Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    19129
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87990
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    12678
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    38756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/15/24 in Posts

  1. அருச்சுணாவைச் சொல்கிறீர்களா? தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கும், அரசியல் பிரச்சினைக்கும், தாயக கோட்பாட்டிற்கும் எதிராக இன்றுவரை இயங்கிவரும் அநுர எனும் சிங்கள இனவாதியின் கட்சிக்கு வாக்களித்ததைக் காட்டிலும் அருச்சுணாவிற்கே வாக்களித்திருக்கலாம் என்று நீங்கள் சொல்கின்ற காலம் விரைவில் வரும். அதேவேளை யுடியூப்பில் அநுர புராணம் பாடி சொந்த வயிறு வளர்க்கும் கயவர்களின் கைங்கரியத்தினால் சிங்கள இனவாதிகள் தமிழர் தாயகத்தை ஊடறுத்திருக்கிறார்கள் என்பதையும் மறுக்கவில்லை.
  2. உண்மையில் அரசியல் சாசன மாற்ற விவகாரங்களில் (Constitutional Reform Matters) கட்சிக்கு கேந்திர (Strategic) மற்றும் நுட்ப (Technical) வழிமுறைகல் தொடர்பாக ஆலோசனைகள் வழங்க ஒரு நிபுணர் குழுமம் தேவை (Commitee of Constitutional Experts). இந்த குழுமத்தில் சுமந்த்ரனுடன் அரசியல் சாசன விவகாரங்களில் தற்கால நடைமுறைகளை (Contemporary thinking and approaches) சட்டரீதியாகவும் ஆராய்ச்சிரீதியாகவும் அணுகும் நிபுணர்கள் பங்குபெறவேண்டும். எங்களுது பல்கலைக்கழகத்தில் இருந்து இந்திய மற்றும் சிங்கப்பூர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் வாழும் தமிழர் மற்றும் தமிழர் அல்லாதோர் (External Advisors) இதில் பங்குபெறலாம். வழமையாக இது தான் நடைமுறையில் சர்வேதேச ரீதியாக பின்பற்றப்படுகின்றன வளமை. ஏனென்றால் அரசிய சாசனம் திருத்தப்படுத்தல் அல்லது மீள்வரைத்தல் என்பது உள்ளக சட்டம் மட்டும் சம்பந்தமானது அல்ல.அது பரந்து பட்ட விவகாரங்களை உள்வாங்கி பின்னர் சட்ட ரீதியாக பரணமிக்கின்ற ஒன்று. இவாறான பரந்துபட்ட அறிவு, அணுகுமுறைகள் பற்றிய தெளிவு தனி ஒருவரிடம் இருக்கும் என்று தமிழர் எதிர்பார்ப்பது சரியல்ல. துர்பார்க்கியமாக தமிழர் தனி ஒருவரை நம்பி (One man show) அல்லது தனி ஒரு தூதர் (One man saviour syndrome) தங்களை மீட்பார் என்று பண்பியல் ரீதியாக தங்களை வளர்த்து வைத்திருக்கிறார்கள். பலருடன் கலந்து ஆலோசித்து, கருத்துக்களை உள்வாங்கி தங்கள் கர்வம் (ego) சுயநலத்தை (self interest) பின்தள்ளி ஒரு குழுவாக வெற்றிகளை (collective success) அடையும் மனப்பான்மை இன்னும் வேண்டிய அளவு வரவில்லை. இந்த காரணத்தால் தகுதி உள்ளவர்கள், நிபுணத்துவம் உள்ளவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் தள்ளி நிக்கின்ற நிலைமை. எவ்வளவு புலம் பெயர்த்து மற்றைய சமூகளின் மத்தியில் வாழ்ந்தாலும் அவர்கள் இந்த விவகாரங்களை நல்ல படியாக கையாளும் போது நாங்கள் அந்த படிப்பினைகளை உள்வாங்குவதில்லை. மாறாக எங்களுடைய வரலாற்றில் மூழ்கி கிடப்பதை தவிர. ஆனால் காலம் கடந்துவிடவில்லை. மாறாக ஒரு அறிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்பியிருக்கிறார்கள். இதனை செவிமடுகின்ற ஒரு அரசியல் கட்சியாக தமிழர் தரப்பு தாங்களாகவே முன்வந்து ஒரு நிபுணர் குழுமத்தை உருவாக்க அழைப்பு விடுக்கலாம். அதில் சுமந்திரனை அவரின் சட்ட திறமைகளை உள்வாங்க இணைக்கலாம். எவ்வாறு முன்னாள் பிரித்தானிய தொழிற்கட்சி தன்னை புதிய தொழில்கட்சியாக (New Labor) மாற்றியமைத்து ஆட்சியை கைப்பற்றியதோ அதுபோல மக்களின் தீர்ப்பை உள்வாங்கி தங்களை மாற்றும் பண்பு தேவை. தலைமுறைகள் மாறும்போது (Generational change) அவர்களது அபிலாசைகள் மாறுகின்றபோது (aspirational changes) அவற்றை உள்வாங்கி புதிய பாதையை வகுப்பது தான் சாமர்த்தியமான அணுகுமுறை. அதை விட்டுவிட்டு தீர்ப்பளித்த மக்கள் மோடர்கள் என்று அடம்பிடித்தால் பின்னடைவுகள் நிரந்தரமாக்குவதுடன் வரலாறு மீண்டும் எங்களை சிக்கலுக்கு உள்ளாக்கும் இதை நான் பார்வையாளனாக இருந்து எழுதவில்லை. மாறாக தமிழ் அரசியல், தேச கட்டுமானம், மாகாணசபை மற்றும் புனர்வாழ்வு பணிகளில் பலவருடங்கள் ஈடுபட்டு அதில் இருந்து ஒதுக்கியவன் என்ற வகையில் எழுதுகிற கருத்து.
  3. அந்த ஈரவெங்காயமெல்லாம் அநுரவுக்கு தெரியும், நீங்கள் உங்கள் சமூகத்தின் பிரச்சனைகளை மட்டும் பார்த்தால் போதுமானது. ரணிலின் ஆட்சியில், ரணில்கூட விடுதலைபுலிகள் இறுதியுத்தம் பற்றி பேசியது குறைவு, பதவியிலிருந்த காலம் முழுவதும் இந்தியாவுக்குபோய் புலிகளை அழித்தோம் என்று பேசுவதும் இலங்கையிலிருக்கும்போது பயங்கரவாதத்தை ஒழித்தோம் என்று அடிக்கடி பேசுவதும், ஐநா பொறுப்புக்குறல், பயங்கரவாத தடைச்சட்டம் என்று பதவி துண்டுக்காக தமிழ் மக்களின் மனங்கள் பற்றி எந்த கவலையும் கொள்ளாது சிங்கள எஜமான விசுவாசத்துக்காக வன்மம் கக்கினார் மனிதன். அதே வாயால் ஈஸ்டர் குண்டுவெடிப்பு பற்றி அதிகம் பேசியதில்லை. இன்று தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்துவிடுவார்களோ தமது இடம் பறிபோய்விடுமோ என்ற என்ற ஒரு பயத்தில் தமிழ் மக்கள் பற்றி அக்கறை கொள்கிறார். இலங்கையின் வரலாற்றில் அன்றிலிருந்து முள்ளிவாய்க்கால் முடிவுவரை தமிழ்மக்களுக்காக இஸ்லாமிய சமூகம் கவலைப்பட்டதா வரலாறே இல்லை, மாறாக சிங்களவனுடன் சேர்ந்து பாற்சோறு சாப்பிடுவார்கள். அநுர நல்லது செய்கிறாரோ கெட்டது செய்கிறாரோ, இனிமேல் உங்கள் ஆலோசனைகள் அவருக்கு தேவைப்படாத அளவிற்கு பெரும்பான்மையிலிருக்கிறார். தமிழ்மக்கள் நல்லிணக்கம் எல்லாம் அநுரவுக்கு வாக்களித்த அவர்களுக்கும், வாக்கு பெற்ற அநுரவுக்குமான பிரச்சனை உங்களுக்கானதல்ல. எவரெல்லாம் இந்த தேர்தலின் முடிவில் தூக்கியெறிய்யப்படவேண்டுமென்று ஆசைப்பட்டோமோ அவர்களெல்லாம் ஏறக்குறைய 90% தூக்கி வெளியே வீசப்பட்டதில் அனைவருக்கும் மகிழ்ச்சி.
  4. நல்ல கருத்து. —————— இங்கே இரெண்டு விடயத்தை கூற மறந்து விட்டேன். 1. இன்று என் பி பி வென்றது போல அதீத பெரும்பான்மையுடன் இன்னொரு கட்சியும் தென்னிலங்கையில் வெல்லலாம். அது மிக பெரும் இனவாத கட்சியாகவும் இருக்கலாம். பெளத்த சிங்கள பேரினவாதம் உறங்கு நிலையில்தான் உள்ளது என்பதை நாம் பலர் ஏற்கிறோம். அடுத்த தேர்தலில் இது மீண்டு வரலாம். அடுத்த தேர்தலில் இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் என் பி பி ஆட்சியை விட்டு இறங்கத்தான் போகிறது. தமிழர்களும், முஸ்லிம்களும் இன்னும் 10 வருடம் இலங்கையில் சுயாதீனமாக படிக்க, வாழ, வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படின் - அது இனவாத்ததின் கண்ணை கட்டாயம் குத்தும். டிரம்ப் இரு முறை ஜனாதிபதியாக முடியும், பிரெக்சிற் ஒப்பேறும், லெபென் ஜனாதிபதி மாளிகை கதை தட்ட முடியும் எனும் போது…இலங்கையில் இவற்றை விட இனவாதம் மீள, ஆட்சிக்கட்டில் ஏற வாய்ப்பு மிக அதிகம். நாம் இப்போ எமது கோரிக்கைகளை என் பி பி யை நம்பி கைவிட்டு விட்டு, ஒற்றை ஆட்சிக்குள் சந்தோசமாக ஒண்ணுக்கு இருக்கலாம்….ஆனால் நான் மேலே சொன்ன ஒரு நிலை வரும் போது எமக்கு எதுவித பாதுகாப்பும் இருக்காது. இந்த பட்டறிவுதான் தலைவரை “மீள பெற முடியாத அதிகாரங்களுடனான அலகு” என்பதில் கடைசிவரை உறுதியாக இருக்க வைத்தது. 2. மேலே நான் எழுதியது விளங்கினால் - நான் என் பி பி க்கு போட்டவர்களை குறை சொல்லவில்லை என்பது புரியும். அவர்கள் என் பி பி மகுடியில் மயங்கி இனவாத பாம்பை மறந்து விட்டார்கள். வாக்காளர் எப்போதும் சரியான முடிவெடுப்பதில்லை. நாஜிகள் முதலில் தேர்தலில் வென்றுதான் ஆட்சியை அடைந்தார்கள். வாக்காளர் தூர நோக்கற்று, குறுகிய கால நோக்கில் தவறாக வாக்களித்த உதாரணங்கள் பலவுளன.
  5. நேற்று 10 ஆம் பக்கத்தில் விட்டுட்டுப் போய் வந்து பார்த்தால், இப்ப 26 போகுது. ஆனால், a mixed bag of gifts போல நல்ல, நல்லதல்லாத பல விடயங்கள் சில நடந்திருக்கின்றன: 1. சுமந்திரன், தாயக மக்களால் நிராகரிக்கப் பட்டிருக்கிறார். எனக்கு ஏமாற்றம் தான், ஆனால் நான் அல்லவே வாக்காளன்? எனவே, மக்கள் முடிவின் படி, அவர் மீள எந்த வழியிலும் தமிழ் அரசியலில் பங்கு பற்றாமல் விலகி விட வேண்டும். இனி பேச்சு, ஏச்சு கேட்க வேண்டியதில்லை. அவருக்கு நிம்மதி😂! 2. சாணக்கியன் வென்றிருக்கிறார். படிப்படியாக தமிழரசின் தலைமையை அடையும் வரை அவர் தொடர்ந்திருக்க வேண்டும். 3. சிறிதரன், இனியாவது ஊழலை விட்டு விட்டு, கமுக்கமாகவாவது நல்ல விடயங்களைச் செய்ய வேண்டும். 4. அர்ச்சுனா: இவரது வெற்றிக்கு ஒரு காரணம் இருக்கிறது. அதை அவர் புரிந்து கொள்வாரா என்பது தான் முக்கியமான கேள்வி😎. எல்லா இடத்திலும் அகலக் கால் வைக்காமல், லேசர் fபோகஸ் மாதிரி "மருத்துவ துறையில் முறைகேடான விடயங்கள், malpractice என்பன குறித்து புதிய சட்டங்களை இயற்ற, அல்லது இருக்கிற சட்டங்களை பலமாக்க முயற்சி செய்ய வேண்டும். அதை மட்டும் செய்தாலே முழு இலங்கைக்கும் பெரிய நன்மை செய்த பெருமை கிடைக்கும். 5. NPP யில் தெரிவான தமிழ் உறுப்பினர்கள்: இவர்களிடம் பாரிய எதிர்பார்ப்பு மக்களுக்கு இருக்கும். இதை NPP யோடு இணைந்து இவர்கள் செய்ய வேண்டும் என்பது தான் என் எதிர்பார்ப்பு. மணல் கொள்ளை, போதை, மது வியாபாரங்கள், வாள் வெட்டு, பொலிசின் நேர்மை இவை போன்ற விடயங்கள் மிக அடிப்படையான baseline விடயங்கள். இதெல்லாவற்றையும் விட பெரிய பொறுப்பு, புலத் தமிழ் செயல்பாட்டாளர்களுக்கு இருக்கிறது: அது sit on your hands! இது வரை செய்ய முயன்று தோற்ற ரிமோட் கொன்ட்ரோல் அரசியலைக் கைவிட்டு விட்டு "உங்கள் பிள்ளை குட்டிகளைப் படிக்க வையுங்கள்" - நானும் அதைத் தான் செய்யப் போகிறேன்🤐.
  6. அநுர யாழ்ப்பாணத்தில் வென்றதை விட, டக்ளஸ் தோற்றது தான் அதிக மகிழ்ச்சியை அளிக்கிறது.
  7. அப்பா "தனக்கெடாச் சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்" என்று சின்ன வயதிலேயே சொன்னதால் எனக்கு சிங்களமும் தெரியாது. சிங்கள நண்பர்களும் கிடையாது. ராத்திரித்தான் Google Translate துணையுடன் “தோழர் அநுர” என்றால் “அநுர சகோதரய” என்று அறிந்தேன்😊 ஆகவே, அநுர சகோதரயவுடன் X தளத்தில் இணையவுள்ளேன்! மெல்ல மெல்ல சிங்களம் பழகுவோம்☺️
  8. இப்போது நடந்துகொண்டிருப்பது எல்லாம் போலிகளை அப்புறப்படுத்தும் அரசியல்… என்டைக்கு தனிப்பட்ட ஆசன அரசியலுக்காக வீட்ட விட்டு சைக்கிள், மான், சங்கு, மாம்பழம் என்டு பிரிவினைகள் கூறி ஓடினீங்களோ அன்டைக்கே நாம் இனமாக தோற்றுவிட்டோம்.. இந்த மக்கள் அப்பழுக்கற்ற மக்களுக்கான தலைவனை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்… அப்படியான தலைவர்களை கண்டடையும் போது மக்கள் அவர் பின் திரள்வார்கள்... இனிமேல் சரி ஆத்மார்த்தமான மக்கள் அரசியல் செய்யும் தலைவர்கள் நம் தமிழ்தேசிய பரப்பில் வரவேண்டும் - அதற்கான வாய்ப்பை தமிழ்மக்களான நாம் வழங்க வேண்டும்… போலித்தமிழ்தேசியவாதிகள் இப்பொழுது கூப்பாடு போடுவதுபோல் அல்ல.. தமிழ்தேசியத்திற்கு அழிவில்லை. போலிகளே அடிவாங்கியுள்ளார்கள்.. போலித்தமிழ்தேசியவாதிகள் நீங்கள் எல்லாம் ஒழிந்து தொலைந்தபின் யாராவது நல்லவர்கள் மூலம் மீண்டும் எழும்.. தமிழ்தேசியம் ஒரு போதும் வீழாது... ஒரு தேர்தலால் ஆயிரமாயிரம் ஆண்டு கால நம் உணர்வுகளை வீழ்த்த முடியாது…
  9. நல்ல கருத்து ஆனால் வன்னிக்கு ஏற்கனவே 4 தமிழர்கள் தெரிவு எனவே அம்பாறைக்கு கொடுப்பதே சிறப்பு, ஏனெனில் இந்தக் காகங்களால் அங்கு சரியான தொல்லை.
  10. மாற்றம் ஒன்றே மாறாதது. மக்களின் தீர்ப்பிற்கு தலை வணங்குகிறேன். இலங்கை முழுவதும் ஒரே சிந்தனையாக ஊழல் ஒழிப்பு மற்றும் பழையவர்கள் அகற்றல் நடந்தேறி இருக்கிறது. அநுராவிடம் மிகுந்த நம்பிக்கையுடன் கேட்டதற்கும் மேலான பலத்துடன் பந்து கொடுக்கப்பட்டுள்ளது. மிகுந்த பொறுப்பு. இனி அவரது ஆட்டம்.
  11. என் பி பி வெல்லாத ஒரே ஒரு தேர்தல் மாவட்டம்…… மட்டக்களப்பு! எத்தனை துரோகம், எத்தனை அநியாயம், அத்தனைக்கும் பிறகும். # தமிழ் தேசியத்தின் இறுதிப் புகலிடம்
  12. https://www.youtube.com/watch?v=SHI_aTAVwGI மனதை தொட்ட பதிவு . நேரம் உள்ள போது பார்க்கவும்
  13. "சிரிக்க மட்டும் " *தேர்தலுக்கு முன்பு.* *தலைவர்* : ஆம். மீண்டும் நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தவற விட மாட்டோம். *மக்கள்* : நீங்கள் நாட்டை கொள்ளை அடிப்பீர்களா..? *தலைவர்* : கனவிலும் கூட அப்படி நினைக்க மாட்டோம். *மக்கள்* : நீங்கள் எங்கள் மேன்மைக்காகவே பாடுபடுவீர்களா...? *தலைவர்* : ஆம்....நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மிக அதிகமாகவே.. *மக்கள்* : உங்கள் ஆட்சியில் விலைவாசி உயருமா...? *தலைவர்* : அதற்கெல்லாம் நிச்சயம் வாய்ப்புகளே இல்லை. *மக்கள்* : நல்ல வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவீர்களா..? *தலைவர்* : நிச்சயம் செய்வோம். அதிலென்ன சந்தேகம்.! *மக்கள்* : ஆட்சிக்கு வந்தால் ஊழல் செய்வீர்களா..? *தலைவர்* : உங்களுக்கென்ன பைத்தியமா...அப்படியெல்லாம் சிந்திக்கவே அவசியமில்லை... *மக்கள்* : உங்களை நாங்கள் முழுமையாக நம்பலாமா..? *தலைவர்* : ஆம்.. *மக்கள்* : நீங்கள் தான் எங்கள் தலைவர். ( தேர்ந்தெடுக்கப்பட்டதின் பிறகு...) மீண்டும் கீழிருந்து மேலாகப் படிக்கவும்.. சிரிக்க மட்டும் ...
  14. இனியாவது இந்த தேர்தல் முடிவுகள் தமிழ் கட்சிகளை ஒன்றிணைய உதவட்டும். சிந்திக்கட்டும். உதாரணத்திற்கு என் இனத்தை நான் சார்ந்தவனே நெறிப்படுத்த வேண்டும்.
  15. நூறு வீதம் உடன்படுகிறேன் ...ஒர் நிரந்தர தீர்வை இந்த அனுரா அர்சிடமிருந்து பெற்று கொள்ளாவிடில் எமக்கு ஆபத்து உண்டு ...வாக்காளர்கள் எமது நாட்டிலயே பல தடவைகள் பிழை விட்டுள்ளார்கள்
  16. நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாய்ப் போய் விட்டதே... -சுமந்திரன்-
  17. அனுரவிற்கு தமிழ் மக்கள் வாக்களித்தமைக்கு வெறுமனே Youtubers தான் காரணம் என்று சொல்வது உண்மையான காரணங்களை மலினப்படுத்தி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கின்ற செயல். இதே யாழில் பெப்ரவரியில் இருந்து தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கட்சிகளை நிராகரித்து சிங்கள தேசிய கட்சிகளை நோக்கி செல்லப் போகின்றனர் என்று தொடர்ச்சியாக எழுதி வந்துள்ளேன். காரணம் தமிழ் தேசிய கட்சிகளின் போலி வேசமும் அவர்களை இயக்கும் சுயநலம் பிடித்த புலம்பெயர் தமிழ் அமைப்புகளும். அத்துடன் இன்றைய நிலையில் நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை பற்றி மட்டுமே பேசிக் கொண்டு தமிழ் மக்கள் இம்மி அளவேனும் முன்னேறும் எந்த வழிமுறையையும் இவர்கள் செய்யவில்லை. கோசான் யாழ் சென்ற வந்த பின் இவ் வருட தொடக்கத்தில் எழுதிய பயணக்கட்டுரையிலும் ஜேவிபி இற்கான ஆதரவு அங்கு பெருகின்றது என குறிப்பிட்டு இருந்தார். இனி என்ன, அடுத்த ஐந்து வருடங்களுக்கு இந்த தேசிய மக்கள் சக்தியால் தமிழ் மக்களுக்கு நாசம் விளைய வேண்டும் என்று திட்டிக் கொண்டும் எதிர்பார்த்துக் கொண்டும் இருக்க வேண்டியது தான். ஏனெனில் அவ்வாறு செய்தால் தான் அதன் விளைவாக தமிழ் மக்கள் மீண்டும் தமிழ் தேசியம் நோக்கி நகர்வார்கள் என்ற எதிர்பார்ப்பில்.... ஆனால் அவ்வாறு நிகழாமல் தமிழ் சனம் எதை எதிர்பார்த்து வாக்களித்தனரோ அவை இனியாவது நிறைவேறட்டும் என உளமாற விரும்புகின்றேன்
  18. வினா 34) கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள்கட்சி முதலிடம் 20 பேர் சரியாக பதில் பதில் அளித்திருக்கிறார்கள். இவர்களில் நிலாமதி இக்கட்சி 14 இடங்களை பிடிக்கும் என சரியாக கணித்திருக்கிறார். 1)பிரபா - 22 புள்ளிகள் 2) புரட்சிகர தமிழ் தேசியன் - 20 புள்ளிகள் 3) நிலாமதி - 20 புள்ளிகள் 4) கந்தையா 57 - 18 புள்ளிகள் 5) தமிழ்சிறி -18 புள்ளிகள் 6) வீரப்பையன் - 18 புள்ளிகள் 7) வாலி - 18 புள்ளிகள் 8)சுவைபிரியன் -16 புள்ளிகள் 9) Alvayan - 16 புள்ளிகள் 10) ஈழப்பிரியன் - 16 புள்ளிகள் 11) வில்லவன் - 16 புள்ளிகள் 12)வாதவூரான் - 16 புள்ளிகள் 13)நிழலி - 16 புள்ளிகள் 14)ரசோதரன் - 16 புள்ளிகள் 15) கிருபன் - 14 புள்ளிகள் 16) goshan_che - 14 புள்ளிகள் 17) நுணாவிலான் - 14 புள்ளிகள் 18) வாத்தியார் - 12 புள்ளிகள் 19) சுவி - 12 புள்ளிகள் 20) புலவர் - 12 புள்ளிகள் 21) புத்தன் - 12 புள்ளிகள் 22) சசிவர்ணம் - 12 புள்ளிகள் 23) அகத்தியன் - 8புள்ளிகள் 24) குமாரசாமி - 8 புள்ளிகள் 25) வசி - 6புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 27 - 31, 33, 34, 38 - 42 , 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 39)
  19. யாழ்ப்பாணத்தில் தமிழரசு கட்சியின் தேல்விக்கு முக்கிய காரணம் சுமந்திரனே ஆகும். - ஒரு குழுவாக செயற்படாமை, தனது கட்சியின் தலைமை வேட்ப்பாளருக்கு எதிராக நிறுவப்படாத ஊழல் கட்டுக்கதைகளை பரப்பியமை. - தனது வெற்றிக்காக பிணாமி வேட்ப்பாளர்களை நியமித்தமை, அவர்கள் அனைவரும் ஒரே சமூக அந்தஸ்து ( social status) உடையவர்கள். - மக்களின் மனநிலை அறியாமல் மேட்டிக்குடி அரசியல் பேசியமை - மக்களுக்கும், அநுராவுக்கு இடையில் இடைத்தரகர் அரசியல் செய்ய நினைத்தமை. - தமிழரசு கட்சியை சமூக இயக்கமாக மாற்றாமல் ( NPP போல் ), தனது இருப்பை தக்க வைக்க செயற்பட்டமை என்று பலவற்றை கூறலாம்
  20. ஐயா, இப்படி ஜனாதிபதி கட்சி வோட்டு போட்டுத்தான் காரியம் சாதிக்க வேணும் என்டா அதை 1977 இல் அதி உத்தமர் ஜேஆர், அல்லது 2010 இல் புனிதர் மகிந்தர், அல்லது 2019 இல் கோமான் கோட்டவுடன் சேர்ந்து செய்யச்சொல்லி ஏன் நீங்கள் மக்களை கேட்கவில்லை? அனுர என்ன வானில் இருந்தது வந்த மீட்பரா? முள்ளிவாய்க்கால் நேரம் காலம் தாழ்த்தாது போரை முடியுங்கள் என மகிந்தவை அழுத்திய கட்சியில் அப்போதே இவர்தான் தலைவர். அனுரவுக்கு நீங்கள் வாக்களிப்பதாயின்…போர்குற்ற விசாரணை, காணாமல் போனோர், காணி, பொலிஸ் அதிகாரம், அதிகர பகிர்வு இவை எதுவும் தமிழருக்கு தேவை இல்லை என நீங்கள் கருதுவதாகவே அர்த்தம். அப்படித்தான் இலங்கை அரசு இதை விளம்பரப்படுத்தும். உலகமும் ஏற்கும். இந்த நிலைப்பாட்டை எடுத்த மக்களை நான் தூற்றவில்லை, ஆனால் இத்தனை கால இழப்பை மறந்து இப்படி செய்தத்து, சுயநலத்தின் அடிப்படையிலே ஒழிய கொள்கைக்காக அல்ல. அதைத்தான் நான் சொல்கிறேன். அத்தோடு எதிர்கால பின் விளைவுகளை சீர்தூக்கி பார்க்காத ஒரு முடிவும் கூட. அருச்சுனா குழு இந்த தேர்தலில் போட்டியிட்டிருக்காவிட்டால் நான் மக்களுக்கு வேறு வழி இல்லை என்பதை ஏற்றிருப்பேன். ஆனால் இங்கே அவர் ஒரு மாற்றாக இருந்தார். அவரை விட அவர் குழுவில் நம்பிக்கை தரும் புதியோர் இருந்தனர். ஆனால் நேரடியாக அனுரவிடம் சலுகை பெறும் எண்ணமே என் பி பி க்கு போட வைத்தது. நான் எனது பயண கட்டுரையில் எழுதியதையும், அதற்கு நீங்கள் கொடுத்த பதிலையும் மீள வாசியுங்கள். அதே👏
  21. இனிமேல் மட்டக்களப்பான்ஸ் இடம் தமிழரசுக்கட்சியைக் கொடுத்துவிடுங்கள். அவனுகள் திருந்துவானுகள்.
  22. 👆உண்மையை உரக்க சொல்ல என்றும் பின்னின்றதில்லை. உங்கள் கெத்து அர்த்தமானதுதான். வாழ்த்துக்கள். நிற்க…. இபோதும் பிள்ளையானுக்கும், கருணாவுக்கும் போட்டோர் பிரதேசவாதிகளே. ஆனால் இங்கே நீங்கள் கழுவி ஊத்திய தமிழ் தேசியம் குறிப்பாக சாணாக்ஸ் - - - மக்களால் அதி விசேட சித்தி கொடுத்து அனுப்பப்பட்டுள்ளனர். யாழ்பாணத்திலும் வன்னியிலும் கூட என் பி பி ஒரு சீட்தான் எடுத்திருக்க வேண்டும் ஆனால் அரசியல்வாதிகளின் கோமாளளித்தனம் - அதை அதிகரிக்க செய்துள்ளது.
  23. சிங்களக் கட்சிகளுக்கு வாக்குப் போட்டால் தங்கள் நிலங்கள் பறிபோகும் என்றுஉணர்ந்து கொண்ட கிழக்கு மாகாண மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து ஓரளவு ஆசனங்களைப் பெற்றுள்ளனர்.யாழ்மாவட்டதில் தங்களுக்குள் அடிபட்டு கட்டியிருந்த கோவணத்தையும் தாங்களே உருவிக் கொடுத்துள்ளனர்.தேசிய மக்கள்சக்தி வேட்பாளரை முன்னிறுத்தாமல் கொள்கைகளை முன்னிறுத்தி வாக்குக் கேட்டனர்.அவர்களுக்குள் வேட்பாளர்களுக்குள் போட்டியில்லை.அதனால் முகந்தெரியாத வேட்பாளர்கள் வென்றுள்னர்.அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய அரசியல் கட்சி ஒன்றை கட்ட எருப்ப வேண்டும்.அதற்கு புதிய சின்னமும் புதிய வேட்பாளர்களும் களமிறக்கப்பட வேண்டும்.அன்றேல் தமிழ்த்தேசியம் அழியும்.
  24. மனோ கணேசனைத் தவிர மற்றையோர் மண் கவ்வியது மிகுந்த சந்தோஷம்😂🤣!! ஊரில் இருந்திருந்தால் 5 இலட்சத்திற்கு வெடி🧨⛓️‍💥 கொளுத்தியிருப்பேன்😁
  25. உறுதியானது சுமந்து வெளிய சிறீ உள்ள. பிரதேசவாத மட்டக்களப்பான்ஸ் தேசிக்காய்களாக உணர்ந்ததருணம். மாரித்தவாக்கை சான்ஸ் உள்ள, இந்தமுறை புள்ளை இல்லாததால் ஒழுங்கான அரசியல் செய்யவேண்டிய நிலை
  26. எனது அபிப்பிராயத்தில் சுமந்திரன் கூட இதன் தாற்பரியத்தினை புரிந்திருக்கவில்லை என நினைக்கிறேன், ஆரம்பத்தில் அனுரவிற்கு ஆதரவான கருத்தினை தெரிவித்திருந்ததாக நினைவுள்ளது, அது தனிப்பட்ட ரீதியில் அனைத்து தமிழ் அரசியல்வாதிகளையும் பாதிக்கும் என்பதனை அறியாத நிலையில் அல்லது குறைவாக மதிப்பிட்டிருக்கலாம், பின்னர் அனுரவை தீவிரமாக எதிர்க்க ஆரம்பித்ததன் நோக்கம் அது தற்போதய அனைத்து தமிழ் அரசியல்வாதிகளின் (சுமந்திரன் உட்பட) அரசியல் வாழ்க்கை முற்றுப்புள்ளியாகிவிடும் எனும் பயத்தில். இந்த அரசியல்வாதிகள் அனைவரும் வீட்டுக்கு போகவேண்டியவர்களே, ஆனால் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை பேசக்கூட முடியாத நிலையினை புதிய சட்டமைப்பு மூலம் தமிழ் மக்களிற்கான நிரந்தர நீதி மறுப்பாக இந்த கட்சி உருவெடுக்குமோ எனும் பயமே தற்போது உள்ளதால், சுமந்திரன், சிறி போன்றவர்களை பற்றி கவலைப்படுவதனைவிட மக்களை பற்றி கவலைப்படவேண்டியதுதான். இவர்கள் தேர்தலில் வெல்வதாலும் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை ஆனால் மக்களின் பணம் பாதுகாக்கப்படும் நிலையே காணப்படுவதால் அனைத்து வழிகளிலும் நன்மைதான் இவர்கள் தோற்பது. ஆளும் கட்சியுடன் இனைந்து பயணிக்கும் தமிழ் அரசியல்வாதிகளாவது ஊழல் பாரம்பரியத்திலிருந்து விலகி மக்களுக்கு உதவி செய்யட்டும்.
  27. அருண் ஹேமச்சந்திரா திருகோணமலையில் வெற்றி https://tamilwin.com/article/ma-sumanthiran-regarding-the-national-list-1731646785
  28. அங்கை எல்லா யூடியூப்பரும் சுமந்திரன் வெளியில் என்று கத்துகினம் நீங்க என்னடாவென்றால் ..வேறுமாதிரி .. அய்யா...சனம் நம்ம அரசியல்வாதிகளில் வெறுப்பில் இருக்கினம் ...இந்த கட்சிகளின் பெயரில் எந்த மாடு வந்தாலும் அடிதான் விழும்...நம்மை நம்பி உயிரிழந்தோரினை மனதிடையிருத்தி மீதி காலத்தைக் கழிப்போம்
  29. இந்த நற்செய்தியுடன் நித்திரைக்குப் போகின்றேன்💤😴
  30. வெறும் சமூகவலைத்தளங்களில் லூசு ஆட்டம் போட்டால் கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவியைக் கொடுக்கும் அளவுக்கு எம் மக்களில் 10 வீதத்தினர் உள்ளார்கள். மிகவும் வெட்ககேடான, கவலைக்குரிய விடயம்
  31. இதை பற்றி இனி புலம்பெயர்ந்த நாங்கள் கதைப்பது அழகல்ல மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள் அதற்கு இணங்க மக்கள் வாழட்டும் நான் பிறந்த வீட்டில், அதன் சூழலில் சிங்களம் படித்த தமிழ் பட்டதாரிகள் பலரும் இருக்கின்றார்கள். அவர்களுக்கு இல்லாத அறிவா எங்களிடம் இருக்கின்றது . அங்கிருக்கும் மக்கள் தயார் நாங்கள் தான் இன்னும் எதோ ஒன்றுக்குள் ஒளிந்து கொண்டிருக்கின்றோம்
  32. தேசிய மக்கள் சக்தியினரால் பாராளுமன்றத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பான்மை வெற்றியென்பது தமிழர்களுக்கு எவ்வாறான மாற்றத்தைக் கொண்டுவரும்? தேசிய மக்கள் கட்சியினர் நேற்றைய‌ பாராளுமன்றத் தேர்தல்களில் அடைந்திருக்கும் பெரும்பான்மை வெற்றியின் ஊடாக அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றனர். இக்கட்சியினர் முன்னர் தமிழ் மக்கள் தொடர்பாக சில விடயங்களைச் செய்வதாக உறுதியளித்திருந்தார்கள். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை அடைந்திருக்கும் இன்றைய நிலையில் இக்கட்சியினர் தமிழ் மக்கள் தொடர்பாக எவ்வாறான விடயங்களைச் செய்யலாம் என்பதுபற்றிப் பார்க்கலாம். 225 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் இக்கட்சியினர் 159 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கிறார்கள். இவ்வாறு வெற்றிபெற்றவர்களுள் பெரும்பான்மையினர் முதற்தடவையாக பாராளுமன்றம் வருபவர்கள். இவர்களுள் சிலர் வடக்குக் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர்கள். அரசியல்க் கைதிகளின் விடுதலை தேர்தலிற்கு சில நாட்களுக்கு முன்னர் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர‌ குமார திசாநாயக்க வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு விஜயம் செய்திருந்தார். தமிழர்களின் இரு முக்கிய நகரங்களான யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகியவற்றில் தனக்கான ஆதரவினைப் பலப்படுத்தும் நோக்கில் அப்பகுதிகளில் கூட்டங்களை அவர் நடத்தினார். வவுனியா கூட்டத்தில் பேசும்போது தமிழ் அரசியல்க் கைதிகளைத் தொடர்ந்தும் தடுத்துவைத்திருக்கும் நோக்கம் தனக்கில்லை என்று பொருள்பட அவர் பேசினார். "பிரதம நீதியரசர் முன்வைக்கும் சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ் அரசியல்க் கைதிகளை விடுவிக்கும் முயற்சிகளை நாம் முன்னெடுப்போம்" என்று அங்கு அவர் கூறினார். வடக்குக் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் காணிகளை விடுவித்தல் வவுனியா கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அநுர, முன்னைய அரசாங்கங்களினாலும், அரச அதிகாரிகளினாலும் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தமிழருக்குச் சொந்தமான நிலங்களை விடுவிக்க தான் ஆவன செய்வதாகக் கூறியிருந்தார். தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட அவரது சிங்கள மொழி உரையில் தமிழர்களிடமிருந்து அடாத்தாக அரசுகளால் பிடுங்கப்பட்ட காணிகளை மீள ஒப்படைக்க விரும்புவதாகவும், தமிழ் மக்கள் பல தசாப்த்தங்களாக முகங்கொடுத்து வருகின்ற அரச அடக்குமுறைகளைத் தணிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்."நாம் வடக்கில் காணிகளை வழங்கினால் தெற்குக் கொந்தளிக்கிறது, அவ்வாறே தெற்கிற்கு வழங்கினால் வடக்கு கொந்தளிக்கிறது" என்று அவர் பேசினார். வடக்குக் கிழக்கில் சிங்களவர்களைக் குடியேற்றுவதைத் தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்று தொனிப்படவே அவரது கருத்து அமைந்திருந்தது. ஆனால் தனது கருத்திற்கான ஆதாரங்களை அங்கு முன்வைப்பதை அவர் தவிர்த்துக்கொண்டார். முள்ளிவாய்க்கால் இனக்கொலை நடந்தேறி பதினைந்து வருடங்களை கடந்த நிலையிலும் இன்றுவரை வடக்குக் கிழக்கில் பெருமளவு பிரதேசங்களை சிங்களப் படைகள் ஆக்கிரமித்தே வைத்திருக்கின்றன. இதே காலப்பகுதியில் சிங்கள பெளத்தர்கள் தமிழர் தாயகத்தில் வாழ்ந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி மேலும் பல பிரதேசங்களை தொல்லியல்த் திணைக்களமும், வனப் பாதுகாப்புத் திணைக்களமும் ஆக்கிரமித்து வைத்திருக்கின்றன. வடக்குத் தமிழரின் நிலங்கள் முன்னைய அரசுகளால் ஆக்கிரமிக்கப்பட்டமைக்கான காரணங்கள் எவ்வாறு இருந்தபோதிலும் நாம் அவற்றினை விடுவிக்க ஆவன செய்வோம் என்று அவர் வவுனியா உரையில் கூறியிருந்தார். தேசிய மக்கள் சக்தியில் விஞ்ஞாபனத்தில் "நிலப் பகிர்ந்தளிப்பில் காணப்படும் பாகுபாடுகள் தனியார்மயப்படுத்துவதனால் உருவாக்கப்பட்டவை" என்று குறிப்பிட்டிருந்தது. ஆக, காணிகள் தனியார்மயப்படுத்தப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுவதாலேயே அதுகுறித்த அரசியல்ப் பிரச்சினை உருவாகிறது என்று அது நியாயப்படுத்தியிருந்தது. ஆகவே இக்காணிப்பிரச்சினையினைத் தீர்த்துவைக்க தற்காலிக நீதித்துறை அமைப்பொன்றினை உருவாக்கி, இப்பிரச்சினைக்கான நீதியானதும், விரைவானதுமான தீர்வுகளை வழங்க தான் விரும்புவதாக அக்கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் மேலும் தெரிவித்திருந்தது. இன்றைய நாள்வரை தமிழர் தாயகத்தில் இராணுவ ஆக்கிரமிப்புக்களும், சிங்களவர்களால் மேற்கொள்ளப்படும் காணி அபகரிப்புக்களும் இடைவிடாது நடந்துகொண்டே இருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
  33. தமிழ்தேசிய கட்சிகள் மீது இருந்த அதிருப்தி தான் வாக்குகளின் சிதறல்களுக்கு முக்கிய காரணம் இந்த தோல்வியில் இருந்து முதன்மையான தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் சுமந்திரன் கஜேந்திரன்கள் உட்பட தங்களை மீள்சீரமைத்து மீண்டும் மிகவும் தீவிரமான தமிழ்தேசிய அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
  34. சுமந்திரனை சிறந்த ஒரு சட்டத்தரணியாகவே முன்னர் இருந்து எழுதி வருகிறேன். இல்லை அக்கா நான் பார்க்க‌ வில்லை பார்த்தால் நான் யாழில் எழுதி இருக்க‌ மாட்டேன்............................. முன்னர் டாக்ரர் வைத்தியசாலைக்குள் போகமுடியாது. இப்போது எம்பியாக பொலிஸ் பாதுகாப்புடன் போகலாம்.
  35. பாராளுமன்றம் போகாமலே புதிய அரசியலமைப்புக்கு நிபுணத்துவ பங்களிப்பு வழங்கலாம் என்று நினைக்கிறேன். அகவே அவர் அங்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பாராளுமன்றம் சென்றவர் என்பதற்காக ஶ்ரீதரனிடம் அரசியலமைப்பை பற்றியோ, ஆலோசனையோ எவரும் கேட்கப்போவதில்லை தானே.
  36. நிச்சயமாக. என்ன தான் பெரிய வெற்றியை பெற்றாலும் நிதி நெருக்கடி பெரிய தலையிடியாக தொடரும். பல சொற்றாடல்களை முன் வைத்து ஆட்சியை கைப்பற்றி இருக்கும் இவர்களுக்கு அதுவே இவர்களது முடிவுரையையும் எழுதி விடும் என்பதும் தெரிந்திருக்கும். எனவே தமிழர்களின் அதிலும் புலம்பெயர் தமிழர்களின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே மீள்ச்சி. இதை உணர்ந்து சந்தர்ப்பத்தையும் நேர்காலங்களையும் உணர்ந்து தமிழர் தரப்பும் கடும் போக்கை கைவிட்டு சூழ்நிலையை பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லொழி கிடைக்க வழி பிறக்கும். இதுவே எனது பிராத்தனைகள்..
  37. இதை எப்பவோ செய்திருக்கலாம். ஜே ஆர் முதல் கோட்டா ரணில் வரை எல்லோருடனும் முரண்பட்டது ஏன்? குறிப்பாக யாழில் 25% மட்டுமே என் பி பி பக்கம் சாய்ந்ததை வைத்து - இந்த முடிவுக்கு வர முடியாது. யாழில் கூட மக்கள் உரிமை அரசியலுக்கே பெருவாரியாக வாக்களித்துள்ள நிலையில் - சிலர் 2 சீட் ஒரு போனஸ் சீட்சை வைத்து - எல்லாரையும் அனுரவின் பஸ்சில் ஏத்திவிட முனைவதாக தெரியவில்லையா?
  38. 59) ஒரு போட்டியாளர்களும் 159 இடங்களை தேசிய மக்கள் கட்சி பிடிக்கும் என பதில் அளிக்கவில்லை. ஆனால் 1 - 5 வித்தியாசத்துக்குள் விடை எழுதிய காரணத்தினால் பிரபா 1 புள்ளி பெறுகிறார். 1)பிரபா - 25 புள்ளிகள் 2) புரட்சிகர தமிழ் தேசியன் - 22 புள்ளிகள் 3) நிலாமதி - 22 புள்ளிகள் 4) கந்தையா 57 - 21 புள்ளிகள் 5) தமிழ்சிறி -20 புள்ளிகள் 6) வீரப்பையன் - 20 புள்ளிகள் 7) வாலி - 20 புள்ளிகள் 8)Alvayan - 19 புள்ளிகள் 9)வாதவூரான் - 19 புள்ளிகள் 10)சுவைபிரியன் - 18 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள் 12)வில்லவன் - 18 புள்ளிகள் 13)நிழலி - 18 புள்ளிகள் 14)ரசோதரன் - 18 புள்ளிகள் 15)கிருபன் - 16 புள்ளிகள் 16)goshan_che - 16 புள்ளிகள் 17)நுணாவிலான் - 16 புள்ளிகள் 18)வாத்தியார் - 15 புள்ளிகள் 19)சசிவர்ணம் - 15 புள்ளிகள் 20)சுவி - 14 புள்ளிகள் 21)புலவர் - 14 புள்ளிகள் 22) புத்தன் - 12 புள்ளிகள் 23) அகத்தியன் - 10 புள்ளிகள் 24) குமாரசாமி - 10 புள்ளிகள் 25) வசி - 6புள்ளிகள் 26) தமிழன்பன் - 1 புள்ளி இதுவரை 4, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 , 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 44)
  39. இன்று காலை... சுமந்திரனின் தோல்வி என்ற நல்ல செய்தியுடன் கண் விழித்தேன்.
  40. வினா 31 தேசிய மக்கள் சக்தி கட்சி அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 24 போட்டியாளர்கள் சரியாக பதில் சொன்னார்கள். இவர்களில் 3 போட்டியாளர்கள் இக்கட்சி 4 இடங்களை பிடிக்கும் என சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 20 புள்ளிகள் 2) புரட்சிகர தமிழ் தேசியன் - 18 புள்ளிகள் 3) கந்தையா 57 - 16 புள்ளிகள் 4) தமிழ்சிறி -16 புள்ளிகள் 5) வீரப்பையன் - 16 புள்ளிகள் 6)வாலி - 16 புள்ளிகள் 7)நிலாமதி - 16 புள்ளிகள் 8)சுவைபிரியன் -14 புள்ளிகள் 9) Alvayan - 14 புள்ளிகள் 10) ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் 11) வில்லவன் - 14 புள்ளிகள் 12)வாதவூரான் - 14 புள்ளிகள் 13)நிழலி - 14 புள்ளிகள் 14)ரசோதரன் - 14 புள்ளிகள் 15) கிருபன் - 12 புள்ளிகள் 16) புலவர் - 12 புள்ளிகள் 17)goshan_che - 12 புள்ளிகள் 18) நுணாவிலான் - 12 புள்ளிகள் 19)புத்தன் - 12 புள்ளிகள் 20)வாத்தியார் - 10 புள்ளிகள் 21) சுவி - 10 புள்ளிகள் 22) சசிவர்ணம் - 10 புள்ளிகள் 23) அகத்தியன் - 8புள்ளிகள் 24) குமாரசாமி - 8 புள்ளிகள் 25) வசி - 6புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 27 - 31, 33, 38 - 42 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 34)
  41. உண்மையில் இதுவரை இருந்த அரசியல்கட்சிகள், அரசியல்தலைவர்கள் போல செயற்படாமல் மக்கள் நன்மையின கருதிற்கொண்டு செயற்பட்டால் நன்று, அதே போல் சிறுபான்மை மக்களின் பிரச்சினையிலும் பழைய அரசியல்வாதிகள் போல பேரினவாத கொள்கையினை கடைப்பிடிக்காமல் மக்களுக்கான அனைத்து சம உரிமைகளும் சிறுபான்மை மக்களுக்கும் கிடைப்பதனை உறுதி செய்தால் நல்லது.
  42. கோவிகாதையுங்கோ...அங்கை என்ன டிஸ்பென்சரி போடவோ..
  43. வினா 33 தேசிய மக்கள் சக்தி அம்பாந்தோட்டையில் முதல் இடம் பிடித்திருக்கிறது. 24 பேர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். இவர்களில் 8 பேர் சரியாக தேசிய மக்கள் சக்தி 5 இடங்களை பிடிக்கும் என பதில் அளித்திருக்கிறார்கள் 1)சுவைபிரியன் - 8 புள்ளிகள் 2)தமிழ்சிறி - 8 புள்ளிகள் 3) வீரப்பையன் - 8 புள்ளிகள் 4) புரட்சிகர தமிழ் தேசியன் - 8 புள்ளிகள் 5) goshan_che - 8 புள்ளிகள் 6) நுணாவிலான் - 8 புள்ளிகள் 7) வில்லவன் - 8 புள்ளிகள் 8 )வாலி - 8 புள்ளிகள் 9) நிலாமதி - 8 புள்ளிகள் 10) கந்தையா 57 - 6 புள்ளிகள் 11) Alvayan - 6 புள்ளிகள் 12) புலவர் - 6 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 6 புள்ளிகள் 14) புத்தன் - 6 புள்ளிகள் 15) வாதவூரான் - 6 புள்ளிகள் 16)நிழலி - 6 புள்ளிகள் 17) பிரபா - 6 புள்ளிகள் 18) ரசோதரன் - 6 புள்ளிகள் 19) வாத்தியார் - 4 புள்ளிகள் 20)கிருபன் - 4 புள்ளிகள் 21)சுவி - 4 புள்ளிகள் 22)அகத்தியன் - 4 புள்ளிகள் 23)குமாரசாமி - 4புள்ளிகள் 24)சசி வர்ணம் - 4 புள்ளிகள் 25) வசி - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 33,38 - 41 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 12)
  44. வினா 39 தேசிய மக்கள் சக்தி உடுப்பிட்டி முதல் இடம் பிடித்திருக்கிறது. சுவைபிரியன், தமிழ்சிறி , வீரப்பையன் ஆகியோர் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)சுவைபிரியன் - 6 புள்ளிகள் 2)தமிழ்சிறி - 6 புள்ளிகள் 3) வீரப்பையன் - 6 புள்ளிகள் 4) Alvayan - 4 புள்ளிகள் 5) புலவர் - 4 புள்ளிகள் 6) ஈழப்பிரியன் - 4 புள்ளிகள் 7) புரட்சிகர தமிழ் தேசியன் - 4 புள்ளிகள் 8 )goshan_che - 4 புள்ளிகள் 9) நுணாவிலான் - 4 புள்ளிகள் 10) வில்லவன் - 4 புள்ளிகள் 11)புத்தன் - 4 புள்ளிகள் 12)நிழலி - 4 புள்ளிகள் 13)பிரபா - 4 புள்ளிகள் 14)வாலி - 4 புள்ளிகள் 15) நிலாமதி - 4 புள்ளிகள் 16)ரசோதரன் - 4 புள்ளிகள் 17)வாத்தியார் - 2 புள்ளிகள் 18)கந்தையா 57 - 2 புள்ளிகள் 19)வசி - 2 புள்ளிகள் 20) கிருபன் - 2 புள்ளிகள் 21) சுவி - 2 புள்ளிகள் 22) அகத்தியன் - 2 புள்ளிகள் 23) வாதவூரான் - 2 புள்ளிகள் 24) குமாரசாமி - 2 புள்ளிகள் 25) சசி வர்ணம் - 2 புள்ளிகள் 26) தமிழன்பன் - 0 இதுவரை 38 - 41 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 8. )
  45. 🤣.......... அங்கஜனின் சொந்த ஊர்........... சுமந்திரனின் கோட்டை........... சிவாஜிலிங்கத்தின் பிறப்பிடம்............ டக்ளஸின் ஆதரவாளர்கள்............ இன்னும் பின்னோக்கிப் போய்ப் பார்த்தால்.......... பொன்னம்பலம் அவர்களின் பூர்வீகம்......... இவ்வளவு பெருமைகள் நிறைந்து இருந்தும்........ பார்ப்பம்.........
  46. தாயகத்தில் இருந்து ஒரு முகநூல் பதிவு: ஒரு ஏரி. அதன் ஆழத்தில் இரண்டு தனித்துவமான மீன் வகைகள் வெவ்வேறு சமூகங்களாக வாழ்ந்து வந்தன. ஒவ்வொன்றும் அவற்றுக்குச் சொந்தமான பிரதேசங்களுக்குள் நிம்மதியாக வாழ்ந்து வந்தன. இந்த மீன்கள் ஒவ்வொரு வகையிலும் வித்தியாசமாக இருந்தன - அளவு தோற்றம் மற்றும் நடத்தை. ஒரு சமூகம் குறிப்பாக பெரிய மீன்களைக் கொண்டிருந்தது மற்றொன்று மிகச் சிறிய மீன்களால் ஆனது. எண்ணிக்கையில் பெரிய மீன்கள் அதிகமாகவும் சிறிய மீன்கள் குறைவாகவும் இருந்தன. இரண்டு மீன் குழுக்களும் ஒரே ஏரியில் வாழ்ந்தாலும் அவர்களின் வாழ்க்கை வெவ்வேறாக இருந்தது. திடீரென்று அருகிலிருந்த கடல் பெருகியபோது அங்கிருந்த வெள்ளைச் சுறாக்கள் ஏரிக்குள் வந்தன. அவை ஏரியைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தன. சுறாக்கள் இரண்டு மீன் சமுதாயங்களது வாழிடங்களையும் ஒன்றாக்கின. இடையிலிருந்த தடைகளை அகற்றின. காலம் செல்லச்செல்ல சுறாக்களுக்கு இந்தச் சிறிய ஏரியை வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை எனத் தோன்றவே மீண்டும் தமது கடலுக்கே சென்றுவிடலாம் என அவை முடிவெடுத்தன. இப்போது ஏரி ஒரே ஏரி ஆகிவிட்டது. எண்ணிக்கையிலும் அளவிலும் பெரிய மீன்கள் ஏரியில் சுறாக்கள் விட்டுச் சென்ற இடத்திலிருந்து ஆளத் தொடங்கின. பெரிய மீன்கள் அடிக்கடி சிறிய மீன்களின் இடத்திற்குள் நுழைந்து அவற்றை விழுங்கின. சிறிய மீன்கள் உயிர் பயத்தில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது. சிறிய மீன்கள் தம்மைப் பாதுகாப்பதற்காக ஒரு சிறிய தடுப்பு வேலியை உருவாக்க முயன்றன. அது சிறிய மீன்களின் பிரதேசத்தை பெரிய மீன்களிடமிருந்து ஓரளவு பாதுகாத்தது. ஆனால் இந்த தடையை அடிக்கடி உடைத்து பெரிய மீன்கள் சுதந்திரமாக நீந்தி வந்து சிறிய மீன் சமூகத்தினரில் அதிகளவானோரை விழுங்கி வந்தது. சிறிய மீன்களுக்கோ வேறு வழிகள் இருக்கவில்லை. காலப்போக்கில் சிறிய மீன்கள் நியாயத்தை கோர ஆரம்பித்தன. தங்கள் பகுதியில் பயமின்றி வாழ்வதற்கான உரிமை மற்றும் சம உரிமை எனப் பேசத் தொடங்கின. பெரிய மீன்களுக்கு தமது கோரிக்கையை முன்வைத்தன. நீண்ட விவாதங்களுக்குப் பிறகு பெரிய மீன்கள் எதிர்பாராத மற்றும் தைரியமான முன்மொழிவு ஒன்றைச் சொன்னது. "உங்கள் துயரை நாங்கள் உணர்கின்றோம். உங்களுக்கு நீதி வேண்டும் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்" என்று பெரிய மீன்கள் கூறின. "இன்று முதல் நாம் அனைவரும் சமம். யாரும் மற்றவரை விட உயர்ந்தவர்கள் இல்லை இனிமேல் சிறிய மீன்களும் பெரிய மீனாகிய நம்மைப் போலவே உரிமைகளைப் பெறுவர். இனி நாம் இருவரும் சமமாக இருப்பதால் ஏரியில் தனித்தனி பிரதேசங்களோ தடுப்பு வேலிகளோ தேவையில்லை. நாங்கள் இனி ஒரு பெரிய இணக்கமான சமூகமாக வாழலாம்” எனக் கூறின. “முழு ஏரியிலும் இரு பகுதியினரும் சுற்றித் திரியலாம்" என்றெல்லாம் கூறின. முத்தாய்ப்பாக பெரிய மீன்கள் "இவ்வளவு நாளும் பசி வந்தால் நாங்கள் மட்டும்தான் உங்களைச் விழுங்கினோம். இனி உங்களுக்குப் பசித்தால் நீங்களும் எங்களை விழுங்கலாம். அந்த உரிமை இனி உங்களுக்கும் உள்ளது. ஆகவே இனி அனைவருக்கும் சம உரிமை." என கூறின. சிறிய மீன்கள் அப்பாவியாகவும் நம்பிக்கையுடனும் பெரிய மீன்கள் மாறிவிட்டன. அவர்கள் முன்னம்போல் இல்லை என ஏனைய சிறிய மீன்களிடம் கூறின. இறுதியாக நீதி கிடைத்துவிட்டதாக சிறிய மீன்கள் நம்பின. ஆம் கடைசியாக சம உரிமை கிடைத்துவிட்டதாக சிறிய மீன்கள் கருதின. புதிதாகக் கிடைத்த வாக்குறுதிகளுக்காக பெரிய மீன்களைத் தடுக்கும் இயற்கையான தடுப்புகளை சிறிய மீன்கள் அகற்றின. தடைகள் நீங்கியதும் பெரிய மற்றும் சிறிய மீன்கள் இரண்டும் சுதந்திரமாக ஏனையவர்களது பிரதேசங்களுக்குள்ளும் நீந்திச் சென்றன. ஆனால் யதார்த்தம் பயங்கரமாக இருந்தது. பெரிய மீன் எந்தத் தடையும் இன்றி சிறிய மீன்களின் வீட்டு வாசல்களில் வந்து அவற்றை விழுங்கின. சிறிய மீன்கள் தமக்குக் கிடைத்த சம உரிமைக்கு அமைய பெரிய மீன்களை விழுங்க முயன்றன. ஆனால் அவற்றின் சின்னஞ்சிறிய வாய்களால் பெரிய மீன்களை விழுங்கவே முடியவில்லை. சமத்துவம் பற்றிய வாக்குறுதி ஒரு மாயையே தவிர வேறொன்றுமில்லை என்பதும் பெரிய மீன்கள் எதையும் மாற்றாமல் தங்கள் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள ஒரு புத்திசாலித்தனமான சூழ்ச்சியைச் செய்து அனைவருக்கும் சம உரிமை என்று பேசி தங்களை ஏமாற்றி விட்டதாக காலஞ்செல்லச் செல்ல சிறிய மீன்கள் புரிந்து கொண்டன. எனவே ஏரியின் வரலாறு முன்பு போலவே தொடர்ந்தது. ஆனால் இப்போது சிறிய மீன்களால் எதுவும் செய்ய முடியவில்லை.😢 https://www.facebook.com/share/p/128h6yV5HDH/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.