கு அவர்களின் எதுவுமே ரகசியம் இல்லை திறந்த புத்தகம் என்பார்கள் சிலரிடம் நாலைந்து புத்தகங்கள் உண்டு ஒன்றை அப்படியே திறந்து வைத்து விட்டு மூன்றை முழுக்க மூடி வைத்திருப்பார்கள் இப்பொழுதெல்லாம் அடிக்கடி மரண வீடுகளுக்கு போக வேண்டியிருக்கின்றது அங்கே கடைசியில் புகையாக கூண்டினூடு வெளியேற எத்தனை ரகசியங்கள் எவருக்குமே தெரியாமல் எரிந்து போகின்றதோ என்று தோன்றுகின்றது.
  13. அது திருகோணமலையில்?? யாழ்ப்பாணத்தில் கொழும்பில் அனுராதபுரத்தில் மாத்தறையில் பார்க்கலாம்....,?
  14. சொந்த இட்ம் மானிப்பாய் ஆதரம் வேணுமென்றால் டி.என்.ஏ பரிசோதனை செய்ய தயார்😅
  15. இதில் கிண்டலுக்கும் கேலிக்கும் எதுவுமில்லை, வளர்த்த நாயை காணாவிட்டாலே அழுது புலம்பும் மனிதம் பெற்று வளர்த்தவர்களுக்கு என்னானதோ என்று இதுவரை எந்த செய்தியும் இல்லையென்றபோது அவர்களை பொறுத்தவரை இந்த உலகம் அன்றோடு நின்றுவிட்டது, எந்தவகையிலும் இது சாத்தியப்பாடானது அல்ல என்று நமக்கு தெரிந்ததுபோல் அவர்களுக்கும் தெரிந்திருக்கும், அப்படியாவது தாம் வளர்த்தவர்கள் வீடு வந்து சேரமாட்டார்களா என்ற விசும்பல்தான் அது. புலம்பெயர் தமிழர்கள் வாழும் நாட்டில் எதிர்கால ஆளும் கட்சி தேர்வில் ஓரளவாவது செல்வாக்கு செலுத்தகூடிய தமிழர் வாக்குவங்கி கொண்டது கனடா மட்டுமே, அவர்களே ஆட்சிக்கு வந்ததும் தமிழர் தெருவிழாக்கள், பொங்கல், புக்கையென்று கலந்துகொள்வதோடு ஒப்புக்கு ஒருசில அறிக்கைகள் அவ்வப்போது விடுவதுடன் தம் எல்லையை வரைந்து கொள்கிறார்கள். இறுதி யுத்தத்தின் பின்னர் யுத்தம் என்ற அங்கு நடந்ததையே அங்குள்ள எம் மக்களே மறக்கும் நிலைக்கு வந்ததுபோல் வாழ்வை பெரும் எடுப்பில் மாற்றி கொண்டுள்ளார்கள் , ஆனால் இன்றுவரை வாழ்க்கையை 15 வருடங்களுக்கு மேலாக உறங்குவதும் அழுவதும் அழுதுவிட்டு உறங்குவதுமாக இருக்கும் அவர்கள் வலி அனுபவித்து பார்க்க தேவையில்லை நினைத்து பார்த்தாலே எவருக்கும் வரகூடாத கொடூரம்தான்.
  16. கவிஞர் நாவண்ணனுடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. நான் தாயகத்துக்குப் போகும் போதெல்லாம் அவர் என்னைச் சந்திக்க வந்துவிடுவார். 2003இல் ஐரோப்பிய நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கென்று தாயகத்தில் இருந்து வந்த கலைஞர்களுடன் நாவண்ணனும் இணைந்திருந்தார். யேர்மனியிலும் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். யேர்மனியில் ஸ்ருட்காட் நகரத்திலும் அவரது நிகழ்ச்சி இருந்தது. அந்தக் கலை நிகழ்ச்சி நடந்த பொழுது நாங்கள் இருவரும் சந்தித்துக் கொண்டதுதான் எங்களது கடைசிச் சந்திப்பாக அமைந்தது. யேர்மனிக்கு வரும் பொழுது அவர் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ என்ற புத்தகத்தை எங்கள் குடும்பத்துக்குத் தருவதற்காகக் கொண்டு வந்திருந்தார். கட்டுநாயக்காவில் இருந்து பயணிப்பதால் பிரச்சினைகள் வந்து விடலாம் என்ற எண்ணத்தில், புத்தகத்தின் அட்டையைக் கிழித்து விட்டு ஒரு பழைய புத்தகம் என்ற வடிவிலேயே ‘அக்கினிக் கரங்கள்’ புத்தகத்தைக் கொண்டு வந்திருந்தார். இன்று நாவண்ணன் இல்லை. அவரது நினைவுகள், அவருடன் எடுத்த புகைப்படங்கள்…. என்னுடன் இருக்கின்றன. 1987இல் இந்திய இராணுவம் நடத்திய யாழ் வைத்தியசாலைப் படுகொலைகள் நினைவு நாளில், நாவண்ணன் எழுதிய ‘அக்கினிக் கரங்கள்’ புத்தகம் திடீரென நினைவில் வந்தது. இந்தப் புத்தகத்தை ஸ்கேன் செய்து நூலகத்தில் பதிந்திருக்கின்றார்கள். என்னிடம் உள்ள புத்தகத்தை படம் பிடித்து அதை எழுத்துருவாக்கி யாழில் இணைக்கிறேன். படத்தை எழுத்துருவாக்குவதில் (image to text) சில வேளைகளில் எழுத்துப் பிழைகள் இடம் பெற்றிருக்கலாம். அது என் தவறாக இருக்குமே தவிர நாவண்ணனின் தவறல்ல. அக்கினிக் கரங்கள் நாவண்ணன் இது ஒரு தமிழ்த்தாய் வெளியீடு நான் சிறியவளாய் இருக்கும்போது, என்னென்ன படம் பார்த்தேன், எத்தனை படம் பார்த்தேன் என்பதெல்லாம் இப்போது நினைவில் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர் நடித்த, 'சர்வாதிகாரி,' 'மந்திரி குமாரி * இவையெல்லாம் நல்லாய் நினைவிருக்கு. ஆபத்துவேளையில் எல்லாம் எம். ஜி. ஆர் வாளோடு திடீர் என்று தோன்றுவதும், சிலம்பமாடி எல்லோரையும் துரத்துவதையும் பார்த்து படமாளிகையில் இருந்தவர்கள் விசில் அடித்து கைதட்டுவதைக் கேட்டு நானும் கைதட்டியிருக்கின்றேன். ஐம்பத்தெட்டில இனக்கலவரம் நடந்தபோது. பெரியவர்கள் சும்மா கேலிக்காக பேசிக்கொண்ட விஷயமும் ஒன்று."எம்.ஜி. ஆர் இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற வாளுடன் கொழும்புத் துறைமுகத்தில் வந்து குதித்து விட்டாராம்!" என்பது. அந்த விஷயத்தை உண்மையென்று அன்று என் மனம் நம்பியது. அப்படி ஒரு அபிமானம் எனக்கு எம்.ஜி.ஆர் மீது. அந்நாளில் பிரபல்யமாக பேசப்பட்ட இன்னுமொருவருடைய பெயர் அறிஞர் அண்ணாவுடையது. இலங்கை யில் இனக்கலவரம் நடந்தபோது, தமிழகத்தில் எங்கேயோ நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில், " ஏய் மத்திய அரசே! இலங்கையில் எமது தமிழ்ச் சகோதரர்கள் படு கொலை செய்யப்படுவதை நீ சும்மா பார்த்துக் கொண்டிருக்காதே! நீ அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறினால் தமிழகத்தில் உள்ள நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கமாட்டோம். ஒரு கையில் மண் வெட்டியும் மறுகையில் கூடையும் எடுப்போம். சேது அணையை நிரவி நிரவி அங்கு போய்ச் சேருகின்ற முதல் தமிழன் விடுகின்ற மூச்சே எம் சகோதரர்களின் துன்பங்களைப் பொசுக்கும்." - இப் படிப் பேசியுள்ளதாக பெரியவர்கள் பேசிக்கொண்டார்கள். அன்றைய இனக்கலவரம் பற்றிய செய்திகளை, பெரியவர்கள் தமக்குள் பேசிக் கொண்டிருந்தபோது அவைகள் என் செவிகளில் விழுந்திருக்கின்றன. தென் பகுதியில் உள்ள தமிழர்களை சிங்களவர்கள் வெட்டிக் கொன்றது, உயிருடன் தீ மூட்டியது, பிள்ளைகளைக் கொதிக்கும் தார்ப் பீப்பாய்களுக்குள் போட்டது எல்லாம் கேட்க எனக்குப் பயங்கரமாகவே இருக்கும். என்னுடைய மாமா முறையான ஒருவர், அந்த இனக் கலவரத்தில் உயிர்தப்பி வந்தவர். தன் கண் முன்னாலேயே அவருடைய மனைவி, சிங்களக் காடையர்களால் கற்பழிக்கப் பட்ட கதையைச் சொல்லி அழுததையும் நான் நேரடியாகக் கேட்டிருக்கிறேன். அப்போ கற்பழிக்கப்படுதல் ' என்றால் என்ன என்பதன் விளக்கம் எனக்குத் தெரியாது. ஆனால், அந்த மாமாவையும் அவர்கள் வெட்டிக் குற்றுயிராய் விட்டுப் போனபிறகு, பக்கத்து வீட்டில் இருந்த இன்னுமொரு சிங்களக் குடும்பம் தான் அவரையும் காப்பாற்றியிருக்கு. அந்த மாமி. சிலநாளா பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்து, பிறகு தனக்குத் தானே தூக்குப் போட்டுக் கொண்டாளாம். அந்த மாமாவே இவ்வளவு பெரிய வெட்டுக் காயத் தோட உயிர் பிழைச்சிட்டார். ஆனால், அந்த மாமி ஏன் தற்கொலை செய்து கொண்டாள்...... அதுவும் கொஞ்ச நாள் உயிர் வாழ்ந்திட்டு. இந்தக் கேள்விக் கெல்லாம் அந்த நாளில எனக்கு விடை கிடைக்கவில்லை. அதைப்பற்றி பெரியவர்களிடம் யாரிடமாவது கேட்டால், ' சும்மா போ அங்கால' என்று சினப்புத்தான் கிடைத்தது. ஏதோ நாம் அறியக் கூடாத விடயமாக்கும் என்று நான் பேசாது இருந்து விடுவேன். ஆனால், இனக்கலவர காலத்தில் எம். ஜி. ஆர் வந்த கதை, அண்ணாவின் பேச்சு எல்லாம் என்னுடைய சின்ன வயசிலேயே நெஞ்சில ஒரு கிளுகிளுப்பையும் தமிழ் நாட் டில் உள்ளவர்கள் மேல் ஒரு பக்தியையும் எனக்கு ஏற்படுத்திவிட்டிருந்தன. காலம் போகப் போக இந்திய சுதந்திரப் போரும் அதில் இந்தியத் தலைவர்களும் மக்களும் காட்டிய உறுதியுடன் கூடிய சகிப்புத் தன்மையெல்லாம் இந்தியாவின் மேல் இனிமேல் இல்லையென்று கூறும் அளவுக்கு அபிமானத்தை ஏற்படுத்தி விட்டன. நான் படிப்பை முடித்த பின்னர், அரச வைத்தியசாலை யில் தாதியாக (நேர்ஸ்) வேலை பார்க்கத் தொடங்கினேன். பாடசாலை நாட்களிலேயே, நான் ஒரு புத்தகப் பூச்சிதான். இந்தத் தொழிலுக்கு வந்த பின்னர் இன்னும் புத்தகம் வாசிக்கும் வாய்ப்பு அதிகமாயிற்று. அதிலும், இரவு வேலை நாட்களில் ஓய்வாக இருக்கும்போது புத்தகங்களே எனக்கு உறுதுணையாகின. மகாத்மா காந்தியின், சத்திய சோதனை என்னை மிகவும் கவர்ந்த நூல்களில் ஒன்று. காந்தியைப் போன்று தெய்வீக அம்சம் கொண்ட மகானை தேச பிதாவாகக் கொண்ட அந்த நாடு. சத்தியத்திற்கும் அகிம்சைக்கும் காப்பரணாக விளங்கும் என்று நான் உறுதியாக நம்பினேன். இன்னும் பென் கிங்ஸ்சிலியின், 'காந்தி படம் வேறு எனது சிந்தையிலேயே இந்த எண்ணங்களுக்கு நெய் வார்த்து விட்டது. அதிலும் பிரிட்டிஷ் படையினர். ஜாலியன் வாலா பார்க்'கில் சூழ நின்று அப்பாவி மக்களைச் சுட்டுக் கொன்ற அந்தக் காட்சியைப் பார்த்த போது என் இரத்தம் கொதித்தது. ரோமம் எல்லாம் சிலிர்த்து நின்றது. அந்தப் படம் அவுஸ்திரேலியாவில் ஏதோ ஒரு அரங்கில் திரையிடப்பட்டது. அந்தக் கட்டத்தைப் பார்த்த ஒருவர், "நல்ல காலம்! பிரித்தானியனாகப் பிறக்காததையிட்டு நான் பெருமைப்படுகிறேன்." என்று கூறிய தாகப் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியை நினைத்துக் கொண்டேன். உண்மைதான்! அந்த ஒரு நிகழ்வுக்காகவே பிரித்தானியன் ஒவ்வொருவனும் வெட்கப்படவேண்டுமென்று தான் நினைப்பதுண்டு. ஹிரோசிமா, நாகசாகி மீது அணுகுண்டு பொழிந்து அப்பாவி மக்களைப் பலிகொண்ட அமெரிக்கனுக்கும் இந்தப் பிரித்தானியனுக்கும் என்ன வித்தியாசம் உண்டு என்பதே எனது கேள்வி இன்றைக்குத் தமிழகத்தில் எத்தனையோ தமிழ் எழுத்தாளர்கள் தோன்றிவிட்டார்கள் என்பது உண்மைதான் ! ஆனால், தான் படிக்கும் காலத்திலேயே என்னுள் நூல்களைப் படிக்க வேண்டுமென்ற வெறியை ஏற்படுத்தியது டொக்ரர் மு. வ. வின் எழுத்துக்கள்தான். பெரும்பாலும் அவருடைய நாவல்களை நான் படித்திருக்கின்றேன். ஒருமுறையல்ல, வசதி கிடைக்கும் பொழுதேல்லாம் ஒரே நூலினை மீளவும் படித்திருக்கின்றேன். அவருடைய 'அந்த நாள் நூலைப் படித்ததன் பின்னர் தான் இந்திய மக்கள், கடந்த காலங்களில் என்னவிதமான துன்பத்தை எல்லாம் சந்தித்திருக்கின்றார்கள் என்று வேதனைப் பட்டதுண்டு. பர்மாவின் தலைநகர் ரங்கூனில் இருந்து ஜப்பானியரின் குண்டு வீச்சுக்கு இலக்காகி இறந்தவர்கள் இடி பாடுகளுக்கிடையே நசுங்கி மடிந்தவர்கள் அங்கிருந்து இந்தியாவை நோக்கிக் கால் நடையாகவே புறப்பட்ட அகதிகள் பட்ட இன்னல்கள்...... மலேரியா, வாந்திபேதி வருத்தங்களால் மாண்டவர்கள்... அப்படி இறந்தவர்களை அநாதைப் பிணங்களாகவே விட்டு உறவினர்கள் செல்ல, காட்டு மிருகங்களால் உண்ணப்பட்டதும் பிணங்களைப் புதைப்பதற்கு வகை தெரியாமல், ஆற்றிலே தூக்கி எறியப்பட்ட அவலங்கள் அதிலும் தப்பி வந்தவர்களை, காட்டு வழியில் மறித்து பர்மாக்காரர்கள் கொள்ளையடித்த கொடுமைகள் எல்லாம் படிக்கப் படிக்க அந்த இந்தியர்கள் மீது எனக்கு இரக்கத்தையே உண்டு பண்ணின. இலங்கையை இலங்க வைக்க வந்த இந்தியர்கள் இதே கொடுமைகளைத் தானே அனுபவித்தனர். இந்த கொடுமைகளை யெல்லாம் அனுபவித்து கரை கண்டு வந்த பாரத மக்கள் துன்புறும் அயல்நாட்டு மக்களுக்கு அன்புக்கரம் நீட்டுவதில் வியப்பொன்றும் இருக்க முடியாது தான்! அதனால்தான், பாகிஸ்தானின் பிடியில் இருந்து பங்களாதேஷுக்கு, இந்தியா விடுதலையைப் பெற்றுக்கொடுத்தது. அதனால்தான், இலங்கையில் இருந்து அகதிகளாக தஞ்சம் கோரி அங்கு சென்ற ஈழத் தமிழர்களுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது. ஒரு பெண் பிரசவ வேதனையால் துடிக்கும் போது ஒரு ஆண் அவள் வேதனையை உணர்வதை விட, பிள்ளைகளைப் பெற்ற ஒரு பெண் நிச்சயமாய் அதிகமாக உணர்வாள்! ஏனென்றால், ஒரு நாளில் அவளும் இதே உபாதையை அனுபவித்தவளாயிற்றே! அதுபோல அடிமைப் படுத்தப்படும் மக்களின் உணர்வுகளை, ஒரு காலத்தில் அந்நிய ஆதிக்கத்துக்குள் அடிமைப்பட்டிருந்த இந்தியா உணர்ந்து கொள்வதிலும், அடிமை பட்டுக் கிடக்கும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதிலும் போராடுவதிலும் ஆச்சரியம் எதுவுமில்லை. சுதந்திரம் பெற்றநாள் முதல், இலங்கையில் தமிழினம் இன்னல்கள் அனுபவித்து வருவதை அனுதாபத்தோடு இந்தியா பார்த்துக் கொண்டிருக்கிறதே என்று நான் வியப்படைந்ததுண்டு. பங்களாதேஷ் அகதிகள் இந்தியா விற்குள் நுழைந்த போது அதைக் காரணமாக வைத்து, பாகிஸ்தானுடன் போராடி பங்களாதேஷுக்கு விடுதலை பெற்றுகொடுத்த இந்தியாவால், இலங்கைத் தமிழர்கள் பாக்கு நீரிணையைக் கடந்து தஞ்சம் கோரிச் சென்ற பின்னரும் எப்படி மௌனமாக இருக்க முடிகின்றது...... என்று எண்ணி நான் வியந்ததுண்டு. நாளுக்கு நாள் சிறீலங்காப் படைகளின் கொடுமைகள் அதிகரித்து வரும் பொழுதெல்லாம் காங்கேசன்துறை (கே.கே.எஸ்) யில் எனது வீட்டுக்கு அண்மையில் இருக்கும் கடற்கரையில் நின்று கொண்டு, இந்தியா இருக்கும் திசையை நோக்கிக் கூவி அழைக்க வேண்டும் போல் இருக்கும். அதிலும், எங்கள் வைத்தியசாலையின் வைத்தியரான டொக்ரர் விஸ்வரஞ்சன் ஒரு நாள் கடமை முடிந்து யாழ்ப்பாணத்தில் இருந்து, கே.கே எஸ். வந்து தன் வீட்டை நோக்கி நடந்துகொண்டிருந்தபோது அவரை விசாரித்து, அடையாள அட்டையைப் பார்த்து அவர் ஒரு டொக்ரர் தான் என்பதை அறிந்து கொண்டபின்னர், அவரை முன்னே போகவிட்டு பின்புறமாக நின்று சுட்டுக் கொன்றனர். அவர் பல உயிர்களைக் காப்பாற்றும் டொக்ரர் என்பதையும் நினைக்காமல் நடு வீதியிலே, அவரைச் சுட்டுக்கொன்ற அந்த கொடுமைக்குப் பின்னர், "இந்தியாவே! நீ எப் பொழுது எங்கள் மண்ணில் காலெடுத்து வைக்கப் போகின்றாய் .....?" என்று நான் அழுதேன். கே.கே.எஸ் சந்தியில், காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்த இளம் குடும்பத் தலைவன் 'திபோ' இலங்கை இராணுவத்தால் சுடப்பட்டு, இடுப்புக்குக் கீழே இயங்க முடியாத நிலையில் இன்று யாழ்ப்பாண வைத்திய சாலையில் படுத்த படுக்கையாகக் கிடக்கின்றானே....... அதை எண்ணும்போது......! இவைமட்டும் தானா.....? இலங்கை இராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும் எறிகணைகளுக்கும் இலக்காகி தினம் தினம் நோயாளிகளை கையிழந்து. காலிழந்து சில வேளைகளில் உயிரிழந்து வெறும் சடலங்களாய் கொண்டு வரும் போது என் இரத்த மெல்லாம் கொதிக்கும். ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிற நான் இந்தத் தொழி லையே விட்டுவிட்டு, துப்பாக்கி ஏந்தட்டுமா......? என்று கூட நினைப்பேன். அந்த வேளையில் எல்லாம் எங்கள் வைத்தியசாலை வாசலில், நித்திய புன்னகையுடன் நிற்கும் காந்தி அண்ணலின் சிலை எனக்கு ஆறுதல் கூறுவது போல் இருக்கும். அந்த மகானின் புன்னகையில் அத்துணை காந்த சக்தி! பாவம் அந்தக் காய்கறி வியாபாரி திபோ! அவனுக்கு இரண்டு குழந்தைகள். அவனது இளம் மனைவியோ, கணவனே கதியென்று அவன் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்ட நாள் முதல் அங்கேயே பழிகிடக்கின்றாள். சில வேளைகளில் அவனது பிள்ளைகள் உறவினருடன் வந்து பார்த்துச் செல்வதுண்டு! திபோ மீண்டும் எழுந்து நடமாடுவானா......? அந்தக் குடும்பத்துக்கு உழைத்துக் கொடுத்து மீண்டும் தன் குடும்பச் சுமையை ஏற்றுக் கொள்வானா? என்னுடைய இந்த இருபத்திரண்டு வருட வைத்தியசேவை அனுபவத்தில் அது நடை பெறாது என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், தெய்வம் என்று ஒன்றிருக்கின்றதே...... ! அது இரங்கினால் நடக்க முடியும்!
  17. விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும்! – எலோன் எச்சரிக்கை! விரைவில் அமெரிக்கா வீழ்ச்சியைச் சந்திக்கும் என செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜோ பைடன் அரசாங்கத்தில் நாட்டின் கடன், 3000 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து எலோன் மஸ்க் மேலும் தெரிவித்துள்ளதாவது ”அமெரிக்க அரசாங்கம் செலவினங்களை தீவிரமாகக் குறைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாடு விரைவில் திவால் ஆகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 5-ஆம் திகதி நடைபெறும் பொது தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹரிசும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். இருவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் எலோன் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் ட்ரம்பின் பிரச்சார குழுவினருக்கு நிதி உதவி அளித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1405484
  18. யாரெல்லாம் பதவியேறுகின்றனரோ அவர்களை வாழ்த்துவது என்கிற பெயரில் ஓடோடுவது தாங்கள் சிங்களத்துக்கு செய்த சேவையினை, தம்மை நம்பிய மக்களுக்கு செய்யும் துரோகத்தினை எடுத்து வைத்து பதவி பெறுவதற்கே. அனுரவுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கவேண்டுமென்று. முதலில் ஓடிய சிங்கத்துக்கு நல்ல விடை கிடைக்கவில்லை. கட்சியை நொறுக்கினார், அதுவே அவரது திறமைக்கு நல்ல சிறப்பு சான்றிதழ், கடந்த அரசுகளில் இவர்கள் அடைந்த சலுகைகள் அடுத்த முக்கிய சிறப்பு, இவர்களுக்கு பதவியளித்தால் என்ன நடக்குமென்று கடந்த அரசுகளின் வங்குரோத்து நிலை தெளிவாக்கியுள்ளது. இவற்றை சந்திக்க சென்ற யாரும் குறிப்பிட்டிருக்க மாட்டார்கள். அடுத்து வடக்கின் வசந்தம், காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதென்று ஓடிப்போய் விழுந்தார் காலில். விரட்டிவிட்டார், பாராளுமன்றம் வாங்கோ அங்கே வந்து காட்டுங்கள் உங்கள் திறமையை என்று. கோத்த பாய விரட்டப்பட்டபின் ஒரு குழப்பமான நிலையில், தான் பிரதம மந்திரி பதவியை ஏற்க தயார் என்றவர் ஒரு செயல்வீரன். சிங்களத்தை அவர் அறிந்து வைத்திருந்தது அவ்வளவுதான். தேர்தலில் தோற்றார் என்றால் அவரது வாழ்வே கேள்விக்குறியாகும். இவரை யார் சட்டத்தரணியாக நியமிப்பார்? அதுதான் அவரது பொய், பிரட்டல் எல்லாம் சர்வதேச தூதுவர்கள் அறிந்த விடயமாச்சே. திறமையிருந்தால் பதவி தானாக தேடி வரும், பதவியை தேடி அலைந்தால் அவமானப்பட நேரிடும்.
  19. நாங்கள் இப்படி சிந்தித்து வரவேற்றாலும்...இந்த களத்தில் சிலர் இன்னும் ரஜினி திரணகம துரோகி கதிர்காமர் துரோகி என்ற பழைய பல்லவியில் தூக்கி கொண்டு திரியினம்
  20. எங்கட தமிழ் அரசியல்..? சிவனிடம் சில நாய்கள் முறைப்பாடு ஒன்றை முன் வைத்தன. அது என்னவென்றால், ''தங்களை யாரும் மதிப்பது இல்லை, எங்கே போனாலும் தங்களை எல்லாரும் 'அடிக்' என்பதும் 'கல்லால் எறிந்து துரத்துவது' மட்டுமல்லாமல் இந்த மனிதர்கள் எங்கள் உரிமைகளை அவமானம் செய்கின்றனர். நாங்கள் அவர்களை வீட்டில் அவர்களையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாத்து வந்தும் பலன் எதுவும் இல்லை'' என்றன. சிவன் அவர்களிடம் சென்னார், 'நீங்கள் எல்லாரும் நாளை வாருங்கள்' என்று. அதற்கு சம்மதித்து, நாய்கள் மறுநாள் சென்றன. அங்கே பெரிய குவியல் சோறு இறைச்சியுடன் குழைத்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவன் அவர்களிடம், 'முதலில் சாப்பாட்டினை சாப்பிடுங்கள் பின் கதைப்பம்' என்றார். நாய்கள் சாப்பிட சென்றன. அங்கே, அவைகள் சாப்பிடுவதற்குப் பதிலாக ஒன்றுக்கொன்று பெரும் சண்டை பிடித்து, கடிபட்டன. அவை சோற்று குவியலில் விழுந்து சண்டை செய்தன. சாப்பிட முடியாமலும் சோறும் இல்லாமலும் போக சிவனிடம் அவை மீண்டும் சென்றன. 'சாப்பாடு எப்படி இருந்தது? எல்லாரும் சாப்பிட்டீர்களா?, என்று சிவன் கேட்டார். 'நாங்கள் எங்கே சாப்பிட்டோம்..? எங்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் சோறு எல்லாம் சிதறி விட்டது' என்றன. 'இதனால்தான் உங்களை யாரும் மதிப்பது இல்லை. உங்கள் பிரச்சனையை தீர்க்க முடியாத நீங்கள் எப்படி உங்கள் இனத்தின் பிரச்சினையை தீர்க்க வெளிக்கிட்டீர்கள்..? போங்க போங்க போய் உங்கள் வேலையை பாருங்கள்' என்றார், சிவன். (கதை முடிஞ்சிது)
  21. வழமையாக சிங்கள ஆட்சியாளர்கள் செய்யும் செயல் ...இது புதிதல்ல தோல்வியடையும் அரசியல் வாதிகளை அரவணைத்து அமைச்சு பதவி கொடுத்து தேசிய அரசாங்கம் என பிரச்சாரம் செய்வது அவர்களின் கொள்கை...
  22. பொது தேர்தலின் பின்னர் என்னாகபோகுதோ எம் வாழ்வு என்று அனைவருக்கும் மனசு படபடப்பது புரியுது, அந்த வரிசையில் கீழே உள்ள ஐயா அநுரவை இன்று சந்தித்திருக்கிறார், சுமந்திரன் ஏற்கனவே சந்தித்திருப்பதாக தகவல் , எல்லோரும் அடிச்சு பிடிச்சு அநுரவை சந்திப்பது தமிழ்மக்களின் அபிலாஷைகள் பற்றி பேசவாம், நம்பித்தானே ஆகணும் 'புதிய கடவுச்சீட்டுகளில் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளமையும்' ஏதாவது புதுமையா தமிழ் விசுவாசத்தை காண்பிக்கவேண்டுமென்று பார்க்கிறார் ஆனால் சரிப்பட்டு வரவில்லை, ஆங்கிலத்தை முதல் இடத்தில் வைத்தால் ஆட்டோமெட்டிக்கா தமிழ் மூன்றாம் இடத்துக்குதானே போகும் அதிலென்ன ஆச்சரியம்? அப்படி என்றால் முதலில் குழம்பவேண்டியது சிங்களவர் ஏனென்றால் அடிக்கடி அவர்கள் சொல்லிக்கொள்ளூம் ஒரு பெளத்த சிங்கள நாட்டில் சிங்களம் இரண்டாமிடத்துக்கு போய்விட்டதே.
  23. ஜெய் ஷா (அமித் ஷாவின் மகன்) உலக கிரிக்கெட் தலைவராகும் இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணி ஏன் இப்படித் தவ்வுகின்றது............... இந்திய சுழல் பந்துவீச்சில் நியூசிலாந்து சுருண்டு போகும் என்று பார்த்தால், இந்திய அணி இப்படி கவிழ்ந்து கிடக்குதே............🫢.
  24. அமெரிக்கா கனடாகாரர். ஒருவரையும் காணவில்லை 🤣 இரண்டு ஜேர்மனியார். பிச்சு. வேண்டுகிறார்கள். 🙏. நல்லாக. நடக்கட்டும்” நான் கொஞ்சம் நித்திரை. செய்து விட்டு ஒழும்பி பார்ப்பேன்
  25. தேர்தலில் தோற்றவர்கள்.. தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்றம் போவதும், ஒரு வகையில் பின்கதவு தான். சுமந்திரனுக்கு... இப்போது இருக்கும் தெரிவு, தேசியப் பட்டியல் மட்டுமே. அதைத்தான்... பிடித்து தொங்கிக் கொண்டு பாராளுமன்றம் போவார். நவம்பர் மாதம் மட்டும் பொறுத்து இருங்கள், அப்போ தெரியும் அவரின் வண்டவாளம். 🙂
  26. Paanch, நாலு எலிகளைத்தான் உடனடியாகப் பிடிக்க முடிந்தது
  27. மாறுமா? *********** தேர்தல் திருவிழாக் காலமிது-தன் தேவைக்கு வாக்குறுதி மழை கொட்டும் நேரமிது. வாசலுக்கு வந்துநிற்கும் வருங்கால.. தலைவர்களைப் பாருங்கள் வாக்குறுதிப் பொட்டலத்தை வாங்கிப்பிரியுங்கள்-உள்ளே தேன் இருக்கும் தினைமா இருகும் தித்திகும் பண்டங்கள் நிறைந்திருக்கும்-தமிழ் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி செய்வதாய்-பல திட்டங்கள் எம்முன்னே கொட்டிக் கிடக்கும். வாக்குதனை வாங்கிப்போனபின்னோ? உங்களிடம்வெறும் வாய் மட்டுமேயிருக்கும். பசியிருக்கும் கியூவிருக்கும் பட்டினியே தொடர்திருக்கும் அரசமரத்தடியில் புத்தர் சிலையிருக்கும். போதையால் அழிக்கும் போர் இருக்கும். அவர்களிடமோ? சொகுசுக் காரிருக்கும் மாளிகை வீடிருக்கும் Fபார் இருக்கும் அவர்களுக்கு நிறையப் படியிருக்கும். இவ்வளவு காலமாய் இதுவே!நடந்தது. இம்முறையாவது மாறுமா? இல்லையேல் இதுவே வாழ்க்கையா? இனங்களின் பிரச்சனை தீருமா? இலங்கையும் உலகோடு உயருமா? அன்புடன் -பசுவூர்க்கோபி.
  28. இன்று பிள்ளைகள் சொன்னாலும் கேட்காதுகள் . .......பெற்றோர்களும் பிள்ளைகள் தங்களைத் தொந்தரவு செய்யாமல் ஏதோ விளையாடுகின்றார்கள் என்று பேசாமல் இருக்கிறார்கள் ........என்ன சொல்வதென்றே தெரியவில்லை . .........அதுதான் பெருங்கொடுமை .......!
  29. மந்தையில் ஒரு கருப்பு நாயகன் .........! 😂
  30. தில்லைவினாயகலிஙகமவர்களே, மிகவும் சிறந்த ஒரு காலக்கண்ணாடியான படைப்பு. ஒருமுறை இதனை அரசியல் தலைமைகள் படித்துப்பார்த்தால்.... நிகழ வாய்ப்பில்லை. ஆனால், நிலா தேயலாம் ஓய்வதில்லை. நிலா போன்றவர்கள் வருவார்கள் என்பது தமிழினத்தின் நம்பிக்கையாக இருக்கிறது. தமிழரை, தாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரதும் ஆழ்மன ஏக்கத்தை பதிவாக்கியமைக்குப் பாராட்டுகள் ஐயா. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  31. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் கழுதை மற்றும் யானை ஜனநாயக கட்சியின் சின்னமாக கழுதை உள்ளது. இது 1828இல் தொடங்கியதாக கருதப்படுகிறது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆண்ட்ரூ ஜாக்ஸனை கழுதை என பொருள்படும் விதமாக ‘ஜாக் ஆஸ்’ என குடியரசுக் கட்சியினர் அழைத்தனர். இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அவர், கழுதையை பிரசாரங்களில் சின்னமாகப் பயன்படுத்திக்கொண்டார். கழுதை பிடிவாதம் நிறைந்தது, முட்டாள்தனமானது என விமர்சகர்கள் பார்த்தனர். ஆனால், அது அடக்கமானது மற்றும் புத்திசாலிதனமானது என ஜனநாயகவாதிகள் சிலர் கூறினர். இப்போது குடியரசு கட்சியினரின் யானையைப் பற்றி பார்க்கலாம். 1860களில் ஆப்ரஹாம் லிங்கனின் தேர்தல் பிரசாரங்களின்போது, செய்தித்தாள்களில் இது முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது என சிலர் கூறுகின்றனர். ஒருவேளை வலிமையின் சின்னமாக இருக்கலாம். எனினும், கார்டூனிஸ்டும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவருமான தாமஸ் நஸ்ட் 1874இல் இதை பத்திரிகையில் வரைந்த பின்னரே அது பிரபலமடையத் தொடங்கியது. ஜனநாயகக் கட்சி ஆதரவாளர்கள் யானையை முட்டாள்தனமானது, விகாரமானது எனக் கூறலாம். ஆனால், குடியரசுக் கட்சியினர் இதை வலிமை மற்றும் புத்திசாலிதனத்தின் சின்னம் என்று கூறினர். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், இந்த இரு சின்னங்களும் அமெரிக்காவின் இரு பிரதான கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்த பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62j4yv844do
  32. நோ நோ நோ அவரும் கட்டாயம் சொல்லிப் போடாதேங்கோ என்று சொல்லியிருப்பார்.
  33. யாழ்ப்பாணத்திலிருந்த தமிழீழக் காவல்துறையின் காவல்நிலையம் ஒன்றில் முறைப்பாடுகள் பதிவிடப்படுகின்றன 20/01/1995
  34. கோர்ட்டில். ஒரு. குற்ற. வழக்கில். சாட்ச்சிகளிடம். குறுக்கு. விசாரணை. நடைபெற்று கொண்டிருந்தது அப்போது அந்த ஊர்லயே வயசான ஒரு கிழவியை சாட்சியா விசாரிச்சுக் கிட்டிருக்காங்க...! வக்கீல் : "பாட்டி உங்களப் பத்தி சுருக்கமா சொல்லுங்க..." பாட்டி : "என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு ? உன்னைப்பத்தி சொல்லவா ? நீ சின்ன வயசுல இந்த ஊர்ல பெரிய களவாணிப் பய. சின்னச் சின்ன திருட்டெல்லாம் பண்ணி தப்பிச்சிகிட்டே..., அப்புறம் ஒருநாள் நம்ம ஊரு கோயில் உண்டியலை உடைச்சு நகை, பணம் எல்லாம் திருடிட்டே.. ஊர் மக்கள் கிட்ட மாட்டாம உன்ன உங்க அப்பன் வெளியூருக்கு கூட்டிகிட்டு போய் படிக்க வச்சான். இன்னிக்கு நீ வக்கீலா இங்க வந்து நிக்கற..." அதிர்ந்து போனார் வக்கீல். மெல்ல சமாளிச்சிகிட்டு, "சரி பாட்டி.. இந்த எதிர் தரப்பு வக்கீலை உங்களுக்கு தெரியுமா ?" ன்னு கேட்டார். பாட்டி : "தெரியுமாவா; இந்த மொள்ளமாரி சின்ன வயசுல, ஊர் பொண்ணுங்க ஒண்ணைக்கூட விட்டு வைக்க மாட்டான். சரியான பொம்பளை பொறுக்கி, பஞ்சாயத்து இவனை ஊர விட்டு ஒதுக்கி வச்சுருச்சு... இப்போ என்னமோ, கோட்டு போட்டுக்கிட்டு வந்து நிக்கிறான் !" ஜட்ஜ் : (மேஜையை தட்டி) "அரை மணி நேரம் கழித்து கோர்ட் மீண்டும் கூடும்" ன்னு உத்தர விட்டுட்டு வக்கீல்கள் இருவரையும் தன் அறைக்கு அழைத்தார். அறைக்குள் நுழைந்த அந்த இரு வக்கீல்களிடமும் ஜட்ஜ் பின் வருமாறு கூறினார் : "கோர்ட் மறுபடியும் தொடங்கிய தும் நீங்க ரெண்டு பேரும் 'இந்த ஜட்ஜ் ஐயாவை தெரியுமா?' ன்னு அந்தக் கிழவிகிட்ட கேட்டீங்கன்னா செருப்பு பிஞ்சுடும், ஜாக்கிரதை !!"
  35. இவர் போன்றவர்கள் இயக்கத்தை ஆதாரமாக வைத்து றொக்கெட் விடுபவர்கள் 🙂. தமது அடிப்படை ஆட்டம் காண வெளிக்கிட்டால் மூர்க்கமாக எதிர்ப்பார்கள். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை, இது தெரியாத ஆள் அவரில்லை, ஆனால் அவர் இந்தத் தடத்தில் வெகுதூரம் போய் விட்டார். இந்த எதிர்ப்பு பிழைப்புவாத அரசியல் மட்டுமே.
  36. வகுப்பில் குழப்படிகாரரை மாணவ தலைவனாக நியமித்தால் பிரச்சினை வராது எனும் உத்தியாக இருக்குமோ?😁
  37. பாஞ்ச் ஐயா அவர்களின் மனைவியார் விரைவில் பூரண சுகமடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்🙏
  38. அனுபவம் எனக்குப் புதிதல்ல ஒன்றுக்கு மூன்று எனது கோட்பாடும் இது தான் பெண்கள் கல்வியில் என்றும் கவனமாக முன்னேறி வர வேண்டும் அதன் பின்னர் அவர்களே சமாளித்துக் கொள்வார்கள் மிக அவதானம் இப்போதெல்லாம் பெண்கள் தங்களை ஆண்களுடன் ஒப்பீடு செய்வதை விரும்புவதில்லை ஆண் பெண் எல்லாம் ஒன்றே என்ற பதில் தான் கிடைக்கின்றது
  39. கண்டியில் இடம்பெற்ற ஒரு பிரச்சார மேடையில் சிங்களவர்களின் வாக்குகளால் மட்டும் வெற்றி பெறுவதில் பயனில்லை, அனைத்து இனத்தவரின் ஆதரவுடன் வெல்வதே பலனளிக்க கூடியது எனும் விதமாக சிங்களத்தில் உரையாற்றி இருந்தார் அண்மையில். கோத்தாவின் சிங்கள வாக்குகள் மட்டுமே தனக்கு தேவை என்ற உரை மாதிரி இவரின் உரை இல்லாதது கேட்கும் போது வித்தியாசமாக இருந்தது.
  40. திருமதி பாஞ்ச் அவர்கள் பூரணசுகம் பெற்று வாழப் பிரார்த்திக்கின்றோம் ....
  41. காணமல் போனவர்களின் உறவினர்கள் சங்கம் என்ற அமைப்பு தமது உறவுகளை தேடுதல் என்ற விடயத்தில் தீவிரமாக ஈடுபடும் போதும் அதனை திறம்பட உலகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் போது மட்டுமே அது சர்வதேச மட்டத்தில் தாக்கங்களை உண்டு பண்ணி இலங்கை அரசுக்கு அழுத்தங்களை கொண்டுவர வாய்புள்ளது. அதை விடுத்து காணாமல் போன உறவுகளை தேடும் அமைப்புகள் தன்னாட்சி சுயநிர்ணயம், தமிழரின் இறையாண்மையை மீட்டல் போன்ற அவர்களுடைய அமைப்புக்கு பொருத்தமற்ற கோரிக்கைகளை வைத்து போராட்டங்களை நடத்தும் போது அவர்களின் கோரிக்கை உலக மட்டதில் அனுதாபத்துடன் பார்க்கப்படமாட்டாது. மாறாக அவர்கள் அரசியல் கட்சிகளின் கையாட்களாக செயர்படுகிறார்கள் என்ற பார்வையையே உலக மட்டத்தில் ஏற்படுத்தும். (இதில் உண்மையும் இருக்கிறது) ஆகவே காணாமல் போனோரின் உறவினர்கள் அமைப்பு தமது உறவுகளை தேடுதல் என்ற நியாயமான கோரிக்கையை அழுத்தமாக முன் வைத்து உறுதியுடன் தன்னிச்சையாக போராடவேண்டும். அதை விடுத்து அரசியல் கட்சிகளினதும் புலம்பெயர்ந்த அமைப்புகளினதும் தேவைகளுக்காக அவர்களது கைப்பாவையாக செயற்பட்டு இவ்வாறான பொருத்தமற்ற கோரிக்கைகளை வைத்தால் அவர்கள் நகைச்சுவையாளர்களாகவே பார்ககப்படுவதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகள் கூட உலகின் கவனத்தை பெறாது.
  42. விரைவில் நலம் பெற வேண்டுகின்றேன்…!
  43. அக்கினிக் கரங்கள் புத்தகத்தின் முற்பக்கங்களில் உள்ள விடயங்களையும் இணைத்திருக்கின்றேன். 21.10,1987 .அன்று இந்திய அமைதிப் படையினரால் யாழ். போதனா வைத்திய சாலையில் கொலை செய்யப்பட்ட வைத்தியர்கள், தாதியர், ஊழியர்கள், நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்நூல் காணிக்கை! பதிப்புரை ஈழத் தமிழரின் இனப்பிரச்சினையைப் பகைப்புலமாகக் கொண்ட உண்மை நிகழ்வுகளை கலாபூர்வமாகப் பதிவு செய்து வைக்கும் பணியிலேயே, திரு.நாவண்ணனின் இலக்கிய வாழ்வின் பெரும் பகுதி கழிந்திருக்கின்றது. எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்து இன்றுவரை அவர், படைத்த இலக்கியங்கள் அதற்குச் சாட்சி. இந்த வகையில், உண்மை நிகழ்வுகளை இலக்கியப் படைப்புக்களாக உருவாக்கும் பணியில், தமிழீழ இலக்கிய வரலாற்றில் திரு. நாவண்ணனுக்கு தனித்துவமான ஓரிடம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அக்கினிக் கரங்கள் என்ற இந்தக் குறுநாவலும் அந்த வகைக்குள்ளேயே அடங்குகின்றது! 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21 ஆம், 22ஆம் திகதி களில் யாழ். போதனா வைத்தியசாலைக்குள் இந்தி யப்படை புரிந்த படுகொலையை மையமாக வைத்தே இக் குறுநாவல் எழுதப்பட்டுள்ளது. உலகின் கண்களில் இருந்து கணிசமான அளவுக்கு மறைக்கப்பட்டிருந்த இந்த வைத்தியசாலைப் படு கொலையின்போது, அதிற் சிக்கி உயிர் தப்பிய .... சாட்சிகளிடமிருந்து பெற்ற தகவல்களைக் கொண்டு நாவண்ணன் இந்தக் குறுநாவலைப் படைத்துள்ளார்! போராட்ட நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் இத்தகைய இலக்கிய முயற்சிகளுக்கு நூலுருக் கொடுத்து வெளியிடுவதில் நாம் மன நிறைவடைகின்றோம். தமிழ்த்தாய் வெளியீட்டகம் அணிந்துரை இது ஒரு 'குறுநாவல்' என்கின்ற பரிமாணத்தையும் மீறி ஒரு காலத்தின் 'வரலாற்றுப் பதிவாகவே" அமைந்திருக்கின்றது. இந்தக் குறுநாவலைப் படிக்கின்ற போது எமது சரித்திரத்தின் அந்தக் கொடூரமான கால கட்டத்தில் வாழ்ந்து - அந்தக் கொடுமையான சம்பவங்களைக் கண்டு உயிர் தப்பிய என்போன்றவர்களுக்கு, இந் நிகழ்வுகள் திரைப்படமாகவே மனதில் வந்து செல்லும். இந்த நூலில் ஆக்கிரமிப்பாளர்களின் சுயரூபம் மிக அழகாக எடுத்துக்காட்டப்படுகின்றது. உலகில் மிகப் பெரிய 'ஜனநாயக நாடு' இந்தியா என்று தம்மைப் பற்றித் தம்பட்டம் அடிப்பவர்கள் - மிகப் பெரிய இராணுவக் கட்டமைப்பைக் கொண்டவர்கள்; "ஒரு யுத்த களத்தில் காயப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்ற தொண்டர் கூட, நடு நிலையாளராகக் கருதப்பட்டு மதிக்கப்படல் வேண்டும்' என சர்வதேசச் சட்டங்களும் தர்மங்களும் கூறுகின்ற வேளையில் ஒரு மருத்துவமனை, அதனுள் சீருடைகளில் தாதிகள், ஊழியர்கள், டொக்ரர்கள், காயத்துடனும், வேறு நோய்களுடனும் இருக்கின்ற நோயாளிகள் என்கின்ற மனிதநேயம் இல்லாமல்' அங்கு அத்துமீறி நடாத்திய அநர்த்தங்கள் யாவினையும் ஆசிரியர் மிக அழகாக எடுத்துக் காட்டியுள்ளார். ஒரு நாள் உலகம் நீதி கேட்கின்ற போது, இது போன்ற உண்மை நிகழ்வுகளை உள்ளடக்கிய குறுநாவல் கள் நிச்சயமாக உண்மையை விளம்பும் மனச்சாட்சிகளாக - உறுதிப் படுத்தப்பட்ட ஆவணங்களாகத் தீச் சுவாலைகளுடன் எழுந்து நிற்கும். எதிர்கால சந்ததியினர் ஒரு காலத்தில் இங்கு என்ன நடந்தது ...... சுதந்திரம் பெறுவதற்காக இந்த மண் கொடுத்த விலை என்ன...... நாம் சிந்திய இரத்தம் எவ்வளவு...... என்பதைச் சொல்வதற்கு இந்தக் குறுநாவல் உதவும். இது எங்களுடைய தேசப்பற்றை இன்னும் வளர்த்து இந்த மண்ணிற்கு மேலும் உரமூட்ட உதவும். எதிர்காலத்தில் திரைப்படமாக்கப்பட்டு மக்களின் மனங்களில் இவை சரித்திர நிகழ்வுகளாகப் பதிவு செய் யப்படல் வேண்டும். இவ் வரலாற்றுப் பணியைச் செய்த நாவண்ணன் அவர்களை, அன்று அநியாயமாக கொல்லப்பட்டவர்களின் ஆன்மாக்களும் அவர்கள் உறவினர்களும் தமிழ் மக்களும் நன்றியுடன் நினைவு கூருவார்கள் என்றே நம்புகின்றேன். இவருடைய இலட்சியப் பணி தொடர வேண்டும் என வாழ்த்துவதோடு இது சம்பந்தமாக குறிப்பாக 1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 21ஆம், 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் நடந்த கொடூரங்கள் பற்றியும் அன்று அங்கு கொலை செய்யப்பட்டவர்கள், கடமை புரிந்தவர்கள், சிகிச்சை பெற்றவர்கள் பற்றிய மேலும் தகவல்களையும் தரவுகளையும் பெற்று இந்நிகழ்வை சரித்திரப் பெரும் நாவலாக எழுத வேண்டுமெனப் பணிவன்போடு கேட்டு மீண் டும் வாழ்த்துகின்றேன். வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர். சீர்மாறன் 23.12.1994 ஏன் எழுதினேன்? 'யாவும் கற்பனை' என்ற, அடிக்குறிப்புடனே இலக்கியம் படைக்கும் காலம் எமக்கு இன்று இல்லை. கற்பனையை விஞ்சிய அவலங்களும், அதிசயங்களும் நிகழும் யதார்த்தத்தில் நாமின்று வாழுகின்றோம்! எனவே, நாம் வாழுகின்ற காலத்தின் நிகழ்வுகளை உடனுக்குடன் கலைத்துவத்துடன் பதிவு செய்து வருங்காலச் சந்ததிக்கு வழங்கிச் செல்வது எம் போன்றோரின் நிகழ்காலக் கடமையாகும். 1989 இல் இந்தியஅமைதிப்படையின் ஆக்கிரமிப்பு மூச்சிழுக்கத் தொடங்கிய காலத்திலேயே, நண்பன் பாலநடராஜனின் ஆதரவுடன் 'காந்திய நாட்டின் காட்டுமிராண்டிகள் 'எனும் தலைப்பில் அமைதிப்படை எமக்கிழைத்த அக்கிரமங்களை பதிவு செய்யத் தொடங்கினேன். பாரிய அந்தப் பணியைத் தொடரப் போதிய பொருள் வளம் இன்மையால் ஆரம்ப முயற்சிகளோடு அது கைவிடப்பட்டது. சென்ற ஆண்டில் 'சுபமங்களா' ஆசிரி யர் திரு. கோமல் சுவாமிநாதன் அவர்கள், தமிழீழத்துக்கு வருகை தந்து சென்ற பின்னர் இலங்கை எழுத்தாளர்களுக்கான, ஈழத்தை நிலைக்களனாகக் கொண்ட குறுநாவல் போட்டியை இலங்கை தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து நடாத்துவதாக விளம்பரம் செய்திருந்தார். ஆரம்பத்தில் இதிற் கலந்து கொள்ளும் எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால். 1994 ஜூலை மாத சுபமங்களாவில் வெளியான திரு. கோமல் சுவாமி நாதனின் ‘அதிர்வலைகளை மீட்டும் யாழ்’ கட்டுரையின் சில வரிகள் என் மனதின் அதிர்வலையைத் தட்டிவிட்டன. அந்த வரிகள்….. "ஒரு காலத்தில் பல கூட்டங்களிலும் மாநாடுகளிலும் உங்கள் பிரச்சினைகள் பற்றிப் பேசப்பட்டன. ஈழத் தமிழர்களுக்கும் பொது அடைப்புகளும் பேரணிகளும் கூட நடந்தன. அரசாங்கம் கூட உங்களுக்கு ஆதரவாகப் பல உதவிகள் செய்தது. இதனை எல்லாம் நீங்கள் அறிவீர்கள்! ஆனால், ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் எல்லாமே முற்றிலும் மாறி விட்டது. மக்கள் அந்தச் சம்பவத்தின் மூலம் திகைப்பும் அதிர்ச்சியும் அடைந்தனர். பரிதாப உணர்வு ... கோபமாக மாறியது. இன்று. புலிகளின் இயக்கத்துக்கு தமிழ் நாட்டில் தடை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் ஈழத் தமிழர் பிரச்சினை அங்கு பேசப்படவில்லை .....!" மேற் கூறப்பட்ட வசனங்கள் ஓட்டுமொத்தமாக இந்தியர்களின் - இந்தியத் தமிழர்களின் கருத்து என்பதை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், நிச்சயமாக இது திரு. கோமல் சுவாமி நாதனின் கருத்து என்பதை மறுப்பதற்கில்லை. தனது கருத்தை. இந்தியர்களின் கருத்து எனக் கூறுவ தன் மூலம் அங்குள்ள தமிழீழ அனுதாபிகளைக் கூடக் கொச்சைப்படுத்த முயலும் செயல் இது என்பதையும் உணர்ந்தேன். அதேவேளையில், ஒரு ராஜீவ் காந்தியின் மரணம் இந்திய மக்களிடையே தமிழீழ மக்களுக்கு எதிரான உணர்வை இந்த அளவுக்கு ஏற்படுத்தியிருக்குமானால் ராஜீவ் காந்தியின் பணிப்பின் பேரில் இந்திய ஆக்கிரமிப்புப் படை இங்கு செய்த கொலைகளும் அட்டூழியங்களும் தமிழீழ மக்களுக்கிடையே எத்தகைய எதிர்ப்புணர்வுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்த்தவே இந்தக் குறுநாவலை எழுதவேண்டிய கடமைப்பாட்டை உணர்ந்தேன் 1987 இல் "கிறிஸ்துமஸ் நாளிலாவது யாழ்ப் பாணத்தில் யுத்த நிறுத்தமொன்றை மேற்கொள்ளலாமே!" என்று ராஜீவ் காந்தியிடம் கேட்கப் பட்டபோது."கிறிஸ்துமஸ் நாளில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ள சிறிலங்கா ஒரு கிறிஸ்தவ நாடு அல்ல." என்று ராஜீவ் காந்தி திமிருடன் கூறிய பதிலை அன்றைய நாளிதழ்களில் படித்தபோது தமிழர்களைத் திட்டமிட்டு அடக்கி அழிப்பதில் ராஜிவ் காந்தி கொண்டிருந்த வெறியைக் கண்டு மனம் நொந்தவர்களில் நானும் ஒருவன்! எனவே தான், இந்திய ஆக்கிரமிப்புப் படையின் ஆக்கிரமங்களில் ஒரு துளியான யாழ். போதனா வைத்தியசாலைப் படுகொலைகளை, தீபாவளித் தினத்தன்று அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொலை வெறியாடியதைப் பகைப்புலமாகக் கொண்டு இக் குறுநாவலை எழுதி அனுப்பினேன். கூடவே திரு. கோமல் சுவாமிநாதனுக்கு ஒரு குறிப்பும் அனுப்பியிருந்தேன்... "நீங்கள் எனது இந்தக் குறுநாவலுக்குப் பரிசு தரமாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால். 'சுபமங்களா 'ஆசிரியரும், பரிசுக்குரிய நாவலைத் தெரிவு செய்யும் நடுவர்குழுவும், இதைப் படித்தாலே போதும் ! நான் இந்த நாவலை எழுதியதன் நோக்கம் நிறைவேறியதாகக் கொள்வேன்." என்பதே அது. அந்த நோக்கம்கூட, முழுமையாக நிறைவேறியிருக்கும் என்பதில் எனக்கு ஐயப்பாடு உண்டு. யாழ். போதனா வைத்தியசாலைப் படு கொலைகளின் எட்டாவது ஆண்டு நினைவு நாளில் நூல்வடிவில் இதனை வெளியிடுவது என்று நான் முயற்சி செய்துகொண்டிருந்த போது தான், 'தமிழ்த்தாய் வெளியீட்டகம்" குறிப்பிட்ட நாளில் இந்நூலை வெளியிடுவதற்கு முன்வந்தது ! காலத்தின் தேவை கருதி இந்நூலை வெளியிடும் தமிழ்த்தாய் வெளியீட்டகத்தினருக்கு என் இதய நன்றிகள். வைத்தியசாலைப் படுகொலை அவலத்தில் சிக்கி தாம் பட்ட அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொண்டு இதனை எழுதி முடிக்க உதவியவர்களை நன்றியோடு நினைவு கூருகின்றேன். இந்தப் படுகொலை ஏனைய வைத்தியர்கள், நிகழ்வின் போது ஊழியர்களுடன் 'எக்ஸ் - றே 'பிரிவினுள் ஒளிந்து நின்று உயிர் தப்பியவரான வைத்திய கலாநிதி எஸ். பி. ஆர் சீர்மாறன் அவர்களிடம், அணிந்துரை பெற்ற தன் நோக்கமே. நான் எழுதியுள்ள உண்மைச் சம்பவங்களுக்கு அவரும் ஒரு சாட்சி என்பதால் தான்! மனமிசைந்து இந்நூலுக்கு அணிந்துரை தந்தமைக்கு என் நன்றிகள். போட்டிக்காக எழுதப்பட்ட பிரதியில் தவிர்க்கப்பட்டிருந்த சில விடயங்கள் பின்னர், திருத்தி எழுதப்பட்டு கதையோடு இணைக்கப்பட்டுள்ளன. எனது முன்னைய நூல்களுக்குக் கிடைத்தது போன்ற ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்கும் என்பதால் வாசகர்களை அன்புடன் நினைவு கூருகின்றேன். நன்றி. நாவண்ணன்
  44. பாஞ் அவர்களின் பாரியார் விரைவில் நலம் பெற வேண்டுகிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.